வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-19
307
ஹாய்..ப்ரெண்ட்ஸ்…
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
எல்லாரும் டின்னர் முடித்தாயிற்றா?
வாருங்கள்….இதோ உங்களுக்கான எபிசோடு 19
ஸ்ரீயும் சாதாரணமாக கவினை இழுத்து கொண்டு, மற்றவர்களை அழைத்துக் கொண்டு ஊஞ்சல், சறுகல், சீசா மற்றும் பந்து விளையாட்டுகள் என்று விளையாடி களிந்தாள்.
விளையாட்டின் ஊடே நித்தி, அர்ச்சுவை அழைத்து,எதற்காக ஊருக்கு சென்றாய்? பாட்டியை பார்த்தாயா? கேட்டாள். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த, நிவாஸ் மெதுவாக விளையாடுவதை விட்டு அவர்களை கவனிக்கலானான்.அவன் அருகே வந்து உட்கார இருவரும் அவனை பார்த்தனர்.
நீங்கள் என்னிடம் எதையும் மறைக்க தேவையில்லை என்று கூற, நித்தி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ச்சு அவனுக்கு தெரிந்த நிவாஸ், ஜிதின், ஆதி விசயத்தை கூறினான்.பின்
நான் ஊருக்கு சென்றேன் தான். பிரதீப் அண்ணா தவிர யாருக்கும் தெரியாது தான்.
பிரதீப் அண்ணனா? நித்தி அதிர,ஆம் என்றான் அர்ச்சு.
அவரிடம் எல்லாவற்றையும் கூறி விட்டாயா?
இல்லை. எனக்கு இவர்களுடைய ஆன்ட்டி கூறியது உறுத்திக் கொண்டே இருந்தது. அதான் நம் அனைவருடைய குடும்பத்தை பற்றி அந்த பொம்பளை கூறியது….அதனால் அவரிடம் ஒரு பிரச்சனை முளைத்துள்ளது என்றும் ஊருக்குள் புதிதாகவோ, சந்தேகத்திற்குமுள்ள ஆட்கள் யாரேனும் தென்பட்டால் உடனே கவனித்து விடுங்கள். இது பெரிய பிரச்சனை என்றேன்.
என்ன பிரச்சனை என்று கூறு? உதவுகிறேன் என்றார்.
நீங்கள் ஊரில் இருக்கும் அனைவரையும் பார்த்துக் கொள்ளுங்கள். அபியிடம் கூட இதை பற்றி ஏதும் கேட்காதீர்கள்? நான் விரைவிலே உங்களிடம் கூறுவேன். பிரச்சனை என்றால் நீங்கள் தான் முன் வர வேண்டும். தயாராகவும், கவனமாகவும் இருங்கள் எச்சரிக்கை விடுத்து வந்தேன் என்றான் இருவரிடமும்.
யார் பிரதீப்? நிவாஸ் கேட்க,
அபியின் மாமா.எங்கள் ஊரின் முக்கியமான நபர் நித்தி கூறினாள்.
அது சரி,….ஸ்ரீயிடம் ஏன் அகில் கோபப்பட்டான்? அவள் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டதாலா? அர்ச்சு வினவ,
அவள் காலையிலிருந்து நடந்து கொண்ட விதத்தை அர்ச்சுவிடம் கூறினர்.
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, உன்னுடைய ஆன்ட்டி கூட காரணமாக இருக்கலாம் என்றான்.
எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது? இதுவரை ஸ்ரீ இவ்வளவு சந்தோசமாகவும், துடுக்காகவும் இருந்து நான் பார்த்ததே இல்லை.
இது தான் அவளது உண்மை குணம் என்றான் அர்ச்சு சோகமாக.
உனக்கு அந்த உருவம் தெரிகிறதா? என்ன? அகில் எங்களிடம் கூறினான் அர்ச்சு கேட்டான்.
இப்பொழுதைக்கு இல்லை நிவாஸ் கூறி விட்டு ஸ்ரீயை பார்த்தான். அவள் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி.அவன் சிரித்தான்.
அவர்கள் அருகே சிறு மரத்தினூடே ஏதோ சத்தம் கேட்டது.நித்தியும் நிவாஸும் எழுந்து பார்க்க, கைரவ் மறைய கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்து, நீ இங்கே என்ன செய்கிறாய்? எங்கள் வழிக்கு வராதே நிவாஸ் கூற,
நான் உங்கள் வழிக்கு வரவில்லை என்று கைரவ் ஸ்ரீயை பார்த்தான்.
உன்னிடம் எத்தனை முறை கூறுவது கைரவ்? உன் அண்ணாவிடம் கூறவா? நித்தி மிரட்டுவது போல் கேட்டாள்.
துணிவிருந்தால் அவன் அருகே செல். பார்க்கலாம் என்று அவளை பார்த்து சிரித்தபடி கை கட்டி நின்றான்.
நிஜமாகவே கூறி விடுவேன் என்றாள்.
போனை போட்டு விட்டு, இந்தா கூறு என்று அவளது காதில் வைக்க,
சைலேஷும் ,ஹலோ….என்க அவள் பதட்டமானாள்.
போனை தட்டி விட, போனை கைரவ் அணைத்து விட நித்தி நிம்மதியானாள்.
அடடா…என்னவொறு பதட்டம். நீ கூறப் போகிறாயா? கிண்டலடித்தான் கைரவ்.
ஜிதின் வந்ததிலிருந்து ஸ்ரீயை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் கைரவை பார்த்த அகிலுக்கு கோபம் வந்தது.
அவனும் வந்து சர்ச்சை செய்ய, அவன் கண்டு கொள்ளாமல் ஸ்ரீ அருகே வந்து, நீ சிரிக்கும் போது அழகாக உள்ளது கூற, அவளும் சிரித்தாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜிதின், கைரவ் அருகே வந்து உனக்கும் இந்த இடத்திற்கும் சம்பந்தமில்லை அவனுடன் சண்டையிட.
இது அரசாங்க இடம் என்று கைரவும் கூற, இருவரும் சண்டையிட ஆரம்பிக்க, நித்தி, ஸ்ரீ, அர்ச்சு அவர்களை தடுத்து, போதும் வாருங்கள் என்று கிளம்பினார்கள்.
அகில் அருகே வந்து, என் காலில் அடிபடாமல் பார்த்து கொண்டதற்கு நன்றி கூறி விட்டு, ஜிதின் தோள் மீது உரிமையோடு ஸ்ரீ கையை போட்டுக் கொண்டு அவனுடன் கிளம்ப, நிவாசும் அவர்களுடன் காரில் ஏறினான். மற்ற மூவரும் ஏக்கத்தோடு அவளை பார்த்த படி நிற்க, மற்றவர்களும் விடுதிக்கு கிளம்ப, அர்ச்சுவும் வீட்டிற்கு சென்றான்.
அகிலும், அர்ச்சும் படுத்துக் கொண்டே ஸ்ரீயையே நினைத்துக் கொண்டிருந்தனர்.அகில் ஊஞ்சலில் வைத்து ஸ்ரீயை சமாதானப்படுத்திய பின் அந்த சிறுவனை பார்க்கும் முன் ஸ்ரீ அர்ச்சுவிடம் செல்ல, அகிலும் அவள் பின்னே சென்றான்.சட்டென திரும்பிய ஸ்ரீ, அகில் அர்ச்சு இருவரின் தோளில் கையை போட்டுக் கொண்டு, உங்கள் இருவருக்கு போட்டி என்றாள்.இருவரும் ஒருவாறு அவள் பக்கம் திரும்ப, ஸ்ரீ முகத்தினருகே இருக்க,இதயத்துடிப்பு அதிகமானது அவர்களுக்கு. அவர்கள் அவளையே பார்க்க,அவள் தடுமாறி கையை எடுக்க,நண்பர்கள் இருவரும் முட்டிக் கொண்டனர். அவர்களை பார்த்து பயங்கரமாக சிரித்தாள்.
பின் பந்தை கொடுத்து, இருவரில் யார் வெற்றி அடைகிறீர்கள்? பார்போம் என்றாள். கடைசியில் இருவரும் ஒரே புள்ளியில் இருந்தனர். இருவரும் சரி சமமானவர்கள் தான் முடித்தும் வைத்தாள். இம்முறை இவர்களது விளையாட்டு ஸ்ரீக்காக இல்லை. இருவரும் பிரச்சனையை கவனத்தில் வைத்தே விளையாடியது மற்ற நண்பர்களுக்கு தெளிவாக புரிந்தது. இதை நினைத்தவாறே இருவரும் தூங்கினர்.அர்ச்சு கையில் ஒரு போட்டோவை வைத்தவாறே தூங்கினான்.
கல்லூரியில் ஸ்ரீ ஜாலியாக உலவிக் கொண்டிருக்க,ஒரு போன் வந்து வியர்க்க வியர்க்க ஓடி வந்தாள். நிவாசிடம் அவளுடைய பையை தூக்கி எறிந்து விட்டு, நான் வீட்டிற்கு செல்கிறேன்.
ஹே, உன்னுடைய கால் அகில் கூற,எனக்கு இப்பொழுது வலி குறைந்து விட்டது கத்திக் கொண்டே ஓடினாள்.
ஏதும் பிரச்சனையா ஸ்ரீ? அபி கத்த, இல்லை கையசைத்து விட்டு, அகிலை பார்த்து என்னை கொஞ்ச நேரம் தேட வேண்டாம். நானே வந்து விடுவேன். கைரவ் பைக்கில் வந்தவன் அவளது கையை பிடிக்க நின்றாள்.
நான் இப்பொழுதே சென்றாக வேண்டும்.என்னை விடு என்றாள் ஸ்ரீ.
தாராளமாக போகலாம் வா என்னுடன் பைக்கை காட்டினான்.அவள் யோசித்தவாறு அவனது வண்டியில் ஏற,அகில் முறைத்தவாறு இருந்தான்.
இருவரும் ஸ்ரீ வீட்டிற்கு சென்றனர். நீ இங்கே இரு என்று அவள் மட்டும் உள்ளே சென்று,
என்னுடைய அங்கிளை என்ன செய்தீர்கள்?ஸ்ரீ சத்தமிட,கயல் படியில் இறங்கியவாறு இதை பார் என்று ஒரு போட்டோவை தூக்கி எறிந்தாள்.ஸ்ரீ குனிந்து அதை எடுத்து பார்த்தால் பூங்காவில் அகில் அர்ச்சு தோளில் கை போட்டு நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, இதற்காக உன்னுடைய அங்கிளுக்கு தான் தண்டனை.
நான் தான் கூறினேனே, அவர்கள் என்னுடைய நண்பர்கள் மட்டுமே.ஏன் என்னை இவ்வாறு வதைக்கிறீர்கள்?என்னுடைய அங்கிளை ஏதும் செய்து செய்து விடாதீர்கள் கேவினாள்.
கயல் அவளருகே வந்து, வெளியே நிற்கிறானே! அவன் யார்? அன்று மருத்துவமனையிலும் நான் பார்த்தேன்.
அவன் என்னுடைய நண்பன் மட்டும் தான். எனக்கு உதவ தான் அழைத்து வந்தான்.
அப்படியே இருந்தால் நல்லது ஸ்ரீயின் தாடையை பிடித்து,நீ செல்லலாம் என் அடிமையே! அவள் கூற
அடிமையா?
ஆம்.
என்னுடைய அங்கிளுக்காகவும், என்னுடைய தமையனுக்காகவும் தான் அமைதியாக இருக்கிறேன். என்னை சோதிக்காதீர்கள்!
சோதனையா? அவளை கயல் அடிக்க, ஸ்ரீயின் வாயில் இரத்தம் வந்தது.
ஜிதின் உங்கள் மகன் இல்லை என்ற விசயம் அவனுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா?ஸ்ரீ மிரட்ட,
அட, நீயெல்லாம் கோழிக்குஞ்சு தான். தரையில் போட்டு மிதித்து விடுவேன் கூற,கோபத்தை கட்டுப்படுத்தியவாறு, எனக்கான நேரம் வரும் அப்பொழுது உன்னை கவனிக்கிறேன் என்றாள்.
கயல் அவளருகே வந்து, ஸ்ரீ கழுத்தை பிடித்து தூக்க, ஸ்ரீயால் முடியவில்லை.அவளை விடுவித்து, உன்னை கொல்ல வெகு நேரமாகாது.
தெரியும். எப்படியும் நீ என்னை கொல்ல தான் போகிறாய்? இன்றே செய்து விடு…
உன்னை இப்பொழுது எதுவும் செய்ய மாட்டேன். நான் உனக்கு கொடுக்க போகும் வலி இருக்கிறதே! மரணத்தை விட மோசமானது. முதலில் உன்னுடைய அங்கிள், உன்னுடைய அனைவரும், உன்னுடைய ரகசியம் என்றவுடன்,
இல்லை,ஏதும் செய்து விடாதே! என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.அவர்களை விட்டு விடு…என்றாள்.
பார்க்கலாம்……பார்க்கலாம் ….கூற, ஸ்ரீ கெஞ்சினாள்.
நீ சென்று உன்னுடைய அங்கிளை பார்.
முகத்தை கழுவிக் கொண்டு,ஸ்ரீ வெளியே வந்து, தோட்டத்தினுள் நுழைந்து, ஒரு சிறு அறைக்குள் சென்று அங்கிருந்த ஒரு சிலையை நகர்த்தினாள்.படியுடன் கூடிய சுரங்கப்பாதையினுள் சென்றாள்.கொஞ்ச தூரம் நடந்து சென்றாள்.பின் ஒரு அறை தென்பட்டது.உள்ளே சென்றால் நாற்பது வயதுடைய ஒருவர் மயங்கிய நிலையில் இருக்க,
அங்கிள்…..அங்கிள்….பதறினாள்.
அவரை என்ன செய்தீர்கள்?
அங்கிருந்த அடியாட்கள் அவருக்கு ஷாக் கொடுக்க சொல்லி உத்தரவிடப்பட்டது. ஸ்ரீ அவர்களிடம் கோபமாக கத்த, அவர்களில் ஒருவன் நீ அதிகமாக பேசுகிறாய்? உன்னை என்று அவளருகே அவன் வர,
அங்கிள் கண்விழித்து குட்டிம்மா, நீ எதற்காக இங்கே வந்தாய்? சென்று விடும்மா. உங்களது இந்நிலைக்கு காரணம் நான் தான் அழுதாள்.
எனக்கு ஏதுமில்லை. நீ ஜாக்கிரதையாக இரும்மா. உன்னை இவர்களிடமிருந்து காக்க ஒருவன் கண்டிப்பாக வருவான். அவன் உனக்குரியவன்.
இல்லை அங்கிள். நான் ஜிதினை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன்.
வேண்டாம்மா…அப்படி மட்டும் செய்து விடாதே! அவன்…அவர் கூற ஆரம்பிக்க,
எனக்கு தெரியும் அங்கிள்.உங்களது குடும்பத்தை பற்றி இப்பொழுதாவது கூறுங்கள் அங்கிள் ப்ளீஸ்…
அவர் கலங்கியவாறு, அவனுக்காக காத்திரு…..என்றார்.
ஆட்கள் ஸ்ரீயை வெளியே துரத்த,அவள் கலங்கியவாறு வெளியே வந்தாள்.
வாயில் என்ன காயம்? கைரவ் கேட்டான் கோபமாக வண்டியில் இறங்கிய படி.
வா செல்லலாம் என்று அவனை அழைக்க, அவனோ அவளது வீட்டை பார்த்து சிறு புன்முறுவல் செய்தான். மேலிருந்து அவர்களை கவனித்த கயல் அவனை சந்தேகித்தபடி பார்த்தாள்.
அவள் கல்லூரிக்கு வந்து கைரவ் வண்டியிலிருந்து இறங்க, அவனது அல்ல கைகள் வந்து,
பாஸ், எங்கே போனீர்கள்? நீங்கள் கேட்டது உங்களுக்கு கிடைத்தது தானே! என்று கேட்க, கைரவ் ஸ்ரீயிடமிருந்து, அவள் கையிலிருந்த வாட்டர் பாட்டிலை வாங்கினான்.
அவள் அவனை பார்க்க, அவன் குடிப்பதை போல் பாவனை செய்தான். அதில் ஒரு கருவியை பொறுத்தி இருந்திருப்பான். அதில் ஸ்ரீயும் கயலும் பேசிய அனைத்தும் பதிவாகி இருந்தது.அது தெரியாமல் ஸ்ரீ கைரவ் குடிக்க கொடுத்தைதை உள்ளே கொண்டு சென்றிருப்பாள்.இதனால் தான் அவனது வீட்டை பார்த்து புன்முறுவல் செய்திருப்பான்.