அத்தியாயம் 80

துருவன் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு அனைவரும் சென்றனர். பிரதீப்பும் தீனாவும் அவனிடம் பேசி விட்டு வந்தனர். துளசியை முறைத்துக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்தார் ரதி. ஆனால் துகிரா, புவியிடம் நன்றாக பேசினார்.

துளசிக்கு கஷ்டமாக இருந்தது. கண்ணீர் வந்து விடவே கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டே துளசி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

துகிராவும் புவனாவும் துருவனிடம் பேச, புவி நீ சொல்லு. அம்மா துளசிய ஏதேனும் சொன்னாங்களா?

தெரியலை. அம்மா எதுக்கு துளசியை எதுவும் சொல்லணும்? புவனா கேட்டாள்.

எதுக்கு? ஏன்? கேள்வியெல்லாம் கேட்காத? சொன்னாங்களா? இல்லையா?

எனக்கு தெரியாது. இன்று தான் நான் வெளியவே வருகிறேன்.

துகிராவிடம் துருவன் கேட்க, உன்னோட அம்மா துளசிய என்ன சொன்னா உனக்கென்ன? எதுக்கு கேட்குற?

பேசுறது என் அம்மா நான் கேட்காம யார் கேட்பா? சொல்லுங்க என்ன சொன்னாங்க?

உங்க அம்மா உனக்காக கஷ்டப்படுறது உனக்கு தெரியிற மாதிரி எனக்கு தோணலை? தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்கிற?

எது தேவையில்லாதது? துருவன் சினத்துடன் பேசினான். புவனா துகிரா கையை பிடித்து அழுத்தினாள். அவளை பார்த்த துகிரா..நான் இப்ப தான் ஹாஸ்பிட்டல் வந்தேன். அதனால எனக்கு தெரியாது. என்னிடம் கத்தியது போல அவகிட்ட கத்திடாத..அவளே அவள் அம்மாவை இழந்து கஷ்டத்துல இருக்கா.

அவளிடமா? துளசி வந்துருக்காளா? ஆர்வமுடன் துருவன் கேட்க, ஆமாம் வந்திருக்கா என்ற புவனா..மனதினுள் சாரிடா. அவளை உனக்கு பிடிச்சிருந்தாலும் இப்ப வேற வழியில்லை. அவ கிளம்புறதுதான் சரியா இருக்கும்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. என்னால உன்னிடம் ஏதும் சொல்ல முடியவில்லை என்று வருந்தினாள்.

துரு..உனக்கு ஒரு விசயம் சொல்லவா? புவி ஆர்வமாக.. வெற்றி மாமாவுக்கும் ஜானு அம்மாவுக்கும் திருமணம் முடிச்சிடுருச்சு.

ஜானு அம்மாவுக்கா? திருமணமா? என்று துளசி ஏத்துக்கிட்டாளா? என்று அவன் கேட்க, புவி நான் வெளிய இருக்கேன் பேசிட்டு வா..என்று துகிரா வெளியே சென்றாள்.

கண்டிப்பா துருவா அவளை உனக்கு பிடிச்சிருக்கு என நினைத்த புவனா..எல்லாருமே ஏத்துக்கிட்டாங்க என்றாள்.

அது எப்படி? அவளோட அம்மா இறந்திருக்காங்க. எப்படி அவ ஏத்துக்கிட்டா?

துருவா..நீ எதுக்கு துளசிய பத்தியே கேட்குற?

அம்மா..அவள திட்டி இருப்பாங்களோன்னு தோணுது.

ஏன்டா..அம்மா அப்படியெல்லாம் ஏதும் செய்ய மாட்டாங்க. அவளுக்கு அவள் அம்மா மீதான வருத்தம் தான். அழுதுகிட்டே தான் இருந்தா. வேண்டுமானால் அவரிடம் கேட்டுப்பார் என்றாள்.

புவி..ரொம்ப உரிமையா பேசுற? அவங்க வீட்ல ஒருத்தி ஆகிட்ட போல.

அப்படியெல்லாம் இல்லை. நான் இன்றிலிருந்தே அண்ணாவுடன் எங்க வீட்ல தங்கப் போறேன் என்றாள்.

ம்ம்..என்று அவளை பார்த்தான். ஆனால் புவி உன் முகத்தில் ஏதோ பிரகாசம் தெரியுதே? கிண்டல் செய்தான்.

போடா..என்று வெட்கத்துடன்..இனி நான் நடக்க ஆரம்பித்து விடுவேன். தினமும் உன்னை பார்க்க வருவேன் என்று புவனா கூறி விட்டு வெளியே வந்தாள்.

துளசியை டீஸ் பண்ண நினைத்து ஆர்வமாக காத்திருந்தான். துளசி எழ ரதியும் எழுந்து நானும் வருகிறேன் என்றார். துளசி அப்படியே நின்றாள். வா..போகலாம் என்று அழைத்தார். அவள் கால்கள் நகர மறுத்தது.

பிரதீப்பும் தீனாவும் என்ன பேசவென்று தெரியாமல் இருக்க, துகிரா ரதியிடம் வந்து ஐந்தே நிமிடம். பார்த்துட்டு வந்திடுவாள். அப்புறம் நாங்கள் அவளை அழைத்து வர மாட்டோம். இந்த ஒரு முறை மட்டும் அவள் பார்த்து விட்டு வரட்டும் ப்ளீஸ் ஆன்ட்டி..என்றாள்.

துளசி கண்கலங்க துகிராவை பார்த்தாள். கண்ணீரை உள்ளிழுத்து மனதை திடமாக்கிக் கொண்டு புன்னகையுடன் உள்ளே சென்றாள் துளசி.

துருவன் அவளிடம், உனக்கு இப்ப தான் பார்க்க வரத் தோணுதா? நீ என்னை கட்டிக்கப் போறேன்னு சொன்ன? கட்டிக்க போற மாமனுக்கு அடிபட்டா இப்படி லேட்டா தான் வருவீங்களா? என்று பேசி அவளை  பார்த்தான்.

அவள் புன்னகையுடன் எங்க வீட்ல ஒரு மேரேஜ் நடந்ததா? அதனால் தான் என்னோட மாமாவை பார்க்க வர முடியல. என்னோட மாமா கோபப்படக்கூடாதுன்னு தான் ஒரு கிப்ட்..என்று வாட்டர் புரூப் சன் கிளாஸ் என்று அவனுக்கு ஒரு கிளாஸை மாட்டி விட்டு..அவனுடன் பலவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

சாப்பிட ஏதும் எடுத்துட்டு வரலையா? கேட்டான்.

என்னோட மாமாவுக்கு என்ன வேணுமாம்?

எனக்கு பதில் வேண்டும் என்றான்.

பதிலா? என்ன பதில்.

என்னோட அம்மா உன்னை ஏதாவது சொன்னாங்களா?

அம்மாவா..இல்லையே. என்னை யாராவது ஏதாவது சொல்ல முடியுமா? என்று கண்ணடித்து கேட்க, அவனும் நம்பி விட்டான்.

ரொம்ப பெயினா இருக்கா என்று வருத்தமுடன் கேட்டாள்.

அவளை பார்த்துக் கொண்டே..நீ பக்கத்துல இருந்தா வலிக்காதாம் என்று அவன் கூற, தொண்டை அடைத்தது துளசிக்கு. சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். ஆனால் அவன் இதழ் குவிக்க..அவளுக்கு கண்ணீர் மெதுவாக எட்டிப் பார்த்தது.

ஏய்..எதுக்கு அழுற?

இல்ல..உன்னோட பெயினை மறைச்சிட்டு பேசுறேல்ல. அதான் என்று கண்ணீரை துடைத்தாள். இங்க வா..என்று அருகே அழைத்த துருவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு நெற்றியில் முட்டியபடி எனக்கு சீக்கிரமே சரியாகிடும். நாம பள்ளியில் சந்திக்கலாம் என்றான்.

ம்ம்..என்ற துளசி பேச முடியாமல் நெஞ்சில் யாரோ கல்லை வைத்து அடிப்பது போல் உணர்ந்தாள். எழுந்து நான் வருகிறேன் என்று திரும்பிய துளசியை கையை பிடித்து அவன் பக்கம் இழுத்தான். இன்னும் கொஞ்ச நேரம் இரேன் ப்ளீஸ் என்றான்.

துருவா..அம்மாவுக்கு சாமி கும்பிடணும். பொருட்கள் எல்லாமே கார்ல இருக்கு. இனி தான் சாப்பாடு..மற்ற அனைத்தையும் தயார் செய்யணும். இதுவே லேட் என்றாள்.

கொஞ்ச நேரம் இரேன்.

துருவா..ப்ளீஸ் வேண்டாமே!

உன்னோட அண்ணாக்களை நினைச்சு பயப்படுறியா? அவன் கேட்க, அவள் அமைதியாக அவனை பார்த்து விட்டு அருகே வந்து அவன் இதழ்களில் முத்தமிட்டாள். அவனும் முத்தமிட..

போதும்..துருவா..நான் வருகிறேன் என்று அவள் செல்ல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளியே வந்த துளசி கண்ணீருடன் ஓடினாள். ரதி புரியாமல் அவளை பார்த்தார். அவளுடன் வந்த அனைவரும் அவள் பின்னே ஓடினர்.

துளசி அழுது கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தாள். பிரதீப் அவளிடம் வந்து, எதுக்கு அழுற துளசி? பிரதீப் கேட்டான்.

அண்ணா..நாம சீக்கிரம் கிளம்புவோம். வண்டிய எடுக்குறீங்களா?

எதுவும் திட்டுனானா? தீனா கேட்க, இல்லண்ணா அவனும் என்னை..என்று நிறுத்தி சீக்கிரம் வர்றீங்களா? கோபப்பட்டாள். அனைவரும் ஏற கிளம்பினார்கள்.

என்ன துளசி? உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டானா? புவனா கேட்டாள்.

சொல்லலை அண்ணி. ஆனால் அவனுக்கும் என்னை பிடிச்சிருக்கு என்பது போல் நடந்து கொண்டான் என்றவுடன் பிரதீப் வண்டியை நிறுத்தினான்.

வண்டிய எடுக்குறீங்களா? அவன் எங்களிடம் பேசும் போது முழுவதும் துளசிய பத்தி தான் கேட்டான் துகிரா கூறினாள்.

நாம் வேண்டுமானால் ஊருக்கு போற திட்டத்தை மாத்திக்கலாமா? பிரதீப் கேட்டான்.

இல்லண்ணா. நான் கண்டிப்பா போகணும். ஆன்ட்டி பட்ட கஷ்டம் போதும். என்னாலும் வேண்டாம் என்று அழுது கொண்டே துகிரா மடியில் படுத்துக் கொண்டாள்.

அவளை நிமிர்த்திய துகிரா, நீ போற முடிவுல உறுதியா இருக்கியா? அவன் மட்டுமல்ல உன்னோட குடும்பம் உன் பக்கம் தான். ஆனால் நீ போயிட்டா..கொஞ்ச நாள் யாராலும் உன்னை பார்க்க கூட வர முடியாது. யாரும் உன்னருகே இருக்க மாட்டாங்க. போன பிறகு கஷ்டப்படக்கூடாதுன்னு சொல்றேன்.

நான் உறுதியா இருக்கேன். அதே போல் துருவனுக்கு அவன் அம்மாவை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நான் சென்றேன்னு தெரியக்கூடாது. எந்நிலையிலும் யாரும் சொல்லக்கூடாது. அப்புறம் ஜானுவிற்கும் இதை பற்றி தெரிய வேண்டாம். தெரிஞ்சா அவள் உடனே சொல்லிடுவாள்.

நம்மை தவிர மற்றவங்களுக்கு நான் அம்மா இறந்த வருத்தத்தில் இங்கே இருக்க முடியாமல் சென்றதாக சொல்லுங்கள். இதை பற்றி இனி யாரும் பேசக்கூடாது. கொஞ்ச நாள்ல அவனும் மறக்க வாய்ப்புள்ளது.

அவனும் என்றால் நீயும் அவனை மறந்து விடுவாயா? புவனா கேட்டாள்.

தெரியல அண்ணி.

என்னை எதுக்கு அண்ணின்னு கூப்பிடுற? எப்பொழுதும் போல் அழை.

அப்பத்தா தான் கூப்பிட சொல்லுச்சு.

அதெல்லாம் தேவையில்லை புவனா கூற, இல்லம்மா.. முறைப்படி தான் அழைக்கணும் என்றான் பிரதீப். அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

காலையில் விழித்து எழுந்த அகல்யா முன் அனைவரும் இருந்தனர். அவள் வேலுவை பார்த்து இரவு நடந்தது நினைவிற்கு வந்து, மாமா இனி நீ குடிப்பியா? என்று அவனை விரட்டினாள்.

அவரை விடுடி..அவள் அம்மா கத்த, மற்றவர்கள் சிரித்தனர்.

பாப்பு..என்னை விட்டுடு. இனி குடிக்கமாட்டேன் என்றவன் சட்டென நின்றான். அவள் பிரேக் போட முடியாமல் அவன் மீது மோதினாள்.

உனக்கு அழணும்ன்னா அழுதிரு என்றான் வேலு.

மாமா..அவன் என்னை எப்படி ஏமாத்தி இருக்கான் பாருங்க. கவின் பாவம் மாமா. அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான். சீட்டர்..ப்ளடி இடியட்… என்று திட்டிக் கொண்டே போனாள்.

பாப்பு இப்ப நீ திட்டுனா. அது என்னை திட்டுவதாக போறவங்க வர்றவங்க நினைச்சுப்பாங்க என்று பாவமாக கூறுவதை போல் நடித்தான்.

மாமா..நான் எப்படி ஏமாந்து இருக்கிறேன்? நீங்க மட்டும் இடையில் வரைலைன்னா..நான் இப்ப..என்று அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.

அதான் ஒன்றுமில்லையே. இனி எதையும் நினைக்காம மனச போட்டு குழப்பிக்காத என்று வேலு கூற, அவன் பேசியது நினைவுக்கு வந்தது.

மாமா..உன் மனசுக்குள்ள என் மேல இவ்வளவு காதல் வச்சிருக்கியா? உன்னை விட்டு.,.நான் என்ன செய்து விட்டேன். எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம். முதல்லவே உன்னோட காதல் தெரிஞ்சுருந்தா அந்த கோழித்தலையனை கண்டிருக்கவே மாட்டேன். ஏன்டா, நீ சொல்லல?

சிரிப்புடன் மாமான்னு சொல்லு பாப்பு..

நோ..நீ சொல்லாததுக்கு இதான் உனக்கு தண்டனை. நான் உன்னை போடா வாடான்னு தான் சொல்வேன்.

ம்ம்..கூப்பிடு..கூப்பிடு..நீ கூப்பிட்டால் கூட உனக்கு முத்தம் கொடுத்து விடுவேன் என்றான்.

முத்தமா? அது சொன்னா தான் முத்தமா? இல்லைன்னா வேண்டாமா? அவனை சீண்டி விட்டு ஓடினாள்.

பாப்பு கொடுத்துட்டு போ..என்று குறுக்கு வழியில் அவள் முன் வந்து நின்றான்.

மாமா..வழிய விடு. இல்லை சத்தம் போடுவேன்.

போட்டுக்கோ..நம்ம விசயம் தான் எல்லாருக்குமே தெரியுமே? அப்புறம் எல்லார் முன்னாடியும் கொடுத்தா என்ன? யாரும் இல்லாமல் கொடுத்தால் என்ன?

மாமா..என்று சிணுங்கி அவனை ஏமாற்றி ஓட நினைத்தாள். அவளை பிடித்து முத்தமிட்டு தான் விட்டான்.

போடா..மாமா என்று அகல்யா ஓடி விட்டாள். புன்னகையுடன் அவன் சென்றான்.

தருண் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து..அர்ஜூனுடன் வீடியோ காலில் வந்தான்.

அர்ஜூன் இங்க ஏதோ சரியில்லை என்றான் தருண்.

அதை அப்புறம் பார்க்கலாம். நான் சொன்ன அனைத்திற்கும் நீ தயாரா? என்று அவனுடன் இருப்பவர்களை காட்டினான்.

கமலி, லலிதா, ராஜவேல், துகிரா அப்பா மற்றும் பலர் இருந்தனர். ஒரு நிமிடம் டா என்று தண்ணீரை அருந்தி விட்டு..தருண் தயார் செய்ததை அனுப்பி விட்டு..ஒவ்வொரு பிராடெக்ட்டுக்கும் நிரந்திர பணமதிப்பு…மாற்ற எந்த அளவு கொடுக்கலாம் என்று அழகாக ஆங்கிலத்தில் விவரித்து பேசினான்.

தருணை பார்த்த லலிதா எழ முயன்றார். கமலி தான் கையை பிடித்து அமர வைத்தார். அனைவரும் தருண் பேச்சில் மெய்மறந்து பார்த்தனர்.

அங்கிருந்த ஒருவர்..மிஸ்டர் அர்ஜூன்..எப்படி இந்த அளவு திறமையான பசங்கள பிடிச்சீங்க?

சார்..அவர்களை நான் பிடிக்க அவர்கள் மிருகமில்லை. அவர்கள் எல்லாருமே என்னுடைய நண்பர்கள். எனக்கு அவங்க எல்லாரை பற்றியும் தெரியும். அபினவிற்கு புத்தகங்கள் பிடிக்கும். அவன் ஒரு முறை கூட ஸ்கேட் செய்து பழக்கமில்லை. ஆனால் பிடிச்சவங்களுக்கு பிரச்சனை என்றவுடன் ஸ்கேட் செய்தான். அது எப்படி என்றால் அவனது நுண்ணறிவு என்று அவன் அனைவர் பற்றியும் கூறி விட்டு,

லலிதாவை பார்த்து..ஒருவர் திறமையுடன் இருக்க பணம் தேவையில்லை. அறிவு இருந்தால் போதும். இவனால் ஒரு கம்பெனியை நடத்தும் திறமை கூட உள்ளது. அதனால் தான் பிசினஸ் பற்றிய அறிவை அனைவருக்கும் அவனால் கொடுக்க முடியுது. எல்லாருக்குள்ளும் தனித் திறமை இருக்கும் என்று அவனிடம் நேரடியாக கூட கேட்டுப் பாருங்கள்.

அர்ஜூன்..அவங்க எல்லாரும் பெரியவங்க. நீ என்ன பேசுற? தருண் கேட்டான்.

பார்த்தேல அர்ஜூன். உன் நண்பன் பயப்படுறான் லலிதா கூறினார்.

மேம்..நான் பயப்படல. யார் என்ன கேட்கணுமோ கேட்கலாம். பெரியவங்களிடம் இப்படி பேசாதன்னு தான் அர்ஜூனிடன் சொன்னேன்.

லலிதாவே ஆரம்பித்து வைக்க..தருண் பதிலில் அனைவரும் பிரமித்து அவனை பார்த்தனர்.

அர்ஜூன்..இந்த பையனை நான் அழைத்துக் கொள்கிறேன் ஒருவர் கூறி விட்டு அர்ஜூன் பதிலை எதிர்பார்க்காமல் தருணிடம்..உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கோ..என்றார்.

சார்..வரலாம். ஆனால் சார்..எனக்கு எல்லாமே அர்ஜூன் தான். இப்ப இல்ல பத்து வருடமா என்னோட குடும்பமும் அவனும் தான் எனக்கு இருக்காங்க. ஆனால் நான் என்னோட பெற்றோரை இழந்தாலும் என்னால் அர்ஜூனை இழக்க முடியாது. நான் எப்பொழுதும் அவன் பக்கம் தான். நாங்கள் பிரிந்த பின்னும் அவன் இடத்தை எவனாலும் நிரப்ப முடியாது. அவன் சொன்னால் வருகிறேன் என்றவுடன் அர்ஜூன் கண்ணில் கண்ணீர் தேங்கி நின்றது. கமலி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தார்.

உனக்கு அவ்வளவு முக்கியமா அர்ஜூன்? லலிதா கேட்க, எஸ் மேம்.. அவன் சொன்னால் எதையும் செய்வேன். அவனுக்காக எதையும் செய்வேன் என்றவுடன் அர்ஜூன் மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்தான்.

அவன் உனக்காக என்ன செய்தான்?

எனக்காக எதுவும் செய்தால் தான் நண்பனாக இருக்க வேண்டுமா சார்?

இப்படியும் ஒருவனா? என்று தருணை வியந்து கைதட்டல் ஒலித்தது.

இந்த அளவு உண்மையான ஒருவனை நான் பார்த்ததேயில்லை என்றார் ஒருவர்.

கமலி..மேம்..அவனை கொஞ்சம் பார்க்கிறீங்களா? என்று அப்பொழுதும் அர்ஜூனை பற்றி தருண் யோசிக்க, கமலிக்கு கஷ்டமாக இருந்தது.

அர்ஜூனை பார்க்க அவன் அம்மா வெளியே வந்தார். அவனை சுற்றி இன்பா, அபி, கைரவ், ஆதேஷ் அவனிடம் விசயத்தை அறிந்து அவனுக்கு ஆறுதலாக இருந்தனர்.

அர்ஜூன் மீட்டிங் பாதியிலே விட்டுட்டு வந்துட்ட? அபி நினைவூட்ட கைரவை அழைத்து உள்ளே அவன் அம்மாவை தாண்டி சென்றான். தருண் நாம அப்புறம் பேசலாம் என்று கூற..ஹே..மச்சி சூப்பர்டா என்று அனைவரையும் வைத்துக் கொண்டு கைரவ் தருணிடம் கையை உயர்த்தி காட்டினான். அவன் சிறு புன்னகையுடன் வெளியே சென்றான். அவனுக்கு துளசியிடம் மற்றவர்கள் நடந்து கொண்டது வினோதமாக பட்டது.

கைரவையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள..ஆதேஷையும் அழைத்து பேச வைத்தான். அவனையும் ஏற்றுக் கொண்டனர். லலிதா ஆதேஷை பெருமையுடன் பார்த்தார். ஆனால் அவன் அவரை முறைத்து பார்த்தான்.

ராஜவேலை பார்த்த அர்ஜூன்..சார் உங்களிடம் பேசணும் என்று கூறி விட்டு..கமலி, லலிதாவை பார்த்து..நம்ம எல்லாரும் இன்று இரவு ஊருக்கு கிளம்புறோம். குறைந்தது வர இரண்டு வாரமாவது ஆகும். அவன் அம்மாவை பார்த்து..உங்க கம்பெனி எங்கேயும் ஓடிறாது. எல்லாவற்றையும் ஊரிலிருந்து பார்த்துக்கலாம். இப்பொழுதைக்கு யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. அவனுடன் டீல் போட்டுருக்கேன். அதனால் எதுவும் செய்ய மாட்டான்.

இந்த மாதத்தில் எல்லா பிரச்சனையும் முடிக்கணும். நம்ம எல்லார் பற்றிய மொத்த விசயத்தையும் சொல்றான். வாங்க பிரச்சனைய முடிஞ்ச பின் உங்க கம்பெனிய பார்த்துக்கலாம். வேற வம்பு எதையும் இழுத்து வைக்காதீங்க? என்று சொன்னான்.

எல்லாமே சரி..இன்று எதுக்கு போக முடிவு செய்தாய்? கமலி கேட்டார்.

அவன் தயங்க..சார்..நாம அடுத்து சந்திப்போம் என்று மற்றவர்களை இன்பா அனுப்ப..தம்பி..உதவி வேண்டும்ன்னா சொல்லுங்க என்றார் ஒருவர். மற்றவர்கள் அவனை பார்த்துக் கொண்டே சென்றனர்.

மேம், நித்தி அம்மா சீரியசா இருக்காங்க அபி கூறினான்.

சீரியசாகவா? என்ன அவளுக்கு? கமலி கேட்டார்.

அர்ஜூன் அவன் அம்மாவை ஒருமாதிரி பார்த்தான். பின் விமலாவின் செக்ரட்டரியை அழைத்து அக்கா சொந்தக்காரவங்க கம்பெனி பொறுப்புல இருக்கிறவங்களோட மீட்டிங் இப்பவே ஏற்பாடு செய்யுங்க என்றான்.

ஹலோ..உங்க அர்ஜூன் சாரை பார்க்கணும்? ஸ்ரீ வரவேற்பறையில் நின்றாள்.

மேம்..அப்பாயின்மென்ட் இருந்தா தான் பார்க்க முடியும் என்றாள். வினிதா செக்ரட்டரி அனுவை பார்த்து..

ஏய்..யார்கிட்ட என்ன பேசுற?

மேம்..நீங்க போங்க. நேரா போய் வலது பக்கம் போங்க என்று ஸ்ரீயிடம் பேசிக் கொண்டே அனுவை பார்த்தான்.

மேம்..பாப்பாவுக்கு என்ன?

சார்..நீங்க போங்க. நானே டென்சன்ல இருக்கேன் என்று அர்ஜூன் இருக்கும் இடத்திற்கு விரைந்தாள். அர்ஜூனை பார்த்து கத்த ஆரம்பித்தாள் ஸ்ரீ.

ஸ்ரீ..நீ எப்படி வந்த? கைரவ் கேட்க, உன்னோட ப்ரெண்டு பிளைட் வாங்கி வச்சிருக்கான்ல. அதுல தான் வந்தோம்.

ஏய்..எங்க வந்து கத்திக்கிட்டு இருக்க? கமலி கேட்டார். அவரை பார்த்து விட்டு கண்டுகொள்ளாமல் மெண்டல்..மெண்டல்..என்று அர்ஜூனை திட்டினாள்

ஸ்ரீ என்னன்னு முதல்ல சொல்லு. அப்புறம் திட்டலாம் இன்பா கேட்டாள்.

அர்ஜூன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். மேம்..இவன் போனில் கத்தியதில் பயந்து நம்ம அனுவுக்கு காய்ச்சலே வந்துடுச்சு.

கோபமா இருந்தா. யார் பேசுறாங்கன்னு பார்க்காம கண்டமாதிரி பேசுவியா? நான் போன் செய்யவே இல்லை. அனு போனை எடுத்தது கூட எங்க யாருக்கும் தெரியாது. உன்னிடம் பேசணும்னு ஆசையா போன் செஞ்சிருக்கா. அவளிடம் கத்தி இருக்க? அவ ரொம்ப பயந்துட்டா. ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்தா. சமாதானப்படுத்தவே முடியலை. என் மேலுள்ள கோபத்தை அவ மேல காண்பிச்சிட்ட. முதல்ல போன்ல யார் இருக்கான்னு பார்த்துட்டு பேசு.

அர்ஜூன் அனுவை ஸ்ரீயிடமிருந்து தூக்க.. அனு அழுதாள். அம்மா..அம்மா.. என்று முணுமுணுத்தாள்.

ஹாஸ்பிட்டல் போகாம இங்க வந்திருக்க அபி கேட்டான்.

போயிட்டு தான் வந்தோம் என்று பின்னே பார்த்தாள். தாரிகா மூச்சிறைக்க ஸ்ரீயிடம் வந்து..என்னை எதுக்கு விட்டுட்டு வந்த? ஹப்பா.. வந்து சேர்வதற்குள்..அண்ணா..உனக்கு அறிவிருக்கா என்று அவளும் கத்தினாள்.

என்னடி? ஆளாளுக்கு என் பிள்ளைய திட்டிட்டு இருக்கீங்க? கமலி கேட்க, எல்லாரும் சண்டை போட்டு முடிங்க.

அனு செல்லம்..வாங்க அங்கிள்கிட்ட என்று அனுவை கைரவ் தூக்க வந்தான். அனு கத்தினாள்.

ஓ.கே..ஓ.கே நான் தூக்கலை என்று அர்ஜூனை பார்த்தான். கைரவ் அபியை ஓர் கம்பெனிக்கும், இன்பா ஆதேஷை ஓர் கம்பெனிக்கும் அனுப்பி அவன் சிலவற்றை கூறி முடிக்க சொன்னான். அவர்கள் கிளம்பினர்.

அம்மா, ஆன்ட்டி..சீக்கிரம் உங்க கம்பெனி வேலைய முடிச்சுட்டு தயாராகுங்க என்று ராஜவேலை பார்த்து நீங்களும் மேம் அறையில் இருங்க சார். நான் வந்துடுறேன் என்று அவன் ஸ்ரீயை ஒரு கையிலும், தாரிகாவை ஒரு கையிலும் இழுத்து அவன் அறைக்கு சென்றான். ஸ்ரீ அவரை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

உள்ளே சென்றதும் அவர்களை உட்கார வைத்து விட்டு போனை எடுத்து சைலேஷிடம்..சார் அகிலிடம் பேசினீங்களா? என்ன சொன்னான்?

அவன் ஊருக்கு கிளம்பிடலாம்ன்னு சொல்லிட்டான். ஓ.கே சார் என்று போனை அணைத்து விட்டு அமைதியாக அமர்ந்தான்.

அனுவை தொட்டு பார்த்தான். ஸ்ரீ சினத்துடன் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிட்டல் போனா வீட்டுக்கு போகாம இங்க எதுக்கு வந்தீங்க?

அர்ஜூன்..என்னை மேலும் கோபப்படுத்தாதே?

ஸ்ரீ..எனக்கு புரியுது. கொஞ்சம் டென்சன். அதனால் தான் கோபப்பட்டுட்டேன் என்று அனுவிடம் வந்து சாரிடா ஏஞ்சல் என்று கலங்கினான். ஸ்ரீ அமைதியானாள்.

நாம இன்று இரவு ஊருக்கு போகணும். எல்லாத்தையும் எடுத்து வையுங்க. வினிதாக்கா அம்மா, அப்பா என்ன சொல்றாங்கன்னு தெரியல? அவங்களும் வந்தா பாதுகாப்பா இருப்பாங்க. கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

என்னாச்சு அர்ஜூன்? அப்ப அகில் சீனியர் சாங் என்று தாரிகா கேட்டாள்.

அவனே ஊருக்கு போகலாம்ன்னு சொல்லிட்டான். அதுக்கு முன்னாடி நித்தி அம்மாவை பார்க்க போகணும். அவங்க சீரியசா இருக்காங்க என்றவுடன் ஸ்ரீயின் கண்கள் கலங்கியது.

அர்ஜூன் அவளை பார்த்து விட்டு..அவங்க நித்திய பார்க்க தான் உயிரோடவே இருக்காங்க. எப்படியும் என்று அவளை கூர்ந்து பார்த்தான்.

அர்ஜூன் நாங்க கிளம்புகிறோம் என்று அவள் எழுந்தாள். அகில் பவி வந்துட்டாங்களா?

வந்துட்டாங்க அண்ணா.

யாசு சீனியர்? என்று அர்ஜூனை பார்க்க, அவளையும் அழைத்து தான் செல்லணும். அதுமட்டுமல்ல..என்று அவன் ஒரு செய்தியை கூற..எனக்கு சந்தோசப்படவா? அழவான்னு? தெரியல அர்ஜூன்.

ஏஞ்சல்..அம்மா மாதிரி சாகப் போறாங்களா? அனு கேட்க,..மூவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

சாகவா? இதெல்லாம் யார் உனக்கு சொன்னது?

பாட்டி..அம்மா பேரை சொல்லு சாவடிச்சிட்டானுகன்னு அழுதுகிட்டே இருந்தாங்க என்றவுடன் ஸ்ரீ அவளை அணைத்து அழுதாள். தாரிகாவும் அவர்களை கட்டிக் கொண்டு அழ..அனுவை தூக்கி..அவளை அணைத்து விட்டு தாரி கூட உள்ள இரு என்று உள்ளே ஓய்வெடுக்கும் அறையை திறந்து விட்டு தாரிகாவிடம் அனுவை கொடுத்தான். அவள் இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றாள்.

அர்ஜூன் என்று ஸ்ரீ அழைக்க..வேகமாக அவளை அணைத்த அர்ஜூன். கஷ்டமா இருக்கு ஸ்ரீ. யாருக்காவது ஏதாவது நடந்து கொண்டே இருக்கு. இன்னும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறதோ? என்று அழுதான். அவளும் கண்ணீருடன் அவனை அணைத்திருக்க..நந்துவிடமிருந்து போன் வந்தது அர்ஜூனுக்கு.

அவளை அணைத்தவாறே போனை எடுத்த அர்ஜூன்..சொல்லுடா? என்றான். அவள் விலகி நின்றாள். மேகா எதுக்கு வகுப்பு மாறி இருக்கா? யாரோ ஒரு பையனோட சுத்திக்கிட்டு இருக்கா? அவளோட கனவை விட்டு என்ன செஞ்சுக்கிட்டு இருக்கா? என்னால் தான் விட்டுட்டாளா? என்று அவன் கேட்டான்.

நந்து, நாங்க ஊருக்கு கிளம்புகிறோம். எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ எதை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் நேரடியாக அவளிடம் கேட்டு தெரிந்து கொள். நான் அப்புறம் பேசுகிறேன் என்று போனை வைத்தான்.

ஊருக்கு போறானா? நான் அவளிடமே கேட்கணுமா? சிந்தித்தான் நந்து.

அவனுக்கு மீண்டும் அர்ஜூன் போன் செய்து..நீ அவளிடம் பேசுவதை விட அவள் அப்பாவிடம் கேள். பின் உன் முடிவை என்னிடம் கூறு என்று வைத்து விட்டான்.

ஸ்ரீ..நீங்க கிளம்புங்க. தயாரா எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க. நம்ம வீட்ல இருக்கிற எல்லார் பொருட்களையும் எடுத்துக்க சொல்லு. பவி கார் ஓட்டுவா. பின் செட்டில் மற்றுமொரு கார் இருக்கும். கீ என்னுடைய அறையில் என்று யோசித்தான்.

நான் யாரையும் அறைக்குள் விட மாட்டேன். ஏற்கனவே உன் அறைக்கு வந்துட்டேன் என்று அவள் கூற, எப்ப வந்த?

அது முக்கியமில்லை. எல்லா வேலையையும் முடிச்சிட்டு சீக்கிரம் வந்துரு என்று அவள் நகர, அவள் கையை பிடித்து உனக்கு மனசே இல்லையா? அர்ஜூன் கேட்டான்.

நோ..அர்ஜூன் என்று அவன் கையை உதற, என் கையவே உதறுகிறாயா? என்று சினத்துடன் அவளை பிடித்து இழுத்து அணைத்தான்.

அர்ஜூன் விடு..பாப்பாவுக்கு காய்ச்சலா இருக்கு. நான் அவளையும் பார்க்க வேண்டும் .நேரம் போதாது என்றாள்.

அறைக்கதவு தட்டப்பட எஸ், “கம் இன்” என்றான் அவளை அணைத்தவாறு. அர்ஜூனை தள்ளி விட்டு ஸ்ரீ அறைக்குள் சென்று அனுவை தூக்கிக் கொண்டு ஸ்ரீயும் தாரிகாவும் வந்தனர். அதே நேரம் உள்ளே நுழைந்தனர் அனுவின் பெரியப்பா, அத்தைகள்.

அனு அவர்களை பார்த்து மேலும் இறுக்கி ஸ்ரீயை கட்டிக் கொண்டாள். அர்ஜூன் ஓரக்கண்ணில் அனுவை பார்த்தான். அவன் அனுவை பார்ப்பதை பார்த்த ஸ்ரீ அனுவுடன் அவனருகே வந்தாள்.

உட்காருங்க என்று அவர்களுக்கு சீட்டை காட்டி விட்டு.. அர்ஜூன் அனுவை தூக்கி முத்தமிட்டு..சமத்தா இருக்கணும். ஏஞ்சலுக்கு நிறைய வேலை இருக்கு. வீட்டுக்கு போய் மருந்து சாப்பிட்டு தூங்கணும் என்றான். எல்லாரும் அவனை முறைத்த படி அமர்ந்திருந்தனர். இதை ஸ்ரீயும் தாரிகாவும் கவனித்தனர்.

அர்ஜூனுக்கு முத்தம் கொடுத்த அனு..சீக்கிரமா வீட்டுக்கு வா அர்ஜூன் என்றாள்.

கண்டிப்பா என்னோட குட்டி ஏஞ்சலை பார்க்க வந்திடுவேன் என்றான்.

அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க அனுவை தூக்கிக் கொண்டு ஸ்ரீ நகர்ந்தாள். அப்பொழுது அமர்ந்திருந்தவர்களுள் ஒருத்தி ஸ்ரீ பாதையின் இடையே காலை விட, ஸ்ரீ காலை தூக்கி விழாமல் சரியாக நடந்து அவர்களை தாண்டியவுடன்..

ஆன்ட்டி..உங்க காலை நீ வைத்த இடம் தவறு கொஞ்சம் வலது பக்கம் திருப்பி நீட்டியிருந்தால் தான் மற்றவர்களை கீழே விழ வைக்க முடியும். ஆனால் என்னிடம் அதுவும் நடக்காது அனு என் கையில் இருக்கும் வரை என்று ஸ்ரீ சிரித்தாள்.

அங்கிள், உங்க வொய்ப்புக்கு மத்தவங்கள தள்ளி விட புதுசா சொல்லித் தாங்க என்றாள். அர்ஜூன் புன்னகையுடன் அவளை பார்த்தான். நல்லா நடத்துங்கடா என்று தாரிகா இருவரையும் பார்த்து விட்டு அவர்களை முறைத்தாள்.

அனு ஸ்ரீயிடமிருந்து இறங்கி..என்னோட ஏஞ்சல தள்ளி விடுவியா? என்று அந்த பொம்பளையை அடித்தாள். ஸ்ரீ அவளை நிறுத்தி..அனு..சாரி சொல்லு என்றாள்.

ஸ்ரீ பாப்பா எதுக்கு சாரி சொல்லணும்?

சொல்லணும். என் கண்ணு பாப்பால சாரி சொல்லுங்க. அவங்க செஞ்சாங்கன்னு நம்மளும் செஞ்சா அவங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும் என்றாள்.

சாரி என்று அவரை முறைத்த அனு ஸ்ரீயிடம் ஏறிக் கொண்டாள். அர்ஜூன் சந்தேகத்துடன் ஸ்ரீயை பார்த்தான். இது அர்ஜூன் ஸ்ரீக்கு சிறுவயதில் சொன்னது. அவள் தான் எல்லாரிடமும் வம்பு செய்வாளே?

தாரிகா அர்ஜூன் பார்வையை பார்த்து, அண்ணா..என்று அழைத்தாள்.

ம்ம்..என்று தாரிகாவை பார்த்தான். அவள் என்னவென்று கண்ணால் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.

இருவரும் வெளியேற..அர்ஜூன் பேச ஆரம்பித்தான். ஸ்ரீ பாப்பாவை தாரிகாவிடம் விட்டு அர்ஜூனிடம் வந்தாள்.

கதவை தட்ட..அனைவரும் அவளை பார்த்தனர். அர்ஜூன் அருகே வந்து  டாக்டருக்கு பணம் கொடுக்கல. அவசரத்துல.. பர்ஸை மறந்து வீட்டிலே விட்டுட்டேன் என்று அவனது பர்ஸ் மேசையில் இருக்க..அதை எடுத்து கிரிடிட் கார்டு ஒன்றை எடுத்தாள்.

அர்ஜூன் இதை மேலெல்லாம் வைக்காத பாக்கெட்டிலே வச்சுக்கோ என்று அவனது பர்ஸை பாக்கெட்டில் வைத்து விட்டு, திருட்டு கும்பல் வந்து எடுத்துட்டு போனா கூட தெரியாது என்றாள்.

எம்மா நீ ரொம்ப பேசுறம்மா?

சார்..நான் உங்க யாரையும் சொல்லல. எங்களுக்கு வேலை இருக்கு. பை அர்ஜூன் சீக்கிரம் வந்திடு என்று ஸ்ரீ ஓட..அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன்… ஏய்..நில்லு பாஸ்வேர்டு..

அர்ஜூன் எனக்கு தெரியும் என்று புன்னகையுடன் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றாள்.

சார்..அவ என்னை பார்த்து கண்ணடித்தாளா? அர்ஜூன் கேட்க..இதை கேட்க தான் வரச்சொன்னீங்களா? என்றவுடன் அர்ஜூன் சீரியஸ் மோடுக்கு மாறினான்.