அத்தியாயம் 79
கேரி சோகமாக அமர்ந்திருக்க ஜாஸ்மினும் ஜானும் அவனருகே பாப்பாவுடன் வந்து அமர்ந்தனர். சந்துரூ அவனை பார்த்து, உனக்கு என்னாச்சுடா? கேட்டான். சைலேஷும் தாத்தாவும் அவனை பார்த்தனர்.
எனக்கு அந்த பையனை பார்க்கும் போது என்னோட வொய்ஃப் நினைவு வந்துருச்சு என்று அழுதான். டாடி..என்று பாப்பா முதல் முறையாக பேச..புள்ளையை தூக்கிக் கொண்டு..நீ பேசுறத கேட்க அவளுக்கு கொடுத்து வைக்கல என்று அவன் மேலும் அழுதான்.
கேரி..என்று ஜாஸ்மின் அவளது கையை பிடிக்க, அவன் தட்டி விட்டு பாப்பாவுடன் அறைக்கு சென்றான். ஜாஸ்மினும் கலங்கியவாறு இருந்தாள்.
இதுக்கு மேல இருக்கணுமா? என்று ஜான் ஜாஸ்மினிடம் கேட்டான்.
டிக்கெட் புக் பண்ணு என்று அவள் சொல்லி விட்டு அழுது கொண்டே அவளும் அறைக்கு செல்ல..சந்துரூ அவள் முன் வந்து அவனுக்கு கொஞ்சம் நேரம் கொடும்மா.
நான் எத்தனை நாளானும் காத்திருக்க தயாரா தான் இருக்கேன். ஆனா அவனோட கோபத்தை என்னால தாங்க முடியல என்று சைலேஷிடம் வந்து பாப்பாவை சமாளிக்க கஷ்டப்படுவான். கொஞ்சம் பார்த்துக்கோங்க. நான் ஈவ்னிங் கிளம்புறேன் என்று அழுது கொண்டே சென்றாள். ஜானும் அவள் பின்னே சென்றான்.
வெளியே வந்த நித்தி கைரவை முறைத்து விட்டு.. தாத்தாவிடம் வந்து, அவ இன்றே கிளம்புறாளாம் தாத்தா. கேட்கவே மாட்டேங்கிறா. கனி அக்காவையும் அழைத்து செல்ல மாட்டேன்னு சொல்லிட்டா. ஏன்னு கேட்டா? என்னால அவங்களுக்கும் ஏதாவது ஆகி விட்டால் என்னை என்னால் மன்னிக்கவே முடியாதுன்னு சொன்னா.
உன்னால யாருக்கும் ஏதும் ஆகாது. நீ இங்கே இருன்னு சொன்னேன்.
அவ அதுக்காக மட்டும் போகலையாம். அவளுக்கு இங்க ஏதுவா இல்லையாம். தனியா இருக்கணும்ன்னு நினைக்கிறாளாம்.
உங்ககிட்ட ஒண்ணு சொல்ல சொன்னா..என்று சைலேஷிடம் வந்து, நீங்க அவளை அழைத்து செல்ல வேண்டாமாம். அவளுக்கான இடத்தை அவளே தேடிப்பாளாம். அவள் படிக்க கல்லூரியில் பணத்தை நீங்களே போட்டுப்பீங்களாம். அவளை பார்க்க யாரும் வர வேண்டாமாம் என்று சைலேஷை பார்த்து கண்ணடித்தாள்.
அவன் யோசனையுடன் அவளை பார்த்து, எப்படிம்மா..அவளா தேடுவா? இப்ப இருக்கிற நிலைமையும் சரியில்லை. ஊரும் கெட்டுப் போயிருக்கு. யாராவது அவளை ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? கேட்டான். கைரவிற்கு இதயம் படபடவென அடித்தது. அனிகாவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்ற பயம் ஆரம்பிக்க.
நித்தி..கூட போறதா இருந்தா வருவாளா?
நானும் கேட்டுட்டேன். வேண்டாம்ன்னு பிடிவாதமா இருக்கா என்று கைரவை நித்தி பார்த்தாள்.
தாத்தா நித்தியிடம், சரின்னு சொல்லிடும்மா. அந்த பொண்ணு கிளம்பட்டும். ஆனால் தனியா யாரிடமோ மாட்டுவதை விட அவள் அப்பாவிடம் கூறி அழைத்து செல்ல சொல்லலாம்.
தாத்தா..அவருக்கும் அது கஷ்டமா இருக்கும். அனிகாவை அவர்கள் என்ன செய்தாலும் தடுக்க முடியாது.
அதுக்கு நாம என்ன பண்றது? இதுக்கு மேல அந்த பொண்ணு தான் முடிவெடுக்கணும் என்று கைரவை பார்த்தார்.
என்ன தாத்தா பொறுப்பில்லாம சொல்றீங்க? அவள கொல்ல நினைக்கிறவங்களிடமே விட சொல்றீங்க? கைரவ் சினமுடன் கேட்டான்.
ஆமா..எங்கோ..எவனுடனோ மாட்டி மானத்தை இழந்து சாவதற்கு இது மேல் அல்லவா? அவர் கேட்க, நித்திக்கு அவர் சொன்னதை கேட்டு கண்டிப்பா இவளை தனியே விடக் கூடாது என்று தோன்றியது.
ஆனால் கைரவிற்கோ..சினம் மேலிட்டது.
தாத்தா? போதும். என்ன பேசுறீங்க? கைரவ் கத்தினான்.
அந்த பொண்ணு வெளிய தனியா போனா நடக்கப் போவதை தான் சொல்கிறேன்.
தாத்தா..அவள போக வேண்டாம்ன்னு சொல்லுங்க.
என்னால முடியாதுப்பா. எனக்கு என்ன உரிமை இருக்கு? என்று அவர் கேட்க அவன் சைலேஷை பார்த்தான். நான் அவளுக்கு படிக்க உதவுகிறேன்னு மட்டும் தான் சொல்லி அழைத்து வந்தேன். அதுக்கு மேல எனக்கும் உரிமை இல்லை. நான் ஏதாவது கேட்டு, அதை கேட்க நீங்க யார்ன்னு கேட்டால் என்னால் பதில் கூற முடியாது.
நித்தியிடம் ஓடி வந்து, நீ சொல்லு நித்தி..அவ போகமாட்டா.
நானா? நாங்க காதலிப்பது தெரியும். உன்னோட அண்ணாவிற்கே அவளை இருக்க சொல்ல உரிமை இல்லைன்னா. நான் மட்டும் சொன்னா.. எதுக்குன்னு கேட்பா? அப்படியில்லை எனில் எப்படியும் ஒரு நாள் நான் கிளம்பி தானே ஆகணும் என்று கேட்பாள்.
வாழ்நாள் முழுவதும் அவள் இங்க இருக்க அவளுக்கும் நம்ம வீட்டுக்கும் என்ன உரிமை இருக்கு? கேட்க, தாத்தாவே பிரம்மித்து..என் பேத்தி அசத்தலா பேசுறா? என்று மனதினுள் நித்தியை மெச்சிக் கொண்டார்.
அவன் சந்துரூவை பார்க்க, அவன் கையை விரித்தான். கைரவ் வேகமாக படி ஏற..எங்கடா போற? சைலேஷ் கேட்டான்.
நான் பேசப்போறேன். உனக்கு உரிமை இருக்கான்னு கேட்டா என்ன செய்வ?
அத பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம். அவளுக்கான பதில் என்னிடம் இருக்கு என்று அனிகா அறையை திறந்து உள்ளே செல்ல..
ஹே..சக்சஸ்..என்று நித்தி சைலேஷ் மீது பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.
டேய்..நாங்க இருக்கோம்டா என்று சந்துரூ கூற, அவனை பார்த்த நித்தி அவனருகே வந்தாள்.
என்ன? அவன் கேட்க, தாரிகா அக்கா எங்க இருக்காங்க? கேட்டாள். அவன் சைலேஷை பார்த்தான்.
நான் சொல்லலடா. அவளா தெரிஞ்சுக்கிட்டா..
சந்துரூ..அவளிடம் பாதுகாப்பா இருக்கா. ஆனால் எங்க இருக்கான்னு நான் யாரிடமும் கூற மாட்டேன் என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அனிகா அறைக்குள் கைரவ் நுழைய அவள் படுக்கையில் படுத்துக் கொண்டு..கையில் அவள் அம்மா எடுத்து வைத்திருந்த புடவையை வைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அறைக்கதவை திறக்கும் சத்தம் கேட்டு..கைரவை பார்த்து பயந்தாலும் காட்டிக் கொள்ளாமல் எழுந்து நின்றாள்.
அவளருகே வந்த கைரவ்..நீ போகக்கூடாது என்றான்.
இல்ல கைரவ். நான் செல்வது தான் சரியா இருக்கும். நான் இங்கிருந்தால் உங்களுக்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல..என்னால இங்க இருக்க முடியாது. எத்தனை நாள் இங்கே இருப்பது? தப்பா இருக்கும். நித்தியும் உன்னோட அண்ணாவும் லவ் பண்றாங்க. அவ அதனால இருக்கலாம். ஆனால் நான் இங்கே இருப்பது வெளியே தெரிந்தால் கல்லூரியிலும், சாரோட கம்பெனியிலும் பிரச்சனை வரும். யாராவது தப்பா பேசிட்டா..நல்லா இருக்காது. தாத்தாவிற்கும் அவமானமாக போய் விடும்.
தப்பா இருக்காது. வெளிய போனா உனக்கு தான் ஆபத்து. போகாத.
நீ எனக்காக பேசுறியா? நம்பவே முடியல.
உனக்காக தான் பேசுறேன். உன்னை பார்த்துக்க சொல்லி அவன் தான் கூறினானே?
அவன் கூறியதற்காக சொல்கிறாயா?
அவன் அது மட்டும் தான் சொன்னானா? அவள் கேட்டாள். அவனுக்கு வேலன் கூறியது, அவன் முத்தம் நினைவுக்கு வந்தது.
வேறேன்ன சொன்னான்?
எதுக்கு கோபப்படுற? நான் கேட்க தானே செய்தேன்.
அவனை பற்றி பேசினால் உன்னோட கண்கள் கலங்குதே. உன்னால் அவனை மறக்க முடியலையா? ஏளனமாக கைரவ் கேட்க,
ஆமா..அவன மிஸ் பண்றேன். அம்மாவுடன் இருந்தாலும் எனக்காக எனக்கு பிடித்த அனைத்தும் வாங்கித் தருவான். அவன் கொலைகாரன் தான். ஆனால் என்னுடன் இருக்கும் போது சாதாரணமாக தான் தெரிவான். அவனுக்கு நான் என்றால் அவ்வளவு இஷ்டம். எனக்காக எதையும் செய்வான்..செய்துட்டான் என்று அவள் அழுதாள்.
வேலனுக்காக அனிகா அழுவது கைரவிற்கு பிடிக்காமல்..அவனை பிடித்து தான் அவன் முத்தம் கொடுக்கும் போது ஏத்துக்கிட்டியா? சீற்றமுடன் அவன் வார்த்தைகள் வந்தது.
அவன் எனக்கு தான முத்தம் கொடுத்தான். உனக்கென்ன? என்று அவள் தன் இதழ்களை தொட்டுப் பார்த்தாள். கைரவ் கோபமாக அவளை நெருங்கி அவன் முத்தம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ தான் எந்த உணர்வும் இல்லை என்றாயே? என்று அவளது கையை அழுத்தி பிடித்தான்.
பதட்டத்தில் கையூ..விடு..விடு..வலிக்கிறது என்று கூற, அந்த கையூ அவன் இறந்த இடத்தில் வைத்து உச்சரித்தது நினைவிற்கு வந்தது கைரவிற்கு. ஆனாலும் சொல்லு..என்று சத்தமிட்டான்.
ஆமாம் நினைவில் இருக்கு. எனக்கு யாரும் முத்தம் கொடுத்ததில்லை. அவன் தான் எனக்கு முதல் முத்தம் கொடுத்திருக்கான். அதான் மறக்கமுடியல..
அவன் செத்துட்டான்..புரியுதா?
அதுக்கென்ன?
உனக்கு அது நினைவுக்கு வரக் கூடாது.
அதை சொல்ல நீ யாரு? நான் எதை வேண்டுமானாலும் நினைப்பேன். எங்கு வேண்டுமானாலும் செல்வேன். எனக்கு தான் இப்ப யாருமில்லையே?
நான் யாரா? உன்னால அவன் கொடுத்த முத்தத்தை மறக்க முடியாதா?
ஆமாம் முடியாது என்ற மறுநிமிடத்தில் அவளை பிடித்து தன் பக்கம் இழுத்து முத்தமிட்டான். அவள் அவனை தள்ளி விட்டும் அவளை விடாது இழுத்து முத்தமிட்டான்.
இன்னும் அவன் முத்தம் நினைவுக்கு வருமா? கைரவ் கேட்க, அவள் அவனை பார்த்தாள். அவள் பதில் கூறாமல் இருக்க மீண்டும் முத்தமிட்டான்.
அவனை தள்ளி விட்டு, என்ன பண்ற? என்று அழுதாள்.
அனி..நான் உன்னிடம்..என்று தயங்கினான். போ..என்று வாசல் பக்கம் அவள் கையை காட்ட, கைரவ் அவளை அணைத்து, ப்ளீஸ் போகாத..
கைரவ் என்ன பண்ற? நான் எதுக்கு போகக்கூடாது?
நீ என்னருகே தான் இருக்கணும்.
உன்னருகே நான் எதற்கு இருக்கணும்?
ஏன்னா..நான் உன்னை காதலிக்கிறேன். நீ போகக் கூடாது.
காதலா? உனக்கு என் மேலா? அது எப்ப வந்தது?
ஹாஸ்பிட்டல்ல பார்த்தப்ப, விளையாடு போது..என்று அடுக்கினான்.
உன்னால உன்னோட குடும்பத்திடம் சொல்ல முடியுமா?
வா…இப்பவே சொல்றேன். நீ போகக்கூடாது என்றான்.
அவள் கண்ணீருடன் நீ உண்மையாக தான சொல்ற?
எல்லார் மாதிரியும் என்னை விட்டுட மாட்டேல.
கண்டிப்பா விட மாட்டேன் என்றான். கைரவை அணைத்த அனிகா..எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால தான் அவன் செத்துட்டான். முதல்ல அம்மா..இப்ப இவன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவனும் அவளை கட்டிக் கொண்டான்.
பின் அவள் கையை பிடித்து தாத்தாவிடம் வந்து..நாங்க காதலிக்கிறோம் என்று கைரவ் கூற, அனிகா அவர் காலில் விழுந்து அவன் கையை பிடித்து இழுத்து அவனையும் விழ வைத்து இருவரும் ஆசி பெற்றனர்.
நித்தியை உள்ளே அழைத்து சென்றான் சைலேஷ். அவள் தூங்கிக் கொண்டிருக்க..அனைவரையும் அழைத்து நித்திக்கும் அவள் அம்மாவுக்கும் உள்ள பிரச்சனை. அவங்களது இப்பொழுதுள்ள நிலையை கூறி விட்டு, நாளை மாலை அவள் அம்மாவை பார்க்க அனைவரும் வரணும் என்று தாத்தாவை பார்த்தான்.
அவர் சிந்தனையோடு..சரி என்றார். பின் சைலேஷை அழைத்து தனியே பேசினார்.
கைரவும் அனிகா சேர்ந்து அமர்ந்திருப்பதை பார்த்து..கேரி புன்னகையுடன் பாப்பாவை தூக்கிக் கொண்டு வந்தான்.
ஜான் அவனிடம் வந்து, நாங்க ஈவ்னிங் ஊருக்கு கிளம்புகிறோம் என்று கூறிவிட்டு ஜாஸ்மின் அருகே அமர்ந்து கொண்டான்.
கேரி அவளை கூர்மையுடன் பார்த்தான். அவள் சினத்துடன் கேரியை முறைத்து பார்த்தாள். அவளை பார்த்து விட்டு கைரவை பார்த்தான். அவன் யோசனையில் இருக்க, அவனருகே வந்து அமர்ந்தான். பாப்பாவை அனிகா வாங்கி பேசிக் கொண்டிருந்தாள். அனிகா கையிலிருந்து..தவண்டு ஜாஸ்மினிடம் சென்றது குட்டிப்பாப்பா. கேரி பாப்பாவை பார்த்து விட்டு கைரவிடம்…ரொம்ப அமைதியா இருக்க?
எங்கே ஒன்று முடிந்தால் ஒன்று ஆரம்பிக்குதே என்று நித்தி இருக்கும் அறையை பார்த்தான் கைரவ். ஜாஸ்மின் பாப்பாவை தூக்கிக் கொண்டு எழுந்து வெளியே செல்ல..அனிகா, ஜான் இருவரும் அவளுடன் சென்றனர். சைலேஷும் தாத்தாவும் வெளியே வந்தனர். அவர்களை பார்த்து மற்றவர்கள் உள்ளே வந்தனர். ஜாஸ்மின் மட்டும் பாப்பாவுடன் வெளியே நின்று கொண்டிருந்தாள்.
அண்ணா..நித்தி அம்மா இன்று…ஆமாம்டா இன்று கூட அவங்களோட கடைசி நாளாக இருக்க வாய்ப்புள்ளது என்று நித்தி அறையை பார்த்தான்.
அண்ணா..அவங்க கலந்து கொள்ளும் நிகழ்ச்சி..கைரவ் கேட்டான்.
ரொம்ப முக்கியம் பாரு..என்று அகிலை யோசித்த சைலேஷ்..நான் அகிலை பார்த்துட்டு வாரேன் என்றான். அப்பொழுது கைரவிற்கு போன் வந்தது கவினிடமிருந்து. அவன் போனை தேட, சோபாவில் இருப்பதை அனிகா எடுத்து கொடுத்தாள். இவன் எதுக்கு போன் செய்கிறான்? என்று போனை எடுத்தான் கைரவ்.
ஏன்டா..போன் செய்தால் எடுக்க மாட்டீங்களா? என்ன தான் பண்றீங்க? கவின் கத்தினான்.
ஏதும் பிரச்சனையா?
ஒன்றுமில்லை. அர்ஜூன் தான் உனக்கு, சாருக்கு, நித்திக்கு போன் செய்தான். யாருமே எடுக்கல. அதான் டென்சன் என்றான்.
அர்ஜூன் போன் செய்தானா? என்று அவன் போனை பார்த்தான். சைலேஷும் அவன் போனை அறையில் வைத்திருப்பான். அவனும் அதை பார்க்க..அர்ஜூனும் அபியும் பல முறை போன் செய்திருக்கிறார்கள்.
சைலேஷ் போனை வாங்கி..அர்ஜூனிடம் கொடு என்றான்.
அர்ஜூன் கவினிடம், நீங்க எப்படா ராசியானீங்க?
சைலேஷ் கையிலிருந்து போனை பிடுங்கிய கைரவ்..நாங்க ஒன்றும் ராசி ஆகலை. அவனுடன் ஆகவும் மாட்டோம் என்று கத்தினான்.
டேய்..சும்மா இரு என்று சைலேஷ் போனை வாங்கி அர்ஜூனிடம் கேட்டான்.
சார்..கைரவை அழைத்துக் கொள்ளவா?
அவன் எதுக்கு?
சார்..எங்களால எல்லாத்தையும் மேனேஜ் பண்ண முடியாது. அவனும் இருந்தால் கம்பெனி விசயத்தில் உதவியா இருப்பான். ஆதேஷையும் அழைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று கூற, தருணை ஊருக்கு அனுப்பி விட்டேன்.
அர்ஜூன் எதையும் பார்த்து செய். உன்னை நம்பி ஒப்படைத்து இருக்காங்க.
கண்டிப்பா சார்.
அவனை தனியாவா அனுப்பின? அர்ஜூன் நடந்த அனைத்தையும் கூற, இவ்வளவு நடந்திருக்கு. நீ சொல்லவே இல்லை. அவன் எந்த ஸ்டேசன்ல இருக்கான்?
ஊர்ல தான் அவனுக இருக்கான்.
டேய்..அவனையும் அங்க வச்சுக்கிட்டு, அவங்களும் அங்க இருந்தா சரியில்லை. பார்த்துக்கோங்க..என்று சொல்லி விட்டு..நித்தியை பற்றி பேசினான்.
அண்ணா..அகில் என்ன சொல்றானோ? அர்ஜூன் வருத்தமுடன் சொல்ல..அவனை நான் பார்த்துக்கிறேன். நீ கைரவை கூப்பிட்டுக்கோ என்று கூறி விட்டு..கவினிடம் கொடு என்று சைலேஷ் கூறினான்.
அண்ணா..என்று கைரவ் அழைக்க..அவனை முறைத்த சைலேஷ் அவங்க அறையிலே எல்லா ஏற்பாடும் பண்ணிடலாம். உன்னால முடியும்ல? கேட்டான். ஆட்களை அனுப்புறேன். நீ பார்த்துக்கோ. இப்ப நீ ஆன்ட்டிய பார்க்க கிளம்பு. நானும் வாரேன். பின் பேசிக் கொள்ளலாம். வேற..டேய்..கையூ உன்னோட ப்ரெண்டு அவனுகள நான் சொல்ற இடத்துக்கு வரச் சொல்லு.
ஏற்பாடா? கைரவ் கேட்க, அவன் கூறியதை கேட்டு மற்றவர்கள் அதிர்ந்து நின்றனர்.
சார்…நீங்க சாப்பிடலை அனிகா கூற, அவளை பார்த்து தலையசைத்த சைலேஷ்..யாருமே சாப்பிடலைல்ல வாங்க..என்று அனைவரையும் அழைத்து, இந்தா அர்ஜூன் பேசணுமாம் என்று கைரவிடம் போனை கொடுத்தாள்.
அர்ஜூன் அவனையும் அவர்களுடன் அந்த கம்பெனி வேலைக்கு அழைக்க…அவனும் மகிழ்ச்சியுடன் வாரேன் என்று கூற, இன்னும் பதினைந்து நிமிடத்தில் அங்கே இருப்போம். சீக்கிரம் கிளம்பு என்று போனை வைத்தான்.
சைலேஷ் சாப்பிட்டுக் கொண்டே..இன்பாவிடம் பேசினான். பின் அர்ஜூனிடம் மாலை ஏழு மணிக்கு ஹாஸ்பிட்டல்ல எல்லாரும் இருக்கணும் என்று அவனிடமும் ஏற்பாட்டை பற்றி கூறி..எல்லாரையும் அழைத்து வா என்று போனை வைத்தான்.
கைரவ் தாத்தாவிடம்..தாத்தா..நானும் என்னோட ப்ரெண்ட்ஸ் கூட செம்மையா எஞ்சாய் பண்ணப் போறேன்.
எஞ்சாய் பண்ணப் போறியா? அர்ஜூன் உன்னை என்ன பாடு படுத்தப் போறான்னு பாரு சைலேஷ் கூறினான். நீ வேலைக்கு போகப் போற..பார்ட்டிக்கா போற?
எப்படியோ? உருப்படியா வேலைய பார்த்தா சரி தான்.
கையூ..விளையாட்டா எதையும் பண்ணாத..பொறுப்பா இரு. ஏற்கனவே அபி தயாராகி அவனை அந்த கம்பெனியும் போர்டு மெம்பர்ஸ் ஏத்துக்கிட்டாங்களாம்.
உன்னையும் சாதாரணமா உள்ள விட மாட்டாங்க. இன்பாவையே அத்தனை கேள்வி கேட்டிருக்காங்க சைலேஷ் கூறினான்.
என்னது கேள்வி கேட்பாங்களா?
அப்புறம்..உன்னோட தகுதிய பத்தி தெரிஞ்சுக்காம எப்படி உள்ள எடுப்பாங்க? அர்ஜூனிடம் எப்படியெல்லாம் பேசி இருக்காங்க தெரியுமா? அவன் தான் அந்த கம்பெனி எல்லாத்துக்கும் அதிபதின்னாலும் நீங்க இன்னும் கல்லூரியே முடிக்கல. உனக்கும் ஏதாவது இருக்கும். சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு..சைலேஷ் கூற,
அண்ணா..என்னை பத்தி என்ன நினைச்ச?
ம்ம்..என் மானத்தை வாங்காமல் முடிச்சிட்டு வந்தா நல்லா இருக்கும் சைலேஷ் சொன்னவுடன்..நான் தயாராகி வருகிறேன் என்று கிளம்பி விட்டான்.
தயாராகி வந்த கைரவை ஆவென்று அனைவரும் பார்க்க, கேரி..அவனிடம் சென்று கூலரை கழற்றி விட்டு, இது உனக்கு இண்டர்வியூ மாதிரி. இதெல்லாம் வேண்டாம் என்று எடுத்தான்.
என்னடா தலைய பண்ணி இருக்கணுன்னு சைலேஷ் நீட்டா சரி செய்து விட்டான். அனிகா அவளறைக்கு சென்று கீழே வந்தாள்.
அர்ஜூன், இன்பா, அபி அங்கே இருந்தனர். அவர்களை பார்த்துக் கொண்டு நேராக கைரவிடம் வந்து..இந்தா..இது என்னுடைய லக்கி சார்ம்..நீ வச்சுக்கோ..என்று அவனது கோர்ட்டில் லயன் கோல்டன் பின்னை மாட்டினாள்.
ஹே..கைரவ்..என்று மூவரும் சத்தம் கொடுக்க “தேங்க்ஸ் டார்லிங்” என்று அவளை அணைக்க, அவள் கூச்சத்தில் நகர்ந்து கொண்டு அவர்களை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
போதும்டா..நேரமாகிறது. ஆதேஷும் வரானா?
நீ வேற..ஜானு என்ன செய்ய காத்திருக்காளோ? அவளும் வாரேன்னு சொன்னா அபி சொன்னான்.
நீங்க போறத பார்த்தா வேலைக்கு போற மாதிரி இல்ல. சைலு சொன்ன மாதிரி பார்ட்டிக்கு போற மாதிரி தான் இருக்கு சந்துரூ கூறினான்.
எல்லாருமே கவனமா இருங்க..ஒரு சின்ன பைல்ல கையெழுத்திட்டாலும் பார்த்து பண்ணுங்க. அங்க போய் விளையாட்டு தனமா இருக்காதீங்க என்று இன்பாவிடம் வந்து..உனக்கு பிரச்சனையில்லையே? கேட்டான் சந்துரு. சைலேஷூம் அவளிடம் வந்தான்.
எனக்கு என்னடா ரொம்ப ஹாப்பியா இருக்கேன் என்றாள். நித்தி எங்க? இன்பா கேட்க, அனைவர் பார்வையும் அறையை வருடியது.
சார்..எல்லாரும் சரியா வந்திருவாங்க. எனக்கு கொஞ்சம் நேரமாகும். ஊருக்கு கிளம்புற மாதிரி இருந்தா எல்லாத்துக்கும் ஆள் போட்டு வரணும். நீங்க அகிலிடம் பேசிட்டு சொல்லுங்க. என்ன சொல்றான்னு பார்க்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திருவான். நீங்களே பேசிக்கோங்க அர்ஜூன் கூறினான்.
நானும் பார்க்கணும் என்றான் சைலேஷ்.
கிளம்புங்க என்றான் அனைவரும் கைரவை வழி அனுப்பி விட்டு வந்து அமர்ந்தனர்.
அர்ஜூன் ஆதேஷிடம் சொல்லும் போது..அவன் அப்பாவும் ஜானுவும் பேசியே அவனை வறுத்தெடுத்தனர்.
அனைவரும் அவன் வீட்டிற்குள் அவன் தயாராகி சோபாவில் அமர்ந்திருந்தான். அவர்களை பார்த்து எழுந்து அர்ஜூனிடம் வந்து,
அண்ணா..ஸ்கூல்க்கு போற பிள்ளைய அனுப்புற மாதிரி சாப்பிட திண்பண்டமும் ஜானு எடுத்து வைக்கிறா. இதோ வந்துட்டா. சொல்லுங்கண்ணா..என்றான் ஆதேஷ் புலம்பியவாறு.
ஜானு..உன்னோட மாமாவுக்கு சாப்பிட எல்லாமே நான் வாங்கி தந்துடுவேன் அர்ஜூன் சொல்ல..அர்ஜூன் அண்ணா..என்று அவனை அணைத்தாள். அனைவரும் அதிர்ச்சியுடன் ஜானுவை பார்த்தனர்.
அண்ணா..”ஆல் தி பெஸ்ட்” என்று அர்ஜூனை பார்த்தாள்.
அக்கா..வாங்க என்று ஜானு திரும்ப..வசந்தி அக்கா பால்கோவாவுடன் வந்தார். அனைவருக்கும் ஜானுவே ஊட்டிவிட ஆதேஷ் அவளை முறைத்து பார்த்தான்.
ஒரு நிமிஷம் என்று உள்ளே சென்று மாமா…கண்ணை மூடுங்க என்று அவன் முன் அவனுக்கு பிடித்த நியூ மாடல் வாட்ச் ஒன்றை பரிசளித்தாள்.
ஜானு இது எப்படி வாங்குன? அபி கேட்டான்.
ஆதேஷ் பக்கம் திரும்பி,..மாமா இது உங்களுக்கு என்று மோதிரம் ஒன்றை அவன் கையில் கொடுத்தாள்.
ஜானு…நீ எப்படி வாங்குன? எப்ப வாங்குன?
சொல்றேன் என்று உள்ளே செல்ல, அர்ஜூன் இன்பா முகம் வாடியது.
ஜானு..இன்பா ஹேர் பேண்டை அவிழ்ந்து விட்டு..அவளுக்கு புது விதமாக ஹேர்ஸ்டைல் போட்டு விட்டு, அவள் வாங்கிய கிளிப்பை காட்டி அவள் தலையில் சொறுகினாள்.
மேம்…சூப்பர் என்று ஆதேஷ் கூற, இன்பா கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.
அதான் சொன்னானே நல்லா இருக்கு மேம் கைரவ் கிண்டலாக கூறினான்.
சரி..வாங்க போகலாம் என்று அர்ஜூன் சொல்ல..ஆதேஷ் ஜானுவிடம் அர்ஜூன் அண்ணாவுக்கு ஏதுமில்லையா?
அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம் அர்ஜூன் சொல்ல..அது எப்படி அண்ணாவ விட முடியும்? கொடுக்க வேண்டியவங்க அர்ஜூன் அண்ணாவுக்கு குடுப்பாங்க.
கொடுக்க வேண்டியவங்களா? இன்பா ஜானுவை பார்த்தாள்.
இதோ அண்ணா உங்களுக்கான கிப்ட் என்றாள் ஜானு. எங்க? ஆதேஷ் கேட்க..போன் வருது அண்ணா எடுங்க? என்றாள் ஜானு அர்ஜூனிடம்.
போன்லயா இருக்கு ஆதேஷ் கேட்டான். ம்ம்..என்றாள் ஜானு.
அர்ஜூன்.. உன்னோட சர்ட் பாக்கெட்டை பாரு என்று அனு கூறினாள். அவன் பார்க்க..ஹார்ட் வடிவத்தில் ஒரு லாக்கெட்..அதில் இரு புகைப்படங்கள். ஒன்று அனு பிறந்தநாளன்று நண்பர்களுடன் அர்ஜூனும் ஸ்ரீயும் அருகில் இருந்ததை போல் புகைப்படம் இருந்தது. மற்றொன்று அர்ஜூனும் அனுவும் மட்டும் இருக்கும் புகைப்படம். அதை பார்த்து மகிழ்ந்தாலும் ஸ்ரீ அந்த புகைப்படத்தை அவளை கட் செய்து எடிட் செய்திருக்கிறாள் என்று தெரிந்தது. அவனுக்கு கஷ்டமா இருந்தாலும் அனுவிடம் சந்தோசமாக பேசினான்.
லலிதா அங்கு வர..அப்புறம் பேசலாம் என்று அவன் போனை வைத்தான். அனைவரையும் பார்த்து விட்டு..ஜானு எனக்கு கிப்ட்?
ஆன்ட்டி..உங்களுக்கும் இருக்கே என்று அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். ஜானு என்று அபி சத்தம் கொடுத்தான். அவனை பார்த்து புன்னகையுடன் ஜானுவிற்கு லலிதாவும் கொடுத்தார்.
மேம்..அபி அழைக்க, அபிக்கு நான் சித்தி தான ஜானு.. எஸ் மேம் என்றாள் கிண்டலாக.
மாமா..என்று ஓடி வந்து ஆதேஷ் கன்னத்தில் முத்தமிட்டு “ஆல் தி பெஸ்ட் மாமா” என்றாள்.
அர்ஜூன்..உன் பின்னாடியே ஒருத்தன் சுத்துவானே அவன் எங்கே? ஏளனமாக தருணை பற்றி லலிதா கேட்டார்.
மாம்..சும்மா இருங்க என்று ஆதேஷ் இடைபுகுந்தான்.
வருவான் மேம். அவனில்லாமல் நான் எதுவும் செய்யமாட்டேன். மேம்..எதுவும்..என்று அழுத்திக் கூறி விட்டு அர்ஜூன் நிற்காமல் நகர்ந்தான். ஜானுவும் ஆதேஷை விட்டு விலகி நின்றாள்.
பிரதீப் அவளுக்காக எல்லாமே செய்திருந்தாலும் அவள் புவனா தருண் வீட்டில் தான் அதிக நேரத்தை செலவழித்திருப்பாள். அவள் அண்ணன் எப்படி இருக்க வேண்டுமென்று நினைத்தாலோ அதே போல் தான் தருண் புவனாவிடம் பழகி இருப்பான். அவ்வப்போது ஜானுவிடம் கூற அவ்வாறு தான் நடந்து கொள்வான். அன்று தருணை தாழ்த்தி பேசியதில் கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்கும். இப்ப இவங்க இப்படி பேசும் போது.. கண்கலங்கியது ஜானுவிற்கு.
அனைவரும் கிளம்ப, லலிதாவும் கிளம்பினார். அபி ஜானுவிடம் வந்து..எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்குன்னு எதிர்பார்க்க முடியாது ஜானு. நீ எதுவும் பேசிறாத. தருண் கஷ்டப்படாம நாங்க பார்த்துப்போம் என்று அவள் தலையை தடவி விட்டு சென்றான்.
துளசி காலையில் எழுந்து பார்க்க, அப்பத்தா அருகே இல்லை. அவள் இன்று மாலை அவளுடைய துருவனையும், அவள் குடும்பத்தையும் விட்டு வெகு தூரம் செல்லப் போகிறாள். நேற்றிலிருந்து கட்டுப்படுத்திய வைத்திருந்த மொத்த அழுகையையும்..வெடித்து அவளது தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள்.
வீட்டினுள் பிரதீப்பும் தீனாவும் சேர்ந்து வந்தனர். இதை பார்த்த வெற்றி…மீனு..நான் சொன்னேன்ல பசங்க சண்டையெல்லாம் சும்மா தான்னு. இங்க வந்து பாரு என்று சத்தமிட்டார்.
அவர் திருமணத்திற்கு பின் இந்த வீட்டில் அவர் சத்தம் ஒலிக்காமல் இருக்க, அப்பத்தா தன் மகனை மகிழ்ச்சி பொங்க பார்த்தார். ஆனால் துளசி அவளது அறையில் அழுது கொண்டிருந்தாள். வெற்றி கொடுத்த சத்தத்தில் துகிரா, புவனா, தருண் வெளியே வந்தனர். மீனாட்சி மகிழ்ச்சியுடன் அவர்களை பார்த்து..இருங்க காபி எடுத்து வாரேன் என்று சமையலறைக்குள் சென்று எடுத்து வந்து கொடுத்தார். அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு, துளசி எங்கே? என்று கேட்டனர்.
புள்ள தூங்கிக்கிட்டு இருந்தாய்யா. அதான் நான் எழுப்பலை அப்பத்தா கூறினார். அவள் தனியே இருக்கட்டும் என்று பிரதீப் நினைக்க..தீனா எழுந்து அவள் அறைக்கதவை தட்டினான். கையில் வாயை வைத்து அமைதியாக தூங்குவதை போல் படுத்துக் கொண்டாள். கதவு திறந்து தான் இருந்தது. கதவை திறந்து உள்ளே வந்தான். அவள் கண்ணீரை துடைத்த தடம் அப்படியே இருந்தது.
துளசி நடிக்காத? எழுந்திரு என்று அழைத்தான் தீனா.
அண்ணா..என்று அப்படியே அவன் மீது சாய்ந்து அழுதாள். அனைவரும் அவர்களிடம் வந்தனர். மீனாட்சி துளசிக்கு பிடித்த பதார்த்தங்களை சமைத்து வைத்திருந்தார். அவளை சமாதானப்படுத்தி அவளை தயாராக சொன்னார்கள்.
அவள் சாப்பிட வந்தாள். மீனாட்சியும் வெற்றியும் அவளருகே அமர்ந்து மாறி மாறி ஊட்டி விட்டனர். அவள் அழுதாலும் இன்று அவளுக்கான சிறப்பு நாளாக தெரிந்தது. இதுவரை பக்கத்தில் வராத அப்பா, சித்தியாக இல்லாமல் உண்மையான அம்மாவாக இருக்கும் மீனாட்சி. நேற்றிரவு அவளை தூங்க வைத்த அப்பத்தா, அழும் போது தோள் கொடுத்த அண்ணன் என்று சந்தோசமாக இருந்தது அவளது காதலை தவிர. அவளால் துருவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சாப்பிட்டு எழுந்த துளசி அனைவர் முன்னும் வந்து இன்று நான் கேட்பதை எல்லாரும் செய்வீங்களா? என்று கேட்டாள்.
என்னம்மா? இப்படி கேட்டுட்ட? கண்டிப்பா என்ன வேண்டும்ன்னு மட்டும் சொல்லு துளசி? பிரதீப் கேட்டான்.
அண்ணா.. துகி அண்ணிய ஒரு மாதத்திற்கு பின் அவங்க வீட்ல நீங்களே கொண்டு போய் விட்டுட்டு வரணும் என்று கேட்டாள். பிரதீப் துகிராவை பார்த்தான். அவள் மௌனம் சாதித்தாள்.
ஏன்மா? வெற்றி கேட்டார்.
அவங்கள பத்தி நம்ம வீட்டு ஆளே இப்படி பேசுறாங்கன்னா..மத்தவங்க உன் முன்னாடி தப்பா சொல்லிட்டா. நீ அமைதியாக கடந்து வருவியா அண்ணா? அவன் மீண்டும் துகிராவை பார்த்தான்.
அண்ணா..கேட்பது நான். என்னை பார்.
வெற்றி பேச ஆரம்பிக்க, அப்பா..அத்தை அப்படி தான் எல்லாரையும் பேசினாங்கன்னு சொல்லப்போறீங்க?
அவங்க நம்ம வீட்டுக்கு வரப்போற பொண்ணை பத்தி தப்பா பேசிட்டாங்க. அவங்களுக்கு நீங்க கொடுத்ததை விட பெருசா கொடுக்க வேண்டாமா?
உங்க தங்கச்சிய பொறுத்தவரை உரசிகிட்டு பக்கத்துல இருக்கிறத லவ்வா நினைக்கிறாங்க? ஆனால் அது இல்லன்னு நம்ம வீட்டு பொண்ணுங்க நிரூபிச்சா தான் என்ன? ஊர்க்காரவங்களே நம்ம குடும்பத்து பொண்ணுங்கள மதிக்கணும்ன்னா இதை செஞ்சு தான் ஆகணும்.
இப்ப கொடுக்கிற மரியாதைக்கு என்னம்மா? வெற்றி கேட்டார்.
அப்பா..அம்மாவை பத்தியும் தப்பா தான எல்லாரும் நினைச்சோம். முழுவிவரமும் தெரிஞ்ச பின் தான் எல்லாரும் உங்கள சேர்த்து வச்சாங்க. உங்க காதலை புரிஞ்சுகிட்ட மாதிரி..எங்களையும் புரிஞ்சுக்க வேண்டாமா?
சரி..அவ கிளம்பட்டும் என்று பிரதீப் ஒத்துக் கொண்டான். ஆனால் பேசாமெல்லாம் இருக்க முடியாது. துளசி புன்னகையுடன் தீனாவை பார்த்தாள்.
இன்று சாயங்காலமே புவியும் அவள் வீட்டுக்கு போவாள் என்றான் தீனா. தருணுக்கு சந்தேகம் எழுந்தது. இந்த பிள்ள படிக்க தான போகுது. எப்படியும் படிச்சி முடிச்சிட்டு வந்துரும்ல..ஏன் எல்லாரும் அவளை அதிகமாகவே தாங்குவது போல் உள்ளது? என்று சிந்தித்தான்.
அண்ணா..இப்ப நாம சேர்ந்து வெளிய போகலாமா? என்று துளசி கேட்டாள்.
வெற்றியும் மீனாட்சியும்..நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க என்றார்.
மச்சான் நீங்களும் கிளம்பிட்டு வாங்க போகலாம் என்றான் தீனா தருணிடம்.
இல்ல மாமா. நீங்க போயிட்டு வாங்க. அர்ஜூன் ஏதோ வேலை இருக்குன்னு சொன்னான். அதை பார்க்கணும் என்றான்.
பிரதீப், தீனா, புவனா, துகிரா, துளசி கிளம்பினார்கள். அப்பத்தாவும் வரவில்லை என்று கூறியதால் அவர் வீட்டில் இருந்தார். ஐவரும் சேர்ந்து மார்க்கெட் ஏரியாவிற்குள் வந்தனர். பிரதீப், தீனாவிற்கு அப்படியொரு மரியாதை. உடன் சென்ற பெண்களுக்கு பெருமையாக இருந்தது. புவியால் நடக்க முடியாததால் தீனா வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்தான். துளசிக்கு இரு ஜோடிகளையும் பார்த்து ஏக்கமாக இருந்தது.
நோ..துளசி. நீ படிக்கணும் நல்ல நிலைமைக்கு வரணும் என்று துளசி அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாலும் அவளுக்கு துருவன் கண் முன்னே வந்து கொண்டிருந்தான். புவனா அதை கவனித்து தீனாவிடம் காட்டினாள்.
துளசியை திசை திருப்ப..துளசி உனக்கு இது பிடிக்கும்ல சாப்பிடலாம். இது வாங்குவோமா? என்று தீனா பேச்சை மாற்ற..அண்ணா வீட்டுக்கு போவோமா? என்றாள்.
உங்களுக்கு வேறெதுவும் வாங்க வேண்டுமா? பிரதீப் துகிரா புவியிடம் கேட்டான். அவர்கள் வேண்டாமென்று தலையசைக்க..அவர்கள் கிளம்பினார்கள்.
அண்ணா..என்று நிறுத்திய துளசி ஒரே ஒரு தடவை துருவனை பார்க்க அழைத்து செல்றீங்களா? கேட்டாள் துளசி. புவி தீனா பிரதீப்பை பார்த்து, துளசி கண்டிப்பா போகணுமா? என்று கேட்டாள்.
அவர்கள் கூறுவதற்குள்..நான் கண்டிப்பாக போகணும். நான் காவேரி அம்மா நினைவிலே அழுதேன்னு சொல்லி வைச்சிருங்க. இதுல வேற எந்த விசயமும் வெளிய வரக்கூடாது. துருவனுக்கும் தெரியக்கூடாது என்று புவியை பார்த்து துளசி கூறினாள்.
ஆனால் துளசி..உன்னோட குடும்பமும் இல்லாமல் கஷ்டமா இருக்குமே? புவனா கேட்டாள்.
நான் பழகிக்கிறேன் என்று ப்ளீஸ் அண்ணா…ஐந்தே நிமிடத்தில் பேசி விட்டு வந்திடுவேன். தீனாவும் பிரதீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒன்றாக, போகலாம் என்றனர்.