அத்தியாயம் 76

எப்ப வந்தீங்க? என்று நன்றாக தெரிந்தவர் போல் மாதவ் அம்மா பேச, யாசுவும் பதறி அமர்ந்தாள்.

படுத்துக்கோ..என்று அவளை படுக்க வைத்து விட்டு அங்கிருந்த கத்தியை எடுத்து பழங்களை நறுக்கி சாப்பிடுங்க என்று அவன் அம்மா யாசுவிற்கும், அவள் குடும்பத்திற்கும் கொடுத்தார். மூவரும் விழித்து பார்த்தனர்.

அம்மா..நீ ஓவரா போற? மாதவ் தங்கை கூற,

நான் சாப்பிட வாங்கி வந்த பழம் தானடி கொடுத்தேன். இது என்னடி ஓவர்? என்று நேரடியாகவே அவன் அம்மா பேச..யாசு சிரித்தாள்.

ஆன்ட்டி..நான் தான் உங்களை வாங்கன்னு சொல்லணும். அங்கிள் வந்திருக்காங்களா? அவர் ரொம்ப ஸ்ரிட்டாமே?

நீ கவலைப்படாதம்மா. அவர் மனச மாத்தினதுல தான் உன்னை பார்க்க வந்திருக்கார். யாசு அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

இவங்க காதல் விசயம் உங்களுக்கு முன்னமே தெரியுமா? யாசு அம்மா கேட்டார்.

இல்ல ஆன்ட்டி, நாங்க அண்ணிய தொலைக்காட்சியில தான் பார்த்தோம். பார்த்தவுடனே எங்களுக்கு பிடிச்சிருச்சு என்று அவனது தங்கை யாசுவை பார்த்து,

அண்ணா தான் பொண்ணுங்கள பார்த்தா கண்டுக்கவே மாட்டான். நீங்க எப்படி அவனிடம் மாட்டுனீங்க? அவள் கேட்டாள்.

நித்திக்காக மால் வந்தது. பிரச்சனை நடந்தது? என்று கூறி விட்டு..அப்ப அவர எனக்கு தெரியாது? என்னோட ப்ரெண்டோட பிரச்சனை வந்தது. அவன் என்னை ரொம்ப திட்டிட்டான். நான் பீச் பக்கமுள்ள..கல் இருக்கையில் அழுது கொண்டே அமர்ந்திருந்தேன். அப்பொழுது என்னை பார்த்து வந்து பேசினார். சைலேஷ், நித்தி, கேசவன், மாதவ், அவன் அப்பாவும் அவள் பேசுவதை கேட்டுக் கொண்டே நின்றிருந்தனர்.

நித்தி கொடுத்த செயினை இவரும் வச்சிருந்தார். அதை அவர் காட்டவும் எனக்கு அன்று நினைவு வந்தது. பேசினோம்..பழகினோம்..பிடிச்சிருந்தது காதலித்தோம்.

மாதவ் அவளிடம் வந்து, எனக்கு எங்க முதல் சந்திப்பிலே யாசுவை பிடிச்சு போச்சு. அவளை பார்க்க நானும் அடிக்கடி அந்த மாலுக்கு செல்வேன். ஆனால் அவளை பார்க்க முடியலை என்று அவளை பார்த்தான். அவள் கண்கள் கலங்கி இருந்தது.

என்னிடம் நீங்க சொல்லவேயில்லை? என்று கேட்டாள்.

நீ இருந்த அந்த சூழ்நிலையில் எனக்கு சொல்ல தோணலை?

யாசும்மா..அந்த ப்ரெண்டு அகிலா? என்று யாசு அப்பா கேட்டார். அவள் அமைதியாக தலையை மட்டும் அசைத்தாள். அவள் கண்கள் கலங்கியது. மாதவ் அவளிடம், நாம பேசினதை மறந்துட்டியா? கேட்டான்.

கண்ணை துடைத்து விட்டு, அவன் கையை பிடித்து எல்லாரையும் பார்த்தாள். மாதவ் அப்பாவும் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்க காதலிக்கிறோம்..அப்பா. உங்களுக்கு அவர் வேலை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு இந்த வேலையும் பிடிக்கும். என்னையும் பிடிக்கும். எல்லா வேலையிலுமே பிரச்சனை இருக்கு தானப்பா..என்று அவரை பார்த்தாள்.

எனக்கு உன்னோட பாதுகாப்பு முக்கியம்மா. இனி இதுபோல் ஹாஸ்பிட்டல் படுக்கையில் நீ இருக்கக்கூடாது. ஆனால் அவர் வேலையால் பிரச்சனை வந்தால்.. என்று மாதவை பார்த்தார்.

அதெல்லாம் ஒன்றுமாகாது. நாங்க எல்லாரும் தான் இருக்கோமே? என்று மாதவ் அப்பா கூற..அப்பா..என்று அவன் அவரை கட்டிக் கொண்டான்.

என்னை விடுடா என்று நகர்த்தினார்.

என்னால் உடனே சொல்ல முடியாது. அவள் படித்து முடிக்க இன்னும் இரு வருடமாகும். அப்புறம் பார்த்துக்கலாம் என்றார். இதுவே பெருசு என்று மூச்சிழுத்து விட்டான் மாதவ்.

அங்கிள் என்று அகில் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

அகில் என்று எழுந்து யாசு பெற்றோர்கள்.. அவனிடம் சென்று கை எப்படி இருக்கு? என்று அவனிடம் நன்றாக பேச, மாதவ் முகம் வாடியது. யாசு அவனது கையை பிடித்தாள். கேசவன் அதை பார்த்து, அகில்..அங்க துருவன் என்றதும் அவன் வருத்தமாக நல்லா இருக்கானா அங்கிள்..நீங்க இங்க என்ன செய்றீங்க? என்று கேட்டான்.

அது வந்துப்பா..என்று நித்தியை பார்த்தார். அங்கிள்..என்று யாசு எழ,

படுத்து தான இருந்த..படுத்துக்கோ யாசு. யாருக்கும் என்ன சொன்னாலும் புரியாது? நித்தி சொல்ல, கவினும் அகலும் எகிறினர். சைலேஷ் நித்தியை முறைத்துக் கொண்டிருந்தான்.

நித்தி..நீ அதிகமா பேசுற? இதுக்கு மேல ஏதாவது பேசுன? அவ்வளவு தான். ப்ரெண்டுன்னு பார்க்க மாட்டேன் என்று கவின் சத்தமிட்டான்.

டேய்..சும்மா இருங்க.  பிரச்சனையை வளர்க்காதீங்க யாசு கூற, நாங்களா பிரச்சனைய வளர்க்கிறோம்? அகிலும் கோபமாக, அங்கிள்..என்று யாசு கேசவனை பார்த்தாள்.

அவர் கண்கலங்க..அகில் இங்க தான் இருக்கியா? என்று கேட்டுக் கொண்டே கதவை திறந்தாள் பவதாரணி. யாசு அவளை பார்த்து விட்டு அகிலை பார்த்தாள்.

அகில் அவளை பார்த்து அமைதியாக, நீ போ…நான் வந்திடுவேன் என்றான். அவள் அனைவரையும் பார்த்து விட்டு கேசவனை பார்த்து,

அங்கிள் எப்ப வந்தீங்க? நித்தி நீ சொல்லவேயில்லை..என்று அனைவரையும் பார்த்தாள். அமைதியாக இருந்தனர்.

அகில் என்னாச்சுடா?

நீ போன்னு சொன்னேன்.

இல்லடா அங்கிள்..என்று நித்தியை பார்த்தாள். நித்தியும் கோபமுடன் இருந்தாள். பவி அனைவரையும் பார்க்க, கேசவன் வெளியே சென்றார்.

கேசவா…நில்லு என்று யாசு அப்பா அவர் பின் சென்றார். சைலேஷும் அவர்கள் பின் சென்றான்.

நித்தி கோபமாக, அவரிடம் என்ன சொன்னடா? என்று கவின் அருகே வந்தாள்.

நான் நடந்ததை மட்டும் தான் சொன்னேன். நீ புரியாம பண்ற. இது எல்லாத்துக்கும் வருத்தப்படப் போற? என்றான்.

நான் எதுக்குடா வருத்தப்படணும்? நித்தி கேட்க, தாரிகா அம்மாவும், தாரிகாவும் உள்ளே வந்தனர்.

எதுக்கு வருத்தப்படணுமா? எவனோ ஒருத்தன் பேசியதை நம்பிட்டு பைத்தியம் மாதிரி மாமாவ கஷ்டப்படுத்திகிட்டு இருக்க? கவின் சீறினான்.

பைத்தியமா? நானா? அவரா? விட்டுட்டு போனவ பின்னாடி போறாரு நித்தி பேச..என்ன சொன்ன? என்று நித்தியை கவின் அறைந்தான்.

நான் என்னடா தப்பா பேசினேன்? அவரு செய்றத தான சொன்னேன் என்றாள் தேம்பியவாறு.

ரொம்ப பேசுற நித்தி? என்று அகில் கத்த,..நீ சரியா பேசுறன்னு நினைப்பா? என்று கவின் மேலும் கையை ஓங்க, தாரிகாவும் அவள் அம்மாவும் அதிர்ந்து அவனை பார்த்தனர். மாதவ் அவனிடம் வந்தான். வெளியே சென்ற சைலேஷ் கவினை தடுத்து நித்தியிடம் வந்தான்.

உன்னோட அப்பாவ நீயே பைத்தியம்னு சொன்னா.. மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிச்சியா? சினமுடன் கேட்டான்.

அவள் அவளோட அப்பாவை தேடினாள். அச்சோ..என்ன பேசி விட்டோம்? என்று கண்கலங்கிய நித்தி, நான் கோபத்துல சொல்லிட்டேன்.

ஆனால் அது மத்தவங்களுக்கு தெரியாதே? உன்னோட அப்பாவை பைத்தியம்ன்னு சொன்னேல..வா.. போய் அவர மனநல காப்பகத்துல விட்டுட்டு வரலாம்..என்றான் சைலேஷ்.

நித்திக்கு முன் கவின்..சார்..என்ன பேசுறீங்க? கோபப்பட,

நிறுத்து.. எல்லாருக்கும் எல்லாமே தெரியும்னா அவளுக்கு புரிய வைக்க  யாருக்கும் நேரமாயில்லை.

சார்..அவ தான் அம்மாவை பத்தி பேசினாளே கோபிச்சுட்டு பக்கதிலே வர மாட்டா யாசு கூற, அதுக்காக விட்டுருவீங்களா?

இப்ப அவள அடிச்சேல அத முன்னாடியே செஞ்சு அவளுக்கு புரிய வச்சிருந்தா. யாரும் இந்த அளவு கஷ்டப்பட வாய்ப்பில்லை என்று சைலேஷ் கவினிடம் கூறி விட்டு, நித்தியிடம் வந்தான்.

வா..போகலாம் என்று அவள் கையை பிடிக்க, அவரு என்னோட அப்பா..நீங்க அவர ஹாஸ்பிட்டல..என்று அழுதாள் நித்தி.

நித்தி..என்று பவி சத்தம் கொடுக்க, அகில் அவள் கையை பிடித்து தடுத்தான்.

ஓ..மேடம், உங்களுக்கு அவர் உங்க அப்பான்னு தெரியுதா? நீ சொன்னதை வச்சி யாராவது ஹாஸ்பிட்டல் அழைத்து போனால் என்ன செய்வ?

அவங்களோட சண்டை போட்டாவது என்னோட அப்பாவை போக விடாமல் தடுப்பேன்.

அப்ப..ஏன் எவனோ ஒருவன் உன்னோட அம்மாவை தப்பா பேசினான்னு இப்ப வரை கோபமா இருக்க? அப்பாவை போக விடமாட்டேன்னு சொன்ன? ஏன் உன்னோட அம்மாவை மட்டும் போக விட்ட?

அவங்க யாராடவோ..போயிட்டாங்க..

உங்க அம்மா..உன்னை விட்டு போனதுக்கு காரணமே நீ தான் இடியட் என்று சைலேஷ் கத்தினான்.

கேசவன் உள்ளே வந்து, வேண்டாம்ப்பா..சொல்லாத.. சொல்லாத..என்று சைலேஷை நித்தி அப்பா தடுத்தார்.

மாமா..விடுங்க. அவ உங்க பொண்ணு. அவளுக்கு தெரிய தான் செய்யணும்?

எனக்கு என்ன தெரியணும்? அப்பா..என்று அவரை பார்த்து, இவரு ஏதோ சொல்றார். அம்மா போனதுக்கு காரணம் நானா?

இல்லைம்மா. அவர் கோபத்துல பேசுறார். வேண்டாம் மாப்பிள்ள சொல்லாதீங்க..சொல்லாதீங்க என்று அவர் அழுதார்.

அவளுக்கு தெரிந்தே ஆகணும். உன்னோட அம்மா யாருடணும் ஓடலை. அவங்களுக்கு நுரையீரல் புற்றுநோய். நீ சின்னபிள்ளையா இருந்தப்ப..அவங்களுக்கு நிமோனியா இருந்திருக்கு. ஆனால் உன் அப்பாவிடம் கூட சொல்லல. இருமல் அதிகமாக, யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டு தனியே செக் அப் பண்ண தான் வந்தாங்க. அம்மா பார்த்த மருத்துவர் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டார். நிமோனியாவின் தாக்கம் என்று நினைத்தார். ரெண்டு நாள் ஆனதால் அங்கேயே வேலைக்கு சேர்ந்தார். ஒருவாரமானது. உன் அப்பாவிடம் முதலிலே போன் செய்து வேலையில் சேர்ந்ததாக கூறி அங்கேயே வேலைக்கு சேர்ந்து அதே மருத்துவமனையில் வேலை பார்த்தாங்க. உன்னோட பிறந்தநாளுக்கு நீ சைக்கிள் ஏற்கனவே கேட்டதால் தான் வேலை செஞ்சாங்க. அதற்குள் ஆட்கள் ஏதோ கூறி உன்னுடைய அம்மாவை பற்றி தவறான எண்ணங்களை உன் மனதில் திணித்து விட்டனர்.

அவங்க பணத்துடன் உன் பிறந்தநாளுக்காக வந்த போது என்ன செஞ்சன்னு நினைவிருக்கா?

எல்லார் முன்னாடியும் அடுத்தவங்க பேசியது போல் நீ பேசுன அது தாங்க முடியாம அங்கேயே மயங்கிட்டாங்க. உன்னோட அப்பா தான் பார்த்தாங்க. மயக்கம் தான் என்று அவரும் கவனிக்காமல் விட்டு விட்டார். உன் அம்மா வீட்டிற்கு வரக்கூடாதுன்னு நீ பிடிவாதம் பண்ண. ஒரு வாரம் தான் ஊர்ல இருந்தாங்க. நீ அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்தின. அதை பார்க்க முடியாமல் உன் அப்பா தான் அவங்கள அதே ஹாஸ்பிட்டல சேர்த்தாங்க. உன்னோட அம்மா அங்க தான் வேலை பார்த்தாங்க.

நாட்கள் உருண்டோடியது. ஆனால் உன் அம்மாவின் நிமோனியா உருவெடுத்தது யாருக்கும் தெரியல. நீ கல்லூரி சேர்ந்தாயே? அப்பொழுது உன்னை அம்மா பார்த்தாங்க. ஆனால் மறுநாளே அவங்களுக்கு நெஞ்சு வலி வந்தது. பின் அவங்கள ஹாஸ்பிட்டல்ல சேர்ந்தப்ப எடுத்த டெஸ்டில் தான் அவங்களுக்கு நுரையீரல் புற்று நோய் இருந்தது தெரிந்தது. முன்பே கவனித்திருந்தால் அவங்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் உன்னோட அம்மா இப்ப கடைசி நிலையில இருக்காங்க என்றான்.

அம்மாவுக்கு..கேன்சரா? என்ன கடைசி நிலையா? அப்ப ஏன் அவங்க கூட ஒருவர் ஊருக்கு வந்தாரே..அவர் என்று நித்தி அவள் அப்பாவிடம் கண்ணீருடன் கேட்டாள்.

அவ கூட வேலை பார்ப்பவரும்மா.

ஏன்ப்பா சொல்லல? முதல்லவே சொல்லி இருக்கலாமே? என்று கதறி அழுதாள் நித்தி. கேசவனும் தன் பொண்ணை அணைத்து அழுதார். சைலேஷ் அவர்களிடம் வந்து இருவரையும் அணைத்தான். கவின் சேர்ந்து கொண்டான்.

அப்பா..சரி பண்ணவே முடியாதா? நித்தி கேட்டாள். அவரால் பேசவே முடியலை. இல்லை என்று தலையை மட்டும் அசைத்தார்.

என்னால தானப்பா. உங்களாலும் அம்மாவுடன் இருக்க முடியல. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்ம்மா என்று அவள் கன்னத்திலே அவளே அறைந்தாள். சைலேஷ் அவள் கையை பிடித்து தடுத்து அவளை அணைத்துக் கொண்டான்.

பாருங்க சைலு. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன். என்னால தான் அம்மாவுக்கு இப்படி நடந்தது என்று அவனை அணைத்து அழுதாள். நான் இப்ப எப்படி அவங்க மூச்சில விழிப்பேன்? என்று அழுதாள்.

நித்திம்மா..அவளுக்கு ஏற்கனவே வயிற்றில் கட்டி இருந்து ஆப்பரேசன் பண்ணியிருக்கு. எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணி இருக்கோம். அதனால உன்னாலன்னு நினைக்காதடா. அவ உன்னை பார்க்க மட்டும் தான் உயிரை கையில பிடிச்சு வச்சிருக்கா. அவளுக்கான நேரம் கூட முடிஞ்சு போச்சு என்றார்.

அப்பா..அம்மா கூட பேசலாமா? அம்மா என்ன சாப்பிடுவாங்க? நாம வாங்கிட்டு போகலாமா? என்று அவள் கேள்விகளை அடுக்கினாள்.

இல்லம்மா. அவள் உனக்காக மட்டும் தான் காத்திருக்கா. அவளுக்கு நேற்றிலிருந்து சாப்பாடு செல்லவில்லை. தண்ணீர் மட்டும் தான் குடிக்கிறாள் என்று அவர் கூற,

ஏன்? என்னிடம் சொன்னீங்க? சொல்லாமலே இருந்திருக்கலாமே? என்று சைலேஷை நித்தி அடித்தாள். அவன் மௌனமாக கண்ணீருடன் அமர்ந்தான். அகில், கவின், யாசு அழுது கொண்டிருந்தனர். பவி அவளை தடுத்து நித்தியிடம் வந்தாள். யாசு பெற்றோருக்கு இதெல்லாம் தெரியாது. ஹாஸ்பிட்டல்ல இருப்பதை மட்டும் சொல்லி இருப்பார்.

அம்மாவை நாளைக்கு இரவு பார்க்க போகலாம்..என்றார். அப்பா..நீங்க?

நான் கிளம்புறேன்ம்மா..தேடுவா?

அப்பா, நானும் வாரேன் என்றாள். ப்ளீஸ்ம்மா..இன்று மட்டும் நான் அவளருகே இருந்து கொள்கிறேனே? என்று அழுதார். நித்தி தாங்க முடியாமல் கதறி அழுதாள்.

அப்பா..என்னை அம்மா மன்னிப்பாங்களா? உங்களுக்கு என் மேல கோபமே வரலையா? கேட்டாள்.

இல்லம்மா. நீ அப்ப சின்ன பொண்ணு. உன்னை அடித்தால் நீ என்னையும் விட்டு உன்னை காயப்படுத்திக் கொள்வாயோ? என்று பயந்து தான் அப்படியே விட்டோம். ஆனால் அம்மா உடல்நலம் பற்றி தெரிந்ததிலிருந்து உனக்கு பதிலாக கவின் அடிக்கடி வந்து பார்த்தான்ம்மா. இங்க கல்லூரி வந்த பின் நினைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துப்பான். வாரத்திற்கு இரு முறை அகில், அபி, கவின், யாசு வந்தனர்.

நித்தி அனைவரையும் பார்த்து கை கூப்பினாள். அகிலும் கவினும் அவள் கை எடுத்து விட்டு அழுதனர். கவின் கண்ணீரை துடைத்து விட்டு, நித்தி..அர்ஜூனுக்கும் தெரியும். அவனும் அம்மாவை வந்து பார்த்தான்.

ஏன்டா, முதல்லவே சொல்லி இருக்கலாம்ல. அம்மா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்க? என்று அழுதாள். இது பேச நேரமில்லை என்று நண்பர்கள் அமைதியானார்கள். தாரிகா அம்மா அவள் முன் வர, அவரை அணைத்து நான் தப்பு பண்ணிட்டேன் ஆன்ட்டி என்று அழுதாள்.

அழாதம்மா. அதான் அப்பா சொன்னாங்கல்ல. நீ காரணமில்லை.

ஆன்ட்டி, எனக்கு அவங்கள பார்க்கணும் போல் உள்ளது என்று அழுதாள். அவள் அப்பா வெளியே செல்ல..சைலேஷ், கவின், அகில் அவர் பின் சென்றனர்.

அங்கிள் எங்க போறீங்க?

நான் கிளம்புகிறேன். இதற்கு மேல் இங்கே இருந்தால் நித்தி வருவேன் என்று பிடிவாதம் செய்ய ஆரம்பிப்பாள். மாமா..நானும் வருகிறேன் என்று சைலேஷ் கூற, கவின் சைலேஷ் கையை பிடித்து தனியே அழைத்து சென்று ஏதோ கூற அவனும் தலையசைத்து சென்றான்.

தாரிகா அம்மா தலையில் கட்டுடன் இருந்தாரே அங்கே தான் நித்தி அம்மாவும் ஒரு வருசமா பெட்ல இருந்திருக்காங்க. அவள் அம்மாவை பார்க்க சைலேஷ் பின்னே யாசுவின் பெற்றோரும் வந்தனர். நால்வரும் கிளம்பினார்கள்.

அர்ஜூன், இன்பா, அபி சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

ஏன்டா..உன்னோட அம்மா இருப்பதே உன் கண்ணில் தெரியலையா? இன்பா கேட்டாள்.

எனக்கு காட்டிக்க விருப்பமில்லை என்றான் அர்ஜூன். மூவரும் சோபாவில் அப்படியே விழுந்தனர். ஸ்ரீ அவர்கள் முன் கையை கட்டிக் கொண்டு நின்றாள். பவி அம்மா பவியை தேடினார்.

மேம்..நாளைக்கு காலையில அகில் வருவான். அவனுடன் வந்துடுவா? நான் ஓய்வெடுத்தால் தான் நாளை கம்பெனிக்கு போக முடியும். தம்பி..நானும் போக நினைக்கிறேன் பவி அப்பா சொல்ல. ஓ.கே அங்கிள் போகலாம். எதுக்கும் கவனமா இருங்க. சின்னதா சந்தேகம் வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்றான். ஸ்ரீ மேலும் அவனை முறைத்தவாறு கையை கட்டிக் கொண்டு பார்த்தாள்.

என்ன? கேட்டான் அர்ஜூன். இன்பாவும் அபியும் எழுந்து அமர்ந்தனர்.

உள்ள போய்..பாரு என்றாள். அர்ஜூன் எழுந்து அறைக்கு செல்ல.. அங்கிருந்து பொம்மை ஒன்று பறந்து வந்தது. அவன் விலக..அபி முகத்திலே விழுத்தது. இன்பா அவனை பார்த்து சிரித்தாள். மீண்டும் பொம்மை வர, மீண்டும் அர்ஜூன் விலகினான். இம்முறை அது இன்பா மீது விழுந்தது. அபி சிரிக்கும் முறையாயிற்றே. அவன் சிரிக்க, இன்பா முறைத்தாள்.

மூவரும் உள்ளே வந்து பார்த்தால் அனு ஒரு பக்கம் திரும்பியும் நிவாஸ் ஒரு பக்கம் திரும்பியும் அமர்ந்திருந்தனர்.

இவர்கள் வரும் சத்தம் கேட்டு..அனு ஒரு கயிற்றை இழுக்க..அபி, இன்பா மீது சாயம் கொட்டியது. அபி விலகி தப்பித்து இன்பாவை பார்த்து சிரித்தான். நிவாஸ் திரும்பி அபியை முறைத்தான்.

என்ன பண்றீங்க? அர்ஜூன் அனுவிடம் வர..ஜூலி குரைத்தது. அனு அருகே இருந்தது. அர்ஜூனை பார்த்து குரைத்தது.

டேய்..எல்லாம் உன் வேலையா? நிவாஸை பார்த்து கேட்டான் அர்ஜூன். அவன் கழுத்தை வெட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டான்.

என்னடா பொண்ணுங்க மாதிரி பண்ற? இன்பா கோபமாக அவனருகே வர..ஜூலி குரைத்து பயமுறுத்தியது. அதே இடத்திலே நின்று விட்டாள்.

அபி திரும்பி..ஸ்ரீ பொம்மை துக்கி போட அனுவுக்கு நீ தான கத்து கொடுத்த? கேட்டான்.

உங்களுக்கு எப்படி சீனியர் தெரியும்?

கோபத்துல இப்படி தான தூக்கி போடுவ? ஒரு முறை பேப்பர் வெயிட் என் தலையில் பட்டு இரத்தம் வந்ததே.. மறக்கமுடியுமா? அவன் பேச, அர்ஜூன் அவனை முறைத்தான்.

சீனியர், நான் இது கூட செய்திருக்கேனா? எனக்கு நினைவில்லையே?

அபி அவளை பார்த்து விட்டு அனுவை பார்த்தான். எனக்கு ஏதாவது தந்தா தான் நீங்க தூங்க முடியும் என்றாள் அனு.

பாப்பாவுக்கு சாக்லெட் வேணுமா? என்று அபி நீட்ட, அங்கிள்..நீங்க தூங்க போகலாம் என்று அனு அதை வாங்கிக் கொண்டாள்.

தப்பித்தேன் என்று அவன் ஓட, இன்பா பாவமாக அவனை பார்த்தாள். அவள் கையிலுள்ள கீ செயினை பார்த்து கொடுக்க சொன்னான். அவளும் கொடுத்து விட்டு ஓடினாள்.

அர்ஜூனை மூவரும் ரவுண்டு கட்ட..நிவி நீயுமா? அர்ஜூன் கேட்டான்.

நீ என்னை விட்டு விலகி இருப்பது போல் தெரியுது. நாம ரெண்டு நாளா சரியா பேசவேயில்லை நிவாஸ் கோபமாக பேச, ஸ்ரீ வெளியே சென்றாள்.

அர்ஜூனை பார்த்தால் ஓடி வரும் அனுவும்..அமைதியாக ஜூலியுடன் அமர்ந்திருந்தாள்.

உனக்கே தெரியும் எவ்வளவு வேலைன்னு..

அதுக்கு பேச மாட்டியாடா? என்று நிவாஸ் அர்ஜூன் அருகே வந்தான். அர்ஜூன் அந்த லேப்பில் இருந்த கலர் பொடிகளை எடுத்து வைத்திருந்திருப்பான். அதை நிவாஸ் கன்னத்தில் பூச, அவன் சமாதானமானான். ஆர்வமுடன் அனு அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூன் அவளை பார்த்து அவனிடம் வர..

அர்ஜூன் கூட கா..போ..நான் உன்னுடன் பேச மாட்டேன். நீ என்னுடன் விளையாட வரவேயில்லை என்றாள்.

செகண்ட் ஏஞ்சலுக்கு இது தான் கோபமா? என்று அவளிடம் மண்டியிட்டு கலரை அவள் கன்னத்தில் பூசினான். அவளும் எடுத்து அர்ஜூன் மீது பூச..அர்ஜூன் மீண்டும் நிவாஸ் மீது பூச அறையையே மூவரும் கலராக்கி விளையாண்டு கொண்டிருந்தனர்.

ஸ்ரீ சாப்பாடு எடுத்து உள்ளே நுழைந்து அறையை பார்த்து திகைத்து மூவரையும் பார்த்தாள். மூவரும் பெட்டில் உருண்டு அதையும் கலராக்கி வைத்திருந்தனர்.

ஏய்,..என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? என்று சாப்பாட்டை ஒரு பக்கம் வைத்து விட்டு அவர்களிடம் வந்தாள். அர்ஜூன் கையிலிருந்த கலரை நிவாஸ் அனுவிற்கு கொடுக்க, அவர்களும் ஸ்ரீ மீது பூசி விளையாட அனைவரும் வந்து வேடிக்கை பார்த்தனர்.

இப்ப தானடா கோபமா இருந்துச்சுக? அதுக்குள்ள என்னடா இப்படி விளையாடுறாங்க? என்று இன்பா நால்வரையும் ஆச்சர்யமாக பார்த்தாள்.

ஸ்ரீ எல்லாரையும் பார்த்து விட்டு, போதும் அர்ஜூன்.. சமாதானப்படுத்தியது என்று எழுந்தாள். அவள் தலையிலிருந்து பொடி கீழே விழ அனைவரும் அவளை பார்த்து சிரித்தனர்.

நிவி, அறைக்கு.. போ. குளிச்சிட்டு தூங்கு என்றாள் ஸ்ரீ. இன்னும் கொஞ்ச நேரம் ஸ்ரீ?

நோ…கிளம்பு என்று அவனை விரட்டி பார்த்தால் பெட்டிற்கு அடியிலிருந்து ஜூலி வந்தது. அதன் மேலும் கலர் இருக்க, பவி அம்மா..ஜூலி நீயுமா? நாளைக்கு மட்டும் பவி உன்னை இப்படி பார்த்தால்..என்னை தாழித்து விடுவாள். வா..போகலாம்..என்று அவர் செல்ல, பவி அப்பா மற்றவர்களும் சென்றனர். அபி அவர்களை பார்த்துக் கொண்டே நின்றான். இன்பா அவன் தோளில் தட்டி போ..தூங்கு..என்றாள். அவர்களும் சென்றனர்.

ஸ்ரீ அனுவை தூக்கிக் கொண்டு குளியலறைக்கு செல்ல..நோ..ஸ்ரீ என்று ஹீட்டரை போட்டு விட்டு, சூடானவுடன் அனுவை தூக்கிக் கொண்டு அர்ஜூன் உள்ளே சென்றான்.

அர்ஜூன் அனுவை நான் பார்த்துக்கிறேன். நீ குளிச்சிட்டு சாப்பிடு என்றாள் ஸ்ரீ.

அவளை அருகே அழைத்து அனுவை கொடுத்து விட்டு வெளியே வந்து அப்படியே மெத்தையில் படுத்தான். அவள் அனுவை தயார் செய்து அறையை சுத்தம் செய்ய..

வேண்டாம் ஸ்ரீ. பக்கத்து அறையில தூங்கலாம் அர்ஜூன் கூறினான். இல்ல அர்ஜூன் நீ போ. நானும் அனுவும் இங்கேயே இருக்கோம் என்று மாப்பை எடுத்தாள்.

ஸ்ரீ நான் சொல்றேன்ல என்று கலர் பூசிய அவளது கன்னத்தை வருடினான். பின் அவன் வைத்திருந்த கலரை எடுத்து ஸ்ரீ கன்னம் , கழுத்து..என்று பூசிக் கொண்டே கையை கீழிறக்க, ஸ்ரீ அவன் கையை பிடித்து தடுத்து..போ..அர்ஜூன் நான் பார்த்துக்கிறேன் என்றாள்.

அவளை பார்த்துக் கொண்டே அனுவை தூக்க வந்தான். அர்ஜூன் குளிச்சிட்டு வா..டர்ட்டி பையா? என்றாள் அனு.

உனக்கு யாரு இப்படியெல்லாம் பேச கற்றுக் கொடுப்பது? அர்ஜூன் கேட்டான்.

ஸ்ரீ அவனை பேச விடாமல் வெளியே தள்ளி கதவை சாத்தி அறையை சுத்தம் செய்து பெட் கவரை மாற்றி விட்டு அனுவை படுக்க வைத்தாள்.

அர்ஜூன் குளித்திருப்பான் என்று அவனறை கதவை தட்டினாள். அவன் துவாலையுடன் வெளியே வந்தான். அர்ஜூன் உடை மாற்றி விட்டு வா..வந்து சாப்பிட்டுக் கொண்டே அனுவை பார்த்துக் கொள் என்றாள்.

ஏன், இப்படியே வருகிறேனே?

லூசாடா நீ? பாப்பா இருக்கா ஸ்ரீ கூற, பாப்பா தூங்கிய பின் இப்படியே வரவா?

ஏய், என்ன பேசுற? இடியட் என்றாள்.

அர்ஜூன் ஆடையை மாற்றி விட்டு வந்து அனுவுடன் படுக்க, ஸ்ரீ குளித்து விட்டு உள்ளிருந்து அர்ஜூன் நீ போ..நான் அனுவை பார்த்துக் கொள்கிறேன் என்று சத்தம் கொடுத்தாள்.

அவன் கதவை திறக்கும் சத்தம் கேட்டு..அவன் போய் விட்டான் என்று வெளியே வந்தாள். ஆனால் அர்ஜூன் அனுவுடன் தான் படுத்திருந்தான். அவனை பார்த்து கோபமாக..அர்ஜூன் உன்னை போக சொன்னேன் என்றாள் துவாலையுடன் ஸ்ரீ.

அர்ஜூன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அர்ஜூன்..போ என்றாள்.

ஸ்ரீ அனு தூங்கிட்டா..என்று எழுந்தான். அவள் பதறி உள்ளே செல்ல நினைத்தாள். அவளை தடுத்த அர்ஜூன் அவள் தழும்புகளை கவனித்தான். அதனை வருடினான். நீ போ..அர்ஜூன் என்றாள்.

நான் இன்னும் சாப்பிடலையே ஸ்ரீ?

சாப்பாடு தட்டு அப்படியே இருந்தது. அவள் அதை பார்த்து…எடுத்து வந்து சாப்பிடு என்றாள்.

இல்லை. நீ கொடு என்றான்.

நானா? நான் மருந்து போடணும்.

போடலாமே? என்று அந்த மருந்தை அர்ஜூன் எடுக்க, அதை பிடுங்கிய ஸ்ரீ..உணவை கையில் கொடுத்து அவனை வெளியே தள்ளினாள். அவள் அவனை தள்ளும் போது அவளது முடிகற்றைகள் முன் வந்து பின் சென்றது. அதை ரசித்துக் கொண்டே அவளுக்கு ஒத்துழைத்து வெளியே வந்தான்.

ஸ்ரீ அனு முழிக்கிறா பாரு? என்றவுடன் ஸ்ரீ அவள் பக்கம் திரும்பி பார்த்து விட்டு அர்ஜூனை முறைத்துக் கொண்டு திரும்ப, அவளது இதழ்களில் முத்தமிட்டான்.

டேய்..என்ன செய்றீங்க? தாரிகா ஸ்ரீயிடம் வந்தாள். கவினும் தாரிகா அம்மாவும் பின் வந்தனர். இனி எப்படி ஸ்ரீ அருகே இருப்பது? என்று, சாப்பிட வந்தேன்ம்மா என்றான் அர்ஜூன். தாரிகா அவனை பார்த்து முறைத்து விட்டு ஸ்ரீ அறைக்குள் சென்றாள்.

ஊருக்கு வந்தவுடன் நந்து அவன் அம்மாவை காண சென்றிருப்பான்.

நித்தி அம்மாவை பார்த்து விட்டு வந்த சைலேஷ் நித்தியை அவன் வீட்டிற்கு அழைத்து செல்ல..யாசுவுடன் அவள் பெற்றோர்கள் தங்கினர். மாதவும் அவன் குடும்பமும் வீட்டிற்கு சென்றனர்.