அத்தியாயம் 71

வினிதா வீட்டில் அனைத்தும் தயாராக இருந்தது. இன்பா அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அனைவரும் அங்கு இருக்க ஸ்ரீ மட்டும் இல்லை.

அர்ஜூன் அவளை கேட்க, அறையிலிருந்து அனு ஓடி வந்து அர்ஜூனிடம் ஏறிக் கொண்டாள்.

தம்பி..நீ போனப்ப படுத்த பொண்ணு எழவேயில்லை. தூங்கிக்கிட்டு இருக்கா வினிதா கூற, இன்பா அம்மாவை பார்த்தான்.

ஆமாப்பா..ரொம்ப சோர்வா இருந்தா. அதான் எழுப்பலை என்று அவர் கூற, அர்ஜூன் போ..அவளை எழுப்பி தயாராகுங்க. எல்லாரும் வந்துருவாங்க இன்பா சத்தமிட..தருண், பவி அப்பா, அனு தாத்தா அனைவரும் சேர்ந்து அமர்ந்திருந்தனர். தருண் அர்ஜூனிடம் ஓடி வந்தான்.

துருவன் பத்தி நினைவு வந்திருக்குமோ? அதை தெரிந்த பின் தான் அவள் படுத்தாள்.

அர்ஜூன் அனுவை தூக்கிக் கொண்டே உள்ளே செல்ல, இதயா தருணை அழைத்து வேலை ஏவினாள்.

நானா வந்து சிக்கிட்டேனா? என்று புலம்பியவாறு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீயை பார்த்து, அவள் நெற்றி, கழுத்து என்று காய்ச்சல் ஏதும் உள்ளதா? என்று பார்த்தான். தாரிகா கூறியது நினைவு வந்தது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி தூங்கிக் கிட்டே இருக்கா என்று அர்ஜூன் வீட்டில் இருக்கும் போதே தாரிகா சொல்லி இருப்பாள். அதை நினைத்தவன் போனை எடுத்து ஆருத்ரா அப்பாவிடம் கேட்க, அவளை ஏதாவது நினைவுகள் தொந்தரவு செய்தால் கூட அதை தவிர்க்க உறக்கத்தை நாடலாம் என்றார். போனை வைத்து விட்டு அனுவை பார்த்தான். அவள் முகமும் வாடி இருக்க, அவளிடம் பேச்சு கொடுத்தான். ஆனால் அர்ஜூன் தோளில் சாய்ந்து கொண்டாள். அனு ஏதும் பேசவில்லை.

வினிதா புகைப்படத்தின் முன் தயார் செய்த அனைத்து பொருட்களையும் வைத்திருப்பதை பார்த்து அனு..அவள் அம்மாவை பார்த்து அழுது தூங்க, ஸ்ரீ அருகே இதயா அவளை படுக்க வைத்திருப்பாள். அர்ஜூன் வாய்ஸ் கேட்டு ஓடி வந்திருப்பாள் அனு.

அர்ஜூன் ஸ்ரீயை எழுப்ப..அவள் எழுந்து அனுவை பார்த்தாள். அர்ஜூன் கொஞ்சம் டயர்டா இருந்ததா. அதான் தூங்கிட்டேன் என்று அனுவை தூக்கி எழுந்தாள்.

அனுவை தயார் செய்து அவளும் தயாராகி வந்தாள். அர்ஜூனும் தயாராகி வந்தான். ஆட்களும் வந்திருந்தனர். எல்லாரும் தயாராக இருக்க..வினிதா அப்பா அனைத்தையும் செய்தார். அனைத்தும் முடிந்து ஆடையை கொடுத்துக் கொண்டிருக்க அனு அவளது தாத்தா மடியில் இருந்தாள். பொம்மையுடன் கூடிய ஆடையை பார்த்து அனு..அதை எடுத்து சிரிப்புடன் அதை அணைத்து அம்மா..என்றாள். அனைவர் கண்களும் கலங்க..அவளது தாத்தா, பாட்டி, அர்ஜூனும் அழுதனர்.

முடிந்து சாப்பிட்டு அனைவரும் கிளம்பும் சமயத்தில்.. எல்லாரும் நில்லுங்க.. என்று அர்ஜூன் அவர்கள் முன் வந்து,

சார் எல்லாம் தயாரா? கேட்டான்.

சந்துரூ பத்திரிக்கையாளர்களுடன் உள்ளே வந்தான். முன் வந்த அர்ஜூன் அனுவை தூக்கிக் கொண்டு, நான் அனுவின் பாதுகாவலன் மட்டுமல்ல..என்று சந்துரூவை பார்த்தான். அவன் நிறையை பைல்ஸ்ஸை காட்டி..அனு சொத்திற்கான “பவர் ஆப் அட்டேனி” முழுவதையும் இறந்த வினிதா அர்ஜூன் பெயருக்கு மாற்றியுள்ளார். இனி கம்பெனி பொறுப்பு முழுவதையும் அவர் தான் பார்த்துக்கப் போறார் என்று வீடு..படிப்பு..அனுவிற்கான அனைத்து ஸ்ரீ பெயரில் மாற்றியதாக கூற, அவங்க சொந்த பந்தங்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள..ஒருவன் மட்டும் முன் வந்து எதிர்த்தான்.

நீங்க பிரச்சனை பண்ணா..நீங்க ஜெயிலுக்கு போக வேண்டி வரும் என்று பேமஸ் ரிப்போர்ட்டரிடம் பத்திரம்.. சம்பந்தப்பட்ட அனைத்தையும் காட்டினான் சந்துரூ. அதன் மூலம் அவனை அடக்கினார்கள். பின் சந்துரூவும் அர்ஜூனும் அவர்களை கலைத்து விட, அவன் முன் வந்து பார்க்கலாம்..நீ எப்படி நடத்துறன்னு பார்க்கலாம்? என்று அவன் சினமுடன் சென்றான்.

எல்லாவற்றையும் முடித்து விட்டு சோர்வுடன் அமர்ந்த அர்ஜூனிடம், என்ன பண்ணிகிட்டு இருக்க? ஸ்ரீ கேட்டாள்.

அவளை பார்த்து, அனு சாப்பாட்டாளா? அவளுக்கு சாப்பிட குடு.

நான் என்ன கேட்டேன்? நீ சாப்பாடு பத்தி பேசுற?

ஸ்ரீ அர்ஜூன் சரியா தான் செஞ்சிருக்கான். அவன் இப்படி செய்தால தான் அவன் வழிக்கு யாரும் வரமாட்டாங்க. இல்ல அனுவிற்கு ஒன்றுமில்லாமல் போய் விடும் சந்துரூ கூறினான்.

ஆனால் சார். இது அவங்களுக்கு மேலும் கோபத்தை தான் ஏற்படுத்தும். இருக்கும் பிரச்சனை போதாதா? ஸ்ரீ கேட்க, அர்ஜூன் அவளை ஊடுருவி பார்த்தான்.

நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?

இல்ல..இது கம்பெனி சம்பந்தப்பட்டது. போனால் கம்பெனி தானே போகும். உனக்கென்ன பிரச்சனை? அர்ஜூன் கேட்டான்.

அக்கா..கஷ்டப்பட்டு காப்பாற்றியது..என்று தயங்கி அவனை பார்த்தாள்.

அப்ப..அப்படியே விட்டா..அவங்க சும்மா இருப்பாங்கன்னு நினைக்கிறியா?

ஸ்ரீ பதில் கூறாமல் நின்றாள். எல்லாரும் சாப்பிடுங்க. தேவையில்லாம யோசிக்காத ஸ்ரீ. புரியுதா? என்று அவளிடம் முதல்ல அனுவுக்கு சாப்பிட கொடு என்று அவனும் அமர்ந்தான்.

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அர்ஜூன் உண்மையிலே இனி நம்மை கொலைகாரன் தொந்தரவு செய்ய மாட்டானா?

சாப்பிடும் போது பேசாம சாப்பிடுங்க இதயா அம்மா கூற, அவரை பார்த்து விட்டு அபி அமைதியானான். ஆனால் அர்ஜூன்..சொல்ல முடியாது என்று அவரை பார்த்தான்.

அவர் அவனை முறைக்க,..அவன் தான் கேட்டான்? அர்ஜூன் அபியை பார்க்க..அடப்பாவி..என்று சாப்பிட்டுக் கொண்டே அவனை பார்த்தான்.

சாப்பிட்டு முடித்தவுடன் அர்ஜூன் கவினை அழைத்து அகல்யாவை பற்றி கேட்டான். அவன் கூறியதில் அர்ஜூன் இதழ்களில் சிறுபுன்னகை..மேலும் பேசி விட்டு அவன் துண்டிக்க,

என்ன அர்ஜூன் சிரிக்கிற? ஏதும் திட்டம் இருக்குதா?

இல்லடா..அகல்யா அக்கா எப்படிடா வேலு அண்ணாவ ஏத்துகிட்டாங்க? எனக்கே ஆச்சர்யமா இருக்கு அர்ஜூன் சொல்ல, அபியோ..அகல்யா அக்கா வேலு அண்ணாவையா?

கவின் கூறியதை அர்ஜூன் சொல்ல..சூப்பர்டா அர்ஜூன். அண்ணா வெற்றிய புடிச்சுட்டாங்க..தருண் சொல்ல,

காதலித்து கை பிடித்ததெல்லாம் ஒரு வெற்றியா? இன்பா கேட்க, மேம்..அவர பத்தி உங்களுக்கு தெரியாது. அவரு நம்ம கவினின் சொந்த மாமா..

அதனால என்னடா?

இருக்கு. என்னை போல் தான் தனியா தான் இருந்தாங்க. என்ன அவருக்கு தாத்தா ஒருவர் கூடவே இருந்தார். அண்ணா படிக்கலை. அதான் கஷ்டமா இருக்கு அர்ஜூன் வருத்தப்பட்டான்.

உனக்கு ஏன்டா இவ்வளவு வருத்தம்? இதயா கேட்க, அவரு தான் என்னோட குருவாச்சே..

குருவா? இன்பா கேட்க,

ஆமாம் மேம். காதல்ல அவரை பார்த்து தான் நான் பின் வாங்கவேயில்லை. நீங்களும் பேசிப் பாருங்களேன் என்று அபியை பார்த்து..அபி சரி தான? கேட்டான்.

என்னை எதுக்குடா இழுக்குற?

நான் பேசி என்ன ஆகப் போகுது? இன்பா சலிப்பாக கேட்க,

ஏன் மேம்..இப்படி அலுத்துக்கிறீங்க? தருண் கேட்டான்.

நான் எதுக்கு யாருன்னு தெரியாதவங்கட்ட பேசணும்? அதான் கேட்டேன். ஸ்ரீயும் கேட்டுக் கொண்டே அனுவிற்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

மேம்..என்னை விட காதல்ல ரொம்ப உறுதியா இருந்த நல்ல மனுசன். அகல்யா அக்காவுக்கு தெரியாமலே அவங்க மேல காதல் என்று அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான்.

அனுவிற்கு வாயை துடைத்து விட்டு, அவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் ஸ்ரீ. அனு அவள் பாட்டியுடன் அமர்ந்து கொண்டாள். ஸ்ரீயும் வேலுவும் நல்ல பழக்கம். அதனால் அர்ஜூன் அவளை ஆராய்ந்தான். அவள் எதையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்றாள். ஆனால் அவளுக்கு மனதினுள் ஏக மகிழ்ச்சி.

ஏதோ யோசனையுடன் பிரதீப்பிற்கு போன் செய்து வேலு படிப்பு.. என்னவெல்லாம் தெரியுமென்று அனைத்தையும் அனுப்ப சொன்னான் அர்ஜூன்.

எதுக்கு அர்ஜூன்? பிரதீப் கேட்க, இங்க எங்க இன்பா மேம் பாதுகாப்பா இருக்க யாராவது பர்சனல் செக்கரட்டரி வேண்டும். அண்ணா சரியா இருப்பாங்களான்னு தான்..அர்ஜூன் தயங்க,..

அர்ஜூன்..அதெல்லாம் சரியா இருப்பான். இங்கிலீஸ் தெரியும். பேசுவான். எழுதுவான். ஆட்களை சரியாக எடையிடுவான். பிசனஸ் பத்தி ஏதும் தெரியாது. ஆனால் அவன் தான் கல்யாண மாப்பிள்ளை. அதை விட ஊரை விட்டு வெளியே வரமாட்டான் பிரதீப் கூறினான்.

இந்த தகுதி போதும்ல அபி..அர்ஜூன் கேட்க,

என்ன பண்ற அர்ஜூன்? என்னிடம் வேற கேக்குற?

ஆமா..இப்ப எதுக்கு எனக்கு பர்சனல் செக்கரட்டரி? இன்பா கேட்டாள்.

நாம தான அனுவோட எல்லாத்தையும் பார்த்துக்கப் போறோம்.

நாமலா? நீ அர்ஜூன், தருண் சொல்ல..

ஏன்டா, கெல்ப் பண்ண மாட்டீங்களா? அர்ஜூன் கேட்க, ஸ்ரீக்கு புரை ஏறியது. தலையை தட்டிக் கொண்டு அவள் தண்ணீரை தேட அர்ஜூன் தருணிடம் பேசாது அவளிடம் வந்தான். ஸ்ரீ தண்ணீர் குடித்து விட்டு வெளியே வந்தாள்.

அர்ஜூன் அவள் முன் கையை கட்டிக் கொண்டு, நீ நினைக்கிறத சொல்றியா?

நான் எதுவும் நினைக்கலை.

இல்ல. எனக்கு தெரியும் சொல்லு.

நீ இப்படி பண்றது புடிக்கல?

நான் தான் அப்பொழுதே சொன்னேனல..அக்காவின் உழைப்பு வீணாகக் கூடாது.

ஆனால் அக்காவுக்கு முன் அவங்க கணவர் தான பார்த்தாங்க? ஸ்ரீ கேட்க, சூப்பர் ஸ்ரீ..பாயிண்ட்ட பிடிச்சுட்ட? தருண் கிண்டல் செய்ய..

அவர் ஏதும் நினைக்க மாட்டார் என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பினார்கள்.

பாட்டி..என்று அனு அவரிடம் ஓடி சென்று..பாட்டி அம்மா..அம்மா..என்று அழுதாள்.

அர்ஜூன் தலையசைக்க அனுவை பார்த்துக் கொள்ளும் பாட்டி அவளை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார். கண்கலங்க வினிதா புகைப்படத்தை பார்த்தார்.

பின் ஸ்ரீயிடம் வந்து, அவரு கண்டிப்பா அர்ஜூன் தம்பிக்கு தவறாக ஏதும் நடக்கவிட மாட்டார். வினிதா பிள்ளைக்காக போயிட்டா.

வினிதாவை தம்பி குடும்பத்துல யாருமே ஏத்துக்கல. கொஞ்ச நாட்கள் சேர்ந்து தான் இருந்தாங்க. ஆனால் வினிதாவை எல்லார் முன்னும் அவமானப்படுத்துவது, வேலை ஏவுவது என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் யாரோ ஒருவனை அவர்களே வர வைத்து அவள் மீது வீணாக பழி சுமத்தி இருவரையும் பிரிக்க பார்த்தாங்க. அந்த நிலையிலும் தன் மனைவி மீது சந்தேகமில்லாமல் அவர் கோபத்தில் தனியே அழைத்து வந்து விட்டார். நல்லா பார்த்துக்கிட்டார். அனு பிறப்பதற்கு முன்பிருந்தே நான் இங்கே தான் வேலை பார்க்கிறேன். பாப்பா பிறந்தா. நல்லா போயிட்டு இருந்தது. ஒரு நாள் அவரை கொன்னுட்டங்க. புள்ள தவிச்சு போயிட்டா. யாருமில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டாள் என்று தன் முந்தானையால் கண்ணீரை துடைத்து விட்டு, அவளை தொந்தரவு செய்யவென்று ஆட்கள் வந்தனர். இரண்டு நாள் கழித்து தான் அர்ஜூன் தம்பி வந்து விசாரிச்சுச்சு. அப்ப இருந்தே தினமும் வர ஆரம்பிச்சது.

ஒரு நாள் ஒருவன் வினிதாவை..என்று குரல் நடுங்க..அவள் மீது கை வைத்தான். ஆனால் அதற்குள் இந்த புள்ள அவளை அழைத்துக் கொண்டே அவளறைக்கு வந்தான். என் தலையில் கூட அடி பட்டிருந்ததே? என்று அர்ஜூனை பார்த்து கூற, அனைவரும் அர்ஜூனை பார்த்தனர்.

என்ன? இதுவுமா நடந்தது? அர்ஜூன் திகைத்து அவரை பார்த்தான்.

தம்பி..உன் சத்தம் கேட்டவுடன் அவன் ஓடி விட்டான்.

யாருன்னு பார்த்திருப்பீங்கள? என்று அர்ஜூன் அவரிடம் வந்தான்.

அவர் தயங்கிக் கொண்டே அனைவரையும் பார்த்தார்.

யாருன்னு கேட்டேன்? அர்ஜூன் சத்தமிட, அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

அவன்..வினிதா கணவனின் தம்பி..என்று அர்ஜூனை பார்த்தார்.

அவரா? என்று சிந்தித்தவன் பின் அவரை பார்த்தீர்களா?

ம்ம்..வந்தான். தொடர்ந்து இரு நாட்கள் வந்தான். ஒரு நாள் வினிதாவுடன் நீ இருந்தப்பா. ஒரு நாள் அவன் மனைவியுடன் வந்திருந்தான். அவனது திருமணத்திற்கு முன்னே வினிதா மேல் அவனுக்கு ஒரு கண்ணு இருந்திருக்கு. புள்ள தான் சொன்னா. ஆனால் அவள் பெரியதாக எடுக்காமல் இருந்திருக்கா. அதுமட்டுமல்ல…அவனோட பொண்டாட்டியே நம்ம புள்ளையை அவனிடமிருந்து அவனுக்கு தெரியாமலே பல முறை காப்பாற்றி இருக்கா.

அக்காவுக்கு உதவிய ஒருவர் அங்க இருக்காங்களா? அது எப்படி முடியும்?

அவன் பெரும்பாலும் இரவில் தான் வருவான். அவன் வீட்டில் சாப்பிட்டு வெளியே கிளம்பினாலே இங்கே தான் வருவான். அதனால அவனோட பொண்டாட்டி வினிதாவிடம் கூற, இவள் பாதுகாப்பாக அறையினுள் இருந்து கொள்வாள். நானும் என் அறைக்கு சென்று விடுவேன். அந்த பொண்ணுக்கும் நன்றி சொல்லணும்.

அவங்களுக்கு அக்காவை பிடிக்குமா? அதனால் தான் உதவினாங்களா? அர்ஜூன் கேட்டான்.

எனக்கு தெரியலப்பா..

தன்னோட புருசனை தப்பு செய்ய விடாமல் தடுக்க தான் உதவி செஞ்சிருக்கும் அந்த பொண்ணு என்று இன்பா அம்மா கூறினார்.

ம்ம்..தம்பி..இங்க எங்கையோ கேமிரா இருக்காம். அதை வச்சு அவன ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க. அவன மாதிரி ஆளுங்கள சும்மாவே விடக் கூடாது பாட்டி சினத்துடன் பேசினார்.

அக்காவா வச்சாங்க. இல்லப்பா..அனு புள்ள அப்பா தான். ஆனா எங்கன்னு எனக்கு தெரியாது.

அவர் வச்சா.. கண்டிப்பா அக்காவை பாதுகாக்க தான் நினைச்சிருப்பார் என்று அர்ஜூன் கூற, அனைவரும் சுற்றி பார்த்தனர்.

நம்ம வீடு எவ்வளவு பெருசா இருந்தாலும்..நமக்கென்று பிடித்த தோதான தனியான இடம் எல்லாருக்கும் இருக்கும். அக்கா ஹால்ல..எங்க உட்காருவாங்க? இன்பா கேட்டாள்.

இங்க தான் என்று சோபா மூளையை காட்டினார். இன்பா அவ்விடத்தில் அமர்ந்து..நான் நன்றாக தெரிய வேண்டுமென்றால் எங்கே கேமிரா இருக்கணுமோ அங்க.. எதுவும் இருப்பது போல் தெரியவில்லை என்றாள்.

கேமிரா நம் கண்ணுக்கு கண்டிப்பாக தெரிவது போல் இருக்கணுமா? என்று ஸ்ரீ கேட்க,

ஆமாம்..கண்டிப்பா ஏதோ பொருள்ல கூட இருக்கலாம் என்று இன்பாவை பார்த்து விட்டு அர்ஜூனும் அபியும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

எல்லா பொருளும் புதியதாக இருக்க..”இந்த சுவற்று கடிகாரம் மட்டும் ஏன் பழையதாக இருக்கு?” அபி கேட்டான்.

அது வினிதா கணவர் சம்பாதித்த முதல் பணத்தில் வாங்கியது. அவர் வீட்டில் இருந்தது. அம்மா வீட்டிலிருந்து இதை மட்டும் தான் தம்பி எடுத்துட்டு வந்தார். இதை பார்த்த வினிதாவின் அப்பா, இது ரொம்ப பழைய மாடல்..1890ல் தயாரிக்கப்பட்டது. பத்திரமா வச்சிருக்காரே?

இது மாதிரி தம்பி அவர் அறையில் நிறைய வைத்திருப்பார் என்று பாட்டி கூறினார்.

அர்ஜூன்…கண்டிப்பா இதுல தான் இருக்கும் என்று அபி கூற, அனைவரும் அதனை முற்றுகையிட்டனர்.

அர்ஜூன்..அதை பாரேன்..அந்த நொடி முள்ளின் கீழ் சிறிய டாட் இருக்கு ஸ்ரீ கூற, அதை கூர்ந்து பார்த்தான்.

அதை அப்படியே எடுக்காதே என்று அபி அவனிடம் கைக்குட்டையை கொடுத்தான். அர்ஜூன்.. இவ்வளவு சிறியதா இருக்கு இதயா கேட்க, சீக்கிரம் அதை பார்க்கணும் அர்ஜூன் இன்பா ஆர்வமாக,

அபி..இது கேமிரா தான். யாரோ நம்மை கவனிக்கிறாங்க என்றான் அர்ஜூன்.

நம்மையா? இது அனு அப்பா வைத்தது தான?

இல்ல..அவர் வைச்சது இங்க இருக்கு என்று அதே கடிகாரத்தின் ஓரத்தில் இருந்த ஸ்டாண்டிலிருந்து பழைய காலத்து பேனாவை எடுத்தான் தருண்.

ரெண்டு கேமிராவா? இன்பா கேட்க,

ம்ம்..என்ற அர்ஜூன் இரண்டையும் வாங்கி அவனறைக்கு சென்று லேப்பை எடுத்தான்.

அர்ஜூன் என்ன பண்ணப் போற? பவி அப்பா கேட்டார்.

அங்கிள் பாருங்க என்று அந்த கேமிராவை காட்டினான்.

அர்ஜூன்..நீயும் உன்னுடைய தோழனும் ஸ்மார்ட் தான். இவ்வளவு வேகமா தெரிஞ்சிருச்சு. பரவாயில்லை…என்று உரத்து சிரித்தான் அவன்.

கேமிராவை ஆனில் சுவற்றை காண்பித்தாற் போல் வைத்து,..அவன் லேப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தான். இன்பா அதை பார்த்து, தருண் அவனை வெறுப்பேற்றி விளையாடலாமா?

மேம்..வேண்டாம்..

போடா..என்று கேமிரா முன் வந்து, ஹாய்..எங்களை கவனிக்க வந்த எதிரியே? உங்களது அழகான கண்களை நோண்டி தூக்கி எறிந்து விடுவேன். கேட்க துடிக்கும் காது மடல்களை பிய்த்து போட்டு விடுவேன்..என்று பேச..

இன்பா, என்னடி பண்ற? என்று அவள் அம்மா சத்தமிட, இருங்க ஆன்ட்டி என்று அபி இன்பாவின் காதை பிடித்தான்.

ஹேய்..விடுடா..விடு..என்று அவள் அபி கையை அடிக்க, கையை எடுத்து அவளை முறைத்தான்.

நீங்களும் ஜானு போலவே நடந்துக்கிறீங்க? என்று அபி சத்தம் போட்டான். இன்பாவிற்கு ஒருமாதிரி ஆனது.

அபி..என்று அர்ஜூன் அழைக்க, அவன் இன்பாவை பார்த்தான்.

அவனை முறைத்த இன்பா, நான் யார் மாதிரியும் செய்ய மாட்டேன். நான் நானாக தான் இருக்கிறேன் என்று..சினம் கொண்டவள் அமைதியாகி நானும் ஜானுவும் ஒன்று இல்லை என்று அவனிடம் நெருக்கமாக வந்து கூறி விட்டு, டபுள் சைடு கேம் விளையாடுறான். இடியட் என்றாள்.

என்ன சொன்னீங்க? அபி அவள் பின்னே செல்ல, அவள் கதவை சாத்த அவன் கையை வைத்து தடுத்து உள்ளே வந்தான்.

கதவை அடைத்தான் அபி. அபி..அபி..என்று அனைவரும் அழைத்தனர். இவ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காலா? அவள் அம்மா திட்டிக் கொண்டே, தம்பி…கதவை திறங்க..என்று அழைத்தார்.

ஆன்ட்டி..உங்க பொண்ண நான் எதுவும் செய்யமாட்டேன் என்று சத்தம் கொடுத்துக் கொண்டே இன்பா அருகே வந்தான்.

அவள் கப்போர்டு இடித்து நிற்க, இரு கைகளையும் வைத்து இன்பாவை அடைத்த அபி, டபுள் சைடு கேம் விளையாடுறேனா? வாய்க்கு வந்த படி பேசுறீங்க? உங்களை தவிர இதுவரை யார் மேலையும் எனக்கு காதல் வந்ததில்லை. எல்லாரிடமும் பேசினாலும் என்னுடைய எல்லைக்கு மேல் சென்றதில்லை.

ஜானு..சின்ன பொண்ணு. கொஞ்சம் துடுக்கா பேசுவா? புரியாம பண்ணுவா? அதை தான் சொன்னேன்.

வளர்ந்திருக்கீங்கள..அறிவில்ல..எவனோ ஒருவன் நம்மை கவனிக்கிறான். அவனிடமே சென்று இப்படி பேசுறீங்க? அவன் நம் பக்கத்துல கூட இருக்கலாம். வாயை குறைச்சுக்கோங்க. இல்ல..என்று பல்லை கடித்த அபி அவளிடமிருந்து விலகி அறையிலிருந்து வெளியே வர, இன்பா முகம் மலர்ந்தது. அனைவரும் பதறி உள்ளே வந்தனர். இன்பா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.

அக்கா..என்னாச்சு? திட்டினானா? வேறெதாவது? இதயா கேட்க, இன்பா அவளை முறைத்தாள்.

அபி..என்னாச்சு? ஜானுவை மிஸ் பண்றியா? இவ்வளவு தூரம் நினைக்க மாட்டியே? அர்ஜூன் கேட்க,

ஜானு…மாமா..மாமான்னு என்னை சுற்றி வரும் போது எதுவும் தெரியல. அவ ஆதேஷ் வீட்ல வச்சு அபி மாமான்னு சொல்லும் போது கஷ்டமா இருந்தது. யாரிடமாவது என்னை பற்றி பேசினால் மட்டும் தான் என் பெயரையே அழைப்பாள். ஆனால் என்னிடமே அழைத்தாலா? எனக்கு ஒருமாதிரி ஆனது.

ஒருமாதிரின்னா..அர்ஜூன் கேட்டான்.

உரிமையா பேசுவா? பழகுவா? ஆனா நேற்று அவ..பிரிச்சு பேசுன மாதிரி இருந்தது. மாமாவிடம் என்னிடமெல்லாம் ஏன் இப்படி பேசுறா? என்று கலங்கியபடி அமர்ந்தான்.

அர்ஜூன் புன்னகையுடன் கவனிப்பவன் கேமிராவை தூக்கி உடைத்தான்.

அர்ஜூன் என்ன பண்ற? அபி பதற,

ஒன்றுமில்லைடா..அந்த கொலைகாரன் தான் நம்மை வேவு பார்க்க யார் மூலமாகவோ வைத்திருக்கிறான்.

நடந்த எல்லாமே தெரிந்திருக்குமே? இதயா கேட்க, அபி முகம் வாடி இருப்பதை பார்த்தாள் இதயா. எல்லாரும் அபி பேசியதை கேட்டு தான் இருந்திருப்பார்கள். இன்பாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன்..அந்த அங்கிளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்று ஸ்ரீ கேட்டாள். அவரை பற்றி கேட்டவுடன் அர்ஜூன் அவளை முறைத்தான்.

போனை எடுத்து அர்ஜூன் அவருக்கு தான்  போன் செய்து அவரை கவனமாக இருக்க சொல்லி போனை வைத்தான்.

அர்ஜூன் இன்னொரு கேமிரா? இன்பா கேட்டாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.

அனைவரும் அதை பார்க்க,..அதில் வினிதாவும் அவர் கணவரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ தெரிய..அவன் அதை அணைத்தான்.

அர்ஜூன் இதற்கு வாய்ப்பே இருக்காது ஸ்ரீ கூற, வேறு யாரோ இதை வச்சிருக்காங்க என்று அவன் அதையும் உடைத்தான்.

ஏன் உடைச்ச? தருண் கேட்க..இதை என்ன பண்ண சொல்ற? கேட்டான்.

அந்த கொலைகாரனை போல் வேற யாரோ நம்மை கவனிப்பது போல் இருக்கு பவி அம்மா சொன்னார்.

ஆமா ஆன்ட்டி. எனக்கும் அப்படி தான் தோணுது..அர்ஜூன் கூற,

அர்ஜூன் பவியை பார்க்கணுமே? அவர் கேட்க..ஊருக்கு போன நித்தி வந்தவுடன் அழைத்து வரச் சொல்றேன் என்றான்.

ஆன்ட்டி..அந்த நாய்க்குட்டி..வெளியவே வர மாட்டிங்குது..தருண் கேட்டான்.

நாய்க்குட்டியா? அனு கேட்க,

அனுக்குட்டி..வா போய் பார்த்துட்டு வரலாமா? தருண் அழைக்க,..க்யூட் அங்கிள் எங்க? கேட்டாள் அனு.

க்யூட் அங்கிளா? பவி அப்பா கேட்க,

அங்கிள் அவ..அகிலை சொல்றா..இதயா கூற,

உனக்கு எங்கள பார்த்தாலாம் க்யூட்டா தெரியலையா? நிவாஸ் கேட்டான்.

இல்லை..நீ பார்த்தா எப்படி இருக்கன்னா..அனு கூற வருவதற்குள் ஸ்ரீ ஓடி வந்து அவள் வாயை மூடி தூக்கிச் செல்ல..

ஏய்…நில்லு..அந்த குட்டிப்புள்ளைய பார்த்ததிலிருந்து உன்னோட தம்பியவே மறந்துட்ட. ஸ்ரீ..நில்லு என்று நிவாஸ் அவள் பின் செல்ல..மற்றவர்கள் அவர்களை பார்த்து புன்னகையுடன் நின்றனர்.

என்ன தம்பி எதுவுமே கிடைக்கல அந்த பாட்டி வருத்தப்பட..பாட்டி அக்கா போனில் அவனோட மனைவி நம்பர் இருக்கும்ல..என்று உள்ளே சென்று போனை எடுத்தான் அர்ஜூன்.

அதில் காயூ என்று இருக்க..அவங்க பேரு தெரியுமா? உங்களுக்கு?

காயத்ரி என்றார்.

அர்ஜூன் உன்னுடையதில் பண்ணாத என்று இன்பா அவனை தடுத்தாள். நீ தான் போடுறன்னு யாரும் பார்த்து விடக்கூடாது. அப்புறம் அலர்ட் ஆவாங்க.

ம்ம்..நீங்க சொல்றதும் சரி தான் என்று ஸ்ரீ கொடுத்த போனில் போன் செய்தான்.

அர்ஜூன்..நீ அக்காவை பத்தி கேட்டு பதில் வரலைன்னா அவங்களால் நமக்கு எதுவும் நடக்காது. ஒரு வேலை தெரிவது போல் பேசினால்..தொடர்ந்து பேசு..ஆனால் நீ பேசுறன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாம் இன்பா கூறினாள்.

ம்ம்..என்று வினிதா அக்காவை உங்களுக்கு தெரியுமா? என்று தான் கேட்டான். அந்த பக்கம் குரலில்..அர்ஜூன்..நீயா? இது உன்னுடைய நம்பரா? நானே போன் செய்கிறேன். அவர் இப்ப போன் செய்வார். வைச்சுரு..நான் போடுகிறேன் என்று அந்த பக்கம் கூற, அதிர்ச்சியுடன் அவன் போனை பார்த்தான்.

மேம்..அவங்களே பேசுறேன்னு சொல்றாங்க.

அவங்க நெருக்கமாக இருக்குமோ? என்று பாட்டியை பார்த்தான் அர்ஜூன்.

தெரியலைப்பா..என்றார்.

சற்று நேரத்திலே..போன் வந்தது. அறையை பூட்டி உள்ளே சென்ற காயத்ரி, அர்ஜூன்..நான் உனக்கு அனுப்பியது கொஞ்ச நேரத்தில் வந்துடும். அது உனக்கு உதவியாக இருக்கும் என்றாள்.

நீங்க? அர்ஜூன் கேட்க, நானும் வினியும் கல்லூரி தோழிகள். யாருக்குமே தெரியாது. அவளை காப்பாற்ற முடியாமல் போனது. ப்ளீஸ் அர்ஜூன், அவனை விட்றாத. அவன் உள்ளே சென்றால் தான் நான் தப்பிக்க முடியும் என்றாள் காயத்ரி.

எனக்கு புரியல? நீங்க யாரை சொல்றீங்க?

அழுத காயத்ரி..என்னை கட்டாயப்படுத்தி தான் கல்யாணம் செய்தான் என் கணவன். என் அம்மா, அப்பாவை ஆறு வருசமா எங்க வச்சிருக்கான்னே தெரியல? அவன் செய்த தவறான காரியம் அனைத்தும் நான் அனுப்பியதில் இருக்கு. போலீஸிடம் சொல்றத விட..எப்படியாவது உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்து..ப்ளீஸ்..என்னோட பையனுக்காக நான் வாழணும். எனக்கும் வினிக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பது தெரிந்தால் என்னை கொன்றுவான். ப்ளீஸ் அர்ஜூன்..எனக்கு உன்னுடைய உதவி தேவை. என்னால் ரொம்ப நேரம் பேச முடியாது. இங்க யாரும் எனக்கு உதவ மாட்டாங்க. என்னை பற்றி தெரிந்தால் இவங்க யாரும் என்னை விட்டு வைக்க மாட்டாங்க. ப்ளீஸ் என்று வைத்தாள் காயத்ரி.

அர்ஜூன் வாயில் கை வைத்தபடி அமர்ந்தான். என்ன அர்ஜூன்? அனைவரும் கேட்க, சார்..கொரியர் என்று சத்தம் கேட்டது.

அர்ஜூன் வேகமாக ஓடினான். அது சிறிய கிப்ட் பாக்ஸ்.

வாங்கி வந்து அதை பிரித்தான். அதில் காயத்ரி அவளை பற்றிய முழுவிவரத்தையும் கொடுத்து, ஒரு பென்டிரைவை கொடுத்திருந்தாள்.

கேட்டவர்களிடம் கண்ணிலே பாவனை காட்டிய அர்ஜூன், அவனறைக்கு சென்றான். அனைவரும் அவனுடன் சென்றனர். அதில் காயத்ரியை அவன் கடத்தியது; அவள் பெற்றோரை வைத்து மிரட்டி திருமணம் செய்தது; அனைவருக்கும் இருவரும் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி ஓடி வந்து திருமணம் செய்ததாக காட்டியது; மகிழ்ச்சியாக வாழ்வது போல் அனைத்தும் போலியாக காயத்ரி நடிப்பதை பார்த்து,

என்ன கொடுமைடா இது? இதயா வாயை பிளக்க,. காயத்ரியை அவன் அடிப்பது, காயப்படுத்துவது, உடலுறவிற்கு கட்டாயப்படுத்துவதும் இருக்க..போதும் அர்ஜூன். இதுக்கு மேல பார்க்கணுமா? இதயா அம்மா கேட்டார். அவன் கொஞ்சம் நகர்த்தி பார்த்தான். அவன் வேறு சில பெண்களுடன் இருப்பதும், போதை மருந்தை அவன் வாங்கி விற்பது போல் தெரிய,

அர்ஜூன்..இவனை பாரேன். அந்த அறையில் மாதவ் சுட்டானே? இன்பா பதட்டமாக..

ஆமாம் மேம் அவனே தான். அந்த கொலைகாரனுக்கும் இவனுக்கும் கூட சம்பந்தம் இருக்கும்.

அர்ஜூன்..இவனும் அந்த கம்பெனியில் தான இருப்பான் என்று இன்பா உடல் வியர்க்க நின்றிருந்தாள்.

அவளை பார்த்த தருண், மேம்..என்னாச்சு? நீங்க எதுக்கு பயப்படுறீங்க? நாங்க எல்லாரும் இருக்கோம் என்றான்.

எல்லாரும் அவளை பார்க்க, அபி எழுந்தான். இன்பா அம்மா அவளை அழைத்து ஓரறைக்குள் நுழைந்தார்.

இன்பா அழும் சத்தம் கேட்க, அர்ஜூன் இதயாவை பார்த்தான்.

எதுக்கு பயப்படுறாங்க? அழுறாங்க?

உங்க எல்லாரையும் சந்திக்கும் முன்பே அந்த விக்கி..அக்காவை ஒரு முறை லாக் பண்ணிட்டான். ஆனால் சந்துரு அண்ணா தான் அவனை சாவடி அடிச்சு அவளை காப்பாற்றி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. அவள் நிலையை பார்த்து அம்மா..உடைஞ்சு போயிட்டாங்க. அதான் சந்துரு அண்ணா..தினமும் அக்காவை வேலைக்கு அழைச்சுட்டு போவார். வீட்டில் வந்து விட்டு போவார். அக்கா..அதிலிருந்து வெளிய வர ஒருவாரமாக்கிட்டா. சாப்பிடாம தூங்காம நிம்மதியே போச்சு. அப்பா இல்லாத கஷ்டத்துல..இது வேற..என்று இதயா அழுதாள். தருண் ஆதரவாக அவள் கையை பிடிக்க அவள் அவனை அணைத்துக் கொண்டாள். சில நொடிகள் மௌனம் நிலவ..அங்கே அப்பொழுது தான் ஸ்ரீ, அனு, நிவாஸ் வந்தனர். அவன் கையில் ஜூலி இருந்தது.