அத்தியாயம் 65

யோசனையோடு போனை எடுத்தான் அகில். கவின் இருக்கானா? என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் என்று அழுவது போல் பேசினாள் அகல்யா.

என்னாச்சுக்கா? அகில் கேட்க,

இப்ப காவேரி இறந்திருக்காங்கல..இதை வச்சு கல்யாணத்தை அவர் அம்மா நிறுத்த பாக்குறாங்க என்றான்.

அக்கா…என்ன சொல்றீங்க?

சும்மாவே அவங்களுக்கு என்னை பிடிக்காது. இதில் ஒரு வருடம் காத்திருப்பே பெரியதாக இருந்தது. இப்ப எல்லாம் தாயாரான பின், நான் ராசியில்லாதவளாம். அதான் காவேரி இறந்துட்டாங்களாம். பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதுமட்டுமல்ல அவன் ஒரு டென்சன்ல தான் அந்த பொண்ணுகிட்ட அப்படி பேசிட்டான்டா. எனக்கு திடீர்ன்னு அஞ்சு பவுன் நகை கேட்டாங்கடா. அந்த டென்சன்ல தான் இப்படி நடந்துக்கிட்டான். அவங்க பொண்ணை மயக்கிட்டானாம்..கண்டபடி பேசுறாங்க. எங்களுக்குன்னு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையே போச்சு என்று அழுதாள் அகல்யா.

அக்கா..அழாதீங்க. அந்த அஞ்சு பவுன் என்ன ஆச்சு?

அதை இவரே பேசி சமாளிச்சார். ஆனால் முடியல..அதனால என்று தயங்கினார்.

அதனால..? அகில் கோபமாக கேட்க,

அழுது கொண்டே வீட்டை விற்கணும்ன்னு முடிவெடுத்துட்டாங்க அம்மா.

அவனுக்கு தெரியுமா? அகில் கேட்க, தெரியும் என்றாள் அவள்.

நீங்க போனை வையுங்க. நான் அவனிடம் சொல்கிறேன் என்று கவினிற்கு அகில் அழைக்க, அவன் போனை பார்த்து விட்டு கட் செய்து தாரிகா அம்மாவிடம் சொன்னான் அந்த பவுன் விசயத்தை.

கவின்..ஏன்டா சொல்லலை..என்று புலம்பியவாறு அர்ஜூனுக்கு அழைப்பு விடுத்து அர்ஜூனிடம் கூற, அவன் சைலேஷ் வீட்டிற்கு தான் வந்து கொண்டிருந்தான்.

சைலேஷ் வீட்டிற்குள் நுழைந்த அர்ஜூன் கவின்..வெளிய வா..என்று கத்திக் கொண்டிருக்க, முதலில் வந்தது சைலேஷ் தான்.

அர்ஜூன், என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துற? சைலேஷ் கேட்க,

அண்ணா..இருங்க என்று மீண்டும் கத்தினான். அனைவரும் வந்து விட கவினும் வந்தான். அவன் வந்தவுடன் அர்ஜூன் அவனை அடித்தான்.

அனிகாவை மருத்துவர் பார்த்து விட்டு ஓய்வெடுக்கட்டும் என்று அவளுக்கான மருந்தை கொடுத்து விட்டு சற்று நேரம் முன் தான் கொடுத்திருப்பார். இவர்கள் சத்தத்தில் அவள் விழித்து அறையை விட்டு வெளியே வந்து மேலிருந்து நடப்பதை பார்த்தார்.

அர்ஜூன் கவினை அடிக்க, கைரவும் நித்தியும் தடுத்துக் கொண்டிருந்தனர்.

அர்ஜூன்….நிறுத்து. முதல்ல விசயத்தை சொல்லு நித்தி கத்தினாள்.

ஏன்டா, பிரச்சனைன்னா சொல்ல முடியாதா? இப்ப அங்க பெரிய பிரச்சனையே நடந்துகிட்டு இருக்கு. அக்கா கல்யாணமே நிக்க போகுது? என்று கடிந்தான் அர்ஜூன்.

இல்ல அர்ஜூன். ஏதுமிருக்காது. அம்மா கூட வீட்டை விற்று நகை வாங்கிடலாம்னு சொல்லிட்டாங்க என்று சொன்னவுடன் நித்தி கவின் முன் வந்து,

என்ன சொன்ன? வீட்டை விக்க போறீங்களா? டேய்..அம்மா அப்பா அந்த வீட் டுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாங்க. இவ்வளவு சாதாரணமா சொல்ற? அவள் கோபமாக கத்தினாள்.

என்னை என்ன பண்ண சொல்ற? என்று அழுது கொண்டே கவின் கத்தினான். அனைவரும் அவனை கண்கலங்க பார்க்க, அர்ஜூன் அவனிடம் அகல்யா சொன்னதை கூற,

மாமா..அந்த அளவுக்கு விட மாட்டார் என்று கண்ணை துடைத்து விட்டு அவன் மாமாவிற்கு அழைத்தான். அவன் போனை கட் செய்தான்.

அர்ஜூன்..பிரச்சனை பெரிசுன்னு தான் நினைக்கிறேன். மாமா போனை கட் செய்யவே மாட்டார் கவின் பதறினான். அவன் ஒரு வருடம் முழுவதும் ஓய்வெடுக்காமல் சம்பாதித்த அனைத்தும் இந்த கல்யாணத்திற்காக தானே போட்டிருக்கான்.

அர்ஜூன் அமைதியாக அவனை பார்க்க, அழுது கொண்டே சாய்ந்து அமர்ந்தான் கவின். அகல்யாவை அழைத்தான். அவளும் எடுக்கவில்லை. தாரிகா கண்கலங்க அவனை பார்த்தாள்.

அர்ஜூன் அவளை பார்த்து விட்டு, வா போகலாம்..கவினை அழைக்க, எங்கே சென்று என்ன ஆகப்போகிறது? என்று விரக்தியாக கூறினான்.

சைலேஷ் தாத்தா அவனிடம் வந்த, எந்த பிரச்சனைக்கும் ஒரு முடிவு இருக்கு. நீ இப்ப உன்னோட குடும்பத்துக்கு துணையா இருக்கணும்.

எப்படி தாத்தா? அக்கா அழுதுகிட்டே இருக்கிறத வேடிக்கப் பார்க்க சொல்றீங்களா?

இல்ல..நீ எதுக்கு வேடிக்கை பாக்கணும்? அவங்க பணத்தை பத்தி கேட்கல. அவங்க பிரச்சனை என்னன்னு புரிஞ்சு அதுக்கு ஏத்த முடிவ எடு.

அவங்களுக்கு பிரச்சனையே எங்க ஏழ்மை தானே. நான்..அவன் கலங்க, வாடா..என்று அர்ஜூன் அவனை இழுத்து செல்ல..ஒரு நிமிஷம் நானும் வாரேன் என்று தாரிகா அம்மா கூற,

தம்பி..நில்லு..காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. குடும்பமும்..தான். உன்னோட அக்கா காதலை மட்டும் பார்க்காதே. அவள் வாழப்போகும் இடத்தில் சந்தோசமா இருப்பாளா? என்று பார் தாத்தா கூற, அவன் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்தான் யோசனையோடு.

அர்ஜூன் நேராக வினிதா வீட்டிற்கு சென்று ஊருக்கு போவதாக கூற, அக்காவுக்கு..அவனை பார்த்தனர்.

அர்ஜூன் நீ இரு. நான் செல்கிறேன் என்று தருண் கூறினான்.

இல்ல தருண். ஏற்கனவே உனக்கு அடிபட்டது முழுசா சரியாகலை. நீ இரு..நானே போகிறேன்.

அபி, நான் போகிறேன் என்று கூற..எல்லாரும் இருங்க என் பிரச்சனையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்றான் கவின்.

நீ தனியா போறது சரியில்லை அர்ஜூன் கூற, அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருந்தது.

காரியம் முடிந்து வந்து கொண்டிருந்த பிரதீப், தீனா, வெற்றி காதில் ஒலித்தது. அகல்யாவின் மாமியார் சத்தம்.

அவர்கள் அங்கே செல்ல நினைக்க, அதற்குள் ஊர் பெரியவர்கள்..நீங்க வரக்கூடாது. நாங்கள் பார்க்கிறோம் என்று வந்தனர்.

அந்த பொம்பள அகல்யாவை அவதூறாக பேச, பொறுக்க முடியாத கவின் அம்மாவும் சண்டை போட்டார். ஒண்ணுமில்லைன்னாலும் சண்டைக்கு வாராங்க பாரு என்று ஏளனமாக கூற, அகல்யா அழுது கொண்டிருந்தாள்.

ஊர் பெரியவர்கள் அங்கு வந்து, ஏம்மா..கல்யாணம் முடிவான பின் ஏன்மா இந்த பிரச்சனை? இன்னும் நான்கு நாளில் திருமணம்? என்னம்மா பிரச்சனை உனக்கு?

எனக்கு இந்த பொண்ண பிடிக்கலை. இந்த குடும்பமும் பிடிக்கலை. உங்க ஊரும் பிடிக்கலை என்றவுடன் அங்கு வந்த இளவட்டங்கள் எகிறினர்.

உங்களுக்கு பிடிக்காம இத்தனை நாள் இருந்தீங்களா? என்று ஒருவர் கேட்க, ஆம் என்றது அந்த பொம்பளை?

தம்பி..நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு எங்க பொண்ண பிடிக்கல. உங்க பின்னாடியே மாமா..மாமா..ன்னு சுத்திக்கிட்டு இருந்த எங்க பையனை பிடிக்கல. இவங்க குடும்பம், எங்க ஊரு பிடிக்கலையா?

கவின் மாமா அமைதியாக நின்றான்.

அமைதியா இருக்கக் கூடாது. பேசுங்க ஒருவர் சத்தமிட்டார்.

கவின் மாமா தயங்கியவாறு, இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்றார்.

அகல்யா கோபமாக எழுந்து அவனிடம் வந்து, அப்புறம் எதுக்கு ஒரு வருசமா காத்திருக்கணும்? நமக்கு கல்யாணம் நடக்கணுன்னு என்னோட தம்பி சரியா தூங்காம படிச்சுக்கிட்டே சம்பாதிச்சு. எவ்வளவு கஷ்டப்பட்டான்.

பிடிக்கலைன்னா? முடியாதுன்னா? எல்லாத்தையும் தயார் செய்வதற்கு முன்பே சொல்லித் தொலைஞ்சிருக்கலாமே? அவனும் இந்த அளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டான்.

நீயும் எல்லார் மாதிரியும் என்னை பயன்படுத்திக்கிட்டேல. உன்னை பாக்கவே பிடிக்கல. என்னோட ப்ரெண்ட்ஸ் ஏற்கனவே சொன்னாங்க. இந்த பணக்கார பசங்களெல்லாம் நம்பாதேன்னு. நான் தான் கேக்கலை. உன்னை நம்பினேன். உன்னை மட்டும் தான் நம்பினேன். அதனால் தான் என்னை இப்படி எல்லார் முன்னும் என்று அழுதாள்.

உனக்கு என்ன உன் தம்பி சம்பாதித்த பணம் தான முக்கியம்? என்று அந்த பொம்பள அகல்யா கையில் பணக்கட்டுகளை திணிக்க, சிந்திக்காது அதை அவங்க மூஞ்சியிலே தூக்கி எறிந்து விட்டு..

பணம்..பணம்..பணம்..இங்க பணம் தான முக்கியம். எங்ககிட்ட தேவைக்கு பணம் இருக்கு. அது போதும். உங்கள மாதிரி ஆட்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை. அது இனி உங்க பையனுக்கு கட்டி வைப்பீங்களே அவ மடியில போடுங்க. நீங்க என்ன கல்யாணமா பண்றீங்க? வியாபாரம். எந்த முதலீடும் இல்லாத வியாபாரம் வீர வசனம் பேசிய அகல்யா அவனை பார்த்து விட்டு, அழுது கொண்டே ஓடினாள். பிரதீப் தீனாவும் செல்லாது நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவள் அவர்களை கடந்தவுடன் தான் வெயில் சுட்டார் போல்,

அகல்யா…நில்லு போகாத என்று பிரதீப் கத்திக் கொண்டே பின் செல்ல, வேடிக்கை பார்த்த சக்கரையோ..அக்கா போற பக்கம் கிணறு இருக்கு வேலு அண்ணா என்று இளவட்டபசங்க ஒருவனிடம் கூற, அவனும் ஓடினான். கவின் மாமாவும் நிற்காது அவர்களுடன் சென்றார். அனைவரும் அங்கே இருக்க, ஓடி வந்த அகல்யா கிணற்றை தாண்டி ஓடினாள். புரியாமல் அனைவரும் நிற்க, அண்ணா…அவ அந்த காட்டு பக்கம் போறா..தீனா கத்தினான்.

வெற்றி அங்கேயே அமர்ந்து விட, பெரியவர்கள் நடக்கலாயினர்.

காட்டை நெருங்க நெருங்க மிருகங்களின் ஒலி கேட்டது. காட்டை ஒட்டியிருந்த பள்ளத்தில் குதிக்க முயன்றவளை தூக்கினான் வேலு.

என்னை விடுடா..விடுடா..என்று அடித்தாள். அனைவரும் வர, நீ எப்படிடா முன்னே வந்த? பிரதீப் கேட்டான்.

குறுக்கு பாதை அவள் காட்டிற்குள் வந்தா மிருகம் கொன்னுடும்ன்னு அவளுக்கு தெரியும். அவள் நாய்க்கே பயப்படுவாள். அதான் அந்த பக்கமே போக மாட்டா. அப்ப இங்க தான் வருவான்னு தோணுச்சு என்று அவளை இறக்கி விட்டான்.

டேய்..எதுக்குடா காப்பாத்துன்ன? அவனை அடித்தான். அவள் கன்னத்தில் ஓங்கி அறை விட்டான் அந்த வேலு.

பிரச்சனை வந்தா..சமாளிக்கணும். உனக்காக தான எல்லாரும் பேசிக்கிட்டு இருக்காங்க. அதுக்குள்ள சாகப் போற? உன்னோட அம்மா, அப்பாவை பத்தி யோசித்தாயா? கவினையாது யோசித்தாயா? அவனால் தான் இந்த முடிவு எடுத்துட்டன்னு ரொம்ப கஷ்டப்படுவான்ல.

அவள் அழுது கொண்டே அவனை பார்த்து விட்டு கவின் மாமாவை பார்த்தாள்.

இன்னும் என்ன குதிக்கப் போகிறாயா? வேலு கேட்டு விட்டு, குதிக்கணும்ன்னா சொல்லு. நான் சரியா பார்த்து தள்ளி விடுறேன்.

ஏன்டா? நீயே காப்பாத்திட்டு..கொல்லப்பாக்குற? என்று வேலுவை கடிந்தாள்.

சரி..வாங்க போகலாம் என்று அனைவரும் அதே இடத்திற்கு வந்தனர்.

பிரதீப் அகல்யாவிடம் வந்து, இப்ப நீ என்ன நினைக்கிற சொல்லு? சாந்தமாக கேட்டான்.

எனக்கு தெரியல..அவன் அந்த மாப்பிள்ளையை கேட்க, அவன் அமைதியாக இருந்தான். கவின், நந்து, தாரிகா அம்மா வந்தனர். அர்ஜூனிடம் பேசும் போது வினிதா அக்கா இறந்தது தெரிந்து அவன் அர்ஜூனை பார்க்க வந்திருப்பான்.

மாமா..என்று கவின் அவனிடம் வர, அனைவரும் அவனை முறைத்தனர். பிரதீப் நடந்ததை கூற,..

ஓ..என்ற கவின், உங்க காதல் அவ்வளவு தான மாமா? ரொம்ப சந்தோசம் போயிடுங்க என்று கத்தினான்.

கவின்..என்று அவன் அழைக்க..ம்ம் கவின் தான். இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுவும் நல்லது தான். உங்க அம்மா பேசுறதெல்லாம் அவளும் எத்தனை நாள் தான் தாங்குவாள். ஒரு வேலை அவள் மீதுள்ள கோபத்தில் உங்க அம்மா என்னோட அக்காவை எதுவும் செய்து விட்டால் கூட நீங்க இப்படி அமைதியா தான் நிப்பீங்க?

எனக்கு என்னோட அக்கா காதலை விட அவ தான் முக்கியம். உங்கள விட பல மடங்கு என்னோட அக்கா சந்தோசமா வாழ்வா? ஏன்னா..உங்கள கட்டிக்கிட்டா உங்க காதல் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் என்னோட மாமா..அவளுக்கான காதலை மட்டுமல்ல..நல்ல துணைவனா எப்பொழுதும் அவள் பக்கம் நிற்கணும். சின்னதா சண்டை, சந்தோசம், அணைப்பு.. என்றைக்கும் என் அக்காவையும் அவள் அன்பையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவனாய் இருக்கணும். நான் தேடுவேன். என் கண்ணில் சிக்குவார். நானும் என் அக்காவும் காத்திருப்போம்.

நீங்க எல்லாரும் கிளம்பலாம். அக்கா..நீ சொல்லு. இனியும் இவர் தான் வேண்டுமா? கவின் கேட்க, அகல்யா ஓடி வந்து தம்பியை அணைத்து, அவங்கள போகச் சொல்லுடா.

இவங்கள பார்த்தா திரும்பையும் குதிச்சிருவேன் என்று அவள் கூற, அவளை விலக்கி விட்டு குதிப்பாயா? கேட்டான்.

சக்கர முன்னாடி வந்து நடந்ததை சொல்ல, அவளை தள்ளி விட்டு குதிச்சிருந்தா ரொம்ப நல்லதா போச்சுன்னு அந்த அம்மா உன் மேல ஏகப்பட்ட பழிய போட்டிருக்கும். இந்த ஆளும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருந்திருப்பான் என்று அவன் திட்டினான்.

டேய்..விடுடா தீனா முன்னே வந்தான்.

என்னை மன்னிச்சிரு. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கவினிடம் அந்த மாப்பிள்ள கூற,

இல்ல சார், வேண்டாம். நீங்களும் வேண்டாம். உங்க காதலும் என் அக்காவுக்கு வேண்டாம்.

நீங்க பரிதாபத்தால் கல்யாணம் செய்ய வேண்டாம். எனக்கு என்னோட அக்கா சந்தோசமா இருக்கணும். இனி உங்களால அவள பார்த்துக்க முடியாது. அவ சொன்னதை கேட்டீங்கள? உங்க எல்லாரையும் பார்த்தா அவ குதிச்சிருவேன்னு சொன்னா?

அவள குதிக்க விட்டு வேடிக்கை பாக்குற நீங்க எப்படி கல்யாணம் முடிந்த பின் அவள உங்க அம்மாகிட்ட இருந்து பாத்துப்பீங்களா? உங்க அம்மாவ பத்தி உங்களுக்கே தெரியும்ல. சொல்லுங்க. அவன் கண்கலங்க அகல்யாவை பார்த்தான்.

நீங்க அக்காவ காதலிக்கிறீங்கன்னு தெரியுது? ஆனா வாழ்க்கைக்கு தேவை காதல் மட்டுமல்ல குடும்பமும் தான். இப்ப தான் ஒருவர் என் கண்ணை திறந்தார். உங்க காதலுக்காக என்னோட காதலை இழந்துட்டு நிக்கிறேன் என்று கண்கலங்க கவின் கூற,

அந்த பொண்ணுகிட்ட நான் பேசுறேன்.

என்ன பேசுவீங்க?

என்னோட அம்மா கவின் அக்கா கல்யாணம் நடக்கணும்ன்னா..அஞ்சு பவுன் கேட்டாங்க. அந்த டென்சன்ல இருக்கும் போது நீ வேரொருவனோட பேசி சிரிச்சுக்கிட்டு இருந்த. அதனால இப்படி பேசினான்னு விளக்கம் கொடுப்பீங்களா?

உங்க தங்கச்சிக்கு இப்படி நடந்து அந்த பொண்ணு காதலிச்சவனை ஏத்துப்பாளா?

தாரிகா அம்மா.. அந்த பொம்பள முன் வந்து இந்த பொண்ண குறை சொல்றியே? உன் பொண்ணு ஒரு பையன் பின்னாடி சுத்துன்னா கண்டிக்க மாட்டியா? உன் பிள்ளைய ஒழுங்கா வளர்க்காம இந்த பொண்ணை குறை சொல்லிக்கிட்டு இருக்க. உன்கிட்டயே ஆயிரம் குறை இருக்கு. பணம் இருந்தா யாருக்கு வேண்டுமானாலும் பிள்ளைய விக்கிற இவகிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? முகத்தில் அறைந்தாற்போல் கேட்க, மாப்பிள்ளைக்கு ஒருமாதிரி ஆனது.

தாரிகா அம்மா அகல்யாவிடம், தப்பா ஏதும் சொல்லிட்டேனா? கேட்டார்.

இல்லை என்று தலையசைத்து விட்டு அவள் கவினிடம் வந்து இன்று என்கூடவே இருக்கியா? கேட்டாள்.

சரி என்று இருவரும் கிளம்ப, நில்லுங்க என்று தாலியுடன் வந்தான் அந்த மாப்பிள்ளை.

அனைவரும் திகைத்து விழிக்க, அகல்யா அருகே வந்து,  நாம தனியாகவே இருக்கலாம். எங்க அம்மா தொந்தரவு இல்லாமல் இருக்கலாம். நான் உன்னை இன்று போல் கைவிடமாட்டேன்.

அகல்யா வேகமாக தாலியை இழுத்து தூக்கி எறிந்தாள். நான் உன்னுடன் மட்டும் தனியா வாழணும்ன்னு நினைச்சா. அப்பவே உன்னிடம் சொல்லி இருப்பேன். நான் குடும்பமா வாழ தான் ஆசைப்பட்டேன். என்னோட அம்மா, அப்பா தனியா இருந்து கஷ்டப்பட்டதே போதும். எனக்கு இப்ப உங்க மேல நம்பிக்கை வரலை. எனக்கு உங்கள பார்த்தா பயமா இருக்கு. ப்ளீஸ் நான் என்னோட குடும்பத்தோடவே இருந்திருவேன்.

கவின் அவன் முன் வந்து, உங்க காதலை நீங்க இழந்துட்டீங்க? ஏத்துக்கோங்க. அவள் எல்லார் முன் தான் பெரிய பொண்ணு மாதிரி நடந்துப்பா. ஆனா எல்லாத்துக்குமே பயப்படுவா? இருட்டு, நாய், பூனை எல்லாத்துக்குமே. ஆனால் இவ்வளவு தூரம் உங்க அம்மா பேச்சை கேட்டு அழாம இருந்ததே எனக்கு ஆச்சர்யம் தான். அதுக்கு உங்க காதல் தான் காரணம்ன்னு தோணுது. இப்படி காதலிச்சவளை கைவிடுறேன்னு ஒரே வார்த்தையில சொல்லிட்டீங்க?

சரி விடுங்க. இனி இத பத்தி பேசி ஒன்றும் மாறப் போறதில்லை. வாக்கா..நாம கிளம்புவோம் என்று தாரிகா அம்மாவை பார்த்து, ஆன்ட்டி, நந்து வாங்க வீட்டுக்கு என்று அழைத்தான் கவின்.

யாரும் போக வேண்டாம். இந்த கல்யாண வேலையை நிறுத்த வேண்டாம் என்று கவின் அம்மா கூற, அம்மா..என்றான் கவின் சினத்துடன்.

ஆமாம். என் பொண்ணு கல்யாணம் நடந்தே ஆகணும் என்று அம்மா கூற, அனைவரும் அவரை பார்த்தனர். வேலு அருகே வந்து, நீ அகல்யாவை கட்டிக்கிறியா? கேட்டார்.

அம்மா..என்று அகல்யா சத்தமிட, கவின் யோசனையோடு அம்மாவை பார்த்தான்.

அம்மா.. எல்லா பணமும் செலவாகிடும்ன்னு யோசிக்காதீங்க? அதை சம்பாதிக்கலாம். ஆனால் அக்கா வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள் என்றான் கவின்.

இல்லடா. அவனும் உங்களுக்கு மாமா தான? நீ என்ன சொல்ற வேலு?

அத்தை..எதுவாக இருந்தாலும் எல்லார் விருப்பமும் முக்கியம் என்று ஒரே அடி போட்டான்.

நான் யாரை பற்றியும் கேட்கவில்லை? உனக்கு அகல்யாவை பிடிக்கும்ல? கேட்டார்.

கவினும் அகல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

என்னுடைய விருப்பம் இப்பொழுது முக்கியமல்ல. முதல்ல அவள சரி பண்ணுங்க. அவ மூஞ்சிய பாருங்க. அவள் இன்னும் அவள் காதலில் இருந்து வெளி வரலை. சும்மா பேசி பழகிட்டு பேசாம இருந்தாலே கஷ்டப்படுவா. எத்தனை வருட காதல்? கேட்டான். அவள் அமைதியாக நின்றாள்.

ஆமா. இவளால எப்படி முடியும்? என்று ஏளனமாக அந்த பொம்பள பேச,

இதுவரை யார் விசயத்திலும் தலையிடாம இருந்த வேலு முன் வந்து, நானும் பார்த்துக்கிட்டு தான் இருந்தேன். அது என்ன பணமிருந்தால் உங்க உலகமே கையிலன்னு நினைப்பா.

“பணம் பத்தும் செய்யும்”

“பணம் பாதாளம் வரை செல்லும்”

அதே பணத்தை வைத்து உங்களால் பொருள் மட்டும் தான் வாங்க முடியும். உங்க மரியாதை..தன் மானம்..எல்லாமே காத்தோட போச்சு. உங்க கையில்ல பணம் இல்லைன்னாலும் மனுசங்க உங்கள மதிக்கணும். அது தான் நீங்கள் மனிதர் என்பதற்கான அடையாளம். அதுவே உங்களிடம் தெரியல.

எங்க ஊர்ல வச்சு எங்க அகல்யா, கவினை பத்தி கேவலமான பேசுறீங்க? அவங்க உங்கள விட உங்க பணத்த விட மதிப்பான பசங்க. உங்களுக்கே தெரியும் மாமாவிற்கு சரியான வேலை இல்லை. அத்தை சம்பாதிக்கும் பணத்தில் உங்க அளவுக்கு செய்ய முடியாது. அப்படியும் கேட்டிருக்கீங்க? என்று அகல்யா காதலித்தவனை பார்த்தான்.

படிக்கிற பையன் படிச்சுக்கிட்டே வேலை பார்த்து அவனோட அக்காவுக்காக கல்யாணத்துக்கு தயார் செய்றான். இப்பெல்லாம் எவன் செய்வான்? நீங்க உங்க தங்கைக்கான மொத்த கல்யாணச் செலவையும் கவின் நிலையில் இருந்தா செய்வீங்களா? கேட்டான்.

நீ என்ன என்னிடம் கேட்குற?

ம்ம்..சரி தான். எனக்கு கேட்க உரிமையில்லை. ஆனால் அகல்யா என்னோட அம்மாவோட அண்ணன் பொண்ணு. அதாவது நான் அவங்களுக்கு முறை மாமன். அந்த முறையில் கேட்கலாமே? கவின் அதிர்ந்து வேலுவை பார்த்தான்.

சரி..அதை விடுங்க. அவன் கஷ்டப்படுறது தெரியும்ல? நீங்க அவள காதலித்தவர். திருமணம் செய்ய ஆசைப்பட்டவர். அவளுக்கென ஏதாவது செய்திருக்கீங்களா? கேட்க, அவன் கூற வந்தவனை தடுத்து,

இருவரும் சந்திக்கும் போதெல்லாம் சாப்பிட வாங்கிக் கொடுத்திருப்பீங்களா? அதான சொல்ல வந்தீங்க?

அவன் வேலுவை பார்க்க, அவளுக்கு பிடிச்சதே சாப்பிடுவது மட்டும் தான். வேறெதுவும் உங்களிடம் கேட்டிருக்காளா? செஞ்சிருக்கீங்களா?

இல்லை.

ம்ம்..அவளும் சரி என்னோட மச்சானும் சரி. யாரிடமும் எதையும் வாங்க மாட்டாங்க. என்ன கொஞ்சம் சாப்பாடு பைத்தியம் என்று அகல்யா அம்மாவை பார்த்து,

அத்தை எனக்கு ஒரு சந்தேகம். அவ..அவ்வளவு சாப்பிடுறாளே? ஏன் மெலிதாகவே இருக்கா? வேலு கேலியுடன் கேட்க, கவின் அவன் அக்காவை பார்த்து சிரித்தான்.

முறைக்காத..இது என்னோட சந்தேகம் இல்லை. நம்ம ஊரு பொண்ணுங்க உன்னை பத்தி பேசும் போது கேட்டேன். எனக்கும் அப்பொழுது தான் தோன்றியது. அதான் கேட்டேன்.

ஓ.கே இது உனக்கான கடைசி வாய்ப்பு. அவள சமாதானப்படுத்த முடிஞ்சா பண்ணிக்கோ. இந்த வாய்ப்பில் நீ தோற்றால் வாழ்நாள் முழுவதும் அவளை பார்க்கவே கூடாது என்று மாப்பிள்ளையிடம் கூறி விட்டு அகல்யாவிடம் வந்தான்.

உன்னோட முடிவு தான். யாரும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டாங்க என்று அவளது அம்மா, அப்பாவை பார்த்தான்.

எனக்கு உன்னை கட்டிக்க சம்மதம் தான். ஆனால் நீ ஆசைப்படுவது போல் நான் இல்லை. எனக்கென தாத்தாவை தவிர யாருமில்லை. படிப்பு இல்லை. பிரதீப் அண்ணாவிடம் வேலை செய்கிறேன். சம்பளம் அதிகமில்லை. என்னால் உன்னை பார்த்துக்க முடியும். சாப்பாடு கூட போடமுடியும் என்று கிண்டலாக கூறி நகைத்து விட்டு, உனக்கு அவர விட்டு வர கஷ்டமா இருக்கும்ன்னு தெரியும். ஆனால் நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன். உன்னுடைய உறுதியான மனநிலை பற்றி எனக்கு தெரியும். அதனால் அவரோட அம்மா பேசியதை எல்லாம் தாங்கிகிட்டு இருக்கன்னு தெரியும்.

நீ அவருடன் தான் வாழணும்னு நினைச்சாலும் சரி தான். அவர் வேண்டாமென்று கொஞ்ச நாள் தனித்திருக்க நினைத்தாலும் சரி தான் இல்லை என்னை கட்டிக்கணும்ன்னு நினைச்சாலும் நேரடியாகவே சொல்லிடு. எதுவா இருந்தாலும் நான் உனக்கு உறுதுணையா இருக்கேன்.

மாமா..என்று கவின் அழைத்துக் கொண்டே அவனிடம் வந்து தயங்கியவாறு, அக்காவால் அவரை மறக்க முடியலைன்னா?

நீ நித்திய மறக்கல..என்று அவன் கேட்க, மாமா..என்றான்.

சில பேரால் காதலை மறக்க முடியும். சில பேரால் முடியாது. மறந்ததால் அவங்க தப்பானவங்க இல்லை. அவங்களுக்கான காரணம் இருக்கும். இதனால் அவங்க முழுசா மறந்துட்டாங்கன்னு சொல்ல முடியாது. அவங்களுக்கு நினைவு அடிக்கடி வரும். ஆனால் அவங்க கணவரை ஏமாற்றாமல் கணவருடன் நேர்மையாக இருந்தால் பிரச்சனை வராது.

மாமா..எனக்கு புரியல? கவின் கேட்க, அவன் தோளில் கையை போட்டு, உன்னோட அக்கா நாய்க்குட்டி ஒன்றை பார்த்து ஆசைப்பட்டு பழகுவாள். அது செத்து போயிட்டா. அழுவா..ரொம்ப அழுவா. அடுத்து பூனைக்குட்டிய பார்த்தால் அந்த நாய்க்குட்டிய மறந்துடுவா.

ஓ…என்ற கவின் அந்த பூனைக்குட்டி செத்துப்போயிட்டா.. கவின் கேட்க, அவ..அழுதுட்டு..என்று யோசித்தான். அதற்கு பதில் அகல்யாவிடமிருந்து வந்தது. அவள் தனியா தான் இருப்பா..அந்த பூனைக்குட்டி நினைவிலே என்றாள்.

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கவினே அக்கா..என்று கேள்வியுடன் நோக்க,

வேலுவிடம் வந்து, ம்ம்..பரவாயில்லை. என்னை விட என்னை பற்றி நல்லா தான் தெரிஞ்சு வைச்சிருக்க. ஆனால் ஒன்று மட்டும் தப்பு. காதல் அடுத்தடுத்து மாறாது. நம்மால் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை. நீ சொன்னது போல் காதலித்தவனை மறக்கும் அளவு கணவன் நடந்து கொண்டால் எந்த கடந்த கால நினைவும் வராது. இவனை காதலித்து ஏமாந்தோம் என்றும்..அவன் நல்லதுக்காக தான் செய்தோம் என்று பிரிந்த காரணம் மட்டும் தான் நினைவிற்கு வருமே தவிர அவனுடனான நிமிடங்கள் நினைவிற்கு வராது என்று கூறிக் கொண்டே, வேலுவின் கையை பிடித்துக் கொண்டு எனக்கு படிப்போ..பணமோ..தேவையில்லை. சாப்பாடும் உன் காதலும் போதும் என்றாள்.

வேலுவால் நம்பவே முடியவில்லை. அக்கா..மாமா என்று சொல்ல வந்தவன் அந்த சார்..வினவினான்.

நான் தான் தவறான ஆளை காதலித்தேன். அவருக்கு அவர் அம்மா என்னை பேசுவது கஷ்டமா இருக்குமாம். ஆனால் பேசாதீங்கன்னு சொல்ல மாட்டாராம். கல்யாணம் பண்ணிக்கிராறாம். ஆனால் தனியா தான் இருக்கணுமாம். எனக்காக அவர் அம்மாவிடம் பேசுவார். அந்த அம்மா ஒத்துக்கலைன்னா. சாரிம்மா..அட்ஜெஸ்ட் பண்ணி போக சொல்வார்.

ம்ம்.. போகலாம். அட்ஜெஸ் பண்ணலாம். ஆனால் கல்யாணத்தை நான்கு நாட்களில் வைத்துக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவாங்களாம். அதையும் அட்ஜெஸ்ட் பண்ண நான் என்ன முட்டாளா?

சார்..உங்க அம்மாவுக்கும் உங்களுக்கும் ஏத்த மாதிரி பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. மாமா கேட்டது போல் என்னோட தம்பி எனக்காக ரொம்ப பண்ணான். அதை விட உங்க பின்னாடியே மாமா…மாமா..ன்னு சுத்திக்கிட்டு இருந்தான். அந்த பாசத்தை நீங்க வேற மாதிரி நினைச்சுட்டீங்க?

சார்.. நான் உங்ககூட இருந்தா சந்தோசமா இருக்க முடியாது என்று வேலு கையை இறுக்கி பிடித்தாள். அவள் கஷ்டப்பட்டு பேசுகிறாள் என்று புரிந்து அவன் அவள் கையை இறுக்கமாக பிடித்தான். அவள் அவனை பார்த்து, என்னோட மாமாவுக்கு என்னை பிடிச்சிருக்கு. எனக்கும் என் மாமாவை சீக்கிரம் பிடிக்கும். நீங்க உங்க வாழ்க்கையை பார்த்துக்கோங்க என்று கண்ணீருடன் அவள் பெற்றோரை பார்த்து, நான் மாமாவை கல்யாணம் செய்து கொள்கிறேன்.

அக்கா..வருத்தப்பட மாட்டேல்ல கவின் கேட்க,

இல்லடா. நான் சீக்கிரம் சரியாகிடுவேன் என்று வேலுவை பார்த்து, மாமா எனக்கு உதவி செய்வீங்கள? கேட்டாள்.

ம்ம்..

அவரை பற்றி பேச்சை மட்டும் நீங்க எடுக்கவே கூடாது.

ம்ம்..போதும். முடிஞ்சதுல. நீ போ. ஓய்வெடு. இன்னும் அழணும்ல. போ..போ..அத்தை அவளை கூட்டிட்டு போங்க.வீட்ல போய் அழட்டும்.

மாமா..என்று அவனை முறைத்தாள் அகல்யா.

ரொம்ப கிராண்டா வேண்டாம். எந்த வேலையெல்லாம் ஆரம்பிக்கலையோ அதையெல்லாம் நிறுத்தீடுங்க மாமா என்றான் வேலு.

யாருமில்லைன்னு ஏய்யா சொல்ற?

நம்ம ஊர்ல..கெட்டது செஞ்சா தண்டனையும் கிடைக்கும். யாருமில்லாமல் நீ இல்லை. உனக்கு எல்லாரும் இருக்கோம் என்று பெரியவர் ஒருவர் கூற, அவன் சிறுபுன்னகையுடன் அகல்யாவை பார்த்தான்.

பார்த்தது போதும்டா வேலு. இல்ல..இல்ல..கல்யாண மாப்பிள்ள என்று அவன் நண்பர்கள் அவனை கேலி செய்தனர். அவர்களிடம் வந்த பிரதீப்..வாழ்த்துக்கள்டா என்று கையை கொடுத்தான்.

அகல்யாவை காதலித்தவன் வருத்தமுடனும் அவன் அம்மாவை முறைத்தவாறும் செல்ல, அவர்களின் ஆட்கள் அவன் பின் சென்றனர்.

ஊராரை பார்த்து, ஒரு நிமிஷம் யாரும் போகாதீங்க என்று வேலு அகல்யாவிடம் வந்தான். அனைவரும் அவனை பார்த்தனர்.

நீ என்னை திருமணம் செய்து கொள்வேல? வேலு அகல்யாவிடம் கேட்டான்.

நான் தான் சரின்னு சொல்லிட்டேனே மாமா.

அவனை கிளப்புவதற்காக சொல்லவில்லையா? கேட்டான்.

மாமா..சினத்துடன் அவனை பார்த்தாள்.

இப்ப நீ தெளிவா இருக்கேல்ல. நான் படிக்கல. ஆனால் நீ படிச்சிருக்க. உன்னோட ப்ரெண்ட்ஸ் உன்னை கிண்டல் செய்தால் என்ன செய்வ?

குடும்பம் வேற.. ப்ரெண்ட்ஷிப் வேற.. என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாருமே அவனை நான் காதலிக்கிறேன் என்று தான் பயந்தாங்க. எங்கே அவன் என்னை ஏமாற்றி விடுவானோ? என்றும், அவனால் கஷ்டப்படுவேனோ? என்று நேற்று கூட சாரு கேட்டாள்.

யாரும் என்னை கிண்டல் செய்யவும் மாட்டாங்க. அப்படி செய்தாலும் அவங்களுக்கு என்னால் பதில் கூற முடியும். நான் இப்ப தான் தெளிவா இருக்கேன். ஆனால்..மாமா..எனக்கு உங்க மேல இப்பொழுது காதல் இல்லை. நம்பிக்கை இருக்கு. என்னை நீங்க நல்லா புரிஞ்சு வைச்சிருக்கீங்க. அது போதாதா..நாம சேர்ந்து வாழ.

உறுதியா தான இருக்க? அவன் கலக்கத்துடன் கேட்டான்.

அவள் அவனருகே வந்து, உங்களிடம் ஏற்கனவே கூறி விட்டேன். நான் அவனுக்காக பேசல. நம்ம வாழ்க்கைக்காக பேசினேன் என்று அவனை அணைத்துக் கொள்ள, அவன் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் கீழே விழுந்தது. அவள் கண்ணிலும் கண்ணீர். எல்லாரும் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவளை விலக்கி விட்டு என்னோட அம்மா, அப்பா மாதிரி பாதியிலே விட்டு போக மாட்டேல என்று கேட்டதும் அவள் அவளுடைய அம்மாவை பார்த்தாள். பின் அவனை பார்த்து கண்டிப்பா போக மாட்டேன் மாமா என்றாள்.