அப்பத்தா..நீ நினைக்கிற மாதிரி அம்மா இல்லை என்று தான் கூறி இருப்பாள். தீனாவும் துருவனும் அவளிடம் வந்து, அமைதியா இரு என்றனர்.
என்னால முடியாது என கத்தினாள். ரதி துருவனை பார்க்க, அவனுக்கு நித்தி அப்பா மருந்திட்டிருந்தார். கொஞ்ச நேரம் தான் ஓய்வாக அமர்ந்திருப்பான். இவள்..கத்த துளசியிடம் ஓடி வந்தான்.
துளசி கையை பிடித்து துருவன் இழுக்க, அவனை பிடித்து தள்ளி விட்டு நான் சொல்லணும். என்னோட அப்பா நல்லவர். அவர் எந்த தப்பும் செய்யவில்லை என்று கத்தினாள்.
அதே நேரம்..மாமா என்று ஆதேஷ் அறைக்குள் ஜானு டீயுடன் நுழைய,..அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். அறையிலிருந்த அவன் ஆடையை பார்த்து,
மாமா..இப்ப பாருங்க என்று குளியலறைக்குள் சென்று வெளியே வர, அவன் போன் ஒலித்தது.
போனை எடுத்து ஹலோ..ஜானு அழைக்க, துகிரா ஜானுவா? கேட்டாள்.
அண்ணி..நான் தான்..வீடியோ கால் வாங்களேன் என்று போனை அணைத்து விட, இவ எந்த நேரத்துல விளையாடுறா? துகிரா தள்ளி வந்து போனை எடுக்க, ஆதேஷ் போர்வையை விலக்கி, மாமா..எழுந்திருங்க.. என்றாள்.
ஜானு..என்னை தூங்க விடேன். கல்லூரிக்கு தான் செல்ல முடியாதுல. தூங்க விடு என்று தூக்கத்தில் அவன் பேச,
அவள் வீடியோ காலில் துகிராவை பார்த்து..அண்ணி..இங்க பாருங்களேன். மாமாவின் ஆடையை போட்டிருக்கிறேன். எனக்கு கொஞ்சம் தான் லூசா இருக்கு..என்று ஆடிக் கொண்டே காண்பித்தாள்.
ஆடையா? என்று கண்ணை விழித்த ஆதேஷ்..ஏய்..இது என்னோட “பேவரேட் டிரஸ்” நீ போட்டிருக்க என்று எழுந்தான். போனில் துகிராவை பார்த்து,
“குட் மார்னிங் துகி” என்றான். துகிரா அழுதாள். பின்னே ஊர் ஆட்கள் இருப்பதை கண்ட ஜானு..அண்ணி வீட்டுல நிறைய பேர் இருக்கிற மாதிரி இருக்கு. நீங்க எதுக்கு அழுறீங்க? என்று பதறினாள்.
அப்பத்தா எழுந்து, என்ன சொல்றடி? கேட்க, ஒன்றுமில்லை அப்பத்தா என்று தீனாவும் துருவனும் அவளை பிடித்து இழுத்தனர்.
விடுங்க..அவங்க தான் செத்து போயிட்டாங்கள. என்னோட அப்பா கஷ்டத்தை யாருமே புரிஞ்சுக்கல..கத்தினான்.
பாப்பா வேண்டாம் என்று மீனாட்சி கூற, ஜானு..உன்னோட அம்மா.. ஆதேஷ் கூற, அவள் அழுகை நின்று கண்ணீருடன் கவனிக்கலானாள்.
வேண்டாம்மா? உங்க இடத்துல நான் இருந்திருந்தா..உங்க புருசன் உங்கள கல்யாணம் செய்யணும்ன்னு மிரட்டிய அன்றே அவனை கொன்றுப்பேன்.
துளசி..பேசாத துருவன் சத்தமிட..ஏன்டா பேசக் கூடாது? நான் பேசணும். என்னோட அப்பா எல்லாராலையும் கஷ்டப்பட்டிருக்காரு என்று நடந்த அனைத்தையும் கூறினாள். தீனா அவளை அடிக்க வர, புவனா அவன் கையை தடுத்தாள்.
புவி..அவ என்ன பண்றா பாரு.
அவ செய்யுறது சரி தான்.
அப்பத்தாவிடம் வந்த புவனா..நீங்க இவரு அன்று சொன்னது போல் உங்க பெரிய பிள்ள பேச்சை தான் கேட்டிருக்கீங்க. ஆனா..மாமா நிலை உங்களுக்கு தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. அவருக்கு எல்லாரும் இருந்தும் தனியா கஷ்டப்பட்டுருக்காரு. கொஞ்சம் அவர் நிலையில் இருந்து யோசித்து பாருங்கள் என்று அமர்ந்து கொண்டாள்.
அபி வெளியே வருத்தமுடன் அமர்ந்திருந்தான். இன்பாவும் டீயை கையில் எடுத்துக் கொண்டு அவனுக்கு கொடுத்து விட்டு அவள் ஒன்றை வைத்துக் கொண்டு அமர்ந்தாள். இன்பா அபியை பார்க்க, அவனும் அவளை பார்த்தான்.
மேம்..வெற்றி மாமா ரொம்ப அமைதியாகவே இருப்பார். தீனா அண்ணா அவரை பற்றி சொல்லும் போது என்னால் நம்பவே முடியலை. ஆனால் அவர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார். அவர் பிரதீப் மாமாவை அவ்வப்போது ஏக்கமாக பார்க்கும் போது எனக்கு அப்பொழுது புரியல. ஆனால்..இப்ப தான் புரியுது. அவர் பிள்ளைகளோட நேரத்தை செலவழித்ததே இல்லை. அதையும் ரொம்ப நாளாக யோசிச்சு இருக்கேன். ஆனால் எல்லாத்துக்கும் காரணம் மூத்த மாமாவும் காவேரி அத்தையும் என்று கூறுவதை என்னால் ஏத்துக்கவே முடியல. அதுவும் அத்தை இப்படி இருப்பாங்கன்னு நினைக்க கூட இல்லை.
நல்ல வேலையா பிரதீப் மாமாவும் ஜானுவும் தனியா வந்துட்டாங்க. இல்ல அவங்கள என்ன செஞ்சிருப்பாங்களோ? அவன் சொல்ல, இன்பா புரியாமல் விழித்தாள். அபி போன் ஒலிக்க..போனை எடுத்தான்.
கிளம்பீட்டிங்களா அபி? அவன் அம்மா கேட்க, இல்லம்மா நாங்க வரலை.
என்ன சொல்ற? என்ன இருந்தாலும் அவள் உனக்கு அத்தை. நீ கண்டிப்பாக வந்தே ஆகணும்.
அம்மா..மாமா தான் வேண்டாம்னு சொன்னார். எவன்டா சொன்னான்? அபி அம்மா கோபமாக,
ஏம்மா கோபப்படுறீங்க?
நம்ம குடும்பத்துல எல்லா நல்ல, கெட்ட காரியத்துக்கு எல்லாருமே கட்டாயம் வரணும். உனக்கு தெரியும்ல. கிளம்பு. குடும்பத்தை விட்டு ஒதுக்கினா தான் நாம வராம இருக்கலாம்.
அம்மா..இங்க நிலைமை சரியில்லை.
என்னடா நிலைமை?
அம்மா..போனை வைக்கிறியா? டென்சன் ஆக்காத.
நீ வந்து தான் ஆகணும்.
சொன்னா உனக்கு புரியாதா? இப்பவே வரணும்னா செத்து தான் வரணும் அபி சீற்றத்துடன் பேச, அவன் அம்மா அழுதார்.
ஆன்ட்டி..என்று இன்பா அழைக்க, அபி அம்மா அழும் குரல் கேட்க, அவனை முறைத்து பார்த்து, அம்மா அழுறாங்க என்றாள்.
போனை வாங்க அபி வர, இரு நான் பேசுறேன். மறுபடியும் எதையாவது பேசிடாத என்று அவனது கையை தட்டி விட்டாள்.
பொண்ணோட குரலை கேட்ட அபி அம்மா, கண்ணீரை துடைத்து யாரும்மா? கேட்டார்.
நீங்க என்னிடம் போன் நம்பர் கூட வாங்குனீங்கள ஆன்ட்டி. மறந்துட்டீங்களா? இன்பா கேட்க. அவளது குரலை அறிந்து கொண்டு, நீயாம்மா?
ஆன்ட்டி, அபி கோபத்துல பேசிட்டான். எதுவும் நினைச்சுக்காதீங்க.
நாங்க இங்க பிரச்சனையில இருக்கோம். நீங்க டீவில்ல பார்த்துருப்பீங்கள அந்த கொலைகாரனை பற்றி..அவன் அனைவரையும் ஏமாற்றி விட்டு இங்கே தான் இருக்கான். இங்க இருக்கிற எல்லார் உயிருக்கும் ஆபத்து. அதனால் தான் அபியும் ஜானுவும் இங்கேயே இருக்க சொல்லி இருக்காங்க அவனோட மாமா.
சரிம்மா..அவனை கொஞ்சம் பார்த்துக்கோங்கம்மா. இங்க நடக்குற பார்த்தா பயமா இருக்கு. உன்னை பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்கு அவர் கூற, இன்பா புன்னகைத்தாள்.
ஆமாம் டா. நீ அங்கேயே கவனமா இரு என்று போனை துண்டித்தார்.
வெற்றியின் தங்கை ஒருவர் புவனாவை குறுகுறுவென பார்க்க, அவள் பார்த்தாலும் கவனிக்காது அமைதியாகவே இருந்தாள் புவனா வீல் சேரில்.
துளசி இடையே வந்து புவனாவை மறைத்தவாறு நின்று, அத்த..உன்னை தீனா அண்ணா கூப்பிடப் போறான்னு நினைக்கிறேன் என்றாள். துகிரா அதை பார்த்து வெளியே எட்டிப் பார்த்தாள். பின் தான் அவளுக்கு புரிந்தது. துருவனும் ரதியும் உள்ளே தான் இருந்திருப்பார்கள்.
வெளியே செல்ல இருந்த துருவனை ரதி நிறுத்தி, அவங்க விசயத்துல நீ தலையிடாத? என்று அவன் கையை பிடித்தார்.
ஜானு அழும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் ஆதேஷ் அறைக்கு வந்து, ஆது..என்னாச்சு? மறுபடியும் பிரச்சனையா?
அவன் பதில் கூறாமலிருக்க லலிதாவை பார்த்து, ஆன்ட்டி அம்மா உயிரோட தான் இருக்காங்க என்று மூக்கை சீந்தி அவள் அணிந்திருந்த ஆடையில் துடைக்க,
ஜானு…ஜானு…என்ன பண்ற? என்னோட ஆடை? அப்பா முதலாக வாங்கிக் கொடுத்தது. நான் ஒரு முறை கூட போடவில்லை என்று ஆதேஷ் பதற,
மாமா..நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன். ஆனா நீ உன்னுடைய ஆடைய பத்தி கவலைப்படுறியே? ஜானு அழ, சரி,.நீ நல்லா துடைச்சுக்கோ என்று வெளியே சென்று பிரதீப்பை அழைத்தான்.
மாப்பிள்ள..எங்க சித்தி என்று அவன் சொல்ல ஆரம்பிக்க, எங்களுக்கு தெரியும் மாமா? நாங்க வாரோம்..
இல்ல மாப்பிள்ள. நிலம சரியில்லை. ஜானுவை பார்த்துக்கோங்க. உங்களுக்கு யார் சொன்னா?
மாமா..நாங்க எல்லாத்தையுமே பார்த்துட்டோம். உங்க அம்மா, சித்தி, அப்பா..என்று அவன் கூற,
ஜானுவுக்கும் தெரியுமா?
தெரியும் மாமா. அவ அழுதுகிட்டு இருக்கா. துகி தான் கேட்க வைத்தாளா?
இல்ல மாமா. பார்க்க வைத்தாள் தாழ்வான குரலில் ஆதேஷ் கூறினான்.
பார்க்க வைச்சாளா?
மாமா ஜானு சும்மா தான் துகிக்கு வீடியோ கால் போட்டாள். துகியை பார்த்து ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சது. ஜானு கால்ல கட் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டா. அவள எதுவும் சொல்லாதீங்க. நான் தான் அசந்து தூங்கிட்டேன். அதனால் தான் ஜானு என்னோட போனை எடுத்துட்டா என்று துகி ஜானுவை காக்க நினைத்தான்.
சரி. ஊருக்கு அவ கண்டிப்பா கிளம்புவா? இப்ப யாரும் தனியா வர்றது பாதுகாப்பு இல்லை. வர வேண்டாம். அவ வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது. இங்க எல்லாரும் செத்திட்டாங்க. ஆனால் முக்கியமான கொலைகாரன் அங்க தான் இருக்கான். பார்த்துக்கோங்க..உதவி வேண்டும்ன்னா அபி அர்ஜூனை கூப்பிட்டுக்கோங்க.
இங்க வேலை இருக்கு. நாம அப்புறம் பேசலாம் என்று போனை துண்டித்து கோபமாக உள்ளே வந்தான். அவன் கோபத்தை அதிகரிக்கும் விதமாய்.. அவன் அம்மாவுடன் துகிரா அமர்ந்திருந்தாள்.
துகி..என்று பிரதீப் அழைக்க, அனைவரும் அவனை பார்த்தனர். துகிரா அவனை பார்க்க..விரலை சுட்டிக் காட்டி எழுந்து வரச் சொன்னான்.
அவள் எழுந்து செல்ல..அவள் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்ல, அண்ணா..துளசி அழைத்தாள். அவளை சாந்தமாக பார்த்து விட்டு அவன் அம்மாவை முறைத்து விட்டு சென்றான்.
என்னாச்சு? எதுக்கு இப்படி இழுத்துட்டு வாறீங்க? துகிரா கேட்க, வாயை மூடிக்கிட்டு வா என்று மேலும் இழுத்து செல்ல துருவன் அவர்கள் பின்னே செல்ல போனவனை தடுத்தான் தீனா.
அவ ஏதோ செஞ்சுருக்கா. அதனால் தான் இப்படி இழுத்துட்டு போறான். நீ அவளுக்கு சாதகமா பேசி அவனிடம் வாங்கிக் கொள்ளாதே. பின்னே வந்த மீனாட்சி தீனா கூறுவதை கேட்டு அவர்களை பார்த்துக் கொண்டே சென்றார்.
சார், அவங்க போறாங்க.
நடப்பதை பார்க்க மட்டும் செய். இல்ல பிரதீப் நம்மை ஒரு வழி செய்து விடுவான்.
பிரதீப் யாருமில்லா இடத்திற்கு துகிராவை அழைத்து வந்தான். நீ என்ன செஞ்சு வச்சிருக்க?
நானா? என்ன செய்தேன்? எதுக்கு ஜானுவுக்கு இப்ப விசயத்தை சொன்ன? அதுவும் எல்லாவற்றையும் வீடியோ காலில் சொல்லி இருக்க? அவள் ரொம்ப அழுதிருப்பா..
அவள் அழுறது தான் உங்களுக்கு பிரச்சனையா? நீங்க விசயத்தை அவகிட்ட சொல்லலைன்னா..உங்ககிட்ட தான் ரொம்ப கோபப்படுவா. ஏற்கனவே அவளிடம் பேசாம நீங்க கஷ்டப்படுறீங்க. நான் ஆதுவிடம் சொல்ல தான் போன் செய்தேன். ஆனால் ஜானு எடுத்து வீடியோ கால் வர சொல்லி போனை போட்டு விட்டாள்.
காதலை மறைச்சு வேறொருவரை கல்யாணம் செய்து காதலனுடனான குழந்தை அருவருத்தவாறு பிரதீப் கூற, மீனாட்சி கண்ணீருடன் மறைந்து நின்றார்.
துகிரா பிரதீப்பிடம், அவங்கள பார்த்தா உங்களுக்கு அருவருப்பா இருக்கா? ஆனா அவங்க காதலுக்கான சாட்சி தான் நீங்க. நீங்க சொல்றதும் சரிதான். உங்க அம்மா வெற்றி மாமாகிட்ட சொல்லி இருந்திருக்கலாம். எங்கே சொன்னால் அவருக்கு ஏதாவது ஆகி விடுமோன்னு பயந்து உங்க வளர்ப்பு அப்பா..என்று அழுத்தி..வளர்ப்பு அப்பாவை கல்யாணம் செய்திருக்கலாம்.
ஒரு வேலை உங்க அம்மா வெற்றி மாமாக்கிட்ட சொல்லி இருந்தா எல்லாரும் இப்ப போல உயிரோட இருப்பாங்கன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா? அவங்க தொடர்பும் அவங்க அறியாம நடந்தது தானே? இதுக்கு அவங்கள குற்றம் சாட்டுறீங்க? நீங்க என்ன செஞ்சீங்க? என்னை யாரும் ஏதும் செய்து விடுவாங்களோன்னு பயந்து தான ஓடி வந்தீங்க? உங்க தம்பி கூட அவனை சூட் பண்ணாரே? உங்களுக்கு உதவ தம்பியும் உங்க ஊர்க்கார பசங்களும் இருந்தாங்க. ஆனால் ஒரே நிமிஷம் உங்க அம்மா நிலைய யோசிச்சீங்களா?
யார் துணையும் இல்லாமல் காதலிப்பவர் முன்னே வேறொருவருடன்.. அதுவும் அவர் தன்னை தொட்டு விடுவாரோ? என்று பயந்து அவர் தொந்தரவுடன் வாழ்ந்திருக்காங்க. எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோ? நினைச்சாலே எனக்கே வேதனையா இருக்கு.
நீங்க கேவலமா பேசுறீங்க? உங்க அம்மா சொல்றதை நம்பலைன்னா.. டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பாருங்க. தனியா வேதனையுடன் இருப்பது எப்படி இருக்கும் தெரியுமா? கண்ணீருடன் கூறினாள் துகிரா.
உங்களுக்கு ஜானு இருந்தா. எனக்கு கூட ஆதுவும் அவனோட குடும்பமும் இருந்தாங்க. ஆனால் உங்க அம்மாவால காதலித்தவன் முன் வேறொருவருடன் வாழ்வது எவ்வளவு சிரமம்?
அவங்க என்ன தான் கல்யாணம் செய்தாலும் இப்ப கூட புவனா அவர் சாக வாய்ப்பிருக்குன்னு தான் சொன்னா. அதற்கு அவங்க குடுத்த பதில்ல தெரியலையா அன்று எவ்வளவு பயந்திருப்பாங்க..என்று துகிரா சோர்வாக அமர்ந்தாள்.
உங்க அம்மாவும், வெற்றி மாமாவும் சரியா தான் இருந்திருக்காங்க. ஆனால் மத்தவங்க செயலால் அவங்க பிரிஞ்சு வேதனையை அனுபவித்து இப்ப குற்றவாளிக் கூண்டுல நிக்கிறாங்க. இது எனக்கு நியாயமா படல.
ஒரே நிமிஷம்..உங்க அம்மா கல்யாணத்துக்கு முன் இருந்த நிலையில் ஜானுவை வச்சு பாருங்க. அவளை மிரட்டி ஒருவன் கல்யாணம் செய்து டார்ச்சர் பண்ணா?…வாடா மாப்பிள்ளன்னு கொஞ்சுவீங்களா? இல்ல வெட்டி போடுவீங்களா? சொல்லுங்க..என்று கத்தினாள்.
அழும் சத்தம் இரு வேறு இடத்தில் கேட்க இருவரும் அவ்விடம் விரைய, மீனாட்சி ஒரு பக்கமும், வெற்றி ஒரு பக்கமும் அழுது கொண்டிருந்தனர்.
துருவனும் சக்கரையும் மீனாட்சியிடம், அழாதீங்க என்று கண்ணீருடன் சொல்லிக் கொண்டிருக்க பிரதீப் அவன் அம்மா முன் வந்து மண்டியிட்டு, என்னை மன்னிச்சிருங்கம்மா… என்று மீனாட்சி மடி சாய்ந்து அழுதான்.
மாமா..என்று வெற்றியிடம் வந்தாள் துகிரா. எப்படிம்மா புரிஞ்சுக்கிட்ட? அண்ணன் அவளை மிரட்டியதே தெரியாதும்மா. நீ சொன்னது போல் எனக்கு தெரிந்திருந்தால் எங்கள வேலீஸ்வர் கொன்றுப்பான்.
மாமா?..துகிரா அதிர,
அண்ணாவிடம் மீனு மீதான ஆசையை தூண்டி விட்டது அவன் தான்ம்மா. இது மீனுவுக்குமே தெரியாது. ஆனால் இவள் கூறியதை வைத்துப் பார்த்தால் என்னோட அண்ணனை வேலீஸ்வர் மிரட்டி கூட இருக்கலாம். பின் காவேரி மூலம் இவர்களையும் அவன் தான் பிரிக்க நினைத்திருப்பான். அண்ணன் நினைத்திருந்தால் அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டது போல் அவளை எடுத்திருக்கலாம். அவள் விருப்பத்துக்கு அவன் மதிப்பு கொடுத்திருக்கான். ஆனால் காவேரி வந்த பின் அவனுக்குள் சந்தேகம் எங்கள் மீது. அவள் மேலும் கிளப்பி விட மீனுவை டார்ச்சர் செய்திருக்கிறான். இதுவும் எனக்கு தெரியாது. எனக்கு காவேரி கொடுத்த டார்ச்சர்ல என்னால என் பிள்ளைகளையே பார்த்துக்க முடியல. நான் ஒண்ணு சொன்னா தீனா அதை தப்பா புரிஞ்சு வைச்சுக்கிட்டு பேசிட்டான்.
மீனு..என்னிடம் நீ சொல்லி இருந்தால் நாம சேர்ந்தே செத்தாவது போயிருக்கலாம். இத்தனை வேதனைகளும் வலியும் இருந்திருக்காதுல்ல. இப்ப பாரு நம்மளால பசங்கள விட்டு சாகவும் முடியாம, வாழவும் முடியாம என்று கதறினார்.
இருவரும் சற்று தள்ளி இருக்கவே பேசியது கேட்க, மீனாட்சி அழுது கொண்டே திரும்பி பார்த்தார். அவர் துகிரா கைக்குள் முகத்தை வைத்து தேம்பி தேம்பி அழுதார். பிரதீப் அவரை பார்த்தான். ஆனால் துருவனும் சக்கரையும் அவர் பக்கம் சென்று..
அய்யா..அழாதீங்க. எல்லாமே சீக்கிரம் சரியாகும் துருவன் கூற, கண்ணீருடன் சரியாகுமா? எப்படி? எதுவுமே மாறாது. வாழ்க்கை முழுவதும் வலி மட்டுமே..என்று அவர் மீண்டும் அழுதார்.
சரியாகும்..என்று சத்தம் கேட்டு அனைவரும் பார்த்தனர். அபி அப்பா வந்து நின்றார். எழுந்திருக்கீங்களா? கேட்டார். அபி அம்மா..மீனாட்சியிடம் வர, அவரும் எழுந்தார்.
அண்ணா.. போ..அவங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சு விட்ரு என்று அபி அம்மா கூற, நான் அவள் பக்கம் கூட செல்ல மாட்டேன் என்றார் வெற்றி.
மாமா..நீங்க தான் செய்யணும் துகிரா கூற, அதான் அவன் இருக்கானே என்று தீனாவை கை காட்ட,
இல்லப்பா. நீங்க தான் செய்யணும் என்றான் அவனும்.
மாமா..அவங்களை நீங்க காதலிக்க வேண்டாம். அவங்க கஷ்டப்படுத்தினாலும் அவங்க கணவனா எல்லாத்தையும் முடிச்சிருங்க துகிரா கூற, ம்ம்..சரியா தான் பிடிச்சிருக்க என்று அபி அம்மா பிரதீப்பிடம் கூற, அவனே துகிராவை ஆச்சர்யமாக பார்த்தான். அவள் அவன் மீது கோபமாக இருக்கிறாள்.
எங்க பசங்க புரிஞ்சுக்காததையும் நீ புரிஞ்சு வைச்சிருக்க என்று மீனாட்சி அவள் தாடையை பிடித்து ஆட்டிக் கூற, அத்த..விடுங்க. ஏற்கனவே தலை சுத்துது. நீங்க வேற..
தலை சுத்துதா? என்று வாயில் கை வைத்து அபி அம்மா பிரதீப்பை பார்க்க, அத்த..நான் இல்லை என்றான்.
அம்மா..அவங்களுக்கு சோர்வினால் கூட தலை சுற்றல் வரலாம் துருவன் கூற,
ஏய்..என்ன எல்லாரும் என்னத்தையோ யோசிக்கிறீங்க? நான் காதலுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று போகலாம் என்று அவள் செல்ல..
துகி..என்று அழைத்தான் பிரதீப். சக்கர துகிராவிடம் நீரை கொடுக்க.. “தேங்க்ஸ்டா” பேசியே டயர்டு ஆகிட்டேன்டா என்று நீரை அருந்த பிரதீப் அவளை அழைத்துக் கொண்டே அவளிடம் வர,
வாங்க அத்தை. நாம போகலாம் என்று அவள் மீனாட்சி கையை பிடிக்க, அனைவரும் பிரதீப்பை பார்த்தனர்.
வேகமாக வந்து அவள் கையை அவன் பிடிக்க கையிலிருந்த நீரை அவன் முகத்திலே ஊற்றி விட்டாள்.
ஏய்..என்ன பண்ற? தீனா சினத்துடன் அவளிடம் வர அவன் மீதும் நீரை ஊற்றினாள்.
உனக்கு எவ்வளவு தைரியம்? தீனா சினத்துடன் முறைக்க, கையை கட்டிக் கொண்டு இனியாவது விழித்து பேசுங்கள். செயல்படுங்கள் என்றாள். பிரதீப் நீரை வழித்து எடுத்து விட்டு துகிராவை பாவமாக பார்த்தான்.
இந்த மூஞ்சிய காட்டி ஏமாத்தப்பாக்காதீங்க? உங்க அம்மாவையே என்ன பேசுறீங்க? நாளைக்கு என்னையும் இப்படி தான பேசுவீங்க? எல்லாம் முடியட்டும். நான் ஆது வீட்டுக்கே போயிடுவேன்.
எல்லாரும் போறீங்களா? என்று பிரதீப் கேட்க, அவனை பார்த்துக் கொண்டே சென்றனர்.
அக்கா..எங்க அண்ணா பத்திரம். வேறெதையும் வைச்சு அடிச்சிறாதீங்க சக்கர சொல்ல, நீயே எடுத்துக் கொடுக்குற? துருவன் அவன் தலையில் கொட்டினான்.
நீ எப்படி போவ? நீ போறதுக்கா. நான் கூட்டுட்டு வந்துருக்கேன்.
நீங்க ஏன் அம்மாவை அப்படி பேசிட்டீங்க?
ஏம்மா..பொண்ணு, பிள்ளைய வேகமா அனுப்பு அபி அம்மா கூறிக் கொண்டே சென்றார்.
நான் தான் உங்க பிள்ளைய பிடிச்சு வைச்சிருக்கேன் பாரு..என்று பிரதீப்பை பார்த்தாள்.
நான் என்ன செய்யணும்? பிரதீப் கேட்டான்.
இனி தான் நான் முடிவு பண்ணனும். நீங்க உங்க வீட்ல எல்லாரிடமும் எப்படி நடத்துக்கிறீங்கன்னு பார்த்து தான் முடிவெடுப்பேன். எனக்கு நேரம் தேவை. நாம போகணும் என்று அவள் முன் செல்ல..அவன் பின் சென்றான்.
உண்மையிலே பிரதீப் பேசியதில் நம்மையும் பேசி விடுவானோ? என்ற பயம் துகிராவிற்கு வந்து விட்டது. அவளும் ஒருவனிடமிருந்து கஷ்டப்பட்டு தப்பி வந்தவள் தானே?
காவேரியை வைத்திருக்கும் இடத்திற்கு துகிரா செல்வாள் என்று பிரதீப் நினைக்க, துகிரா சமையலறைக்குள் சென்றாள். இதற்கு மேல் அவள் பின் சென்றால் சரியாக இருக்காது என்று பிரதீப் நின்று விட்டான்.
துகிரா முகம் வாடி இருப்பதை பார்த்த துளசியும் புவனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துளசி எழுந்து துகிராவிடம் சென்றாள். புவனா பிரதீப்பை அழைத்து,
அண்ணா..என்று புவனா அவன் சட்டை நுனியை பிடித்து கீழே இழுத்தாள். அவன் குனிந்து நின்றான்.
இருவரும் சண்டை போட்டீங்களா? அக்கா அழுற மாதிரி தெரியுதே?
இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த தீனா பிரதீப் அருகே வந்து நின்றான்.
நானா? சண்டை போட்டேன். இல்லம்மா..அவள் கோபமா இருக்கா.
புவி அவ என்னோட மூஞ்சில தண்ணிய ஊத்திட்டா தீனா கூற, என்னடா கம்பிளைண்ட் பண்றியா? பிரதீப் அவனை முறைத்தாள்.
தண்ணி ஊத்திட்டாங்களா? நீங்க என்ன செஞ்சீங்க? புவனா அவனை ஒருமாதிரி பார்க்க, நான் ஒண்ணுமே செய்யல புவி என்று அப்பாவியாக பேசினான் தீனா.
பின் புவி பிரதீப்பை பார்க்க, எல்லாம் முடியட்டும். நான் அவளை சமாதானப்படுத்தி விடுவேன்.
சரி..அண்ணா. பார்த்துக்கோங்க. ஜானு சொன்னா அவங்க எல்லாத்தையும் விட்டு வந்துருக்காங்கன்னு புவி சொல்ல, அவன் கண்கள் சமையலறை பக்கம் நிலைத்தது. அவன் அவ்விடம் சென்றான்.
துளசி உள்ளே செல்ல..தண்ணீரை மோந்து மோந்து குடித்துக் கொண்டே இருந்தாள் துகிரா.
என்ன பண்றீங்க? உடம்புக்கு ஏதாவது செய்யப் போகுது? என்று துகிரா கையை பிடித்தாள்.
அவள் கண்ணீரோடு இருப்பதை பார்த்த துளசி..அவளிடம் கேட்க, அவளை அணைத்த துகிரா ஏதும் பேசவில்லை. பிரதீப் வெளியிருந்து அவளை பார்த்தான்.
அவள் அழுவதை பார்த்தவுடன் அவள் கூறியது நினைவிற்கு வந்தது. அவன் உள்ளே வர, துளசி நகர்ந்து கொண்டாள். அவன் துகிரா கையை பிடிக்க, அவள் தட்டி விட்டாள்.
இங்க பாரும்மா..நான் அம்மாவிடம் யோசிக்காமல் தான் பேசிட்டேன். அதற்காக உன்னிடம் நான் சந்தேகப்படுவேனா? நான் என்றுமே உன்னை சந்தேகப்படவும் மாட்டேன். நீ என்னை சந்தேகப்படும் படி நடந்து கொள்ள மாட்டேன். அதை தெளிவா புரிஞ்சுக்கோ. எதையும் யோசிக்காத. வா..என்று கையை பிடித்து வெளியே அழைத்து வர, துளசியும் அவர்களுடன் வந்தாள்.
காவேரியை எடுத்து சென்றனர். காவேரி தவறானதை செய்தாலும் அவர் அவ்வீட்டின் உரிமையானவராகவே நடந்து அப்பத்தாவையும், வெற்றியையும் பார்த்து தான் கொண்டார். அனைவரும் அழுதனர். அவருக்கானதை காவேரி காதலித்த வெற்றியே செய்து முடித்தார். ஆண்கள் எல்லாரும் செல்ல..பெண்கள் இடத்தை ஒதுக்கி விட்டு அமர்ந்திருந்தனர்.