அத்தியாயம் 56
அர்ஜூன், நிவாஸ், சைலேஷ், நித்தி இருவரையும் பார்த்து விட்டு வந்தனர். வெளியே இன்பா அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை பார்த்துக் கொண்டே தேவ்வும் இருந்தான்.
வாங்க..மேம் போகலாம் என்று அர்ஜூன் அழைக்க எழுந்தாள் இன்பா. மேம்..இதை சாப்பிடுங்க டென்சன் குறையும் தேவ் ஒரு மாத்திரையை கொடுக்க, அவள் ஏதும் பேசாமல் வாங்கி உள்ளே வைத்து விட்டு அவனை பார்த்து “தேங்க்ஸ்” கூறினாள்.
மேம்..என்னாச்சு? ரொம்ப அமைதியா இருக்கீங்க? டென்சனா? நிவாஸ் கேட்க,
இல்லடா..சோர்வா இருக்கு. போகலாமா அர்ஜூன் கேட்க, மேம்..நீங்க நித்தியுடனும் சாருடனும் வாங்க என்று அர்ஜூன் சொல்ல, அவர்களை பார்த்து விட்டு,
நான் உங்களுடனே வருகிறேன் இன்பா கூற, எதுவும் பிரச்சனையா? என்று சைலேஷ் கேட்டான்.
இல்லடா..நான் அவங்களோட வாரேன் அவள் கூற, அர்ஜூன் இருவரையும் அழைத்து வா..என்று சைலேஷ் காரை எடுத்தான். அர்ஜூனும் அவன் காரில் ஏற, நிவாஸ் அவனருகிலும் இன்பா பின்னும் அமர்ந்தனர்.
இன்பாவை இருவரும் அவ்வப்போது கவனித்துக் கொண்டே வந்தனர். வீட்டிற்கு வந்ததும் முன் சென்று கொண்டிருந்த சைலேஷ் நித்தியை தாண்டி உள்ளே வேகமாக சென்றாள் இன்பா.
நால்வரும் அவள் பின்னே வர, உள்ளே அனுவுடன் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். கைரவ், அனிகா, கவின் தவிர. பெரியவர்களும் சேர்ந்து விளையாட, இன்பா அபி மீது மோத அபி அவளை பார்த்தான். இன்பா கண்ணீருடன் நிமிர, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு அவள் கண்ணீர் உரைக்க,
மேம்..என்னாச்சு? என்று அவள் பின் வந்தான். அவள் ஓர் அறைக்குள் சென்று கதவை அடைத்தாள். இன்பா கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை வெளியே வர, இன்பா அம்மா, இதயா பதறி வந்து கதவை தட்டினர். ஆனால் இன்பாவிற்கு அப்பா நினைவும் வந்து வாட்ட அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.
அர்ஜூன்..என்னாச்சு? எதுக்கு அழுறாங்க? அபி கேட்க, இதயாவும் அவர்களருகே வந்தான்.
தெரியல அபி. ஆனால் ரொம்ப டல்லா தான் இருந்தாங்க. சைலேஷ் கதவை தட்டி..இன்பா வெளிய வா. என்ன பிரச்சனைன்னு சொல்லு என்று சத்தமிட்டான்.
என்னை தனியா விடுங்களேன் அவள் அழுது கொண்டே கூற, அக்கா..வெளிய வா. என்னன்னு சொல்லு?
என்னை தனியா இருக்க விடுங்கள் என்று அழுதாள்.
சரி..விடுங்க. அவங்களே வெளிய வருவாங்க. சொல்றாங்கள?..அர்ஜூன் கூற, அபி சைலேஷை பார்த்தான்.
சிந்தனையில் இருந்த சைலேஷ் சோர்வுடன் அமர்ந்து, அம்மா..மாதவுக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு என்று இன்பா அம்மாவிடம் கூற,
அவளுக்கு தெரியுமா? அம்மா கேட்க, எனக்கு தெரியலம்மா..தெரிஞ்சதால தான் அவ கஷ்டப்படுறான்னு நினைக்கிறேன்.
அவருக்கு பிரமோசன்னா..இவங்க எதுக்கு வருத்தப்படணும்? அபி கேட்டான்.
எங்க ப்ரெண்ட்ஸ்ல எல்லாரும் அவங்க கனவை அடைந்தோம். ஆனால் மாதவ், இன்பா தான் அதற்கான முயற்சியில் இருந்தாங்க. அவனுக்கு கிடைச்சிருச்சி. ஆனால் இன்பாவால் முடியாது சைலேஷ் வருத்தமாக கூறினான்.
செந்தில் மருத்துவராகிட்டான். கேரி அதை தாண்டியே சென்று விட்டான். நானும்..அடைந்து விட்டேன். மாதவிற்கும் அவன் கனவு நனவாகியது. ஆனால்..இன்பா அப்பாவின் கம்பெனி அந்த ராஸ்கல் விக்னேஷிடம் தான் உள்ளது.
சார்..குறிப்பிட்ட காலமென்று இல்லையா? அபி கேட்க, இல்லை என்று தலையசைத்தான். ஒன்று அவள் அவனை கல்யாணம் செஞ்சுக்கணும் இல்லை அதற்கான பணத்தை கொடுக்கணும்.
பணமா? எவ்வளவு? அர்ஜூன் கேட்டான்.
இருபது கோடி..என்றான் சைலேஷ்.
இருபது கோடியா? வாயை பிளந்தனர் அனைவரும். அம்மா..அண்ணா, என்ன சொல்றாங்க?
இருபது கோடியா? நம்ம கம்பெனி மதிப்பு நூறு கோடியா?
இல்லம்மா..நஷ்டத்துல போனதால..அவனிடமிருந்து உங்க அப்பா வாங்கி இருக்கார்.
ஆன்ட்டி எவ்வளவு வாங்கினார்? கம்பெனி மதிப்பு எவ்வளவு? அர்ஜூன் கேட்டான்.
அவர் கூற, அனைவரும் மலைத்து போனார்கள். கம்பெனி நல்ல நிலையில் இருந்த போது இருபது கோடி மதிப்பு. ஆனால் நஷ்டமான பின் ஒரு கோடிக்கு கூட போகலை. அதை பயன்படுத்தி அவரை ஏமாற்றி வாங்கிட்டானுக.
இப்ப கம்பெனி நல்ல படியாக இல்லைன்னாலும் ஏதோ இயங்குது. ஆனால் இருபது கோடி கொடுத்தால் தான் கம்பெனி தருவோம்னு சொல்லிட்டாங்க.
இப்ப அந்த கம்பெனி விலை என்னன்னு பார்த்து நாம முடிவெடுப்போம் அர்ஜூன் கூறினான்.
ஆனால் அவர் இருபது கோடி கொடுத்திட்டு கம்பெனிய வாங்கிக்கிறேன்னு எழுதி கொடுத்திருக்கார்ப்பா.
அப்ப இருபது கோடியும் கொடுத்தால் தான் கம்பெனி கிடைக்கும் அபி கேட்க, இன்பா அம்மா தலையசைத்தார்.
இதை எப்ப சம்பாதித்து எப்ப அடைக்கிறது? தருண் கேட்க,
நம்ம பொருளை எடுத்து ஏமாத்துறவனிடம் நியாயமா நடந்துக்கணும்னு யாருமே சொல்லலையே அபி? ஸ்ரீ கூற, எல்லாரும் அவளை பார்த்தனர்.
ஆமாம். அவன் ஏமாற்றியது மட்டுமல்லாம மேம்மை தொந்தரவு செய்கிறான்? பணம் கொடுத்து கம்பெனிய மீட்பதா? இல்லை மூளையை பயன்படுத்தி மீட்பதா? நீங்களே முடிவெடுங்கள் என்று வா..அனு நாம விளையாடலாம் என்று அனுவை தூக்கினாள்.
ஸ்ரீ சொல்றது ரொம்ப சரி என்ற அபி..நாம தயாராவோமா? கேட்டான்.
எங்க? நித்தி கேட்க,
நித்தி, நம்ம கல்லூரி நிகழ்ச்சி முடியட்டும்.
முடிந்து ஊருக்கு போக வேண்டாமா? கவின் கேட்க,
போகலாம். மேம்..பிரச்சனையை முடிச்சிட்டே போகலாம் அர்ஜூன் சொல்ல..
தெளிவா சொல்லுங்க. ஒண்ணுமே புரியல. நாங்க சொல்றோம் இப்ப இல்ல..என்ற அபி..அர்ஜூன் நீயும் அதை தான நினைக்கிற? இருவரும் ஹை..பை.. போட்டுக் கொள்ள, நித்தியோ சொல்லுங்கடா என்றாள்.
முடியாதே..என்ற அபி, இன்பா அறைக் கதவை தட்டி மேம் அழுதது போதும். உங்க பிரச்சனைக்கான முடிவு கிடைச்சிருச்சு. நாம எல்லாரும் சேர்ந்தே முடிக்கலாம்.
அவள் அழும் சத்தம் நின்றது. கதவை திறந்து, என்ன சொன்ன? என்று கேட்டாள்.
மேம்..மூச்சிய கண்ணாடில பாருங்க. பேய் மாதிரி இருக்கீங்க? தருண் கேலி செய்ய, அபி அவளை பார்த்து சிரித்தான். முகத்தை கையால் மூடிக் கொண்டே அறைக்கதவை மூடினாள் இன்பா.
அர்ஜூன்..என்று அனு ஓடி வந்து அவனை தூக்க சொல்லி கையை விரித்தாள். வாங்க..செகண்ட் ஏஞ்சல் உங்களுக்காக தான் வீட்டிற்கே வந்தேன் என்று அவளை தூக்கினான்.
இப்பவாது விளையாட வா..அர்ஜூன் அனு அழைக்க, ஓ.கே விளையாண் டுட்டா போச்சு..என்று பேசிக் கொண்டே கைரவை தேடினான்.
யார தேடுற அர்ஜூன்? தருண் கேலியுடன் ஸ்ரீ வினிதா அக்கா அம்மாவை பார்க்க போனாள்.
அவளை தேடலடா? கைரவ் எங்கே? கேட்டான்.
அவன்..இங்க தான இருந்தான். சைலேஷும் அவன் இங்கே இல்லையா? பதறினான்.
சார்..பயப்படாதீங்க. அவன் உள்ள தூங்கிகிட்டு இருக்கான் அனிகா கூறினாள்.
தூங்குறானா? சைலேஷ் கேட்க,
அவனுக்கு சண்டை போட்ட களைப்பாக கூட இருக்கலாம் தருண் கூற, சண்ட போட்டானா? என்று அர்ஜூனும் சைலேஷும் கவினை பார்த்தனர். அவன் நித்தியிடம் பேச முயற்சி செய்து கொண்டிருந்தான்.
கவின்.. போடா. நான் ஏற்கனவே டயர்டா இருக்கேன். நீ என்னை தொந்தரவு செய்யாதே பேசிக் கொண்டிருந்தாள் நித்தி.
சார்..நான் உங்களிடம் பேசணும் என்றாள் அனிகா. அவள் பார்வை அறைக்கதவில் இருக்க, அர்ஜூன் யாரென எட்டிப் பார்த்தான். ஸ்ரீ அவளுக்கான உடையை எடுத்துக் கொண்டிருந்தாள். அவன் முன் வந்து நிற்க பயந்து பின் நகர்ந்து விட்டு, அப்பாடா என்று நெஞ்சில் கை வைத்து,
ஏன்டா, திடீர்ன்னு முன் வந்து பயமுறுத்துற? என்னோட உயிரே போச்சு.
அது எப்படி போகும்? நான் தான் உன் முன்னே இருக்கேனே? போக விட்டிருவேனா?
அர்ஜூன்..போதும் என்று அனுவை பார்த்தாள். அனு அவன் தோளில் சாய்ந்தவாறு வாசலை வெறித்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீயும் பார்க்க யாருமில்லை. அர்ஜூன் இருவரையும் பார்த்தான். ஸ்ரீ முகமும் வாடியது. ஸ்ரீ கையை பிடித்த அர்ஜூன் அனுவிடம்,
சாப்பிட்டீங்களா? என்ன சாப்பிட்டீங்க? கேட்டுக் கொண்டே ஸ்ரீயையும் அழைத்து வந்து அமர்ந்தான். ஸ்ரீ கையிலிருந்த அவளது இரவு உடையை பார்த்து விட்டு வேகமாக எழுந்தாள்.
என்ன? என்று அர்ஜூன் அவள் கையை பிடித்துக் கொண்டே கேட்க, உடையை வைக்க மறந்து விட்டேன். நான் வச்சிட்டு வாரேன் என்று அவன் கையை எடுத்து விட, அம்மா..என்று அனு ஸ்ரீ கையை பிடித்து அழுதாள்.
அனு அழுகையை பார்த்தவள், அவள் உடையை வைத்து விட்டு அர்ஜூனிடமிருந்து அனுவை வாங்கி வெளியே சென்றாள். அர்ஜூனும் அவர்கள் பின் சென்றான்.
சைலேஷிடம் பேச வந்ததை மறந்து அனிகா இவர்களை பார்க்க, அண்ணா..என்று சைலேஷிடம் கைரவ் வந்தான்.
என்னடா பிரச்சனை பண்ண?
அண்ணா..நான் பிரச்சனையெல்லாம் செய்யவில்லை. சொல்லு அனிகா அவன் தான? கைரவ் கேட்க, அவள் பார்வை அர்ஜூன் ஸ்ரீயிடம் இருந்தது.
அண்ணா..இவளுக்கு என்ன ஆச்சு? சைலேஷிடம் கேட்க, நீயே பாரு என்று அவன் சைகை செய்தான். அனிகா பார்க்கும் இடத்தை பார்க்க, அர்ஜூன், ஸ்ரீ அனுவிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவனும் ஒரு நிமிடம் மெய் மறந்து அவர்களை பார்த்தான்.
அழகா இருக்காங்கல்ல என்று கைரவ் அவள் தோளில் கை வைக்க, அம்மா..என்று பதறி நகன்றாள்.
கைரவ் நினைவு வந்தவனாய்..சாரி..சாரி..என்னாச்சு? கேட்டான்.
என்னன்னு தெரியாமலே சாரி சொன்னியா? சைலேஷ் கேட்க, அவளுக்கு தான் அர்ஜூன் ஸ்ரீயை தெரியாது. பார்க்குறா? உனக்கு என்னடா?
அண்ணா..இவர்களை பார்த்தால்..என்று சைலேஷை பார்த்தான். அவன் பார்வை கூர்மையாக சொல்லு.. ஒன்றுமில்லை என்று அனிகாவை பார்த்தான் கைரவ்.
அவள் சைலேஷை பார்த்துக் கொண்டே நிற்க, ஏதோ சொல்லணும்ன்னு சொன்ன? என்று சைலேஷ் அனிகாவிடம் கேட்க,
சார்..தனியா பேசலாமா?
ஏன் இங்கே பேசினால் என்ன? நித்தி சைலேஷ் அருகே வந்து அமர்ந்தாள்.
என்னோட சொந்த விசயம் சார். ப்ளீஸ் என்று அனிகா கேட்க, வா.. பேசலாம் என்று இருவரும் வெளியே சென்றனர். அர்ஜூன் இவர்களை பார்த்து, ஏதும் பிரச்சனையா? கேட்க,
இல்ல..பேச தான் போறோம் என்று சைலேஷ் மூவரையும் பார்த்து புன்னகைத்தபடி சென்றான். அனிகா அவர்களை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
ஏய்..எதுக்கு அவங்கள அப்படி பாக்குற?
அவங்கள பார்த்தா ஒரு குடும்பம் மாதிரி தெரியுது..அந்த குட்டிப்பொண்ணுக்கு அவ அம்மா இல்லைன்னாலும் அவளுக்கு இவங்க இருப்பாங்கள. ஆனால் இவங்க எப்படி சார் குட்டிப் பொண்ணை பார்த்துக்க முடியும்?
கஷ்டம் தான். பார்த்துப்பாங்க என்று சைலேஷ் கூற, பெருமூச்சுடன் எனக்கு இது போல் யாராவது இருந்தால் நல்லா இருக்கும் என்றாள் அனிகா.
சொந்த பந்தம் கூட இல்லையா?
இருக்காங்க சார். ஆனால் நான் வெறும் கையுடன் சென்றால் யார் இருப்பார்கள்? சார்..என்னோட அப்பாவை ஒரு முறை பார்க்கவென்று எங்க வீட்டிற்கு ஒருவன் வந்தான். அவர் எங்க வீட்ல இருக்க மாட்டார்ன்னு தெரியாதாம். வீட்டிற்கு வந்ததால் அம்மா அவனுக்கு காபி போட்டு தந்தார். அப்பொழுது தான் நான் பள்ளி விட்டு வந்தேன். அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தான். ஆனால் சென்று விட்டான்.
மறுநாள் என் அப்பாவுடன் வந்தான். அப்பா அமைச்சராக அவனுடைய அப்பா உதவி இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் அவன் என் அப்பாவிற்காக இப்பொழுதும் ஆட்களை கொலை செய்திருக்கிறானாம். அவனுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு கல்யாணம் செய்து வைக்க சொல்லி அப்பாவை வைத்து அம்மாவிடம் பேசினான். அன்றிலிருந்து எங்களுக்கு மொத்த நிம்மதியும் போச்சு. வீட்டுக்கு ஆட்கள் யாரையும் வர விடமாட்டான். நான் யாரிடம் பேசினாலும் கொலை செய்தான். பொண்ணுங்கள கூட பேச விட மாட்டான். அவன் ஆட்கள் எப்பொழுதும் என்னை பின் தொடர்ந்து வருவர். அந்த திருமண விழாவிலும் இருந்தனர். நான் தான் அவர்களையும் ஏமாற்றி வந்தேன். ஆனால் என் அண்ணன் ஆட்களிடம் மாட்டிக் கொண்டேன். இப்பொழுதும் அவன் என்னை தேடி வர வாய்ப்புள்ளது என்று அழுதாள்.
சார்..இப்பொழுதாவது என்னை ஹாஸ்டலில் சேர்த்து விடுங்க. என்னால உங்க எல்லாருக்கும் ஏதாவது ஆகி விடுமோன்னு பயமா இருக்கு. ப்ளீஸ் சார். உங்க வீட்டுக்கு நான் வரல.
பேசுனாலே கொல்வானா? உன்னிடம் பேசி இருக்கிறானா? எப்படி நடந்து கொள்வான்?
அவன் கொலைகாரனாலும் என் மீது ரொம்ப பாசமா தான் இருப்பான். எனக்கு தேவையானதை செய்து கொடுப்பான். ஆனால் தவறாக என்னிடம் நடந்து கொண்டதேயில்லை. ஆனால் அடிக்கடி கையை பிடித்து பேசுவான் என்று முகம் சுளித்தாள்.
அவனுக்கு அம்மா இருக்காங்களா?
ம்ம்..ஆனால் சார் அவங்க பொண்ணுங்கள வைச்சி தவறான தொழில் செய்றவங்க.
அவங்களிடம் பேசி இருக்கிறாயா?
இல்ல சார். அவன் அவங்கள என் பக்கமே விடவே மாட்டான். அவன் அப்பாவிடம் ஒரு முறை பேசி இருக்கிறேன். அவரும் சரியில்லை. அவர் என்னிடம் பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை என்று அவன் முகம் காட்டியது. பின் அவரையும் என் பக்கமே விடலை.
சரி, நான் பார்த்துக்கிறேன்.
சார், வேண்டாம் சார். அவன் என்னிடம் மட்டும் தான் நல்லவிதமாக நடந்து பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஏதாவது ஆனால் என்னால் என்னை மன்னிக்கவே முடியாது.
உனக்கு என்னோட தம்பிய தெரியும்ன்னு சொன்ன? பேசி இருக்கிறாயா? கேட்டான்.
சார்..ஒரு முறை பெயர் கேட்டான். வகுப்பிற்கு செல்லவில்லையான்னு கேட்டான். கூடைப்பந்து விளையாட்டு பிடிக்குமான்னு கேட்டான். ஒரு முறை விளையாட அழைத்தான். அவன் கேட்டான் பதில் சொன்னேன்.
சரி..விளையாட உனக்கு விருப்பமா? கேட்டான் சைலேஷ்.
சார்..எனக்கு விளையாட தெரியாது. ஆனால் அந்த கூடையில் பந்து விழும் போது ஏதோ நம் வாழ்வின் குறிக்கோளை அடைந்தது போல் சந்தோசமா இருக்கும். அதுவும் பசங்க வளத்தியா இருப்பாங்களா? விளையாட்டு நல்லா இருக்கும். அதனால பார்ப்பேன்.
ம்ம்..நல்ல விளக்கம்.
சார்..?
வா..போகலாம். அவனை பற்றி யோசிக்காம இரு. அப்புறம் யாருமில்லைன்னு சொல்லாத. நாங்க இருக்கோம். நான் என்னுடைய தாத்தாவிடம் முறையாக அறிமுகப்படுத்துகிறேன்.
முறையாகவா? அறிமுகமா? சார் இந்த இரவு நேரம் உங்க வீட்டுக்கு வந்தா தாத்தா தப்பா நினைக்க மாட்டாங்களா?
அதெல்லாம் நினைக்கவே மாட்டார். அவருக்கு உன்னை பற்றிய அனைத்தையும் கூறி விட்டால் அவரும் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார்.
சார்..உங்க பிரச்சனை எப்பொழுது முடியும்?
எதுக்கு?
நான் உங்க வீட்ல இருந்து கிளம்பும் முன் எந்த பிரச்சனையிலிருந்து வரமாலிருக்க ஏதாவது செய்யணுமே?
என்ன பிரச்சனை? வீட்டுக்கே போகலை. அதற்குள் கிளம்புவதை பற்றி சிந்திக்கிறாய்? உன்னோட பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்.
எப்படினாலும் கிளம்பணுமே?
அதான் முன்னே என்னை தயார் செய்து கொள்ளணுமே?
சைலேஷ் புன்னகையுடன், அப்பொழுதுள்ளதை அப்பொழுதே கவனித்துக் கொள்ளலாம். வா..போகலாம் என்று அழைக்க, இருவரும் உள்ளே வந்தனர்.
அர்ஜூன் இன்பா அம்மாவிடம் நாளை சாமி கும்பிடுவதை பற்றி பேசிக் கொண்டிருந்தான். அருகே கைரவும் கவினும் முறைத்தவாறு அமர்ந்திருக்க தருண், பவி அம்மா சொல்ல சொல்ல வாங்க வேண்டிய பொருட்களை எழுதிக் கொண்டிருந்தான். மற்றவர்களும் அமர்ந்து அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தனர்.
வினிதாவின் சொந்தபந்தங்களை அழைக்க வேண்டுமென்றும் அவர்களது நம்பரை பதிவு செய்து கொள். காலை உணவு முடிந்தவுடன் போன் செய்து அனைவரையும் அர்ஜூன் நீ தான் அழைக்க வேண்டும். அனு பொறுப்பு இனி உனதாயிற்றே. அவங்க கோபமா பேசினாலும் பார்த்து பேசுப்பா. பிரச்சனை வந்து விடாமல் அவர் கூற,
சரிங்க ஆன்ட்டி. நான் பார்த்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் பிரித்து வேலை கொடுத்தார். நிவாஸிற்கு மட்டும் ஏதும் சொல்லவில்லை. அவன் கேட்க,
நீ நாளை ஹாஸ்பிட்டலில் தான இருப்ப. அப்புறம் என்ன? வினிதா அம்மா கேட்க, இல்ல நான் அந்நேரம் வந்து விடுவேன் என்றான் நிவாஸ்.
சும்மா இரும்மா என்று வினிதா அப்பா கையமர்த்த, நீங்க ரொம்ப மாறீட்டீங்க? தன் கணவரை கூற, எல்லாம் என் பெயர்த்தியின் மாயம் என்றார் அவர்.
சைலேஷை பார்த்த நித்தி அவனிடம் வந்தாள். ரகசியம் பேசீட்டீங்களா? என்று அனிகாவை நித்தி பார்த்தாள். அவள் முகம் வாட, என்னாச்சு? நித்தி சைலேஷிடம் கேட்டாள்.
அவ..பயப்படுறா. நான் பார்த்துக்கிறேன் என்றான்.
“வாங்க எல்லாரும் சாப்பிடலாம்? ஸ்ரீ அழைக்க, அனுவும் அவளை போல “வாங்க எல்லாரும்” என்று மழலை குரலில் கூற, அனைவரும் புன்னகையுடன் எழுந்தனர்.
நாங்க கிளம்புகிறோம் சைலேஷ் கூற, மணி ஒன்பதாகி விட்டது. சாப்பிட்டு போங்க தம்பி..வினிதா அம்மா கூற,
ஆன்ட்டி..நாங்க வேகமா கிளம்புறது தான் நல்லது அவன் கூற, சார்..நீங்க கிளம்புங்க. கைரவ் என்னுடன் இருக்கட்டும் அர்ஜூன் கூற,
அர்ஜூன்..உன்னுடனா? என்று அதிர்ந்து வேகமாக எழுந்தான். எல்லாரும் அவனை பார்க்க,..அர்ஜூன் உன்னுடன் மட்டும் வேண்டாம் என்று அழாத குறையாய கைரவ் பேச, தருண் சிரித்தான்.
அர்ஜூன் இருவரையும் பார்த்து விட்டு, அன்று ஹாஸ்பிட்டலில் என்னுடன் தூங்கிய போது நான் உன்னை ஏதும் செய்து விட்டேனா? கேட்டான்.
அர்ஜூன் நீயா? என்று கைரவ் கண்கள் தானாக ஸ்ரீயை ஏறிட்டது.
அதெல்லாம் ஒன்றுமில்லை அர்ஜூன். சிட்டுக்குருவி பருந்தை கொல்ல பார்த்தது என்றால் நம்புவாயா? தருண் கேட்க,
சிட்டுக்குருவி..பருந்தா? என்னடா சொல்ற தருண்?
அய்யோ..பாவம்டா அந்த பருந்து ஒரு முறை உயிர் பிழைத்ததே பெருசு. நீ வேற என்று மூச்சு வாங்கினான் கைரவ். அன்று ஸ்ரீ கைரவை படுத்தினாலே பாடு..
சிட்டுக்குருவியால பருந்த கொல்ல முடியுமா? நித்தி கைரவிடம் கேட்க, நித்தி நிஜமா இந்த சிட்டுக்குருவி ரொம்ப ஸ்ட்ராங். பருந்து செத்தே போயிருக்கும் கைரவ் மீண்டும் புலம்ப, அபி தருணை பார்த்தான்.
தருண் ஸ்ரீயை கண்காட்ட, ஹாஸ்பிட்டல் பேச்சை ஆரம்பிக்கவுமே ஸ்ரீ தலையை நிமிர்த்தவேயில்லை.
அபி அவளை பார்த்து, ஸ்ரீ..இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அபி கேட்க,
ஸ்ரீ பதட்டமாக நிமிர்ந்து நான்..சாப்பாடு..என்று எடுத்து வாரேன் என்று உள்ளே நுழைந்தாள். நிவாஸ் அவள் பின் செல்ல, அதை கவனிக்காது சென்ற ஸ்ரீ..அப்பா..என்று பெருமூச்செடுத்து விட்டு திரும்ப, நிவாஸை பார்த்து பதறி அடுக்கி வைத்திருந்த பாத்திரத்தில் சாய்ந்து விட்டாள். அனைத்தும் அவள் மீது விழ, அவள் கீழே விழுந்தாள்.
ஸ்ரீ..என்று பதறி கத்தினான் நிவாஸ். பாத்திரங்களின் சத்தமும் அவனது கத்தலிலும் பயந்து அர்ஜூன் ஓடி வந்தான். கீழே விழுந்த ஸ்ரீயை நிவாஸ் தூக்கிக் கொண்டிருந்தான். அர்ஜூன் அதை பார்த்து பயங்கரமாக சிரித்தான். அனைவரும் வந்து பார்த்து சிரித்தனர்.
தருண் கைரவ் அருகே வந்து, டேய்..அன்று நாம் விழித்திருந்தே அவளுக்கு தெரியாது. ஆனால் இப்ப தெரிஞ்சது மட்டுமல்ல அவள் பயந்தும் விட்டாள்.
அவளா பயப்படுவா? போடா..
நீ அர்ஜூனிடம் சொல்லி விடுவாயோன்னு பயப்படுவா? அவள் காதல் நமக்கு தெரிந்து விட்டதுன்னு இப்ப தான் தெரியும். அதான் பதட்டப்படுறா.. நீ அந்த விசயத்தை விடு.
சரி..சரி..ஆனால் என்ன வலி தெரியுமாடா? என்னோட குறுக்கையே உடச்சுட்டாளே? கைரவ் கூற,
ஓ..அப்படியா நீ நல்லா வாங்கினாயா? உனக்கு வேண்டும்..கவின் அவர்கள் பேசுவதை கேட்டு, கைரவை வெறுப்பேற்ற இன்பா அமைதியாக அனைவரையும் பார்த்தாள்.
வம்பு பண்ணாத. அமைதியா போயிடு கைரவ் திட்ட, சைலேஷ் கைரவ் கையை பிடித்து, வா..போகலாம் என்று இழுத்தான்.
சார்.. பேசலாம்ன்னு சொன்னீங்க? ஆனா இப்ப எதுவும் பேசாம போறீங்க? கவின் சத்தமாக கேட்டான்.
நாளை காலை வீட்டுக்கு வா..பேசலாம். நாங்க கிளம்புகிறோம் ஆன்ட்டி என்று பொதுவாக கூறி விட்டு நித்தியை பார்த்து வருகிறாயா? என்று கேட்டான் சைலேஷ்.
இல்ல..நீங்க கிளம்புங்க. கைரவ், அனிகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் சைலேஷ்.