வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-52
144
அத்தியாயம் 52
அகில் பவியை பார்க்க, அவன் சாப்பாடு எங்க வைச்சிருக்கான்? அவள் கேட்க, அகில் கையை காட்டினான்.
அவள் எடுத்து வந்து முதல்ல சாப்பிடு என்றாள். அவன் கையில் தோட்டா இறங்கி இருக்க, கையில் கட்டு போட்டிருந்தனர். அவன் கையை காட்ட,
மேல தான் கட்டு இருக்கு என்று பிரித்து அவன் கையில் கொடுக்க, அவனால் பிடிக்க முடியவில்லை. அவனிடமிருந்து பவி வாங்கி எதையோ தேடினாள்.
என்ன தேடுற?
ஸ்பூன் இருக்கான்னு பார்க்கிறேன் என்று அறையை துலாவினாள். அகில் இங்க எதுவுமே இல்லை.
இல்லைன்னா ஊட்டி விடு.
ஊட்டணுமா? என்று அவனை பார்த்து தயங்கினாள்.
இதுக்கு தான் நான் சாப்பாடு வேண்டாமென்றேன்.
நான்..என்ற பவி அவனருகே வந்து சாப்பாட்டை பிசைந்து ஊட்டி விட அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட்டான் அகில். சாப்பிட்டு முடித்ததும் அகில் இரு வாரேன் என்று அவள் விலக,
நில்லு பவி..கையை கொடு என்றான்.
இன்னும் பசிக்குதா? நான் வாங்கி வரவா? பவி கேட்டாள்.
இல்லை என்று அவள் கையை பிடித்து அவளது விரல்களில் ஒட்டியிருந்த சாப்பாட்டை அவளை பார்த்துக் கொண்டே சப்பி சுவைத்தான். அவள் கையை எடுக்க, இறுக்கமாக பற்றினான்.
அகில்..என்று அவனை பார்த்தாள்.
சொல்லு என்றான் அவளை பார்த்து சப்பிக் கொண்டே.
நீ எதுக்கு இப்படி செய்கிறாய்?
எப்படி செய்தேன்?
சாப்பாடு..
ம்ம்..ரொம்ப நல்லா இருந்தது என்று மீண்டும் அவளது விரல்களை பார்த்தான்.
அது இல்லை அகில்..என்னோட விரல்கள் அவள் கூற, இங்க வா..என்று அவளை அழைத்தான்.
அவள் அகில் அருகே வந்தாள். ம்ம்..இன்னும் பக்கத்துல வா என்றான்.
நான் வரமாட்டேன் என்று நகர்ந்து நின்றாள்.
அவளது கண்களை பார்த்துக் கொண்டு நீ வரலைன்னா நான் எழுந்து வருவேன் என்றான்.
வேண்டாம். நீ ஓய்வெடு வருகிறேன்.
போ..போ..உன் வீட்டில் நடந்ததை நான் எல்லாரிடமும் சொல்லிக்கிறேன்.
திரும்பி அவனை பார்த்து, என்ன சொல்ல போற?
நாம உன்னோட கட்டில்ல இருந்ததை ரெண்டு பேரு பார்த்தாங்க உனக்கு மறந்து போச்சா. எனக்கு அது மட்டும் தான் நினைவில இருக்கு.
அகில்..என்ன பேச்சுடா பேசுற? யாரும் கேட்டு விடாமல்..
அதுக்கு தான் வான்னு கூப்பிட்டேன்.
அவள் கோபமாக அவனருகே வந்து, நீ நல்லவன்னு நினைச்சா இப்படி பேசுற?
நான் நடந்ததை தானே பேசினேன் என்று அவளது இடையில் கை வைத்து இழுத்தான். அவனருகே கட்டிலில் அவள் அமர,
நீ இரு என்றான் அகில்.
நான் எதுக்கு?
எனக்கு ஆற்றல் தருவதற்கு..
ஆற்றலா..நான் என்ன? எப்படி? என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.
அகில் நிமிர்ந்து மெதுவாக அவளருகே வந்து பவியை அணைத்தாள்.
பவி..கொஞ்ச நேரம் என்று அணைத்துக் கொண்டிருந்த அகில் அவளது கன்னத்தோடு கன்னம் உரச, பவி பதறி எழுந்தாள்.
அகில் அவள் கையை பிடித்து நிறுத்தினான். பவிக்கும் அகிலை பிடிக்கும். காதல் கூட இருக்கு. ஆனால் பயம். அகில் ஸ்ரீயை பற்றி ஒரு முறை கல்லூரியில் நடந்ததை கல்லூரிக்குழுவில் போட்டிருப்பார்கள். அவனும் இப்பொழுது கூட யாசு பற்றி அதிகமாக பேசி இருப்பான். அவள் கண்கள் கலங்கியது. அகில் புரியாமல் அவளை பார்த்தான்.
அகில் கையை எடுத்து விட்டு வெளியே சென்றாள் பவி.
நில்லு..பவி..பவி..பவி என்று கத்தினான்.
அவள் வெளியே சென்று அர்ஜூனுக்கு போன் செய்தாள். முதல் முறை அவன் போனை எடுக்கவில்லை. பின் எடுத்த அர்ஜூன், ஏதும் பிரச்சனையா பவி? என்று கேட்டான்.
அர்ஜூன்..நான் அம்மா, அப்பா இருக்கும் இடத்திற்கு செல்கிறேன். எனக்கு லொக்கேஷனை அனுப்பு..ப்ளீஸ்டா.
அகில் ஏதும் சொன்னானா? அர்ஜூன் கேட்டான்.
இல்ல அர்ஜூன்.அகில் ஏதும் சொல்லலை. ஆனால் என்று பவி தயங்கினாள்.
பவி..அவன் உன்னிடம் தவறாக..அர்ஜூன் கேட்க,
நோ..அர்ஜூன் தப்பால்லாம் ஏதுமில்லை.
புரியுது பவி. அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு. அதனால உரிமையா நடந்துகிட்டு இருந்திருப்பான். நீ நினைக்கிறத கொஞ்சம் தெளிவா நேரடியா சொல்றியா? நாங்க ஜானுவை பார்க்க போகணும்.
அவள் தயங்கியவாறு, அகிலுக்கும் ஸ்ரீக்கும் கல்லூரியில் பேச்சு வந்ததே? அப்புறம் யாசுக்கும் அவனுக்கும்..என்று அவள் தயங்க,
பவி, உனக்கு அவனை பிடிச்சிருக்குன்னா..நீ முதல்ல அவனை புரிஞ்சுக்கோ. என்னிடம் கூறியது போல் அவனிடம் கேட்டு விடாதே? பயங்கரமா கோபப்படுவான். இப்ப என்னால பேச முடியாது. நான் வரும் போது பேசலாம்.
ஸ்ரீக்கும் அவனுக்கும் ஒன்றுமில்லை. ஸ்ரீயும் என்னை தான் காதலிக்கிறாள். நானும் அவளை தான் காதலிக்கிறேன். ஸ்ரீ தான் என் மீதுள்ள காதலை ஒத்துக் கொள்ள மாட்டிக்கிறாள்.
யாசுவுக்கு அகிலை பிடித்தது மட்டும் தான உனக்கு தெரியும். ரெண்டு பேருக்கும் வந்த சண்டை உனக்கு தெரியுமா? அப்பொழுது தான் அவளை மாதவ் சார் பார்த்து சமாதானப்படுத்தி பேசி பழகினார்கள். ஆனால் சாருக்கு முன்பே யாசுவை தெரியும். மாதவ் சாரும் சைலேஷ் சாரும் ப்ரெண்ட்ஸ். எப்பொழுதோ நித்தியுடன் யாசுவை பார்த்து அப்பொழுதே பிடித்து விட்டதாம்..
நீ அவனிடம் சாதாரணமாகவே பேசு. என்னிடம் பேசியது போல் அவனிடம் பேசாதே. அவனிடம் நான் நேரே வந்து பேசி புரிய வைக்கிறேன்.
அர்ஜூன்..அகிலுக்கு ஸ்ரீயை இன்னும் பிடிக்குமா?
இல்ல..பவி. நீ ரொம்ப யோசிக்காத. அவன் அவளிடமிருந்து வெளியே வந்து விட்டான். கொஞ்சம் புரிஞ்சுக்கோ..நாம அப்புறம் பேசலாம் என்று அர்ஜூன் போனை துண்டித்தான்.
அவள் சிந்தனையோடு நிற்க, அகில் அவளது கையை பிடித்து உள்ளே இழுத்து அறையை தாழிட்டான்.
அகில்..உனக்கு..உனக்கு..என்று பதறினாள்.
அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தியவன், உனக்கு புரியலையா? நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? யாசு என்னோட ப்ரெண்டு மட்டும் தான். அப்புறம் ஸ்ரீ..எனக்கு அவளை பிடிக்கும் தான். ஆனால் இப்பொழுது அர்ஜூன் தான் அவளுக்கு சரியானவன் என்பதை ஏற்றுக்கொண்டேன். நான் என்ன டபுல் சைடு கேம் ஆடுறவன்னு நினைச்சியா?
அகில்..நான் அப்படி கூறவில்லை பவி கூற, கையை உயர்த்தி காட்டி அவளை அமைதியாக இருக்க சொல்லி நிவாஸை வர சொல்லி விட்டு நீ கிளம்பு என்றான்.
அகில்..நான்..
என்ன நீ? சொல்லு? என்று அதட்டினான்.
அகில் நான் ஏற்கனவே ஒருவனை நம்பி ஏமாந்து கஷ்டப்பட்டேன். அதனால எந்த விசயத்திலும் யாரையும் முழுசா நம்ப முடியல.
ஓ..அவனை போல் என்னையும் நினைக்கிறாயா?
இல்ல அகில்.புரிஞ்சுக்கோ. நான் அவனை போல் உன்னை நினைத்திருந்தால் இந்த அளவு உன்னுடன் பழகி இருக்க மாட்டேன்.
இந்த அளவா? அது என்ன அளவு?
எப்பொழுதும் அம்மா, அப்பாவுடனே இருப்பேன். உன்னை நம்பி உன் ஊர் வரை வந்திருக்கேன். இப்பொழுது கூட உனக்கு அடிபட்ட நினைவிலே என்னுடைய பெற்றோரையே மறந்தேன். அனிய பார்த்த பின் தான் அவங்க நினைவே வந்தது. ஆனால்..நீ எழுந்தவுடன் உன்னை பற்றி கூட யோசிக்காது யாசுவை பற்றி கேட்கிறாய்? ஸ்ரீயுடன் சேர்ந்து வந்த அந்த பேச்சு. எல்லாமே எனக்கு கஷ்டமா இருந்தது. அதனால் எனக்கு பயம். எங்கே அவனை போல்..என்று அவள் பேசுவதற்குள் அவனது இதழணைப்பில் அவளை கொண்டு வந்திருந்தான்.
அவனை விலக்கி விட்டு, உன்னால எழ முடியாது. நல்லா ஓய்வெடுக்கணும்னு டாக்டர் சொன்னாங்க. நீ எழுந்து வந்து விட்டாய்?
வந்து விட்டேன். நீ போனால் விட்டு விடுவேனா? எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு முன்பே தோணுச்சு. ஆனால் காதலாக இருக்கும்ன்னு கொலைசெய்ய வந்தவன் அறையிலிருந்த உன்னை பார்த்து கூறிய பின் தான் முடிவாய் தெரிந்தது. அந்த மிரட்டலில் உன்னை ஏதும் செய்து விடுவானோ என்ற பதற்றம் உன் மீதுள்ள காதலை அறிவுறுத்தியது தெளிவும் படுத்தியது என்று அகில் பவி மீதுள்ள காதலை கூறி விட்டு,
நீ என்ன சொல்ற? கேட்டான்.
நானா? என்ன சொல்லணும்?
என்ன?..சொல்லணுமா?..
அவள் எழுந்து, நீ முதல்ல போ..போய் படுத்துக்கோ. நல்லா ஓய்வெடு. நான் வாரேன் என்று அவனை கட்டிலில் படுக்க வைத்து நழுவ முயன்றாள்.
எங்க போற? சொல்லாம நீ எங்கேயும் போக முடியாது? என்று அவளது கையை பிடித்தான்.
நான் சொல்றேன் கையை விடு.
நான் விட்டால் நீ ஓடி விடுவாயே?
இல்ல..ஓட மாட்டேன். சொல்கிறேன்.
அகில் கையை விட, பவி கதவருகே ஓடினாள்.
ஓட மாட்டேன்னு சொன்ன?
ஆமா..நான் ஓடல. சொல்றேன். அகில் எனக்கு உன்னை முதலிலிருந்தே பிடிக்கும். ஆனால் காதலாக இல்லை. ரசிகையாக. ஆனால் ஸ்ரீ அறையில் நீ அழுத போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்பொழுதே எனக்கு உன் மீது காதல் இருந்ததை உணர்ந்து விட்டேன். இப்பொழுது உனக்கு என்னை பிடித்திருக்கிறது என்றால் நானும் என் காதலை ஒத்துக் கொள்கிறேன்.
பவியாகிய நான் அகிலாகிய உன்னை காதலிக்கிறேன் என்று கதவை திறந்து ஓடினாள். அகில் புன்னகையுடன் அவள் ஓடிய திசையை பார்த்தான். வெளியே நிவாஸ் இருப்பதை கவனிக்காது ஓடி வந்த பவி, எப்படியோ நான் சொல்லிட்டேன் என்று சிரிக்க,
என்ன ரொம்ப சந்தோசமா இருக்க போல? சீனியர் உன்னிடம் சொல்லிட்டாரா?
என்ன விளையாடுறியா? இன்னும் பிரச்சனை ஏதும் முடியல. நான் உன்னை அழைத்து சென்றால், அகில் சீனியரும் அர்ஜூனும் என்னை கொல்லாம விட மாட்டாங்க.
இல்ல..நான் போகணும். என்னோட ஜூலிய பார்க்கணும்.
ஜூலியா..ஏய்..உங்க வீட்ல காவலுக்கு இருந்த போலீசையே கொன்னு போட்டுருக்கானுக. ஜூலியா அது யாரு? உனக்கு ரொம்ப முக்கியமானவங்களா?
என்னோட ஜூலி..ஜூலி..என்று அழுதாள். நிவாஸ் ஸ்ரீ இருக்கா பாரு என்று அவனை வேறு பக்கம் பார்க்க விட்டு வெளியே ஓடினாள்.
ஹே..எங்க போற? என்று நிவாஸும் ஓட, நித்தி அவனை தடுத்து கேட்டாள். இன்பாவும் அவர்களிடம் வர, அவன் ஜூலி பற்றி சொல்ல,
ஜூலி..உயிரோட இருக்குறது கஷ்டம் என்ற நித்தியும் ஓட, நிவாஸும் பின் ஓடினான்.
இன்பா..அகிலிடம் கூற, பெற்றோர் நினைவே அவள் தோழியை பார்த்து தான் வந்தது என்று கூறினாளே..ஜூலியை பற்றி இப்பொழுது தான் சிந்தித்திருக்கிறாள். அவளுக்கு ஜூலி இல்லாமல் ரொம்ப கஷ்டம் என்று அவனிடம் பவி அம்மா தான் சொன்னார்களே?
பவிக்கு போன் செய்ய முடியாது. அவள் போன் அவள் வீட்டில் தான் உள்ளது. ஹாஸ்பிட்டலுக்கு காவல் வைத்திருக்கும் போலீஸிற்கு போன் செய்து பவியை பற்றி கூறி அவளை வெளியே செல்லாமல் தடுக்க சொன்னான். அவரும் அவளை பார்த்து பிடிக்க நிவாஸும் நித்தியும் அவளிடம் வந்தனர்.
நித்தி அவளை அணைத்து அழைத்து வர, நிவாஸ் திட்டிக் கொண்டே வந்தான். இதை பார்த்த தேவ்..என்ன மாப்பிள்ள பிரச்சனை?
இவ..இவள் தான் பிரச்சனை.
நான் பிரச்சனையாடா? போ..நான் உன்னுடன் பேசவே மாட்டேன். நீ கண்டிப்பா வருத்தப்படுவ.
நித்தி, எனக்கு என்னோட ஜூலி வேண்டும்? அவள் தனியா இருப்பாள். ரொம்ப பயப்படுவாள். காலையில் சாப்பிட்டாள். மதியமும் சாப்பிட்டிருக்க மாட்டாள். இப்பொழுது கூட சாப்பிடும் நேரம் தான் என்று அழுதாள். அவளை அகில் அறைக்கு நித்தி அழைத்து வந்தாள்.
பவியை பார்த்து அகிலும் திட்ட ஆரம்பித்தான்.
போதும் நிறுத்துறியா? என்னோட ஜூலிய பார்க்க தான போனேன். அவள் தனியா இருக்க ரொம்ப பயப்படுவாள் அகில் என்று அவனை அணைத்து பவி அழ, நித்தி இருவரையும் பார்த்தாள். நிவாஸ் அவள் காதருகே வந்து, இருவரும் காதலை பரிமாறியதை சொன்னவுடன், அவளுக்கு ஏகாந்த மகிழ்ச்சி. ஸ்ரீயை நினைத்து அவன் மேலும் வருந்துவானோ? ஸ்ரீயும் அர்ஜூனை காதலிப்பது வேறு தெரியும் அவனுக்கு என்று நித்தி அகிலை நினைத்து வருத்தப்பட்டிருப்பாள். அவளுக்கு ரொம்ப சந்தோசம்.
நித்தி நிவாஸை வெளியே அழைத்து செல்ல, அகில் பவியை நிமிர்த்தி..பவி, உனக்கு ஏதும் ஆகக்கூடாதுன்னு தான் உங்க வீட்ல கொலைகாரனுக்கு இருக்காங்கன்னு தெரிஞ்சும் வந்தேன். அந்த பதட்டத்தில் நானும் ஜூலியை மறந்து விட்டேன். ஆனால்..பவி..ஜூலி உயிரோட இருப்பது நடக்காத காரியம். அவள் இறந்திருப்பாள்.
இல்ல..என்னோட ஜுலிக்கு ஒன்றும் இருக்காது. அவள் நல்லா தான் இருப்பாள் என்று கூறிக் கொண்டே பவி அழுதாள்.
சரி பவி. அவள நான் சென்று பார்த்து வருகிறேன் என்று எழுந்தான் அகில்.
அர்ஜூன் சொன்னான். இன்னும் பிரச்சனை முடியவில்லையாம். நீ போகக்கூடாது.
நீயே வெளியே போகும் போது நான் எப்படி இங்கு இருக்க முடியும்? உனக்கு ஜூலி தான் முக்கியம். நான் போறேன்.
அகில்..எனக்கு ஜூலி முக்கியம் தான். ஆனால் நீ..என்று கண்கலங்கினாள்.
சொல்லு..எதுக்கு தயங்குற? உனக்கு நான் முக்கியமா? இல்லை ஜூலி தான் வேண்டுமா? அகில் கேட்க, அவள் அழுது கொண்டே ஏதும் பேசாமல் அமர்ந்தாள்.
சரி..நான் சென்று பார்த்து வருகிறேன்.
இல்ல..வேண்டாம் அகில். எனக்கு நீ தான் முக்கியம் என்று சொல்லிக் கொண்டே அவனை அணைத்தாள். அகில் போன் ஒலிக்க, ம்ம்..ஓ.கே தேங்க்யூ சார். வினிதா அக்கா வீட்டுக்கு கொண்டு போங்க என்றான் அகில் போனில் யாரிடமோ?
அகில் பவியை பார்த்து, அழாதே..உன்னோட ஜூலிக்கு ஒன்றுமில்லை. அவளை உன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்து விடுவார்கள்.
“தேங்க்ஸ் டா” என்று பவி மேலும் அவனை அணைக்க, ஆமா. லவ்வ சொல்லிட்டு எதுக்கு ஓடுன?
அது..வந்து..அது..வந்து..என்று இழுத்துக் கொண்டு அவனை விட்டு நகர, அவளை இழுத்து அவனருகே அமர வைத்தான். மறு முறையும் போன் ஒலிக்க அதை எடுத்து, அம்மா..என்று அதிர்ந்தான்.
அம்மாவா? என்று பவி எழ, அவன் விடாது அவள் கையை பிடித்துக் கொண்டான்.
அம்மா..உங்களுக்கு எப்படி தெரியும்?
அம்மா அவனை திட்டி விட்டு, போனை அவளிடம் கொடு என்றார்.
அம்மா..யாரிடம்?
அந்த பொண்ணு பவதாரணி. பக்கத்துல தான இருக்கா?
அம்மா..வேண்டாம் என்றான் பயத்துடன்.
குடுன்னு சொல்றேன்ல என்று சத்தமிட்டார்.
பாவமாக முகத்தை வைத்து கொண்டு அகில் போனை நீட்ட, பவி போனை வாங்கினாள். அவளிடம் அகில் அம்மா நல்ல விதமாக பேசி விட்டு ஸ்ரீயை பற்றி கேட்டார்.
சொல்லாத..என்று அகில் சைகை செய்ய அவளோ ஸ்ரீ இப்பொழுது அர்ஜூன் பாதுகாப்பில் இருப்பதாக மட்டும் கூறினாள்.
அவனை பார்த்துக்கோம்மா..என்று போனை துண்டித்தார்.
அப்பாடா..அம்மாவிற்கு நம் மீது கோபம் இல்லை போல? அகில் கூற, அம்மாவிற்கு பயப்படுவியா?
இல்ல..மரியாதை தான்.
அவள் புன்னகையுடன் அவனை பார்க்க அவனும் சிரித்து வைத்தான்.
அர்ஜூனும் அபியும் ஆதேஷ் அப்பாவை பார்க்க ஸ்டேசன் சென்றனர். ஏற்கனவே கமிஷ்னர் சொன்னாறென்று அவரை விட்டிருந்தனர். ஜானுவின் கையெழுத்து வேண்டுமென்று கேட்டனர். அர்ஜூனும் அபியும் அவர்கள் பேசியதை கேட்டு நாங்கள் வாங்கி வருகிறோம். வாங்க சித்தப்பா போகலாம் அபி கூற, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நால்வரும் வீட்டிற்கு கிளம்பினர். உடன் ஒரு போலீஸும் சென்றார்.
ஆதேஷ் ஜானு அறையில் அவளது கையை பிடித்தவாறு அமர்ந்திருக்க, ஜானு கண் விழித்தாள். அவள் கட்டிலில் இருப்பதை பார்த்து அர்தீஸ் இருக்கிறானோ என்று பயந்து வேகமாக இறங்கினாள்.
ஆதேஷை பார்த்து மாமா..மாமா..என்று அவனருகே வர, ஜானு இங்க வேற யாரும் இல்லை. நான் மட்டும் தான் இருக்கிறேன் என்று ஆதேஷ் கூறினான்.
அவளுக்கு அனைத்தும் நினைவிற்கு வர, ஆதேஷை பிடித்து தள்ளினாள். ஜானு..என்று அவன் அவளருகே வந்தான்.
மாமா..நீங்க என்ன பண்ணீங்க? நான் சொல்ல வந்ததை முழுதாக கூட கேட்காமல்..அவனிடம் என்னை விட்டு விட்டீர்கள் என்று ஜானு ஆதேஷை அடித்தாள்.
நீங்க கொலையே பண்ணியிருந்தாலும் என்னை காப்பாற்ற தான செஞ்சிருப்பீங்க? கொலைபண்ணிட்டேன்.. கொலைபண்ணிட்டேன்னு உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொண்டு என்னை அவன் பக்கம் விட்டு விட்டீங்க. நான் உங்களை எவ்வளவு தூரம் கத்தி அழைத்தேன். உங்க காதுல விழவேயில்லை. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என்னோட வாழ்க்கையே முடிஞ்சது போல இருந்தது.
நீங்க என்னை காப்பாற்றாமலே விட்டிருக்கலாம் என்று ஆதேஷை அடித்துக் கொண்டே அழுதாள்.
சாரி..ஜானும்மா. நான் கொஞ்சம் டென்சனல யோசிக்காம இருந்துட்டேன். இனி இப்படி நடக்காது என்று ஆதேஷூம் அழுதான்.
மாமா..சாரின்னு வெகு சாதாரணமா சொல்றீங்க? அவன் என்னை தொடுவது கூட உங்களுக்கு தெரியவில்லையா? நானும் எவ்வளவு தான் அழைப்பது? உங்களுக்கு உரிமையான பொருளை இப்படி தான் விட்டு விடுவீர்களா?
நான் உங்களிடம் பேசப் போறதில்லை அழுது கொண்டு ஜானு ஆதேஷிடமிருந்து விலக, ஆதேஷ் ஜானுவை அணைத்து அவளை விலகாமல் இறுக்கினான்.
மாமா..என்னை விடுங்க. போதும். நீங்க உங்க அறைக்கு போங்க. இனி என்னால எதையும் தனியே சமாளிக்க முடியும். இனி எதற்காகவும் யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்று அவனை பிடித்து தள்ளினாள்.
ஜானு..நீ என்னை அடிச்சிடு. இனி இவ்வாறு நடக்காது என்னோட ராட்ச்சசிய பார்த்துப்பேன். அடி ஜானு என்று அவளது கையை பிடித்து அவனை அடிக்க செய்ய, அவளும் கோபம் தீர அவனை அடித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அறைக்கதவை திறந்து வந்தனர் ஆதேஷ் பெற்றோர்களும், அர்ஜூன் அபியும்.