அத்தியாயம் 51

அர்ஜூனை விலக்கிய அபி, ஆதேஷிற்கு போன் செய்தான்.

அண்ணா..சொல்லுங்க?

ஜானு எப்படி இருக்கா? ஒன்றுமில்லைல? அழுதாளா? இப்ப என்ன செய்றா? என்று ஆதேஷை பேச விடாமல் அபி பேசிக் கொண்டே போக ஆதேஷ் அமைதியாக இருந்தான்.

அமைதியா இருக்க? அவளுக்கு என்ன? சொல்லித் தொலையேன்டா..அபி கத்தினான்.

ஆதேஷ் அழுதான். நீங்க எல்லாரும் மறைச்சிட்டீங்கள?

மறைச்சோமா? அபி கேட்க, அர்ஜூனும் அவனது போன் பக்கம் வந்து காதை வைத்தான்.

நான் ஒருவனை கொன்னுருக்கிறேன். நீங்களாவது சொல்லி இருக்கலாம்ல அண்ணா? என்று அழுதான்.

டேய்..அது ஒரு விபத்து. நீ எதுக்கு உன்னையே குற்றம் சாட்டுகிறாய்?

இல்லை. என்னை ஏமாத்தாதீங்க?

ஆதேஷ் புரிஞ்சுக்கோ..அது தானா நடந்தது.

எது தானா நடந்தது? நான் தான் அவனை அடித்தேன். அவன் செத்துட்டான்.

என்னை டென்சன் ஆக்காதே. முதல்ல ஜானு என்ன செய்றான்னு சொல்லு.

அவ பயந்துட்டா. கொஞ்ச நேரமா நடுக்கத்தோட தான் இருந்தா. இப்ப தூங்குறா?

அவளுக்கு ஒன்றுமில்லையே?

இல்லை. அர்தீஸையும் நான் சுட்டுட்டேன். அப்பா தான் ஸ்டேசன் போயிருக்கார்.

அவர் எதுக்குடா போனார்? அபி கேட்க. போனை அவனிடமிருந்து வாங்கிய அர்ஜூன், ஆது கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா? அப்பாவை எதுக்குடா விட்ட? பழைய கேச எடுத்தா அவ்வளவு தான் என்று அர்ஜூன் திட்டினான்.

அண்ணா, போலீஸ் என்னை அழைச்சிட்டு போக நினைச்சாங்க. அப்பா எனக்காக?

ஆது..நீ வேற அவர் வேற டா. நீ ஜானுவ காப்பாற்ற தான் செஞ்சன்னு சொன்னா நீ தப்பிச்சிடலாம். ஆனால் அப்பா..உன்னை..சரி எந்த ஸ்டேசன்ல இருக்கார்? அவன் கூற,

அம்மா எங்க?

அவங்களும் போயிருக்காங்க.

முதல்லவே இதை சொல்லமாட்டாயா? அர்ஜூன் திட்ட ஆதேஷ் அழுதான்.

முதல்ல அழுறத நிறுத்து. ஜானு பக்கத்துல இருக்கியா? இல்லையா?

என்னோட அறையில தான் இருக்கேன். முதல்ல அவளோட இரு. அவ முன்னாடி இப்படி அழாத. பார்த்துக்கலாம்.

அண்ணா..அப்பா? ஆதேஷ் கேட்க, நான் பார்த்துட்டு சொல்றேன். அந்த அர்தீஸ் ஒண்ணு உங்கள பார்க்க வரணும் இல்ல அவன் புவிய பார்க்க தான் போவான். நீ ஜானு அருகிலே இரு. தீனா அண்ணாவை பார்த்துக்க சொல்லலாம். அறைக்கதவை திறக்காத. ஜானு பக்கத்திலே இரு. பார்த்துக்கோ. அப்புறம் அர்தீஸ் அண்ணனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ அடித்த போது அவன் கீழே விழுந்து மயங்க தான் செய்தான். அவன் ஜானு அருகே செல்ல, அவள் பயத்தில் மயங்கினாள். அவன் உன்னை தூக்கும் சமயம் தான் அர்தீஸ் விழித்தான். இருவருக்கும் சண்டை முற்றி அர்தீஸ் அவன் அண்ணனை கீழே தள்ளினான். அவன் தலை இடித்து விழுந்து மயங்கினான். அதில் தான் அவன் இறந்தான். அதன் பின் ஜானு விழிக்க துருவன் அங்கே வந்தான் என்று அர்ஜூன் விளக்கினான்.

அப்ப என்னால் அவன் சாகவில்லையா? கேட்டான் ஆதேஷ். நீ ஜானுவை மட்டும் பத்திரமா பார்த்துக்கோ. மத்ததை நான் பார்த்துக்கிறேன் என்று போனை துண்டித்தான்.

கமிஷ்னர் அலுத்துக் கொண்டு, அடுத்து என்ன பண்ணப் போற அர்ஜூன்?

மாமா..உங்க ஆளுங்களால தான் இந்த பிரச்சனையும். அவங்க அர்தீஸ் தப்பிக்காம பார்த்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது அர்ஜூன் கூற,

மாமா..என்ன தான் செஞ்சுக்கிட்டு இருக்கார்? போலீஸ் எல்லாரும் இப்படி தான் இருக்காங்க சினத்துடன் அபி பேச, அவனை பார்த்து கமிஷ்னர் சிரித்து விட்டு, தம்பி பக்கத்துல ஒருத்தன வைச்சுகிட்டு இப்படி பேசாதீங்க?

அபி மாதவை பார்க்க, அவன் முறைத்துக் கொண்டிருந்தான்.

சார்..அப்புறம் முறைச்சுக்கலாம். இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்ப கூட ஒரு ராட்சசிய சமாளிச்சிட்டு வந்துருக்கேன்.

உங்களால யாசுவை சமாளிக்க முடியுமா? கேட்டான் அபி.

அப்படி யார சமாளிச்சிட்டு வந்த அபி? சைலேஷ் கேட்க, அபி அர்ஜூனை பார்த்தான்.

அவள தான் கமலி கூற, அர்ஜூன் அவன் அம்மாவையும் அபியையும் பார்த்தான்.

அர்ஜூன்…கொஞ்ச நேரத்திற்கு முன்னிருந்தே ஸ்ரீ பழையபடி நடந்துக்கிறாடா? அபி கூற, அவன் புன்னகையுடன் பதில் கூறாமல் அவன் அம்மாவை பார்த்தான்.

கமலி யாரையும் பார்க்காமல் அமர்ந்திருக்க, கமிஷ்னரிடம் விசயத்தை சொன்னான்.

நான் என்ன செய்வது? இதுக்கு நான் பொறுப்பல்ல.

அங்கிள்..அர்தீஸ் உயிரோட தான் இருக்கான். அதனால கேஸ் கம்பிளைண்ட் ஆகாதுல.

அது எப்படி ஆகாம இருக்கும்? அர்ஜூன் அந்த பொண்ணை வைச்சு முடிக்கலாம். நீ பேசியதை வைத்து பார்த்தால் அந்த ஆள் மீது கம்பிளைண்ட் ஏற்கனவே இருக்கும் போல. அதுல வைச்சா உள்ள போயிடுவாரு. பார்த்துக்கோங்க.

அது யாருடா? புகைப்படத்தையும் வெளிய விட மாட்டிங்கிற? மாமான்னு சொல்ற? கமலி கேட்க, என்னால யாருன்னு சொல்ல முடியாது.

சரி..நானே நேரில் பார்த்து தெரிஞ்சுக்கிறேன்.

அங்கிள்,..உங்க தங்கச்சி தேவையில்லாத வேலை பார்த்து அவனிடம் மாட்டிக் கொண்டால் நான் ஏதும் செய்ய முடியாது அர்ஜூன் கோபப்பட்டான்.

ஏன்மா, அவன் சொன்னால் காரணம் இருக்கும்மா? கமலி அமைதியாக இருந்தார். அவரிடம் அர்ஜூன், நீங்க அந்த ஆளை பார்த்து டென்சனாகாம இருக்கணும். அவனை உங்களுக்கும் தெரியும். அவனே சிறு துரும்புக்காக தான் காத்திருக்கான். நீங்களாக சென்று நீங்களும் மாட்டி எங்களையும் மாட்டி விட்றாதீங்க? அவன் பிரச்சனை முடியவில்லை என்று தோன்றியதால் தான் அவன் யார் என்று நான் காட்டவில்லை.

அங்கிள் அவன் கண்டிப்பாக தப்பிப்பான். அவன் நேராக வருவது ஸ்ரீயிடம் தான். ஸ்ரீயை வைத்து தான் அவனை பிடிக்கணும். அதற்குள் நாங்க ஊருக்கு போகணும்.

அங்கிள், எனக்கு ஹாஸ்பிட்டல்ல மட்டும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும். அர்ஜூன் அகில் ஹாஸ்பிட்டலில் தான இருக்கான். அவங்க கல்லூரி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாதுல சைலேஷ் கேட்டான்.

சார்..அகில் எதுக்காகவும் அவன் இசை விசயத்தில் மட்டும் பின் வாங்க மாட்டான். யாசுவை வேண்டுமானால் நிறுத்தி விடலாம். அகிலை நிறுத்த யாராலும் முடியாது.

அர்ஜூன்,..அவன் எழவேயில்லையே?

விழித்துட்டான். நாளை காலை நடப்பான் பாருங்கள். அவனுக்கு இசைன்னா அவ்வளவு பிடிக்கும். என்ன அபி? அர்ஜூன் கேட்க, அபி அர்ஜூனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அபி..என்று சைலேஷ் அவனை உலுக்க, அர்ஜூனிடம் வந்த அபி..சாரிடா என்று அணைக்க,

திடீர்ன்னு என்னடா ஆச்சு? மாதவ் கேட்க,

சார்..எனக்காக வருத்தப்படுறானாம் அர்ஜூன் கிண்டலாக கூற, அவனை விட்டு விலகி..நிஜமாகவே வருத்தமா இருக்குடா.

முடிஞ்சத பத்தி பேசி என்ன ஆகப் போகிறது? விடுடா..நாம இப்ப சந்தோசமா இருக்கோம்ல. அது போதும்டா என்று அர்ஜூன் கூறி விட்டு அவன் அம்மாவை பார்த்தான்.

கமலி அவர்களை பார்த்தாரே தவிர ஏதும் கூறாமலிருக்க, நீங்க அப்படியே இருங்க என்று எண்ணிய அர்ஜூன், மாமா மாதவ் சார் பக்கம் தான் எல்லாரும் இருக்காங்க. நீங்க என்ன சொல்றீங்க?

இரவு பெரிய அதிகாரிங்க எல்லாருடன் சந்திப்பு நடக்க உள்ளது. அதனால் மாதவ் நீயும் வந்துரு. அங்கே எடுக்கும் முடிவு தான். உனக்கான முடிவு. நான்கு நீதிபதிகள் வரப் போறாங்க. அவங்க தான் இறுதி முடிவு எடுக்கப் போறாங்க.

சார்..நீங்க அதை பத்தி கேட்டுட்டு வீட்டுக்கு பத்திரமா போங்க. சைலேஷ் சார்..நீங்க சாரை விட்டுட்டு நேரா வினிதா அக்கா வீட்டுக்கு போங்க. அபி..நீ என்னுடன் வா. நாம ஆதேஷ் அப்பாவை பார்த்துட்டு ஜானுவை பார்க்க போகலாம்.

தேங்க்ஸ்டா அர்ஜூன் என்று அபி அவனை அணைக்க, போதும்டா என்று மாமா..உங்களோட நம்பிக்கையான ஆள அவங்க வீட்டுக்கு அனுப்புங்க.

இவங்க அக்கா வீட்ல இருந்தா..எல்லாரும் சரியா பேச கூட மாட்டானுக.

யாருப்பா? அவனுகளா? இல்ல அவளா? என்று கமலி கேட்க, அர்ஜூன் கமலியை முறைத்தான்.

போடா..போ..நான் வரல. எனக்கு நிறைய வேலை இருக்கு. நேற்றிலிருந்து முழுசா நான் அங்க தான் இருந்திருக்கேன். நான் இப்பொழுதைக்கு வரலை என்றார்.

வா..நாம போகலாம் என்று அபியை அர்ஜூன் அழைத்து சென்றான். மற்றவர்களும் கிளம்ப, வாம்மா அண்ணா நான் வாரேன் என்று கமிஷ்னர் கமலியுடன் வீட்டிற்கு சென்றார்.

அகிலுடன் நிவாஸ் இருக்க பவி உள்ளே வந்தாள். அவளை பார்த்து நிவாஸ் வெளியே சென்றான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அகில் அவளை பார்த்து, இவ்வளவு நேரமா எங்க போயிருந்த? என்று கேட்டான்.

நான்..என்னோட ப்ரெண்டை பார்த்தேன். அவளுடன் பேசிக்கிட்டு இருந்தேன்.

ப்ரெண்டா யார்? அவன் கேட்க, என்னோட பள்ளித் தோழி. நம்ம கல்லூரி தான். ரொம்ப நாளா பேசலை.

அதுக்கு இவ்வளவு நேரமா?

என்னை தேடினாயா?

ஆமாம். தேடினேன்.

எதுக்கு?

நீ பக்கத்துல இருக்கணும்னு தோணுச்சு என்று பவி கையை பிடித்தான்.

ஹாய்..என்று நிவேதா உள்ளே வர, மற்றவர்களும் உள்ளே வந்தனர். அகில் பவி கையை விட்டு, உங்கள வீட்ல பத்திரமா இருங்கன்னு தான சொன்னேன். இங்க எதுக்குடா வந்தீங்க?

ஏன்டா, தொந்தரவு செய்துட்டோமா? கௌதம் கேட்க, அகில் முணுமுணுத்தான்.

என்னடா திட்டுறியா?

நீங்க எதுக்கு எனக்கு உதவ வந்தீங்க?

உன்னை அடிச்சா அது நானா தான் இருக்கணும் என்று கூறியவாறு விதுனன் வந்தான்.

அதான பார்த்தேன் என்று புன்னகைத்தான்.

குக்கூ குழுத் தலைவரே நீங்கள் எங்களுடன் போட்டிக்கு வர மாட்டீங்கள? கௌதம் கேட்க,

யார் சொன்னா? எனக்கு இசை, பாடல் தான் எல்லாம். கண்டிப்பா கலந்துப்பேன். யாருன்னு பார்த்திடலாம் என்று அகில் சொல்ல,

நீங்க எதுக்குடா வந்தீங்க? என்று நித்தி சத்தமிட, நித்தி அமைதியா இரு அகில் கூற, அவள் காதில் வாங்கவே இல்லை. பேசிக் கொண்டே போனாள்.

பவி எழுந்து அவளிடம் வந்து, நித்தி சத்தம் போடாதே என்றாள். நித்தி நிவேதாவை அடிக்க வர, விதுனன் அவள் முன் வந்து நின்றான். அவன் மீது அடி விழுவதற்குள் பவி நித்தி கையை தட்டி விட்டு,

அவங்க எங்களுக்கு உதவி செஞ்சாங்க என்று கத்தினாள். நித்தி கை கீழிறங்க, பவியை அணைத்தாள் நித்தி.

அனைவரும் அவளை புரியாமல் பார்க்க, சாரி என்று நித்தி அழுது கொண்டே வெளியே ஓடினாள். நித்தி..என்னாச்சு? அகில் கேட்க, அவனை பார்த்து விட்டு பவியும் அவள் பின்னே சென்றாள்.

வெளியே சென்ற நித்தி அழுது கொண்டிருக்க, பவி அவளருகே அமர்ந்து அவளது கையை பிடித்தாள். அவர்கள் பின் நிவேதா, சுருதி, கதிர் வந்தனர்.

நித்தி அழுது கொண்டே, பிரச்சனை இவங்களோட முடிந்து விடும்ன்னு நினைச்சேன் பவி. ஆனா இன்னும் முடியல.

என்ன சொல்ற? அர்ஜூன் தான் சொன்னானே? ஜானுவை பற்றி..அவனை இன்னும் போலீஸ் பிடிக்கல. ஏற்கனவே எல்லாரும் ரொம்ப சோர்ந்து விட்டோம். எல்லாருக்குமே அடி விழுந்துருச்சு. அர்ஜூனெல்லாம் ஒரு வாரமா தூங்கவேயில்லை. அப்படி என்ன தான் அந்த கொலைகாரனுக்கு பிரச்சனையோ? யாருக்காவது ஏதாவது ஆகி விடுமோன்னு பயமா இருக்கு.

யாசு வீட்ல இருந்து போன் செஞ்சு வாரேன்னு சொன்னாங்க. நான் தான் சின்ன அடின்னு சொல்லி இருக்கேன். அவங்களுக்கு அவ ஒரே பொண்ணு. அவங்க அப்பா பதறிட்டார். ஊர்ல எல்லாரும் எல்லாமே தொலைக்காட்சி மூலமா பார்த்திருப்பாங்க.

அங்க அண்ணாக்கள் என்ன சொல்லி சமாளிக்க போறாங்களோ? பயமா இருக்கு. அகில் அம்மா இப்ப தான் கொஞ்சம் நல்லா இருக்காங்க. அவனுக்கு நடந்தது தெரிஞ்சா அவ்வளவு தான். அதுவும் ஸ்ரீ பற்றி தெரிந்தால் முழுசா உடைஞ்சு போயிடுவாங்க.

எனக்கு தெரியும் நித்தி என்றாள் பவி.

என்ன தெரியும்?

அந்த ஜிதின் ஸ்ரீ..அவள் சொல்ல, அவள் வாயை அடைத்து சுற்றி பார்த்தாள் நித்தி. அவர்கள் மறைந்து கொண்டனர்.

உனக்கு எப்படி? என்று பேச முடியாதவளாக அர்ஜூன் மூலம் தான் தெரியும். ஆனால் அவன் சொல்லவில்லை.

நித்தி அழ, பவியும் அவளை அணைத்து அழுது கொண்டு,

எப்படி நித்தி? எப்படி அவளால் தாங்கிக்க முடிஞ்சது? சாதாரணமா இருக்கா? நானா இருந்தா செத்தே போயிருப்பேன்.

அவள் தாங்கிக்கிட்டாளா? இல்ல பவி. அவ எங்ககிட்ட காட்டக் கூடாதுன்னு நடிக்கிறா? ஆனா அவள் நிலையில் இருப்பது ரொம்ப கஷ்டம். எனக்கு தெரிந்த அன்று அவள் அழுத அழுகை இருக்கே. இதுவரை எங்க ஸ்ரீயோட சந்தோசம், குறும்புத்தனம் அனைத்தும் காணாமல் போய் விட்டது. உன்னை பற்றி ஸ்ரீக்கு மட்டுமல்ல யாருக்கும் முக்கியமாக நிவிக்கும் தெரியக் கூடாதுன்னு அகிலும் அர்ஜூனும் என்னிடம் சொன்னாங்க.

யாருக்கு என்ன தெரியக்கூடாது? சீனியர் எதுக்கு அழுறீங்க? அங்கே வந்த நிவாஸ் கேட்டான்.

நிவி..அது வந்து..என்று நித்தி இழுக்க, அகிலுக்கு அடிபட்டது அவனோட அம்மாவுக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லிக் கொண்டு இருந்தாள்.

சீனியர் தம்பிக்கு தெரிஞ்சிருஞ்சு போச்சு.

துருவனுக்கு தெரிஞ்சிருச்சா? நித்தி கேட்க,

ஆமா..அழுதீங்களா? அவன் கேட்க, ஜானு விசயம் தான் நித்தி கூற, உங்களுக்கு ஜானுவை தெரியுமா? என்று பவியிடம் கேட்டான்.

ம்ம்..தெரியும். ஆனால் பேசியதில்லை.

உங்ககிட்ட ஒண்ணு கேட்கவா? நிவாஸ் பவியிடம் கேட்க,

என்ன? என்று பயந்தவாறு கேட்டாள்.

நீங்க எதுக்கு என்னை ஒருமாதிரி பார்த்துக்கிட்டே இருக்கீங்க?

எனக்கு ஒரு தம்பி வேணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. உன்னை பார்த்தவுடன் தோன்றியது.

தம்பியா? நானா? வேண்டாம். நான் என்னோட ஒரு அக்காவையே சரியா பார்த்துக்கல. இதுல இன்னொரு அக்காவா?

ஏன் அப்படி சொல்ற? பவி கேட்க, நிவாஸ் கண்கள் கலங்கியது. அவன் எழுந்து நகர, அவனது கையை பிடித்து நிறுத்திய பவி,

அக்கான்னா..நீ தான் அவங்கள பார்த்துக்கணும்ன்னு இல்ல. அவங்க பிரச்சனைக்குள்ள செல்லணும்ன்னு இல்லை. ஆறுதலா கை கொடுத்தாலே போதும்.

உனக்கு தெரியாமல் உன்னோட அக்கா காயப்பட்டிருந்தால், அந்த காயத்தை நினைத்துக் கொண்டிருப்பதை விட, அதற்கு மருந்திடுவது தான் புத்திசாலித்தனம். மருந்தை கொடுக்காமல் அந்த காயத்தை பற்றி யோசித்து நீயும் வருந்தி, உன் வருத்தத்தை பார்த்து அவள் காயப்படுவதும் நல்லதா?

ம்ம்..சரி தான். சரியா சொல்றீங்க. ரொம்ப தேங்க்ஸ் என்று போனை எடுத்து அர்ஜூனை அழைத்தான். நித்தி அவளை பார்த்து, நல்லா பேசுன.

எங்க அவனை பார்த்தாலே பேசணும் போல இருக்கு பவி கூற, கொஞ்ச நாள் தான். பார்த்துக்கலாம் நித்தி கூறினாள்.

நித்தியும் பவியும் அறையை விட்டு செல்லும் போது பவியை பார்த்துக்கொண்டே, அகில்..அந்த பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கா? விதுனன் கேட்க, ஏன்டா அப்படி கேட்குற? அகில் கேட்டான்.

உன்னுடைய கண்ணு அந்த பொண்ணையே வட்டமிடுதே.

அகில் சிறு புன்னகையை உதிர்க்க, சிரிக்கலாம் செய்வாயாடா? கதிர் கேட்க,

டேய்..நானும் மனுசன் தான்டா என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்திலே அங்கே வந்தாள் பவி.

அகில் அறைக்கு பவி செல்ல, விதுனன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் அகில்.

இன்னுமா சாப்பிடலை? சாயங்காலம் ஆகிவிட்டது. யாருமே உன் பக்கத்தில் இல்லையா? அவன் கேட்டுக் கொண்டிருக்க,

பவி அதை கேட்டுக் கொண்டே வந்தவள், அகில் நீ இன்னுமா சாப்பிடலை?

எனக்கு பசிக்கல பவி என்றான்.

டேய்..நீ என்ன டூருக்கா வந்துருக்க. பசிக்கலன்னு சொல்ற? நிவி தான உன்னோட இருந்தான். எங்க அவனை? என்று வெளியே செல்ல,

பவி..நில்லு..அவனை ஏதும் கேட்காத. நான் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் அகில் எழ,

நீ ஓய்வெடுடா என்று விதுனன் அவள் பின்னே சென்றான்.

நிவாஸ் ஆருத்ராவிடம் பேசியவாறு வந்து கொண்டிருந்தான்.

டேய்..அகிலுக்கு சாப்பாடு கொடுக்கவேயில்லையா? என்னடா பார்த்துக்கிட்ட? பவி கத்த, சீனியர் தான் பசிக்கல வேண்டாம்னு சொன்னார்.

அவன் சொன்னா விட்டு விடுவியா? பவி கேட்க,

உனக்கு அக்கறை இருந்தா நீ வாங்கி கொடுத்திருக்க வேண்டியது தான?

என்னையே நீ போன்னு சொல்ற? நான் உன்னோட பெரியவ. தெரியும்ல பவி கேட்க,

நீ..போ..ன்னு தான் சொல்வேன். நீ என்ன செய்வ? நிவாஸ் கேட்க,

அடி பிச்சிருவேன் பார்த்துக்கோ.

என்ன? என்று நிவாஸ் சிரித்தான்.

எதுக்குடா சிரிக்கிற?

நீ என்ன குழந்தை தனமா பேசுற?

பேச்ச மாத்தாத. அந்த பொண்ணும் சாப்பிடலையா? என்று யாசுவை பற்றி பவி கேட்டாள்.

யாசு சீனியருக்கு, அவங்க ஆளை பார்க்கணுமாம். அவர் பிரச்சனையில் இருக்கார். அதனால அவங்களும் சாப்பிட மாட்டிக்கிறாங்க.

நீ சாப்பிட்டேல..

இல்ல..

இல்லையா? என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?

ஆமா..எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகுற? நீ சாப்பிட்டியா? நிவாஸ் கேட்க,

நானா? என்று பவி சிந்தித்தாள்.

சரியா போச்சு போ..நீயே சாப்பிடாம தான் அவனை திட்டிக்கிட்டு இருக்காயா? விதுனன் கேட்டான்.

யார் நீங்க? நிவாஸ் கேட்க, பவி கூறினாள்.

அகில் சீனியர் அறையில் சாப்பாடு வாங்கி வைச்சுட்டேன். உன்னால முடிஞ்சா சீனியரை சாப்பிட வை நிவாஸ் கூற,

வாங்கி வைச்சிட்டியா? பவி கேட்க, ஆரு நான் அப்புறம் பேசுறேன் இந்த பொண்ணு என்னை பயங்கரமா டென்சன் ஆக்கிடுச்சு என்று போனை வைத்தான் நிவாஸ்.

பொண்ணா? பவி அவனை பார்க்க, நீ பொண்ணு இல்லையா? அவன் கேட்க, இடியட் என்று அகில் அறைக்கு சென்று அமர்ந்தான்.

என்ன பண்ணீட்டு வந்துருக்க? அகில் கேட்க, ஆ..என்று சிணுங்கிய பவி.. அவன் என்னை பொண்ணுன்னு சொல்லிட்டான் என்று அழுதாள். அகில் சிரித்தான்.

ஏய்..நீ பொண்ணு தான?

அப்படி இல்லை. நான் அவனோட அக்கா தான? அவன் என்னை எப்படி சொல்றான் பாரு அகில் என்று சிணுங்கினாள். கதிரும் அவளை பார்த்து சிரித்தான்.

அவனுக்கு நீ தான் அக்கான்னு தெரியாதா? கதிர் கேட்க, ம்ம்..என்றாள்.

அப்ப..நீ பேசியதுக்கு அவன் பேசியதே குறைவு தான். நானா இருந்தா? உன்னை சாதாரணமா விட்டுருக்க மாட்டேன் என்று அவன் கூற, விதுனன்..அகிலிடம் நாங்க கிளம்புறோம். பார்க்கலாம் என்று மற்றவர்களை அழைத்து வந்து கூற, அவர்கள் அனைவரும் அவனிடம் கூறி விட்டு கிளம்பினார்கள்.