அத்தியாயம் 50

ஊரில் ஹாஸ்பிட்டலில் புவனா வருத்தமாக அமர்ந்திருக்க துளசி அவளை பார்த்தவாறு இருக்க, காவேரியும் யோசனையுடன் அவளை பார்த்தாள். துருவனும் சரியில்லாதது போல் அமர்ந்திருந்தான்.

நான் வெளியே இருக்கிறேன் என்று துருவன் வெளியே சென்று அமர்ந்து கொண்டான். காவேரியும் வெளியே வந்து அமர்ந்தார். அவரை பார்த்து விட்டு, ஆன்ட்டி டீ சாப்பிடுறீங்களா? வாங்கி வரவா? என்று கேட்டான்.

இல்லப்பா. வேண்டாம் என்றார்.

புவனா படுத்துக் கொள்ள சற்று நேரத்திலே தூங்கிப் போனாள். துருவன் கையில் இரண்டு கப் டீயுடன் வந்தான். புவனா தூங்குவதை பார்த்து துளசியிடம் கொடுத்து விட்டு, காவேரியிடம் கொடுத்தான். வாங்கி குடித்துக் கொண்டிருந்தார்.

துளசி காலடியில் வந்தது அந்த புகைப்படம்.

என்ன இது? என்று எடுத்து பார்த்து அதிர்ந்தாள். அவளுக்கும் தீனா மீது மிகுந்த கோபம் வந்தது. புவனா பேசியதை பற்றி சிந்தித்தாள்.

அண்ணா..அவளுக்கும் துருவனுக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால் எப்படி அமைதியா இருக்கா? ஏன்டா இப்படி செஞ்ச? அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? அந்த போன் ஒரு வேலை அப்பாவா இருக்குமோ? சிந்தித்து துளசி அமர்ந்திருக்க.

புவனா எழுந்து அமர்ந்து, துளசி அதை கொடு என்றாள். கட்டுப்படுத்தி வைத்திருந்த அவள் அழுகை வெடித்தது. துளசி புவனாவை அணைத்து அழுதாள். புவனா அவள் கையிலிருந்ததை பிடுங்கி கிழித்து குப்பையில் போட்டாள்.

அவரிடம் இதை பற்றி கேட்கவோ பேசவோ கூடாது.

உனக்கு கோபம் வரலையா புவனா?

நான் கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது? கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஆனால் என்னோட மனசு சொல்லுது. அவர் இதை செய்திருக்க மாட்டார். நான் அவரை நம்புகிறேன்.

நம்புகிறாயா? இதை பார்த்துமா நம்புகிறாய்? எப்படி உன்னால் பொறுமையா இருக்க முடியுது? ஆனால் என்னால முடியல. எனக்கு உன்னை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.

கண்டிப்பா அவர் இதை செய்திருக்க மாட்டார். நான் அவரை முழுசா நம்புகிறேன்.

உன்னை அவனை ஏமாற்றியது போல் உறுதியாக தெரிந்தால் அவனை நானே சும்மா விட மாட்டேன் புவி.

நம்பு துளசி. அவரை நம்பு. இது பொய்யாக தான் இருக்கும். அவர் காதலை என்னால் உணர முடிகிறது.

என்னால ஏத்துக்க முடியல புவி. அந்த போன்?

அது..அது..என்று தயங்கினாள் புவனா.

எங்க அப்பா தான? துளசி கேட்டாள். புவனா அமைதியாக இருக்க, துளசிக்கு கோபம் வந்தது. அவள் கத்துவதற்குள் துளசி கத்தி விடாதே! அம்மாவிற்கு தெரிந்தால் உடஞ்சிடுவாங்க.

துளசி அழுகை சத்தம் கேட்ட போதே துருவன் உள்ளே செல்ல எழுந்தான். அவனை தடுத்து கதவின் பின்னிருந்து இவர்கள் பேசுவதை கேட்டார் காவேரி. பின் துருவனிடம் அதை காட்டு என்றார்.

வேண்டாம் ஆன்ட்டி என்றான்.

காட்டுன்னு சொல்றேன்ல என்று அவர் அதட்ட, அவன் எடுத்து காண்பித்தான். அவருக்கும் தீனா மீது பெரியதாக நம்பிக்கை இல்லை. அவரும் சினத்துடன் தான் அதை பார்த்தார்.

நீ அவனை நம்புகிறாயா துருவா? காவேரி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டார்.

என்னிடம் எதுக்கு ஆன்ட்டி கேட்குறீங்க?

சொல்லேன்.

எனக்கே நம்பவா? வேண்டாமான்னு? தெரியல ஆன்ட்டி. ஆனா புவிக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி. அவரால் அவள் காயப்படாமல் இருந்தால் போதும்.

உனக்கு அவளை பிடிச்சிருக்கா? என்று காவேரி கேட்க, பிடிக்கும் ஆன்ட்டி. ஆனால் இப்ப ஒரு ப்ரெண்டா எனக்கு பிடிக்கும் ஜானுவை போல் என்றான்.

நிஜமாகவே இப்ப நீ அவளை காதலிக்கவில்லையா?

ஆன்ட்டி, உங்க பையன் எப்ப இவளை ஏத்துக்கிறேன்னு சொல்லிட்டாரோ? அப்பவே விட்டுட்டேன். கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனால் இப்ப அவள் மீது நட்புணர்வை விட ஏதுமில்லை.

நான் அவங்க அப்பாவால ரொம்ப அடிப்பட்டுட்டேன். அவனும் அவரை போல் இருந்து விடுவானோ என்று பயந்து கொண்டு தான் இருந்தேன். ஆனால் புவியால் அவனிடம் நிறைய மாற்றம் தெரிந்தது. ஆனால் இதை பார்த்த பின் எனக்கு அவன் மீது நம்பிக்கை இல்லை. அந்த பொண்ணை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு என்று அழுதார்.

இல்ல ஆன்ட்டி. எனக்கு முழுசா தான்  நம்பிக்கை வரலை. புவனா அருகே அவர் இருந்தால் அவரும் நல்லா தான் இருக்கார். அவளையும் நல்லா பார்த்துக்கிறார்.

எனக்கு என்னன்னா? அவருடைய பழைய வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இனி புவியை தவிர அவர் வேறெந்த பொண்ணையும் பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன் என்று அவன் பேசிக் கொண்டிருக்க, தீனா வந்தான். காவேரி கையிலிருந்ததை துருவன் வாங்கி அவனிடம் வைத்துக் கொண்டான்.

என்னம்மா..ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டு இருக்கீங்க போல?

ஆமாம்ப்பா..என்று தொண்டை அடைக்க பேச முடியாமல் திண்டாடி, துருவனோட அண்ணனுக்கு உடம்பு சரியில்லையாமே? அதான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்று சமாளித்தார்.

அங்க எல்லாருக்கும் ஒரே பிரச்சனை. துருவா..என்று தயங்கிய தீனா அவனருகே அமர்ந்து அவனையே பார்த்தான்.

ஏன் அப்படி பாக்குறீங்க?

அந்த அர்தீஸ் ஆதேஷ் வீட்டுக்கு போயிருக்கான் என்று தீனா கூற, இருவரும் பதறி போனார்கள்.

உங்க டிப்பார்ட்மண்ட் என்ன தான் பண்ணுதோ? எல்லாரும் போலீஸ்ன்னு பந்தா பண்ணா போதாது என்று துருவன் திட்டிக் கொண்டே செல்ல, இந்த பையன் கொஞ்சமும் பயமில்லாமல் இவனிடம் இப்படி பேசுகிறான்? என்று காவேரி பார்த்தார்.

ஜானு ஓ.கே தான சார். எனக்கு போன் தாரீங்களா? நான் பேசிக்கவா? என்று திடீரென்று அமைதியாக பேசினான்.

மீண்டும் அவன் தப்பி விட்டானாம் தீனா கூற, வார்த்தைகள் அளவிற்கு மீறி வந்தது.

அவன் புவியிடம் வர வாய்ப்புள்ளது தானே?

ம்ம்..கண்டிப்பா வருவான் துருவா. இப்ப எங்க இருக்கான்னு தெரியல? என்றான்.

டேய்..முதல்ல இந்த பையனுக்கு சாப்பிட வாங்கிக் கொடு. அவன் மதியம் சாப்பிடவேயில்லை.

சாப்பிடலையா? ஏன்டா துருவா? யாரிடம் சொன்னாலும் வாங்கிக் கொடுத்திருப்பாங்களே? தீனா கேட்க, நீங்க என்ன என் மேல அக்கறையா இருக்கீங்க?

இருக்கக்கூடாதா? தீனா கேட்க, அதானே சந்தேகமா இருக்கு.

என்ன சந்தேகம்?

இல்ல..இந்த திடீர் பாசம் என்றான் துருவன்.

அட அது முதல்ல இருந்தே இருக்குப்பா.

எப்ப இருந்து? அவன் துலாவ, டேய்..என்னால உன்னிடம் பேச முடியலைடா..

ஹேய்..இங்க வாங்கப்பா. நம்ம துருவனுக்கு சாப்பாடும் எனக்கு ஸ்ராங்கா டீயும் வேண்டும்? வாங்கிட்டு வாங்கப்பா என்று உள்ளே சென்றான். துளசி கடுகடுப்புடன் இருந்தாள்.

ஆன்ட்டி..என்று துருவன் காவேரியை பார்க்க, நாம வேடிக்கை பார்ப்போம் என்றார்.

துளசி டீ சாப்பிடுறியா? புவி உனக்கு என்ன வேண்டும்?  அவள் கட்டிலில் அமர்ந்து தீனா பாசமாக கேட்டான்.

ஹான்..ஒரு பாட்டில் விசம் இருந்தா வாங்கித்தா என்றாள் துளசி வெடுக்கென.

விசமா? என்று எழுந்து, துளசி நீ கோபமாக இருக்கிறாயா? என்று அவளருகே வந்தான்.

புவனா அவளை பார்த்து முறைக்க, துளசி அவளை தவிர்த்து, ஆமாம் நீ செஞ்ச வேலைக்கு இது பத்தாது. சாக என்னவெல்லாம் சாப்பிடுவாங்களோ எல்லாத்தையும் எங்க எல்லாருக்கும் வாங்கிக் கொடுத்திரு.

புவி..இவ என்ன பேசுற?

அவ ஏதோ கோபமா இருக்கான்னு நினைக்கிறேன். நீங்க உட்காருங்க. ரொம்ப சோர்வா இருக்கிற மாதிரி தெரியுறீங்க? புவனா சாதாரணமாக பேச, துளசியோ..டயர்டா இருக்கானா என்று கையிலிருந்த டீயை அவன் மீது ஊற்றினாள்.

ஓய்..உனக்கு என்ன ஆச்சு? பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்கா? என்று தீனா அவளிடம் வர, காக்கி சட்டை காலரை உயர்த்தி பிடித்து, ஏன்டா இப்படி பண்ண? உன்னால எங்க எல்லாரோட மானுமும் போகுது? கத்தினாள்.

சாரி துளசி..அவனை நாங்க இங்க தேடிகிட்டு இருக்க, அவன் ஜானுவிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்திருக்கிறான்.

புவி நிமிர்ந்து அமர்ந்து, ஜானுவையா? யார்? என்ன செஞ்சாங்க? என்று அவள் பதற துருவன் உள்ளே வந்து, துளசியிடம் கண்ணை காட்டினான்.

காவேரி லலிதாவிற்கு போன் செய்து பேசினார். ஜானு ஓய்வெடுப்பதாக கூற, போனை வாங்கிய துருவன் அண்ணாவிடம் பேசலாமா? என்று கேட்க, அவனுக்கு இணைத்து கொடுத்தார்.

அவன் பேசி விட்டு புவிக்கு ஆறுதல் கூற, தீனா துருவன் துளசியை வெளியே செல்ல சொல்லி கண்களாலே கெஞ்சினான். துளசி நகர்வதாக இல்லை. துருவன் தான் அவளை அழைத்து வெளியே சென்று அமர்த்தி விட்டு அவன் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றான்.

தீனா புவனாவிடம் நான் அங்கே வரவா? என்று படுக்கையை காட்ட, அவளுக்கு ஒருமாதிரி ஆனது. அவள் தலையசைக்க, அவன் அவளருகே வந்தான். அந்த புகைப்படம் அவள் கண்முன் வந்து நிற்க அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

என்ன ஆச்சு புவி?

இல்லை. என் பக்கத்திலே இருக்கீங்களா? என்று கேட்டாள். புவி முதல்ல அந்த பயல பிடிக்கணும். உன்னை பார்க்க தான் வந்தேன் என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

நீ நாளையிலிருந்து நடக்கலாம் என்று ஆர்பரித்துக் கொண்டிருந்தான்.

புவி கவனமா இரு. அவன் உன்னை ஏதும் செய்து விடுவானோ என்று பயமா இருக்கு. துளசியையும் பார்த்துக்கோ.

உங்களுக்கு பொறுப்பு வந்த மாதிரி இருக்கே?

ம்ம்..ஆமா..நீ படிச்சு முடிச்ச பின் என்னோட பொண்டாட்டியா ஆகிடுவீங்க? அப்புறம் பொறுப்பில்லாம எப்படி? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் புவி. லவ் யூ புவிம்மா என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

நான் உங்களை அணைச்சுக்கவா?

இதுக்கெல்லாம் கேட்பாங்களா? வாங்க என்று அவன் அணைக்க புவி கண்ணிலிருந்து கண்ணீர் துளிகள். இதை வெளியிருந்து கேட்டவர்களுக்கு தெளிவாக புரிந்தது.

புவனா குழப்பமான மனநிலையில் இருக்கிறாள் என்று. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஸ்ரீயும் அபியும் வினிதா வீட்டினுள் நுழைய இருவரும் அவர்களை பார்த்து சிரித்தனர்.

எல்லாருக்கும் வேண்டுதலா? சேற்றுக் குளியலாகவே வாரீங்க. காலையில அகிலும் நிவாஸும் ஆட்களுடன் சண்டையிட்டு வாரிட்டு வந்தாங்க. நீங்க என்னடா செஞ்சுட்டு வந்திருக்கீங்க? இதயா கேட்க,

ஏம்மா..பேசிக்கிட்டே இருக்க. ஸ்ரீ அழகா இருக்க சிரியேன் என்று தருண் இருவரது கோலத்தையும் புகைப்படத்தில் சேகரிக்க,

வேண்டாம்..அதை அழிச்சிரு இல்ல..என்று ஸ்ரீ கூற,

இல்லைன்னா என்ன செய்வியாம்?

இரு வாரேன் என்று தருணிடம் அவனது சட்டையை பிடித்து இழுக்க, இதயா பதறி எழுந்தாள். ஆனால் ஸ்ரீ அவளது கை சேற்றை அவன் மீது தடவி விட்டு, போனை பறித்தான்.

அடப்பாவி..அதற்குள் ஏன்டா குரூப்ல போட்ட என்று அவள் அழிக்கும் முன் அவளிடம் பிடுங்கி விட்டு ஓர் அறையில் நுழைந்து அதை பத்திரப்படுத்தினான்.

அபி ஸ்ரீயை முறைக்க, அவளும் அவனை முறைத்துக் கொண்டு, என்னையே தள்ளி விட்டுட்டேல. உன்னை என்ன பண்றேன் பாரு என்று கையை நீட்ட, அவளது விரலை பிடித்த அபி..

கொன்றுவேன் பார்த்துக்கோ. நீ என்னையும் என் வண்டியையும் தள்ளி விட்டு, அதை மீண்டும் மோசமாக்கிட்டு பேசுறியா பேச்சு.

வண்டியாம் வண்டி. ஓட்டை வண்டி என்று அவள் கூற, வாயாடி போடி..என்றான் அபி.

மீ..டியா? வாயாடியா?..இருடா உன்னை என்று அவனிடம் வந்து அவனது தலையில் கொட்டி விட்டு ஸ்ரீ ஓடினாள்.

லூசு..லூசு..என்று அவன் தலையை தடவிக் கொண்டே சென்றான்.

என்னடா நடக்குது? ஸ்ரீயா இப்படி? இதயா கேட்க, அவ இத விட பண்ணுவா இதயா. இப்ப தான் எங்க ஸ்ரீயை பார்த்த மாதிரி இருக்கு என்று தருண் கூறினான்.

இவர்கள் கத்தியதில் அனு விழிக்க, அடப்பாவிகளா..இப்ப தானடா கஷ்டப்பட்டு பாப்பாவை தூங்க வைத்தேன். அதுக்குள்ள முழிக்க வைச்சுட்டீங்களே? தருண் புலம்ப இதயா சிரித்தாள். கமலி அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

அனுகுட்டி பாப்பாவுக்கு என்ன வேணும்? தருண் கேட்க, அம்மா..என்றாள் அனு வாசலை பார்த்தப்படியே.

அம்மா..வா வேணும்? அங்கிள் வேணாமா? தருண் கேட்க. அனு அவனை அணைத்துக் கொண்டாள்.

சமத்து பாப்பா அழ மாட்டீங்கள?

அர்ஜூன் எங்க அங்கிள்?

அவனுக்கு பெரிய வேலை ஒன்று இருக்கும்மா. அதை முடிச்சிட்டு வருவான்.

ஸ்ரீ குளித்து வெளியே வந்தாள். அவளை பார்த்து தருணிடமிருந்து அனு ஓடினாள்.

ஸ்ரீ அனுவை தூக்கி, பாப்பா எதுக்கு அழுதீங்க?

அம்மா..என்றாள் அனு.

நான் சொன்னேன்ல டா. அம்மாவை பார்க்க முடியாது. நாம அம்மாவை இரவில் பார்ப்போம் அவள் பேசிக் கொண்டிருக்க அபியும் ஆடையை மாற்றி விட்டு வந்தான்.

சொல்லு என்று ஸ்ரீ அவனுக்கு சைகை செய்ய, நீயே சொல்லு என்று அவன் கண்ணாலே கமலியை காட்டினான்.

அர்ஜூன் உன்னிடம் தான சொன்னான். நீயே சொல்லு என்று ஸ்ரீ அபியிடம் நேரடியாகவே கூற அவன் அவளை முறைக்க, அனுவை தூக்கிக் கொண்டு அவனருகே வந்து அவனது காலை மிதித்தாள்.

ஸ்ரீ..உன்னை? என்று சினந்த அபி கமலியை பார்த்தான். அவரும் இவர்களை பார்த்துக் கொண்டிருக்க, மேம் அர்ஜூன் உங்களை கமிஷ்னரிடம் பேச வர சொன்னான்.

அபி..அர்ஜூன் என்னிடம் நீ நேராகவே மேம்மை அழைத்துக் கொண்டு கமிஷ்னர் ஆபிசிற்கு வர சொன்னான் தருண் கூற, வாங்க.. போகலாமா மேம்? என்று கமலியை பார்த்தான்.

அபி..ஒரு நிமிஷம் என்று ஸ்ரீ அர்ஜூன் ஓய்வெடுத்த அறைக்கு சென்று ஒரு சாவியை எடுத்து வந்து, அக்காவோட காரை எடுத்துட்டு போ..என்றாள்.

எதுக்கு? அதான் பைக் இருக்கே.

சொல்றேன்ல..என்று அபியின் கையில் திணித்தாள். அவங்களுக்கு பைக்கில் சென்று பழக்கம் இருக்காதுடா.

டா வா? என்ன நீ? சீனியர்ன்னு கூப்பிடாம இப்படி கூப்பிடுற? அபி கேட்க,

ரொம்ப முக்கியம் பாரு. அர்ஜூன் கிளம்பி இருப்பான். நீங்க கிளம்புங்க என்று அவன் காதில் கடித்தாள்.

இந்த அவசரம் எங்களுக்காக? இல்லை அர்ஜூனுக்கா? சத்தமாகவே அபி கேட்க, மீண்டும் அவன் காலை மிதித்து, அவனை காத்திருக்க வைக்காதே. உனக்கே தெரியும் அவன் இந்த ஒருவாரமாக தூங்கவேயில்லை.

எல்லாத்தையும் சீக்கிரம் முடிச்சிட்டா. அவனும் ஓய்வெடுப்பான்ல ஸ்ரீ கூற,

தெரியுது..தெரியுது..எங்களுக்காக இல்லை என்று.

ஆமா..அவன் முடித்து வந்து ஓய்வெடுக்க போறானாக்கும். அகிலும் யாசுவும் ஹாஸ்பிட்டலில் இருக்க, இவன் வந்து ஓய்வெடுத்து தான் வேறு வேலையை பார்ப்பான் பாரு தருண் சொல்ல,

ஏன்டா, அவங்கள நீங்க பார்த்துக்க மாட்டீங்களா? ஸ்ரீ கேட்டாள்.

நீ அவனிடம் மட்டும் தான அக்கறையோட இருக்க. எனக்கு செம்மையா பசிக்குது. ஏதாவது செய்து தா. உதவலாமான்னு பார்க்கலாம் என்று தருண் கூற,

அவன் உன்னோட ப்ரெண்டு தான? ஒரு நாள் மட்டும் அவனுக்காக பார்த்துக் கொள்ள முடியாதா?

பார்த்துக்கலாம். ஆனால் ஹாஸ்பிட்டல இருப்பது அகில் தான? சும்மாவே ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே இருப்போம்.

என்ன சண்டையோ? உங்கள வைச்சுக்கிட்டு..என்று வா..அனு இவனுக என்னமும் செய்யட்டும் என்று அவள் அனு அறைக்கு சென்று படம் வரைய தேவையானவற்றை எடுத்து தரையில் அமர்ந்து அனுவை மடியில் வைத்துக் கொண்டு படம் வரைய ஆரம்பித்தனர்.

கமலி, “ஸ்ரீ அர்ஜூன் மீது வைத்திருந்த அக்கறையை பார்த்து விட்டு தாரிகா அம்மா கூறியது; வினிதா கடிதம் குறிப்பிட்டது; ராஜ வேல் கூறியது” அனைத்தையும் யோசித்தவாறு அபியுடன் சென்றார். இதயா அவரை பார்த்தாள்.

பவியின் அம்மாவும், அப்பாவும் ஸ்ரீ வந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். இன்பா அம்மா அவர்கள் ஸ்ரீயை பார்த்து மகிழ்வதை ஒருவாறு கவனித்தார்.

சற்று நேரத்தில் அர்ஜூன், சைலேஷ், மாதவ், அபி, கமலி சந்தித்துக் கொண்டனர்.

கமிஷ்னரை பார்க்கணும் என்று அர்ஜூன் கூற, எதிரே இருப்பவனோ அவர் வேலையா இருக்கார் தம்பி. போயிட்டு அப்புறம் வாங்க என்றான்.

அர்ஜூனும் கமலியும் வந்துருக்கோம்ன்னு சொல்லுங்க அவரே வருவார். அவன் அர்ஜூனை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டே சென்றான்.

அர்ஜூன்? ஏன்? சைலேஷ் கேட்க, அவனை பார்த்து அர்ஜூன் கண்ணடித்தான்.

நீங்க போகலாம் சார் என்று அவன் வந்து கூற, சைலேஸும் மாதவும் அவனை பார்த்துக் கொண்டே சென்றனர்.

அர்ஜூன் உள்ளே சென்றதும் அவருக்கு எதிரே இருந்த நாற்காலியை நகர்த்தி உட்கார்ந்து அவரது டேபிளில் காலை நீட்டினான்.

மாதவ் அவரை பார்த்து சல்யூட் செய்தான். அதை ஏற்றுக் கொண்டு அமரச் சொல்ல மாதவ் அர்ஜூனை பார்த்து,

அர்ஜூன்..என்ன பண்ற? காலை எடு என்றான். வெளியே சென்ற கமிஷ்னர் ஆள் டீயுடன் வந்தான். அவன் கமிஷ்னரிடம் கொண்டு செல்ல, அர்ஜூன் எழுந்து அதை எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

டேய்..என்று அவன் சீற்றமாக, அவன் நம்ம பையன் தான். நீ மற்றவர்களுக்கு கொடுத்துட்டு போ..என்றார்.

அர்ஜூன் கண்களை மட்டும் உயர்த்தி அவரை பார்த்தான். அபி, சைலேஷ், மாதவும் அர்ஜூனை பார்க்க, கமலியும் அமர்ந்தார்.

எப்படி இருக்கம்மா? அவர் கேட்க, ஏதோ இருக்கேன் அண்ணா என்றார் கமலி.

அங்கிள்..அவங்களுக்கென்ன செம்ம ஜாலி. தனியா கம்பெனியோட எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க அர்ஜூன் கூற,

அண்ணாவா? என்று அபியும், அங்கிளா என்று சைலேஷும் கேட்க,

கமிஷ்னர் அவர் சீட்டில் அமர்ந்திருக்க, அர்ஜூன் எழுந்து அவர் தோளில் கை போட்டு என்னோட சொந்த மாமா சார் என்றான் சைலேஷை பார்த்து.

மாமாவா? என்று அபி கேட்க, அபியிடம் வந்து இவர் கமலி மேம்மோட சொந்த அண்ணன்டா. சின்ன வயசுல அவங்க அப்பாவிடம் கோபித்து வீட்டை விட்டு ஓடி வந்தவர்.

அர்ஜூன் நீ சொல்லவேயில்லடா அபி கேட்க,

எங்கே? எனக்கே தெரியாது? நம்ம ஊர்ல இருந்து வந்த பின் தான் நானே கண்டுபிடிச்சேன். இதை கூட யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று கமலியை பார்த்தான்.

கமிஷ்னர் அர்ஜூன் காதை திருகி, என்ன வேலையெல்லாம் செய்ற? இது முன்னமே தெரிந்தால் உனக்கு துப்பாக்கிக்கு லைசன்ஸ் வாங்கி தந்திருக்க மாட்டேன்.

அப்ப..என்னையும் என்னோட ப்ரெண்ட்ஸையும் அந்த பொறம்போக்குகள் கையால சாக சொல்றீங்களா?

சரி விடு. அதான் முடிந்ததே.

எங்க முடிஞ்சது? இன்னும் ஏதோ திட்டம் வச்சிருக்கானுக அர்ஜூன் கூற,

அர்ஜூன் அந்த ஆள தான் பிடிச்சுட்டாங்களே? அபி கேட்க, இல்லடா. அவனோட திட்டமே வேற போல. மாமா..உங்க ஆளு யாரோ தான் உதவி செய்றாங்க.

ஊர்ல..அந்த அர்தீஸ் தப்பிச்சி லலிதா மேம் வீட்டு காவல் ஆட்களை தாண்டி உள்ளே சென்று..என்று நிறுத்தி அபியை பார்த்தான்.

சென்று சொல்லுடா..ஜானுவுக்கும் ஆதுவுக்கும் ஒன்றுமில்லையே அபி கேட்க, அர்ஜூன் அமைதியானான். அபி அர்ஜூனிடம் வந்து, சொல்லு..அர்ஜூன் ஜானுவுக்கு ஒன்றுமில்லை தான? என்று கலங்கினான்.

சாரிடா..ஆனால் நடப்பதற்குள் ஆதேஷ் காப்பாற்றி விட்டான். அவனை ஆதேஷ் சூட் பண்ணிட்டான்.

அர்ஜூன்..அவனா? சூட் பண்ணிட்டானா?

பதறாத அபி. காலில் தான் சுட்டிருக்கிறான். போலீஸிடம் ஒப்படைத்து விட்டனர். ஆனாலும் அவன் தப்பி விட்டான்.

அவனை..என்று அபி சத்தமிட, அர்ஜூன் அபியை அணைத்து அமைதியாக்கினான்.