அத்தியாயம் 49

சற்று நேரத்தில் பவியை விட்டு எழுந்த அனிகா, நீ இங்க ஹாஸ்பிட்டல என்ன பண்ற? உனக்கு ஒன்றுமில்லையே? என்று பதறி எழுந்தாள்.

அவளை அமர வைத்து அவளுக்கு நடந்தது, அகில் காப்பாற்றி இங்கே இருப்பதை பற்றி கூறினாள்.

உன்னையும் தொந்தரவு செய்து விட்டேனோ? அனிகா மீண்டும் எழ, அப்படியெல்லாம் இல்லை. நீ முதல்ல உட்கார்.

சாரி பவி. அவன் உன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான். என்னால் உன்னை பார்த்து சாரி கூட சொல்லமுடியல. ஆன்ட்டியும் என்னிடம் உன்னுடன் பேசக் கூடாது, பழகக்கூடாதுன்னு சொன்னாங்க. அதனால் தான் பேசவில்லை.

கல்லூரியில் உன்னை பார்த்ததும் பேச நினைத்தேன். ஆனால் யாரிடமும் பேசக் கூடாதுன்னு என்று அவள் அழ, பவி அவளை அணைத்து சரி..விடு. அழாதே என்றாள்.

நீ கைரவுடன் பேசும் போது யாருக்கும் தெரியாதா? பவி கேட்டவுடன், அவனுக்கும் அவளுடன் இடையிடையே பேசியது நினைவிற்கு வந்தது. வகுப்பு இல்லையா? விளையாட பிடிக்குமா? சாப்பிட போகலையா? என சிறியதாக பேசி இருப்பான்.

ஆமா..என்னை யாரும் ஏதும் மிரட்டியது கூட இல்லையே? அவன் யோசித்தான்.

எனக்கு தெரியல. உனக்கு எப்படி நாங்க பேசியது தெரியும்? அனிகா கேட்க, பவி தடுமாறினாள். ஆனால் அனிகாவே அவனுடைய நண்பர்கள் கூறினார்களா? அவளே கேட்க,..ஆம் என்று வேகமாக கூறினாள் பவி. அவன் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான். உள்ளே வந்த நித்தி கைரவ் யாரை பார்த்து சிரிக்கிறான் என்று பார்த்தாள்.

ஆமா அனி..உனக்கு கைரவை பிடிக்குமா? அவன் ஆர்வமாக இருவரையும் பார்க்க, அவன் விளையாடுவது பிடிக்கும்.

அப்படியா? வேறெதுவும் இல்லையா?

வேற என்ன? பிடிக்கும். விளையாடும் போது பிடிக்கும்.

அது என்ன விளையாடும் போது?

ஈர்ப்பாக இருக்கும்னு நினைக்கிறேன் என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,

ஈர்ப்பா..யாருக்கு? யார் மீது? என்று கேட்டுக் கொண்டே மேலே பார்த்தாள் நித்தி. அவன் மறைந்து நின்றான்.

சார் வரலையா?

நான் என்ன கேட்டால்..நீ அவரை கேட்கிறாய்?

தப்பா எடுத்துக்காத நித்தி. சார்கிட்ட இன்னொரு உதவியும் கேட்கணும்?

என்ன உதவி?

அது வந்து, நானும் அம்மாவும் இருந்த வீட்டுக்கு போகணும்.

எதுக்கு? பவி கேட்க,

அம்மா..எனக்கு ஆசையா வாங்கிய ஒரு சில பொருள் மட்டும் எடுத்து வரணும்?

நகையா? நித்தி கேட்க,

இல்ல..ஹேர் பேண்டு, புடவை.. மட்டும்.

புடவையா?

அது..வந்து என்று தயங்கிக் கொண்டு, என்னோட கல்யாணத்துக்குன்னு கல்லூரி முதல் வருடம் படிக்கும் போதே எடுத்துட்டாங்க. அது வேண்டும் என்றாள்.

இப்ப வந்துருவாங்க என்று புன்னகையுடன் நித்தி அவளிடம் உனக்கு அவ்வளவு பெரிய வீட்ல இது போதுமா?

என்னோட அம்மா எனக்காக வாங்கியது. இத விட வேரென்ன? அம்மா..தான் வேணும் என்று மீண்டும் அழுதாள் அனிகா.

நித்தி அவளை அணைத்துக் கொண்டே மேலே பார்த்தாள். அவன் மறைந்து அங்கே தான் நின்றிருந்தான். நிஜமாகவே உனக்கு வேரெதுவும் வேண்டாமா? நித்தி கேட்டாள்.

இல்ல..என்றாள். பவி..இவ உன்ன விட மோசம் அழுதுகிட்டே இருக்கா.

நித்தி அவளோட அம்மா இறந்துருக்காங்க. இவளையும் கொல்ல பாக்குறாங்க. அழாம என்ன செய்வா? பவி கூறியவுடன் அவளை விடுத்து,

சாப்பிட்டியா? கேட்டாள் நித்தி.

எனக்கு பசிக்கல.

அப்படியா? சரி நீ இங்கேயே இரு. வா பவி போகலாம்.

அனிகா எழுந்து, பவி போகாத என்றாள்.

நீ பசிக்கலைன்னு சொன்னேல. நாங்க போறோம்ப்பா நித்தி கூற, அனிகா அருகே இருந்தவர்களை பார்த்தாள். அங்கே முக்கால்வாசி ஆண்கள் தான் இருந்தனர்.

நான் சாப்பிடுறேன். விட்டு மட்டும் போகாதீங்க என்று அவள் அழுவது போல் கூற,

நான் சொல்லல. எதற்கெடுத்தாலும் அழுறா நித்தி சொல்ல, கண்ணை துடைத்து நான் அழலையே என்று புன்னகைத்து காட்டினாள். மேலிருந்து கைரவ் நித்தியையும் அனிகாவையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அர்ஜூன் அவ்வழியே புலம்பிக் கொண்டே வந்தான். கைரவை பார்த்து, இவன் மறைஞ்சு நின்னு என்ன செய்கிறான்? என்று கீழே எட்டிப் பார்த்து விட்டு அவன் தோளை தட்டினான்.

கைரவ் பயந்து விலக, என்னடா பண்ற? ஏதோ வித்தியாசமா பண்ற?

அர்ஜூன்..அங்க பாரு அந்த பொண்ணு.

எந்த பொண்ணு?

டேய்..நான் சொன்னேன்ல. எனக்கு திடீர்ன்னு நினைவா இருக்குன்னு சொன்னேன்ல அந்த பொண்ணு.

பாருடா..நீ நினைக்கிறது தெரிஞ்சு இங்கேயே வந்துட்டா. இங்க நின்னு எதுக்கு பாக்குற? வா..போகலாம் என்று கைரவை இழுத்து வந்தான். சைலேஷும் அங்கு வந்தான்.

அர்ஜூன் முகத்தை பார்த்து நித்தி, ஏன்டா அர்ஜூன் மூஞ்சிய ஏன் அப்படி வைச்சிருக்க?

நித்தி, இவனுக தொல்லை தாங்க முடியல. நடுரோட்டுல பைக் நின்னுருச்சாம். அபியும் ஸ்ரீயும் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. அனுவை பார்த்துப்பான்னு அவளை அனுப்புனா. அவ பாரு அபியோட சண்டைக்கு நிக்கிறா? அதான் வண்டிய அங்கேயே விட்டுட்டு ஆட்டோல போக சொன்னேன்.

ரெண்டு பேரும் போறதுக்குள்ள தருண் மறுபடியும் போன் செய்யப்போறான் பாரு என்று அர்ஜூன் வாயை மூடுவதற்குள் தருணிடமிருந்து அழைப்பு வந்தது கைரவிற்கு.

அதை பார்த்த கைரவ், நீ உன் வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்ட. எனக்கு பண்றான் பாரு என்று எடுத்தான்.

கைரவ், நீ வாடா..பாப்பா அழுறாடா? சத்தம் கேட்குதா? கேட்டான்.

அரமெண்டல் காது வலிக்குது. என்னால வர முடியாது. அதான் ஸ்ரீயும் அபியும் வாராங்கள.

அவங்க வர்ற மாதிரி தெரியல. நீ நல்லா சமாதானப்படுத்துன..வாடா..

கொன்றுவேன் பார்த்துக்கோ. மத்த நேரம் பாப்பாவை பார்த்துப்பேன். அழுற நேரம் கூப்பிடுற?

அப்புறம் கூப்பிடாம என்ன செய்றது? அறையினுள் பெரியவங்க எல்லாரும் ஓய்வெடுத்துகிட்டு இருக்காங்க.

இங்க பாரு தருண். அந்த வீட்ல இருக்கிற வரை நான் மட்டுமல்ல ஸ்ரீயால கூட பாப்பாவ சமாதானப்படுத்த முடியாது. அவளோட அம்மா..நினைவா தான் இருப்பா கைரவ் கூறி விட்டு அனிகாவை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.

இப்ப என்ன செய்றது? அதை அர்ஜூனிடமே கேட்டுக்கோ என்று போனை அர்ஜூனிடம் கொடுத்தான்.

கைரவ் வருவான் டா.

ஏய்..அர்ஜூன் விளையாடாத?

ப்ளீஸ்டா. ஏற்கனவே பிரச்சனை போயிட்டு இருக்கு. எனக்காக அனுவை பார்த்துக்கோடா. சரி போகிறேன் என்று அவனும் ஒத்துக் கொண்டான்.

தருண், அபியும் ஸ்ரீயும் வருவாங்க. அபியிடம் என்னோட அம்மாவை அழைத்துக் கொண்டு கமிஷ்னர் ஆபிசிற்கு நேராகவே வர சொல்லுடா. நாங்களும் வந்துடுறோம்.

நாங்களுமா? சைலேஷ் கேட்க, நாம தான் சார். மாதவ் சாரை அழைத்து செல்லணும் என்றான் அர்ஜூன்.

அர்ஜூன் யாரு அனு? பாப்பான்னு சொல்றீங்க? பவி கேட்டாள்.

பவி நான் சொல்கிறேன் நித்தி கூற, அர்ஜூன் இந்த பொண்ணை எங்க வீட்ல விட போகணும்? அனிகாவை காட்டி சைலேஷ் கூறினான்.

அண்ணா..போகலாம். முதல்ல மாதவ் சார் பிரச்சனைய முடிக்கணும். யாசு அவரை பார்க்கணும்னு கேட்டுகிட்டே இருக்காள். அதுனால அந்த பொண்ணு கைரவுடன் அக்கா வீட்டுக்கு போகட்டும்.

இல்ல, நான் வேரெங்கும் போக மாட்டேன் அனிகா கூற, இங்க பாரும்மா. பிரச்சனைய முடிச்சிட்டு சார் உன்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போவார் அர்ஜூன் கூறினான்.

நான் நித்தி பவியுடன் இங்கேயே இருக்கேன் என்றாள் அனிகா.

சைலேஷ் அவளிடம். நான் உன்னிடம் ஏற்கனவே சொன்னேன்ல. எங்களால உனக்கும் ஆபத்தாகி விடாமல் அவன் கூற,

எல்லாரும் தான் ஜெயிலுக்கு போயிட்டாங்கள? அப்புறம் ஏன் இப்படி அதையே சொல்றீங்க? நித்தி கேட்டாள்.

இல்ல நித்தி. அர்தீஸ் தப்பிச்சுட்டான். ஆது வீட்டுக்கு போய் ஜானுவை என்று அர்ஜூன் சொல்ல,

என்னடா சொல்ற? அவளுக்கு ஒன்றுமில்லைல நித்தி பதறினாள்.

இல்லை. ஆதேஸும் அவனோட அப்பாவும் பிடிச்சுட்டாங்க. ஆனால் அவன் மீண்டும் தப்பிச்சுட்டானாம்.

போலீஸ்லாம் என்ன தான் பண்றாங்களோ? சைலேஷ் கேட்க,

சார்..அவன் பயங்கரமான ஆளு. எதுக்கும் எல்லாரும் கவனமா இருக்கணும். அவன் ஊருக்கே போக வாய்ப்புள்ளது இருந்தாலும் கவனமா இருக்கணும். ஆதுவை கவனமா இருக்க சொல்லணும்.

ஜானுவா? அவங்க அண்ணாவுக்கு தெரியுமா? பவி கேட்டாள்.

பிரதீப் அண்ணாவிடம் சொல்லி இருக்க மாட்டாங்க தீனா அண்ணா. அண்ணா..கையில மாட்டான் செத்தான் அவன். அவருக்கு தெரிஞ்சா ஊருக்கே வந்துருப்பார். தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனால் நித்தி ஸ்ரீயை கொல்ல நினைச்சவன் ஆளு இன்னும் வெளிய தான் இருக்காங்க. எனக்கு அப்படி தான் தோணுது.

அப்ப..பிரச்சனை எதுவுமே முடியலன்னு சொல்றியா அர்ஜூன்? கைரவ் கேட்டான்.

ஆமாம்டா. எதுவுமே முடியல. அவங்க ஏதோ திட்டத்தோட தான் அரெஸ்ட் ஆன மாதிரி இருக்கு.

அர்ஜூன் அந்த கொலைகாரன் முகத்தை காட்டவே இல்லை. வெறுமனே அவனை பிடித்த விசயம் மட்டும் சென்று கொண்டிருக்கிறது.

நான் தான் வெளியிட வேண்டாம்ன்னு சொன்னேன்.

ஏன்டா?

நான் ஏற்கனவே சொன்னேன்ல ஸ்ரீக்கும் நிவிக்கும் அவரை நன்றாக தெரியும்.

யாரு தான்டா அந்த ஆளு? கைரவ் கேட்டான்.

ப்ளீஸ் இத மட்டும் யாரும் கேட்காதீங்க? அவங்களுக்கு தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவாங்க.

அர்ஜூன். ஸ்ரீயோட மருத்துவரா? கைரவ் கேட்க, அர்ஜூன் அவனை முறைத்தான்.

உன்னுடைய ஆடையில் இரத்தமாக உள்ளது. அதனால் வேறு ஆடை மாற்றணும். எங்க வீடு வெகு தொலைவில் உள்ளது. அக்கா வீட்டுக்கே செல்லலாம். என்னை தான் உனக்கு தெரியுமே? அப்புறம் எதுக்கு தயங்குற? கைரவ் அனிகாவிடம் கேட்டான்.

உங்களுக்கு ஒருவருக்கு ஒருவர் தெரியுமா? சைலேஷ் கேட்டான்.

தெரியும் அண்ணா..என்ற கைரவ் போகலாமா? கொஞ்ச நேரத்தில் இருட்டிட்டும் என்றான்.

போகலாம் என்றாள்.

நித்தி நீயும் வருகிறாயா? கைரவ் கேட்க, நான் யாசுவை விட்டு வர மாட்டேன் என்றாள்.

அகில் உன்னை அப்பொழுதே தேடினான் பவி என்று அர்ஜூன் சொல்ல, என்ன எதுக்கு தேடப் போறான்? என்று முகத்தை சோகமாக வைத்தாள்.

அர்ஜூன் அவள் கையை பிடித்து இழுத்து தனியே சென்று, என்ன பிரச்சனை சொல்லு?

அர்ஜூன்..அவன் எழுந்ததிலிருந்தே யாசுவை பற்றியே கேட்டுக் கொண்டிருக்கிறான். நான் எப்படி அவனை பார்த்துக்க முடியும்?

அதனால என்ன? யாசு தோழி தான?

அதுக்கு அவனை பத்தி கூட யோசிக்காம அவள பத்தி கேட்பானா? என்றவுடன் அர்ஜூன் சிரித்தான்.

அர்ஜூன் எதுக்கு சிரிக்கிற? பவி கேட்க, அவன் சைலேஷிடம் நாம கிளம்பலாம் சார்.

சொல்லிட்டு போடா..எதுக்கு சிரிக்கிற?

அத அகிலிடம் கேட்டுக்கோ?

ஓடி வந்து அவனிடம் வந்து முறைத்து நின்றாள் பவி.

சொல்லுடா? கேட்க,

அவளை நெருங்கி அவள் காதில் உனக்கு பொறாமையா இருக்கா? என்று கேட்டான்.

ஆ..பொறாமையா?..அர்ஜூன் அவளை பார்த்து சிரிக்க, டேய் அதெல்லாம் ஒன்றுமில்லை.

இருக்கு இருக்கு தேடிப் பாரு இருக்கும் என்று சொல்லி விட்டு சென்றான்.

என்ன பேசுனீங்க பவி? அர்ஜூன் நெருக்கமா வந்தான். அவன் ஸ்ரீயை தவிர இவ்வளவு நெருக்கம் காட்ட மாட்டான் நித்தி கேட்க,

நித்தி அர்ஜூனோட காதலை என்னன்னு நினைச்ச? அவன் ஸ்ரீயை தவிர யாரையும் பார்க்க கூட மாட்டான் கைரவ் கூற, ஆமா..அவன் என்னை கேலி செய்கிறானாம் என்று பவி தலையை ஆட்டினாள்.

பார்த்தும்மா..தலை நின்று விடாமல், அகில் உன்னை தேடுறானாமே? கைரவ் கேலியாக கூற,

நீ அவள கிண்டல் பண்றியா? ஆனா நீ..என்று நித்தி பேச, எங்களுக்கு நேரமாகுது. வா..கிளம்பலாம். உன்னோட வீடு எங்க இருக்கு? கைரவ் அனிகாவிடம் கேட்க,

அவள் பயத்துடன், அங்க தான் போகணுமா?

நீ தான் எதையோ எடுக்கணும்னு சொன்ன?

நான் சொன்னேன்.ஆனா..நீ..

டேய்..நீ ஒட்டு கேட்டியா? பவி அவனருகே வர, நீங்க சத்தமா தான பேசிக்கிட்டு இருந்தீங்க? தானா காதுல விழுந்தது என்று நிற்காமல் வா..அனிகா என்று அவளை இழுத்து சென்றான்.

டேய்..அவங்க வீட்ல.. எதுக்கும் கவனமா போயிட்டு வாங்க என்று பவி சத்தமிட, கைரவ் கையசைத்து நான் பார்த்துக்கிறேன் என்றான். அனிகா புன்னகையுடன் கைரவ் கையை பிடித்துக் கொண்டு சென்றாள்.

கைரவுடன் பைக்கில் கட்டு போட்ட கையுடன் ஏறி முடியாமல் அனிகா திணற அவன் பைக்கை நிறுத்தி, ஒரு கையால் பைக்கை பிடித்துக் கொண்டு, அவளது கையை பிடித்து பைக்கில் ஏற்றி விட்டு, அவன் வண்டியை எடுத்தான். அவள் கையை அவனது தோளில் வைக்க கையை கொண்டு வந்து எடுத்தாள். மீண்டும்  மீண்டும் அவள் செய்து கொண்டிருக்க, அவன் நிறுத்தி அவளை பார்த்தான்.

எனக்கு பிடிக்க எதுவும் ஏதுவாக இல்லை. கை வேறு ரொம்ப பெயினா இருக்கு என்றாள்.

அவனே அவளது கையை பிடித்து அவன் தோளில் வைத்தான். அவள் அழுந்த கை வைக்க, இருவரின் பயணமும் புன்னகையுடன் சென்றது. ஆனால் தெரியாதது போல் காட்டிக் கொண்டனர்.

அவள் வீட்டிற்கு சென்றதும் அவள் தயங்கி நிற்க, வா..என்று கையை பிடித்தான். அவள் பயத்தில் கையை எடுத்து விட்டு உள்ளே செல்ல, வேலைக்காரர் ஒருவர் ஓடி வந்து,

எங்கம்மா..போன? நீ ஓடி போயிட்டன்னு சொன்னாங்க. அம்மா எங்க? கேட்டார் அவர்.

அம்மாவா? உங்களுக்கு தெரியாதா? என்று கத்தினாள்.

என்னாச்சும்மா? நீங்க வேற மாதிரி பேசுறீங்க? அடி வேற பட்டுருக்கு?

அம்மாவை அவங்க கொன்னது தெரியாதா? என்னை கொல்லப்பார்த்தது தெரியாதா? போதும்..என்னோட அம்மாவுக்காக தான் நான் அமைதியா இருந்தேன். உங்க அய்யா..வந்தாருன்னா கல்லூரியில் என்னோட மேமிடம் சொல்லுங்க. நான் அவரை கடைசியா பார்த்துட்டு போறேன் என்று கண்ணீருடன் கைரவ் நீ இங்கேயே இரு உள்ள வராதே என்று உள்ளே சென்று அவள் அம்மா வாங்கி வைத்ததை மட்டும் எடுத்து வந்தாள்.

வேலைக்காரர் கைரவிற்கு ஏதோ கொடுக்க, அவன் குடிக்க வாயில் வைத்தான். வேகமாக ஓடி வந்து அதை தட்டி விட்டு,

ஏன்டா, யார் என்ன கொடுத்தாலும் குடிச்சிடுவியா? விஷம் ஏதும் வைச்சிருக்கப் போறாங்க என்று கத்தினாள்.

நானாம்மா? உங்களுக்கு விஷமா? என்று கலங்கினார்.

நான் வந்த வேலை முடிஞ்சது. வா..போகலாம் என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.

அனி..நில்லு என்றான் கைரவ்.

அனியா?..என்று அவனை பார்த்தாள்.

அவரிடம் மன்னிப்பு கேள் என்றான்.

என்னடா சொல்ற? எதுக்கு கேட்கணும்?

இல்ல தம்பி இருக்கட்டும்.

இவங்க எல்லாரும் சேர்ந்து தான் எங்கள கொல்ல திட்டம் போட்டு என்னோட அம்மாவை கொன்னுட்டாங்க. இவங்க கொலைகாரங்க.

அம்மா..அப்படி மட்டும் சொல்லாதம்மா. யார் என்ன செஞ்சாங்கன்னு எனக்கு உண்மையாகவே தெரியாது. நீங்க புறந்தப்ப நான் இங்க வந்தேன்ம்மா.. அம்மாவிற்கு விசுவாசமான ஆளா தான் இருந்திருக்கேன். என்னை பார்த்து என்ன சொல்லீட்டீங்க?

நீங்க காலையில எங்க போனீங்க?

எல்லாரையும் வேலையிலிருந்து போக சொல்லி தான எல்லாமே பண்ணாங்க.

காரணம் சொல்லாமலா உங்களையும் அனுப்பி இருப்பாங்க.

இல்லம்மா. எனக்கு காரணமெல்லாம் தெரியாது. நேற்றே நீங்களும் அம்மாவும் விடியற்காலையிலே திருமண விழாவிற்கு போவதாக சொல்லி அம்மா தான் என்னிடம் மாலை வரச்சொன்னாங்க. அதனால் கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வந்தேன். ஆனால் வாட்ச்மேன் கூட இன்னும் வரலை. ஆனால் அம்மா..என்று கலங்கியவர்.

அம்மாவை கொன்னுட்டாங்களா? என்னாச்சும்மா? என்று கண்ணீருடனும் பதட்டமாகவும் கேட்டார். அவள் நடந்ததை கூற,

நீங்க என்னம்மா செய்யப் போறீங்க? அம்மா உங்களுக்காக தான் இங்க இருக்கவே செஞ்சாங்க. நீங்க பிழைச்சு வந்தது ரொம்ப சந்தோசம்மா.

அம்மா..நீங்க போயிருங்க. அவனுக கண்டிப்பா வருவாங்க. தம்பி யாரும்மா?

அவள் என்ன சொல்ல என்று யோசித்தாள். நாங்க ப்ரெண்ட்ஸ் தான். நான் அவளை அழைத்து செல்கிறேன்.

ஆமாப்பா. பாப்பாவ நல்லா பாத்துக்கோங்க. சீக்கிரம் போங்க. அவங்க இவ்வளவு நேரம் வராம இருந்ததே அதிசயம். சீக்கிரம்..

என்னை மன்னிச்சிருங்க அங்கிள். கோபத்தில் வாய்க்கு வந்ததை பேசிட்டேன் என்றாள் அனிகா.

அதெல்லாம் ஒன்றுமில்லை. நீங்க நல்லா இருக்கணும்மா என்று இருவரையும் அனுப்பி வைத்தார். அவன் உதவி செய்து அவளை அமர வைத்து அழைத்து சென்றான். அவள் அம்மா நினைவிலேயே அவன் தோளில் சாய்ந்து கொள்ள, கைரவும் அமைதியாக வந்தான்.