அத்தியாயம் 27

பகலவன் தன் மலைக்காதலியை சந்திக்கும் நேரத்தை எதிர்பார்த்த நேரம் ஆதேஷ் அறைக்கு தேனீர் தரப்பட, அவன் அருந்திக் கொண்டே சன்னல் வழியே வேடிக்கை பார்த்தான். ஜானுவும் அவள் அறையில் அவனை போல் பார்த்துக் கொண்டே தேனீரை அருந்திக் கொண்டிருந்தாள்.

நாய் சத்தம் அதிகமாக கேட்க பக்கத்து சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அங்கே அவர்களது சோலையில் சாம்சங்கை நாய் ஒன்று விரட்ட, கையிலிருந்ததை கீழே விட்டு வேகமாக ஓடினாள்.

ஆமாம்..இதுக எங்க போகுதுக? அப்பத்தா கேட்க, துகிரா எழுந்து ஜானுவை பின் தொடர்ந்தாள்.

அவளுக்கு முன் அங்கே ஆதேஷ் இருந்தான். சாம்சங் அவனை நோக்கி ஓடி வந்து அவன் மீது ஏறிக் கொண்டது. பதறி வந்த ஜானு பார்த்தது ஆதேஷ் கையில் சாம்சங்குடன் அந்த நாயை குச்சி வைத்து விரட்டிக் கொண்டிருந்தவனை. அவனிடம் சென்றவள் சாம்சங்கை வாங்கினாள்.

டேய்..நீ வீட்டுக்குள்ள போயிருக்கலாம்ல. உனக்கு ஒன்றுமில்லையே என்று அந்த நாயை முறைத்து பார்த்து மாமா அதை கொடு என்று அவனிடமிருந்து அந்த குச்சியை வாங்கி நாயை விரட்டினாள். அவளுக்கு பயந்து அதுவும் ஓடி விட்டது. ஆனால் சாம்சங் அவளிடமிருந்து ஆதேஷிடம் தவ்வியது.

இங்க..வா..சாம்சங் வாடா..என்று கொஞ்சியபடி அழைத்தாள்.

அது ஆதேஷை பார்த்தது. அவன் அவளை தான் பார்த்தான். இல்லை ரசித்துக் கொண்டிருந்தான். அவனை விட்டு வர மாட்டேன் என்றது.

ஏற்கனவே அவள் அண்ணா விசயத்தில் வருத்தமாக இருந்தாள். இப்பொழுது சாம்சங்கும் வர மாட்டிக்கிறான்னு அழுகையே வந்தது ஜானுவிற்கு. அவள் அழுகை கண்டு சுயம் வந்த ஆதேஷ், எதுக்கு அழுற?

மாமா..அவனை பார்த்தவள் அழுது கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

ஜானு நில்லு..நில்லு..என்று அவள் பின்னே ஓடி சென்று அவளது கையை பிடித்தான். அவள் திரும்பி அவனை பார்த்தாள்.

இரண்டு நாளா என்ன செஞ்சுக்கிட்டு இருந்த ஜானு? அவனை பார்த்தியா? அவன் கேட்டவுடன்,

மாமா..நான் டென்சன்ல மறந்துட்டேன்.

சாம்சங் சாப்பிடலையா? அதான் நீ உள்ள போகலையா? என் மேல கோபமா இருக்கிறியா? அச்சோ..உனக்கு பசிக்குதா? என்று அவனது கையை எடுத்து விட்டு மீண்டும் அதனிடம் பேசினாள்.

கேட்டது நான். நீ அவன் கிட்ட பேசுற?

மாமா..அவனுக்கு பசிக்கும். அண்ணா..அண்ணா..என்று கத்தியவள் மறந்துட்டோமே? என்று தன் இமைகளை தாழ்த்தி பின் பொன்னய்யா என்று சமாளித்து அவனிடமிருந்து சாம்சங்கை வாங்கி கொண்டு ஓடினாள்.

அவள் பிரதீப் மாமாவை மிஸ் பண்றாளோ? என்று யோசித்தவாறு அவனும் பின் சென்றான். அவன் பின் துகிராவும் சென்றாள்.

ஜானு சாப்பாட்டை சாம்சங்கிற்கு வைத்து விட்டு, அவரை திட்டிக் கொண்டிருந்தாள்.

ஜானு..அவரை எதுக்கு திட்டுற? அவரை தான் நீ பார்த்துக்க விட மாட்டேல ஆதேஷ் கேட்க,

அதுக்கு அவனை அப்படியே விட்டுருவாங்களா? நான் பார்த்துக்கலைன்னா அவங்க தான் பார்த்துக்கணும்.

நீ ஏன் பார்த்துக்கல?

என்னால முடியல. கொஞ்சம் டென்சன்ல இருந்தேன். அதான் மறந்துட்டேன்.

அப்படி என்ன டென்சன் உனக்கு?

ஜானு கண்ணீருடன் திரும்பி நின்றாள். அவள் முன் வந்து, சொல்லு அப்படி என்ன டென்சன்? என்று அவளை நெருங்கினான்.

என்னிடம் ஏதும் கேட்காதீங்க மாமா. இனி சாம்சங்கை நல்லா பாத்துப்பேன் என்று அதனுடன் அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

தாவணி சேறாக போகுது ஜானு எழுந்திரு என்று துகிரா கூற, பரவாயில்லை அண்ணி. நான் சரி செய்து கொள்வேன் என்று ஆதேஷிடம் பேச்சை தவிர்த்து, சாம்சங் இன்னொன்னு சாப்பிடுறியா? என்று கேரட்டை கொடுத்தாள்.

அதை கவனித்துக் கொண்டே, நீங்க போங்க. நான் வாரேன் என்றாள். யாரும் பேசாமல் அமைதியாக இருக்க எல்லாரும் போயிட்டாங்க என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு எழுந்தாள். ஆதேஷ் கையை கட்டிக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

மாமா..நீங்க போகலையா? சித்தி சாப்பிட ஏதாவது செஞ்சு வைச்சிருப்பாங்க. நல்லா இருக்கும் என்று சாம்சங்கையை கையில் தூக்கிக் கொண்டு எழுந்தாள்.

நீ சொல்லப் போறியா? இல்லையா?

என்ன மாமா சொல்லணும்? இருங்க வாரேன் என்று சாம்சங்கை அதன் இடத்தில் விட்டு குழாய் ஒன்றில் அவளது தாவணியை அலசினாள். மேலுள்ள மடிப்பை விட்டு சுற்றியுள்ள தாவணியை எடுத்து அலசிக் கொண்டிருந்தாள். அவள் செய்கையில் அதிர்ந்த ஆதேஷ் திரும்பி நின்று, ஜானு..என்ன பண்ற?

மாமா..இங்க நம்ம வீட்ல இருக்கிறவங்கள் தவிர யாரும் வர மாட்டாங்க என்று பேசிக் கொண்டே அவன் அருகே வந்து அவளது இடுப்பில் மாட்டிக் கொண்டிருந்தாள். அவன் கண்கள் அவளது இடையை வருட,வாங்க போகலாம் என்று அவள் முன் செல்ல, அவன் பதட்டமாக வேறு வழியில் நகர்ந்தான்.

மாமா, அங்க போகாதீங்க சேறா இருக்கு என்று ஆதேஷ் பக்கம் ஓடி வந்தாள். அதற்குள் அவன் சேற்றை மிதிக்க, அது அவன் காலை வாரியது. மாமா என்று அவனது கையை பிடிக்க, அவளும் அவன் மீதே விழுந்து அவள் இதழ்கள் ஆதேஷின் கன்னத்தில் பதிந்தது.

மாமா..என்று தன் வாயில் கை வைத்து வேகமாக எழுந்தாள். அவன் உறைந்து இருக்க, அவள் நகர அவளது தாவணியை பிடித்து இழுத்தான் ஆதேஷ். மாமா என்று அவள் மீண்டும் அவன் மீது விழ, அவளை சட்டென திருப்பி சேற்றில் தள்ளி விட்டு எழுந்து செல்ல, அவளும் எழுந்து அவன் மீது கோபமாக அவன் பின்னே ஓடினாள்.

உள்ளே அனைவரும் பதார்த்தங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஆதேஷ் சினத்துடன் முகத்தை கடுகடுப்புடன் உள்ளே சென்றான்.

அவன் ஆடையும் ஜானு ஆடையும் சேறாய் இருக்க, அவனை பார்த்த லலிதா ஆது, என்னடா பண்ணிட்டு வந்துருக்க? அவனிடம் வந்தார். பின்னே வந்த ஜானுவை பார்த்து, ஜானு..என்று சிரிக்க ஆரம்பித்தார். துகிராவும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.

ஆன்ட்டி, சிரிக்காதீங்க. செம்ம கோபத்துல இருக்கேன்.

ஏய், நீ என்ன கோபத்துல இருக்க? நான் தான் கோபப்படணும்? என்று ஆதேஷ் கொந்தளித்தான்.

மாமா நீங்க தான் என்னை தள்ளி விட்டீங்க? நான் தான் கோபப்படணும்.

நானா? முதல்ல ஆரம்பிச்சேன் என்று அவளை நெருங்கி வந்தான்.

ஆமாம் நீங்க தான் ஆரம்பிச்சீங்க?

நானா? என்று கோபமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.

ஏன்டி, வீட்டுக்கு வந்த பிள்ளைக்கிட்ட உரண்ட இழுக்கிற? அப்பத்தா கேட்டார்.

ஏய்..கிழவி, நடந்தது தெரியாமல் பேசாத என்று அவளும் அறைக்கு சென்றாள். துகிரா இருவரும் நின்ற கோலத்தை எண்ணி கேலி செய்து அனைவருக்கும் வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் குளித்து விட்டு பால்கனிக்கு வந்தனர். இருவரும் பக்கத்து அறை தான். ஜானு தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தாள். ஆதேஷ் கையில் போனை பார்த்தவாறு அங்கே வந்து நின்றான். முதலில் இருவரும் கவனிக்கவில்லை.

அந்த மங்கிய ஒளியில் அவளது கூந்தல் அசைய, ஆதேஷ் மனதையும் அசைத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, அவர்களை அறியாமலே அவர்கள் பார்வை அவ்விடத்தை பார்க்க, ஆதேஷ் கை அவன் கன்னத்தை தொட்டுப் பார்த்தது.

ஜானு அவன் செய்கையில் நாணி உள்ளே சென்றாள். அவள் வெட்கத்தை பார்த்தவன் உதட்டில் சிறு புன்னகை எட்டி பார்த்தது.

ஜானு வீட்டிற்கு வெளியே புத்தகங்களுடன் அமர்ந்திருந்தாள். ஆதேஷ் அர்ஜூனிடம் போன் பேசிக் கொண்டே வந்தான்.

ஓ.கே அண்ணா. மாமாவிடம் பேசிட்டீங்களா?

நான் இப்ப கூட தயார் தான். கண்டிப்பா பைல்ஸ் அனுப்புறேன்.

மாமாவா? ஆதேஷ் நீ அவர்களுடன் ஒன்றி விட்டாய் போல?

அண்ணா, மாமா தான் அழைக்க சொன்னார்.

பார்த்துடா. அபிக்கு பிரதீப் அண்ணான்னா என்ன வேண்டுமானாலும் செய்வான்? உங்க நெருக்கத்தை பார்த்து பொறாமை வந்து விடாமல்?

பொறாமையா? என்று சிரித்தான். ஜானு அவனை பார்த்தாள். அவள் ஒருத்தி இருப்பது கூட அறியாமல் பேசிக் கொண்டிருந்தான்.

நான் என்ன பொண்ணா? பொறாமை பட..என்று மேலும் சிரித்தான்.

டேய்..உனக்கு புரியல. அபியும் அண்ணாவும் ரொம்ப நெருக்கம்.

சீனியர்..நோ..அண்ணாவாம்.

அண்ணா..அபி சீனியரை சீனியர்ன்னு சொல்லக்கூடாதாம். அண்ணாவாம்..

உங்கள எப்ப அண்ணான்னு கூப்பிட ஆரம்பிச்சேனோ? அப்போதிலிருந்து எனக்கு நிறைய சொந்தம் கிடச்சது போல இருக்குண்ணா. “யூ ஆர் மை லக்கி பர்சன்”..

போதும்டா. மறந்துடாத..எல்லாத்தையும் கரெக்டா நோட் பண்ணு.

ஓ.கே அண்ணா. மேம் வாராங்களா? அபி அண்ணா வராம வருவாங்களா?

வருவாங்க..எல்லாரும் வீட்ல தான் இருக்கோம்.

அப்பாடா..பிராபிளம் சால்வா?

இனி தான் ஆரம்பம். ஆது  நான் கூறும் போது  நீயும் விடுமுறை எடுக்கணும்.

எதுக்குண்ணா? எப்ப?

தேர்ஸ்டேல இருந்து.

தேர்ஸ்டேல இருந்தா? எத்தனை நாள்?

தெரியாது.

வாட்? தெரியாதா? என்னால முடியாதுண்ணா.

டேய்..பிராபிளம் சீரியசா போய்கிட்டு இருக்கு. அங்க ஏற்கனவே அவங்க ஆள் இருக்காணுக.

அண்ணா..யாருன்னு மாமா கண்டுபிடிச்சிட்டாரா?

ம்ம்..கவனிச்சுகிட்டு தான் இருக்கார்.

மாமா சூப்பர் தான்.

ஏன் அவங்கள தீனா மாமா பார்த்துக்க மாட்டாங்களா?

காரணம் இருக்குடா. எதுக்கும் எல்லாரும் கவனமாவே இருங்க என்று போனை துண்டித்தான்.

ஆளை கண்டுபிடிச்சும் எதுக்கு விட்டு வைச்சிருக்காங்க என்று ஜானு அங்கிருப்பதை கூட பாராமல் அமர்ந்தான். பேசிக் கொண்டே திரும்பி அவளை பார்த்து, நீ இங்க என்ன பண்ற?

நானா? ரொம்ப நேரமா நான் இங்க தான் இருக்கேன். ஆதேஷ் போன் ஒலிக்க,ம்ம்..மாமா வாரேன். ஆனா எனக்கு அவங்க வீடு தெரியாதே?

யாரிடமாவது கேட்டு வா மாப்பிள்ள என்று பிரதீப் போனை துண்டித்தான்.

ஜானுவை பார்த்து, உனக்கு தீனா மாமா வீடு தெரியுமா? வழி சொல்லேன்.

அவள் கூற, அவனுக்கு தான் புரியவில்லை. நான் சொன்னது சரியா போச்சு. நீ மூளையில்லாத மாமா தான் என்று முணங்கினாள்.

என்ன?

ஒன்றுமில்லை மாமா. வாங்க நான் அழைத்து செல்கிறேன் என்று ஸ்கூட்டியை எடுத்தாள். அவன் பின் அமர்ந்து கொண்டான்.

சென்று கொண்டிருக்கும் போது திடீரென பிரேக்கை அழுத்தினாள். அவன் கை நேராக அவளது இடையில் அழுத்தமாக பிடித்தது. அவள் வண்டியை நிறுத்தி திரும்பி முறைத்தாள்.

தெரியாம மா? என்று கையை எடுத்த அவன் பார்வை அவள் இடையிலே இருந்தது. அவள் வண்டியை நிறுத்த உடல் உராய்ந்து சென்றது.

என்ன ஆது? எல்லாமே தப்பாவே நடக்குது? புலம்பிய படி கீழே இறங்கினான். புலம்பியவனை ஜானு ஓரச்சிரிப்புடன் பார்த்தாள்.