வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-13
323
ஹாய்..ப்ரெண்ட்ஸ்…
இதோ..உங்களுக்கான அடுத்த எபிசோடு 13
நித்தியும், யாசுவும் அர்ச்சுவை பார்த்துக் கொண்டே இருக்க, என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று அவன் கேட்டான்.
நாங்கள் சாப்பிட வரவில்லை யாசு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் கோபத்தை புரிந்து கொண்ட நித்தி அவளது கையை பிடித்து வேண்டாம் என்றாள்.
என்னடா, நீ நிறைய மாறியது போல் உள்ளது. தேவையில்லாத பழக்கமெல்லாம் இருக்கிறது போல நித்தி கேட்டாள்.
இதை பேச தான் வந்தீர்களா?
நடந்தவற்றை அர்ச்சுவிடம் கூறி முடிக்க, அவன் அமைதியாகவே இருந்தான்.ஸ்ரீயும் நிவாசும் உள்ளே நுழைந்தனர்.ஸ்ரீ நீ இங்கேயே அமர்ந்திரு.உன்னால் வெகு நேரம் நிற்க முடியாது.நான் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு விட்டு வருகிறேன் என்று மறைவான இடத்தில் உட்கார வைத்து விட்டு, அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பக்கம் செடிகளால் திரையிடப்பட்ட இடத்தில் அமர்ந்து பேசுவதை செடியை விலக்கி பார்த்தும் கேட்டுக் கொண்டும் இருந்தான் நிவாஸ்.
மனவலியை உள்ளிழுத்தவாறு முகத்தை சாதாரணமாக வைத்தவன்,அப்படியா? என்று கேட்டுக் கொண்டு ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். யாசு அவனருகே வந்து அவளது பையை எடுத்து அடித்து விட்டு,
என்னடா, நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவளை விட்டு கொடுத்து விடுவாயா? நீ என்ன பெரிய தியாகின்னு நினைப்பாடா? யாசு அர்ச்சுவை அடிக்க, ஸ்ரீயும் எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்பொழுது என்ன செய்ய சொல்கிறாய்? அவள் அகிலையே மறந்து விட்டாள். அவளிடம் சென்று என் காதலை மறுபடியும் கூற சொல்கிறாயா? அவளுக்கு என்னையும் தெரியவில்லை தானே!
நித்தி அமைதியாக, எனக்கு தெரியும் டா…என்றாள்.
என்ன? புருவத்தை அழகாக அவன் ஏற்ற,
அன்று ஸ்ரீயின் கடத்தலன்று நீ அவள் பக்கம் தானே இருந்தாய்? அங்கிள் கூறினார்கள்.
அர்ச்சு நித்தி அருகே வந்து, ஏதும் பேசாதே! அவளது வாயில் கையை வைக்க
ஓ….இது வேறயா? யாசு கேட்க,
அவள் கையை எடுத்து விட்டு, நீ தான் போலீசுக்கு அவர்கள் இருந்த இடத்தை காண்பித்தாய்? அங்கிளிடமும் கூறி இருக்கிறாய்? நித்தி கூற,
இதையாவது அகிலிடம் கூறி இருக்கலாமே! யாசு கேட்க,
தேவையில்லை யாசு. அவனுக்கு ஏதும் தெரிய வேண்டாம்.
பசங்க கூறியதை போல் அவளுக்கு எல்லாம் நினைவு வந்தவுடன் கிளம்பி விடுவாயா?
எனக்கு என்னுடைய காதலை விட அவளது சந்தோசம் தான் முக்கியம் என்றான்.
சாரிடா அர்ச்சு, அவளுக்கு இப்பொழுதும் அகிலை தான் பிடித்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.
அவன் கண்கள் கலங்க, அது தான் சரி….என்றான்.
என்ன பேசுகிறாய்? யாசு கேட்டாள்.
ஆமாம் யாசு. அகில் என்னிடம் பேசி தான் அழைத்து வந்தான். அவளுக்கு என் காதல் தெரியக் கூடாது என்றும் அவளுக்கு அகிலை பிடித்திருந்தால் பிரச்சனை முடிந்தவுடன் இருவருக்கும் இடையில் நான் இருக்க கூடாது என்று கூறி தான் அழைத்து வந்தான்.
எனக்கும் சரி என்று தான் பட்டது.அதை நான் ஒத்துக் கொண்டு தான் வந்தேன்.
நித்தியும் கோபமாக, அவன் இப்படியா பேசி உன்னை அழைத்தான்? நீ ஒத்துக் கொண்டிருக்க கூடாது.
எனக்கு அப்பவே தெரியும் அவன் செய்வான் தான் யாசு கூறினாள்.
என்ன நித்தி, நீயும் யாசு மாதிரி யோசிக்கிறாய்?அவளுடைய சிரிப்பை விட வேரென்ன தேவை நமக்கு அர்ச்சு கூறியவுடன் நித்தி யாசு கண்ணில் நீருடன், நம் ஸ்ரீ உண்மையாகவே ராசியில்லாதவள். உன்னை மாதிரி ஒருவனை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டாளே! வருத்தப்பட்டனர். ஸ்ரீக்கு இவர்கள் பேசுவது கேட்கவில்லை. பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
நிவாஸ் ஆர்வமுடன் அர்ச்சுவை பார்த்தான். ஸ்ரீ மேல் இவனுக்கு இவ்வளவு காதலா? என்று நெகிழ்ந்தும் போனான். அவனுக்கு அர்ச்சுவை பிடித்து விட்டது.
ஸ்ரீக்கு அப்பொழுதும் அகிலை தான் பிடித்தது. இப்பொழுதும் அவனை தான் பிடிக்கிறது. எனக்கு அவள் பாதுகாப்பாக இருந்தால் அதுவே போதும்.
நீங்கள் கூறியதை வைத்து பார்த்தால், அவளுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது.அதனால் தான் ஜிதினை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறுகிறாள். சீக்கிரமே அதை கண்டுபிடிக்க வேண்டும் என்றான்.
நிவாஸ் அகிலுடன் தனியாக பேசினான். என்னவென்று தெரியவில்லை நித்தி கூறினாள்.
நித்தி, நீங்கள் நிவாசை பயன்படுத்திக் கொண்டு அவளை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பது தவறு. அவனுக்கு அவள் தம்பி என்றால் ஸ்பெசல். அவனை காயப்படுத்துவது தெரிந்தால் அவள் மிகவும் கஷ்டப்படுவாள். நம்மை எந்த விசயத்திலும் நம்ப மாட்டாள். நீங்கள் கூறியதிலிருந்து எனக்கு சரியாக படவில்லை.ஜிதின் வாயிலிருந்து வர வைக்கலாமே! என்று பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீ எழுந்தால் போல, அவள் நிற்க முடியாமல் கீழே விழுந்தாள்.சத்தம் கேட்டு அனைவரும் அவளை பார்க்க, சைலேசும் அங்கே கம்பெனி விசயமாக ஒருவரை சந்திக்க வந்திருப்பான்.அவன் ஸ்ரீயை பார்த்து, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று அவளருகே வந்து கொண்டிருந்தான்.
அர்ச்சு, நித்தி, யாசுவும் பார்த்து விட்டு, நம்முடைய ஸ்ரீயா? நிவாஸ் வேகமாக சுற்றி வேறு வழியாக வெளியே வந்தான்.அதற்குள் அர்ச்சு ஸ்ரீ கீழே விழுந்திருப்பதை பார்த்து, பதறி வேகமாக சைலேஷ் வருவதற்குள் ஓடி வந்து அவளை தூக்கி விட, அர்ச்சுவை பிடித்துக் கொண்டு ஸ்ரீ நிற்க, சைலேஷ் அவளை பிடிக்க வர, அர்ச்சு அவனது கையை தட்டி விட, அர்ச்சு தவறி கீழே விழுந்தான். அவன் மீது ஸ்ரீ விழ, அவனை நுகர்ந்தாள். அவன் கீழே விழுந்ததில் அவனுக்கு தலையில் அடிபட்டது.
ஸ்ஸ்…ஆ… என்றான் தலையை பிடித்தவாறு.
பின் ஸ்ரீயிடம் “ஆர் யூ ஆல் ரைட்”? கேட்டான். அவள் அவனது தலையை தேய்த்து விட, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சைலேஷ், நித்தி, யாசு, நிவாஸ் அனைவரும் பார்த்துக் கொண்டனர்.
நிவாஸ் ஸ்ரீயை தூக்கி விட, அர்ச்சு எழுந்து நிவாசை திட்ட ஆரம்பித்தான்.
அவளை அழைத்து வந்தால் ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாதா? பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் எதற்காக அழைத்து வந்தாய்?கத்தினான்.
நான் தான் அவனை அழைத்து வந்தேன்.நீ எதற்கு அவன் மீது கோபப்படுகிறாய்? என்று ஸ்ரீ கோபமாக அர்ச்சுவை விட்டு நிவாஸ் தோளில் கையை போட்டுக் கொண்டு அர்ச்சுவை முறைத்தாள்.
அவன் கண்ணீரோடு, நம்முடைய பழைய ஸ்ரீ தான் மனதினுள் நினைத்துக் கொண்டு அர்ச்சு அவளை பார்த்து விட்டு, அவளை உட்கார சொன்னான்.அனைவரும் அவளை கவனிக்க,நிவாஸ் மட்டும் அர்ச்சுவை பார்த்தவாறு இருந்தான்.
நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?அர்ச்சு கேட்டான். ஸ்ரீ சாப்பாட்டை கை காண்பித்தாள்.
யாசு சைலேஷை கேட்க, கம்பெனி விசயமாக வந்தேன் என்று நித்தியை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.இதை கவனித்த அர்ச்சு நித்தியிடம் கண்ணாலே சைலேசிடம் பேச சொன்னான்.அவள் முடியாது என்று தலையசைத்தாள்.
இவள் உங்களிடம் பேச வேண்டுமாம். உங்களது வேலை முடிந்ததா?
அதெல்லாம் ஒன்றுமில்லை நித்தி கூறினாள்.
என் வேலை முடிந்தது என்றான். சுற்றி வண்ண வண்ண விளக்குகளை போட, அவ்விடம் முழுவதும் அழகாக இருக்க, அர்ச்சு ஸ்ரீயை பார்க்க, அவள் மகிழ்ச்சியுடன் அங்கிருக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு சிரித்தாள்.அதை பார்த்த அர்ச்சுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.நிவாஸ் அர்ச்சுவையே கவனித்தான்.நித்தியும், சைலேசும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ கண்களோ அகிலை தேட, இதை அர்ச்சு புரிந்து கொண்டு அங்கிருந்து சென்றான். யாசு பின்னே செல்ல,அங்கே ஒரு பெண் அர்ச்சு முன் வந்தாள்.
ஏய், நீ இங்கே என்ன செய்கிறாய்?அர்ச்சு கேட்டான்.
நந்து என்று அந்த பெண் அழைக்க, அங்கே வந்தவனை கை காண்பிக்க,
ஏன்டா, அவளிடம் கூறினாய்?அர்ச்சு அந்த பையனை முறைக்க, அவளிடம் என் போன் மாட்டிக் கொண்டது என்றான் கடுகடுப்பான குரலில்.
மேகா, அவனது போனை அவனிடம் கொடு கூறினான் அர்ச்சு..
யாருடா இந்த பொண்ணு? என்று யாசு சத்தமாக வினவ, அனைவரும் இவர்களை பார்த்தனர்.
அர்ச்சு.. என்று நித்தியும் வர அனைவரும் அவனருகே வந்தனர் ஸ்ரீயை தவிர, அவளுக்கு கால் வலிப்பதால் எழாமல் இருந்தாள். அவர்களையும் ஸ்ரீ இருக்கும் டேபிளுக்கு அழைத்து வந்தனர்.
எங்க அர்ச்சு எந்த பொண்ணையும் பக்கத்திலே விட மாட்டானே? யாசு கேட்க,
அட, ஆமாப்பா…அவனிடம் பேசினால் நம்மை தான் பைத்தியம் என்பார்கள்.அப்படி தான் நடந்து கொள்வான். எல்லாம் அந்த பெண்ணால் என்று கூற வந்த மேகாவை இழுத்துக் கொண்டு,
யார் முன்னே பேசுகிறாய்? அவளிடம் கேட்க, அவள் அப்பொழுது தான் ஸ்ரீயை பார்த்தாள்.
டேய், அந்த பொண்ணு தானே! வாடா பேசலாம் என்று அர்ச்சுவை தள்ளி விட்டு ஆர்வமாக ஸ்ரீ அருகே சென்று,
நீ எப்படி இருக்கிறாய்? ஸ்ரீ தலையை தொட வந்த மேகா கையை பிடித்து வேகமாக இழுத்தான் அர்ச்சு. அவள் கத்த ஆரம்பித்தாள்.
வலிக்கிறதா? சாரி…சாரி….என்று முகத்தை ஒருவாறு வைத்து அவன் அவளை சமாதானப்படுத்துவதை பார்த்த ஸ்ரீக்கு ஏதோ தோன்றவே தலை வலிக்க ஆரம்பித்தது. சிறுவயது அர்ச்சு முகம் கண் முன் வந்தது ஸ்ரீக்கு.
சைலேஷ் ஸ்ரீயை பிடிக்க, அவள் டேபிளிலே சாய்ந்தாள். அர்ச்சு இதை பார்த்து அங்கே வர, நிவாஸ் அவர்களிடம் தள்ளி இருங்கள் என்று அனைவரையும் நகர வைத்து நீரை தெளிக்க உடனே விழித்தாள். அவள் கண்ணிலிருந்து அவளை அறியாமலே கண்ணீர் வர, அர்ச்சுவை பார்த்தாள்.அவன் அவளருகே வர, வா கிளம்பலாம் என்று நிவாசை அழைத்தாள் ஸ்ரீ.
நாங்கள் வருகிறோம் என்று அர்ச்சுவிடம் கூற, அவனை முறைத்து விட்டு அவள் செல்ல, சைலேஷ் நான் உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன் கூறி காரை எடுத்தான். அர்ச்சு வருத்தமாக அங்கேயே இருக்க, ஸ்ரீ காரில் ஏறும் முன் அர்ச்சுவை பார்த்து கண்கலங்கிக் கொண்டு ஏறுவதை நிவாஸ் ஏதும் கூறாமல் பார்த்தான். ஸ்ரீ காரில் ஏறிய பின்னும் அர்ச்சுவை திரும்பி பார்த்துக் கொண்டு வந்தாள்.அவள் நிவாஸ் தோளில் சாய்ந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அழுவதாக நினைத்து நிவாஸ் சட்டையை ஈரமாக்கி கொண்டு வந்தாள்.
நான் தவறான ஆளை தேர்ந்தெடுத்து விட்டேனோ! என்று நிவாஸ் அகிலிடம் பேசியதையும், அர்ச்சு, யாசு, நித்தி பேசியதையும் நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தனர். ஸ்ரீ வேகமாக தூங்கி விட்டாள். நிவாஸ் யோசித்த படி படுத்திருந்தான்.
அனைவரும் அர்ச்சுவை சமாதனப்படுத்த, எனக்கு தான் தெரியுமே அவளுக்கு என்னை பிடிக்காது என்று வருத்தமாக கூறி விட்டு, நித்தி நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். நாம் இன்னொரு நாள் பார்க்கலாம் அர்ச்சு நந்துவிடம் மேகாவையும், அர்ச்சு நித்தி, யாசுவையும் அவர்களது இடத்தில் விட்டு வீட்டிற்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தான்.