அத்தியாயம் 11
ஸ்ரீ வினிதா அக்காவிடம் அவள் சாவதை பற்றி பேசியதை சிந்தித்தான் அர்ஜூன். அவள் கூறியது போல் ஸ்ரீ ஏதும் செய்து விடுவாளோ? பயத்துடன் வெளியே வந்து ஸ்ரீயை பார்த்தான். அவன் அவளருகே அமர்ந்து அவள் தலையை கோதினான்.பின் அவள் கையை பிடித்து அவன் கைக்குள் வைத்து விட்டு,எனக்கு பயமா இருக்கு ஸ்ரீ. நீ தவறான முடிவு எடுத்து விடாதே? கண்ணீர் விட்டான்.
ஸ்ரீ விழித்து அவனை பார்த்து, அர்ஜூன் நான் எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டேன். நீ பயப்படாதே! என்றாள்.
எழுந்துட்டியா? என்று அவளது கால்களை பார்த்து இப்பொழுது ஓ.கே தானே? இன்னும் ரொம்ப பெயின் இருக்கா?
அர்ஜூன் வலி இருக்கு என்று மெதுவாக அமர்ந்தாள்.
அர்ஜூன்..அர்ஜூன்..என்று தயங்கியவாறு தாரிகா எங்கே? நான் ரெஸ்ட் ரூம் போகணும்?
வா..என்று அவளை தூக்க வந்தான்.நோ அர்ஜூன்.. அவளை கூப்பிடு.
இல்ல. அவள் கொஞ்சம் சோர்வாக இருக்கிறாள். அதனால் தான் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவளிடம் கையை நீட்டினான். அவளும் அவனை பிடித்து எழ, இடுப்பில் கை வைத்து அவளை நிற்க வைக்க, ஸ்ரீ உதட்டை கடித்து கால் வலியை மறைக்க நினைத்தாள்.
அர்ஜூன் அதை புரிந்து கொண்டு, அவளது இதழ்களை பிரித்து விட்டு, வலித்தால் அழு ஸ்ரீ. நான் இருக்கேன் என்றான்.
அதெல்லாம் ஒன்றுமில்லை அர்ஜூன் என்று சென்று வெளியே வந்தாள். அவள் தடுமாறுவதை வருத்தமுடன் பார்த்தவன் அவளை துக்க, வேண்டாம் அர்ஜூன் நான் நடக்கிறேன் ப்ளீஸ்.
அவளை இறக்கி விட்டு, அவளை தன்னுடன் அணைத்தபடி நடந்து வந்தான். கயல் ஸ்ரீயை கவனிக்க சொன்னது நினைவு வர, கண்ணாடி முன் அவளை நிறுத்த, அவள் கண்களில் கண்ணீர். அவள் அர்ஜூனை வேகமாக தள்ளி அவளும் நகர்ந்தாள். அவளால் முடியாமல் கீழே விழுந்தாள்.
ஸ்ரீ..என்று அர்ஜூன் ஓடி வந்து அவளை தூக்கி விட்டு, மீண்டும் கண்ணாடி முன் நிறுத்தி, அவளுடனும் அவனும் ஜோடியாக நின்றான் அவளை அணைத்தபடி.
அர்ஜூன்..வேண்டாம் ப்ளீஸ்.
ஸ்ரீ இதை நீ சமாளித்துதான் ஆகணும் என்று அவளை கண்ணாடியில் பார்க்க வைத்தான். அவன் கண்ணாடி அருகே சென்று அவள் பிம்பத்தை கண்ணாடியில் வருட, அவள் உணர்வுகள் வெளியே வர ஆரம்பித்தது.
நான் நினைப்பது தவறு என்று தனக்கு தானே கூறிக் கொண்டு, அர்ஜூன் வேண்டாம் என்று திரும்பி நின்றாள். அவன் அவளுக்கு பின் நின்று அவளது கூந்தலை ஒதுக்கினான். அவனது தாடையை அவளது தோள்பட்டையில் வைத்து அழுத்தியவாறு,
ஏன் ஸ்ரீ உன்னை பார்த்தால் உனக்கு பிடிக்கவில்லையா?
அவள் விலகி அவனை பார்க்க நினைத்து, விலக அவளால் நிற்க முடியாமல் அவள் அர்ஜூனின் சட்டையை பிடிக்க அர்ஜூன் ஸ்ரீ மீது விழுவது போல் இருக்க,சட்டென அவளை திருப்பி அவன் மீது ஸ்ரீ விழுந்தாள்.
இருவரும் நெருக்கமாக, அர்ஜூன் ஸ்ரீ கையை கோர்த்து இறுக்கமாக பிடித்தான். ஸ்ரீ எமோசனலாக அவனது மறுகையை அவளே பிடித்து அவள் கையுடன் கோர்த்துக் கொண்டாள். அர்ஜூன் கண்கள் விரிந்தது. ஆனால் ஸ்ரீயின் பார்வை அர்ஜூன் கை மேல் இருக்க, அவனை அவள் கவனிக்கவில்லை.
ஏதோ யோசித்தவனாக அர்ஜூன் ஒரு கையை பிரித்து எடுத்து ஏஞ்சல்..என்று தாபமுடன் அவளை அழைத்தான். இருவர் கண்களும் உரசிக் கொண்டிருக்க, அவளது கால் வலித்து விடாமல் இருக்க மெதுவாக தலையணையை அவள் காலுக்கு கொடுத்தான். பின் அவன் கையை அவளது இடையில் உலவ விட்டான். ஸ்ரீ மெதுவாக கண்களை மூடினாள் அவளை மறந்து. அர்ஜூன் மெதுவாக அவளது கழுத்தில் தன் மீசையை வைத்து உரசினான்.அவள் கண்கள் இறுக்கமாக மூட, அர்ஜூனால் ஸ்ரீயின் செயல்களை நம்ப முடியவில்லை.
பின் அவளை நெருங்கி அவளது இதழ்களை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.அர்ஜூனும் ஸ்ரீயும் தங்கள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். பின் தான் நினைவு வந்தவளாய் ஸ்ரீ அவன் இதழ்களிலிருந்து தன் இதழ்களை பிரித்து எடுத்து பதறினாள்.
அர்ஜூன்..அர்ஜூன்.. என்று ஸ்ரீ பதட்டமாக அவன் ஸ்ரீயை இறுக அணைத்தான். அர்ஜூன்..நோ..என்று அவனை விலக்கி விட்டு எழுந்து தடுமாறினாள்.
அர்ஜூன் சுயம் வந்து, நாம்..என்று பேச ஸ்ரீ பதட்டமானாள். அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள் ஸ்ரீ. அவள் தவறு செய்தது போல் அர்ஜூன்.. அர்ஜூன் சாரி..சாரி..
எதுக்கு ஸ்ரீ சாரி? நான் தான் சாரி சொல்லணும் என்று அறியாதது போல் அவன் பேச, அவளுக்கு நிம்மதியானது. அவன் என் காதலை கண்டறியவில்லை பெருமூச்சுவிட்டாள்.
ஸ்ரீ நீ என்னை ஏற்றுக் கொண்டாயா? மனதினுள் நினைத்த அர்ஜூனுக்கு ஸ்ரீயின் பெருமூச்சு நகைக்க வைத்தது. மனதினுள் சிரித்தவன் ஸ்ரீ..உனக்கு என்னை பிடிக்குமா? இல்லை..ஜஸ்ட் சிந்தித்தவன். நானே கண்டுபிடிக்கிறேன் என்று அவளை பார்த்தான்.
அவள் பதட்டத்தில் நகன்ற போது அவள் காலை வேகமாக நகர்த்தியதில் அவளுக்கு வலிக்க தொடங்கியது. அவள் கண்கள் கலங்க அவளது காலை பார்ப்பதை கவனித்த அர்ஜூன் பதறி அவளிடம் வந்தான்.
வலிக்குதா ஸ்ரீ? அவன் கேட்க, அவள் கண்களை சுருக்கி கண்ணீருடன் அவள் உதட்டை பற்களால் கடித்தபடி அவனை பார்த்தாள் பாவமாக.
அவளை தூக்கி வந்து படுக்கியில் உட்கார வைத்து, அவளது காலை தூக்கி அவன் மடியில் வைத்து ஊதிக் கொண்டிருந்தான். அவள் அவனையே கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அர்ஜூன்..போதும். இப்பொழுது பரவாயில்லை. தேங்க்ஸ் என்றாள்.
அவளிடம் சினத்துடன் வலித்தால் வலிக்குது என்று சொல்ல மாட்டாயா?
பழகி விட்டது அர்ஜூன்.
சாரி ஸ்ரீ. நாங்கள் முன்பே வந்திருக்கணும் என்று அவளருகே வந்தான்.
அவள் அவனது கன்னத்தை பிடித்து, அர்ஜூன் எல்லாரும் எனக்காக இந்த அளவு செல்வீங்கன்னு நான் நினைக்கவேயில்லை. ரொம்ப தேங்க்ஸ்டா.
யாருமில்லாமல் இருந்த போது சிரிப்பையே மறந்து இருந்தோம். ஆனால் புது விடியல் போல் எங்கள் வாழ்வில் நீங்கள் வந்த பின் தான் கொஞ்சம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
கொஞ்சம் தானா ஸ்ரீ?
அர்ஜூன்..என்று பேச தொடங்கிய ஸ்ரீ பேசாமல் அவன் கன்னத்திலிருந்து கையை எடுத்து படுத்துக் கொண்டாள். அர்ஜூனிற்கு அவள் மறைப்பது தெளிவாக தெரிந்தது.
ஸ்ரீ என்னை பாரேன் என்று அர்ஜூன் ஸ்ரீயை அவன் பக்கம் திருப்பினான். அவள் முகத்தினருகே வந்து அவளது கண்களை காதலுடன் பார்த்தான். அவளும் அவன் கண்கள் காதல் சொல்வதை பார்த்து பயந்து தலையை திருப்பினாள்.
அவன் மீண்டும் அவளை திருப்பி பாரு ஸ்ரீ..என்று அவளை பார்க்க, அவள் கண்கள் கண்ணீர் மழையை பொழிந்தது. அவன் தன்னை சோதிக்கிறான் என்று தெரியாது அவள் கண்கள் காதலாகி கசிந்துருகியது.
எதுக்கு ஸ்ரீ இந்த கண்ணீர்? தொட்டு காண்பித்து கேட்டான்.
அர்ஜூன்..ப்ளீஸ் எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கு. நாம் அப்புறம் பேசலாம் என்று படுத்துக் கொண்டு கண்களை மூடினாள்.
அவளுக்கு தன் மீது காதல் தான் வந்து விட்டதா? இல்லை என்னால் அவன் கஷ்டப்படுகிறான் என்று அழுகிறாளா? யோசித்த படி அமர்ந்தான்.
தாரிகா உள்ளே வந்தாள். நீ அவளுக்கு மருந்து போட்டு விடு என்று அர்ஜூன் வெளியே சென்றான். கண்களை திறந்தாள் ஸ்ரீ. தாரிகாவை பார்த்து, வேகமாக எழுந்து
தாரி..நீ பார்த்தாயா? ஸ்ரீ கேட்டாள்.
எனக்கு மட்டுமல்ல அவருக்கும் தெரியும்.
ஏன் ஸ்ரீ? நீ கூறாலாமே? எதுக்கு இப்படி கஷ்டப்படணும்?
ப்ளீஸ் தாரி. என்னிடம் எதுவும் கேட்காதே? ஸ்ரீ அழுதாள்.
அழாதே ஸ்ரீ. கஷ்டமா இருக்கு.
எனக்கு ஏன் இப்படி நடக்கணும் தாரி?
ஸ்ரீ உனக்கு தெரியாமல் தான் அனைத்தும் நடந்தது. அது உன் தவறல்ல. நீ அர்ஜூன் அண்ணாவிடம் உன் காதலை கூறலாமே? அவன் தான் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லையே?
நானும் அன்றே சொல்ல நினைத்தேன். ஆனால் என்னை நானே இழந்திருப்பேன் என்று தெரிந்திருந்தால் இவர்களை விட்டு விலகி இருப்பேன். அர்ஜூன்..என்று கலங்கியவள் என்னால் முடியாது தாரி.
அர்ஜூனிடம் என் காதலை சொல்ல முடியாது. என்னால் அவனை காதலிக்க முடியும். ஆனால் என்னை நானே வெறுத்துக் கொண்டிருக்கிறேன்.
என்ன சொல்ற ஸ்ரீ? உன்னை நீ வெறுக்க தேவையில்லை. நடந்தது உன் விருப்பால் நடக்கவில்லை. புரியுதா? இல்லையா?
எனக்கு ஜிதினை பிடிக்கும். ஆனால் காதல், காமம் என்றும் நினைத்ததேயில்லை. ஆனால் அவன் மனதில் காதல் இருந்தது எனக்கு தெரியும். எனக்கு அவன் மீது காதல் இல்லை என்று நான் அவனிடம் சொல்லியும் இருந்தேன். அவன் ஆதி விட்டு சென்றதால் தான் என்னை காயப்படுத்துகிறான் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அவனது காதலால் நான் என்னை இழப்பேன் என்று நினைக்கலை.அவன் மீது எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தேன் தெரியுமா? அனைத்தையும் கெடுத்துட்டான் என்று ஸ்ரீ தேம்பி தேம்பி அழுதாள்.
தாரிகா கண்ணீருடன் ஸ்ரீயை அணைத்து, அவனை விடு ஸ்ரீ. உனக்கான வாழ்க்கையை பார்.
வாழ்க்கையா? எனக்கா? எது என்னுடைய வாழ்க்கை தாரி?
அர்ஜூன்..
அர்ஜூனா? அவன் என்னை அகிலுக்காக விட்டு கொடுக்க நினைத்தான் தானே?
என்ன சொல்ற? தாரிகா கேட்க, அன்று நடந்ததை கூறினாள் ஸ்ரீ.
அகிலுக்கு என்னை விட்டுக் கொடுத்தது போல் இருக்கட்டுமே? என் பிரச்சனை முடிந்தால் தான் நீங்க அனைவரும் மகிழ்ச்சியா இருக்க முடியும்.அதுக்காக தான் அமைதியா இருக்கேன். இல்லை நான் எங்க ஆன்ட்டியை என்று கோபமாக, என் நிவி மீது கை வைத்து விட்டார்கள். அவங்கள விடுவேன்னு நினைக்கிறியா?
அவர்கள் செய்த எல்லாவற்றிற்கான சாட்சி வரட்டும். அர்ஜூன் அதை பார்த்துக் கொள்வான். நான் அவங்கள..என்று சீறினாள். என்னோட குடும்பத்தை இழந்து, என்னையே இழந்து நான் படுற கஷ்டத்தில் அவங்க ஒரு சதவீதமாவது அனுபவிக்கணும்.
ஸ்ரீ நீ என்ன செய்யப் போகிறாய்?
நீயே பாரேன்.
எல்லாரும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்க. ஆனால் உங்க யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது.
அது எப்படி தாரி? ஸ்ரீ கேட்க,
போதும் ஸ்ரீ. இது விளையாட்டு இல்லை.
விளையாட்டு இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் முதல் அடி என் அர்ஜூன் தான் வைப்பான். இன்னும் சில கூட அவன் வைக்கலாம். ஆனால் அவங்க எல்லாருக்கான கடைசி அடி நான் தான் வைப்பேன். நீ பார்க்கத்தானே போகிறாய்?
ப்ளீஸ் ஸ்ரீ. இப்படி பேசாதே. எனக்கு பயமா இருக்கு.
தாரி, இதுக்கு மேல எனக்கு என்ன ஆகப் போகிறது? எனக்கு ஏதும் ஆகாது. அர்ஜூன் வேண்டுமானால் அனுவிற்கு கார்டியனா இருக்கலாம். ஆனால் அனு என்னுடன் தான் இருக்கப் போகிறாள்.
அர்ஜூனை ஏத்துக்கப் போகிறாயா? தாரிகா சந்தோசமாக கேட்க,
என்ன தாரி, அர்ஜூன் அம்மாவை மறந்திட்டாயா? ஸ்ரீ கேட்டவுடன் அவள் முகம் மாறியது.
என்னை போல் அனு கஷ்டப்படக் கூடாது. அர்ஜூனால் மட்டும் தான் பாதுகாப்பா அவளை பார்த்துக் கொள்ள முடியுமா? என்னால் முடியாதா?
ஸ்ரீ…நான் அதை பற்றி அப்புறம் சொல்றேன். சீனியர் எங்க? கவினை கேட்டாள்.
அவர் ஊருக்கு சென்றிருக்கிறார். சண்டை போட்டீங்களா?
தாரிகா அமைதியாக இருந்தாள். சொல்லு என்ன பிரச்சனை? தாரிகா சொல்ல,
நீயும் போயிருக்கலாம்ல..ஸ்ரீ கேட்க, அவர் நான் யாருன்னு வீட்ல சொல்றதா இருந்தா போயிருப்பேன். இல்லை நான் அங்கே சென்று கஷ்டமாக இருக்கும். அவருக்கும் வேலை நிறைய இருக்கும்.
சரி..பார்த்துக்கோ என்றாள் ஸ்ரீ.
அர்ஜூன் அவன் லேப்பை எடுக்க வந்தான். அப்பொழுது ஸ்ரீ அழும் சத்தம் கேட்டு சன்னலருகே வந்து மறைந்து நின்றான். இவர்கள் பேசியது அவன் காதில் தெளிவாகவே விழுந்தது. ஸ்ரீ தன்னை காதலிக்கிறாள் என்று அவள் வாயிலிருந்து கேட்ட அர்ஜூனுக்கு ஆகாயத்தில் மிதப்பது போல் இருந்தது. அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அவள் அடுத்து பேசியதில் அவனுக்கு கோபம் வந்தது. அவன் அம்மா விசயம் மட்டும் அவன் காதில் விழவில்லை. என் ஸ்ரீ என்னை காதலிக்கிறாள்.அவளை காயப்படுத்தியவர்கள் இறந்தால் அவள் அனைத்தையும் மறந்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்தான் அர்ஜூன்.
தாரிகா ஸ்ரீக்கு மருந்திட்டு வெளியே வந்தாள். அர்ஜூன் வெளியே அமர்ந்திருந்தான். தாரிகாவை பார்த்து ஏதும் அறியாதவன் போல் காட்டிக் கொண்டு சாதாரணமாக பேசினான்.
தாரிகா அம்மா வர, அம்மா..என்று அர்ஜூன் அவரை கட்டிக் கொண்டான்.
என்ன ஆச்சு அர்ஜூன்? ஏதும் பிரச்சனையா? அம்மா கேட்க, இல்லம்மா என்று அவரை விட்டான். இருவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர்.
சாப்பிடாதனால பசி மயக்கத்துல இருக்கிறியா அண்ணா?
இல்ல தாரிம்மா..ரொம்ப நாள் கனவு நடந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்திருந்தேனா? அந்த சந்தோசம் என்றான்.
என்ன கனவு? சந்தோசம்? கேட்டாள்.
நாள் வரும் போது சொல்றேன் தாரி. அவள் மீண்டும் அமைதியானாள். என்ன கவினை நினைத்துக் கொண்டிருக்கிறாயா?
அவள் தலை கவிழ்ந்து அமர, அவளது தலையை வருடி எல்லாமே சரியாகும் அவளை தேற்றினான். அர்ஜூன், கைரவ் செய்த வேலையால் கவின் தாரிகா நிலை மாறப் போவது தெரியாமல் அர்ஜூன் தன் காதலை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தான்.
அஞ்சனாம்மா ஸ்ரீயின் உடல்நலனை விசாரித்து விட்டு, நாளைக்கு ஊருக்கு போறீங்களா? கேட்டார்.
ஸ்ரீ மகிழ்ச்சியாக ஆம் என்று தலையசைக்க, இல்லை என்று அர்ஜூன் உள்ளே வந்தான்.
அர்ஜூன் நாளை ஊருக்கு போறோம்னு நீ தான சொன்ன? இப்ப என்ன ஆச்சு?
ஸ்ரீ முதல்ல உனக்கு சரியாகட்டும். அப்புறம் சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்.
என்ன சொல்றடா? யார் கிட்ட சொல்லணும் அஞ்சனாம்மா கேட்க, அம்மா உங்ககிட்ட முன்னே சொல்லலைல்ல. அதை தான் சொன்னேன்.
அம்மா..பசிக்குது என்றாள் ஸ்ரீ. தாரிகா அவளிடம் இந்தா என்று ஒரு பார்சலை கொடுத்தாள். இது உனக்கு இது எனக்கு இது அம்மாவுக்கு அர்ஜூன் இது உனக்கு.
நீயா வாங்கிட்டு வந்த? ஸ்ரீ கேட்டாள்.
இல்ல. அர்ஜூன் தான் வாங்கிட்டு வந்தான். அம்மா அவனை பார்த்து விட்டு வாங்கி உட்கார்ந்தார். தாரிகா வைத்துக் கொண்டே நிற்க, அர்ஜூன் அவளிடம் வா..சாப்பிடு என்றான்.
நான் அப்புறம் சாப்பிடவா? எனக்கு இப்ப பசிக்கல..
அம்மா..அவ ரொம்ப ஃபீல் பண்றா ஸ்ரீ கூற, சாப்பிடும்மா..சரியாகிடும் என்றார். அவளும் பிரித்து சாப்பிட, அம்மா ஸ்ரீ சாப்பாட்டை பிரித்து அவளுக்கு ஊட்ட வந்தார். அர்ஜூன் அவரிடம் வந்து, ஸ்ரீயின் சாப்பாட்டை எடுத்து விட்டு, இத வைச்சுக்கோ என்று பிரித்து அம்மா கையில் கொடுத்தான்.
உனக்கு என்ன ஆச்சு அர்ஜூன்? என்று அம்மா அவனிடம் கேட்க, ஆமாம்மா..ஒரு மார்க்கமாக தான் திரியிரான் தாரிகா கூற, அர்ஜூன் சிரித்தான். அம்மா அவன் தலையில் அடித்து விட்டு “சாப்பிடுடா”என்றார்.