அத்தியாயம் 8
அம்மா..அவன் எப்படி பேசுறான் பாருங்கம்மா. அவனுக்கு என்னோட ப்ரெண்ஷிப் வேண்டாமாம்மா. எவ்வளவு ஈசியா சொல்லிட்டான்.அக்கா இருந்த போதிலிருந்தே எனக்கு இருந்த ஒரே ப்ரெண்டு இவன் தானம்மா. எப்படி பேசிட்டான் என்று அழுதாள். தாரிகா அம்மா ஆதேஷை அழுத்தமாக பார்த்தார்.
அவன் தலைகுனிந்து நிற்க, அவன் சொன்னது சரி தான் தாரிம்மா என்று அவனை பார்த்தார். அவன் கண்களில் கண்ணீருடன் அவரை பார்த்தான்.
வேண்டாம். இனி அவன் யாரோ நாம் யாரோ..இனி அவன் நம் வீட்டிற்கு வர வேண்டாம். அவன் வழியில் அவன் செல்லட்டும்.நாம் நம் வேலையை பார்ப்போம்.
அர்ஜூன்.. தாரி இனி நம்ம வீட்லயே இருக்கட்டும். அவள் உங்கள் பக்கம் வந்தால் ஒன்று ஆதுவை பார்க்கும் படி இருக்கும் இல்லை அவன் பேச்சு வரும். என் பிள்ளை கஷ்டப்படுவாள். கவினை பார்த்து தினமும் வீட்டிற்கு வந்து அவளை பார்த்து விட்டு போ..என்றார்.
பின் ஆதேஷ் அருகே வந்து, என் பிள்ளைக்கு உன்னை பிடிக்காமல் இல்லை. அவ அக்கா இருந்த போதும் கூட உன்னோட பிறந்த நாளுக்கென்று தனியாக பணம் சேர்த்து தான் கிப்ட் வாங்கித் தந்தா. நானும் உன்னை அவளுக்கு பிடிச்சிருக்கோ..என்று நினைத்திருந்தேன். ஆனால் உன் அளவுக்கு வசதியில்லை. அதனால் அதை பற்றி பேசியதில்லை.யாழு போன பின் நீ அவளை நல்லா பாத்துக்கிட்ட. எனக்கு ரொம்ப பிடிச்சது.
நாம பேசிப் பார்ப்போம் என்று உன்னிடம் காதலிக்கிறாயா? என்று கேட்க நினைத்தேன். அன்று தான் கவின் புகைப்படத்தை அவள் அறையில் பார்த்தேன். ஆனால் அதிலோ அவன் தனியே இல்லை என்று கவின் நித்தியை பார்த்து குழம்பி இருந்தேன்.
என்னோட பொண்ணு காலேஜ் முதல் நாள் போயிட்டு வந்தப்ப ரொம்ப சந்தோசமா துருதுருன்னு இருந்தா. அதுக்கு காரணம் நீன்னு நான் தப்பா நினைச்சிட்டேன். அதாவது அவள் உன்னை காதலிக்கிறாள் என்று தவறாக புரிந்து கொண்டேன். ஆனால் தாமதமாக தான் தெரிந்தது. அவள் காதலித்தது அவரை என்று கவினை பார்த்தார்.
நான் உன்னை தவறாக எண்ண மாட்டேன். எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். ஆம்பளைங்க இல்லாம இருந்த வீட்ல, நீ அடிக்கடி தாரியோட ப்ரெண்டா வந்தனால நிறைய பிரச்சனை இல்லாமல் இருந்தது. யாழு தைரியமா இருந்தாலும் அவளுக்கும் நீ அருகே இருந்தது பாதுகாப்பா இருக்குன்னு அவளும் சொல்லி இருக்கா என்று கண்ணீருடன் அவனை பார்த்தார்.
அவன் கண்ணில் நீர் தாரை தாரையாக கொட்ட, உன்னோட காதல் உங்களுக்கு பிரச்சனை வந்த பின் தான் தெரிந்தது. என் பொண்ணோட காதல் தெரிந்த பின் உன்னை என் மகனாகவே பார்க்க ஆரம்பித்தேன். ஆனா நீ ப்ரெண்டே வேண்டாம்னு சொல்லிட்ட..என்று அவர் கண்ணீர் விட, தாரிகாவை விட அவள் அம்மா பாசத்தில் கரைந்த ஆதேஷ் தேம்பி தேம்பி அழுதான்.
வா..தாரி, நாம வீட்டுக்கு கிளம்பலாம் அவள் கையை பிடித்து இழுத்து செல்ல, துகிரா ஆதேஷ் அழுவதை பார்க்க முடியாமல் தாரிகா அம்மா முன் வந்து மறித்து நின்றாள்.
தாரிகா அம்மா கண்ணை துடைத்து விட்டு அவளை பார்த்து, வழிய விடு என்றார்.
இல்ல.அவன் கோபத்தில் புரியாமல் பேசி விட்டான். சாரி ஆன்ட்டி.
நீ எதுக்கும்மா சாரி சொல்ற? இதுல தாரிகா மீதும் தவறு இருக்கு. அவள் அவன் காதலை பற்றி தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக் கொண்டாள். அது பெரிய தவறு என்று மகளை பார்க்க. அவளும் தலையசைத்து ஒத்துக் கொண்டாள். ஆதேஷ் அழுவதை பார்த்தும் பார்க்காதது போல் செல்ல முடியவில்லை தாரிகாவால்.
அவள் அம்மா கையை எடுத்து விட்டு, ராஸ்கல் உனக்கு எவ்வளவு தைரியம். என்னோட ப்ரெண்ஷிப்பையே வேண்டாம்னு சொல்ற? ஆதேஷை அடிக்க,
சாரி தாரி. நான் கொஞ்சம் டென்சனா இருந்தேனா. அதான் வாய்க்கு வந்தபடி பேசிட்டேன் என்று அவளது அம்மாவிடம் ஓடினான்.
சாரி ஆன்ட்டி. நான் தவறு செய்து விட்டேன். உங்க பையனை நீங்க மன்னிப்பீங்களா? அவன் கேட்க, அவனது காதை திருகி, இனி இப்படி பேசின உனக்கு சாப்பாடு கிடையாது என்று செல்லமாக கண்டித்தார்.
ஆன்ட்டி..வலிக்குது..கத்தினான். உங்க வீட்டுக்கு வரலாம்ல.
எப்ப வேண்டுமானாலும் வா என்று அவனிடம், எத்தனை நாளாக உன்னை வீட்டில் எதிர்பார்த்தேன். ஆனால் நீ வந்து வாரமாகிறது. ஏதோ ஒரு வருடமாக பார்க்காதது போல் இருந்தது என்று கலங்கினார்.
அவரது கண்ணீரை துடைத்தவன், இனி தினமும் வருவேன் என்றான்.
தீனா அவர்களை பார்த்து, பிரச்சனை முடிஞ்சதா? கேட்டான். எல்லாரும் ஆதேஷை பார்த்தனர். என்னால இனி பிரச்சனை வராது என்றான் ஆதேஷ்.
ஊருக்கு கிளம்பலமா தீனா கேட்க, சார் உங்க ஆளு நினைவா இருக்கா? கவின் கேலி செய்ய, தீனா வருத்தப்பட்டான்.
அர்ஜூன் அவனிடம் வந்து, அண்ணா தருண் ஏற்கனவே அவனுடைய வலி, அவனது பெற்றோரை இழந்தது என்று வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறான். அதுவுமில்லாது புவனாவும் அடிபட்டு கஷ்டத்தில் இருக்கிறாள். அவளுக்கு துணையாக தான் இல்லை என்று எண்ணிக் கொண்டிருப்பான். நீங்க அவனிடம் இப்பொழுதா உங்க காதலை பற்றி பேசுவீங்க?
சொல்லணும்ன்னு தோணுச்சு. சொன்னேன். ஆனால் அவன் மறுப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. சரி பார்த்துக் கொள்ளலாம். அங்கே நேற்றிலிருந்தே அம்மாவும், அப்பத்தாவும் ஹாஸ்பிட்டலில் தான் இருக்காங்க.ஏற்கனவே அப்பத்தாவிற்கு உடல் நிலை சரியில்லை.
நான் அங்கே சென்றால் தான் அவங்கள வீட்டிற்கு போக சொல்ல முடியும். நான்..வேற..என்று அவன் தயங்க, பிரதீப் அவனை ஆறுதலாக அணைத்து, நாம சேர்ந்து இருப்போம்டா என்றான். தீனா கண்கள் கலங்க,..சாரிடா நான் உன்னை தவறா புரிஞ்சுக்கிட்டேன் அழுதான்.
மாமா..அபி சத்தம் கொடுக்க, அர்ஜூன் இன்பாவிடம் மேம்..நீங்களும் வரலாமே?
நான் இப்பொழுது வரல.
ஆதேஷ் அவன் அம்மாவிடம் ஆடையை எடுத்து வர சொன்னான்.
மேம் வாங்க..ஆதேஷ் கூற, ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாதீங்கன்னு சொல்லிட்டாள்.
அர்ஜூன் சைலேஷை பார்க்க, நானும் கேரியும் ஞாயிற்றுக்கிழமை காலை வருகிறோம்.
நான் வாரேன்னு சொல்லவேயில்லையே? கேரி சொல்ல, வருவடா என்று சைலேஷ் அவன் தோள் மீது கை போட்டான். சரி வாரேன்..என்றான் அவன்.
அர்ஜூன் நித்தி, யாசு, அகிலை பார்க்க, நாங்க வரல.. ஃப்ரெஸ்சர்ஸ் விழாவிற்கான பிராக்டிஸ் பண்ணப்போறோம் என்று கூற, எனக்கு ஊருல வேலை இருக்கு. நான் ஊருக்கு போறேன் கவின் கூறினான்.
ஓ.கே டா பார்த்துக்கலாம். நீ போய் அக்காவை பாரு என்றான் அகில்.
நான் போயிட்டு வந்து சேர்ந்து கொள்கிறேன்.
சரிடா.நோ..பிராபிளம்.
பிரதீப் தாரிகா அம்மாவிடம், தாரிகாவை ஊருக்கு அனுப்ப சொல்லி கேட்க, அவர் பதில் கூறுவதற்குள் நான் வரவில்லை என்றாள்.
ஏன்மா, வர பிடிக்கலையா?
இல்ல..ஸ்ரீ கூட இருக்கணும்.
அவள நாங்க பாத்துக்கிறோம் என்று நிவாஸ் கூற, இல்லை. நான் வரல என்று தயங்கினாள்.கவின் அவளை உற்று பார்க்க,
சீனியர் எதுக்கு அப்படி பாக்குறீங்க?
உனக்கு வர்துல ஏதும் பிரச்சனையா?
அவள் மௌனமாக இருந்தாள். ஆன்ட்டி, உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? கவின் தாரிகா அம்மாவிடம் கேட்டான்.
அவர் தயங்கி இருக்க, அம்மா..நாங்க நாளைக்கு போறோம் அர்ஜூன் கூற, அர்ஜூன் எனக்கு வேண்டாம்னு தோணுது.
ஏன்மா, அவள யாரும் ஏதும் சொல்லுவாங்கன்னு நினைக்கிறீங்களா?
இல்ல அர்ஜூன். அவளை தனியே அனுப்ப எப்படியோ இருக்கு.
நீங்களும் வாங்க கவின் கூற, இல்லப்பா..நான் வரல. அவருக்கு இன்னும் முழுதாக சரியாகவில்லை.
அம்மா..நான் தான் இருக்கேன்ல அர்ஜூன் கூற, ஏன் நாங்க இல்லையா? கவின் அர்ஜூனை முறைத்தான்.
கவின் வீட்டிற்கு தெரிந்தால் அவளை ஏதும் சொல்வார்களோ? என்ற பயம் அஞ்சனா அம்மாவிற்கு.
நாங்க எல்லாரும் இருக்கோம்மா. உங்க பொண்ணை யாரும் ஏதும் சொல்லாம நான் பார்த்துக் கொள்கிறேன் பிரதீப் கூறினான்.அவர் சரி என்றார்.
ஆனால் தாரிகா யோசனையுடன் இருக்க, கவினுக்கு கோபம் வந்தது.
அண்ணா, நாம கிளம்பலாம். இப்ப கிளம்பினால் தான் இரவு பதினொன்றுக்குள் செல்ல முடியும் கவின் சினத்துடன்.
ஆமாம். நீங்க கிளம்புங்க. உங்களுக்கு நேரமாகுது. நான் வரலை என்று தாரிகா கோபமாக உள்ளே சென்று விட்டாள்.
ஹேய்..இதுக்கெல்லாம்மா சண்டை போடுவீங்க? நித்தி கேட்க, அவ ரொம்ப தான் யோசிக்கிறா? கவின் கேட்க,
யோசிக்க தான் செய்வா? அவளுக்கு வேற ப்ரெண்ட்ஸ் இல்ல ஆதேஷை தவிர. அதுவும் உன்னோட சொந்தங்கள் எல்லாரும் இருப்பாங்க. என்ன தான் ப்ரெண்ட்ஸ் இருந்தாலும் அம்மா கூட இருந்தா தான் அவளுக்கு ஆறுதலாக இருக்கும் இன்பா கூறினாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல் மற்றவர்கள் இருந்தனர்.
எப்படி சமாளிக்கப் போற? அபி கவினிடம் கேட்க, காதலித்தால் சமாளித்து தான் ஆக வேண்டும் என்று ஆதேஷ் கூறினான்.
நான் தாரிகாவை கேட்கவில்லை. கவின், உன்னோட மாமா குடும்பம் இந்த வாரம் முழுவதும் அங்கே தங்கி திருமணம் முடிந்து அக்காவுடன் தானே திரும்புவார்கள். என்ன செய்யப் போகிறாய்? அப்பாவை சமாளிக்கணுமே?
அபி, மாமாவிடம் இன்று செல்வதாக கூறினேன். மறந்துட்டேன்டா என்று தலையில் அவனே தட்டி விட்டு போனை பதட்டமாக எடுத்தான்.
நாங்கள் கிளம்பி கொண்டிருக்கிறோம் என்று அவர் கூற பெருமூச்சு விட்டு, நான் வருகிறேன் என்று அஞ்சனாம்மாவை பார்த்து, நான் கிளம்புகிறேன் ஆன்ட்டி. திங்கட்கிழமை வந்து விடுவேன். வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று வாரேன் என்று பிரதீப்பை பார்த்து அண்ணா,..டிரைவர் அங்கிள் நம்பர் தாருங்கள் என்றான்.
அவனை புன்னகையுடன் பார்த்த பிரதீப், அவர் அப்பொழுதே கிளம்பி விட்டார். உன் மாமா வீட்டிற்கு இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவார். நீ சீக்கிரம் கிளம்பு என்று கூற,
அண்ணா அண்ணா தான்..தேங்க்ஸ் என்று அவனை கட்டி கன்னத்தில் முத்தமிட்டு கவின் திரும்ப, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் துகி.
டேய் கவின் என்று கன்னத்தை அழுத்தி துடைத்தான் பிரதீப். நான் கிளம்புகிறேன். அவர்களுடன் நான் செல்கிறேன் அண்ணா. அண்ணா இடம் ஏற்பாடு செய்து விட்டீர்களா?
ம்ம்..ரெசார்ட்டிற்கு அழைத்து செல். அனைத்தும் தயாராக இருக்கும் என்றான் பிரதீப். கவின் வேகமாக சென்றான்.
எப்ப மாமா இதை செய்தீர்கள்? அபி கேட்டான்.
இது தான் பிரதீப் அண்ணா என்று அவனை பெருமையுடன் பார்க்க, இன்பாவிற்கும் அவன் மீது தனி மரியாதை வந்தது. முறைத்துக் கொண்டிருந்த துகியோ அவன் அருகே நின்று, இன்னும் நேரமாகுமா? அவன் கையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.
அவர் எங்கையும் ஓடி விட மாட்டார் துகி அகில் கூற, வெட்கச் சிரிப்புடன் தலை குனிந்தாள்.
அட..வெட்கமா? துகி உனக்கா? ஆதேஷ் கேலியுடன் நகைக்க, அவன் அம்மா, அப்பா இருவரும் வந்தனர். அவர்களை தாரிகா அம்மா, இதயா அம்மாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தான் ஆதேஷ்.
அண்ணா..நான் வருவதை பார்த்து விட்டு கூறுகிறேன் என்று பிரதீப்பிடம் கூறிக் கொண்டே தீனாவை பார்த்தான் அர்ஜூன். ஆதேஷ் காரில் பிரதீப் துகி கிளம்ப, ஆதேஷ் அம்மா, அப்பா தனி காரிலும் கிளம்பினார்கள். தீனாவும் அவனது ஜூப்பில் கிளம்பினான்.
அர்ஜூன்,நிவாஸ் உள்ளே செல்ல, அகில் அபியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். மற்றவர்களும் அவர்களுடன் சென்றனர். கேரி இன்பாவை பார்த்து, நான் கிளம்புகிறேன் பிரின்சஸ் அங்கிருந்து சென்றான். அங்கேயே நின்று அவனை பார்த்து விட்டு இன்பா சென்றாள்.
யாசு, வா..சாப்பிட்டு விட்டு வரலாம் என்று மாதவ் அழைக்க, எனக்கு பசிக்கல சார். நீங்க கிளம்புங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் வருத்தமுடன் அவள் பேச, அவளருகே வந்து அவளை பார்த்து விட்டு அவளை அணைத்துக் கொண்டு,
சாரி..பப்ளி. எனக்கு தெரியாதுடா. என்னால உனக்கு பிரச்சனை வந்திடுமோ என்று பயந்து தான் உன்னை கவனிக்காமல் விட்டு விட்டேன் வருத்தமுடன் கூற, சாப்பிடலாம் என்று அவனை யாசுவும் அணைத்துக் கொண்டாள்.
சைலேஷ் நித்தியை பார்க்க, அவர்கள் குழுவிற்கு சாதகமாக அவன் பேசவில்லை என்று கோபமாக இருந்திருப்பாளே! அவள் செல்ல முற்பட அவளது கையை பிடித்து நிறுத்தி, என்னுடன் வீட்டிற்கு வருகிறாயா? கேட்டான்.
நான் வரல என்றாள் கோபமாக. நித்தியை அவன் பக்கம் திருப்பி, நான் யாருக்கும் சாதகமா பேச முடியாது. பேசினால் உனக்கும் உங்களது குழுவிற்கும் தேவையில்லாத பிரச்சனை வரும். அதனால் தான் அமைதியாக இருந்தேன்.
நான் உங்களிடம் ஏதும் கேட்கவில்லை.
ம்ம்..ஆனாலும் எனக்கு உன்னை தெரியும். ப்ளீஸ் வா..எனக்கு இரண்டு நாட்களாக நிறைய வேலை,டென்சன் சோகமாக கூறினான்.
அவனை பார்த்துக் கொண்டே நின்ற நித்தி, ஆபிஸ் போவீங்களா?
ம்ம்..அங்கே சென்று பார்த்து விட்டு கிளம்புவோம் என்று அவளை பார்த்தான். வாங்க போகலாம். ஸ்ரீ, அபியை பார்த்துட்டு வாரேன்.
வா..நானும் வருகிறேன் என்று அவளது கையை பிடித்தான்.இருவரும் அபியை பார்த்து விட்டு தருணை பார்த்து விட்டு ஸ்ரீயிடம் வந்தனர்.
அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.
அர்ஜூன்..அழைத்தாள் நித்தி.
ம்ம்..சொல்லு நித்தி என்று எழுந்தான்.
ஸ்ரீயை பார்த்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த தாரிகாவை பார்த்தாள்.
ஒன்றுமில்லை அர்ஜூன். நான் நாளை காலை வருகிறேன் நித்தி கூற, அவளிடம் சரி என்று கூறி விட்டு, சைலேஷிடம் கைரவ் போனை எடுக்கவே மாட்டிங்கிறான். ஏதும் பிரச்சனையா சார்?
அவனுக்கு கூடைப்பந்து விளையாட்டு போட்டி உள்ளது. ஆனால் அடுத்த வாரம். அவன் சஸ்பென்சனில் இருப்பதால் அவனால் கலந்து கொள்ள முடியாது. அதனால் அந்த வருத்தத்தில் கூடைப்பந்து கோர்ட்டில் தான் இருக்கிறான். மதியம் சாப்பிட கூட இல்லை. அவனை சமாளிக்கவே முடியல வருந்தினான் சைலேஷ். நித்தி அவனை பார்த்தாள்.
அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வீட்டிற்கு சென்று ஸ்ரீயை பற்றி கூறுங்கள். எனக்கு அவனால் உதவி வேண்டும் என்று கூறுங்கள் அர்ஜூன் சொல்ல, நித்தி ஸ்ரீயை பார்த்துக் கொண்டே அவளை தனியே விட்டு விடாதேடா என்று சைலேஷுடன் கிளம்பினாள்.
காரில் சென்று கொண்டிருந்த ஆதேஷ் ஸ்ரீ தாரிகா பற்றி பேசியதை, பின் நடந்ததை நினைத்துக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருக்க, துகி பிரதீப் இருவரும் அவனையே கவனித்துக் கொண்டு வந்தனர்.
அவன் என்ன தான் தாரிகாவை தோழியாக ஏற்றுக் கொண்டாலும், அவனுள்ளான காதலை மறக்க முடியாமல் தவிக்கிறான். அவன் முகத்தில் இருந்த அந்த வருத்தத்தை அவனுடைய அம்மாவும் கவனித்து இருப்பார்.அவருக்கு ஜானுவை பார்க்கும் ஆர்வம் இருக்க, முழுவதும் அவளை பற்றியே தன் கணவரிடம் பேசிக் கொண்டே வந்தார் தன் மகன் புரிந்து கொள்வான் என்று.