அத்தியாயம் 3

“எக்ஸ்கியூஸ் மீ” நாங்க உள்ளே வரலாமா? நிவாஸ் தலையை அறைக்குள் நீட்டி கேட்க, அபி பார்வை இன்பா மீதே இருந்தது. மண்டியிட்டிருந்த இன்பா வேகமாக ஆடையை சரி செய்து கொண்டு எழுந்தாள்.

மேம்..டைம் எடுத்துக்கோங்க கவின் நிவாஸ் தலையை பிடித்து வெளியே இழுத்தான். அபி அவள் கையை மீண்டும் பிடித்து, இன்று மட்டும் பக்கத்திலே இருங்க..ப்ளீஸ் என்றான் மெதுவாக.

அவங்கள உள்ள கூப்பிடுங்க. நீங்க இங்க தான் இருக்கணும் என்றான். அவள் அமைதியாக கதவை திறக்க, எல்லாரும் உள்ளே வந்தனர்.

சீனியர் என்று நிவாஸ் முதலில் வர, போடா அங்கிட்டு..கவின் அவனை விலக்கி விட்டு, அபியிடம் வந்து ரொம்ப பெயினா இருக்காடா?

லைட்டா டா என்றான் அபி. நிவாஸ் யாசுவை பற்றி பேச, அபி பதறி எழ முயன்றான்.

ஹேய், நோ..நோ..என்று இன்பா தானாக அபி கையை பிடித்தாள்.அவளை பார்த்து விட்டு, அர்ஜூன் எங்கே? என்ன செய்றான் டா? அபி வினவ, மீதியையும் அவர்களிடம் கூற, தீனாவும் பிரதீப்பை பார்த்து நான் பண்ணை வீட்டுக்கு மாறப் போறேன்டா.

எதுக்கு? துளசிக்கு ஸ்கூல் போக தூரமா இருக்கும்? புவிடா?

அவளையும் தான் அழைத்துக் கொண்டு செல்லப் போறேன்.

என்ன ஆச்சு தீனு மாமா? அபி கேட்டான். முதலில் தயங்கினாலும் பின் அனைத்தையும் கூறினான் தீனா. அம்மா பக்கத்தில் இருந்து கூட கவனிக்காமல் இருந்திருக்கேன். ரொம்ப கஷ்டமா இருக்குடா அண்ணா என்று பிரதீப்பை அணைத்தான்.

எனக்கு முன்னவே சந்தேகம் இருந்தது. மாமா அர்தீஸ் குடும்பத்து ஆட்கள் தவறிழைத்தும் அவங்க பக்கம் நிற்பாரே? அபி கூறி விட்டு தீனு மாமா? புவியை அவன்..அபி சிந்திக்க,

கத்தியை எடுத்து அர்தீஸ் தீனாவை கொல்ல வந்தது. அவன் அப்பா அர்தீஸ் பக்கம் இருந்தது. புவி பயத்தில் அவனுடன் செல்கிறேன் என்றதை வேதனையுடன் தீனா கூற,பிரதீப் அவனை அணைத்துக் கொண்டான்.

மாமா..குறுஞ்சிரிப்புடன் அபி பிரதீப்பிடம் கை நீட்டினான். பிரதீப் கையை கொடுக்க, மா மா.. மறந்துட்டீங்களா? நம்முடைய டீல் என்றான் அபி.

டீலா? தீனா கேட்க. பிரதீப் புன்னகையுடன் அவனது வாலெட்டை எடுத்து ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தான்.

எதுக்குடா ரூபாய்? கவின் கேட்டான்.

பிரதீப் மாமாவே தீனா மாமாவை தம்பியா ஏத்துப்பாருன்னு ஆயிரம் ரூபாய் வைத்து என் மாமாவிடம் டீல் போட்டிருந்தேன் என்று சிரித்தான்.

எத்தனை மாமா? நிவாஸ் கேட்க, அவன் மாமா பையன் என்றான் கவின். பிரதீப்பிற்கு சந்தோசமா இருந்தது.

ஆனா மாமா உண்மையிலே..இருக்காது என்று தோன்றுகிறது தீனு மாமா அபி கூற, யாரையும் நம்ப முடியல அபி என்றான் தீனா.

மாமா..மீண்டும் அபி பேச, ப்ளீஸ் அபி வேண்டாம் என்றான். மாதவும் அவர்களது உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தான்.

மாமா..நீங்க ஊருக்கு கிளம்பணுமே? அபி கேட்க, ஆமாம் துகியையும் அழைத்து செல்லப் போகிறேன் பிரதீப் கூற, அர்ஜூன் தீனாவிடம் பேச வேண்டும் என்று கூறி இருப்பான். அது தீனாவிற்கு நினைவிற்கு வந்தது.

வாழ்த்துக்கள் மாமா. மாமா அவங்கள அம்மாவுக்கு பிடித்துவிடும். எதுக்கும் கவனமா இருங்க அபி கூற,

ஏன்டா? கவின் கேட்டான்.

அம்மா திட்டமே வேற என்று இன்பாவை பார்த்தான். அவளோ அநியாயத்திற்கு அமைதியா இருந்தா.எல்லாரும் அவளை ஆச்சர்யமாக பார்க்க, பிரதீப் மட்டும் புரிந்து கொண்டான்.

மாமா அந்த பசங்க எங்க? கேட்டான் அபி.

அவங்க உங்க மேம்மோட அம்மா கூட தான் இருக்காங்க. அர்ஜூனிடமிருந்து போன் வந்தது பிரதீப்பிற்கு.

அர்ஜூன் என்று அவன் போனை எடுக்க, அபி எப்படி இருக்கான்? என்றான் பதட்டமாக.

அவன் நல்லா இருக்கான். நல்லா பேசுறான். ஏதும் பிரச்சனையா? ஆமாம் அண்ணா. நீங்க இருக்கும் ஹாஸ்பிட்டல் டீன் பொண்ண கடத்திட்டாங்க. தீனா அண்ணா கிட்ட கொடுங்க என்றான்.

பிரதீப் அனைவரிடமும் சொல்ல, இது என்னடா நம்ம லிஸ்டிலே இல்லையே? நிவாஸ் கூறினான்.

தீனாவிடம் பேசி விட்டு மாதவையும் அவனுடன் இணைய கூறினான். அவர்கள் சேர்ந்தவாறு வெளியே வர, அவர்கள் பின் மற்றவர்களும் வந்தனர்.

வெளியே அனைவரும் டீன் பொண்ணை அந்த டாக்டர் கடத்திட்டாராம். என்ன பண்ணப் போறாரோ?

அங்கே வேலை செய்யும் வயதான பாட்டி, நல்ல புள்ளடா அந்த பொண்ணு. புள்ளைக்கு ஏதும் ஆகக்கூடாது. எந்த வித்தியாசமும் பாக்காம பழகும் பொண்ணுடா.. ஆவுடையப்பா பிள்ளையை நல்ல படியா காப்பாத்திருடா என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

அந்த பொண்ணை கடத்திட்டாங்களா? கவின் அதிர, உங்களுக்கு தெரியுமா சீனியர்? நிவாஸ் கேட்டான்.

டேய்..உன்னை ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ண எல்லா ஏற்பாடும் அந்த பொண்ணு தான் செஞ்சா. நீ அர்ஜூனுடன் வந்த அடிபட்டு வந்ததை பார்த்து…கவின் யோசித்து, அப்ப..அந்த பொண்ணு இந்த பொண்ணா? கவின் அறிந்து கொண்டான்.

என்ன ஆச்சு சீனியர்? நிவாஸ் கேட்க,

ஒன்றுமில்லை. இரு அர்ஜூனிடம் பேசலாம் என்று கவின் போனை எடுக்க, அர்ஜூன் வீட்டிலிருந்தவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கே வந்து விட்டான்.

அர்ஜூன்..கவினிடம் எல்லாரும் இங்கே இருக்கட்டும். நீ பார்த்துக்கோ. நான் ஆருத்ரா அப்பாவை பார்த்து விட்டு வாரேன் சொல்ல, நிவாஸ் புரியாமல் விழிக்க, ஸ்ரீ நிவாஸை கண்டு கொள்ளாது அர்ஜூன்.. அர்ஜூன்.. ப்ளீஸ் நானும் வாரேன்..ப்ளீஸ்டா கெஞ்சினாள்.

ஸ்ரீ நீ இங்கேயே இரு என்று கூற, டேய்..நீங்க எல்லாரும் பசங்களா இருப்பீங்க? நானும் வருவேன் ஸ்ரீ உரிமையாக அர்ஜூனிடம் பேச, அர்ஜூனும் நிவாஸை பார்த்து விட்டு சரி…வா என்று ஸ்ரீயை கையை பிடிக்க,

நில்லுங்க ரெண்டு பேரும்? அர்ஜூன் ஸ்ரீ இருவரும் நிவாஸை பார்த்தனர்.

அந்த பொண்ணு யார்? ரெண்டு பேரும் இப்படி பதறுறீங்க?

ஹாஅ…அவ உன்னோட பொண்டாட்டி. இவன் கிடைக்கான். வா அர்ஜூன் என்று ஸ்ரீ அர்ஜூனை இழுத்து செல்ல,

என்னோட பொண்டாட்டியா? நிவாஸ் வாயில் கை வைத்தபடி நின்றான். தாரிகாவும் துகிராவும் சேர்ந்து அங்கே வந்தனர்.

தாரி..ஸ்ரீக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? என்ன? யாரோ ஒரு பொண்ண என்னோட பொண்டாட்டின்னு சொல்லிட்டு, அர்ஜூனை இழுத்துட்டு போறா?

தாரிகா அவனை முறைத்து விட்டு, ஸ்ரீ கொஞ்ச நேரத்திற்கு முன் எப்படி இருந்தால் தெரியுமா? அனைவரும் அவளருகே வந்தனர். அவளால் எழுந்து நடக்க கூட முடியவில்லை.ஆனால் அந்த பொண்ணை கடத்திட்டாங்கன்னு எப்படி பதறுனா தெரியுமா? கீழ விழுந்து எழுந்து அர்ஜூனிடம் பிடிவாதம் செய்து இங்கே வந்திருக்கா.

அந்த பொண்ணை உனக்கு தெரியாதா? நீ பார்த்ததே இல்லையா? அர்ஜூனோட காலேஜ் போல. ஆனால் ஸ்ரீக்கு அதற்கு முன்னே ஆருத்ராவை தெரிந்திருக்கிறது.

அவள் கோமாவில் இருந்த போது அவளுக்கு பார்த்த டாக்டரின் தங்கை தான் ஆருத்ரா.

அட..இப்ப தான அவர் கிட்ட பேசினேன்?

பேசினாயா? தாரிகா கேட்டாள்.

ஆனால் அவளுக்கு தங்கை இருப்பதை சொல்லவில்லை.

டேய்..அரை மெண்டல்..அந்த பொண்ணும் ஸ்ரீ கோமாவில் இருந்து எழுந்ததும் அவள் கூடவே தான் இருந்திருக்கிறாள். அவளுக்கு உன்னை நன்றாக தெரியும். அப்பொழுதே அவளுக்கு உன் மீது காதல்.

காதலா?

உன்னோட வாய்ஸ் மெசேஜ் பொண்ணும் அவள் தான். நானும் அவளை பார்த்திருக்கிறேன். உன்னை அட்மிட் செய்ததும் அவள் தான். அர்ஜூன் தன்னுடைய தோழன். அவன் நண்பனுக்கு உடல் சரியில்லை என்று தான் அவள் அப்பாவிடம் கூற, இங்கே உடனே அட்மிட் செய்ய ஒத்துக் கொண்டார் அவர். அவருக்கு தெரியாமல் உன்னை பார்க்க திருட்டுத்தனமா வந்து அவள் அண்ணா, அர்ஜூன் கிட்ட மாட்டிகிட்டா. ஆனால் அவள் அப்பாவுக்கும் அவள் காதல் தெரிந்து கல்லூரிக்கு விட்டால் உன்னை பார்க்க வந்து விடுவாள் என்று அடைத்து வைத்திருக்கார்கள்.

அவள் எப்படி இன்று இங்கே வந்தால் என்று புரியவில்லை. ஆனால் அவளோட அப்பா மேல இருந்த கோபத்துல ஒரு டாக்டர் அவளை கடத்திட்டாங்களாம் அவள் கூற, முதலில் கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்த நிவாஸ் அமைதியானான்.ஓ..அதனால் தான் என்னிடம் அவள் அண்ணா வித்தியாசமாக பேசினாங்களா? சிந்தித்தான்.

டாக்டர்..என்ற சத்தத்தில் அனைவரும் அவ்விடம் நோக்க, ஆருத்ரா அண்ணன் சர்ஜரியில் இருந்திருப்பான் போல..ஒரு செவிலியரை அழைத்து அவரது டாக்டர் கோர்ட்டை கழற்றி அவரிடம் கொடுத்து பாக்கெட்டில் சாவி உள்ளது. கோர்ட்டை அறையில் வைத்து விட்டு, பத்திரமாக அறையை பூட்டி விட்டு சீக்கிரம் வா..என்று பதட்டமாக கூறி விட்டு வேகமாக ஓடினார்.

அதே சமயம் அந்த கோர்ட்டை எடுத்துக் கொண்டு சென்ற பெண் பின்னே முறுக்கு மீசைக்காரன் செல்ல, நிவாஸ் கவினை அழைத்து காட்டினான்.

ஆதேஷ் நீ இவங்கள பார்த்துக்கோ? என்று கவின் எழ, நிவாஸும் எழுந்தான்.

நீ எங்கடா வார? கவின் கேட்க, நிவாஸ் தோளை குலுக்கினான். இருவரும் மறைந்தபடி பின் தொடர்ந்தனர்.

உள்ளே சென்ற அந்த பொண்ணு சாவியை எடுத்து கோர்ட்டை வைத்து விட்டு திரும்ப, அந்த மீசைக்காரன் அந்த பொண்ணை அடித்து மயக்கினான். பின் அங்கிருந்த அனைத்தையும் களைத்து ஏதோ தேடிக் கொண்டிருந்தான்.

கவின் கண்ணை காட்ட, நிவாஸ் மட்டும் உள்ளே நுழைந்தான். சிசிடிவி வழியே ஆருத்ரா அண்ணா அறை அவர் அப்பாவிற்கு தெரிய, அர்ஜூன் ஸ்ரீ அப்பொழுது தான் அவரை பார்க்க வந்திருப்பார்கள். ஏற்கனவே பிரதீப், மாதவ், தீனாவும் அங்கு தான் இருந்தனர். அவர்களிடம் பேசி தான் வந்திருப்பான் அர்ஜூன்.

அவர்களும் நிவாஸை பார்த்து, அச்சோ..அவனுக்கு ஏற்கனவே அடி பட்டிருந்ததே ஸ்ரீ பதற, அர்ஜூன் அவள் கையை காண்பித்து, உனக்கும் எனக்கும் அடிபட்டு தானே இருக்கு?

நான் வேற..

ஸ்ரீ போதும். அவனை நீ தம்பியா மட்டும் பாரு. அவனுக்கு அம்மா போல் நடந்து கொள்ளாதே? திட்டினான்.

உள்ளே வந்த நிவாஸ், வசீகர சிரிப்புடன் மீசைக்கார மாமா..என்ன தேடுறீங்க? நானும் உதவி செய்யவா?

யாருடா நீ? அவன் கர்ஜிக்க, யோவ் நல்லது செய்ய உறவு முறை தேவையா என்ன?

ஒழுங்கா இங்கிருந்து போ..சின்னப்பையா?

சின்னப்பையனா? நானா? மாமா எனக்கு வயது இருபதாகிறது.நான் பிறந்து இருபது வருமாகிறது. ம்ம்..நானும் ஸ்ரீயும் சந்தித்து ஐந்து வருடங்கள் இரண்டு மாதங்கள் முப்பத்து இரண்டாவது நாள் ஆகிறது என்று பெருமூச்சுடன் ஓரக்கண்ணால் அவனை பார்த்தான் நிவாஸ். ஸ்ரீ பெருமையுடன் நிவாஸை பார்த்து விட்டு, அர்ஜூனிடம் பார்த்தாயா என்னோட நிவியை? பெருமையடித்தாள்.

அர்ஜூன் உடனே நாம் சந்தித்து பத்து வருடங்கள் ஏழு மாதங்கள் இருபது நாட்கள் ஆகிறது என்று ஸ்ரீயை பார்த்து கண்ணடித்தான்.

எனக்கு எதுவும் நினைவில் இல்லப்பா ஸ்ரீ கூற, நான் உன் நினைவை கொண்டு வரவா? அர்ஜூன் கேட்க,

இங்க என்ன நடக்குது? நீங்க என்ன பண்றீங்க? சினத்துடன் ஆருத்ரா அப்பா பார்க்க, அவள் அண்ணனோ..போதும் டா. இரண்டு பேரும் சமம் தான்டா. மாதவ் அவர்களை வெறித்து பார்த்தான்.

ஆமாம் மாம்ஸ், அந்த பொண்ணை எங்க கடத்தி வைச்சிருக்கீங்க? என்ன தேடுறீங்க? என்று அவன் பின் பார்த்து,

வேண்டாம்மா..பின் தலையில் அடிம்மா நிவாஸ் கத்த, மீசைக்காரன் திரும்பி பார்த்தான்.

அந்த பொண்ணோ எழவேயில்லை. அவன் அசந்த நேரத்தில் அவனை தள்ளிக் கொண்டே சுவற்றில் சாய்த்த நிவாஸ் பக்கத்தில் இருந்த கண்ணாடி சிலையை உடைத்து, அவன் கழுத்தில் வைத்தான்.

“வெல் டன்” சூப்பர் நிவி என்று கை தட்டிக் கொண்டு உள்ளே வந்தான் கவின்.

கவினுமா? அனைவரும் பார்த்தனர். நாற்காலியை எடுத்து போட்டு ஜம்பமாக அமர்ந்தான் கவின். தீனா, பிரதீப் அவனை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

டேய்,..துகியை கடத்துனப்ப புள்ள பூச்சியை அடிச்ச மாதிரி அடிச்சான்டா பிரதீப் கேட்க, அண்ணா..தல இருக்கும் போது வால் ஆடக் கூடாதுல அண்ணா என்று அர்ஜூன் கண்ணடிக்க, தீனா சத்தமாக சிரித்து, இதான் நம்ம ஊரு பசங்கடா.

கவின் நிவாஸிடம், ஏன்டா இவனை பார்த்து மாமான்னு சொல்ற? தாத்தான்னு சொல்லு? கேலியுரைக்க, மீசைக்காரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் துள்ள, நிவாஸ் வைத்திருந்த கண்ணாடி துண்டு மீசைக்காரன் கழுத்தில் அழுத்தமாக பதிந்தது.

நீங்க சொல்லுங்க..இழுத்த கவின், சார் சொல்லுங்க?

என்ன தேடுறீங்க? அந்த பொண்ணு எங்க?

அந்த பொண்ணு இங்க தான் இருக்கா. ஆனால் அவள் இருக்குமிடம் தெரியாது.

நான் சொன்னேன்ல. நீங்கள் வேலையை விட்டு தூக்கி பத்து நிமிடத்தில் எப்படி வெளியே கொண்டு செல்ல முடியும். இத்தனை சிசிடிவி தாண்டி. உங்க பொண்ணு இங்க தான் இருக்காங்க. சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம். கவலைப்படாதீங்க தீனா கூறினான்.

தெரியாதா? என்று நிவாஸ் மேலும் அழுத்த, தடை செய்யப்பட்ட பகுதியில் தான் இருக்கிறாள். பதினைந்து நிமிடத்தில் காப்பாற்ற வேண்டும் இல்லை அவ செத்துடுவா.

என்னடா இப்படி சொல்ற? நிவாஸ் பதறி கவினை பார்த்தான். கவின் வேகமாக எழுந்தான்.

அவனுக்கு போன் செய்த ஆருத்ரா அண்ணன், அவனிடம் இங்கே தடை செய்யப்பட்ட பகுதி மூன்று இடத்தில் உள்ளது. எங்கே? என்று கேள்.

கவினும் கேட்க, அவன் மௌனமானான்.

இங்க பாருடா.ஒழுங்கா சொல்லு. நான் இருக்கும் கோபத்தில் கழுத்துல மட்டுமில்ல வயித்துலயும் சொறுகிடுவேன் நிவாஸ் மிரட்ட,

அந்த பொண்ணுக்கு நீ யாருடா? மீசைக்காரன் கேட்க, நாங்க கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு. நானே என்னோட அக்கா வாழ்க்கையவே ஒன்றுமில்லாம பண்ணீட்டானுகனு கொலவெறில்ல இருக்கேன். என்னை சோதிக்காதடா.. கத்தினான்.

ஏன்டா தம்பி, புல்லா முடிச்சுட்டானுகளா? அவன் கேட்ட மறுநொடியே கழுத்தில் வைத்திருந்ததை மறுகையில் பிடித்து அவனது வயிற்றில் குத்தி விட்டு கத்தி அழுதான் நிவாஸ். அனைவரும் அதிர்ச்சியாக, அர்ஜூன் வேகமாக நிவாஸ் இருக்கும் இடத்திற்கு ஓடினான்.

ஸ்ரீ மடிந்து அமர்ந்து அங்கே அழுது கொண்டிருந்தாள். ஆருத்ரா அண்ணன் போன் செய்து நிவாஸ் குத்தியவனை ஆட்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான்.

நிவி, என்ன பண்ணிட்ட? கவின் அவனருகே வர, என்னால தாங்க முடியல சீனியர். அவங்க ஸ்ரீயை எப்ப கொண்டு போனாங்க? என்ன செஞ்சாங்க எதுவுமே எனக்கும் தெரியாது. அவளுக்கும் தெரியாது. அவள் பார்க்க எவ்வளவு நார்மலா இருக்காலோ அதை விட பல மடங்கு மனதினுள் மருகிக் கொண்டிருக்கிறாள்.

நீங்க எல்லாரும் ஏன் லேட்டா வந்தீங்க? கவின் சட்டையை பிடித்து உலுக்கியவன், என் மீது தான் தவறு நான் அவள் படுக்க செல்லும் முன் வரை அவளுடனே சுற்றினேன். ஆனால் இரவில் இப்படி நடக்கும்? என்று தெரிந்திருந்தால் அப்பொழுது கூட அவளை தனியே விட்டிருக்க மாட்டேன். என் மீது தான் தவறு என்று அவனை அவனே அடித்துக் கொண்டிருக்க அர்ஜூன் உள்ளே நுழைந்தான். பின் தான் மீசைக்காரனை அங்கிருந்தவர்கள் தூக்கி சென்றனர்.