அத்தியாயம் 2
அர்ஜூன் ஸ்ரீ அறை கதவை தட்ட, நித்தியிடம் தாரிகா தழும்புக்கான மருந்தை பற்றி கூறி இருப்பாள்.
அவர்கள் கதவை திறந்து, என்ன? என்று கேள்வியுடன் நோக்கினர். அவன் அவர்களை சட்டை செய்யாது அவர்களை விலக்கி விட்டு உள்ளே நுழைந்தான் உரிமையுடன்.
ஆடை மாற்றி தலையில் நீர் சொட்ட படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. நித்தியும் தாரிகாவும் அர்ஜூனை என்ன பண்றான்? என்று கவனித்தனர்.
ஸ்ரீ தலை துவட்டவில்லையா? கதை பேசிக் கொண்டிருந்தீர்களா? தாரிகா நித்தியை பார்த்து விட்டு, அங்கிருந்த துவாலையை எடுத்து ஸ்ரீ அருகே சென்று தலையை துவட்டி விட்டான்.மற்றவர்கள் அவனை “ஆ”வென பார்த்தனர்.
ஆதேஷிற்கு இங்க என்ன நடக்குது? எல்லார் முன்னாடியும் ரொமான்ஸா? என்று விழித்தான்.
அர்ஜூன் வேண்டாம் என்று கிசுகிசுத்தாள் ஸ்ரீ.
அவன் கண்டு கொள்ளவில்லை.ஹேர் டிரையரை எடுத்து அவளது முடியை காய வைத்துக் கொண்டே, நீ ஓ.கே வா ஸ்ரீ? என்று பேச்சை தொடங்கினான்.
அர்ஜூன்..என்ன நடந்தது? எனக்கு ஏன் இவ்வளவு சோர்வாக உள்ளது? ஸ்ரீ கேட்டாள்.
ஸ்ரீ..உன்னால இங்க எதுவுமே நடக்கல. அதை முதல்ல மனசுல ஏத்திக்கோ. எல்லாரும் உன்னோட ப்ரெண்ட்ஸ். இப்ப அங்க போனீயே? உனக்கு ஏதாவது ஆனால் எல்லாரும் எப்படி துடிச்சு போவாங்கன்னு யோசி.கொஞ்சம் கவனமா இரு என்று ஆதேஷிடம் அபி பற்றி ஏதாவது தெரிந்ததா? கேட்டான்.
யாருமே எடுக்கல அண்ணா.
எதுக்கு கத்துறீங்க? என்ன பிரச்சனை? என்று ஆருத்ராவின் அப்பா வந்தார். நிவாஸ் அவரிடம், இப்படி தான் ஹாஸ்பிட்டல் நடத்துவீங்களா? என்று கத்தினான்.
என் இடத்துக்கே வந்து என்னையே எதிர்த்து பேசுகிறாயே? உன்னையே அர்ஜூனும் என்னோட பொண்ணும் என்று கூறுவதற்குள் அங்கு வந்த ஆருத்ரா அண்ணன்,
என்ன பிரச்சனை? நான் பார்க்கிறேன் என்று நிவாஸ் முன் வந்தான்.
நீ எதுக்குடா இந்த பையனிடம் கெஞ்சுகிறாய்? இது நம்ம ஹாஸ்பிட்டல் அவர் மேலும் முறுக்க,
உங்க ஹாஸ்பிட்டல்னா? அடி பட்டு வராவங்கள இப்படி தான் போட்டு வைப்பீங்களா? நிவாஸ் கத்தினான். அபி கையை நீட்ட,
சீனியர் என்று அருகே வந்தான். அபி போனை கொடுத்து விட்டு மீண்டும் மயங்க, இன்பாவும் இதயாவும் அழுதனர். இன்பா அம்மா சுற்றி வேடிக்கை பார்ப்பவர்களை முறைத்தவாறு,இதை பார்த்த ஆருத்ரா அப்பாவும், அண்ணாவும் அதிர்ந்தனர்.
ஆருத்ரா அப்பா கத்த ஆரம்பித்தார். எல்லாரும் என்ன செய்றீங்க? பேசண்டுக்கு சிகிச்சை செய்யாமல் என்ன செய்றீங்க? கேட்டார்.
அபி போனை பார்த்த நிவாஸ், மேம் இதை பாருங்க என்று போனை கொடுத்தான். அபி போனில் அவர்களை தாக்கியவர்களின் வீடியோ இருந்தது.
சீனியர்,கண்ணை திறங்க கோபமும் அழுகையும் கலந்தவாறு நிவாஸ் அபி கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தான். இதயா புடவை அபி இரத்தம் கலந்திருக்க, அவளால் தாங்க முடியாதவளாய் அழ இதயா அவளை அணைத்து ஆறுதலளித்தாள்.
ஸ்ட்ரெச்சர் எடுத்து வர கூட இவ்வளவு நேரமா? நிவாஸ் சினத்துடன் கையில் அவன் வைத்திருந்த கைத்தடியை தூக்கி எறிந்தவன். அடிபடாத மறு கையால் அபியை தூக்கிக் கொண்டு, என் பின்னே வாங்க என்று ஆருத்ரா அண்ணனை அழைத்தான்.
சீனியர்,..எழுந்திருங்க சத்தமிட்டவாறு அவன் இருந்த அறைக்கு சென்று அபியை படுக்கையில் போட்டு விட்டு, பாருங்க டாக்டர்..என்று ஆருத்ரா அண்ணனை அழைக்க, அவன் உனக்கு வலி இருக்கா? அவன் கேட்க,
அய்யோ டாக்டர், முதல்ல அபி சீனியரை பாருங்க. ப்ளீஸ்..என்று நகர்ந்தான் கையை உதறிக் கொண்டே. அங்கே மருத்துவர்களும் செவிலியர்களும் குழுமி இருக்க, சற்று நேரத்திலே அவர்கள் வெளியே வந்தனர். கவினும் மாதவும் வந்தனர்.
சீனியர் என்று நிவாஸ் அவனருகே ஓடினான். அபி எங்கடா? அவனுக்கு ஒன்றுமில்லைல? பதறி கேட்டான் கவின்.
டாக்டர் வெளியே வந்தார். இன்பா அவரிடம் சென்று அவனுக்கு ஒன்றுல்லையே? பதட்டப்பட,அனைவரும் அவர் அருகே வந்தனர். ஆருத்ரா அப்பாவும் உள்ளே தான் இருந்திருப்பார்.
இல்லைம்மா. அவரை மேலாக தான் தாக்கி இருக்கிறார்கள்? ஆழமாக ஏதும் இல்லை. ஒருமணி நேரத்தில் விழித்து விடுவார்.
இப்பொழுது பார்க்கலாமா? கவின் கேட்டான்.
யாராவது ஒருவர் சென்று பார்க்கலாம் என்று அவர் கூற, இன்பாவை அனைவரும் பார்த்தனர். அவள் எங்கே வெளியே இருந்தாள். அவர் சொன்னவுடனே அபியை பார்க்க சென்று விட்டாள்.
அப்பா..என்று நிவாஸ் அமர, ஆருத்ரா அண்ணன் அவனிடம் வந்து, உங்களுக்கு ஏதும் வலி உள்ளதா?
இல்ல சார். தேங்க்ஸ் சார் என்றான்.
உங்களுக்கு என்னை நினைவில்லையா?
நீங்களா? தெரியவில்லையே? நிவாஸ் சிந்தித்தான்.
உங்க அக்கா கோமாவில் இருந்த போது நான் தானே பார்த்தேன்.
ஓ..நீங்களா டாக்டர்? தேங்க்ஸ்..அவனது கையை பிடித்து குலுக்க,ஷ்..ஆ..என்றான் மெதுவாக.
வாங்க, உங்களுக்கு பார்க்கலாம் அவனை அழைக்க, நான் அர்ஜூனிடம் பேசிட்டு வாரேன்.
கவினிற்கு அர்ஜூன் போன் செய்ய, அவன் நிவாஸிடம் போனை காண்பித்து பேச ஆரம்பித்தான்.அபி..ஓ.கே டா.
நான் அவனை பார்க்க வாரேன்.
நோ..அர்ஜூன், நிலைமை சரியில்லை. மற்றவர்களுக்கு பாதுகாப்பாய் நீ வீட்டிலே இரு. யாசு இப்ப ஓ.கே வா? கவின் கேட்க. புரியாமல் இதயாவும், நிவாஸும் அவனை பார்த்தனர். மாதவ் வருத்தமாக அமர்ந்தான்.
அர்ஜூன் ஓ.கே என்றான்.
ஆருத்ரா அண்ணனை விட்டு கவினிடம் வந்து நிவாஸ், யாசு சீனியருக்கு என்ன?
கவின் கூற அர்ஜூன் போனை நிவாஸிடம் கொடுக்க சொன்னான்.
நான் முதல்லவே சொன்னேன்ல.எங்க விசயத்துல யாரும் தலையிட வேண்டாமென்று நிவாஸ் கோபப்பட,கவின் போனை நிவாஸ் கையில் திணித்தான்.
அர்ஜூன், என்ன நடக்குது? ஏதும் சரியில்லை. அவங்கள பார்க்க நான் இப்பொழுதே போகிறேன்.
உன்னோட அக்கா போனது போதாதா?
என்ன ஸ்ரீ அங்க போனாலா? அவளுக்கு என்ன ஆச்சு? ஏதும் பிரச்சனையா? நிவாஸ் பதறினான்.
இல்ல. உன்னோட மச்சானை நல்லா தொங்க விட்டா? என்றான் ஸ்ரீயை பார்த்துக் கொண்டு. பொண்ணுங்க ஸ்ரீயை பார்க்க, நான் அவனை தொங்க விட்டேனா? ஸ்ரீ கேட்க, அவர்கள் மேலும் அதிர்ந்தனர்.
அர்ஜூன்..? அவளா? நிவாஸ் கேட்க, ஆமாம்டா..அப்புறம் அபி, யாசுவை தாக்கியது உன்னோட ஆன்ட்டி இல்லை. உன் ஆன்ட்டிக்கு பின்புலம் யாரோ இருக்காங்க. ஒண்ணு அவனா இருப்பான் இல்லைன்னா இன்பா மேம்மை தொந்தரவு செய்யும் அந்த விக்கியாக இருக்கலாம்.
பின்புலமா? யாரா இருப்பாங்க? நிவாஸ் கேட்க,
நிவி உனக்கு யாராவது அப்படி இருப்பாங்கன்னு தோணுதா?
தெரியல அர்ஜூன். நான் கொஞ்சம் யோசிக்கணும். ஸ்ரீ பக்கத்தில் இருக்காலா? நிவாஸ் கேட்டான்.
ஆமாம் இருக்கா.
அவ கிட்ட கொடு?
அர்ஜூன் ஸ்ரீயிடம் கொடுக்க, அறிவிருக்கா உனக்கு? தனியா எந்த தைரியத்துல அந்த வீட்டுக்கு போன? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லல. உனக்கு ஏதாவது ஆனால் நான் எப்படி இருப்பேன்? எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தான். அதனால் தான் அர்ஜூனிடம் விட்டால் அவனையும் ஏமாற்றி சென்றிருக்கிறாய்?
ஆபத்து உன்னால் மட்டுமில்லை. இதில் நானும் இருக்கிறேன்.உனக்கு புரியுதா? இல்லையா? நீ என்ன செய்வன்னு தெரியாது. அர்ஜூனை சமாதானப்படுத்தி நீ ஹாஸ்பிட்டல் வருணும். சற்று நேரம் தான் காத்திருப்பேன். நீ வரலைன்னா நான் அர்ஜூன் வீட்டுக்கு வந்திடுவேன் என்று போனை துண்டித்தான்.
ஸ்ரீயிடம் பேசிய நிவாஸ் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். அவனருகே வந்த ஆருத்ரா அண்ணன் அவனது கையை பார்த்தான்.
அவனை பார்த்து நிவாஸ் அமைதியாக இருந்தான். இங்கே வலிக்கிறதா? இங்கே வலிக்கிறதா? கையை பார்த்து நிவாஸிடம் உறுதி செய்து அவனுக்கு சிகிச்சை அளித்து விட்டு,
உன்னால் தான் உன் சீனியருக்கு பிரச்சனை என்று பதறினாயா? டாக்டர் கேட்டான்.
இல்லை. இவங்க எல்லாரும் என் அக்காவின் தோழன், தோழியர்.. அதற்காகவென்றும் கூற முடியாது. நீங்க அவரை பார்த்து பதறி சிகிச்சை எதுக்காக செய்தீங்களோ? அது கூட ஒரு காரணம் தான்.
அவன் நிவாஸை பார்த்து புன்னகைத்து விட்டு அவன் தந்தையை பார்த்தான். அவருக்கும் நிவாஸ் மீது நல்ல எண்ணமே உருவாயிற்று. ஆனால் அவன் ஆன்ட்டி கயல் என்பது தான் அவருக்கு பிரச்சனை.
டாக்டர் எழ, கவின் ஸ்ரீ நல்லா இருக்காலா?
ம்ம்..என்றான் சுருக்கமாக. ஏன்டா இவ்வளவு கோபப்படுற? அவளுக்கும் கஷ்டமா தானே இருக்கும்.
இல்ல சீனியர். அர்ஜூன் கூறுவது போல் எதையும் யோசிக்காமல் யாரிடமும் சொல்லாமல் அவள் செய்கிறாள். உங்களுக்கே தெரியும் அவங்க அவளை? என்று கவினை அணைத்து அழுதான்.
நோ..டா. எல்லாமே சரியாகிடும் கவினும் நிவாஸை தேற்றினான்.
ஆருத்ரா அண்ணன் நிவாஸிடம், ஆமா..உங்களை ஒரு பொண்ணு காதலிக்கிறாமே?
உங்களுக்கு எப்படி தெரியும்? நிவாஸ் கேட்டான்.
உங்க அக்கா பேசும் போது கேட்டேன். ஒரு பொண்ணே உங்ககிட்ட வரா..உங்களுக்கு ஏதும் தோணலையா?
இருக்கிற பிரச்சனை போதாது. காதலாம் காதல்..ரொம்ப முக்கியம். முதல்ல எனக்கு ஸ்ரீ பாதுகாப்பா இருக்கணும்.
என்னடா சொல்ற? பொண்ணா? கவின் கேட்க, ஆமா சீனியர் தினமும் அவள் வாய்ஸ் மெசேஜ் பண்ணுவா?
இன்று பண்ணியிருப்பால?
இல்ல சீனியர். நடுராத்திரில தான் பண்ணுவா?
பரவாயில்லை. இதை கூட கவனித்து வைத்திருக்கிறீர்கள் ஆருத்ரா அண்ணன் கேட்டார்.
டாக்டர் பொண்ணுங்களாம் ரொம்ப டேஞ்சர் பார்த்து தான் டீல் பண்ணனும். எனக்கு தெரிந்து அவள் என்னை கவனித்துக் கொண்டே இருக்கான்னு தோணுது. அவ பேசுறதுலவே தெரியுது. அவள் என்னை கவனிப்பது போல் வேறு சிலரும் இருக்காங்க. அவங்க கிட்ட அவளும் மாட்டிட்டா? என்ன பண்றது? அதனால் தான் மேசேஜை பார்ப்பேன்.
ஓ..அப்படினா? அந்த பொண்ணு மேல உங்களுக்கு அக்கறை இருக்கு.
அய்யோ சார்,எங்களால யாருக்கும் ஏதும் ஆகக் கூடாது. அந்த எண்ணத்துல தான் மேசேஜ் பார்ப்பேன். நானே என்ன செய்வது? எப்படி பிரச்சனையிலிருந்து வெளியே வரதுன்னு புரியாம இருக்கேன்.நீங்க வேற காதலெல்லாம் செய்ய நேரமில்லை.
நேரமிருந்தால் செய்வீர்களா? அவர் கேட்டார்.
இவருக்கு அந்த பொண்ணை தெரியுமோ? கவின் ஆருத்ரா அண்ணனை பார்த்தான். சீக்கிரம் வா..அவரது அப்பா அழைக்க நிவாஸ் அவரை பார்த்து,
சார்..நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கும். ஏன் சார் மூஞ்சியை உர்ருன்னு வச்சுருக்கீங்க? நிவாஸ் கூற, அவர் மகன் சிரித்து விட்டு, இனி சிரிப்பார்ன்னு நினைக்கிறேன் என்று சொல்லி விட்டு செல்ல,நிவாஸும் கவினும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அறைக்கு சென்ற டீன் கண்ணாடி முன் சிரித்து பார்த்துக் கொண்டு மீசையை முறுக்கி விட்டு, நல்லா தான் இருக்கு என்றார்.
நல்லாவா? சூப்பரா இருக்கு என்று அவர் மகன் உள்ளே வர, விறைத்து நின்றார்.
நம்ம ஹாஸ்பிட்டல்ல விபத்தா இருந்தா? நம்ம தானே போலீசை அழைப்போம். இது என்ன புதுசா நடக்குது? டீன் கேட்க, அது கபாலீஸ்வரர் வேலை தான். கொஞ்ச நாட்களாக அவர் சரியில்லை.நான் தான் ஏற்கனவே கூறினேன். நீங்க தான் ஏதும் கேட்காமல் விட்டு விட்டீர்கள்.
அவரது உதவி பணியாளரை அழைத்து, மீட்டிங்க அரேஞ்ச் பண்ணுங்க. கபாலி சாரையும் வரச் சொல்லுங்க? அவரிடம் உத்தரவிட்டு அவர் செய்த அனைத்திற்காக சாட்சியை எடுத்து வா..மகனிடம் கூறி விட்டு உள்ளே அவர் இருக்கையில் அமர்ந்தார்.
ஆருத்ரா அண்ணா கபாலி டாக்டர் பற்றி திரட்டிய ஆதாரங்களை எடுத்து விட்டு, தன் தங்கையிடம் போன் செய்து அவன் அப்பா மனதை பிடித்து விடுவான் என்று உறுதியளிக்க, ஆருத்ரா.. அம்மாவிடம் மகிழ்ச்சியாக கூறி விட்டு அம்மா,..அப்பா கிட்ட சொல்லாதே. நான் ஹாஸ்பிட்டல் சென்று வருகிறேன் என்று கிளம்பினாள்.
அபி விழிக்கவும் பிரதீப், தீனா அந்த பசங்களுடன் வரவும் சரியாக இருந்தது. பிரதீப் அந்த பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான்.
மாப்பிள்ள என்னடா ஆச்சு? பதறிய பிரதீப்பை தான் அபி முதலில் கவனித்தான்.
மாமா..என்று பாவமாய் அபி பார்க்க, அண்ணாவுக்கு என்ன? என்று பாப்பா அபி அருகே வந்தாள்.
உனக்கு ஒன்றுமில்லைல டா? அபி மெதுவாக கேட்க, அண்ணாவை திருடன்னு சொல்லி அடிச்சாங்க. அண்ணா எதுவும் செய்யல..இந்த அண்ணா தான் உதவி செஞ்சாங்க என்று தீனாவை கை காட்டினாள். அருகே அவன் அண்ணா நின்று கொண்டிருந்தான்.
தேங்க்ஸ் மாமா..என்றான் தீனாவை பார்த்து, அவன் இன்பாவை பார்க்க, மிஸ் நீங்களும் இங்க தான் இருக்கீங்களா? அந்த பையன் கேட்டான். அபி அப்பொழுது தான் இன்பாவை பார்த்தான். அவள் கண்கள் சிவந்து அழுத தடம் இருந்தது.
மேம்..என்று அபி அவளை பார்த்து அதிர்ந்தான். அவள் மௌனமாக இருந்தாள். பிரதீப் தீனா இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, கவினும் நிவாசும் வந்து பார்க்கட்டும் என்று இன்பா எழுந்தாள். அபி தன் மாமாக்களை பார்த்தான்.
இரும்மா..நாங்க வாரோம் என்று பசங்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர். நான் அவங்கள வரச் சொல்றேன் என்று ஓர் அடி எடுத்து வைத்தாள். அபி இன்பா கையை பிடித்து நிறுத்தினான். அவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
கண்கள் மழையென ஓட, மேம்..ப்ளீஸ் கொஞ்ச நேரம் இருங்க. அவள் அவனருகே நின்றாள். அவள் கண்கள் அவனது கட்டு போடப்பட்ட இடத்தில் நிற்க, அவளது கையை அவனது காயப்பட்ட இடத்தில் மெதுவாக வைத்தான்.
அவள் கண்ணீர் தெறித்து அவன் மேனியில் விழ, மேம்..என்று அவளது முகத்தை நிமிர்த்தினான். அவளால் அவனை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.
என்னை பாருங்க என்று பிடித்திருந்த அவள் கையை அழுத்தினான். அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அபி காதலுடன் அவளை பார்க்க, படுக்கையின் அருகே மடிந்து படுக்கையில் நெற்றி முட்ட கவிழ்ந்து சாரி..அபி என்னால் தான் நடந்தது. நான் உன்னை அழைத்து செல்லவில்லையென்றால் நீ நல்லா இருந்திருப்ப என்று மீண்டும் அழுதாள்.
அவளை நிமிர்த்தி, அவளது கண்ணீரை துடைத்து விட்டு அவளை உற்றுப்பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் இன்பாவிற்கு நன்றாகவே புரிந்தது. என் மீது காதல் உங்களுக்கும் வந்து விட்டது என்று அபி பார்த்திருப்பான். இன்பாவிற்கு புரிந்தாலும் அபியிடம் ஏதும் கூறவில்லை.