ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 120
எல்லாரும் ஸ்ரீயை பார்க்க, அவள் மனம் பதைக்க கண்கலங்க அசையாது கேட்டுக் கொண்டிருந்தாள்.
மீண்டும் பிரதீப் தொடர்ந்தான். ஸ்ரீ, அகில் பெற்றோர்கள் கண்டறிந்தனர் ஸ்ரீக்கான தூய்மையானவனை. அவன் தான் நம் அர்ஜூன். அவனுக்கு இது எல்லாமே தெரியும். அவன் காதலில் பிரமித்து இருந்த பெற்றோர்களும் அவளுக்கு நிறைய பரீட்சைகள் அவனுக்கு தெரியாமலே வைத்தனர். ஆனால் அந்த தெய்வமோ அதற்கு மேல் அவனுக்கு உயிர்ப்பரீட்சையை வைத்தார்.
அதற்கு பின் தான் அவனை அழைத்து, ஸ்ரீ பிறந்ததிலிருந்து எல்லாவற்றையும் கூறி அவனை அவர்களது மருமகனாக ஏற்றுக் கொண்டனர்.
சும்மாவே பொண்ணுங்க யாரையும் பக்கத்துலயே விட மாட்டான்.அவங்க சொன்ன பிறகு சொல்லவா வேண்டும்? பிரதீப் கேட்க, ஸ்ரீ கண்ணீருடன் அமர்ந்தாள்.
என்ன? தாரிகா சத்தமாக உரைக்க, அகிலோ அவன் என்ன செய்தான்? கேட்டான்.
அம்மாவும் அப்பாவும் அர்ஜூனை எனக்கானவனாக தேர்ந்தெடுத்து விட்டார்களா? ஸ்ரீ எண்ணிக் கொண்டே கண்களை துடைத்தாள்.
எல்லாமே உன்னால் தான் நடந்தது அகில் என்றான் பிரதீப்.
நானா? நான் என்ன செய்தேன்?
பிரகதியுடன் சேர்த்து ஊரார் முன் இருவரும் பள்ளியில் தனித்து இருந்ததை பார்த்து தவறாக கூறினாயே? அன்று ஸ்ரீ கோபமாக அந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்தான்.
இல்லை என்றொரு சத்தம் அபி தான். அனைவரும் அவனை பார்க்க, அன்று மட்டுமில்லை. அகிலால் எப்பொழுதெல்லாம் கஷ்டப்படுகிறாளோ அந்த காட்டிற்குள் சென்று விடுவாள் தருண் கூறினான்.
எனக்கும் தெரியும் என்ற பிரதீப், அவள் தனியே சென்றதால் அவளுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்று அர்ஜூன் அவளை சமாதானப்படுத்த சென்றான்.அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க அங்கே ஒரு கர்ஜனை குரல் ஓங்கி ஒலிக்க, இருவரும் பயந்து அதிர்ந்து நின்ற சமயம், அங்கே வந்தது குட்டி சிங்கம். பொசுபொசு அடர்ந்த கேசம், பார்வையாலே கொல்ல துடிக்கும் கண்கள், ஆழ்ந்த மூச்சுடன் நாசி, நாற்றத்துடன் கூடிய கூர்மையான பற்கள். குட்டி என்றால் மிகவும் குட்டி இல்லை. கொஞ்சம் இளமையாகவும் தெரிந்தது.
அவர்கள் முன் வந்து நிற்க, அர்ஜூன் ஸ்ரீயை மறித்து முன் நின்றான். அதுவும் இரவு நேரம். அது அவன் மீது பாய, கையில் மரக்கிளையை தனியாக இரு கைகளாலும் இறுக்கமாக பற்றி அது தாக்க வரும் போது அசராமல் அடித்து வீழ்த்தினான். வீழ்வதற்கென்ன அது மான்குட்டியோ.. சிங்கமாயிற்றே காலில் அடி பட்டாலும் அர்ஜூனை மீண்டும் தாக்கியது அவனது கழுத்தில். இப்பொழுது அவன் முன் வந்த ஸ்ரீ கையில் பாறாங்கல்லின் ஒரு பகுதியை அதன் மீது தூக்கி எறிய, அதன் தலையில் அடிபட்டு இரத்தம் ஒழுகியது.
அதில் அதற்கு கோபம் தலைக்கேற, இருவரையும் சவாலாக பார்த்தது. அந்நேரம் மரத்திலிருந்த அம்புகள் அதன் மீது தைத்தது. தருண் மரத்தின் மேலிருந்து அம்பை எய்திக் கொண்டிருந்தான். அர்ஜூன் செல்லும் இடமெங்கும் தருண் எப்பொழுதும் இருப்பான். அவன் மீது கோபத்தில் அந்த சிங்கம் தருணை தாக்க வந்தது.
அவனும் விடாமல் அவன் எடுத்த கட்டைகளை கூர்மையாக்கி வைத்திருந்தவற்றை அடுத்தடுத்து அம்பாய் எய்திக் கொண்டிருந்தான். சிங்கம் மரத்தின் மேல ஏற முயன்றது. அர்ஜூன் அதை அவன் பக்கம் திருப்ப, ஸ்ரீ அவள் பக்கம் திசை திருப்ப, அப்பொழுது தான் நான் அங்கு சென்றேன். நானும் அர்ஜூன் ஸ்ரீயுடன் நிற்க, தருணும் எங்களுடன் கீழே வந்தான். நாங்கள் ஆளுக்கொரு திசையாய் இருக்க, எங்களுடைய ஆட்களோ ஈட்டி, கம்பு, தீப்பந்தம் என்று எடுத்து வந்து தாக்க அதற்கு அடி பலமாக அசர முடியாமல் துவண்டு படுத்து விட்டது.
அர்ஜூன் அவர்களை தடுத்து, அதன் அருகே சென்றான். அதை மெதுவாக தடவ, அது வலியால் காடே அதிரும் படி கர்ஜித்தது. தருணிடம் சொல்லி மருந்தை எடுத்து வர,அவன் காட்டிற்குள் செல்ல, ஆட்களும் உள்ளே தருணுடன் சென்றனர்.
அவன் எடுத்து வர, அவனும் அர்ஜூனும் மூலிகையை சாறு பிழிந்தும், மருந்தை கட்டிக் கொண்டும் இருந்தனர்.ஸ்ரீ அவர்களை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் மெதுவாக எழுந்தது. எங்களுடைய ஆட்கள் அதை சுற்றி வளைத்து தங்களது ஆயுதங்களை நீட்ட அது அர்ஜூன், தருண் அருகே வந்து மண்டியிட்டது. ஸ்ரீ கண்கள் நீரால் நனைந்தது.
எல்லாரும் மகிழ்ச்சியுடன் அதனை பார்க்க, அர்ஜூன் அதனை தடவ, ஸ்ரீ பயத்துடன் அதை பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜூன் அவள் கையை பிடித்து அதன் பிடரி முடியில் அவளது கையை உலவ விட்டாள். பின் அவளாகவே அதை தொட்டாள். அவள் பயம் தொலைந்து அதற்கும் முத்தம் கொடுக்க, அது கர்ஜனையுடன் அவ்விடம் விட்டு சென்றது.
தருணோ அவள் முத்தம் கொடுத்ததை கிண்டல் செய்து கொண்டே வந்தான். பின் தான் அர்ஜூனின் கழுத்தில் காயத்தை பார்த்து, அவனுக்கு மருந்தெடுக்கவென்று தருண் செல்ல, மற்றவர்களிடம் ஊராருக்கு இது தெரியக் கூடாது என்று அவர்களை நான் தான் மறைத்து அனுப்பி வைத்தேன். இப்பொழுது கூட அர்ஜூன் பாட்டி, அகில், ஸ்ரீ பெற்றோர் தவிர யாருக்கும் தெரியாது.
ஆனால் அதிலும் மற்றவர்கள் அவர்களை தவறாக பேசினார்கள். ஸ்ரீ உனக்கு ஏதாவது நினைவு வருகிறதா? பிரதீப் கேட்டான்.
அவளது நினைவு முழுவதும் அர்ஜூனை மட்டுமே சுற்றி வந்தது. அவன் காதல், அவனுடனான பாதுகாப்பு என அவள் இருக்க, பிரதீப்பின் கேள்வி கெஞ்சித்தும் அவள் காதில் விழவில்லை. சிலையாய் அமர்ந்திருந்தவளை இருவரது அணைப்பு மீட்டெடுத்தது.
பிரதீப் கூறி முடிக்கும் போது கவினும் தாரிகாவும் கவலை கலந்த மகிழ்ச்சியுடன் அவளை அணைத்திருந்தனர். அவர்களை வித்தியாசமாக பார்த்த அனைவரிடமும் அவளுக்கு கஷ்டமாக இருக்கும்ல. அதனால் தான் என்று சமாளித்தான் கவின்.
இன்னொன்று முக்கியமானது நம் அனைவருக்குமானது.
அனைவரும் பிரதீப்பை பார்த்தனர்.நம்ம ஊருக்கு மணமுடித்து வரும் பொண்ணுங்க ஒன்று அவங்க குடும்பத்தோட நம் ஊருக்கு வந்து வாழ வேண்டும் இல்லையெனில் அவர்களது காதலை நிரூபிக்க அவர்களது குடும்பத்தை விட்டு வர வேண்டும்.
நம் ஊரில் பெண்ணெடுக்க நினைப்பவர்கள் அவர்களது வீரத்தை காட்ட வேண்டும் இல்லை காதலை நிரூபிக்க எத்தனை வருடமானாலும் காத்திருக்க வேண்டும். அதை தான் நம் கவின் அக்கா அகல்யாவை காதலித்தவர் அவளை கைபிடிக்க ஒரு வருடமாக காத்திருக்கிறார். அவரது அம்மாவை சமாளிக்க அவர் ரொம்ப கஷ்டப்பட்டார்.
அபி அப்பா கூட, அவருடைய பிசினஸை விட்டு தான் அவனது அம்மாவை திருமணம் செய்து கொண்டார் பிரதீப் கூற, இன்பா தலையில் கை வைத்து, இல்ல..சும்மா விளையாடாதீங்க பாஸ் என்றாள்.
ஏம்மா, உண்மையை தானே சொல்றேன். பசங்களுக்கு இது தெரியாமலிந்தால் தான் நல்லதென்று யாரும் கூறவில்லை.
உண்மையான காதலுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று தான் இந்த கட்டுப்பாடே வந்தது. அது போல் தான் வாழ்ந்தும் கொண்டிருக்கிறோம்.
நம் ஊர் ஆட்கள் அனைவரும் காதலுடன் தான் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். கவின் பெற்றோர்கள் சண்டை போடுவது மட்டும் தானே தெரியும்? அவர்களும் காதலித்து தான் திருமணம் செய்தனர். கணவன் மனைவி வாழ்வில் சண்டை சச்சரவுகள் சாதாரணம் தான். என்ன ஒரு படிக்கு மேல் சென்று அவங்க சண்டை போடுகிறார்கள்.
ஏன் கவின் சண்டையில் கோபித்து செல்லும் உன் அம்மாவோ? சண்டையை துவக்கும் உன் அப்பாவோ? பிரிவு என்ற ஒன்றை உச்சரித்து பார்த்திருக்கிறாயா?
அவன் இல்லை என்று தலையசைத்தான். தருண் அம்மா, அப்பாவை பார்த்தீர்களா? அவன் அம்மா இறந்த பிரிவு தாங்காது அவன் அப்பாவும் இறந்து விட்டார் என்று கண்கலங்கினான்.
துகிரா அவனது கையை பிடிக்க, வாழ்வில் காதல் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். அது சண்டையிலும் அன்பிலும். ஒன்று மட்டும் உங்களுக்குள் இருக்கக் கூடாது. சந்தேகம். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை தான் வாழ்வை சிறக்க வைக்கும்.
தாரிகா கவினை பார்க்க, சைலேஷ் நித்தி அமைதியாக, மாதவ் நினைவில் யாசுவும், இன்பாவும் கவலையுடன் அமர்ந்திருந்தாள். அபி அவளை பார்க்க, பிரதீப் இன்பா அருகே வந்து,
உனக்கு என்னம்மா கவலை நீ தான் யாரையும் காதலிக்கவில்லையே?
காதலா? யோசித்தாள். அவள் இதயா..என்று சொல்ல, பிரதீப் அபியை பார்த்து இது தேறாது என்று தலையை ஆட்டினாள். அவளுக்கே நான் ஏன் கவலையானேன்? என்று புரியாமல் விழித்தாள்.
எல்லாருக்கும் என்ன ஆச்சு? யாராலும் உங்க காதலை நிரூபிக்க முடியாதா? என்று துகிரா அருகே வந்து, இவளை என்னுடன் ஊருக்கு அழைத்து செல்லப் போகிறேன் என்றான் பிரதீப்.
ஆனா உங்களுக்கே தெரியும் தங்கை இருக்கும் போது நாம் திருமணம் செய்ய முடியாது? அதனால் அவளை அழைத்து மட்டும் செல்லப் போகிறேன்.
இன்னும் எத்தனை கட்டுப்பாடுகள்? என்று கேட்டான் ஆதேஷ். அவனை பார்த்து சிரித்துக் கொண்டு, நிறைய இருக்கு. சொல்ல நேரம் பத்தாது என்று பிரதீப் ஸ்ரீயை பார்த்தான்.
அமைதியாக எல்லாவற்றையும் கேட்ட சைலேஷ் நித்தி அருகே வந்து அவளது கையை பிடித்து, நான் தயாராக இருக்கிறேன் என்று முன் வந்தான். தாரிகாவும் எழுந்து கவின் அருகே சென்று நானும் தயார். அம்மாவிடம் நான் பேசிக் கொள்வேன். யாசு கண்கலங்க நின்றாள். அகில் அவளருகே வந்தான்.
போன் போடு..என்றான்.
எடுக்க மாட்டிங்கிறார்டா. நான் என்னடா செய்றது? அன்று தான் சொன்னார். எல்லா முக்கியமான வேலையும் முடிந்து விட்டது.நாம் இரு நேரத்தை செலவழிக்கலாம் என்றார். ஆனால் அவர் போனை எடுக்கவே மாட்டிக்கிறார். பேசி ரெண்டு நாள் ஆகுது. நான் இருக்கேனா? செத்தேனான்னு? கூட பார்க்க மாட்டிங்கிறார் பொரிந்து தள்ளிக் கொண்டே கண்ணீர் விட்டாள்.
சைலேஷ் மாதவிற்கு போன் செய்தான்.
என்னடா மச்சி? போனை எடுத்தான் மாதவ். இந்தா என்று சைலேஷ் போனை யாசுவிடம் நீட்ட,சார் நான் இனிமே யாருடனும் பேச மாட்டேன்னு சொல்லிடுங்க.
அபி கவின் நீங்க நாளைக்கு ஊருக்கு போவீங்கள? நானும் வாரேன்.பிரேக் அப் பண்ணிடலாம்னு சொல்லிடுங்க சார் சைலேஷிடம் கூற,
டேய்..என்னோட பப்ளி உன்னுடன் இருக்காலா?
மவனே கொன்னுடுவேன். லவ் பண்ணா பத்தாதுடா. உனக்கு பேச கூட நேரமில்லையா? சைலேஷ் மாதவிடம் கூறி விட்டு, ஏம்மா..யாசு நீ கவலைப்படாதே? உனக்கு நிறைய பசங்கள அறிமுகப்படுத்துறேன். இவனை விடும்மா.
அடப்பாவி நீயெல்லாம் ஒரு ப்ரெண்டா? மாதவ் கதற,
பப்ளியாம் பப்ளி போடா. நான் ஊருக்கு போறேன். ரெண்டு நாள் விடுமுறை. நான் போறேன். நானும் எத்தனை நாள் தான் காத்திருப்பது? என்னை தேடி வராதேடா கத்தி விட்டு போனை அணைத்து விட்டு அமர்ந்தாள்.
கவலைப்படாதேம்மா.சற்று நேரத்தில் வந்துடுவான் சைலேஷ் கூற, போங்க சார்..அவரு வந்து என்ன செய்ய? நிஜமாகவே பிரேக் அப் பண்ணிடலாம் போல இருக்கு. நீங்க வேற..
நித்தி அவளை இழுத்து, கொஞ்ச நேரம் உள்ளே அறையினுள் இரு. அவரை பதற வைச்சிடுவோம் வேடிக்கை செய்து கொண்டிருக்க, இன்பாவால் அவர்களுடன் ஒன்ற முடியவில்லை. அவள் எழ, அங்கே வந்தனர் அர்ஜூனும் தீனாவும். தீனா தருணிடம் அவன் காதலை கூற வந்து சொல்லவும் செய்தான்.
தருணே தன் தங்கை வலியுடன் அவதி பட்டுக் கொண்டிருக்கிறாள்.நான் அவளுக்கு துணையாக இல்லையே? என்று வருத்தத்தில் இருந்திருப்பான். இவன் கூறியவுடன் முடியாது..உறுதியாக சொன்ன தருணிடம்,அவளும் என்னை என்று அவன் கூறும் போது..என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி விட்டான்.
அவள் படிப்பு முடியட்டும். பின் நாம் இதை பற்றி பேசலாம் என்று தீனா கூற தருண் அவனை முறைத்தான்.
தீனா வெளியே வர, அர்ஜூன் தருணிடம் பேசி விட்டு நான் வீட்டிற்கு சென்று வருகிறேன். ஸ்ரீ என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை? என்று இதயா, அவளது அம்மா, தாரிகா அம்மா, நிவாஸிடம் கூறி விட்டு வெளியே வந்து தீனாவை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பினான்.
அர்ஜூனை பார்த்த அனைவரும் அவனையே பார்க்க, ஸ்ரீ ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டு, சாரி அர்ஜூன் நான் அவ்வாறு பேசி இருக்கக்கூடாது. அவன் என்ன எண்ணுகிறான் என்று தெரிந்து கொள்ள தான் அப்படி பேசி விட்டேன் என்று அழுதாள். அவள் அவனை விட்டு விலகாமல் தொடர்ந்து அழுது கொண்டிருக்க, அர்ஜூனும் சினத்தை விடுத்து, அவளுக்கு தட்டிக் கொடுத்தான். அவள் மேலும் அழுதாள்.
எல்லாரும் அர்ஜூனை கவனிப்பதை பார்த்து தீனா, பிரதீப்பை பார்த்தான். அவன் துகிரா கையை பிடித்தவாறு இருக்க, இன்பா எழுந்து ஏதோ கலக்கத்துடன் செல்ல, வாயிற்படி அவளது காலை இடறி விட, தீனா அவள் விழாமல் கையை பிடித்து நிறுத்தினான். அவளது கண்ணீர் தீனா கையில் பட, அவன் அவளை விடுத்து அபியிடம் கண்ணை காட்டினான்.
அபி இன்பா பின் செல்ல, அவள் அம்மாவிற்கு போன் செய்து, அம்மா..என்று அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க அழுதாள்.
எதுக்குடி அழுற? என்று அம்மா பதற, போனை வாங்கிய அபி, ஒன்றுமில்லை ஆன்ட்டி. எல்லாரும் அவங்க பக்கத்துல தான் இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க என்று அவளை பார்த்தான். இன்பா அழ, போனை அணைத்து விட்டு, எதுக்கு இப்ப அழுறீங்க?
எனக்கு என்னோட அப்பாவை பார்க்கணும் போல இருக்கு என்று அமர்ந்தாள். அவனும் அருகே அமர்ந்து, அவளது கையை அழுத்தினான். அவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டு ரொம்ப கஷ்டமா இருக்கு.
அப்பா நினைவினால் மட்டும் தான் அழுகிறீர்களா?
அவள் திடுக்கிட்டு எழுந்து, நான் கிளம்புகிறேன் என்றாள். அவளுக்கும் அபியை பிடித்திருக்கிறது. ஆனால் எதற்காகவோ தவிர்க்கிறாள். அது புரியாமல் அபி இன்பாவிற்கு அவனை பிடிக்கவில்லை என்று நினைக்கிறான்.
மருத்துவமனைக்கு தானே? நானும் வருகிறேன் என்று உள்ளே சென்று வண்டிச் சாவியை எடுத்து வந்து இன்பாவை அழைத்து சென்றான் அபி.
ஸ்ரீயை விலக்கிய அர்ஜூன், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரையும் பார்த்து என்ன? என்று புருவத்தை உயர்த்தினான்.
அவர்கள் பேசுவதற்குள், உதட்டசைவில் நமக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாதீர்கள் ஸ்ரீ கண்ணாலே அனைவரையும் கெஞ்சினாள்.
ஏதாவது காரணம் இருக்கும் என்று அமைதியாக இருந்தனர். பிரதீப் மட்டும் ஸ்ரீயை முறைக்க, துகிரா அவனை பிடித்து கீழே இழுத்து அவனது காதில், நீங்க அமைதியா இருங்க.அவ பயப்படுறா.அவளுக்கு கொஞ்சம் நேரம் தருவோம் என்றாள். பின் அவனும் அமைதியானான்.
அகில் நித்தியை பார்க்க, தீனா உள்ளே வந்து அமர்ந்தான். நித்தி அவனிடம் கண்ணை காட்டி தனியே அழைத்து சென்று சொல்லு கூற, சைலேஷ் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். அர்ஜூன் இருவரது சம்பாசனைகளை கவனித்து குறுஞ்சிரிப்புடன் அவர்களருகே வந்தான்.
நித்தி சார் பக்கத்தில் இருக்கும் போது, உன் கவனம் எங்கோ போகிறது? அர்ஜூன் கேலியாக உரைத்தபடி தீனா அருகே அமர்ந்தான்.
ஓய்..அர்ஜூன் என்ன பேசுற? நித்தி மிரட்டும் தொனியில் கேட்க சைலேஷ் அவளை பார்க்க, நீங்க ஏன் என்னை அப்படி பாக்குறீங்க?
இல்லை. நீ எதையோ மறைப்பது போல் உள்ளது நித்தியிடம் சைலேஷ் வினவ, நான் மறைக்கிறேனா? இல்ல..இவன் தான் எதையோ மறைக்கிறான்? அர்ஜூனை கை காட்டினாள்.
அர்ஜூன் எழுந்து நித்தி அருகே வந்து, நான் மறைக்கிறேனா? அவளருகே சினத்துடன் வர, நித்தி பயந்து சைலேஷ் பின்னே நின்று கொண்டாள்.
மறைக்கலேன்னா? நீ பயந்து நிற்க மாட்ட? நீங்க தான் மறைக்கிறீங்க? ஆனால் அது என்னன்னு எனக்கு தெரியும்? என்று மீண்டும் அமர்ந்தான் அர்ஜூன்.
என்னடா தெரியும் உனக்கு? நீ ஸ்ரீ பற்றி எதையோ மறைக்கிற? அகில் கூற அர்ஜூனிற்கு அந்த வீடியோ நினைவு வர, அவன் முகம் மாறியது.
பிரதீப் உடனே, யாரும் எதுவும் கூற வேண்டாம். கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? ஆனால் அர்ஜூன் நிதானத்தை இழந்து அமைதியாக அமர்ந்தான். ஸ்ரீயின் முகம் வியர்க்க தடுமாறினாள்.
அங்கே வந்தான் மாதவ். ஆனால் சைலேஷ், பிரதீப், கவின், தாரிகா இறுக்கமாக இருந்தனர். மாதவ் யாசுவை நோக்கி அவளை சமாதானப்படுத்த பேச ஆரம்பித்தான்.