ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 118.
அர்ஜூன் உள்ளே வர, பவியின் அப்பா வேகமாக எழுந்து, தம்பி நீங்க எங்க வீட்டுக்கா? என்று அவனை வாருங்கள்.. வாருங்கள்..என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
யாருடா அது? பவி எழுந்து பார்த்து, அர்ஜூனா? மலங்க மலங்க விழித்தாள். இவனை எப்படி இவருக்கு தெரியும்?
அவன் அவரை பார்த்து சிறு புன்னகையை உதிர்த்து விட்டு, நேராக பவியிடம் சென்றான். அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.
அவள் கோபமாக,என்னடா செய்ற?
நீ என்னோட ஸ்ரீயின் தங்கையா? என்று மீண்டும் அதே போல் பார்த்தான்.
என்னோட ஸ்ரீயா?
ம்ம்..என்றான்.
அவள் அமைதியாக இருக்க, எல்லாரையும் அமர சொல்லி பேச ஆரம்பித்தான்.
நான் வந்தது, சொல்லப்போவதை யாரிடமும் சொல்லக் கூடாது. வெளியே தெரிவது போல் காட்டிக் கொள்ளக் கூடாது.அகிலுக்கு நாம் சந்திக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீயை பற்றிய அனைத்தையும் கூறினான். ஸ்ரீயின் வீடியோ தவிர, அவளது அந்த தழும்புகளையும் கூறினான். அவர்கள் அவனை கண்ணீருடன் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
நான் எதற்கு சொன்னேன்? என்று சிந்திக்கிறீர்களா?
அவளுக்கு குடும்பம் இல்லை என்ற வருத்தம் கூட அதிகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது நீங்க மூவரும் இருக்கீங்க? அவள் எப்படி முக்கியமென்று நினைக்கிறீர்களோ? அது போல் அவளுக்கு நீங்களும் முக்கியம்.அதனால் இந்த விசயத்தில் யாரும் தலையிடக் கூடாது.
எங்களை பற்றி உனக்கு எப்படி தெரியும்? பவி கேட்டாள். அவன் தோளை குலுக்கி விட்டு, அகில் உங்களிடம் முழுதாக கூறவில்லை தானே! அது போலே நடந்து கொள்ளுங்கள்.
அப்புறம் அங்கிள், உங்களால் எனக்கு ஒரு உதவி வேண்டும். அந்த கயல் விழி கம்பெனியின் ஷேர் கோல்டரில் நீங்களும் ஒருவர். எனக்கு அவரது கம்பெனி பற்றிய விவரம் சொல்ல முடியுமா? அங்கிள் .
அவர் தயங்கினார்.
ஓ.கே அங்கிள்.உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்றேன். அவ போதை மருத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறாள். அதுவும் சர்காருக்கு எதிராக வெளி நாட்டவருக்கு விற்றுக் கொண்டிருக்கிறார். பார்த்து கவனமாக இருங்கள் என்று அவன் எழுந்தான்.
என்னப்பா சொல்ற? போதை மருந்தா? அதுவும் சர்காருக்கு எதிராகவா?
எஸ் அங்கிள். ஆனா எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிடாதீங்க. அவ கொல்ல கூட தயங்க மட்டா.
சரி..உனக்கு எதுக்கு அவளது கம்பெனி பற்றி தெரியணும்?
நான் ஸ்ரீயின் ஆன்ட்டி என்று சொன்னேனே? அது அந்த கயல் தான். அவள் தான் ஸ்ரீ, நிவாஸ் பெற்றோர்களை கொன்றது என்று பவியை பார்த்தான். அவள் இறுக்கமாக இருக்க, அவளது தோளை தட்டியவன் நான் கேட்கும் போது நீ உதவி செய்.அது போதும். அதற்குள் ஏதாவது செய்கிறேன் என்று நீ சென்று மாட்டினால் அகில் கூறியது போல் அனைவரும் அவள் கையாலே சாக வேண்டியது தான்.
ஸ்ரீயும் பொறுமையாக இருப்பது அவளை கொல்ல தான். கொஞ்ச நாட்கள் அமைதியா இருந்தாலே போதும் என்று கையை நீட்டினான்.
என்ன? புருவத்தை உயர்த்தினாள்.
பிராமிஸ் பண்ணு. இது எனக்கு அல்ல ஸ்ரீக்கு என்றான்.
அவன் கையை பற்றி விட்டு, நீயும் அவளை காதலிக்கிறாயா? அவன் மௌனமாக இருந்தான். அவள் யாரை காதலிக்கிறாள்?
தெரியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போதே தாரிகா அவனை அழைத்தாள்.
போனை எடுத்து, சொல்லு?
அண்ணா, ஸ்ரீக்கு யாரோ போன் செய்திருந்தார்கள். அவள் என்னை ஏமாற்றி விட்டு வெளியே ஓடி விட்டாள்.
சீற்றமுடன் அர்ஜூன் தாரிகாவிடம், உன்னை எதற்கு அவளுடன் இருக்க சொன்னேன்? நீ இருக்கும் தைரியத்தில் தானே அவளை விட்டு வந்தேன் .
பிரதீப் அண்ணா போனை வாங்கி, என்னை ஏமாற்றி ஓடி விட்டாள் அர்ஜூன்.
என்ன அண்ணா இப்படி விட்டுட்டீங்களே? சினத்துடன் ஸ்ரீ.. என்று பவி மாளிகையே அலறும் வண்ணம் கத்தினான்.
அவனுடைய கத்தலில் ஜூலி அரண்டு குலைத்தது. அவர்களும் பயந்தவாறு திகைத்தனர்.
ஸ்ரீயை காணோம். நீங்க இருக்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவ்விடம் விட்டு நகர,நாங்களும் வருகிறோம் என்று பவியின் அம்மா கூறினார்.
நான் இப்பொழுது தானே கூறினேன்? அவளை யாரும் ஏதும் செய்ய முடியாது. அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன். நீங்க அமைதியா இருங்க. நான் அவளை அழைத்து பாதுகாத்து விட்டு கூறுகிறேன் என்று ஸ்ரீக்கு போன் செய்தான்.
அர்ஜூன்? அவனது பெயரை தான் கூறி இருப்பான். அவன் தாளித்து எடுத்து விட்டான் ஸ்ரீயை. குடும்பம் மொத்தமும் அவனது செய்கையை ஆர்வமுடனும், பதட்டமுடனும் பார்த்தனர்.
அர்ஜூன் வினிதா அக்கா போன் செய்து அனு என்னை பார்க்க வேண்டுமென்று பிடிவாதம் செய்கிறாள். உடனே வரச் சொன்னாங்க. அதான் வந்தேன்.
பைத்தியமாடி நீ? என்று மீண்டும் கத்தினான்.
ஏன் அர்ஜூன்?
பவி போனை பிடுக்கி ஸ்பீக்கரை ஆன் செய்து, அர்ஜூனிடம் கெஞ்சுவது போல் பாவனை செய்தாள்.
அவன் ஏதும் கூறாது, அக்கா அவங்க அம்மாவை பார்க்க சென்றிருக்கிறார்கள். காலையில் தான் போன் செய்தேன்.
இல்லை அர்ஜூன். அவரது குரல் சரியாக ஒலித்தது.
என்ன சொல்ற? சிந்தித்தான். நீ எங்கே இருக்க? அங்கே நிற்காதே..சீக்கிரம் கிளம்பு அர்ஜூன் பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீ வீல் என்று கத்தினான்.
ஸ்ரீ..ஸ்ரீ..ஸ்ரீ…என்ன ஆச்சு?
அர்ஜூன்..என்று திணறிக் கொண்டே, அவளை அணைத்தவனை பிடித்து அவள் முன் கொண்டு வந்தாள். ஜிதினை பார்த்ததும் ஸ்ரீயின் கை கால்கள் உதறியது.
அ…அ..அர்ஜூன்.ஜி…ஜிதின்.. நீயா? என்று அவள் அவனிடம் பேச, ஜிதினோ எங்க போன ஸ்ரீ? வா நம்ம வீட்டுக்கு போகலாம்.
இல்ல..என்று அவள் ஓட, அவளை இடை நிறுத்தி, அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, இந்த இரண்டு நாளா நீ இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அன்று நீ சென்றதிலிருந்து உன்னுடைய அறையில் உன் வாசத்துடன் இருந்தேன். ஆனா பேச நீ இல்லையேம்மா. வா..என்று அவளது கையை அவன் பிடித்து இழுக்க,
ப்ளீஸ் என்னை விட்டுரு. உன்னை நான் எவ்வளவு நம்பினேன்? இப்படி செஞ்சுட்டாயே? இனி இழக்க என்னிடம் என்ன தான் உள்ளது? எல்லாரும் என்னை விட்டுருங்க. என்னோட அம்மா, அப்பா இருந்தா எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ஏன்டா நீயும் அவளுடன் சேர்ந்துட்ட? என்று கத்தினாள்.
அய்யோ ஸ்ரீ, நான் அவங்களுடன் சேரவில்லை. எனக்கு நீ மட்டும் தான் வேணும். நீ என் அருகே இருக்க வேண்டும் என்பதால் தான் உன்னை முழுதாக நான் எடுத்துக் கொண்டேன்.
என்ன? வாயில் கை வைத்துக் கொண்டு பவியும் குடும்பத்தினரும் அதிர்ந்து அர்ஜூனை பார்த்தனர். அவன் கண்களோ கோபத்தில் இரத்தமானது.வாயை மூடிக் கொண்டு பவி அழுதாள். பெற்றோர்கள் அவளை அணைத்தனர்.
எனக்கு உன்னை தவிர யாரும் வேண்டாம். உனக்கும் என்னை தவிர யாரும் வேண்டாம்.
இல்லை. எனக்கு எல்லாரும் வேண்டும். நீ வேண்டாம்.
நான் வேண்டாமா? என்று கத்திய ஜிதின் அவளது கழுத்தை நெறித்தான். அவள் கண்கள் சொறுக, இதழ்கள் புன்னகையில் வளைந்தது.
அவளை விட்டு, இந்த நிலையில் ஏன் சிரிக்கிறாய்? மேலும் கத்தினான்.
அர்ஜூனால் அங்கு இருக்க முடியாமல் அவள் இருக்கும் இடத்தை போனில் அறிந்து, அகிலுக்கு போன் செய்தான்.
அவர்கள் கல்லூரி அருகே இருப்பதால் சீக்கிரம் அவளை காக்க முடியும் என்று போன் செய்ய அவன் நித்தியை சமாதானப்படுத்தி கல்லூரியை விட்டு வெளியே வர எத்தனித்தனர். அர்ஜூன் போனை எடுத்து விசயத்தை அறிந்து கொண்டு ஓ.கே அர்ஜூன் என்று பதட்டத்துடன் சைலேஷ் அறைக்கு சென்றான்.
அவர்களை பார்த்து சைலேஷ் புன்னகைக்க, நித்தி அகிலிடம் என்னன்னு சொல்லுடா? பயமா இருக்கு? கத்தினாள்.
அவளுக்கு பதிலளிக்காது, நித்தியை பார்த்துக்கோங்க. நான் வருகிறேன் என்று அவன் பதட்டப்பட, ஏதோ சரியில்லை என்று சைலேஷ் புரிந்து அகிலை தடுத்து விசயத்தை கேட்டான். அர்ஜூன் கூறியதை அவனிடம் சொல்ல, தனியே செல்ல வேண்டாம்.இரு..நானும் வருகிறேன் என்று அவன் கிளம்ப, நித்தி அவர்கள் பின்னே வந்தாள்.
நீ இரு என்று நித்தி கையை பிடித்து தாத்தா அறையை திறந்து கொண்டு உள்ளே சென்று அவரிடம் அவளை விட்டு செல்ல, நானும் வருகிறேனே?
நோ..அங்கே கண்டிப்பாக அவனுடைய ஆட்களும் இருப்பார்கள். இவளை வெளியே விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தாத்தாவிடம் கூறி விட்டு கிளம்பினார்கள்.
அம்மா..அந்த பொண்ணுக்கு ஒன்றும் ஆகாது. பயப்படாதேம்மா என்று அவர் நித்தியை தேற்றினார்.அர்ஜூன் பவி பெற்றோரிடம் நீங்க வர வேண்டாம். நான் அகிலிடம் சொல்லி இருக்கேன். எனக்கு முன் அவன் சென்று விடுவான்.அவளுக்கு ஒன்று ஆகாது. பயப்படாதீங்க என்று அவன் கிளம்ப, பவி அவனை பார்த்தவாறே அழுது கொண்டிருந்தாள்.
திரும்பி பவியை பார்த்தவன் அவளாகவே சீக்கிரம் உன்னிடம் வந்து பேசுவாள் கிளம்ப, பிரதீப் அர்ஜூனை அழைத்து ஸ்ரீ பற்றி கேட்டான். அவரிடமும் அர்ஜூன் சொல்ல, அவன் முழுதாக பேசுவதற்குள் போன் துண்டிக்கப்பட, அர்ஜூன் ஸ்ரீயை தேடி புறப்பட்டான். பிரதீப்பும் ஆதேஷும் அங்கு தான் வந்து கொண்டிருந்தனர். நடப்பதை கேட்டுக் கொண்டே ஐவரும் ஸ்ரீயிடம் வந்து கொண்டிருந்தனர்.
என்னை அப்படி கொன்று விடேன்.நான் இனி வாழ்ந்து என்ன செய்வது? எனக்கு என்னோட நிவி, அங்கிளை காப்பாற்ற தான் இன்னும் இருக்கிறேன். என்று நீ என்னை தொட்டது தெரிந்ததோ? அன்றே நான் செத்துட்டேன்.இனி என் வாழ்வு நிவிக்காகவும், என்னுடைய அங்கிளுக்காகவும் தான். எனக்காக அவர் செய்ததில் ஒரு பங்கு கூட நீ இல்லை.
உனக்கென்ன? நான் உன்னுடன் படுக்க வேண்டுமா? என்று ஜிதின் கையை பிடிக்க,
என்னடி பேசுற? அர்ஜூன் கர்ஜித்தான்.
சாரி அர்ஜூன். அவனுக்கு வேண்டியதை கொடுத்து விட்டு நானே எங்க ஆன்ட்டியிடம் செல்கிறேன்.
ஸ்ரீ…எனக்கு நீ தான் வேண்டும். நீ என்னருகே இருக்க வேண்டுமென்று தான் உன்னை எடுத்துக் கொண்டேன்.
ச்சீ..பேசாதே காதலா? உனக்கு காதலை பற்றி பேச அருகதையே இல்லை. உன் காதலை எனக்கு நீ புரிய வைக்கணும். நீ எவ்வளவு கேவலமா நடந்துகிட்டு இருக்க? நீ செய்த காரித்தால் நம்ம ஆதி உன்னை மன்னிக்கவே மாட்டான்டா கதறினாள்.
பாருடா என்னை நல்லா பார். உன் முன் நிற்கவே என் கை,கால்கள், மேனி அனைத்தும் தள்ளாடுகிறது. எனக்கு உன் மீது காதல் வராதுடா. அன்று ஆதி இறக்காமல் இருந்திருந்தால் அவனுக்காகவாது நான் உன்னை ஏற்றிருப்பேன். ஆனால் நீ…சோர்ந்து அங்கேயே அமர்ந்து அழுது கொண்டு, அர்ஜூனிடம் நான் பேசியதை வைத்து உன்னிடம் வந்து விடுவேன் என்று ஒரு போதும் எண்ணாதே!
இப்பொழுது கூட நீ செய்த காரியத்தை காரணமாக்கி சரி என்று தான் காட்டுகிறாய். என்னை விட்டு சென்று விடு இல்லை இங்கே இப்பொழுதே ஆதி போல் உன் முன்னே நானும் செத்து விடுவேன் என்று கதறினாள்.
இல்லை ஸ்ரீ. எனக்கு வேண்டும் ஸ்ரீ. நீ மட்டும் போதும். உன்னை இனி தொட கூட மாட்டேன். நீ என்னருகே மட்டும் இரு ப்ளீஸ்.
போடா..போ..என்று கத்தினாள் ஸ்ரீ.
முடியாது ஸ்ரீ என்று ஜிதின் அவளை தூக்க, என்னை விடுடா..என்று அலறினாள்.
அவன் அவளை கீழே இறக்கி விட்டு அழுதான். ப்ளீஸ் ஸ்ரீ. என்னருகே மட்டும் இரு ப்ளீஸ்.
எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கலை என்று அழுதாள். ஜிதின் மனமுடைந்து கத்தி அழுதான்.
ஸ்ரீ..சாரி என்று மீண்டும் அவளருகே வர, ஸ்ரீ எழுந்து ஓடினாள். எதிரே வந்து நின்றனர் அகில், சைலேஷ். அதற்கு பின் காரில் பிரதீப், ஆதேஷ் வந்தனர்.
அவர்களை நோக்கி ஓடினாள் ஸ்ரீ. அகிலுக்கு அவள் தன்னை நோக்கி வருகிறாளா? மகிழ்ச்சியுடன் அவளை பார்க்க, அவள் அவர்கள் அனைவரையும் தாண்டி இறுதியாக நின்ற அர்ஜூனிடம் சென்று அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். அவனோ எவ்வித உணர்வில்லாமல் இருக்க, அவன் சட்டை முழுவதும் அவள் கண்ணீரால் நனைந்தது.
ஜிதினும் அவள் பின்னே வந்து ஸ்ரீ, உன்னோட கைக்கு என்ன? அர்ஜூனை விட்டு பிரித்தெடுத்தான். அவள் மீண்டும் பதறி அர்ஜூனை ஒண்ட, அகிலுக்கு கஷ்டமா இருந்தது.
ஜிதின் முகம் கோபமாக அர்ஜூனை பார்த்து விட்டு, மீண்டும் ஸ்ரீயை பிடித்து இழுத்தான்.அவள் அர்ஜூனை பிடித்திருக்க, அர்ஜூன் அவளை விலக்கி விட்டு, நீ தான் அவனை அழைத்தாயே? போகவில்லையா?
அவன் முகத்தை பார்த்தவள் கண்ணீருடன் நின்றாள். நான் இப்படி பேசினாளாவது அவன் என்னை விட்டு செல்வான் என்று தான் பேசினேன் என்று அர்ஜூனிடம் கூறி விட்டு, அவள் நடக்க ஜிதின் பின்னே ஓடினான்.
அனைவரும் வேடிக்கை பார்க்க, அகில் ஸ்ரீ முன் வந்து வா..என்று ஸ்ரீ கையை பிடித்து விட்டு, ஜிதினிடம் இனி அவ பின்னே வந்தால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று சொல்லி விட்டு ஸ்ரீயை பார்த்தான். அவள் பார்வை மீண்டும் அர்ஜூனிடம் இருக்க, ஸ்ரீ அகில் கையை அழுத்தமாக பற்றி எனக்கு ரொம்ப தாகமாக இருக்கு சீனியர்.
வண்டியருகே சென்று தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். ஆதேஷ் ஜிதின் காரை சுற்றி வந்தவன் நம்பர் போர்டை பார்த்து அதிர்ந்தான்.
ஜிதினிடம் சீற்றத்துடன் சென்று, நீ தானா? அக்காவை கொன்றது நீ தானா? ஆதேஷ் அவனை அடிக்க அனைவரும் புரியாமல் விழித்தனர்.
அர்ஜூனிடம் வந்த ஆதேஷ், தாரிகா அக்கா யாழியை இதே நம்பர் உள்ள கார் தான் அடித்து தூக்கி கொன்றது என்றான்.
திகைப்புடன் அவனை பார்த்து நின்றாள் ஸ்ரீ. தாரிகா அக்காவை கொலை செய்து விட்டார்களா? ஆதேஷ் அருகே வந்தாள்.
ஆமாம்.
அண்ணா..உங்களுக்கு தெரியுமா? பிரதீப்பிடம் கேட்டாள். அவன் மௌனம் காக்க, எல்லாரையும் பார்த்து இறுதியில் கனலென அவள் கண்கள் தீப்பொறியாய் ஜிதினிடம் வந்து, அவனது சட்டையை பிடித்து, இன்னும் எத்தனை பேரை தான்டா கொல்வீங்க?
அவங்கள என்னடா செஞ்சீங்க? நீ தான் கொன்றாயா? காளியாய் உருவெடுத்தாள். அவன் கண்கள் ததும்ப, நீ கூட நான் தான் செய்தேன்? என்று எண்ணுகிறாயா?
எனக்கு யாருமில்லை உன்னையும் நிவியையும் தவிர. அம்மான்னு பேருக்கு தான் இருக்காங்க. அவங்க என்னோட அம்மா மாதிரி நடந்து கொண்டதேயில்லை. அவங்க இருக்குறதும் ஒன்று தான். இல்லாததும் ஒன்று தான்.
அவங்க உன்னோட அம்மா இல்லை என்று தான் அன்று கூறினாளே? நீ கூட அருகே தான இருந்த? சும்மா நடிக்காதடா? எல்லாரும் நல்லாவே நடிக்கிறீங்க? சினம் பொங்க அர்ஜூன் கத்தினான்.
ஸ்ரீ அர்ஜூனிடம் வந்து, என்ன சொன்ன? நடிப்பா? யாரை சொன்ன? என்று அவனது சட்டையை பிடித்து,
நானாடா எனக்கு உதவி செய்யுன்னு கேட்டேன்? சொல்லுடா?வார்த்தையாலே கொல்லுறடா..என்று அழுதாள்.
பிரதீப்பும், என்ன அர்ஜூன் பிரச்சனை? நீ இப்படி பேச மாட்டேல?
அவன் கோபத்தில் பேசி விட்டான். ஆனால் அவன் வார்த்தைகள் ஸ்ரீயை வதைத்தது.
ஸ்ரீ ஜிதினிடம் திரும்பி, சொல்லித் தொலையேன்டா என்று கத்தினாள்.