Hi Friends,

How is my story? comment pannunga…

அத்தியாயம் 10

ஸ்ரீ விழித்தவுடன் இருவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.ஸ்ரீ நிவாசை பிடித்துக் கொண்டு நடக்க ஜிதின் அவர்கள் முன் வந்து,நமக்கு நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். விரைவிலே தேதி அறிவிக்கப்படும்.கவனமாக இரு. பிரச்சனை ஏதும் செய்து விடாதே! நிவாஸ் அவனை முறைக்க,ஸ்ரீ அவனை கையமர்த்தி ஜிதினை நிமிர்ந்து கூற பாராது அமைதியாக இருந்தாள்.ஜிதின் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

நாம் உள்ளே செல்லலாமா? ஸ்ரீ கேட்க,அவளை அறைக்கு அழைத்து சென்றான்.அவள் வேகமாக உள்ளே சென்று தண்ணீரை திறந்து விட்டு, பயங்கரமாக அழ ஆரம்பித்தாள். அழுது முடித்து வெளியே வந்தாள்.அவன் அவளையே பார்த்துக்  கொண்டிருந்தான்.

வா வெளியே செல்லலாம் ஸ்ரீ அவனை அழைக்க,அவன் அவளையே பார்த்துக் கொண்டு, இதற்கு மேல் நீ கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. தயவு செய்து இங்கிருந்து போய் விடு அவன் கூற,நீ வருவாயா? ஸ்ரீ கேட்க, நிவாசிடம் பதில் இல்லை.

நீ எனக்காக தான் இருக்கிறாயா? அவன் கேட்க,இதுவும் ஒரு காரணம் தான் என்றாள்.

அப்படியென்றால் எனக்கு தெரியாமல் உனக்கு ஏதோ பிரச்சனை உள்ளது தானே!

அவள் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.பின் கொஞ்ச நேரம் நடந்து விட்டு, மனது சரியில்லாமல் உள்ளது என்று தோட்டப்பகுதிக்கு வந்து ஒரு ஊஞ்சலில் அமர்ந்தாள். அவனும் அருகே வந்து அமர்ந்து நிலவு, விண்மீன்களை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

வெகு நேரமாகி விட்டது. வா செல்லலாம் என்று அவளை உள்ளே அழைத்து சென்று படுக்க வைத்து விட்டு, நாளை ஞாயிற்று கிழமை தான். மருத்துவமனைக்கு செல்வோம். நீ தேவையில்லாமல் எதை பற்றியும் யோசிக்காதே என்று அவன் உள்ளே சென்று படுத்தான். நிவாசாலும் தூங்க முடியவில்லை. நடந்த அனைத்தையும் சிந்தித்தவாறு படுத்திருந்தான். ஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள். எனக்கு சீனியரை பிடித்திருக்கிறது. அவரிடம் கூறினாலும் எந்த பயனும் இல்லை. இனி என் வாழ்வே ஜிதினோடு தானா?….நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் ஸ்ரீயும், நிவாசும் மருத்துவமனை சென்றனர்.அங்கே கைரவ், சைலேஷ், அவர்களுடைய தாத்தா அனைவரும் வந்திருந்தனர்.

அவர்கள் ஸ்ரீ, நிவாசை பார்த்தனர். உடனே கைரவ் அவளருகே வந்து,

உன் காலுக்கு என்ன ஆயிற்று? அவன் குனிந்து பார்க்க, ஸ்ரீ வேகமாக விலகி நிவாஸ் பின்னே நின்றாள்.

என்ன ஸ்ரீ ஆயிற்று? நேற்று நன்றாக தானே இருந்தாய்? சைலேஷ் கேட்க, கைரவின் நடவடிக்கையை பார்த்து தாத்தா புன்சிரிப்பை உதிர்த்தார்.

ஒன்றுமில்லை. கீழிருந்த பீங்கான் துண்டுகளை தெரியாமல் மிதித்து விட்டாள். அதனால் தான் மருத்துவரை பார்க்க வந்தோம் என்றான் நிவாஸ்.

எங்கே அவனை காணோம் என்று சைலேஷ் ஜிதினை கேட்க, அவனுக்கு ஒரு வேலை உள்ளது. அதனால் தான் வரவில்லை.

உன்னை விட அவனுக்கு வேலை முக்கியமாகி விட்டதோ! அவனை போய் நீ கல்யாணம் செய்து கொள்ள போகிறாயா?கைரவ் கோபப்பட, அவனுடைய தாத்தா முதலில் அந்த பெண்ணை அழைத்து செல் தம்பி, பார்….அவளால் நிற்க கூட முடியவில்லை அவர் கூற,அவர்கள் தாத்தாவிற்காக வந்ததாக கூறினார்கள்.பின் அவர்கள் வேறொரு திசையில் சென்றனர்.

ஸ்ரீக்கு மருத்துவர் கட்டை பிரித்து மருந்து போட்டு விட்டு, வலிக்காக மருந்து தருகிறேன்.வலி இல்லாத போது போட வேண்டாம் என்று கூறியவர் ஸ்ரீயை உற்று பார்த்தார்.

சீக்கிரம் பிரச்சனையை முடித்து விட்டு, இந்த வீட்டிலிருந்து கிளம்பி விடுங்கள்.எனக்கு சரியாக தோன்றவில்லை என அவர் கூற, ஸ்ரீ ஏதும் பேசவில்லை.

சரிங்க அங்கிள்….என்றான்.பின் அவளை வெளியே அழைத்து வர கைரவ் அங்கே வந்து, மருத்துவர் என்ன கூறினார்? கேட்டு விட்டு, வாருங்கள். உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன் கூறினான்.

உன்னுடைய தாத்தா?…நிவாஸ் கேட்க,அவரை அண்ணா அழைத்து செல்வான்.

இல்லை.நாங்கள் ஆட்டோவிலே சென்று விடுகிறோம் ஸ்ரீ கூற,

ஏன்? அவன் ஏதாவது கூறுவானா? என்ன?

அவள் ஏதும் கூறாமலிருக்க, நிவாஸ் வருகிறோம் என்றான். ஸ்ரீ அவனை பார்க்க,அவன் கண்ணசைத்தான்.கைரவ் மகிழ்ச்சியுடன் வாருங்கள் என்று இருவரையும் ஏற்றி விட்டு அவன் சிரித்துக் கொண்டு ஏற,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கைரவ் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான். நிவாசுக்கு புரிந்தது. இவனுக்கு ஸ்ரீயை பிடித்து இருக்கிறது.வீடு வந்தவுடன் இருவரும் கீழே இறங்கினார்கள்.

உனக்கு இதுவரை ஜிதின் ஒரு போன் கூட பண்ணவில்லை.அவனுக்கு உன் மீது அக்கறையே இல்லை. உண்மையாகவே அவனை திருமணம் செய்து கொள்ள தான் போகிறாயா?

உள்ளிருந்து வந்த ஜிதின் ஸ்ரீ அருகே வந்து தோளில் கையை போட்டுக் கொண்டு அவளை அழைத்து செல்ல, ஸ்ரீ அவனை நிறுத்தி, கைரவிடம் நன்றி சொல்ல,அவன் கிளம்பினான். பின் நிவாஸ் தோளில் அவள் கையை போட்டுக் கொண்டு உள்ளே வந்து சாப்பிட்டுக் கொண்டே பேசினர்.

 

ஸ்ரீ, நீ கைரவிடம் விலகி தான் இருக்க வேண்டும்.பின் அகில்…அவளை பார்க்க,நான் தோழியாக மட்டுமே இருப்பேன். என் காதல் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வேன் என்றாள். நான் அவர்களுடன் நெருக்கமாக பழகி நீ தான் குக்கூ என்பதனை உறுதிபடுத்த வேண்டும்.நீ குக்கூவாக இருந்தால் நானே அவருடன் உன்னை சேர்த்து வைப்பேன்.நீ பாதுகாப்பாக இருந்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும் நிவாஸ் மனதினுள் நினைத்தான்.

இந்த ஜிதின் எந்நேரம்,என்ன செய்வான்?என்பது யாருக்கும் தெரியாது.

கவனமாக இரு என்று அவள் சாப்பிட்ட பின் மருந்தை கொடுத்தான்.அன்று அப்படியே பொழுதை கழித்தனர்.

 

நித்தி காலையிலே மருத்துவமனையிலிருந்து விடுதிக்கு வந்தாள்.யாசு நித்தியை கவனித்துக் கொண்டாள். இருவரும் பழைய படி பேசிக் கொண்டனர்.

மறுநாள் காலையில் ஸ்ரீ, நிவாஸ் கல்லூரி உள்ளே நுழைய அகிலும் நண்பர்களும் கல்லூரிக்கு வந்து விட்டனர் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த ஸ்ரீயின் கண்கள் எல்லா பக்கமும் உலாவ,

நீ யாரையோ தேடுவதை போல் உள்ளது நிவாஸ் ஸ்ரீயை பார்த்தான்.

இல்லையே, நான் யாரை தேடப் போகிறேன்.எனக்கு கண்ணில் தூசி பட்டு விட்டது என்றாள்.

நான் கூறியது உனக்கு நினைவிருக்கட்டும் என்றான். அவள் முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டே அங்கேயே நிற்க, நிவாஸ் அவளை திரும்பி பார்த்தான்.அவள் முன் திடீரென ஒருவன் தன் நண்பனிடம் பேசிக் கொண்டே அவளை நோக்கி வந்தான். ஸ்ரீ வேகமாக பின்னே செல்ல அங்கிருந்த கல் இருக்கையில் விழும் நேரத்தில் அகில் அவளை இழுத்து, அவனது கைக்குள் வைத்துக் கொண்டு, அவனை திட்டினான். பின் ஸ்ரீயை பார்க்க, அவளும் அவனை பார்க்க,இருவரும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அகில் மேலும் அவளை முத்தமிடுவது போல் அருகே வந்தான். ஸ்ரீ அமைதியாக இருக்க, ஜிதின் அவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு வேகமாக சென்றான்.நிவாஸ் அவர்கள் பின்னே ஓட, அகிலும் அவர்கள் பின்னே சென்றான்.

வெற்றிடமுள்ள வகுப்பறைக்குள் அவளை தள்ளி விட்டு, தாழ்ப்பாள் போட்டு உள்ளே சென்றான்.நிவாஸ் ஜன்னல் வழியே பார்த்து அவளை விடுடா. இது கல்லூரி என்றான்.ஜன்னலை வந்து பூட்டி விட்டு அவளிடன் சென்று ஜிதின் ஸ்ரீயிடம், நீ அவனுடன் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

நான் என்ன செய்தேன்? கீழே விழாமல் அவர் என்னை பிடித்தார். அவ்வளவு தான்.

என்ன! அவ்வளவு தானா?

அவன் உன்னை எப்படி பிடித்திருந்தான்? ஜிதின் அவளருகே வந்தான்.

என்னிடம் வராதே! அவள் அழ,அவன் கேளாது அகில் அவளை பிடித்ததை போல் செய்து காட்டிக் கொண்டு,அவளை முத்தமிட்டான். அவள் அவனை வேகமாக தள்ளி விட்டு,நீ ஏன் என்னை இப்படி தொந்தரவு செய்கிறாய்?

அவன் உன்னை முத்தமிட வந்த போது அமைதியாக தானே இருந்தாய்?நான் வேண்டுமென்றால் அவனை உன்னுடன் இருக்க சொல்லவா? கேட்டான்.

அவள் அழுது கொண்டிருக்க, நான் உன்னை தொட்டால் தொந்தரவாக உள்ளதோ? அவன் தொட்டால் பிடித்து இருக்கிறதோ? அவன் பேசிக் கொண்டே போக, ஜிதின் அருகே வந்து அவனது கன்னத்தில் அறைந்து விட்டு, எனக்கு அவன் உடம்பை அல்ல, மனதை தான் காதலிக்கிறேன் கூறி விட்டாள்.

என்ன கூறினாய்? அவன் பைத்தியம் போல் என்ன பேசுவதென்று தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சிவந்து அவளை முறைத்துக் கொண்டு அவளருகே வந்தான்.

நாம் என்ன கூறி விட்டோம் அவள் அவனை பார்க்க, பின் அவன் என்ன நினைத்தானோ! அவன் வகுப்பறையில் இருந்த அனைத்தையும் இழுத்து போட்டுக் கொண்டிருந்தான் கோபமாக…அங்கிருந்த அலமாரியை அடிக்க, அவனது கையில் இரத்தம் வழிந்தது. அவள் அவனருகே செல்ல, அவளை பிடித்து தள்ளி விட்டான்.அவளுக்கு அடிபட்ட இடத்திலே பட்டு இரத்தம் வழிய, நீ வீட்டிற்கு வா. உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்றான்.

என்னை மன்னித்து விடு. நான் ஏதோ தெரியாமல் கூறி விட்டேன் அவனது கையை பிடித்துக் கொண்டு அவன் பின்னே செல்ல, அவன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். பக்கத்து வகுப்பறையில் இருந்த பொண்ணுங்க எல்லாரும் இருவரையும் பற்றி பேச, வாயை மூடுங்கள் என்று கத்தி விட்டு ஜிதின் அவளை மீண்டும் தள்ளி விட, இம்முறை நிவாஸ் அவளை பிடித்தான். அவள் அழுது கொண்டே, நான் அவனிடம் சொல்ல கூடாததை கூறி விட்டேன் என்று அழுதாள்.

நான் தான் முதலிலே கூறினேனே! நிவாஸ் கூற, அகிலும் அவள் அழுவதை பார்த்து அருகே வர,நிவாஸ் அவனை தடுத்து, போதும் சீனியர். நீங்கள் எங்கள் விசயத்தில் தலையிடாதீர்கள் கூற ஸ்ரீ அவனையும் நிமிர்ந்து பார்த்து விட்டு, நிவாசிடம் ரொம்ப வலிக்கிறது? காலை காட்ட, நிவாஸ் அவளை தூக்கிக் கொண்டு சென்றான். பின் ஸ்ரீக்கு முதலுதவி செய்யப்பட்டு, ஆசிரியை மூலம் அவளது மருத்துவரை அங்கே வரவழைத்து, மருந்திடப்பட்டது. அகில் அறைக்கு வெளியே இருக்க, அவனுடைய நண்பர்களும் வந்தனர்.

நேற்று தானே கூறினேன் அவர்களது மருத்துவர் அவர்கள் இருவரையும் திட்ட, சாரி அங்கிள் என்றாள் ஸ்ரீ..

என்னிடம் சாரி கூறி என்ன ஆக போகிறது? உனக்கு தான் வலிக்கும். அதுவும் என்று அவர்…ஆரம்பித்து ஏதும் கூறாமல் அவளை பார்த்துக் கொள் என்று நிவாசிடம் கூறி விட்டு, முதல்வரிடம் நன்றி கூறி விட்டு அவளை பார்த்து விட்டு சென்றார்.

அனைவரும் ஸ்ரீ பற்றி பேச, நித்தி வேகமாக உள்ளே வந்தாள். நிவாஸ் அவளை தடுத்து, அவளை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்! உங்கள் நட்பு எங்களுக்கு வேண்டாம்…. என்றான்.

என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.அவளை தனியே விட முடியாது…நித்தி கூறினாள்.

ஸ்ரீ அவனிடம், அவர்களை விடு என்றாள்.அவன் அவளை முறைத்துக் கொண்டிருக்க, அகிலும் உள்ளே வர, அவன் அங்கிருப்பதை கூட கண்டு கொள்ளாமல் ஸ்ரீ, ஜிதினிற்கு போன் செய்ய….அவன் எடுக்கவில்லை.

யாரோ கதவை திறந்து கொண்டு உள்ளே வர, அனைவரும் திரும்பி பார்த்தனர்.ஜிதின் உள்ளே வந்தான்.

அவனை அருகே அழைத்து அவனது கையை பிடித்துக் கொண்டு,இவரை தான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் ஸ்ரீ கூற, அனைவரும் அகிலை பார்க்க, அவன் கண்கள் கலங்கியது.

ஆமாம். சீக்கிரமே நிச்சயம் செய்ய போகிறார்கள் என்று அவளருகே ஜிதின் உட்கார்ந்தான்.

நிவாஸ் அவனிடம் எழுந்திரு என்றான். ஸ்ரீ நிவாசை பார்த்து, அவர் இருக்கட்டும் என்றாள்.

நிவாஸ் கோபமாக அவனை மனதினுள் திட்டிக் கொண்டே முறைக்க,

ஜிதின் ஸ்ரீயிடம், நீ உண்மையிலேயே சம்மதித்தால் என்னை அணைத்து முத்தம் கொடு என்று கேட்டான்.

ஹேய்…என்ன பேசுகிறாய்? உன்னை நான் எப்படியெல்லாம் நினைத்தேன். நீ இப்படி இருக்கிறாய்? நித்தி கேட்க,

நான் அவளிடம் என்ன கேட்டு விட்டேன்? என்னை திருமணம் செய்ய போகும் பெண்ணிடம் முத்தம் கேட்டது தவறா?

என்ன ஸ்ரீ நடக்கிறது? கவின் கேட்க,

சீனியர்…என்று அவள் ஜிதினை பார்க்க, அவன் கொடுக்க மாட்டாயா?

அவள் எழுந்து மெதுவாக காலை கீழே வைக்க, தடுமாற நிவாஸ் அவளை பிடிக்க வருவதற்குள் இடையே ஜிதின் வந்தான். அவன் அவளை பிடிக்க, அவள் மனதினுள் பதட்டத்துடன் அனைவரையும் பார்க்க, அவர்கள் வேண்டாம் என்று மனதினுள் நினைக்க, அவள் அவனை அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.அகில் கோபமாக அங்கிருந்து செல்ல, அவளது மனமும் துடித்தது.அனைவரும் அவனை பார்க்க சென்றனர்.

” பெண்ணே! பெண்ணே!

ஏனடி வதைக்கிறாய்?

கண்கள் வழிந்து உள்ளம் வலிக்குதடி!

உன் காதல் மனதை ரணமாக்குதடி!

மனமே  கணக்குதடி!

மனமே  கணக்குதடி!

காதல் ரசம் பருக வந்தவனை

விசமாக்கினாயடி!

ஏனடி வதைக்கிறாய்?

ஏனடி வதைக்கிறாய்? ”