ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.
இன்றைய உங்களுக்கான எபிசோடு 111
துகிரா என்ன சொல்லப் போகிறாளோ? என்று பிரதீப் வருத்தப்பட,
அட, என் ராசாவுக்கு என்ன குறைச்சல்? எப்படி வேண்டான்னு சொல்லும் அந்த புள்ள? அப்பத்தா பேச, கதவை தட்டும் ஓசை கேட்டு, அனைவரும் திரும்பினர். ஜானு கதவை திறந்தாள். ஆதேஷ் வியர்த்து விறுவிறுக்க பதட்டமுடன் அழுகையோடு தன் கைச்சட்டையில் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் துகிரா அழும் சத்தம் கேட்டது.
ஜானுவை பார்த்து, ஜா..ஜானு என்று பேச்சே வராமல் அவன் உதடுகள் துடித்தது. கண்களை மூடி திறந்து ஜானு, துகியை நீங்க பத்திரமா பார்த்துக்கோங்க.. என்று திக்கி திக்கி பேசினான்.
ஏய்..என்ன ஆச்சு? ஜானுவும் அவர்களை பார்த்து பதறினாள். துகிராவை முன் கொண்டு வந்து பார்த்துக்கோ என்று அவளிடம் விட்டு, அவன் அழுது கொண்டே ஓடினான்.
போகாதடா..போகாதடா..என்று ஜானுவின் கையை உதறி விட்டு ஆதேஷ் பின்னே ஓடினாள் துகிரா. அவன் காரை எடுக்க, துகிரா கார் முன் வந்து நின்றாள்.
போகாத ப்ளீஸ்..அழுதாள் துகிரா.
கீழே இறங்கி வந்து, அம்மாவை விட சொல்றியா? கத்தினான்.
நானும் வாரேன் என்று அழுதாள். ஆதேஷ் பேசியதை பார்த்து பிரதீப்பிற்கு அவர்களது பிரச்சனை நினைவிற்கு வந்தது.
ஓ காட்..எப்படி மறந்தேன்? என்று பிரதீப் வெளியே வர துளசியை புவனா அருகே விட்டு, மொத்த குடும்பமும் வெளியே வந்தது.
காரை விட்டு வெளியே வந்து துகிராவை ஆதேஷ் திட்டுவதை பார்த்து, பிரதீப் தீனா அருகே வந்தனர்.ஆதேஷை பிடித்து உலுக்கினர். அவன் அழ ஆரம்பித்தான்.
எங்க வீட்ல யாரோ அம்மாவை கொல்லப்பாக்குறாங்க. அம்மா அறைக்குள் இருக்காங்க என்று அழுதான். நான் அங்கே போக நேரமாகும். என்னை விடுங்க. நான் சீக்கிரம் போகணும் என்று கத்தினான்.
அமைதியா இரு என்று பிரதீப் அவனை அணைக்க, நான் அம்மாவையும் அழைத்து வந்திருக்கணும். தவறிழைத்து விட்டேனே! என்று அழுதான்.
துகிரா அவளது போனில் ஆதேஷ் அம்மாவிற்கு போன் செய்தாள். ஆன்ட்டி..ஆன்ட்டி..என்று பதறினாள். துகி ஆது கிட்ட போனை கொடு. நான் அவனிடம் கடைசியா பேசிட்டு கதவை திறக்கிறேன் என்றார்.
நோ..நோ..கதவை திறக்காதீங்க. கொஞ்ச நேரம் நாங்க வந்திடுவோம் என்றாள் பதட்டமாக.
இல்லம்மா..எனக்கு நம்பிக்கையே இல்லை. அவனை பார்க்கணும் போல இருக்கு என்று அவர் அழுதார். அழுது கொண்டும் கண்ணை துடைத்துக் கொண்டும் பேசிக் கொண்டிருந்த அவளிடம் போனை வாங்கினான் பிரதீப்.
உங்களுக்கு ஏதும் ஆகாது என்று நம்பிக்கை அளித்து போனை துகிராவிடம் கொடுத்து, அவங்களிடம் ஏதாவது பேசிக் கொண்டே இரு. முதல்ல அழுகையை நிறுத்து என்றான்.
எனக்கு தண்ணீர் குடிச்சா தான் அழுகை நிற்கும் என்று அழுது கொண்டே கூறினாள். அவள் பேசுவதை பார்த்து சிரிப்பு தான் வந்தது.ஆனால் சிரிக்கும் நேரமா இது? என்று அர்ஜூனிற்கு அழைப்பு விடுத்தான்.
அவன் வீட்டில் இன்று நான் குடிக்கவே மாட்டேன்ப்பா. என்னால் தான் இவளும் குடித்து பாடா படுத்தி எடுத்து விட்டாள் என்றான்.
யாரு? நானாடா உன்னை படுத்துகிறேன்? என்று ஸ்ரீயும் அவனுக்கு ஈடாக பேசிக் கொண்டிருந்தாள். இருவருடைய அழகான காதல் போரை கவின்,தாரிகா, அபி பார்த்துக் கொண்டிருந்தனர். அபியிடம் காலை நடந்ததை கூறி இருப்பார்கள். ஸ்ரீக்கும் அர்ஜூனை பிடித்திருக்கிறது என்று அவளது செய்கையிலே அபிக்கு நன்றாக புரிந்து விட்டது.
அர்ஜூன் போனை எடுத்து, ஹலோ அண்ணா!
பிரதீப் கூறியதை கேட்டு,ஓ.கே அண்ணா. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுந்து கவின், அபி கிளம்புங்கள் சீக்கிரம் என்று உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து முதுகு பக்கம் சொறுகினான்.
டேய்..என்னடா துப்பாக்கியா? எதுக்குடா? ஸ்ரீ பதறினாள். அவன் அசராது பிரதீப் அண்ணா சொன்னதை கூறிக் கொண்டே சன்னல் அனைத்தையும் மூடி விட்டு, இரு பொண்ணுங்களிடமும் யாரும் அழைத்தால் கூட கதவை திறக்காதீங்க..நம்பர் லாக்கை நான் வெளியிருந்து போட்டுட்டு போறோம். நாங்களே உள்ளே வந்திடுவோம் என்று கூறிக் கொண்டே கதவை திறக்க, தாரிகா பயத்துடன் கண்கலங்கிக் கொண்டே கவினை பார்த்தாள். அர்ஜூனை அழைத்து ஸ்ரீ மூவருக்கும் தண்ணீர் கொடுத்து விட்டு, பதட்டமாகாதீங்க! என்று அர்ஜூனிடம் சாக்லெட்டை நீட்டினாள். அவளை காதல் உணர்வோடு பார்த்து விட்டு பைக்கை எடுத்து மூவரும் கிளம்பினர்.
தாரிகா ஸ்ரீயிடம், அர்ஜூன் துப்பாக்கியெல்லாம் பயன்படுத்துவானா? கேட்டாள். இது தான் முதல் முறை எடுத்து செல்வது போல் தெரிந்தது. அவனது கைகள் அதை பிடித்த விதம் சரியாக இருந்தாலும் அவனுள் பதட்டம் தெரிந்தது. நம்மிடம் அவன் காட்டவில்லை.
உனக்கு பயமா இல்லையா ஸ்ரீ?
இருக்கு.ஆனா அவன் அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு போக மாட்டான்.அவனுக்கு அவனோட ஏஞ்சல் எவ்வளவு முக்கியம் என்பது உனக்கும் தெரியும் தானே? என்னை தனியே விடுவானா? உறுதியாக.
இதே உறுதி. நீ அவனிடம் காதலை சொல்வதில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ஆமா. நீ இதையே சொல்லு. எந்நிலையில் இருந்து பார். அதன் வலி புரியும். காதலை விடவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறேன். எந்நிலை வேறேந்த பொண்ணுக்கும் வரக் கூடாது ஸ்ரீ வருந்தினாள்.
சற்று நேரமானது. பிரதீப், தீனா, ஆதேஷ், துகிரா ஆதேஷ் வீட்டிற்குள் நுழைந்தனர். ஹாலில் நிறைய ஆட்கள் செத்து கிடந்தார்கள். அர்ஜூன், கவின், அபி அமர்ந்திருந்தனர்.
என்னடா துப்பாக்கி பயன்படுத்தினீர்களா? பிரதீப் அதிர்ந்து வினவ, அர்ஜூன் அவனது துப்பாக்கியை தூக்கி போட்டான். தீனா துப்பாக்கியை எடுத்து பார்த்தான். தோட்டாக்கள் அப்படியே இருந்தது. அவன் அதை பயன்படுத்தவில்லை.
அர்ஜூன்,இதை நீ பயன்படுத்தவில்லையா? தீனா கேட்க, உள்ளே கையை காட்டினான். ஆதேஷும் துகியும் வேகமாக லலிதா அறைக்குள் சென்றனர். அவன் அதிர்ந்து நின்றான். அவனது அம்மா கட்டுடன் கட்டிலில் அமர்ந்திருந்தார்.
அவர் அருகே உயரமாக வாட்டசாட்டமாக ஒருவர் அப்படியே அவனையே போலே இருந்தார் அவர்.இருவரையும் பார்த்தான்.
அப்பா..என்று அவன் அழைக்க, அவர் ஓடி வந்து தன் மகனை கட்டிக் கொண்டார். அவர் அவனை விடுக்க, அவரை பார்த்துக் கொண்டே துகிரா ஆதேஷ் அம்மாவிடம் சென்றாள்.
ஆன்ட்டி நானும் ஜில்லாவும் ரொம்ப பயந்துட்டோம் என்று அழுதாள். அவர் அமைதியாக ஆதேஷை பார்த்தார்.
அவன் அம்மாவிடம் ஓடி வந்து சாரி மாம், நான் உங்களை தனியே விட்டு போயிருக்கக் கூடாது என்று அழுதான். அதை பார்த்து தான் பிரதீப் அமைதியாக அமர்ந்தான்.
அவர்களுக்கு நேரம் தருவது தான் நல்லது என்று அர்ஜூனிடம் வந்து விசாரித்தான் பிரதீப். ஆதேஷ் அப்பாவுடன் இரண்டு பேர் தான் இருந்தாங்க. நாங்க உள்ளே வரும் போதே துப்பாக்கி சத்தம் கேட்டது. அவங்க தான் எல்லார் கதையையும் முடிச்சிட்டாங்க. எங்களுக்கு வேலையே இல்லை என்றான் அர்ஜூன்.
அதுசரி. இவங்க நம்ம ஊருல என்ன பண்ணாங்க? கேட்டான் கவின்.
பிரதீப் அனைத்தையும் சொல்லி விட்டு, புவனாவை பற்றியும் கூறினான்.
நம்ம ஊருக்கு புது ஹீரோவா? மாமா என்று தீனாவை கேலி செய்தான் அபி.
போடா..என்று அவன் வெட்கப்பட ஆதேஷ் குடும்பமாக வெளியே வந்தான்.அவனை பார்த்து எல்லாமே ஓ.கே தான ஆதேஷ்? அர்ஜூன் கேட்டான்.
தேங்க்ஸ் அண்ணா.
நாங்க என்னடா பண்ணோம்? எல்லாமே அவரே பண்ணிடாரே என்றான் வருத்தப்படுவது போல்.அவர் சிரித்துக் கொண்டே நீங்க சின்ன பசங்க உங்க கையில புத்தகங்கள் மட்டும் தான் இருக்கணும் என்றார்.
நீங்க மாறீட்டிங்களா? கேட்டான் அர்ஜூன்.
நான் என்னோட மனைவிக்காக இத்தனை நாட்களாய் எந்த ஆயுதத்தையும் எடுக்கவே இல்லை. ஒரு மாதத்திற்கு முன் தான் இங்கே வந்தேன். இப்பொழுது அவளுக்காக தான் எடுத்தேன். அவளும் புரிந்து கொண்டாள் என்றார்.
அனைவரும் கை தட்டி ஆதேஷிற்கு பெற்றோர் சேர்ந்ததற்கான வாழ்த்தைக் கூறினார்கள்.
பிரதீப் அவரிடம், இவங்க எல்லாரும் யார் அனுப்பிய ஆட்கள்? கேட்டான். அவர் துகிராவை பார்த்தார். அவர்களை இப்பொழுதைக்கு தான் சமாளித்து இருக்கிறோம். ஆனால் அந்த பொண்ணோட அப்பா தான் பிரச்சனை செய்வார். அவரிடம் அவள் தான் பேச வேண்டும் என்றார்.
சரி. எல்லாரும் கிளம்புங்க என்று பிரதீப் துகிரா கையை பிடித்தான். ஆதேஷ் அம்மா அவனை புரியாமல் பார்க்க, நாங்க அவ அப்பாகிட்ட பேசிட்டு வந்திடுறோம் என்றான்.
அவருக்கு புரிந்தது. துகிராவும் வாயை திறக்கவே இல்லை. அவளும் அவன் கூறியதை ஏற்றுக் கொண்டது போல் செல்ல,
இருடா தனியே போகாதே? நாங்களும் வாரோம் என்று தீனா சொல்ல,
ஆதேஷ் கார் சாவியை வாங்கிய பிரதீப், எங்க பிரச்சனைய நாங்களே பார்த்துக்கிறோம் என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான். அவள் அவனையே பார்த்துக் கொண்டே வந்தாள்.
மற்றவர்கள் அவர்களுக்கு தெரியாமலே பின் தொடர்ந்து வந்தனர். வீட்டில் ஆதேஷ் அம்மா, அப்பா மட்டும் தனியே இருந்தனர்.
துகிரா வீட்டிற்கு வந்தனர் பிரதீப்பும் துகிராவும்.
வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு பையன் வந்தான். அப்பா அவ வந்துட்டா என்று துகிராவிடம் வந்து, நீ இன்னிக்கு காலி என்று கழுத்தை கையால் சீவி காண்பித்தான். அவள் முறைத்து பார்த்தாள்.
பிரதீப் அவளை பார்த்தான். எங்க அப்பாவின் இரண்டாவது குடும்பத்து பையன் என்றாள். அவன் பிரதீப்பை பார்த்து விட்டு, அப்பா யாரோ ஒருத்தனோட ஓடிட்டான்னு சொன்னீங்கள..அவன் வந்திருக்கான் என்று அந்த பையன் கூறினான்.
யாருடா ஓடிப் போனது? கொன்றுவேன் பார்த்துக்கோ.. என்று துகிரா சத்தமிட,
பிரதீப் அவளது கையை அழுத்தி, நான் என்ன பேசினாலும் அமைதியா இருக்கணும்.ஓ.கே வா? கேட்டான்.
ம்ம்..என்றாள் வருத்தமுடன்.
அவளது கையை கோர்த்து ஹாலினுள் சென்றான். அங்கே வந்த அவளது அப்பா,
நில்லு..யாருடி இவன்? கேட்டார்.
என்கிட்ட பேச மாட்டீங்களா மாமா? என்று துகிராவை அழைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, தன் ஒரே கையால் இழுத்து அவனது மடியிலே அவளை அமர்த்திக் கொண்டான்.அவளது விழிகள் விரிந்து அவனை பார்த்தாள்.
யார் வீட்டுக்கு யார் வரது? யாருடா மாமா?
துகி உங்க பொண்ணு தானே. அவ என்னோட பொண்ணாட்டினா.நீங்க எனக்கு மாமா தான மாமா?
யாருடா உன்னோட பொண்டாட்டி?
அவன் அவளை இறுகி அணைத்தவாறு, இப்ப தெரியுதா அத்தை?
அவர் வேகமாக அவர்கள் அருகே வந்து, துகிராவை பிடித்து இழுத்தார். பின் அவளது முடியை கொத்தாக பிடித்து யாரையோ இழுத்துட்டு வந்து, என்னடி பேச விட்டு வேடிக்கை பாக்குற?
பிரதீப் அவரை பார்த்து, கையை எடுங்க? என்றான் முறைத்தவாறு.
எங்க வீட்டுக்கு வந்து எங்களையே மிரட்டுறியா?
கையை எடுன்னு சொன்னேன் மேலும் கத்தினான். அவளது சித்தி பயந்து அவளை விட்டார். எவ்வளவு தைரியம் இருந்தா அவ மேல கையை வைப்பீங்க?
நான் தான் சொன்னேன்ல.அவ என்னோட பொண்டாட்டின்னு.. என்று அவளது அப்பா கையை முறித்தான்.
அந்த அம்மா பயந்து, அவரை விட்டுருங்க தம்பி..என்று கதறினார்.
அவளது அப்பாவோ ஆட்களை அழைக்க,நான் எதிர்பார்த்தது தான். என் செல்லக்குட்டிம்மா..நீங்க பத்திரமா இங்கேயே இருங்க என்று அவளை அமர வைத்து விட்டு பிரதீப் கை வரிசையை காட்டினான். அவள் அவன் செய்கையில் மிரண்டு விட்டாள்.
அனைவரையும் தூசி தட்டுவது போல் தட்டி விட்டி விட்டு, மாமா இன்னும் ஆட்கள் இருந்தா அனுப்புங்க என்றான்.
உன்னை என்று அவர் அருகே வர, அவன் அவரை பிடித்து மாமா,எனக்கு ஒன்று தான் வேண்டும். அவளை கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று பிசினசிற்காக விற்கக்கூடாது.
என்னோட பொண்ணை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
அப்ப அவ உங்க பொண்ணா இருந்தா. ஆனா இனி என்னோட பொண்டாட்டில?
பொண்டாட்டியா? தாலியா கட்டிட்ட?
தாலி கட்டலாம்.ஆனா என்னோட செல்லக்குட்டி படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க படிப்பு முடிந்தவுடன் நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம் என்றான்.
ஏய், ஒழுங்கா போயிரு அவர் சத்தமிட, துகிராவிடம் கையை நீட்டினான். அவளும் அவனது கையை பிடித்து எழுந்தாள்.
உங்க அப்பாவுக்கு சொன்னா புரியலம்மா. என்ன செய்யலாம்? என்று அவனது கையணைப்பில் வைத்து அவனது கன்னத்தை வருடினான். அவள் அவனது கண்களை பார்த்துக் கொண்டு, என்ன செய்யலாம்? என்று அவளும் யோசித்தாள்.
அவன் விரல்கள் அவளது இதழ்களை வருடியது. அவளது கண்களை பார்த்து, கண்ணை மூடினான். என்ன கண்ணும்மா?
என்ன? கேட்டாள்.அவன் உதடுகளை பார்த்து, செர்ரி பழம் போல இருக்கு என்று சொல்லிக் கொண்டே அவளை முத்தமிட்டான். அவளும் அவனுடன் இணங்க, இதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.
என்னடி பண்ற? கேட்டார் சித்தி.
சித்தி அவரு எனக்கு கிஸ் கொடுத்தாரா. அதான் நானும் கொடுத்தேன் என்றாள் கிண்டலாக.
நீ எனக்கு பதில் சொல்லவில்லையே செல்லக்குட்டிம்மா? கேட்டான் பிரதீப்.
அவள் அவனிற்கு முத்தமிட்டு விட்டு, என்னுடைய மரியாதைக்குரிய கணவருக்கு இது போதுமா? கேட்டாள்.
அச்சோ, எனக்கு பத்தாதே! என்றான். அவள் அவன் முகம் முழுவதும் முத்தம் வைக்க, அவன் புன்னகையுடன் அவளுடைய அப்பாவிடம் திரும்பி போதுமா மாமா? என்றான் கேலியாக.
நீங்க இவ்வாறு கூட பேசுவீங்களா? பிரதீப்பிடம் கேட்டுக் கொண்டிருந்த துகிரா அங்கே வந்தவனை பார்த்து அதிர்ந்தாள். அவனுக்கு துகியை கல்யாணம் செய்து கொடுப்பதாக கூறிய அவன். அன்று தீனா சுட்டானே ஒருவனை அவனே தான். தன் நண்பர்களுடன் வந்தான்.