வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-101
181
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 10.
தருண் அவனை பார்த்து, அர்ஜூனை அருகில் உட்கார வைத்து,கொஞ்ச நேரம் அவனது அழுகையை தொடர்ந்தான்.பின் அவனை தூங்க வைத்து விட்டு,அர்ஜூன் அங்கிருந்த மற்றொரு கட்டிலில் கைரவ் தூங்குவதை பார்த்து, அவனும் அவனருகே சென்று படுத்துக் கொண்டான்.
நடுராத்திரியில் ஸ்ரீ தருண் அறைக்கு வந்தாள். தருணை பார்த்து அவன் கண்ணில் காய்ந்திருந்த கண்ணீரை பார்த்து, சாரிடா..என்னால தான உன்னால உன்னோட அம்மாவிற்கு செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் போய் விட்டது. கொஞ்ச நேரம் அவனிடம் உட்கார்ந்திருந்தவள். கைரவ் அர்ஜூனை பார்த்தாள். கைரவ் அர்ஜூன் மீது கால் போட்டிருப்பதை பார்த்து,
அவனே எவ்வளவு சோர்வா இருப்பான்?மெண்டல்..மெண்டல்.. என்று கைரவை திட்டிக் கொண்டே, அவனது காலை விலக்கி விட்டு அர்ஜூன் அருகே அமர்ந்தாள்.
தருணும் கைரவும் தூங்கவேயில்லை. கதவு திறக்கும் ஓசை கேட்டு தான் கண்ணை மூடி தூங்குவதை போல் படுத்திருப்பார்கள்.அது தெரியாமல் ஸ்ரீ அர்ஜூனிடம் பேச ஆரம்பித்தாள்.
அர்ஜூன்..சாரிடா..நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேல. உன்னால எப்படிடா இப்படி காதலிக்க முடியுது? எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?
ஆன்ட்டி இவ்வளவு மோசமா இருப்பங்கன்னு நான் நினைக்கவே இல்லை.
நான் கூட உன்னுடன் வாழ வாய்ப்பிருக்குமென்று நினைத்தேன். ஆனா இப்படி பண்ணிட்டாங்களேடா.ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால அதிலிருந்து வெளியே வரவே முடியாது. உன்னோட காதலுக்கு கொஞ்சமும் நான் தகுதியில்லாத பாவிடா. அம்மா சொன்ன போதே நான் அங்கிருந்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் அங்கிளை வைச்சு மிரட்டுறாங்க. அவரு எனக்கு நெருக்கமானவர். அவரில்லாமல் அவருடைய குடும்பம் ரொம்ப கஷ்டப்படுறாங்க என்று அவனது முகத்தை பார்த்து,
நீ எவ்வளவு வளர்ந்துட்ட? நான் தான் உன்ன விட குட்டையா இருக்கேன். நீ க்யூட்டா.நீ ஏன் அர்ஜூன் அகில் பத்தி யோசிச்ச? உனக்காக நீ வாழு அர்ஜூன். எனக்காகவும் வேண்டாம்.
உன்னை நினைச்சாலே பிரம்மிப்பா இருக்குடா. என் மேல உனக்கு இவ்வளவு காதலா? எனக்காக இது கூட செய்வாய் என்று நினைக்கவில்லை. என்னுடைய ரகசியம் என்று ஒன்றை நான் நினைத்திருக்க, எனக்கு நடந்தது எனக்கே தெரியாத முட்டாளா இருந்திருக்கேன்.என்னை யாரும் இந்த அளவு காதலிக்க முடியாது. என்னோட பெற்றோரையும் மிஞ்சிட்ட. என்னோட இந்த விசயத்தால நீ என்னை விட்டு போயிடுவன்னு பயமா கூட இருந்தது.ஆனா நீ என்னை விட்டு போயிருக்கணுன்னு மூளை சொல்லுது. ஆனா இந்த மனசு இருக்கு பாரேன் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல தோணுது.
நானும் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் அர்ஜூன். ஆனா இனி அதை சொல்ல கூட முடியாதவாறு செஞ்சுட்டாங்க. நான் உயிரோட இருந்து ரொம்ப கஷ்டப்பட தான் போறேன்.நான் அன்று அம்மா, அப்பா கூடவே சென்றிருக்கலாம்.உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்டா. என்னால எப்பொழுதுமே காயப்பட்டுக் கொண்டு தான் இருக்க அர்ஜூன்.
தயவுசெஞ்சு என்னை விட்டு போடா..என்னால எத்தனை நாள் தான் என்னோட காதலை மறைக்க முடியும். தாரியிடமும் பேசினேன். ஆனா உன்னிடம் பேச நினைத்தாலும் பேச முடியல. அதே பழைய நாட்கள் கிடைச்சா நல்லா இருக்கும் அர்ஜூன் என்று அழுதாள்.
அடிப்பாவி, நீ அர்ஜூனை தான் காதலிக்கிறாயா? சொன்னா தான் என்னவாம்? மனதினுள் ஸ்ரீயை திட்டினான் கைரவ். ஸ்ரீ எழுந்து கைரவை பார்க்க, என் பக்கம் ஏன் வரா இவ? மனதினுள் பதற,
மூஞ்சிய பாரு..என்னோட அர்ஜூன் பக்கத்துலயா படுத்திருக்க? இரு வாரேன் என்று கைரவை அர்ச்சித்துக் கொண்டு அவனருகே வந்து சுற்றி பார்த்தாள்.
அய்யோ, என்ன செய்யப்போறாளோ? மனதினுள் கைரவ் நினைக்க, அங்கிருந்த சோபாவை பார்த்து, அவளது காலை உயர்த்தி, உனக்கு எவ்வளவு தைரியம்? என்னோட அர்ஜூன் அருகே நீயா? காலை கீழே இறக்கினாள்.பின் கைரவ் காலை பிடித்து கீழே தள்ளுவதற்குள் அவன் உருளுவது போல் அவனே கீழே விழுந்தான்.
இவனை இப்படியே விட்டு விடுவோமா? இல்லை பாவம் என்று அவனை தரதரவென இழுத்து சோபா அருகே கொண்டு சென்றாள்.
என் முதுகு போச்சு? கலங்கினான் கைரவ்.
இவனை எப்படி சோபாவில் கிடத்துவது? தாடையில் கை வைத்து யோசித்தாள்.
ஏய்..சோபா. இவனை நீயே உன் மடியில் போட்டுக்கிறியா? இந்த எருமை மாடெல்லாம் என்னால தூக்க முடியாது. என்ன செய்ய தெரியலயே?
ம்ம்..இது தான் சரி என்று சோபாவை அவன் பக்கம் தள்ளினாள். அது பேலன்ஸ் மிஸ் ஆகி அவன் மீது விழ, சரியாக அவன் உடல் சோபாவின் இடையில் மாட்டியது. அவள் அந்த இடுக்கு வழியே, அவன் சாகல தானே? தலை சாய்த்து பார்த்தாள்.
யாராவது வந்து என்னை காப்பாத்துங்கடா?என்னை கொன்னுடுவா போலவே? இப்ப மட்டும் எவனும் வர மாட்டானுக? மனதினுள் புலம்பினான் கைரவ்.
தருணால் சிரிப்பை அடக்க முடியல.கட்டுப்படுத்திக் கொண்டு வேடிக்கை பார்த்தான்.
அச்சோ..கையூ உனக்கு அடி பட்டிருச்சா? என்று மெதுவாக வினவிக் கொண்டு சோபாவை நிமிர்த்த, அய்யோ முடியவில்லையே? என்ன செய்ய?எளிதாக தள்ளி விட்டேன். ஆனா எடுக்க முடியல.சோபாவின் விளிம்பு பக்கம் வந்து கண்ணை மூடி திறந்து, அதை கஷ்டப்பட்டு தள்ளினான். அதில் கொஞ்சம் சத்தம் வந்து விட்டது.
வேகமாக கீழே ஒடுங்கிக் கொண்டு,ஒவ்வொருவராக பார்த்தாள். போடா..என்னால முடியல. இப்படியே கீழே கிட,என் அர்ஜூன் அருகே படுத்ததற்கு இது தான் உனக்கு தண்டனை என்று மூச்சு வாங்க அர்ஜூன் அருகே வந்து அமர்ந்தாள்.
பார்க்கதான்டா அழகா இருக்க. பயங்கரமா கனக்குறடா எரும. உன்னால் பாரு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும் போல கண்டவாறு அவனை திட்டினாள்.
பின் அர்ஜூனை பார்த்தாள். அவன் ஓரமாக படுத்திருக்க, அவனை இழுத்து கட்டிலில் நேராக படுக்க வைக்க, அவன் அவள் பக்கம் திரும்பி கையூ எங்கடா போன? என்றவாறு தடவிக் கொண்டு ஸ்ரீயை பிடித்து இழுக்க, அவனது கட்டிலிலே பொத்தென்று விழுந்தாள். அவள் இடையில் கையை போட்டுக் கொண்டு அவளது கழுத்தருகே அவனது முகத்தை புதைத்துக் கொண்டு ஆழ்ந்து தூங்கினான்.அவள் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு அதிர்ந்து திகைத்துக் கொண்டிருப்பதை கண்ட, தருண் அதிர்ந்து பார்த்தான்.
அய்யோ,அர்ஜூன் என் மூச்சே நின்று விடும் போலவே. இப்படிலாம் செய்யாதடா. என்னால் கட்டுப்படுத்த முடியாது என்று அவனை விலக்க நினைத்தாள்.
கைரவிற்கு நாங்களும் இருக்கோம்டா. என்னடா பண்றீங்க? என்று விழித்தான்.
அவன் ஏஞ்சல் ஐ லவ் யூ..ஏஞ்சல் ஐ லவ் யூ..உலறிக் கொண்டிருக்க ஸ்ரீ நீர் கசிய..ஐ லவ் யூ டா குட்டிப்பையா என்றாள்.
இப்ப இவள் என்ன சொன்னாள்? குட்டிப்பையாவா? என்று தருண் மீண்டும் கண்ணை மூடினான்.இவளுக்கு அனைத்தும் நினைவிருக்கா? இல்லை அவளை மீறி சொல்லிடாலா? சிந்தித்தான்.
இதுவரை அர்ஜூன் மீது கையை போடாத ஸ்ரீ, அவனது தலைக்கு அடியில் அவளது கையை வைத்து மறுகையை அவன் மீது போட்டு அவளும் அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள். பின் அவனது முகத்தை அவளிடமிருந்து பிரித்து எடுத்து, நான் உன்னை மட்டும் தான்டா லவ் பண்ணுவேன் என்று அர்ஜூன் நெற்றி, இரண்டு அழகான கன்னங்கள், பின் மூக்கில் முத்தம் கொடுத்து, அவனது இதழ்களை பார்த்து வெட்கத்துடன் கண்ணை மூடி, அழுத்தமாக முத்தம் கொடுத்து விட்டு,அவன் மார்பில் முகம் புதைத்து அழுது கொண்டே படுத்திருந்தாள்.
தருண், கைரவிற்கு அவளது செய்கையில் சந்தோசப்படவா?வருத்தப்படவா? என்றே தெரியவில்லை.கொஞ்ச நேரம் அப்படியே இருந்த ஸ்ரீ பின் அவனை விலக்கி விட்டு,மெதுவாக எழுந்து நின்று அவனை பார்த்தாள்.பின் அவன் முகத்தருகே வந்து,இனி என்னோட காதலையும் பார்க்க போறடா. ஆனா உனக்கு இப்ப தெரியாது. நான் சென்ற பின் அறிந்து கொள் அர்ஜூன். “ஐ லவ் யூ அலாட்”டா குட்டிப்பையா என்று அழுது கொண்டே அறையை விட்டு வெளியே ஓடினாள்.
அவள் சென்றதும் எழுந்தான் கைரவ். விட்டா என்னை கொன்றுப்பா போல..அவனை ஒற்றைவிரல் காட்டி அழைத்த தருண், இப்பொழுது நடந்தது அர்ஜூனுக்கோ வேறு யாருக்கோ தெரியக் கூடாது.
என்னோட சந்தேகம் உறுதியானது. அவளும் அவனை தான் காதலிக்கிறாள். அவள் அவனிடம் பேசியதை வைத்து பார்த்தால், ஜிதினிடமிருந்து அவளை கவினும் அர்ஜூனும் இப்பொழுது காப்பாற்றி விட்டார்கள். ஆனால் ஏற்கனவே அவன் அவளிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான். அதனால் தான் அவளால் அர்ஜூனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சரியாக கணித்தான்.
இனி கணித்து என்ன தான் பயன்? ஸ்ரீயை அவன்? என்று கைரவ் கலங்கினான்.
இந்த பிரச்சனை நீண்டு கொண்டிருப்பது போல் தெரிகிறது? சீக்கிரம் பிரச்சனையை முடிக்கணும் யாருக்கும் ஏதும் ஆவதற்குள்.
அப்ப அர்ஜூன் கையில் உள்ள அடி, சண்டை போட்டதில் இல்லையா? தலையில் கை வைத்தான் கைரவ்.
அமைதியா பேசு. அவன் விழித்தால் ரொம்ப கஷ்டப்படுவான். கைரவ் ஏதும் பேசாமல் படுத்துக் கொண்டான். மீண்டும் கதவு திறக்க தாரிகா பதட்டமாக வந்து தருணை பார்த்து,
அண்ணா,..எழுந்திருடா என்று அர்ஜூனை பிடித்து உலுக்கினாள். அவன் எழுந்தவுடன் அவன் தன் உதட்டை தொட்டு பார்த்து, இங்கே யாரும் வந்தார்களா? கேட்டான்
உனக்கு என்ன பைத்தியமா? உன் முன்னாடி தானடா நிற்கிறேன்? என்று தாரிகா பதட்டத்துடன் அர்ஜூன்..அர்ஜூன்
ஓ..அது கனவா? அவன் பிதற்ற, தருணும் கைரவும் மெலிதான புன்னகையுடன் பார்த்தனர்.பின் தருணுக்கு அம்மா நினைவு வர அமைதியானான்.
அவன் தான் கனவிலே ஸ்ரீயுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறானே? இப்ப வந்து தொந்தரவும் பண்ற?
வாயை மூடுடா என்று பதட்டத்துடன் தருணை பார்த்து விட்டு, அர்ஜூனிடன் தருண் அப்பாவும் தவறிட்டாங்கடா என்றாள்.
என்ன சொல்ற? அதிர்ந்து அர்ஜூனும் கைரவும் எழ, தருண் நம்பாமல், இல்லை என்னோட அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேசுனாங்க. வாரேன்னு சொல்லிட்டு தான் போனார். கண்டிப்பா வருவார் என்றான் தடுமாற்றத்துடன். அர்ஜூன் போனை எடுத்து பார்த்தான். பிரதீப் நிறைய முறை போன் செய்திருக்கிறார்.போன் தான் உயிரற்று இருந்திருக்கிறது.
அர்ஜூன்..இந்த பொண்ணு சும்மா தான் சொல்றா?
இல்லடா தருண் என்று கலங்கிய அர்ஜூன், அவனிடம் வந்த மேசேஜை காட்ட, அவரும் போயிட்டாரா? அப்பா..என்று கதறினான்.அங்கே செவிலியர் வந்து கேட்க, விசயத்தை சொன்னாள் தாரிகா.
சார் அமைதியா இருங்க.உங்களுக்கு ஆப்ரேசன் வெற்றி அடைந்ததே பெருசு. நீங்க ஸ்ரெயின் பண்ணீங்கன்னா உங்க உயிருக்கும் ஆபத்தாகிடும். நீங்க வேற அதிகமா பேசுறீங்க? எந்த அளவு ஓய்வெடுக்கிறீங்களோ? அந்த அளவுக்கு குணமாவீங்க.
என்னோட அப்பா..அம்மா..எங்களை விட்டு போயிட்டாங்க. அர்ஜூன் அவரு எப்படிடா எங்கள விட்டு போகலாம்? அழுது கொண்டு, புவிடா..புவி தாங்க மாட்டாடா.அவள பார்க்கணும்டா..அவள பார்க்கணும்..என்று எழ, முதுகு வலி அதிகமானது.
சார்,உங்க ப்ரெண்டுக்கு புரிய வையுங்க சார் செவிலியர் திட்டினான்.
அர்ஜூன் திணறியவாறு,இங்க பாரு தருண்..உன்னை ஸ்ரெயின் பண்ணிக்காதே? ப்ளீஸ்டா. உனக்கு ஏதாவது ஆனால் புவியை நினைத்து பாருடா என்று அழுதான்.
அர்ஜூன் அவங்க என்னோட அம்மா..அப்பாடா.நான் போகணும்டா அர்ஜூன் என்று தருண் கதற, கைரவ் வேகமாக வெளியே சென்று, டாக்டரை அழைத்து வந்தான். அவர் செவிலியரிடம் கண்காட்ட.. அவர் மருந்தை கொடுத்தார். தருண் மயக்கமானான்.
அய்யோ,இப்ப என்னடா பண்றது? இவன் அங்கே போகவும் முடியாது. தருணோட நிலை எந்த மகனுக்கும் வரக்கூடாது அர்ஜூன் கதறி அழுதான். புவி என்ன செய்றாலோ தெரியலையே?
கைரவ் அர்ஜூனை அணைத்துக் கொள்ள, ஸ்ரீக்கு தாரிகா போன் செய்ய, கைரவ் அவளை தடுத்து நாளை அவளிடம் சொல்லிக் கொள்ளலாம் என்றான்.
பின் அர்ஜூனும் கைரவும் டாக்டரை சந்தித்து ஊருக்கு செல்ல கேட்டனர். அவர் உயிரோட இருக்கணும்னா ஓய்வெடுத்து தான் ஆகணும் இரு கிலோமீட்டர் பயணம் கூட அவர் செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.அர்ஜூன் தலையில் அடித்தவாறு கைரவை கட்டிக் கொண்டு அழுதான்.
தீனா ஸ்டேசனில் இருக்க, அங்கே அவனுடன் வேலை செய்பவன் ஒருவன் புலம்பிக் கொண்டே வந்தான்.
நீயும் என்னடா புலம்புற? என்று எரிச்சலுடன் கேட்டான் தீனா.
சார்..உங்களுக்கு விசயம் தெரியாதா? இன்று இறந்தாங்கள அவங்க புருசனும் செத்து போயிட்டாரு. பாவம் அந்த பொண்ணு.ஒரே நாளில் அனைவரையும் இழந்திருச்சு.
என்னடா சொல்ற? என்று எழுந்து அவன் சட்டையை பிடித்தான். தனது வண்டியை கிளப்பிய தீனா அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் புவனா வீட்டில் இருந்தான்.
அந்த பொண்ணு மயக்கத்துல இருந்து விழிச்சிருச்சு என்று பேசிக் கொண்டிருந்தனர்.பிரதீப் அருகே வந்து தீனா கேட்க, அவர் அழுது கொண்டே சுவற்றில் சாய்ந்திருந்தார். அப்படியே போயிட்டார். புவி அந்த அதிர்ச்சியில் மயங்கி இப்பொழுது தான் எழுந்தாள்.
நித்தி,யாசு, ஜானு, இதயா, இன்பா அழுது கொண்டிருக்க புவனா மட்டும் தன் பெற்றோர்களை வெறித்தவாறு கண்ணீர் வடிய வடிய அமர்ந்திருந்தாள். அவள் நிலையை கண்டு அனைவரும் பாவப்பட்டனர். ஆனால் தீனாவிற்கு அவளை அணைத்து, உனக்கு நானிருக்கேன் என்று சொல்ல தோன்றியது. அவன் பார்வை அவளை விட்டு அகலாதிருந்தது. பெரும்பாலான ஆண்கள் வீட்டிற்கு சென்றிருக்க, பாட்டிகள் கூட அவள் வீட்டில் தான் இருந்தனர்.
அங்கிருந்த ஓர் கிழவி, போன ஜென்மத்துல பாவம் பண்ணிருக்க போலடி. அதான் இப்ப உனக்கு இரண்டு உயிரை பறிச்சிருச்சு ஒப்பாரி வைக்க, அழுது கொண்டிருந்த பெண்கள் கிழவியை முறைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த கிழவி மெதுவாக நழுவி வெளியே வந்தது.