ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 97.

புவனா தருண் அறைக்குள் நுழைய ஆதேஷ் துகிராவை பார்த்தவாறே தீனாவும், ஜானுவும் ஓரிடத்தில் அமர்ந்தனர். தீனா அருகே வந்த தருண் அப்பா, தம்பி கிளம்பணும்பா என்றார்.

கொஞ்ச நேரம்பா. புவி அண்ணாவுடன் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே. அவள் ரொம்ப வருத்தப்பட்டாள். சரியாக சாப்பிட கூட இல்லை என்றாள் ஜானு.

அவரும் வருத்தத்துடன் அமர்ந்தார். அவர் அருகே வந்த தீனா, உங்க பையனுக்கு ஒன்றுமில்லை. சீக்கிரம் எழுந்திடுவான் என்று ஆறுதலளித்தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்க,

பிரின்சஸ்..என்ற சத்தம் கேட்டு யாரென பார்த்தனர். இதயா எழுந்து, அண்ணா முணுமுணுத்து  திகைப்புடன் இன்பாவை பார்த்தாள்.

இன்பா.. குரலையும், பிரின்சஸையும் கேட்டு சட்டென நிமிர்ந்தாள். கையிலிருந்த புத்தகங்கள் கீழே விழுந்தது. அவள் உதடுகள் கேரி என்று முணுமுணுத்தது.கண்கள் நீரால் நனைந்தது.

அவளை பார்த்து ஆதேஷ், மேம் என்ன ஆச்சு? என்று அவனும் எதிரே நின்றவனை பார்த்தான். நெடுஉயரம். நீலநிறக் கண்கள், அடர்ந்த வெண்மை கலந்த கருப்பு கேசம். ஆங்கிலேய தோற்றம்.

ஹௌ ஆர் யூ பிரின்சஸ்?

அவள் அசையாது அவனை பார்த்து விட்டு அங்கிருந்தவர்கள் அனைவரையும் பார்க்க, அவர்களும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் உண்மைதானா? என்று பதட்டமாக,

ஆ..ஆ..ஆதேஷ்..போன். எ..என்..என்னோட போ..போன் என்று தடுமாற, அவன் விழித்தவாறு போனை எடுத்து நீட்டினான். அவள் விலகி வெளியே ஓடினாள்.

சை..சை..சைலு, கே..கேரி..என்று தடுமாறினாள்.

சைலேஷ்கு அங்கிருந்த நிலையில் மனநிலை மாறி அமைதியாக,ம்ம்..நம் கேரி தான் என்று போனை வைத்து விட்டான். அவள் பதட்டம் குறையாது சைலு..சைலு..என்று அழைத்தாள்.

கேரி அவளருகே வந்தான். இதயாவும் மற்றவர்களும் வெளியே வந்து பார்த்தனர்.அகிலும் நண்பர்களும் அங்கே வந்தனர். இன்பாவை வெளியே பார்த்து நித்தி, என்னடா உனக்கு வெல்கம் பார்ட்டியா? கேலி செய்தாள்.

விளையாடுற நேரமா இது நித்தி? நிவாஸும் தருணும் எப்படி இருக்காங்களோ? யாசு புலம்பினாள்.

இன்பா இவர்களை பார்த்தவுடன், அவர்களை நோக்கி ஓடி வந்தாள். நேராக அபி அருகே வந்து அவனது கையை பிடித்து இழுத்து வர, ஜானு கண்கள் விரிய கோபத்துடன் அவளை பார்த்தாள்.

இன்பா அபியை கேரி முன் நிறுத்தி, அவனது கையை பிடித்து கேரி கையை தொட வைத்து, அவன் உண்மைதானா? பரிசோதித்தாள்.

அபி புரியாமல் விழிக்க, கேரி பயங்கரமாக சிரித்தான். இன்பா அவனை பார்த்து திருதிருவென விழித்தாள்.

ஹே..பிரின்சஸ். ஐ அம் கேரி. நோ கோஸ்ட் என்று மீண்டும் சிரித்தான். இந்த பெயரை கேட்ட அபி இன்பாவை பார்த்தான்.

அவளோ அபி கையை விடவில்லை. கேரி அபியை பார்த்து விட்டு, இன்பா கன்னத்தை பிடித்து கிள்ளியவாறு மச்சி ஐ லவ் யூ என்றான்.

அபி அதிர்ந்து இன்பாவை பார்த்தான். அபி கையை விடுத்து கேரி கையை தொட்டு பார்த்து, நீ..நீ..

எஸ்..ஐ..ஐ..என்று அவன் கேலியாக பேச, அவனது கையை தட்டி விட்டு, சுற்றிருந்த மரங்களை பார்த்தாள். ஒரு மரத்தின் இடையே நிறைய கிளைகள் ஒடிக்கப்பட்டு சிறியதாக சுள்ளிகள் போல் அடுக்கப் பட்டிருந்தது. அதை பார்த்து கேரியை முறைத்தவள், சேலையை இடுப்பில் தூக்கி செருகி வேகமாக அவ்விடத்திற்கு சென்று ஒரு குச்சியை எடுத்து வந்து அவனது காலிலே அடித்தாள்.

மை காட் பிரின்சஸ்..நோ..நோ..என்று அவன் அபியை பிடித்து சுற்றி சுற்றி வர, அவளும் விடாது சொல்லாம போனவன் தானடா நீ? எதுக்குடா வந்த? என்று கேட்டு கேட்டு அடித்தாள்.

நோ..பிரின்சஸ்..குட்டி பிரின்சஸ் பாவம்.. என்றான். அவள் பிரேக் போட்டதை போல் நின்றாள். அவன் காருக்கு சென்று ஒரு குட்டி பாப்பாவை தூக்கி வந்து,

ஹௌ இஸ் இட்?

நீ..நீ..?

எஸ்..நான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன் என்று வேலையாளை அழைத்து பாப்பாவை கொடுத்தான். அவள் ஆர்வமாக கார் அருகே ஓடினாள்.

அவன் முகம் மாறியது. எங்கடா உன்னோட வொய்ஃப்?

அவன் மேலை கை காட்ட, என்னடா?

அவ பாப்பாவை கொடுத்திட்டு போயிட்டா என்று கலங்கினான். இன்பா அவனை அணைத்து ஆறுதலளிக்க, அபி அதை பார்த்து கையை மடக்கினான்.அவன் பார்வையில் கோபம் தெரிந்தது. தீனா அவனது கோபத்தை கவனித்தான்.

யாசு அபி அருகே வந்து, வா..என்று இழுத்தாள். அவன் பார்வை அவர்களை விட்டு விலகாமல் இருவரையும் முறைத்தான். இதயா அம்மா அபியை பார்த்து, என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க, அவன் உள்ளே வந்தவுடன் இதயா அவனிடம்,

அபி அக்கா பேசிட்டு வந்துடுவா. அவ்வளவு தான்.அபி அவளை முறைத்து விட்டு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க தீனா அவன் முன் வந்தான்.

மாமா என்று எழுந்தான். வெளியே இன்பா அவனுடன் பேசி விட்டு உள்ளே வந்தாள்.

தீனா அவனை அழுத்தமாக பார்க்க, ஜானு ஓடி வந்து அபியை கட்டிக் கொண்டு,மாமா..உனக்கு ஒண்ணுமில்லைல என்று அழுதாள்.

அவனே கோபத்தில் இருந்திருப்பான். அவளை தள்ளி விட நினைத்தவன் இன்பாவை பார்த்தது. அப்படியே விட்டு விட்டான்.

எதுக்கு அழுற ஜானு? எனக்கு ஒன்றுமில்லை என்றான். இப்பொழுது இன்பா முகத்தை பார்க்கணும் என்று இதயா அக்காவை பார்த்தால் இன்பாவோ படம் பார்ப்பது போல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மனதில் இருவரையும் பார்த்து கலங்கினாள்.கேரியும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்..

மாமா. நான் அந்த வீடியோவை பார்த்தேன்.

எந்த வீடியோ? என்று அபி கேட்க இதயா பதட்டமானாள். அவள் ஸ்ரீயை நினைத்தாள்.

ஜானு என்று சத்தமிட்ட தீனா அபி கையை பிடித்து தனியே இழுத்து சென்றான்.

சார்..என்று அகில் பின் வர, தீனாவின் முறைப்பில் அப்படியே நின்று விட்டான் அகில்.

அவர்கள் சென்றவுடன் இன்பா கேரிக்கு நித்தி,யாசு, அகிலை அறிமுகப்படுத்தி வைத்தாள்.பின் அகில், நித்தி, யாசு தருணை பார்த்து விட்டு வெளியே வந்து நிவாஸிடம் சென்றனர். கவினும் கைரவும் அங்கிருந்தனர்.

நீ எல்லா இடத்துக்கும் வந்துடுற? எரிச்சலாக கைரவை பார்த்து அகில் வினவினான். கவின் அகிலை முறைத்து விட்டு, அவன் இருந்தால் உனக்கு என்னடா பிரச்சனை? என்று கத்தினான்.

எதுக்குடா கத்துற? நித்தி கேட்டாள்.

நிவாஸ் விழித்து அனைவரையும் பார்த்து விட்டு கையிலிருந்த ஊசியை கழற்றி எறிந்து விட்டு, அங்கிருந்த பொருட்களை  வெறியுடன் உடைக்க ஆரம்பித்தான். அங்கிருந்த திரைச்சீலையை இழுத்து மருந்துகளை தட்டி விட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான்.

கவினும் அகிலும் அவனை பிடிக்க, அவர்களையும் தள்ளி விட்டு அறையை விட்டு வெளியே வர, யாசு ஓடிச் சென்று செவிலியரிடம் கூறினார். அவனை நித்தியும் கைரவும் பிடிக்க, கவினும் அகிலும் சேர்ந்து கொண்டனர். அதை பார்த்து ஆதேஷ், இன்பா மற்றவர்களும் வந்தனர்.

நிவாஸ், அமைதியா இரு..அமைதியா இரு.. என்று இதயா சத்தமிட, அவனோ அவர்கள் மீது கொலைவெறியில் இருந்தான். நீ ஸ்ரீயை பார்க்க வேண்டாமா? கேட்டவுடன், அவன் கண்கள் ஸ்ரீயை தேடியது. முதல் முறையாக அக்கா..அக்கா..என்றும்  அவ எங்கே? எங்கே? பதறினான்.

அங்கு வந்த செவிலியர், அவனிடம் சார்..அமைதியா இருந்தீங்கன்னா தான் உங்களுக்கு உடல் சரியாகும் என்றார்.

அவனோ அக்கா..அக்கா..என்று வாசலை பார்த்தான். உடனே அவர் உங்க அக்கா இங்க தான் இருக்காங்க. அவங்க தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.நீங்க ஓய்வெடுங்க.

நான் அவளை பார்த்துட்டு வந்து ஓய்வெடுக்கிறேன் என்றான்.

சரி.நீங்க இந்த ஊசியை மட்டும் போட்டுக்கோங்க. அப்புறம் உங்க அக்காவை பார்க்கலாம் என்றார்.

சமத்து பையனாக போட்டு விட்டு, எந்த அறையில் இருக்கா?

அவங்க 76ல இருக்காங்க.

நான் பார்த்துட்டு வாரேன் என்று எழுந்தவனுக்கு தலை சுற்றியது. அவன் அவர்களை பார்த்து, நீங்க..நீங்க..கையை உயர்த்தி காண்பித்து கொண்டு அப்படியே மயங்கினான்.

அவனை பிடித்த அகில் அவனை படுக்கையில் கிடத்தினான். பின் அவனுக்கான மருந்துகள் போடப்பட்டது. அவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றான்.

இந்த கயல் நம் வாழ்க்கையில் வந்ததிலிருந்து எல்லாருக்கும் பிரச்சனை நித்தி அமர,

பிரின்சஸ் யார் கயல்? கேட்டான் கேரி. அவர்கள் அவன் அங்கே இருந்ததையே மறந்திருந்தனர். கையில் குட்டிப்பாப்பாவை வைத்திருந்தான்.

இன்பா அவனை பார்த்து வந்த வேலையை மட்டும் நீ பார் என்று பாப்பாவை கையில் வாங்கினாள். அனைவரும் வெளியே இருங்க.ஒருவர் மட்டும் உடன் இருங்க என்றார் செவிலியர்.

அவனுடன் நான் இருக்கிறேன் என்று அகில் கூற, மற்றவர்கள் வெளியே வந்தனர்.கவினுடன் நித்தி வெளியே வந்தாள்.

நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க? யாசு கேரியிடம் கேட்டாள்.

எனக்கு வாய்த்த டீச்சர் அப்படி? என்று இன்பாவை பார்த்தான். அவள் அவனை பார்த்து விட்டு குழந்தையுடன் வெளியே வந்தாள். யாசுவும் அவளுடன் வர, கேரி பாக்கெட்டில் கையை விட்டவாறு அவளை பார்த்தவாறு இன்பா பின்னே நடந்து கொண்டிருந்தான்.

அபியை இழுத்து சென்ற தீனா, வீடியோவை காட்டி கேட்டான். சொன்னால் ஸ்ரீ பற்றி கூறணுமே? இவருக்கு தெரிந்தால் கோபப்பட்டு அனைத்தையும் வீணாகி விடும் என்று சிந்தித்து, மாமா இது தருண் காதலிக்கிறாளே அவங்களுக்காக தான் நடந்தது.

ஓ..அப்படியா? உனக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன?

எனக்கு அவளுக்கும் ஒன்றுமில்லை.

அப்புறம் எதற்காக உன்னை கொல்ல பார்க்கணும்?

அது வந்து மாமா.எனக்கு அவளோட அக்காவை பிடிக்கும்.

பிடிக்கும்னா?

காதலிக்கிறேன்.

ம்ம்..பார்த்தா உன்னை விட பெரிய பொண்ணு மாதிரி இருக்காங்க?

தலைகவிழ்ந்தபடி, ஆமாம் மாமா. அவங்க பெரியவங்க தான். மூன்று வயது அதிகம் மாமா.

நம்ம குடும்பத்துல ஒத்துக்க மாட்டாங்கன்னு தோணுது.

முதல்ல மேம்மே, இன்னும் நான் சொன்னதுக்கு பதில் சொல்லவே இல்லை.

சொல்லிட்டியாடா?

ம்ம்..அவங்க குடும்பத்துக்கு முன்னாடியே சொல்லீட்டேன்.

ஆனா அந்த பொண்ணு இன்று கல்யாணமான பையனுடன் நெருக்கமாக தெரிந்தது?

இல்லை. அவங்க ப்ரெண்ட்ஸ்.வருடங்கள் கழித்து பார்த்திருக்கிறார்கள் அவ்வளவு தான் என்று இன்பாவை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.

தீனா புன்னகையுடன், பரவாயில்லை நீ உறுதியாக தான் இருக்கிறாய். என்ன பிரச்சனை? தீனா கேட்க, அபி கூறினான்.

உங்களை கொலை செய்ய வந்தவன் முகம் தெளிவாக தெரிகிறது. அவனை உள்ளே தள்ளி விடலாம்ல?

கண்டிப்பா மாமா. இப்ப முடியாதுல அபி தீனாவை பார்க்க,அவசரப்படாதே என்று போனை எடுத்து அவன் ஆட்களிடம் கூறினான்.

இப்பொழுதே அவனை பிடித்து உள்ளே தள்ளலாம். ஆனால் நம்மால் முடியாது. அந்த ஏரிகா போலீஸ் பிடித்து விடுவார்கள்.

தேங்க்ஸ் மாமா என்று அபி தீனாவை அணைத்தான். இருவரும் தருண் அறைக்கு முன் வந்தனர்.அங்கு யாருமில்லை. துகிரா மட்டும் உட்கார்ந்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தாள். அபி மற்றவர்களை தேடி இன்பா இருக்கும் இடத்திற்கு வந்தான்.