ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 96.
அர்ஜூன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி படுத்திருந்த ஸ்ரீ எழுந்தாள். அவள் அர்ஜூனுடன் நெருக்கமாக இருப்பதை நினைத்து மகிழ்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகம் சிவந்து வருத்தத்தை தத்தெடுத்து கண்கள் மூடி அமைதியாக இருப்பதை பார்த்து, அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டாள். பின் அனைத்தும் நினைவிற்கு வரவே மனதில் தாங்க முடியாத வலியுடன் அவனை விட்டு நகர நினைத்தாள். அர்ஜூன் அவளை தன்னுள் இறுக்கமாக பிடித்திருக்க, அவளுக்கு அவனை நினைத்து கஷ்டமானது.
அர்ஜூன், உன் அம்மா எப்பொழுதாவது மாறுவாங்க. நான் என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் ஒரு சதவீதம் எனக்குள் ஓர் ஆசை இருந்தது.உன்னுடன் வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூட தோன்றியது மனதினுள் நினைத்து அழுது கொண்டிருந்த ஸ்ரீ,
ஆனால் இந்த ஆன்ட்டியும் ஜிதினும் சேர்ந்து என்னை மண்ணோடு புதைத்து விட்டார்கள். இனி எப்படி நான் உன்னுடன் வாழ்வது? கடைசியில் உன் அம்மா கூறியது தான் உண்மையாகி விட்டது கதறி சத்தமாக அழுதாள். அவள் உடல் குலுங்களில் அசைந்த அர்ஜூன், அவள் சத்தம் கேட்டு திடுக்கென விழித்தான். அர்ஜூனை இறுக்கமாக தழுவிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
ஸ்ரீ..ஸ்ரீ..இங்க பாரு.என்னை பாரு என்று குனிந்து அழுது கொண்டிருந்த அவளை நிமிர்த்தினான். அவன் கண்ணிலும் கண்ணீர்.அவள் அழுது கொண்டே அர்ஜூன் எனக்கு அவனுடன் நடந்த எதுவும் தெரியாது. நான் எப்பொழுதும் என் அறையில் தான் இருப்பேன்.எதற்கு? எப்பொழுது நடந்தது? என்று எனக்கு தெரியாது.நீ என்னை நம்புகிறாயா? என்று கேட்டுக் கொண்டே அழுதாள்.
தெரியும் ஸ்ரீ. உன் அருகே நீ அறிந்து யாரும் வர முடியாது. அது உனக்கு தெரியாமல் தான் நடந்தது என்று அவளை இறுக்கிக் கொண்டு அவனும் அழுதான்.
எனக்கு உன் மீது சந்தேகமெல்லாம் இல்லை ஸ்ரீ. ஆனால் ஸ்ரீ..என்று அவளை பார்த்தவன் நீ எப்படி அவர்களிடம் இந்த அளவு ஏமாந்து இருக்கிறாய்?
தெரியலையே அர்ஜூன்.அம்மா சொன்னாங்க. அவங்க கூட இருக்கக் கூடாதுன்னு. ஆனால் இந்த அளவு இறங்குவாங்கன்னு நினைக்கல என்று கூறிய ஸ்ரீக்கு நிவாஸ் அடி வாங்கிய நினைவு வந்து, அர்ஜூனை விட்டு பதறி வேகமாக எழுந்தாள்.
அர்ஜூன்..நிவி..என்று அந்த அறையை துலாவினாள். நிவி எங்கே அர்ஜூன்? கேட்டாள். அவன் ஹாஸ்பிட்டலில் இருக்கான் என்று கூற அழ ஆரம்பித்தாள்.
வா..அர்ஜூன் போகலாம். அவனை இப்பொழுதே பார்க்கணும்.
இல்லை ஸ்ரீ. அவன் இன்னும் எழவில்லை. வலி அதிகமாக இருக்கும் என்பதால் அதிக டோஸ் உள்ள மருந்து கொடுத்திருக்காங்க. அவன் இரவு தான் விழிப்பான்.
ஸ்ரீ கண்ணில் நிற்காமல் நீர் ஓட, அர்ஜூன் அவளை அணைத்து சமாளிக்க நினைத்தான். ஸ்ரீக்கு அர்ஜூன் அம்மா அவளை பற்றி பேசியது நினைவிற்கு வர, அவனை நிறுத்தினாள்.
நோ..அர்ஜூன் என்று கண்ணை துடைத்து விட்டு, நான் நல்லா தான் இருக்கேன் என்று அறையை விட்டு வெளியே வந்தாள். தாரிகா வந்து ஸ்ரீயை அணைக்க, அவளை விலக்கி நிவியுடன் யார் இருக்கிறார்கள்? அவனை தனியே விட்டு விட்டீர்களா? கத்தினாள்.
ஸ்ரீ..கவின் அவனுடன் இருக்கான் அர்ஜூன் கூறினான்.அவள் கத்தியதில் அனைவரும் வெளியே வந்தனர்.
ஓ..எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா? என்று அர்ஜூனை பார்த்தாள்.
நான் நிவியிடம் போகிறேன் என்றாள்.
ஸ்ரீ..இப்பொழுது நிலைமை சரியில்லை. அங்கே அவனுடன் நிறைய பேர் இருக்கிறார்கள். நீ இங்கேயே இரு என்று தாரிகா வழியை மறித்தாள்.
வழியை விடு தாரி. நான் நிவியை பார்க்கணும். அவனை எப்படி அடிச்சாங்கன்னு தெரியுமா? என்று அழுது கொண்டே, எல்லாம் என்னால் தான் சத்தமிட்டு கதறி துடித்தாள். அர்ஜூனால் அவள் அழுவதை பார்க்க முடியவில்லை.
ஸ்ரீ அழாதே என்று அருகே வந்தான் அர்ஜூன்.
இங்க இருக்கிற எல்லாருக்கும் எல்லாமே தெரியும்? அப்படி தானே?அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
அர்ஜூன் சட்டையை பிடித்து, ஏன்டா எல்லாருக்கும் சொல்லணுமா? என்று அவனை அடித்துக் கொண்டே அழுதாள்.
முடிவெடுத்தவாய் எழுந்து, யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் செல்கிறேன் என்று ஓர் அடி எடுத்து வைத்தாள்.
ம்ம்..போ..தாராளமா போ. உன்னோட பெற்றோர்கள் கொலை உனக்கு சாதாரணம் தானே? போ..ஆனால் நீ போன மறு நிமிசம் உன்னை பற்றி தெரிந்த அனைவரையும் கொல்வார்கள் என்று சீற்றத்துடன் சந்துரூ முன் வந்தான்.
ஸ்ரீ அவனை புரியாமல் பார்த்தாள். உன்னோட பெற்றோரை சொத்திற்காக மட்டும் அவர்கள் கொல்லவில்லை. அவர்களுடைய போதை மருந்து தயாரிப்பு பற்றிய விசயம் தெரிந்து அதற்கான எல்லா ஆதாரங்களையும் சேகரித்து வைத்தார். அதனை போலீசிடம் கொடுக்க முயற்சித்த நேரம், ஒரு போன் கால் வந்து உன் அப்பாவை மிரட்டியது. அதற்கு பயந்து தான் என்னுடைய யாழுவை உங்க ஊருல இருக்கும் அனைவரையும் கவனித்துக் கொள்ள சொல்லி அனுப்பினார். அவளும் பார்த்து போட்டோஸ் எடுத்து அனுப்பினாள்.
அவர்கள் வீட்டில் பேசியதை ஆதி கேட்டதால் தான் அவனை கொன்றார்கள். உன் அப்பா பொறுக்க முடியாமல் அதனை உயர் அதிகாரியிடம் கொடுத்தார்.ஆனால் அவரும் இவர்களது ஆட்கள். அது தெரிந்து தான் உன்னுடைய பெற்றொர்களை கொன்றார்கள். ஆனால் உன் அப்பா முன்னதாகவே ஒரு காபி எடுத்து யாழுவிடம் கொடுத்திருக்கிறார். அவர் இறந்த பின் என்ன செய்வதென்று அவள் தவித்து போனாள். அவர்களுக்கு யாழு உதவிய விசயம் தெரிந்து அவளை கொல்ல ஆட்களை அனுப்பினார்கள். ஆனால் அன்று அவளுடன் நான் இருந்தேன். அதனால் தான் அவளை தனியே விடாமல் வீடு வரை வந்து விட்டு செல்வேன். ஆனால்..அன்று விட்டு சென்ற பின் அவள் வீட்டிற்குள் நுழையும் முன் அவள் எதையோ தவற விட்டிருக்கிறாள். அதை தேடி அவள் சுற்றியது எனக்கு தெரியாது. அப்பொழுது தான் காரை ஏற்றி அவளை கொன்றிருக்கிறார்கள் என்று தாரிகாவை பார்த்தான்.
அவள் கண்ணீருடன், அக்காவை கொலையா? என்று அப்படியே உட்கார்ந்தாள்.யாழு கோமாவில் இருப்பது இவளுக்கு தெரிய வேண்டாம் தலையசைத்து அனைவரையும் பார்த்தான்.
ஸ்ரீ அவளை நெருங்கி அணைக்க, கதறி அழுதாள். அதற்கான காபி எங்கே உள்ளது? என்று யாழுவிற்கு தான் தெரியும் என்று நினைத்திருந்தேன் என்று அர்ஜூன் அருகே வந்து அவனது தோளை தட்டி,
நீ கொண்டு வந்த பென் டிரைவில் சில தகவல்கள் உள்ளது. ஆனால் முழுதாக வேண்டும். அதுவரை யாரும் வெளியே செல்வது நல்லதல்ல என்றான்.
அர்ஜூன், நீ எப்படி பென் டிரைவை கண்டுபிடித்தாய்? ஸ்ரீ கேட்டாள்.
அவன் கயலுடன் நடந்ததை கூற, அவனையே பார்த்தாள்.
இப்பொழுது ஆட்களை அனுப்பியது எதற்காக இருக்கும்? சைலேஷ் கேட்க,
ஒன்று ஸ்ரீ. மற்றொன்று இந்த பென் டிரைவ்கள். இதுவரை அவர்கள் மிரட்டி வாங்கிய அனைத்து சொத்து விவரங்களும் இதில் இருக்கு. இன்னும் கொஞ்சம் தான் நாம் சரி பார்க்கணும் என்றான் பிரதீப்.
அண்ணா..நீங்களுமா? ஸ்ரீ கேட்க,
அர்ஜூன் புருவத்தை சுருக்கி, உனக்கு இவர் யாரென்று தெரிகிறதா? கேட்டான்.
ஸ்ரீ பதறினாலும் அதை காட்டிக் கொள்ளாமல், எனக்கு அவரை அவ்வாறு கூப்பிட தோன்றியது. அதான் கூப்பிட்டேன் என்றாள்.
இல்லையே தெரிந்தவர் கூட பேசுவது போல் தெரிந்ததே? கேட்டான் அவன். தாரிகாவும் ஸ்ரீயை பார்த்தாள்.
தோன்றியது அழைத்தேன். தவறா? அப்படின்னா அவரை நான் எப்படி கூப்பிடுவது?
அவன் குறுகுறுவென ஸ்ரீயை பார்க்க, பிரதீப் ஸ்ரீ அருகே வந்து, நீ என்னை அண்ணன்னே கூப்பிடு.
சரிங்கண்ணா என்று சிரித்தாள். அர்ஜூனும் தாரிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நான் நிவியை பார்க்க முடியாதா? என்று பாவமாக கேட்டாள்.
போதை மருந்து என்ன அவ்வளவு பணமா கிடைக்கும்? தாரிகா கேட்க,
என்னம்மா கேக்குற? மில்லியன். பில்லியன் கணக்குல விக்கிறானுக;அதுவும் வெளிநாட்டிற்கு.
மில்லியன்.பில்லியனா?
ஆனால் அதனால் நிறைய குழந்தைகள் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் சந்துரூ கூறினான்.
தருணை ஹாஸ்பிட்டலில் பார்க்க செல்லவில்லையா? சைலேஷ் அர்ஜூனிடம் கேட்டான்.
ஸ்ரீ அர்ஜூனை பார்த்து, அவர் உன்னோட ப்ரெண்டு தான?
என்ன ஆச்சு? பதட்டமானாள். தாரிகா சொல்ல, மனதினுள் ஸ்ரீ எல்லாம் என்னால் தான் நடக்கிறது என்று அர்ஜூனை பார்த்து நாளை நானும் பார்க்கணும் என்றாள்.
சரி..வாங்க வேலையை பார்ப்போம் என்று மற்றவர்கள் உள்ளே செல்ல, தாரிகா சோகமுடன் இருந்தாள். அர்ஜூன் ஸ்ரீயிடம் நிவியை பார்க்கலாம். ஆனால் இன்று அல்ல என்று அவளிடம் பேசியவாறு தாரிகா அருகே வந்து அமர்ந்தான்.
அவள் அர்ஜூனை பார்த்து, அக்கா இல்லாம நானும் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? அவளை இப்படி கொன்னுட்டாங்களே! அவங்கள விடக் கூடாது அண்ணா.
கண்டிப்பா..ஆனால் அவங்க கொலை லிஸ்ட் அதிகம். அன்று ஸ்ரீ பார்த்து அதிர்ந்த கொலை பற்றிய காரணம் கூட இதில் இருக்கு.நிறைய செஞ்சிருக்காங்க.
அர்ஜூன், எங்க ஆன்ட்டி செய்ற மாதிரி தெரியல அர்ஜூன். அவங்களுக்கு அம்மா மீதுள்ள கோபத்தில் தான் என்னை பழி வாங்குகிறார்கள். ஜிதினையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நிவியை அவர்கள் தனியாக காயப்படுத்தவே இல்லை. போதை மருந்து மட்டும் தான் கொடுக்கிறார்கள் ஸ்ரீ கூற,
அர்ஜூன் தாரிகா அவளை பார்க்க, ஒரு வேலை நிவி அவங்க பையனா இருக்குமோ? என்றவள் இதில் வேறு நபர்களும் இருப்பது போல் தோன்றுகிறது.
அர்ஜூனிற்கும் இந்த சந்தேகம் தான். ஆனால் ஸ்ரீ நிவி அவங்க பையன்னா, எதற்கு இப்படி அடிக்கணும்? அவனை வேறொரு அறையில் அடைத்து வைத்திருக்கலாமே? சகஜமாக இவர்கள் பேசினார்கள்.
ஸ்ரீ மனதில் இருக்கும் வரை அர்ஜூனுடன் தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்.ஸ்ரீ அதிலிருந்து வெளியே வந்து விட்டாளோ? அர்ஜூன் நினைக்க, அவளோ மனதினுள் உங்க யாரையும் கொல்லாம நான் சாக மாட்டேன். நான் இருந்தாலும் இல்லை என்றாலும் என் அர்ஜூனையும், என்னோட ப்ரெண்ட்ஸையும் சும்மா விட மாட்டீங்க. அதற்கு முன் நான் செய்ய வேண்டியதை செய்து முடிக்கிறேன் என்று நினைத்தாள்.
தாரிகா அவளை பார்த்து, வா என்று ஸ்ரீயை அழைத்து செல்ல, அர்ஜூன் தாரிகாவை அழைத்தான். அவள் அவனை பார்த்து விட்டு அறை அருகே செல்ல, அவனும் பின்னே வந்தான். அவனை வெளியே வைத்தே பூட்டினாள் தாரிகா.
என்ன செய்யப் போறா? அர்ஜூன் சிந்தித்தான்.
தாரிகா ஸ்ரீயிடம், அண்ணாவை விட்டு முழுதாக விலகப் போகிறாயா?
இல்ல..அவன் அருகே தான் இருக்கப் போகிறேன். ஆனால் தாரி அர்ஜூன் அம்மா சொன்னது போல் தான் நான் இருக்கிறேன்ல என்றாள் விரக்தி புன்னகையுடன்.
ஸ்ரீ..கண்டிப்பா இல்லை. நீ அப்படியெல்லாம் நினைக்காதே! உனக்கு தெரியாமல் தான் நடந்தது. ஆனால் அதனால் ஒன்றுமில்லை.உன்னோட அந்த டாக்டருக்கு தெரிந்ததால் உன்னோட ஆன்டிக்கு தெரியாமல் உனக்கு ஏதும் நடக்காமலிருக்க மருந்து கொடுத்திருக்கிறார்.
கொடுத்து என்ன பிரயோஜனம் தாரி?
என்ன ஸ்ரீ இப்படி கேக்குற? நீ அர்ஜூனுடன் சேர்ந்து..
போதும் தாரி. நான் அவனை காதலிக்கிறேன் தான். ஆனால் அது கூட எப்பொழுதும் அவனுக்கு தெரிய போவதில்லை. தெரியவும் கூடாது.என்னால் முடியாது தாரி. நான் எல்லா பிரச்சனையும் கடந்து உயிரோடிருந்தாலும் அவனுடன் என்னால் வாழ முடியாது. அவன் எல்லாவற்றையும் பார்த்து விட்டான். அவனுக்கு என் மீது இப்பொழுதும் காதல் இருப்பது தெரியும். அவனும் அவன் காதலும் தூய்மையானது. ஆனால் நான் கலங்கப்பட்டு விட்டேன்.அவனுடன் இருக்க என்னால் முடியாது. எனக்குள் குற்றவுணர்வு தாக்கிக் கொண்டே இருக்கும்.அதிலே செத்து விடுவேன்.
நான்..நான்..என்று தயங்கிய ஸ்ரீ, ஜிதினையே திருமணம் செய்து கொள்ள போகிறேன். அவன் என் மீதுள்ள காதலால் தான் இப்படி செய்திருக்கிறான். அர்ஜூன் காதலுக்கு நான் கொஞ்சமும் அருகதை இல்லாதவள்.ஒரு நிமிடம் அர்ஜூன் இடத்தில் கவினும், என் இடத்தில் நீயும் இருந்தால் என்ன செய்வாய்? என்று ஸ்ரீ கேட்க, தாரிகா அழுது கொண்டே உன் முடிவை தான் நானும் எடுத்திருப்பேன்.
ம்ம்..குட். அவனிடம் இதை பற்றி ஏதும் பேச வேண்டாம். நான் என் அர்ஜூன் அருகே கொஞ்ச நாட்கள் சந்தோசமா இருக்கணும். முதல்ல அவனை பார்க்க கூட முடியல. ஆனா இப்பொழுது தான் என்னை நானே தயாராக்கி கொண்டேன்.நீ அவனிடம் எதையும் கூறக் கூடாது. ஓ.கே வா என்று புன்னகைத்தாள். தாரிகா ஸ்ரீயையே பார்த்துக் கொண்டிருக்க அவள் கதவை திறந்து கொண்டு புன்னகையுடன் வெளியே வந்தாள். அர்ஜூன் அவளையும் பார்த்து விட்டு, தாரிகாவை பார்த்தான்.
தீனா, புவனா, ஜானு ஹாஸ்பிட்டல் வந்தனர். அங்கே இன்பா, ஆதேஷ் புத்தகத்துடன் இருக்க, துகிரா அவனது மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். தருண் அப்பா அருகில் இதயா அமைதியாக அமர்ந்திருந்தாள். கைரவும் கவினும் நிவாஸ் அறையில் இருந்தனர்.
“உன்னோட சேர்ந்து ஆண்டாண்டு காலம்
கை பிடித்து வாழ ஆசையடா..
என் காதலை கல்லாக்கி என்னுள் மருகி
நானும் கல்லாக தான் போகிறேனடா..
எனை நான் இழந்தாலும் உன்னுடனான
வாழ்வை வாழ போகிறேனடா..
ஒவ்வொரு நொடியேனும் ஒவ்வொரு நிமிடமேனும்
உன்னுடனே நான் இருப்பேனடா..
பைத்தியகரமான என் காதல் சொல்கிறது உன்
இதயத்துடிப்பில் நான் வாழ்வேனென்று”