கதிரவன் விடைபெற்று சந்திரன் வருகை தந்தார். வந்தனர் அண்ணனும் தங்கையும். சுவேரா சற்று முன் தான் வந்திருந்தாள். கவினும் சித்திரனும் சாய் அறையில் தான் இருந்தனர்.
லாவண்யா ஹாஸ்பிட்டலிலே இருக்க, மனோகர் மனைவியை தேடி விண்ணரசியின் அண்ணன் வர, அவனை பார்த்த சுவேரா அவனிடம் செல்ல, அவன் யோசனையுடன் அவரை தேடுவதில் மும்பரமாக இருந்தான்.
“சார்” அழைத்துக் கொண்டு சுவேரா அவன் பின்னேயே சென்று கொண்டிருக்க கவினிற்கோ சினம் பொங்கிக் கொண்டு வந்தது.
லாவண்யா அதை கவனித்து, சுவா என்ன பண்ற? சத்தமாக கேட்க, விண்ணரசி அண்ணன் நின்று விட அவன் தலையில் இடித்து நின்றாள் சுவேரா.
“என்ன?” அவன் புருவத்தை உயர்த்த, அவன் நெற்றியில் போடப்பட்டிருந்த பேன்டேஜ்ஜை பார்த்து, அதை தொட சென்றாள். அவள் கையை பிடித்த அவன், என்ன? அவன் மேலும் எரிச்சலுடன் கேட்க, அவள் பாவமாக அவனை பார்த்து, சார் உங்களுக்கு எதுக்கு காயமாகி இருக்குன்னு கேட்க தான் தொட வந்தேன்..
“ஒன்றுமில்லை” அவன் நகர, மீண்டும் அவன் பின்னே அவள் செல்ல, கவின் பல்லை கடித்தான். சித்திரன் மனதினுள் சிரித்தவாறு, “மாப்பு உனக்கு வைக்கப் போறா ஆப்பு” மனதினுள் சொல்கிறேன் என்று வெளியில் சொல்லி விட சாய் புன்னகைத்தான்.
“எதுக்கு இப்ப பூனைக்குட்டி மாதிரி பின்னாடியே வர்ற?” அவன் மென்மையாக கேட்க, “என்னாச்சு? விசயத்தை சொன்னீங்களா?”
ம்ம்..சொன்னேன் என்று அவன் சாய்யை பார்த்தான்.
“பெரிய பிரச்சனையா?” சாய் அங்கிருந்த எல்லாரையும் பார்த்து விட்டு விண்ணரசியின் அண்ணனை பார்த்தான்.
அவங்க எங்க? அவள் அண்ணன் சாய்யை தவிர்த்து சுவேராவிடம் கேட்டான்.
என்ன பிரச்சனை? சாய் மீண்டும் அவனிடம் கேட்க, ஒன்றுமில்லை. நான் பார்த்துக்கிறேன். நீங்க நல்லா ஓய்வெடுங்க. நான் உதவி கேட்கும் போது செய்யுங்க என்று எழுந்தான். சுவேரா, லாவண்யாவை பார்த்தாள்.
பிரச்சனை பண்ணீட்டாங்களா? சுவேரா அவனிடம் கேட்க, புன்னகைத்த அவன் அவனது உச்சி போனிட்டிலையை லேசாக பிடித்து ஆட்டி, பிரச்சனையை உன்னால முடிக்க முடியுமா? முடியாதுல்ல..அமைதியா இரு வாயாடி..
வாயாடியா? நானா? நான் நல்ல பொண்ணு. வாயை கூட திறக்கவில்லை. பாருங்க என்று உதடுகளை வாய்க்குள் தள்ளி, எப்படி சரியா? புருவத்தை உயர்த்தினாள்.
சிரித்து அவன் சடையிலிருந்து கையை எடுத்து அவள் தோளில் போட, கவின் இருவரையும் அதிர்ந்து பார்த்தான்.
என்னிடம் யாரும் எதையும் சொல்ல மாட்டேங்கிறீங்க? சாய் கோபமாக கேட்டான். சுவேராவுடன் சேர்ந்து திரும்பிய விண்ணரசி அண்ணன், நானும் விண்ணாவும் வீட்டை விட்டு வெளிய வந்துட்டோம்.
வாட்? அவன் கையை சுவேரா நகர்த்த, அவன் அவள் தோளில் மீண்டும் கையை போட்டு கவினை பார்த்து விட்டு சாய்யிடம், “இப்ப சொல்லீட்டேன். உங்களால என்ன செய்ய முடியும்? உங்களால விண்ணாவை மேரேஜ் பண்ணிக்க முடியுமா?” அவன் கேட்க, சுவேரா மேலும் அதிர்ந்து அவன் முகத்தை பார்க்க, அவன் அவளை பார்த்து கண்ணடித்தான்.
என்ன நேரடியா கேட்டுட்டீங்க? சுவேரா எக்கி அவனிடம் கேட்க, இப்ப அதனால என்ன? அவனெல்லாம் மனுசனே இல்லை. லைட்டா போட்டு வைப்போம். அவளிடம் நீ கேட்டுட்ட? இவரிடம் நான் கேட்டுட்டேன். அவங்க முடிவெடுக்கட்டும் அவன் சொல்ல, வீட்டை விட்டு வந்து இந்த ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கப் போறீங்களா? லாவண்யா கேட்டாள்.
அவளை பார்த்து புன்னகையுடன், நான் எதுக்கு இங்க தங்கணும்? எனக்கு ஹாஸ்பிட்டலும் இருக்கு. பணமும் இருக்கு. நாளை காலையே வீடு வாங்கிடுவேன். பேசி இருக்கேன்.
சுவேரா வாயை பிளந்து அவனை பார்க்க, கவின் கடுப்புடன் எழுந்து வெளியே சென்றான். லேசாக தலையை நீட்டிப் பார்த்த விண்ணரசியின் அண்ணன் கவின் சென்றவுடன் சுவேரா தோளில் இருந்து கையை எடுத்து, என்னம்மா உன்னோட ஆளுக்கு இவ்வளவு கோபம் வருது? கேட்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் வேகமாக எட்டி பார்க்க, சித்திரனோ..சுவா போ பேசு.
நான் என்னத்த பேச? பொறாமையில் பொங்கினால் போதுமா? என்னை பிடித்திருந்தால் அதற்கேற்றவாறு பேசணும்..
லாவண்யாவை பார்த்த விண்ணரசியின் அண்ணன், விண்ணாவை கொஞ்ச நேரம் பார்த்துக்கிறீங்களா? கேட்டான்.
நான் பார்த்துக்கக் கூடாதா? சுவேரா கேட்க, நீ வேண்டாம் பட்டென சொல்லி, உனக்கு வேற வேலை இருக்கு என்றான்.
என்ன? நான் உங்க வீட்டுக்கு போய் பேசவா? சுவேரா கேட்க, அவள் தலையில் குட்டு வைத்து..நீ பேசி அவங்க கேட்க மாட்டாங்க. அதை விடு..உன்னோட ஆளை லவ்வர் பாயாய் மாற்ற பாரு..
ஆரவ் கவின் பின் ஓடி பேச, கவின் காதிலே வாங்காமல் சினமுடன் சென்று விட்டான். ஆரவ் சினமுடன் அறைக்கு வந்து, “சுவா..நாளை காலை தயாராக இரு. மாப்பிள்ளையை பார்க்க போகணும்” சொல்லி விட்டு சினமுடன் அவன் செல்ல, சுவேரா கண்கலங்க நின்றாள். ஆரவ் பின் ஆத்விக் ஓடினான்.
வெகு நேரமாகியும் வீட்டிற்கு செல்லாமல் இருந்த கவின் அவன் அம்மாவை அழைத்து உணவு வேண்டாமென்று சொல்லி விட்டு ஹாஸ்பிட்டல் சென்றான்.
ஆத்விக் அவனை முறைத்து நின்றிருக்க, ஆரவ் இரு அறை தள்ளி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான். லாவண்யாவும் கவினை முறைக்க, சித்திரன் கவினருகே வந்தான்.
என்ன? அவன் எல்லாரையும் பார்க்க, ஆரவ் அமர்ந்திருந்த அறையிலிருந்து வெளியே வந்தார் மனோகரும் அவர் மனைவியும்.
ராஜேஸ்வரி கவினை பார்த்து, “போனவர் எதுக்கு வந்தீங்க? அப்படியே போயிருக்க வேண்டியது தான?” ஆதங்கமுடன் அவர் அவனிடம் கேட்க, கவின் புரியாமல் “போகணுமா? எங்க?” கேட்டான்.
ஏதும் சொல்லாமல் சாய் அறைக்குள் புகுந்து கொண்டார்.
மனோகர் அவனிடம், “ஏம்ப்பா..அந்த பிள்ளை நல்லா பேசிட்டு இருந்துச்சு? இப்படி பண்ணீட்டீங்களே!”
“நான் என்ன செய்தேன்? நீங்க யாரை பேசுறீங்க? தெளிவா சொல்லுங்க?” கவின் கேட்க, கவின் காதில் சித்திரன் எதையோ கூற, திகைத்த கவின் விரைந்து அவ்வறைக்கு சென்றான்.
சுவேரா படுக்கையில் படுத்திருந்தாள். அவளருகே சென்று போர்வையை அவளது இடுப்பளவு விலக்கி அவளை பார்த்தான்.
ஏதும் இல்லாமல் இருக்க, அவளை பார்த்து விட்டு சித்திரனை பார்த்தான். அவன் பேசும் முன், “எதுக்கு இப்ப டிராமா பண்ணீட்டு இருக்கீங்க?” கவின் அவனை திட்டி விட்டு, “ஏய் இறங்கு..என்னை சமாதானப்படுத்த இப்படி ஏமாத்தி நடிக்க வேண்டிய அவசியம் என்ன?” சினமுடன் அவன் கேட்க, அவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“கேட்கிறேன்ல்ல பதில் சொல்லு?” கவின் சினமுடன் சுவேராவை அடித்து விட, அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது.
“சார்” சித்திரன் சத்தமிட்டு அவளிடம் ஓடி வந்தான். மற்றவர்களும் உள்ளே வந்தனர். ஆத்விக் கவின் கன்னத்தில் ஓங்கி அறைய, ஆரவ் சுவேராவின் மீதி போர்வையை விலக்கி தூக்கி எறிந்தான்.
அவள் பாதத்தில் இரத்த காயத்துடனான கட்டு இருந்தது. ஆத்விக்கை முறைத்த கவின் முகத்தை சுவேரா காலில் பதிய திருப்பினான் ஆத்விக்.
“ரா, எதுக்கு? நீ..நீயா காயப்படுத்திக்கிட்டீயா?” கவின் கேட்க, ஆமா அவளாக காயப்படுத்திட்டா. காலையில் அவளை பார்க்க வர சொன்ன மாப்பிள்ளைக்கு சுவா புகைப்படத்தை அனுப்பி வைக்கவும் அவன் உடனே அவளை பார்க்க வந்துட்டான். அவனுக்கு சுவாவை ரொம்ப பிடித்து விட்டது. கல்யாணம் பற்றி பேச நாளை பெற்றோருடன் என்னோட வீட்டுக்கு வருவதாக சொல்லி சென்றான். அவனை வழியணுப்ப நாங்கள் சென்ற நேரம் என்று ஆத்விக் சுவேராவை பார்க்க, அவள் ஏதும் பேசாமல் துருவினியை விட்டு விலகினாள்.
ஆரவ்வின் ஏற்பாட்டில் பயந்து நாளை அவன் பார்க்க வரக் கூடாதுன்னு இப்படி பண்ணீட்டா. எல்லாம் உன்னால தான் ஆத்விக் கவினை அடித்தான்.
ஹே, வாயாடி..விண்ணரசியின் அண்ணன் அறைக்குள் வந்தான். கவினை பார்த்து, போலீஸ்காரன் திருடன், கொலைகாரன், கொள்ளக்காரன் எண்ணத்தை மட்டும் தான் புரிந்து வந்திருக்கணுமா? வெட்கத்தை விட்டு அவ லவ்வை சொல்லி இருக்கா. அம்மாவுக்கு ஆட்டுக்குட்டிக்குன்னு பேசி இருக்க? அவன் கையை ஓங்கினான்.
வேண்டாம் சார் விடுங்க. ஏற்கனவே அண்ணா அடிச்சிட்டான். இனி அவர் அவர் வழியில் போகட்டும். இப்பொழுது கூட அவரை ஏமாற்றுபவளாக தான் நான் தெரிகிறேன். இப்படி என்னை நம்பாதவருடன் என்னால கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது என்று ஆரவ்வை பார்த்து, சாரி அண்ணா..உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். வினுவை முட்டாள்ன்னு சொல்லீட்டு நானும் அதையே தான் செய்திருக்கேன் அழுதாள் சுவேரா.
ரா..நான் கோபத்துல்ல..
யோவ்..போலீஸ்காரா? விண்ணாவுக்கு பின் எனக்கு ஒரு குட்டி தங்கை இருந்தா விபத்தில் அவள் இறந்துட்டாள். நான் இவளை அந்த பொண்ணாக தான் பார்த்தேன். உன்னை வெறுப்பேற்றினால் பொறாமையில் அவளிடம் காதலை சொல்லீடுவன்னு நினைச்சேன். உன்னால கோபம் மட்டும் தான் பட முடியும்ன்னு காட்டிட்ட.
நீ இவனுக்காகவெல்லாம் அழாத குட்டிம்மா. என்னோட ப்ரெண்டு ஒருத்தன் இருக்கான். நீ அவனிடம் பேசி பழகு. பிடித்திருந்தால் கல்யாணம் பண்ணிக்கோ..இல்லைன்னா ப்ரெண்ட்ஸா இருந்துக்கோங்க..
“இல்ல, நாங்க மும்பை கிளம்புகிறோம்” ஆரவ் சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர். லாவண்யா ஆரவ் அருகே வேகமாக வந்து நின்றாள்.
சரி என்று கவினை காணாது சுவேரா சொல்லி விட, அவனுக்கு ஏதோ அவனிடமிருந்து உறுப்பை பிரிப்பது போல உணர்ந்தான்.
ஆது, காலை பிளைட்டிற்கு புக் பண்ணு. வா வரா என்று ஆரவ் சுவேரா கையை பிடிக்க, வந்த வழியே சென்றான் விண்ணரசியின் அண்ணன்.
“அண்ணா, வலிக்குது. காலை ஊன்ற முடியலை” சுவேரா சொல்ல, கவின் ஆரவ் அருகே வந்தான்.
“வழிய விடு ஆரவ்” சினமுடன் பேச, “ரா நீ மும்பை போயிட்டு எப்ப வருவ?” கவின் கேட்டான்.
அவ வர மாட்டா என்ற லாவண்யா, சுவா அங்கேயே நல்லவனாக..ஆரவ் அன்று தாரா பங்சனோட அவனோட நேம்? புருவத்தை தேய்த்தாள் லாவண்யா..
“அவரு பேரு மாலஜ்” வெளியிலிருந்து குரல் கேட்க, அனைவரும் வெளியே பார்த்தனர். கவின் தந்தை சுகுமார் தான் சொல்லி இருந்தார். அதிவதினி சினமுடன் தன் மகனை பார்த்தார்.
அம்மா, அப்பா..அவன் அழைக்க, அதிவதினி கவினை கண்டுகொள்ளாமல் சுவேராவிடம் வந்து, “உன்னை தொந்தரவு செய்திருந்தால் எங்களை மன்னிச்சிருடா. நீ மும்பைக்கு போ. உன்னை புரிந்து நல்லா பார்த்துக் கொள்பவனை கல்யாணம் பண்ணிக்கோ. சந்தோசமா இரும்மா” அவர் சொல்ல, சுவேரா கண்ணீருடன் காலை ஊன்றி விட வலி உயிர் போனது. தடுமாறியவளை லாவண்யாவும் துருவினியும் சேர்ந்து பிடித்தனர்.
“அம்மாடி, பார்த்தும்மா” அதிவதினி பதறி அவளை அவர்களுடன் சேர்ந்து பிடித்தார். சுவேரா ஏதும் பேசாமல் அவரை அணைத்துக் கொண்டாள்.
விலகிய சுவேரா சுகுமாரை பார்க்க, “கண்டிப்பா போகணுமாம்மா?” அவர் மனமில்லாமல் கேட்க, “சுகு சும்மா இருங்க. அவ போகட்டும். அவ இங்கிருந்தால் சந்தோசமா இருக்க மாட்டா” அதிவதினி சினமுடன் அவரிடம் பேசினார்.
உங்க வீட்ல ரெண்டு நாள் இருந்தாலும் சந்தோசமா தான் இருந்தேன். நீங்க வொரி பண்ணாதீங்க. எல்லாரையும் பார்த்துக்கோங்க. ஆன்ட்டி சொன்னது சரி தான். எனக்கான சந்தோசம் என்னோட குடும்பம் வாழ்ந்த வீடு தான். அது போதும்..
ஆத்விக்கிற்கு இருவரையும் தனியே விட மனமில்லாமல் துருவினியை பார்த்தான்.
“வினு” அவன் அவள் கையை பிடிக்க, “புரியுது அத்து. என்னை போல தான் உங்களுக்கு ஆரவ், சுவா உங்களுக்கு முக்கியம்ன்னு தெரியும். நானும் உங்களுக்காக காத்திருப்பேன்” அவள் சொல்ல, இருவரும் அணைத்துக் கொண்டனர்.
“ஆது, நீ இரு” ஆரவ் சொல்ல, “இல்ல நானும் வருவேன்” என்று கொஞ்சமும் தயங்காது சுவேராவை ஆத்விக் தூக்கினான்.
“ஆரவ் கிளம்பலாம்” ஆத்விக் அவன் அத்தை குடும்பத்தை பாராதது போல சொல்ல, அதிவதினிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
“ஆது, நீயாவது இருடா. வந்து ஒரு மாசம் கூட ஆகலை” அதிவதினி சொல்ல, சாரி அத்தை அவரை திரும்பி கூட பாராது ஆத்விக் கூறினான்.
“சரி, போ” அதிவதினி கண்ணீரை துடைத்துக் கொண்டே சொல்ல, நின்று அவரை பார்த்தான் ஆத்விக்.
“என்ன? போக சொல்றேன்னு பாக்குறியா? போ..எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணிடு” அதிவதினி சொல்ல, “வது” சுகுமாரும் “அம்மா” கவினும் அதிர்ந்து அழைத்தனர்.
உனக்கு தேவை அம்மா இல்லைடா. உனக்கு சாப்பிட உணவும் இருக்க இருப்பிடமும் போதும். நீ இருக்க வீடிருக்கு. உணவுக்கு..நம்ம பக்கத்து வீட்டு மாரியோட அம்மா வீட்டு வேலையெல்லாம் நல்லா பார்ப்பாங்க துணைக்கு வச்சுக்கோ..
கவின் கண்ணீருடன் அதிவதினியை அணைக்க, அவனை தள்ளி விட்டு.. “இத்தனை நாளில் ஒரு நாளாவது இப்படி அணைச்சிருப்பியாடா. பாசமே விட்டு போச்சுடா”.
“அம்மா” கவின் அழ, எதுக்கு சார் நீங்க அழணும்? எப்போதும் போல உங்க டியூட்டியை பார்க்க போங்க. வாங்க.. சாப்பிடுங்க..தூங்குங்க போதும். இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்?
“அத்தை” ஆத்விக் அழைக்க, “சும்மா இரு ஆது” அவனிடம் சத்தமிட்ட அதிவதினி, “நல்ல வேலை கட்டாயப்படுத்தி சுவேராவை இவனுக்கு கட்டி வச்சிருந்தால் அவளோட நிலை என்னவாகி இருக்கும்?” ஆரவ்வை பார்த்து, அந்த பையன் மாலஜ் கூட நல்ல பையன் தான். முதல்ல பார்க்க திமிறா தான் பேசினான். ஆனால் நல்ல பையன்..
“மாலஜ்” ஆரவ் கேட்க, ஆமாப்பா நாங்க பெத்த பையன் அவன் தந்தையிடம் ஒரு நாள் கூட சாப்பிட்டீங்களா? நியூஸ் பார்ப்போம் வாங்க. எதுவும் பேசியதில்லை.
எங்க பையன் எங்களுடன் நன்றாக பேசியே பத்து வருசமாச்சு. போலீஸ் டிரைனிங் போனான். செலக்ட் ஆனான். நம்ம தமிழ்நாடுக்குள்ள ஐந்து இடம் மாற்றலாகி வேலை செய்து இப்பொழுது தான் வந்திருக்கான். அப்பொழுது கூட அவனுக்கு எங்களுடன் செலவழிக்க நேரமில்லை. ஆனால் ஒரு நாள் பார்த்த அந்த பையன் மாலஜ் தினமும் இவருக்கு கால் செய்து பேசுறான்.
கவின் தலைகவிழ்ந்து நிற்க, சுவேரா அதிவதினியை தடுக்கவும் முடியாமல் கவின் நிலையை காணவும் முடியாமல் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பத்து வருசத்துக்கு முன்னாடி என் மடியில் தலை வைத்து படுத்தவன். முழுவதும் எங்களுடனே நேரம் செலவழித்தவனுக்கு அவன் வேலை மட்டும் தான் முக்கியம். அவன் அதையே கட்டிக்கிட்டு அழட்டும்..
“வது” சுகுமார் மகன் அழுவதை காண முடியாது தன் மனைவி கையை பிடித்து அழுத்த, “விடுங்க நான் என்ன அவனை வேலை பார்க்க வேண்டாம்ன்னா சொல்றேன். பெத்தவங்களுடனும் அவன் நேரம் செலவழிக்கணும்ல்ல? நமக்கு அவனை விட்டால் வேற யார் இருக்கா? அவனுக்காக தான வாழவே செய்கிறோம்” அவர் ஆதங்கத்தை கொட்ட, “சாரிம்மா நான் இனி உங்களுடன் நேரம் செலவழிப்பேன். நீங்களும் போகாதீங்க” கவின் சொல்ல, “உன்னோட பேச்சை நான் நம்பமாட்டேன்” அதிவதினி முகத்தை திருப்பினார்.
கண்ணை துடைத்து, “அப்பா அம்மாகிட்ட சொல்லுங்க..ப்ளீஸ்” கெஞ்சலாக அவன் தந்தையை பார்க்க, “அவர் கிட்ட என்னடா கேக்குற? நீ உன் வேலையை பார்க்க போறேன்னு போயிட்ட. நீ படித்த பள்ளி வழியே எங்காவது போனால் உன் நினைவில் அங்கேயே இருந்துடுவார். நான் தேடிச் சென்று தான் அவரை அழைச்சிட்டு வருவேன்” அதிவதினி அழுது விட, எல்லாரும் பெரியவர்களின் நிலையை எண்ணி வருந்தினர்.
“சாரிப்பா” கவின் சுகுமாரை அணைக்க, அவர் கண்ணீர் அவன் மீது விழ, நான் வேணும்ன்னா என்னோட வேலையை ரிசைன் பண்ணிடுறேன் கவின் தன் தாய்யை பார்த்தான்.
“வாங்க. நமக்கு நேரமாகுது. ஆது டிக்கெட் புக் பண்ணிடு” அவர் அங்கிருந்து தன் கணவர் கையை இழுத்து செல்ல, கவின் அழைத்து அதிவதினி நிற்கவில்லை. அவன் தந்தை அவனை கண்ணீருடன் பார்த்துக் கொண்டே சென்றார்.
“ஆது” கவின் ஆத்விக்கை அழைக்க, “ஆரவ் வா. இப்ப ரெஸ்ட் எடுத்தால் தான். காலை நேரத்துக்கே போக முடியும்” என்று ஆத்விக் நகர, அவனை மறித்து நின்றான் கவின்.
“வழிய விடுடா” ஆத்விக் சினமுடன் சொல்ல, “முடியாது” என்று சுவேராவை பார்த்தான் கவின்.
“ரா, நீ போக வேண்டாம்” கவின் சொல்ல, “அதை சொல்ல அவளுக்கு நீ யாரு?” ஆத்விக் சீற்றமுடன் சத்தமிட்டான்.
“ஏன்னா, நான் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். எனக்கு ராவை பிடிச்சிருக்கு” கத்தினான் கவின்.
“பிடிச்சிருக்கா? என்ன பிடிச்சிருக்கு? அவ டார்ச்சர். அவள் தவறானவள். எல்லா பசங்களிடமும் நெருக்கமா பேசுவா. அவளுக்கு கோபம் அதிகமாக வரும்” ஆரவ் சொல்ல, அய்யோ..இல்லை..நிறுத்துறீயா? தலையை பிடித்து கவின் கத்தினான்.
எனக்கு ரா எப்போதும் பக்கத்துல்ல இருக்கணும். வாழ்க்கை முழுவதும் அவளோட வாய்ச்சண்டை போட்டுக் கொண்டே இருக்கணும். அப்புறம் என்று முகத்தை தாழ்த்தி வைத்திருந்த கவின் நிமிர்ந்து எல்லாரையும் பார்த்து விட்டு,
சுவேரா முன் மண்டியிட்டு..ஐ அம் சாரி ரா. உன்னை நிறைய முறை கஷ்டப்படுத்தி இருக்கேன். தற்பொழுது தான் அதனை உணர ஆரம்பித்து இருந்தேன். நீ இங்கிருந்து போயிட்டா..கவின் நிறுத்தி அவளது கையை பிடித்து நீ போயிட்டா என்னால எதையும் சரியாக செய்ய முடியாது.
முதல்ல உன்னை பார்க்கும் போது பெரிதாக தாக்கமில்லை. ஆனால் போக போக எனக்கே உன்னை பார்க்கணும் போல இருந்தது. இன்றே இந்த ஹாஸ்பிட்டலில் அதிக நேரம் இருந்திருக்கேன். கேஷ் விசாரிக்க வந்தாலும் உன்னை பார்க்கலாம் என்ற எண்ணமும் இருந்தது. என்னால சொல்ல முடியல.
உன்னை போல நான் யாரிடமும் சகஜமாக பேசியதில்லை. பெண்களிடம் விசாரிப்பு கூட அவர்களை சந்தேக கண்ணோடு பார்க்கும் புத்தி உன்னிடமும் வந்திருச்சி. அதான்..உன்னை உணர நாளாகிடுச்சி. எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு ரா.
“அம்மாவுக்காக இல்லை எனக்காக. என்னை நீ கல்யாணம் பண்ணிப்பாயா?” நான் முன் போல இருக்க மாட்டேன். இதுவரை அம்மா, அப்பாவை கஷ்டப்படுத்தியது போல இனி அவங்களையும் உன்னையும் கஷ்டப்படுத்த மாட்டேன்.
இரவு பத்து மணிக்குள் வீட்டிற்கு வந்திடுறேன். உன்னிடம் கோபப்படாமல் பேசுறேன். உன் மீது எனக்கான நம்பிக்கை என்றும் போகாது அவன் சொல்லி அவள் கையை அவன் நெஞ்சில் வைத்து, என்னோட மூச்சிருக்கும் வரை உன்னை நல்லா பார்த்துப்பேன். ப்ளீஸ் போகாத. என்னை கல்யாணம் பண்ணிக்கோ பேசி முடித்தான்.
சுவேரா அழுது கொண்டே அவன் கையை இழுத்து கண்ணில் வைக்க, அவன் கண்ணீருடன்..”ரா ப்ளீஸ் பதில் சொல்லு?” அவன் கேட்க, “சார் அதான் உங்க கையை பிடிச்சிட்டாளே! இதுக்கு மேல என்ன பதில் வேணும்?” சித்திரன் கேலியுடன், வேற எதுவும் இப்பொழுது கிடைக்காது. புரட்டி எடுத்திருவா..
சுவேரா சித்திரனை பார்த்து விட்டு, கண்ணாலே கவினை சமிஞ்சையால் அழைத்தாள். அவன் அவளருகே அமர, கவின் கன்னத்தில் முத்தமிட்டு, அவன் கிடக்கான். நான் முத்தம் கொடுப்பேன் என்று கவின் கன்னத்தில் அச்சாரத்தை பதிக்க, ஆரவ் இருவர் முன்னும் வந்து கவினிடம், “உறுதியா தான சொல்ற? கல்யாணத்தின் பின் நீ தான் என்ன பிரச்சனை என்றாலும் சமாளிக்கணும். வார்த்தைகளை தவற விடக் கூடாது. அவளை விட்டு போகும் எண்ணம் இருக்கவே கூடாது..எங்க குடும்பத்தில் என்ன நடந்தாலும் கல்யாணம் ஒருவருடன் மட்டும் தான்”.
“அப்ப நாங்களெல்லாம்?” துருவினி சினமுடன் கேட்க, நான் அப்படி சொல்லவில்லை..மறுமணம் செய்றாங்கல்ல? அதை சொன்னேன் ஆரவ் விளக்க, ம்ம்..அமைதியானாள் துருவினி.
“ரா, நீ அம்மா, அப்பாவை என்னோட பார்க்க வர்றீயா?” கவின் கேட்க, என்னால நடக்க முடியாது..
அதான் நான் இருக்கேன்ல்ல ரா..கவின் சொல்ல, ஹ..அதியா கேட்க, சுவேரா தூக்க சொல்லி கவினிடம் கையை நீட்ட, அவள் கையை நகர்த்தி விட்டு புன்னகையுடன் அவளை தூக்கி வெளியே சென்றான்.
“ஹே, அவள தூக்கிட்டு எங்கடா போற?” விண்ணரசி அண்ணன் சத்தமிட, நாங்க கல்யாணத்துக்கு சம்மதம் கேட்கப் போறோம் என்று கவின் சொல்லிக் கொண்டே, “தேங்க்ஸ் ப்ரோ” என்று சொல்லி சென்றான்.
“கவின்” அழைத்த ஆத்விக் கார் சாவியை அவனிடம் தூக்கி போட, கவின் அதை பிடித்து புன்னகையுடன் சுவேராவை காரில் ஏற்றி அவன் பெற்றோரை சமாதானப்படுத்த சென்றான்.
சுவேரா அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டே வந்தாள்.
“என்ன ரா, எதுவும் கேட்கணுமா?” அவன் அவளை பார்க்க, “இல்லை” என்று தலையசைத்து அமைதியாக இருந்தாள்.
காரை நிறுத்தி கவின் சுவேராவிடம், “என்ன கேட்கணுமோ கேளு?”
அவள் “இல்லை” என்று மீண்டும் தலையசைக்க, பேசிட்டே இருப்ப. இப்ப அமைதியா இருக்க? எனக்கு என் மீது நம்பிக்கை இன்னும் வரலையா? நான் உன்னை பாதியிலே விட்ருவேன்னு எண்ணுகிறாயா?
“எனக்கு சோர்வா இருக்கு” என்று அவள் காலை பார்த்தாள்.
அவளை நெருங்கி அவன் தோளோடு அவளை அணைத்து பிடித்தவாறு, என்னால எதையும் வெளிகாட்ட முடியல. அப்படியே பழகிட்டேன்..
ம்ம்..
என்ன ம்ம்? ஏதாவது பேசு..
என்ன பேசணும்? அவள் கேட்க, ரா இது நீயே இல்லை. நான் மனசார தான் உன்னை விரும்புகிறேன். நமக்குள் வேலை விசயத்தை தவிர இனி எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது.
“அம்மா, அப்பாவுடன் கொஞ்ச நேரம் கூட பேச மாட்டீங்களா?”
எனக்கு வேலையில ஹை போஸ்ட்டிங் போகணும். ஆதுவோட அம்மா என்னை எப்போதும் டவுனா தான் பார்ப்பாங்க. அதிலிருந்து எனக்குள் ஒரு உத்வேகம். அவங்கள விட முன்னாடி வரணும். அவங்க உதவின்னு என்னிடம் வரணும் நினைச்சு தான் வேலையிலே குறியாக இருந்து விட்டேன்..
அவங்ககிட்ட எதுக்கு நீங்க நிரூபிக்கணும்?
அது ரா..அப்ப எனக்கு அதியை ரொம்ப பிடிக்கும். காதலான்னு கேட்டால் சொல்லத் தெரியல. இருக்கும்ன்னு தான் நினைச்சேன். திருமணத்தை கூட அதான் தடுத்துக் கொண்டே இருந்தேன்.
அவளோட இன்னசென்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறுவயதிலிருந்து அவளை நன்றாக தெரியும். மாமா பொண்ணு வேற..சொல்லவா வேண்டும்?
ஆரியன் அண்ணா வீட்டில் வைத்து அதுவும் அவள் அவரை காதலுடன் பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது. காதல் தான்னு புரிந்தது. அழ கூட செய்தேன். அவ இப்ப அவரோட சந்தோசமா இருக்கும் போது அந்த காதல் என்ற எல்லை உடைந்து உறவு என்று எனக்கு நானே சொல்லி தேற்றிக் கொண்டேன். கடந்த காதலை விட்டு வெளியே வந்தும் விட்டேன். அதனால் இனி என் அத்தை என்னை என்ன எண்ணினாலும் பரவாயில்லை.
இப்ப நான் நேரம் கழித்து வரக் காரணம் முக்கியமான ஒரு கேஷ் மட்டும் தான். கொலைகாரனை என்ன செய்தும் சிறிய ஆதாரம் கூட சிக்க மாட்டேங்குது. ஏதாவது தெரிய வந்தாலும் ஒன்றுமில்லாமல் போகுது. அந்த டென்சன். மறைமுக விசாரிப்பு வேற நடத்தினோமா? டி.ஐ.ஜி நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு. இன்னும் சில விசயத்தை அவரிடம் கூட மறைத்து தான் இருக்கேன். அதை சொல்லணும்.
நான் இந்த டென்சன்ல்ல இருந்தா நீ வேற வெறுப்பேத்துன்ன அதான் போயிட்டேன். நேற்றிரவு நான் வீட்டிற்கு போகவேயில்லை. அதான் அம்மா ரொம்ப கோபமாகிட்டாங்க. ஆனால் என்னால என்னோட பெற்றோரும் கஷ்டப்பட்டதை எண்ணும் போது தான் ரொம்ப வேதனையா இருக்கு புலம்பினான்.
சுவேரா ஆறுதலாக அவன் கையை பிடித்தாள்.
கவின் உங்களுக்கு என்னை பிடிக்கும் தான?
பிடிக்காமல் எல்லாத்தையும் உன்னிடம் பகிர்வேனா? கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான். கண்ணீருடன் சுவேரா கவினை பார்க்க, அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கவின்” அவள் சொல்ல, ம்ம்..அம்மா, அப்பாவிடம் பேசலாம் என்று காரை எடுத்து ஆரியன் வீட்டில் காரை நிறுத்தி அவன் அம்மாவை அழைத்தான். ஆரியனும் மற்றவர்களும் அவன் செல்லும் முன்னே சென்றிருந்தனர்.
சுவேராவை தூக்க அவன் எத்தனிக்க, பிடிச்சுக்கோங்க. நான் நடக்கிறேன் என்று அவன் தோளில் கை போட்டு நடந்து வீட்டிற்குள் வந்தாள் சுவேரா. அதிவதினி அருகே சுவேராவை சோபாவில் அமர வைத்து அவன் அம்மா, அப்பா முன் மண்டியிட்டான்.
“எழுந்திருடா. போலீஸ்காரன் இப்படியெல்லாம் மண்டியிடாத” அவன் தந்தை சினமுடன் கூறினார்.
மன்னிப்பு வேண்டினான் கவின். அதிவதினி அமைதியாக இருக்க, அவன் தந்தை கவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.
சரிம்மா, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டாம். நானும் ராவும் மேரேஜ் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படுறோம். செஞ்சு வைப்பீங்களா?
“சுவா, இவனை நம்பாத. இப்படி பேசியே ஏமாத்திருவான்” அதிவதினி சொல்ல, சுவேரா அவரை பார்த்து புன்னகைத்து, ஆன்ட்டி..நான் இவரை முழுசா நம்புகிறேன் என்று கவின் கையை கோர்த்தாள்.
அத்தை, சும்மா இருங்க. மாமா சின்னப்பையன் இல்லை. அவரிடம் கோபப்பட்டுக்கிட்டு இருக்கீங்க? அதியா அவர் அருகே வந்து அமர்ந்தாள்.
ஓய், எழுந்திரு, என்னோட ஆன்ட்டிக்கிட்ட நீ எதுக்கு உட்காருற? சுவேரா அவள் சண்டையை தொடங்க, உனக்கு ஆன்ட்டி. இவங்க என்னோட அத்தை என்று அதிவதினி கன்னத்தில் வேண்டுமென்றே அதியா முத்தமிட்டாள்.
“சொல்லிக்கிட்டே இருக்கேன்” சோபாவில் இருந்த பஞ்சணையை தூக்கி சுவேரா அதியா மீது விட்டெறிய, கவின் மீது பட்டது.
சுவா, எங்க திருமணத்தன்று காலையில நாம இப்படி தான தூக்கி போட்டு கவின் மாமா மேல பட்டது. அவரு கூட நம்மை திட்டிட்டு போனாருல்ல? அதியா கேட்க, “பேச்ச மாத்ததடி. எழுந்திரு” சுவேரா சொல்ல, “முடியாது” என்றாள் அதியா.
“மாமா” சுவேரா கத்த, அதிம்மா..வாங்க..அவன் அழைக்க, ஆரு நான் அத்தைக்கு முத்தம் கொடுத்தால் இவளுக்கு என்னவாம்? அதியா கொஞ்சலாக கேட்க, அவன் சுவேராவை பார்த்தான்.
மாமா, அவங்க இனி எனக்கு சொந்தம். இவ முத்தமெல்லாம் கொடுக்கக் கூடாது..
ஆரியன் விழித்துக் கொண்டு அனைவரையும் பார்க்க, எல்லாரும் சிரித்தனர்.
அம்மா, மேரேஜ் கவின் இழுக்க, பண்ணலாம்.. அண்ணா நீங்க என்ன சொல்றீங்க? உத்தமசீலனிடம் கேட்டுக் கொண்டே பதிலுக்காக கணவரையும் பார்த்தார் அதிவதினி.
“பேஸ்ஸா பண்ண்ணிடலாம்” உத்தமசீலன் சொல்ல, “எனக்கு டபுல் ஓ.கே வது” சுகுமார் சொல்ல, எனக்கு ஒரு கண்டிசன்..மேரேஜூக்கு அப்புறம் நான் வேலைக்கு செல்வேன் சுவேரா கூறினாள். கவின் தோளை குலுக்கினான். உன் விருப்பம்மா அதிவதினியும் சுகுமாரும் ஒன்று போல் சொல்லி சிரித்தனர்.
அந்த காலண்டரை எடுங்க பார்க்கலாம்..என்று உத்தமசீலன் சொல்ல, ஆரவ் அதை எடுத்து கொடுத்தான்.
ஒரு வாரத்துல்ல என்கேஜ் பண்ணிக்கலாம். ஒரு மாதத்தின் பின் திருமணம் வச்சுக்கலாம் என்று திருமணத் தேதியை அறிவிக்க, சுவாவுக்கு அதுக்குள்ள கால் சரியாகிடுமா? துருவினி கேட்டாள்.
ம்ம்..சரியாகிடும் சுவேரா சொல்ல, நீ வெட்கப்படவே மாட்டீயா? அதியா கேட்க, எதுக்கு வெட்கப்படணும்? எனக்கு அதெல்லாம் வராது..
வராதா..துருவினி இழுத்துக் கொண்டே சுவேரா கவினை பார்க்க, போடி என்று மறந்து சுவேரா எழுந்தாள்.
ஆத்விக் அவளை பிடித்து அமர வைத்தான்.
“இதுக்கு பேரு தான் வெட்கம்” அதியா சொல்ல, சுவேரா அவளை முறைக்க, துருவினி லாவண்யாவிற்கும் அவள் நண்பர்களிடமும் விசயத்தை சொல்ல, எல்லாரும் இன்பமானார்கள்.
விண்ணரசியின் அண்ணன் அவளிடம், சாய்யை நீ மேரேஜ் பண்ணிக்கிறீயா? தெளிவா யோசிச்சு எனக்கு பதில் சொல்லு?
அண்ணா..
என்ன? நான் மேலோட்டமாக அவரிடமும் கேட்டு விட்டேன் அவன் சொல்ல, சும்மா இருக்க மாட்டாயா? விண்ணரசி அவள் அண்ணனை திட்டினாள்.
சாய் பற்றி உனக்கு நன்றாக தெரியும். உனக்கு பொருத்தமா இருப்பான்..
அண்ணா, அவருக்கு குடும்பம் இல்லை. நம்ம வீட்ல என்ன பேசுவாங்க. அவரையும் கஷ்டப்படுத்தணும்ன்னு நினைக்கிறியா? சினமுடன் கேட்டாள்.
குடும்பம் இதுவரை இல்லை. இப்ப தான் அமைந்து விட்டதுல்ல..மனோகர் சார் ரொம்ப நல்லவர். திறமையானவர்..யாருக்கும் அட்செஜ்ட் செய்ய மாட்டார். அதான் அவரே கம்பெனியை விற்றுருக்கார். அந்த பொண்ணும் அந்தம்மாவும் கூட பெருசா பிரச்சனையில்லை..
அண்ணா, என்ன இருந்தாலும் அவரோட சொந்த குடும்பம் இல்லைல்ல?
அதை பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதை மனோகர் சாரும் அவர் மனைவியும் நம்ம வீட்ல பேசிப்பாங்க.
வாட்? அவங்க ஒத்துக்கிட்டாங்களா? விண்ணரசி அதிர, விண்ணா..உனக்கு ஒன்று சொல்லவா? சாய்க்கு உன்னை ரொம்ப பிடிக்கும். முன்பு அவனிடம் பார்த்திருக்கேன். ஆனால் காதல் இருக்கும்ன்னு நான் நினைக்கலை..
என்னது காதலா?
ஆமா, உன் மீது அவருக்கு காதல் இருக்கு. அதை விட நீ யோசிப்பது போல நம் குடும்பத்தை பற்றி தெரிந்து தான் விலகியே இருக்கார்.
அண்ணா..அவர் என்ன சொன்னார்?
அவர் சொல்வது இருக்கட்டும். நீ சொல்லு? நல்ல பழக்கம் தான அவருடன்?