வல்லவன் 35

ஏர்ப்போர்ட்டில் ஆத்விக் தலைகவிழ்ந்து கவலையுடன் அமர்ந்திருந்தான். அருகே அமர்ந்திருந்த குட்டிப் பொண்ணு அவனை பார்த்து, அங்கிள்..சாக்லெட் நீட்டியது. பாப்பா தலையை தடவி, வேண்டாம்மா என்றான்.

“அங்கிள், சாக்லெட் சாப்பிட்டால் அழுகையே வராது” அந்த பொண்ணு சொல்ல, ஆரவ்வும் கவினும் அவன் முன் வந்து சீற்றமுடன் அவனை முறைத்தனர்.

அவர்களை கண்டு எழுந்த ஆத்விக், “நீங்க எப்படி இங்க?” சுற்றும் முற்றும் பார்த்தான்.

“யாரை தேடுறீங்க சார்?” ஆரவ் ஆத்விக்கிடம் கேட்க, “இல்லை” ஆத்விக் பேசாமல் தலையை அசைத்தான்.

ஆத்விக் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ஆரவ்.

“அங்க எல்லாரும் நீ வீட்டுக்கு போயிருப்பன்னு நினைச்சிட்டு இருக்காங்க. நீயா முடிவெடுத்துட்டு வந்துட்ட? வினுவை பற்றி யோசிக்கவேயில்லைல்ல?” சினமுடன் கேட்டான்.

“இவனிடம் என்ன பேச்சு? பல்லை கடித்து கவின் ஆத்விக் வயிற்றில் குத்தி, ஏற்கனவே நீ செஞ்ச காரியத்துல்ல தான் வினு பாய்சன் வரை போயிட்டா. இதுல்ல மொத்தமா விட்டு போக முடிவெடுத்துட்ட. அம்மா அப்பா எப்படி பதறீட்டாங்க தெரியுமா?” அவன் குத்த வந்து முடியாமல் கவின் ஆத்விக்கை அணைத்தான்.

இருவரையும் தள்ளிய ஆரவ், நான் வினுவை லவ் பண்றேன்னு உன்னிடம் என்று சொன்னேன்? அவளை பிடிச்சிருக்கு. கல்யாணம் செய்தால் இவளை போல ஒருத்தியை செய்யணும்ன்னு சொன்னேன். என் குடும்பத்தின் பின் எனக்கு எல்லாமே நீ தானடா. இப்படி சொல்லாமல் கிளம்பீட்ட. மாம்ஸ் செம்ம கோபமா இருக்காரு உன் மேல..

“இல்லடா, அதி, சீலன் மாமா தான் போக சொன்னாங்க” ஆத்விக் பாவம் போல முகத்தை வைக்க, “போட்டேன்னா தெரியும்” என்று உத்தமசீலன் அவனை அடிக்க வந்து கையை இறக்கினார். நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து போக சொன்னேன். உங்களை பார்த்தால் துரு கஷ்டப்படுவாளோன்னு பயந்து தான் போக சொன்னேன். ஏற்கனவே எங்களது அறியாமையால் ஒரு உயிர் போனது. இது போல என்னோட பொண்ணை நான் இழக்க முடியாது என்று ஆத்விக்கை அணைத்தார்.

“அப்பா” சினமுடன் ஆரியன் குரலில் அவர் விலகினார். அவன் ஆத்விக் அருகே வரும் முன் ஆரியனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான் ஆத்விக்.

“என்னை விடுடா. சொல்லாமல் கிளம்பீட்ட? நான் எப்படி துருவை சமாளிப்பேன்? அவளுக்கு என்ன பதில் சொல்வேன்?” சினமுடன் ஆரியன் ஆத்விக்கை அடித்தான்.

ஆத்விக் கண்ணீருடன், “சாரி மாமா..எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. வினுவிடம் பேச முடியாத அளவிற்கு அவளை நான் காயப்படுத்தி விட்டேன்” மீண்டும் ஆரியனை அணைத்து அழுதான்.

அதியாவுடன் துருவினி கோபமாக வந்தாள். அவளை பார்த்த ஆரவ்…ஒருவர் வைத்திருந்த ஸ்ட்டிக்கை பிடுங்கி துருவினியிடம் வந்து அவளிடம் கொடுத்தான்.

“வினு, இதாலே அவனை சாத்து” ஆரவ் கையில் கொடுக்கவும், அதை இறுக பிடித்து ஆரியனிடமிருந்து ஆத்விக்கை பிரித்து தள்ளி விட்டு, துருவினி ஆத்விக்கை அடித்தாள்.

வினு, சாரி..சாரி..அவன் கண்ணீருடன் நகராமல் நிற்க, “சொல்லுடா யாரு அவ? சொல்லு?” துருவினி கேட்க, “வாட்?” ஆரவ் கேட்டான்.

“அது நம்ம டின்ட்டு” ஆரவ்விடம் பாவமாக ஆத்விக் சொல்ல, “புரியிற மாதிரி பேசுங்கடா” ஆரவ்வை அடிக்க ஓங்கினாள் துருவினி.

சட்டென அவளை இழுத்து அணைத்த ஆத்விக், சாரி வினு சாரி…போதும். நான் பேசியதெல்லாம் பொய் தான். உன்னை என்னிடமிருந்து விலக்கவே இப்படி சிரமப்பட்டு பேசினேன். சுவா மாதிரி தான் நான் உன்னிடம் காட்டிய பொண்ணு. நம்ம ஆரவ்விற்கு சொந்தம். தங்கை முறை தான். நல்லா பழகுவாள். அதான்..

“அதுக்கு? எப்படியெல்லாம் பேசிட்டீங்க? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? இப்ப விட்டு போகப் போறீங்கல்ல?” துருவினி அழுதாள்.

“நீயும் தான் பாய்சன் சாப்பிட்ட?” ஆத்விக் அவளை பார்க்க, “நான் என்ன செய்றது? என்னால ஏத்துக்க முடியல..அதான்” கண்கலங்கினாள்.

சாரி..சாரி..வினு..என்று அவன் கழுத்தில் இருந்து டாலரை காட்டினான். அவளிடம் விலக முடிவெடுத்ததும் வினு செய்து போட்ட இலை மோதிரத்தை செயினில் போட்டுக் கொண்டு மறைத்திருந்தான். அதை வெளியே எடுத்து அவன் காட்ட, துருவினி அவள் விரலை பார்த்தாள். அவன் போட்டது இல்லை.

“அத்து, லீஃப் ரிங்கை காணும்” துருவினி பதற, அவளை அணைத்து மன்னிப்பு கேட்டு ஆத்விக் அவனது சட்டையிலிருந்து அவளுக்கு அவன் போட்டு விட்டதை எடுத்தான்.

இது..அத்து..அவள் குழப்பமான மனதுடன் அதனை பார்த்தாள்.

“இதை நேற்று உன்னை காயப்படுத்தும் போதே எடுத்துட்டேன்” என்று சொல்லிக் கொண்டே, “போடலாமா? இன்னும் கோபமா இருக்கீங்களா?” ஆத்விக் கேட்க, “எல்லாத்தையும் பிளான் செய்து செஞ்சிருக்கீங்கல்ல? உங்களுக்கு உங்க நண்பன் தான முக்கியம்?” மேலும் அழுதாள்.

எனக்கு ஆரவ், சுவாவும் முக்கியம் தான். அதுக்காக உன்னையும் விட மாட்டேன்..

“ஓ..அப்படின்னா நான் எப்படி போனாலும் பரவாயில்லை” அதியா கேட்க, ஆத்விக் புன்னகையுடன் அவளை பார்த்து, “நான் தான் அன்றே சொன்னேன்ல்ல. உன்னை பற்றி இனி நான் கவலைப்பட மாட்டேன். மாமா பார்த்துப்பார்” என்று ஆரியனை பார்க்க, அவன் தீவிரமாக ஆத்விக்கை முறைத்தான்.

ஆத்விக் எல்லாரையும் கண்டு கொண்டே கடைசியாக உத்தமசீலனிடம் வந்தான்.

“மாமா, உங்களுக்கு தெரியாம நாங்க என்கேஜ் பண்ணிக்கிட்டோம்” என்று கழுத்தில் மாட்டி இருந்ததை எடுத்தான். எல்லாரும் துருவினியை பார்த்தனர்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் திரும்பிக் கொண்டாள்.

“பாருடா, செய்றதை செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத பிள்ள மாதிரி நிக்கிறா” அதியா சொல்ல, “அப்படி நாங்க எதுவும் செய்யலையே!” ஆத்விக் துருவினி அருகே அவளுக்கு ஆதரவாக நின்றான்.

அதியா அவனை முறைத்து, கல்யாணத்துக்கு முதல் நாள் என்னையும் ஆருவையும் பிரிச்சு வச்சீங்கல்ல. நான் பாரு ஒரு வாரம் முன்னே செய்றேன் அதியா சொல்ல, ஹலோ..என்ன கல்யாணம் வரை பேசுற அதி? கவின் கேட்டான்.

மாமா, நீ சும்மா இரு. உனக்கு இதெல்லாம் தெரியாது என்ற அதியா, “இருடா. மாமா, நீங்க சொல்லுங்க அத்துவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” உத்தமசீலனிடம் அதியா கேட்க, அவர் பேசாமலே நின்றார்.

ஆத்விக் அவரிடம் வந்து, உங்களுக்கு கோபம் போகலைன்னா அடிச்சுக்கோங்க மாமா. பேசாமல் மட்டும் இருக்காதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு.

ம்ம்..தண்டனை கொடுக்கணும். ஆனால் அதுக்கு எல்லாரும் ஒத்துழைக்கணுமே! அவர் சொல்ல, அங்கிள் என்னன்னு சொல்லுங்க. இவன் மட்டுமல்ல யார் ஒத்துழைக்கவில்லைன்னாலும் நான் அவங்களை சமாதானப்படுத்துகிறேன் ஆரவ் துருவினியை பார்த்தான்.

“அப்பா, வேண்டாம்” துருவினி உத்தமசீலனிடம் வந்து, “என் மேலும் தவறிருக்கு. எனக்கு சேர்த்து தண்டனை கொடுங்க” அவள் சொல்ல, “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். மாமா என்ன சொன்னாலும் நான் செய்வேன் வினு. நீ அமைதியா இரு” அவள் கையை பிடித்தான்.

இருவரையும் உத்தமசீலன் பார்க்க, மற்றவர்கள் கலவரத்துடன் உத்தமசீலனை பார்த்தனர்.

உத்தமசீலன் ஆத்விக் கையிலிருந்த மோதிரத்தை பிடுங்கி அதை பார்த்து விட்டு தன் மகளை கண்டார். அவள் முகத்தில் இருந்த பயமும், அவர் செயலில் அவள் தடுக்காமல் மரியாதையுடனும் மோதிரத்தை ஏக்கமுடனும் பார்க்க, அவர் நெகிழ்வுடன்..துருவினி கையில் இரண்டையும் கொடுத்து மாப்பிள்ளைக்கு போட்டு விடும்மா. அவரையும் போட சொல்லு என்றார்.

“அப்பா” அவரை அவள் அணைக்க, அவளை நகர்த்தி ஆத்விக்கை கவனித்தார். அவன் முகம் வாடி இருக்க, மாப்பிள்ள என்னோட பொண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் சந்தோசம். திருமண தேதியை குறிக்கலாமா? அவர் மகிழ்வுடன் புன்னகையுடன் கேட்க, ஆத்விக் பதில் கூறாமல் ஆரவ், கவினை பார்த்தான்.

“எங்களை எதுக்குடா பாக்குற?” ஆரவ் கேட்க, சுவா, ஆரவ் மேரேஜ் முடியவும் நான் வினுவை கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா.

டேய், என்ன விளையாடுறீயா? கவின் கேட்க, இல்லடா, நான் சொன்னது சொன்னது தான். சுவாவும் அதி போல தான். அவங்க வாழ்க்கை செட்டில் ஆனால் தான் நான் நிம்மதியாக குடும்ப வாழ்வில் நுழைய முடியும். ஏற்கனவே ஆதியை விட்டு போனது தான் எனக்காக இருப்பவர்களை என்னால் விட முடியாது. உனக்கு பெற்றோர் இருக்காங்க கவின்.

எனக்கு அப்பா இல்லைன்னாலும் பெயருக்காகவாது அம்மா இருக்காங்க. ஆனால் சுவா, ஆரவ்விற்கு என்னை விட்டால் யாருமில்லை. அவங்களுக்கு ஒரு குடும்பம் கிடைத்தால் தான் நான் நிம்மதியாக இருக்க முடியும். ஆதியை இழந்ததில் இருந்து நான் தவறு செய்ததாக தான் தெரியுது. அதை சரி செய்ய முடியாது. இப்ப எனக்காக இருக்கும் ஆரவ், சுவாவை விட்டு நான் எப்படி திருமணம் செய்வது?

ஏன்டா, நாங்கள் இல்லையா? ஆரியன் கேட்க, அப்படியில்லை மாமா. நீங்க பார்த்துப்பீங்க தான். ஆனாலும் எதையும் சாதாரணமாக என்னால விட முடியல. அவங்க கஷ்டப்படும் போது நான் குடும்பமாக நிற்பது நன்றாக இருக்காது ஆத்விக் சொல்ல, ஆரவ் அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

சாரிடா, நான் உன்னை ரொம்ப அடிச்சிட்டேன்ல்ல?

இல்லடா, நமக்குள்ள இல்லாத அடி, சண்டையா? ஜாலியா அடிச்சிப்போம். இப்ப நான் தான் கொஞ்சம் ஓவரா போயிட்டேன். உன்னையும் புரிஞ்சுக்கலை. வினுவையும் புரிஞ்சுக்கலை..

“உன் நிலையில் யார் இருந்தாலும் இப்படி தான் செய்திருப்பாங்க. நானாவது தெளிவாக உன்னிடம் பேசி இருக்கணும்” ஆரவ் ஆத்விக்கை இறுக்கி அணைத்தான்.

ஆத்விக் கண்ணீரை சுட்டி விட்டு, டேய்..நான் எங்கேயும் ஓடிப் போயிற மாட்டேன்டா. இப்படி இறுக்கின நானும் சாய் மாதிரி ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கணும்.

“சாய், ஹாஸ்பிட்டலில் இருக்கானா?” துருவினி கேட்க, இருவரும் விலகி துருவினியை பார்த்தனர்.

“ஆமா வினு” என்று கவின் நடந்ததை சொல்ல, அவள் அதிர்ந்து “இருவருக்கும் ஒன்றுமில்லையே!”

இல்ல. இப்ப இருவரும் ஓ. கே தான் என்றான் கவின்.

நாம அவங்கள பார்க்க போகலாமா? அவள் கேட்க, “துரு வெயிட் பண்ணு” என்ற உத்தமசீலன் கவின் அருகே வந்தார்.

“என்னப்பா செய்யலாம்ன்னு இருக்க? மாப்பிள்ள சொல்லீட்டார். சுவா, ஆரவ் மாப்பிள்ள திருமணம் முடியணும்ன்னு?”

நான் ஏற்கனவே சுவாவிடம் சொல்லீட்டேன்..

என்ன சொன்ன? உங்க அம்மா துணைக்கு அவ வேணும்ன்னா இல்லை உன் அம்மாவுக்கு அவளை பிடிச்சிருக்கான்னா?  ஆத்விக் சினமுடன் கேட்டான்.

ஆரவ் ஏதும் பேசாமல் இருந்தான்.

கேளுடா ஆரவ்? ஆத்விக் ஆரவ்வை பேச சொன்னான்.

இல்ல ஆது, திருமணம் வாழ்க்கை முழுவதும் உடன் இருப்பது. வராவிற்கு மட்டும் தான் இவர் மீது விருப்பம் இருக்கு. இவருக்கு இல்லை என்று தான் தெரியுது. இவர் சொன்னது போல இவர் அம்மாவிற்கு பிடிச்சிருக்குன்னு திருமணம் செய்து கொடுக்க முடியாது.

எங்க குடும்பத்துல்ல வழக்கம் ஒன்று இருக்கு. மனம் ஒத்துப் போனால் மட்டும் தான் திருமணம். அதற்காக பேமிலி டேட்டிங் கூட செய்திருக்கோம்..

பேமிலி டேட்டிங்கா? துருவினி கேட்க, ம்ம்..வாழ்க்கையில் நாம எதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம். சாதனையோ? தோல்வியோ? துணை அருகே இருக்கணும். எல்லாவற்றையும் பங்கெடுத்துக்கணும்.

அவங்க அம்மா, அப்பா எத்தனை நாள் உடனிருக்க முடியும்? அவங்களிடம் சொல்ல முடியாத விசயத்தை தைரியமாகவும் தெளிவாகவும் வாழ்க்கைத் துணையிடம் சொல்லணும் இல்லை வாழ்க்கை நரகமாகிடும். அப்படியொரு வாழ்க்கையை வராவிற்கு நான் அமைத்து தர முடியாது.

வினு, நான் எதுக்காக அவளை வரான்னு அழைக்கிறேன்னு தெரியுமா? அவள் எங்கள் குடும்பத்தின் வரம். எல்லாரும் அவரவர் வேலையில் பிஸியாக இருப்பாங்க. யாருக்கும் ஏதாவதுன்னு பள்ளிக்கும் சரி, கல்லூரி, ஏன் வொர்க்ல்ல கூட விடுப்பு எடுத்துட்டு அவங்கள கவனிச்சுப்பா..

கடைசி பொண்ணுன்னு எல்லாரும் செல்லம் கொடுத்து அவளை எந்த அளவிற்கு தாங்குகிறோமோ? அதே போல அவளும் பார்த்துப்பா பட் அவளுக்கு எதுவும் செய்யத் தெரியாது. உடனே ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிருவா? சொல்லிக் கொடுத்தால் எதையும் கத்துப்பா. அதிகமா பேசுவா. கோபம் அதிகமாகவே வரும். பிடித்தவர்களுடன் செல்லமாக அதிகமா சண்டை போடுவா. அதை பெரிதாக்காமல் அவளே வந்து பேசிடுவா..

நான் என்ன நினைக்கிறேன்னா, அவள் எங்க குடும்பத்தில் இருந்தது போல தனிமையை உணராமல் இருந்தால் போதும். ஆது அவளை தனியே விடாமல் நல்லா பார்த்துக்கிட்டான். தொலைவில் இருந்து பார்த்தாலும் என்னால் அவளை புரிந்து கொள்ள முடிந்தது. தனியா இருக்கிற மாதிரி உணர ஆரம்பிச்சிட்டா. அவளை எங்க குடும்பத்திலிருந்து மீட்டு அவங்கள போல பார்த்துக்கிற இடத்துல்ல தான நான் திருமணம் முடித்துக் கொடுக்க முடியும்?

கவின் வீட்ல எல்லாரும் ஓ.கே பட் அவருக்கு கொஞ்சமும் வரா மேல விருப்பமில்லை. இப்படிப்பட்டவர் அவளுக்கு வேண்டாம். அவள் மனசை மாத்தி அவளுக்கு நல்ல குடும்பமாகவும் மாப்பிள்ளையாகவும் முடிச்சுக்கிறேன்.

ஆது நீ எனக்காக வினுவை விட்டுக் கொடுக்க முன் வந்துட்ட. இந்த பாசம் போதும்டா. வினுவை திருமணம் செய்து உன் வாழ்க்கையை சந்தோசமா தொடங்குடா..

முடியாதுடா. வினு, நீ சொல்லு. உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா? இவனுக்கும் சுவாவிற்கு திருமணம் முடியும் வரை எனக்காக காத்திருப்பேல்ல? சத்தியமா சொல்றேன். இப்ப நடந்த தப்பு மறுபடியும் நடக்காது..

அத்து, நான் நம்புகிறேன். ஏற்கனவே சுவா என்னிடம் ஆரவ் சார் என்னை லவ் பண்ணலைன்னு சொல்லீட்டா..

என்ன சொல்ற? ஆரவ் கேட்க, ஆமா அன்று மதியம் நீங்க எல்லாரும் போன பின் லாவா, நான், சுவா பேசும் போது சொல்லிட்டா..

வாட்? லாவா முன்னா? வேற என்ன சொன்னா? ஆரவ் டென்சனாக கேட்டான்.

ஏன்? லாவா பத்தி நீங்க கேக்குறீங்க?

ஹ..இவன் தான் முகமூடிக்காரன். சார்லி சுவா சொல்லி இருப்பால்லே. அன்று லாவாவிற்கு உதவியவனும் இவன் தான். லாவா காதலிக்கிறவனும் இவன் தான் ஆத்விக் சொல்ல, “என்னது? அப்ப எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீங்க தானா?” துருவினி சினமுடன் கேட்டாள்.

வினு, ஆது போல லாவாவும் நான் உன்னை காதலிக்கிறேன்னு தப்பா நினைச்சிட்டு இருக்கா. அதான் ரொம்ப அவாய்டு பண்ணி இருக்கா. எனக்கு இப்ப தான் புரியுது ஆரவ் சிந்தனையுடன் சொல்ல, அவ இதை சொன்னால் எப்படி நம்புவாள்? துருவினி கேட்டாள்.

வினு..அன்று என்று மும்பை கிளம்பும் முன் அவளிடம் பத்து வருட காதலியை சொன்னான்.

அடப்பாவிகளா, இப்படியா விளையாட்டா செய்வீங்க? விளையாட்டு விபரீதமாகும்ன்னு சொல்லுவாங்களே! நல்லா செஞ்சிருக்கீங்க? தலையில் அடித்தாள் துருவினி.

முதல்ல சுவா மேரேஜ். அப்புறம் லாவாவுக்கும் உங்களுக்கும் என்ற துருவினி தன் தந்தை அண்ணனை பார்க்க, “சரி” என்று இருவரும் தலையசைத்தனர்

ஆரவ், கவின் அப்படியெல்லாம் இருக்க மாட்டான்டா. அவனுக்கு சுவா மேல அக்கறை இருக்குடா? ஆத்விக் கவினுக்காக பேச, ஆரவ் கவினை பார்த்தான். அவன் ஏதும் பேசாமல் நின்றான்.

கவினுக்காக பேசுறதா இருந்தா என்னிடம் வராத. அவரே பேச மாட்டேங்கிறார். உனக்கென்ன? நீ கடைசியா ஒரு மாப்பிள்ளையை அவகிட்ட காட்டினேல்ல? அவர் விவரத்தை அனுப்பு..

“கவின் பேசுடா” ஆத்விக் சொல்ல, கவினுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. அவனுக்கு அழைப்பு வர, ஆரியனிடம் கண்ணை காட்டி விட்டு அகன்றான்.

“பார்த்தேல்ல? அனுப்பு” ஆரவ் சொல்லி துருவினியை பார்த்து, ஹாஸ்பிட்டல்ல ரெஸ்ட் எடு என்றான்.

நான் இப்பவே சாய், லாவாவை பார்க்கணும் என்றாள்.

“முதல்ல டாக்டரை பார்த்துட்டு அப்புறம் போகலாம்” என்று அழைத்து சென்றனர் துருவினியை.

கவினை மேலதிகாரி அழைத்து வாட்டி வறுத்தெடுத்து விட்டார். உடன் சித்திரனும் நின்றிருந்தான்.

ஆரியன் ஏற்கனவே அவன் மேலதிகாரி சேனாதிபதியிடம் சொல்லி இருக்க, அவனுக்கு பிரச்சனையில்லை.

போங்க. முதல்ல விட்னசை விசாரிங்க. கொலைகாரனை சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்றார்.

வெளியே வந்த சித்திரன் கவின் காதருகே வந்து, “இந்த கொலைக்கே திட்டுகிறாரே! முன் நடந்த கொலை விவரங்கள் தெரிந்து நாம் விசாரித்தது தெரிந்தால் என்னாகும்?”

“வேலை அம்பேல் தான்” கவின் சொல்ல, தயாரா இருங்க சார். நமக்கு வேலை போகப் போவது நிச்சயம்..

அது நடக்கக்கூடாதுன்னு கொலைகாரனை சீக்கிரம் பிடித்து விட்டு எல்லாவற்றையும் சொல்லி சரணடைந்து விடுவோம். பாராட்டு மழை குவியும் கேலியுடன் கவின் கூறினான்.

“அடி கும்மு” போடாமல் இருந்தால் சரி. ஆரியன் சார் நம்மிடம் சொல்ல வேண்டாம்ன்னு அவர் மட்டும் மேலதிகாரியிடம் சொல்லி இருக்கார்.

இது நல்லது தான். வேலை போனால் நமக்கு தான் போகும். அவருடன் சேர்ந்து அவர் டீமுனுடன் அன்டர்கவரில் கொலைகாரனை பிடித்திடலாம் கவின் சொல்ல, இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?

அப்புறம் என்ன சொல்றது?

நம்ம போலீஸ்காரனுகளுக்கும் சிஐடிக்கும் ஏற்கனவே பிரச்சனை இருக்கு.

அது அவனவனுக விருப்பம். போலீஸ் டிடெக்டிவ் ஒன்றாக வேலை செய்தால் குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

கேட்க நல்லா தான் இருக்கு. எல்லாரும் ஆரியன் சார், அவங்க ப்ரெண்ட்ஸ் மாதிரி இருக்க மாட்டாங்க. அவர் துறையிலே ஆரியன் சாரை பிடிக்காது..

ஃபேம் இருந்தால் இப்படி தான். சிலருக்கு சூப்பர் ஸ்டார்..சிலருக்கு உலக நாயகன்..அதை மாற்றவா முடியும்? கவின் சொல்ல, ம்ம்..ம்ம்..நல்ல உதாரணம் இருவரும் பேசிக் கொண்டே வெளியே சென்றனர்.

தலையில் தொப்பியுடன் ஒருவன் அவர்களை கடந்து சென்றதை அவர்கள் கவனிக்கவில்லை. பின் தான் கவின் மீண்டும் சாய்யை விசாரிக்க, சித்திரனை காரில் அமர வைத்து மற்ற போலீஸ் ஆட்களுடன் உள்ளே சென்றான்.

சாய் விண்ணரசி முகத்தை பார்க்காமல் பேசுவதை பார்த்த அவள் அண்ணன் லாவண்யாவை பார்த்தான். அவள் இவனிடம் பேசலாமா? வேண்டாமா? சிந்தனையுடன் இருக்க, ராஜேஸ்வரியோ சாய்யையே கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தான் கவினும் சில போலீஸ் ஆட்களும் உள்ளே வந்தனர்.

கவின் லாவண்யாவை பார்த்து விட்டு சாய்யிடம் வந்து, “நீ கொலைகாரனை பார்த்திருக்கேல்ல? அவனை பற்றி தெரிந்ததை சொல்லு?” கவின் கேட்க, “சார் இந்த பொண்ணையும் தான கொலைகாரன் கொல்லப் பார்த்தான்” என்று லாவண்யாவை ஒருவன் நெருங்க, “சார் நாங்க பேசிக்கிறோம்” தருண் கூறினான்.

“நான் என்ன வேடிக்கை பார்க்கவா வந்தேன்? கவின் சார், நான் உங்க இடத்தில் இருக்க வேண்டியது. திடீர்ன்னு நீங்க மாற்றலாகி வந்ததால் தான் நான் இன்னும் உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன்” அந்த போலீஸ் சொல்ல, “என்ன பேசுறீங்க சார்?” இன்பராஜ் சினமுடன் கேட்டார்.

ராஜ் சார், விசாரிக்கட்டும் என்று தருணை பார்த்தான் கவின். தருண் அந்த போலீஸ் அருகே நின்று கொண்டான்.

“சொல்லும்மா? அவன் எப்படி இருந்தான்? அந்த பொண்ணையும் குழந்தையையும் கொலை செய்ததை நீங்க பார்த்தீங்கல்ல? ஏதாவது பேசி இருப்பான்ல்ல?” அவன் கேட்க, லாவண்யாவிற்கு அந்நிகழ்வு நினைவிற்கு வந்தது.

குழந்தையின் காலை வெட்டியதை எண்ணியவளுக்கு வியர்க்க வியர்க்க பயத்தில் மூச்சு வாங்கியது. சுவேரா அதை பார்த்து அந்த போலீஸை அவள் கைகளால் வேகமாக தள்ளி லாவண்யாவை தாங்கினாள்.

“ஏய், நான் போலீஸ்காரன். உனக்கு எவ்வளவு தைரியம்? என் மேலவே கையை வைக்கிற?” அந்த போலீஸ்காரன் சுவேராவை அடிக்க கையை ஓங்கினான்.

கவின் அவன் கையை பிடித்து, “நீங்க இப்படி தான் விசாரிப்பீங்களா சார்? அந்த பொண்ணு பயப்படறாங்க..மெதுவாக பொறுமையா பேசணும். அதை விட்டு கேள்வியை அடுக்குறீங்க? அவங்க திணறவும் உங்க பேச்சை குறைத்து..நீங்க தான் சமாதானப்படுத்தி இருக்கணும். சமாதானப்படுத்த வந்தவங்களையும் அடிக்க வர்றீங்க? இது கூட தெரியாத நீங்க எப்படி இன்ஸ்பெக்டராக முடியும்?” சீற்றமுடன் கேட்டான்.

சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் உள்ளே வந்தனர். ஆரவ், துருவினி, ஆத்விக், ஆரியன் மொத்த குடும்பமும் அங்கே வந்தனர்.

லாவண்யாவை பார்த்து, “லாவா என்னாச்சு?” ஆரவ்வும் துருவினியும் ஒன்று போல் கேட்டுக் கொண்டே அவளிடம் வந்தனர்.

லாவண்யா வேண்டாம்..வேண்டாம்..என்று அழுவதை தவிர எதையும் உணரவில்லை.

லாவா…லா..வா..ஆரவ் அவளை இறுக பிடித்து உலுக்கினான். அவள் லேசாக தெளிவாகவும் அவளை அணைத்துக் கொண்டு, “ஒன்றுமில்லை லாவா..நான் இருக்கேன்” என்றான்.

அவனது அணைப்பில் ஆறுதலாக உணரத் தொடங்கி ஆரவ்..நீங்க..அவன் என்னை அதுபோல கொன்றுவானா? அழுதாள்.

ஆரவ் கண்ணீருடன் இல்ல லாவா. அவன் உன் பக்கம் கூட வர மாட்டான். வர விடவும் மாட்டேன். நீ அழக் கூடாது. தைரியமா இருக்கணும் அவளை நகர்த்தி அவள் முகத்தை பார்த்தான்.

ம்ம்..கண்ணீருடன் தலையை மட்டும் அசைத்து அவனை அணைத்துக் கொண்டாள்.

விண்ணரசியோ, “சார் உங்க என்கொயரியை அப்புறம் வச்சுக்கோங்க. அவங்க இருவரும் ஓய்வெடுக்கணும்” என்றாள் முறைத்தவாறு.

ஆரியனும் அவள் அண்ணனும் கை குலுக்கிக் கொண்டனர்.

“மாமா, உங்களுக்கு இவங்களை தெரியுமா?” சுவேரா கேட்க, எல்லாரும் அவளை கவனித்தனர்.

ம்ம்..தெரியும் என்றான் விண்ணரசியின் அண்ணன்.

விண்ணா, சீக்கிரம் வா. நமக்கு வேலை இருக்கு..

“நீ எதுவும் செய்ய வேண்டாம்” விண்ணரசி சொல்ல, நான் உன் பக்கம் தான். நான் எல்லாரிடமும் பேசிக்கிறேன் என்றான் அவன். அவள் ஆச்சர்யமாக அவனை பார்த்தாள்.

நான் சொல்றேன் சார் என்ற சாய், கொலைகாரனின் உயரம், எடை, கலர் கணிப்புடன் கூறி விட்டு எல்லாரையும் பார்த்தான்.

“எல்லாரும் வெளிய இருங்க” என்று ஆரியன் லாவண்யாவை பார்த்தான்.

“அண்ணா” அவள் கண்கலங்க அழைக்க, நீயும் போ. சாய்யை வைத்தே அவனை நாங்க பார்த்துக்கிறோம். நீ அவனை பார்க்கலை என்பதால் உன்னை ஏதும் செய்ய மாட்டான்..போ என்று சொல்ல, அனைவரும் சென்றனர். ஆரியன் மற்ற போலீஸாரையும் செல்ல பணித்தான். அவர்களை பார்த்துக் கொண்டே அந்த ஒரு போலீஸூம் சென்றான்

சார், அவன் கழுத்தில் “எஸ்” என்று டாட்டூ போட்டிருந்தான் என்றான் சாய்..

ம்ம்..வேற ஏதாவது?

அவன் இடது கை பழக்கம் உள்ளவன்னு நினைக்கிறேன் சார்..

சரி. நீ ரெஸ்ட் எடு என்று கவினும் ஆரியனும் சென்றனர்.

அதிர்ந்து நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி லாவண்யாவையும் சாய்யையும் பார்த்து, இப்பொழுது தான் யார் அருகே இருப்பது? சிந்தித்துக் கொண்டிருந்தார்.

சாய் அவரை அழைக்க, அவனருகே சென்று அவர் அமர, மனோகர் இருவரையும் பார்த்துக் கொண்டே வெளியே சென்றனர்.

“உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு யாராவது வேண்டும். அவ்வளவு தான?” மெதுவாக கேட்க, அவர் கையை பிடித்து, “இனி நான் உங்க வீட்ல உங்களுக்கு மகனாகவே இருப்பேன்..பிராமிஸ் போதுமா? ஐந்து வருசமா கேட்டுக்கிட்டே இருக்கீங்க? எனக்கும் தனியாக இருந்து போராகிடுச்சு”.

ராஜேஸ்வரி கண்கலங்க, சாய் கையை இறுக பற்றி, “நிஜமாக தான சொல்ற? எங்களோடவே இருப்பேல்ல? பாதியிலே விட்டு போக மாட்டேல்ல?”

“கண்டிப்பாக போக மாட்டேன்” அவன் கண்ணீர் வழிந்தது. அவன் கண்ணீரை துடைத்த ராஜேஸ்வரி..நீ அழக் கூடாது. ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகவும் நம்ம வீட்டுக்கு போகலாம் என்றார்.

தொண்டையை கனைத்துக் கொண்டே சுவேரா உள்ளே வந்தாள்.

“ஏய், நாங்க பேசிட்டு இருக்கோம்ல்ல. தொந்தரவு செய்யவே வந்துட்டா” ராஜேஸ்வரி சுவேராவை வம்புக்கு இழுக்க, ஆமா பரமரகசியம் பேசுறீங்க பாரு. உங்களை தொந்தரவு செய்ய என்று சாய் அருகே அமர்ந்தாள்.

“என்ன கேட்கணும்?” சாய் நேரடியாக கேட்க, நேசன் தெளிவான தான இருக்கான்? அந்த பொண்ணுக்கோ யாருமில்லை. இவன் அம்மாவுக்காகன்னு கல்யாணம் பண்ணி ஏமாத்திடுவானோன்னு பயமா இருக்கு.

பயப்பட வேண்டிய அவளே ஒத்துக்கிட்டால்ல? உனக்கு என்னடி? ராஜேஸ்வரி கேட்க, இல்ல எனக்கு சரியா படலை சுவேரா தலையில் கையை வைத்தாள்.

என்னாச்சுடி தலை வலிக்குதா? ராஜேஸ்வரி கேட்க, இப்ப கொஞ்ச நாளா தூக்கமேயில்லை. அதான் தலை வலிக்குது..

என்னை நம்ப வேண்டியவங்க என்னை நம்புறாங்க.  எனக்கு அது போதும் சொல்லிக் கொண்டே நேசன் உள்ளே வந்தான்.

சுவேரா அவனை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

எங்கடா அந்த பொண்ணை? ராஜேஸ்வரி கேட்க, வெளிய அம்மாவோட இருக்கா என்றான் நேசன்.

ஆமா, அதுக்கு தான இவனுக கல்யாணம் பண்ணிக்கிறானுக முணங்கினாள் சுவேரா.

“சுவா” சாய் அழைக்க, நேசன் அவளை முறைத்தான்.

லாவா மேலுள்ள காதலை என்னால உடனே தூக்கி போட முடியாது. நான் கனியை ஏமாற்றவில்லை. அவளிடம் சொல்லி தான் கேட்டேன். அவ ஓ.கேன்னு சொல்லீட்டா. சீக்கிரமே அவள் மீது கூட எனக்கு காதல் வரலாம்..

வரும்..வரும்..முறைத்தாள் சுவேரா.

அவளை தவிர்த்த நேசன், அவன் கொலை செய்து போட்டிருக்கான். அவனிடம் எதுக்குடா தனியே சண்டைக்கு போன? நேசன் சினமுடன் கேட்க, அவன் மற்றவர்களை பார்த்தான்.

ராஜேஸ்வரியும் சுவேராவும் வெளியே வந்தனர். அதியா, உத்தமசீலன், பசங்க சேர்ந்திருக்க, ஆத்விக் துருவினி தனியே அமர்ந்து அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

லாவண்யா ஆரவ்வை கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லாரும் வெளியேறும் வேளையில் ஆரவ் அழுது கொண்டிருந்த லாவண்யாவை தனியே அழைத்து சென்று அவளிடம் பேசினான்.

லாவா..என்னை பாரேன்..

ம்ம்..ஆரவ்வை லாவண்யா பார்த்தாள்.

யாரும் உன்னை ஏதும் செய்ய முடியாது. நான் இருக்கேன். நீ என்னை நம்புகிறேல்ல. நான் சும்மா தான் பத்து வருசமா ஒரு பொண்ணை காதலிப்பதாக சொன்னேன். ஆனால் நான் உன்னை தவிர யாரையும் காதலிக்கவில்லை.

இல்ல ஆரவ், அவன் அந்த பொண்ணு வயிற்றில் கத்தியை வைக்கும் போது பார்த்து கத்திட்டேன். அவன் என்னை பார்க்கும் போது அவன் முகத்தை தெளிவாக பார்த்துட்டேன்.

“பார்த்தீயா? அவன் முகம் பார்த்தால் அவனை நீ கண்டறிந்து விடுவாயா?” ஆரவ் கேட்க, இல்ல..நான் பயத்தில் அவன் முகத்தை மறந்துட்டேன். அவன் என்னை வந்து பார்த்த போது பிளாக் ஆடையுடன் முகமூடியுடன் இருந்தான். அவன் கண்கள் மட்டும் தான் எனக்கு தெரியும்..

ம்ம்..சரி, யார் என்ன கேட்டாலும் தெரியாதுன்னு மட்டும் சொல்லு ஆரவ் சொல்ல, அவன் முகத்தை பார்த்து, “அவன் எதுக்கு அவங்கள கொன்றுப்பான்?” கேட்டாள்.

அவன் எதற்காக வேண்டுமானாலும் கொன்று இருக்கட்டும். கண்டிப்பாக மாம்ஸோ இல்லை கவினோ..வேறு போலீஸ் கூட உன்னை விசாரிக்க வருவாங்க.

உனக்கு கொலைகாரன் முகம் தெரியாது. அவன் முகமூடி அணிந்திருந்தான் என்று நடந்ததை சொல்லு போதும். என்னிடம் கூறியது போல அவன் முகம் பார்த்து மறந்ததை கூறக் கூடாது சரியா?

ம்ம்..கண்ணீருடன் அவனை பார்த்து, நான் கட்டிக்கவா? லாவண்யா பாவமாக ஆரவ்விடம் கேட்க அவன் புன்னகைத்து அவளை கட்டிக் கொண்டான்.

அவனை நகர்த்தி விட்டு, “நான் தான் கட்டிப்பேன்?” என்று அவள் அவனை அணைக்க, சுவேரா புன்னகையுடன் தனியே அமர்ந்தாள்.

ஆரவ்வை தழுவிக் கொண்டே..நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன் சாரி..

ஓ.கே. இனி நம்பணும். சுவா மேரேஜ் முடியவும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் அவன் சொல்ல, அவனை நகர்த்தி கண்ணீருடன் அவனை பார்த்தாள். அவள் கண்ணீரை துடைத்து, எதற்கெடுத்தாலும் அழாத. பெண்களின் கண்ணீர் விலைமதிப்பற்றது.

ம்ம்..என்று அங்கிருந்தவர்களை பார்த்த லாவண்யா சுவேராவும் ராஜேஸ்வேரியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆரவ்வை விட்டு அவர்களிடம் சென்றாள்.

விண்ணரசி அண்ணன் பேசியதை அவர்கள் பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் லாவண்யா இணைந்து சாய், விண்ணரசியை சேர்த்து வைக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். விண்ணரசி அண்ணன் அவர்கள் முன் வந்து கையை கட்டிக் கொண்டு பார்த்தான்.

“நாங்க சும்மா பேசிட்டு இருக்கோம்” சுவேரா பல்லை காட்ட, “ஹப்பா, பயமா இருக்கு. சிரிக்கிறேன்னு இப்படி பயமுறுத்துற?” அவன் கேலியுடன் கேட்டான்.

“அசிங்கப்பட்டாய் பாலகுமாரி” என்று நெற்றியை தேய்த்தாள் சுவேரா.

புன்னகைத்த அவன் ராஜேஸ்வரியை பார்த்து, நான் இன்று மாலையே எங்க குடும்பத்தினரிடம் விண்ணா மேரேஜ் நிறுத்துவதை பற்றி மட்டும் பேசிட்டு சொல்றேன். எனக்கும் சாய் எங்க வீட்டு மாப்பிள்ளையாய் வருவது சந்தோசம் தான்.

“வாவ்..சூப்பர்..லாவா போட்டுக்கோ” என்று சுவேரா லாவண்யாவிடம் சத்தமிட்டு எழுந்து வேகமாக கையை அவளை அடிக்க செல்ல, அவள் இரு கை மணிக்கட்டையும் சேர்த்து பிடித்த விண்ணரசியின் அண்ணன், “கத்தாத..நீயே நம்ம பிளான எல்லாரிடம் சொல்லிடுவ போல?” கேட்டான்.

“நாமவா?” அவள் கேட்க, ஆமா உங்க பிளான்ல்ல நானும் சேர்ந்துக்கிறேன். சாய்- விண்ணா திருமணத்தை எப்பேர்ப்படாவது நான் முடிக்க உங்களுக்கு உதவுவேன். நீங்களும் உதவணும்..

ஓ.கே..இப்ப கையை விடுங்க சார். என்ன புடி? செம்மையா கை வலிக்குது அவனை சுவேரா முறைக்க, அவன் சிரித்தான்.

ராஜேஸ்வரி இருவரும் பார்க்க, லாவண்யா மகிழ்ச்சியுடன் சாய்யை பார்க்க புன்னகையுடன் உள்ளே ஓடினாள்.

நேசன் கனிகாவின் வீட்டிற்கு அவன் அம்மாவுடன் கிளம்பினான். அதியாவும் கிளம்பி விட்டாள். ஆரவ் லாவண்யாவுடன் சாய்யை பார்க்க உள்ளே சென்றான். விண்ணரசியும் அவள் அண்ணனும் கிளம்ப, எதிரே வந்தான் விண்ணரசிக்கு நிச்சயிக்கப்பட்ட டாக்டர்.

அவனை முறைத்தவாறு விண்ணரசியின் கையை பிடித்து அவன் நகர, இடைமறித்தான் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை..

இங்க பாருங்க. உங்க தங்கச்சிக்கும் எனக்கும் திருமணம் முடிவாகிடுச்சு. நிச்சயமும் முடிந்தது. அது மீடியா மூலம் எல்லாருக்கும் தெரியும். அவளோட வாழ்க்கையை நீங்களே கெடுத்துடாதீங்க. இதுக்கு மேல அவளை கல்யாணம் பண்ணிக்க எவனும் வர மாட்டான்.

“அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்பலாம்” விண்ணரசி அண்ணன் சொல்ல, ஆத்விக், துருவினி, சுவேரா இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அவ என்னோட எத்தனை முறை வெளிய வந்துருக்கா? அவளுக்கும் எனக்கும் முடிஞ்சிருச்சுன்னு சொல்லுவேன். அப்புறம் என்ன பார்ப்படா?” அவன் திமிறாக கேட்க, சுவேரா அவனிடம் கோபமாக வந்தாள். அதற்குள் அவன் வாயை உடைத்திருந்தான் விண்ணரசியின் அண்ணன்.

“என்ன திமிறுடா? அவளை மாதிரி அமைதியா நான் இருப்பேன்னு நினைச்சியா? அவ உன்னோட யாருக்கும் தெரியாமல் சுத்தலை. பெரியவங்க சொல்லி திருமணம் முடிவு செய்த பின் அவங்க சொல்லி தான் உன்னுடன் வந்தாலே தவிர உன் மீது கொஞ்சமும் விருப்பமில்லை. நீ என்னடா சொல்றது? நான் இப்பவே இணையத்தில் பதிவிடுகிறேன். என்னோட தங்கச்சி உன்னை வேண்டாம்ன்னு சொன்னது காரணம் பொண்ணுங்களுடனான தவறன பழக்கம்ன்னு” அவன் சொல்ல, அந்த மருத்துவனோ விண்ணரசி அண்ணன் சட்டையை பிடித்தான்.

“கையை எடுடா” அவன் கத்தலில் சாய் அறையில் இருந்தவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் வேடிக்கை பார்த்தனர். அவன் அவமானத்தில் உன்னோட தங்கச்சி ஒழுங்கெல்லாம் இல்லை. அவ இதுக்கு முன் எவனுடனும் சுத்தியதில்லையா? அவன் கேட்க, விண்ணரசியின் அண்ணன் அவனை தள்ளி அவன் கழுத்தை நெறிக்க, “அண்ணா..விட்ரு வேண்டாம்” விண்ணரசி அழுதாள்.

“என்னாச்சு?” சாய் அறையிலிருந்து கேட்க, லாவண்யா அவனை பார்த்து விட்டு மனோகரை பார்த்தாள். அவரும் அவர் மனைவியும் விண்ணரசி அண்ணனிடம் ஓடினார்கள்.

“லாவா, என்னாச்சு?” சாய் மீண்டும் கேட்க, “ஒன்றுமில்லை. நீ அமைதியா இரு” என்று லாவண்யா பார்க்க, விண்ணரசி சொல்வதையும் கேட்காமல் அவள் அண்ணன் அந்த மாப்பிள்ளையை அடிக்க, சுவேரா அவனை பிடித்து தள்ளினாள்.

“தேங்க்ஸ்டா மச்சான்” நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வெளியே ஓடினான்.

வாட்? அவன் அதிர, “அண்ணா” விண்ணரசி அவன் அண்ணனை அணைத்து அழுதாள். அவள் தலையை கோதியவன் சுவேராவை பார்த்து நன்றி சொல்லி விண்ணரசி அறைக்கு அவளை அழைத்து சென்றான். சுவேரா பின்னாலே செல்ல, “சுவா” ஆத்விக் அழைத்தான். அண்ணனும் தங்கையும் அவர்களை திரும்பி பார்த்து விட்டு சென்றனர்.

மனோகர் மனைவியோ அங்கேயே நின்று கொண்டிருக்க, அவர் கணவர் அவரை சாய் அறைக்கு அவருடன் நடந்து கொண்டே அவனிடம் எதையும் சொல்ல வேண்டாம் என்று அழைத்து செல்ல, ஆரவ்வும் லாவண்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.