வல்லவன் 34
நேசன் அம்மா கனிகா அருகே அமர்ந்தார். அவள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
“கனிம்மா, நீ இங்க வேலை பார்க்கணும்ன்னு நினைக்கிறியா?” அவர் கேட்டாள். “இல்லை” தலையசைத்தாள்.
உனக்கு அண்ணா, தம்பி, அக்கா, தங்கை யாரும் இருக்காங்களா?
ம்ம்..என்று அவரை பார்த்து, அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று பணம் கேட்டு விடுவானோன்னு அவங்க பேசுவதை மொத்தமாக நிறுத்தீட்டாங்க..
“இப்ப மேரேஜூக்கு அவங்களுக்கு சொல்லலாமா?”
அவள் அவரை பார்த்தார்.
“என்னம்மா, அந்த பொண்ணு சொன்னது போல திருமணத்தில் விருப்பம் இல்லையா?”
அப்படியில்லை. எனக்கு சம்மதம் தான். உங்க பையன் எனக்கு உதவ எண்ணி தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறார். அதே போல எதிர்காலத்தில் என்னை வீட்டை விட்டு அனுப்பீட்டாருன்னு நான் என்ன செய்றது? அவள் கேட்க, எல்லாரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
சுவேரா அவளிடம் ஓடி வந்து, ஹே..நான் எதுக்கு சொன்னேன்னா..இவனுக பிராப்பரா மேரேஜ் பிரப்போர்சல் கொடுக்க மாட்டேங்கிறாங்க. நம்ம விருப்பத்தை கேட்க மாட்டேங்கிறாங்கன்னு தான்…
எதிர்பாராத நேரத்தில் சுவேரா வந்து பேசவும் உறைந்து கனிகா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேசன் அவளருகே அமர்ந்து, உன்னை வேலைக்கு வேண்டாம்ன்னு சொன்னது உங்க வார்டு அண்ணா தான் ஏழு வருசமா சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருந்தன்னு சொன்னாங்க. உனக்கு ரெஸ்ட் தேவைன்னு தோணுச்சு. அதான் சொன்னேன்.
அப்புறம்.. அம்மாவுடன் பேச ஆள் வேணும்ன்னா நான் வேலைக்கார ஆளை கூட போட்டிருப்பேன். உன்னை சொன்னது நீ உன்னோட அம்மாவையே எண்ணிக் கொண்டிருக்கக் கூடாதுன்னு தான்..
அப்புறம் நான்..லாவாவை காதலித்தேன். அவளிடமிருந்து வெளியே வர உன்னை உதவ சொன்னது. நாம பேசி புரிந்து கொள்ள தான்.
ஆனால் நீ என்னை இப்படி நினைச்சுட்ட?
எனக்கு பயமா இருந்தது. இப்ப கூட அம்மா இல்லாமல் அங்க தனியே எப்படி இருப்பேன்னு பயமும் இருந்தது. நீங்க இப்படி கல்யாணம்ன்னு பேசவும் நிம்மதியா தான் இருந்தது என்று அவனை பார்த்தாள்.
நேசன் அவள் கையை பிடித்து, எனக்கு நேரம் வேண்டும். பேசி பழகினால் எல்லாமே சரியாகிடும்..
ம்ம்..
ஹப்பா..லாவண்யா உள்ளே செல்ல, மனோகர் வந்து, “உன்னை எங்கெல்லாம் தேடுறது?” நேசனை திட்டினார்.
லாவண்யாவை பார்த்து, நான் வெளிய வந்து ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள வரிசையா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்கீங்க? அவன் எங்க? என்ன செய்றான்?
“உங்க பசங்க உங்களை தேட மாட்டாங்களா?” ஆரவ் கேட்டான்.
எங்களுக்கு குழந்தை பிறக்கலை. அதான் லாவாவிடம் அவளை தத்து பொண்ணாய் எடுத்துக்கிறோம்னு சொன்னோம். எங்க அவ கேட்டா?
ஆமா, நான் பச்ச பிள்ளை பாரு தத்து எடுத்துக்க?
ஹே, ஸ்வீடன்ல்ல ஒரு குடும்பம், தாத்தா பாட்டியை தத்தெடுத்துருக்காங்க. உனக்கு தெரியாதா? சுவேரா கேட்க, “பையனை எடுத்தாலும் ஏதாவது பிரயோஜனம் இருக்கு” லாவண்யா சொல்லி, மேம்..நீங்க சாய்யை தத்தெடுத்துக்கோங்க. அப்புறம் அவனோட பெற்றோராக விண்ணரசி மேம் வீட்ல பேசலாம்ல்ல?
இது என்ன கதை லாவா? மனோகர் கேட்டார்.
மறுபடியும் முதலில் இருந்தா? எனக்கு கண்ணை கட்டுது. நான் சாய்யை பார்க்க போகிறேன்..
அப்பொழுதிலிருந்து அதை தான் சொல்ற? போக மாட்டேங்கிற? கவின் சொல்ல, சுவேரா அவனை முறைத்தாள்.
கவினிற்கு அழைப்பு வர, “அண்ணாவா?” எடுத்தான்.
“என்ன சொல்றீங்க?” அதிர்ந்து எழுந்தான்.
ஹாம்..ஹாம்..நான் போகிறேன். ஆரவ் இங்க தான் இருக்கார். நாங்க கிளம்புகிறோம். நீங்களும் வாங்க..
“என்னது வினுவுமா?” அவளை ஓய்வெடுக்க சொல்லுங்க. அவனை ரெண்டு போடு போட்டு இழுத்து வாரோம் என்று அலைபேசியை வைத்து, “ஆரவ் வா” அழைத்தான் கவின்.
எங்க?
ஆது ஏர்போர்ட்ல்ல இருக்கானாம். ஆரியன் அண்ணாவிற்கு தெரிந்தவர் அவருக்கு கால் செய்து உங்க மச்சான் “ஹாங்காங்” போறார்ன்னு சொல்லி இருக்கார்..
“நானும் வாரேன்” சுவேரா ஆரவ்வுடன் கிளம்ப, சுவா நீ இரு. எதுக்கெடுத்தாலும் சுத்திக்கிட்டு கவின் செல்லமாக திட்ட, அவனை முறைத்தாள்.
“வினு கையில் அலைபேசி வச்சிருக்காளா?” லாவண்யா கேட்க, “தெரியலை” கவின் நகர, “சார் நானும் வரவா?” நேசன் கேட்டான்.
இங்க எல்லாருக்கும் பாதுகாப்புக்கு யாராவது வேணும். பார்த்துக்கோ என்ற கவின் ஆரவ்வுடன் ஆத்விக்கை தடுக்க கிளம்பினார்கள்.
“ஆத்விக் சாரா? எதுக்கு ஹாங்காங்?
“வேறதுக்கு? கல்யாணத்துல்ல இருந்து தப்பிக்க தான்” சுவேரா சொல்ல, “நீ எல்லாரையும் மட்டம் தட்டி பேசுற?” நேசன் சினமுடன் கூற, நான் மட்டம் தட்டுறேனா? கவின் சார் என்னிடம் உன்னை பிடிச்சிருக்கு. திருமணம் செய்யணும்ன்னு நினைக்கிறேன்னு கேட்கணும். அதை விட்டு அவர் பேசியது சரியா?”
ஆத்விக் அண்ணா, வினு பேசலைன்னா விட்டு போயிறலாமா? அப்புறம் என்னத்துக்கு லவ் பண்றாங்க? நீ கூட அப்படி தான? இந்த பொண்ணுக்காக பார்த்து பார்த்து இப்பொழுது யோசிக்கிற? முன்பே லாவா நிலையை யோசித்து விலகி இருந்தால் அவளுக்கு பிரச்சனையே இருந்திருக்காது.
“எல்லாரும் தப்பு செய்ததை எடுத்து சொன்னால் மட்டம் தட்டுற மாதிரி இருக்கா?” சினமுடன் அவனிடம் எகிறினாள்.
அய்யோ, நிறுத்துங்க. லாவண்யா இருவரிடமும் வந்து, “உங்க இருவரையும் வச்சிட்டு ஆத்விக் சார் எப்படி சமாளிக்கப் போறாரோ? எலியும் பூனையுமா பார்த்ததிலிருந்து சண்டை போட்டுட்டு இருக்கீங்க?”
அவ தான எலி லாவா? நேசன் கேட்க, யாரை பார்த்து எலின்னு சொன்ன? நான் க்யூட் மியாவ்..பூனைடா..
நீ க்யூட்டா? பஜாரி..
பஜாரியா? இருவர் சண்டையும் அதிகமாக கனிகா நேசனின் அழகான இப்பரிமாணத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் பஜாரின்னா..நீ குரங்குடா..அவள் சொல்ல, லாவா அவளை சும்மா இருக்க சொல்லு. என்னை ரொம்ப வெறுப்பேத்துறா..
“நேசா” அவன் அம்மா சத்தத்தில் இருவரும் அமைதியானார்கள்.
“லாவா, நான் சாய்யை பார்க்க போறேன்” சுவேரா சொல்ல, அவன் என்னோட நண்பன். அவனை நான் பார்த்துப்பேன். நீ உன்னோட வேலையை பாரு மீண்டும் இருவரும் ஆரம்பித்தனர்.
நேசன் அருகே வந்த கனிகா, ஒரு நிமிசம்..நாம ஹாஸ்பிட்டல் டீன்னை பார்க்க போகலாமா? கேட்டாள்.
எதுக்கு? நேசன் மென்மையாக கேட்க, ஜாஃப் விட்டு நிக்கணும்ன்னா உடனே விட மாட்டாங்க. முன்னாடியே சொல்லணும்.
அதெல்லாம் தேவையில்லை. இனி நீ இந்த ஹாஸ்பிட்டல் வர வேண்டாம்.
“இல்ல” அவள் தயங்கி அவனை பார்க்க, “நான் பேசிக்கிறேன் வா” என்று நேசன் கனிகா கையை பிடித்து அழைத்து சென்றான்.
ஹாஸ்பிட்டல் டீன் அறைக்கு செல்லவும், கனி நீ இங்கேயே இரு. நான் பேசிட்டு வந்திடுறேன் நேசன் கூற, நீங்க கூட மட்டும் வாங்க. நான் பேசிக்கிறேன் என்றாள் கனிகா.
சொல்றேன்ல்ல. நீ இரு. நான் பேசிட்டு வாரேன் நேசன் கனிகாவை விட்டு அறைக்குள் சென்றான்.
டீனிடம் விசயத்தை சொல்லி கனிகாவிற்காக நேசன் பேசினான். டீன்னோ மிகவும் யோசித்தார். அவர் கவனம் கேமிராவில் பதியவும் நேசன் அவரருகே வந்தான். வெளியே நின்ற கனிகாவை நெருங்கிக் கொண்டிருந்தான் டாக்டர் சுரேஷ்.
கொதித்த நேசன் வேகமாக கதவருகே சென்றான். அந்த டீன் அவனை பிடித்து தள்ளி கதவை நம்பர் லாக் செய்தான்.
“யோவ், உன்னோட டாக்டரை காப்பாற்ற பார்க்கிறாயா?” நேசன் சினமுடன் அவரை அடித்து விட்டு, கதவை பார்த்தான். லாக் ஆகி இருக்க, மானிட்டரை பார்த்தான்.
கனிகா அழுது கொண்டிருக்க, அவளை பலவந்தமாக பக்கத்து அறைக்கு இழுத்துக் கொண்டிருந்தான் சுரேஷ்.
அங்கிருந்த மரநாற்காலியை எடுத்து கதவுகண்ணாடியில் பலம் கொண்டு வீசி எறிந்தான். அது உடைந்து விழுந்தது.
“ஏய், அவன் என்னோட மகன். அவனை உன்னால ஏதும் செய்ய முடியாது” டீன் சத்தமிட, “ஓ..மொத்த ஹாஸ்பிட்டலும் இப்படி தான் நடந்துகிட்டு இருக்கா?” சினமுடன், “நான் உங்களையும் சரி இந்த ஹாஸ்பிட்டலையும் ஒன்றுமில்லாமல் ஆக்காமல் விட மாட்டேன்” நேசன் கத்த, அவர் அவன் தலையில் கட்டையால் அடிக்க ஓங்கினார்.
“நேசன் சுதாரித்து, கொல்ல கூட தயங்க மாட்டீங்கல்ல? திருந்த முடியாத உனக்கெல்லாம் நான் வச்சிருக்கேன் பெரிய ஆப்பு” சொல்லி அவரை கீழே தள்ளி விட்டு எகிறி குதித்துக் கொண்டு வெளியே வந்து சத்தம் வந்த திசையை பார்த்தான்.
கனிகாவின் அழுகை சத்தத்தில் அவ்வறை திறந்திருப்பதை உணர்ந்து வேகமாக அறைக்குள் நுழைந்தான். டாப் கிழிந்து கீழே கிடக்க, உள்ளாடையுடன் அழுது கொண்டே கனிகா சுரேஷூடன் போராடிக் கொண்டிருந்தாள்.
ஏய்..கணீர் சத்தமுடன் நேசன் சுரேஷை பிடித்து இழுத்து அடித்தான்.
“நான் யாருன்னு தெரியாமல் அடிக்கிற?” அவன் பேச, “பேசுன வாய உடைச்சிருவேன்” என்ற நேசன் அவனை வேகமாக தள்ளி விட்டு அவன் சட்டையை கழற்றி கனிகாவிடம் கொடுக்க, அழுது கொண்டே ஆடையை மாட்டி சரி செய்து விட்டு அவனை பார்த்தாள். அவன் சுரேஷை இரத்தம் வரும் வரை அடித்திருந்தான்.
“அவனை விட்ருங்க. நாம போகலாம். ப்ளீஸ்” கனிகா நேசனை தடுக்க, “இந்த பொறம்போக்கை அப்படியே விட்டு வரச் சொல்றீயா? அவன் அப்பன் என்னிடம் அவ்வளவு திமிறாக பேசுறான்?” கத்தி நேசன் மீண்டும் அவனை அடித்தான்.
“இங்க எல்லாரும் இப்படிதான். இதை கேட்கப் போய் நம் வாழ்க்கை பாழாகிடும். எனக்கு உங்களோட வாழணும்” கனிகா அழுது கொண்டே நேசனை அணைத்தாள்.
ஒரு நிமிடம் அமைதியானவன் பின் அவளை பார்த்து, “உன்னோட இதே நிலை சாப்ஸூக்கு வந்தால் என்ன செய்வ? அவள் என்ன ஆவாள்?” கேட்க, அழுகை மேலும் வந்தது கனிகாவிற்கு. அவளால் ஏதும் பேச முடியவில்லை.
சுரேஷ் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து கீழே வந்து நேசன் அவனை மேலும் அடிக்க, அங்கிருந்தவர்கள் சுரேஷிற்கு உதவ முன் வந்தனர். அவர்கள் முன் வந்த கனிகா “இவன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். இவர் என்னை கட்டிக்கப் போறவர் அவனை அடிக்கிறார். எங்க விசயத்துல்ல தலையிடாதீங்க” கத்தினான்.
நேசன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் சுரேஷை அடித்தான்.
“சார் அவனை விடாதீங்க. இத்தனை நாள் இவனை கேட்க இங்கு யாருமில்லை” செண்பகம் சொல்ல, “ஆமா சார்” என்ற சாப்ஸ் அவனருகே வந்து, “அன்று என்ன சொன்ன? நாங்க உனக்கான தேவையா?” அவனை மிதித்தாள்.
மற்ற பெண்களும் அவர்களின் ஆதங்கத்தை கொட்ட, அதனை வீடியோ எடுத்த ஒருவன் இணையத்தில் போட்டு விட்டான். அங்கே போலீஸ் வந்து அவனை டீனையும் சேர்த்து கைது செய்தனர்.
“அந்த டீன் வெளியே வந்தால் எப்பொழுதும் போல நிர்வாகம் அவர் கைக்கு போயிடும்” ஹாஸ்பிட்டலில் பேச, “அதெல்லாம் நடக்காது” என்றான் நேசன்.
“இப்ப ஹாஸ்பிட்டலை யார் நிர்வகிப்பது?” பேச்சு தொடர, எல்லா மருத்துவர்களுக்கான மீட்டிங் நடந்தது.
பியான்சே பின்னே சென்ற விண்ணரசி கண்கலங்க மருத்துவமனை வந்த போது தான் நேசன் செய்யும் சம்பவத்தை பார்த்தாள். பின் மீட்டிங் முடிந்து வெளியே வந்து அவளறைக்கு சென்றாள்.
அப்பொழுது செவிலியர் ஒருவர், “மேம் அந்த லாயர் சார் விழிச்சிட்டார்” என்றாள் செவிலியர்.
ம்ம்..வாரேன் என்று எழுந்தாள்.
சாய் அறையில் அவனை பார்க்க, மனோகர் சார், அவர் மனைவி, லாவண்யா, சுவேரா அனைவரும் அங்கிருந்தனர்.
லாவண்யா வருத்தமுடன் சாய்யை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, மனோகர் சார் மனைவியோ கன்னத்தில் கை வைத்து கண்ணை மூடி இருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“லாவா, ஆரவ் உன்னை தான் லவ் பண்றான்” சுவேரா பேசிக் கொண்டே அவளருகே வந்து அமர்ந்தாள். லாவண்யா அவளை முறைத்து பார்த்தாள்.
நிஜமாகவே அவனுக்கு வினு மீது எந்த உணர்வும் இல்லை. என்னோட அண்ணனுக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு சுவேரா சொல்ல, லாவண்யா எழுந்தாள்.
“லாவா” சாய் அழைக்க, வேகமாக திரும்பி அவனிடம் வந்தாள்.
“உனக்கு ஒன்றுமில்லைல்ல? நீ ஓ.கே தான?” அழுது கொண்டே லாவண்யா கேட்க, ஊஹூம் தலையசைத்து சுவேராவை பார்த்து, “நிஜமாகவே ஆரவ்வா? லாவா சொன்னவர்” கேட்டான்.
ஆமா, ஆரவ் தான். நிச்சயமாக சொல்றேன். அவனுக்கு லாவாவை தான் பிடிக்கும். வினு மீதுள்ள அப்பொழுதையை விருப்பம் கூட ஆரியன் மாமாவால் மட்டும் தான்.
“அப்புறம் எதுக்கு அவள் நேசனால் காயப்பட்ட போது முன் வரவில்லை?” சாய் லாவண்யாவை பார்த்துக் கொண்டே சுவேராவிடம் கேட்டான்.
எல்லார் முன்னும் அன்றைய நிலையில் சொல்ல முடியவில்லை. அவன் அப்பொழுது பேசி இருந்தால் கூட லாவாவிற்கு மேலும் கஷ்டமாக தான் இருந்திருக்கும். அதான் அவன் நம்மிடம் காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்கே இன்று காலை சார்லியை பார்த்த பின் தான் தெரியும்.
“சார்லியா? அந்த முகமூடிக்காரனா?” சாய் கேட்க, “ம்ம்..இவளுக்கும் தெரியும். நாங்க அவனை யார்ன்னு புரியாமல் இருக்கும் போது ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை” சுவேரா லாவண்யாவை பார்த்தாள்.
“நீ அமைதியா ஓய்வெடு. சுவா தேவையில்லாததை அவனிடம் எதுக்கு பேசுற?” லாவண்யா கோபமாக கேட்டாள். செவிலியரும் விண்ணரசியும் வந்தனர்.
“தேவையில்லாததா? எது தேவையில்லாதது லாவா?” சுவேரா சினமுடன்..இவனுக தான் புரிஞ்சுக்கலை. நீயாவது புரிஞ்சு பேச்சு..
“என்ன புரியணும்? உன்னோட அண்ணன் எனக்கு நல்லா புரிய வச்சிட்டு தான் மும்பை கிளம்பினார்.” சினமுடன் லாவண்யாவும் பேசினாள்.
“என்ன சொல்ற? என்ன செய்தான்?”
“அவர் துருவை பத்து வருசமா லவ் பண்றாராம். அவர் கிளம்பும் போது அபசகுணமா உயிரோட இருக்கிறது கஷ்டம் என்றும் அவளுக்கு இங்கிருக்க பிடிக்காதுன்னு சொன்னார்” என்று நிறுத்திய லாவண்யா சுவேராவை பார்த்தாள்.
“அவன் சும்மா விளையாடி இருக்கான். பத்து வருச காதல்ன்னு அவனுக்கு யாருமில்லை. அவனை யாரும் ஏதும் செய்த பின் நீ அவனை தேடக் கூடாது. உன் வாழ்க்கையை நீ பார்க்கணும்ன்னு சொல்லி இருக்கான்” சீற்றமுடனும் அழுகையுடனும் கத்தினாள் சுவேரா.
“சுவா” சாய் அழைக்க, “சாரிடா உன்னை தொந்தரவு செய்திட்டேன்” சுவேரா எழுந்தாள்.
“சுவா, அப்ப பத்து வருச காதல் இல்லையா?” கண்கலங்க லாவண்யா கேட்க, “ஒரு மண்ணும் இல்லை. இப்ப உன்னை போல் தான் ஆத்விக் அண்ணா எண்ணி அவளை கண்டபடி பேசி இருக்காங்க. அதை தாங்க முடியாமல் தான் வினு பாய்சன் குடிச்சிருக்கா. இப்ப அவர் வெளிநாடு செல்ல ஏர்போர்ட் சென்றது உங்களது தவறான புரிதல் தான். என்னோட அண்ணாவை நீயும் ஆது அண்ணாவும் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க”.
“லாவா, துரு எங்க? என்னாச்சு?” சாய் பதறி எழுந்து அமர்ந்து வயிற்றை பிடித்தான்.
செவிலியர் வேகமாக உள்ளே ஓடி வந்தார். விண்ணரசியும் சாய் அருகே அமர்ந்து, “சார்..பொறுமையா இருங்க. இப்படி பட்டென எழக் கூடாது” அவள் சொல்ல, “மனோகர் மனைவியோ..ஏடி..ரெண்டு பேரும் வெளிய போய் சண்டை போடுங்க. எங்க பிள்ளைக்கு ஏதும் ஆகிடாமல்” சொன்னார்.
அவரை பார்த்து விட்டு, “சார் துருவுக்கு ஒன்றுமில்லைல்ல? பாய்சன் சாப்பிட்டாளா? நேற்றிலிருந்து கால் பண்ணேன் எடுக்கவேயில்லை” சாய் கேட்க,
அவளுக்கு ஒன்றுமில்லை. இப்ப நல்லா இருக்கா. உங்க ஆத்விக் சார் தான் திடீர்ன்னு வெளிநாடு கிளம்பி இருக்கார். இப்பொழுது தான் எனக்கு காரணமே புரியுது. எல்லாரும் அவரை தடுக்க போயிருக்காங்க.
“நேசா எங்க?” சாய் அனைவரையும் பார்த்தான்.
“எல்லாரும் கொஞ்சம் வெளிய இருங்க” விண்ணரசி எல்லாரையும் பார்த்தாள்.
லாவண்யாவும் சுவேராவும் வெளியே செல்ல, மனோகர் தன் மனைவியை பார்த்தார். நான் வர மாட்டேன்.
“மேம், கொஞ்ச நேரம் தான்” செவிலியர் சொல்ல, “மேம்” சாய் அவரை அழைத்தான்.
“அம்மான்னு சொல்லு. நான் வெளிய கிளம்புகிறேன்” அவர் கேட்க, “சார்” சாய் மனோகரை பார்த்தார். விண்ணரசி அலைபேசி சத்தமிட்டது. அவர்கள் அவளை பார்க்க, அவள் முகம் வாட அலைபேசியை கட் செய்தாள். மீண்டும் அழைப்பு வர, அவள் முகம் கடுமையானது. அலைபேசியை அணைத்து வைத்து விட்டு, “நீங்க ஏதாவது செய்யுங்க” என்று சாய்யின் காயத்தை பார்த்து அவனிடம் பேசினாள்.
“விண்ணா” சினமுடன் குரல் கேட்டது. அவள் அண்ணன் வந்திருந்தான்.
வேகமாக எழுந்த விண்ணரசி, “இங்க எதுக்கு வந்த?”
“நீ எதுக்கு கால் அட்டென்ட் பண்ணலை” பேசிக் கொண்டே சாய்யை பார்த்து, “லாயர் சார் உங்களுக்கு என்னாச்சு?” அவனிடம் சென்று சாதாரணமாக பேசினான்.
சாய் விண்ணரசியை பார்க்க, அவளோ அவள் அண்ணனை தீவிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
சாய் பார்வையை கவனித்து அவள் அண்ணன், “இவள பாருங்க சார். மாப்பிள்ளை கிட்ட என்ன பேச்சு பேசி இருக்கா? அவர் வேலையை தான விட சொன்னார். சரின்னு போக வேண்டியது தான?” சினமுடன் அவன் தங்கையை முறைத்தான்.
சாய் ஏதும் பேசாமல் இருவரையும் பார்த்தான்.
“ஆமா ஆமா பொண்ணுங்க வேலைக்கு போனால் வீட்ல வேலை பார்க்க ஆள் வேண்டாமா? என்னங்க?” மனோகர் சார் மனைவி அவரை பார்க்க, “சும்மா இரும்மா” அவர் கையை பிடித்தார்.
சிலர் இப்படி கூட நினைப்பாங்க. நம்மை விட பொண்டாட்டி அழகா இருக்கா. அவள் பேர் வாங்கி அவள் சம்பாதித்து அவங்களுக்கு நாம குறஞ்சு போயிருவோம்ல்ல?
“ஹலோ, எங்க மாப்பிள்ளை அப்படியெல்லாம் கிடையாது” அவன் தெனாவட்டாக கூற, கேட்டுக் கொண்டிருந்த லாவண்யா மனோகர் சார் மனைவியிடம் ஓடி வந்தாள்.
“உங்க மாப்பிள்ள லட்சணத்தை பாக்குறீங்களா தம்பி?” மனோகர் சார் மனைவி அலைபேசியை எடுக்க, “மேம் வேண்டாம்” லாவண்யா தடுக்க, சாய் புரியாமல் இருவரையும் பார்த்தான்.
“லாவா” சாய் சத்தமாக அழைக்க, அண்ணா நானில்லை. இவங்க தான். நான் விண்ணரசி மேம்கிட்ட பேச தான் போனேன். ஆனால் அங்க என்று லாவண்யா விண்ணரசியை பார்த்தாள்.
நீ அங்க..விண்ணரசி நிறுத்தி தன் அண்ணனை பார்த்தாள்.
மனோகர் மனைவியை பார்த்த விண்ணரசி, யார் என்ன சொன்னாலும் எதுவும் மாறப் போறதில்லை. எல்லாம் என் தலைவிதி..
“ஓய், என்ன உன்னை பாழாங்கிணத்துல்ல தள்ளி விடுற மாதிரி பேசுற?” அவள் அண்ணன் எழுந்து, “நீங்க வெளிய இருங்க” என்று செவிலியரிடம் கூறினான். அவர் விண்ணரசியை பார்க்க அவள் கண்ணாலே போக சொல்லி சைகை செய்தாள். செவிலியர் வெளியேறினார்.
பாழாகிணறல்ல அது..குப்பை மிக்க கோபுரம் என்றாள் முணுமுணுப்புடன் லாவண்யா.
“வாட் டிட் யூ சே?” விண்ணரசி அண்ணன் கேட்க, “அது கிணறில்லையாம்.. குப்பையாம்” சுவேரா சொல்ல, “வாட்?” அவன் சினமுடன் கேட்டான்.
“நகருங்கடி” என்ற மனோகர் மனைவி. இதை பார்த்துட்டு உங்க மாப்பிள்ளையை எப்படி பாராட்டலாம்ன்னு சொல்லுங்க என்று அவர் எடுத்து வீடியோவை ஓட விட்டார்.
“விண்ணா, என்ன இது?” விண்ணரசியின் அண்ணன் கேட்க, அவள் இவர்கள் முன் தலைகுனியக் கூடாது என எண்ணிய சாய், “லாவா, நேசன் எங்கேன்னு நான் கேட்டேன்?” சினமுடன் கேட்டான். எல்லாரும் அவனை பார்த்தனர்.
லாவண்யா அமைதியாக கண்கலங்கி நிற்க, சுவேரா சினமுடன் அவனை பார்த்தாள்.
நேசன் சட்டையில்லாது பனியனுடன் வருவதை பார்த்து, “நேசா என்னாச்சுடா?” சாய் பதட்டமாக கேட்க, மனோகர் எழுந்து, “என்னடா செஞ்சிட்டு வந்திருக்க?” சினமுடன் கேட்டார்.
அவன் கோபமாக, “நான் இவனை தான் பார்க்க வந்தேன்” என்று சாய்யை பார்த்துக் கொண்டு, “நான் என்ன செய்தேன்னு தெரியணும்ன்னா வெளிய போய் பாருங்க. என் மேல யாருக்கும் நம்பிக்கையேயில்லை?” சினமுடன் கத்தினான்.
“எதுக்குடா கத்துற?” சாய் அமைதியாக கேட்க, பெருமூச்சை வெளிவிட்டு சாய்யையும் விண்ணரசியையும் பார்த்தான் நேசன்.
“எதுக்கு இவன் அவங்கள பார்க்கிறான்?” லாவண்யா சிந்தனையுடன் அவனருகே வர, விண்ணரசியிடம் வந்து, “எங்க மேரேஜூக்கு நீங்களும் வரணும் மேம்” என்றான்.
“மேரேஜா?” சாய் புரியாமல் கேட்க, அவனை பார்த்த விண்ணரசி “சார் உங்க நண்பன் எவ்வளவு பெரிய விசயம் செய்திருக்கார் தெரியுமா? எத்தனையோ பேர் இந்த ஹாஸ்பிட்டல்ல நடப்பதை கண்டும் காணாமல் போயிருக்காங்க. எங்க டீனையும் அவர் மகனையும் சேர்த்தே உள்ளே தள்ளீட்டார்..
“என்ன சார்? அந்த பொண்ணு மேல லவ்வோ?” அவள் புன்னகையுடன் கேட்க, “லவ்வா? டேய் யார சொல்றாங்க? நீ என்ன செஞ்ச?” சாய் பதட்டமாக கேட்க, “ஒன்றுமில்லை நீ ரெஸ்ட் எடு. வாரேன்” என்ற நேசன் வெளியே சென்றான்.
“லாவா, இவன் என்ன சொல்றான்?”
“ஆம்” என்று தலையை மட்டும் அசைத்தாள் லாவண்யா.
சாய் புரியாமல் மற்றவர்களை பார்க்க, நேசன் ஒரு பொண்ணை கரெக்ட் செய்து கல்யாணம் வரை போயிருச்சு என்றார் மனோகர் சார் மனைவி.
“எப்படி லாவா?” சாய் திகைத்து கேட்க, அவள் தோளை குலுக்கினாள்.
நேசன் தாய் மடியில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்த கனிகாவை நேசன் அழைத்தான்.
“கனி” அவன் அழைக்க, அவன் தாய்யையும் அவனையும் பார்த்தாள்.
கண்களால் “வா” அழைக்க, கண்கலங்க அவன் தாய்யை பார்த்தாள். அவர் “போ” என்றவுடன் ஓடிச் சென்று அவனை அணைத்தாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.
சுவேரா இதை பார்த்து, மெதுவாக சாய் அறைக்குள் நுழைந்து “லாவா, ஆன்ட்டி இங்க வாங்க” என்று இருவர் கையையும் பிடித்து இழுத்து வெளியே செல்ல, “சுவா” சாய் அழைத்தான்.
“இரு வாரேன்” என்று அவனிடம் கூறி அழைத்து சென்றாள். எல்லாரும் அவள் பின் சென்றனர்.
நேசனும் கனிகாவும் அணைத்துக் கொண்டிருப்பதை சுவேரா காட்ட, லாவண்யாவை மீறியும் கண்கள் கலங்கியது.
“நான் உன்னை தனியாக வெளியே விட்டு சென்றது தவறு தான். நீயாவது சத்தம் போட்டிருக்கலாம்ல்ல?”
அறைக்குள்ள சத்தம் கேட்காது. சத்தம் போட்டால் என் மீது அவன் பழியை போட்டுருவான். ரொம்ப தேங்க்ஸ் அழுதாள்.
அவளை விலக்கி, “எதுக்கு தேங்க்ஸ்?” நேசன் கேட்டான்.
அவன் முகத்தை பார்க்க முடியாமல்..உதவிக்கு..
“என்னை பார்த்து பேசு. அப்ப தான் எனக்கு உன்னை பிடிக்கும்” அவள் தாடையை உயர்த்தினான். அவளுக்கு கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது.
“வேற பொண்ணை காதலித்த நான் உன்னை எதுக்கு கட்டிப் பிடிக்கிறேன்னு தோணுதா?” நேசன் கேட்டான்.
அவள் கண்களை தாழ்த்தினாள். கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
நான் காதலித்தேன். ஆனால் இனி உன்னை தவிர யாரையும் என் மனதால் நினைக்க மாட்டேன். நாம வேணும்ன்னா நாளையே..இல்லை தீராத கணக்கை முடிக்கணும். அதனால் நாளை மறுநாள் திருமணம் செய்து கொள்வோமா? நேசன் கேட்க, அவள் பேச முடியாமல் அவன் அன்னையை பார்த்தாள்.
கனிகாவை நேசன் அவன் பக்கம் திருப்பி, “கேட்டது நான் அவங்கள எதுக்கு பாக்குற?” கேட்டான்.
பெரியவங்க விருப்பமில்லாமல் திருமணம் எவ்வாறு?
விருப்பமில்லாமல் என்னோட அம்மா உன்னை என்னருகே நிற்க கூட விட மாட்டாங்க. நீ யோசிச்ச என்னோட அம்மாவே மறுத்திடுவாங்க..
“இல்ல..இல்ல..நான் கட்டிக்கிறேன்” அவள் அவனை அணைக்க, “நேசன் புன்னகையுடன் இப்படி கட்டிக்கிட்டு இருந்தால் எப்படி மத்த வேலையை பார்ப்பது?”
விரைந்து நகர்ந்து அவனை பார்த்தாள்.
நேசன் புன்னகையுடன் அம்மா, “நீங்க சொல்லுங்க” அவன் அம்மாவை கேட்டான்.
எனக்கென்ன? ஓ.கேப்பா..
ஓ.கேவாம் கனி. உனக்கு ஓ.கேவா? நேசன் மேலும் புன்னகைக்க, அவள் அவனையே பார்த்தாள். அவன் அவனது கைக்குட்டையை எடுத்து அவள் முகத்தை துடைக்க, லாவண்யா சாய் அருகே அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
“என்னாச்சு லாவா?” அவன் கேட்க, அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது. அறைக்கதவை வேகமாக சாத்தினார் மனோகர்.
லாவண்யா அழத் தொடங்கினாள்.
“லாவா, நீ நேசனை காதலிக்கிறீயா?” மனோகர் கேட்க, இல்ல சார்..இல்லவே இல்லை. அவன் மீது பாசம் எல்லாம் முன் இருந்தது தான். ஆனால் இப்பொழுது இல்லை.
“அந்த பொண்ணை பார்த்து ஒரு நாள் கூட ஆகலை. அவளை உடனே ஏத்துக்கிட்டாங்க அந்த ஆன்ட்டி. நான் அவ்வளவு மோசமாகவா நடந்துக்கிட்டேன்” சொல்லிக் கொண்டே அழுதாள் லாவண்யா.
“லாவா லாவா சார் சார்” சுவேரா கதவை தட்ட, நேசன் யோசனையுடன் அறையை பார்த்தான். கனிகா அவன் யோசனையை பார்க்கவும் முகம் வாடியது.
கனிகாவை நகர்த்தி விட்டு நேசன் நகர, அவன் கையை பிடித்த மனோகர் மனைவி, அவளை பார்த்துக்க நாங்க இருக்கோம். நீ உன்னோட குடும்பத்தை பாரு. இதுக்கு மேல லாவா உன்னால கஷ்டப்படணும்ன்னு நினைக்கிறியா? அவர் கேட்க, நேசன் கண்கள் கலங்கியது.
சுவேரா ஆரவ்விற்கு கால் செய்து வரச் சொல்ல, அவன் “ம்ம்” என்று அலைபேசியை வைத்து விட்டான்.
இல்ல மேம், நான் பேச மட்டும்..
வேண்டாம் நேசா, இனி சரியாக இருக்காது. அவள் உனக்காக கஷ்டப்படவில்லை. உன்னோட அம்மா பேசிய வார்த்தைகள் அப்படி. நான் இதுவரை தலையிடாத காரணம் நீ மட்டும் தான். என்றாவது அவள் நிலையை யோசிப்பன்னு நினைத்து தான். அது நடக்கவேயில்லை.
இப்ப கூட லாவா உன் அம்மாவை தவறாக எண்ண மாட்டாள். அவளையே அவள் குறைத்து நினைத்து தான் அழுவாள். உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். நேசன் மீதான அவளது சிறிய நேசத்தையும் நீ இழந்திறாத..
உன்னோட அம்மா இந்த பொண்ணை பார்த்தவுடன் புரிஞ்சுக்கிட்டது போல அவளை புரிந்திருக்கலாம். இல்லைன்னா அவள் பேச வருவதை கேட்கவாது செய்திருக்கலாம்.
அவளிடம் முன்னமே எங்க பொண்ணா எங்க வீட்டுக்கு வந்துருன்னு நிறைய முறை கேட்டிருக்கேன். அவள் ஏத்துக்கவே இல்லை. இனி அவள் ஏத்துக்கலைன்னாலும் அவள் எங்களோட பொறுப்பு. நான் பார்த்துப்பேன். இடையில நீ மட்டும் வராத என்று முகத்தில் அடித்தாற்போல பேசி விட்டு நேசன் அம்மாவை முறைத்து அமர்ந்தார்.
நேசன் அம்மா அவனிடம் வந்து, “நான் பேசவாப்பா?” கேட்டார்.
“கேட்டீங்கல்ல? இதுவரை நீங்க செய்ததே போதும். அவங்க பார்த்துப்பாங்க” என்று வருத்தமுடன் அமர்ந்தான். அம்மாவையும் மகனையும் பார்த்துக் கொண்டே அவர்கள் அருகே வந்து நின்ற கனிகா அங்கிருந்தவர்களையும் அவ்வறையையும் பார்த்தாள்.
அவளை பார்த்த மனோகரின் மனைவி, “நீ எதுக்கும்மா நிக்கிற? உட்காரு. நாங்க தப்பா எதுவும் நினைக்க மாட்டோம்” என்றார் புன்னகையுடன். அவள் புரியாமல் விழித்தாள்.
“இப்படி பேசிட்டு சிரிச்சீங்கன்னா அவ குழம்பி போய் நிக்கிறா?” சுவேரா கனிகா அருகே வந்து அவளை அமர வைத்து விட்டு, “நேசா நீங்க கிளம்புங்க” என்றாள்.
இல்ல சுவா, சாய்யையும் பார்க்கணும்.
இப்ப வேண்டாம்ன்னு எனக்கு தோணுது. அப்புறம் உன் விருப்பம்..
“என் மீதும் தவறிருக்கு. அவன் என்னை அடித்தாலும் பரவாயில்லை” நேசன் சொல்ல, கனிகா அவன் கையை பிடித்தாள். அவளை பார்த்து அவள் கையை இறுக பற்றினான் நேசன்.
“இந்த பொண்ணையாவது கஷ்டப்படுத்தாம பார்த்துக்கோ” என்று ஆரவ்வை மீண்டும் அழைத்தாள் சுவேரா. விண்ணரசியும் அவள் அண்ணனும் மனோகர் மனைவியுடன் அமர்ந்து கொண்டனர். அவன் தன் தங்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே சாய் அவளை வருத்தமுடன் பார்த்து கையை விரிக்க, லாவண்யா அழுது கொண்டே அவனிடம் வந்து அமர, நிமிர்ந்து அமர்ந்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“சாய் தோளில் சாய்ந்து, நான் யாருக்கும் ஏதும் செய்யலையேடா? அப்புறம் ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? இதுக்கு நான் பிறக்காமலே இருந்திருக்கலாம்” கதறி அழுதாள்.
மனோகர் அவர்களருகே வந்து, இப்பவாது நான் சொல்றதை கேளுங்கடா. நாங்களும் யாருமில்லாமல் தான் இருக்கோம். நீங்களும் அங்கொருவர் இங்கொருவராக இருக்கீங்க? நாம குடும்பமாக சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கு? லாவா..உன்னோட பெற்றோர் உனக்காக எதுவும் யோசிக்காமல் அவங்களுக்கென குடும்பம் அமைத்து சந்தோசமா இருக்காங்க. நீ தான் கஷ்டப்படுற?”
நிமிர்ந்து அவள் சாய்யை பார்க்க, “லாவா, நாம அவங்களோட போகலாமா?” சாய் கண்ணீருடன் கேட்க, ம்ம்..என்னால் இதுக்கு மேல தனியா இருக்க முடியாது. எனக்காக குடும்பம் வேண்டும் என்றாள்.
மனோகர் கண்ணீருடன் இருவரையும் அணைத்துக் கொண்டார்.
“ஆனால் அம்மா, அப்பான்னு அழைக்க மாட்டேன்” சாய் சொல்ல, “நான் வேணும்ன்னா முயற்சி செய்கிறேன்” லாவா சொல்ல, அவருக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. வேகமாக கதவை திறந்து தன் மனைவியிடம் வந்து நின்றார்.
“என்னாச்சுங்க?” அவர் மனைவி கேட்க, “ராஜீ பசங்க ஒத்துக்கிட்டாங்க. நம்மோட வந்து தங்குறதா சொல்லீட்டாங்க” அவர் மனைவியை தூக்கி சுற்றினார். எல்லாரும் கண்ணை விரித்து பார்த்தனர்.
சுவேரா அவரிடம் வந்து, “எல்லாரும் இருக்காங்க. என்ன பண்றீங்க?” கேட்டாள்.
ஏன்டி, என்னோட புருசன் என்னை தூக்கி சுத்துறார். உனக்கு என்னடி? உனக்கும் வேணும்ன்னா உன்னோட புருசனை தூக்கி சுத்த சொல்லு..
“இது ஒன்னு தான் குறையா கிடக்கு பாரு. என்னிடம் ஒழுங்கா பேச கூட தெரியல. இவ்வளவு லவ்லாம் அவருக்கு வராதுப்பா. நான் தான் அவரை தூக்கி சுத்தணும்” நொடித்து சுவேரா பேச, விண்ணரசி சிரித்தாள்.
“ஹலோ சிரிக்காதீங்க. உங்க கதை எனக்கு மேல இருக்கும். நீங்க வேணும்ன்னா எங்க சாய்யை ட்ரை பண்ணுங்களேன்” சுவேரா சொல்ல, விண்ணரசி அதிர்ந்து அவளை பார்த்தாள். அவள் அண்ணன் அவளை முறைத்து பார்த்தான்.
“நான் என்ன தப்பா சொல்லீட்டேன்? உங்க அண்ணன் முறைக்கிறாரு” சுவேரா கேட்க, ராஜேஸ்வரி சினமுடன் அவள் காதை திருகி, “சும்மா இரு இல்லை உன்னோட அண்ணாவை வர வச்சிருவேன்”.
வர வையுங்க. நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன்.
“என்ன?”
அவர் காதருகே வந்து, லாவாவை கனெட் பண்ண வேண்டாமா? இதான சரியான நேரம்..
ஏய், நீ துருவை விட பாஸ்ட்டா இருக்க?
அய்யோ, அவளை என்னோட சேர்க்காதீங்க. நான் தற்கொலை முயற்சியெல்லாம் செய்ய மாட்டேன்ப்பா..
“ஓ, அப்படியா? அப்ப மேடம் என்ன செய்வதாக உத்தேசம்?” என்ற குரலில் திடுக்கிட்டு நகர்ந்தாள் சுவேரா.
கவின், சில போலீஸூடன் வந்திருந்தான். அவன் நக்கலாக அவளை பார்க்க, நான் தற்கொலையெல்லாம் செய்ய மாட்டேன். நேரடியாக கொலை தான்..
“அவ்வளவு தைரியமா மேடமுக்கு?” கவின் அவளை நெருங்கி, “அப்ப ரெடியா இரு” என்றான்.
அவனை முறைத்தாள் சுவேரா.
“நீங்க ஆது அண்ணாவை தான பார்க்க போனீங்க? என்னாச்சு?”
“அவனுக வருவானுக” என்ற கவின், “சாய் முழிச்சிட்டானா?” கேட்டான்.
ம்ம்..என்ற சுவேரா, “அண்ணா போகலைல்ல?” கவினிடம் கேட்டாள்.
“போகலை. இன்னும் கொஞ்ச நேரத்துல்ல வந்திருவாங்க” என்று சொல்லி கவின் சாய் அறைக்குள் சென்றான்.
உள்ளே விண்ணரசி தயங்கி தயங்கி சாய்யிடம் பேசிக் கொண்டிருக்க, அவள் அண்ணன் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.