வல்லவன் 33

என்னடா சொன்ன? அம்மாவை விட்டு வந்துட்டியா? அவங்க திட்டியதை அமைதியாக இத்தனை நாள் கேட்டுக் கொண்டிருந்தது நம்ம நட்புக்காக மட்டுமல்ல உன் அம்மாவுக்காகவும் தான்.

அவங்களுக்கு உன்னோட மாமாவும் நீயும் தான் உலகமே! ஆனால் நீ இப்படி பேசுற? என்னோட அம்மா, அப்பா எப்படி என்னை தனிமையில் தவிக்க விட்டாங்களோ? அதே போல உன்னோட அம்மாவை விட்டு வந்திருக்க? உனக்கு புரியுதா இல்லையா? கத்தினாள் லாவண்யா.

சுவேரா அங்கு வந்தாள்.

“அவங்களால தான் என் நிம்மதியே போச்சு” நேசன் சொல்ல, நிம்மதி போச்சா. உங்க அம்மா தெய்வம்டா. உன்னை மட்டும் நேசிக்கிறாங்க. அவங்க எண்ணத்தை இன்னுமா நீ புரிஞ்சுக்கலை. ஜானுவை நீ கல்யாணம் செய்து கொண்டால் நீ அவங்க பக்கத்துலே இருப்பன்னு தான் அவங்க அண்ணன் பின்னாடியே சுத்திட்டு இருந்தாங்க. ஜானுவையும் பக்கத்திலே வச்சிட்டு இருந்தாங்க. எல்லாமே இப்ப கூட உன்னை விட்டு பிரிய முடியாமல் தான் செய்திருக்காங்க.

ஆனால் அவங்க உன்னை..

ஆமா, என்னை ரொம்ப கஷ்டப்படுத்தீட்டாங்க. என்னால மறக்க முடியாது. உங்க வீட்ல கொஞ்ச நேரத்துக்கு மேல என்னால இருக்க முடியாதுடா. உன்னோட எப்படி வாழ்வது? இத்தனை நாள் உன் அம்மாவை புரிந்து அமைதியாக இருந்த நீ, எனக்காக இப்படி அவங்கள அநாதையா விட்டு வந்துட்ட..

“அதான் அவங்க அண்ணன் இருக்கார்ல்ல” முகத்தை திருப்பினான் நேசன்.

அண்ணனா? அவர் குடும்பம் வேற. அவங்க வேற. இது போல் நம்பி என் அப்பா பேச்சை கேட்டு ஏமாந்து சென்று கொஞ்சம் விட்ருந்தால் என் வாழ்க்கையே போயிருக்கும். எப்படியோ தப்பி வந்திருக்கேன். அவனுகளுக்கு மட்டும் நான் இங்கே இருப்பது தெரிந்தால் வந்திருவானுக.. என்றவள் அதிர்ந்து ஆரவ்வை பார்த்து..

மேம்..ஹாஸ்ட்டல்..நான் மறந்துட்டேன். எல்லாரும் பாதுகாப்பா இருக்காங்களா? கேட்டாள்.

“ம்ம்..இனி அவங்க உன்னை தேடி வர மாட்டாங்க” ஆரவ் சொல்ல, ஏன்? என்ன நடந்தது?

கவின் தான் காரணம். அவனிடம் கேட்டுக்கோ நேசனை முறைத்தான்.

வெளியிலிருந்து அழுகை சத்தம் கேட்க, எல்லாரும் வெளியே பார்த்தனர்.

நேசம் அம்மா அழுது கொண்டிருந்தார். அவர் தலையில் இரத்தம் வழிந்தது.

“ஏம்மா, இப்படி அழுதுட்டு இருக்க? டாக்டர் வந்தா எங்களை தான் திட்டுவார்” என்று ஒரு செவிலியர் அவரை திட்ட, மற்றவள் அவளை பார்த்து,

தலையில இரத்தம் வருது. நீ என்ன திட்டிட்டு இருக்க? சத்தமிட்ட, “அம்மா இங்க வாங்க” என்று அவர் கையை பிடித்தாள் ஒரு செவிலியர்.

நேசன் பதறி அவன் அம்மாவிடம் வந்தான். லாவண்யாவும் வெளியே வர எண்ண, அவன் அம்மா அழுது கொண்டே அவளை கட்டிக் கொண்டார்.

அவரை நகர்த்தி, “என்னாச்சு ஆன்ட்டி?” கேட்டாள்.

என்னோட அண்ணனும் என் மகனும் என்னை விட்டு போயிட்டாங்க. அண்ணாவை பார்க்க வீட்டுக்கு போனேன். அண்ணி என்னை அடிச்சிட்டாங்கடா. அண்ணா வேடிக்கை பார்த்துட்டு இருக்கான் அவர் அழுது கொண்டே சொல்ல, லாவண்யா நேசனை பார்த்தாள்.

“மேம், முதல்ல உட்காரு” அந்த செவிலியர் பொண்ணு சொல்ல, லாவண்யா அவரை அமர வைத்து அருகே அமர்ந்தாள்.

நீங்க மருந்து போட்டு விடுங்க சிஸ்டர்…

அந்த பொண்ணு மருந்தை போட்டுக் கொண்டிருக்க, நேசன் அம்மா லாவண்யாவையே பார்த்தார்.

சுவேரா அறைக்குள் வந்து, லாவா வா..என்று அவளை இழுத்தாள்.

சுவா, இரு ஆன்ட்டி மருந்து போட்டுக்கட்டும்..

அவங்க என்னமும் செய்யட்டும். உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருப்பாங்க. நீ இவங்களால எவ்வளவு அழுதிருப்ப? அவங்க செய்ததற்கு பதில் தான் பகவான் கொடுத்துட்டார். அவங்க பக்கத்துல்ல நீ இருக்கக் கூடாது..வா மேலும் இழுத்தாள்.

சுவா..இரு. நானும் உன்னிடம் பேசணும்..

“பேசணும்ல்ல வா” சுவேரா அவளை இழுக்க, “விடு சுவா” ஆரவ் கூறினான்.

அண்ணா, அவங்க என்று ஆரவ்வையும் லாவண்யாவையும் பார்த்தாள்.

லாவா, அண்ணா துருவை லவ்..

போதும் சுவா. அமைதியா இருக்கியா? கத்தினாள் லாவண்யா.

“லாவா” அதிர்ந்து சுவேரா கண்கலங்க விலகினாள்.

ப்ளீஸ் சுவா, விட்ரு. நமக்கு வேறொரு முக்கியமான வேலை இருக்கு..

செவிலியரை பார்த்த லாவண்யா, “விண்ணரசி மேம் எங்க இருக்காங்க?”

மேம், ஆப்ரேசன்ல்ல இருக்காங்க. உங்களை பார்த்துட்டு தான் போனாங்க என்றாள் அந்த பொண்ணு.

நான் அவங்கள பார்க்கணுமே!

மேம், அவங்க ஆப்ரேசன் முடிந்தவுடன் அவங்க ரவுண்ட்ஸ் போகணும். அவங்க இன்று பிஸி மேம்..

நம்ம சாய்க்கு தான் ஆப்ரேசன் பண்றாங்க. எதுக்கு அவங்கள பத்தி கேக்குற லாவா? நேசன் கேட்டான்.

சாய் அவங்கள தான் காதலிக்கிறான்.

வாட்? நேசன் அதிர, செவிலியரோ..மேம் என்ன சொல்றீங்க? இப்ப ஆப்ரேசன் தியேட்டரில் இருக்கும் பேசண்ட்டா மேம்மை லவ் பண்றார்.

ஆமா, அவன் அன்றைக்கு பின் உங்க டாக்டரிடம் பேசவே இல்லை.

அய்யோ மேம், விண்ணரசி மேம்மிற்கு என்கேஜ் ஆகிடுச்சு. அடுத்த மாதம் மேரேஜ்..

“மேரேஜா?” சுவேரா கேட்க, “என்ன சொல்றீங்க? நிஜமாகவா?” லாவண்யா கேட்டாள்.

எஸ் மேம், சாரும் டாக்டர் தான். “குட் வெல் ஹாஸ்பிட்டல்” டாக்டர் அவர் செவிலியர் சொன்னாள்.

“அவரை பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க?” லாவண்யா கேட்க, “இதை எதுக்கு கேக்குற? தேவையில்லாத வேலையை பார்த்து வச்சிறாத” ஆரவ் சொல்ல, அவனை முறைத்து விட்டு செவிலியரை பார்த்தாள்.

எனக்கு அவர் பற்றி தெரியாது மேம். உங்க நம்பர் கொடுங்க. நான் விசாரித்து சொல்றேன். ஆனால் நான் சொன்னேன்னு சொல்லாதீங்க. என்னோட வேலை போயிரும். அப்புறம் என்னால என்னோட அம்மாவை பார்த்துக்க முடியாது செவிலியர் கூறினாள்.

“என்னை மன்னிச்சிரும்மா” லாவண்யா காலில் விழுந்தார் நேசன் அம்மா.

ஆன்ட்டி, என்ன செய்றீங்க?

இல்லம்மா, உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருப்பேன். ஆனாலும் என்னை புரிஞ்சு வச்சிருந்திருக்க? அழுதார் அவர்.

இருக்கட்டும் ஆன்ட்டி..

நேசாவுக்கு உன்னை பிடிக்கும்ன்னு எனக்கும் தெரியும்மா. எனக்கு பயம். எங்கே வெளியிலிருந்து வரும் பொண்ணு என்னையும் அவனையும் பிரிச்சிடுவாளோன்னு. அதான் ஜானுவை அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்ன்னு பிடிவாதம் செய்தேன். உன்னையும் கஷ்டப்படுத்தினேன். என்னை மன்னித்து நேசனை கல்யாணம் செய்துக்கோம்மா..

இல்ல ஆன்ட்டி, எனக்கு அவன் நண்பன் மட்டும் தான். என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. சாரி…இருவரும் ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கோங்க. உங்களுக்கு நல்ல மருமகளா ஒரு பொண்ணு கிடைப்பா என்றாள்.

அவர் வருத்தமாக தன் மகனை பார்க்க, நேசன் கண்ணீருடன் லாவண்யாவை பார்த்தான். செவிலியர் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நேசா, என்னால தான எல்லாமே. அம்மாவை மன்னிச்சிருடா” அவன் காலில் அவர் விழ, “அம்மா” என்று திகைத்து அவரை தூக்கி விட்டு, இதுக்கு மேல வேண்டாம்மா. லாவாவை விட்ருங்க. எனக்கு கஷ்டமா இருக்கும். நான் பழகிக்கிறேன் என்று ஆரவ்வை பார்த்தான்.

சாய், உன்னோட நண்பன் தான?

ஆமாம்மா..சொல்லி இருக்கேன்ல்ல..

ம்ம்..அவனை பார்த்துட்டு வீட்டுக்கு போகலாமா? அவன் அம்மா கலவரத்துடன் நேசனை பார்த்தார்.

வீட்டுக்கு இல்லைம்மா.. உங்க அண்ணன் வீட்டுக்கு..

“வேண்டாம்டா” அவர் மனம் சோர்ந்து கூறினார்.

நாம உறவு கொண்டாட போகலை. அவங்க இதுவரை செய்த கணக்கை தீர்க்க வேண்டாமா? நீங்க உறுதியா சொல்லுங்கம்மா. இனி அண்ணா, அண்ணி, ஜானூன்னு போக மாட்டீங்கல்ல?

“இல்லை” கண்ணீருடன் தலையசைத்து, “அதுக்கு பதில் எனக்கு நீ ஒன்று மட்டும் செய்” என்றார் அவன் அம்மா.

எல்லாரும் அவரை பார்க்க, நீ கல்யாணம் பண்ணிக்கணும்..

ம்ம்..லாவண்யாவை பார்த்து, என்னால லாவாவை விட முடியாமல் கஷ்டப்பட்டேன். எங்களது ப்ரெண்ட்ஷிப்பும் கெட்டுப் போக வேண்டாம்ன்னு நினைக்கிறேன் என்றான்.

ஜானுவை தவிர, நமக்காக நம்மை மட்டும் விரும்பும் பொண்ணா பாருங்க. எனக்கும் சப்போர்ட் வேணும். உங்களுக்கும் துணை வேண்டும்..

ம்ம்..

“கனி” சத்தம் கேட்க, அந்த செவிலியர் திரும்பி பார்க்க, “உன்னோட அம்மாடி” என்று மூச்சிறைக்க வந்த பொண்ணு “வாடி” அவள் கையை பிடித்து இழுத்தாள்.

“என்ன?” செவிலியர் பதட்டமாக அவளை பார்த்தார்.

“வாடி, உன்னை கடைசி நிமிடமாவது பார்க்கணும்ன்னு நினைக்கிறாங்க” என்று அந்த பொண்ணு கண்ணீருடன் சொல்ல, “அம்மா” என்று மறுநொடி ஓடினாள் அறைக்கு..

எல்லாரும் அந்த பொண்ணை பார்த்துக் கொண்டு நிற்க, லாவண்யா நேசன் அம்மாவை பார்த்தாள். அவரும் அவளை பார்த்து விட்டு அந்த பொண்ணு சென்ற திசையை பார்த்தார்.

“என்ன ஆன்ட்டி பாக்குறீங்க?” லாவண்யா புருவத்தை உயர்த்தினாள்.

“நேசா, வாடா” அவன் அம்மா அவனை இழுக்க, “அம்மா, எங்க? என்ன பண்றீங்க?” சினமுடன் கேட்டான்.

நேசனை வரவேற்பறையில் அழைத்து சென்று “கனி” என்ற பெயரை கூறி, “அந்த செவிலியர் பொண்ணு அம்மா எந்த அறையில இருக்காங்க?” கேட்டார்.

“அம்மா, எதுக்கு?” நேசன் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, வரவேற்பறை பொண்ணு கூறிய அறைக்கு அழைத்து சென்றார்.

கனிகாவின் அம்மா அவள் கையை பிடித்து பேச முடியாமல்..உனக்கு திருமணம் செய்து வைக்க கூட நாதியில்லாமல் போச்சு..திணறியவாறு,

“தனியா..எப்படி? பயப்படாம இரு..” அவள் கையை இறுக பற்றினார். அவர்கள் கை மீது நேசன் அம்மா அவன் கையை இழுத்து வைத்தார்.

ம்மா..அவன் சினமுடன் அழைக்க, கண்ணை உயர்த்தி அவனை பார்த்து கனிகாவின் அம்மா நேசன் கையை பற்றி, “பார்த்துக்கோங்க மாப்பிள்ள” என்று அவன் கையை பிடித்தவாறு கண்ணை மூடினார்.

கனிகாவோ அழுவதை தவிர எந்த உணர்வும் இல்லாமல் இருந்தாள்.  அருகே இருந்த அவளது தோழி நேசனையும் அவன் அம்மாவையும் பார்த்து விட்டு, கனிகா தோளில் கையை வைத்தாள்.

“சாப்ஸ், அம்மா என்னை விட்டு போயிட்டாங்கடி” அவளை அணைத்து அழுதாள்.

“கனி” அவள் அழைத்து, நேசனையும் அவன் அம்மாவையும் பார்த்தாள்.

இப்பொழுது தான் அவள் அம்மா நேசன் கையை பிடித்திருப்பதை பார்த்தாள். நேசன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கனிகா எழுந்து, இருவரையும் பார்த்து நீங்க..நீங்க..

சாப்ஸ் அவங்க அறை மாறி வந்துட்டாங்க. கண்ணீருடன் எதை எதையோ பேசினாள் கனிகா.

“கனி, அவங்க அம்மாவிடம் என்ன பேசினாங்கன்னு கேட்கலையா?” சாப்ஸ் கத்தினாள்.

அம்மாவிடம் பேசினாங்களா?

நேசன் அவள் அம்மா கையை எடுத்து விட்டு அவன் அம்மாவை பார்த்தான்.

உனக்கு யாருமில்லைன்னு இனி நீ சொல்லக் கூடாது. நாங்க இருக்கோம். சொல்லுடா அவன் அம்மா நேசனை இடிக்க, அவன் அவரை முறைத்தான்.

கனிகா முன் தான லாவண்யாவை கஷ்டப்படுத்தியதாக சுவேரா கூறி இருப்பாள். லாவண்யாவை தான் காதலிக்கிறேன்னு நேசன் கூறி இருப்பான். அதை எண்ணியவள் தன் தோழியை பார்த்தாள்.

“என்னடி?” சாப்ஸ் கேட்க, இல்லை வேகமாக தலையசைத்து நேசன் அம்மாவை பார்த்து, “ஆன்ட்டி..நீங்க கிளம்புங்க” என்று அமர்ந்து கொண்டாள்.

கனிகாவை தன் பக்கம் திருப்பிய நேசன் அம்மா, “உன்னோட அம்மாவிடம் என்னோட மகன் உன்னை பார்த்துப்பதாக பிராமிஸ் செய்திருக்கான்” சொல்ல, கனிகா கண்ணீருடன் அவனை பார்த்தாள். நேசன் எந்த உணர்வும் இல்லாமல் யாரையோ பற்றி பேசுவது போல நின்றான்.

ஹே..கனி, இவங்க சொல்றதுன்னு சரின்னு எனக்கு தோணுது. உனக்கு பாதுகாப்பு வேணும்டி..

எத்தனையோ ஹாஸ்ட்டல் இருக்குடி..

ஹாஸ்ட்டல் பாதுகாப்புன்னு நீ நினைக்கிறீயா? அவளருகே அமர்ந்து சாப்ஸ் கேட்டாள்.

அமைதியாக இருந்தாள் கனிகா.

“அம்மா, ஃபோர்ஸ் பண்ணாதீங்க” நேசன் சொல்ல, இரு மருத்துவர்கள் உள்ளே வந்தனர்.

“சாரி கனிகா” அவர்கள் அவள் அம்மாவை பார்க்க, அவளும் அவள் அம்மாவை பார்த்தாள்.

அதில் ஒரு மருத்துவரின் பார்வை அவளிடம் செல்ல, சாப்ஸ் நேசன் அம்மா அருகே வந்து, சார் இவங்க கனியோட அத்தை, அவரு அவளோட முறைப்பையன்.

நேசன் அவளை புரியாமல் பார்க்க, கனிகாவோ அமைதியாக இருந்தாள். நேசன் அம்மா அருகே வந்து, மருத்துவர் இருவரையும் அறிமுகப்படுத்துவது போல அவன் பார்வையை காட்டினாள்.

அவன் கனிகாவை பார்த்து, “கனிகா உங்க ரிலேசனோட பெரியதாக தொடர்பில் இல்லைன்னு சொன்னீங்க” என்று நேசனை பார்த்தார்.

எங்களுக்குள் சின்ன பிரிவு. அவ்வளவு தான். என்னோட மருமகளை நான் பார்த்துக்கிறேன் நேசன் அம்மா கனிகா கையை பிடிக்க, சாப்ஸ் நேசனை நெருங்கி வந்தாள்.

“சாரதா, நீங்க இங்க என்ன பண்றீங்க?” அவன் கடுப்புடன் கேட்க, சார் கனிக்கு உதவியாக இருக்க வந்தேன். அவ ரிலேஷன் வந்துட்டாங்க. நான் கிளம்புகிறேன் என்று நேசனை பார்த்தாள் சாரதா..

நேசன் அவளை பார்க்க அவன் அம்மா அருகே வந்து, சொல்லுடா..உங்க கல்யாணத்தை எப்பொழுது வச்சுக்கலாம்? என்று கேட்க, நேசன் அவன் அம்மாவை சினமாக பார்க்கும் முன் அவனருகே வந்து அவனது விரலை பிடித்தார்.

நேசன் வேகமாக அவன் அம்மாவை பார்க்க, அவன் அம்மா அந்த டாக்டரை பார்க்க சொல்லி கண்ணை காட்டினார்.

நேசன் அவரை பார்க்க, அவரோ கனிகாவையே விடாமல் பார்த்தார். நேசனுக்கு புரிந்து விட்டது.

கனிகா அருகே வந்து, அவள் தோளில் கையை போட்டு, “வரும் நல்ல நாளிலே கல்யாணம் பண்ணிக்கலாம்மா” என்றான். அவன் அம்மா புன்னகைக்க, அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அந்த மருத்துவரோ, “கனிகா அம்மா இறந்த பின் வந்து பாக்குறீங்க? அவளை ஏமாத்த பாக்குறீங்களா?”

இல்ல சார், இவங்களுக்கு அம்மாவிற்கு உடல்நலமில்லைன்னு தெரியாது. இன்று மாமாவோட ப்ரெண்டை நம்ம ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க. அதுக்காக இவங்க வந்தாங்க. என்னை பார்த்தாங்க. அதான் அம்மாவை பார்க்க வரவும் சரியாக “அம்மா” சொல்ல முடியாமல் அழுதாள். அவள் தோளில் கையை போட்டிருந்த நேசனுக்கு மனம் ஏதோ செய்தது.

“திடீர்ன்னு வந்திருக்காங்கல்ல? இந்த ஏழு வருசமா வரலைல்ல?” அதான் கேட்டேன்.

“வாங்க கிளம்பலாம்” இருவரும் கிளம்ப, நேசன் அவள் தோளில் இருந்து கையை எடுத்து அவளை பார்த்து, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ வேலையை விடணும். அம்மாவை பார்த்துக்கணும். எனக்கு சப்போர்ட்டா இருக்கணும் என்றான்.

வேண்டாம் சார், என்னை நானே பார்த்துப்பேன்.

சாப்ஸ் ஓடி வந்து, “தேங்க்யூ சார்..சரியான பொறுக்கி டாக்டர்” என்று சொல்ல, “சாரதா” செவிலியர் ஒருவர் அழைக்க, “அப்புறம் பார்க்கலாம்” அவள் ஓடினாள்.

“உனக்கு என் மகனை பிடிக்கலையாம்மா?” நேசன் அம்மா கேட்க, நேசனை பார்த்தாள் கனிகா.

“ஆன்ட்டி, உங்க மகன் வேற பொண்ணை காதலிக்கும் போது நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

வார்டு பாய் ஒருவன் வந்து, சாரி கனி. கெல்ப் கூட செய்ய முடியல. பென்ட கழட்டுறானுக..

இருக்கட்டும் அண்ணா..

“இவங்க யாரு?” அவன் கேட்க, “அவளை கல்யாணம் செய்து கொள்ளப் போறவன்” நேசன் சொல்ல, அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

ஓ..சந்தோசம்மா? நானும் நினைச்சேன். எப்படி துணையில்லாமல் இருப்பன்னு. அம்மாவை வீட்டுக்கு கொண்டு போகப் போறீயா? அவர் கேட்க, இல்ல அண்ணா. வீட்டு முதலாளியம்மா திட்டுவாங்க கண்ணீருடன் அவள் அம்மா அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

“நான் பேசிப் பார்க்கவா?” நேசன் கேட்டான்.

வேண்டாம். அம்மாவுக்கு செய்ய வேண்டியதை இங்க வைத்தே செய்யலாம் என்றாள் அழுகையுடன்.

அவளருகே சென்று அமர்ந்து கொண்டார் நேசன் அம்மா.

வார்டு பாய் கையில் பணத்தை கொடுத்து, “பிரஸ்யூஜர் ஆரம்பிங்க. நானே செய்கிறேன்” என்றான் நேசன். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

நான் செய்யலாம்ல்ல? அவன் கேட்க, ம்ம்..என்றாள்.

சார், நீங்க என்ன வொர்க் பண்றீங்க? அவர் கேட்க, அவன் லாயர் எனவும் அவர் மகிழ்வுடன், கனியை இங்க அனுப்பாதீங்க சார். வேற ஹாஸ்பிட்டலுக்கு கூட வேலைக்கு அனுப்பணும்ன்னா அனுப்புங்க. அவ ரொம்ப கஷ்டப்பட்டா. அதை விட இங்க டாக்டர்ஸூம் அவளை கஷ்டப்படுத்தினாங்க..

நேசன் கனிகாவை பார்த்தான்.

“நல்லா பார்த்துக்கோங்க சார்” என்று நான்கைந்து முறை கூறி அவர் செல்ல, அவள் அம்மா படுக்கையில் சாய்ந்திருந்த அவளது கூந்தலை நேகன் அம்மா வருடினார்.

“அம்மா, மாமா வீட்டுக்கு இன்று வேண்டாம். நாளை பார்த்துக்கலாம்” சாய் விழித்தவுடன் கனி வீட்டுக்கு சென்று அவளது பொருட்களை எடுத்துட்டு வந்திருவோம்..

“இந்த வாரத்துல்ல நல்ல நாள் பாருங்க” என்று அவளை பார்த்து, “கொஞ்சம் என்னை பாரு” என்றான். அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

நான் லாவாவை காதலித்தேன் தான். அவளிடமிருந்து நான் வெளியே வர நீ தான் உதவணும்..

ம்ம்..

அவள் அம்மாவை எடுத்து செல்ல, அவர்களும் சென்றனர்.

ஆப்ரேசன் தியேட்டரில் இருந்து வந்த விண்ணரசி லாவண்யா இருக்கும் அறைக்கு நேராக வந்தாள்.

லாவண்யா அவளை பார்த்து, “அவன் எப்படி இருக்கான்? முழிச்சிட்டானா?” கேள்விகளை அடுக்கினாள்.

ஆப்ரேசன் நன்றாக முடிந்தது. உங்க ப்ரெண்டு ஆபத்து கட்டத்தை தாண்டிட்டார். விழிக்கட்டும்.

நீங்க நல்லா இருக்கீங்களா? நன்றாக ஓய்வெடுங்கள் டாக்டர் சொல்ல, ம்ம்..என்று சுவேராவை பார்த்தாள் லாவண்யா.

“மேம், உங்க பியான்சே உங்களுக்காக வெகு நேரமாக காத்திருக்கார்” செவிலியர் ஒருவர் சொல்ல, “அவரை பக்கத்துல்ல இருந்து பார்த்துக்கோங்க. நான் வாரேன்” விண்ணரசி நகர, “சுவேராவிடம் சென்று எப்படி பேசுறது?” லாவண்யா கேட்டாள்.

“லாவா, நாம லேட் பண்ணீட்டோம்ன்னு நினைக்கிறேன்” சுவேரா சொல்ல, “அவனுக்கு தெரிந்தால் கஷ்டப்படுவானே!” வருத்தமுடன் லாவண்யா பேசிக் கொண்டிருக்க, “யாரு வருத்தப்படுவா? லாவா குட்டிக்கு யார் மீது இந்த கவலை?” ஒரு பெண்மணி உள்ளே வந்தார்.

மேம்..நீங்க..சார் வரலையா? லாவண்யா ஓடிச் சென்று அந்த பெண்மணியை அணைத்தாள்.

வந்துருக்காரு. நேசனை பார்த்தார்.

“அவன் ஏதும் பிரச்சனை பண்றானா? சொல்லு அவனை ஒரு வழி செய்திடலாம்” அவர் புன்னகையுடன் கூற, அதற்கு இனி அவசியமிருக்காது. அவனோட அம்மா தெளிவாகிட்டாங்க மேம்.

ஆமா, எல்லாரும் இப்படி வரிசையா அட்மிட் ஆகி இருக்கீங்க? கேட்டார்.

மேம், சாய் தான் இன்னும் விழிக்கலை. கஷ்டமா இருக்கு. என்னால தான் லாவண்யா கண்ணீருடன் அவரை பார்த்தார்.

“அவனுக்கென்ன? மனதில் திடமோட இருப்பான். அவனுக்கு ஏதும் ஆகாது” அவர் சொல்ல, மேம் என்று லாவண்யா அவன் காதலை கூறி விண்ணரசியின் நிச்சயத்தை பற்றி கூறினாள்.

இவன் தான் சொல்லலைல்ல. நாம பேசிப் பார்க்கலாம்..

“யாரு இவங்க?” சுவேரா கேட்க, “சுவா..நீ தான? அவரு சொன்னாரு. நாட்டி கெர்ல்” சுவேரா கன்னத்தை கிள்ளினாள்.

யாரு? சுவேரா கேட்க, மனோகர் சார் வொய்ப்.

ஓ..சுவேரா அவரை பார்க்க, “உன்னோட அப்பன் நல்ல வேலையை பார்த்து விட்டு போயிருக்கான் போல?” லாவண்யாவை பார்த்தார்.

அவருக்கு அம்மாவே பரவாயில்லை. ரௌடியோட திருமணம் ஏற்பாடு செய்துட்டார்..

தெரியும். வா நாம டாக்டர் பொண்ணை பார்க்கலாம் அவர் அழைக்க, இது சரியா வருமா? ஆரவ் கேட்டான்.

யாரு லாவா இந்த பையன்? அவர் கேட்க, சுவேராவை பார்த்தாள் லாவண்யா. அவள் கையை கட்டிக் கொண்டு லாவண்யாவை பார்த்தாள்.

“இவரு சுவாவோட அண்ணா, ஆத்விக் சார் ப்ரெண்டு மேம்” என்று சுவேராவிடம் புருவம் உயர்த்தி எப்படி? என்பது போல பார்த்தாள்.

ஆரவ் லாவண்யாவின் கெத்து பார்வையில் புன்னகைத்தான்.

“பெரிய ரகசியம் பாரு. கொஞ்ச நேரம் உன்னோட மேம் இருந்தா அவங்களுக்கே தெரிஞ்சிடும்” சுவேரா சொல்ல, “என்ன தெரிஞ்சிடும்?” மூவரையும் பார்த்தார் அவர்.

ஒன்றுமில்லை மேம். வாங்க போகலாம்.

ஆரவ் லாவண்யா கையை பிடித்து, “என்ன பிரச்சனை? எதுக்கு என் மேல கோபமா இருக்க?”

லாவண்யா அவன் கையை தட்டி விட்டு, மேம்..அவங்க கிளம்புறதுக்குள்ள போகணும்..

சொல்லீட்டு போ லாவா..

“என்னம்மா பிரச்சனை?” மனோகர் சார் மனைவி கேட்க, “சார் தேவையில்லாம பேசாதீங்க. எனக்கு உதவியதற்கு நன்றி” என்று சினமாக கூறி விட்டு, அவர் கையை பிடித்து சென்றார்.

அவர்களுடன் செல்லாமல் சுவேரா தன் அண்ணன் ஆரவ்விடம் வந்தாள்.

லாவாவும் உன்னை தான் காதலித்தாள். உனக்கும் அவளை பிடிச்சிருக்கு? என்ன செஞ்ச? அவ தேவையில்லாமல் கோபப்பட மாட்டாளே!

நான் ஒன்றும் செய்யலை. மும்பை கிளம்பும் முன் நம்ம வக்கீல் சாருடன் தான் பேசினேன். அன்று நடந்ததை சொல்லிக் கொண்டே வந்தவன்.

எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு போக வேண்டாம்ன்னு சொன்னா. அதுக்கு நான் சிந்தித்து..ஓ..பொறாமையில பொங்கிட்டு இருக்காலா? ஆரவ் சிரித்தான்.

தெளிவா சொல்றீயா?

எனக்கு கெர்ல் ப்ரெண்டு இருக்கா. பத்து வருசமா லவ் பண்றேன்னு சொன்னேன்..

சுவேரா சிந்தனையுடன், போச்சு..போச்சு..நம்ம வினுவை நீ லவ் பண்றதுனால தான் ஆது அண்ணா அவளுடன் சண்டை போட்டதாக நான் லாவா முன்னே சொல்லீட்டேன்.

வாட்?

ஆது, என்னால தான வினுவுடன் சண்டை போட்டானா?

லாவாவும் நீ தான் வினுவை லவ் பண்றன்னு நினைச்சிட்டு இருக்கா. ஆனால் வினுவும் ஆது அண்ணாவும் லவ் பண்றது அவளுக்கு தெரியும். நீ சொன்னது போல் பொறாமையாக இருந்தாலும் அவள் கோபம் நியாயம் தான் சுவேரா சொன்னாள்.

வினு அதான் பாய்சன் குடிச்சிருக்காலா? ஆரவ் அதிர்ந்து கேட்க, “நான் லாவாவை பற்றி பேசுகிறேன்” சுவேரா சொல்ல, முதல்ல ஆது- வினு பிரச்சனையை முடிக்கணும். அவன் வேற அங்க போனான். என்னாச்சுன்னு தெரியல..

வினு ஆதுவிடம் முகம் கொடுத்து கூட பேசலை. அவனை அங்கிருந்து கிளம்ப சொல்லீட்டார் உத்தமசீலன் பெரியப்பா கவின் அவர்களிடம் வந்து சொன்னான்.

“சாய் எப்படி இருக்கான்? ஆது இங்க தான வந்திருப்பான்” கவின் ஆரவ்வை பார்க்க, இங்கேயா? அண்ணா வரவேயில்லை. நான் இவ்வளவு நேரமும் சாய் அறைக்கு வெளியே தான் இருந்தேன்.

வரலையா? கவின் சிந்தனையுடன், அவன் அப்பாவை அழைத்து பேசினான். அவரை ஆத்விக் வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னான்.

லாவண்யா அதிகம் வெளியே போகாமல் இருப்பது தான் நல்லது. ரங்கராஜ் மகனை தான் லாவண்யா தந்தை அவளுக்கு திருமணம் செய்ய பார்த்த மாப்பிள்ளை. அவனுக கிட்ட பேசி புரிய வைக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால் அவளோட தந்தையிடம் தான் பேசணும் கவின் சொல்லிக் கொண்டிருந்தான்.

லாவண்யாவும் அந்த மேம்மும் அறைக்கு வந்தனர்.

சுவேரா அவர்களை பார்த்து, “என்னாச்சு? இருவரும் முகத்தை தொங்கப் போட்டு வந்துருக்கீங்க?”

லாவா, நாம ஏன் அந்த பொண்ணு குடும்பத்துல்ல பேசக் கூடாது? அவர் கேட்க, ஒத்துப்பாங்களா மேம்? அவள் கேட்டாள்.

என்ன விசயம்? கவின் கேட்க, சாய் பற்றி கூறிய லாவண்யா அவர்கள் இருவரும் பார்த்ததையும் கூறினாள்.

விண்ணரசியை பார்க்க இவர்கள் சென்றனர். அறைக்கு வெளியே யாருமில்லை. அதனால் உள்ளே சென்றனர். அதன் உள்ளே இருந்த அறையில் விண்ணரசிக்கு பார்த்த மாப்பிள்ளை கத்திக் கொண்டிருந்தான்.

இருவரும் மறைந்து கவனிக்க தொடங்கினர்.

விண்ணா, உன்னோட தாத்தாவும் என்னோட அப்பாவும் நல்ல பழக்கம். அதான் நம்ம திருமணம் பற்றி பேசினாங்க. அழகா இருக்க, நம்மை போல டாக்டர்ன்னு தான் உன்னை நான் கன்சிடர் பண்ணேன் இல்லை பட்டிக்காடாய் இருக்கும் உன்னை எதற்கு நான் திருமணம் செய்யணும்?

மேம், வீடியோ எதுக்கு எடுக்குறீங்க?

ஷ்..

நான் அழைத்தவுடன் வரணுமா இல்லையா? கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பேயில்லை. இப்படியே இருந்தேன்னா நமக்கு டிவோர்ஸ் கூட ஆகிடும்..

கல்யாணமே முடியல. அதுக்குள்ள டிவோர்ஸ் பத்தி பேசுறீங்க?

எல்லாத்தையும் யோசிக்கணும்ல்ல. உங்க குடும்பம் கலாச்சாரமான குடும்பம்ன்னு தான நாங்க பேசியதே! நீ சரியா வருவன்னு தோணலை.

சோ..

நீ வேலையை விட்ரு..

வாட்? நான் எதுக்கு விடணும்? எனக்கு பிடித்த விசயத்தை உனக்காக விட முடியாது.

விட முடியாதா? அவன் கத்தினான்.

“முடியாது” அவளும் கத்தினாள்.

சரி..அப்ப வா..உன்னோட தாத்தாவிடம் சொல்லிக்கலாம்..

“நான் எதுக்கு சொல்லணும்?”

உன்னோட குடும்பத்துக்கே நீ வொர்க் பண்றது பிடிக்கலை.

எல்லாத்தையும் விசாரித்து, சரியான இடத்துல்ல என்னை பிளாக்மெயில் பண்ற? இப்ப என்ன செய்யணும்?

வேலையை விடணும்..

யாருக்காகவும் என்னோட வேலையை விட முடியாது.

நீ என்னமும் செய். நான் பேசிக்கிறேன் அவன் சீற்றமுடன் வெளியேற, அவள் அவன் பின்னாலே ஓடினாள். நாங்க வந்துட்டோம் சொல்லி முடித்தாள் லாவண்யா.

ஆன்ட்டி, நீங்க சொல்றது சரி. நீங்க எடுத்த வீடியோவை முதல்ல குடுத்து அறிமுகமாகிக்கோங்க. எல்லார் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க. தென். எல்லாரிடமும் பழகுங்க. அப்புறம் சாய் காதலை சொல்லலாம்.

அதான பார்த்தேன். போலீஸ் மூளையில இந்த விசாரிக்கும் விசயம் மட்டும் செல்லவே செல்லாது சுவேரா சொல்ல, ஆமா ஆமா..விசாரிக்க வேண்டாம்.

கவின் சொல்றது தான் சரி. அவங்கள பத்தி தெரியாம எப்படி சாய்யை அவங்க குடும்பத்துல்ல சேர்க்க முடியும்? ஆரவ் கேட்டான்.

எதுவும் வேண்டாம். இதை நான் பார்த்துக்கிறேன். மேம் வீடியோவை எனக்கு அனுப்புங்க லாவண்யா சொல்ல, லாவா என்ன செய்யப் போற?

தெரியல. நான் பார்த்துக்கிறேன். எனக்கு யார் உதவியும் வேண்டாம்..

“ஆமா, எங்களுக்கு யார் உதவியும் வேண்டாம்” ஆரவ் சொல்ல, எல்லாரும் அவனை பார்த்து விட்டு லாவண்யாவை பார்க்க, அவனை முறைத்து விட்டு படுக்கையில் சென்று அமர்ந்து, “துரு இப்ப நல்லா இருக்கால்ல சார்?” கவினிடம் கேட்டாள்.

“அங்க எல்லாருமே மனசு கஷ்டத்துல்ல தான் இருக்காங்க” கவின் சொல்ல, சாய் இன்னும் விழிக்கவில்லை. எப்போது விழிப்பான்னு தெரியல..

நான் அவனை பார்த்துக்கிறேன் சுவேரா எழ, நீ எதுக்கு போற? கவின் கேட்டான்.

அண்ணா, நான் போறதுல்ல உனக்கு ஏதும் பிரச்சனையா?

“இல்லை” ஆரவ் தலையசைத்தான்.

நான் கேட்டதற்கு இன்னும் நீ பதில் கூறவில்லை.

உங்க அம்மாவுக்காக என்னால உங்களை கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது. நாளை கூட ஆது ஒரு மாப்பிள்ளையுடன் பேச அரேஞ்ச் செய்ததாக சொன்னான் சுவேரா சொல்ல, ஏன்? நான் கேட்டும் வேண்டாம்ன்னு சொல்ற? கவின் சினமுடன் கேட்டான்.

ஏப்பா, கல்யாணம் ஒருவருக்கு ஒருவர் கடைசி வரை பயணம் செய்வது. அதை இப்படியா கேட்ப? அம்மாவுக்காக, அப்பாவுக்காக திருமணம் செய்யக் கூடாது. நீ உனக்காக செய்யணும் மனோகர் சார் மனைவி கூறினார்.

“நல்லா சொல்லுங்க மேம்” லாவண்யா சொல்லி ஆரவ்வை முறைத்தாள்.

நேசன் தன் தாயுடன் வந்தான். அவன் பின் கனிகாவும் வந்தாள்.

நேசனை பார்த்த மனோகர் மனைவி, “டேய் படவா..என்ன வேலை பார்த்து வச்சிருக்க? சும்மா சும்மா பிள்ளையை கஷ்டப்படுத்திட்டு இருக்க?” லாவண்யாவிற்காக அவனை அடிக்க வந்தார்.

மேம், வேண்டாம். அப்புறம் நல்லா இருக்காது.

“என்னடா நல்லா இருக்காது?”

“அடிச்சா என்னோட அழகான கன்னம் வீங்கிடுமே! அதை சொன்னேன்” என்று ஆரவ் அருகே ஓடி வந்தான்.

அவனை பிடிப்பா. இந்த வாய்க்கு ஒன்றும் குறைச்சலே இல்லை. செய்ய வேண்டியதை திருந்த செய்ன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன். வாழ்க்கை ஒன்றும் விளையாட்டு அல்ல அவர் அவனை திட்ட, என் மேல தான் தப்பு அவன் அம்மா சொல்ல, நேசன் நின்று விட்டான்.

“நீங்க பேச வேண்டாம். உங்களிடம் பேச எனக்கு விருப்பமில்லை” அவர் முகத்தை திருப்பினார். நேசன் அம்மா எல்லாரையும் பார்த்து விட்டு, “லாவாம்மா, நேசா கல்யாணத்தை ஒரு வாரத்துல்ல வச்சுக்கலாம்ன்னு சொல்லீட்டான்”.

வாட்? ஆரவ் அதிர, சுவேரா அவனிடம் வந்து அவனை அடிக்க வந்தாள்.

“சுவா, அவசரப்படாத” லாவண்யா சொல்ல, “எவ்வளவு திமிர் இருந்தால் இதுக்கு பின்னும் உன்னை கட்டாயப்படுத்துவான்? அண்ணா அவனை பிடி” சுவேரா ஆரவ்வை பார்க்க, அவன் கனிகாவை பார்த்தான்.

“யார பாக்குற?”

நீ இங்க என்ன பண்ற? உன்னோட அம்மா..சுவேரா நிறுத்தி விட்டாள்.

நேசன் சுவேராவை நகர்த்தி விட்டு, கனிகா கையை பிடித்து, “நான் இவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” சொன்னான். எல்லாரும் அதிர்ந்து பார்த்தனர்.

“கங்கிராட்ஸ்டா” லாவண்யா கையை நீட்ட, சுவேரா அவள் கையை தட்டி விட்டு. அதான் வாயால சொல்லீட்டேல்ல போதும்.

“நீ எதுக்கு பொசசிவ் ஆற?” கவின் கேட்க, அவனை முறைத்து விட்டு அவள் கனிகாவிடம் சென்று, “உனக்கு சம்மதம் தான? அவன் பயங்கரமா பேசுவான். ஆமா நீ எப்படி? எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டான்?” சுவேரா கேட்க, கனிகா சொல்லவும்.. அதான..எல்லாம் இப்படி தான் இருக்குறானுக என்றாள்.

“ஏய், என்னை எதுக்கு இழுக்குற?” கவின் கேட்க, “ஏன்டா அவளை வேலையை விட சொன்ன?” இந்த வள்ளல்ல கண்டிசன் போடுறானாம். அதெப்படி அம்மாவுடன் வீட்ல இருக்கணும். உனக்கு சப்போர்ட் பண்ணனும். அவளுக்கு என்ன வேணும்ன்னு கேட்டியா?

“எனக்கு பாதுகாப்பு போதும்” கனிகா சொல்ல, லாவண்யா முகம் சுருங்கியது.

கனிகா அருகே வந்து, நீ இவனை கல்யாணமெல்லாம் பண்ணிக்க வேண்டாம். நான் ஹாஸ்ட்டல் தான் இருந்தேன். இப்ப நடந்த பிரச்சனையில்ல வேற ஹாஸ்ட்டல் தான் பார்க்கணும். நாம சேர்ந்து தங்கிக்கலாம். நாம ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருக்கலாம்..

கவின் சிரித்தான்.

சார், சிரிக்காதீங்க..

உன்னோட ஹாஸ்ட்டல் மட்டுமல்ல நீ எங்க போனாலும் உன்னோட மாப்பிள்ளை உன்னை தேடி வந்திருவான். உனக்கே பாதுகாப்பு இல்லை. இதுல அந்த பொண்ணையும் சேர்த்துக்கிறேன்னு சொல்ற? கவின் கேட்க,

லாவா..எதுக்கு ஹாஸ்ட்டல் தேடுற? ஆது அண்ணா வீடு இருக்குல்ல. நாம சேர்ந்து தங்கிக்கலாம். இதுக்கு தான் ஏற்கனவே நான் அழைத்தேன். வர மாட்டேன்னு சொல்லீட்ட..

“ஹாஸ்ட்டல் வேண்டாம் லாவா குட்டி. நம்ம வீட்ல இருந்துக்கலாம்” மனோகர் சார் மனைவி சொல்ல, இதை கேட்டுக் கொண்டிருந்த கனிகாவிற்கு மனம் கசந்தது. லாவண்யா மீது பொறாமை வந்தது.

“இது போல் தனக்கென யாரும் பேசவில்லை” கண்கலங்கினாள். “நமக்கென இப்படி எந்த நண்பர்களோ, உறவுகளோ இல்லையே?” மனம் வேதனையில் வெம்பிக் கொண்டிருந்தாள்.

நேசன் அம்மா அவள் கையை இறுக பற்றினார். அவர்கள் பேசிக் கொண்டிருக்க ஏதும் பேசாமல் நேசன் அம்மா கையை விட்டு வெளியே சென்றாள் கனிகா.

நேசன் அம்மா அவள் பின் செல்ல, கவின் அவர்களை பார்த்து “ஹேய்” சத்தமாக அழைத்தான். எல்லாரும் அவனை பார்க்க, கவின் நேசனிடம் வெளியே கண்ணை காட்டினான்.

நேசன் வெளியே செல்ல, எல்லாரும் வெளியே வந்தனர்.