அபிமன் நிகிதாவை செக் அப்பிற்காக அழைத்து சென்றிருந்தான்.
ஆரவ்வும் சுவேராவும் ஆத்விக் அறைக்குள் சென்றனர்.
“டேய், அவகிட்ட என்ன பேசுன? வினு முகமே சரியில்லை” ஆரவ் கேட்க, அவன் நிமிர்ந்து கூட பாராது “என்ன பேசினேனா? கேஷ் விவரம் தான் பேசினேன். அவள் சரியாக விளக்கவில்லை. அதனால் திட்டினேன். கோபத்துல்ல விடுப்பு எடுப்பதாக சொல்லீட்டு போயிட்டா” ஆத்விக் எண்ணி வைத்திருந்ததை சொல்ல, “ஓ..அப்படியா?” ஆரவ் கேட்டுக் கொண்டே சுவேராவை பார்த்தான்.
சுவேரா ஆத்விக்கிடம் ஏதும் கேட்கவில்லை. ஆரவ் முன் எதுவும் பேச வேண்டாம். அவனுக்கு தெரிந்தால் வருத்தப்படுவான் என்று அமைதியாக, “வா அண்ணா” அவனுடன் வெளியேறுவது போல் செல்ல, ஆரவ் வெளியே செல்லவும் “நடிக்காதடா” என்று சுவேரா ஆத்விக்கை பார்த்து சொல்லி விட்டு வெளியேறினாள்.
ஆத்விக் உள்ளிருந்த அறைக்கு சென்று அவள் கிழித்த படுக்கையை பார்த்து கண்ணீருடன் அதில் அமர்ந்து, அத்தலையணையை இறுக கட்டிக் கொண்டு அழுதான்.
வீட்டிற்கு வந்த துருவினி வீட்டில் யாருமில்லாமல் இருப்பதை பார்த்து, அவளறைக்கு சென்று முடங்கினாள். அதியா பசங்க வந்த பின்னும் அவள் வெளியே வரவில்லை.
உத்தமசீலன் ஆத்விக்கிற்கு அழைக்க, அவனோ அவன் வீட்டில் அவனறையில் சோககீதம் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆத்விக்கும் சுவேராவும் ஆத்விக் வீட்டிற்கு வந்தனர். துருவிக்காக மட்டுமே புன்னகைத்த ஆரவ்வால் லாவண்யாவை பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. தூரமிருந்தாவது பார்க்க எண்ணி ஹாஸ்ட்டலுக்கு சென்று கொண்டிருந்தான்.
ஆரியன், கவின், சித்திரன் ஹோட்டல் ஒன்றில் நுழைவதை பார்த்து வண்டியை அந்த ஹோட்டலுக்கு திருப்பினான் ஆரவ்.
உள்ளே வந்து வரவேற்பறையில் விசாரித்தான். அவர்கள் அறை எண்ணை கூற, நேராக சென்று கதவை தட்டினான். அவன் வருவான் என்று எதிர்பாராத மூவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
“ஆரவ், இங்க என்ன பண்ற?” ஆரியன் கேட்க, “மாம்ஸ்..மூவரும் சேர்ந்து வந்தீங்க? அதான் என்ன விசயம்ன்னு கேட்கலாம்ன்னு வந்தேன்” என்று அவன் பாட்டுக்கு உள்ளே சென்றான். கவின் இதுவரை அவனிடம் பேசவில்லை. அதற்கான நேரமும் அவனுக்கில்லை..
“ஆரவ், நீ கிளம்பு” ஆரியன் சொல்ல, தலைக்கு அடியில் கையை வைத்து படுக்கையில் படுத்துக் கொண்டு சித்திரனை பார்த்து, “என்னாட மாம்ஸோட ரகசிய சந்திப்பெல்லாம்?” புருவம் உயர்த்தி கேட்டான்.
மச்சான், கிளம்புங்க. முக்கியமான கேஷ். நாங்க பேசணும் சித்திரன் அமைதியாக சொன்னான்.
ஆரியனையும் கவினையும் பார்த்து, “சொன்னால் நானும் உதவுவேன்ல்ல. இப்ப நான் யார் பக்கமும் இல்லை. என்னிடம் எல்லாம் ரகசியமாக இருக்கும்” அவன் சொல்ல, கவின் மீண்டும் ஆரியனை பார்த்தான்.
எழுந்த ஆரவ் கவின் தோளில் கையை போட்டு, “என்னிடம் சொல்லக் கூடாத விசயமா?” கவின் முகத்தை பார்க்க, அவன் எந்த உணர்வையும் காட்டாமல் நின்றான். ஆரியனோ சிந்தனையுடன் அவனை பார்த்தான்.
“சித்திரன் சொல்லலாமா?” இருவரையும் பார்த்தான்.
“மாம்ஸ், என் மீதுமா நம்பிக்கை இல்லை” ஆரவ் கேட்க, நம்பிக்கை இப்ப பிரச்சனையில்லை. பிரச்சனை ரொம்ப பெரியது என்று கவினை பார்த்து விட்டு ஆரவ்விடம் அந்த பத்து கொலைகள் பற்றிய விவரத்தையும் சொன்னான்.
“ஓ.கே, இப்ப என்ன விசயம் பேச சந்திக்க இங்க வந்திருக்கீங்க?”
கவின் உங்களுடன் வேலை செய்தவன் தமிழ்ச் செல்வன் இல்லை. அவன் கிருஷ்ட்டின்..டேவிட். அவன் டாக்டர் “சைக்காட்டிஸ்ட்” ஹிப்னடைஸ் செய்பவன்..
ம்ம்..அவனுக்கு குடும்பமேயில்லை. அவன் சைந்தவி வளர்ந்த ஆசிரமத்தில் தான் வளர்ந்திருக்கான். ஆனால் அவனோட நம்பரை மாத்தி இருக்கான். அவனை கண்டுபிடிக்க முடியலை. அவன் விவரம் மட்டும் தான் தெரிந்தது.
அப்படின்னா, அந்த ஆசிரமத்தில் விசாரித்தால் அவனை பற்றி தெரிய வரும் ஆரவ் சொல்ல, “ம்ம்..விசாரிக்கணும்” ஆரியன் சொன்னான்.
“மாம்ஸ், உங்க எக்ஸ் வொய்ப் காதலனும் அங்க தான வளர்ந்திருக்கார். அவரிடம் விசாரிக்கலாம்ல்ல?”
அவரிடம் வேண்டாம் அண்ணா. அவரை நான் விசாரித்தேன். ரொம்பவே டெடிக்கேட்டடான வொர்க்கர். விடுப்பு கூட எடுத்ததில்லையாம் அவர். அவருக்கு வேற யாருமில்லை. அதனால் பெரும்பாலும் ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருப்பாராம்.
நெற்றியை தேய்த்த ஆரவ் கவினை பார்த்து, யாருமில்லாதவன் சரி. அதென்ன ஹாஸ்ப்பிட்டல்லவே இருப்பான்னு. அவரு அட்டாப்சி டாக்டர் தான? அவங்க டீம் ஆட்கள் ஒருவர் கூடவா நண்பனாக இல்லாமல் இருப்பார்கள்?
“அமைதியான ஆட்கள் பெரும்பாலும் யாருடனும் உறவு வைத்துக் கொள்ள மாட்டாங்க” கவின் சொல்ல, ஆரவ் சிரித்தான்.
“ஆரவ், பீ சீரியஸ்” ஆரியன் அதட்டினான்.
இல்ல மாம்ஸ், கவின் மட்டும் அமைதியாக இருந்தாலும் நண்பன், உறவு வச்சிருக்கானே! அதான் சிரித்தேன்..
அய்யோ! தலையில் அடித்தான் சித்திரன். கவின் ஆரவ் கையை தட்டி விட்டு, அவனை முறைத்தான்.
கவின் இதுவும் சரிதான். ஒருவன் எத்தனை நாட்கள் நண்பன், உறவுகள் இல்லாமல் இருக்க முடியும்? ஆரியன் கேட்க, கவினும் சித்திரனும் சிந்தித்தனர்.
முதல்ல..அவினாஸை பற்றி ஆசிரமத்தில் நல்லா விசாரிங்க. அதன் பின் தமிழ்ச் செல்வனை சாரி சாரி..டேவிட்டை பார்க்கலாம்.
அப்புறம் சார், இதுல்ல சைந்தவி மேம் அலைபேசி மட்டும் கிடைக்கவேயில்லை. பொன்னியின் வாழ்க்கை முறை போல தான் மூன்றாவதாக காஞ்சிபுரத்தில் கொலையான பொண்ணும்..
என்ன? ஆரவ் கேட்க, பப்பி லவ்..அவங்க பிரிவு..இருவரின் இருவேறான திருமணம். கணவனின் சந்தேகம். அந்த பொண்ணு கொலைக்காக கணவனை கைது செய்து அவன் ..இறக்க மட்டும் இல்லை.
“இவன் சைக்கோ கில்லர் தான்” ஆரவ் சொல்ல, அனைவரும் ஆமோதித்தனர்.
அவன் கொலை செய்ய கத்துக்கிட்டு வந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கான். ஆனால் சைந்தவி கொலை தான் புரியலை கவின் கூறினான்.
அதை கண்டறியலாம். இப்ப கிளம்புங்க. ஏதும் விவரம் தெரிந்தால் உடனே கால் பண்ணுங்க ஆரியன் சொல்லி மூவரையும் அனுப்பினான். இனி எங்கே லாவண்யாவை பார்ப்பது மணியை பார்த்தான் ஆரவ். எட்டாகி இருந்தது. வீட்டிற்கு சென்று விட்டான்.
அதிகாலை ஆறு மணிக்கு எழுந்த சுவேரா கதவை திறந்தாள்.
“மியாவ் மியாவ்” வந்து நின்றான் சார்லி.
ஹே, பூனைக்குட்டி அதனை தூக்கி, “நீ அந்த முகமூடிக்காரனோட இருந்தேல்ல?” சுவேரா அதனிடம் கேட்டாள்.
“சுவா, நீ யாரிடம் பேசிட்டு இருக்க?” குரலை அறிந்த சார்லி கீழே இறங்கி அவனிடம் ஓடியது.
“சார்லி, இங்க என்னடா பண்ற?” வெளியே எட்டி பார்த்தான்.
“சார்லி கழுத்தில காகிதம் இருக்குடா” ஆத்விக் சொல்ல, ஆரவ் எடுத்து பார்த்தான்.
அதில் ஒரு எண் எழுதப்பட்டு, “சீக்கிரம் அழையுங்கள்” என்று இருந்தது.
“யாராக இருக்கும்” என்று யோசனையுடன் சார்ஜ் போட்டிருந்த அவன் அலைபேசியை எடுத்து வந்தான்.
“சார்லி, யாருடா?” அவன் கேட்க, “மியாவ் மியாவ்” என்ற அதன் பார்வை பயத்தை உணர்த்தியது.
“எதுக்குடா பயப்படுற?” எண்ணை அழைத்து காதில் வைத்தான்.
சார், நான் ஹாஸ்ட்டல் வார்டன் பேசுறேன்.
“இந்த நேரத்துல்ல எதுக்கு கால் பண்ணீங்க? பிரச்சனையா?”
ஆமா சார், என்னால ரொம்ப நேரம் பேச முடியாது. ஹாஸ்ட்டலை சுற்றி ரௌடி பசங்க இருக்காங்க.
“ரௌடிகளா?”
“ஆமா சார், இடையில பேசாதீங்க. லாவண்யாவை பிடிக்க தான் வந்திருக்காங்க”.
“வாட்? லாவா வையா? எதுக்கு? அவளுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?” அவன் கேட்க, ஆத்விக்கும் சுவேராவும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
ஆத்விக் அவன் அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டு அவனை முறைத்தான்.
சார், அவங்க அப்பா நேற்று மாலை லாவண்யாவை பார்க்க வந்திருந்தார். அவர் என்ன பேசினார்ன்னு தெரியல. அவள் நேற்றிரவு ஹாஸ்ட்டலை விட்டு போயிட்டா. நான் எவ்வளவோ சொன்னேன் கேட்காமல் போயிட்டா.
அப்புறம் சார், நீங்க தான் அவளுக்கு வேற அறை மாத்த உதவியது தெரிஞ்சு போச்சு..
நேற்று போனவள் தான் இங்கே வரவேயில்லை. இந்த மட சாம்ராணிகள் சொன்னால் கேட்கவே மாட்டேங்கிறானுக. பெண்கள் விடுதி சார். அவள் எங்கிருந்தாலும் அழைச்சிட்டு வாங்க..
“என்ன பேசுறீங்க?” ஆத்விக் குழப்பமாக கேட்டான்.
“யாரு சார்? உங்கள் நண்பரா?”
ம்ம்..
லாவண்யாவிற்கு அவளோட அப்பா அவளுக்கு தெரியாமலே ரௌடி மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருக்கார். ஆனால் அவளுக்கு தெரிந்தவுடன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டாள். அந்த ரௌடி பய கையில மாட்டுனா கண்டிப்பா தாலி கட்டிருவான். உங்க காதலை காப்பாத்திக்கோங்க சார்.
எங்களுக்கும் உதவி வேணும் சார். அவள் எப்படியும் இங்கே வருவாள்ன்னு இவனுக போக மாட்டேங்கிறாங்க. ஓனருக்கு நான் உங்களிடம் பணம் வாங்கி அவளை தனியே தங்க வைத்தது தெரிந்தால் நான் நடுத்தெருவுல தான் நிக்கணும். அதனால அவரை அழைக்க முடியாது.
“நீங்க தான் நிறைய பணம் வச்சிருக்கீங்கல்ல. ரௌடி பசங்களை இங்கிருந்து போக வையுங்க” அவர் சொல்லிக் கொண்டிருக்க, “ஏய்..உங்க ஓனர் வந்தாலும் எங்களை ஏதும் செய்ய முடியாது” ஒருவன் சத்தமிட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
“என்னடா?” மற்றவன் கேட்க, இந்த பொம்பள அவங்க ஓனரிடம் பேசிட்டு இருக்கா.
“அலைபேசியை பிடுங்காமல் என்னடா அவளிடம் வெட்டிப் பேச்சு பேசிட்டு இருக்க?”
அலைபேசி துண்டிக்கப்பட்டது.
அண்ணா, லாவா லவ் பண்றது உன்னையா? நீ மறைந்திருந்து இவ்வளவு செய்தாயா? துருவினி கேட்க, ஆத்விக் அதிர்ந்து “நீ வினுவை காதலிக்கவில்லையா?” கேட்டான்.
நான் லாவாவை தான் காதலிக்கிறேன். எனக்கு மாம்ஸ் பக்கத்துல்ல இருக்கணும். அவ்வளவு தான். வினுவை பிடிக்கும். காதலெல்லாம் இல்லை..
ஆத்விக் தலையை பிடித்து அமர்ந்தான்.
“அண்ணா, என்ன பேசுன வினுகிட்ட?” ஆத்விக்கிடம் சீற்றமுடன் கேட்டாள் சுவேரா.
பேச கூடாதது..சொல்லக் கூடாததை சொல்லீட்டேன்..
“என்னடா பேசுன?” ஆரவ் முறைப்புடன் கேட்க, நீ அவளை காதலிக்கிறன்னு நான் அவளை விலக்கி வைக்க என்று அவன் பேசியதை மேலோட்டமாக கூற, “பைத்தியமாடா நீ?” சுவேரா ஆத்விக்கை அடித்து அழுதாள்.
“இப்பவே அவளை போய் பார்த்து நடந்ததை சொல்லு. நான் லாவாவை பார்க்கணும்” ஆரவ் சுவேராவிடம், சுவா அவளுக்கு கால் பண்ணு. என்னிடம் அவள் எண் இல்லை.
அவனை முறைத்து விட்டு லாவண்யாவை அழைத்தாள் சுவேரா.
லாவண்யா அலைபேசியை எடுத்தாள்.
“லாவா, எங்க இருக்க?” பதட்டமாக சுவேரா கேட்க, அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான் ஆரவ். அவனை மீண்டும் அவள் முறைத்தாள்.
“ஹேய், அங்க இருக்காலான்னு பாரு” ஒருவன் சத்தம் கேட்டது.
லாவா..லாவா..லாவா..சுவேரா அழைக்க, சில நொடிகளில் மூச்சிறைக்க லாவண்யா பேசினாள்.
சுவா, நான் ஓ.கே. எனக்கு நீ ஒரு உதவி மட்டும் செய்.
நீ எங்க இருக்க சொல்லு? இப்பவே வாரோம்..
முதல்ல ஹாஸ்ட்டல்ல போய் மேம்க்கு உதவுங்க. அவங்க பிரச்சனையில இருக்காங்க. என்னால போக முடியாது திணறியவாறு பேசினாள்.
“சரி, நீ சொல்லு எங்க இருக்க?” ஆரவ் கேட்க, லாவண்யாவிடம் சத்தமில்லை.
“லாவா லாவா” அவன் அழைக்க, என்னிடமாவது பேசி இருப்பா” சுவேரா ஆரவ்வை திட்ட, “ஹேய் அந்த பொண்ணு தான!” அலைபேசியில் சத்தம் கேட்டது.
“இல்லடா” ஒருவன் சொல்ல, நீ இந்த பக்கம் போ. நான் இந்த பக்கம் போறேன். பேச்சு சத்தம் கேட்டது.
அவனுக பக்கத்துல்ல இருப்பதால் பேசாமல் இருக்கா என்று இருவரும் எண்ணியவாறு பார்க்க, ஆத்விக்கும் அங்கேயே நின்றான்.
“ஆது, போ” ஆரவ் சொல்ல, லாவண்யா பாதுகாப்பாக வரட்டும். அப்புறம் நான் வினுவை பார்க்கப் போகிறேன். ஆத்விக் அவன் அலைபேசியில் ஆரியனை அழைத்தான். அவன் எடுக்கவில்லை.
பிரகாஷிற்கு அழைத்து, “சார் நான் சொல்ற எண் எங்க இருக்குன்னு சொல்லுங்க உடனே. ஒரு பொண்ணு பிரச்சனையில இருக்கா..
ஓ.கே என்ற பிரகாஷ் அவர்களின் ஆபிஸிற்கு கால் செய்து ட்ரேஸ் செய்ய சொன்னான்.
லாவண்யா மெயின் ரோட்டில் நிற்க, பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறி இரு ஸ்டாப்பிலே இறங்கினாள்.
“ஹப்பா” என்று மூச்சை இழுத்து விட்டு அவள் நடந்து கொண்டே, “நான் ஓ.கே தான் சுவா. அங்க ஆள் அனுப்பீட்டீங்கல்ல?”
“கவின் போயிருப்பார். நீ எங்க இருக்க?” மீண்டும் சுவேரா கேட்க, எனக்கு தெரியும் என்று வாயசைத்து ஆரவ் பைக்கை எடுக்க, ஆத்விக் சுவேராவும் ஏறினார்கள்.
“சுவா” லாவண்யா சொல்லும் முன் ஏதோ பொண்ணு அலறும் சத்தம் கேட்டு அலைபேசியை கீழே விட்டாள். பின் அலைபேசியை எடுத்தாள்.
“லாவா, லைன்ன மட்டும் கட் பண்ணாத. நாங்க வாரோம்” சுவேரா சொல்ல,
“வேண்டாம் சுவா. நான் இனி யார் முன்னும் வர மாட்டேன். யாரோ பயங்கரமா கத்துறாங்க சுவா. கொஞ்சம் அமைதியா இரு” என்ற லாவண்யா அந்த பெரிய வீட்டின் பின் புற சன்னலை லேசாக திறந்தாள்.
உள்ளே ஒருவன் உயிருடன் ஒரு கர்ப்பிணி வயிற்றை கிழிக்க, ஏய்..கத்தி விட்டாள் லாவண்யா.
லாவா..லாவா..என்னாச்சு? சுவேரா கேட்க, லாவண்யாவிடம் பதில்லை. அவன் சத்தம் கேட்டு பின் பக்கம் வந்தான். லாவண்யா ஒளிந்து கொண்டாள். ஆனாலும் அவன் அவளை கண்டறிந்து ஏதும் பேசாமல் அவளை தூக்கி தோளில் போட்டு வீட்டிற்குள் சென்றான்.
“ஏய், என்னை விடு என்னை விடு” அவள் கத்த, ஏய் யாருடா ஆரவ் கேட்டுக் கொண்டே வண்டியை செலுத்தினான்.
அவன் வந்திருவான். நான் சொல்றதை கேளு கவின் என்று அந்த சைக்கோவிடம் லாவண்யா மாட்டி இருப்பதை சொல்ல, “கவின் அதிர்ந்து, என்ன சொல்ற?” பதறியவாறு கேட்டான்.
மாம்ஸ்கிட்ட சொல்லீடு. போலீஸ் டீமை அனுப்பு என்று முகவரி சொல்லி விட்டு அலைபேசியை அணைத்து விட்டு, ஆது வண்டியை நிறுத்து…
“விளையாடுறியா?” ஆத்விக் சினமுடன் கேட்டான்.
“வினு ஹாஸ்பிட்டல்ல இருக்கா. போ அவளை இப்பொழுதாவது பார்க்க போ” கத்தினான் ஆரவ். வண்டியை பிரேக்கிட்டு நிறுத்தினான் ஆத்விக்.
“ஹாஸ்பிட்டலா? என்ன அண்ணா?” சுவேரா பயத்துடன் ஆத்விக்கை பார்த்தாள்.
“பாய்சன் சாப்பிட்டாளாம். ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்க” சொல்லவும் ஆத்விக் அதிர்ந்து, “இருக்காதுடா..இந்த கவின் இப்படியா விளையாடுவான்?” ஆத்விக் சொல்ல, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஆரவ் “போய் பாரு. எப்படி இருக்கான்னு கூட தெரியல.அதான் மாம்ஸ் கால்லை எடுக்கலை. நீ தான் நல்லா விளையாடி இருக்க?” சுவேராவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. அழத் தொடங்கினாள் சுவேரா.
“போடா” என்று ஆத்விக்கிடம் பைக்கை கொடுத்து விட்டு ஆரவ் ஓட, சுவேரா யாருக்காக செல்வதென்று தெரியாமல் விழித்து விட்டு ஆரவ் பின்னே ஓடினாள்.
அவ்வீட்டை ஆரவ் அடையவும் நேசன், சாய் வரவும் சரியாக இருந்தது.
இருவரும் பதட்டமுடன், “எங்க லாவா?” கேட்டனர்.
நால்வரும் உள்ளே செல்ல, முகமூடி மனிதனான அந்த சைக்கோ கத்தியை லாவண்யா கண்ணருகே கொண்டு சென்று கொண்டிருந்தான். ஆரவ் அவனை ஓடி வந்து எத்தினான். அவன் தள்ளிச் சென்று விழுந்தான்.
லாவண்யா மீது இரத்தக்கறையிருக்க, அவள் மயங்கி இருந்தாள்.
குழந்தையின் இடக்கால்கள் அறுபட்டு கிடந்தது. அங்கே இருந்த பெண், குழந்தையை பார்த்த சுவேராவிற்கு வாமிட் வந்தது.
“லாவா லாவா” பசங்க அவளிடம் வந்தனர்.
மீண்டும் அவன் அவர்களருகே வர, ஆரவ் லாவண்யாவை எழுப்ப முயன்று கொண்டிருந்தான். அவளுக்கு சுவாசம் சரியாக இருந்தது. இதயத்துடிப்பும் இருந்தது. நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டு அமர்ந்தான் ஆரவ்.
பல்டி அடித்து எழுந்த சைக்கோ மீண்டும் அவர்களிடம் வந்தான். சாய் அவனை தடுக்க, அவன் வயிற்றில் கத்தியை இறக்கினான் சைக்கோ கொலையாளி.
“ஏய்” நேசன் அங்கிருந்த நாற்காலியை சைக்கோ கொலைகாரன் மீது தூக்கிப் போட்டு சாய்யை பிடித்தான். அவனுக்கு இடப்பக்க வயிற்றிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது..
கவினும் அவன் ஆட்களும் அவ்விடம் வந்தனர். சைக்கோ கொலைகாரன் அவ்வீட்டின் ஓர் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.
கவினிடம் நேசன் சொல்ல, அங்கிருந்தவர்களையும் கொலையான தாய், மகனையும் பார்த்துக் கொண்டே அவ்வறை கதவை சூட் செய்து உள்ளே சென்றான். அங்கே அவன் இல்லை. சன்னல் வழியே குதித்து சென்று விட்டான்.
பிரகாஷூம் அவன் ஆட்களும் வந்தனர். அவ்வீட்டை சோதனையிட்டனர். ஒன்று கூட கிடைக்கவில்லை. போலீஸார் சிலர் வெளியே சென்று பார்த்தனர். அவன் இல்லை என்றவுடன் மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.
சுவேராவோ சாய்யிடம் ஓடிச் சென்றாள்.
கவின் அவனிடம் வந்து சாய்யின் வயிற்றை பார்த்து விட்டு திரைச்சீலையை கிழித்து அவனுக்கு கட்டி விட்டு, “ரா..இவனை சீக்கிரம் ஹாஸ்பிட்டல் சேருங்க. ஆழமா குத்தி இருக்கான்” கவின் சொல்ல, அவளுக்கு பதட்டம் அதிகரித்தது.
“இவங்கல்ல பாதுகாப்பா ஹாஸ்பிட்டலில் இறக்கி விடு” அவன் சொல்ல, ஆரவ் லாவண்யாவை தூக்கி நடந்தான். நேசன் அவனை அதிர்ந்து பார்த்தான்.
“சுவா, முடியல. மயக்கம் வருது” சொல்லிக் கொண்டே சாய் மயங்கினான்.
“சாய்” சுவேராவிற்கு அழுகை வர, உதட்டை கடித்து கட்டுப்படுத்தி லாவண்யாவையும் பார்த்தாள். பின் கவினிடம் வந்து, “வினு ஓ.கே தான? இப்ப அவளுக்கு ஒன்றுமில்லையே!”
சீரியசா தான் இருந்தா. இப்ப தெரியல. நீ இவங்கள பார்த்துக்கோ. அழுதுட்டு இருக்காத. சுவேராவிடம் முதல் முறையாக ஆறுதலாக பேசினான் கவின்.
போலீஸார் உதவியுடன் அவர்களை தருணுடன் ஹாஸ்பிட்டல் அனுப்பினார்கள். பக்கமிருந்த மருத்துவமனையிலே சாய், லாவண்யாவை சேர்த்தனர்.
ஆத்விக் கண்ணீருடன் பைக்கில் செல்லும் போது அவன் என்ணத்தில் உதித்தது நேற்றைய எண்ணங்கள்.
நான் வினுவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ஆரவ் காதலுக்காக என்று என் காதலை நான் இழந்து விட்டேன். வினு என்னை மன்னிக்கவே மாட்டாள். அவளை எப்படி என்னால சமாதானப்படுத்த முடியும்? லாவண்யாவிற்காகவே எவ்வளவு கோபப்பட்டாள்? இப்பொழுதைக்கு அவளுக்கு ஏதும் ஆகக் கூடாது என்று பைக்கை விரட்டி ஹாஸ்பிட்டல் வந்து விசாரித்து உள்ளே சென்றான்.
உத்தமசீலன் கண்ணீருடனும் ஆரியன் கனத்த மனதுடன் தலையை கவிழ்ந்தும், அதியா துருவினிக்கு சிகிச்சை நடக்கும் அறையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பசங்க அழுதது போல் கண்ணீர் தடத்துடன் இருந்தனர்.
“மாமா” ஆத்விக் அழைக்க, உத்தமசீலன் ஆரியன் இருவரும் அவனை பார்த்தனர். ஆரியன் கையை மடக்கி இறுக்கியவாறு அவனை முறைத்து பார்த்தான். உத்தமசீலன் யாரோ போல் பார்த்து விட்டு முன் போல அமர்ந்து கொண்டார் கண்ணீருடன்.
ஆரியனின் சினம் ஆத்விக்கிற்கு பெரியதாக படவில்லை. “கோபம் இல்லாமல் இருக்குமா? உடன் பிறந்த தங்கையாயிற்றே!”
உத்தமசீலனின் பாரா முகம் ஆத்விக்கை பெரிதும் பாதித்தது. அவரருகே அவன் ஓடி வர, இடையே வந்த அதியா, “எதுக்கு வந்த?” கேட்டாள்.
அதி..நான்..
“அதிம்மா, அத்தையை அன்றே அத்து மாமா கீழ தள்ளி விட்டான்” என்று ஆத்விக்கை பார்த்து, “இப்ப நீ தள்ளி விட முடியாது” அவள் பலம் கொண்டு அவனை அழுது கொண்டே அடித்தாள் ஆகர்ஷனா.
அதியா அவளை இழுத்து தன்னருகே வைத்துக் கொண்டு, “இங்கிருந்து போ” கத்தினாள்.
ஆரியன் எதுவும் சொல்லாமல் இருக்க, “போயிருப்பா. என்னோட பொண்ணு எனக்கு உயிரோட வேண்டும்” சோர்ந்த குரலில் உத்தமசீலன் சொன்னார்.
ஆத்விக் அழுது கொண்டே நின்றான். ஆரியன் அருகே அமர்ந்திருந்த தர்சன் என்ன நினைத்தானோ? ஆத்விக்கிடம் தூக்க சொல்லி கையை நீட்டினான்.
“தர்சு, இங்க வா” அதியா அவனை இழுக்க, “அதிம்மா மாமாவுக்கும் அத்தைக்கும் சண்டைன்னா. மாமா நல்லா தான நிக்கிறாரு. அத்தை மட்டும் எதுக்கு நம்மை விட்டு போக நினைக்கணும். அத்தை மேல தான் தப்பு” என்று கத்தினான்.
“தர்சு, உனக்கு ஒன்றும் தெரியாது” அதியா சத்தமிட்டாள்.
“அம்மா, எனக்கு எல்லாம் தெரியும். மாமா அத்தையை தள்ளி விட்டது தான் ஆகாவுக்கு தெரியும். மாமாவும் அவங்க அறைக்கு சென்று அழுதது ஆகாவுக்கு தெரியாது” தர்சன் கூற, அதியா ஆத்விக்கை பார்த்தாள்.
ஆத்விக் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. ஆரியன் உத்தமசீலன் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர். மருத்துவர் வெளியே வந்தார்.
டாக்டர், துருவுக்கு? ஆரியன் கேட்க, போய் பாருங்க. அவங்க விழிச்சுட்டாங்க. நல்லா இருக்காங்க. இன்று ஹாஸ்பிட்டல்ல இருக்கட்டும் என்று மருந்தை எழுதி கொடுத்து விட்டு, அவர் உத்தமசீலனை பார்த்து “சுந்தரியை போல விட்றாதீங்க சீலா” என்று சொல்லி சென்றார்.
உத்தமசீலன் கண்ணீருடன் அமர்ந்தார்.
“அப்பா” ஆரியன் அழைக்க, “ஒன்றுமில்லைப்பா” என்று எழுந்து அவர் தன் மகளை காணச் சென்றார். எல்லாரும் உள்ளே செல்ல, ஆத்விக் தயக்கமுடன் வெளியே நின்றான். தர்சன் அவனை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்.
“ஏன்டா, இப்படி பண்ண? அப்பாவை பற்றி நீ எண்ணவேயில்லையா?” உத்தமசீலன் துருவினியை படுக்கையில் காண முடியாது அழுதார்.
“அப்பா” அவளும் கண்ணீருடன், “என்னால முடியலப்பா” அழுதாள். அவர் அவளை அணைத்துக் கொண்டார்.
எல்லாரும் ஆத்விக்கை பார்க்க, கண்ணீருடன் கதவில் கையை வைத்து துருவினியை பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார், கொஞ்சம் நகருங்க” செவிலியர் சொல்ல, நகர்ந்தான். அவள் அவனை பார்த்தாலே தவிர ஏதும் பேசவில்லை.
ஆரியன் பின்னிருந்து கிளம்பினால் நல்லது.
“மாமா” அழைத்துக் கொண்டே உள்ளே பார்த்தான்.
செவிலியர் அதியாவிடம் பேசி விட்டு சென்றார்.
உத்தமசீலனும் மற்றவர்களும் வெளியே வந்தனர். நார்மல் வார்டுக்கு மாத்தணுமாம் அதியா சொல்ல, ம்ம் ஆரியனிடம் வேறு பதிலில்லை.
துருவினி வேறு அறைக்கு மாற்றப்பட்டாள்.
“தேவையில்லாமல் பேசுவதாக இருந்தால் போய் பேசுங்க” ஆரியன் யாரிடமோ சொல்வது போல சொல்ல, அவன் உள்ளே சென்றான்.
“வினு” அவன் அழைக்க, அவள் முகத்தை காட்டாமல் திரும்பி படுத்துக் கொண்டாள். ஆரியனும் மற்றவர்களும் உள்ளே வந்து அமர்ந்தனர்.
“ஐ அம் சாரி வினு”. நீ என்னிடம் கேட்டது உண்மைதான். ஆரவ் உன்னை காதலிக்கிறான்னு தான் உன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டேன். ஒன்ஸ் அகென் சாரி. அவன் உன்னை காதலிக்கவில்லைன்னு இப்ப தான் தெரிந்தது. அப்புறம் தான் நான் முட்டாள்தனம் செய்திருக்கேன்னு புரிந்தது..
சாரி..ரியலி ஐ அம் வெரி சாரி..
எல்லாரும் இருவரையும் பார்க்க, நண்பனுக்கு முக்கியத்துவம் தருவது தவறில்லை. நன்றாக விசாரித்து செயல்படணும். அதில் நீங்க ஜீரோ..
“ம்ம் இப்ப என்னோட காதலை ஏத்துப்பாயா? நான் உன்னை விட்டு போகாமல் இருப்பேன்” ஆத்விக் சொல்ல, உங்க மீட்டிங்கை போய் பாருங்க சார்..
மீட்டிங் இல்லை. அந்த பொண்ணு என்னோட அதி மாதிரி.
ஓ..நக்கலாக அவள் கேட்க, எனக்கு பதில் மட்டும் சொல்லு?
முடி..யா..து என்று மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
“நான் போரேன்” என்று அனைவரையும் பார்த்து விட்டு அதியாவை அணைத்து, “கவனமா இரு” என்று சொல்லி நகர்ந்தான். அவனால் மருத்துவமனையை கூட தாண்ட முடியவில்லை. பின்னே வந்த ஆரியன் ஆத்விக் பேச்சில் “போய் விடுவானோ?” என்று வந்து பார்த்தான்.
“இவன் போகமாட்டான்” அவன் நகர்ந்தான். முடிவுடன் எழுந்த ஆத்விக் வண்டியை எடுத்தான்.
லாவண்யா பதறி விழித்தாள். அவளுக்கு சைக்கோ கில்லர் அந்த குழந்தை காலை வெட்டியது நினைவிற்கு வந்தது.
கையசைத்து “வேண்டாம்..வேண்டாம்..” துடித்தழுதாள்.
அவளருகே வந்தவன் இடுப்பை கட்டிக் கொண்டு, அழுது கொண்டிருந்தாள்.
“ஒன்றுமில்லை ஒன்றுமில்லை” அவன் கண்ணீர் அவள் மீது பட்டது. குரலில் தவித்து விலகினாள்.
ஆரவ்வை பார்த்து பின்னே நகர்ந்தாள்.
அறைக்கு வந்த நேசன் இருவரையும் பார்த்தான்.
கண்ணீரை துடைத்து அவ்வறையை சுற்றி அவள் கண்கள் அலை பாய்ந்தது. நேசனையும் அருகே இருந்த ஆரவ்வையும் பார்த்தாள்.
“பயப்படாத லாவா. அவன் இங்கில்லை” ஆரவ் சொல்ல, லாவண்யா அவனை பார்த்து விட்டு வாசலையே எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆரவ்வை முறைத்தவாறு நேசன் உள்ளே வந்தான். ஆரவ்வும் அவனை முறைக்க, முகத்தை துடைத்து அவள் ஆடையை பார்த்தாள். ஆடையில் இப்பொழுது இரத்தக்கறை இல்லை. ஆரவ் இவளுக்காக வாங்கி தந்த அதே புடவை..
நேசன் அவளருகே வந்து அமர்ந்தான்.
மீண்டும் வாசலை பார்த்துக் கொண்டே, “அவங்கள எங்க?” கேட்டாள்.
“யாரை கேக்குற?” நேசன் கேட்டான்.
“துரு, சாய் அவங்க தான் எப்போதும் எனக்கு பிரச்சனைன்னா முன்னால் வருவாங்க” கண்கலங்க கூறினாள்.
அவங்க..அவங்க..சொல்லிக் கொண்டே நேசன் ஆரவ்வை பார்த்தான்.
வினு பாய்சன் சாப்பிட்டா. ஹாஸ்பிட்டல்ல இருக்கா. சாய்யை அந்த கில்லர் கத்தியால் குத்திட்டான். அவன் இங்க தான் சீரியசாக இருக்கான் ஆரவ் சொல்ல, லாவண்யா அழுது கொண்டே கீழே இறங்கினாள்.
“துரு” லாவண்யா பதற, “மாம்ஸ் கால் பண்ணார். அவள காப்பாத்திட்டாங்களாம்” ஆரவ் சொன்னான். பெரு மூச்சுடன் “சாய்” கண்கலங்கி கேட்டாள்.
லாவா, அவனுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு. சுவா அங்க வெளிய தான் இருக்கா. நீ ஓய்வெடுக்கணும்ன்னு டாக்டர் சொன்னாங்க.
“இல்ல, நான் அவனை பார்க்கணும்” அவள் நகர, அவள் கையை பிடித்த ஆரவ், “இப்ப நீ போகக்கூடாது” கோபமாக கூறினான்.
நான் போவேன். அவன் எனக்கு அண்ணன் மாதிரி. “துரு எங்க இருக்கா? எப்படி இருக்கா?” ஆரவ்விடம் கேட்டாள்.
துரு சிட்டியில்ல இருக்கும் ஹாஸ்பிட்டலில் இருக்கா. நாம அவுட்டர்ல்ல இருக்கோம்.
“எந்த ஹாஸ்பிட்டல்?” அறையை பார்த்தாள் லாவண்யா.
அவன் ஹாஸ்பிட்டலை சொல்லவும், “நான் டாக்டரை பார்க்கணும்” என்றாள்.
“டாக்டரை உனக்கு தெரியும்ன்னு அவங்க சொன்னாங்க” ஆரவ் நேசனை பார்க்க, “ஆமா, நம்ம சாய்யோட பர்ஸ்ட் கேஷ் பார்த்த டாக்டர் விண்ணரசி தான்”.
ஆரவ் நேசனை பார்க்க, அவன் லாவண்யா அருகே வந்து நின்றான். ஆரவ்வும் அவளை விட்டு நகர மாட்டேன் என்று உஷ்ணப்பார்வையுடன் நின்றான். இருவரையும் பார்த்த லாவண்யா, “சுவாகிட்ட பேசணும். நானே போய்க்கிறேன்” என்று சொல்ல ஆரவ் அலைபேசியை எடுத்து சுவேராவை அழைத்தான்.
“லாவா, நீ வா” நேசன் அவள் கையை பிடித்து அழைக்க, ஆரவ் அவளது மற்ற கையை பிடித்தான்.
இருவர் கையையும் தட்டி விட்டு, “இனி நாம சந்தித்தால் நல்லா இருக்காது நேசா. என்னை விட்ரு” லாவண்யா சொல்ல, அவளை தன் பக்கம் இழுத்து, “நான் அம்மாவை விட்டு வந்துட்டேன். எனக்கு நீ மட்டும் போதும்” நேசன் சொல்ல, ஆரவ் அவனை தீவிரமாக முறைத்தான்.