விடியல் பிறக்க உற்சாகமுடன் எழுந்தான் ஆரவ். அனைவரும் தயாரானார்கள்.
சாப்பிட அமர்ந்த நேரம் கார் சத்தம் கேட்டு ஆர்வமுடன் துருவினி வாசலை பார்த்தாள். ஆத்விக் வந்தான்.
ஆது..வா வா..ஏன்டா கால் பண்ணா எடுக்க மாட்டியா? ஆரவ் அவனை அணைத்தான். எல்லாரையும் பார்த்தவாறு துருவினியை பார்க்காதது போல ஆரவ்வுடன் அமர்ந்தான்.
அதியா ஆத்விக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் போல துருவினி அனைவருக்கும் எடுத்து வைத்து விட்டு ஆத்விக்கிற்கும் வைக்க, அமைதியாக உண்டு எழுந்தான்.
“அத்து” அதியா அழைக்க, “சொல்லு அதி?” அவளருகே வந்தான்.
“அதிம்மா, நமக்கு நேரமாகுது. சீக்கிரம் வாங்க” அழைத்தார் உத்தமசீலன்.
ஆமா அதிம்மா, பள்ளிக்கு நேரமாகிடும். வந்து மாமாகிட்ட பேசிக்கோங்க ஆகர்ஷனா சொன்னாள்.
“ஓ.கே ஆகு, நாம கிளம்பலாம்” என்று துருவினியிடம் சென்று, “வினு டேஸ்ட்டி ஃபுட்டுக்கு தேங்க்ஸ்” அவள் கன்னத்தில் அதியா முத்தமிட, இவ்வளவு நேரம் களையிளந்திருந்து துருவினி முகம் பளிச்சென மின்ன, “ஆமா அத்த” என்று ஆகர்ஷனாவும் முத்தமிட, தர்சனும் முத்தம் கொடுத்தான். அதியா தன் அண்ணன் ஆத்விக்கை பார்த்து சிரித்து சென்றாள்.
“அதி, எனக்கு?” சுவேரா கேட்க, “வினு உழைச்சிருக்கா? நீ தூங்கி இருக்க?”
“அக்கா சொல்லு?” சுவேரா சொல்ல, “முடியாது. போ” என்று ஆரவ்வை பார்த்து, “பை அண்ணா. ஈவ்னிங் பார்க்கலாம்” அவள் சொல்ல, ஆத்விக் அதியா முன் வந்து “ஆரவ் என்னோட வீட்ல தான் இருப்பான்” என்றான் அழுத்தமாக.
கிளம்பலாமா? ஆத்விக் கேட்க, வினு வா கிளம்பலாம் அழைத்தாள் சுவேரா.
ஆரியனும் உத்தமசீலனும் அவளை பார்க்க, அப்பா நான் என்னோட ஸ்கூட்டியிலே போய்ப்பேன்.
“உன் சாப்பாட்டை புகழவில்லைன்னு கோபமா? நேற்றிலிருந்தே இப்படி தான் மூஞ்சிய வச்சிட்டு இருக்க?” சுவேரா கேட்க, “ஏன் பல்லை காட்டிக் கொண்டே இருந்தால் தான் பேசுவியா?” துருவினி கேட்டாள்.
“இல்லை” சுவேரா ஆத்விக்கை பார்த்தாள்.
“மதியம் மறக்காமல் உணவை சூடு பண்ணிடுங்க” என்று துருவினி சொல்லி விட்டு உணவு மேசையில் இருந்த பொருட்களை உள்ளே எடுத்து வைத்தாள்.
“சரிம்மா, நீ பார்த்து போ” உத்தமசீலன் சொல்ல, “மாமா, அவ எதுக்கு எங்களோட வர மாட்டேன்னு சொல்றா?” சுவேரா கேட்டாள்.
“இருக்கட்டும்மா?” அவர் சொல்ல, “ஹே வினு, ஆரவ்வை பார்த்து பயப்படுறியா?” சுவேரா கேட்க, இல்லையே! நான் யாருக்கும் தேவையில்லாமல் பயப்பட மாட்டேன்..
பயமில்லைன்னா எங்களோட வரலாம்ல்ல?
வாரேன். வெயிட் பண்ணுங்க என்று தன் தந்தையை பார்த்தார். அவர் முகம் வாடிப் போனது இருந்தாலும் போயிட்டு வாம்மா என்று அவர் சொல்லி ஆரியனுடன் கிளம்பினார்.
சமையலறை வேலையை முடித்து விட்டு அவர்களுடன் காரில் ஏறினாள் துருவினி.
ஆத்விக்கும் ஆரவ்வும் முன்னே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின் பெண்கள் அமர்ந்திருந்தனர்.
ஆரவ், ஆத்விக் துருவினியை பார்த்து, “இருவரும் பேச மாட்டீங்களா?” கேட்டாள்.
“இல்லையே!” இருவரும் ஒன்று போல் சொன்னார்கள்.
“அப்புறம் அமைதியா இருக்கீங்க?” அவன் கேட்க, “எனக்கு நேற்றிலிருந்து தலைவலியா இருக்கு. அதான் அமைதியாக இருக்கேன்” துருவினி ஆத்விக்கை பார்த்தவாரே பேசினாள். ஆத்விக் அமைதியாக அவளை பார்த்தான்.
தொண்டையை கனைத்த ஆத்விக் ஆரவ்விடம், “நீ தனியாக ஆபிஸ் ஆரம்பிக்கலாம்ல்லடா?”
இப்பொழுதைக்கு அந்த எண்ணமில்லை. கொஞ்ச நாள் உன்னோட அப்படியே எஞ்சாய் பண்ண வேண்டியது தான்.
“பாருடா ஆது. சொல்லயில்லை. பொறுப்பா பேசுற. அது கூட ஓ.கே. என்னை கேர் பண்றீயேடா. நண்பன்டா” ஆரவ் சொல்ல, “இது ஒன்று தான் குறை” சுவேரா முணங்கினாள்.
“சுவா, என்ன சொன்ன?” ஆரவ் கேட்க, “ஆது அண்ணாவுக்கு நம்ம மேல தான அதிக அக்கறை” என்று துருவினியை பார்த்தான். அவள் கவனித்தாலும் காணும் காட்சி வீதியாக இருந்தது. ஆத்விக்கும் அவளை பார்த்தான்.
“வினு, நீ என்ன சொல்ற?” சுவேரா கேட்க, “ஏதோ தப்பா நடக்குற மாதிரி இருக்கே!” ஆரவ் மூவரையும் பார்த்தான்.
“வினு” அவளை சுவேரா இழுக்க, “ஹாம்..என்ன?” கேட்டாள்.
உனக்கு கேட்கலையா?
என்ன?
ஆது அண்ணாவுக்கு எங்க மேல தான அக்கறை?
யார் என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கா தெரியும்? கேட்க வேண்டியவங்களிடம் கேட்டால் தான தெரியும் சுவா.
வினு, என்ன இப்படி சொல்லீட்ட?
“நான் தப்பா ஏதும் சொல்லலை சுவா” என்று அவள் வலியை வெளியே காட்டிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாத என்று அவள் “காதில் பொருத்தும் கருவியை” பொருத்தி அன்றைய செய்தியை கேட்க தொடங்கினாள்.
ஆபிஸ் வரவும் நால்வரும் இறங்கினார்கள். ஆரவ் கண்ணில் ஆர்வமுடன் உள்ளே செல்ல, துருவினி அப்பொழுதும் காதில் மாட்டியதை எடுக்காமல் கேட்டுக் கொண்டே வந்தாள்.
“வினு” சுவேரா அழைக்க, அப்பொழுதும் அவள் கேளாமல் நடந்தாள்.
ஆரவ் அவளருகே சென்று அவள் தோளில் கை வைக்க பயந்து நகர்ந்தாள் படி இருப்பதை பார்க்காமல்..
“ஏய்” ஆத்விக் சத்தமிட, ஆரவ் அவள் கையை பிடித்து விழாமல் இழுத்தான். துருவினி பேலன்ஸிற்காக அவன் மார்பில் கையை வைத்தாள். இருவரும் நிற்பதை பார்த்து அதிர்ந்த சுவேரா ஆத்விக்கை பார்த்தாள். அவன் கைகளை மடக்கி இறுக்கியவாறு கண்கலங்க அவர்களை பார்த்தான்.
துருவினி அவனிடமிருந்து நகர்ந்து ஏதும் நடவாதது போல “தேங்க்ஸ்” சொல்லி சென்றாள்.
“ஆது, வா போகலாம்” ஆரவ் அவன் தோளில் கையை போட, ஆத்விக் ஆரவ் கையை எடுத்து விட எண்ணினாலும் அவனுடைய ப்ரெண்ட்ஷிப் தடுத்தது உடன் அவன் மனசாட்சியும்..
எல்லாரும் ஆரவ்வை பார்க்க, அவனை தன் நண்பன் என்று அறிமுகப்படுத்தி விட்டு அவன் துருவினியை பார்க்க, அவள் அவன் பேசுவதை கேட்டாலே தவிர யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“ஹே லாவா, எங்க?” சுவேரா கேட்க, ஆத்விக் நின்றான். துருவினி லாவண்யா இடத்தை பார்த்து விட்டு சாய்யை பார்த்தாள்.
“தெரியாது” அவன் சொல்ல, நேசனை பார்த்தாள்.
“என்னிடம் லாவா பேசுறது கூட இல்லை” வருத்தமாக கூறினான் அவன்.
துருவினி அலைபேசியை அவளது கையிலிருந்து வாங்கி, மீண்டும் அழைத்தான். அவள் எடுக்கவில்லை. மேசேஜ்ஜை தட்டி விட்டான்.
“எங்க இருக்க? கால் பண்ணு” அனுப்பினான் ஆத்விக்.
பதில் எதிர்பார்க்க, லாவண்யாவிடமிருந்து பதிலே இல்லை. அனைவரும் பதட்டமாக நிகிதா அபிமன்னை பார்த்தாள்.
“நேசா, எதுவும் பண்ணியா?” அபிமன் கேட்க, “எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்? நான் என்ன செய்யப் போகிறேன்?” அவன் கேட்க, “லவ் பண்ற மூஞ்சிய பாரு” சுவேரா திட்டினாள்.
சிவந்த விழிகளுடன் அழுது சோர்ந்த முகத்துடன் வந்த லாவண்யாவை பார்த்து அனைவரும் அதிர, ஆரவ் அவளை பதட்டமாக பார்த்தான்.
யாரும் இல்லாத உலகில் இருப்பது போல நேராக அவளது இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
லாவா..லாவா..லாவா..ஆளுக்கொருவராக அவளை அழைக்க அமைதியாக இருந்த லாவண்யா, நேசனின் “லாவா” என்ற அழைப்பில் நிமிர்ந்து அவனை பார்த்தாள். யாரும் அவள் கண்ணுக்கு புலப்படவில்லை. அவளது மேசையில் இருந்த அனைத்து பொருட்களையும் தள்ளி விட்டு சீற்றமுடன் நேசனருகே வந்து, அவன் சட்டையை பிடித்து “ஏன்டா இப்படி பண்ண? ஏன்? ஏன்?” கதறி அழுதாள்.
லாவா, என்னாச்சு? துருவினி அவளை இழுக்க, அவளை தள்ளி விட்ட லாவண்யா, “நான் என்னோட வேலையை தான பார்த்துட்டு இருந்தேன். என்னை கொல்லாமல் விட மாட்டேல்ல. என்றோ உன்னுடன் பேசுவதை நிறுத்தி இருக்கணும். தப்பு செய்துட்டேன்” அழுதாள்.
“லாவா” சாய் கத்தி அழைக்க, அவனை திரும்பி பார்த்து அவனிடம் சென்று அவனை அணைத்துக் கொண்டாள். லாவண்யாவை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரவ்.
“என்னாச்சு லாவா?” சுவேரா கேட்க, அவளிடம் வந்த லாவண்யா,
சுவா..இவன் சும்மா இல்லாமல் அவனோட மாமா பொண்ணிடம் சென்று என்னை காதலிக்கிறேன்னு சொல்லி இருக்கான். அந்த பொண்ணு சிறுவயதிலிருந்து இவனையே நினைச்சிட்டு இருந்திருக்கா. இப்ப இவன் சொல்லவும் முதலில் நம்பாததால் நாங்க வேலைக்கு சேர்ந்த புதியதில் எடுத்த புகைப்படத்தை அனுப்பி இருந்திருக்கான் நேற்றிரவு.
அந்த பொண்ணை தற்கொலை முயற்சி செய்திருக்கா. அவங்க வீட்ல அவளை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. சும்மாவே இவனோட அம்மா கண்டபடி பேசுவாங்க. எனக்கு கால் செய்து அழுது கொண்டே அவங்க சொல்ல, நான் மனம் கேட்காமல் ஹாஸ்பிட்டல் சென்று அந்த பொண்ணை பார்த்தேன்.
அங்க அவங்க..என்னை எல்லார் முன்னாடியும் என்று அவள் இதழ்களும் உடலும் நடுங்கியது. கதறி அழ ஆரம்பித்தாள்.
நேசன் அதிர்ந்து அவளிடம் வந்து, “அம்மா ரொம்ப திட்டிட்டாங்களா?” கேட்க, அபியும் சாய்யும் அவனை புரட்டி எடுத்தனர். லாவண்யா அழுகையை நிறுத்தவேயில்லை. ஆரவ் பார்க்க முடியாமல் ஆத்விக் அறைக்குள் சென்று இந்த நிலையில் இவள் என்னை பார்க்க வேண்டாம் என்று மறைந்து கொண்டான்.
ஆத்விக்கோ, “என்னடா இது?” என்று தலையில் கையை வைக்க, சாய் சீற்றமுடன் லாவண்யாவை இழுத்து சென்றான்.
“சாய், அவள விட்ரு? நீ கூட போகாத?” சுவேரா கத்த, அவன் கேட்கவில்லை. “அத்து காரை எடுங்க” என்று துருவினி ஆத்விக் கையை பிடித்து இழுத்து அவர்களை பின் தொடர்ந்து சென்றாள்.
“அண்ணா” என்று சுவேரா ஆரவ்வை அழைக்க, அவன் ஆத்விக் அறையில் இல்லை. “எங்க போனான்?” அவள் அபிமன்னை பார்த்தாள்.
நிகிதா சினமுடன் நேசனை பார்த்து, எல்லாம் உன்னால் தான். அவள் அவளோட வேலையை பார்த்துட்டு தான இருந்தா? அவளோட குடும்ப பிரச்சனையே பெருசா இருக்கு. இதுல்ல நீயும் இப்படி அவளை கஷ்டப்படுத்தீட்ட? உனக்கு அவள் மேல காதல் இருந்தால் எப்படியாவது உன்னோட அம்மாவுடன் அவளை சமாதானமாக பேச வச்சிருக்கணும். அதை விட்டு அவங்களை வைத்தே அவளை ரொம்ப கஷ்டப்படுத்துற? உன்னால அவளை பார்த்துக்க முடியாது. லாவாவை விட்ரு. அவளை கொன்றாத…நிகிதா அழுது கொண்டே எழுந்தாள்.
அபிமன் அவளருகே வந்து, “நீ இரு. நான் லாவாவை பார்க்க போகிறேன்” அவன் சொல்ல, அபி நீ இரு. நானே பார்த்து போய்க்கிறேன்.
நேசன் வேகமாக வெளியே ஓடினான். சுவேரா ஆட்டோ ஒன்றை பிடித்து ஏறினாள்.
சாய் லாவண்யாவை இழுத்து ஹாஸ்பிட்டலுக்குள் சென்று விசாரித்தான். அவர்கள் பின்னே வந்த துருவினியும் ஆத்விக்கும் அவர்களை பார்த்து அவர்கள் பின் ஓடி வந்தனர்.
அவர்களுக்கு பின்னே ஆரவ் வந்தான்.
நேசன் அம்மா லாவண்யாவை பார்த்தவுடன், சீற்றமுடன் அவளை நோக்கி வந்தார்.
சாய்யை அவர் பார்க்கவும், என்ன ஆளை கூட்டி வந்தால் நான் பயந்துருவேன்னு நினைக்கிறியா? லாவண்யாவை அடிக்க கையை ஓங்கினார்.
“ஆன்ட்டி” சாய் சத்தமிட்டான்.
“என்னடா? உன்னையும் மயக்கி வச்சிருக்காளா? என்னை மகன் போதாதுன்னு இவன் வேறையா? இன்னும் எத்தனை பேருடன் உறவு வச்சிருக்க?” அவர் கேட்க, “நிறுத்துங்க” ஆத்விக் கத்தினான்.
யாருடா நீ? உன்னையுமா? என்று அவர் சொல்லும் போது “அம்மா” சீற்றமுடன் நேசன் குரல் வந்தது.
“வாடா வா..ஜானு செத்துட்டாளான்னு பார்க்க வந்தீயா?” அவர் கேட்க, ஆமா, அதுக்கு தான் வந்தேன்னு வச்சுக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ..
நீ தனியா என்னை வளர்க்க போராடியிருக்கன்னு ஒரே காரணத்துக்காக தான் உன்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தேன். லாவா ஒன்றும் என்னை காதலிக்கவில்லை. நான் தான் காதலித்தேன். உன்னோட ஜானு சொல்றேல்ல அவள் என்னை காதலிப்பதை விட நான் லாவாவை காதலித்தேன்.
லாவா வேற யாரையோ காதலிக்கிறாள். இதுவரை அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்கதான் அமைதியாக இருந்தேன். இனி எனக்கு லாவா கிடையாது. உன்னால அவளுடனான சுமூகமான நிலைமை மொத்தமாக மாறிடுச்சு.
எப்ப பாரு தனியா வளர்த்தேன்னு அழுது அழுதே என் வாழ்க்கையை பாழாக்கிட்ட. என் வாழ்க்கை தான் போச்சுன்னா. அவளை பற்றி கேவலமா பேசி இருக்க?
உன்னோட ஜானு தான உனக்கு முக்கியம். உன்னோட மகன் இல்லை. ஜானுவோட சந்தோசம் விருப்பம் மட்டும் தான் உனக்கு முக்கியம். எனக்கு என்ன பிடிக்கும்? என் மனசுல்ல இருக்கிற எதுவுமே உனக்கு முக்கியமேயில்லை. ஏன்னா, நான் நீ பெத்து வளர்த்த அடிமை.
என்னடா பேசுற? அவன் அம்மா சினமுடன் கேட்டார்.
தப்பா ஏதும் பேசவில்லை. ஒரு நாளாவது லாவா சொல்ல வருவதை கூட கேட்காமல் உன் இஷ்டத்துக்கு அவளை கஷ்டப்படுத்தி அழ வச்சிருக்க? என்னோட பொறுமை எதற்குன்னு நினைச்ச? என்றாவது ஒரு நாள் என் அம்மாவாக என்னையோ இல்லை லாவாவையோ புரிஞ்சுப்பன்னு முட்டாள் தனமா இருந்துட்டேன். உனக்கு உன்னோட அண்ணன் குடும்பமும், அந்த ஜானுவும் தான் முக்கியம் அழுதான் நேசன்.
அனைவர் முன்னிலையிலும் லாவண்யா முன் மண்டியிட்டு, என்னை மன்னிச்சிரு லாவா. இனி காதலிக்கிறேன்னு உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். என் அம்மாவும் இனி உன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டாங்க. “எனக்கு பதில் மட்டும் சொல்லு ப்ளீஸ்?” அவன் கேட்க, “இதுக்கு மேல என்னடா உனக்கு பதில் வேணும்?” சுவேரா சினமுடன் கேட்டாள்.
“நீ லாவாவோட பேசுற தகுதியை இழந்துட்ட நேசா” என்ற சாய், லாவண்யா கையை பிடித்து உங்கள் மகனுக்கு முன் எங்க லாவாவுக்கு அவளுக்கு பிடித்தவனுடன் திருமணம் நடக்கும். நடத்தி வைப்பேன் சாய் கூறினான்.
“ம்ம் அது தான் எனக்கு தெரியணும்?” எழுந்தான் நேசன்.
“என்ன தெரியணும்?” லாவண்யா கேட்டாள்.
ஒரு வேலை என் அம்மா உன்னை கஷ்டப்படுத்தாமல் நல்லவிதமாக உன்னிடம் நடந்து கொண்டிருந்தால் என் காதலை ஏற்றுக் கொண்டிருப்பாயா? இப்பொழுது உன் மனதில் இருப்பவனை நகர்த்தி வைத்து விட்டு பதில் சொல்லு? “எனக்கு பதில் மட்டும் போதும். என்னோட முதல் காதல் தோற்றதாக இருக்கக் கூடாது லாவா” என்று கண்ணீருடன் கேட்டான் நேசன்.
“ம்ம் எனக்கு உன்னை பிடிக்கும் நேசா” என்று அவன் கன்னத்தில் கையை வைத்த லாவண்யா, “உன்னோட காதல் வெற்றியாகி இருந்திருக்கும்” என்று நேசன் அம்மாவை பார்த்தாள்.
நேசன் கண்ணீருடன் அவள் கன்னத்தில் வைத்த கையை பிடித்து அவன் அம்மாவை பார்த்து, ஒரு முறையாவது இது போல ஆறுதலாக என்னை தொட்டு இருக்கீங்களாம்மா? எனக்கு லாவாவிடம் பிடித்ததே இது தான். நாம ஒரு மடங்கு பாசம் கொடுத்தால் பத்து மடங்காக காட்டுவாள். அவளை போய் இப்படி எல்லார் முன்னாடியும் கேவலமாக பேசி இருக்கீங்க? கண்ணீர் நிற்காமல் கேட்டான்.
லாவண்யா அவள் கையை இழுத்துக் கொண்டாள்.
சாரி லாவா. கண்ணை துடைத்து, “நீ காதலிக்கும் அவன் யாரு? எனக்கு அது மட்டும் சொல்லு போதும். நீ பாதுகாப்பாக இருக்கணும்” என்று அவன் அவள் கன்னத்தில் கையை வைக்க செல்ல, சாய் அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டான். விரக்தியுடன் அவளை பார்த்தான் நேசன்.
“அத்தை போதும்” என்று சினமுடன் நேசன் அவளை பார்த்து, “எந்த நம்பிக்கையில யாருன்னு தெரியாதவை லவ் பண்ற?” கேட்டான்.
நாங்க மீட் பண்ணும் போதெல்லாம் ஒரு பாதுகாப்பு அவர் மூலம் கிடைத்தது. அதனால் எனக்கே தெரியாமல்..அவள் கண்ணீர் வந்தது. தூரத்தில் இருந்து ஆரவ் அவளை வேதனையுடனும் மகிழ்வுடனும் பார்த்தான்.
“பாதுகாப்பா?” ஆத்விக் கேட்டான்.
“அந்த முகமூடிக்காரன்” என்று சுவேரா சொல்லி விட, ஆத்விக் யோசனையுடன் நின்றான். ஆரவ் புன்னகையுடன் அவனையும் பார்த்தான்.
“ஹே, நீ சொன்ன பூனைக்குட்டி சார்லி தான?” சுவேரா லாவண்யாவை பார்க்க, “வரா, உனக்கு எப்படி தெரியும்?”
அதுவா..சீக்ரெட்..
சீக்ரெட்டா? குழப்பமுடன் அவளை பார்த்தாள் லாவண்யா.
“அவரை எப்படி கண்டுபிடிக்கிறது?” நேசன் கேட்க, “அதை எதுக்கு நீ கேக்குற?”
நான் அவரை பார்க்கணும்..
“பார்த்து போதும் நேசா” துருவினி சொல்ல, “இல்ல துரு, நிஜமாகவே இனி லாவா வாழ்க்கையில் இடைஞ்சலாக வர மாட்டேன்” நேசன் கூற, எல்லாரும் நிம்மதியடைந்தனர். அவன் அம்மா தான் அவனை பாவமாக பார்த்தார்.
“வாங்க போகலாம்” ஆத்விக் அழைக்க, இவ்வளவு நேரம் அவனருகே நின்று கொண்டிருந்த துருவினி லாவண்யாவுடன் நடந்தாள்.
நேசன் அங்கேயே அமர்ந்தான்.
“நேசா” அவன் அம்மா அழைக்க, அவர் கையை தட்டி விட்டு இத்தனை நாள் யாருக்காக வாழ்ந்தீங்களோ அவங்க கூடவே இருந்துக்கோங்க. எனக்கு இனி யாருமில்லை..
“மாப்பிள்ள, என்னோட பொண்ணு?” அவன் மாமா அவன் முன் வந்தார்.
எனக்கு ஜானுவை பிடிக்காது மாமா. அம்மா எப்போதும் அவளை பற்றியே பெருமை பேசி என்னை கவனிக்காமல் விட்டுட்டாங்க. அதனால முதல்ல இருந்தே ஜானுவை பிடிக்காது..
“மாமா” ஜானு அழைக்க, யார் என்ன பேசினாலும் இது தான் உண்மை.
ஜானு..ஜானு..ஜானு..எதற்க்கெடுத்தாலும் ஜானு. உன்னை மட்டுமல்ல உன்னோட பெயரும் எனக்கு பிடிக்கலை. நான் வேற பொண்ணை பார்த்து கல்யாணம் செய்துப்பேன். நீயும் வேற யாரையாவது பண்ணிக்கோ..
“அம்மா” உங்களை அம்மான்னு அழைக்கவே பிடிக்கலை. பெண்ணுக்கு பெண் தான் எதிரின்னு சொல்வாங்க. அதை நீங்க நிரூபிச்சிட்டீங்க. என்னை பெத்து வளர்த்ததுக்காக இத்தனை நாள் நான் பட்ட கஷ்டம் போதும். இனி உங்கள் விருப்பப்படி யாருடனும் இருந்துக்கோங்க. நீங்க செய்த கடமைக்காக நானும் என் கடமையை சரியாக பணம் அனுப்பி முடித்துக் கொள்கிறேன் என்று நேசன் செல்ல, எல்லாரும் நகர்ந்தனர்.
“நேசா போகாத.. அண்ணா.. போக வேண்டாம்ன்னு சொல்லு” அவன் அம்மா அழுதார்.
ச்சே..உன்னோட மகனை என்னோட பொண்ணு திருமணம் செய்வதாக சொல்லவும் தான் உன்னிடம் பேசவே செய்தோம்..
“ஜானு” பாசமாக நேசன் அம்மா அந்த பொண்ணை அழைக்க, “ஏய் கிழவி, உன்னோட பையனுக்கு திமிறை பாரு. அவன் இல்லைன்னா நான் செத்துருவேன்னு நினைச்சானா?” என்று கையிலிருந்த கட்டை அந்த பொண்ணு பிரித்து அவர் முன் தூக்கி எறிய, நேசன் அம்மா அதிர்ந்து போனார்.
ஜானு..
“போடி” ஜானு அம்மா தன் கணவன் மகளை இழுத்து செல்ல, மனமுடைந்து அமர்ந்தார் நேசன் அம்மா. அவன் எப்போதோ இங்கிருந்து சென்று விட்டான்.
அவர் கவலையுடன் வீட்டிற்கு சென்றவர் ஜானுவுடன் எடுத்த புகைப்படம், அவள் கொடுத்த கிப்ட் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார்.
லாவண்யாவை ஆத்விக் காரில் துருவினி அழைத்து ஆபிஸ் வந்தனர்.
“லாவா, ஆர் யூ ஓ.கே?” நிகிதா அழைக்க, ம்ம்..ஓ.கே என்று அவள் சொல்லிக் கொண்டே அவளது இருக்கையில் அமர்ந்தாள்.
“யாரும் அவளை தொந்தரவு செய்யாதீங்க” ஆத்விக் சொல்ல, “நல்ல பாஸ்” சாய் அவனை புகழ்ந்தான். துருவினி அமைதியாக இருக்க, வினு..என்னாச்சு? கேட்டான் சாய். அவள் புன்னகைத்தாள்.
சற்று நேரத்தில் ஆரவ் ஆபிஸ் வந்தான். லாவண்யா துருவினியுடன் வெளியே சென்றிருந்தாள்.
சுவேரா ஆரவ்வை திட்டி தீர்த்து விட்டாள். “ஆத்விக்கும் எங்க போன?” என்று கேட்க, சித்திரன் கால் செய்ததாக சொல்லி சமாளித்தான்.
சுவேரா அருகே அமர்ந்து, அவளுக்கு உதவிக் கொண்டிருந்தான் ஆரவ். உள்ளே ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டே வந்த லாவண்யா அவனை பார்த்து அதிர்ந்து அதனை கீழே போட்டாள்.
“லாவா, என்ன பண்ணீட்ட? ஐஸ்கிரீமை கீழ போட்ருக்க? இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?” அவள் கேட்க, சுயம் வந்து “ஐஸ்கிரீம் விழுந்திருச்சு” வெளியே வராத குரலில் கூறி, அதை எடுக்க வந்தாள்.
“உன்னிடம் சொல்லலைல்ல? இவன் என்னோட அண்ணன் ஆரவ்” என்று அவனை லாவண்யா முன் இழுத்து வந்து அறிமுகப்படுத்தினாள்.
ஆரவ் புன்னகையுடன், “நிறைய ஐஸ்கிரீம் சாப்பிடீங்க போல?” என்று அவளது வாயிலிருந்ததை தொட்டு காட்டினான்.
அது..அது..அவள் திக்கினாள்.
“லாவா, என்னாச்சு?” சுவேரா கேட்க, “வரா” என்று அவளை நெருங்கி அவள் காதருகே வந்து, “உன்னோட உடன் பிறந்த அண்ணனா? அவர் இல்லைன்னு சொன்ன?”
அண்ணாவுக்கு ஒன்றுமில்லை. கொலையை நிரூபிக்க ஆதாரம் வேணும்ல்ல? மறைஞ்சி இருந்திருக்கார். எனக்கும் தெரியாது..
ஓ..என்று லாவண்யாவிற்கு இவன் முகத்தை மறைத்தது. அவன் இவர்களை பற்றி பேசியது நினைவிற்கு வந்தது. பின் அவன் சொன்ன பத்து வருடமாக காதலிக்கும் கெர்ல் ப்ரெண்டு நினைவுக்கு வந்தாள்.
தலையை உலுக்கிய லாவண்யா, “சரி நாம வேலையை பார்க்கலாம்” என்று சொல்ல, எல்லாரும் வேலையை பார்த்தனர்.
மதிய உணவின் போது எல்லாரும் உணவை முடித்து விட்டு அமர்ந்தனர். “பசங்க ஆத்விக் அழைத்தான்” என்று சென்று விட்டனர்.
“நான் சொல்றதை கேட்டுக்கோ. அதிகமாக ரியாக்ட் பண்ணாத” பீடிகை போட்ட சுவேரா, “என்னோட அண்ணா ஆரவ் உன்னை காதலிக்கிறான்” என்று சொல்ல, துருவினியை விட லாவண்யாவிற்கு தான் தூக்கி வாரி போட்டது.
“என்ன சொல்ற சுவா?” நிகிதா கேட்க, ஆமா..முதல்ல உன்னை இரு அண்ணாக்களும் சேர்ந்து தான் பார்த்தாங்க. ஆது அண்ணா எப்படின்னு தெரியல? ஆனால் ஆரவ்விற்கு உன்னை ரொம்ப பிடிச்சிருச்சி. ஆது அண்ணாவிடம் நேரடியாகவே சொல்லீட்டான். சும்மா உன்னை பற்றி தான் பேசிக்கிட்டே இருப்பான். அவனுக்கு ஆரியன் மாமாவை ரொம்ப பிடிக்கும். அதனால உன்னை கல்யாணம் செய்து கொண்டால் அவர் பக்கத்திலே இருக்கலாம்ன்னு ஒரு எண்ணம்..
ஆனால் என்னால நம்ப முடியாத விசயம். ஆரவ்வை விட ஆது அண்ணாவிற்கு உன் மீதான காதல். நீயும் அவரை தான காதலிக்கிற?
ஆரவ் இப்ப உன் மேல விருப்பம் இல்லாதது போல காட்டிக்கிறான். ஒரு வேலை ஆது அண்ணா உன்னை காதலிக்கும் விசயம் தெரிந்ததால் இருக்குமோன்னு தான்..
ஆனால் ஆது அண்ணாவும் நீயும் விலகுவது போல இருக்கு. உனக்கு ஆது அண்ணா தான் பிடிச்சிருக்கு. அவரும் உன்னை மட்டும் தான் காதலிக்கிறார். ஆரவ்விற்காக உன்னை விட்டு கொடுக்க எண்ணி தான் செய்வது போல தெரியுது..சுவேரா துருவினியை கவனிக்க, துருவினி அதிர்ச்சியை குறைத்து, “தேங்க்ஸ் சுவா” இதை கூறியதற்கு..
“ஆரவ் சாரை வைத்தே அத்துவை என்ன செய்யப் போகிறேன் பாரு” அவள் சொல்ல, சற்று முன் லாவண்யாவிடம் அவளது இடத்தை கண்ணை காட்டிய ஆரவ் எண்ணம் வந்து, “என்னவாக இருக்கும்?” என்று பிரித்து பார்க்க, பொட்டிக்கில் அவர் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த புடவையை லாவண்யாவிற்கு வாங்கி இருந்தான் ஆரவ்.
“அப்படின்னா…அந்த புடவை? எனக்கான கடைசி கிஃப்ட்டா? அவர் சொன்ன பத்து வருட காதலி துருவா?” மனமுடைந்து போனாள் லாவண்யா.
லாவண்யா திடீரென மயங்க, பொண்ணுங்க பதறி சத்தமிட்டனர். பசங்களும் உள்ளே வந்தனர்.
தண்ணீரை எடுத்து சாய் அவள் மீது தெளிக்க, ஆரவ் பதறி அவளை பார்ப்பது லாவண்யாவிற்கு துருவினியை அவன் ரசித்து பார்ப்பது போல எண்ணம் வந்தது.
“சார்..சார்..நான் ஹாஸ்ட்டலுக்கு போகிறேன்” என்று லாவண்யா சொல்ல, “ஆமா நீ ரெஸ்ட் எடுத்திட்டு வா” என்று சுவேரா சொல்ல, லாவண்யா கண்ணீருடன் ஆரவ்வை பார்த்தாள்.
ஆரவ்வும் சாய்யும் அவளை விட்டு செல்ல, மனமில்லாமல் சென்று கொண்டிருந்த ஆரவ்விற்கு அவளது பார்வையில் தனக்கான வலியை பார்க்கவும் குழப்பமே மேலிட்டது. ஆனாலும் அதை கடந்து ஆபிஸ் சென்றான்.
ஆபிஸில் துருவினி வேண்டுமென்றே ஆரவ்விடம் நெருக்கமாக பேசினாள். முதலில் வேலையில் கவனமாக இருந்த ஆத்விக், இவர்கள் மூவரும் சிரிப்பதை பார்த்து கோபமடைந்தான்.
நேகனும் வரவில்லை. அதனால் சாய் மட்டும் தனியே அவனது வேலையை கவனித்துக் கொண்டிருந்தான்.
ஆத்விக் கேமிராவில் பார்ப்பான் என்று தெரிந்தே ஆரவ், துருவினியை நெருங்க வைத்திருந்தாள் சுவேரா. ஆரவ் அவன் தங்கை சுவேராவிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான்.
“சுவேரா ஏற்கனவே துருவினி மீது அவனுக்கு ஆர்வம் இருக்கா?” என்று பேச்சு வாக்கில் கேட்டிருப்பாள். “இல்லை” என்பதனை துருவினியிடம் சொல்லி இருப்பாள். சாய் தான் துருவினியை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆத்விக்-துருவினி காதலை தான் ஆரவ் தூரமிருந்து விழியானாக பார்த்திருப்பானே! இருவருக்கும் ஏதோ பிரச்சனை. அதான் துரு அவனை வெறுப்பேற்ற தன்னை பயன்படுத்திக் கொள்கிறாள் என்று எண்ணி அவனும் ஒத்துழைத்தான். லாவண்யாவிடம் சுவேரா பேசியது ஆரவ்விற்கு தெரியாமல் போனது துரதர்ஷடமே!
பொறுக்க முடியாத ஆத்விக் துருவினியை அழைத்தான். சுவேரா அவளிடம் கண்ணை காட்ட, கண்ணை மூடி திறந்தாள் துருவினி புன்னகையுடன். ஆரவ் இவர்களை பார்த்து மனதினுள் புன்னகைத்தான்.
துருவினி ஆத்விக் அறைக்குள் சென்றாள்.
“வாங்க மிஸ் துருவினி” உட்காருங்க முகம் மலர அழைத்தான். துருவினி முகம் சுருங்க அமர்ந்தாள்.
எதுவும் பேசாமல் அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“அத்து, கூப்பிட்டீங்கல்ல? என்னன்னு சொல்லுங்க?” வேலை இருக்கு.
“பார்க்கலாம் மிஸ் துருவினி. கையை கொடுங்களேன்” என்று சொல்ல அவள் புரியாமல் விழித்தாள்.
“அட, இது கூட முடியாதா மேடமுக்கு? நான் விசயத்துக்கு வாரேன்” என்ற ஆத்விக் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
“வாழ்த்துக்களா? எதுக்கு?” புருவம் சுருக்கி அவனை பார்த்தாள்.
“ஒரே நாளில் மேடம் ஆரவ்வை மடக்கீட்டீங்க?” கேட்டான்.
“அத்து” சினமுடன் அழைத்தாள்.
“எதுக்கு கத்துற? காது வலிக்குது” காதை குடைந்து கொண்டு ஆத்விக் அவளை ஏறிட்டான்.
கண்ணை மூடி அமைதியான துருவினி, “அத்து தேவையில்லாமல் பேசாதீங்க. எனக்கு எல்லாமே தெரியும். ஆரவ் என்னை காதலிக்கிறார்ன்னு தான என்னை விட்டு விலக நினைக்கிறீங்க?” அவள் கேட்க, மனம் பதைத்தாலும் அவன் மனதை திடப்படுத்தி ஆத்விக் சிரித்தான்.
“அத்து, சிரிக்காதீங்க” துருவினி கோபமானாள்.
ஆரவ் என்னோட நண்பன் தான். அவனுக்காக காதலிக்கிற பொண்ணை விட்டுக் கொடுக்கும் மனசாளன் நான் இல்லை. எனக்கு என்னமோ நமக்குள்ள செட் ஆகாதுன்னு தெளிவா தெரியுது..
“அத்து, என்ன சொல்றீங்க? ஆரவ்வால் நீங்கள் விலகலையா?” கண்கலங்க கேட்டாள்.
இல்லை. எனக்கு மும்பையில ஒரு பொண்ணை பிடிச்சிருந்தது. ஆனால் அவளோட பெற்றோருக்கு என்னை பிடிக்காது..
பொய் சொல்லாதீங்க அத்து..
நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை. இந்தா நீயே பாரு. நானும் அவளும் நெருக்கமாக இருந்திருக்கோம் அவன் அலைபேசியை அவளிடம் தூக்கி போட்டான்.
துருவினி கைகள் நடுங்க கண்ணீருடன் அதை எடுத்தாள். ஆத்விக் சொன்னது போல அழகான பொண்ணு ஒன்று அவனுடன் நடனமாடுவதும், அவள் ஆத்விக் கன்னத்தில் முத்தம் கொடுப்பதும், அந்த பொண்ணுடன் அவன் சிரிப்புடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து அழுகையை கட்டுப்படுத்தி அவன் மேசையில் வைத்து அமைதியாக எழுந்தாள்.
“ஹேய் எங்க போற? முக்கியமான விசயமே இனி தான சொல்லப் போறேன். உட்காரு” ஆத்விக் சொல்ல, அவள் ஏதும் பேசாமல் நின்றாள்.
தோளை குலுக்கி விட்டு சுவற்றை பார்த்தவாறு நின்றான்.
அவளோட குடும்பம் என்னை ஏத்துக்கிட்டதா சொன்னா. அதனால அவங்கள மீட் பண்ண நான் நாளை மும்பை கிளம்புகிறேன். முதல்ல மீட்டிங். அப்புறம் மேரேஜ்.. அவன் சொல்லி முடிக்க, துருவினி அழுது கொண்டே அவன் மேசையில் இருந்த அனைத்தையும் தள்ளி விட்டாள்.
“ஏய், என்ன பண்ற? அதெல்லாம் என்னோட பொருள்” ஆத்விக் அவளை பார்க்க முடியாமல் அச்சு பிசகாமல் சாதாரணமாக பேச, மேலும் காதலை இழந்த வேதனையில் அவனிடம் வந்து அவனை அடித்தாள்.
அவள் கையை பிடித்து ஆத்விக் அவளை சுவற்றில் சாய்த்து, இது என்னோட ஆபிஸ். உன்னோட வீடு இல்லை. “அன்று போல நாம நெருக்கமா இருக்கணும்ன்னா சொல்ல வேண்டியது தான? அதுக்காக இப்படியா செய்வ? இதையெல்லாம் அரேன்ஜ் செய்வதற்கும் போதும் போதுமாகிடும்” அவன் சினமுடன் திட்டினான்.
அவனை தள்ளி விட்டு நகர்ந்து துருவினி அழுது கொண்டே, “ஐ ஹேட் யூ..ஹேட் யூ வெரி மச்” அழுது கொண்டே கதவை திறக்க சென்றாள்.
பாய்ந்து அவளை நிறுத்தி, “நீ இப்படியே போனால் உன்னை நான் ஏதோ செய்துட்டேன்னு தப்பா நினைச்சுப்பாங்க. அதனால என்னோட மேரேஜ் கூட நடக்காமல் போயிடும். உள்ள போய் ரிலாக்ஸ் ஆகிட்டு வெளிய போ” என்றான் அவளை காயப்படுத்தும் நோக்கோடு…
மனம் வெந்து நொந்து அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள் துருவினி. ஆத்விக் கண்ணீருடன் தரையில் அமர்ந்தான். அவன் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
கண்ணீரை துடைத்து விட்டு, அமைதியாக ஏதும் நடக்காதது போல அவன் வேலையை தொடர்ந்தான்.
உள்ளே சென்ற துருவினி அழுது கொண்டே படுக்கையில் குப்புற விழுந்தாள். அவளுக்கு அவர்களின் நெருக்கமான அன்றைய நினைவும் இன்று ஆத்விக் பேசியதும் நினைவுக்கு வந்தது.
சீற்றமுடன் எழுந்து அப்படுக்கையை கிழித்தாள். உள்ளே இருந்த பஞ்செல்லாம் அவ்வறையை பாழாக்கியது. அவர்களின் அன்றைய அழகான அவ்வறையின் நிலை இன்று மொத்தமாக கரைந்து போனது. ஆனால் அவன் மீது கோபத்தை காட்ட முடியாமல் அதில் காட்டியதில் மனது லேசாக இருந்தது.
“ஆத்விக்கை பார்க்கக் கூடாது” என்று அவ்வறையின் ரெஸ்ட் ரூம் செய்து முகத்தை கழுவி அறையை விட்டு வந்தாள். மனம் லேசானாலும் அவனை பார்த்தால் தாங்க மாட்டோம் என்று நேராக அவனுக்கு எதிரே இருந்த காகிதத்தை எடுத்தாள்.
கண்களை உயர்த்தி பார்த்த ஆத்விக், “நீ ஓ.கேவாகிட்டேல்ல. போ வேலையை பாரு” அவன் சொல்ல, அவன் இல்லாதது போல அரைநாளுக்கான விடுப்பை எழுதி கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.
“ஹப்பாடா, வீட்டுக்கு போனால் தான் கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆவாள்” ஆத்விக் எண்ண, அந்த எண்ணம் பொய்க்கப் போவதை அவன் அறியவில்லை.
சுவேரா ஆர்வமுடன் அவளை பார்க்க, உள்ளே சென்றது போலவே வந்த துருவினி முகத்தில் சிரிப்பு மட்டும் இல்லை. அவள் யாரையும் நிமிர்ந்து கூட பாராமல் தன் பையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினாள்.
“துரு” சாய் அழைக்க, அவள் காதில் வாங்கவேயில்லை. சுவேராவும் ஆரவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆத்விக் அறையை பார்த்தனர். அவன் அவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
“அபி வேற இல்லை” புலம்பியவாறு சாய் எழுந்து அவள் பின் ஓடினான். சுவேரா, ஆரவ்வும் வெளியே செல்ல துருவினி சென்று விட்டாள்.