“அத்து” அவள் அழைக்க, நிமிர்ந்து பார்த்த ஆத்விக் வேகமாக எழுந்தான்.
“அத்து” அவள் அவனை அணைக்க அவளை தள்ளி விட்ட ஆத்விக், “ஏதாவது திட்டுடா. அவள் உன் பக்கம் வரக் கூடாது” மனதில் எண்ணினான்.
“என்ன பண்ற?” முகத்தை சிடுசிடுவென வைத்து ஆத்விக் கேட்டான்.
“அத்து, நீங்க என்னோட அழைப்பை எடுக்கவில்லை” அவள் கண்கலங்க கேட்டாள்.
நான் சும்மாவா இருக்கேன். எனக்கு வேலையே இல்லையா?
“அத்து மாமா” அவள் அழைக்க, மனம் அவளருகே செல்ல துடித்தாலும் ஆரவ்வை அவன் நினைவிற்குள் கொண்டு வந்து, “மாமாவா? அதெல்லாம் சொல்லாத. எனக்கு பிடிக்கல”.
“உங்களுக்கு பிடிக்கும் அத்து மாமா” அவள் சொல்ல, அவளை இருக்கையில் தள்ளி அவளை நெருங்கி “உனக்கு இப்ப என்ன வேணும்? கட்டிப்பிடிக்கணுமா? முத்தம் கொடுக்கணுமா? இல்லை என்னை கேட்கிறாயா?” அவன் வார்த்தைகளில் அனலை உமிழ்ந்தான்.
அவனை தள்ளி விட்டு அழுகையுடன், எனக்கு இதெல்லாம் வேண்டாம். நீங்க பேசணும். காதலிக்கணும்..
முடியாது. எனக்கு உன் மீது விருப்பம் தான். காதல் இல்லை என்று அவளை அவன் பார்த்த பார்வையில் அவனை அடிக்க துருவினி கையை ஓங்கினாலும் அவளால் முடியவில்லை.
அத்து, ப்ளீஸ் விளையாடாதீங்க. நான் அபிக்கு பின் உங்களை தான் மனதால காதலிக்கிறேன்.
“ம்ம் எப்படி? அபிக்கு பின்? அவன் திருமணம் முடிந்த பின்னும் அவனை தான நினைச்சிட்டு இருந்த? அவனுக்கு குழந்தை வரப் போகுது என்றவுடன் நானா? எனக்கு பின் யாரை வச்சிருக்க?” அவன் கேட்க, துருவினி உடைந்து போனாள்.
“ஏன் அத்து இப்படி காயப்படுத்துறீங்க? அன்று நானில்லாமல் வாழ முடியாதுன்னு சொன்னீங்க?”
“ஆமா, எல்லா பசங்களும் பொண்ணுங்களிடம் சொல்வது தான?” அலட்சியமாக சொல்ல, அத்து..என்னால அபி விசயம் போல உங்களை எடுத்துக்க முடியாது. இது நீங்களே இல்லை..
ஆமா, நானில்லை தான். அன்று நான் நடித்தேன். இன்று தான் ரியலாக பேசுகிறேன்.
அத்து, ப்ளீஸ்..இப்படி பேசாதீங்க. என்னால தாங்க முடியாது.
“நான் ஒன்றும் செய்யமுடியாது” என்று முகத்தை திருப்பிய ஆத்விக்கின் மனம், “போதும் இதுக்கு மேல வேண்டாம்” என்றது.
எனக்கு தூக்கம் வருது. போகிறேன் அவன் செல்ல, அவனை பின்னிருந்து அணைத்த துருவினி..”ப்ளீஸ் அத்து. நீங்க சொன்னது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை”.
“என்ன சொல்ற?” அவன் சினமுடன் கேட்க, நான் உங்களது..பேச முடியாமல் தலைகவிழ்ந்து அவனது உடலை வருடினாள். ஆத்விக் அவளை அதிர்ந்து பார்க்க, நான் இப்படி கூட இருந்துட்டு போறேன். பேசாமல் மட்டும் இருக்காதீங்க அத்து.
“ச்சே..என்ன பண்ற?” அவன் கேட்க, நீங்க என்னை காதலிக்கலைன்னாலும் பரவாயில்லை. நாம லிவ் இன்ல்ல இருப்போம் அவள் சொல்ல, ஆத்விக் மனம் குமுறியது.
பொண்ணு மாதிரியா பேசுற? அவன் காதலை மறைக்க போராடினான் அவனுள்ளே..
நீங்க எப்படினாலும் நினைச்சுக்கோங்க அத்து.
“உன்னை பார்க்கவே பிடிக்கலை” அவன் நகர, “நான் இன்று கூட தயார் தான்” அவள் சொல்ல, இம்முறை அவன் காதலில் வந்த கோபத்தில்..ச்சீ..எவ்வளவு கீழ இறங்கிட்ட? சொல்லி அவளை தள்ளினான். துருவினி கீழே விழுந்து அழுதாள். ஆத்விக் நகர, “அத்தை” ஆகர்ஷனா ஓடி வந்தாள்.
“மாமா, எதுக்கு அத்தையை தள்ளி விட்டீங்க?” அவள் ஆத்விக்கிடம் எகிறினாள்.
கண்ணை துடைத்த துருவினி, ஆகா..அத்து என்னை தள்ளி விடலை..
அத்த, பொய் சொல்லாத. நான் பார்த்தேன்.
இல்லடா ஆகா, நானும் மாமாவும் பேசும் போது பூச்சி வந்துருச்சி. அதான் மாமாவை பிடிச்சேன்னா அவரும் பயத்துல்ல நகர்ந்தார். நான் விழுந்துட்டேன்.
அவள் இருவரையும் பார்க்க, ஆத்விக்கோ “நான் அன் லக்கி வினு. எனக்கு உன்னுடன் வாழ கொடுத்து வைக்கலை. உன்னை நான் எவ்வளவு கேவலமாக பேசினேன். இப்பொழுது கூட என்னை விட்டுக் கொடுக்காமல் பேசுற?” மனதில் எண்ணிய அவன் கண்ணீரை பார்த்து விட்டாள் துருவினி.
“அத்து” அதிர்ந்து, “என்னிடம் நடிக்கிறீங்களா? இல்லை பரிதாபப்படுறீங்க? நான் உங்க வினு. பரிதாபம் மட்டும் பட்றாதீங்க அத்து” மனதினுள் கதறினாள்.
“அத்த” ஆகர்ஷனா அழைக்க, “நீ தூங்கலையா ஆகா?”
“தூக்கம் வரலை அத்தை” அவள் சொல்ல, துருவினிக்கு அவனை பார்க்க முடியவில்லை. நீ விளையாடு. அத்தை ரெஸ்ட் எடுக்கப் போறேன் அவள் நகர, ஆத்விக் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“மாமா, அழுறீங்களா? சாரி மாமா” ஆகர்ஷனா சொல்ல, அவளை தூக்கிய ஆத்விக், “நீ அப்பாவிடம் படுத்துக்கோ. தனியாக வெளியே வரக் கூடாது” அவளை அறையில் விட்டு அவன் ஆரவ் உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றான் ஆத்விக்.
அமைதியாக சுவேரா அருகே படுத்துக் கொண்டாள் துருவினி. ஆனால் ஆத்விக்கால் ஆரவ் அருகேயும் இருக்க முடியவில்லை. மீண்டும் வெளியே வந்தான். ஆரியன் ஹாலில் அமர்ந்திருந்தான். அதை கூட கவனிக்காமல் எதையோ இழந்த விரக்தியுடன் வெளியே சென்றான் ஆத்விக். அவனை பார்த்த ஆரியன் சிந்தனையுடன் அவன் பின்னே சென்றான்.
ஆத்விக் அவனது ஷூவை போட்டுக் கொண்டு வீட்டின் அருகே இருக்கும் மைதானத்தில் வியர்க்க வியர்க்க ஓடினான். அருகே செல்லாமல் ஆரியன் தூரமிருந்து அவனை பார்த்தான்.
வீட்டிற்கு சென்று அவனும் அவனது ஸ்போர்ட்ஸ் ஷூவை போட, உத்தமசீலன் அவன் தோளில் கை வைத்தார்.
அப்பா, அத்து சரியில்லை..
தெரியும்ப்பா. நம்ம துருவும் தான். இருவருக்கும் பிரச்சனை போல. அவங்க பிரச்சனையை அவங்களே தீர்த்துக்கட்டும். நாம தலையிட வேண்டாம். நீ உள்ள போ என்று அவர் மைதானம் சென்று ஓரிடத்தில் அமர்ந்து அவன் ஓடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆத்விக் கண்ணிற்கு அங்கிருக்கும் யாரும் தெரியவில்லை. மனம் ஓய்ந்து புல்தரையிலே படுத்தான். எழுந்து உத்தமசீலன் அவனருகே வந்து அமர்ந்தார். அவன் தலையை திருப்பி அவரை பார்த்து எழுந்து அமர்ந்தான்.
“மாமா” அவன் அழைக்க, அவர் துவாலையை அவனிடம் நீட்டினார். அவன் வாங்கி முகத்தை அழுந்த துடைத்து விட்டு அவரை பார்த்தான். அவர் அங்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி, குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
மாமா, நான்..
எதுவும் சொல்ல வேண்டாம் மாப்பிள்ளை. எனக்கு நம்பிக்கை இருக்கு.
இல்ல மாமா, எனக்கு நம்பிக்கை இல்லை..
அவர் அவனை ஆழ்ந்து பார்த்தார்.
புரியுது மாமா. நான் தான் வினுவை காதலிக்கிறேன்னு சொன்னேன். ஆனால் இப்ப வேண்டாம்ன்னு தோணுது..
விரக்தியுடன் அவனை பார்த்த உத்தமசீலன் எதுவும் பேசாமல் எழுந்தார்.
“மாமா, பேச மாட்டீங்களா?”
அப்படியெல்லாம் இல்லை மாப்பிள்ள. முன் போல முடியுமான்னு தெரியல. நான் துருவோட அப்பா. அவளோட சந்தோசம் தான எனக்கு வேண்டும்.
சாரி அங்கிள்..
பரவாயில்லை மாப்பிள்ள, இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா பழைய விசயத்துல்ல இருந்து வெளிய வந்த மாதிரி இருந்தது. ஆனால் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பமாகுதுன்னா அவ தாங்க மாட்டா. நான் என் மகள் பக்கம் தான் இருப்பேன். இதுக்காக வீட்டுக்கு வராம இருந்துறாதீங்க. பிள்ளைங்க எல்லாரும் கஷ்டப்படுவாங்க.
“மாப்பிள்ள துரு ஏதாவது தப்பு செஞ்சிருந்தா அவள மன்னிச்சிருங்க” அவர் சொல்ல, “என் மேல தான் மாமா தப்பு. வினு மேல சின்ன தவறு கூட இல்லை”.
“வீட்டுக்கு சீக்கிரம் வந்துருங்க” அவர் சொல்லி எழுந்து செல்ல, அவரை பார்த்துக் கொண்டிருந்த ஆத்விக் மனம் அவனை திட்டி தீர்த்தது. அவன் சினமுடன், நான் அவளோட வாழ்க்கையில எதுக்கு வரணும்..சொல்லி சொல்லி அவன் தரையில் கையை குத்தி காயமாக்கிக் கொண்டான்.
வேகமாக எழுந்து சென்று கொண்டிருந்த உத்தமசீலன் முன் வந்து, “மாமா நான் நாளை வீட்டுக்கு வாரேன். மாமாகிட்ட சொல்லிடுங்க” என்று அவன் கையை பின்னே கட்டியவாறு பேச,
அவர் அதை பார்த்து “காயத்திற்கு மருந்து போட்டு விட்டு வேற வேலையை பாருங்க மாப்பிள்ள” சொல்லி சென்றார். அவன் அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
“நான் என்ன செய்வது? என்னால வினுவை பார்த்துட்டு பார்க்காதது போல எப்படி செல்வேன்?” வேதனையுடன் அவன் ஹாஸ்பிட்டல் சென்றான்.
உத்தமசீலனை பார்த்த ஆரியன், “அவர் பின் ஆத்விக் வருகிறானா?” என்று பார்த்தான்.
“ஆரியா, மாப்பிள்ளை நாளைக்கு வருகிறாராம். உன்னிடம் சொல்ல சொன்னார்” வருத்தமுடன் சோர்ந்து அவர் நடக்க, “அப்பா அத்து ஏதாவது சொன்னானா?”
ம்ம்..துரு மேல தவறில்லையாம். ஆனால் அவரால் அவளை பார்த்துக்க முடியாதாம் என்று நாசுக்காக அதே நேரம் மெதுவாகவும் அமைதியாகவும் சொன்னார்.
ஏன்? எதற்கு? ஆரியன் கேட்க, அது அவங்க விசயம்ப்பா. நாம கேட்க முடியாது. துரு தனியா இல்லாமல் பார்த்துக்கணும் என்று அவர் ஆரியனை பார்த்தார்.
ம்ம்..நான் பார்த்துக்கிறேன் அவன் சொல்ல, நான் அதுக்கு சொல்லவில்லை. புதுசா கல்யாணம் ஆனவங்க அவ முன்னாடி பார்த்து நடந்துக்கோங்க. அதிகிட்ட கொஞ்சம் சொல்லி வைப்பா. இரவு என்னோட பொண்ணுடன் நான் தங்கிக்கிறேன்.
“சரிப்பா” என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கூறாமல் ஆரியன் சென்றான்.
கவின் வீட்டில் அவனுடன் சித்திரனும் வந்தான்.
“நீ சித்து தான?” அதிவதினி கேட்க, ஆமாம்மா நான் தான்.
“உன்னோட அம்மா, அப்பாவை பார்த்துட்டு வந்துட்டியா?” சுகுமார் கேட்க, அங்கிள் எனக்கும் போஸ்ட்டிங்க மாத்தி விட்ருக்காங்க. நான் வந்து ஒரு மாதம் ஆகுது.
அவருக்கு என்னை தெரியும். ஆனால் உங்களுடன் சேர்ந்து தான் பணிபுரிகிறேன்னு அவருக்கு தெரியாது. சுவா, ஆரவ் மச்சானுக்கு ஆத்விக் சார் மூலமாக உங்களை முன்பே தெரியும்.
“சுவாவுக்கு கவினை முன்பே தெரியுமா?” அதிவதினி கேட்க, ஆமாம்மா தெரியும். எனக்கு இந்த விசயம் ஒரு வருசத்துக்கு முன் தான் தெரியும்.
“தெரிஞ்சா இதை பற்றி சொல்ல மாட்டாயா?” கவின் அவனை முறைத்தான்.
சொல்லணுமா? ஆத்விக் சார் உங்க மச்சான்னு எனக்கு ஆரவ் மச்சான் சொல்லி தான் தெரியும்.
“என்னை பற்றி அவங்களுக்கு சொல்லி இருக்க?”
“நான் என்ன சொல்ல? அதான் உங்க மச்சானே நிறைய சொல்லி இருக்காரே!” சிரித்தான்.
“டேய், நிறுத்துங்க. நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லு?” என்று அதிவதினி சித்திரன் அருகே நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான்.
“என்னம்மா இவ்வளவு ஆர்வம்?”
ம்ம்..உனக்கு சுவாவை பிடிக்குமா? அவர் கேட்க, ம்ம்..பிடிக்கும் அவன் சாதாரணமாக சொன்னான்.
தம்பி, பிடிக்கும்ன்னா..லவ்..? சுகுமார் கேட்க, மூவர் முகத்தையும் பார்த்த அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“இங்க என்ன காமெடியா பண்ணீட்டு இருக்கோம். சிரிக்கிற?” கவின் அவன் தலையில் தட்டினான்.
“வீட்ல மொத்த குடும்பத்துக்கும் சுவா உங்களை தான் லவ் பண்றான்னு தெரியும்” அவன் சொல்ல, என்னடா சொல்ற? உங்களை பள்ளி வயது புகைப்படத்தில் பார்த்தே அந்த கேடி லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா..
“அப்பவே வா?” கவின் கேட்க, ஆமா. அவள் பெருசா யாரிடமும் ஆர்வம் காட்ட மாட்டாள். பிடிவாதம் ரொம்ப அதிகம். நினைச்சது அவளுக்கு கிடைக்கணும். இல்லை வீட்டையே ரெண்டாக்கிடுவா.
என்னோட அக்கா கூட திட்டிகிட்டே தான் இருப்பா. எல்லாரும் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருந்தாங்க. என்னோட அம்மாவுக்கும் சுவாவிற்கும் ஆகவே ஆகாது. அவ செய்ற எல்லாத்தையும் குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
ஒரு முறை கோபத்துல்ல தோசைமாவை என்னோட அம்மா தலையில ஊத்திட்டு ஓடிட்டா. அவளுக்கு ஒன்றுமே தெரியாது. பாட்டு, டான்ஸ், பசங்களோட ஊர் சுத்துவா. நல்லா விளையாடுவா. பேசிட்டே இருப்பா. முகத்திற்கு ஒப்பனை செய்வா..அவள் உருப்படியாக செய்தது..லாயருக்கு படித்து வேலையில் சேர்ந்தது தான். அம்மாகூட அதை சொல்லி அவளை கேலி செய்வாங்க..
அந்த திலீப் குடும்பம் உள்ளே வரும் வரை எல்லாம் நன்றாக தான் போனது சித்திரன் முகம் வாடியது.
சின்னபசங்கன்னு கூட பார்க்காமல் எல்லாரையும் கொன்னுட்டானுக. அதான் ஆரவ் மச்சான் மறைந்திருந்தார். அவர் உயிரோட இருப்பது என் அம்மா, அப்பாவுக்கு கூட தெரியாது. அவர் சென்னை வரவும் என்னை அழைத்தார்.
சுவா எப்போது இங்கு வந்தாளோ அன்றே அவரும் வந்துட்டார். அவர் உயிரோட இருப்பது தெரிந்தால் எல்லாருக்கும் பிரச்சனையாகும்ன்னு தான் முகமூடி, மாஸ்க் அணிந்து வலம் வந்தார்.
வாட்? அப்ப தாரா பங்சன், இன்பராஜ் சார் குழந்தையை காப்பாற்றியது, எல்லா இடத்திலும் முகமூடியுடன் வந்தது.
ம்ம்..இவர் தான். ஆரவ் மச்சான் ஆத்விக் சார் அளவிற்கு இல்லை என்றாலும் அவரும் நல்ல லாயர் தான். இருவருக்கும் ஒரே வித்தியாசம் தான். ஆத்விக் சார் எதிரியிடமும் குறும்புடன் நடந்து கொள்வார். ஆரவ் மச்சான் எதிரிகள் முன் உண்மை முகத்தை காட்ட மாட்டார். அவரும் ஜாலியான பர்சன் தான். ஆனால் கடுமை மட்டும் தான் தெரியும். பின்னிருந்து குத்துபவர்களை பார்த்தால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது..
ஓ..
“சுவா விசயத்துல்ல என்ன செய்வதாக இருந்தாலும் பார்த்து செய்யுங்க சார்” கவினிடம் சித்திரன் சொன்னான்.
ம்ம்..நான் சுவாவை உங்க மகனிடமிருந்து பிரிக்க மாட்டேன்ம்மா. அவர் தான் அவளை ஏத்துக்கணும். அவளை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் தான். அவளுக்கு மிரட்டினால் பிடிக்காது பாசமா பேசினால் மடங்கிடுவா..
“வாங்க சாப்பிடலாம்” அதிவதினி அழைக்க, “பசிக்கலைம்மா” என்று சித்திரன் எழுந்தான்.
சாப்பிடாமல் எங்க போகப் போற? அதிவதினி அவனை வம்படியாக அமர வைத்தார்.
அம்மா, எனக்கு அக்கா, மாமா, மோச்சா நினைவாவே இருக்கு.
“அதுக்காக சாப்பிடாமல் பட்டினியாக இருக்க முடியும். சாப்பிடாமல் உன்னை நான் விட மாட்டேன்” கண்டிப்புடன் சித்திரனை உணவுண்ண அமர வைத்தார்.
மாலை நேரத்து குயில்கள் அதன் வீடு நோக்கி பயணிக்க, “ஆது” அழைத்துக் கொண்டே ஆரவ் வெளியே வந்தான். எல்லாரும் அமைதியாக இருந்தனர்.
சைந்தவியை கொன்றது போல ஒரு கொலை பற்றிய செய்தி வந்திருந்தது. அவளை போல கண்ணை பிதுக்கி, விரல்களை வெட்டி, கழுத்திலிருந்து மார்பு வரை ஒரு கூறாக்கிய பொண்ணின் சடலம். அந்த பொண்ணின் வயிறு கிழிந்து தைத்திருந்தது.
“சுவா, சத்தம் வை” ஆரியன் சொல்ல, செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
அதில் கொலையான பெண் கர்ப்பவதி என்று வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து அதுவும் இறந்திருக்கு என்ற செய்தியில், “எப்படியெல்லாம் கொலை செய்றானுக?” சுவேரா புலம்ப, துருவினி அப்பொழுது தான் அறையிலிருந்து வெளியே வந்தாள். வந்தவுடன் அவள் கண்கள் ஆத்விக்கை தேடி அலைபாய்ந்தது.
ஆரியன் கவினை அலைபேசியில் அழைத்து செய்தியை பார்க்க சொன்னான். அவன் பார்த்து அதிர, உடனிருந்த சித்திரனும் சார் பொன்னி கொலையாளியோ?
“அப்பா, எனக்கு முக்கியமான வேலை இருக்கு” ஆரியன் சொல்ல, “மாம்ஸ் நானும் வரவா?” ஆரவ் கேட்டான்.
“இல்ல ஆரவ். நீங்க வீட்ல இருங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று உத்தமசீலனை பார்த்து, “எல்லாரையும் வெளிய அழைச்சிட்டு போங்க” என்றான்.
“நான் எங்கும் வரலை” துருவினி சொல்ல, எல்லாரும் அவளை பார்த்தனர்.
“என்னாச்சு வினு? காய்ச்சலாக இருக்கா?” அதியா அவள் கழுத்தை தொட்டு பார்க்க, துருவினி அவள் கையை நகர்த்தி விட்டு, “அப்பா எனக்கு சோர்வா இருக்கு. நான் படுத்துக்கவா?” கேட்டாள்.
“இவ்வளவு நேரம் தூங்கி இருக்க?” சுவேரா சொல்ல, “ம்ம்..தூக்கம் வருது சுவா” என்று வந்த வழியே அவள் நடந்தான். உத்தமசீலன் தன் பொண்ணு பின்னே சென்றார்.
“ஏதோ சரியில்லாத மாதிரி ஃபீல் ஆகுதே” சுவேரா சொல்ல, “அதெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் திருமணம் முடிந்த கையோட வேலைக்கு போனால்ல அதான் சோர்வா இருக்கா” ஆரியன் சொல்லி விட்டு, “ஆரவ் இன்று வெளியே போக முடியாது” தயங்கி கூறினான்.
இருக்கட்டும் மாம்ஸ். எனக்கும் ஒரு வேலை இருக்கு. நானும் கொஞ்ச நேரத்துல்ல கிளம்பணும்..
ஆமா, அண்ணா, வினு, ஆரவ் அண்ணா எல்லாருமே முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காங்க..
ஆரவ்வை பார்த்து, “ஆது அண்ணாவிற்கு கால் பண்ணியா?” துருவினி கேட்டாள்.
ஆரவ் அவளை பார்த்து விட்டு, இருபது முறை போட்டேன். அவன் எடுக்கவில்லை.
“அதான் மாப்பிள்ளை. நாளை காலை வருவார்ல்ல. இங்க வந்து சாப்பிட்டு எல்லாரும் சேர்ந்து ஆபிஸ் கிளம்புங்க” என்று உத்தமசீலன் தன் மகளை பார்த்தார். அதனை சுவேரா கவனித்துக் கொண்டு, “ஆமா வினு, நீயும் ஆது அண்ணாவும் பார்த்த கேஷ் முடிந்ததா? கிளைண்ட் கிட்ட பேசி முடிச்சிட்டீங்கல்ல?”
“இல்ல சுவா, அத்து வந்தால் தான் முடியும். அன்று பேச மட்டும் தான் முடிந்தது. கேஷ் முடியலை. தனியா கிளைண்ட்டை மீட் பண்ண சாய்யும் நேசனும் விட மாட்டேங்கிறாங்க” துருவினி சொல்ல, சுவேரா அவளிடம் ஓடி வந்து, “லாவா விசயம் என்னாச்சு?” கேட்டாள்.
ஆரவ்வின் கைகள் தட்டிலே நின்றது.
நேசன் லாவாவிடம் மீண்டும் காதலை சொல்லி தொந்தரவு செய்றான். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான். அவன் அம்மாவால்ல லாவா தான் கஷ்டப்படப் போறா. சும்மா இருக்க மாட்டேங்கிறான் திட்டினாள் துருவினி.
“நாளைக்கு அவனை வச்சுக்கிறேன்” சுவேரா சொல்ல, “என்னம்மா?” உத்தமசீலன் கேட்டார்.
இல்ல மாமா, அவனை அடிக்க ஆளில்லாமல் தான் லாவாவை தொந்தரவு செய்கிறான்.
“இல்லம்மா, அவன் நிலையையும் பார்க்கணும்” உத்தமசீலன் தன் மகளை பார்க்க,” அப்படி என்ன நிலை? காதலிக்கும் பொண்ணு அவன் அம்மாவிடம் கூட அவன் காதலை சொல்ல முடியாதுன்னா எதுக்கு காதலிக்கணும்?” பொரிந்து தள்ளினாள் துருவினி.
“வினு, அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்? நாம பார்த்துக்கலாம் சுவேரா” அவள் கையை பிடிக்க, ஆரவ்வும் யோசனையுடன் அவளை பார்த்தான்.
“சாப்பிடுங்க. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்” அதியா சொல்ல, எல்லாரும் சாப்பிட்டு எழுந்து அவரவர் அறைக்கு சென்றனர். சுவேரா யோசனையுடன் துருவினியை பார்த்துக் கொண்டே அவளுடன் படுத்துக் கொண்டாள்.
ஆரியன், கவின், சித்திரன் ஒரிடத்தில் சந்தித்தனர்.
பொன்னி, சைந்தவி இருவரையும் கொலை செய்த முறையை கலந்து ஒருவன் இப்பொழுது செஞ்சிருக்கான்னா.. அவன் தான் பொன்னியையும், சைந்தவியையும் கொன்றிருக்கணும் கவின் சொல்ல, சித்திரன் அவனது வீட்டிலிருந்து எடுத்து வந்த விவரத்தை காட்டினான்.
“என்ன இது?” கவின் சினமுடன் கேட்டான்.
பொன்னி கணவன் அவன் தான் பொன்னியை கொன்றான் என்று சரணடைந்து இருந்தான்ல்ல சார். அவனை யாரோ சொல்ல வச்சிருக்காங்க.. அவன் அவனாக ஸ்டேசனில் வைத்து தற்கொலையும் செய்திருக்கான்..
“இது எப்படி வெளிய வராமல் போனது?” ஆரியன் கேட்டான்.
இறந்த பொண்ணு கர்ப்பமாக இருந்ததால் எங்களுக்கு பிரச்சர் அதிகமாக கொடுத்தாங்க. பொன்னி கணவனின் வீடியோ, பொன்னி வீட்டார் ஆதாரம் என்று தான் அவனை கைது செய்தோம். அவன் தான் கொலை செய்திருப்பான்னு கவின் சாருக்கும் நம்பிக்கை இல்லை தான். ஏன்னா..சாரிடமும் என்னிடமும் பொன்னி கணவனின் நண்பன் பேசினார்.
பொன்னியை விரும்பி தான் திருமணம் செய்தார். ஆண்களுக்கே உரிய குணம் அவரிடம் அதிகமாக இருந்தது.
“தன் மனைவி அவள் காதலனை சந்தித்து விடுவாளோ? தன்னை விட்டு அவனுடன் சென்று விடுவாளோ?” என்று பயந்து தான் மனைவியை கஷ்டப்படுத்தி இருப்பான்.
வேலுவிடம் பொன்னி பேசுவதை கண்டவுடன் அவனுள் சினம் மிகுந்து தான் அந்த வீடியோவில் பேசினானே தவிர பொன்னியை கொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை. அவனுக்கு பொன்னியை தவிர யாருமில்லை. அந்த குழந்தை மீது கூட அவன் பாசம் செலுத்தவில்லை. அவனுக்கு அவன் மனைவி போதும் என்ற எண்ணம் தான். கண்டிப்பாக அவன் கொலை செய்திருக்க மாட்டான் என்று பொன்னி கணவனின் நண்பர் கூறினார் என்று சித்திரன் ஆரியனிடம் சொன்னான்.
“அது சரி. இதெல்லாம் என்ன கொலை? இதை எதுக்கு எடுத்துட்டு வந்திருக்க?” கவின் கேட்டான்.
“விசயம் இருக்கு” என்ற சித்திரன், பொன்னி சடலம் கிடந்த இடத்தில் சடலத்தை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சார், நீங்க சொன்னீங்கல்ல? துர்நாற்றம் வரக் கூடாது என்பதற்காகவோ.. பறவைகள் கொத்தி சடலத்தை நாசமாக்கி விடக் கூடாது என்பதற்காக கூட அலங்காரம் செய்யப்பட்டிருகும்ன்னு சொன்னீங்கல்ல? அது அப்படி இல்லை. பொன்னிக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான்..
“சைந்தவி மேம் சடலமும் அலங்காரத்தில் தான் இருந்திருக்கு” சித்திரன் இருவரையும் பார்த்தான்.
சடலத்தை நான் பார்த்தேன். அப்படி ஏதுமில்லை..
“இதை பாருங்க” என்று அலைபேசியில் இருந்த வீடியோவை காட்டினான் சித்திரன்.
சைந்தவி சடலம் பணத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எனக்கு தெரிந்து “சைந்தவி கில்லரின் பத்தாவது டார்கெட்” சித்திரன் சொல்ல, வாட்? அதிர்ந்தனர் ஆரியனும் கவினும்.
முதல் கொலை வேலூரில் பொன்னி. கர்ப்பமான பொண்ணு. குழந்தையை வெளியே எடுத்து அதையும் மூச்சி முட்ட வைத்து கொன்றுக்கான்.
இரண்டாவது இராணிப்பேட்டை செல்வி..அதுவும் கர்ப்பமான பொண்ணு. பொன்னி போல தான் கொன்றுக்கான்.
மூன்றாவது காஞ்சிபுரம் வேலாச்சி. கர்ப்பமான பொண்ணு. முன்னிருந்த கொலையில் இல்லாத ஒன்று..குழந்தை உடலில் போதை மருந்து இருந்திருக்கு..
நான்காவது திருவண்ணாமலை ஆஸீஃபா. கர்ப்பமான பொண்ணு.. இவங்க குழந்தை உடலிலும் போதை மருந்து இருந்திருக்கு.
ஐந்தாவது திருப்பத்தூர் பார்கவி. இவங்க போலீஸ். இவங்களும் கர்ப்பமா இருந்திருக்காங்க. இவங்க குழந்தை உடலில் போதை ஊசி தடம் இருந்தது.
ஆறாவது செங்கல்பட்டு தாரா. இவங்களும் கர்ப்பம். இவங்க குழந்தை உடலில் விசமுள்ள கார்பன் மோசாக்சைடு இருந்திருக்கு..
ஏழாவது திருவள்ளூர் சங்கரி. தாரா போல தான் இவங்களுக்கும்..
எட்டாவது கிருஷ்ணகிரி வைஷ்ணவப் பிரியா..இவங்க குழந்தையை காணவேயில்லை..
ஒன்பதாவது விழுப்புரம் அஞ்சலி..இவங்க குழந்தையையும் காணோம்.
பத்தாவது சென்னை சைந்தவி. கர்ப்பமும் இல்லை. குழந்தையும் இல்லை
இருவரும் உறைந்து இருந்தனர்.
“இதெல்லாம் எப்படி உனக்கு தெரிய வந்தது?” கவின் கேட்டான்.
நீங்க சென்ற பின் எனக்கு தான் உங்க போஸ்ட்டிங் கொடுத்தாங்க. அடிக்கடி வேலுவை பார்ப்பேன். ஒரு மாதம் கழிந்த நிலையில் வேலு தான் வேலூரில் பக்கத்து மாவட்டமான ராணிப்பேட்டைக்கு வேலையாக சென்று வந்தவன் என்னிடம் சொன்னான்.
பொன்னி போல ஒரு பொண்ணு இறந்ததை. அதை கேட்டு விசாரித்தோம். அந்த பொண்ணு இறந்து பத்து நாளாச்சு. மூன்று நாளிலே கேஷை மூடிட்டாங்கன்னு விசயம் தெரிந்தது. இதே போல அடுத்தடுத்து நடந்தது..
இந்த தொடர் கொலைகள் வேலூரில் ஆரம்பித்து சென்னையில் முடிந்திருக்கு. இந்த கொலை நான் தான் செய்தேன்னு ஏதேதோ காரணத்துடன் அந்த பொண்ணுக்கு நெருக்கமான யாராவது வந்து சரணடைந்து இருக்காங்க. பொன்னி கணவன் மட்டும் தான் செத்திருக்கான். மற்ற எல்லாரும் உள்ளே தான் இருக்காங்க..
அவங்கள விசாரிக்க முடியல.. பெரிய ஆளுங்க நினைச்சா தான் விசாரிக்க முடியும். இருபது நாளுக்கு இடையிடையே கொலை நடந்திருக்கு.
“வேலுவை இப்ப பார்க்க போகலாமா?” கவின் கேட்க, “முடியாது சார்” அவன் சொல்ல, “ஏன்?” கவின் புருவம் சுருக்கி கேட்டான்.
வேலு இப்ப உயிரோட இல்லை.
“வாட்?” அதிர்ந்து கவின் கேட்க, ஆமா சார்..அவனுக்கு பொன்னி மீதுள்ள காதல்ல அவள் இறந்தது தாங்க முடியாமல் தினமும் குடித்து விட்டு அவளிடம் பேசுவது போல பேசியிருக்கான். பொறுத்து பார்த்த அவன் மனைவி அவளது குடும்பத்தினரிடம் சொல்லி விவாகரத்து பண்ண பேசி இருக்காங்க..
ஆனால் வேலு அதற்குள் அவளை எண்ணி தற்கொலை செய்திருக்கான் அவன் சொல்ல, “கண்டிப்பாக இருக்காது” உறுதியாக சொன்னான் கவின்.
“ஏன்? எப்படி சொல்ற கவின்?” ஆரியன் கேட்டான்.
அண்ணா, அவனுக்கு பொன்னி மீது அப்பொழுது வரை காதல் இருந்தது தான். குடித்து உலறி இருப்பான். டிவோர்ஸ் பண்ணான் என்றால் கூட நான் நம்புவேன். அவன் தற்கொலை செய்ய மாட்டான்.
“எப்படி சொல்ற?” ஆரியன் அழுத்தி கேட்டான்.
தன் மனைவியுடன் வாழ ஆரம்பித்தும் அவனால் பொன்னியை மறக்க முடியவில்லை. பொன்னி தன் கணவன் அடிக்கிறான் என்று வேலுவிடம் சொல்லும் போது அவன் கோபமாக கிளம்பி இருப்பான். ஆனால் அவனை செல்ல விடாமல் தடுத்த பொன்னி, மாமா..நான் போக மட்டும் உதவு. யாரையும் எதையும் செய்து உன் வாழ்க்கையை வீணாக்கிக்காத. என்னோட மாமா சந்தோசமாக வாழ்வதை நான் செத்தாலும் பார்க்கணும் என்றிருப்பாள்.
எமோஸ்னலான வேலு பொன்னியை கட்டிப் பிடித்திருப்பான். அதை பார்த்த பொன்னி கணவன் குடித்து உலறி இருக்கான். இது எல்லாம் தெரிந்த ஒருவன் தான் கொலை செய்திருக்கான்.
இதுல்ல இருந்து உங்களுக்கு புரியும். “எந்த நிலையிலும் தன் பொன்னியின் வாக்கை தவற விடுபவன் அவன் இல்லை” கவின் சொல்ல, இருவரும் யோசனையுடன் அவனை பார்த்தனர்.
“வேலுவை யாரோ கொலை செஞ்சிருக்காங்க?” சித்திரன் தாடையை தேய்த்து கேட்க, “அவன் மனைவியின் குடும்பத்தாராக” இருக்குமோ? கவின் கேட்க, ஆரியன் எல்லாவற்றையும் சிந்தித்து..இல்லை. விவாகரத்து செய்ய முடிவெடுத்த பின் கொல்ல யாரும் நினைக்கமாட்டாங்க..
இந்த பத்து கொலைகளையும் கொன்றவனை வேலு பார்த்திருக்கிறான்..
“வேலு கொலை எப்போது நடந்தது?” ஆரியன் கேட்க, நான் வேலூரிலிருந்து இங்கே மாற்றி வரும் முன் தான்..
“வேலு கொலையில் நமக்கு ஆதாரம் கிடைக்க வாய்ப்பிருக்கு?” ஆரியன் சொல்ல, “இன்னொரு விசயம் சார்” கவினை பார்த்தான் சித்திரன்.
“என்ன?”
“நம்ம தமிழ்ச் செல்வனுக்கும் இதில் பங்கிருக்கு” சித்திரன் சொல்ல, “என்னடா சொல்ற?” கவின் அதிர்ந்து கேட்டான்.
ஆமா சார், நான் விசாரித்த எல்லா இடத்திற்கும் எனக்கு முன் சென்று இந்த கேஷை வெளியே வராமல் செய்திருக்கான் அவன்.
“யாரவன்?” ஆரியன் கவினை பார்த்தான்.
அவனும் எங்களது ஸ்டேசனில் தான் வொர்க் செய்தான்.
பொன்னி கேஷ் முடிந்தது என்று சொல்லும் போது அதிர்ந்திருப்பான். இப்ப அவன் இங்கே இல்லை. அவன் ஃபேக் ஐடில்ல தான் நம்முடன் வொர்க் பண்ணானோன்னு சந்தேகமா இருக்கு சார். அவனை பற்றிய விவரம் எங்கும் கிடைக்கவில்லை.
“ஏன் அவன் கொலை பற்றிய விசயம் வெளியே வராமல் செய்யணும்?” ஆரியன் கேட்டான்.
“அப்படின்னா இவன் கொலைகாரனாக இருக்கணும் இல்லை கொலைகாரனுக்கு நெருக்கமானவனாக இருக்கணும்” கவின் கூறினான்.
ம்ம்..இருக்கலாம்.
“சோ, கொலைகாரனுக்கு உதவ ஆட்களும் இருக்காங்க. இந்த தமிழ்ச்செல்வன் புகைப்படம் இருக்கா?” ஆரியன் கேட்டான்.
சித்திரன் ஆரியனிடம் காட்டி விட்டு, “எனக்கு தெரிந்து கொலைகாரன் எல்லாருக்கும் பயத்தை கொடுக்க எண்ணியது போல இருக்கு சார்” என்றான்.
ஆமா அண்ணா, கொலை செய்தவன் கொலை செய்தவர்களை மறைத்திருக்கலாம். புதைத்து வைத்திருக்கலாம் இல்லை எறிச்சிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யாமல் அலங்காரம் செய்கிறான் என்றால் அவன் கொலை விசயம் காரணமானதாக உள்ளது..
“சைந்தவியை எதுக்கு கொல்லணும்? அவள் கர்ப்பமாகவும் இல்லை குழந்தையும் இல்லையே?” ஆரியன் கேட்க, அதான் சார் எனக்கும் தெரியலை…
“இந்த கொலைகேஷை வெளியே கொண்டு வந்தால் அவனை பிடிக்கலாம்ன்னு நினைக்கிறேன்” கவின் சொல்ல, நோ..கவின் இப்பொழுது வேண்டாம். முதல்ல அந்த தமிழ்ச் செல்வனை கண்டுபிடிக்கணும். அதை நான் பார்க்கிறேன். சித்திரன் நீ சேகரித்த அனைத்தையும் ஒரு பைல்லாக்கி நாளை கொண்டுவா..
“சார், இதை அறிவிக்கலாமா?” சித்திரன் கேட்க,
“நோ..கொலைகாரனை வெளிய வர வைக்கும் போது அவனை பிடிக்கவும் தயாராக இருக்கணும். அதுக்கு நாம அவனையும் அவன் சார்ந்தவர்களையும் கண்டுபிடிக்கணும். நீங்க கிளம்புங்க. நாளை பார்க்கலாம்” ஆரியன் கிளம்ப, கவின் அவன் வீட்டிற்கும், சித்திரன் அவன் வீட்டிற்கும் சென்றனர்.