வல்லவன் 3
தன் வெளிச்சத்தை தனக்குள் சுருட்டிக் கொண்டு வெய்யோன் மறைய காத்திருந்த நேரம் ஷாப்பிங் செல்ல கிளம்பினார்கள் அதியா, துருவினி, ஆகர்ஷனா, தர்சன்.
தேவையான பொருட்களை எல்லாம் பேசிக் கொண்டே இருவரும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு முன் தர்சனும் ஆகர்ஷனாவும் தனித்தனியே முறைத்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
“உங்க வீட்ல வாஷிங் மிஷின் இல்லைல்ல? வாங்கலாமா? எனக்கு கையால வாஷ் பண்ண தெரியாது” அதியா கேட்க, அதனால என்ன கத்துக்கோ..
“கத்துக்கணுமா?”
ம்ம்..எல்லாமே கத்துக்கோங்க. அது தான் நல்லது.
“என்ன நல்லது?” அதியா கேட்க, மனதினுள் புன்னகைத்த துருவினி, அது என்னோட அண்ணனுக்கு இது போல் பொருட்கள் வாங்குவதே பிடிக்காது. அதனால நான் உங்களுக்கு எல்லாமே சொல்லித் தாரேன்..
“நான் சரியா செய்யலைன்னா திட்டுவேல்ல?” அதியா பாவமாக கேட்டாள்.
திட்ட மாட்டேன். நான் உங்களோட பெரியவ உங்களுக்கு தெரியுமா?
உனக்கு எத்தனை வயசாகுது? அதியா துருவினியிடம் கேட்க, ஹாம்..என விரல் வைத்து சிந்திப்பது போல் இருப்பத்து ஆறு..
ஓ..எனக்கு இருப்பத்து நான்கு.
“சொன்னேன்ல்ல?”
“உங்க அண்ணாவுக்கு எத்தனை வயசாகுது?”
அவனுக்கு..என அவள் சொல்லத் தயங்கினாள்.
“தெரியாதா?”
தெரியும். ஆனால் வயது கூட தான்.
“என்ன கூட?”
“ஐம்பதா?” அதியா கேட்க, பக்கென சிரித்த துருவினி.. இல்ல..இல்ல..முப்பத்து ஐந்து..
“அவ்வளவு தான? ஏன் கூடன்னு சொன்னீங்க?”
“ங்க” ல்லாம் வேண்டாம்..வினு தான் நல்லா இருக்கு.
புன்னகைத்த அதியா, உங்க அண்ணனோட பேசி ரொம்ப நாள் ஆகுதா? எனக் கேட்டாள்.
ம்ம்..என்று வருத்தமாக, அண்ணி இறந்த பின் அண்ணா அப்பாவிடம் ஏன் தர்சுவை கூட தூக்கவில்லை. அண்ணி மேல அவ்வளவு காதல்..
“ஓ அப்படியா? காதலிக்கிறாரா?”
“ஏன்?”
ஒன்றுமில்லை. இன்னும் ஒன்று மட்டும் வாங்கீட்டு போகலாம்..
“நான் ஒன்று கேட்கவா?” துருவினி தயங்கி அதியாவை பார்த்தாள்.
கேளு..
“உங்க ஹஸ்பண்ட் உயிரோட தான் இருக்காரா? உங்களை ஏமாற்றியதாக சொன்னீங்களே! அவரா?”
இல்லை..அவர்..அவர்..என முன்னே பார்த்த அதியா, “வினு..பசங்கள எங்க?” கேட்க, இருவரும் தேடினார்கள். ஆகர்ஷனாவும் தர்சனும் ஓரிடத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
“அதிம்மா, இவள் தான் கால் வலிக்குதுன்னு சொன்னா” தர்சன் சொல்ல, “அது என்ன இவ? ஆகான்னு சொல்லு தர்சு” துருவினி சொல்ல, அவன் அவளை முறைத்து திரும்பிக் கொண்டான்.
“இருவரும் கை கொடுத்தீங்கல்ல? சண்டை போடலாமா?” துருவினி கேட்க, அதியாவின் பார்வை எல்லா பக்கமும் சென்றது.
“அதிம்மா” ஆகர்ஷனா அழைக்க, ஆகு..நாம இப்பவே கிளம்பணும்.
“பில் பண்ணிடலாமே!”
இல்ல, அதை அப்புறம் பார்த்துக்கலாம். நீ தர்சுவை தூக்கு என அதியா ஆகர்ஷனாவை தூக்கிக் கொண்டு, சீக்கிரம் வெளிய ஓடு..சொல்ல, துருவினி புரியாமல் விழிக்கும் நேரம் அவர்களை சூழ்ந்து ஆட்கள் நின்றனர்.
“அதி என்ன நடக்குது?” துருவினி கேட்க, இவங்க ஆகுவை கொல்ல வந்திருக்காங்க.
“வாட்?” அதிர்ந்தாள் துருவினி.
நான் சொல்லும் போது சீக்கிரம் ஓடணும். தயாராக இரு என அவள் காதருகே சொன்ன அதியா, கீழே கிடந்த குளிர்பான டின்னை எடுத்து அவர்கள் முன் நின்ற ஒருவன் முகத்தில் பீய்ச்சி அடித்து அவனை தள்ளி விட்டு, “ஓடு வினு” கத்தினாள்.
துருவினி முன்னே ஓட, இவள் பின்னே ஓடினாள். அவர்கள் அவளை தொடும் நேரம் கைக்கு கிடைத்த பொருட்களை அவர்கள் மீது தூக்கி எறிந்தாள் ஆகர்ஷனா..
அவர்கள் பின்னுக்கு தள்ளப்பட, துருவினி மூச்சிறைத்தவாறு ஓரிடத்தில் நின்றாள். அருகே அறையை கண்ட அதியா பட்டென கதவை திறந்து, “வினு..பசங்கள பார்த்துக்கோ.. கதவை திறக்காத. நான் அவங்களை டைவர்ட் பண்ணீட்டு வாரேன்” என அறைக்கதவை பூட்டி விட்டு ஓடினாள். அவர்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்.
அறையில் யாருமில்லை துருவினி பதட்டமாக இருக்க, “ஆன்ட்டி ஆருவுக்கு கால் பண்ணுங்க” என்றாள் ஆகர்ஷனா.
துருவினி ஆகர்ஷனாவை அணைத்து, “உனக்கு ஏதும் ஆகாதுடா” என அவள் நெற்றியில் முத்தமிட்டு ஆரியனை அலைபேசியில் அழைத்தாள். எட்டு வருடங்களுக்கு பின் அவன் அண்ணனுடன் அலைபேசியில் பேசப் போகிறாள் துருவினி.
அண்ணா, பிரச்சனை?
யாரு..?
அண்ணா, “துரு பேசுறேன்” என நடந்ததை சொல்ல, அவன் கோபமாக வெளிய போக வேண்டாம்ன்னு சொல்லீட்டு தான வந்தேன் என கத்தி விட்டு, லொக்கேஷன் அனுப்பு என பைக்கை விரட்டினான். கடை ஆட்கள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றனர்.
அதியா ஓட முடியாமல் கீழே விழுந்து எழுந்து ஓடினாள். அவளுக்கு யாரும் உதவ முன் வரவில்லை. அவள் யாரிடமும் உதவி கேட்கவும் இல்லை. ஓடியவளுக்கு பாதை சதி செய்து நின்று விட, அவளை அவர்கள் சூழ்ந்தனர்.
மேம்..நீங்களே வந்திருங்க..
“அவளோ பக்கத்தில் ஏதாவது இருக்கா?” என ஆராய்ந்தாள் மூச்சிறைத்தவாறு. ஆனால் எதுவும் கிட்டவில்லை. அவளை ஆட்கள் பிடித்து இழுத்து செல்ல, ஆகர்ஷனா இருந்த அறையை தாண்டியும் இழுத்து சென்றனர்.
ஷாப்பின் வெளியே செல்ல எத்தனிக்கும் போது பைக்கை சர்ரென நிறுத்தி ஹெல்மேட்டை கழற்றினான் ஆரியன். அவனை பார்த்தவுடன் தான் அதியாவிற்கு மூச்சே விட முடிந்தது.
ஏய்..இவன் தான்டா அன்று மேம்மை காப்பாற்றியது ஒருவன் சொல்ல, மற்றவன் அதியா கையை அழுத்தி பிடித்தான்.
கை வலிக்குது. விடுங்கடா என அவள் அவனிடமிருந்து கையை எடுக்க போராடினாள். மற்றவர்கள் ஆரியனை நோக்கி சென்றனர்.
வந்த ஆரியனின் விழிகள் ஆகர்ஷனாவை தேடி அலைபாய்ந்தது. அவர்கள் அவனை அடிக்க வரவும் அவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டே அதியாவை பார்த்தான். அவள் கையை அவன் அப்போதும் விடவில்லை. அவனிடம் “கையை எடுடா” என அழுது கொண்டே போராடிக் கொண்டிருந்தாள்.
மற்றவர்களை அசால்ட்டாக சமாளித்து விட்டு அவர்களிடம் வந்தான்.
“உன்னை வெளிய வராதன்னு சொன்னேன்ல்ல?” என ஆரியன் அவளிடம் கத்த, அவன் கோபத்தில் அவள் மேலும் அழுதாள்.
“ஏய், ஒழுங்கா போயிடு” என அவன் ஆரியனிடம் சொல்ல, “அதை நீ சொல்லாத” என அதியா கையை பிடித்திருந்த அவனிடமிருந்து பிரித்து அவன் கையை முறிக்க, கையெழும்புகள் உடையும் சத்தம் கேட்டது. அதியா ஆரியனை பார்த்தே பின் நகர்ந்தாள்.
அவனையும் அடித்து துரத்திய ஆரியன், “ஷனாவை எங்க?” கேட்டான்.
ஆகு..என அதியா வேகமாக அவர்களை விட்டு சென்ற அறைக்கு சென்றாள். கதவு திறக்கவும் துருவினி கையில் இரும்புக் கம்பியுடன் நிற்பதை பார்த்து அதியா அதிர்ந்தாள்.
ஆகர்ஷனாவும் தர்சனும் ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டனர்.
துருவினி பின் ஒருவன் இரத்தமுடன் எழ முடியாமல் அமர்ந்திருப்பதை பார்த்து, “வினு என்ன பண்ணீட்ட?” என அதியா அவனிடம் ஓடச் சென்றாள்.
அவள் பின்னே வந்த ஆரியன் அவள் கையை பிடித்து நிறுத்தி, “முதல்ல கிளம்புங்க” எனக் கத்தினான்.
இரத்தமுடன் இருப்பவனை பார்த்த ஆரியன், “நான் இருக்கும் வரை இவங்கள ஏதும் செய்ய முடியாதுன்னு உங்க பாஸ் கிட்ட சொல்லுங்க” என தர்சனை தூக்கினான் ஆரியன்.
தர்சன் கண்கலங்க தன் தந்தையை அணைத்துக் கொண்டான்.
வெளியே வரவும் அவனை இறக்கி விட்டு அதியாவையும் துருவினியையும் முறைத்து பார்த்தான். இருவரும் அவனை பார்த்துக் கொண்டு நிற்க, “எதுக்கு சொல்லாமல் வெளிய வந்தீங்க?”
நான் தான் அண்ணா..துருவினி சொல்ல, அடிக்க கையை ஓங்கினான் ஆரியன். அவன் கையை பிடித்த அதியா, “நான் தான் பொருட்கள் தேவைப்படுதுன்னு சொன்னேன். அதான் வெளிய வந்தோம்” என சொல்லி முடிக்கும் முன் ஆரியன் அதியாவை அடித்திருந்தான்.
துருவுக்கு தான் எதுவும் தெரியாது.
“அறிவிருக்கா? உனக்கு அவனுக விரட்டுறானுகன்னு தெரியுதுல்ல. வெளிய பிள்ளையை அழைச்சிட்டு வந்திருக்க? ஏதாவது ஆனால் என்ன செய்வ?” கத்தினான். அதியா கன்னத்தில் கை வைத்து அழுது கொண்டே நின்றாள்.
“நாங்க எப்படி தேவையானதை வாங்குறது? நீங்க அதிம்மாகிட்ட கோபமாவே பேசுறீங்க? நாங்க என்ன செய்றது? எங்களுக்கு தேவைப்படுது வந்துட்டோம்”. ஆகர்ஷனா அவனிடம் கோபமாக கேட்டாள்.
“அதுக்காக சொல்லாமலா வருவீங்க?
நாங்க தாத்தாகிட்ட சொல்லீட்டு தான் வந்தோம். உங்ககிட்ட சொன்னா எங்களை போக வேண்டாம்ன்னு தான சொல்வீங்க. நீங்க அழைச்சிட்டா வருவீங்க என ஆகர்ஷனா உதட்டை பிதுக்கி அழுது கொண்டே கேட்டாள்.
தலையை அழுந்த கோதிய ஆரியன், “வெளிய போகணும்ன்னா சொல்லுங்க வாரேன்” என ஆகர்ஷனாவை தூக்க வந்தான். அவள் ஆரியன் கையை தட்டி விட்டு, “நீங்களும் ரொம்ப பேடு. அடிக்கிறீங்க” என அழுது கொண்டே அதியாவை ஒட்டி நின்றாள்.
“இல்லம்மா, கோபத்துல்ல தான் அடிச்சிட்டேன். உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு தான் பயந்துட்டேன்” என ஆரியன் சொல்ல, அதியா ஆரியனை வேகமாக நிமிர்ந்து பார்த்தாள். துருவினி அவன் அண்ணனையே பார்த்தாள்.
“நிஜமாகவே எங்களை அழைச்சிட்டு போவீங்களா?” என அதியா கையை எடுத்து கேட்டாள். அவள் கன்னத்தில் ஆரியன் அடித்த கைத்தடம் அச்சாக பதிந்திருந்தது.
தர்சன் அதை பார்த்து, அவளது ஆடையை இழுத்தான். அவள் அவனிடம் குனிந்தாள்.
“ரொம்ப வலிக்குதா அதிம்மா?” என அவன் கேட்க, அவள் உள்ளமோ படபடத்து நெகிழ்ந்தது. ஆரியன் அதிர்ந்து அவனை பார்த்தான்.
இல்ல தர்சு குட்டி. வலிக்கவேயில்லை. பயத்துல்ல தான் அழுதுட்டேன். “அவங்க உங்களை எதுவும் செய்யலைல்ல?” என மூவரையும் ஆராய்ந்தாள் அதியா.
“எங்களுக்கு ஒன்றுமில்லை அதி” என்ற துருவினி ஆரியனை பார்த்து, “இப்ப கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.
“எதுவும் வாங்கலையா?” அவன் கேட்க, “என்ன வாங்குறது? நாளைக்கு பார்க்கலாம்” என துருவினி சொல்ல, அதியா அமைதியாகவே இருந்தாள்.
“வாங்கணும்ன்னா சொல்லுங்க. வாங்கிடலாம்” ஆரியன் அதியாவை பார்த்தான்.
வாங்கணும். ஆனால் இப்ப வேண்டாம். டயர்டா இருக்கு. ஓய்வெடுக்கணும் என்றாள்.
டாக்சி புக் பண்றேன்..
“நேரமாகிடுச்சு. இன்னும் சாப்பிடலை. மணி ஒன்பதாகப் போகுது” துருவினி சொல்ல, ஆரியன் பிள்ளைகளை பார்த்தான்.
ஆகர்ஷனா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் தர்சன் அவனை ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பக்கத்துல்ல ரெஸ்டாரண்ட் இருக்கு. போகலாமா?” எனக் கேட்டான் தர்சனை பார்த்து.
அவன் உதட்டை பிதுக்கி கையை நீட்டினான்.
“வா” என கையாலே சைகையில் ஆரியன் தன் மகன் தர்சனை அழைத்தான். அவன் வேகமாக அவனிடம் சென்றான். “அவனை தூக்கி வெளிய சாப்பிடலாமா?” எனக் கேட்டான். துருவினி கண்ணீருடன் ஆரியனையும் தர்சனையும் பார்த்தாள்.
ஆகர்ஷனா அவள் முறைப்பை நிறுத்தவில்லை. அதியாவோ ஏதோ யோசனையுடன் நின்று கொண்டிருந்தாள்.
“வாங்க போகலாம்” என ஆரியன் அழைக்க, துருவினி அதியாவின் கையை தட்டி விட்டாள். ஆரியன் இருவரையும் பார்த்தான் .
“அதி, என்ன யோசிச்சிட்டு இருக்க?” துருவினி கேட்க, “ஒன்றுமில்லை” என தலையசைத்து விட்டு ஆகர்ஷனா கையை பிடித்தாள். ஆகர்ஷனா அதியாவை பார்த்தாள்.
“போகலாமா ஆகு?” அதியா கேட்க, ஆகர்ஷனா புன்னகைத்தாள்.
“துரு, உன்னோட ஸ்கூட்டி இருக்கட்டும். நடந்து போயிட்டு வரலாம்” என ஆரியன் நடந்தான்.
அதியா தயக்கமுடன் துருவினியை பார்த்தாள்.
அண்ணா, டாக்சி புக் பண்ணிடு.
அங்க பாரு. இந்த சிக்னல் மட்டும் தான். நடந்தே போயிடலாம் என அவன் பேசிக் கொண்டே சிக்னல் அருகே வேகமாக நடந்தான்.
“துருவினி” அதியா கையை பிடிக்க, இருவரும் ரோட்டருகே வந்தனர். துருவினி அதியா கையை பிடித்து இழுக்க, வாகனங்கள் மாறி மாறி வேகமாக வருவதை பார்த்து பயந்து துருவினி கையை விட்டு, “நீ போ. நான் வரலை” என்றாள்.
வா. சாப்பிடணும்ல்ல அதி. பாப்பாவுக்கு பசிக்கும்ல்ல? என்னோட கையை பிடிச்சுக்கோ..
“இல்ல இல்ல..பயமா இருக்கு” என அவள் சொல்ல, “போ..நான் போறேன்” என துருவினி சென்றாள்.
“ஆகர்ஷனாவோ அதிம்மா ஆன்ட்டி கையை பிடிச்சே போயிருக்கலாம்ல்ல” என்றாள்.
ஆரியன் சிக்னலை கடந்து மறுபக்கம் சென்று இவர்களை பார்த்து பல்லை கடித்தான். துருவினி வந்து அவனை பார்த்து, அவங்களுக்கு ரோடு கிராஸ் பண்ண தெரியாது. பயப்படுறாங்க
“இதுக்கெல்லாம் பயப்பட்டால் என்ன செய்வது?”
“ஒருவருக்கு உதவுறேன்னு சொன்னால் போதாது. அவங்கள பத்தி முழுசா தெரிஞ்சிருக்கணும்” என துருவினி அவனை முறைத்து, “எங்களுக்கு தெரிந்த அளவு கூட உனக்கு அவங்கள பத்தி தெரியல. சும்மா திட்டாம அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கோ” என்று சொல்லிக் கொண்டே தர்சனை தூக்கிக் கொண்டாள்.
“என்ன பாக்குற? போ..அவங்கள அழைச்சிட்டு வா”.
“அப்பா” தர்சன் அழைத்தான்.
“அதிம்மா வீட்டை விட்டு வெளியே தனியே வந்ததேயில்லையாம்” என சொல்ல, அவன் துருவினியை பார்த்து, “வெளிய வந்ததில்லைன்னா?” எனக் கேட்டான்.
அவக்கிட்டவே கேட்டுக்கோ..
ஆரியன் யோசனையுடன் அவர்களை நோக்கி வந்தான். அதற்குள் அவளாகவே மெதுவாக துருவினியை போல நகர முயன்று வாகனங்கள் வரவும் பின் சென்றாள். இதே போல் அவள் செய்து கொண்டிருக்க, அவளை நோக்கி வந்த ஆரியன் அவனையும் மீறி புன்னகைத்தான். அவளருகே ஆரியன் வரவும் திட்டுவானோ என பயத்துடன் அதியா அவனை பார்த்தாள்.
அமைதியாக ஆகர்ஷனாவை அவளிடம் வாங்கி அதியா கையை பிடித்தான்.
ஷ்ஆ..அவள் சத்தம் கொடுக்க, அவள் கையை விட்டு பார்த்தான். அவள் கையும் சிவந்து இருந்தது. அவளை பார்த்து கையை நீட்டினான். அதியா அவனையே பார்த்துக் கொண்டே நின்றாள்.
“சாப்பிட போகணும். நேரமாகுது” என்றான்.
அதியா அவன் கையை இறுக பிடிக்க, அவன் அவளை பார்த்தான். அவள் கண்ணின் படபடப்பு அவள் பயத்தை நன்றாக காட்டியது.
“அதான் கையை பிடிச்சிருக்கேல்ல. பயப்பட வேண்டாம்” என அவள் கையை அவன் இறுக பற்ற, அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது. மனதினுள் அதியா, “அக்கா..உன் கைக்கு பின் ஒருவர் என் கையை இறுக பிடித்திருக்கார்” என எண்ணினாள் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவாறு.
இருவரும் துருவினியிடம் அடையவும் ஆரியன் அவள் கையை விட்டான். அவள் கையை அப்படியே வைத்திருந்தாள். இருவரும் அவளை பார்க்க, அவள் கண்ணீருடன் “அக்கா நினைவு வந்துருச்சு” என்று கையை இழுத்துக் கொண்டு ஆகாயத்தை பார்த்தாள். கண் சிமிட்டும் நட்சத்திரம் தெரியவும் கண்கலங்க அதை பார்த்தாள்.
ஆரியனிடமிருந்து அதியாவிடம் சென்ற ஆகர்ஷனா அதியாவின் கண்ணீரை துடைத்து, அவளை கட்டிக் கொண்டு மௌனமானாள்.
சரி..வாங்க, பசிக்குது. சாப்பிடலாம் என்று துருவினி சொல்ல, அவர்கள் உள்ளே சென்றனர்.
ஆரியன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
ஆர்டர் கேட்க வந்தனர்.
எனக்கு பசிக்கலை. ஆகு..உனக்கு தோசா சொல்லலாமா?
அதிம்மா, உனக்கு?
எனக்கு பசிக்கலையே. நீ சாப்பிடு..பூரி சொல்லவா?
வேண்டாம் என ஆகர்ஷனா கையை கட்டிக் கொண்டு அமர்ந்தாள். இருவரையும் கவனித்த ஆரியன், “எல்லாரும் சாப்பிட்டு தான் ஆகணும்” என எல்லாருக்கும் அவன் ஆர்டர் சொல்ல, தர்சன் அவனை பார்த்து எனக்கு பிடிக்காது என ஆரியனை பார்த்தான். அவன் துருவினியை பார்த்தான்.
ஆமா, அவனுக்கு பரோட்டா பிடிக்காது துருவினி சொல்ல, ஆகர்ஷனா அவனை பார்த்து, நாங்க இரவு ரைஸ் சாப்பிட்டதில்லை என்றாள்.
“ப்ரைடு ரைஸ் நல்லா இருக்கும்” ஆரியன் அதியாவை பார்க்க, அவள் அமைதியாக ஆகர்ஷனாவை பார்த்து, “ட்ரை பண்ணலாம் ஆகு” என்றாள். ஆரியன் தர்சனை பார்த்தான். அவன் துருவினியை பார்த்தான்.
“தர்சுவிற்கு சப்பாத்தி ஆர் நான் சொல்லுங்க. அவனுக்கு அதான் பிடிக்கும்” என்ற அதியா, “நாங்க ஜஸ்ட் சாப்பிட்டு பார்க்க தான் கேட்டோம்” என்றாள். தர்சன் ஓடி வந்து அவள் கழுத்தை கட்டிக் கொண்டான்.
“உனக்கு எப்படி தெரியும் அதி?” துருவினி ஆர்வமுடன் கேட்டாள். அவனுக்கு ரைஸ் தான் பிடிக்கும். அவன் உள்ளே வந்தவுடன் ஆர்வமுடன் பார்த்தது நான் தான்…
“ஓ..சப்பாத்தியை எப்படி சொன்ன?”
அது என்னோட ஹெஸ்..
“நல்லா ஹெஸ் பண்ற? என்னோட அண்ணாவுக்கு என்ன பிடிக்கும்?” துருவினி கேட்க, “அவருக்கு யாரையும் முறைக்கலைன்னா தான் எதையும் சாப்பிட முடியாது” என்று சொன்னாள். தர்சனும் துருவினியும் சிரித்தனர்.
ஆகர்ஷனாவோ, “அதிம்மா..நீ சாப்பிடணும் “என சொல்ல, ம்ம்..என்று மட்டும் பதில் கூறினாள்.
அதி, போதும். சாப்பிடும் போது ஃபீல் பண்ணக்கூடாது.
எனக்கு எல்லாமே என் அக்கா தான். அம்மாவெல்லாம் அம்மா என சொல்ல கூட தகுதி இல்லாதவங்க.
“அவங்களுக்கு என்ன ஆச்சு?” தர்சன் கேட்டான்.
“அவங்க இப்ப இல்லை. ரொம்ப தூரம் எங்களை விட்டு போயிட்டாங்க” என ஆகர்ஷனாவை பார்க்க, அவள் அழ தயாராக இருப்பது அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.
அதியா அவளை அணைத்து, “ஆகு பசிக்குதுன்னு சொன்னீங்கல்ல? சாப்பிடணும் அழக்கூடாது. அதிம்மா இருக்கேன்ல்ல” என்றாள்.
“அதிம்மா” என ஆகர்ஷனா அழுதாள். அதியாவிடமிருந்து அவளை தூக்கி வெளியே சென்றான் ஆரியன்.
அதியாவும் அவன் பின்னே ஓடினாள்.
ஆரியன் அவளை பார்த்து, நீ சாப்பிடு. சாப்பிட்டு வந்து வாங்கிக்கோ. அவள் ஏதும் பேசாமல் பாப்பாவை கொடுங்க என்றாள்.
இல்ல, நீ சாப்பிட்டு வா..
உங்களுக்கு புரியல. ஆகுவை கொடுங்க. அவளுக்கு பொய்யான நம்பிக்கையை கொடுக்காதீங்க.
“என்ன சொல்ற?”
“உங்களால அவளை வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொள்ள முடியுமா?” சினமுடன் கேட்டாள்.
ஆரியன் அதிர்ந்து அதியாவை பார்க்க, “முடியாதுல்ல விட்ருங்க. இனியும் நாங்க யாரையும் நம்ப தயாராக இல்லை. சீக்கிரமே நாங்க கிளம்பிடுறோம்” என ஆகர்ஷனாவை வாங்க முயன்றாள்.
ஆகர்ஷனா கண்ணீருடன் ஆரியனை பார்க்க, அவனோ அதியாவின் “வாழ்நாள் முழுவதும்” என்ற பேச்சில் புரியாமல் குழப்பத்துடன் “என்ன சொல்ல வர்றா?” என பார்த்தான்.
“ஆகு, வா பிடிவாதமெல்லாம் பண்ணக் கூடாது” என ஆகர்ஷனாவை தூக்கினாள்.
ஆகர்ஷனா ஆரியனை பார்த்து, “ஆரு சாப்பிட வாங்க” என்றாள்.
அதியாவோ அவனை பார்த்து விட்டு, “நீ சாப்பிடு. ஆரு சாப்பிடுவாரு” என சொல்லி அவளை தூக்கி சென்றாள். ஆகர்ஷனா ஆரியனை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
“அதி, அண்ணா எங்க?” துருவினி கேட்க, “வெளிய தான் இருக்காங்க” என ஆகர்ஷனாவை அருகே அமர வைத்து, அவளுக்கு உணவை எடுத்து வைத்தாள். அதியா அமைதியாக இருக்க, துருவினி வெளியே எட்டி பார்த்தாள். ஆரியன் வருவதை பார்த்து அவளும் சாப்பிட்டாள்.
ஆரியன் மனமோ, “இவ புரிஞ்சு தான் பேசுறாளா?” என எண்ணினான்.
பின் திரும்பி பார்க்க, ஆகர்ஷனா அவனையே பார்த்துக் கொண்டே செல்வதை கவனித்து அவனும் உள்ளே வந்து உணவுண்ண அமர்ந்தான். அவன் பார்வை அவ்வப்போது அதியாவை தொட்டு மீண்டது. அதை கவனித்தாலும் துருவினி காணாதது போல் இருந்து கொண்டாள்.
பின் டாக்சி பிடித்து அனைவரையும் ஏற்றி விட்டு அவனும் அதிலே ஏறினான். பிள்ளைகளுடன் பெண்கள் பின்னே அமர்ந்திருக்க, ஆகர்ஷனா ஆரியனை பார்த்து விட்டு, அதியாவின் மடியில் அமர்ந்து அவள் மீது சாய்ந்து கொண்டாள். ஆரியன் பின்னிருப்பவர்களை கவனித்துக் கொண்டு தான் வந்தான்.
“துருவினியோ பேசவா? வேண்டாமா?” என யோசனையுடன் அதியாவையும் ஆரியனையும் பார்த்தாள். வீடு வரவும் அனைவரும் உள்ளே செல்ல, “நீங்க போங்க. நான் ஸ்கூட்டி, பைக்கையை எடுத்துட்டு வாரேன்” என அவன் கடையில் வேலை செய்பவனை அழைத்தான்.
இருவரும் வீட்டில் வந்து பைக்கை நிறுத்த, அவனிடம் கை கொடுத்து நன்றி கூறி விட்டு ஆரியன் உள்ளே வந்தான். துருவினியும் அவன் தந்தையும் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
அவனோ வீட்டை கண்களால் அலச, அவன் தந்தை உத்தமசீலன் அவனுக்கு பதில் தந்தார்.
அதியும் ஆகாவும் அவங்க அறைக்கு போயிட்டாங்க. தர்சு தூங்குறான். நான் உங்களிடம் பேசணும் என அவர் சொல்ல, அவன் துருவினியை பார்த்தான். அவள் புரிந்து கொண்டு “குட் நைட் அப்பா” என சொல்லி அவனை முறைத்து விட்டு நகர்ந்தாள்.
துருவினி அவ்விடத்தை விட்டு அகலவும் அவன் தந்தை அருகே வந்து அமர்ந்தான் ஆரியன்.
அந்த பிள்ளைங்க ரொம்ப வசதியான வீட்டு பிள்ளைகள். அவங்களை காப்பாற்றி அழைத்து வருவது முக்கியமில்லை. “என்ன பிரச்சனைன்னு விசாரிக்கணும்? அவங்கள கொல்ல ஆளுங்க வந்திருக்காங்க. என்னன்னு இன்னுமா விசாரிக்கலை?” மேலோட்டமாக கேட்டார்.
ம்ம்..தெரியும். ஆனால் அவங்களை பற்றி தெரியலை. ஏற்கனவே அவளை கொல்ல வந்தாங்க.
“தெரியும்ன்னா எங்களிடம் சொல்ல வேண்டாமா? நமக்குள்ள பேச்சு வார்த்தை இல்லைன்னாலும் நம்மை நம்பி வந்தவங்கள இப்படி தான் கைவிடுவதா?”
“நான் தான் வெளிய போக வேண்டாம்ன்னு சொன்னேன்ல்ல?”
“சொல்லி இருந்தீங்க. அவங்களுக்கு தேவையான நாம செய்தும் தரணும்ல்ல? பேசினாலே கோபப்பட்டா எதை அவங்க வெளியப்படையா பேசுவாங்க?”
அவங்க வீட்ல வீட்டை விட்டு வெளியே வந்தால் பாதுகாப்பிற்காக எப்போதும் ஆட்கள் இருந்துட்டே இருந்திருக்காங்க. தனியாகவே இருந்ததில்லை. வீட்டுக்குள்ளவே அடைச்சு வச்சது போல சொல்றாங்க.
அதிக்கு அடுப்பை பயன்படுத்த கூட தெரியல. அந்த பொண்ணு சரியா பேசக் கூட தெரியல. அவங்க வீட்ல உள்ளவங்க தான் கொல்ல பார்க்குறாங்கன்னு நினைக்கிறேன். இப்பவே என்ன விசயம்ன்னு கேளுங்க..
ஆகாவை பள்ளியில் சேர்க்கணும்ன்னு அதி கேட்டா. நம்ம தர்சு பள்ளியில் பாப்பாவையும் அதியையும் சேர்க்கலாம்ன்னு நினைச்சேன்.
“அவள எதுக்கு?”
தண்டசோறு திட்டீட்டீங்கன்னா..அந்த பொண்ணு சும்மா ஏதாவது சொன்னாலே அழுறா. வீட்டை விட்டு வெளிய போய்..அவளுக்கு ஏதாவது ஆனால்..
“அப்பா, நான் எதுக்கு அப்படி திட்டப் போறேன்?”
“ஆமா, உங்க கோபம் அப்படி தான இருக்கு?”
இல்லப்பா, அவங்க கொஞ்ச நாள் எங்கேயும் போக வேண்டாம்.
“சோ, என்ன சொல்ல வர்றீங்க? கொஞ்ச நாளுக்கு பின் அவங்கள என்ன செய்றதா உத்தேசம்?”
“என்னப்பா கேட்குறீங்க? பிரச்சனை முடியவும் அவங்க வீட்ல விட வேண்டியது தான்”.
“அப்படி போகும் ஐடியா இருந்தால் உன்னுடன் எதுக்கு வரணும்?”
“அப்பா” கோபமாக அழைத்தான் ஆரியன்.
இங்க பாருப்பா..அடுத்து நடக்க வேண்டியதை நாம உறுதியாக பேச முடியாது. முதல்ல போ..அந்த பொண்ணுகிட்ட என்ன பிரச்சனைன்னு கேளு..
“நீங்க கேட்கலாமே!”
“நானா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்?”
நாங்க கேட்டாலே ஆகா பேசவிட மாட்டேங்கிறா. நீ பேசிப்பாரு..போ..
மணி பத்தாகுது. இப்ப எப்படி ஒரு பொண்ணு இருக்கிற அறைக்கு போறது?
உங்கள யாரும் உள்ள போக சொல்லலை.
“அப்புறம் தூங்கமாக விழித்தா இருக்கப் போறா?”
ஆமா..அவ இன்று தூங்கமுடியாது..மாட்டா..
“வாட்?”
ஆமாப்பா, அந்த பொண்ணு தூங்குவான்னு தோணலை. நீ தான் எந்த ஸ்டெப்பும் எடுக்கலையே! அவள் கண்டிப்பாக இங்கிருந்து கிளம்ப தான் எண்ணுவாள் அவர் சொல்ல, கிளம்பி எங்க போவாங்க,..
“போய் பேசு. உனக்கே தெரியும்” மாடியை காட்டினார் உத்தமசீலன்.
ஆரியன் தயக்கமுடன் படியில் ஏறினான். அறையில் வெளிச்சம் இருந்தது. மீண்டும் தயங்கி நின்றான்.
பக்கவாட்டில் அழும் சத்தம் கேட்டு அப்பக்கம் பார்த்தான். ஓரிடத்தில் அமர்ந்து கால்களுக்கு இடையில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள் அதியா. அவளை பார்த்து அறையை பார்த்தான். ஆகர்ஷனா தூங்கிக் கொண்டிருந்தாள்.
“அதியா” மெதுவாக அவளை அழைத்தான். அவனை பார்த்து கண்ணை துடைத்து எழுந்தாள்.
மொட்டை மாடியில் ஆகர்ஷனா தூங்க, தள்ளி இருந்த இருக்கை ஒன்றை காட்டி, “உட்காரு” என தள்ளி அமர்ந்தான் ஆரியன்.
அவள் முகத்தை துடைத்து அமர்ந்தாள்.
“யாரு அவங்க? எதுக்கு உங்களை கொல்ல நினைக்கிறாங்க? சொன்னேன்னா எனக்கு அவங்களிடமிருந்து உனக்கு உதவ எளிதாக இருக்கும்”.
அவனை பார்த்து விரக்தி சிரிப்புடன், “உதவியா?” அதுவும் அவங்களிடமிருந்தா? அது நடக்காத காரியம்.
“நடக்குமா? நடக்காதான்னு நான் சொல்றேன். விசயத்தை சொல்லு?”
அதி குரூப்ஸ் சேர்மன் ஆதிரா. என்னோட அக்கா. என்னோட அப்பா இறந்த பின் அம்மா தான் பார்த்துக்கிட்டாங்க. ஆனால் அம்மாவை விட அக்கா கம்பெனியை திறமையாக செயல்படுத்தினாள். அதனால அவளை தான் சேர்மனாக்கினாங்க. அப்ப நான் பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன்.
இரு மாதத்திலே கம்பெனியை உயரத்துக்கு கொண்டு போயிட்டான்னு தான் சேர்மனாக்கினாங்க. அவளும் நன்றாக நடத்தினாள். அந்த வருசம் முடிவில் அக்காவுக்கு வரன் வந்தது.
கம்பெனியை திறம்பட நடத்தும் “திரிபில் ஆர் கம்பெனி சேர்மன் வருண்” தான் மாப்பிள்ளைன்னு சொன்னாங்க. கம்பெனி பெயரை கேட்டதுமே அம்மா கொஞ்சமும் யோசிக்காமல் திருமணம் செய்து வச்சாங்க. கொஞ்ச நாள் அக்காவும் மத்த பொண்ணுங்க மாதிரி சந்தோசமா தான் இருந்தா..
ஒருநாள் வீட்டுக்கு வந்தா ரொம்ப அடிபட்டு இருந்தது. எல்லாரும் பதறிட்டோம்.
மாமா..எங்க கம்பெனியை எழுதி வாங்கி வர சொல்லி இருக்காங்க. நாங்க பெங்களூரில் தான் வசித்தோம். அங்கே இருக்கும் கம்பெனி தான் மெயின் பிராஞ்ச். அதற்கு நிறைய கிளைகளும் இருக்கு. எல்லாமே அவர் பெயருக்கு மாற்றணும் என்றவுடன்..அம்மா கொஞ்சமும் யோசிக்காமல் அக்காவை அங்கே விடவில்லை.
எங்க கம்பெனியை பழையவாறு நிர்வகிக்க ஆரம்பித்தாள். மாமா பொறுத்து பார்த்தும் அக்கா வரவில்லை என்பதால் அவரே எங்க கம்பெனி ஆட்கள் மூலமாக போர்டு மெம்பராக உள்ளே வந்தார். அதனால் பிரச்சனை அதிகமாக இருந்தது. அக்காவால் மாமாவை மட்டும் சமாளிக்க முடியலை.
பெரிய ஆளுங்கள வச்சு எங்களுடன் எங்க வீட்டில் தங்க ஆரம்பித்தார். அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவரும் பணக்காரன் என்ற காரணத்தால் தான் தங்க வைத்தார். ஆனால் அவர் கோபத்தில் அக்காவை அடிப்பது, கண்டபடி திட்டுவது, சந்தேகப்படுவது போல் செய்து ரொம்ப டார்ச்சர் செய்வார்.
அக்காவும் சமாளித்து தான் வந்தாள். அப்புறம்.. வருடங்கள் செல்ல என்னோட திருமணம், ஆகு பிறந்தது என நாட்கள் ஓடியது. ஆனாலும் மாமா மாறவில்லை. போட்டிக்கு என் கணவன் வந்துருவான்னு அவரையும் ஆட்களை வைத்து கொன்னாரு..
அக்காவோ இதற்கு மேல் முடியாது என சொத்து மொத்தத்தையும் என் பேரில் மாற்றி, என்னை திருமணம் செய்பவன் தான் அதிபதின்னு எழுதி வச்சிருந்திருக்கா. எனக்கு இது தெரியாது. மூன்று நாட்களுக்கு முன் தான் மாமாவிற்கு வக்கீல் மூலமாக தெரிய வந்தது. அதனால் அக்காவை சினமுடன் பார்க்க வந்தான்.
அப்பொழுது.. என அதியா கண்கள் கலங்க, நானும் ஆகுவும் விளையாடிக் கொண்டிருந்தோம். அக்காவின் அலமாரியில் ஆகு ஒளிந்திருந்தாள். அவளை பிடிக்க நானும் சென்றேன். அப்பொழுது யாரும் அறையில் இல்லை. அதனால் வெளியே செல்ல இருந்தேன். மாமா கோபமாக சத்தமுடன் வருவதை பார்த்து நானும் ஓரிடத்தில் மறைந்து நின்றேன்.
எதுக்கு அதியா பெயரில் சொத்தை மாத்துன? என அவர் சீற்றமுடன் அக்காவை அடித்தார்.
அக்காவோ காரணத்தை சொல்லவும் அவர் கோபத்தில் பழம் வெட்டும் கத்தியை எடுத்து என்னோட அக்காவை குத்தி கொன்னுட்டார். அக்கா சாகும் நிலையில் இருந்தாள். மாமா..கோபமாக வெளியே சென்றார்.
நான் என் அக்காவிடம் ஓடி வந்தேன். அக்கா தான் பாப்பாவோட போயிடு இல்லை இவன் உன்னை திருமணம் செய்து உன் வாழ்க்கையையும் ஆகர்ஷனா வாழ்க்கையையும் பாழாக்கிடுவான்னு சொல்லீட்டு போயிட்டா என அதியா அழுதாள்..
உன்னோட கணவன் யாரு? பணமில்லாதவனை உன் அம்மா தான் திருமணம் செய்து வைக்க மாட்டாங்கன்னு சொன்ன?
ம்ம்..அவன் ரஞ்சித். என்னோட படித்தவன். அவன் அப்பாவின் இரண்டாம் தாரத்திற்கு மகனாக பிறந்தவன். அதனால் அவனை யாரும் பொருட்டாய் மதிக்க மாட்டாங்க. அவனுக்கு பொண்ணுங்க வீக்னஸ் இருக்கு. அதை வைத்து அவனை கொன்னுட்டான்.
அப்ப இன்று காலை நாம பார்த்தவன்?
அவன் நிரஞ்சன். எங்க கம்பெனியில வொர்க் செய்பவன். என்னிடம் கேரிங்கா பேசுவான். நம்பி ஏமாந்துட்டேன் என கண்களை துடைத்தாள்.
ஆரியன் யோசனையுடன் அமர்ந்தான்.
“நாங்க நாளை கிளம்புகிறோம்” அதியா சொல்ல, “எங்க போவ?”
தெரியல..பார்க்கணும்..
“பார்க்கணுமா?”
“பாதுகாப்பை பற்றி யோசிக்க வேண்டாமா?”
“பாதுக்காப்பா? அதெல்லாம் இருந்து..” விரக்தியுடன் அவனை பார்த்தாள்.
“நீ ஏன் அப்படி கேட்ட?”
“என்ன?”
வாழ்நாள் முழுவதும் ஷனாவை பார்த்துக்க முடியுமான்னு?
அதான் முடியாதுல்ல..
எந்த அர்த்தத்தில் கேட்டன்னு சொல்லு?
அர்த்தமா? என அவனை பார்த்தாள்.
ம்ம்..நீ எப்படி இங்க இருப்ப?
உங்கள் வீட்ல வாடகைக்கு இருப்பது போல நினைச்சுக்கோங்க. எனக்கு என்னோட ஆகுவிற்கு ஏதும் ஆகக்கூடாது. அவ்வளவு தான்.
“ஷனாவை எதுக்கு கொல்ல பார்க்குறாங்க?”
சொத்து எனக்கு பின் அவளுக்கு தான சேரும். என்னை என் மாமா வருண் திருமணம் செய்து கொண்டால் அவர் பிரச்சனை முடிந்தது. ஆனால் ஆகு வளர்ந்து வந்தால் சொத்து அவளுக்கு போயிரும்ல்ல..
அதுக்கு வருடங்கள் இருக்குல்ல?
இருக்கு. ஆனால் என் அம்மா பணத்துக்காக எதுவும் செய்வாங்க. அவங்க ஆகு கல்லூரி சேர்ந்தவுடனே கூட மொத்த பொறுப்பையும் அவள் தலையில் ஏற்றிடுவாங்க.
வாட்?
ம்ம்..அவங்களுக்கு பணமில்லாமல் வாழ்க்கையில்லை. அதனால ஆகுவை வைத்து அவங்க சம்பாதிப்பாங்க. அவளுக்கு இப்பொழுதிலிருந்தே கோச்சிங் கொடுக்க ஆரம்பிச்சிட்டுவாங்க..
எங்களுக்கு வாழ பணமிருந்தால் போதும். அதனால் தான் வர எண்ணினேன். ஆனால் அக்கா இறந்த அன்றே என்னை திருமணம் செய்ய எண்ணினார் மாமா. அவரிடமிருந்து தான் தப்பி வந்தேன்.
என் அம்மாவிடமிருந்தும், மாமாவிடமிருந்து ஆகுவை நான் காப்பாற்றணும். ஒருவரிடம் மாட்டினாலும் அவள் வாழ்க்கையை முடிச்சிருவாங்க. மாமா கொன்றுவாங்க. அம்மா பாப்பா வாழ்க்கையை மொத்தமாக மாத்திடுவாங்க. அவங்கள ஏமாத்திட்டு தான் நாங்க வந்துட்டோம். இருவரின் ஆட்களும் எங்களை தேடுறாங்க.
காலை ஆகுவை தான் அவன் கொல்ல வந்தான். நான் அவர்கள் முன் சென்றால் கூட பெரிய பாதகம் இருக்காது. என்ன அவருடன் வாழணும். ஆனால் ஆகு நிலை..என்னால அவளை விட முடியாது. அதான் சென்னை வந்தோம். இங்கேயும் வந்துட்டானுக. நாங்க இங்க இருப்பதை கூட கண்டுபிடிச்சிருப்பாங்க என்றாள்.
“ம்ம் உன்னோட அம்மாவும் மாமாவும் தான பிரச்சனை?”
“சாதாரணமா சொல்றீங்க?”
ம்ம்..பார்க்கலாம்..நீ அழாம தூங்கு..நான் இதை பார்த்துக்கிறேன்.
“உங்களால என்ன செய்ய முடியும்?”
“உங்களை பாதுகாக்க முடியும்” எழுந்த ஆரியன், “நிம்மதியா தூங்கு. நீங்க எங்கேயும் போக வேண்டாம். இந்த பிரச்சனை முடிந்த பின் உங்க வீட்டுக்கு நீங்க போவீங்க” என்றான். அவள் அமைதியாக அறைக்குள் சென்றாள். அவள் சென்றதை பார்த்து விட்டு அவனும் அவனறைக்கு கிளம்பினான்.