வல்லவன் 29

இப்பரந்த உலகில் தன் பொற்கரங்களை போர்வையாக விரித்து ஆதவன் வெளியே வந்தார். லாவண்யா கண்ணை விழித்தாள். பக்கத்தில் மிருதுவாக தெரிய நகர்ந்து அதனை பார்த்தாள்.

சார்லி, நீ எப்படா வந்த? எப்படி வந்த? புதிய தனிய அறையில் இருந்த அவள் சிரித்துக் கொண்டே அவனை தூக்கினாள்.

மியாவ்..மியாவ்..பூனை கத்த, எப்படி வந்த? அவள் கேட்க, சன்னலருகே சென்று கம்பி வழியே கீழே குதித்தது. லாவண்யா பயந்து வேகமாக ஓடி வெளியே வந்தாள்.

வெளியே சிவப்பு நிற ஹூட்டியை முகத்தில் போட்டு உறங்கிக் கொண்டிருந்த விழியான் மீது சார்லி விழுந்தான்.

பயந்து எழுந்து அமர்ந்தான் அவன்.

சார்லியை பார்த்து, ஏன்டா உன்னை தள்ளி விட்டுட்டாளா? அவன் கேட்க, “மியாவ் மியாவ்” அது லாவண்யா வருவதை பார்த்து அவளிடம் ஓடியது.

“சார்லி, எதுக்குடா குதிச்ச? பயந்தே போயிட்டேன்” அதை தூக்கி அதனை ஆராய்ந்தாள் லாவண்யா.

“மியாவ்..மியாவ்” கீழே குதித்து அவனிடம் சென்றது. அவனை பார்த்து, இங்கே எதுக்கு வந்தார்? அவள் அவனருகே வந்தாள்.

“என்ன சத்தம்?” விடுதி காப்பாளரின் சத்தம் கேட்டு, சார்..நீங்க இருப்பதை பார்த்தால் பிரச்சனையாகிடும்..வாங்க அவன் கையை பிடித்து இழுத்தாள்.

பூனை மேலும் சத்தமிட, வாங்க என்று ஹாஸ்ட்டலில் பின்பக்கம் அவளை இழுத்து சென்று அவனை ஒரு சந்தில் நிற்க வைத்து அவள் நகர, “ஏய் யாருடி பூனையெல்லாம் கூட்டிட்டு வந்துருக்கீங்க?” விடுதி காப்பாளர் சத்தமிட, அவளும் அவனருகே வந்து நின்று கொண்டு வெளியே எட்டி பார்த்தாள்.

போச்சு. அவங்க சார்லியை என்ன செய்யப் போறாங்களோ? நான் போனால் என்னை இங்கே இருக்க விடமாட்டாங்க. நீங்க என்று அவனை லாவண்யா பார்த்தாள். அவள் கையை அவன் மீது வைத்திருந்தாள். அவன் அதை பார்க்க, கையை அவள் பக்கம் இழுத்துக் கொண்டு, “சாரி சாரி” என்று நகர்ந்து வெளியே பார்த்தாள்.

பாடி லோசன் போடுவியா? என்ன யூஸ் பண்ற? அவன் கேட்க, அவள் புரியாதது போல விழித்து பின் அவனை முறைத்து, “ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி தான் கேட்பீங்களா?” சினமுடன் கேட்டாள்.

ஏன் கேட்டால் என்ன?

அது..வந்து..என்று அவள் துப்பட்டா போடாததை பார்த்து, அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.

பார்க்க திம்ஸ்கட்ட மாதிரி இருக்க. இப்படி பயப்படுற?

அவன் கூறிய திம்ஸ்க்கட்டையில் அவனை பார்க்க பயந்து வெளியே வந்தாள்.

ஹேய், உன்னோட வார்டன் வாராங்க..

அய்யோ..அவள் மீண்டும் உள்ளே வர தயங்கி இருபக்கமும் பார்த்தாள். அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தான். இருவரும் மோதிக் கொள்ள, அவள் பயந்து நகர்ந்து சுவற்றில் இடித்துக் கொண்டாள்.

ஹே..பார்த்து, அவளை நேராக நிறுத்தினான். லாவண்யா அவனை பார்த்தாள்.

“என்னை பார்க்க பயமாகவா இருக்கு? நான் ஏதும் உன்னை செய்திருவேன்னு நினைக்கிறீயா?”

இருபக்கமும் தலையசைத்தாள். அவளது முகத்தை நெருங்கி, உன்னை ஏதாவது செய்யணும்ன்னு நினைச்சிருந்தா உன்னோட பியான்சே முன்னே செய்திருப்பேன்.

அவன் ஒன்றும் என்னோட பியான்சே இல்லை. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

அப்படியா? என்று அவளது முகத்தில் விழுந்த கூந்தலை நகர்த்தி, எனக்கு அப்படி தெரியல. நீ யாரையோ லவ் பண்றேல்ல? அவன் கேட்க, அவள் உறைந்து கண்சிமிட்டாமல் அவனை பார்த்தாள்.

மனதில் புன்னகைத்த விழியான், “லவ் பண்ற? கல்யாணம் பண்ணிக்க மாட்டாயா?”

மாட்டேன்..

ஏன்?

நம்பிக்கையில்லை.

ஏன்?

“சொல்ல முடியாது” முகத்தை திருப்பினாள்.

புன்னகைத்த விழியான் அவளது தாடையை பிடித்து அவன் பக்கம் திருப்பினான்.

விழித்த அவள் முடிவுடன்..நான் உங்களிடம் பேசணும்..

சத்தமாக அவன் சிரிக்க, ஷ்ஷ்..அவன் வாயில் அவள் கை வைத்து மறைக்க, அவளை அவன் விழுங்குவது போல பார்த்தான். அவளும் அவனையே பார்த்தாள்.

மியாவ் சத்தம் கேட்க, “உங்களுக்கு எல்லாரையும் தெரியுமா?”

என்ன எல்லாரும்?

ஆரியன் அண்ணா, கவின் சார், ஆத்விக் சார்..

“சொல்லணுமா?”

ம்ம்…தலையை ஆட்டினாள்.

வெரி சாரி, முடியாதே!

அவங்க எல்லாரும் உங்களை தேடிட்டு இருக்காங்க.

நீ என்னை காட்டிக் கொடுத்திருக்கலாமே! அவன் கேட்க, எனக்கு விருப்பமில்லை.

ஏன்?

தெரியாது..

தெரியாமல் எப்படி?

அந்த பொண்ணு யாரு?

எந்த பொண்ணு?

விழியான் கண்களை காண முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

அவளை நிமிர்த்தி, “எந்த பொண்ணு?” சீரியசாக கேட்டான்.

நீங்க டான்ஸ் பண்ணீங்கல்ல? அவள் கேட்க, அவள் என்னோட கெர்ல் ப்ரெண்டு.

“லவ் பண்றீங்களா?” அவளது இதழ்கள் துடிக்க, கண்கலங்க கேட்டாள்.

ம்ம்..பத்து வருசமா லவ் பண்றேன்..

கண்ணீரை உள்ளிழுத்து அவள் நிற்க, அவன் அவளை ரசித்து பார்த்தான்.

“யாரு? ஒழுங்கா வெளிய வந்திருங்க விடுதி காப்பாளர் சத்தம் அருகே கேட்கவும் பயத்தில் கண்ணீர் வந்து விட்டது லாவண்யாவிற்கு.

திடீரென அவன் அவளது கூந்தலில் விரல்களை நுழைத்து நெருங்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் அதிர்ந்து பார்க்க, சார்லி அவனை பார்த்தது. அவன் அவர்களை திசை திருப்ப சொல்லி கண்ணை காட்டினான். அது வேகமாக ஓடத் தொடங்கியது. காப்பாளர் அதன் பின் ஓட, வாட்ச் மேனும் அதை விரட்டினார். அது ஓரிடத்தில் மறைந்து கொண்டது.

அழுதேன்னா நாம மாட்டிப்போம்ல்ல. அதான் கிஸ் பண்ணேன். அவள் அழுகையை கட்டுப்படுத்தி நிற்க, அவன் மெதுவாக அவள் தோளில் கை வைத்தான். நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

உன்னோட உதடு ரொம்ப அழகாக இருக்கு. ஸ்வீட்டா இருக்குமா? அவன் கேட்க, அவளோ அவன் சொன்னதில் மீள முடியாமல் அவனை பார்க்க, அவளது இதழருகே அவன் குனிந்தான். அப்பொழுதும் நினைவிலிருந்து மீளாமல் பல எண்ணத்தில் அவள் இருக்க, அவளது இதழமுதை சுவைக்க எண்ணி அவளது இதழ்களின் அவன் இதழ்களை கோர்த்து அவன் சுவைத்தான்.

அதிர்ந்த லாவண்யா, அவன் மீதுள்ள காதலில் ஏதும் சொல்லாமல் அவன் தோளில் கை வைத்தாள். அவனுக்கு அவள் காதல் கர்ன்பார்ம் ஆன நிலையில் தவறில்லை என்று தோன்ற அவளது கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட, அவள் தெளிவாகி அவனை தள்ளி விட்டு, கண்ணீருடன் “ஐ அம் சாரி” அழுதாள்.

ஷ்..லாவா..அமைதியா இரு. வரப் போறாங்க அவன் சொல்ல, அவன் அலைபேசி அதிர்ந்தது. அவள் வேகமாக நகர்ந்து அவனை பார்க்காமல் நின்று கொண்டாள். அவளை பார்த்துக் கொண்டே அலைபேசியை காதில் வைத்தான்.

அங்கிள்..

மும்பை கிளம்பி வா.

எப்படி உடனே?

அனீக்கிடம் ஆரியன் தான் கேஷை வேகமாக முடிக்கணும்ன்னு சொல்லி இருக்கான்.

ஓ..நான் இப்பொழுதே மும்பை கிளம்புகிறேன் அவன் சொல்ல, வேகமாக திரும்பினாள்.

ஆதாரம் இன்னும் முழுதாக கிடைக்கலையே அங்கிள்.

இருக்கா? எங்க? எப்படி? அவன் பேச்சில் மூழ்கினான்.

அவள் நகர, அவன் கையை சுவற்றில் வைத்து அவளை செல்ல விடாமல் தடுத்து, மாம்ஸ் அவசரப்படுறாரோ?

இல்லையா? ஓ.கே நான் வாரேன்.

அந்த பக்கம் பேசிய லாயர் சொன்னதை கேட்டு அதிர்ந்து, என்னை ஏதும் சொல்லலை, பேசலை..கேட்டான்.

எப்படி கண்டுபிடித்தார்? மாம்ஸ் கில்லாடி தான். ஆரியனை புகழ்ந்தான்.

ஆதுவிடம் சொல்லிடுவாரோ? அவன் கேட்க, அவனையே இமைக்காது பார்த்தாள் லாவண்யா.

கண்டிப்பாக அவங்க வந்திருவாங்க. நான் இப்பவே கிளம்புகிறேன். மாம்ஸ்ஸை பார்த்துட்டு வாரேன் என்று அலைபேசியை அணைத்து விட்டு, லாவா எனக்கு எனர்ஜி கொடு. அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

“கோவிச்சுக்காத” அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவள் கண்ணீர் அவன் மீது பட்டது. அவன் அதை உணரவில்லை.

வருவீங்களா? அவள் கேட்க, அவளை நகர்த்தி நிறுத்தி..உயிரோட இருந்தால் தான என்று விரக்தியுடன் சொல்லி அவன் அவள் கண்ணை ஆழ்ந்து பார்க்க வெளிப்படையாகவே கண்ணீர் விட்டாள்.

சார்லியை நீ தான் பார்த்துக்கணும். அவனை விட்றாத..

ம்ம்..தயங்கி, நீங்க இங்கேயே கூட உங்க கெர்ல் ப்ரெண்டோட இருங்க என்று அவள் அழுது கொண்டே சொன்னாள்.

அவள் பாசத்தில் பிரம்மித்து, “நான் கூட உன்னை பிடித்து, நீ எனக்கு என்று தான் நினைத்தேன். ஆனால் நீ என்னோட சந்தோசத்தை பார்க்க்கிறேல்ல. என்னோட சந்தோசம் நீ தான்னு போயிட்டு வந்து சின்ன கேம் விளையாடிட்டு சொல்றேன்” மனதில் எண்ணியவாறு அவன் அவளது தலையை வருடி “போறேன்” அவன் நகர்ந்தான்.

அவனை போகவிடாமல் அணைத்து, போகாதீங்க.. போனால் ஏதும் ஆகிடுமா? அவள் கேட்க, அவன் அமைதியாக அவளை நகர்த்தி, “அவளுக்கு இங்க இருக்க பிடிக்காது” என்றான். லாவண்யா நகர்ந்து, “ஐ அம் சாரி” என்று அவனை திரும்பியும் பார்க்காது சென்றாள். அவன் புன்னகையுடன் அங்கிருந்து அகன்றான்.

நாளை ஹியரிங் ஆத்விக்கிற்கும் விசயம் தெரிந்த வர, அவனும் சுவேராவும் மும்பை கிளம்ப தயாரானார்கள்.

“சுவா, நீ தயாராகு. நான் வருகிறேன்” என்று ஆத்விக் துருவினியை அழைத்து ஓரிடத்திற்கு வரச் சொல்லி பைக்கை விரட்டினான். அவளும் வேகமாக அவளது வண்டியுடன் சென்றாள். இருவரும் சந்தித்தனர்.

“அத்து, கண்டிப்பா போகணுமா?”

ம்ம்..போகணும். இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன் வினு..

துருவினி அவனை அணைத்து, எத்தனை நாள் ஆகும்?

நான் மறுநாளே வர பார்க்கிறேன். நம்ம சுவாக்கான சொத்துக்களும் இருக்கு. அந்த வேலையையும் முடிச்சிட்டு வந்துட்டா சரியா இருக்கும். சும்மா அங்க போக வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.

அத்து, எனக்கு நீங்க போறதே பிடிக்கலை அவள் சொல்ல, அவளை நிமிர்த்தி, வினு சுவாவை பற்றி எண்ண வேண்டாமா? நம்மை விட்டால் அவளுக்கு யாருமில்லை.

ம்ம்..எனக்கு மனசுக்கு ஒருமாதிரி இருக்கு. எதற்கும் நீங்களும் சுவாவும் கவனமா இருங்க.

“கண்டிப்பாக நல்லபடியாக சீக்கிரம் உன்னை பார்க்க வந்துருவேன்” அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அத்து, நம்ம மேரேஜ் பற்றி அண்ணா, அப்பா எல்லாரிடமும் பேசலாமா?

மும்பையிலிருந்து வந்தவுடன் பேசி கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் நாம தனியே இருக்க தேவையிருக்காது ஆத்விக் புன்னகையுடன் சொல்ல, அவள் கையை நீட்டி தூக்க சொன்னாள். அவளது மென்னிடையை பிடித்து அவன் தூக்கினான்.

அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவனை அணைத்தாள்.

என்னாச்சு வினு?

“தெரியல. ஏதோ ரொம்ப பயமா இருக்கு” அவள் கண்ணீர் சொட்ட, “வினு” அவன் அவளை இறக்கி விட்டு, “எனக்கும் நீயில்லாமல் என்னால இருக்க முடியாது வினு. உன் நினைவாக தான் இருக்கும்” சொல்லி கண்கலங்க அவள் நெற்றியில் முட்டினான்.

அவன் அலைபேசி அழைக்க, சுவேரா அழைத்திருந்தாள்.

“வந்துட்டேன் சுவா” என்று ஆத்விக் துருவினியை பார்த்தான்.

அவன் காலரை பிடித்து இழுத்து, “அத்து நான் வெயிட் பண்ணுவேன். மறந்துறாதீங்க” என்று அவனுக்கு அவள் முத்தமிட, அவனும் முத்தமிட்டு உன்னை மறந்தேன்னா நான் இந்த உலகில் இல்லைன்னு அர்த்தம்.

அவன் வாயில் கை வைத்து கண்ணீருடன் “வேண்டாம்” தலையசைத்தாள்.

“வாரேன் வினு” அவன் கிளம்பினான். துருவினி முகம் வாட வீட்டிற்குள் வந்தாள்.

“அதி, சீக்கிரம் வா” ஆரியன் சத்தமிட்டான்.

“ஆரு, தயாராக வேண்டாமா?வந்துடுறேன்” என்று ஆடையை சரி செய்து கொண்டே வெளியே வந்தாள்.

“போகலாமா ஆரு?” அதியா கேட்க, “எங்க அதி? ஆபிஸிற்கா?” துருவினி கேட்டாள்.

இல்லை..அண்ணா, மாமா, சுவா மும்பை போறாங்கல்ல? ஏர்போர்ட்டிற்கு..நீயும் வர்றீயா? அதியா கேட்க, “வரல அதி” என்று அமைதியாக துருவினி உள்ளே சென்றாள்.

“அப்பா, பசங்களை பள்ளியில் விட்டு எங்களை பிக் பண்ண வாங்க” ஆரியன் சொல்ல, “சரிப்பா பார்த்து போயிட்டு வாங்க” உத்தமசீலன் சொன்னார்.

நீங்களும் வரலாம் மாமா? அதியா சொல்ல, மாப்பிள்ளையும் பாப்பாவும் பேசிட்டாங்கம்மா. போதும்.

ஆத்விக் வீட்டில் கவின் வந்திருப்பதை பார்த்து, “இங்க என்னடா பண்ற?” ஆத்விக் கேட்டான்.

ஆரியன் அண்ணாவால்ல வர முடியாதுன்னு என்னை உன்னுடன் போக சொன்னாங்கடா..

உனக்கு சைந்தவி கேஷ் இருக்குல்ல. பார்ட்டி ஹால் ஓனரும் மகனும் என்ன ஆனாங்க?

அது..அவங்களுக்கும் சைந்தவிக்கும் பெரிய டீல் எதுவும் இல்லை. ஏற்கனவே தெரிந்தது தான். அவங்களை கோர்ட்ல்ல விட சொல்லிட்டு வந்துட்டேன்..

ஆத்விக் அவனை மேலிருந்து கீழாக பார்த்து, கேஷை விட்டு நீ வர வேண்டாம்…நீயும் வர மாட்டீயே!

ஆது போதும். அங்க உங்களுக்கு பிரச்சனைக்குரியவங்க இருப்பாங்க. அதான் வாரேன்..

“அண்ணா, நேரமாகுது” சுவேரா..ஜூன்ஸ் டாப்பும் தலை விரித்து லேசான ஒப்பனையுடன் வந்தாள். ஏற்கனவே கவினும் அவளும் சந்தித்து விட்டனர். அவள் தான் அவனை அமர சொல்லி சென்றிருந்தாள்.

ம்ம்..போகலாம் மூவரும் கிளம்பினர்.

ஆத்விக் ஆபிஸில் அன்றைய நாள் யாரும் யாருடனும் பெரியதாக பேசிக் கொள்ளவில்லை. ஆனால் லாவண்யா சாய்க்காக அந்த டாக்டர் பொண்ணை சந்திக்க சென்றாள். ஆனால் அவன் காதலை அவள் கூறவில்லை.

நேசனும் அமைதியாகவே இருந்தான். அபிமன் ஆத்விக்கின் வேலையை பார்த்துக் கொண்டும் தன் மனைவியையும் கவனித்துக் கொண்டான். ஆனால் எல்லாரிடமும் வெறுமையும் அமைதியுமாக கழிந்தது. சாய் எல்லாரையும் ஆழ்ந்து கவனித்தான்.

மும்பை சென்றவர்கள் சுவேரா வீட்டிற்கு சென்றனர். அவள் மனம் அமைதியை தொலைத்து இருந்தது. கவின் அவளது வீட்டையும் அவளையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவளுடைய பாட்டி, தாத்தா அறை மற்றும் சில அறைகளில் சில நேரம் சென்று வந்திருந்தாள். முகம் நன்றாக சிவந்து இருந்தது. கவினுக்கு ஆத்விக் கொடுத்த அறையில் அவன் இருக்க, அதன் அலமாரியில் சுவேராவும் அவளுடன் இரண்டு பசங்களும் இருந்தனர். பின் நிறைய புகைப்படங்களும் இருந்தது. அதில் அவள் இருந்த புன்னகையை கவின் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

“கவின்” ஆத்விக் அழைக்க, அவன் ஆத்விக்கை பார்த்தான். அவன் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கி படுக்கையில் அமர்ந்தான் ஆத்விக்.

இவங்க அவளோட குடும்பம் தானா?

ம்ம்..ஆத்விக் கண்கலங்க, சுவா வலப்புறம் இருக்கான்ல்ல இவன் தான் ஆரவ். அவளோட அண்ணன். இடப்புறம் இருக்கான்ல்ல இவன் பெரியப்பாவின் இரண்டாவது மகன் சுனில். ஆரவ் போல சுனிலுக்கும் சுவா மீது அதிக பிரியம். இவங்க அக்கா, அவங்க குட்டிப்பையன் காட்டிக் கொண்டே கண்ணீரை துடைத்தான் ஆத்விக்.

ஆது, ப்ளீஸ்டா கவின் சொல்ல, ம்ம்..கண்ணை துடைத்து மற்றவர்களையும் அறிமுகப்படுத்தினான்.

எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்டா இந்த வீட்ல. இன்று ரொம்ப அமைதியா இருக்கு அவன் சொல்லிக் கொண்டிருக்க, ஏதோ உடையும் சத்தம் கேட்டது..

அண்ணா..அண்ணா கத்திக் கொண்டே சுவேரா இவர்கள் இருக்கும் அறைப்பக்கம் ஓடி வந்தாள். இருவரும் வெளியே ஓடி வந்தனர்.

ஆத்விக்கை பார்த்து, அண்ணா..கிச்சன்ல்ல யாரோ இருந்தாங்க. என்னை தள்ளி விட்டு ஓடுனாங்க அவள் சொல்ல, இருவரும் சென்று பார்த்தனர்.

“யாரும் இங்க வர மாட்டாங்க சுவா” ஆத்விக் சொல்ல, “இல்லண்ணா, நான் பார்த்தேன்” அவள் சொல்ல, “உனக்கு அவங்க நினைவா இருக்குன்னு நினைக்கிறேன்” கவின் சொல்ல, “இல்லை. கண்டிப்பாக யாரோ இருந்தாங்க” அவள் சொல்லிக் கொண்டே பார்த்தாள்.

நீ தான் கிளாசை கீழே போட்ருக்க?

ஆமா, கிளாஸ் என்னால தான் விழுந்தது. ஆனால் யாரோ வந்திருக்காங்க..

“சுவா” ஆத்விக் அவளை அதட்டி விட்டு கவினை பார்த்தான்.

“நீ வா” அவளை கவின் அழைத்து செல்ல, அவனது கனிவான நடத்தை அவளுக்கு சிந்தனையை தூண்டியது.

திண்பன்டங்கள் வைத்திருக்கும் செல்ஃப் ஒன்று திறந்திருப்பதை பார்த்து, சுனிலின் நினைவு வந்தது ஆத்விக்கிற்கு.

சுவேராவும் அவனும் சண்டை போட்டு சமையற்கட்டில் ஏறி திண்பண்டங்களை எடுப்பதும் இரு அம்மாக்களும் அவர்களை விரட்டுவதும் நினைவில் வந்து அவன் முன் நடப்பது போல தோன்றியது.

“என்றாவது வீட்டிற்கு வரும் எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே! சுவா ரொம்ப கஷ்டப்படுவாளே!” என்ற எண்ணம் வரவும் அங்கிருந்து நகர்ந்தான் ஆத்விக்.

வெளியே வந்த ஆத்விக் கவின் மட்டும் அமர்ந்திருப்பதை பார்த்து, “எங்கடா சுவா?” கேட்டான்.

கஷ்டப்படுறான்னு பார்த்தால் ரொம்ப பண்றா. கையை தட்டி விட்டு தொந்தரவு பண்ணாதன்னு சொல்றா கவின் சினமுடன் சொல்ல, “அவளுக்கு இங்க நிறைய நினைவுகள் இருக்கு. அதான் ரொம்ப கஷ்டப்படுறா. உன்னிடம் அவளை விட்டேன் பாரு என்னை சொல்லணும்” ஆத்விக் கவினிடம் பல்லை கடித்து அவனை திட்டி விட்டு வெளியே வந்தான்.

வெள்ளியை உருக்கியது போலுள்ள ஊஞ்சலில் முகத்தை மூடி அமர்ந்திருந்தாள். ஆத்விக் கண்ணீருடன் அவளை பார்த்தான். அவன் பின்னே வந்த கவின் இருவரையும் பார்த்தான்.

கவின் அவன் தோளை தொட, இது அவளோட பெரியப்பா மகன் மூத்தவர் அவளுக்காக வாங்கியது. வெள்ளியால் செய்யப்பட்ட ஊஞ்சல். ஆரவ்வும் சுனிலும் சண்டை போட்டு அவளை அமர வைத்து ஆட்டி விடுவாங்க. அண்ணா, அக்கா பசங்களும் அவளை கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பாங்க.. ஆனால் இப்பொழுது என ஆத்விக் தொண்டை அடைக்க நின்றான்.

“நீ இரு. நான் வாரேன்” ஆத்விக் அவளருகே சென்று தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலை ஆட்டி விட்டான். முகத்திலிருந்து கையை எடுத்து சுவேரா ஆத்விக்கை பார்க்க, அவளுக்கு ஆத்விக் ஆரவ் போல தெரிந்தான்.

சிலமணி நேரம் பார்த்தவள் வேகமாக கீழிறங்கி, “ஆரவ் நீ வந்துட்டேல்ல?” சுவேரா கேட்க, கவின் அவளை அதிர்ந்து பார்த்தான்.

“சுவா” ஆத்விக் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான்.

“நீ என்னை வரான்னு தான அழைப்ப?” அவனை நகர்த்தி பார்த்து நிதர்சம் உணர்ந்து, ஆது அண்ணா “எனக்கு ஆரவ்,சுனில், அம்மா, அப்பா எல்லாரும் வேணும்” கதறி அழுதாள். ஆத்விக் பதில் கூற முடியாமல் அழ, கவின் அவர்களிடம் வந்து இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் தோளிலும் சாய்ந்து சுவேரா அழுதாள்.

பின் நகர்ந்து, “ஐ அம் சாரி” என்று கவினிடம் சொல்லி விட்டு சுவேரா மீண்டும் அதே ஊஞ்சலில் அமர, அவளருகே ஆத்விக் அமர, கவினும் அமர்ந்தான்.

“நாம வெளிய எங்காவது தங்கலாமா சுவா?” ஆத்விக் கேட்டான்.

வேண்டாம் அண்ணா. நம்ம வீட்ல தான்..

ஆனால் என்னாலும் இங்க அவங்க நினைவாகவே இருக்கு சுவா..

அது நமக்கு பலவீனமில்லை அண்ணா. நம் வருத்தம். அதுவே நம் பலமும் கூட..

தாத்தா எப்போதும் சொல்வார். ஒருவர் உடல் அழிந்தால் அவங்க நம்முடன் இல்லை என்பதில்லைன்னு. நான் எப்போதும் போல இருக்க முயற்சிக்கிறேன். நீயும் இருப்பேல்ல?

ம்ம்..ஆத்விக் அவளை பார்க்க, கண்ணுக்கு தெரிய மாட்டாங்கல்ல அண்ணா..

ம்ம்..

“அண்ணா, நான் இங்கே தனியே இருக்கவா?” தயங்கி கேட்டு விட்டாள் சுவேரா.

“ஏன் சுவா? நாங்க இங்க இருப்பது உனக்கு பிடிக்கலையா?” ஆத்விக் கேட்டான்.

இல்ல, கடைசியா அவங்களிடம் பேசுவது போல இருந்தால் நல்லா இருக்கும்..

கவின் அவளிடம், “என்ன சொல்ல வர்ற? தனியா பேசணும்ன்னு சொல்றீயா?” கேட்டான். ஆத்விக் அவனை முறைத்தான்.

அண்ணா, அவர் தப்பா ஏதும் சொல்லலை. நானும் அதை தானே செய்ய எண்ணுகிறேன்.

“நாங்க இங்க தான் இருப்போம். நீ எப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறியோ இரு” கவின் சொல்ல, “என்னை பைத்தியம்ன்னு சொல்ல மாட்டீங்களா?” அவள் பாவமாக கேட்டாள்.

“இல்லை” கவின் தலையசைத்தான். அவள் புன்னகையுடன் எழுந்து சேட்டைகள் செய்யும் சுவேராவாக நடந்து கொள்ள, கவின் அன்று முழுவதும் அவளை கவனித்தும் ஏதும் சொல்லவில்லை. அவனுடன் வம்பு செய்தும் அவன் அவளை ஏதும் கூறவில்லை. அப்படியே பொழுது சாயும் நேரம் வந்தது.

“சுவா, சாரை பார்க்க போகணும்” ஆத்விக் சொல்ல, மூவரும் அனீக்கையும் அவர்களுக்காக வாதாடும் வக்கீலையும் பார்க்க சென்றனர்.

மறுநாள் கோர்ட்டில் கேஷ் நடந்து கொண்டிருந்தது. “சுவா காரில் இருக்கும் ஆதாரம்” ஆத்விக் கண்ணை காட்ட, அதனை எடுக்க வெளியே வந்தாள் சுவேரா. அவளுடன் கவினும் வந்தான். அனீக் ஏற்பாடு செய்த வக்கீல் நிறைய ஆதாரத்தை சேகரித்து வைத்திருந்தார். இவர் தான் விழியானிடம் பேசி இருப்பார்.

கவினும் சுவேராவும் காரிலிருந்து எடுத்தனர். அவர்கள் உள்ளே செல்லும் சமயம் கோர்ட்டின் வெளியே பைக்கில் இருவர் ஹெல்மேட்டுடன் பயங்கர வேகமாக வந்தனர். அப்பைக்கின் சக்கரத்தில் அவர்களை விரட்டி வந்தவன் பெரிய இரும்பு செயினை வீசினான். அது பைக் சக்கரத்தில் பட்டு இருவரும் பைக்கிலிருந்து விழுந்தனர்.

பின்னிருந்தவன் ஹெல்மேட்டை அகற்றி முன்னே இருந்தவனை தூக்க எழுந்தான். அவனை பார்த்து அதிர்ந்த கவின், “சித்திரன்” அழைக்க, “மாமூ” என்று கண்கலங்க அழைத்தாள் சுவேரா. அதை கேட்ட கவின் மேலும் அதிர்ந்து சித்திரனை பார்த்தான்.

காய்ஸ்..சித்திரன், முதல் எபிசோடில் வேலூரில் நம் கவினுடன் பொன்னி கேஷில் உதவி இருப்பானே! அவன்..

சுவா..வராத. மச்சான்..மச்சான்..அவன் முன்னிருந்தவனை காட்டினான். கவின் புரியாமல் பார்க்க, இருவர் கையில் பெரிய கத்தியுடன் முன்னிருந்தவை நோக்கி வந்தனர்.

“மச்சான், எழுந்திருங்க. சுவா..அவரை பாரு” சித்திரன் கத்த, சுவேரா பயத்துடன் முன்னிருந்தவனிடம் சென்று அவன் ஹெல்மேட்டை கழற்றி திகைத்து, மறுநொடியே அழுது கொண்டே “அண்ணா” அவனை கட்டிக் கொண்டாள்.

“கவின் சார், அவரை கொல்ல தான் வாரானுக” சித்திரன் தட்டுத் தடுமாறி எழுந்தான்.

அண்ணா, எனக்கு தெரியும். நீ என்னை விட்டு போகமாட்டன்னு தெரியும் அவனை பிடித்துக் கொண்டு விடாமல் அழுதாள்.

“சுவா, அவரை அழைச்சிட்டு கோர்ட்டுக்குள்ள போ. மச்சான் எழுந்திருங்க” சித்திரன் மேலும் கத்தினான்.

அப்பொழுது தான் சுவேரா அவள் அண்ணன் ஆரவ்வை கொல்ல வருகிறார்கள் என்று அவனை எழச் சொல்ல, “சுவா..நீ இரு. நான் பார்த்துக்கிறேன்” என்று ஆரவ் எழுந்து, “பொட்ட பசங்களா? நேருக்கு நேரா மோதாமல் பைக்ல்ல வரும் போது கொல்ல வர்றீங்க? இப்ப வாங்கடா” அவன் நெஞ்சை நிமிர்த்தி நிற்க,

“மச்சான் நீங்களே ஆதாரம் தான். முதல்ல நமக்கு தேவையானதை செய்யணும். இவனுகள நான் பார்த்துக்கிறேன்” சித்திரன் ஓடி வந்து ஆரவ்வை கொல்ல கத்தியை ஓங்கியவனை எட்டி உதைத்து தள்ளினான்.

“ரா, உன் அண்ணனோட உள்ள போ” கவின் சொல்ல, “வா அண்ணா..ஆது அண்ணா உன்னை பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்று ஆரவ்வை அவள் இழுத்து சென்றாள்.

கவினும் சித்திரனும் சேர்ந்து அவர்களை அடித்து நொருக்க, அடுத்து பத்து பேர் வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையசைத்து பயங்கரமாக அவர்களை அடித்து எழ முடியாமல் செய்தனர்.

கோர்ட்டினுள் வந்த தன் நண்பனை பார்த்த ஆத்விக் நம்பமுடியாமல் அவனை பார்க்க, சுவேரா அவனை பார்த்து புன்னகைத்தாள்.

“என்னோட கனவாக இருக்குமோ?” அவன் எண்ணியவாறு அமர்ந்தான். ஆரவ் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பிரச்சனைக்கான காரணத்தை சொல்லி இவன் இறக்கவில்லை என்று உறுதிப்படுத்தினான்.

கொலை குற்றத்திற்காக திலீப் குடும்பத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களையும் பசங்களையும் பார்த்த ஆத்விக் அவர்களிடம் சென்று பேச, அவர்களும் ஒரு குடும்பத்தை கொன்றவர்களுடன் வாழும் குற்றவுணர்வில் இருந்தாதாகவும் இனி நிம்மதியாக இருப்போம் என்று சொல்லி சென்றனர்.

கோர்ட் கலைய, ஆத்விக் முன்னே கையை கட்டிக் கொண்டு ஆரவ் அவனை பார்த்தான்.

“என்னடா நான் வந்ததில் சந்தோசம் இல்லை போல?” ஆரவ் கேலியுடன் கண்ணை சுருக்கி கேட்க, ஆத்விக் அவன் கன்னத்தை பிடித்து இழுத்தான்.

“டேய், நான் மனுசன். வலிக்கும்டா” ஆரவ் சொல்ல, “மச்சான்” ஆத்விக் அவனை அணைத்து அழுதான்.

“என்ன ஊரை சுத்தலாமா?” ஆரவ் தன் தங்கையை பார்க்க, “நான் தயாரா இருக்கேன்” சுவேரா சொல்ல, “மச்சான் என்னை கழற்றி விட்றாதீங்க” சித்திரன் சொல்ல, ஆத்விக்கும் புன்னகையுடன் ஆரவ்வை அணைத்துக் கொண்டான்.

“இப்படியே கட்டிப்பிடிச்சிட்டு இருந்தா எப்படி சுத்துறது?” ஆரவ் கேட்க, ஆத்விக்கிற்கு துருவினியிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் அழைப்பை பார்த்து மனம் வலிக்க தன் நண்பனை பார்த்துக் கொண்டே அலைபேசியை அணைத்து வைத்தான்.

“யாருடா அலைபேசியில்?” கவின் கேட்க, கஸ்டமர் கேர் டா..

“நீயும் வருவேல்ல கவின்?” ஆரவ் கேட்க, நான்.. அவன் ஆத்விக்கை பார்த்தான்.

இல்லடா, எனக்கும் வேலை இருக்கு. இப்ப நீ சுவாவோட போ..

“என்ன வரா, உன்னோட ஆது அண்ணன் நம்மை கழற்றி விட பார்க்கிறான்? என்னன்னு கேளு?” ஆரவ் கேட்க, “ஆத்விக் மனமுடைந்து என்னால சந்தோசமா முடியாதுடா. தவறு செய்துட்டேனே!” மனதில் எண்ணியவாறு துருவினிக்கு ஆத்விக் மீதுள்ள காதலை எண்ணி, “சாரி வினு. எனக்கு என்னோட நண்பனும் வேண்டும்” என்றான்.

“என்ன?” கவின் கேட்க, “நாமும் போகலாம் கவின்” என்று மனதில் இருக்கும் வலியை காட்டிக் கொள்ளாமல் ஆத்விக் அவர்களுடன் வெளியே சுற்றினான்.

“நாளையே நாம் சென்னை கிளம்பலாம் கவின்” ஆத்விக் சொல்ல, “நாங்களும் நாளையே வந்திடுறோம்டா” ஆரவ் ஆத்விக்கை கூர்ந்து பார்த்தான்.

சொத்து விசயம்? ஆத்விக் கேட்க, அது இருக்கு. நாம போகலாம்..

“நீ சென்னையில தான இனி?” ஆத்விக் வார்த்தைகள் “வர வேண்டாம்” என்று மனம் எண்ணியது.

“ஆமா, இனி நானும் சென்னை வாசி தான். ஒரு வாரம் போகட்டும். அப்புறம் இதை பார்த்துக்கலாம்” ஆரவ் கூறி விட்டு, “வாங்க நாம தயாராகலாம்” என்று சொல்ல, ஆத்விக் மனம் ஊமையாய் அழுதது. அன்று அவனால் தூங்க முடியவில்லை. கவினிற்கு துருவினி அழைத்து ஆத்விக்கிடம் கொடுக்க சொன்னாள். அவள் தான் என அறிந்த ஆத்விக் அவனையும் தவிர்த்திருந்தான்.

“என்னாச்சு இவனுக்கு?” கவின் சிந்தனையுடன் அவனை பார்த்தான்.

எல்லாரும் கிளம்பினர் சித்திரனும் உடன் வந்தான். அவனுக்கு வேற ஸ்டேசனில் சென்னையில் தான் போட்டிருந்தனர்.

சென்னை வந்தவர்கள் முதலில் ஆரியன் வீட்டிற்கு தான் வந்திருந்தனர். ஆரவ்வை அவர்கள் வீட்டில் ஆத்விக் அறிமுகப்படுத்தினான். அவர்கள் அவனிடம் நன்றாக பேசினர். ஆனால் ஆத்விக்கின் முகம் வாட்டமாக இருந்தது. ஆரவ், சுவேரா இருவரும் அதியா, ஆரியனிடம் ஆர்வமுடன் பேசியதில் ஆத்விக்கை கவனிக்க தவறினார்கள். அவ்வப்போது ஆரவ் துருவினியை பார்க்க, ஆத்விக் அதனை கவனித்து உத்தமசீலனிடம் வந்து, “மாமா..ஆரவ், சுவா இங்கு இன்று தங்கட்டும். நான் வீட்டிற்கு கிளம்புகிறேன்” விட்டேத்தியாக அவன் கூறினான்.

துருவினியின் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, “மாப்பிள்ள துரு உங்களிடம் பேசணும்ன்னு நினைக்கிறா போல?” அவர் சொல்ல, “எனக்கு வேலை இருக்கு மாமா. ஆபிஸ்ல்ல வச்சி பேசிக்கிறேன்” என்றான்.

உடனே கிளம்பணுமா? அவர் சத்தமாக கேட்க, எல்லாரும் அவர்களை பார்த்தனர்.

ஆமா மாமா, இங்க இருக்கும் கேஷை விட்டு தான் போனேன். சாய் கேஷை அவனே சமாளிச்சிட்டான். பழைய கேஷ் நிறைய பெண்டிங்கல்ல இருக்கு. பார்க்கணும் ஆத்விக் சொல்ல, கண்கலங்க துருவினி அவனை பார்த்தாள்.

“ஏன்டா, அதுக்குள்ள போகணுமா?” அதியா கேட்டாள்.

“நைட் எந்த ஆபிஸ்ல்ல வேலை பார்க்கப் போற?” ஆரியன் கேட்டான்.

மாமா..நான் அவன் தயங்க..

உன்னோட வேலையை நாளையிலிருந்து பாரு. இன்று எல்லாரும் இங்கு தான் தங்கணும். கவின் உன்னை கால் பண்ண சொன்னான் ஆரியன் சொல்ல, மாமா..நான் கிளம்புகிறேன். அத்தை, மாமாவையும் பார்க்கணும்.

“ஆது, என்னை உன்னோட அத்தை, மாமாவிடம் அறிமுகப்படுத்த மாட்டாயா?” ஆரவ் கேட்க, நாளைக்கு பார்க்கலாம் ஆரவ். சுவேரா சிந்தனையுடன் அவனையும் துருவினியையும் பார்த்தாள்.

உத்தமசீலன் எல்லாரையும் பார்த்து, இப்ப எல்லாரும் ஓய்வெடுங்க. ஆறுமணிக்கு மேல வெளிய போகலாம் என்றார்.

எல்லாரும் செல்ல துருவினி மட்டும் அங்கேயே நின்றாள்.

“துரு, எதுக்கு இங்கேயே நிக்கிற? போ..ஓய்வெடு” ஆரியன் சொல்லவும் அவளறைக்கு சென்று குப்புற விழுந்து அழுதாள்.

ஏன் அத்து? நான் காதல் சொல்லவும் உங்களுக்கு காதல் காணாமல் போச்சா. நீங்க தான் கால் பண்ணலை. நான் செய்தால் எடுக்கலாமே! என்னிடம் பேசவே உங்களுக்கு விருப்பமில்லையா? என்னோட காதலை விட உங்களுடைய காதல் தான் உயர்ந்ததுன்னு நினைச்சேன். ஆனால் நீங்க என்னை யாரோ போல பாக்குறீங்க? என்னால தாங்க முடியல அத்து அழுதாள்.

ஆரவ் ஆத்விக்குடன் அதியா முதலில் இருந்த அறையில் தங்கி இருந்தான். ஆத்விக்கின் அமைதி ஆரவ் மனதில் கேள்வியாய் எழுந்தது.

“ஆது” ஆரவ் அழைக்க, “ம்ம் சொல்லுடா” ஆரவ்வை பார்த்தவாறு படுத்தான் ஆத்விக்.

“உனக்கு உடம்புக்கு ஏதும் செய்யுதா?”

ம்ம்..கொஞ்சம் சோர்வா இருக்குடா..

“சரி, ரெஸ்ட் எடு” என்று ஆரவ் ஆத்விக் வயிற்றில் கையை போட்டு படுத்துக் கொண்டான். ஆரவ் தூங்கி விட்டான். ஆத்விக்கால் தூங்க முடியவில்லை.

சுவேரா அதியா அறையில் பசங்களுடன் விளையாடி விட்டு துருவினி அறைக்கதவை தட்ட, அழுது கொண்டிருந்த துருவினிக்கு “சுவா என்னுடன் தான தங்குவாள்” என்று எண்ணம் வர, வேகமாக எழுந்து முகத்தை கழுவி விட்டு அறைக்கதவை திறந்தாள்.

“வினு, ஷனாவும் தர்சுவும் விடவே மாட்டேங்கிறாங்க” என்று புன்னகையுடன் வந்து படுக்கையில் படுத்து, வா அழைத்தாள்.

எனக்கு தூக்கம் வரலை சுவா. நான் கொஞ்ச நேரம் வெளியே இருக்கிறேன் துருவினி சொல்ல, “என்னாச்சு வினு. உன்னோட முகம் சரியில்லையே!”

என்ன சரியில்லை. நான் நல்லா தான் இருக்கேன். இப்பொழுது தூங்கினால் இரவு தூக்கம் வராது அவள் சொல்ல, சரி எனக்கு களைப்பா இருக்கு. நான் தூங்கிக்கிறேன் கண்ணை மூடி படுத்தாள் சுவேரா.

துருவினி வேகமாக வெளியே வந்தாள். தூங்க முடியாமல் இருந்த ஆத்விக் தலைகவிழ்ந்து வீட்டின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான். வீட்டின் உள்ளே யாரும் வருகிறார்களா? எட்டிப்பார்த்து விட்டு “யாருமில்லை” என்றவுடன் ஆத்விக் முன் வந்தாள் துருவினி.