ஆத்விக் அறைக்கதவை தாழிட்டு அவனை நெருங்கினாள் துருவினி. .
“வினு” எச்சிலை விழுங்கி ஆத்விக் அழைத்தான்.
அவனை நெருங்கிய துருவினி, “மாமா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் ஆத்விக்.
“வினு, நீ நிஜமாக தான் சொல்றீயா?” அவன் கேட்க, அவன் மடியில் அமர்ந்து..ம்ம்..கண் சிமிட்டி தலையை வேகமாக ஆட்டினாள்.
மடியில் அமர்ந்த அவளை தன்னுடன் நெருக்கி, “எப்ப பண்ணிக்கலாம்?” ஆசையுடன் ஆத்விக் கேட்க, “இப்ப பண்ணிக்கலாமா? அவள் கேட்க, எதுவும் இல்லாமல் எப்படி பண்ணிக்கிறது?” அவன் கேட்க, அவனிடமிருந்து எழுந்து, அவனறையில் இருந்த பிளவர் வாஷை எடுத்து அதிலிருந்து பிளாஸ்டிக் பூவுடனான இரு இலையை பிய்த்து எடுத்தாள்.
“வினு, என்ன பண்ற?” எழுந்து அவளருகே வந்தான்.
இலையை அவன் அறையில் வைத்திருந்த பொருட்களை வைத்து இரு பச்சை நிற மோதிரம் செய்து “ட டான்” என்று அவனிடம் புன்னகையுடன் காட்டினாள்.
புருவத்தை உயர்த்தி அவளை மெச்சியவாறு, என்னோட பொண்டாட்டிக்கு என்னவொரு திறமை அவளை அணைக்க வந்தான். அவள் விலகி..மாமா கல்யாணம் பண்ணிக்காமல் இதெல்லாம் செய்யக் கூடாது கொஞ்சலாக துருவினி சொல்ல, அசந்து போனான் ஆத்விக்..
“அத்து, வாங்க” அவள் அவனை சாமிப்படம் முன் நிறுத்தி அவன் கையை பிடித்து, “எனக்கு என்னோட அத்துவை திருமணம் செய்ய சம்மதம்” என்று அவன் விரலில் மோதிரத்தை போட்டு விட்டாள்.
அவளிடமிருந்து அவனும் வாங்கி அவள் விரலை பிடித்து போட்டு, முத்தமிட்டு “லவ் யூ மை ஹார்ட்” என்றான். துருவினி எமோஸ்னலாக அவனை அணைக்க, கண்கலங்க அவளை அணைத்த ஆத்விக் அவளை தூக்கி சுற்றினான். அவள் சிரிக்க, அவன் கண்ணை விருந்தாக்கிக் கொண்டிருந்த அவளது இடையிலிருந்த மச்சத்தில் முத்தம் வைத்தான். அவள் சிரிப்பதை நிறுத்தி அவனை பார்த்தாள்.
அவன் இறக்கி விடாமல் மேலும் முத்தம் கொடுக்க, கண்களை மூடி உணர்வுகளின் பிடியில் சிக்கினாள் துருவினி. அவளை இறக்கி விட்டு..அவளை தன்னை பார்க்குமாறு செய்து அவளது இதழ்களை நெருங்கினான். அவள் அவனையே பார்க்க, அவன் இதழ்களுக்கு இடையே இடைவெளி விட்டு துருவினி கண்ணை பார்த்தான் பதிலுக்காக..
அவளாக அவனுக்கும் முத்தம் கொடுக்க, இருவரும் முத்தமழையில் நனைந்தனர்.
சில நொடிகளுக்கு பின் துருவினி அவனை விட்டு விலகி வெட்கமுடன் நகர்ந்தாள்.
“ஹே ஹார்ட்” அவன் அழைக்க, அப்படியே நின்றாள். அவளது மல்லிகைச்சரம் அவனை அழைக்க, அவளை பின்னிருந்து அணைத்து கூந்தலில் சூடிய மல்லியை முகர்ந்தான்.
“ஹப்பா, என்ன வாசனை?” அவன் சொல்ல, துருவினி நகர்ந்தாள். அவளது கையை பிடித்து நிறுத்தி, “நாம தான் மோதிரம் மாத்திக்கிட்டோம்ல்ல?” அவன் கேட்க, ச்சீ..போ மாமா..
“எங்க போக? என்னோட ஹார்ட் இருக்கும் போது என்னால போக முடியுமா?” அவள் முகத்தை நிமிர்த்தி அவளை ஆழ்ந்து பார்த்தான். அவள் கையால் முகத்தை மூடினாள்.
“வினு” அழைத்து அவளை தூக்கிக் கொண்டு அவன் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்று அவளை படுக்கையில் போட்டு, சன்னல், கதவு அனைத்தையும் மூடினான்.
துருவினி அருகே வந்து படுத்துக் கொண்டு, அவனது விரலால் அவளது தலையிலிருந்து பாதம் வரை வருடினான். அவன் செயலில் அவளது மேனி கூசியது. கண்களை இறுக மூடி இருந்தாள்.
“வினு, போதும். நமக்கு வொர்க் இருக்குல்ல” அவன் சொல்லி புன்னகைக்க, எழுந்து கடிகாரத்தை பார்த்து “போச்சு எல்லாருக்கும் தெரிஞ்சிருமே!” பதறினாள்.
“அதனால என்ன வினு?” நாமே சொல்லிடலாம்.
“அத்து” அவன் முகத்தை ஏறிட்டு, “நம்ம வீட்ல சொல்லாமல் மத்தவங்களிடம் ஏதும் சொல்ல வேண்டாம்” அவள் சொல்ல, அதுவே அவளுக்கு வினையாகப் போவதை அறியாமல் சொன்னாள் அந்த பேதை பெண்.
ஓ.கே புன்னகைத்த ஆத்விக் அவளிடம் கன்னத்தை காட்டினான். அவள் முத்தமிட, “இதை வச்சுக்கோ. நேரமானதை கேட்டால் இந்த பைல்ல இருக்கும் கேஷ் பற்றி பேசியதாக சொல்லு” அவன் முத்தமிட்டு, வினு..ஆடையை சரி செய் என்றான்.
ம்ம்..வெட்கமுடன் அவனறையில் இருக்கும் கண்ணாடி முன் வந்து சரி செய்து அவனுக்கு பறக்கும் முத்தம் கொடுக்க, அவன் பிடித்து முத்தமிட அவள் புன்னகையுடன் திரும்பி கண்ணை மூடி திறந்து நிம்மதியுடன் வெளியே வந்தாள்.
எல்லாரும் அவளை பார்க்க, கையிலிருந்த பைல்லை பார்த்தவாறு அவளிடத்திற்கு சென்று அமர்ந்தாள். நிகிதா அவளையே பார்க்க, “என்ன?” புருவத்தை உயர்த்தினாள்.
நிகிதாவிடம் லேசான புன்னகை விரிய வெட்கத்தை சிரமப்பட்டு மறைத்த துருவினி, புருவம் சுருக்கி அவளை பார்க்க, “இல்லை” என்று நிகிதா வயிற்றில் கை வைத்தாள். துருவினி அவளது வயிற்றையும் அவளையும் பார்த்தாள்.
நம்ம துருவினியை விட லாவண்யா முகம் பிரகாசமாக இருக்க, அவளையே வந்ததிலிருந்து கவனித்த சுவேராவும் நேசனும் துருவினியை பெரிதாக கவனிக்கவில்லை. சாய் துருவினியின் ஒவ்வோர் அசைவையும் கவனித்தான். அபிமன் உள்ளே வந்து ஆத்விக் அறைக்கு சென்றான்.
ஆத்விக் முகம் முழுவதும் புன்னகையுடன் இருந்தான். அபிமனுக்கு துருவினி அவனை நன்றி பார்வை பார்த்ததையும், ஆத்விக் செயலும் நன்றாக புரிந்தது. அவன் புன்னகைத்துக் கொண்டான். மதியம் வரை அவரவர் வேலையை சிரத்தையுடன் பார்த்தனர். ஆபிஸிற்கு சில கிளைண்ட்டுகளும் வந்து சென்று கொண்டிருந்தனர். எல்லாரும் பிஸியாக இருந்தனர்.
மதிய உணவு வேலையில் எல்லாரும் உணவுண்ண சேர்ந்து அமர்ந்தனர்.
என்ன விசயம் லாவா? சுவேரா ஆரம்பித்தாள்.
“விசயமா? என்ன வரா?” லாவண்யா கேட்க, துருவினி புரியாமல் இருவரையும் பார்த்தாள். ஆத்விக்கும் அவர்களுடன் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் துருவினியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
“ஏய் சொல்லப் போறீயா இல்லையா? முகம் அப்படி விகர்சனையா இருக்கு. ஒன்றுமில்லைன்னு சொல்ற? யார் அவன்? உன் அம்மா சொன்னவனை பார்க்க வந்தேல்ல? அவனை உனக்கு பிடிச்சிருச்சா? காதலிக்கிறாயா?” சுவேரா கேட்க, முகம் கடுகடுவென கையை இறுக்கியவாறு அமர்ந்திருந்தான் நேசன்.
இல்லையே!
“மறைக்காதடி” சுவேரா சொல்ல, துருவினி ஓரக்கண்ணால் ஆத்விக்கை பார்த்தாள். அவன் உணவை வாயில் வைப்பது போல முத்தம் கொடுப்பது போல உதட்டை குவித்தான். துருவினி வேகமாக முகத்தை திருப்பினாள். அபிமனும் சாய்யும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அபிமன் என்ன தான் மனைவி மீது கோபமாக இருந்தாலும் அவளுக்கு பிடித்த உணவை வாங்கி வந்திருந்தான். நிகிதா ஏக்கமுடன் அவனை பார்த்தாள். அவன் அவளை கண்டுகொள்ளாமல் ஆத்விக்கை கவனித்தான்.
“ம்ம், எனக்கு என்னை பார்க்க வந்தவனை பிடிக்கலை” என்று விழியானின் முகம் அவள் முன் வந்தது. ஆத்விக்கை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்த துருவினி அதிர்ந்து, “லாவா..நீ?”
ம்ம்..கண்கலங்கினாள் லாவண்யா.
பார்க்க எப்படி இருப்பான்? சுவேரா கேட்க, அழகா இருப்பான்..
“அத்து பார்த்து” வேகமாக எழுந்து துருவினி அவன் தலையில் தட்டி தண்ணீரை கொடுக்க, எல்லாரும் அவரை பார்க்க, சுவேரா கண்ணை சுருக்கி அவளை பார்த்தாள்.
சுவா, அத்துவுக்கு புரை ஏறிடுச்சுல்ல..அதான்..
ம்ம்..என்று லாவண்யா பக்கம் திரும்பி, “நீ சொல்லு எப்படி பார்த்த? நடந்த எல்லாமே சொல்லணும்?” சுவேரா கேட்க, அவளும் தாரா பங்சனில் வைத்து இருவரும் மோதிக் கொண்டதிலிருந்து அவன் காப்பாற்றியது..அந்த பூனை வரை கூறினாள். அவன் தான் முகத்தை மறைத்தவன் என்று சொல்லவில்லை.
நீ சொல்றதை வைத்து பார்த்தால் அவனுக்கும் உன்னை பிடிக்கும் போல..
இல்லை. அவன் வேற பொண்ணோட டான்ஸ் செய்தான்.
“அச்சோ, என்னோட செல்லத்துக்கு வருத்தத்தை பாரு” என்ற சுவேரா, அது சரி..அவன் கிஸ் கொடுத்தான்னு சொன்னீயே, “லிப்லாக்கா?” கேட்க,
“அய்ய, அது கூட இல்லையா?” சுவேரா கேட்க, “ஊஹூம்” தலையசைத்தாள்.
“எங்க கொடுத்தான்?”
அதுவந்து ஆத்விக்கை பார்க்க, அவன் அவர்களின் முத்தஉலகில் சென்று விட்டான். அவன் யோசனையில் இருப்பது போல முகத்தை வைத்திருந்தான். ஆத்விக் காலை துருவினி எத்தினாள். அவன் எல்லாரையும் பார்க்க, “என்னாச்சு சார்?” ஏதும் தெரியாதது போல சாய் கேட்டான்.
ஏய், நீ சொல்லு? கன்னத்தில் கை வைத்து சுவேரா கேட்க, சுவா…இதெல்லாம் பேசக் கூடாது.
நீ சும்மா இரு. அவன் நம்ம லாவாவை ஏமாத்திடக் கூடாதுல்ல அதான். அவள் அவனை அடுத்து பார்த்தால் எப்படி அவனை சோதனை நடத்தலாம்ன்னு சொல்லித் தரணும்ல்ல? அதான் கேட்கிறேன் அவள் சொல்ல, துருவினியும் ஆர்வமுடன், “சொல்லு லாவா” என்றாள்.
லாவண்யா முகம் சிவக்க, துருவினி அருகே வந்த லாவண்யா..அவளது முகத்தை நிமிர்த்தி விழியான் அவளுக்கு கொடுத்த முத்தத்தை துருவினி நெற்றி, கன்னம் என்று அவள் கை வைத்து கூற, டிபன் பாக்ஸ் விழுந்த சத்தத்தில் அனைவரும் பயந்து விட்டனர்.
நேசன் பொறுமை பறந்து உணவை தூக்கி எறிந்து கொட்டி விட்டிருந்தான்.
“நேசா” சாய் அழைக்க, அவன் எழுந்து லாவண்யாவை இழுத்து அவளை முத்தமிட்டான்.
“ஏய்” சுவேரா சத்தமிட, துருவினி தலையில் கையை வைத்தாள். சாய் அவனை இழுத்து ஓங்கி அறைந்தான். லாவண்யா அழுது கொண்டே வெளியே ஓடினாள்.
“ஏய், நில்லு லாவா” துருவினி அவள் பின் ஓட, சுவேரா நேசனை பார்த்து, “உனக்கு அவளை பிடிச்சிருந்தா சொல்லி இருக்கலாம்ல்ல. அதுக்கு இப்படியா பண்ணுவ? அவ வேறொருவனை லவ் பண்றது போல தெரியுது?” சினமாக கேட்டாள்.
“நேசன் அவன் காதலை முன்னே சொல்லிட்டான். லாவாவுக்கு தான் விருப்பமில்லை” நிகிதா சொல்ல, “அவளுக்கு விருப்பம் வருவது போல இவன் நடந்துக்கலை” சாய் சினமுடன் அவனை முறைத்தான்.
ஏன்? என்ன செய்தான்?
அவன் அம்மாவுக்கு நம்ம லாவாவை பிடிக்கலை. அவங்க அண்ணன் பொண்ணுக்கு தான் இவனை கல்யாணம் செய்து கொடுக்கணும்ன்னு ஆசை. அதனால மத்த எந்த பொண்ணும் இவனருகே வந்தால் கூட பிடிக்காது.
உனக்கு தெரியாமல் உன்னோட அம்மா நம்ம லாவாவை பார்த்து பேசி இருக்காங்க. அதுவும்.. ஆவேசமாக பேசிய சாய் நிறுத்தினான்.
“என்ன சொல்ற?” நேசன் அவன் சட்டையை பிடித்தான்.
கையை எடுடா. அவளோட பெற்றோட அவளையும் சம்மந்தபடுத்தி பேசியதில்லாமல் அவளோட மனச குத்தி கிழிச்சிருக்காங்க. ஆனாலும் அவள் உன்னிடம் நல்லா பேசுறா. எந்த பொண்ணாக இருந்தாலும் உன்னை பக்கம் கூட சேர்க்க மாட்டா..
“என்ன சொன்னாங்க?” சினமுடன் கேட்டான்.
“ஏன்? கேட்டு கிழிக்க போறீயா?” துருவினி சினமுடன் கேட்டுக் கொண்டே வந்தாள்.
“நில்லு, எங்க போகப் போற?” துருவினி கேட்க, நான் அவளிடம் பேசணும்..
தேவையில்லை. அவளுக்கும் உன்னை பிடித்து தான் இருந்தது. ஆனால் உன் அம்மா பேச்சில் உன்னருகே வர கூட ரொம்ப யோசிக்கிறா. அதான் அவள் உன்னிடம் பேச்சை குறைச்சிட்டா..
நான் பேசுகிறேன்.
நான் இன்னும் முடிக்கலை நேசா. அவளுக்கு உன்னை பிடித்தது உன்னோட ஜாலியான பேச்சு தான். உன்னோட அம்மா அன்றொரு நாள் உன்னை பார்க்க நம்ம ஆபிஸிற்கு வந்து சென்ற பின் அவளை தனியே சந்தித்து இருக்காங்க.
உன்னோட பார்வையிலே உனக்கு லாவாவை பிடிச்சிருக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அவளை கேட்கக் கூடாத கேள்வி கேட்டு ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.
என்ன பேசுனாங்க? யாராவது சொல்லுங்கடா..
“உனக்கு தைரியம் இருந்தால் அவங்களிடம் கேளு” சாய் சொல்ல, அமைதியானான் நேசன்.
“பெரிய இவனாட்டம் கேட்டுட்டு இருந்த? உன்னோட அம்மாவிடம் பேச பயமா இருக்கா?” துருவினி பேச்சு டோன் மாறியது. ஆத்விக் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னால பேச முடியாது துரு. அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டு அம்மா என்னை வளர்த்தாங்க. என்னால அம்மாவை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது..
துருவினி சினமுடன் அவனை அடித்து, “அப்புறம் எதுக்கு அவளிடம் காதலை சொன்ன? கிஸ் பண்ண? அவளுக்கு யாரோ ஒருவனை பிடிச்சிருக்கு. அவளை அப்படியே விட்ரு” கண்ணீர் வர கத்தினாள்.
நிகிதா எழுந்து துருவினியின் கையை பிடிக்க, துருவினி அவளை அணைத்துக் கொண்டாள்.
இல்ல வினு, எனக்கு லாவாவை தான் பிடிச்சிருக்கு அவன் சொல்ல, சுவேரா அவனை ஓங்கி அறைந்தாள்.
“உன்னோட அம்மாவிடம் எதிர்த்து பேச கூட முடியாதுன்னு சொல்ற? காதலை சொல்லி உன்னால புரிய வைக்க முடியுமா? அதை கூட செஞ்சிடுறன்னு வச்சுக்கலாம். எதிர்காலத்தில் உன் வீட்டில் உன்னுடன் இருப்பாள். அவளுக்காக எதுவும் நீ தான் செய்யணும். உன்னால முடியுமா? உன்னோட அம்மா அவளை கஷ்டப்படுத்தினால் நீ கேட்க கூட முடியாது. இனி அவள் பக்கம் நீ வரக் கூடாது” சுவேரா உறுதியாக சொன்னாள்.
நேசன் சொன்னதையே மீண்டும் சொல்ல, உள்ளே வந்த லாவண்யா அவள் இடத்தில் சென்று அமர்ந்தாள்.
நேசன் அவளருகே சென்று, அவள் கையை பிடித்து, “அம்மா உன்னிடம் என்ன சொன்னாங்க லாவா? அதனால் தான் நீ என்னிடமிருந்து விலகி இருக்கிறியா?” அவன் அவள் கையை முத்தமிட சென்றான்.
அவள் படாரென அவன் கையை உதறி அழுது கொண்டே, என்னோட அம்மா, அப்பா ரொம்ப சண்டை போடுவாங்க. ஆனால் நான் நல்லவழியில் தான் பிறந்தேன். என்னோட பிறப்பு தவறல்ல. நான் வாழ்வது முறையான வாழ்க்கை தான். நான் யாரையும் உரசிட்டு இருக்க மாட்டேன் அழுதவள் கதறலுடன் மேலும் மேலும் பேசி, நான் உன்னுடன் படுக்க பழகலை என்று முகத்தை மூடி கதறி அழுதாள். நேசன் துடித்து அவளிடமிருந்து கண்ணீருடன் விலகினான்.
“போதுமா?” துருவினி சத்தம் போட்டு லாவண்யாவை அணைக்க, அவள் ஆறுதலாக வெகுநேரம் அழுது கொண்டே அமர்ந்திருந்தான். நேசன் கீழே உணர்வற்று அமர்ந்திருந்தான்.
நேகன் தோளில் ஆத்விக் கையை வைக்க, அவன் கண்ணீருடன் அவனை பார்த்தான்.
விட்ரு. அதிகமாக எதையும் போக விடக் கூடாது. ஏற்கனவே போயிருச்சு ஆத்விக் சொல்ல, எழுந்து அவனை அணைத்து அழுதான் நேசன்.
“சார், நேரமாகுது. நம்ம கிளைண்ட்ஸ் வருவாங்க” அபிமன் சொல்ல, நேசன் விலகினான். லாவண்யா கண்ணை துடைத்து விட்டு, “சாரி துரு. உன்னோட பிறந்தநாள் அன்று இப்படி அழ வச்சுட்டேன். நான் ரொம்ப மோசம்ல்ல?”
“மோசமா?” சுவேரா அவளிடம் வந்து, நான் மட்டும் பையனாக இருந்தேன். வேற எந்த பொண்ணும் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க. எல்லாரையும் எதிர்த்து உன் கை பிடிப்பேன் அவள் கேலியுடன் சொல்ல, லேசாக புன்னகைத்த லாவண்யா நேசனை பார்த்தாள்.
நேசா, எனக்கு உன் மேல் எந்த உணர்வும் இல்லை. நீ உன்னோட அம்மா விருப்பப்படி உன்னோட அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ. துரு..நாம வேலையை பார்க்கலாம்.
சாப்பிடலாம்ல்ல?
பசிக்கலை வேலையை தொடர்ந்தாள் லாவண்யா. அவளை பார்த்து விட்டு அனைவரும் அவரவர் வேலையை தொடர்ந்தனர். நேசனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் வேலையை சாய் பார்த்துக் கொண்டான்.
மாலை நான்கு மணியளவில் ஆத்விக் எல்லார் முன்னும் வெளியே வந்து, உன்னோட கேஷ் விவரத்தை எடுத்துட்டு வா துருவினியை அழைத்தாள்.
அவள் எடுத்துக் கொண்டு, சார் மெயிலிலும் இருக்கு. அதை உங்களுக்கு அனுப்பீட்டு வாரேன் என்று சொன்னது போல் மெயிலை அனுப்பி விட்டு அவனை பார்க்க அவள் ஆத்விக் அறைக்குள் சென்றாள். நேகனும் சரி லாவண்யாவும் சரி, எதையும் சரியாக செய்ய முடியாமல் திணறினார்கள்.
சாய்யிடமிருந்து அவன் வேலைக்கான பைல்லை வாங்கி வேலையை தொடங்கியும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.
துருவினி சென்றதும் அபிமன் வெளியே வந்தான்.
லாவண்யா அவனை பார்த்துக் கொண்டே, ஆத்விக்கை அழைத்து உள்ளே சென்றாள்.
போன வேகத்தில் வெளியே வந்தாள். அவன் சுவேராவை அலைபேசியில் அழைத்து ஏதோ சொல்லி, “சுவா அலைபேசியை கையிலே வைத்திரு” என்றான். லாவண்யாவும் சுவேராவும் வெளியே சென்றனர்.
ஆத்விக் நேசனை கவனித்தாலும் ஏதும் சொல்லாமல் இருந்தான். சாய்யும் நிகிதாவும் வேலையில் கவனமாக இருக்க, அபிமன் பழம் வாங்கி வந்து நிகிதா அருகே அமர்ந்தான்.
“என்ன செய்ற?” என்று அவளது கணினியை பார்த்துக் கொண்டே பழங்களை நறுக்கினான். அவள் அவனையே பார்த்தாள்.
நறுக்கிய பழத்தை அவள் கையில் கொடுத்து, “போ சாப்பிட்டு வா. சார் சொன்னார்” என்று சொல்ல அவள் முகம் மாறியது. எதுவும் பேசாமல் அவள் அவன் கொடுத்ததை வாங்கி நகர்ந்தான். அவள் விட்ட வேலையை ஆர்டராக அடுக்கிக் கொண்டிருந்தான் அபிமன்.
“அபி, அவளை மன்னிக்கலாம்ல்ல?” சாய் கேட்க, உன்னோட வேலையை மட்டும் பாரு..
எனக்கு அது தெரியும். அவள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவள ரொம்ப கஷ்டப்படுத்திறாத. பாதிப்பு அவளுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் உனக்கும் தான் என்று சொல்லி சாய் அவன் வேலையை தொடர்ந்தான்.
அபிமன் சிந்தித்தாலும் தலையை உலுக்கி வேலையை தொடர்ந்தான்.
எல்லாரும் கிளம்பும் நேரம் வரவும் ஆத்விக்கும் துருவினியும் வெளியே வந்தனர். இப்பொழுது தான் அனைவரும் அவர்கள் இருவர் கையிலும் இருந்த இலை மோதிரத்தை பார்த்தனர். சுவேராவிற்கு பயங்கர சந்தோசம். லாவண்யாவை பார்த்து அமைதியாகி ஆத்விக்கை பார்த்தாள்.
எல்லாரும் கிளம்புங்க. நாளை சாய் நீ தயாராக வரணும்..
ஓ.கே சார். எல்லாம் தயார். நேராக கோர்ட்டிற்கு கிளைண்ட்டோட வந்திருவா சார்?
நீ முன்னே போ. நான் ஆபிஸ் வந்துட்டு வருவேன் என்று நேசனை பார்த்து, உன்னோட பிரச்சனையை இங்க இழுத்துட்டு வரக் கூடாது. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.
“சாரி சார்” அவன் சொல்ல, கிளம்புங்க.
“சுவா, நீ லாவண்யாவோட போறீயா? உனக்கு பிரச்சனை இல்லைல்ல. நாங்க கேஷ் விசயமாக ஒருவரை சந்திக்கணும். நான் பார்த்துட்டு வினுவை வீட்ல விட்டு வாரேன்” என்று சொல்ல, அவனை பார்த்து புன்னகைத்து “ஓ.கே. பை பை அண்ணா”. வா லாவா என்று அவளை அழைத்துக் கொண்டு சுவேரா கிளம்பினாள்.
சுவா..பத்திரம் சொல்லி தான் அனுப்பினான் ஆத்விக். அவர்களை அவர்களுக்கு தெரியாமலே பின் தொடர்ந்தான் விழியான். லாவண்யா ஹாட்டலுக்கு நேராக வந்தனர்.
“ஹே, நான் வரலாமா?” சுவேரா கேட்க, ம்ம்..வா என்று காப்பாளரிடம் சுவேராவை அறிமுகப்படுத்தி விட்டு அவளறைக்கு அழைத்து சென்றாள்.
அவளும் ஒரு பொண்ணும் தங்கி இருந்தனர். அவள் கொஞ்சம் சிடுசிடுவென பேசினாள். அவள் பேச்சு சுவேராவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
லாவா, நீ எங்களோட வீட்ல வந்து தங்கிறீயா? சுவேரா கேட்டாள்.
அது சரியா வராது சுவா. எனக்கு இங்க தான் சரி..
அதுக்கில்லை லாவா..
இருக்கட்டும் சுவா. எனக்கு பழகிடுச்சு என்று லாவண்யா, சுவா இங்கேயே இரு. உனக்கு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வாரேன்..
“எனக்கு எதுவும் வேண்டாம்” அந்த பொண்ணை பார்த்து, நாங்க தனியா பேசணும்..
அதுக்கு நான் என்ன பண்றது? வெளியவா போக முடியும்? திமிறாக அவள் கேட்க, சுவா..நாம வெளியே சென்று பேசலாம்.
நாம எதுக்கு போகணும்? நீயும் பே பண்றேல்ல?
அப்படின்னா பேச வேண்டியது தான! மீண்டும் அவள் பேச, ஹலோ உன்னிடம் நான் பேசலை சுவேரா கடுப்பாக கூறினாள்.
அய்யோ சுவா, வா நாம வெளிய போய் பேசலாம். வெளியே அழைத்து வந்தாள். வெளியேயிருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். சுவேரா அவளையே பார்த்தாள்.
“என்ன சுவா?”
“இல்ல, நீ இவ்வளவு பொறுமையா இருப்பாயா?” அவள் கேட்க, இருவரும் பேசுவதை தூரமிருந்து பார்த்தான் விழியான்.
இருந்து தான ஆகணும். அது என் கட்டாயம்.
“கட்டாயமா?”
ஆமா, எனக்கு என்று குடும்பம் இருந்தால் யாரும் என்னை ஏதும் பேச மாட்டாங்கல்ல? லாவண்யா அழுதாள். அவள் தோளில் கையை போட்டு, எனக்கும் தான் இல்லை.
ஆத்விக் அண்ணா என்னோட அண்ணாவோட ப்ரெண்டு தான். நானும் உன்னை போல தான் அவரிடமும் விலகி இருந்தேன். ஆரியன் மாமா சொன்னதை கேட்டு தான் ஆத்விக் அண்ணாவை என் அண்ணாவாக மாற்றிக் கொண்டேன்.
உறவை நீ ஏற்படுத்திக்கணும். தானாக எதுவும் கிடைக்காது லாவா அறிவுறுத்தினாள் சுவேரா.
சுவா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
எதுக்கு?
நேசனோட அம்மா..
இனி உனக்கு நான் இருக்கேன் பயப்படாத..
புன்னகையுடன் லாவண்யா, துருவும் இதையே தான் சொல்வாள்.
ஆமா, உங்களுக்கு எத்தனை வருட பழக்கம்?
நான் துரு, அபி, நிக்கி எல்லாரும் கல்லூரியில் படித்தவர்கள். நண்பர்களும் கூட. நான் தான் அதிகம் யாருடனும் ஒட்ட மாட்டேன்.
அப்ப நேசன்..
ஆபிஸ்ல்ல இருந்து தான் பழக்கம்..
ஓ..சாயுமா?
ம்ம்..உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா? சாய்க்கு ஒரு பொண்ணை ரொம்ப பிடிக்கும். அவன் அவளை தூரத்திலிருந்து சைட் அடிப்பான்.
அடப்பாவி, அம்மாஞ்சி மாதிரி இருக்கான்.
அது அவனோட நேச்சர். அவனுக்கு யாருமில்லை. ஆனால் அந்த பொண்ணுக்கு பெரிய குடும்பமே இருக்கு.
“அப்படியா? யாரு அந்த பொண்ணு?”
அந்த பொண்ணு டாக்டர்.
“டாக்டரா? வாவ் சூப்பர். கண்டினியூ” அவள் கேட்க, ஆர்வமுடன் காலை தூக்கி இருக்கையில் சம்மணமிட்டு லாவண்யா சுவேராவை பார்த்து அமர்ந்து, அந்த பொண்ணு அவனோட முதல் கேஷ்.
“வாட்?” சுவேரா அவளுக்கு நேராக அவளை போல் அமர்ந்தாள். இருவரின் செய்கையையும் பார்த்து தூரமிருந்து விழியான் புன்னகைத்தான்.
அவன் காதல் கதையை சொல்ல, அவனும் ஒன் சைடு லவ்வா. இப்ப வரை பார்க்கிறானா?
கண்ணை விரித்து ஆமா சுவா, அவனுக்கு அவளை அவ்வளவு பிடிக்கும். எனக்கு என்னமோ இவன் பேசினால் சரியாக வரும்ன்னு தோணுது. அந்த பொண்ணு ஓவர் கெத்துல்லாம் காட்ட மாட்டா.
ஓ..அப்படியா? அழகா இருப்பாளா? எழுந்த லாவண்யா இருக்கையில் நின்று “சுவா..என்னை பாரேன். என்னை போல் அழகா க்யூட்டா இருப்பா” அவள் சொல்ல, “ஓ..உன்னை மாதிரி க்யூட்டா?” வாய் விட்டு சுவேரா சிரித்தாள்.
கீழே குதித்து, ஷ்..அவள் வாயை மூடி சத்தம் போடாத. மேம் திட்டுவாங்க..
“எனக்கு உன்னோட நல்லா டைம் பாஸ் ஆகுது லாவா. என்னோட வந்துறேன். நாம ஜாலியாக இருக்கலாம்” சுவேரா மீண்டும் அழைக்க, ப்ளீஸ் சுவா. நான் வரலை. நீ கிளம்பலையா?
ஓய், என்ன கிளப்பி விடுற?
அதுக்கில்லை. நேரமாகுது. இருட்டாகுது பாரு. ஏற்கனவே என்று அவள் சொல்ல, “சுவேரா அவளை அணைத்து எனக்காக உன்னோட உயிரை கூட பொருட்படுத்தாமல் முன்னாடி வருவன்னு நான் நினைக்கலை” கண்கலங்கினாள்.
அவளது தோளில் தட்டி அவளை நகர்த்தி, “அய்யோ, இது பத்தொன்பதாவது முறை” என்று இடுப்பில் கை வைத்து அவளை தீவிரமாக முறைத்தாள்.
“நேரமாகுது. நீ கிளம்பு. எனக்கு தான் உனக்கு ஏதும் ஆகிடுமோன்னு மறுபடியும் பயம் வந்திரும்” அவளை கார் அருகே தள்ளிக் கொண்டு வந்தாள் லாவண்யா.
லாவா, நேசனை எண்ணியோ அவன் அம்மா பேசியதை எண்ணியோ நீ அழக் கூடாது..
ம்ம்..லாவண்யா சொல்ல, அவளை நிமிர்த்தி, “நான் வேணும்ன்னா இன்று உன்னோட தங்கிக்கவா?” கேட்டாள்.
என்னது? உங்க இருவர் சண்டையையும் என்னால தீர்க்க முடியாது. மேம் என்னை வெளிய அனுப்பீடுவாங்க.
ஏய், விரலை சுவேரா நீட்ட, அவளது விரலை மடித்து, “பத்திரமா போயிட்டு கால் பண்ணு. சாய்யை வரச் சொல்லவா?” அவள் கேட்க, போய்ப்பேன் என்றாள் சுவேரா.
இல்ல சுவா, எனக்கு மனசே சரியில்லை. நீ இரு. அவனை வரச் சொல்றேன். அவன் ஹாஸ்ட்டல் பக்கம் தான் வந்துருவான் அலைபேசியில் அவனை அழைத்து வரச் சொன்னாள்.
சாய் பைக்கில் வந்தான்.
கார் இருக்குடா.
கார் இங்கேயே இருக்கட்டும். நான் ஆத்விக் சாரிடம் பேசிட்டு கொண்டு வாரேன்.
“பாரு, உன்னையும் தொந்தரவு செய்திட்டு” சுவேரா சொல்ல, “இதுல்ல என்ன தொந்தரவு? யாருமில்லாமல் இருக்கும் எங்களுக்கு பேச ஆள் கிடைத்தாலே சந்தோசம் தான்” அவன் உணர்வுப்பூர்வமாக பேசினான்.
சுவேரா லாவண்யாவை பார்க்க, வாயில் கையை வைத்து, “கேட்காத” என்று சைகை செய்தாள்.
“ஆமா..ஆமா..நாங்க பேசுறதை விட டாக்டர் மேம் பேசினால் தான உங்களுக்கு நல்லா இருக்கும்” சுவேரா சொல்ல, சாய் திகைத்து அவளை பார்க்க, அவள் லாவண்யாவை பார்த்தாள். லாவண்யா தலையில் இரு கையையும் வைத்து அமர்ந்தாள்.
“லாவா” அவன் சினமுடன் அழைத்தாள்.
“இல்லடா” அவள் நகர, “ஏய் நில்லு” சாய் அவளை விரட்ட, இருவரும் சுவேராவை சுற்றி ஓடினர்.
“ஓ, இவனோட ஓடி பிடிச்சு விளையாட தான் வெளிய வந்தியா? இந்த விளையாட்டு மட்டும் தானா?” லாவண்யா அறைப்பொண்ணு கேட்க, “ஏய் என்ன பேசுற?” கையை ஓங்கிக் கொண்டு சுவேரா அவளிடம் செல்ல, “சுவா வேண்டாம்” லாவண்யா அவளை இழுத்தாள்.
லாவா, என்ன பேச்சு பேசுறா?
சாய்..லாவண்யா அழைக்க, சுவா..நீ வா. இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட பேசுறது வேஸ்ட்.
“இவ என்ன மைசூர் மகாராணியா? பொறாமைப்பட. இவளே அநாதை. பெற்றோர் இருந்தும் அநாதை அவள்” அந்த பொண்ணு சொல்ல, அழுது கொண்டே லாவண்யா ஹாஸ்ட்டலுக்குள் ஓடினாள்.
“லாவா” சாய் அழைக்க, சுவேராவும் ஹாசினியும் கட்டிக் கொண்டு உருண்டனர்.
விடுதி காப்பாளர் மேடம் லாவண்யா அழுது கொண்டே செல்வதை பார்த்து, வெளியே வந்து பார்த்து ஆட்களை வைத்து இருவரையும் பிரித்து விட்டு செல்ல, “சாரி மேம்” என்று சாய் சுவேராவை இழுக்க, “மேம் லாவாவை பார்க்கலாமா?” சுவேரா கேட்டாள்.
“இல்லம்மா முடியாது” அவர் கண்டிப்புடனும் அவளை முறைத்து சொல்லவும், “இருக்கட்டும். இது போல் அவள் அழுது பழக்கம் தான். சரியாகிடுவா” சாய் சொல்ல, அவனை தள்ளி விட்டு எவ்வளவு சாதாரணமா சொல்ற? சினமுடன் கத்தினாள்.
ஆமா, நான் தப்பா ஏதும் சொல்லலையே! எப்போதும் துரு தான் லாவாவை விட்டு செல்வாள். அபி மேரேஜூக்கும் அப்புறம் அவள் வரவில்லை. அப்பொழுதெல்லாம் கஷ்டமாக இருந்தால் லாவா அழ தான் செய்வாள். இது ஒன்று எங்களை போலுள்ளவர்களுக்கு புதிதில்லையே!
“சாய்” அவளுக்கு பெற்றோர் இருக்காங்க.
“இருந்து என்ன பயன்? சொல்லு? அவங்க பொண்ணு தான இவள். இவள் அழுவது சிரிப்பது வருத்தம், ஏன் அவள் காதல் கூட தெரியாதே!” அவன் கத்தினான். “காதலா?” விழியான் அதிர்ந்து பார்த்தான்.
நேசனை சொல்லாதடா..
அவனை நான் சொல்லவில்லை. லாவாவை சில வருடங்கள் தான் எனக்கு தெரியும். ஆனால் அவள் மத்தவங்க மாதிரி இல்லை. என்னால் எளிதாக அவளை புரிந்து கொள்ள முடியும்..
“என்ன சொல்ற?”
அவள் காதலிப்பது யாரை என்று அவளுக்கே தெரியலைன்னு சொன்னால்ல. ஆனால் அவளோட இப்பொழுதைய காதல் உண்மை. அவனை பற்றி நாம சீக்கிரம் தெரிஞ்சுக்கிட்டா அவள் மனதை மொத்தமாக மாத்திடலாம்.
“மொத்தமாகவா?”
“ஆமா சுவா” நகர்ந்து விழியான் இருக்குமிடம் வந்து இருக்கையில் அமர்ந்தான். அவனும் சாய் பேசுவதை கேட்டான்.
அவளோட அம்மா, அப்பாவை விட பெரிய பிரச்சனை. அவள் தான்.
புரியலை.
அவளோட எண்ணம்..
எண்ணமா?
ம்ம்..
அவளோட பெற்றோர் சண்டையிட்டதை பார்த்து பார்த்து அவள் மனம் யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
யாரையுமா?
ம்ம்..நம்மையும் தான். அவள் நம்மை முழுதாக நம்பமாட்டாள். ஆனால் ரொம்பவே அன்பு அதிகம். எனக்கு யாருமில்லை என்ற உணர்வு கூட அவளால் தான் போனது. நாங்க சந்திக்கும் போது அவள் என்னை அண்ணன்னு தான் அழைப்பாள். நான் தான் பெயர் சொல்லி அழைக்க பழக்கினேன்.
ஏன்டா?
ம்ம்..அவள் என்னை உரிமையாக அழைக்கும் போதெல்லாம். அடிக்கடி என்னிடம் “என்னோட சண்டை போட மாட்டேல்ல. என்னோட எப்போதும் இருப்பேல்லன்னு” கேட்பா. முதல்ல எனக்கு புரியல. அவள் பெற்றோர் பற்றி அறிந்து தான் அவள் கேட்டது புரிந்தது.
அவளோட பெற்றோர் அவரவர் சுயநலத்திற்காக அவளை கவனிக்காமல் விட்டுட்டாங்க. அவள் வாழ்க்கை தனிமைல்ல தான் கழிந்திருக்கு. அவள் முதலாவதாக நம்பி பழகியது துருவை தான். பின் தான் மற்றவர்கள்.
உண்மையாகவே அவளுக்கு நேசனை பிடித்து இருந்தது. அவனது வளவள பேச்சு அவள் தனிமை குறைந்தது போல உணர்ந்தாள். அவனிடமும் நன்றாக பேசினாள். அப்பொழுது என்னிடம், மனோகர் சாரிடம் கூட பேச மாட்டாள்.
பின் தான்..அதுவும் நேசனுடன் பழகி அவனை போல பேச பழகினாள். இது துருவுக்கும் தெரியும். என்னை அண்ணான்னு அழைத்து பின் பிரிய நேரிட்டால் கஷ்டப்படுவால் என்று தான் வேண்டாம்ன்னு சொன்னேன்.
ஆனால் நேசன் மீதுள்ள நேசத்தால் இப்படி அவளுக்கு அவப்பெயரும் கஷ்டமும் ஏற்படும்ன்னு நான் நினைக்கலை. ஆனால் அவளுக்கு நேசனை பிடிக்குமே தவிர காதலில்லை.
அவள் இன்று சொன்னவன் நேசன் போல இல்லை. சுவா அவள் போன பங்சனுக்கு தான நீயும் போயிருப்ப? கண்டிப்பாக கேமிரா ஏதாவது இருக்கும். அவன் யாருன்னு பார்த்து சொல்லேன். அவனிடம் பேசலாம்.
“அவனிடமா? நாம என்ன பேசுறது?”
ஆக்சுவலி சுவா, நேசன் அம்மா நம்ம லாவாவை காயப்படுத்திய போது என்னால் பொறுக்க முடியவில்லை. அவரிடம் சென்று பேசினேன். ஆனால் அவர் அவளுக்கு வேறொருவனுடன் திருமணமானால் கண்டபடி பேச மாட்டேன்னு சொன்னாங்க. அதனால அவனை தெரிஞ்சிட்டு வா. அவன் நல்லவனாக இருந்தால் நாம பேசினால் புரிஞ்சுப்பான்.
அதை கண்டிப்பாக சொல்ல முடியாது. ஏன்னா, உனக்கு பிரச்சனைன்னு உன்னை காப்பாற்ற அவள் உயிரையே கொடுக்க வரும் போதும் அவன் அங்கே தான் இருந்திருப்பான். காதல் இருந்தால் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? கேட்டான் சாய்.
ஆமால்ல, அதை நான் யோசிக்காமல் விட்டுட்டேன். சரி..நான் கண்டிப்பாக நாளை எடுக்கிறேன். அவனை கண்டறிந்து நாம பேசலாம் என்றாள்.
கண்டிப்பா நீ என்னவள். இனி உனக்கு நான் இருப்பேன். என் பிரச்சனை முடியட்டும். அதன் பின் உன் முன் நானே வந்துருவேன். “திம்ஸ் வெயிட் பண்ணுடி” மகிழ்வுடன் அவனுக்குள் சொல்லிக் கொண்டான்.
அவர்கள் பார்ப்பதற்கும் கேமிராவை எடுத்திறணும் என்று அவன் எண்ணிக் கொண்டே இருவரையும் பார்த்தான். இருவரும் கிளம்ப, அவன் அவர்களை பின் தொடந்தான்.
என்னத்த? இந்த காதல் இருக்கே காதல்.. எல்லாரையும் பாடாய் படுத்தும்ல்ல.. என்ன ப்ரெண்ட்ஸ்..”யார்? என்ன பாடு படுறாங்க பார்க்கலாமா?”