வல்லவன் 25

பாஸ், அவன் சந்தோசமா இருக்கான் இருட்டடைந்த அறையில் இருந்த ஒருவனிடம் அடியாள் ஒருவன் வந்து சொன்னான்.

எப்படிடா? அவன் இருக்கக் கூடாது. நாளைக்கு அந்த தாரா நிச்சயம் முடியவுமே அவனை போடுங்க..அவன் உயிரோட இருக்கவே கூடாது சீற்றமுடன் கத்தினான் அவன்.

பாஸ், முக்கிய ஆட்கள், நீதிபதி, போலீஸ், வக்கீல், பிசினஸ் ஆட்கள் பெரிய ஆட்களெல்லாம் வருவாங்க. அந்த இடத்தில் எப்படி? அவன் சிந்தனையுடன் தாடையை தேய்த்தான்.

எவன் இருந்தால் என்ன? எனக்கு தெரியாது…அவனை போடணும்டா கத்தினான்.

எதிரே இருந்தவனை பார்த்த அந்த பாஸ், தேவாவை வரச் சொல்லு. இப்பவே என்று சொல்ல, அவன் சென்றான்.

தேவா..அவனை நாளையே முடிக்கணும்.

சார், அவனோட இப்ப அவன் மாமா ஆரியன் இருக்கான் சார்..

எவனாக இருந்தால் என்ன?

சார், அந்த ஆரியன் சாதாரண ஆள் இல்லை..

அதையும் பார்த்திறலாம்..அந்த ஆத்விக்கை போடாமல் வந்த உன்னோட உயிர் உடம்புல இருக்காது தேவாவை மிரட்டினான் அவன்..

“என்ன நடந்தாலும் அந்த ஆத்விக் தலை உங்க காலடியில் கிடக்கும் சார்” தேவா வெளியேறினான்.

ஹா..ஹா..ஹா..ஆத்விக்..நீ இன்று சந்தோசமா இருந்துக்கோ. நாளை உனக்கு சாவு நிச்சயம் அவ்வறையே அதிரும் வண்ணம் கத்தினான்.

மறுநாள் ஞாயிற்றுகிழமை. அனைவருக்கும் விடுமுறை. அன்று மாலை அனைவரும் கூடினர் தாராவின் நிச்சய விழாவில்.

ஆத்விக்கும் சுவேராவும் அவர்களுக்கு உதவியாக மதியமே வந்திருப்பர். சுவேரா தான் தன் தோழி விழாவிற்கான ஏற்பாட்டில் தாராவுடனே அவளுக்கு உதவியாக எல்லாம் செய்திருப்பாள்.

கதிரவன் மறைந்து நிலவொளியை கொண்டு வர, அந்த இரவின் கருமையில் வண்ண விளக்குகளும் அலங்கார பொருட்களும் கண்ணை கவரும் வண்ணமும், பலவிதமான உணவு வகைகளும் பஃபே முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன..

மும்பையின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆத்விக் சுவேராவிற்கு பழக்கமானவர்களும் அவர்களுடன் பேசியவாறு சுற்றி வந்தனர்.

ஆரியன் குடும்பமும், சுகுமாரின் குடும்பமும் வந்தனர். ஆத்விக்கும் சுவேராவும் அவர்களை பார்த்து, அவர்களிடம் வந்தனர்..

“வாவ் அண்ணா, சூப்பரா இருக்க” அதியா சொல்ல, அவன் புன்னகையுடன் துருவினியை பார்த்தான். அவளும் அதிக ஒப்பனையில்லாமல் ஆகாய நிறமும் வெந்நிறமும் கலந்த லெஹங்கா ஒன்றை அணிந்து, வெள்ளி நிற நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தாள்.

கவினின் விழிகள் சுவேராவின் ஆடையில் விரிந்தது. இடை தெரியுமாறு பார்ட்டி வியர் லெஹங்கா அணிந்திருந்தாள். கவினை மட்டுமல்ல அவன் பெற்றோரையும் பார்ப்பதை தவிர்த்தாள் சுவேரா.

“சுவா” அதிவதினி அழைக்க, “ஆன்ட்டி சொன்ன விசயத்தை மறந்துட்டேன்” என்று அவரை நிமிர்ந்து கூட பாராது அவன் அகன்று சென்றாள். அதிவதினி முகம் தொங்கலுடன் கண்கலங்க தன் கணவனை ஏறிட்டார். அவர் தன் மனைவி தோளில் கையை போட்டு அழுத்தம் கொடுத்தார். கண்ணீரை உள்ளிழுத்தாலும் அவரால் புன்னகைக்க முடியவில்லை.

“அத்தை இருங்க. நான் அவளிடம் பேசிட்டு வாரேன்” அதியா நகர, ஆரியன் அவளை தடுத்து, அவளோட பர்சன்ல்ல தலையிடாத அதி..

ஏன் ஆரு? அவ என்னோட அக்கான்னு நம்ம திருமணத்துல்ல எனக்காக நின்றால்ல?

இப்ப நீ அழைச்சிட்டு வந்து பேச வைத்து, கவின் தெரியாமல் ஏதாவது சொல்லி விட்டால் உன்னால அவளை தேற்ற முடியுமா? அவளோட நிலையை சிந்திக்கணும் இல்லையா? குடும்பத்தை இழந்திருக்காள். நம் எல்லார் மீது இருக்கும் மொத்த நம்பிக்கையும் போகணும்ன்னு நினைக்கிறியா?

இல்ல ஆரு, “அத்தை” அவள் அதிவதினியை பார்த்தாள்.

“மாப்பிள்ள, சரியா தான் சொல்றாரு அதி. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” அவர் சொல்ல, கவினுக்கோ மற்றவர்களிடம் நன்றாக பேசும் சுவேராவை பார்த்து கோபம் வந்தது. அவன் பேசும் சுடுசொல் அவனுக்கு கோபமாக மட்டும் தான் தெரியுது. அவள் காயப்படுவதோ மற்றவர் கூறுவதோ அவன் எண்ணத்திலே இல்லை.

உத்தமசீலன் ஆத்விக்கிடம் பேச்சுக் கொடுக்க, அவரிடம் பேசிக் கொண்டே யாரையோ பார்த்து திகைத்து வாயில் கையை வைத்தான்.

“என்னாச்சு மாப்பிள்ள”? உத்தமசீலன் கேட்டார்.

வினு, அது லாவண்யா தான? ஆத்விக் துருவினியை பார்த்தான்.

“லாவா எதுக்கு இங்க வரப் போறா?” அவள் கேட்க, அவள் தலையை அந்த பொண்ணு பக்கம் திருப்பினான்.

அதே நேரம் சுவேரா “வினு” என்று அந்த பொண்ணை பார்த்துக் கொண்டே ஓடி வந்தாள்.

“லாவா” துருவினி சொல்ல, அவள் பெயரை உச்சரிக்கவும் அவளருகே வந்த சுவேரா, “வா என்ன செய்றான்னு பார்க்கலாம்” துருவினி கையை பிடித்து இழுத்து சென்றாள்.

இருவரும் அந்த பெண் அருகே சென்று “லாவா” அழைத்தாள். திரும்பி பார்த்த லாவண்யா..இவர்கள் தேர்ந்தெடுத்த புடவையுடனும், கண்ணில் பெரிய சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, அரக்கு நிற பெரிய பொட்டுடன் வந்திருந்தாள்.

“வினு, வரா, இங்க என்ன பண்றீங்க?” லாவண்யா கேட்க, “ஆன்ட்டி வேசம் போடுறேன்னு அதையும் மொத்தமா கெடுத்து வச்சுருக்க” துருவினி திட்ட, சுவேரா உரக்க சிரித்தாள்.

“வாயை மூடு வரா. காட்டி கொடுத்திறாத” லாவண்யா அவள் வாயை அடைத்து, அம்மா வந்திருக்காங்க. அந்த பைத்தியக்கார நாயை பார்க்கணும்ன்னு சொன்னாங்க. நான் ரெஸ்ட் ரூம் போறேன்னு இப்படி மாத்திட்டு வந்துருக்கேன். அவனை யாருமில்லா இடத்திற்கு அழைத்து சென்று பேசப் போறேன். என்னை பார்த்தவுடனே அவன் தெறித்து ஓடப் போறான் லாவண்யா புன்னகைக்க, ஆத்விக்கும் அவர்கள் குடும்பமும் அவளை பார்த்தனர்.

“என்ன பிளான் இது? யாரை பார்க்கணும்? டேட்டிங் தான சொன்ன?” ஆத்விக் வரிசையாக கேள்விகளை அடுக்க, லாவண்யா முகத்தை மூடிக் கொண்டு..பை பை..ஓடினாள்.

நில்லுடி. தனியா மீட் பண்ணாத துருவினி அவள் பின்னே ஓட, ஆரியன் அவள் கையை பிடித்து, அப்பாவுடன் தான் இருக்கணும். புரியுதா? அதட்டினான்.

ம்ம்..என்று தலையசைத்து, துருவினி அவனை பார்த்து விட்டு, ஆத்விக்கை பார்த்தாள்.

எனக்கு தெரியாது. நான் எதுவும் சொல்லலை ஆத்விக் சொல்ல, அத்து உனக்கு தெரியுமா? ஆரியன் கேட்க, அண்ணாவுக்கு மட்டுமல்ல எங்க ஆபிஸ்ல்ல எல்லாருக்கும் தெரியும் என்று சுவேரா துருவினியை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

அண்ணா..அவன்..நான் தடுமாறினாள் துருவினி.

நான் சொன்னதை மட்டும் செய். போதும். ஆரியன் கண்டிப்புடன் சொல்ல, எவன்? அதியா கேட்டாள்.

“அதி, வா நாம உள்ளே போகலாம்” ஆரியன் அழைக்க, ஒரு பொண்ணு ஓடி வந்து சுவா, உன்னை தாரா அழைத்தாள்.

“வாரேன்” என்று அதிவதினியை பார்த்துக் கொண்டே நகர்ந்தாள். அவள் ஓர் அறை பக்கம் செல்லும் போது யாரோ அவளை அறைக்குள் இழுத்தான். அவள் பயந்து கத்தும் முன் அவள் வாயை மூடி கதவை காலால் சாத்தி விட்டு சுவேராவை சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.

“மாமூ” சொல்ல வந்த சொல்லை விழுங்கி, “கவின் நீங்க என்ன பண்றீங்க?”

“எதுக்கு அம்மாவை கஷ்டப்படுத்துற? பேசினால் என்ன குறைஞ்சா போயிருவ. நான் உன்னை கல்யாணம் பண்றேன்னு தேடி வந்து சொன்னதால உனக்கு திமிரு கூடி போயிருச்சுல்ல?” சினமுடன் கேட்டான்.

அவள் அவன் கண்களையே பார்க்க, பேசு..அவள் இரு கன்னத்தையும் அழுத்தமாக பிடித்தான்.

அவள் நச்சென ஈர்க்கும் வண்ணம் இடப்பட்டிருந்த அவளது உதட்டு சாயம் கவின் பார்வைக்குள் வந்தது. அவனது மறு கையை அவளது உதட்டில் வைத்து, “ஏன் இதை லைட்டா போட முடியாதா?” என அவனது விரலால் அவளது உதட்டு சாயத்தை அழித்தான்.

நான் போகணும். தாரா தேடுவாள்..

தேடுவாளா? தேடட்டும். நீ இப்ப அம்மாகிட்ட போய் பேசணும்.

முடியாது.

“முடியாதா?” சினத்தில் அவன் கைகளை இறுக்கியவன் அவளது மார்பும் இடையும் தெரிய, அதை மறைத்தவாறு ஆடையை சரி செய்து ஆடையை கூட சரியாக போட மாட்டாயா?

இது தான் இப்பொழுதையை ட்ரெண்டு..

மண்ணாங்கட்டி. இனி இது போல போடக் கூடாது சரியா? அவளை முறைத்தவாறு பேச, வெளியே இருவர் பேசும் சத்தம் கேட்டது.

சுவா எங்கடா?

இங்க தானடா இருந்தா? என்னடா மச்சி. இன்னும் உன்னோட காதலை சொல்லவில்லையா? பார்த்துட்டா..அவள் பக்கம் போகணும்ன்னா. இப்ப கஷ்டம். ஆரவ்விற்கு பதில் இப்ப அந்த ஆத்விக் சார் இருக்கார். அதை விட அவளை கொல்ல முயற்சி செய்றாங்க..தெரியுமா?

தெரியும்டா.. நம்ம கண்ட்ரோலுக்கு அவ வந்துட்டான்னா அவளுக்கு ஏதும் ஆகாமல் அப்பா பார்த்துப்பார்.

என்னடா லவ்வுன்னு சொன்ன?

போடா டேய்..அவளோட சொத்து மதிப்பு உனக்கு தெரியுமா? எல்லாமே அவள் அண்ணன் இந்த ஆத்விக் சாரிடம் தான் கொடுத்து வச்சிருக்கான். இவளையும் ஆத்விக் சாரையும் நம்ப வைத்தால் போதும். இவளை விட அழகான பொண்ணுங்க எல்லாருடனும் இருந்திருக்கேன். இவள் தான் வேணும்ன்னா அவளை அன்றே தூக்கி இருப்பேன் அவன் சொல்லிக் கொண்டிருக்க, கவினை தள்ளி விட்டு, “ஆகாஷ்” என்ற சத்தத்தில் பேசிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்தனர்.

“ஆகாஷ்” அழைத்த சுவேரா அவனருவே சென்று அவன் மூஞ்சியிலே ஓங்கிக் குத்தினாள்.

சுவா, நான் யாருன்னு தெரியும்ல்ல?

தெரியாமல் இருப்பேனா! நீயே கேப்மாரி…

எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.

ஹே சுவேரா, நீ ரொம்ப பண்ற? யார்கிட்ட மோதுறன்னு பாரு? பக்கமிருந்தவன் சொல்ல, இவனே ஒரு பொறுக்கி. அவனோட ப்ரெண்டு எப்படிடா இருப்ப பொறுக்கி..

இங்க பாருங்க. ஒரு பொண்ணு அமைதியா இருந்தால் அவளுக்கு பலமில்லைன்னு இல்லை. அவளோட அமைதி காரணமில்லாமல் இருக்காது. இனி யாரும் என்னிடம் வம்பு செய்யக் கூடாது என்று கவினையும் பார்த்த சுவேரா..சொத்துக்காக என்னை நீ தேட வேண்டிய அவசியமில்லை ஆகாஷ்..உன்னோட ஆள் அந்த ஹந்திராவிடம் இல்லாததா? அவள் கேட்க, “சுவேரா” ஆகாஷ் சத்தமிட்டான்.

“சுவேரா, அப்படியெல்லாம் ஒன்றுமில்லைம்மா” என்று ஆகாஷ் அப்பா அவள் முன் வந்தார்.

சாரி அங்கிள், எனக்கு உங்களது விருப்பம் தெரியும். எனக்கு ஆகாஷை நண்பன்னு கூட சொல்ல முடியாது. அவனை பற்றி எல்லாம் தெரியும்..ஐ அம் சாரி..உங்களுக்காக இவனை சும்மா விட்டு போகிறேன் அவள் சொல்லி செல்ல, கவின் அவளை அதிர்ந்து பார்த்தான்.

ஒரு பையனை அடிக்கும் சுவேரா தன்னை தள்ளி விட கூட எண்ணவில்லையே சிந்தனையுடன் அவன் பெற்றோரிடம் வந்தான். அவர்கள் அவனை முறைத்து பார்த்தனர்.

சுவேரா பின் ஆத்விக் ஓடினான். அவள் தாராவை பார்க்க சென்றாள். ஆகாஷ் தந்தை அவனை முறைத்து தனியே அவனை இழுத்து சென்று அடித்து, ஒரு வேலையை உருப்படியா பண்ண மாட்ட. இனி அவள் பின் சுற்றாத. நான் வேற பொண்ணு பார்க்கிறேன் என்று அவர் நகர்ந்தார்.

கவினை தனியே அழைத்து வந்த அதிவதினி அவனது கையை இழுத்து அவன் விரலை காட்டி, “என்ன இது? சுவாவை என்ன பண்ண?” சீற்றமுடன் கேட்டார்.

“அம்மா, நான் எதுவும் செய்யலை. உங்களை அவள் கஷ்டப்படுத்தினால்ல? அதான் எதுக்கு உங்களிடம் அவ பேசலைன்னு கேட்டேன்?”

“கேட்டாயா? இல்லை கஷ்டப்படுத்தினாயா?” அதிவதினி சீறினார்.

அம்மா, நான் அவளிடம்.. அவன் தயங்கினான்.

கவின் கன்னத்தில் அடித்த அதிவதினி, அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்னு சொன்னது தவறு தான்..அந்த பொண்ணு நம்ம ஆது பார்க்கும் மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கட்டும். நிம்மதியாகவாவது இருப்பா..

“அம்மா” கவின் அழைக்க, எனக்கு அவளை பிடிச்சிருந்ததுன்னு சொன்னது உன் காதில் ஏறலையா? உன்னால தான் சுவா என்னிடம் பேச மாட்டேங்கிறா? என்ன கோபம் உனக்கு? போலீஸ் சட்டையை கழற்றினால் நீ எங்களுக்கு மகனாக இரு. போதும். நீயும் எங்களுடன் நேரம் செலவழிக்க மாட்டேங்கிற. அதி அடுத்த வீட்டுக்கு போயிட்டா. சுவா பக்கத்திலே இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி. அதையும் இல்லாமல் பண்ணீட்ட அதிவதினி அழ, அவர்கள் பின்னே வந்த சுகுமார். அதான் நான் இருக்கேன்ல்லம்மா..

“நமக்கு நாம் போதும் வதும்மா. யாரையும் எதிர்பார்க்காதம்மா” சுகுமார் சொல்ல, “அப்பா” அதிர்ந்தான் கவின். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, வது நாம நல்லது நடக்கும் இடத்திற்கு வந்திருக்கோம். ஆனால் நீ அழுதுட்டு இருக்க..வா போகலாம்.

“அம்மா, இனி “ரா”விடம் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன்” கவின் சொல்ல, “இனி நீ எப்படி நடந்து கொண்டால் என்ன?” சுகுமார் விரக்தியுடன் கூறி விட்டு சென்றார்.

“மன்னிப்பு கேட்கலாம்” என்று கவின் சுவேராவை தேடினான்.

ஆத்விக்கை பார்த்து ஓடிய லாவண்யா, அவள் கூறியது போலவே அவள் அம்மா சொன்னவனை தனியே அழைத்தாள். அவன் அவளை பார்த்து அதிர்ந்து, “ஹே நீ ஆன்ட்டியா?” உன் அம்மாவே இளமையா இருக்காங்க. உனக்கு அவங்களே தேவலை கேலி செய்தான்.

“என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேல்ல?” லாவண்யா கேட்க, உன்னை போல ஆன்ட்டியை என்று மேலிருந்து கீழாக அவளை பார்த்தான்.

என்ன? அவள் அவளையே பார்க்க, அவளது தலையிலிருந்த கிளிப்பை அவிழ்த்து விட்டான் அவன். அவள் பதட்டத்தில் புட்டி கீழே விழ, அவளை பார்த்து, “ஏய் நடிக்கிறீயா?” அவன் அவளருகே வர, லாவண்யா பயந்து வேகமாக ஓடினாள். அவன் அவளை விரட்டி வந்தான்.

யார் மீதோ மோதி நின்றவள் அவனை பார்த்து, “லூசாடா நீ? பார்த்து வர மாட்ட” அவள் திட்ட, “நானா?” எதிரே இருந்த அந்த பொட்டிக்கில் அவளை பார்த்து புன்னகைத்த அதே விழிகளுக்கு சொந்தக்காரன் கேட்டான்.

லாவண்யா அம்மா பார்த்த மாப்பிள்ளை, “ஏய்” சத்தமிட்டான்.

“போச்சு பார்த்துட்டான்” என்று அவள் முன் நின்றவனை பார்த்து, அவளை தேடி வந்தவனை திரும்பி பார்த்தாள். அவன் அருகே வர வர அவள் இதயதுடிப்பு எகிறியது. எதிரே நின்றவன் அவளையே பார்க்க, “சார் ஒரு கெல்ப்” என்று மீண்டும் பின்னே திரும்பி பார்த்து, அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து அவனுக்கு முத்தமிடுவது போல அவள் தலையை சாய்க்க, அவன் அவளை அதிர்ந்து கண்களை விரித்து பார்த்தான்.

உதடுகள் உரச சிறு நூலிழைகள் இருக்க, சார் எதுவும் பேசாதீங்க. அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க எண்ணி பேச வந்திருக்கான். எனக்கு அவனை பிடிக்கலை. ப்ளீஸ் அமைதியா மட்டும் இருங்க அவள் சொல்ல, அவன் அவளது இமை மூடி திறக்கும் விழிகளையும், சுவாசிக்கும் நாசியையும், அமுதம் பருகும் இதழ்களையும், சுவைக்க எண்ணும் கன்னங்களையும் ரசித்து பார்த்தான்.

“இருவரும் முத்தமிடுகிறார்கள்” என்று எண்ணி அவன் நடை ஓட்டமாக ஓடி அவளை இடித்து அவன் நிற்க, லாவண்யா இதழும் அவன் இதழும் இடித்துக் கொண்டது. அவள் வேகமாக நகர, அவன் இருவரையும் கவனிப்பதை பார்த்த அந்த விழியான் லாவண்யாவை இழுத்து அவளது ஒப்பனையை கலைய, அவள் மேலும் அதிர்ந்தாள்.

“ஏய், எதுக்கு என்னை ஏமாத்த பாக்குற?” அவன் அவளை அடிக்க கையை ஓடினான். அந்த விழியான் அவன் கையை பிடித்து தள்ளி லாவண்யாவை பார்த்து பின் அவளை அவனுடன் நெருங்கி நிறுத்தி, அவள் கன்னத்தில் முத்தமிட்டு, நாங்க லவ் பண்றோம். சும்மா தொந்தரவு செய்யாமல் போங்க சார்.

ஹலோ, லாவுவை நான் ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்துட்டு தான் வந்தேன். எனக்கு அவளை பிடிச்சிருக்கு அவன் சொல்ல,

எனக்கு உன்னை பிடிக்கலை போடா..

சரி, உன் அம்மாவிடம் நீயே சொல்லு. இங்க கூட வந்திருக்காங்கல்ல. அழைக்கிறேன் அவன் சொல்ல, “வேண்டாம் வேண்டாம். நான் அம்மாவிடம் சொல்லலை. என்னை பிடிக்கலைன்னு நீ சொல்லிடு” லாவண்யா சொல்ல, எனக்கு உன்னை பற்றி எல்லாமே தெரியும். இப்ப நீ வரலை. நீ நாடகமாடுறன்னு சொல்லிருவேன். அப்புறம் நீ தான் கஷ்டப்படணும்..அவன் நேரடியாகவே மிரட்டினான்.

“நான் ஒன்றும் நடிக்கலை” லாவண்யா சொல்ல, நடிக்கலைன்னா எதுக்கு அந்த கண்ணாடி. இவன் யாருன்னே உனக்கு தெரியாதுல்ல. “இவனோட நடிக்கிறேன்னு முத்தம் கொடுத்துட்டு இருக்க? இவன் மட்டும் தானா?” அவன் கேட்க, லாவண்யா கண்கள் கலங்கியது.

அந்த விழியாளன் லாவண்யாவை இழுத்து, “எதுக்கு அழுற? எவன் என்ன பேசினால் நமக்கென்ன?” அவன் அவள் தோளில் கையை போட, “ஏய் கையை எடுடா” அவன் விழியாளனை அடிக்க வந்தான். லாவண்யா விழியாளனை பார்க்க, அவளை பின் நகர்த்தி, “என்னடா அடிக்கணுமா? வா..நீயா நானான்னு பார்க்கலாம்” சண்டைக்கு தயாரானான்.

“சண்டையெல்லாம் வேண்டாம்” லாவண்யா சொல்ல, வரப் போறீயா இல்லையா? அவன் கேட்க, விழியாளன் லாவண்யா முகத்தை கையில் தாங்கி, அவளது கண்களை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள். அவன் அவளது முகமெங்கும் முத்தம் கொடுக்க, லாவண்யா வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகடித்து படபடவென பறந்தது.

“ஏய், அவனிடம் உன்னை கொடுத்திருவ போல?” அவன் லாவண்யாவை வேகமாக இழுத்தான். அவன் பேச்சில் அவள் கண்ணீர் வழிந்தது. அவளை இழுத்து அணைத்த விழியாளன், நாங்க காதலிக்கிறோம். நான் முத்தமிடும் போது அமைதியாக தான இருந்தா. பார்த்தேல்ல..கிளம்பு. இனி அவளை பார்க்க வந்த..

என்னடா செய்வ? அவன் எகிறினான்.

அவன் கன்னத்தை பழுக்க வைத்த விழியாளன், ஒரு பொண்ணிடம் ஒழுங்கா பேச கூட உனக்கு தெரியல. வாழ்நாள் முழுவதும் நீ எப்படி அவளை பார்த்துப்ப. அவளை நான் பார்த்துக்கிறேன். லாவா அம்மாகிட்ட போய் நாங்க காதலிக்கிறோம்ன்னு சொல்லு. அவளை நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லு என்று சொல்லி அவனை தள்ள, அவன் சினமுடன் சென்றான்.

லாவண்யா அதிர்ந்து அவனை பார்த்தாள்.

என்னை உங்களுக்கு தெரியுமா?

ஏன் தெரிந்தால் தான் உதவணுமா? விழியாளன் கேட்க, அவள் மனம் அடிபட்டது இருந்தாலும் அவனுக்கு நன்றியை தெரிவித்து கண்கலங்க விழியாளனிடமிருந்து சென்றாள். அவன் அவளை பார்த்து நெஞ்சில் கை வைத்து, “ஷி இஸ் மைன்” என்றான்.

அந்நேரம் தான் தாரா அழைத்தால் என்று சென்ற சுவேரா பின் ஆத்விக் சென்றான். அதன் பின் லாவண்யா அவ்விடம் வந்தாள். அவள் அம்மா அவளை பார்த்து, “என்ன புடவைடி இது?” சினமுடன் கேட்டார்.

லாவண்யா அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

“யாருடி அவன்?” ஓடிய அவள் கையை பிடித்து நிறுத்தி கேட்டார் அவள் அம்மா.

லாவண்யா அவரை பார்த்து, உன்னிடம் யாரை பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி உன்னை பார்க்க வர மாட்டேன். “ஐ ரியலி ஹேட் யூ” கத்தி விட்டு செல்ல, சரிடி இனி என்னோட பொண்ணு செத்துட்டான்னு வச்சுக்கிறேன்.

“வச்சுக்கோ. நானும் உன்னை தலைமுழுகிடுறேன்” லாவண்யா அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

ஆகாஷ் தந்தை ஒருவரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, அவன் சுவேரா சென்ற திசையை வன்மத்துடன் பார்த்தான். அதை கண்ட அவன் தந்தை தனியே அழைத்து சென்று, அந்த பொண்ணு சொத்துக்காக மட்டும் நான் அவளை உனக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கல.  என்ன தான் அவள் குடும்பம் அழிந்தாலும் அவங்க பாரம்பரியமும் அவளை பிடித்து தான் இந்த முடிவுக்கு வந்திருந்தேன்.

சுவேரா, உன்னை வேண்டாம்ன்னு சொல்றான்னா..கண்டிப்பாக அவளுக்கு யாரையோ பிடிச்சிருக்கு. அதான் இவ்வளவு உறுதியாக என்னிடம் சொன்னாள்.

அங்கிள், அப்படியெல்லாம் ஏதுமில்லை. ஆத்விக் சார் மேட்ரிமோனில்ல அவளுக்கு அலையன்ஸ் பார்த்துட்டு இருக்கார்.

வாட்? அவர் அதிர்ந்து இருக்க, அங்கே தான் விழியாளன் மாஸ்க் அணிந்து அமர்ந்திருந்தான்.

சொன்னேன்ல்ல அப்பா அவளுக்கு திமிறு ஆகாஷ் அவளை திட்ட, விழியாளன் விழிகள் சினத்தில் சிவந்தது.

அந்த பொண்ணு யாரையும் திருமணம் செய்யட்டும். நீ தேவையில்லாமல் அந்த பொண்ணு விசயத்துல்ல தலையிட்ட நடு ரோட்ல்ல பிச்சை தான் எடுக்கணும் மகனிடம் அவர் கூற, “அப்பா” சினமுடன் அழைத்தான்.

ஆமா, கல்யாணம் பண்ணலைன்னாலும். நம்ம ஷேர் அவங்க அப்பா கம்பெனியில இருக்கு. முடிந்தவரை அதற்கு நான் உதவணும்ன்னு நினைக்கிறேன்.

அவ குடும்பத்துல்ல யாருமே இல்லை. இப்ப அந்த கம்பெனியில ஷேர் வச்சிட்டு இருக்கீங்க? ஆகாஷ் மேலும் காரமாக கேட்டான்.

ஏய், தாஸ் இரத்தம் சோலி போகாதுடா. எப்படியானாலும் மும்பைக்கு சுவேரா வந்து தான் ஆகணும். அவள் தான் அவங்க கம்பெனியை நடத்தப் போறா பாரு..

அப்பா, அவ லாயர்..

சாதாரண பிசினஸ் மேனை விட ஒரு லாயருக்கு எப்படி கம்பெனியை ரன் பண்றதுன்னு நல்லா தெரியும். வருவாடா. நீ அமைதியா போயிரு. முதல்ல கிளம்பு. நான் பங்சன் முடியவும் வருகிறேன் அவர் சொல்லி செல்ல, ஆமாடா ஆகாஷ், அவகிட்ட வேண்டாம். நாம எதுக்கு நேரத்தை வீணாக்கணும். அந்த ஷெரின் இருக்கால்ல அவளை மடக்கப் பாருடா நண்பன் கூற, ஆகாஷ் சிந்தித்து விட்டு, “வா நாம மும்பை போகலாம்” என்று கிளம்பினார்கள்.

விழியானுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்க வெளியே சென்று மரத்தடியில் அமர்ந்து அவ்விடத்தை நோக்கினான். லாவண்யா ஒரு பூனை விரட்டிக் கொண்டே அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

புருவம் சுருக்கி அவளை பார்த்த விழியான் பூனையை பார்க்க, நாய் குரைக்கும் சத்தமும் கேட்டது..

“போ..சீக்கிரம்” என்று பூனையை விரட்டிக் கொண்டு நாயை பூனை பக்கம் வர விடாது தடுத்துக் கொண்டிருந்தாள்.

ஏய், ஓடு..ஓடு அவள் சொல்ல, பூனை அவளை பார்த்து அவளது லெஹங்காவிற்குள் மறைந்தது. மனதை சமாதானப்படுத்தி லெஹங்கா மாற்றி இருந்தாள்.

அய்யோ..போ..என்று அவள் சொல்ல, மெய்மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான் விழியான்.

பூனை மியாவ்..மியாவ் கத்திக் கொண்டே அவளிடம் மறைய நாய் கோபமாக அவளது ஆடையை வாயால் இழுக்க, அவள் கையிலிருந்த குச்சியால் அடித்து விட்டு பூனையை அவ்விடமே விட்டு அவனை நோக்கி ஓடி வந்தாள். அவளுக்கு முன் பூனை விழியான் மடியில் தாவி ஏறியது.

யாரோ என்று எண்ணிய லாவண்யா, “சார் கெல்ப்..கெல்ப்” கத்திக் கொண்டே வந்தாள். அவன் எழ, அவன் அமர்ந்திருந்த இருக்கையில் ஏறி அவனது தோள்களை பற்றியவாறு கத்தினாள்.

நாய் குரைத்துக் கொண்டே அவளை சினமுடன் கடிக்க வந்தது.

ஆ..ஆ..ஆ..கடிச்சிறாத. அவன் பாவம்ல்ல அதான்… நாய்யை பார்க்காமல் கத்திக் கொண்டே குதித்தாள்.

நாய் அருகே வந்தவுடனே அவன் கையிலிருந்து லைட்டரை ஆன் செய்த விழியாளன் அதனருகே கொண்டு சென்றான். நாய் சென்று விட்டது. அது தெரியாமல் அவள் அவனை பிடித்து கண்களை மூடி குதித்துக் கொண்டிருந்தாள்.

பூனை நிதானமாக, “மியாவ் மியாவ்” அவன் தோளில் அவள் வைத்திருந்த கையை தொட்டது.

குதித்துக் கொண்டிருந்த லாவண்யா கண்ணை திறந்து அவனை பார்த்து அதிர்ந்து அவன் மேல் வைத்திருந்த கையை எடுத்து பின்னே நகர்ந்து பொத்தென கீழே விழுந்தாள். விழியான் புன்னகையுடன் பூனையை கீழே இறக்கி விட்டு அவளிடம் கையை நீட்டினான். அவனை முறைத்துக் கொண்டே எழுந்து ஏதும் சொல்லாமல் நகர்ந்தாள்.

பூனை அவள் பின்னே வர, டேய் சார்லி..உன்னால தான். இது எனக்கு தேவை தான். நீ வராத. ஐ ஹேட் யூ என்றாள்.

“மியாவ் மியாவ்” பூனை பாவமாக கையை நீட்ட, நான் தான் ஓடிருன்னு சொன்னேன்ல்ல. போயிருந்தேன்னா இப்ப பிரச்சனையே இல்லைல்ல?

“என்ன பிரச்சனை உங்களுக்கு?” விழியான் அவளருகே வந்து கேட்க, அவனை முறைத்து விட்டு, “நான் போறேன். நீ உன்னோட வீட்டுக்கு போ” நகர, பூனை அவளது ஆடையை பிடித்தது.

விடுடா..போ..

அது பாவம் போல் அவள் முகத்தை பார்த்து, அதன் கால்களை தூக்கியது..

“என்ன?” சினமுடன் கேட்டாலும் மண்டியிட்டு அதை தூக்கினாள்.

அதன் காலில் காயமாகி இருந்தது.

“என்னாச்சுடா? அவன் கடிச்சிட்டானா?” பூனையிடம் பேசினாள்.

“இல்லை” தலையசைத்து, கல்லை காட்டியது..

கல் இடிச்சிருச்சா..

“ஒன்றும் செய்யாது” என்று பூனை காலை தூக்கி ஊதி விட்டு, சரியாகிடும். போ..உன்னோட வீட்டுக்கு போ..

“போக மாட்டேன்” தலையசைத்தது.

“போக மாட்டீயா?” நிமிர்ந்து விழியானை பார்த்தாள். அவன் கையை கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்தான்.

“மியாவ் மியாவ்” அவள் கைக்குள் பதுங்கியது பூனை.

சார்லி, என்னால உன்னை தூக்கிட்டு போக முடியாதுடா. என்னோட ஹாஸ்ட்டல்ல உன்னை உள்ளே விட மாட்டாங்க..

பூனை அவளை மீண்டும் பாவமாக பார்த்தது.

இரு. நான் என்னோட ப்ரெண்டை அழைச்சிட்டு வாரேன் அவள் அதை இறக்க, இறங்காமல் அவளை இறுக பற்றிக் கொண்டது.

“ஹே சார்லி, நீ என்னோட வா. நாம பிஷ் சாப்பிடலாம்” விழியாளன் அழைக்க, அவனிடம் பாய்ந்து சென்றது. அது செல்லவும் லாவண்யாவிற்கு ஒருமாதிரி ஆனது. முகம் வாட அதை பார்த்தாலும், “நிஜமா இவனை பார்த்துப்பீங்களா?”

ம்ம்..

சாப்பிட கொடுங்க. பார்த்துக்கோங்க என்று சார்லியை பார்த்து, பத்திரமா இரு..

சார்லி அவளிடம் தாவி, அவளை கூர்ந்து பார்த்தது.

“என்னடா?” அவள் முகத்துக்கு நேராக அதை வைத்து கேட்டாள். அவள் கன்னத்தை நாவால் நக்கியது.

அய்யோ, என்ன பண்ற? இப்படியெல்லாம் பண்ணக் கூடாது என்று அதை முத்தமிட்டாள். இது போல முத்தம் மட்டும் தான் கொடுக்கணும். யாரையும் கடிக்காத சரியா..

சார்லி அவளுக்கு முத்தம் கொடுக்க, இருவரின் கொஞ்சலையும் ரசித்து பார்த்தான் விழியான்.

உள்ளே சத்தம் கேட்க, இருவரும் உள்ளே பார்த்தனர்.

அவன் கையில் சார்லியை கொடுத்து விட்டு தன் லெஹங்காவை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். தன் மாஸ்க்கை போட்டுக் கொண்டு பூனையுடன் அவனும் உள்ளே சென்றான்.

சுவேராவை தேடிய கவின் ஆத்விக் தோளில் சாய்ந்து சுவேரா அழுவதை பார்த்து அங்கேயே நின்றான். அவன் பின் வந்த ஆரியன் உள்ளே சென்று, “அத்து எதுக்கு அழுற?”

“மாமா, சுவாவுக்கு அவளோட அண்ணா நினைவா இருக்கு போல..அவனை பார்த்தது போல இருக்கு” என்று தேடி போயிருக்கா. ஆனால் அது ஆரவ் இல்லை. அதான் அழுறா கண்கலங்கினான் ஆத்விக். கவினை ஆரியன் பார்க்க, ஆத்விக் அவன் நிற்பதை பார்த்து சினமுடன் திரும்பிக் கொண்டான்.

கவின் அலைபேசி அழைக்க, அவன் பேசிக் கொண்டே ஆரியனை பார்த்தான். ஆரியன் அவனிடம் வந்தான்.

ஹே டியர், சத்தம் கேட்டு சுவேரா திரும்ப, கவினை தாண்டி ஹர்சன் வந்தான்.

ஹர்ஸ்..நீயா? ஆத்விக் கேட்க, ஏன் மச்சான் வரக் கூடாதா? சங்கர நாராயணனின் இளைய மகன் ஹர்சன்.

சுவேரா அவனை பார்த்து புரியாமல் விழித்தாள்.

“சுவா டியர், வொய் ஆர் யூ கிரையிங்? லெட்ஸ் கம்” அவள் கையை பிடித்து ஹர்சன் அழைக்க, அவள் ஆத்விக்கை பார்த்து, “அண்ணா யாரு?” அவன் கேட்க, சங்கர நாராயணனின் இளைய மகன் ஹர்சன் என்று கவின், ஆரியன் ஆத்விக் பார்த்தான்.

சுவேரா அவன் கையை தட்டி விட்டு, ஆத்விக்கையும் அவன் பார்க்கும் கவின் ஆரியனையும் பார்த்தாள்.

கண்ணை துடைத்து விட்டு, அண்ணா..நான் தாராவை பார்க்க போகிறேன் எழுந்தாள்.

சுவா டியர், நானும் வாரேன்..

“எதுக்கு? அவளுக்கு மேக் அப் போடவா?” சுவேரா நடந்து கொண்டே கேட்டாள்.

போடலாமே! அவன் சொல்ல, அவள் நின்று அவனை பார்க்க, ஆத்விக் பின்னிருந்து “நோ” கையசைத்தான்.

ஹர்சன் ஆத்விக்கை பார்த்து, “மச்சான் டிஸ்டர்ப் பண்ணாதடா” சொல்ல,

அடிங்கோ..அவ என்னோட தங்கச்சி. கொன்றுவேன்.

“நான் உன்னோட பெரியவன் மாமான்னு அழைக்க வேண்டாமா?” ஹர்சன் கேட்க, “மாமாவா?” சுவேரா ஆத்விக்கை பார்த்தாள்.

உனக்கு இந்த மரியாதையே அதிகம்..

ஹர்சன் கவினை பார்த்து, அட நம்ம தம்பி கூட இங்க தான் இருக்கான் போல. “போலீஸ் வேலை எப்படி இருக்குடா?” என்று ஹர்சன் கவின் தோளில் கையை போட்டான். கவின் சட்டென நகர்ந்தான்.

“நீ இப்ப இந்த அறைக்குள் வரும் முன் அவனை பார்க்கலை” ஆத்விக் ஹர்சனிடம் கேட்க, “பார்க்கலைடா மச்சான். என்னோட பேபி தான் கண்ணுக்கு தெரிஞ்சா” என்று சுவேரா கன்னத்தை அவன் தட்ட, கவினுக்கோ பொறுமை பறந்து கொண்டே சென்றது.

எப்படியோ என்னோட அப்பனை உள்ளே தள்ளீட்டீங்க? ம்ம்..ஆரியனையும் ஆத்விக்கையும் பார்த்தான்.

“ஏன்? உன்னோட பிளான் என்ன? எங்களை போடணுமா?” ஆத்விக் கேட்க,

“என்னடா மச்சான் சொல்ற? நான் உன்னோட நிரந்தர மாமனாக போறேன். நீ இப்படி பேசினால் எப்படி?” ஹர்சன் கேட்க, “சுவா..நீ போ” ஆரியன் சொல்ல, “சரி மாமா” ஹர்சனை முறைத்து விட்டு அவள் செல்ல, “பேபி..இதோ இருக்கான் பாரேன்” என்று கவினருகே வந்த ஹர்சன், இவனுக்கு என்னை சுத்தமா பிடிக்காது. அவனுக்கு என்னை பார்த்து முதலில் இருந்தே பொறாமை..

“பொறாமையா?” ஆத்விக் சிரித்தான்.

பேபிகிட்ட பேசிட்டு இருக்கேன்ல்ல தொந்தரவு பண்ணாதீங்க..

சிடுசிடுவென முகத்தை வைத்திருந்த கவின், உன்னை பார்த்து பொறாமை படும் அளவு நான் முட்டாள் இல்லை. “ரா, நீ போ” சொல்ல, அவள் இருவரையும் பார்த்தாள்.

ஆரியனும், “நீ போ சுவா” குரலை உயர்த்தினான்.

“மாமா” அவள் ஹர்சனை பார்க்க, “நீ போ” ஆரியன் அழுத்தி கூறினான்.

துருவினி அவர்களிடம் வந்து, “தாரா உன்னை தேடுறா. இங்க என்ன பண்ற சுவா?” என்று ஹர்சனை பார்த்தாள்.

வாவ்..ஹே ப்யூட்டி, ஹூ ஆர் யூ? ஹர்சன் துருவினி அருகே வர, அவள் அனைவரையும் பார்க்க, ஆரியன் முகத்தில் இருந்த சினத்தை பார்த்த துருவினியோ அங்கே ஹர்சன் இல்லாதது போல காட்டிக் கொண்டு, வா..என்று சுவேராவை இழுத்து சென்றாள்.அதன் பின் தான் லாவண்யாவும் விழியாளனும் உள்ளே வந்திருந்தனர்.