வல்லவன் 24

அதியாவை ஆரியன் அவன் மடியில் அமர்த்தி அமர்ந்தான்.

அதி, நீ கண்டிப்பா விளையாட்டு தனமா இருக்கக்கூடாது. கவனமா இருக்கணும். எனக்கு உன்னை அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் விசயத்தில் பயமா இருக்கு. அனுப்பவே பிடிக்கலை. ஆனால் உன் அக்காவை எண்ணும் போது என்னால அனுப்பாமல் இருக்க முடியாது வருந்தினான்.

நான் பத்திரமாகவும் கவனமாகவும் இருப்பேன் ஆரு. உங்களால தான் நான் தைரியமாக எல்லாவற்றையும் ஃபேஸ் பண்ணப் போறேன். ஆரு என்னால முடியும்ல்ல?

நீ என்னோட அதி. உன்னால எதுவும் முடியும். என் பயம் இதில்லை. உன்னோட வெகுளித்தனம் வெளியே வரக் கூடாது. அது ரொம்ப டேஞ்சர் அதி. நான் சொல்றது உனக்கு புரியுதுல்ல அதி..

ம்ம்..

என்ன ம்ம்?

ஆரு, நீங்க பக்கத்துல்ல இருந்தால் இன்னும் தைரியமாக இருப்பேன்.

அதனால என்ன? என்று அவன் கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றி அவளுக்கு அணிவித்தான்.

ஆரு, இது உங்களுடையது..

இல்ல அதி, இது நம்முடையது என்று அந்த இலை வடிவ விநாயக டாலரை பிரித்தான். அதில் ஆரியன், அதியா, பசங்களும் இருந்தனர்.

ஆரு..இது எப்ப? கண்கலங்கினாள். நம்ம திருமணத்தோட எடுத்த புகைப்படம் தான். இதை அன்றிரவே தயார் செய்ய கொடுத்திருந்தேன்.

இது உன் கழுத்தில் இருக்கும் போது நான் எப்போதும் உன்னுடன் இருப்பதாக எண்ணிக் கொள்.

தேங்க்ஸ் ஆரு. இனி நான் கவலைப்படவே மாட்டேன்.

குட்..இதை நீ எந்த நிலையிலும் கழற்றக் கூடாது.

கண்டிப்பாக ஆரு. இதை கழற்றவே மாட்டேன். அப்ப தான என்னோட ஆரு என்னருகிலே இருப்பார் என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

ஆரு, நாம மாமாவை பார்க்க போகணுமா?

இல்ல அதி, அப்பா அங்க தான் இருப்பார். நாளை தான் வருவாங்க..

ஓ..

“இன்று யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டாங்க” ஆரியன் அதியாவை அணைக்க, “ஆரு நாம நம்ம பசங்களை பார்க்க போகலாமா?”

அதி, அவங்க பழகணும். நாளையிலிருந்து நீ ஆபிஸ் போகணும். நான் வேலைக்கு செல்வதற்கு முன் உன்னை அந்த கம்பெனியில் பிக்ஸ் செய்து விட்டு தான் என் வேலையை தொடங்கணும் இல்லை என்னால நிம்மதியாக என் வேலையை பார்க்க முடியாது.

உனக்கு ஒன்று மட்டும் சொல்றேன். எப்போதும் நினைவில் வச்சுக்கோ.. யாரையும் எடுத்தவுடன் நம்பாதே! நான் செல்வதற்கு முன் எல்லாரை பற்றிய விவரத்தையும் உனக்கு கற்றுக் கொடுக்கிறேன்.

யாரிடம் எப்படி பேசணும்? எப்படி நடந்து கொள்ளணும். முதல்ல..உன்னோட ஆடை, நடக்கும் ஸ்டைல், பேச்சு எல்லாத்தையும் மாத்தணும்.

ஆரு..மாத்தணுமா?

ம்ம்..மாத்தணும்.

எனக்கு இதான் பயமா இருக்கு. எனக்கு அதிகமாக யார் முன் அதிகமாக பேசி கூட பழக்கமில்லை. பேசலாம் அதற்கும் ஆட்களை வைத்து பழக்கப்படுத்துகிறேன்..நீ பயப்படாம. தைரியமா பேசணும்.

“எஸ் ஆபிசர்” எழுந்து நின்றாள் அதியா.

ஆரியன் புன்னகையுடன் அவளை தூக்கி சமையலறையின் திண்டில் அமர வைத்து, சமையலை தொடர்ந்தான். கொஞ்சம் ரொமான்ஸ்..கொஞ்சம் சமையலாக மகிழ்வுடன் இருந்தனர் இருவரும்.

“மாலை மங்கும் நேரம்

மோகம் கண்ணின் ஓரம்

உனை பார்த்துக் கொண்டே இருந்தாலும்

போதும் என்று தோன்றும்…”

பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதியா காலை ஆட்டிக் கொண்டு ஆரியன் அவளுக்கு போட்டுக் கொடுத்த காஃபியை ருசித்து பருகிக் கொண்டிருந்தாள்.

“ஹேய், ஜில்லு போகலாமா?” ஆரியன் அவளருகே வந்தான். பருகிய கோப்பையை கீழே வைத்து விட்டு எழுந்து, எங்க போகப் போறோம் ஆரு. ஷனா தர்சுவை பார்க்கலாமா? அவள் கேட்க, புன்னகைத்த ஆரியன் அவங்க கூட நம்மை தேட மாட்டாங்க போல..

அங்க போகலையா? நாம இப்ப எங்க போகப் போறோம்?

அதுவா? அவளை நெருங்கி தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டு,” என்னோட அதியோட ஆசையை நிறைவேற்றப் போகிறேன்” என்று கதவை திறந்து வெளியே வந்து வீதியில் அதியாவை தூக்கி நடந்தான்.

“எல்லாரும் வெளிய வாங்கடி” பக்கத்து வீட்டு வாசுகி அக்கா சத்தம் கொடுக்க, அனைவரும் வாயில் கையை வைத்து இருவரையும் பார்க்க, அதியா அவர்களை பார்த்து விட்டு ஆரியன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை பார்த்து புன்னகைத்தாள்.

உள்ளே சென்ற ஒரு பெண்மணி தன் கணவனை இழுத்து வந்து இருவரையும் காட்டி, நேத்து கல்யாணமானவங்க பாருடா. என்னை ஒரு முறையாவது தூக்கி இருப்பாயா?

உன்னை தூக்கணுமா? முதல்ல சமைக்கிற வேலைய பாருடி..

யோவ், நீ என்னை தூக்கலைன்னா. அப்புறம் உனக்கு சாப்பாடு கிடையாது அவள் மிரட்ட, அடிப்பாவி வயித்துல்ல கையை வைக்கிறீயே! தலைவிதியே என்று அவனும் தூக்கி நடந்தான்.

இரு..நானும் வாரேன் என்று மற்ற பொண்ணு அவள் கணவனை அலைபேசியில் கூறி, இப்பவே வரணும். இல்ல நீ வீட்டுக்கு வரும் போது நான் என்னோட அம்மா வீட்டுக்கு போயிருவேன் என்று மிரட்ட, அவன் தலையில் அடித்துக் கொண்டு, “வந்து தொலைகிறேன்”: அலைபேசியை வைத்தான். ஆரியனும் அதியாவும் புன்னகையுடன் வீட்டிற்கு வந்தனர்.

சந்தோசமா அதி?

“பரம சந்தோஷம் ஆரு” அவனை அணைத்துக் கொண்டாள்.

“பாவம் இந்த வீதி கணவன்மார்கள்” ஆரியன் சொல்ல, “ஒரு நாள் தான படட்டும் ஆரு” என்றாள் புன்னகையுடன்.

கேடிடி நீ?

“ஆரு” அவள் பாவம் போல் முகத்தை வைக்க, “அய்யோ இப்படி பண்ணியே என்னை கவுத்துட்ட” ஆரியன் சொல்ல, அவன் கன்னத்தை கடித்து வைத்து விட்டு அதியா அவர்கள் அறைக்கு ஓடினாள்.

ஆரியன் அவளை விரட்டிக் கொண்டு சென்று படுக்கையில் விழுந்தவனை பிரட்ட, அவன் மேல் போர்வையை போட்டு அவனை நகர்த்தி அவள் செல்ல முனைய, லாவமாக கையை வெளியே விட்டு அவளை போர்வைக்குள் இழுத்துக் கொண்டான் ஆரியன்.

ஆத்விக் ஆபிஸில் அனைவரும் அவனுக்கு அவர்கள் விசாரிக்கும் கேஷ் விவரத்தை அனுப்பிக் கொண்டிருந்தனர். அவனும் சுவேராவும் அதனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுவேரா ஏதோ கேட்க சாய் அருகே வந்து அவனருகே நெருக்கமாக அமர்ந்து கோப்பையை காட்டி ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சார் வாங்க” நேசன் அழைப்பில் எல்லாரும் வந்தவனை பார்த்தனர். கவின் சுவேராவையும் துருவினியையும் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை லாயர் அணியும் ஆடையில் பார்க்கவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நேசனின் அழைப்பில் அவனும் சுயம் வந்து எல்லாரையும் பார்த்தான். துருவினி இருவரையும் பார்த்துக் கொண்டே எழுந்து கவினிடம் வந்தாள்.

“அண்ணா, இங்க வந்திருக்கீங்க?”

அண்ணாவா? நேசன் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு துருவினி, “அண்ணா அவரு வீட்ல போய் பேசிக்கோங்க. இங்க வேண்டாம். எல்லார் முன்னும் அவர் ஏதும் சொல்லி விடாமல்”

“இருக்கட்டும் வினு. நான் பேசிக்கிறேன்” என்று சுவேராவை பார்த்தான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “சுவா” அவளை தட்டினான் சாய்.

“ம்ம் சார்கிட்ட நான் விவரிக்கவா?” சாய் கேட்க, “இல்ல நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை பாரு” சுவேரா கவினை பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல, “சுவா நில்லு” துருவினி அழைக்க, அவளிடம் வாரேன் வினு..

இருன்னு சொன்னேன்.

“வினு, எனக்கு வேலை இருக்கு” சினமுடன் சுவேரா நகர, கவின் அவள் கையை பிடித்து ஆத்விக் அறைக்கு இழுத்து சென்றான்.

“அண்ணா” துருவினி அவன் பின்னே செல்ல, உன்னோட வேலையை பாரு வினு.

“அண்ணா வேண்டாம்” துருவினி அவர்கள் பின்னே ஓடினாள்.

ஆத்விக் கூலாக அவனை பார்க்க, “கையை விடுங்க” உதறினாள் சுவேரா..

சுவா, இதோ பாரு. இதுல்ல உனக்கு யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லு. நாம வீட்ல சொல்லி பேசிடலாம் ஆத்விக் சொல்ல, துருவினி அவனிடம் வந்து, “அத்து அவசரப்படாதீங்க” என்றாள்.

நான் நடந்து கொண்டது, பேசியது தவறு தான்டா மச்சான். அதுக்காக இப்படி சொல்லாமல் கிளம்புவீங்களா? கவின் சினமுடன் கேட்க, “நான் உனக்கு கிளம்புகிறேன்னு மேசேஜ் பண்ணீட்டு தான் வந்தேன்” ஆத்விக் சொன்னான்.

“ரா, என்னிடம் சொல்லலை” கவின் சொல்ல, சுவேரா அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

அவளிடம் கேட்க தான் வந்தீயா? ஆத்விக் கேட்க, மூவரையும் பார்த்த கவின்..அம்மா நான் “ரா” வை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறாங்க. எனக்கு சம்மதம்ன்னு சொல்ல வந்தேன்..

“ஓ..அம்மாவுக்காக?” ஆத்விக் கேட்க, துருவினியோ சினமுடன் கவினை பார்த்தாள்.

சுவேரா ஆத்விக் அருகே வந்து ஸ்குரோல் செய்து மாப்பிள்ளை புகைப்படத்தை பார்த்து, அண்ணா இவன் ஓ.கே. இவனை பற்றி மாமாக்களிடம் சொல்லி பேசுங்க என்றாள்.

கவின் சினமுடன், “நான் என்ன சொன்னேன்னு உன் காதில் விழவில்லையா?”

துருவினி கோபமாக, அம்மாவுக்காக என்று தான் என் அண்ணன் வாழ்க்கையை தொலைத்தான்..

சுவேரா கவினிடம் வந்து, “நான் தப்பா பொண்ணுல்ல சார். உங்க அம்மா சொன்னா எவளையும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?”

கவின் கோபமாக, என்ன பேசுற? அன்று கோபத்துல்ல பேசினேன்னு சொன்னேன்ல்ல..

ஆமா சார், கோபத்துல்ல தான் ஏற்கனவே பேசுனீங்க. இடம் பொருள் ஏவல் பார்க்காமல் இஷ்டப்படி பேசுறீங்க. எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருக்க நான் அது போல பொண்ணாக இருந்தால் அமைதியா இருந்திருப்பேன். நான் அப்படியில்லை. நான் மாடர்னாக இருந்தாலும் என்னோட குடும்பம் என்னை சரியா தான் வளர்த்திருக்காங்க.

அண்ணா, அவரை கிளம்பச் சொல்றீயா? நான் போகவா? சுவேரா சினமுடன் ஆத்விக்கை பார்த்தாள்.

ஆத்விக் கவினை பார்க்க, கவின் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அழைப்பு வந்தது. அதை அவன் அணைத்தான். மீண்டும் அழைத்தது.

“அம்மாவுக்காக மட்டுமல்ல எல்லாருக்காகவும் தான் கேட்கிறேன்” என்று அலைபேசியை எடுத்து காதில் வைத்து, “வாரேன் சார்” என்று மூவரையும் பார்த்து, “நான் சொல்லீட்டேன். முடிவெடுங்க” என்று நிற்காமல் வெளியேறினான்.

துருவினி அவன் பின்னாலே வந்து, உனக்கு அவளை பிடிச்சிருக்கு நேரடியா சொன்னால் குறைஞ்சா போயிருவ கத்திக் கொண்டே அவன் பின்னே ஓடினாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.

கவின் ஏதும் பேசாமல் அவளையும் அவர்கள் ஆபிஸையும் பார்த்துக் கொண்டே பைக்கை விரட்டினான்.

இவன..என்று துருவினி ஆத்விக்கை காண சென்றாள்.

“அத்து” அவள் அழைக்க, சுவேரா அழுது கொண்டிருந்தாள்.

சுவா, எதுக்கு அழுற?

“அவருக்கு விருப்பமில்லாமல் எதுக்கு இப்படி சொல்லணும்?”

ஆத்விக் அமைதியாக அவளை பார்த்தான்.

அய்யோ சுவா, அப்படியில்லை துருவினி பேசத் தொடங்க, வினு உன்னோட வேலையை பாரு. எதையும் பேச வேண்டியவங்க பேசணும் இல்லைன்னா பிரச்சனை எதிர்காலத்தில் வரும் கத்தினான் ஆத்விக்.

“சுவா, இப்படி அழணும்ன்னா நீ வீட்டுக்கு கிளம்பலாம்” ஆத்விக் ரூடாக பேசினான்.

சுவேரா கண்ணை துடைத்து விட்டு வெளியேற, துருவினி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“துருவினி” உன்னோட கேஷ் விவரம் எனக்கு வரலை சினமுடன் அவன் சொல்ல, அவனை முறைத்து “அனுப்புறேன் சார்” வெளியேறினாள். ஆத்விக் புன்னகையுடன் செல்லும் துருவினியை அவன் லேப்பில் பார்த்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் துருவினியும் உத்தமசீலனும் பசங்களுடன் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்.

கேரேஜூல் உள்ள அவனது காரை ஆரியன் எடுத்தான். பசங்களை பள்ளியிலும், துருவினியை ஆபிஸிலும் விட்டு ஆரியன், அதியா, உத்தமசீலன், அதிவதினி, சுகுமார் அதி குரூப்ஸ் கம்பெனிக்குள் நுழைந்தனர்.

அதியா தைரியமாக நிமிர்வுடன் அனைத்தையும் கவனித்துக் கொண்டே ஆரியனுக்கு சமமாக வேகமாக நடந்தாள். ஆரியன் முதல் நாள் மாலையின் பின் அவளுக்கான எல்லா பயிற்சியும் கொடுத்திருந்தான்.. அவளும் சரியாக பின்பற்றினாள்.

போர்டுமெம்பர்ஸ், ஆபிஸ் ஊழியர்கள், ஷேர் கோல்டர்ஸ்..மற்ற ஆபிஸ் ஆட்கள் எல்லாருடனும் அதியாவை பேச வைத்து பழக்கப்படுத்த தொடங்கினான். அவன் எண்ணியது போல அதியா ஒவ்வொன்றையும் கவனமாகவும் சரியாகவும் செய்ய, வீட்டினர் நெகிழ்ந்து போயினர்.

அன்றிரவு வீட்டிற்கு வந்த அதியா சாப்பிட கூட எண்ணாமல் நேராக படுக்கைக்கு சென்று படுக்கையில் விழுந்தாள். அவளை பார்த்துக் கொண்டே ஆரியன் ஆடையை மாற்றி விட்டு பசங்களை பார்க்க சென்றான்.

“அதிம்மா” ஆகர்ஷனா அறைக்குள் வந்தாள். அதியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஆகர்ஷனா அவளருகே அமர்ந்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஷனா, என்ன பண்றீங்க?” ஆரியன் அதியாவை பார்த்துக் கொண்டே கையில் பாலுடன் வந்தான்.

அப்பா, அதிம்மா தூங்குறா? ஆகர்ஷனா சொல்ல, “அதிம்மா நிறைய பேசினாளா? அதான் தூங்கிட்டு இருக்கா. நீ வா” என்று அவளை வெளியே அழைத்து வந்து மடியில் அமர வைத்தான்.

துருவினியுடன் அமர்ந்திருந்த தர்சனும் ஆரியன் அருகே வந்து அவனை பார்க்க, அவனை மடியில் அமர்த்தி, “இருவரும் நான் சொன்னால் கேட்பீங்கல்ல?” கேட்டான் ஆரியன்.

துருவினியும் உத்தமசீலனும் அவனை பார்த்தனர்.

துரு இன்று போல நம்ம அத்து கூடவே வந்திரு. நிம்மதியா என் வேலையை பார்ப்பேன் ஆரியன் சொல்ல, அவனை முறைத்தாலும் அவன் வேலை என மனதில் எண்ணி “சரி” என்று அவள் தலையாட்டினாள்.

பசங்களா..அதிம்மா, இதுவரை வேலைக்கு சென்றதேயில்லை வீட்டிற்கு வந்ததும் தூங்கிட்டான்னா தொந்தரவு செய்யக் கூடாது புரியுதா? கேட்டான்.

அதிம்மா கூட பேச முடியாதா? தர்சன் வருத்தமாக கூற, ஆகர்ஷனா பயத்துடன், “அம்மா மாதிரி அதிம்மாவை என்னுடன் பேச மாட்டாங்களா ஆருப்பா?” கேட்டாள்.

“யார் சொன்னா?” கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வந்திருவா. இந்த இரண்டு நாள் நீங்க அவளை தேடுனீங்களான்னு தெரியல. ஆனால் அவ உங்களை ரொம்ப மிஸ் பண்ணா..

“அண்ணா” துருவினி அழைக்க, ஆமா பசங்களை பார்க்கணும்ன்னு அடிக்கடி கேட்டா. அவங்களும் நீயும் பழகிக்கோங்க. இனி இப்படி தான் இருக்கும்ன்னு சொன்னேன்..

“அப்படின்னா நாங்க அதிம்மா கூட விளையாட முடியாதா?” தர்சன் கேட்டான்.

“யார் சொன்னா? அதான் உங்க எல்லாருக்கும் லீவு இருக்கே” உத்தமசீலன் சொல்ல, “தாத்தா அதிம்மா எப்ப எழுந்திருப்பாங்க?” ஆகர்ஷனா கண்கலங்க கேட்டாள்.

“நான் வந்துட்டேன்” கண்ணை கசக்கிக் கொண்டே அதியா அவர்களிடம் வந்து அமர்ந்தாள். ஆரியனிடமிருந்து பசங்க அவளிடம் தாவினர்.

“என்ன அதிம்மா தூங்க போயிட்ட. நீ ரொம்ப நேரம் தூங்கிட்டா பேச முடியாதுல்ல?” ஆகர்ஷனா கேட்டாள்.

பத்து நிமிடத்துக்கு மேல தூங்க மாட்டேன். ஓ.கே வா? கையை உயர்த்தினாள் அதியா.

ம்ம்..வாரேன் வாரேன் சலிப்புடன் துருவினி சமையற்கட்டுக்குள் சென்று அதியாவிற்கு காஃபியுடன் வந்து அவளிடம் கொடுத்து விட்டு அமர்ந்தாள்.

“அப்பா, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கணும்” துருவினி சொல்ல, நாங்க நால்வரும் போயிட்டு வாரோம் அதியா ஆரியனை பார்த்தாள்.

ஐய்யா ஜாலி. பசங்க குதித்தனர்.

“பார்த்து வாங்கிடுவீயா அண்ணா?” துருவினி கேட்க, “வாங்கிடலாம்” என்றான் ஆரியன்.

சரி, அவங்க போயிட்டு வரட்டும். நீ கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வாம்மா உத்தமசீலன் சொல்ல, துருவினி அறைக்கு சென்றாள். இவர்கள் குடும்பமாக பொருட்கள் வாங்க இன்பமுடன் சென்றனர்.

ஆத்விக் ஆபிஸில் ஆத்விக் அபிமன்னிடம் கொடுக்கும் வேலையை மட்டும் செய்து கொண்டு அமைதியாகவே வலம் வந்தான். அவ்வப்போது நிகிதா தன் கணவனை பார்த்துக் கொண்டும் வேலையை செய்து கொண்டும் இருந்தாள். எல்லாரும் இருவரையும் கண்டும் காணாதது போல் இருந்தனர்.

சுவா, நேற்று உன்னோட ப்ரெண்டோட போனேல்ல உனக்கு ஆடை எடுத்துட்டியா? துருவினி கேட்க, ஆமா வினு..வேண்டாம்ன்னு சொன்னேன். ஆன்ட்டி தான் எடுத்து கொடுத்துட்டாங்க. பார்க்குறியா?

“வந்துட்டேன்” என்று துருவினி எழ, “நானும் பார்க்கலாமா?” லாவண்யா கேட்டாள்.

“வா பாரு” அவர்கள் மூவரும் அதனை பார்க்க, இது எந்த ஷாப் சுவேரா? லாவண்யா கேட்டாள்.

“நீயும் வாங்கணுமா?”

“ஆமா, எனக்கு சூட்டே ஆகாத ஆடை வாங்கணும்” லாவண்யா சொல்ல, எல்லாரும் அவளை பார்த்தனர்.

சாய் புன்னகைக்க, நேசன் வருத்தமுடன் அவளை பார்த்தான்.

“என்னடி மாப்பிள்ளை பார்க்க எவனும் வாரானா?” துருவினி கேட்க, லாவண்யா முகம் வாடியது.

லாவா, இப்படி செய்தால் தடுக்க முடியும்ன்னு நினைக்கிறியா? துருவினி கேட்க, என்னால முடிந்தவரை தடுக்கணும்..

இல்லைன்னா சுவேரா கேட்க, அவளை பார்த்து முகம் வாடிய லாவண்யா, கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்.

நீ அவங்க இருவரையும் அமர வைத்து பேசலாம்ல்ல சுவேரா கேட்டாள்.

நான் பேசி பார்த்துட்டேன். இருவரும் பார்த்தாலே முறைச்சுக்கிறாங்க. என்னால சண்டை வளர தான் செய்யும். அதனால் தான் இருவரும் அரேஞ்ச் பண்ணறவங்கல்ல பார்க்க போறேன். யாராவது என்னிடம் நன்றாக நடந்து கொண்டால் கல்யாணம் பண்ணிப்பேன்.

“எனக்கு இது சரியாக படலை” சுவேரா கூறினாள்.

“எனக்கு வேற வழியில்லை” என்று அவள் ஆடையை பார்த்து, உங்களுடையது அழகா இருக்கு என்றாள்.

உனக்கு வேணுமா? சுவேரா கேட்டாள்.

வேண்டாம். நீங்க இன்று ப்ரீயா இருப்பீங்களா? நாம அந்த ஷாப் போகலாமா? லாவண்யா சுவேராவிடம் கேட்டாள்.

நாளை என்னோட ப்ரெண்டோட மேரேஜ் இருக்கு சுவேரா சிந்தித்தாள்.

ஈவ்னிங் சீக்கிரம் கிளம்பிடுவோம்ல்ல. நானும் வாரேன் துருவினி கூறினாள்.

“வினு, உனக்கு ஆடை வாங்கணுமா?” சுவேரா கேட்க, ஏற்கனவே வச்சிருக்கேன். எனக்கு வேண்டாம். சும்மா வரலாம்ல்ல? வரக் கூடாதா? துருவினி கேட்க, அச்சோ வினு வராமலா? சுவேரா புன்னகைத்து கையை தூக்கினாள்.

ஆத்விக் உள்ளே வந்தான்.

“வேலை செய்யும் போது என்ன பேசிட்டு இருக்கீங்க?” ஆத்விக் கேட்டான்.

“சார், நாங்க டிஸ்கஸ் பண்ணீட்டு இருக்கோம்” லாவண்யா சொல்ல, வாயில் கையை வைத்து நேசன் அவளை பார்த்தான்.

ம்ம்..ஆத்விக் துருவினியை பார்த்துக் கொண்டே அவனறைக்கு சென்றான்.

லாவா, எதுக்கு சாரிடம் பொய் சொன்ன? நேசன் கேட்டான்.

பொய்யா? நாங்க டிஸ்கஸ் தான பண்ணீட்டு இருந்தோம். சார் கேஷ் பற்றி என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று லாவண்யா சுவேராவையும் துருவினியையும் பார்க்க, சுவேரா புன்னகையுடன் லாவண்யாவுடன் “ஹை பை” போட்டுக் கொண்டாள்.

சாய் சிரிக்க, நேசன் அவர்களை முறைத்தான். ஆத்விக் அவன் கேபினில் அமர்ந்து இவர்களை பார்த்துக் கொண்டிருப்பது இவர்களுக்கு தெரியவில்லை.

“ஓ.கே ஈவ்னிங் கிளம்பலாம்” சுவேரா சொல்ல, அவரவர் வேலையை தொடர்ந்தனர்.

மாலை நேரம் எல்லாரும் வீட்டிற்கு கிளம்பும் முன் அண்ணா, நாங்க பொட்டிக் போகணும். அழைச்சிட்டு போயேன். கொஞ்ச நேரம் தான் சுவேரா ஆத்விக்கிடம் கேட்டாள்.

யாரோட போகணும்?

வினு, நாம, அப்புறம் லாவா..

நான் சொன்னது போல ப்ரெண்ட்ஸ் பிடிச்சிட்ட போல..

இப்ப தான் பேசிட்டு இருக்கேன்.

“போகலாம்” அவன் புன்னகையுடன் அகன்றாள்.

ஆத்விக் காரில் துருவினியும் சுவேராவும் ஏறிக் கொண்டனர். லாவண்யா அவர்களை பின் தொடர்ந்தாள்.

துருவினியின் காதல் தெரிந்ததில் இருந்து ஆத்விக் அவளிடம் அதிகமாக பேசுவதை நிறுத்தி விட்டான். ஆனால் அவள் மீதுள்ள காதலோ, அவளை தீண்டும் பார்வையோ இருக்க தான் செய்தது.

இப்பொழுதும் காரை ஓட்டிக் கொண்டே அவளையும் கவனிக்க தான் செய்தான். அதி துருவினிக்கும் தெரிந்தது. சொல்லப்போனால் அவளுக்கு ஆத்விக்கின் விலக்கம் வருத்தியது. அபிமன் தான் காதலித்ததை அறிந்து கொண்டான் என்றதுமே அவளுக்கு பெரிய ரிலீப்ஃபாக இருந்தது.

அபிமன்- நிகிதா இடையே பேச்சு வார்த்தையில்லை. அபிமன் முகத்தில் சிரிப்பே இல்லாமல் போனது. நிகிதா கண்ணில் அவன் தன்னுடன் பேச மாட்டானா? தன் தோழி பழையவாறு பேச மாட்டாளா? என்ற ஏக்கம் இருந்தது.

லாவண்யாவிடம் நிகிதா பேச சென்றாலும் அவள் சொல்ல வருவதை காதில் கூட வாங்காத கோபத்தில் இருந்தாள் லாவண்யா.

ஷாப் செல்லவும் லாவண்யாவிற்கு ஆடையை பார்த்தனர்.

லாவா, இதை பாரேன். உனக்கு ரொம்ப அழகா இருக்கும் சுவேரா வெஸ்டனுடன் கலந்த லாங் கவுன் ஒன்றை எடுத்தாள்.

இதெல்லாம் வேண்டாம் சுவேரா..

“ஏய், என்ன சுவேரா? கால் மீ சுவா” சுவேரா அதட்டலாக கூற, “ஓ.கே வரா” என்றாள் லாவண்யா. அவளது வராவில் கையில் வைத்திருந்த ஆடையை கீழே நழுவ விட்டாள் சுவேரா. ஆத்விக் அமர்ந்து மேகசின் பார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்தான்.

என்னாச்சு? துருவினி இருவரையும் பார்த்து கேட்டாள்.

வரா..நல்லா இருக்குன்னு அழைத்தேன். உனக்கு பிடிக்கலைன்னா நான் அழைக்கலை லாவண்யா பதற, சுவேரா கண்கலங்க ஆத்விக்கை பார்த்தாள். அவன் அழாதே! தலையசைத்தான்.

“எதுக்கு அழுற? நான் இனி அப்படி கூப்பிட மாட்டேன். சாரி” என்றாள் லாவண்யா.

இல்ல லாவா, நீ கூப்பிடு என்ற சுவேரா கண்ணை துடைத்து விட்டு வெற்று புன்னகையை உதிர்த்தாள்.

லாவண்யா அவளை அணைத்து, உன்னை ஹர்ட் செய்திருந்தால் சாரி சுவேரா. நான் உன்னை சுவேரான்னே அழைக்கிறேன்..

அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னோட அண்ணா ஆரவ் நினைவு வந்திருச்சு. அவன் மட்டும் தான் என்னை வரான்னு அழைப்பான்.

ஓ..சாரி சாரி..என்றவள் செய்வதறியாது துருவினியை பார்த்தாள்.

“லாவாவிற்கு ஆடை வேண்டாமாம். கிளம்பலாம்” துருவினி சொல்ல, கீழே விட்ட ஆடையை தேடினாள் சுவேரா.

எனக்கு அதெல்லாம் வேண்டாம்..

“ஏன்டி? உனக்கு அழகா இருக்கும்” துருவினி சொல்ல, துரு..என்னிடம் பணம் குறைவா தான் இருக்கு.

உன்னோட அம்மா, அப்பா கொடுக்கும் பணம் இருக்கும்ல்ல?

இருந்தது. அவங்க அனுப்பிய ஆள் என்னை கஷ்டப்படுத்தியதால் நான் அவங்களிடம் உங்க பணம் வேண்டாம்ன்னு வீராப்பாக தெரியாமல் சொல்லீட்டேன். அவங்களும் இந்த மாதம் கொடுக்கவில்லை.

“உன்னோட வாய் சும்மாவே இருக்காதா?” துருவினி திட்ட, அவள் தலைகவிழ்ந்து நின்றாள்.

மேம், இந்த கலெக்சனெல்லாம் ஆஃபர் போட்ருக்கோம் பொட்டிக் நடத்துபவர் கூற, “அதெல்லாம் வேண்டாம்” என்ற சுவேரா அவள் எடுத்த ஆடையை எடுத்து, இதை போட்டு வா. உனக்கே தெரியும்.

பணம் கம்மியா இருக்கு..

“அண்ணா” சுவேரா ஆத்விக் முன் வந்தாள். மேகசினை பார்த்துக் கொண்டே அவன் கார்டை நீட்டினான்.

“வாங்க வேண்டாம் சுவேரா. நான் முதல்ல போட்டு வாரேன்” லாவண்யா செல்ல, சுவேராவும் அவள் பின் சென்றாள்.

துருவினி ஆத்விக் அருகே வந்து அமர்ந்தான். அவளை பார்க்காமலே நீயும் எடுக்கலாம்ல்ல. நாளைக்கு பங்சன் இருக்குல்ல? நீ வருவேல்ல? ஆத்விக் கேட்டான்.

“எனக்கு இருக்கு அத்து” அலைபேசியை பார்த்துக் கொண்டே அவனிடம் பேசினாள். ஏற்கனவே அண்ணா அவங்க மேரேஜோட நிறைய வாங்கிக் கொடுத்துட்டாங்க. அது போதும். அண்ணாவும் அப்பாவும் வந்தால் கண்டிப்பாக வருவேன்..

ம்ம்..

நீங்க ஆடை எடுக்கலையா? அவள் கேட்க, ஆண்கள் ஆடை இருக்கும் பக்கம் பார்த்து விட்டு துருவினியை பார்த்தான்.

“எனக்கு செலக்ட் செய்து தர்றீயா?” அவன் கேட்க, ஹா..அதிர்ந்து பின்..நான் எப்படி? குரல் கம்மியது துருவினிக்கு.

ஆடை தான. இது கூட எடுத்து தர மாட்டாயா?

துருவினி ஆத்விக்கை பார்க்க, இருவர் கண்களும் மோதிக் கொண்டன.

“வினு” அழைத்துக் கொண்டே சுவேரா அவர்கள் முன் வந்தாள். இருவரும் அவளை பார்க்க, கடை நடத்துனர் பொண்ணோ..இந்த பொண்ணு இப்படி டிஸ்டர்ப் பண்ணீட்டாளே! என்று அவர்களை கவனித்தார்.

“இங்க பாரு” விலகினாள் சுவேரா.

ஆத்விக் லாவண்யாவை இமைக்காமல் பார்த்தான். துருவினி அவனை முறைத்துக் கொண்டே லாவண்யாவிடம் வந்து அவளை சுற்றி பார்த்து சிரிக்க தொடங்கினாள்.

இரு பக்கமும் லேசான கையுடான சிறிய ஸ்ட்ரிப்பும் மார்பகத்தில் முன்னே லேசான தொளதொளவென உடலை ஒட்டியும் தொடைப்பகுதியில் கிழிந்தும் சிவப்பு நிற சாஃப்ட்டான ஆடையாக இருந்தது.

துரு, சிரிக்காத அவள் நிற்க முடியாமல் நின்றாள்.

துருவினி அவளை பார்த்து, “அச்சு அசல் பொம்மை மாதிரி இருக்க” மேலும் சிரித்தாள். உதட்டை தொங்க விட்டு லாவண்யா முகத்தை சுருக்க, க்யூட்டாக இருந்தாள்.

கடை நடத்தும் பொண்ணு அவளிடம் ஓடி வந்து,” மேம்..அப்படியே நில்லுங்க..நான் விளம்பரத்துக்கு ஸ்டில் எடுத்துக்கிறேன்” அலைபேசியை எடுத்தாள்.

சிரித்த துருவினி சீரியசாகி லாவண்யாவை மறைத்து நின்று, மேம் அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது என்று லாவண்யா பக்கம் திரும்பி, “வேண்டாம்ன்னா வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தானடி” துருவினி சொல்ல, ஏன் நல்லா இல்லையா? வருத்தமுடன் சுவேரா கேட்டாள்.

லாவாவுக்கு ரொம்ப ரொம்ப அழகா இருந்தது. அவளுக்கு இது போல் ஆடையெல்லாம் பிடிக்காது சுவா. எதுக்கு இப்ப மேக்அப் போட்டு விட்ட?  அவள் எளிமையாக இருக்க தான் விரும்புவாள் என்று துருவினி அவள் கைக்குட்டையை எடுத்து லாவண்யா உதட்டில் இருக்கும் உதட்டு சாயத்தை துடைத்து விட்டாள். லாவண்யா துருவினி செயலில் அழுதே விட்டாள்.

எதுக்குடி அழுற?

“ஐ லவ் யூ டி” லாவண்யா துருவினியை அணைத்தாள்.

என்னது லவ் யூ வா? ஆத்விக் கேட்க, சுவேரா சிரித்தாள்.

“அண்ணா, கவலைப்படாத. லாவா பொண்ணு தான்” சுவேரா ஆத்விக் காதில் சொல்ல, அவன் தலையை கோதிக் கொண்டே வெட்கமுடன் இருவரையும் பார்த்தான்.

இருவரும் அவனை பார்த்தனர்.

“சாரி துரு” லாவண்யா நகர, துருவினி அங்கிருந்த ஆடையை பார்க்க, “வேண்டாம் இரு. நான் வாரேன்” லாவண்யா அவள் அணிந்திருந்த ஆடையை மாற்றி வந்தாள்.

பெருமூச்சுடன் சுவேரா லாவண்யா அருகே வந்து, சாரி லாவா..

“இருக்கட்டும்” என்று அவள் சிந்தனையுடன் சுவேராவை பார்த்தாள்.

வரான்னே அழை. இனி நான் அழ மாட்டேன். கூப்பிட அண்ணன் தான் இல்லை. நீ இருக்கேல்ல சுவேரா அவளை அணைக்க, லாவண்யாவிற்கு ஒரு மாதிரி ஆனது.

உன்னோட அண்ணாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா?

ம்ம்..நான் அதிக நேரம் அவனுடன் தான் செலவழித்து இருக்கேன் சுவேரா சொன்னாள்.

ஓ..

ம்ம்..

என்ன ஆடை வேணும்? சுவேரா கேட்க, “புடவை எடுக்கலாம்ல்ல?” துருவினி கேட்க, “அவனை பார்க்க புடவையா?”

உனக்கு அவனை பிடிக்கலையா?

இல்ல சார், இன்னும் பார்க்கவேயில்லை. எனக்கு பார்க்க போகவே பயமா இருக்கு. அதான்..வருத்தமானாள் லாவண்யா.

சரி, புடவையே மிகவும் எளிமையானது போதும் என்று சாஃப்ட் பூனம் ஒன்றை எடுத்தாள். அறுநூறு ரூபாய் தான். பேபி பிங்கும் மஞ்சளும் கலந்து அதுவும் அவளுக்கு அழகாக தான் இருந்தது.

“இதுவும் அழகா இருக்கே” சுவேரா சொல்ல, அப்படின்னா வேண்டாம் லாவண்யா அதை வைக்க போக, கொன்றுவேன். ஒழுங்கா இதை எடுத்துக்கோ துருவினி சினமுடன் சொன்னாள்.

“சரி” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு லாவண்யா பெற்றுக் கொண்டு அவளே பணம் செலுத்தினாள். இவர்களை இரு விழிகள் நோக்கிக் கொண்டிருந்தது.

ஆண்களின் ஆடை பகுதிக்குள் துருவினி செல்ல,” துரு எப்போதிலிருந்து பசங்க ஆடையை உடுத்த ஆரம்பிச்ச?” லாவண்யா கேட்க, “அத்துவிற்கு” துருவினி சொல்ல, வாட் அதிர்ந்து அவனை பார்த்தாள் லாவண்யா.

“அண்ணா, என்ன நடக்குது?” சுவேரா கேட்டாள்.

அவளால் தான் என் காதலை ஏத்துக்க முடியாதுல்ல. நாளை அணிய ஆடையை எடுக்க சொன்னேன் ஆத்விக் துருவினியை பார்த்துக் கொண்டே பேசினான்.

என்னது? சார் நீங்க துருவை லவ் பண்றீங்களா? அவ ஏத்துக்கலையா லாவண்யா கேட்க, அவன் ஏதும் கூறாமல் துருவினியை பார்த்தான். அவள் எதையும் கேட்கவில்லை என்பது போல அவனுக்கு பார்ட்டிக்கு வியர் கோர்ட் சட்டையை எடுத்தாள்.

“அடியேய், சார் சொல்றது உண்மையா? உனக்கு அவரை பிடிக்கும் தான? ஏன் ஏத்துக்கலை. அபிக்கு குழந்தையே பிறக்க போகுதுடி. இன்னுமா அவனை நினைச்சிட்டு இருக்க?” துருவினி தலையில் அடிக்க, அவள் சினமுடன் லாவண்யாவை பார்த்து, “லாவா தேவையில்லாமல் பேசாத. எனக்கு நேரம் வேண்டும்” என்று ஆத்விக்கை பார்த்து, “சாதாரணமாக ட்ரை பண்ணீட்டு வாங்க அத்து” அவனிடம் கொடுத்தாள். அவன் இவர்களை பார்த்துக் கொண்டே சென்றான்.

லாவண்யா துருவினியை அவள் பக்கம் திருப்பி, “எது தேவையில்லாதது?” சினமுடன் கேட்டாள்.

அபி மீதான காதல்..

“ரொம்ப லேட்டா புரிஞ்சிருக்க” லாவண்யா சொல்ல, நீ கிழவி மாதிரி பேசாதடி. உன்னோட அம்மா, அப்பாவை தவிர்க்க முடியாமல் எவனையோ கல்யாணம் பண்ணிக்கப் போற..நீ பேசாத..

அய்யோ, இருவரும் நிறுத்துங்க. லாவா..அதான் நேரம் வேணும்ன்னு சொல்றால்ல. வினுவை விடு என்றாள்.

லாவண்யா அவள் புடவையுடன் கையை கட்டிக் கொண்டு க்யூட்டான கோபமுடன் சென்று அமர்ந்தாள். துருவினி அவளருகே அமர்ந்து அவள் புடவையை வாங்க, லாவண்யா அவள் கையில் அடித்து, “போடி” என்றாள்.

சுவேரா லாவண்யாவின் மறுபக்கம் அமர்ந்து கன்னத்தில் கையை வைத்து அவளையே பார்க்க, “எதுக்கு இப்படி பாக்குற? எனக்கு எப்படியோ இருக்கு”.

எனக்கு க்யூட்டா இருக்கு. அதான் ரசிக்கிறேன்..

க்யூட்டா இல்லை கோபமா இருக்கேன்.

“கோபமே தெரியல” சுவேரா புன்னகைத்தாள்.

“நான் கோபமாக தான் இருக்கேன்” கையை கட்டிக் கொண்டு மீண்டும் முகத்தை திருப்பினாள். இவர்களை கவனித்துக் கொண்டிருந்த இரு விழிகளுக்கு சொந்தக்காரனின் இதழ்கள் லாவண்யாவை பார்த்து விரிந்தது.

ஆத்விக் துருவினி எடுத்த ஆடையை போட்டு வந்தான்.

“வாவ் அண்ணா, சூப்பரா இருக்கு” சுவேரா சொல்ல, ஆத்விக் ஏதும் சொல்லாமல் துருவினியை பார்க்க, அவள் அவனை பார்த்து விட்டு லாவண்யாவை பார்த்தாள்.

“சார், கிளம்பலாமா? நேரமாகுது. எங்க வார்டன் திட்டுவாங்க” என்று கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டே ஆத்விக்கிடம் கேட்டாள்.

கிளம்பலாம். வந்துடுறேன் என்று ஆத்விக் ஆடையை மாற்றி அதை பேக் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். ஆத்விக் அவளை கவனிக்கவில்லை என்பதை தெளிவாக கவனித்து, அவனை ரசனையுடன் பார்த்துக் கொண்டே காரில் ஏறி வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.