எதுக்கு சார் வெயிட் பண்ண சொன்னீங்க? துருவினி கேட்க, எல்லாரும் சென்று விட்டார்களா? என கன்பார்ம் செய்து கொண்டு, வினுக்கு மாலை கூட போட முடியலையா?ஆத்விக் கேட்டான்.
துருவினி ஏதும் பேசாமல் நின்றாள். அவளை நெருங்கிய ஆத்விக், அவள் எதிர்பாராத நேரம் அவளை இழுத்து தன் கைக்குள் வைத்து, “மாலை போட முடியாதாடி” உரிமையுடன் கேட்டாள். அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.
“சொல்லு? அவன் கேட்டவாறு அவளது உதட்டை பார்க்க, கண்ணை மூடிக் கொண்டு. அத்து இது ஆபிஸ். நம்ம வீடில்லை.
நம்ம வீடா? புன்னகையுடன் நீ இன்னும் நம்ம வீட்டுக்கு வரலையே! கேட்டான்.
நான்..நாம்..ப்ளீஸ் விடுங்க அத்து. யாராவது பார்த்தால் தப்பா பேசுவாங்க..
பேசட்டும். நாம தான கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.
அவனை தள்ள முயன்று தோற்ற துருவினி, நாம கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். முடியாது. நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
ஒத்துப்ப அவளது கண்ணை அவன் கூர்மையான கண்ணுடன் நோக்கினான்.
இல்ல, ஒத்துக்க மாட்டேன்.
ஒத்துப்ப.
ஒத்துக்க மாட்டேன் அத்து..
ஒத்துப்ப. ஒத்துக்க வைப்பேன் என்று அவள் கன்னத்தை பிடித்து, “உன்னை ஒத்துக்க வைக்க என்னால முடியும்” என்று அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
“அத்து” அவள் நகர்ந்து வேகமூச்சுகளுடன் வாயில் கை வைத்தாள். கண்களில் நீர் கோர்க்க ஆத்விக்கை பார்த்து, நீங்க எனக்கு நேரம் தருகிறேன்னு சொன்னீங்க. இப்படி ஹர்ட் பண்ணுவீங்கன்னு நினைக்கலை.
வினு, என்னை வேண்டாம்ன்னு மட்டும் சொல்லீறாத. அவன் வேற பொண்ணை காதலிக்கிறான்னு தான சொன்ன? உன் மனதிலிருந்து அவனை எடுக்க தான் இப்படி செய்தேன் சாரி..
“என்ன விளக்கம் சொன்னாலும் என் விருப்பமில்லாமல் எனக்கு முத்தம் கொடுத்தது தவறு தான்” கண்ணை துடைத்து உங்களை பார்க்கவே பிடிக்கலைன்னு அவள் நகர,
அவளை இழுத்து அணைத்த ஆத்விக், கண்கலங்க சாரி வினு. உனக்கு ஹர்ட் ஆகும்ன்னு எண்ணாமல் போயிட்டேன். எனக்கு நீ கண்டிப்பாக வேண்டும். உன்னால தான் என் வாழ்க்கையை முழுதாக்க முடியும். என்னை விட்டு போயிறாத. சாரி வினு அழுதான்.
சார் ப்ளீஸ், நாம இப்ப ஆபிஸ்ல்ல இருக்கோம். யாரும் பார்த்தால் என்னோட பெயர் கெட்டு விடும்.
“வினு” ஆத்விக் சினமுடன் அழைத்து பின் தலையில் தட்டி கண்ணை மூடி திறந்து, “சாரி வினு. இனி இவ்வாறு நடக்காது. இனி நீயாக தான் என் பக்கம் வரணும்” என்று வாசலருகே கையை காட்ட, அவள் சென்றுவிட்டாள்.
ஆத்விக்கோ மனம் தாளாது அமர்ந்திருந்தான்.
சற்று நேரத்தில் அலைபேசியில், “ஒரு டீ எடுத்துட்டு வாங்க” சொல்லிய ஆத்விக், “தான் அழைத்தது அவன் வினுவை” என்று உணரவில்லை. அவள் வேலை நிமித்தமாக டீ போட சென்றாள்.
அதே நேரம் வந்தவனை பார்த்து அவளுடன் வேலை செய்பவர்கள் அதிர்ந்தனர்.
நேராக ஆத்விக்கை பார்க்க சென்றான் அபிமன்.
ஹாய் சார், அவன் கையை நீட்ட, ஹாய் என்று ஆத்விக் கை குலுக்கினான்.
துருவினியிடம் பேச வந்த நேசனை நிறுத்தினான் லாவண்யா.
“என்ன?” சுவேரா கேட்க, “நீ கொண்டு போ” லாவண்யா சொல்ல, எல்லாரையும் பார்த்து சென்றாள் துருவினி.
நிகிதாவை பார்த்து, “யார் அவர்?” கேட்டாள்.
“அவர் என்னோட ஹஸ்பண்ட்” என்றாள் நிகிதா.
“அதுக்கு ஏன் இவ்வளவு ஷாக்?” சுவேரா கேட்டாள்.
எங்கள் திருமணத்தை துருவினி தான் செய்து வைத்தாள். நாங்க ஓடி வந்து தான் திருமணம் செய்து கொண்டோம். எங்க அப்பா அபியை எனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டேன்னு சொல்லீட்டாங்க. அதனால யாருக்கும் தெரியாமல் தப்ப எண்ணி அவளுடன் சேர்ந்து எங்கள் வீட்டில் மாட்டிக் கொண்டோம்.
அந்நேரம் என்னோட சொந்தங்கள் ஆரியன் அண்ணாவையும், அவங்க மனைவியும் ஒருவரை ஒருவர் ஏமாத்திட்டு வேறொருவருடன் வாழ்கிறார்கள் என்று அவளுக்கு நேராக பேசி விட்டார்கள். அபியும் நானும் எங்களது திருமணத்தில் கவனமாக இருந்திட்டு அவளை விட்டுட்டோம். ரொம்ப அசிங்கமாக பேசி அவளை கஷ்டப்படுத்திட்டாங்க. அதனால் எங்கள் மீது கோபமாக இருக்கா. அதிலிருந்து அவள் எங்களிடம் பேசவில்லை. அபிக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அவன் பேசியும் அவள் பேசவில்லை. அதான் இப்ப அவளை சமாதானப்படுத்த..என்று சுவேராவை பார்த்தாள்.
ஆத்விக் அறைக்கு சென்ற துருவினி, “இப்ப மட்டும் அவன் கிஸ் பண்ணட்டும். அப்புறம் வச்சுக்கிறேன்” என்ற சிந்தனையுடன், “எக்ஸ்யூஸ்மி சார்”.
“எஸ்”.
வினுவா அலைபேசியை எடுத்தது அவன் யோசனை அவளாக, ஆத்விக்கை பார்த்துக் கொண்டே “சார் டீ” என்று அருகே நின்ற அபிமன்னை பார்த்து அதிர்ந்து இருவரையும் முட்டக்கண்ணால் மாறி மாறி பார்த்தாள்.
“துரு” அபிமன் அழைக்க, படாரென கையிலிருந்து ட்ரேயை கீழே போட்டாள். டீ முழுவதும் அவள் மீது சூடாக கொட்ட இருவரும் பதறி அவளிடம் வந்தனர். அழுது கொண்டே ஆடையை சரி செய்த துருவினியை முதலில் நெருங்கியது அபிமன் தான்.
அவன் அவள் ஆடையில் கையை வைக்க, வேகமாக அவனை விட்டு விலகி அழுகையை நிறுத்தி, காற்றை வெளியே ஊதித் தள்ளி அவன் முன் கையை உயர்த்தி, “தொடாத” என்றாள்.
“வினு, என்ன பண்ணீட்டு இருக்க?” ஆத்விக் அவளருகே வர, வேகமாக எழுந்து அவனது ஓய்வறைக்கு ஓடி கதவை சாத்திக் கொண்டாள்.
“உனக்கு வினுவை தெரியுமா?” அபிமன்னிடம் ஆத்விக் கேட்க, நாங்க கல்லூரியில் ஒன்றாக படித்தோம்.
“ஒன்றாக படித்தீங்களா? அப்ப அவளோட இங்க வேலை பார்க்கும் தோழியின் காதலனா?” ஆத்விக் கேட்க, “திருத்திக்கோங்க சார். காதலன் இல்லை. கணவன்”.
“கணவனா? உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா?” ஆத்விக் அதிர்ந்து கேட்க, ஆமா..எங்க திருமணம் நடக்க உதவியதே துரு தான்.
“வாட்?” மேலும் அதிர்ந்த ஆத்விக், வினு நினைவில் படாரென கதவை திறந்து “சுவா..உள்ள வா” அழைத்து, “போ. உள்ள வினுவை பாரு” பதட்டமாக சொன்னான் ஆத்விக்.
அனைவரும் அவனை விழித்து பார்க்க, “என்னாச்சு அண்ணா?” அவள் கேட்க, “போ பாரு” என்று சொல்லி விட்டு லாவண்யாவை உள்ளே அழைத்து கதவை மூடினான். நிகிதா பதட்டமுடன் அறையை பார்த்தாள்.
“இந்தா” என்று பணத்தை லாவண்யா கையில் திணித்து “வினுவிற்கு ஆடை வாங்கிட்டு வா” என்று சொல்ல, நகர போனவள் கையை பிடித்து
இதுல்ல..இதுல்ல..அவன் தயங்கி நிற்க, புரியுது சார். நான் வாங்கிட்டு வாரேன் என்று அவன் கையை எடுத்து விட்டு சென்றாள் லாவண்யா. அபிமன் கையை கட்டிக் கொண்டு ஆத்விக்கை பார்த்தான்.
ஆத்விக் அவனை முறைத்து விட்டு அறைக்கு வெளியே நின்று சுவா, “வினு ஓ.கே தான? டாக்டர்ஸை வர வைக்கணுமா?” கேட்டான்.
“அண்ணா, முதல்ல நீ அமைதியா இரு” உள்ளிருந்து சினமுடன் சத்தமிட்டாள் சுவேரா.
“என்ன திட்டுறா? இப்ப டாக்டரை வர வைக்கவா? வேண்டாமா? காயம் பலமா இருக்குமா? இல்லையா?” அவன் முணங்கிக் கொண்டே நிற்க, “பாஸ்..இதை கொடுங்க” ஆத்விக் கையில் அபிமன் ஒரு ஆயின்மென்ட்டை கொடுத்தான்.
எங்களுக்கு இது வேண்டாம்..
“உங்களுக்கு யார் கொடுத்தா? துரு..இதை போட்டுக்கோ சரியாகிடும்” அபிமன் சொல்ல, “அவளே வலியில அழுதுட்டு இருக்கா. நீ வேற” ஆத்விக் சொல்ல, கதவை திறந்த சுவேரா ஆயின்மென்ட்டை வாங்கி கதவை அடைத்துக் கொண்டாள்.
“சுவா, அது வேண்டாம்” ஆத்விக் சொல்ல, சுவேரா துருவினிக்கு மருந்தை போட்டு விட்டுக் கொண்டே, உன்னோட ப்ரெண்ட்ஸை மன்னிக்கலாம்ல்ல கேட்டாள். துருவினி காதில் வாங்காதது போல அவளது கடந்த கால வாழ்க்கைக்குள் சென்று விட்டிருந்தாள். சுவேரா பேசும் எதுவும் அவள் காதில் விழவில்லை. அவளை ஆழ்ந்து பார்த்த சுவேரா மருந்தை போட்டு விட்டு வெளியே வந்து, “அண்ணா நீ போ. பேசிட்டு வா” என்று சொல்ல, லாவண்யா ஆடையை கொடுத்தாள்.
சுவேரா அதை வாங்கி, “நீ இருடா” என்று ஆத்விக்கை நிறுத்தி, கொஞ்சம் வெளிய இருக்கீங்களா? சுவேரா அபிமன்னை பார்த்தாள்.
அவன் வெளியேற, ஆடையை மாற்ற துருவினிக்கு உதவி விட்டு, இப்ப போய் பாரு. பார்த்து பேசு. அவ ஹர்ட் ஆன மாதிரி இருக்கா. கேட்டால் சொல்ல மாட்டேங்கிறா..
“நான் பார்த்துக்கிறேன். நீ போ” அவளை அனுப்பி கதவடைத்து விட்டு ஆத்விக் அவள் ஓய்வெடுக்கும் அறைக்குள் சென்றான்.
படுக்கையில் தேம்பியவாறு படுத்திருந்தாள் துருவினி.
“வினு” ஆத்விக் அழைக்க, அவளிடம் பதிளில்லை.
சற்று சிந்தித்து, இது என்னோட ஆபிஸ். நான் இங்க வந்த முதல்ல நாளே அழுதுட்டு இருக்க? சினமுடன் பேசுவது போல் ஆத்விக் பேச, தேம்பல் பெரியதாகி அழுகை வெடித்தது துருவினியிடமிருந்து.
தலையை அழுத்தமாக கோதி அவள் முன் வந்து, “எல்லாத்தையும் நினைச்சு மொத்தமா அழுதிரு வினு. இதுக்கு மேல நீ அழக் கூடாது” அவன் அவளருகே படுக்கையில் அமர்ந்தான்.
“அத்து” அவன் இடுப்பை சுற்றி கையை போட்டு அவனை இறுக கட்டிக் கொண்டு துருவினி அழுதாள். கண்கலங்க ஆத்விக் முகத்தை திருப்பினான்.
அத்து, அவங்க காதலிப்பது தெரிந்த போது அதிர்ச்சியானேன். ஆனால் இருவருக்கும் இடையில் போக மனமில்லை. இருவருமே உண்மையாக காதலித்தாங்க. அதை காண காண ரொம்ப வலிக்கும். அதை கூட தாங்கிக் கொள்ள முடிந்தது.
நிக்கிக்கு அவங்க வீட்ல வேற பையனை பார்த்து மேரேஜ் செய்து வைக்க பார்த்தாங்க. அன்று அந்த திருமணத்தை நிறுத்தி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு நான் ஒரு வேகத்தில் சொல்லீட்டேன்.
அங்கே அபியோட சென்று திருமணத்தை நிறுத்த சென்ற போது நிக்கி கழுத்தில் இருந்த மாலையை பார்த்து அபியை பார்க்க, அவன் கண்ணீருடன் இருந்தான். அவளோட அண்ணன்கள் அபியை அடிக்கும் போது அவனை வலித்ததோ என்னமோ எனக்கு தெரியல..ஆனால் எனக்கு ரொம்ப வலித்தது.
அந்த மாப்பிள்ளையிடம் சென்று விசயத்தை எடுத்து பேசி புரிய வைத்தேன். அப்பொழுது என்னோட அண்ணா, அண்ணியை பற்றி தப்பா பேசினாங்க. ஆனாலும் அவன் பிரச்சனையை தீர்க்க தான் மனம் எண்ணியது. நான் பேசியதில் அந்த மாப்பிள்ளையே மாலையை என் கையில் கொடுத்து சென்றார். அவர் பின்னாலே அவள் குடும்பம் செல்லும் நேரம், நான் அவனிடம் கொடுக்கும் முன் நிக்கி அதை பறித்து அவனுக்கு போட்டு விட்டு, அவன் கையால் தாலியை கட்டிக் கொண்டாள்.
எனக்கு அப்பொழுது தான் நடப்பது புரிந்தது. நான் என் காதலை முழுதாக இழந்து விட்டேன்னு. அதை விட அவங்க இருவரும் என்னை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை. நான் அதிர்ந்து நிற்க, என்னை விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
தன் பொண்ணு செத்துட்டான்னு அவளோட அப்பா சொல்லி விட்டு, என்னை தான் கண்டபடி பேசினாங்க. எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? அந்த நேரம் என்னோட வலியை சொல்ல முடியாது என கதறியவள்..
என்னோட காதல் பறி போனதில் அழுவதா? இல்லை என்னோட அண்ணா, அண்ணியை தப்பா பேசிட்டாங்கன்னு அழவா? என்னை பற்றி கேவலமா பேசியதில் அழவான்னு தெரியல. சொல்லப் போனால் என்னை நினைத்து நானே அருவருப்பு பட்டேன்.
காலம் தாழ்ந்து தான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்தேன்னு புரிந்தது. என்னோட முட்டாள் தனத்திற்கு மூலக்காரணமே அபி மீதுள்ள என் காதல் தான். என்னால நடந்த எதையும் மறக்கவில்லை. அவனோட சந்தோசத்தை எண்ணிய நான் என்னை பற்றி மறந்தே போயிட்டேன். இந்த ஆறுமாதமாக யாரிடமும் சொல்ல முடியாமல் தவிச்சி இருக்கேன் தெரியுமா? கதறிக் கொண்டே ஆத்விக் மீது சாய்ந்து துருவினி மயங்கினாள்.
வினு..வினு..வி..னு..ஆத்விக் அழுது கொண்டே அவள் கன்னத்தை தட்ட, இதை கேட்ட அவளுடன் வேலை செய்பவர்களும், அபிமன் நிகிதாவும் அதிர்ந்து நிற்க, நிகிதாவிற்கு விக்கல் வந்தது. தண்ணீரை எடுத்து ஆத்விக் துருவினி மீது தெளிக்க அவள் விழித்தாள்.
நிக்கி..
“ஹே, கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வாங்க” அபிமன் சொல்வதை யாரும் கண்டுகொள்ளாமல் செல்ல, அவள் விக்கலுடன் மயங்கினாள்.
“ஏய், யாராவது வாங்கடா” அபி கத்த, அவன் குரலில் “அத்து அபி” என்று கீழே இறங்க வந்தவளை நிறுத்திய ஆத்விக், சன்னலை ஒதுக்கி பார்த்தான்.
அபி அழுது கொண்டே, “சார் தண்ணீர் இருந்தா தாங்க. அவ கர்ப்பமா இருக்கா” அபிமன் மேலும் அழுது கொண்டே அவளை தூக்க, ஆத்விக்கோ சினமுடன் அவர்களை பார்த்தான்.
துருவினியால் இப்பொழுது கூட அவன் அழுவதை பார்க்க முடியாது அவ்வறைக்கதவை திறந்து தண்ணீருடன் சென்றாள். அவள் பின்னே வந்த ஆத்விக் தண்ணீரை அவள் கையிலிருந்து வாங்கி தெளித்தான். எல்லாரும் அங்கே வந்தனர்.
நிக்கி..நிக்கி..அழுது கொண்டே துருவினி அவளை அழைக்க, அபிமன் கண்ணீருடன் அவளையும் தன் மனைவியையும் பார்த்தான்.
விழித்த நிகிதா, துரு சாரிடி. நீ காதலிக்கிறன்னு தெரியும் பட் அது அபிதான்னு தெரியாது. சொல்லி இருக்கலாம்ல்ல துருவினியை இழுத்து அவள் அணைக்க, அவளை தன் பக்கம் இழுத்த லாவண்யா..துரு..நாம போகலாம்.
லாவா, துரு..நிகிதா பேச வருவதை கேளாமல் நகர, அபிமன் பேசினான்.
துரு இப்ப இல்லை எத்தனை வருடமானாலும் ஏன் நிக்கி என்னிடம் காதலை கூறலைன்னாலும் துருவின் காதலை என்னால் ஏத்துக்க முடியாது. ஏன்னா..அவள் தான் என்னோட ஒன் அன்ட் ஒன்லி பெஸ்ட் தோழி..
விரக்தியுடன் அவனை பார்த்த துருவினி, நிகிதாவை பார்த்து ஏதோ சொல்ல வர, அபிமன் குறுக்கிட்டான்.
அபி, உன்னோட பொண்டாட்டியை நான் எதுவும் சொல்லலை.
என் மீது தவறு இருக்கு. உனக்கு நான் கொடுத்த காதல் கவிதைகள் எதுவும் என்னுடையது அல்ல. எல்லாம் துருவினதுதான்..அதனால..சாரிடா..உன்னையும் நான் ஏமாத்திட்டேன் நிகிதா அழுதாள்.
இல்ல நிக்கி, நீ ஏமாற்றவில்லை. அது துரு எழுதியதுன்னு தெரியும். அவளை எனக்கு நன்றாக தெரியும். அது போல அவளது கையெழுத்தும் தெரியும்..
நான் உன்னை தான் காதலித்தேன். கவிதையை அல்ல..என்று அபிமன், கொஞ்சமும் யோசிக்காமல் தன் மனைவி பக்கம் நிற்கவும், கேலி கிண்டலுடன் பேசும் நேசனுக்கே சினம் மேலிட்டது.
உன்னோட பொண்டாட்டியை கட்டிக்கிட்டே அழுடா. ஒரு வார்த்தை தவறு செய்துட்டோம். எங்க துருவோட அன்றைய நிலையை யோசித்து உனக்கு மன்னிப்பு கேட்கணும்ன்னு கூட தோணலை. வெட்கமில்லாமல் தோழின்னு சொல்ற,.
உன்னோட பொண்டாட்டி கர்ப்பமாகவே இருந்தாலும் அவங்களுக்கு அவங்க மேலும் தவறிருக்குன்னு தெரியும். தெரியும்ல்ல நிகிதா சினமுடன் கேட்டான் நேசன்.
ஆமா..அவள் தலையசைக்க, இதுக்கு மேல மன்னிப்பு மண்ணாங்கட்டின்னு துருகிட்ட வந்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன் அவன் பேச, துருவினி நேசனை நேசமாக பார்த்தாள்.
இல்ல, அபிமன் எனக்கு அசிஸ்டன்ட்டா இங்க தான் வொர்க் பண்ணுவான். பேசுவது பேசாமல் இருப்பது வினுவின் விருப்பம். வினு எதையும் ஃபேஸ் பண்ணி பழகு ஆத்விக் சொல்ல, அவள் தலையாட்டி விட்டு ஏதும் பேசாமல் செல்ல, “துரு எனக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டாயா?” நிகிதா கேட்க, “இது ஒண்ணு தான் கேடு” சுவேரா சினமுடன் சொல்ல, இருவருக்கும் வாழ்த்துக்கள். யாரும் என்னை மன்னிச்சிருன்னு சொல்ல வேண்டாம்.
“நான் முட்டாளாக இருந்தால் நீங்க என்ன செய்வீங்க? உங்களுக்கு தேவை உங்கள் காதல். அதனால தான் நானும் கஷ்டப்பட்டேன். சந்தோசமா இருங்க. எனக்கு உங்களிடம் பேச விருப்பமில்லை” என்று அவள் செல்ல, “உன் காதல் எங்களுக்கு தெரியாதுடி” நிகிதா சொல்ல, “தெரிந்தால் அபியை துருவுக்காக விட்டுக் கொடுத்திருப்பியா?” சீற்றமுடன் லாவண்யா கேட்டு விட்டு, “உன்னை பற்றி எனக்கு தெரியும்டி. உன் காதலை அபியிடம் அவசரமாக சொன்னதே துருவும் அபியும் நெருங்க கூடாதுன்னு தான?” லாவண்யா பட்டென சொல்ல, அபிமன் சினமுடன் அவளை திட்டினான்.
அபி, அவ சொல்றது உண்மைதான் நிகிதா சொல்ல, “சந்தேகப்பட்டியா நிக்கி?” அபிமன் குரல் உடைந்து வந்தது.
“லாவா, வாயை மூடிட்டு வா” துருவினி இருவரையும் பார்த்து, இருவரும் உங்களது எதிர்காலத்தை நோக்கி செல்லுங்கள். தேவையில்லாமல் சண்டை போடாதீங்க..
“அபி, அது சந்தேகம் இல்லை ஒருவித பொறாமையுணர்வு” அவள் சொல்லி சென்று விட, அபிமனுக்கு துருவினி எதையோ மறைப்பதாக எண்ணி தன் மனைவியை பார்த்தான்.
நான் தப்பு தான் செய்துட்டேன். இப்பொழுது நான் மயங்கியது. விசயம் உனக்கு தெரிந்த அதிர்ச்சி தான். துரு உன்னிடம் காதலை சொல்ல வரும் போதெல்லாம் நான் தான் தடங்களை ஏற்படுத்தி சொல்ல விடாமல் செய்து நான் சொன்னேன்..
ச்சே..சாய் சினமுடன் அவளை முறைக்க, ஆத்விக்கோ துருவினியை எண்ணி மிகவும் கவலையுற்றான்.
“என்ன பொண்ணுடி நீ?” சுவேரா அவளை திட்டி விட்டு செல்ல, அபிமன் உறைந்து அவளை பார்த்தான்.
அபி..சாரி, நான் மறைக்கணும்ன்னு நினைக்கலை பட் சாரிடா. உன் மீதுள்ள காதலால் செய்துட்டேன் அவன் கையை பிடிக்க, “வா..வீட்டுக்கு போகலாம்” அழைத்தான்.
“அபி” அவள் அழைக்க, சினமுடன் “வான்னு சொன்னேன்” அவன் வேகமாக காரை நோக்கி நடந்தான். அவள் மெதுவாக பயந்தவாறு அவன் பின் சென்றாள்.
போதும்டி. அவளுக்காக நீ செய்தது. உன் வேலையை மட்டும் பாரு. இதுக்கு மேல அவ விசயத்துல்ல தலையிட்டு நீ அசிங்கப்பட வேண்டாம்..ந தர்சனத்தை புரிஞ்சுக்கோ. அபிக்கு அவள் மீதுள்ள காதலில் கண்டிப்பாக அவளை மன்னித்து விடுவான். நீ மறுபடியும் உனக்கு பிரச்சனையை இழுத்துக்காத.. லாவண்யா துருவினிக்கு அறிவுரை கூறினாள்.
ம்ம்..
“நேசா, பார்ட்டிக்கு அரேஜ் பண்ணீட்டியாடா?”
“அதெல்லாம் தேவையில்லை” ஆத்விக் அவர்கள் முன் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான்.
சார், மனோகர் சாருக்கான பேர்வெல் சாய் சொல்ல, சுவேரா ஆத்விக்கை பார்த்து, ஓ.கே சொல்ல சொல்லி கண்ணை காட்டினாள்.
ஓ.கே போகலாம்..நைட் தான் பார்ட்டியா? மதியம் இருக்காதா? ஆத்விக் கேட்க, எல்லாரும் விழித்தனர்.
அதுக்கு காரணம் இருக்கு. இருங்க வாரேன் சுவேரா அவர்கள் காருக்கு சென்றாள்.
லாவண்யா மீண்டும் நேசனை பார்த்தாள்.
தயாரா இருக்கு லாவா. ஆனால் நிவ்வி..
அவளை பற்றி பேசாத. நாம போகலாம். சார் வெயிட் பண்ணுவார். ஓ.கே தான சார்? ஆத்விக்கிடம் கேட்டாள் லாவண்யா. அவன் துருவினியை பார்க்க, அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
வினு, இன்று விடுப்பு எடுத்துக்கிறீயா? ஆத்விக் கேட்க, நோ..சார், நாங்க பார்க்கிற கேஷ் விவரத்தை உங்களுக்கு அனுப்பணும்ல்ல? எனக்கு வேலை இருக்கு என்று அவள் தன் நண்பர்களை பார்த்தாள்.
துரு, நீ வீட்டுக்கு கிளம்பு. ஃபோல்டரை மட்டும் அனுப்பீட்டு போ. நான் செக் செய்து சாருக்கு அனுப்பிடுறேன் லாவண்யா சொல்ல, எனக்கு இப்ப எந்த பிரச்சனையும் இல்லை. இப்ப தான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு. இருவரும் சண்டை போடாமல் இருந்தால் நல்லா இருக்கும்.
“ஏன்டி, இப்ப தான சொன்னேன். அவங்க விசயத்துல்ல தலையிடாதன்னு” லாவண்யா சிடுசிடுக்க, “நோ டென்சன் பேபி” நேசன் அவள் தோளில் கையை வைத்தான். அவன் கையை திருகி தொட்டு பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத.
ஓ.கே நாம வேலையை பார்க்கலாம். சீக்கிரம் அனுப்புங்க ஆத்விக் எழ, கையில் டிபன்பாக்ஸை எடுத்து வந்து சுவேரா துருவினி முன் வைத்தாள். எல்லாரும் புரியாமல் அவளை விழித்து பார்த்தனர்.
“இது அண்ணா தான் செய்தான்” என்று அவனை தள்ளி விட்டு அவள் அதை பிடுங்க மொத்தமாய் கீழே கொட்டியது.
“சுவா” ஆத்விக் கத்தினான்.
“அச்சச்சோ கொட்டிருச்சே!” லாவண்யா அதனருகே வந்து, “சார் இது என்னது?” கேட்டாள்.
அது பொட்டேட்டோ ப்ரை..கருக விட்டுடான்..லெமன் சாதம்..செம்ம புளிப்பு..இதுல்ல உப்பை வேற கொட்டி வச்சிட்டான்.
ஏய்..நீ தான சாதம் பண்ண? நான் “ப்ரை” மட்டும் தான் செய்தேன் ஆத்விக் சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
துருவினி இருவரையும் பார்த்து, இதுக்கு தான் வது சித்தி உங்களை விட மாட்டேன்னு சொல்லி இருக்காங்க. சொல்லி இருந்தால் நான் எடுத்துட்டு வந்திருப்பேன்ல்ல? கேட்டாள்.
சுவேரா துருவினியை பார்த்து, “கொஞ்ச நாள் செஞ்சி தருவ? அப்புறம் நாங்க என்ன செய்றது?” பாயிண்டை பிடிக்க, “அதனால என்ன? நம்ம துருவோட சாப்பாட்டுக்கு நானும் அடிமை. செல்லம் அப்படியே எனக்கும் செஞ்சி எடுத்துட்டு வந்துரு” நேசன் சொல்ல, ஆத்விக் அவனை முறைத்து பார்த்தான்.
“என்னால முடியும் வரை நான் எடுத்து வாரேன்” துருவினி ஆத்விக்கை பார்த்து சொல்லி விட்டு நேசன் பக்கம் திரும்பி, செல்லம், பங்குன்னு பேசுற வேலைய வச்சுக்காத. அப்புறம் நான் உன்னோட அம்மாவை சந்திக்க நேரிடும்.
அய்யோ அக்கா, என்னை விட்ரு. சும்மாவே விரட்டி அடிப்பாங்க. இதை மட்டும் சொன்ன..அவ்வளவு தான்.
“ஓ, அப்ப நீங்க லவ் பண்ணலையா?” சுவேரா லாவண்யாவை பார்க்க, நேகன் அவளை பார்த்தான்.
“எனக்கு லவ் பிடிக்கும் பட் அவங்க பேமிலியையும் சேர்த்து லவ் பண்ணனும்”
“என்ன வித்தியாசமா சொல்ற?” சுவேரா கேட்டாள்.
அது..என்னோட அம்மா, அப்பா விவாகரத்தில் பிரிஞ்சுட்டாங்க. சோ..நான் தனியே தான் இருப்பேன்.
வாட்? ஆத்விக் அதிர்ந்தான்.
ஆமா சார், அம்மா அப்பா இருந்தும் நான் அநாதை. எனக்கு காய்ச்சல் வந்தால் கூட என்னை பார்த்துக்க யாருமில்லை. துரு தான் வருவாள் என்று கண்ணீருடன் லாவண்யா துருவினியை அணைத்தாள்.
“ஓ” ஆத்விக் துருவினியை பார்க்க, ஆரியன் அண்ணா மேரேஜோட என்னால வர முடியல. அது அப்பாவை நான் சந்திக்கும் நாள். அதான்..காலை பத்து மணி வரை தான் நேரம். அதன் பின் அவரை பார்க்கக் கூடாது. அது அவரோட இரண்டாவது மனைவியின் ஆணை.
அம்மாவை பார்க்க நாளை போவேன். அவங்கள மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்க்க முடியும். அவங்க அவங்க குடும்பத்தை கவனிக்கணும்..
எனக்கு மட்டுமல்ல இங்க எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு சார். நேசனுக்கு அவன் அம்மா மட்டும் தான். அவங்க அண்ணனும் இவனும் தான் அவங்களுக்கு.
அப்புறம் நம்ம சாய்..எனக்காவது சொல்ல அம்மா அப்பா இருக்காங்க. அவனுக்கு யார்ன்னு கூட தெரியாது. அந்த வயதிலே ஆசிரமத்தில் வளர்ந்தவன். எல்லாருக்கும் பிரச்சனை இருக்கும். அதுக்காக சிரிக்காமல் வாழாமல் இருக்க முடியுமா? லாவண்யா கேட்க, அவள் பேச்சில் அவளை இமைக்காது பார்த்தாள் சுவேரா. ஆத்விக் அவளை அசந்து பார்த்தான்.
எந்த வயதில் உன்னோட பெற்றோர் டிவோர்ஸ் பண்ணாங்க. என்னோட இருபதாவது வயதில்..ஆறு வருடம் ஆகுது சார்..ஆனால் ஏதோ யுகமாய் பிரிந்தது போல தான் இருக்கும்.
சரி அதை விடுங்க..
உன்னோட பிறந்தவங்க? சுவேரா கேட்க, யாருமில்லை. அவங்களுக்கு சண்டை போடவே நேரம் சரியாக இருக்கும்.
“உன்னோட மேரேஜ் பற்றி கூட பேச மாட்டாங்களா?” சுவேரா கேட்க, லாவண்யா கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.
“சுவா வேண்டாம்” துருவினி சொல்ல, ஏன் வினு? தப்பா கேட்டுட்டாளா?
ம்ம், அத்து..இப்ப அதான் இவளை அடிக்கடி மீட் பண்றாங்க. இதுக்கு கூட இருவரும் அடிச்சிக்கிறாங்க. இருவரும் அவங்க அவங்க பக்கம் பையனை பார்த்து சொல்றாங்க. அவங்க சொல்றவன் நல்லவனாக இருக்க மாட்டேங்கிறாங்க. போன முறை இவ அவனிடமிருந்த தப்பி வாரேன்னு செப்பலை விட்டு வந்திருக்கா..
“ஏன்? அப்படி எதுக்கு பயப்படணும்? என்ன பேசுவாங்க?”
“அவனுக பேச மாட்டாங்க அத்து” துருவினி சொல்ல வர, அவள் கையை பிடித்து “வேண்டாம்” தலையசைத்தாள் லாவண்யா.
ஹே, நீ ஒரு லாயர்.
ஆமா சார், நான் லாயர் பட் என்னோட பெற்றோருக்கு பொண்ணாச்சே அவள் அழ, ஏய் லூசு எதுக்கு அழுற? நேசன் கேட்க, அவனை முறைத்து விட்டு..சார் இதை விட்ருவோமே!
இதை வைத்து உன்னோட பெற்றோர் மேல கேஷ் குடுக்கலாமே!
அவங்க என்னோட பெற்றோர். என்னால இதெல்லாம் பண்ண முடியாது.
சரி, அப்ப யாரையாவது லவ் பண்ணி அவனோட அவங்க முன்னாடி போய் நின்னுரு.
அவங்க அவன் மனசையும் மாத்திருவாங்க. அப்படி பேசுவாங்க..
மனசு மாறாத பசங்க இருக்காங்க லாவண்யா.
இல்ல சார், பணத்திற்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பணம் இருக்கிறவங்களும் பணம், சுகத்தை மட்டும் தான் எதிர்பார்க்குறங்க..
உனக்கு எல்லா பக்கமும் அடைபடுதுன்ன்னா..பெரிய வழி திறக்கப் போகுதுன்னு அர்த்தம்..தத்துவம் பேசினான்.
நீங்க சொன்னது நடந்தால் உங்க வாய்க்கு தான் முதல் சக்கரை போடுவேன். எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா..இவனுக தொல்லை தாங்க முடியல கையை தூக்கி வேண்டுவது போல லாவண்யா செய்ய, அனைவரும் புன்னகைத்தனர்.
நேசன் எழுந்து அவள் முன் வந்து, லாவா நாம பேசலாமா?
சார், நாம வேலையை தொடங்கலாம்ல்ல? லாவண்யா அவனை கண்டுகொள்ளாமல் கேட்க, துருவினி அவனை முறைக்க, அவனாகவே அவனிடத்தில் சென்று அமர்ந்தான்.
சுவேராவும் ஆத்விக்கும் அவனை சிந்தனையுடன் பார்க்க, சார் லாவண்யா அழைத்தாள்.
ம்ம்..பார்க்கலாம் அனுப்புங்க என்று நகர்ந்தான்.
அதியா எழுந்தவுடன் ஆரியனை தேடினாள். அவன் அறையில் இல்லை எனவும் தன் டாப், லாங் ஸ்கர்ட்டை சரி செய்து விட்டு கூந்தலை உச்சிக் கொண்டையிட்டு குளியலறை சென்று முகம் கழுவி துடைத்து விட்டு வெளியே வந்தாள்.
சமையலறையில் வாசனை வர, வேகமாக ஓடினாள். ஆரியன் சமைத்துக் கொண்டிருந்தான்.
சிரிப்புடன் “ஆரு” அவனை பின்னிருந்து கட்டிக் கொண்டு, “என்னை எழுப்பி இருக்கலாம்ல்ல?”
“எதுக்கு, இப்படி கட்டிக்கவா?”
“சமைக்க” கண்ணை பெரிதாக்கி அவள் சொல்ல, என்னோட ஜில்லு நல்லா சாப்பிடணும்ன்னு தான் வேகமாக வந்துட்டேன். எழுப்பினால் என்னையும் மேடம் நகர விட மாட்டீங்கல்ல?
“ஆமா, இன்னும் தூக்கம் வருது ஆரு” சிணுங்கிக் கொண்டே அவனை தன் பக்கம் திருப்பினாள்.
“தூக்கம் வருதுன்னா தூங்கலாமே!” அவள் மூக்கை ஆட்டி அவன் கொஞ்சலாக சொல்ல, ஆரு..மூக்கை ஆட்டாதீங்க. அழகான என்னோட மூக்கு சப்பையாகிடும்.
ஆரியன் புன்னகையுடன், அது கூட எனக்கு நல்லா இருக்குமே உதட்டை எச்சிலால் நனைத்தாள்.
ஆரு, சும்மா இருங்க. என்ன சமையல்? என்னை அறையிலிருந்து இங்க இழுத்துட்டு வந்துருச்சி..
மேடம், யோகா பண்ணவேயில்லை.
ஆமா ஆரு, டூ டேஸ்ஸா பண்ணலை. நீங்களும் ஜாகிங் போகலைல்ல?
ம்ம்..போகலை. நாளை ஆரம்பிக்கலாமா? ஆரியன் கேட்க, கண்டிப்பா ஆரு. நீங்க சமைக்காதீங்க. நான் நிறைய சாப்பிட மாதிரி இருக்கு என்று அங்கிருந்து ஹாலுக்கு ஓடி அந்த ஆளுயர்ந்த கண்ணாடியில் உடலை வளைத்து நெளித்து பார்த்தாள்.
ஆரியன் அடுப்பை அணைத்து விட்டு, அவளுடன் அவனும் நின்று..ம்ம்..எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. ஆனால் உடலை விட என்னோட ஜில்லு மனசுக்குள்ள ரொம்ப சந்தோசமா இருக்காளோ! முகம் பளபளன்னு இருக்கு. என்ன பிரச்சனை வந்தாலும் என்னோட ஜில்லு முகம் இப்படி பிரகாசமான நிலவு போல இருக்கணும்.
ஹா..ஹாம்..சிரித்தாள் அதியா.
அப்புறம்..ஆரியன் கேட்க, அவன் பக்கம் திரும்பி அவன் தோளில் தன் கைகளை மாலையாக்க, அவன் குனிந்து கொடுத்தான்.
“ஆரு, எனக்கு ஒரு ஆசை. செய்வீங்களா?” அதியா கேட்க, “என்ன வேண்டும் மகாராணி?” கண்ணடித்து கேட்டான்.
எனக்கு..நீங்க..நீங்க…நம்ம வீட்டு தெருக்குள்ள என்னை தூக்கிட்டு நடக்கணும்..
“ஏன் இந்த ஆசை?”
என்னோட ஆரு எதுக்கும் குறைந்தவர் இல்லை. அவருக்கு பாசமா இருக்க தெரியாதுன்னு யாரும் சொல்லக் கூடாது. நீங்க என்னை தூக்கி நடந்துட்டு போனால் உங்களை யாரும் தப்பா பேச மாட்டாங்க ஆரு..
ஆரியன் கண்கலங்க அவளை பார்த்து, “லவ் யூ அதி”
மாமா, இதெல்லாம் செல்லாது..
மாமாவா?
ஆமா, நான் கூப்பிட கூடாதா? உதட்டை பிதுக்கினாள்.
உன்னை யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க. நீ கூப்பிடுடி என் தங்கக்கட்டி..
தங்கக்கட்டியா? அதியா சிரித்தாள்.
எதுக்கு சிரிக்கிற?
மாமா, தங்கக்கட்டி பொருத்தம் நல்லா இருக்கே!
இதுல்ல என்ன? அவன் கேட்டுக் கொண்டே அவளை பார்த்தான். அவன் கன்னத்தில் கடித்த அதியா, “மாமாவால இது போல என்னை கடிக்க முடியாதே! நான் தான் தங்கக்கட்டியாயிற்றே!” சிரித்தாள்.
புன்னகைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்ட ஆரியன், “கடிக்க முடியலைன்னா என்ன? நான் கொஞ்சுவேனே!” மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டான். வெட்கமுடன் அவனை பார்த்தாள் அதியா.