வெய்யோன் தன் சுடரொளியை மறைக்க, துருவினியும் கையில் பையுடன் சக்தி என்ற சுவேராவும் வந்தனர். ஆத்விக்கும் வெளியே வந்தான்.
காஃபியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த அதிவதினி அதிர்ந்து சக்தியை பார்த்தார்.
“சக்தி, நீ நிஜமாகவே போகப் போறீயாம்மா?” அதிவதினி வருத்தமுடன் கேட்க, ஆரியன் எழுந்து அவள் கையிலிருந்த பையை வாங்கினான்.
“அண்ணா” துருவினி அழைக்க, சக்தி ஆத்விக்கை பார்த்தாள்.
“யாரும் எங்கும் போகக்கூடாது” ஆரியன் சொல்ல, சாரி மாமா. நான் போகணும். இப்ப என்னை தடுத்தீங்கன்னா நான் அண்ணா வீட்டிற்கு செல்லாமல் மும்பைக்கு கிளம்பிடுவேன்.
“என்னம்மா மிரட்டுறியா?” உத்தமசீலன் கேட்க, இல்ல மாமா. நான் மிரட்டலை. இப்ப ஆத்விக் அண்ணாவுடன் இருந்தாலும் அவர் ஒன்றும் ஆரவ் இல்லையே! அவன் நண்பன் மட்டும் தான! எனக்கான இடமென்று இங்கு ஏதுமில்லை. மும்பைல்ல தான் இருக்கு என்று ஆத்விக்கை பார்த்தாள். அவன் அவளை முறைத்து பார்த்தான்.
நேராக அவனருகே வந்து, இந்த பிரச்சனை முடியும் வரை நான் உங்கள் வீட்டில் தங்கிக்கிறேன் அண்ணா. அதன் பின் நான் மும்பை கிளம்பிடுவேன்.
இப்ப என்ன? நான் உன்னுடன் பிறந்தவன் இல்லைன்னு தான உனக்கு பிரச்சனை. நான் இந்த உலகிற்கே நீ என்னோட தங்கைன்னு நான் சொல்லிப்பேன்..
நான் அதுக்காக சொல்லலை..
நீ எதுவும் சொல்ல வேண்டாம் சுவா. நான் ஏற்கனவே கூறியது போல உனக்கு இங்கேயே மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைப்பேன். உன்னை அதி போல தினமும் பார்க்கணும். அவ்வளவு தான் ஆத்விக் முடிக்க, சுவேரா கண்கள் கலங்கியது.
சரிம்மா, கிளம்பலாம். நாங்களும் வாரேன் என்ற ஆரியன், “அத்து, உன்னோட வீட்டுக்கு எங்களை கூப்பிட மாட்டாயா?” ஆரியன் கேட்க, அவன் இன்பமுடன், “வாங்க மாமா போகலாம்” என்றான்.
சித்தி, நாங்க இருவரையும் அத்து வீட்ல விட்டு நாங்க எங்க வீட்டுக்கு போறோம். பசங்களா வர்றீங்களா? ஆரியன் கேட்க, உத்தமசீலன் அவர்களை பிடித்துக் கொண்டு, நாங்க நாளை மறுநாள் காலை வந்துருவோம். இப்ப நீங்க கிளம்புங்க என்றார்.
ஓ.கே நாளைக்கு வாரோம் என்று ஆரியன் சொல்ல, அதியாவும் அவனருகே வந்து நின்று கொண்டாள்.
“இரவு சாப்பிட்டு போகலாமேப்பா?” சுகுமார் கேட்க, இருக்கட்டும் சித்தப்பா ஆரியன் முன் செல்ல, அதிவதினி சுவேராவிடம் சென்று, சக்தி நாங்க கிச்சன்ல்ல என்று பேச வந்தவரிடம்..
நான் சக்தியில்லை சுவேரா. நீங்க பேசியது எதுவும் எனக்கு தேவையில்லாதது. என்னை மன்னிச்சிருங்க. ஒரே ஒரு முறை உங்களை ஹக் பண்ணிக்கிறேன் என்று அதிவதினியை அணைத்து, கண்ணீருடன் ஏதும் பேசாமல் விறுவிறுவென்று வெளியேறினாள்.
“நானும் வாரேன்” என்று ஆத்விக், கவின் பெற்றோரை பார்த்து விட்டு துருவினியை பார்த்தான். அவள் அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.
“இனி எப்படி பார்ப்பது? இல்லை பார்க்கவே முடியாமல் போகுமோ?” துருவினி சிந்தனை செல்ல, மடை திறந்த வெள்ளம் போல ஆத்விக் உத்தமசீலனிடம் வந்து அவரை அணைத்து, “மாமா, நாங்க நம்ம வீட்டுக்கு வரலாம்ல்ல?” கேட்டான்.
என்ன கேள்வி மாப்பிள்ள? நம்ம வீட்டுக்கு வராம எங்க போகப் போறீங்க? உத்தமசீலன் கேட்டார். நால்வரும் கிளம்பினார்கள். அவர்கள் செல்லவும் அதிவதினி தன் கணவனிடம், சுகு..அவ போயிட்டா. இப்ப என்ன பண்றது? என்று அவரை கட்டிக் கொண்டு அழுதார்.
நாம எடுத்த முயற்சி இப்படியாகும்ன்னு நினைக்கல அவர் அழ, முயற்சியா? துருவினி கேட்க, அவர்கள் நடந்ததை கூறினார்கள்.
எதுக்கு இப்படி பண்ணீங்க? அது அவளை ரொம்ப பாதிச்சு இருக்கு என்ற துருவினி..சித்தி, அவளுக்கு கவின் அண்ணாவை பிடிச்சிருக்கு. அதான் ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கா. இதுல அண்ணா வேற துருவினி தலையை பிடித்தாள்.
துரும்மா.,கவலைப்படாதம்மா. இனி தான் கவின் அவளை மிஸ் பண்ணனும். நாம பண்ண வைக்கலாம் என்றார் உத்தமசீலன். கவின் பெற்றோர் அவரை ஆர்வமுடன் பார்த்தனர்.
சுவேராவா? அவ உங்க வீட்டு மருமகளா வருவதில் பிரச்சனையில்லையே! உத்தமசீலன் கேட்டார்.
பிரச்சனையா? எங்க பையனுக்கு திருமணம் முடியணும்.
சக்திக்கு..அச்சோ..சுவேராவுக்கு கவினை பிடிச்சிருக்கோன்னு பார்க்க தான் நான் இந்த பேச்சையே ஆரம்பித்தேன். ஆனால் அவள் கவினை காதலிக்கிறான்னு தெரிந்த பின் தான் எனக்கு நிம்மதி.
“அவளுக்கு நிம்மதி இல்லாமல் போச்சே” துருவினி சொல்ல, நாம சேர்ந்து அவங்கள சேர்த்து வைப்போம் உத்தமசீலன் சொன்னார். ஏதாவது பண்ணுங்க துருவினி அறைக்கு சென்றாள்.
உங்க பொண்ணையும் கூட என்று சுகுமார் சொல்ல, உத்தமசீலன் புன்னகைத்தார்.
ஆத்விக் வீட்டிற்கு வந்த ஆரியனுக்கு அழைப்பு வர, அவன் அதனை ஏற்றான். கவின் தான் கால் செய்திருந்தான்.
“அண்ணா, நீங்க இப்ப வர முடியுமா?” கவின் கேட்க, “எங்க வரணும்?” பிரச்சனையா?
ஆமா அண்ணா, சைந்தவி பற்றியது..
வாரேன் என்று ஆத்விக்கிடம் அதியாவை பார்த்து சொல்லி ஆரியன் கிளம்பினான்.
ஆரியன் கவினை பார்க்க, அண்ணா..அவங்க ஆண்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டது உண்மைதான்.
“இதை சொல்ல தான் கூப்பிட்டீயா?” ஆரியன் சினமுடன் கேட்டான்.
இல்லண்ணா, நான் அவங்க காதலன் பற்றி விசாரித்தேன். அவர் பெயர் அவினாஸ். இருவரும் சிறுவயதிலிருந்து ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தவங்க. எனக்கு அவர் தான் சைந்தவியை கொன்றுப்பாரோன்னு தோணுது.
அவருடைய விவரத்தை கூட அந்த ஆசிரமத்தில் இருந்து அழிச்சிருக்கார். இருவருக்கும் ஏதோ பிரச்சனையாக இருக்கும்ன்னு தோணுது. உங்களை திருமணம் செய்ததாக இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. அவங்க போலீஸ் கைது செய்து செல்லும் போது கூட தப்பிச்சிருக்காங்கன்னா கொலை செய்தவனை பற்றி முழுதாக அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.
“சரி, இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்ற?” ஆரியன் கேட்க, ஒரு கவரை எடுத்து அதை பிரித்த கவின் பல புகைப்படத்தை ஆரியன் முன் வைத்தான். அப்புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து பயந்து விலகினான் ஆரியன்.
“அண்ணா” கவின் அவனருகே வந்து அவன் கையை பிடித்தான்.
இவ்வளவு கொடூரமாக கொல்லும் அளவிற்கு அந்த கொலைகாரனுக்கு என்ன வஞ்சம்?
அண்ணா..
எதற்கும் ஆதாரம் இல்லாமல் அவனை குற்றம் சாட்டாத கவின். நல்லா விசாரி. இதுல்ல நான் நுழைய விரும்பலை. நான் தான் இதை பார்க்கிறேன்னு மக்களுக்கு தெரிய வந்தால் அதி தான் பாதிக்கப்படுவாள். எனக்கு விருப்பமில்லை.
சரிண்ணா என்று புகைப்படத்தை எடுத்துக் கொண்டான் கவின். அப்புகைப்படத்தில் சைந்தவி கண்களை நோண்டி, விரல்களை வெட்டி, அவள் கழுத்திலிருந்து நெஞ்சு வரை இருகூறாக்கி கொலை செய்திருந்தான் கொலைகாரன். யார் அவன்? கவின் சொல்வது போல சைந்தவியின் காதலனாக இருக்குமோ? வாங்க பார்க்கலாம்.
அண்ணா, உங்களோட நல்ல நேரம் சைந்தவி போலீஸால் கைது செய்து வரும் போதே கொலை செய்யப்பட்டதாகவும், அது விபத்து தான் என்றும் கேஷை மூடிட்டோம். இந்த புகைப்படத்தில் ஒன்று கூட யாருக்கும் பகிரப்படவில்லை. அவள் கொலை செய்யப்பட்டதாக எந்த ரெக்கார்டும் இல்லை.
அதனால் உங்களுக்கு பிரச்சனை வராதுன்னு சொல்ல முடியாது. ஒருவேலை அந்த அவினாஸ் சைந்தவியை கொலை செய்யலை என்றால் கண்டிப்பாக உங்களையும் ஏன் அதியை கூட கொலைகாரன் நெருங்க வாய்ப்பிருக்கு. அதுக்குள்ள நான் கொலை செய்தவனை கண்டறிய பார்க்கிறேன்.
எதற்கும் நீயும் கவனமா இரு. அதியை நான் பார்த்துக்கிறேன்.
அண்ணா, சக்தி என்ன செய்றா? கவின் கேட்க, அவளும் அத்துவும் அத்து வீட்ல இருக்காங்க. அதியும்..நாங்க எங்க வீட்டிற்கு கிளம்பணும். நேரமாகுது.
அவன் என்னோட தங்கையை ஒப்பிட்டு பேசினான். என்னாலும் நீ பேசியதை ஏத்துக்க முடியல. சாரி கவின். அவன் தோளை தட்டி விட்டு, நான் கிளம்புகிறேன். நீ வேலை முடியவும் கவனமாக வீட்டுக்கு போயிரு.
ஆது, எங்க வீடு வாங்கி இருக்கான். முகவரியை கொடுத்திட்டு போங்க கவின் கேட்க, நான் சொல்றேன். நான் சொன்னேன்னு சொல்லீறாத..அப்புறம் நீ அவனை நாளை சந்தித்துக்கோ. இப்ப வேண்டாம். இருவருமே அவரவர் பிரச்சனையில் இருக்காங்க..
ம்ம்..சரி அண்ணா கவின் சொல்ல, தலையசைத்து ஆரியன் அவனிடமிருந்து விடைபெற்றான். கவின் ஆத்விக்கை அலைபேசியில் அழைக்க, அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்து அவன் எடுக்கவேயில்லை. கவின் கான்ஸ்டபிளை அழைத்து ஏதோ சொல்லி விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
சுவேராவுக்கு பிரஜித் அடிக்கடி அழைப்பு விடுக்க, அவள் எரிச்சலுடன் அலைபேசியை அணைத்து விட்டாள். அவளை தேடி வந்த ஆத்விக் இதை பார்த்து, சுவா எதுக்கு அலைபேசியை அணைக்கிற? அவனிடம் நேரடியாகவே பேசிடு.
அண்ணா, நான் எப்படி பேச வேண்டாம்ன்னு சொல்றது?
நான் பேசிக்கிறேன். உன்னோட அலைபேசியை கொடு என்று ஆத்விக் சுவேராவுடையதை வாங்கிக் கொண்டான்.
சாப்பிட வா..
சாப்பிடவா?
வெளிய வாங்கிட்டு வந்திருக்கேன்.
இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
கவினை சந்தித்து விட்டு வந்த ஆரியன் அதியாவை அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான். வீட்டிற்குள் வந்தவுடன் அதியா ஆரியனை பார்த்து, ஆரு நாம சாப்பிட்டு வந்திருக்கலாம்.
அதனால என்ன? நாமே செய்து சாப்பிடுவோம்.
செய்யணுமா?
தோசை மாவு இருக்கு. ஊற்றலாமா?
ஊற்றணுமா? எனக்கு பசிக்குது..தூக்கம் வருதே..
உனக்கு சொல்லித் தாரேன். நாம சேர்ந்து செய்து சாப்பிடலாம்.
ஓ.கே இழுத்த அதியா, நான் ஆடையை மாத்திட்டு வரவா? கேட்டாள்.
மாத்தலாம் என்று ஆரியனும் அவளுடன் அவனறைக்கு சென்றான். இருவரும் மாற்றி விட்டு சமையலறைக்கு வந்தனர்.
மாவை கரைத்து, நான்ஸ்டிக் தோசைசட்டியை அடுப்பில் வைத்து, தேங்காய் சட்னியை அதியாவிற்கு செய்ய சொல்லிக் கொடுத்தவாறே ஆரியன் செய்தான். அதியா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அதி? எப்படி எனக்கு தெரியும்ன்னு யோசிக்கிறியா?”
“இல்லை” தலையசைத்து தோசைசட்டியை பார்த்தாள்.
அதியாவை அதன் முன் நிற்க வைத்து, அவளை உரசி ஆரியன் பின் நின்று கரண்டியை அவள் கையில் கொடுத்து அவனும் அதனை பிடித்து, முறுகலாக தோசை ஊற்ற கற்றுக் கொடுத்தான். இருவரும் சிறிது ரொமான்ஸூடனும் சிறிது காதலுடனும் ஆர்வமுடனும் தோசையை ஊற்றி சாப்பிட அமர்ந்தனர்.
“ஆரு” அவன் பக்கம் அவள் தோசையை தள்ள, ஆரியன் அவளுக்கு ஊட்டி விட்டான். ஆரு தினமும் இப்படியே சாப்பிடணும்..
ஆரியன் அவளிடம், தினமும் முடியாது அதி. கோபப்படாமல் நான் சொல்வதை கேக்கிறாயா? அவள் கையை பிடிக்க, முதல்ல சாப்பிடணும். ரொம்ப பசிக்குது வாயை திறந்தாள். ஆரியன் அவளுக்கும் கொடுத்து விட்டு அவனும் சாப்பிட்டு அவர்களறைக்கு சென்றான்.
அதியா அலைபேசியில் அவளது அக்காவின் புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளருகே அமர்ந்து அவளை இழுத்து தன் மார்பில் போட்டு, அவன் அதியாவை பார்த்தாள். அவள் கண்கள் கலங்க “ஆரு நீங்களும் அக்கா மாதிரி தான? என் மேல பாசமா இருந்தாலும் என்னோட நேரம் செலவழிக்க மாட்டீங்களா?” அவன் மார்பில் மேலும் ஒண்டிக் கொண்டு அழுதாள். ஆரியன் அமைதியாக இருந்தான்.
நிமிர்ந்து அதியா அவனை பார்க்க, ஆமா அதி. நீ சொல்றது சரி தான். என்னால் அதிக நேரம் உங்களுடன் செலவழிக்க முடியாது. நம்ம பசங்க ஷனா, தர்சுவை நீ தான் பார்த்துக்கணும். நீயும் வேலைக்கு போயிட்டு வருவ. எனக்கு புரியுது பட் என்னோட வேலை. திடீர்ன்னு அதிகமாக இருக்கும். சில நேரம் வேகமாக கூட வந்திருவேன். சீக்கிரம் வந்து விட்டால் உங்களை நான் பார்த்துப்பேன்.
ரொம்ப கிரிட்டிக்கலான சம்பவம்ன்னா வீட்டுக்கு வர முடியாமல் கூட போகலாம் ஆரியன் அதியாவை பார்க்க, அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
அவள் முகத்தை கையில் ஏந்திய ஆரியன், அதி..உன்னை போல நிறைய பொண்ணுங்க..எல்லா விதத்திலும் ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு என்னை போலுள்ள ஆட்களால் தான் உதவ முடியும்.
“நானும் மத்த பொண்ணுங்களும் ஒன்றா உங்களுக்கு?” அவனை தள்ளி விட்டு அதியா நகர்ந்தாள்.
ஆரியன் அவளை பின்னிருந்து அணைத்து, எனக்கு நம்ம பசங்களும் நீயும் ஒன்று தான். அப்படியிருக்க எந்த பொண்ணு என்னோட அதிக்கு ஒப்பாவாள்.
“பிராமிஸ்” அதியா கையை நீட்ட, அவள் கையை பிடித்து அவன் நெஞ்சில் வைத்து என்னோட அதி இடத்தை என்னோட பசங்களாலும் பிடிக்க முடியாது.
ஆமா, உன்னையும் ரொம்ப பிடிக்கும். யாராக இருந்தாலும் என்னோட அதி போல என்னை சிரிக்க வைக்க முடியாது. சந்தோஷமா பார்த்துக்க முடியாது. அவள மாதிரி பேச கூட இந்த உலகத்துல எந்த பொண்ணும் இல்லை.
அவளை காயப்படுத்துபவர் யாராகினும் அவங்க யாருன்னு பார்க்க மாட்டேன். மறுநிமிசம் உன் காலில் விழுவான். விழ வைப்பேன் ஆரியன் சொல்ல, அவனை அதிர்ந்து பார்த்து, “ஆரு” நீங்க என்னை மட்டும் காதலித்தால் போதும். மத்தபடி யாரையும் ஏதும் செய்ய வேண்டாம்..
ஆரியன் அதியாவை இழுத்து அணைத்து, உன்னை என் அம்மாவின் மறு உருவமா பார்க்கிறேன். நீ அம்மா போல தான் நடந்துக்கிட்டு இருக்க அதி. கண்டிப்பாக என்னை மீறி யாரும் உன்னருகே வர மாட்டாங்க. வந்தால் உயிரோட விட மாட்டேன்..
“ஆரு” அவனை தாவி அணைத்துக் கொண்டாள் அதியா.
அதி, எனக்கு ஒரே ஒரு ஆசை தான். சாதாரணமாக நீ எல்லாரிடமும் நடந்து கொள்வது எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் நீ உங்க கம்பெனி பொறுப்புகளை எடுத்துக்கப் போற? தைரியமாக எதையும் சமாளிக்கும் அதியை நான் பார்க்கணும். யாரையும் எதிர்பார்த்து நீ இருக்கக் கூடாது.
ஆரு, என்னால முடியும்ன்னு தோணலை.
எதற்கும் பயப்படாத ஆரியனின் மனைவி நீ. நீயே இப்படி பேசலாமா? கம்பெனி வேலைகளிலும் எதிரிகள் இருப்பாங்க. எதையும் போல்டா மேனேஜ் பண்ண கத்துக்கணும்..
எப்படி ஆரு?
பண்ணனும். என்னை மனசுல நினைச்சுக்கோ. தைரியம் வரும்..
அவனை பார்த்து, ஆரு நீங்க சொல்ல சொல்ல தான் எனக்கு பயமா இருக்கு அதியா சொல்ல, பயம் நமக்கு இருக்கக்கூடாது அதிம்மா. தவறு செய்றவங்க தான் பயப்படணும். தவறு செய்யாமல் எதுக்கு அதி பயப்படணும்? ஆரியன் கேட்க, ம்ம்..சரி தான். ஆனால் யாராவது ஏதாவது என்னை சொன்னால் அழுதிருவேன்.
நோ…நோ..உன்னை ஒருவர் பார்க்க வருகிறார் என்றால் அவரை பற்றி முழுதாக தெரிந்த பின் தான் அவர்களை நீ பார்க்க அலோ பண்ணனும். மத்தவங்க பார்த்து முதல்ல புரிந்து கொல்ல நினை..
நான் முயற்சி செய்கிறேன் ஆரு.
குட். நாளை முழுவதும் நாம வீட்ல தான். நமக்கான நேரத்தை நீ எடுத்துக்கோ கையை விரித்தான் ஆரியன். அவன் கைக்குள் வந்த அதியா, ஆரு நான் பசங்களை பார்த்துப்பேன். நீங்க மத்தவங்களுக்கு உதவுங்க..
ம்ம்..கண்டிப்பாக பிரச்சனைன்னா கால் பண்ணு என்றான் ஆரியன்.
பண்றேன். எடுப்பீங்களா?
எமர்ஜன்சின்னா தான் எடுப்பேன். நீயும் கால் பண்ணனும்.
“சரி சரி” அவள் அவனை பார்க்க, ஆரியன் அவளை பார்த்து, நம்ம பசங்களுக்கு விளையாட பாப்பா வேணுமாம். தயார் செய்யலாமா? குறும்புடன் கண்ணடித்தான்.
ம்ம்..என்று அவன் மீது சாய்ந்து கொண்டாள் அதியா.
“சுவா, நாளையிலிருந்து நாம சேர்ந்து தான் சமைக்கணும்” ஆத்விக் சொல்ல, “உங்களுக்கு சமைக்க தெரியும்ல்ல அண்ணா?” தொலைக்காட்சியை பார்த்தவாறு கேட்டாள் சுவேரா.
எனக்கெல்லாம் தெரியாது.
தெரியாதா? அப்புறம் மும்பைல்ல என்ன செஞ்சீங்க?
கடை, ஹோட்டல் தான்.
அடக்கடவுளே! அவனை பார்த்தாள் சுவேரா.
வா..நாளைக்கு என்ன செய்யலாம்ன்னு இணையத்தில் பார்க்கலாம் சுவேராவை அழைக்க, இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீட்டிற்கு வந்த கவினை யாரும் கண்டுகொள்ளவில்லை. உத்தமசீலனும் துருவினியும் அவனை பார்த்து விட்டு அவர்கள் அறைக்கு சென்று விட்டனர்.
கடனுக்கே என அதிவதினி உணவை கவினுக்கு எடுத்து வைக்க, எப்போதும் க்யூட்டாக பேசிக் கொண்டே எடுத்து வைக்கும் அம்மா அமைதியாக எடுத்து வைப்பதை பார்த்து அவர் கையை பிடித்தான் கவின். அவர் அவன் கையை எடுத்து விட்டு, “சுகு நீங்க சாப்பிட்டு வாங்க. எனக்கு பசிக்கலை” அவர் நகர, “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கவின் எழுந்தான்.
வேகமாக அவனிடம் வந்து, அவன் தட்டில் இருந்த உணவை சுகுமார் தட்டில் வைத்து, “நீங்களாவது சாப்பாட்டிற்கு மரியாதை கொடுங்க சுகு” என்று சொல்ல, “வதும்மா நிறுத்து” சுகுமார் சொல்ல, “நான் என்ன செய்தால் இவனுக்கென்ன? இவன் என்னிடம் சாப்பிட வேண்டாம். வெளிய போய் சாப்பிட சொல்லுங்க” பொரிந்து தள்ளினார் கண்ணீருடன்.
“அம்மா” கவின் அழைக்க, அம்மாவா? நீ என்னை அப்படி அழைக்காத? உன்னை நான் இப்படி வளர்க்கலை.
அம்மா, என்ன பேசுறீங்க? நான் அவ மேல கோபத்துல்ல பேசிட்டேன். அதுக்கு இப்ப என்ன தான் பண்றது? சினமுடன் கேட்டான்.
நீ என்ன செய்து என்ன நடக்கப் போகுது? நல்லா பழகிட்டு இருந்த பொண்ணு. நான் கூட உன்னை அவளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்ன்னு நினைச்சேன். எவ்வளவு அழகா அத்த, மாமான்னு கூப்பிட்டா? இப்ப வெறுமனே கிளம்புறேன்னு சொல்லீட்டு போயிட்டா..
அம்மா, இது தான் பிரச்சனையே! சும்மா அவளோட நீங்க உறவாடியது எனக்கு சுத்தமா பிடிக்கலை. அதான் யோசிக்காமல் பேசிட்டேன். ஏற்கனவே ஆது என் மீது அவள் விசயத்தில் கோபமாக இருந்தான். அவன் இப்ப என்ன செய்யப் போறானோ?
என்ன செய்வான்? கோபத்துல்ல பேச மாட்டான். உன்னை போல தான் உன் மச்சானும் இருப்பான் சுகுமார் சாதாரணமாக தான் சொன்னார்.
“பார்த்தீங்கல்ல? இப்ப கூட அவள மனசுல வச்சிட்டு தான இப்படி சொல்றீங்க?” கவின் சினமுடன் கேட்டான்.
டேய், சக்தியை வேறவனுக்கு கல்யாணம் செய்வதாக ரிஜிஸ்டர் செய்துட்டான் உன் மச்சான். இதுக்கு மேல நான் உன்னை..அதுவும் அவளை பற்றிய உன் எண்ணத்தை தெரிந்தும் கேட்டேன்னா..எங்க ஆது எங்களை தொலைச்சிப்புடுவான். நான் சாதாரணமாக தான் ஆதுவை மச்சான்னு சொன்னேன். நீ தான் அதே எண்ணத்துல்ல இருக்க..என்றார்.
“நான் என்ன எண்ணத்துல்ல இருக்கேன்னு நீங்க நினைக்கிறீங்க?” நான் நீங்க இதற்கு செய்ததை வைத்து சொன்னேன்.
அதிவதினி தன் கணவனை பார்க்க, அவர் கண்ணை மூடி திறந்தார்.
இப்ப சாப்பிடலாம்ல்ல வது. என்னோட பட்டுக்குட்டிக்கு பசிக்கும்ல்ல? கொஞ்சலாக அவர் பேச, கவின் இருவரையும் பார்த்து விட்டு..அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்க பார்க்கும் எந்த பொண்ணாலும் பரவாயில்லை.
இதை முன்னாடியே சொல்லி இருந்தால் இன்றே உனக்கும் முடிச்சிருக்கலாம் முணுமுணுத்தவாறு சாப்பிட அமர்ந்தார் அதிவதினி.
“நீங்க யாரை சொன்னாலும் நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன்” கவின் சொல்ல, “எனக்கு சக்தியை தான் பிடிச்சிருக்கு” அதிவதினி தன் மகனையும் கணவரையும் பார்த்தார்.
“சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்” என்பது போல கவின் உண்ணத் தொடங்க, “சக்தி வேண்டாம்மா” என்று சுகுமார் சொல்ல, கண்ணை உயர்த்தி கவின் அவரை பார்த்தான்.
“சுகு” அதிவதினி அழைக்க, காரணமாக தான்மா சொல்றேன். நம்ம ஆரியன் மாப்பிள்ளை அவங்கள சமாதானப்படுத்த எண்ணும் போது நம்ம ஆது சொன்னதை மறந்துட்டியா? அவன் அதி இடத்தை அந்த பொண்ணுக்கு கொடுத்திருக்கான். இப்ப ஆதுவிடம் நம்ம பையனை கல்யாணம் செய்து தர சொல்லி கேட்டால் அவனுக்கு கோபம் ஏறத் தான் செய்யும். அந்த பொண்ணு இடத்துல்ல இருந்து நீ யோசிம்மா வது..
ஆனால் அவளுக்கு கவினை பிடிச்சிருக்கே! அதிவதினி சொல்ல, வேகமாக அவன் அம்மாவை பார்த்தான் கவின்.
“ஆமாடா, அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்று அவர்கள் பேசியதையும் அவளின் ரியாக்சனையும் சொல்ல, கவின் ஏதும் பேசாமல் சாப்பிட்டு நகர்ந்தான்.
என்னங்க ஏதும் சொல்லாமல் போறான்?
அவன் இப்பொழுது பேசினால் நாம மறுபடியும் ஆரம்பித்து விடுவோம்ன்னு நினைச்சிருப்பான்.
வாம்மா, நாம தூங்கலாம். அவன் என்னமும் செய்யட்டும். நாம கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.
சக்தி சொல்லாதம்மா. பொண்ணுங்களுக்கு நம்பிக்கை வரும்படி நடந்துக்கணும். அதனால இனி சக்தியை மறந்திரு சுவேரான்னு அழை.
யார் என்னமும் செய்யுங்க. நான் எப்போதும் போல சுவேராவிடம் பேசுவேன் அதிவதினி சொல்ல, புன்னகைத்தார் சுகுமார்.
அறைக்கு சென்ற கவின் சுவேராவை பார்த்ததிலிருந்து எண்ணி அவளை கணிக்க நினைத்தான். ஆனால் அது அவனால் முடியவில்லை. அவள் அழைத்த மாமூ நான் தானா? எண்ணினான். அன்று அவன் அதை எண்ணினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று அவனுள் ஏதோ நிம்மதி பெருமூச்சு பரவியது.
காலை விடியலில் இருந்து துருவினி பரபரப்புடன் இருந்தாள். அதிவதினி அவளை பார்த்து, “என்னாச்சும்மா?” கேட்டார்.
சித்தி, நேற்று எங்க புது பாஸ் வரலையாம். இன்று வாராறாம். அதனால் அவருக்கான வெல்கம் நான் கொடுக்கணும்ன்னு மனோகர் சார் சொன்னார். இன்று இரவு வர நேரமாகும். மனோகர் சாருக்கான “ஃபேர் வெல்”லும் வரும் புது பாஸூக்கான பார்ட்டியும் இருக்கு.
“எவ்வளவு நேரமாகும்?” அதிவதினி கேட்க, “வது இதெல்லாம் கேட்கக்கூடாது” சுகுமார் சொல்ல, இருக்கட்டும் சித்தப்பா..வர ஒன்பது கூட ஆகும்.
அவ்வளவு நேரமாகுமா? தன் மகன் கவினை பார்த்தார் அதிவதினி. அவனோ ஏதும் நடவாதது போல உணவுண்ண அமர்ந்தான்.
எல்லாரிடமும் சொல்லி விட்டு ஆபிஸ் கிளம்பினாள் துருவினி.
துருவினி ஆபிஸில் அவளுக்கு முன்னதாக இரு பெண்களும் வந்திருந்தனர். ஒருத்தி நம் துருவினி காதலனின் மனைவி நிகிதா. மற்றவள் லாவண்யா. இவர்கள் இருவரும் அவளுடன் சட்டக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
“என்னடி? வேகமா வந்திருக்க?” லாவண்யா துருவினியிடம் கேட்க, நிகிதா அவளை பார்த்து, பாஸை வெல்கம் பண்ண இருக்கும் என்றாள்.
நான் யாரிடமும் பேச இங்கே வரலை துருவினி கடுப்புடன் நிகிதாவை பார்த்து கூறி விட்டு அவள் இடத்தில் சென்று அமர்ந்து, கீழிருந்த டிராயரை திறந்து சில அலங்காரப் பொருட்களை ஆபிஸில் மாட்டிக் கொண்டிருந்தாள். சாய், நேசன் இருவரும் வந்தனர்.
“போடும்மா போடு..மாலையை போடு” கேலியுடன் நேசன் துருவினி முன் வந்து, குனிய, “ஓரமா போடா சாய்” அவனை தள்ள, துருவினி நின்று கொண்டிருந்த மேசை ஆட்டம் கண்டது. துருவினி பொத்தென கீழே விழுந்தாள். சரியாக காரிலிருந்து இறங்கினார் மனோகரன்.
“துரு, என்ன இது?” அவர் கோபமாக கேட்க, “சார் நானில்லை. இந்த பயலுக தான்” நேசன் சாய்யை முறைத்துக் கொண்டே எழ, நிகிதா அவளிடம் ஓடி வந்து கையை நீட்டினாள்.
“தேவையில்லை” என்று இடுப்பை பிடித்துக் கொண்டே எழ, கீழுதட்டை மடித்து சிரிப்பை அடக்கியவாறு நேசன், “சார் துரு தான் புது சாரை வெல்கம் பண்ணனுமா? ஏன் கேட்கிறேன்னா..இப்படி கிழவி மாதிரி இடுப்பை பிடித்துக் கொண்டு மாலை போட முடியாதுல்ல?”
“மாலை போடணுமா?” துருவினி கேட்க, “சாருக்கு பிடிக்குமாம் துரு. நீ தான் செய்யணும்” மனோகரன் சொல்ல, “மாலையிட அவன் என் புருசனா?” அவள் கேட்க, “அதான நாங்களெல்லாம் போடக் கூடாதா?” சாய் கேட்டான்.
மனோகரன் புன்னகையுடன், காரணமில்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்னு உனக்கு தெரியாதா துருவினி? அவர் கேட்க, “சரிங்க சார். முதல்ல இதை சரி செய்யுங்கடா. இதுக்கு மேல என்னால முடியாது” துருவினி நகர, “நம்ம துருவுக்கு வந்த சோதனையை பாருடா. வேலையை சரியாக செய்ய கூட முடியல” கேலியுடன் நேசன் பேச, அவளுக்கு சினம் வந்தது.
சார், அவனையே வெல்கம் பண்ண சொல்லுங்க. என்னை தள்ளி விட்டு இடுப்பை உடைத்ததில்லாமல் இப்படி பேசிட்டு இருக்கான்.
கோவிக்காதம்மா. அவனை நான் பார்த்துக்கிறேன் மனோகரன் சொல்ல, ஆமா ஆமா..இந்த நேசன் நேற்று கூட உன்னோட இடத்துல்ல என்னமோ பண்ணீட்டு இருந்தான் லாவண்யா போட்டு விட்டாள்.
“என்னடா பண்ண?” துருவினி அவளிடத்திற்கு சென்று பார்த்தாள். அங்கே ஒரு டீ கப் புதிதாக இருந்தது. அதை எடுத்து பார்த்தால் அவன் புகைப்படம் இருப்பது போல இருந்தது.
இதை உன்னிடம் வச்சுக்காம என்னோட இடத்துல்ல ஏன்டா வச்சிருக்க? அதை உடைக்கப் போனாள் துருவினி சினமுடன்.
துரு, இப்ப பாஸ் வர்ற நேரம் என்று சொல்லி சாய் மனோகரனை பார்த்து, சாரி சார் என்றான்.
“சரிதானப்பா. நான் தான் போயிடுவேன்ல்ல” அவர் சொல்லிக் கொண்டிருக்க, அவருக்கு அழைப்பு வந்தது. அவர் பேசி விட்டு வந்து, “அவரு வரப் போறார். ஐந்து நிமிடம் தான்” என்றவுடன் அனைவரும் ஆளுக்கொரு வேலையாக செய்து முடித்தனர்.
துருவினி கையில் மாலையுடன் புதியவரை வரவேற்க நிற்க வைத்தனர். மற்றவர்கள் ஆவலுடன் இருக்க, கார் ஒன்று வந்தது. காரிலிருந்து இறங்கிய இருவரையும் பார்த்து வாயை பிளந்து கொண்டு நின்றாள் துருவினி. அவள் தோழ, தோழிகள் அவளை பார்த்து சிரித்தனர்.
“ஹாய் சார், கிளாட் டூ மீட் யூ” என்று கையை குலுக்கினான் ஆத்விக். மனோகரும் பேசிக் கொண்டே துருவினியிடம் வந்தனர்.
அவளுக்கு முன் ஓடி வந்த லாவண்யா அவளருகே வர, ஆத்விக் குனிந்து துருவினியை பார்க்க, சுவேரா புன்னகைத்தாள்.
“என்னடி நீ சொன்ன மாதிரி உன்னோட புருசனுக்கு தான போடப் போற?” லாவண்யா துருவினியை கேலி செய்து துருவினியை இடிக்க, அவள் சுயம் வந்து..ஹா..என்று லாவண்யாவை முறைத்து ஆத்விக்கை பார்க்க, எனக்காவது போடும்மா என்று நேசன் மீண்டும் இடையே வர, சுவேரா அவனை தள்ளினாள்.
பாருடா..பாடி கார்ட்டா? அவன் கேட்க, சுவேரா உதட்டை சுளித்தாள்.
ஆத்விக் அவளை நிமிர்ந்து பார்த்து, மாலையை பிடித்திருந்த அவள் கையை பிடித்து அவனுக்கே போட்டுக் கொண்டான். துருவினி அவனை முறைத்தாள்.
“வித் பிளசர் மை டியர். நாம அப்புறம் முறைச்சுக்கலாம்” என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு, சுவேராவை பார்க்க, அவள் காருக்கு சென்று சில பைல்களை எடுத்து வந்தாள்.
எல்லாரும் உங்க இடத்துக்கு போங்க. நான் அழைக்கும் போது வாங்க என்று மனோகரை பார்த்து,” சார் நீங்க வாங்க. சுவா நீ பைல்ஸை என்னோட டேபிளில் வச்சிடு” துருவினியை பார்த்து, “மிஸ் துருவினி..சுவேராவிற்கும் இடம் அரேஞ்ச் செய்து கொடுங்க. அவங்களும் நம்முடன் வொர்க் பண்ணப் போறாங்க” என்றவுடன் துருவினியிடம் புன்னகை விரிந்தது.
ஆத்விக்கும் மனோகரும் உள்ளே செல்ல, உடனே துருவினி சுவேரா அருகே சென்று, ஹே சுவேரா..நேற்று கவின் அண்ணாவுக்கு செம்ம டோஸ் விழுந்தது தெரியுமா?
சுவேரா அமைதியானாள். சரி நீ இரு. நான் அரேன்ஞ்ச் செய்கிறேன் என்று அவளுக்கு தயார் செய்து கொடுத்து விட்டு, அவளிடத்திற்கு வந்தாள்.
சற்று நேரத்தில் வெளியே வந்த மனோகரன் நேசன் அருகே வந்து, வாலை சுருட்டீட்டு வேலையை பாரு இல்லை என்னை மாதிரி இவர் பொறுமையாக இருக்க மாட்டார்டா. வேலைன்னு வந்துட்டா யாருன்னு பார்க்க மாட்டார் என்று துருவினியை பார்த்து விட்டு அவர் சென்றார். எல்லாருக்கும் எச்சரிக்கை கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் என்று மற்றவர்களுக்கு நன்றாக புரிந்தது. நேசன் கொஞ்சம் அசால்ட்டாக தான் இருந்தான். சுவேரா அவனை பார்த்து, நீ மொத்தமா வாங்கப் போறடா என்றாள்.
முகத்தை தெளிவாக்கிக் கொண்டு துருவினி அவளது வேலையை தொடர, “நீங்க பாஸோட செக்ரட்டரியா வரலையா?” நிகிதா சுவேராவிடம் கேட்டாள்.
இல்ல, அதுக்கு சார் வேற யாரையோ செலக்ட் பண்ணீட்டாங்களாம்..
ஓ..என்று நிகிதா துருவினியை பார்க்க, துருவினிக்கு இவர்கள் பேசியது கேட்டாலும் கேட்காதது போல இருந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் ஆத்விக் அனைவரையும் அழைத்து எல்லாரையும் பற்றி அவர்களிடம் பேசி அறிந்து கொண்டான். துருவினியுடனும் சாதாரணமாகவே பேசினான்.
எல்லாரும் செல்ல, “வினு நில்லு” அவளை நிறுத்தினான்.
லாவண்யா அவளருகே வந்து, “அப்புறம் என்ன ரொமான்ஸ் தானா? ஜோடிப் பொருத்தம் அல்லுது” அவள் சொல்ல, “ஆமா ரொம்ப கேவலமா இருக்கு” நேசன் சொல்ல, இருவரையும் துருவினி முறைத்தாள்.
சார், இவன் காலையிலிருந்தே துருவை வம்பு செய்துகிட்டே இருக்கான் லாவண்யா நேசனை போட்டு விட்டாள்.