வல்லவன் 21

கண்ணை மூடி படுத்திருந்த துருவினிக்கு ஏதோதோ எண்ணங்கள் வர, கீழே வந்தாள். ஆத்விக் அவனறையில் இருந்தான்.

அதியாவும் பசங்களும் படம் வரைவதில் மும்பரமாகி இருந்தனர். ஆரியன் சோபாவில் கண்ணை மூடி படுத்திருந்தான்.

“துரும்மா, இங்க வா” உத்தமசீலன் அழைத்தார். சமையலறையிலிருந்து குரல் வந்தது.

“உள்ளே அப்பாவா?” சென்று பார்த்தாள். அவர் குரல் கேட்டு எல்லார் கவனமும் அவர் பக்கம் சென்றது. ஆரியன் எழுந்து அமர்ந்தான்.

அப்பா, சமையலறையில் என்ன செய்றீங்க? சித்தி திட்டப் போறாங்க..

“ஆமாடியம்மா, எனக்கு திட்ட தான் நேரம் கொடுத்தாரு பாரு என்னோட அண்ணன்” இழுவையாக அதிவதினி கூற, அவருடன் சுகுமாரும் வந்தார்.

துருவினி அவர்களை பார்க்க, “என்னன்னு புரியலையா?”

“உனக்கு தலை வலிக்குமே” நான் தேனீர் தயார் செய்ய வந்தேன். அவரு பொண்ணு தலை வலி இருந்தால் க்ரீன் டீ தான் குடிப்பாளாம். என்னை சமையலறையிலிருந்து பத்திட்டார். அவர் உனக்காக தயார் செய்கிறார் பாரு பாரு.. அவர் அடுப்பில் வைத்ததை எட்டிப் பார்த்தார்.

“மாமா, உங்களுக்கும் சமைக்க தெரியுமா?” அதியா கேட்க, அவர் ஏதும் சொல்லாமல் அவர் வேலையான க்ரீன் டீயை இரு கோப்பையில் ஊற்றி தன் மகள் கையில் வைத்து விட்டு, “பேசலாமாடா?” அழைத்தார்.

அப்பா..

ம்ம்..உன்னிடம் நான் முன்பே பேச வேண்டியதை பேசி இருக்கணும். நான் விட்டுட்டேன்.

“அப்பா” ஆரியன் அழைக்க, ஆரியா நீ பிள்ளைங்களோட இரு. நாங்க பேசிட்டு வந்திடுறோம்.

நானும் வருகிறேன் ஆரியன் எழுந்தான்.

இல்லப்பா, நான் என் பொண்ணிடம் பேசணும். நீ அப்புறம் பேசிக்கோ என்று உத்தமசீலன் சொல்ல, “எனக்கு தெரியாமல் என்ன பேச நினைக்கிறாங்க?” ஆரியன் யோசனையுடன் அமர்ந்தான்.

ஆரு, மாமா பேசிய பின் பேசுங்க. நம்ம வினு இங்க தான இருப்பா..

அவன் அதியாவை பார்த்து விட்டு இருவரும் சென்ற பக்கம் பார்த்தான். துருவினி பயத்துடன் அவர் பின்னே சென்றாள்.

“க்ரீன் டீ எப்படிம்மா இருக்கு?” உத்தமசீலன் கேட்க, நல்லா இருக்குப்பா.

வாழ்க்கையில நமக்கு பிடிச்ச எல்லாமே கிடைக்காதுடா. அது நமக்கு கிடைக்காது என இருந்தால் கண்டிப்பாக கிடைக்காது. அது போல தான்டா காதல்.

அப்பா..

“எனக்கு தெரியும்டா. நான் உன்னோட அப்பா” உத்தமசீலன் துருவினி தலையை கோதினார். உனக்கு கிடைக்காத காதலுக்காக ஏங்குவதை விட கையிலிருக்கும் காதலை புரிஞ்சுக்கப் பாரு.

உன்னை புரிஞ்சுக்காத உன்னுடைய காதல் கைவிட்டு போயிருச்சு. அவ்வளவு தான். அதுக்காக இப்ப கிடைக்கவிருக்கும் காதலை நிராகரிப்பது முட்டாள் தனம்மா..

“அப்பா” கதறியவாறு துருவினி உத்தமசீலனை அணைத்து, யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து இருந்தேன்ப்பா. எனக்கு எதற்கு அவன் மீது காதல் வந்ததுன்னு தெரியல. அவனை மறக்கவும் முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு நிறுத்தாமல் அழுதாள். அவள் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்தனர்.

உத்தமசீலன் ஏதும் பேசாமல் இருக்க, “துரு” ஆரியன் அழைக்க, ஷ்..எல்லாரும் உங்க வேலையை பாருங்க அதட்டினார் உத்தமசீலன்.

“அப்பா, எதுக்கு இப்படி அழுறா?”

“மாமா, அத்து ஏதும் தப்பா பேசிட்டானா?” பாவமாக அதியா கேட்டாள்.

எல்லாரும் உள்ள போங்க. துருவுக்கு ஒன்றுமில்லை. நான் பார்த்துக்கிறேன் என்று அவரை அணைத்திருந்த தன் மகளை நிமிர்த்தி அவள் கண்ணை துடைத்து விட்டார்.

என்ன பிரச்சனை என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

“என்ன இருந்தாலும் சொல்லுங்கப்பா?” அவன் கேட்க, சீற்றமுடன் உத்தமசீலன் அவனை பார்த்து, “உன் அம்மா இறந்ததும் உனக்கு மட்டும் தான் உலகமே இயங்கலையே! அப்புறம் எப்படி எதுவும் உனக்கு தெரியும்?”

இருந்தாலும் பரவாயில்லை என்று தான் உன்னை அந்த திருமண வீட்டிற்கு துணைக்கு அழைத்தாள். எனக்கு உடல்நலமில்லை என்பதால் தான் உன்னை அழைத்தால்..கொஞ்சம் ஆறுதலாக பிள்ளைக்கு இருந்திருக்கும்.

எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தான இருந்த? உத்தமசீலன் இவ்வாறு பேச ஆரியனோ திகைத்து,

அப்பா..நான்..நான் தயங்கி..சாரிப்பா..என்னாச்சு? துரு அவளருகே சென்றான் ஆரியன்.

தேவையில்லை. என்னோட பொண்ணை அன்று போல இன்றும் பார்த்துப்பேன் கண்கலங்கினார் அவர்.

“அப்பா” ஆரியன் அவர் கையை பிடிக்க தட்டி விட்டு, உன்னோட வேலையை பாரு. அப்புறம் உன்னோட குடும்பத்தை பத்திரமா பார்த்துக்கோ இல்லை அதியோ இல்லை பசங்களோ இப்படி தான் அழ வேண்டியிருக்கும்.

“அப்பா” சத்தமிட்டான் ஆரியன்.

அப்பா, ப்ளீஸ் அண்ணா நம்மை விட்டு சந்தோசமாகவா இருந்தான். அவனே கஷ்டத்துல்ல இருந்தான்.

ஏம்மா, நீ இல்லையா? அம்மா இறந்ததில் உனக்கு கஷ்டம் இல்லையா? அதே நிலையிலும் தர்சுவையும் பார்த்துக்கிட்ட? உன்னுடன் உன்னோட அண்ணனை ஒப்பிட முடியாதுடா.. துருவினி ஆரியனை பார்த்தாள்.

தவறு செய்த குற்றவாளி போல முகத்தை திருப்பி வேகமாக அங்கிருந்து அவன் செல்ல, “ஆரு நில்லுங்க” அதியா அவன் பின் ஓடினாள்.

ஆரியன் அறைக்கதவை அடைக்கும் போது அதியாவும் உள்ளே நுழைந்தாள். அவளை பார்க்க திராணியில்லாத ஆரியன் படுக்கையில் குப்புற படுத்து முகத்தை மறைத்துக் கொண்டான்.

அதியா கதவை தாழிட்டு ஆரியன் தலைமாட்டிற்கு வந்து அமர்ந்து, “ஆரு” அழைத்தாள். அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

எல்லாரும் தவறு செய்வது இயல்பு தான் ஆரு. இதுக்கு அழலாமா? அவன் கன்னத்தை அவள் கைகளால் பிடிக்க, தாவி அவள் மடியில் முகத்தை புதைத்து இடையோடு அவளை இறுக்கி அழுதான்.

ஆரு, ப்ளீஸ் அதியா கண்ணீர் அவன் மீது படவும் அவள் அழுவதை பார்த்து, “அதி நீ எதுக்கு அழுற? நான் எதுவும் சொல்லலைல்ல?” கேட்டான்.

“அழாதீங்க ஆரு” அதியா மேலும் அழ, “இல்ல ஜில்லு. நான் அழலை” அவன் முகத்தை நன்றாக துடைத்து, அவளை பார்த்தான்.

“என்னாச்சு ஆரு?” அதியா அழுது கொண்டே கேட்க, நீ அழாத அதி..

வினுவுக்கு என்னாச்சு? என்னை அழுறேன்னு திட்டுவா இன்று அவளே அழுறா?

தெரியல. நான் அடைந்த ஏமாற்றமும், அம்மாவை பிரிந்த துயரும் வேறெதையும் சிந்திக்க விடவில்லை. இந்த எட்டு வருடங்களும் நான் யாரிடமும் பேசவில்லை. வாழ பணம் வேண்டுமே! அதனால் தான் இந்த சூப்பர் மாக்கெட் பிஸினஸ் ஆரம்பித்தேன்.

சேனாதிபதி சாரெல்லாம் என்னை பார்க்கவே வந்துடார். அவரிடம் கூட நான் சரியான பதில் தரலை. ஆனால் இப்பொழுது என்னை புரிந்து கொண்டு எனக்காக அவருக்கு மேலிருப்பவர்களிடம் பேசி என்னோட வேலையை திருப்பி வாங்கி கொடுத்திருக்கார். ஆனால் துரு..”என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியல” அதி அவளை கட்டிக் கொண்டான் கண்ணீருடன்.

“என்ன பிரச்சனையாக இருக்கும்?” அதியா சிந்தனையுடன் கேட்க, துரு அதிகம் அழ மாட்டா. அவளுக்கு அழுவது பிடிக்காது.

அண்ணாவும் இல்லைன்னு சொல்லீட்டா..அதியா சிந்தனையுடன், ஆரு பிடிச்சிட்டேன். ஆபிஸ் பிரச்சனையாக இருக்குமோ?

“இருக்காது அதி” அதியா இழுத்து அவன் மடியில் அமர வைத்து ஆறுதலுக்காக அவள் மார்பில் சாய்ந்து கொண்டான். ஆரியன் சிந்தனை துருவினியை சுற்றியது.

எப்போதிலிருந்து நான் அவளை கவனிக்கலை? அவளிடம் நான் என்ன பேசினேன்? சிந்தித்தான். அதியா ஆரியன் தலையில் சாய்ந்து கொண்டிருந்தவள் தூங்கி விட்டாள்.

“அதி, ஒரு வேலை” ஆரியன் அவளை நகர்த்த, தூக்கத்தில் “துரு பிரச்சனை முடிஞ்சிறணும் காட். நாங்க மறுபடியும் விளையாடணும்” கடவுளிடம் கனவில் என்று எண்ணி வாய் விட்டு வேண்டினாள். அதியாவை காதலுடன் பார்த்த ஆரியன், மெதுவாக அவளை படுக்கையில் போட்டு கதவை திறந்து வெளியே வந்தான்.

துருவினி குறுக்கும்நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவள் ஆரியனை பார்த்து நிற்க, அவள் முன் மண்டியிட்டு தலைகவிழ்ந்தான் ஆரியன்.

“அண்ணா” பதறி அவனை எழுப்பினாள் துருவினி.

ஒன்றுமில்லை அண்ணா. அப்பா கோபத்துல்ல தான் பேசிட்டார். அதுக்காக இப்படியா பண்ணுவ? அவள் பதட்டம் இன்னும் குறையாமல் கேட்க, கவின் இருவரையும் பார்த்து அதிர்ந்து, “இங்க என்ன நடக்குது?” கேட்டான்.

அப்பொழுது தான் எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த ஆரியன், தவறு செய்ததற்கான மன்னிப்பை கேட்டேன்.

“தவறா?” கவின் கேட்க, அவன் துருவினியை பார்த்தான்.

அண்ணா, போதும். முடிந்ததை பற்றி பேச வேண்டாம்.

“ம்ம் என்ன நடந்ததுன்னு சொல்லு?” ஆரியன் கேட்க, “எதுக்கு?” உத்தமசீலன் சினமுடன் கேட்டார்.

அப்பா..துருவினி அவரை அடக்கி, முடிந்ததை பற்றி பேச வேண்டாம் அண்ணா..

“வேண்டாம்ன்னு சொல்ற? இந்த அளவு அழுற? அண்ணனாக நினைத்தால் சொல்லு?” என ஆரியன் நகர, அவன் கையை பிடித்த துருவினி..அண்ணா, நான் உன்னிடம் சொல்ல முடியவில்லை. உன்னோட நிலை புரிந்ததால் நான் ஏதும் சொல்லாமல் விட்டுட்டேன்.

“காதலா? யாரு?” ஆரியன் கேட்க, அண்ணா..அபிமன்..

“அவனா? எப்போதிலிருந்து?” ஆனால் அவனுக்கு..

“அண்ணா ப்ளீஸ். அதான் வேண்டாம்ன்னு சொல்றேன்” துருவினி சொல்ல, “அப்ப திருமணம்?” ஆரியன் கேட்க, அவள் மௌனமானாள்.

இதுக்கு மேல எதுவும் கேட்டு அவளை அழ வைக்காத. எல்லாரும் வேலையை பாருங்க உத்தமசீலன் சொன்னார்.

“காதலா? வினு..யாரு அந்த அபிமன்?” பதட்டமுடன் ஆத்விக் அறையை பார்த்தான் கவின்.

அண்ணா, அவரிடம் சொல்லீட்டேன்.

சொல்லீட்டியா? கவின் அவனறை பக்கம் நகர, ஆரியன் அவன் கையை பிடித்து நிறுத்தி, அவன் தனியாக இருக்கட்டும். துரு நீயும் ஓய்வெடு. உணவு யாரும் செய்ய வேண்டாம். மதிய உணவை வெளிய வாங்கிக்கலாம். இனி இந்த காதல் விசயம் வேண்டாம் ஆரியன் சொல்ல, துருவினி கண்கலங்க நகர்ந்தாள்.

“அதி உங்களோட தான மாப்பிள்ள வந்தா?” அதிவதினி கேட்க, அதி என்னை சமாதானப்படுத்தி விட்டு அப்படியே தூக்கிட்டா சித்தி. அவள் ஓய்வெடுக்கட்டும் என்று ஆரியன் வெளியே செல்ல, “எங்க போற?” உத்தமசீலன் கேட்டான்.

இனி துரு அவள் எதிர்காலத்தை பார்க்கணும்ன்னா பழசை மறக்கணும். அதுக்காக தான் கிளம்புகிறேன்.

சாப்பாடு நான் செய்திடுறேன் மாப்பிள்ளை அதிவதினி சொல்ல, ஆரியன் சரி  தலையை ஆட்டினான்.

இதை விட முக்கியமான விசயம் பேசணும் என்ற கவின், நாம நினைச்சது போல சைந்தவி கருகி சாகலை. அது ஒரு பெண் கான்ஸ்டபில். அவங்க தப்பிச்சிட்டாங்க. ஆனால் இப்ப எவனோ அவங்களை கொன்றுக்கான். அதை சொல்ல தான் வந்தேன்.

“யாரு அவளை கொன்றது?” ஆரியன் கேட்க, அது தெரியல பட் நீங்க வர வேண்டாம். இந்த கேஸை நான் தான் பார்த்துட்டு இருக்கேன் கவின் வெளியேற, “சாப்பிட்டு போடா. வர நேரமாக்கிடுவ” அதிவதினி அழைக்க, “அம்மா என்னோட மச்சானை பார்க்க வருவேன்” என்று சொல்லி அவன் வெளியேற, ஆரியன் அபிமன்னை பார்க்க கிளம்பினான். யாரும் அவனை தடுக்கவில்லை.

அதிவதினி சக்திக்கு உணவு சமைக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். சுகுமார் உள்ளே வந்தார்.

சமையல் மேடையில் தவ்வி அமர்ந்தார். சக்தி புன்னகையுடன் அவரை பார்த்துக் கொண்டே மெதுவாக காய் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

சுகு, சமையல் செய்யும் போது தொந்தரவு செய்யாதீங்க..

வது, நம்ம கவினுக்கு பொண்ணு பார்க்கிறோம்ல்ல. இப்ப ஒரு பொண்ணு புகைப்படத்தை ஜோசியர் அனுப்பி இருக்கார்.

அதிவதினி திகைத்து அவரை பார்க்க, வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருந்த சக்தி கைகள் அப்படியே நின்றது. சுகுமார் ஓரக்கண்ணால் சக்தியை காட்ட, அதிவதினி புரிந்து கொண்டு, “பொண்ணு பற்றிய விவரம் கேட்டீங்களா?”

இல்ல இப்பொழுதைக்கு புகைப்படம் மட்டும் அனுப்பி இருக்கார். துரு நம்ம ஆது காதலை ஏற்றுக் கொண்டால் எப்படியும் அவங்களுக்கு திருமணம் செய்வோம்ல்ல. அதோட நம்ம கவின் திருமணத்தையும் முடிச்சிறலாம்.

“சரி சுகு. பொண்ணோட புகைப்படத்தை காட்டுங்க” அதிவதினி அலைபேசியை வாங்கி சக்தியை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு, பொண்ணு ரொம்ப அழகா தான் இருக்கா. விசாரிங்க..பொருத்தம் அமைந்தால் ஆதுவிற்கு முன் கூட திருமணத்தை வச்சுக்கலாம் என்றார்.

மீண்டும் காய் நறுக்கிக் கொண்டிருந்த சக்திக்கு இவர்களின் பேச்சில் கண்கள் கலங்க, அதை மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

விசாரித்து நல்ல பொண்ணா இருந்தா திருமணம் என்றவுடன் பதட்டத்தில் காயை வெட்டுவதற்கு பதில் விரலை வெட்டி விட்டாள்.

“ஷ்ஆ” அவள் சத்தம் கொடுக்க, அவளது விரலில் இரத்தம் வருவதை பார்த்து, எந்த நேரத்துல்ல பேசிட்டோம் இருவரும் ஒரே போல் நொந்தவாறு அவளிடம் சென்றனர்.

சக்தி எழ, தண்ணீரில் கையை கழுவும்மா சுகுமார் சொல்ல, சக்தி கண்ணீர் கரை புரண்டு வந்தது. அதிவதினி அவள் கையை பிடித்து தண்ணீரில் நனைக்க, உறவு கிடைத்த சந்தோசத்தில் இதை மறந்துட்டேனே! என்னை சும்மாவே அவருக்கு பிடிக்காது. இனி நாம் விலகி இருப்பது தான் நல்லது.. மனதில் எண்ணிய சக்தி சுயம் வந்தாள்.

“கவனம் இல்லாமல் என்ன செஞ்சுட்டடி?” அதிவதினி அவளது கையை தண்ணீரிலிருந்து விலக்கி பார்க்க, இரத்தம் வந்து கொண்டு தான் இருந்தது.

அத்த, ஒன்றுமில்லை. இருக்கட்டும் என்று சக்தி அவள் கையை அதிவதினியிடமிருந்து இழுத்தாள்.

இரும்மா. துடைத்து பேன்டேஜ் போட்டுக்கலாம்..

அத்தை, நான் வச்சிருக்கேன். அறையில் இருக்கு என்று சக்தி அவர்களிடம் பதிலை எதிர்பாராது அறைக்கு சென்று கதவை தாழிட்டு குளியலறை சென்று அழுதாள். அவள் அண்ணன் ஆரவ் நினைவு அவளை சுற்றி சுற்றி வந்தது.

அண்ணா, எனக்கு புது குடும்பம் கிடைச்சிருக்கு. நான் அவருக்காக யாரையும் இழக்க விரும்பலை. எனக்கு அவர் வேண்டாம் அண்ணா.

ஆது அண்ணா அவங்க குடும்பம் பற்றியும் அவர் நண்பன் பற்றி நீ சொல்லவும் ஒரு ஆவல் மனதில் இருந்தது.

நீ கவினை பற்றி என்னிடம் சொல்லி சொல்லி என் மனசுக்குள்ள அவரை வர வச்சுட்ட? இப்ப என்னால இங்க இருக்க முடியாது. என் மனசுல இருப்பது வெளியே வந்திரும். அவரு ரொம்ப  ஹர்ட் பண்றாருடா. அவருக்கு என்னை பிடிக்கலை. அவரோட பெற்றோரிடமும் எப்படி அறிமுகமாகனுமோ அது போல நல்லதாக நடக்கலை. அவங்க என்னை பற்றி என்ன நினைச்சிருப்பாங்க. கஷ்டமா இருக்கு. இப்ப அவருக்கு பொண்ணு பாக்குறாங்க. எல்லாத்தையும் பார்த்துட்டு அவர் அம்மா, அப்பாவிடம் சாதாரணமாக பேச முடியாதே!

 நான் என்ன செய்றது அண்ணா? முகத்தை மூடி சக்தி அழ, “சக்தி..கதவை திற. மருந்து போட்டு விடுறேன்” அதிவதினி மனமில்லாமல் அழைத்தார்.

அத்தை, நான் மருந்து போட்டுட்டேன். ரெஸ்ட் ரூமில் இருக்கேன். வந்துருவேன் அவள் சொல்ல, சீக்கிரம் வா. இல்லை நான் மறுபடியும் வருவேன் என்று கண்டித்து சென்றார்.

பார்த்தியா அண்ணா, இவ்வளவு அக்கறை. என் காதல் தெரிந்தால் அவங்களுக்கு இருக்குமா? என்று சக்தி அவளாக ஏதோ எண்ணிக் கொண்டு விரலில் பேன்டேஜை சுற்றிக் கொண்டு கீழே சென்றாள்.

சமையலறையில் அதிவதினி தனியே வேலை செய்து கொண்டிருந்தார்.

அத்தை, நான் உதவவா? சக்தி கேட்க, நீ ஓய்வெடும்மா. கையை காட்டு என அவள் விரலை பார்த்து, என்னம்மா இப்படி ஒட்டியிருக்க? காயம் வெளிய தெரியுது பாரு. அவள் அதிவதினியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சுகு” அவர் தன் கணவனை அழைக்க, “அத்தை மாமா எதுக்கு?” பதட்டமாக கேட்டாள்.

“இரும்மா வருவார்” என்று சொல்ல, அவர் வந்து புருவத்தை உயர்த்தினார்.

சக்தியை நம்ம அறைக்கு அழைச்சிட்டு போய் காயத்துல்ல பேன்டேஜை நல்லா போட்டு விடுங்க.

“வாம்மா, இதுக்கு தான் முதவே கதவை திறக்க சொன்னோம்” அவர் பேசிக் கொண்டே அவள் கையை பிடித்து அழைத்து செல்ல, கண்கலங்க அவர் பின்னே சக்தி சென்றாள்.

“என்னாச்சு இவளுக்கு?” வெளியிலிருந்து வந்த ஆரியன் அவர்களை பின் தொடர்ந்தான். அங்கே நடப்பதை பார்த்து, “என்ன காயம்?” ஆரியன் அறைக்குள் வந்தான்.

சக்தி முன்னே வெளியே வந்து விட, ஆரியன் சுகுமாருடன் பேசிக் கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தான்.

சக்தி, போ. எல்லாரையும் சாப்பிட அழைச்சிட்டு வா அதிவதினி சொல்ல, எல்லாரையும் அழைத்து விட்டு ஆத்விக் அறைக்கு சக்தி செல்ல, வீட்டிற்கு வந்த கவின் அவளை நிறுத்தி அவன் உள்ளே சென்றான். அதனால் சக்தி எண்ணியதை ஆத்விக்கிடம் பேச முடியவில்லை.

சக்தி அவர்களுடன் உணவுண்ண அமர்ந்தாள்.

“சக்தி, உன்னோட கைக்கு என்னாச்சு?” அதியா கேட்க, ஒன்றுமில்லை என்றாள்.

“ஒன்றுமில்லையா” என்று அதியா இருக்கையிலிருந்து எழுந்து சக்தியிடம் வந்து, இதை பார்த்தால் சாதாரணமாக தெரியல. வீரத்தழும்பாக இருக்கே! ஆரு..இங்க பாருங்க. பேன்டேஜூக்கு மேல பிளட் வந்திருக்கு..

ஆமா, மேடம் பெரிய டிடெக்டிவ்ன்னு நினைப்பு. நீ என்ன பண்ணாலும் எங்க மாமா அளவுக்கு எதையும் கண்டுபிடிக்க முடியாது சக்தி சொல்ல, ஆத்விக் துருவினியை பார்த்தான். அவள் அமைதியாக எல்லாருக்கும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். கவின் இருவரையும் பார்த்து, “சாப்பிடும் போது என்ன வெட்டிப் பேச்சு?”

“வெட்டிப் பேச்சா? ஏன்டா புள்ள கையில அடிப்பட்டிருக்கு. அதை என்னன்னு கேட்காம இப்படி பேசுற?” அதிவதினி தன் மகனை முறைத்து கேட்டார்.

ஏது..இந்த அடிக்கா கேட்கணும்? அதான் பேன்டேஜ் போட்டிருக்கால்ல. அதுவே சரியாகிடும்.

ஆரியன் சிரித்துக் கொண்டு, நீ சொல்றது சரிதான். காய் நறுக்கும் போது அடிபட்டது தான். உன் அப்பா தான் அவளுக்கு பேன்டேஜ் போட்டு விட்டார்.

அப்பா, நீங்களா போட்டு விட்டீங்க?

ஏன்ப்பா, நான் காயப்பட்ட பொண்ணுக்கு தான மருந்து போட்டேன்? அதனால என்ன?

“நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யணும்? அவளுக்கு போட்டுக்க தெரியாதா?” கவின் கேட்க, உண்டு கொண்டிருந்த சக்தி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

கள்ளமில்லாமல் அதிவதினி, அவ சரியா காயத்துல்ல போடலடா கண்ணா. நான் சமையலறையில் வேலையாக இருந்தேன். அதான் நான் அப்பாவை போட்டு விட சொன்னேன்.

“அதுக்காக போட்டு விடணுமா? ஏய்..உன்னால காயத்துக்கு மருந்து கூட போடத் தெரியாதா?” கவின் திட்ட, ஏற்கனவே அவன் பெற்றோர் பேசியதில் மனம் சோர்ந்திருந்த சக்தி அவனுக்கு பதில் சொல்லாமல் உணவிலே கையை கழுவி விட்டு யாரையும் பார்க்காமல் படியில் வேகமாக ஏறினாள்.

“சக்தி” எல்லாரும் அவளை அழைக்க, “நான் கேட்க தான செய்தேன்?” கவின் ஆத்விக்கை பார்க்க, அவன் கவினை முறைத்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த கையோடு அவள் பின் ஓடினான்.

“கேட்க தான் செய்தாயாப்பா?” உத்தமசீலன் கேட்க, ஆமா..கேட்க தான் செய்தேன்.

அவளுக்கு உங்க அப்பா உதவியது உங்களுக்கு பிடிக்கலை..அது ஏன்? துருவினி கேட்க, “பசியோட இருந்தவளை நீ சாப்பிட கூட விடலை மாமா” அதியா கவினை திட்டினாள்.

பசங்க அவனை பார்த்து, சித்தப்பா. நீங்க சக்தியை திட்டீங்க. உங்களுக்கு தெரியலையா? ஆகர்ஷனா கேட்டாள்.

ஷனா, நான் திட்டலை கவின் சொல்ல, சக்திக்கு பிளட் வந்ததுமே நான் தான் உதவினேன். ஆனால் அவளே செய்து கொள்வதாக சொல்லி தான் போனாள். செய்தும் கொண்டாள். அவள் கீழே வந்த போது நான் பார்த்து சொல்லி தான் இவர் போட்டு விட்டார் அதிவதினி சீற்றமுடன் சொல்லி விட்டு, சக்தி அறைக்கு சென்றார்.

உள்ளே ஆத்விக் சென்றிருந்தான். அதிவதினி வெளியே இருந்து சத்தம் கொடுக்க, அத்தை..நான் அவளை பார்த்துக்கிறேன். நீங்க உங்க பையனை கவனிங்க என்றான் உள்ளிருந்து ஆத்விக்.

ஆது, சக்தியை வெளிய அழைச்சிட்டு வா..

“நீங்க போங்க அத்தை” சத்தமிட்டான் ஆத்விக். அதிவதினி வருத்தமுடன் வந்தார்.

“என்னாவாம் இவங்களுக்கு?” கவின் கோபமுடன் எழுந்தான். ஆத்விக் கதவை திறந்து வெளியே வந்தான்.

ஒண்ணு சொல்லக்கூடாதாடா? கவின் ஆத்விக்கிடம் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அதிவதினியை பார்த்து, சாரி அத்தை. யார் மேலுள்ள கோபத்தை உங்களிடம் காட்டி விட்டேன்.

“அத்து” ஆரியன் அழைக்க, மாமா ஈவ்னிங் பார்க்கலாம் என்று ஆத்விக் துருவினியை பார்த்து விட்டு நகர, “நில்லுங்க மாப்பிள்ள” என்று உத்தமசீலன் தட்டை நீட்டி சக்திக்கு சாப்பிட உணவை கொடுத்துட்டு வாங்க..சரியா சாப்பிடாமல் போயிட்டா..

வேண்டாம் மாமா. அவ சாப்பிட மாட்டா. அவளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் சொல்லி விட்டு அறைக்கு செல்ல, அண்ணா நீ சாப்பிடலை அதியா அவனிடம் வந்தாள்.

நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருக்கு. அதை முடிக்கும் வரை நிம்மதியா சாப்பிட முடியாது என்றான் ஆத்விக்.

“ஆது” சுகுமார் அழைக்க, “என்ன வேலை ஆது?” அதிவதினி கேட்க, சக்திக்கு சொந்தம்ன்னு ஒன்று வேணும். அதற்கான ஏற்பாட்டில் நான் இறங்கப் போறேன்.

“அதான் நாம இருக்கோம்ல்ல?” அதியா கேட்டாள்.

அவளை புரிந்து கொள்ளும் சொந்தம்..

“ஆது” அதிவதினி அவனருகே வந்தார்.

அத்தை, நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் ஒரு முடிவோடு தான் வந்தேன். அவளுக்கு யாருமில்லைன்னு தோணக்கூடாதுன்னு தான் மாமா வீடு, உங்க வீடுன்னு அழைச்சிட்டு வந்தேன். அது பெரிய தவறு. இப்ப எனக்கு நன்றாக புரிந்து விட்டது.

எனக்கான கடமையை சரியா முடிக்கணும். ஆரவ் எனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு இங்க யாருக்கும் ஏதும் தெரியாது. அவன் குடும்பம் என்னோட குடும்பம் போல தான். அவன் தங்கை என் தங்கை. இனி அவள் சக்தி இல்லை. சுவேராவாக தான் இருக்கப் போகிறாள். என்னுடன் என் தங்கையாக என் வீட்டில்..

அவளோட அண்ணனாக அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது என் கடமை. அதனால அவளுக்கு மேட்ரிமோனில்ல ரெஜிஸ்டர் செய்து வச்சிட்டேன். இனி பார்க்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்..

அதி விசயத்துல்ல நான் நினைச்சு வந்தது சரியா நடந்துருச்சு. ஆனால் சுவா விசயத்துல்ல நடக்கலை. அவளை இப்படியே விட்டால் என்னை விட்டு இவளும் போயிடுவாளோன்னு பயமா இருக்கு. ஆரவ் மாதிரி இவளை போக விட மாட்டேன் வழிந்த கண்ணீரை துடைத்த ஆத்விக், வாலட்டிலிருந்து பணத்தை எடுத்து கவின் முன் வந்தான்.

இது என்னோட அத்தை, மாமா வீடு. நான் தங்கியதற்கு சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை. ஆனால் சுவாவிற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை. அதனால் இன்று அவளுக்கு தங்க, உணவு கொடுத்து நான் இல்லாத போது பார்த்துக் கொண்டதற்கு என்று பணத்தை கவின் கையில் திணித்து விட்டு, மாமா திருமண தகவல் மையத்தில் என்னுடைய எண்ணுடன் உங்களுடைய எண்ணையும் கொடுத்திருக்கேன்.  உங்களை அழைத்தால் பேசுங்க. பேசுவீங்கல்ல? உத்தமசீலனிடம் கேட்டான்.

எல்லாரும் அவனை அதிர்ந்து பார்க்க, கண்டிப்பா மாப்பிள்ள..நம்ம சொந்தத்திலும் சொல்லி வைக்கிறேன் என்றார் அவர். கவின் குடும்பம் ஆத்விக்கின் பேச்சில் இறுகி போனார்கள்.

அதிவதினி ஆத்விக்கை அடித்து அழுது கொண்டே, “ஆது இப்படி பிரிச்சு பாக்குற? நாங்க அப்படி தேவையில்லாதவங்க ஆகிட்டோமாடா?”

நான் அப்படி சொல்லலை அத்தை. நான் உங்க மருமகன். உங்கள் மகனின் நண்பனும் கூட. அது மாறாது. சக்தி விசயத்துல்ல நீங்க யாரோ? ஆனால்..நான்.. நான்..அப்படியில்லை.

அவ அம்மா கையால சாப்பிட்டு இருக்கேன். எனக்கு கஷ்டம் வரும் போது அவ தாத்தா மடியில படுத்திருக்கேன். எனக்கு உடம்பு சரியில்லைன்னா ஆரவ் என் பக்கத்திலே இருந்திருக்கான். அவன் பாட்டி அவனுடன் சேர்ந்து என்னை கவனிச்சுக்க நான் இருக்கும் இடத்திற்கு கௌரம் பார்க்காமல் வந்திருவாங்க. எல்லாரும் என்னை அப்படி பார்த்துக்கிட்டாங்க..

அத்தை நீங்க இங்க எனக்கு எல்லாம் என்றால் மும்பைல்ல எனக்கு எல்லாமுமாய் சுவேரா குடும்பம் தான் இருந்தது.

அவ ஏற்கனவே ரொம்ப உடைஞ்சு போயிருக்கா. அவ நீங்க எல்லாரும் ஆறுதலா இருந்தால் சிரிக்கவாது செய்வால்ன்னு தான் அழைச்சிட்டு வந்தேன். என்னோட அதிக்கு எதிரானவ சுவேரா.

வீட்டின் இரண்டாவது கடைசி பொண்ணு. தாத்தா பாட்டிக்கும் பசங்க தான். சுவா பெரியப்பாவுக்கும் பசங்க தான். இவங்க பெற்றோருக்கு தான் மூத்த அக்காவும் இவளும். இருவருமே செல்லம். அக்கா இவள் அளவிற்கு துருதுருன்னு இருக்க மாட்டாங்க. ஆனால் சுவேரா..ரொம்ப ரொம்ப செல்லம். ஆரவிற்கு அடுத்தபடியாக இவளும் இவளது பெரியப்பாவின் இரண்டாவது மகனும் தான் எங்களுடன் சுற்றுவாங்க.

கார் இல்லாமல் இருக்க மாட்டாள். எங்க சென்றாலும் கார் தான். நல்ல வசதி. இவங்க குடும்பத்து இருவர் போலீஸ்..எல்லாரும் பெரிய இடத்தில் இருந்தால் சுவா நினைத்தவுடன் எல்லாம் கிடைக்கும். அப்படி வாய் ஓயாது பேசுபவள் குடும்பத்தை இழந்ததில் சரியாக பேச கூட இல்லை. நானும் தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு விட்டுட்டேன்.

இப்ப அவள் மும்பைக்கு போகணும்ன்னு சொல்றா? இங்க இவளை சுற்றி நாம இருப்பதால் பாதுகாப்பா இருக்கா. அங்க போனால்..என்று முகத்தை திருப்பிய ஆத்விக்..முகத்தை அழுந்த துடைத்து விட்டு கவினை பார்த்து, அவளிடம் பேச பிடிக்கலைன்னா சும்மா இருக்க வேண்டியது தான? அவளுக்கு சண்டை போட தெரியும். மேக் அப் போட தெரியும். மற்றவர்களை சிரிக்க வைக்க கூட தெரியும்.

அவளை அவளுக்கு பார்த்துக்க தெரியாது. எல்லாரும் அவளுக்கு வேண்டியதை செய்து பழக்கி வச்சிருக்காங்க. அதனால தான் மருந்து போட தெரியல. அப்புறம் அன்று அவள் குடும்பத்திற்காக தான் யாருன்னு தெரியாதவனுடன் டேட்டிங் போறதா ஒத்துக்கிட்டா. ஏன்னா அவளுக்கு வாழ்க்கையே பிடிக்கலை..போதுமா? கத்தி விட்டு ஆத்விக் கண்களை மூடி நின்றான்.

கண்ணை திறந்த ஆத்விக் நேராக துருவினி அருகே சென்று, வினு எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய். கடிகாரத்தை பார்த்து..அரைமணி நேரத்தின் பின் சுவா அறைக்கு சென்று அவளை பாரேன். என்னால அவளை தனியே விட முடியல. ஏதோ..மனசுல என்று தொண்டை அடைக்க உதடுகள் துடிக்க ஆத்விக் கண்ணீர் வழிந்தது.

“டேய், எதுக்காக அழுற? அதான் நான் இருக்கேன்ல்ல” ஆரியன் ஆத்விக்கை அணைக்க, பயமா இருக்கு மாமா. பசங்களோட வரும் போதே அவளை கொல்ல முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனால் இப்ப எதுவும் செய்யாம இருக்காங்கன்னா பெருசா பிளான் போடுற மாதிரி இருக்கு..

கொலை செய்தவன் வெளிய தான இருக்கான்? ஆரியன் கேட்க, ஆமா மாமா, எங்களிடம் சில ஆதாரம் மட்டும் இருக்கு. ஆனால் அதை வைத்து அவனை குற்றம் சொல்ல முடியாது. எளிதாக சட்டத்திலிருந்து தப்பிடுவான். அதனால் தான் சுவா கூட அவங்களை கொல்லணும்ன்னு சொல்றா..

ஆதாரம் கிடைக்கலைன்னா.. கிரியேட் பண்ணிடலாம். நீ கிரிமினல் லாயர் தான? கொஞ்சம் அவன் பற்றி எல்லாவற்றையும் யோசி. நானும் சக்தியிடம் பேசினேன். எல்லாமே சொன்னாள். கொலை செய்தவர்களை சொன்னாள். நான் அனீக்கிடம் பேசி இருக்கேன்.

நீ ஒன்று மட்டும் சொல்லு. இப்ப இருக்கும் அட்வகேட்டை தூக்கிட்டு நாம ஆள் ஒருத்தரை போடுவோம் ஆரியன் கேட்டான்.

மாமா, எனக்கு இப்பொழுதிருக்கும் அவர் மீது சந்தேகமாக தான் இருக்கு. அதனால மாத்தி பார்க்கலாம்.

ம்ம்..இது போதும். உடனே இதை கவனிப்போம். நாம எப்பொழுது வேண்டுமானாலும் மும்பை செல்லுமாறு இருக்கலாம். இனி வரப் போற கியரிங்கிலே கேஷை முடிக்கணும். நமக்கு உதவ ஆள் இருக்காங்க. எதுக்கும் டென்சன் ஆகாதடா..

“கவினிற்கும் முழுதாக ஏதும் தெரியாமல் தான பேசிட்டான். விட்ருடா” ஆரியன் சொல்ல, “முடியாது மாமா. அவ என்ன செஞ்சா? அவ இவனோட அம்மா, அப்பாகிட்ட பேசுறது தான பிரச்சனை? இனி சுவா இந்த வீட்டுக்கு வரவே மாட்டா” சொல்லி அவன் உள்ளே செல்ல எத்தனிக்க, “நாங்க அப்படி நினைக்கலைல்ல ஆது” அதிவதினி கேட்டார்.

“சாரி அத்தை, இதை பற்றி பேச வேண்டாம்” ஆத்விக் சொல்ல, கவின் அவனிடம் வந்து, எனக்கு பொண்ணுங்க வீட்ல இருந்தாலே பிடிக்காதுடா..அதான் கோபத்துல்ல ஏதேதோ பேசிட்டேன்..

அவ மட்டும் தான் இங்க இருக்காலா? ஏன் வினு, அதி இல்லையா? சினமுடன் கேட்டான் ஆத்விக். நீ அவளை அதிகம் பேசலை. ஆனால் அவளை நீ பார்க்கும் முகபாவனை..எரிச்சலான பேச்சு அவளை ரொம்ப காயப்படுத்தி இருக்கு.

ஏதும் பேசாமல் இருந்தான்.

சுகுமார் கோபமாக அறைக்கு செல்ல, அதிவதினியும் பின்னே சென்றார்.

“எனக்கு ஓய்வெடுக்கணும். என்னை விடுடா” என்ற ஆத்விக், “வினு மறந்திறாத” சொல்லி அவனறைக்குள் புகுந்து கொண்டான்.

எல்லாரும் கவினை பார்த்துக் கொண்டு அவரவர் வேலையில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

ஆத்விக் சொன்னது போல துருவினி சுவேரா அறைக்கு செல்ல, அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். துருவினி அவளருகே அமர்ந்து, ஆத்விக் அவளை பற்றி சொன்ன எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு வருத்தமுடன் அவளை பார்த்தாள்.

“ஆது” கவின் அழைக்க, ஆத்விக் அறையிலிருந்து சத்தமில்லை.

“அம்மா” கவின் அழைக்க, அவன் அம்மா அதிவதினி அறைக்கதவை கோபமாக சாற்றினார்.

“நீ கிளம்பு கவின். இவங்கள நான் பார்த்துக்கிறேன்” ஆரியன் சொல்ல, அண்ணா..அவங்கள கிளம்ப விட்றாதீங்க..

அத்து சொன்னது சரிதான். இப்ப போவது சந்தேகம். கேட்கிறானான்னு பார்க்கிறேன் ஆரியன் சொல்ல, நீங்க சொன்னா கேட்பான் அண்ணா..

ம்ம்ம். சொல்றேன் என்றான்.

“தேங்க்ஸ் அண்ணா” கவின் ஆரியனை அணைத்து, “நான் சீக்கிரம் வர பார்க்கிறேன்” அவன் ஸ்டேசனிற்கு சென்றான்.