வல்லவன் 15

கவின் ஆத்விக்கை சென்று பார்த்தான். மணமகன் அறையில் ஆத்விக் காலை நீட்டி கண்களை மூடி படுக்கையில் அமர்ந்திருந்தான்.

“ஆது” கவின் அழைக்க, கண்ணை திறக்காமல் “வெளிய போடா நாயே” சீற்றமுடன் கத்தினான் ஆத்விக்.

“அத்து” ஆரியன் சினமுடன், இருவரும் சண்டை போடும் நேரமா இது? நான் இப்பொழுது கிளம்பி விடுவேன். உன்னோட அம்மாவை அழைச்சிட்டேல்ல? ஆரியன் கேட்க, கண்களை திறந்து ஆரியனை பார்த்து, மாமா..நான் இன்னும் அவங்களை அழைக்கவில்லை. ஆனால் அம்மாவிற்கு விசயம் தெரிந்து அலைபேசியில் கத்துனாங்க.

காலையிலே அதி இங்கே இருக்கணும் என்று கவினை பார்த்து, அதி அங்க நல்லா தான இருக்கா? நான் பார்க்கவில்லை என்று கேட்டான். கவினுக்கும் அவள் அங்கு இருந்ததே நினைவில் இல்லை.

அவனோ விழிக்க, ஆரியன் இருவரையும் திட்டினான்.

அண்ணா..இருங்க. அப்பாவிடம் பேசலாம் என்று அவரை அழைத்து கேட்டான். அவர் அதியா அறையை தட்ட, அவள் கதவை திறந்து மாமா.அதுக்குள்ளவா விடிஞ்சிருச்சுன்னு கேட்க, அவர் சிரித்தார்.

“நீயும் அத்தை அறையிலே தூங்கும்மா” சுகுமார் சொல்ல, “நீயுமா? வேற யார் இருக்கா?” அதியா கேட்டாள்.

சக்தி இருக்காம்மா. பிள்ளை குடிச்சிட்டு வந்திருக்கா?

“குடிச்சிருக்காலா? அவ குடிக்க மாட்டான்னு அண்ணா சொல்லி இருக்கானே!”

முன்னாடியே அந்த பொண்ணை தெரியுமாம்மா?

மாமா..அவள சுவேரான்னு சொல்லி இருக்கான். சக்தியும் இவளும் ஒன்றுன்னு இன்று தான தெரியுது என்றாள்.

சரிம்மா.. போ. ஓய்வெடு. அத்தை அந்த பொண்ணோட தான் இருக்கா. நீயும் ஓய்வெடு என்று இவர்கள் பேசுவதை கேட்ட ஆரியன், “எல்லாரும் கவனமா இருங்க. ஷனாவை பார்த்துக்கணும். நான் கிளம்புகிறேன்” என்று ஆரியன் கிளம்ப, “மாமா..எல்லாரையும் இன்வெயிட் பண்ணியாச்சா?” ஆத்விக் கேட்டான்.

சொந்தக்காரங்களுக்கு அலைபேசியில் அப்பா சொல்லீட்டாங்க. என்னோட வொர்க் பண்றவங்களுக்கு நானும் அவரும் நேரே சொல்லீட்டு வந்துட்டோம். உங்க பேமிலியில யாருக்கும் சொல்லணுமா? ஆரியன் கேட்டான்.

தேவையில்லை மாமா. அதிக்கு நான் போதும் என்று ஆத்விக் சொல்ல, “நாங்களும் இருக்கோம்” என்று கவின் ஆத்விக்கை முறைத்தான்.

“வேலையை பாருங்க. சின்னப்பசங்க மாதிரி சண்டை போட்டுகிட்டு” என்று ஆரியன் சொல்லி கிளம்ப, “சாரிடா மச்சான் கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டேன்” என்று கவின் ஆத்விக்கை அழைக்க, அவன் மனமிறங்கினான்.

காலை நேரம் அதிவதினி சமையலறையில் வேலையாக இருந்தார்.

விழிக்காமல் தூக்கம் கலைந்து, “ம்மா ஸ்ட்ராங் டீ” சத்தமிட்டாள் சக்தி. கரண்டியுடன் அதிவதினி அவள் முன் வந்து நிற்க, போர்வையால் உடலை மறைத்து முக்காடிட்டு அவளருகே வெறித்து அமர்ந்திருந்தாள் அதியா.

கண்ணை விழித்து பார்த்த சக்தி, இருவரையும் பார்த்து திகைத்து படுக்கையில் எழுந்து அமர்ந்து, “ஆன்ட்டி” வாயில் துர்நாற்றம் வீச, வாயை பொத்திக் கொண்டு அதியாவை பார்த்தாள்.

அதியா படுக்கையிலிருந்து இறங்கி, சக்தி அமர்ந்திருந்த போர்வையை இழுத்து உருவினாள்.

“அம்மா” படுக்கையிலிருந்து சக்தி உருண்டு கீழே விழுந்து எழுந்து, “மேம் எதுக்கு உருவுனீங்க?” இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து அதியாவை சினமுடன் முறைத்தாள்.

“மப்பு இறங்கிடுச்சா. பாவி, என்னை தூங்கவா விட்ட? என்னோட ஆகு செல்லம் சமத்து. நீ பேடு கெர்ல்” என்று தலையணையை சக்தி மீது தூக்கி எறிந்தாள்.

மேம்..நான் தூக்கத்தில் இருந்தேன்.

“இல்ல, நீ மப்புல்ல இருந்த? சீ உவாக் என்ன வாடை?” அதியா சொல்ல, சக்தி பாவமாக அவளை பார்த்தாள்.

“ஏம்மா, உன்னோட அண்ணன் இதை கொடுத்துட்டு போனான். சீக்கிரம் தயாராகி வா” என மூக்கை பிடித்தார் அதிவதினி.

“என்னோட அண்ணனா?” சக்தி வாட்டமாக முகத்தை வைத்தாள்.

எங்க ஆது தான். உன்னை தங்கச்சியாக்கிட்டானாம். அக்காவாக செய்ய வேண்டிய காரியங்களை நீ தான் எங்க அதிக்கு செய்யணுமாம். அதுல உனக்கு தேவையான எல்லாமே வச்சிருக்கான் என சொல்ல, சக்தி கண்ணீருடன் அதிவதினியை பார்த்தாள்.

“அண்ணனா? இவ எனக்கு அக்காவா?” அதியா கேட்ட நிமிடம், அதான் சார்..நோ..நோ..அண்ணன்னு ஆத்விக் சொல்லீட்டார்ல்ல. இனி மரியாதையா பேசு சக்தி அதியாவை வம்புக்கு இழுக்க, “அய்யோ எனக்கு இப்படியொரு குடிகார அக்காவா?”

“குடிகாரின்னு சொன்ன?” சக்தி சினமுடன் செல்லமாக தலையணையை அதியா மீது போட, அதிவதினியை பார்க்க வந்த கவின் மீது விழுந்தது. அவன் இருவரையும் முறைத்து பார்க்க, “மாமா இவள் தான்” என்று படுக்கையில் ஏறி அதியா கவினிடம் வந்தாள்.

“அதி, நீயும் குடிச்சியா? பயங்கர ஸ்மல் வருது” கவின் அவளை நிறுத்த, “எல்லாம் இவளால் தான்” அதியா சக்தி மீது தலையணையை போட கவினுடன் அவள் சென்ற எல்லாம் சக்திக்கு நினைவு வர, தலைகுனிந்து கொண்டே குளியலறைக்குள் புகுந்தாள்.

“டிரஸ் யாருடி எடுத்துட்டு போவா?” அதிவதினி சத்தமிட, நான் எடுத்து கொடுக்கிறேன். அதான் அக்கான்னு அத்து சொல்லீட்டான்ல்ல? அதியா புலம்ப, கவின் அவன் அம்மாவை பார்த்தான்.

அதி, அந்த பொண்ணோட அண்ணா, அக்கா கூட இப்ப உயிரோட இல்லையாம் அதிவதினி சொல்ல, “அப்படியா? இவ அதான் குடிச்சாளா?” அதியா கேட்க, தெரியலம்மா. அந்த பொண்ணு வரவும் நீயும் தயாராகி வா. சாதாரண புடவை ஏதாவது உடுத்து. உனக்கு மாப்பிள்ளை வாங்கி வச்சிருக்காராம் என்று சொல்லி கவினிடம், “வா உனக்கு எடுத்து தாரேன்” என்று நகர்ந்தார்.

அதே நேரம் ஆரியன் வீட்டில் அறையிலிருந்து தயாராகி கீழே வந்தான் ஆத்விக். துருவினி ஆரியனை அழைத்துக் கொண்டிருந்தாள். அவனோ, “கொஞ்ச நேரம் இரு துரு” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

என்ன? என்று அவளிடம் கேட்டுக் கொண்டே வந்த ஆத்விக்கை பார்த்து துருவினியும், அவளை பார்த்து ஆத்விக்கும் இன்பமாய் அதிர்ந்தனர்.

புடவையில் சொக்கத்தங்கமாய் அவள் மிளிர, அவனோ பட்டு வேஷ்டி சட்டையில் ஜம்பமாய் அவள் முன் நின்றான்.

சுயம் வந்த இருவரும் அவர்களது கண்களை திருப்ப, “ஏம்மா கத்திட்டு இருக்க?” உத்தமசீலன் வந்து இருவரையும் பார்த்தார்.

அப்பா, பரணில் இருக்கும் பொருட்களை எடுக்கணும். நாம முதல்ல சென்று தேவையானதை எடுத்து வைக்கணும். நான் முன்னாடியே போனால் தான தயார் செய்ய முடியும் அவள் சொல்லிக் கொண்டிருக்க, வேஷ்டியை மடித்து கட்டி பரணில் ஏறினான் ஆத்விக்.

“மாப்பிள்ள எடுத்து தருவாரு. வாங்கு” உத்தமசீலன் நகர, அவரை முறைத்து விட்டு துருவினி ஆத்விக்கை பார்த்தாள்.

உதட்டிற்குள் சிரிப்பை மறைத்தவாறு ஆத்விக், “எதை எடுக்கணும்?” கேட்டான் இரண்டை அர்த்தத்துடன்.

அவளோ அவனை முறைத்துக் கொண்டே சொல்ல சொல்ல எடுத்துக் கொடுத்தான். பானை ஒன்றை எடுக்கும் போது பல்லி ஒன்று மேலிருந்து துருவினி மேல் விழ, அவளோ கத்திக் கொண்டே புடவையை உதறினாள். அவளது எலுமிச்சை நிற இடை ஆத்விக் கண்ணிற்கு விருந்தாக, அவன் எச்சிலை விழுங்கினான்.

புடவையை நன்றாக உதறி சரி செய்து ஆத்விக்கை பார்க்க, அவன் பார்வை சென்ற இடம் தெரிந்து, “பொறுக்கி” என்றாள்.

“கம் அகென்” அவன் கேட்க, “பொறுக்கி” என விரலை நீட்டினாள். அவளது விரலை பிடித்து கீழே குதித்த ஆத்விக் அவளை இழுத்து, “பொறுக்கி என்ன செய்வான்னு காட்டவா செல்லம்?” என்று அவளது உதட்டை பிடித்து இழுத்தான்.

சார்..விடுங்க, அண்ணா பார்த்தால் உங்களை சும்மா விட மாட்டான்.

சாரா? மாமா சொல்லுங்க செல்லம். நான் உன் அண்ணாவை மாமான்னு சொன்னா நீங்க என்னை மாமான்னு தான அழைக்கணும் செல்லம்..

“போடா” அவள் திரும்ப, அவளது முந்தானையை பிடித்து அவளை நெருங்கி நின்று, என்று நாளும் நான் தான பார்க்கப் போரேன். அதுக்கு யார் தடை சொல்லுவா? அவன் சிரிக்க, அவனை முறைத்து அவளுக்கு தேவையானதை எடுத்து நகர்ந்தான்.

ஆத்விக் புன்னகையுடன், “மை லவ் இஸ் ஷூன் டி மச்சினிச்சி” என்று புன்னகைத்தான்.

“அப்பா, வாங்க கிளம்பலாம்” துருவினி உத்தமசீலனை அழைக்க, “மாப்பிள்ள துருவோட போங்க” என்று ஆத்விக்கிடம் அவர் சொல்லும் போது ஆரியன் வெளியே வந்தான்.

வேகமாக அவனிடம் சென்று, “அண்ணா நீயாவது உடன் வா” என்று அழைத்தாள்.

அம்மாடி, இப்ப நல்ல நேரம் தான். ஆனால் அவன் இப்பொழுது கிளம்ப முடியாது. அவன் பசங்களோட இருக்கட்டும். நான் அழைச்சிட்டு வாரேன். ஆத்விக் மாப்பிள்ளையோட முன்னாடி போ..

அப்பா பல்லை கடித்தாள் துருவினி.

அங்கிள், அவ வரலைன்னா இருக்கட்டும். நான் இந்த பொருட்களை வச்சிட்டு வாரேன் ஆத்விக் துருவினியை பார்த்துக் கொண்டே சொல்லி விட்டு, பதில் எதிர்பாராது பைக்கை எடுத்தான்.

அப்பா, அவரு என்னன்னா?

அதெல்லாம் அப்புறம் பேசலாம். நல்ல நேரம் முடியுறதுக்குள்ள மண்டபத்துல்ல வைக்க வேண்டியதை கொண்டு போம்மா என்று உத்தமசீலன் சொல்ல, காலை உதைத்து விட்டு இரு பைகளை இழுத்துக் கொண்டே வெளியே வந்து ஆத்விக்கிடம் கொடுத்தாள்.

இரண்டுமே வச்சிக்க முடியாது. ஒன்று போதும் அவன் சொல்வதை கேட்டு, எதையும் ஒரே அர்த்தமாக பேச மாட்டீங்களா சார் என அவனை முறைத்து, இதை மட்டும் வச்சுக்கோங்க என்று ஒன்றை அவள் கையில் வைத்து பைக்கில் ஏற முனைந்தாள்.

ஒன்றில்லை..இரண்டில்லை மூன்றுமே என் கையில வச்சுப்பேன் என பைக் கண்ணாடி வழியே அவளை பார்த்தான் ஆத்விக்.

உதட்டை கோணிக்காட்டி, ஒன்றை மட்டும் பத்திரமா முதல்ல பார்த்துக்கோங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம் என்று லேசான புன்னகையுடன் அவன் தோளில் கை வைக்க, அவனுக்கோ இனிய இன்பம்.

போகலாமா?

ம்ம்..சீக்கிரம்..

ம்ம்..ம்ம்..ம்ம்..தலையை ஆட்டி புன்னகைத்தான் ஆத்விக். அவனை பார்த்து துருவினியும் புன்னகைத்தாள். துருவினியை விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தான் ஆத்விக்.

“என்னப்பா? பிள்ளைக்கு ஒத்தாசையா இருப்பீங்கன்னு பார்த்தோம்” உத்தமசீலன் சொல்ல, அங்கிள் பிளஸ் பண்ணுங்க என அவர் காலில் விழுந்தான்.

ஆரியனும் அவரும் அவனை புரியாமல் பார்க்க, நாளைக்கு என்னோட டியூட்ல்ல ஜாயின் பண்ணப் போறேன் ஆத்விக் சொல்ல, எல்லாம் நல்லாதாக நடக்கும் என்று அவனை நிமிர்த்தி ஆரியனை பார்த்தார்.

ஆரியன் ஆத்விக்கை அழைக்க, “சொல்லுங்க மாமா?” என்று அவனருகே செல்ல, “உள்ள வா” என்று ஆத்விக்கை ஆரியன் அவனறைக்கு அழைத்து சென்று கைக்கடிகாரம் ஒன்றை ஆத்விக்கிற்கு கொடுத்து, கிடைக்கும் நேரத்தை நல்ல வழியில் பயன்படுத்து என்று சொன்னான்.

ஆரியனை அணைத்த ஆத்விக்..இது போல் யாரும் உண்மையான நம்பிக்கையுடன் பேசியதில்லை மாமா. ரொம்ப தேங்க்ஸ். “தட்ஸ் மை வேர்ல்ட் நம்பர் ஒன் கிஃப்ட்” என்று ஆரியன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

அவனை தள்ளிய ஆரியன், இது எனக்கு போல் தெரியலையே! கேலியுடன் கேட்க, “போங்க மாமா” வெட்கப்புன்னகையுடன் ஆத்விக் செல்ல, ஆரியன் புன்னகைத்தான்.

அங்க துரு தனியா இருப்பா. அவளுக்கு உதவு..நாங்க பசங்களை தயார் செய்திட்டு சொல்றோம் என்று ஆரியன் சொல்ல, ஆத்விக் உத்தமசீலனை பார்த்தான்.

மாமா, சக்தியையும் அழிச்சிட்டு போகணும். நம்ம அதிக்கு மூத்தவளாக அவள் தான நிற்கணும். அதியையும் தயார்படுத்தணும். அவங்களை விட்டுட்டு வினுவுக்கு உதவுகிறேன் என்று அதிவதினி வீட்டிற்கு கிளம்பினான் ஆத்விக்.

சக்தி புடவை, நகைகள் என்று தயாராகி வர, அதியா அவளை பார்த்து உனக்கு கல்யாணமா? எனக்கா? எனக்கே புரியலை என்றாள்.

அண்ணா, கிளம்பீட்டானாம். வந்துருவான் என்று அதியா சொல்லிக் கொண்டிருக்க, குண்டு மல்லிகையுடன் வந்த அதிவதினி சக்தியை பார்த்து, “அழகா இருக்கம்மா” நெட்டி முறிக்க, “அத்தை” அதியா அவரை முறைக்க, என்னோட குட்டி செல்லத்துக்கு பொறாமையை பாரு என்று சிரித்தார்.

அத்தை அதியா காலை தரையில் உதைக்க, என்ன சத்தம்? என்று சுகுமார் வர, சக்தியும் அதிவதினியும் அதியாவை பார்த்து விட்டு, ஒருவரை ஒருவர் பார்த்து “ஹை பை” கொடுக்க, கவின் கையை கட்டி இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

“மாமா பாருங்க. என்னை கிண்டல் பண்ணுறாங்க” என்று சுகுமாரிடம் சொல்ல, உன்னோட அத்தை பேச்சுக்கு ஏது அப்பீல் அவரும் கைவிட, அதியா கவினை பார்த்தாள்.

சக்தியையே பார்த்துக் கொண்டிருந்தாள். வேகமாக அவனிடம் சென்ற அதியா, “மாமா, அத்தை எனக்கு நெட்டி முறிக்கணும் சொல்லுங்க” என்று எல்லாரையும் பார்க்க, கவின் காதை குடைந்து “அம்மா நேரமாகுது. பொருட்களெல்லாம் தயாரா இருக்குல்ல?” கேட்டான்.

அதியா எல்லாரையும் பார்த்து அறைக்குள் வந்து அவள் அலைபேசியை எடுத்தாள். அவளிடமிருந்து அதை பிடுங்கிய சக்தி, “கம்பிளைண்ட் பண்ணப் போறீயா? என்னை விட நீ தான் ரொம்ப க்யூட்டா இருக்க? சும்மா எல்லாரும் உன்னிடம் விளையாடுறாங்க” என்று அதிவதினியை பார்த்தாள்.

“ஆமா, என்னோட மருமகள் எனக்கு எப்போதும் அழகு தான்” அவர் சொல்ல, சுகுமாரோ கவினை பார்க்க, “இதை சொல்லி தான உசுப்பேத்தி மனச ரணமாக்கி விட்ருக்காங்க” அவன் மனதில் எண்ணியவாறு. “இதையும் கடந்து தானே ஆகணும்” என்று கடந்து சென்றான்.

ஆத்விக் வந்து விட, அவனுடன் அதியாவும் அதிவதினியும் ஏறிக் கொண்டனர். சக்தி இருவரையும் பார்க்க, “கவின் முதல்ல சக்தியை விட்டு அப்புறம் மாமாவை அழைச்சிட்டு வா” ஆத்விக் கிளம்பினான்.

சக்தி தயக்கமுடன் சுகுமாரை பார்க்க, “ஏறும்மா. பார்த்து போங்க” என்று அவர் சொல்ல, கவினுடன் ஏறினாள் சக்தி. கவின் அவ்வப்போது அவளை பார்க்க, அவள் நெஞ்சம் குறுகுறுத்தது.

“இப்ப நீ ஓ.கே தான?” மெதுவாக கவின் பேச்சை தொடங்க, ம்ம்..ஓ.கே சார் என்று அவள் சொல்லி அமைதியாக, அவனும் ஏதும் பேசாமல் மண்டத்திற்கு வந்தனர்.

கவினை வேஷ்டி சட்டையில் பார்க்க, சக்திக்கு வித்தியாசமாக தெரிந்தது. அவனது காவலர் தோற்றத்தில் இன்னும் கம்பீரமாக தெரிந்தான்.

இறங்கிய சக்தி அவனை ஏற இறங்க பார்க்க, அவன் புருவம் இடுங்கியது.

“என்ன?” அவன் கேட்க, “சார், நேற்று நடந்ததற்கு சாரி. கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா?”

ம்ம்..

“சாரி சார்” என்று சொல்லி அவள் நகர, அவளது முந்தானை பைக்கில் மாட்டியது. கவின் அதை எடுத்து விட, சக்தி கவினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன? அவன் நேரடியாக கேட்க, “சார் உங்களுக்கு இந்த காஸ்ட்டியூம் நல்லா இருக்கு” என்று சொல்லி விட்டு அவனை பார்க்காமல் வேகமாக நடந்தாள். சற்று தூரம் சென்று திரும்பி அவனை பார்க்க, அவன் ஆடையை பார்த்து விட்டு சக்தியை பார்த்து புன்னகைத்தான். அவள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றாள்.

துருவினி இருக்கும் திசை கூட அதியாவை அதிவதினி விடவில்லை. துருவினிக்கும் அதியாவை பார்க்க நேரமில்லை. அதியாவும் தயாராக தொடங்கியதால் அவளுக்கும் நேரமில்லை.

நேரமும் கை கூடியது. மக்கள் வரத் தொடங்க எல்லாரும் பிஸியாக இருந்தனர். ஆகர்ஷனாவும் தர்சனும் ஆரியனுடன் மணமேடையில் அமர்ந்திருந்தனர். அதியாவை சக்தி, அதிவதினி தயார் செய்து அழைத்து வர, ஆரியன் அருகே அமர வைத்தாள் துருவினி.

அனைவரும் புன்னகையுடன் இருக்க, பல ஆட்களுடன் உள்ளே வந்தார் பவானி. அதியா, ஆத்விக்கின் தாய்.

ஆத்விக் அவர்கள் முன் வந்து, “வாங்க..வாங்க..ரொம்ப நேரமாக உங்களுக்காக தான் காத்திருந்தோம்” என்று கேலியுடன் தாயை வரவேற்க, “இந்த திருமணம் நடக்காது” அவர் ஆக்ரோசமாக கத்த, ஏற்கனவே ஆரியனை பற்றி பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு அதியாவும் அவலானாள்.

அதில் ஒரு பெண்மணி, இந்தா பாருடி ஆரியன் தான் பொண்டாட்டியை பார்த்துக்கலைன்னும், அவனே தன் மனைவியை கொன்னுட்டான்னு பேசிக்கிட்டாங்க. இப்ப என்னடி இந்த கல்யாணமும் இந்த பையனுக்கு நிலைக்காது போல. இதோ இந்த பொண்ணோட ஆத்தாக்காரி வந்துட்டா என்று பேசினார். அவரை பார்த்து முறைத்தார் அதிவதினி.

இந்த பையனை எனக்கு பிடிக்கலை. என்னோட பொண்ணை கடத்திட்டீட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிறான் பவானி பேச, ஆரியனுடன் வேலை பார்த்த ஒருவர் எழுந்து, “பொண்ணை கடத்தீட்டு வந்ததா நீங்க தான் சொல்றீங்க? பொண்ணு சந்தோச கலையோடல இருக்கு?” அவர் கேட்டார்.

“இவன் என்னோட பொண்ணை மிரட்டி வச்சிருக்கான்” என்று ஆரியனை சொல்லவும் அதியா சினமுடன் தாயை பார்த்தாள்.

அதியாவை பேச வைக்க ஆத்விக் அமைதியாக வேடிக்கை பார்க்க, “இத்தனை வருடம் இல்லாத தைரியமா இவளுக்கு வரப் போகுது” பவானி தன் மகன் எண்ணம் புரிந்து அலட்சியமாக நோக்கினார்.

“ஏற்கனவே திருமணம் செய்து ஒரு பொண்ணை பயன்படுத்தி இருந்திருக்க? இப்ப என்னோட பொண்ணை என்ன செய்ய பாக்குற?” என்று மணமேடையில் ஏறி பொருட்களை தட்டி விட்டார் பவானி. ஆரியனுக்கு சினம் மிக, அதியா அவன் கையை இறுக பற்றினாள்.

“வாடி நீ?” பவானி இழுக்க, அவர் கையை தட்டி விட்டு ஆரியன் கையை இறுக பற்றிக் கொண்டு, “நீங்க யாரு? எதுக்கு பிரச்சனை பண்றீங்க?” என்று சீற்றமுடன் கேட்டாள் அதியா.

யாரா? உன்னை பெத்தெடுத்து வளர்த்தவள்.

பெத்தன்னு சொல்லு. வளர்த்தன்னு சொல்லாத. என்னோட அம்மா அவ..அவ..மட்டும் தான். என்னோட அக்கா ஆதிரா. அவள் தான் என்னை வளர்த்தாள்.

“எனக்காக தான் உன்னை எதிர்த்து முதலடி எடுத்து வச்சா? ஆனால் அந்த வருண் மோசமான பொறுக்கின்னு தெரிந்தும் அவனை அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்ச? நீ அம்மாவா?”

எத்தனை நாள் அறைக்குள்ளே முடங்கி யாருமில்லாமல் மூச்சுமுட்ட வாழ்ந்தேன். அப்ப இந்த அம்மா எங்க போன?

என்னை கூட விடு. நம்ம ஆகு..நம்ம வீட்டு மூத்த வாரிசு. அவளை தூக்கி கொண்டாடணும். ஆனால் அவளையும் என்னை போல ஒதுக்கி தான வச்ச? நீ அம்மாவா?

அக்காவை அவ புருசன் அடிக்கும் போது, உதைக்கும் போது ஏன் கொல்லும் போதும் சும்மா தான இருந்த? நீ அம்மாவா? என விட்டு விலாசினாள் அதியா.

“கொலையா?” அனைவரும் பேச, ஆமா..என்னோட அம்மாவுக்கு பணம் வேணும்ன்னு அந்த லட்சாதிபதி பொறுக்கி வருணை கல்யாணம் செய்து வச்சாங்க. அவன் என் அக்காவிடம் சொத்து கேட்டு அனுப்பினான். அப்பொழுது எங்க வீட்டுக்கு வந்தவ செத்த பொணமா தான் போனா? என்று அதியா கதறி அழுதாள்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கு. உன்னை பத்தி பேசி என் வாழ்க்கையை அழிச்சுக்க நான் முட்டாள் இல்லை. எனக்கு ஆருவை பிடிக்கும். அவருக்கும் என்னை பிடிச்சிருக்கு. நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம். எனக்கு உங்க பணம் வேண்டாம் என அதியா சொல்ல, “நிறுத்து அதி” ஆத்விக் சீற்றமுடன் கத்தினான்.

“என்ன வேண்டாம்ன்னு சொல்ற?” இந்த சொத்து எல்லாம் உன்னோட பெயர்ல்ல தான் இருக்கு. எல்லாத்துக்கும் அதிபதி நீ தான்னு அக்கா எழுதி வச்சிட்டு போயிருக்கா. இதுல அவளோட உழைப்பு இருக்கு. இந்த ஒரு வாரத்துல்ல இந்த அம்மா என்னத்த கிழிச்சாங்க? ஒன்றுமேயில்லை. இவங்களுக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆத்விக் சொல்ல, அவனை ஓங்கி அறைந்தார் பவானி.

எல்லாரும் அதிர்ந்து பார்க்க, பணத்துக்காக என்னை அடிக்க என்ன? கொலை கூட செய்ய நீ தயங்க மாட்டான்னு தெரிந்து தான் நான் அந்த சின்ன வயசிலே வீட்டை விட்டு ஓடினேன். இப்ப வளர்ந்து நிற்பது உன் பணமும் அல்ல..உன் வளர்ப்பும் அல்ல..

பணத்துக்காக நான் நிறைய கஷ்டப்பட்டு தான் வளர்ந்தேன். ஆனால் நான் வது அத்தையும் வளர்ப்பு. உன்னால சொன்னாலும் புரிஞ்சுக்க முடியாது. இருவரும் அப்படி பட்டவங்க..

வது அத்தை தன் காதல் கணவனுக்காக சொத்தையே மொத்தமாக உனக்கு கொடுத்தாங்க. ஆனால் ஆதி என கண்ணீர் வர வர அதை துடைத்துக் கொண்டே ஆத்விக் பேசினான்.

ஆதி.

சொல்ல முடியாத பெயர். வரையறுக்க முடியாத பாசம். எண்ணிலடங்கா தைரியம். எல்லாமே அவள் தான். அவள் தான் என்றும் எங்களுக்கு முதல். சொத்தை சேரக் கூடாதவங்க கிட்ட மீட்டு தைரியமா போராடி தன் உயிரை கொடுத்து அதி பேருக்கு மாத்தினாள்.

“எதுக்கு அவள் வாழ்க்கையை தியாகம் பண்ணா? உங்களை மாதிரி பணப்பேய் கிட்ட கொடுக்கவா? இல்லை..அதியை திருமணம் செய்யப் போகும் நபரால் தான் அதியோட வாழ்க்கை மாறும்ன்னு அவள் ஏற்கனவே நம்பி இருந்திருக்கா” என்று அவன் அம்மாவை பார்த்து,

வீட்டை விட்டு வெளியே போனேனே ஒரு நாளாவது தன் பையன் என்ன செய்கிறானோ என தேடி வந்துருப்பியா? இல்லை…ஆதி வந்தா. நான் எங்கே இருப்பேன்னு தெரிந்து வந்தாள்.

நான் கஷ்டப்படும் போது அவளை நான் என் பக்கம் விடவேயில்லை. ஆனால் எனக்கான மொத்த நம்பிக்கையும் அவள் தான் கொடுத்தாள்.

நான் சும்மா இந்த இடம் வரலை. உண்மை பொய்யை தாண்டி, ஏன் சாவையே நேரில் பார்த்து வந்தேன். நான் ஒன்றை தான் எதிர்பார்க்கலை என்று ஆரியனை பார்த்து, அதி ஆரியன் மாமா கைக்கு வருவான்னு நான் எதிர்பார்க்கலை. அதே போல். என் சாவிலிருந்து என்னை மீட்டவரும் அவர் தான் என்று அவனை பார்த்தான்.

ஆரியன் கண்கள் கலங்க ஆத்விக்கை பார்த்தான்.

நல்லது செய்றவங்க அதை நினைவில் வச்சுக்க மாட்டாங்க. மாமா..ஆறு வருசம் பின்னாடி போங்க. ஒருவனை நடுஇரவில் மும்பையில சில ரௌடிகள் அடிச்சி போட்டுட்டு இருந்தாங்கல்ல. நீங்க கூட உங்க ப்ரெண்ட்ஸோட வந்துருந்தீங்க. அந்த பையனை கூட ஹாஸ்பிட்டலில் சேர்த்தீங்க. பே கூட பண்ணீட்டு போனீங்க. அது நான் தான்.. அன்றோட என் கதை முடிந்திருக்கும்..இவர் வரலைன்னா..

மாமா, நாம இரு முறை சந்தித்திருக்கோம். உங்களுக்கு தான் என்னை நினைவில்லை.

“ஆமால்ல, நான் எப்படி மறந்தேன்?” லோகேஷ் அவனருகே செல்ல, அவனை பவானி முறைத்த முறைப்பில் அங்கேயே நின்று, “அப்புறம்டா மச்சான்?”  ஒரு பெரியவர் தோளில் கையை போட்டான் லோகேஷ். அவர் அவனை முறைத்தார்.

பெருமூச்சு விட்ட ஆத்விக், “அம்மா” என்று நாங்கள் உங்களை சொல்ல அசிங்கப்படுறோம். நீங்க கிளம்பலாம். அப்படியே வீட்டை விட்டும் என்று ஆத்விக் சொல்ல, “சப்ப கட்டு கட்டாதடா” திட்டிக் கொண்டு அவர் அவனருகே வர, கவின் கையை தட்டினான்.

எல்லாரும் அவனை கவனிக்க, “என்னடா மச்சான், முயல் குட்டியை இன்னும் அடைச்சி போடலையா? பார்த்து புல்லை மேய்கிறேன்னு ஆளையும் சேர்த்து மேய்திடாமல்” என்று சொல்ல, “ஏய்” பவானி கையை ஓங்க, “மேம்” என்று சிலர் அவர் முன் வந்தனர்.

பவானியின் குடும்ப வக்கீல் அவர் முன் வந்து, மேம் இதுல்ல சைன் பண்ணுங்க. உங்களுக்கும் இந்த சொத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு பத்திரம் தயார் செய்திருக்கோம்.

என்னால முடியாது. என்னோட வீட்டை விட்டு நான் எங்கும் போக மாட்டேன் என்று பவானி பிடிவாதம் செய்ய, ஆரியன் அதியாவை பார்த்தான்.

ஆரு, என்னோட முடிவு சரியான்னு தெரியல. துணைக்கு இருப்பீங்களா? அதியா கேட்க, ம்ம்..கண்டிப்பா அதி என்று அவள் கைக்கு அழுத்தம் கொடுத்தான்.

இவங்க வீட்டை விட்டு வெளிய வரவே கூடாது. அந்த வீட்ல இவங்க மட்டும் தான் இருக்கணும். நானும் என்னோட ஆகுவும் வாழ்ந்த வாழ்க்கையை வாழட்டும். மற்றபடி எல்லா பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன்.

திரிபில் ஆர் கம்பெனியை சீல் பண்ணி கவர்ன்மண்ட் எடுத்துக்கட்டும். வருண் குடும்பத்துல்ல யாரும் வெளியே வரக் கூடாது என சொல்லி ஆத்விக்கை அதியா பார்க்க, அவன் விசிலை பறக்க விட்டான்.

“ஆது, நீ தான். பீச் ஹோட்டல்ல விசில் அடித்ததா?” லோகேஷ் கேட்க, புன்னகையுடன் அதியாவை ஆத்விக் அணைத்தான்.

அத்து ஆனால்..நான் என அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, உனக்கு உதவியாளர் தி கிரேட் என ஆத்விக் நிறுத்த, “ஆருவா?” அதியா அவனை பார்த்தாள் ஆர்வமுடன்.

இல்லை என்று அவன் கையை விரிக்க, “தி கிரேட் ஆர்மி மேன் உத்தமசீலன் மாமா” சொல்லி கை தட்ட துருவினி விழித்து தன் தந்தையை பார்த்தார்.

அடுத்தது நம்ம வது அத்தையும்மாமாவும் கண்காணிப்பாளர்களாக இருப்பாங்க. போர்ட்டு மெம்பர்ஸ் விருப்பத்துடன் அவன் சொல்ல, “அத்தை” அவரை கட்டிக் கொண்டாள் அதியா சிரிப்புடன்.

“சார், அவங்கள அழைச்சிட்டு போங்க” பவானியிடம் வந்து, நீங்க ரொம்ப உழைச்சிட்டீங்கல்ல? இனி நாங்க பார்த்துக்கிறோம். நீங்க விருப்பப்பட்டது போல உங்க வீட்டுக்குள்ளவே இருக்கலாம் என்று அனுப்பி வைத்தான்.

அனைவரும் பேச, “நாழியாகுது. பொண்ணு மணமேடைக்கு வாங்கோ” ஐயர் சொல்ல, அதியா புன்னகையுடன் ஓடி வந்து ஆரியனை அணைத்து அமர்ந்தாள்.

ஐயர் மறுபடியும் பூஜையை சொல்ல, ஆரியன் கையில் மங்கல நாண் கொடுக்கப்பட்டது. அதை ஆரியன் எடுத்து அதியா கழுத்தில் கட்டும் சமயம் “நிறுத்துங்க. இந்த திருமணம் நடக்காது” ஒரு பெண்ணின் குரலில் ஐயருக்கோ வியர்த்து ஒழுகியது. கைக்குட்டையால் முகத்தை துடைத்து விட்டு அவர் மணமக்களை பார்த்தார்.

அங்கே வந்திருந்த பெண்ணை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

“செத்துப் போன பொண்ணு இவ தான். இவ தான்” பலகுரல்கள் ஒலிக்க, வந்தவளோ ஆரியனை பார்த்து, “என்னோட குழந்தை எனக்கு வேண்டும்” என்றாள்.

“சைந்தவி. இவள் உயிரோட இருக்காளா?” பிரகாஷ் அதிர, அதியாவிற்கு தூக்கி வாரி போட்டது. அவள் ஆரியன் கையை கோர்த்துக் கொண்டாள். ஆரியன் அதிர்ச்சியுடன் சைந்தவியை பார்த்து விட்டு அதியாவை பார்த்தான்.

அதியா கையை எடுத்து விட்டு கீழே இறங்கினான் ஆரியன். கண்கலங்க அதியா அவனை பார்த்தாள்.

“நீ எப்படி உயிரோட வந்த?” ஆரியன் கேட்க, துருவினி வேகமாக அவளிடம் வந்து, “அண்ணி உங்களுக்கு ஒன்றுமில்லையா? எங்க போனீங்க?” சைந்தவியை கையை பிடிக்க, “ச்சே” என்று சைந்தவி துருவினி கையை தட்டி விட்டாள்.

“துரு” உத்தமசீலன் சத்தமிட, “அப்பா” அழுது கொண்டே அவரை அணைத்துக் கொண்டாள்.

“குழந்தையா? என்னம்மா இப்ப கேட்டு வந்திருக்க? உனக்கு ஒன்றுமே ஆகலைன்னா..என்னோட சுந்தரி..உயிரோட தான் இருக்காலா?” அவர் கண்கள் அலை பாய்ந்தது.

அந்த கிழவி அப்பவே போய் சேர்ந்திடுச்சு என்றாள் சைந்தவி.

“ஏய்” ஆரியன் சத்தமிட, துருவினி அவளிடம் வந்து “கிழவியா? நீங்க தான அம்மா அம்மான்னு அவங்க பின்னாடியே சுத்துனீங்க?”

“ஆமா சுத்தினேன். இப்ப எதுக்கு அதெல்லாம்? ரொம்ப போர். எனக்கு என்னோட குழந்தை போதும்” என்று சைந்தவி தர்சனை தேட, அவன் அதியாவிடம் வந்து அவள் கையை பிடித்துக் கொண்டான்.

தர்சனை பார்க்கவும் சைந்தவி வேகமாக மணமேடையில் ஏறி தர்சனை இழுக்க, அவன் அதியாவை பிடித்துக் கொண்டு “அம்மா..அம்மா” என்று அழுதான்.

சைந்தவி அவனை மேலும் இழுக்க, “அவனை விடுங்க. அவன் சின்னப்பையன்” கத்தினாள் அதியா.

“அடுத்தவ வாழ்க்கையை பறிக்க நினைக்கிற நீயெல்லாம் பொண்ணாடி?”  சைந்தவி அதியாவை அடிக்க கையை ஓங்க, ஆரியன் அவர்களிடம் ஓடி வந்து அவளை தள்ளி விட்டான்.

“நீ செத்துப் போனவ. செத்துப் போனவ தான். என்னோட அதி மேல கையை வைக்கிற?” சீற்றமுடன் ஆரியன் கத்தினான்.

“ஓ திருமணமே முடியலை. அதுக்குள்ள அந்த அளவு போயிச்சா இல்லை அவ வயித்துல்ல பிள்ளை ஏதும் வளருதா?” சைந்தவி பேச, “நிறுத்துங்க” அழுது கொண்டே கத்தினாள் துருவினி.

நீங்க எப்படியும் போங்க. எனக்கு என்னோட குழந்தை வேணும். அப்புறம் வேலூர்ல்ல இருக்கும் என் பையனுக்கான வீடு வேணும் என்றாள்.

முதல்ல எனக்கு பதில் சொல்லு. “நீயும் தான என் அம்மாவோட இருந்த? எப்படி தப்பிச்ச? தப்பினாலும் உன் பிள்ளையை இத்தனை வருசமா பார்க்க வரலை. ஏன்?” ஆரியன் கேட்டான்.

அதற்கான பதிலை நான் சொல்கிறேன் அண்ணா என்று கவின் மேடை ஏறினான்.

“கவின்” சுகுமார் சத்தமிட, ஆத்விக் அவனை கோபமுடன் பார்த்தான்.

“சொல்லுங்க. நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க” சைந்தவி கவினை புன்னகையுடன் பார்க்க, அவனோ அலைபேசியை எடுத்து, “எல்லாரும் வாங்க” என்று அழைக்க, அங்கே சில போலீஸார் சைந்தவியிடம் வந்து, உங்களது மாமியாரை கொலை செய்ததற்காக உங்களை கைது செய்கிறோம் என்று சொல்ல, சைந்தவியோ..நான் எதுவும் செய்யலை. எல்லாம் இந்த ஆரியன் தான்..

கவினை பார்த்து, “என்னை ஏமாத்திட்டேல்லடா” சைந்தவி கத்த, “நீ பெரிய உத்தமி பாரு” அவன் ஆரியனை பார்த்து, தர்சன் உங்களுடன் தான் இருப்பான்.