வல்லவன் 11

ஷனா போகப் போறேன் ஆரு. எனக்கு என்னோட அப்பாவை பிடித்ததில்லை. அதிம்மாவுக்கு நீங்க உதவும் போது எனக்கு நீங்க சூப்பர் ஹூரோ மாதிரி தெரிஞ்சீங்க. அதனால தான் உங்களிடம் வந்தேன். நிராப்பா..இல்ல அந்த சேடிஸ்ட் அதிம்மாவை ஏமாற்றிய போது அழுதாங்களே தவிர உங்க வீட்டுக்கு வந்த பின் அவன் நினைவே அம்மாவுக்கு இல்லை.

என்னையும் அதிம்மாவையும் பாதுகாப்பா பார்த்துக்கிட்டீங்க. என்னிடம் இதற்கு முன் என்னோட பள்ளியில் யாரும் பேச மாட்டாங்க. பேச பாட்டி விட மாட்டாங்க. ஆனால் இங்க வந்த பின் தர்சு எப்போதும் பக்கத்திலே இருந்தான். அவன் என்னிடம் அதிம்மாவை அவனுக்கு கொடுக்க சொல்லி கேட்டான்.

என்னால அதிம்மாவை விட்டு இருக்க முடியாது. நான் தர மாட்டேன். நீ வேணும்ன்னா எங்களோட சேர்ந்துக்கோன்னு சொன்னேன். அவன் நல்லா பழகினான்.

அதிம்மாகிட்ட இரவு எங்களோட தூங்க பிடிவாதம் செய்த போது அம்மா சொன்னாங்க. என்னை விட உன் அப்பாவுக்கு தான் உன்னை ரொம்ப பிடிக்கும். அவருடன் தூங்கலாம்ல்ல? கேட்டாங்க. அவன் நீங்களும் வாங்கன்னு சொன்னான்.

ஆரு..நீங்களும் அதிம்மாவும் கல்யாணம் பண்ணா நாங்க சேர்ந்தே இருப்போம்ல்ல. உங்களுக்கு எங்களை பிடிக்கலைன்னா எங்களை எதுக்கு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க? உங்களுக்கு எங்களை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும். தர்சுவை திட்டாமல் பார்த்துக்கோங்க..

அப்புறம் என அமைதியாக கண்ணீருடன் ஆகர்ஷனா அவனறைக் கதவை தொட்டு, “எனக்கு இப்படி கூப்பிடணும்ன்னு ஆசையா இருக்கு ஆரு..தப்புன்னா மன்னிச்சுக்கோங்க” என்று “அப்பா ஐ லவ் யூ”. உங்களை மிஸ் பண்ணுவேன். “லவ் யூ டாடி” என்று சொல்லி அழுது கொண்டே ஆகர்ஷனா பின் நகர்ந்து அவன் நண்பர்களை பார்த்து, “என்னோட டாடியை அழாம பார்த்துக்கோங்க. நான் அதிம்மாவை பார்த்துக்கிறேன்” என்று ஆத்விக்கை பார்த்து அழுது கொண்டே அவனை தாண்டி ஓடினாள்.

ஆரியன் அறையில் அவன் கதறி அழும் சத்தம் கேட்டது. ஆத்விக் ஆரியன் அறையை பார்த்துக் கொண்டே, அவன் நண்பர்களிடம் அவனறையை காட்டி கண்ணசைத்து சென்றான்.

ஆரியா..ஆரியா..கதவை திறடா. அதி போறாடா லோகேஷூம் அவன் நண்பர்களும் கத்த, துருவினி அறையிலிருந்து தர்சன் வெளியே ஓடினான்.

“தர்ஸ்” என்று விஷ்ணு அவன் பின் ஓட, மற்றவர்களும் அவன் பின் ஓடினார்கள். அதற்குள் எல்லாரும் பைக்கில் கிளம்ப, அவன் வரும் போது ஆத்விக், கவின் சென்று கொண்டிருந்தவர்கள் தர்சு வருவதை பார்த்து பைக்கை நிறுத்தினார்கள்.

ஓடி வந்து கொண்டிருந்த தர்சன் கீழே விழுந்தான். ஆரியன் முகத்தை அழுந்த துடைத்து கதவை பட்டென திறந்து மாடிக்கு ஓடினான்.

ஆத்விக் பைக்கிலிருந்து இறங்கி அவனிடம் ஓடினாள் அதியா. தர்சன் எழுந்து அவள் வருவதை பார்த்து சிரித்து கொண்டே நகர, துப்பாக்கி சத்தம் கேட்டது.

அதியாவோ பயந்து விரைந்து தர்சுவிடம் சென்று அவனை தன்னுள் மறைத்தவாறு அமர்ந்து கொண்டாள். இருவருக்கும் முன் ஆரியன் கையில் துப்பாக்கியுடன் நின்று மறைந்திருந்த அனைவரையும் சுட்டு தள்ளினான்.

மேலிருந்து ஆரியன் ஏக்கமுடன் ஆத்விக் பைக்கில் செல்லும் அதியாவை பார்க்க, ஏதோ அசைவுகள் அவர்களை சுற்றி கண்ணில் பட்டது. அதை கவனித்த மறுநொடி எதை பற்றியும் சிந்திக்காமல் எல்லா வீட்டின் மாடியிலிருந்து தாவி குதித்து கடைசியில் ஓரிடத்தின் மாடியிலிருந்து கீழே குதித்து பிரகாஷ் துப்பாக்கியை எடுத்து தர்சனை அணைத்துக் கொண்டிருந்த அதியா முன் வந்து துப்பாக்கியால் அனைவரையும் சுட்டு தள்ளினான்.

அதியாவோ கண்ணை மூடி தர்சனை இறுக அணைக்க, அவனும் பயத்துடன் அவளை அணைத்துக் கொண்டான். அவள் ஆரியனை பார்க்கவில்லை.

அவ்விடம் அமைதியாக மெதுவாக கண்ணை திறந்தாள் அதியா.

அதியா, தர்சன் முன் ஆரியன் நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நண்பர்கள் இறந்தவர்களை பார்த்து பேசிக் கொண்டிருக்க, ஆரியனை பார்க்கவும் கண்ணீர் மழையானது அதியாவிற்கு.

தர்சனை தூக்கிக் கொண்டு எழுந்த அதியா ஆரியனை பார்க்க, அவனும் இருவரையும் பார்த்தான்.

“ஆரு” அவனை அணைக்க வந்த அதியா, சட்டென நின்று கவினை பார்க்க, அவன் முகம் இறுகி இருந்தது.

கடைசியா கேட்கிறேன் ஆரு. எனக்கு பதில் சொல்லுங்க? அதியா கேட்க, அவன் கண்ணீர் வடிந்ததே தவிர பதிலில்லை. அவளோ கோபமாக தர்சனை துருவினியிடம் கொடுத்து விட்டு, ஆரியனை முறைத்து கவின் பைக்கில் ஏறினாள்.

“மாமா கிளம்பலாம்” அவள் சொல்ல, அவர்கள் அங்கிருந்து அகன்றனர். ஆரியன் மட்டும் நடுவீதியில் நின்று கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்து வீட்டார் வாய்க்கு வந்த படி பேச கேட்டு கோபமாக அறைக்கு சென்றான் ஆரியன். தர்சு அழுது கொண்டே தூங்கி விட்டான்.

 ஆரியன் அறைக்கு செல்லவும் அவன் பின்னே அவன் நண்பர்களும் சென்றனர்.

“ஆரியா, நீ என்ன பண்ணீட்டு இருக்க? புரிந்து தான் பண்றீயா?” பிரகாஷ் சினமுடன் சத்தமிட்டான். ஆரியன் அமைதியாக இருந்தான்.

ஏற்கனவே நடந்தது போல் நடந்துரும்ன்னு பயப்படுறியா? உன் மேல நீயே பழிய போட்டு காயப்படுத்திக்காதடா. காயம் உனக்கு மட்டுமல்ல துரு, அப்பா, தர்சுவிற்கும் தான்.

“சொல்லுடா? ஏதாவது சொல்லித் தொலை” விஷ்ணு கத்தினான்.

ஆரியன் அவனை அணைத்து அழுதான்..

“மச்சீ” நண்பர்கள் பதற, சைந்தவிக்கு முன்னே நான் அதியை மீட் பண்ணி இருந்திருக்கலாம்டா..

அதான் மீட் பண்ணி இருக்கீங்களே! உனக்கு தான் தெரியல. அவளுக்கும் உன்னை நினைவில்லைன்னு நினைக்கிறேன்..லோகேஷ் கூறினான்.

ம்ம்..

என்ன ம்ம்?

“அதியே உன்னிடம் கேட்குறால்ல? உனக்கும் விருப்பம்ன்னு சொல்ல வேண்டியது தானடா?” பிரகாஷ் கேட்க,

“அதெப்படிடா பொருத்தமாக இருக்கும்?”

“பொருத்தமா?” விஷ்ணு கேட்க, ஆமாடா எங்களுக்குள் வயது வித்தியாசம் இருக்கு. எனக்கு திருமணமாகி குழந்தை இருக்கான். அவளுக்கு திருமணமே ஆகலை. அப்புறம் வசதியாகவே வளர்ந்தவ..

“அண்ணா” கோபமாக வெளியேயிருந்து வார்த்தைகள் வந்தது துருவியிடமிருந்து.

“துரு”, ஆரியன் கண்கலங்க, நீ நினைக்கிறத நேரடியா பேசு.

அதிக்கு உன்னை பற்றி தெரியும் தான? நம்முடைய பழைய வாழ்க்கை பற்றி தான் தெரியாது. இப்ப பத்து நாளாக கூடவே தான இருக்கா. நம்ம வீட்டில் இருப்பதை பற்றி எந்த குறையும் அவள் சொன்னதில்லை. அவளோட பிரச்சனை தவிர சந்தோசமாக தான் இருந்தாள். தர்சு, ஆகாவை பற்றி நீ யோசிக்கலை.

“பத்து நாள் குறை சொல்லாமல் உடன் இருந்தால் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? வாழ்க்கை முழுவதும் இருக்கணுமே! சொல்ல நல்லா தான் இருக்கும். வாழும் போது கஷ்டமாக இருக்கும்” ஆரியன் சொல்ல, “ஏன் உன் அம்மா இல்லையா?” சீற்றமுடன் உத்தமசீலன் கேட்டார்.

அப்பா, அம்மா உங்களை காதலித்ததால் ஏதும் தெரியலை.

“சோ, அதி உன்னை காதலிக்கலைன்னு சொல்ற?” துருவினி கோபமாக அறைக்கு சென்று அவள் அலைபேசியை எடுத்து வந்து அவன் முன் வைத்து, நாம சேர்ந்து வெளியே சென்ற போது எடுத்த புகைப்படம். அவள் அதிகம் நேரம் செலவழித்தது உன்னோடு தான்.

நம்மை விட்டு போகணும்ன்னு நினைத்தாலும் அவள் உன்னை விட்டு பிரியணுமே என்ற வருத்தத்தில் தான் உன்னிடம் நெருங்கி வந்திருக்கா. உனக்கு புரியலை. அவளால் சொல்ல முடியவில்லை.

அதி யாரை திருமணம் செய்தாலும் உன் நினைவில் தான் வாழ்வா. அதனால் அவளோட வாழ்க்கை மொத்தமாக அழியப் போகுது. உன்னால தான் நடக்கப் போது.

“இல்லை. அதெல்லாம் நடக்காது” பதட்டமானான் ஆரியன்.

“என்ன நடக்காது?”

அவளுக்கு என் மீது ஆர்வம் மட்டும் தான். காதல் இல்லை.

ஓ…காதல் இல்லாமல் ஹாஸ்பிட்டல்ல முத்தம் கொடுத்தாளா? அப்ப அவ..என துருவினி சொல்லும் முன் சீற்றமுடன் “துரு” கத்தினான் ஆரியன்.

நான் சொல்லுவது உனக்கே தப்பா தெரியுதுல்ல. நீ மறைமுகமா இப்படி தான் அதியை சொல்ற?

இல்ல..ஆரியன் தலையை பிடித்தான்.

துருவினி தோளில் கை வைத்த அவள் தந்தை “ஆரியா, கடந்த காலத்தை வைத்து மற்றதையும் எண்ணக் கூடாது. எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க” உத்தமசீலன் சொல்ல, ஆரியன் அதிர்ந்து அவன் தந்தையை பார்த்தான்.

“என்ன அங்கிள் சொல்றீங்க?” ஏதோ புரிந்தது போல புருவத்தை சுருக்கி விஷ்ணு கேட்க, “நான் என் மகனிடம் தனியாக பேசணும்” என்றார்.

துருவினி உத்தமசீலனையும் முறைக்க, “போம்மா..நான் பேசிட்டு வாரேன்” என்று ஆரியன் அறைக்கதவை சாற்றினார்.

“அப்பா, உங்களுக்கு எப்படி தெரியும்?” கலங்கிப் போய் கேட்டான் ஆரியன்.

வீட்லேயே இருக்கேன். எனக்கு தெரியாதாப்பா. ஒரு ஆர்மி மேனின் பார்வை ஆராய்வது தான். உனக்கு முன்னே எனக்கு தெரியும்ப்பா. ஆனால் உன்னோட மனைவி அவள் காதலனை சந்திக்க செல்வாள் தான். தர்சு உன் குழந்தை தான்.

“அப்பா” ஆரியன் அவரை அணைக்க, அப்பா நான் அவளை விட்டு தனியே இருந்து தவறு செய்துட்டேன்.

இல்லப்பா, நாங்க தான் சைந்துவையும் உன்னுடன் தங்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கணும். உன் வேலையால் தான் அவளுக்கு ஆபத்து வருமோன்னு யோசித்தோம்.

இல்லப்பா, நானே அவளிடம் கேட்க தான் செய்தேன். அவள் நம் வீட்ல இருப்பது தான் மகிழ்ச்சின்னு சொன்னா. ஆனால் இப்படி எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணுவான்னு நினைக்கலை.

“சரிப்பா, இப்ப அதி விசயத்துல்ல என்ன செய்யப் போற?”

இல்லப்பா, நான் அவளுக்கு சரியானவன் இல்லை. அதி எனக்கு துரோகம் செய்ய மாட்டா. ஆனால் அவளுக்கு நம்முடனான வாழ்க்கை கசந்து விட்டு சென்று விட்டால்ன்னா என்னை யாராலும் பார்க்க முடியாது.

“என்னடா பேசுற? அதி எப்படி விட்டு போவாள்? நீ போக சொல்லி தான் போயிருக்கா”.

“நான் சொன்னால் போயிருவாலா? ஏதோ காதல்ன்னு துரு சொல்றா? காதலித்தால் போக முடியுமா?” ஆரியன் கேட்க, ஆரியா இதெல்லாம் ஓவர். உன்னோட வீடு. அவளை பிரச்சனையில இருந்து காப்பாற்றி கூட்டிட்டு வந்திருக்க? பத்து நாள் இருந்திருப்பாளா? நீ காதலை சொல்லீட்டு போக சொல்லி பார்க்கணும். அதை விட்டு இப்படி பேசாத டென்சன் ஆனார் உத்தமசீலன்.

அப்பா..

இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை. அப்புறம் இன்னொரு விசயம் நம்ம துருவை அந்த பையன் ஆத்விக்கிற்கு பிடிச்சிருக்கு. அவன் சொல்லீட்டான்னு நினைக்கிறேன். துரு பதில் சொல்லாமல் இருப்பது போல தெரியுது.

அப்பா, ஒரு நாள் தான் துரு பார்த்திருக்கா..

ம்ம்..அதான் அமைதியா இருக்கான்னு நினைக்கிறேன். இல்லை பையனை பிடிக்கலையான்னு தெரியல..

அதியை விட்டுட்டு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் சொல்றேன். தயவு செய்து சைந்தவியோட அதியை ஒப்பிடாத. இருவரும் அப்படியே எதிரான குணமுள்ளவர்கள். நீ நல்ல முடிவா எடுப்பன்னு நம்புகிறேன் என்று வெளியே வந்தார்.

“அவனை கொஞ்ச நாட்கள் தொந்தரவு செய்ய வேண்டாம்” ஆரியன் நண்பர்களிடம் சொல்லி விட்டு, து”ரு அறைக்கு போ. தர்சு விழித்திடாமல் அழப் போறான்”.

அவனை சமாளிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா என்றாள்.

உன்னோட அண்ணனை விட்ரு. அவனே முடிவெடுக்கட்டும் என்று அவர் நகர்ந்தார்.

கவின் வீட்டிற்கு அனைவரும் வந்தனர். அதியா வேகமாக ஓர் அறைக்குள் புகுந்து கொள்ள ஆகர்ஷனாவும் அவளுடன் சென்றாள். இருவரும் ஒவ்வோர் பக்கமாக அமர்ந்திருந்தனர். ஆகர்ஷனா அழ, அதியா அவளை அணைத்து படுத்துக் கொண்டு, “ஏன் ஆரு உங்களுக்கும் என்னை பிடிக்காமல் போயிருச்சா? இல்லை நடிக்கிறீங்களா? என்னால உங்களை புரிஞ்சுக்க முடியலை. நான் இப்ப மாமாவை எப்படி திருமணம் செய்வது?”

அக்கா, இப்பொழுது நீ எனக்கு துணையாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும். ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் அந்த நிரஞ்சன் மேல் வைத்திருந்தது காதல் அல்ல. ஆரியனை தான் நான் காதலிக்கிறேன். அண்ணாவுக்கு அவரை தெரியும்ன்னு சொல்றான். கேட்டால் சொல்ல மாட்டேங்கிறான். அவரும் துப்பாக்கி, சண்டை எல்லாம் செய்கிறார். அவர் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் எண்ணியவாரு அதியா கண்களை மூட, ஹாஸ்பிட்டலில் வைத்து ஆரியன் அவளை காதலுடன் பார்த்ததும், அவளுக்காக வருண் ஆட்களிடம் வாங்கிய அடி, அவனது சிறு வசீகர புன்னகை, அவளை பார்க்கும் காந்த கண்கள் நினைவில் வந்து அவளை இம்சித்தது.

அதே போல் தான் ஆரியனும்..அதியாவின் அழுகை, அவளது பாவமான முகம், அவள் அடிக்கடி பிதுக்கி காட்டும் அழகான கொவ்வை இதழ்கள், மாம்பழ குண்டு கன்னங்கள், அவளது சாப்ட்டான ஸ்பரிசம். அக்கறையுடனும் அன்புடனும் நடந்து கொள்ளும் விதம், சிணுங்கும் அழகு என அவன் முன் வந்து கொண்டே இருந்தாள்.

கவினோ ஆத்விக்கை பார்த்து, “இவர் வீட்டிற்கு எப்படி அதி போனா?” கேட்டான்.

எல்லாவற்றையும் அவன் அத்தை, மாமாவிடமும் சேர்த்து கூறியவன்.. ஆரியன் தயங்கும் எண்ணத்தையும் கூறினான்.

“டேய், அவர் எண்ணுவதும் சரிதான?” கவின் கேட்க, நமக்கு அவர் இன்ஸ்பரேசாக தான் இருந்திருக்கார். ஆனால் அதிக்கு அந்த வயதிலே சூப்பர் ஹூரோவாக தான் அவர் தெரிந்திருக்கார்.

“என்னடா சொல்ற?” அவள் வகுப்பில் படிக்கும் ராம்மிடம் ஆரியன் சாருக்கு லவ் லெட்டர் எழுதி அப்பவே கொடுத்து விட்டிருக்காள். அவர் தான் பெரியதாக எண்ணவில்லை.

என்னிடம் நீ சொல்லவில்லை.

“ஆமா, உனக்கு அவளை பிடிக்கும்ல்ல? அப்புறம் எப்படி சொல்றது?”

இப்ப மேரேஜூன்னு சொன்ன? கவின் அவனை பாவமாக பார்க்க, சாரி மச்சான். எனக்கும் ஆசை தான். ஆனால் அவளுக்கு அவரை தான பிடிச்சிருக்கு.

“அப்ப எங்க மகனை பயன்படுத்தினாயா?”

அத்த, ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்க. நம்ம அதி சந்தோசம் நமக்கு முக்கியமில்லையா? கவின் உன்னை அவளுக்கு பிடிக்கும்டா. மாமா என்பதால் பிடிக்கும். ஆனால் காதல் அவர் மேல் தான இருக்கு..

ம்ம்..கவின் இழுத்தான்.

மாப்பிள்ளைக்கு வயசு ரொம்ப அதிகமாப்பா? சுகுமார் கேட்க, அதிவதினி அவரை முறைத்தார்.

பதினொரு வயது வித்தியாசம் மாமா..

“என்னது? முடியவே முடியாது” அதிவதினி சொல்ல, “அத்தை” செல்லமாக அழைத்துக் கொண்டே அவரிடம் சென்று அமர்ந்தான் ஆத்விக்.

எனக்கும் நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரும் வயது காரணத்தால் தான் மறுக்கிறார். மற்றபடி அவருக்கும் நம்ம அதியை பிடிச்சிருக்கு.

ஆது..வேண்டாம்டா. வயது அதிகமுள்ளவர். நம்ம அதி விவரமில்லாத பொண்ணு.

“குடும்பம் நடத்த ஒருவருக்கு விவரம் தெரிந்தால் போதும்ல்ல அத்தை” ஆத்விக் விடாமல் பேச, சரி அவரே வந்து நம்ம அதியை ஏத்துக்கணும் என்றார்.

“அத்தை, நம்ம கவினோட மேரேஜ் அரேஜ் பண்ணி அவர் மனதை மாற்றலாமே!”

இல்லப்பா, எங்க மகன் பற்றியும் நாங்க சிந்திக்கணும்ல்ல. இது வேண்டாம். வேற பிளான் பண்ணலாம் என்ற சுகுமார், இதுவரை வேறு ஆணுடன் அதியை வைத்து பார்த்திருக்காரா?

ம்ம்..வருண்..

ஓ..

சரிப்பா, நாளைக்கு நம்ம அதியை ஷாப்பிங் அழைச்சிட்டு போவோம். கவினும் அதியும் தனியே ஷாப்பிங் பண்ணட்டும். அவரை அந்த இடத்திற்கு வர வைப்பது உன் வேலை. மற்றதை நாங்க பார்த்துக்கிறோம் என்றார் சுகுமார்.

“அப்பா” கவின் அழைக்க, “நம்ம அதி வாழ்க்கைக்காக செய்ய மாட்டாயாடா?”

செய்யலாம்ப்பா. எனக்கு கஷ்டமா இருக்குமே!

“ம்ம்..வருண் அவளை திருமணம் செய்திருந்தால் என்ன செய்திருப்ப?” அவர் கேட்க, அமைதியாக அவன் எழுந்து சென்றான். கவினை சமாதானப்படுத்த ஆத்விக் அவன் பின் சென்றான்.

அதியை கட்டாயப்படுத்தி அவர்கள் அழைத்து சென்றனர். அதியோ கவினை தவிர்த்தே வந்தாள். ஆகர்ஷனாவை இறக்கியே விடவில்லை.

“அதி” ஆத்விக் அழைக்க, அவள் கண்டுகொள்ளவில்லை.

“ஷனா பேபி” அவன் அழைக்க, ஆகர்ஷனா அவனை பார்த்து, அதிம்மா மாமா..

ஷ்..என்றாள்.

“ஹே, வெல்லக்கட்டி வா..நாம தனியே ஷாப்பிங் போகலாம்” கவின் அவனாகவே ஆகர்ஷனாவை அதியாவிடமிருந்து பறித்து ஆத்விக்கிடம் கொடுத்து விட்டு ஆத்விக்கிடம் கண்ணை காட்டி நகர்ந்தான். கவின் அவன் மனதை தயாராக வைத்திருந்தான்.

ஆரியன் அவன் நண்பர்களுடனும் தர்சனுடனும் அங்கே வந்திருந்தான்.

அதியாவிற்கு ஆடையை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் கவின். அவன் முதலில் பேசும் போது அமைதியாக இருந்த அதியா..மாமா இது..இது..என அவளாகவே கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆத்விக் விஷ்ணுவிற்கு அவர்கள் இருக்கும் செக்சனை மேசேஜ் செய்ய, ஆரியனை அங்கே அழைத்து வந்தான். தர்சனுக்கான ஆடையும் அங்கே இருக்க, ஆரியன் தர்சனுக்கு எடுத்துக் கொண்டிருந்தான்.

ஆரியனை பார்த்த கவின் வேண்டுமென்றே, ”வெல்லக்கட்டி இதை பாரேன்” என்றவுடன் ஆரியன் வேகவேகமாக திரும்பி பார்த்தான்.

அப்பா, அதிம்மா தர்சன் ஓட, கவின் ஒரு புடவையை அவள் தோளில் போட்டு, “வாவ்..கார்ஜியஸ்..இதை எடுத்துக்கலாம்” என்றாள். அவளும் ஓர் ஆர்வத்தில் “மாமா..இது பாரு” என வேறொரு புடவையை காட்டி புன்னகைத்தாள்.

ஆரியனோ கோபமாக அவளை பார்த்தாலும் முதலில் மகனை பார்க்கணுமே என்று தர்சன் பின்னே ஓடினான். ஆத்விக் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான்.

“அதிம்மா” என்ற தர்சன் குரலில் வேகமாக அதியா திரும்ப, அவள் காலுக்கு இடையே நாற்காலியை கவின் தள்ளினான்.

“மாமா” என்று கவினை அழைத்து கொண்டே தடுமாறி விழ வந்தாள். அவளது வெற்று இடையில் ஓர் கை அழுத்தமாக பிடிக்க, ஆரியனின் பிடியில் அதியா கண்கள் விரிய, கன்னங்கள் சிவக்க, அவளது சிவந்த இதழ்கள் லேசாக பிரிய ஆரியன் கண்கள் அவளது இதழ்களில் பதிந்தது.

படாரென அதியாவை தன் பக்கம் இழுத்தான் கவின். அவள் அவன் மார்பில் கை வைத்து விட மேலும் அவள் கண்கள் விரிய ஆரியனின் முகம் சுருங்கியது. விரல்களை இறுக மடித்தான்.

கவின் அப்படியே அதியாவை விடாது அவன் உடலோடு ஒட்டி நிற்க வைத்து அவளது இடையில் கை வைக்க, நரநரவென பற்களை கடித்தான் ஆரியன் அவனை எறித்துக் கொண்டு.

முதலில் நெளிந்தவள் ஆரியனின் ரிஜெக்சனில் கவினை ஏற்றுக் கொண்டது போல காட்டி விட்டாள். அவனுக்கு சினம் அதிகமானது.

“அதிம்மா, நான் சாப்பிடவேயில்லை தெரியுமா? நீங்க எதுக்கு என்னை விட்டு போனீங்க? நீங்க நம்ம வீட்டுக்கு வந்திருங்க” என்று கவினின் கையை தர்சன் தட்டி விட, “ஹே தர்ஸ், அதி இனி உங்க வீட்டுக்கு வர மாட்டா. எங்கள் திருமணத்திற்கு தேதி குறிச்சாச்சு” என்றான்.

ஆமாப்பா, முதல்ல நாளைக்கு உங்களுக்கு தான் இன்விடேசன் வைக்கணும். திருமணத்திற்கான பொருள் வாங்க தான் வந்தோம்..

“அதி” ஆரியன் ஏதோ கேட்க தொடங்க, அத்தை மாமா பிரச்சனையில்லைன்னு சொல்லீட்டாங்க. காதலித்த எல்லாரும் கல்யாணமா பண்ணிக்கிட்டாங்க. அதியும் கவினோட வாழ ஆரம்பிச்சுட்டா மறந்திருவா என்று ஆத்விக் சொல்ல, அதியா அமைதியாக இருந்தாள். ஆரியன் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதி, உன்னோட திருமணத்துக்கு என்ன கிஃப்ட் வேணும்? எப்பொழுது திருமணம்?” உள்ளே போன குரலில் ஆரியன் கேட்க, அவனை முந்திக் கொண்டு, “தங்கச்சிம்மா வாழ்த்துக்கள். நம்ம பையன் தான் கவின்” என்று லோகேஷ் சொல்ல, மாமாவை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் அண்ணா.

“ஆமா, உனக்கு சிறு வயதில் காதல் இருந்ததா?” பிரகாஷ் கேட்க, கவின் அவனை முறைத்து, “அதெல்லாம் என்ன வேண்டாத கேள்வி?”

“என்ன மாப்பிள்ளை சார். காதல் இருந்ததான்னு தான கேட்டோம். அதுக்கே கோவிக்கிறீங்க? உங்க கோபத்தை பார்த்தால் அதியை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டீங்க போல?” லோகேஷ் கேட்டான்.

ம்ம்..கண்டிப்பாக விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னோட வெல்லக்கட்டி எனக்கு மட்டும் தான். யாரிடமும் செல்ல விட மாட்டேன். எனக்கும் மனசு இருக்குல்ல சார். அதுல என்னோட வெல்லக்கட்டியை தவிர யாரும் வர மாட்டாங்க. வரவும் முடியாது என அதியாவை கண்கலங்க அணைத்துக் கொண்டான்.

அனைவரும் அதிர, கண்களை திறந்து அவன் பெற்றோரிடம் “சும்மா” வாயசைத்தான். ஆனால் அவர்களுக்கு தெரியாதா அவர்கள் மகனை பற்றி.

அதியாவும் அவனை பார்க்க, அவளை நகர்த்திய கவின் மண்டியிட்டு அவன் பாக்கெட்டிலிருந்து சிறிய பெட்டியை எடுத்து நீட்டி, “வில் யூ மேரி மீ பேபி” என்றாள். ஆரியன் ஆடிப் போக, அதியா உறைந்து கவினை பார்த்தாள்.

மாமா, நான்..உன்னை..என சிந்தித்த அதியா..

ம்ம்..கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றவுடன் சுற்றி இருந்தவர்கள் கை தட்டி ஆர்ப்பரித்தனர். நம் ஆரியனின் மனமோ தூள் தூளாகியது. வேகமாக அவன் அங்கிருந்து நகர, அதியா அதை பார்த்து பதறினாள். ஆனால் அவளால் என்ன செய்ய முடியும்? மனம் உடைந்து ஆத்விக்கை அணைத்து அழுதாள்.

“ஓ.கே சொல்லீட்டு எதுக்கு அழுற?” ஒரு பொண்ணு கேட்க, “அவள் வேறு ஒருவரை காதலிக்கிறால் சூழ்நிலையால் தான் எங்கள் திருமணம்”  சொல்லி கவின் வேறு பக்கம் சென்றான். ஆத்விக் இருவரையும் பார்த்து எந்த பக்கம் நிற்கவென புரியாமல் தன் தங்கை அருகே நின்று கொண்டான்.

அண்ணா, மாமாவும் கஷ்டப்படுறாங்க..அவரும்..என அழுதாள் அதியா.

ஏன் அண்ணா, அவர் ஏத்துக்க மாட்டேங்கிறார். அவருக்கு பாரமாக இருப்பேன்னு நினைக்கிறாரா அண்ணா? அழுதாள். ஆத்விக் பதில் கூற முடியாமல் நின்றான்.

ஆரியன் நண்பர்கள் தர்சனை தூக்கிக் கொண்டு அவன் பின் ஓடினர். கவின் பெற்றோர் மகனை காண சென்றனர். எப்படியோ அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.

வீட்டிற்கு வந்த ஆரியன் அவனறைக் கதவை படாரென சாற்றினான்.

“ஆரியா, கதவை திற.. நீ தான அதியை வேண்டாம்ன்னு சொன்ன? அவள் நிலையும் தெரியும். அப்புறம் ஏன் இப்படி வெளிப்படையாக கோபப்படுற? பாரு அந்த கவினும் அவள் அழவும் கோவிச்சிட்டு போயிட்டான்” கத்தினான் விஷ்ணு.

“என்னப்பா ஆச்சு?” உத்தமசீலன் கேட்டார். அவர்கள் நடந்ததை சொல்லவும், விடுங்க..அவன் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அதி வாழ்க்கையும் சேர்த்து இவன் பாழக்காப் போறான் சீற்றமுடன் அவன் நண்பர்களிடம் சொன்னார்.

ஆமாப்பா, நாளைக்கு கூட பத்திரிக்கை வைக்க இங்க வர்றதா சொன்னாங்க என்று பிரகாஷ் கூற, “ஆரியா எனக்கு புரியுது. உன்னோட நிலை கஷ்டமா தான் இருக்கும். நீ தான் அவளை வேண்டாம்ன்னு சொல்லீட்ட? அதி உயிரோட இருக்கணும்ன்னு நினைக்கிறியா? இல்லையா?”

ஆத்விக் சொன்னதை வைத்து பார்த்தால் அந்த கவினால் அதியின் குடும்பத்தை சமாளிக்க முடியுமான்னு தெரியல. அதனால கொஞ்சம் நீ இறங்கி தான் வாயேன்டா. சும்மா சைந்தவியை எண்ணி பேசாத.

கதவை திறந்த ஆரியன் தன் தந்தையை பார்த்து விட்டு, சைந்தவியை பற்றி பேசாதீங்க. நான் அவளை எண்ணவேயில்லை. அவளை நான் காதலிக்கவும் இல்லை.

“அப்ப அதியாவை காதலிக்கிறேல்ல ஆரியா?” லோகேஷ் கேட்க, “ஆமா காதலிக்கிறேன். இப்ப என்ன?” என்று சினமுடன் அமர்ந்தான்.

உன்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஆனால் பாதுகாப்பு கொடுக்கலாமே! ஆத்விக் நமக்கு உதவியதாலோ கவின் போலீஸ் என்பதாலோ அந்த வருண் போலுள்ள ஆட்களை தடுக்க முடியும்ன்னு நினைக்கிறியா? உன்னோட உதவி அவங்களுக்கு தேவை.

அதியை வருண் கடத்திய போது நீ மயங்கிய பின் ஆத்விக் தான் வந்தான்னு எங்களுக்கும் அப்பொழுது தெரியாது. பின் கண்டுபிடித்தோம். அவனை பார்த்தவுடன் அந்த பையன் நமக்கு முன் உதவியது நினைவுக்கு வந்தது. ஆனால் நீ மட்டும் எப்படி கண்டறியவில்லை.

ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியே வந்த அதியும் அவளுக்கு திருமணமாகலை என்றும் ஆகர்ஷனா அவளோட அக்கா குழந்தை என்றும், வருண் தான் அவள் அப்பான்னு சொன்னாள். அந்த அதிர்ச்சியோடு தான் உன்னை பார்க்க வந்தோம்.

அவள் உங்களிடம் சொன்னால் வீட்டில் தங்க அனுமதிக்க மாட்டீங்களோன்னு பயந்து தான் அவள் சொல்லவில்லை. அதி ரொம்ப இன்னசென்ட்..

ம்ம்..சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். துருவினி வேலை முடித்து வந்தாள்.

அவர்களை பார்த்துக் கொண்டே, “அப்பா தர்சு எங்கே?” என்று கேட்டவாறு சோபாவில் அமர்ந்து, “செம்ம வொர்க்ப்பா..அப்பா மனோகர் சார் அவரோட ஆபிஸை யாருக்கோ விற்கப் போகிறாராம்”.

“ஏன்ம்மா? ஏதும் பிரச்சனையா?”

ஆமாப்பா..பெரிய கேஸ் எதுவும் வரலை. நஷ்டத்தில் ஓடுது. ரவீந்திரன் சார் எங்களை முன் வரவே விட மாட்டேங்கிறார். பெரிய கேஸ் ஆட்கள் வந்தால் அவர் தட்டி விட்டுடுறார். சாருடன் பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார் என்றாள் வருத்தமுடன்.

சரிம்மா..வருத்தப்படாத. இனி வருகிறவராவது எல்லாத்தையும் சமாளிக்கும் பாஸாக வரட்டும்.

“அண்ணா, காஃபி?” துருவினி எழுந்தாள்.

அம்மாடி..நீ ரெஸ்ட் எடு. நான் போடுகிறேன் என்று உத்தமசீலன் சொல்ல, அங்கிள்..நாங்க கிளம்புகிறோம். தயவு செய்து யோசித்து பாருடா என்று சொல்லி கிளம்பினார்கள்.

இரவு யாரும் தூங்காமலே அன்றைய நாள் கழிந்தது.

காலை ஆரியன் கடைக்கும், துருவினி ஆபிஸிற்கும், தர்சு பள்ளிச்சீருடையிலும் தயாராகி வந்தனர்.

“உள்ளே வரலாமா?” என்ற சத்தத்தில் எல்லாரும் வெளியே பார்க்க, ஆரியன் மனம் அடித்துக் கொண்டிருந்தது.

“வாங்க” உத்தமசீலன் அழைக்க, சுகுமார், அதிவதினி, ஆத்விக் வந்திருந்தனர். அவன் தர்சுவை பார்க்க, “அவன் அதியா, ஆகர்ஷனா வருகிறார்களா?” என பார்க்க வெளியே ஓட, அவனை இழுத்து துருவினி நிறுத்தினாள். அவளை பார்த்து அதிம்மா, ஆகா வரலையா அத்தை அவன் கேட்க, அவள் கண்கள் கலங்கியது.

வந்தவர்களை வரவேற்று அமர வைத்து அவனை பார்த்து உத்தமசீலன்.. “அமைதியா இரு தர்சு” என்றார்.

“தாத்தா” அவன் உதட்டை பிதுக்க, “தர்சு இங்க வா” ஆத்விக் அவனை அழைத்து மடியில் அமர வைத்து, “அதி இதையும் உனக்கு சொல்லி கொடுத்துட்டாளா?” கேட்டான்.

தர்சன் ஏதும் பேசாமல் அமைதியானான்.

பேசுங்க சார்ம்.

“எனக்கு அதிம்மா வேணும்” அவன் கண்கலங்க ஆத்விக்கை பார்க்க, “அதுக்கென்ன? உன்னோட அப்பாவுக்கு அதியை பிடிக்கலையாமே!” அவருக்கு பிடிச்ச மாதிரி உனக்கான அம்மாவை தேட சொல்லு..

வேண்டாம். எனக்கு அதிம்மா தான் வேணும். அங்கிள், நீங்க அதிம்மாவை கூட்டிட்டு வர்றீங்களா?

நோ..நோ..அது முடியாது. நான் வந்து உன்னை தினமும் பார்க்கிறேன்.

ஆகா?

அவளையும் அழைச்சிட்டு வாரேன்..

இல்ல, அவ வர மாட்டா அழுதான்.

அன்றே சொன்னேன்ல்ல..நீ தாத்தா, ஆன்ட்டி, அப்பாவை பார்த்துக்கோ. ஆகா வருவா..ஆனால் அவளுக்கு நாட்கள் வேண்டும். நீங்க பள்ளியில் மீட் செஞ்சுக்கோங்க..

“பள்ளியில் அவளோட விளையாட முடியாதே!”

நான் உங்க மிஸ்கிட்ட சொல்றேன். விளையாடும் போது அவளுடன் விளையாடு. பசங்க எதற்கெடுத்தாலும் அழக் கூடாது. சரியா?

“ஆனால் எனக்கு அம்மா வேணுமே!” அதிலே வந்து நின்றான் தர்சன். ஆத்விக் ஆரியனை பார்க்க, அவன் ஆத்விக்கை தவிர்த்தான்.

“அப்பா, எனக்கு வேலை இருக்கு” ஆரியன் சொல்ல, “வீட்டுக்கு வந்திருக்காங்க. கிளம்புறன்னா என்ன அர்த்தம்?” உத்தமசீலன் கோபமாக கேட்டார்.

சுகுமார் ஆரியனிடம் வந்து, “ஒரு நிமிடம் நில்லுங்க போதும்” விதும்மா அவர் அழைக்க, தட்டில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பத்திரிக்கையை வைத்தார். ஆரியனுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

“எதுக்கு இந்த வீம்பு?” மனதில் ஆரியனை திட்டினான் ஆத்விக்.

“எல்லாரும் எங்க பிள்ளைங்க கல்யாணத்துக்கு வந்திருங்க” இருவருடனும் ஆத்விக்கும் சேர்ந்து சொன்னான்.

“இரண்டு நாளிலா?” உத்தமசீலன் தன் மகனை பார்த்தார். ஆரியனோ தாம்பூலத்தை பிடிக்க கூட திராணியில்லாது வெறுமையான முகத்துடன் கண்கலங்க நின்றான்.

“நாங்க வாரோம் அங்கிள்” ஆத்விக், துருவினியை பார்த்து கிளம்புகிறேன் என்று கண்ணசைத்தான். அவளும் வருத்தமாக தலையை மட்டும் ஆட்டினாள்.

“வாரோம் சார்” என்று சொல்லி விட்டு மூவரும் கிளம்பினார்கள்.

துருவினி தன் அண்ணனை முறைத்துக் கொண்டே பத்திரிக்கையை வேதனையுடன் பார்த்தாள்.

“அண்ணா, நீ இருக்க வேண்டிய இடம்” என கவின் பெயரை காட்டினாள். ஏற்கனவே வேதனையில் இருந்ததால் மேலும் அல்லலுற்று கடைக்கு செல்லாமல் அறையினுள் புகுந்து கொண்டான்.

துருவினி தர்சனை பள்ளியில் விட்டு ஆபிஸ் சென்றாள். அவளோட கேஸ் ஹியரிங் வந்திருக்க கோர்ட் கிளம்பி சென்றாள்.

அங்கே அவள் வேலையை முடித்து வெளியே லாயர்ஸ் அணியும் கோர்ட்டுடன் வந்தாள். அதை பார்த்து புன்னகையுடன் ஆத்விக் நின்று கொண்டிருந்தான். துருவினி அவனை கவனிக்கவில்லை. அவன் கையில் ஒருவன் பைல் ஒன்றை கொடுக்க, அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

தற்செயலாக திரும்பிய துருவினி அவனை பார்த்து விட்டு, “லாவா..அவங்கள பாரு. நான் இதோ வந்திடுறேன்” என சொல்லி அவனை நோக்கி சென்றாள்.

துருவினி வருவதை பார்த்து இவனும் நகர்ந்தான். இருவருக்கும் இடையே கார் ஒன்று வந்து நின்றது. பளிச்சென முகமாய் இளமை ததும்பும் ஐம்பது வயது பெண் ஒருவர் இறங்கினார். இவருக்கு வயது ஐம்பதா? என அனைவரும் அதிரும் வண்ணம் இருபது வயது குமரியாக இருந்தார்.

காரிலிருந்து இறங்கிய அந்த பெண்மணி பவானி. ஆத்விக், அதியாவின் தாய்..

துருவினி பார்த்துக் கொண்டே நின்று விட, அவரை பார்த்தும் பார்க்காதது போல் கடந்த ஆத்விக் பின்னே வந்து அவன் கையை பிடித்தார்.

அவன் பார்வை கூர்மையாக அவர் மீது விழ, எத்தனை வருசம் கழித்து பார்க்கிற. கொஞ்சம் கூட பாசமேயில்லை என அவர் நடிக்க,

“அட அட அட பாசமா உனக்கு இருந்ததா? நான் உயிரோட இருக்கேன்னா இல்லையான்னு நீ பார்த்தாயா?” சீற்றமுடன் அவர் கையை தட்டி விட்டான்.

டேய், நான் உன்னோட அம்மா.

“நீ உன் பிள்ளைகளுக்கு அம்மாவா இல்லை. நீ சும்மா” என நக்கலாக கூறி அவன் நகர, ரிப்போர்ட்டர்ஸ் குவிந்தனர். துருவினி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்னை கொஞ்சமாவது அம்மாவை மதிக்கலாம்ல்ல. உன்னை பார்க்க ஆசையாக வந்தேன். இப்படி ஹர்ட் பண்ற ஆது? அவர் கேட்க,

சார்..உங்க அம்மா இவங்களா? உங்களுக்கு யாருமில்லைன்னு சொல்லி இருக்கீங்க? என ஆத்விக்கை ரிப்போர்ட்டர்ஸ் கேள்வி எழுப்பினார்கள்.

“வெயிட் வெயிட் சொல்கிறேன்” அவன் பேசும் முன் அவன் அம்மா முந்திக் கொண்டு, என்னோட மகன் தான் ஆத்விக். அவன் லாயராக இருந்தாலும் முதல்ல எங்க வீட்டு பிள்ளை. அவர் குடும்பத்தை பெருமையாக பேசிக் கொண்டே செல்ல, ஆத்விக் கூலாக அவன் அம்மாவின் கார் மீது ஏறி தோரணையாக அமர்ந்து அவன் அம்மாவையே கதை கேட்பது போல் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தான்.

சார், என ஒரு பொண்ணு மைக்குடன் வந்தாள்.

அதான் பேசுறாங்கல்ல..பேசி முடிக்கட்டும். அப்புறம் என்னிடம் வாங்க. நான் இங்கே தான் இருப்பேன் என திரும்பி துருவினியை பார்த்து, “வெயிட் பண்ணு வினு. முடிச்சிட்டு வாரேன். பேசலாம்” என்றான்.

சார்..ஆனால் என்று அவள் டீம்மை பார்க்க, யாரும் அங்கு இல்லை. அவள் புரியாமல் அவனை பார்த்தாள். அவன் கையிலிருந்த பைல்லை பார்த்துக் கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

“ஆது, கீழ இறங்கு. இன்னும் சின்னப்பையன் போலவே நடந்துக்கிறான்” என பல்லை கடித்து, “இன்னும் நீ மாறலையா?” என அவனுக்கும் மட்டும் கேட்கும் படி கேட்டார்.

ஆத்விக் புன்னகையுடன், “ஹேய்..காய்ஸ் நான் அதி குரூப்ஸ் வாரிசு தான்”. என்னோட மாமா ஹாஸ்பிட்டல்ல இருக்கார்ன்னு உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன். அதனால அம்மா கம்பெனியை பார்த்துக்கிறாங்க. மாமா சரியாகி வரவும் அவர் பார்த்துப்பார்.

நான் என் கனவை நோக்கி சென்றேன். சாதித்து நிற்கிறேன். தேட்ஸ் ஆல். “தேங்க்யூ” அவன் நகர, “உங்க மாமாவை யார் இப்படி செய்திருப்பாங்க. உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அப்புறம் உங்க ஓடிப் போன தங்கை” எனவும் அவன் முகம் மாறியது.

இங்க பாருங்க. என்னோட தங்கை ஓடிப் போகலை. என்னுடன் தான் இருக்கா. நான் உங்களுக்கு அவளை அறிமுகப்படுத்துகிறேன். அதுவரை காத்திருங்களேன்..

என்னோட மாமாவுக்கு என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியாது. அக்கா இறந்த விசயம் கேட்டு தான் வந்தேன். ஆனால் இன்னும் நான் என் தந்தை வீட்டிற்கு போகலை. மாமா எழுந்தவுடன் கண்டிப்பாக போவேன். தங்க கூட வாய்ப்பிருக்கு என்று அவன் அம்மாவை பார்க்க, அவர் அதிர்ந்து அவனை பார்த்தார்.

“ஏம்மா, நான் வரக் கூடாதா? இப்படி ஷாக் ஆகிட்டீங்க?”

நீ வரமாலாப்பா. வா இப்பவே போகலாம்..

இல்லம்மா, எனக்கு சில வேலைகள் இருக்கு. தேங்க்ஸ் ப்ரெண்ட்ஸ் என்று அவன் வெளியே வந்தான். அவன் அம்மா ஆட்கள் வந்து ரிப்போர்ட்டரிடமிருந்து அவரை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தார்கள்.