மறுநாள் ஞாயிற்றுகிழமை. அனைவரும் எழுந்து எப்பவும் போல் தயாரானார்கள் கோவிலுக்கு. மீராஅக்கா, சிறுமிகள், ரேணு, மித்துவும் சென்றனர்.
மித்து பிரச்சனையில் இருந்த போது உதவி செய்த ரகு கையில் ஒரு குழந்தையுடன் இருந்தான்.
ஏ..ரேணு, அவர் தான் எனக்கு உதவியவர் மித்து கூற,
ஹலோ சார், அவனை கூப்பிட்டாள் ரேணு.
திரும்பி பார்த்த அவன் மித்துவை பார்த்துக் கொண்டே,
ஹாய் மேடம், எப்படி இருக்கிறீர்கள்?
ஹலோ சார், நான் தான் உங்களை கூப்பிட்டேன் ரேணு கூற,
அப்படியா? சாரி நான் கவனிக்கவில்லை.
ஆமாம் சார், நீங்கள் எப்படி கவனிப்பீர்கள்? நீங்கள் தான் உங்களுக்கு பிடித்தவரிடம் பேசிக் கொண்டிருந்தீர்களே?
என்ன? என்று ரேணுவை மித்து முறைக்க,
இல்லை, குட்டி பாப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தாரே! அதை கூறினேன் என ரகுவை பார்த்து சிரித்துக் கொண்டே,
அப்படிதானே சார், ரேணு மறுபடியும் அவனை பார்த்து சிரிக்க,
அவன், ஆமாம் அந்த பெண்ணுக்கு நான் என்றால் மிகவும் பிடிக்கும் என வழிந்து கொண்டே கூற,
தம்பி, பாப்பாவை கொஞ்சம் கொடுக்கிறாயா? அவளது முகத்தை பார். அழுது விடுவாள் போல பாப்பாவின் அம்மா கூற,
போச்சுடா, மானம் போகிறது நினைத்துக் கொண்டே அவன் திரும்ப, ரேணு வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அவன் பேச ஆரம்பிக்க, மித்து அவனை அமைதியாக பார்த்து விட்டு,
ஏய் நிறுத்துடி, போதும் போதும் என சிரிப்பை அடக்கிக் கொண்டு மித்து கூற,
ரேணு கஷ்டப்பட்டு சிரிப்பை கட்டுக்குள் வைத்துக் கொண்டு, நான் மித்துவுடைய தோழி ரேணு.
மேடம் உங்களுடைய பெயர் மித்துவா?
உங்களுக்கு இவளுடைய பெயர் தெரியாதா?
இல்லை தலையசைத்தான்.
அடியேய், உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார்? உன் பெயரை கூட கூறவில்லையா?
என் பெயர் மித்ரா என்றாள்.
அடப்போடி…
அவள் இருக்கிறாளே! இந்தாருங்கள் இது என்னுடைய நம்பர். எனக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் உதவுவீர்களா?
கண்டிப்பாக…..
ரேணு என்ன செய்கிறாய்? மித்து அவளை அதட்டி விட்டு,
உங்களை பார்ப்போம் என்று நினைக்கவேயில்லை. அன்று உதவியதற்கு நன்றி மித்து கூற,
நானும் நன்றி கூறுகிறேன். சரியான நேரத்தில் உதவியதற்கு. இவள் ஏதாவது நல்லது செய்கிறேன் என பிரச்சனையில் மாட்டிக் கொள்வாள். ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.
இட்ஸ் ஓ.கே ரேணு. பிரச்சனை என்றால் கூறு. அண்ணா வந்து விடுகிறேன் என்றான் உரிமையாக.
ரேணு மனம் நெகிழ்ந்து போனாள்.
மித்து ரகுவிடம், தலையில் அடிபட்டதே, இப்பொழுது எப்படி இருக்கிறது?
கொஞ்சம் பரவாயில்லை என்றவுடன் மித்து அவனருகே வர, நான் கிளம்புகிறேன் ரேணு நகர,
நில்லுடி, மித்து அவளது கையை பிடித்துக் கொண்டு, அவனது அடிபட்ட இடத்தில் கையை வைக்க, ஸ்ச்….ஆ…..என்றான்.
இன்னும் சரியாகாதது போல் உள்ளது மித்து கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என்றான்.
நான் மருந்தை வாங்கி வருகிறேன் ரேணு கிளம்ப, மித்துவும், ரகுவும் ஓரிடத்தில் உட்கார்ந்தனர்.
உங்களை பார்த்துக் கொள்ள யாரும் இல்லையா?
அம்மா, தம்பி இருக்கிறார்கள். அவன் ரொம்ப பிஸியாகவே இருப்பான். நான் மருந்தை போட்டு கொள்கிறேன் அம்மாவிடம் கூறியதால் அவர்களும் ஏதும் கேட்கவில்லை.
அம்மா இப்படி கூட இருப்பார்களோ? என மனதினுள் நினைத்தாள்.
எனக்கு வேற யாரும் இல்லை. நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?
என்ன? வேகமாக எழுந்தாள் மித்து. ரேணு வாங்கி வந்த மருந்தை கீழே போட, ரகு வேகமாக அதை பிடிக்க இருவரும் அவனையே பார்த்தனர் . மித்து ஏதும் பேசாமல் விலகி நிற்பதை பார்க்க அவன் வருத்தப்பட்டான்.
நீ என்னை கிண்டல் செய்தாயே, அந்த பாப்பாவும் அம்மாவும் உண்மையான உறவுகள் அல்ல. பாப்பாவுடைய அம்மா, அப்பா இவளை என்னுடைய விடுதியில் விட்டு சென்றனர். அந்த அம்மா தான் இவளை பார்த்துக் கொள்கிறார். அவருக்கும் யாருமில்லை. தன் கணவனை விபத்து ஒன்றில் இழந்து விட்டார். அதனால் நானும் கவனித்துக் கொள்வேன்.
இப்படி தான் தூக்கி வைத்து உதவுவீர்களா? ரேணு கேலி செய்ய,
நீ கேடியான தங்கை தான் என அவளை பார்த்து சிறு புன்னகையை உதிர்க்க,
யாரு கேடி? நீங்களா? நானா?
ஓய், அதட்டுவது போல ரேணுவை பார்க்க. இருவரும் வழக்காடுவதையும், அவனது நல்ல குணத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள் மித்து.
அதை கவனித்தவனாய் மித்து அருகில் வந்து, நான் கேட்டதற்கு பதில் கூறவில்லையே?
நீங்கள் பேசி முடியுங்கள். நான் காத்திருக்கிறேன் மித்து சொல்ல,
நீங்கள் காத்திருக்க வேண்டாம். நான் காத்திருக்கிறேன் உங்களுக்காக சட்டென ரகு கூற, இருவரும் அதிர்ச்சியுடன் பார்க்க,
என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? அவன் மறுபடியும் கேட்க, அவள் கண்கள் படபடக்க தடுமாறினாள்.
பார்த்த இரண்டே நாளில் திருமணமா? மித்து மீது காதல் வந்து விட்டதா? ரேணு வினவ,
சும்மா இருக்கிறாயா ரேணு என்றாள் சீரியசாக,
என்னை மன்னித்து விடுங்கள். என்னால் இது முடியாது தயங்கிக் கொண்டே, நான் செய்ய வேண்டிய நிறைய வேலைகள் உள்ளது. நான் எனது இலட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும்.
லட்சியமா? என்னவென்று கூறு, என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்.
எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
அன்று மட்டும் தேவைப்பட்டதோ?
அது……மித்து இழுக்க,
நான் ஒரு விடுதி அமைத்து, அதற்கான செலவு முழுவதையும் நானே கவனித்து, நல்ல படியாக நடத்தணும். அதுதான் எனது லட்சியம். தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள் தலை கவிழ்ந்தபடி கூறினாள்.
மித்துவிற்கு ரகுவை பிடித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டாள் ரேணு.
ரகுவும், என்னால் உனக்கு உதவ முடியும். நானும் விடுதி வைத்திருக்கிறேன்.
உங்கள் உதவி தேவையில்லை. அவனை பேச விடாமல் செய்யவே
அவன் மனது கனமானது.
ரேணு பேச வாயெடுக்க, வா என்னுடன் இழுத்துச் சென்றாள் ரேணுவை மித்து, அவள் ரகுவை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். ரகுவிற்கு ஏமாற்றமானது.
கோவிலில் மித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது, அவளை விட்டு மெதுவாக விலகி ரகுவிடம் வந்தாள்.
கவலைப்படாதீர்கள் அண்ணா! உங்கள் நம்பரை கொடுங்கள். நாம் அவளை சம்மதிக்க வைப்போம். அவனை தேற்றி விட்டு அங்கிருந்து வேகமாக ஓடினாள் ரேணு.
கடவுளை வழிபட்டு திரும்பிய போது, ரகுவை காணவில்லை. மித்துவின் கண்கள் அவனை தேடியது.
யாரை தேடுகிறாய்?
நான் யாரை தேடப் போகிறேன்?
சரி சரி வா போகலாம்.
கோவிலுக்கு வெளியே வந்தனர். பசங்க எல்லாருமே அக்காவுடன் கிளம்பி விட்டார்கள் தானே! பேசிக் கொண்டே வந்தனர் மித்துவும், ரேணுவும்.
ரகு தன் அம்மா, தம்பியுடன் நின்று கொண்டிருந்தான்.
ரகுவை பார்த்த ரேணு, மித்துவை அவர்களிடம் அழைத்துச் சென்றாள். மித்து ரேணுவை முறைத்தவாறே வந்தாள்.
அம்மா, நான் இந்த பெண்ணை பற்றி தான் கூறினேன் என மித்துவை காட்டினான்.
இவர் என்னுடைய அம்மா, தம்பி திலீப் அறிமுகப்படுத்தினான். மித்து ரகுவை பார்த்து முறைத்தாள்.
ஏன்மா, உனக்கு என்னோட ரகுவை பிடிக்கவில்லையா? ரகுவின் அம்மா மரகதம் கேட்டார்.
வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் வேற யாருக்கும் வரக் கூடாது என்ற லட்சியத்தோடு இருக்கிறேன் அவனது அம்மாவிடம் அமைதியாக கூறி விட்டு,
உடனே அம்மாவிடம் கூறி விட்டானே! என ரகுவை பார்த்து முறைத்தாள்.
நீ என் மகனை திருமணம் செய்து கொள்கிறாயா? ரகுவின் அம்மா கேட்க,
என்னுடைய அத்தை, மாமா, மீரா அக்காவிடம் பேசி விட்டு சொல்கிறேன்.
தாராளமாக பேசி விட்டு சொல்லும்மா. அதற்கு முன்னால் நாங்கள் யார் என தெரிந்து கொள் என்றார் மரகதம் இருபதலியாக.
என்னோட கணவர் ராஜதுரை. என்னுடைய இரு மகன்களுமே “ஆர்.ஹச் சன்ஸ்” கம்பெனியின் முதலாளிகள். அவர்களுடைய அப்பா எங்களை விட்டு சென்று இரண்டு வருடமாகிறது கண்கலங்கியபடி மரகதம் கூறினார்.
அந்த கம்பெனியின் கிளைகள் பெங்களூரு, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. எனக்கும் இவர்களை தவிர யாரும் இல்லை. எங்களுக்கு விடுதிகளும், மருத்துவமனையும் உள்ளது.
என்னோட பையனுக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது. கல்யாணம் செய்தால் அது உன்னை மட்டும் தான் செய்வேன் என்கிறான். என் மகனின் விருப்பமே என்னுடைய விருப்பம். உனக்காக ரகுவும், நாங்களும் காத்திருப்போம்.
அவள் ஏதும் கூறாமல் நின்றாள்.
திலீப், ரேணுவை பார்த்து கண் சிமிட்டினான்.
என்ன திமிரு இவனுக்கு? என மனதில் நினைத்த ரேணு, அண்ணா நாங்கள் பேசிட்டு கூறுகிறோம்.
அவள் ரகுவை அண்ணா என்றவுடன் திலீப்பின் முகம் வெளுத்து போயிற்று. ஆனால் ரகு மிகவும் நன்றி என்றான்.
நாங்கள் கிளம்புகிறோம் என அனைவரும் கிளம்பினர். ரகு மித்துவை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.
மூவரும் விசாரிக்க ஆரம்பித்தனர் ரகுவின் குடும்பத்தை பற்றி,
ரகு ரேணுவிற்கு போன் செய்து, என்ன ஆயிற்று? கேட்டான்.
அவர்கள் நேரம் வரட்டும், பார்ப்போம் என்றனர்.
அவன் கவலையாக, நான் மித்துவிற்காக காத்திருக்கிறேன் என்று போனை துண்டித்தான்.
ஒரு வாரம் ஆனது. ரகு, அவள் நினைவுடனே இருந்தான். ரகுவின் குடும்பத்தைப் பற்றி எதிர்மறையான பதில்கள் இல்லை என்பதால், மித்துவிற்கு ஏற்ற மணவாளன் ரகு தான் என முடிவெடுத்தனர். மித்துவிற்கும் சந்தோசமாக தான் இருந்தது. அவள் அதை வெளிக் காட்டவில்லை. ரகுவை மித்துவிற்கும் பிடிக்கும் தான். அவன் பணக்காரன் என்பதால், தன் லட்சியத்தை அடைய அவன் காரணமாகி விடுவானோ என யோசித்திருப்பாள்.
ஆனால் ரேணு, மித்துவின் காதலை ரகுவின் முன்னே கொண்டு வந்து விட்டாள்.
அன்றொரு நாள் ஒருவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்தான் ரகு. அவன் யாரை பார்க்க வந்தானோ அவருக்கு இரத்தம் தேவைப்படவே , அவன் உதவி செய்தான். அதனை பார்த்த ரேணு, இது தான் சரியான சமயம் என மித்துவிற்கு போன் செய்து ரகுவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது கூறி வரவழைத்து விட்டாள். அவள் வருவதற்குள் ரகுவின் அறைக்கு சென்று, சிவப்பு சாயத்தை அவனது வயிற்றில் கொட்டினாள். அவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். மித்து கதவை திறந்து அழுது கொண்டே வருவதை பார்த்து ரேணு ஒளிந்து கொண்டாள்.
மித்து அழுது கொண்டே அவனை பார்த்து விட்டு, வேகமாக வெளியே சென்று மருத்துவரை அழைத்து வந்து,
இங்கே பாருங்கள். என் ரகுவிற்கு அடிபட்டு இரத்தம் வருகிறது.
இரத்தமா? மருத்துவர் அருகே வந்து அது இரத்தம் இல்லை சாயம் தான் என்று அவளை முறைத்தார்.
ரகுவும் எழுந்து விட்டான். அவனருகே வந்து சாயத்தை தொட்டுப் பார்த்து, உங்களுக்கு அடிபடவில்லையே அழுது கொண்டே அவனை கட்டிக் கொண்டாள்.
ஹாய் மித்து, இப்பொழுது ஒத்துக் கொள்கிறாய் தானே? ரேணு பேச,
அவனை அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்த மித்து, வேகமாக பின்னே தள்ளி நின்றாள்.
என்னை ஏமாற்றுகிறீர்களா? ரகுவை மித்து பார்க்க,
அண்ணா, உன்னை ஏமாற்றவில்லை. அவர் ஒருவருக்கு இரத்தம் கொடுக்க வந்தார்.
இது எல்லாம் உன்னுடைய வேலை தானா ரேணு?
ஆமாம், நீ தான் அவரை காதலிப்பதை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாயே? அதனால் தான் இவ்வாறு செய்தேன். நடப்பது இப்பொழுது தான் புரிந்தது ரகுவிற்கு.
எல்லாருக்கும் தான் ரகு அண்ணாவை பிடித்து இருக்கிறது என கூறி விட்டார்களே? நீ ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாய்?
என்ன? என்னை ஏற்று கொண்டார்களா?
ஆமாம் அண்ணா, ஒரு வாரத்திலே அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இவள் தான், கல்யாணம் பற்றி யாருமே பேசக்கூடாது என கூறி விட்டாள். அவன் வருத்தப்பட மித்து வெளியே செல்ல,
எங்கே போகிறாய்? எனக்கு பதில் கூறி விட்டு செல் ரேணு கூற,
முகத்தில் அடித்தாற்போல, உன்னிடம் பேச முடியாது மித்து கூற, ரகுவிற்கு கோபம் வந்தது.
அங்கேயே நில் என்றான் மித்துவை. ரேணுவிடம் நீ உன் வேலையை பார். இவளை நான் பார்த்துக் கொள்கிறேன். ரேணு, மித்துவை முறைத்துக் கொண்டே வெளியே சென்றாள்.
அவன் அறை கதவை தாழிட்டு, ரகு மித்து அருகே வர, அவள் பின்னாலே சென்று கட்டிலில் பொத்தென்று விழுந்தாள். அவன் அவளருகே சென்று அவளுடைய கண்ணை பார்த்துக் கொண்டிருக்க, அவளும் அவனையே பார்க்க, திடீரென்று அவளது உதட்டை பிடிக்க அவள் கண்ணை மூடினாள். அவன் சிரித்துக் கொண்டே அவளை உட்கார வைத்து, அவளது முகத்தை அவன் தன் கையில் ஏந்தி,
உனக்கு என்னம்மா பிரச்சனை?
பக்கத்தில் இருந்த திரை விலக, ரகு ஒருவருக்கு இரத்தம் கொடுத்தானே, அவருடைய பெண்ணும் அங்கே தான் இருந்தாள்.அவன் பேசுவதற்கு முன்னே, அவர் நான் நன்றாக இருக்கிறேன்.
ரகு மித்துவிடம், எங்களது கம்பெனியின் முதலீட்டாளர் என அறிமுகப்படுத்தினார். வணக்கம் என அவரிடம் மித்து கூறினாள்.
என்னம்மா, உனக்கு ரகுவை பிடிக்கவில்லையா? பதில் கூற பிடிவாதம் செய்கிறாய். நீ சீக்கிரம் முடிவெடும்மா. அவன் ரொம்ப நல்ல பையன். வேண்டாம் என முடிவு செய்தால் என்னிடம் கூறு. என் பெண்ணை ரகுவிற்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவள் முகம் வாடிப் போனது. ரகுவும் கவனித்தான்.
மித்து அவரை பார்த்து உதட்டில் புன்னகையுடனும், கண்ணில் நீருடனும், ஏதும் பேசாமல் நடக்க, ரகு மித்து கையை பிடிக்க, முதலீட்டாளர் பெண் ரகுவின் கையை பிடிக்க, மித்து ரகுவின் கையை தட்டி விட்டு அழுது கொண்டே வெளியே ஓடினாள். அந்த பெண்ணும் மித்துவின் பின்னாலே வந்து,
உன் மனதில் உள்ளதை கூறு, அமைதியாக அந்த பெண் கேட்க, பதில் கூறாமல் நின்றாள் மித்து.
ரகுவை நான் மணந்து கொள்ளவா? மித்துவிடம் கேட்க,
அவள் கண்கலங்கிக் கொண்டே, அவர் பணக்காரர். அது மட்டுமல்ல என் லட்சியத்தில் நான் மட்டுமே இருக்க வேண்டும். அவர் இதில் தலையிட்டு நான் வெற்றி பெற்றால் அது வெற்றியாகாது. அதனால் தான்…. மித்து இழுக்க, அந்த பெண் சிரித்தாள்.
இதற்காகவா என்னை வேண்டாம் என்கிறாய்? ரகு கேட்க, மித்து தலையசைத்தாள்.
இங்கே பார் மித்து, நீ உனது லட்சியத்தில் வெற்றி பெற்ற பின் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்.
வெகு நாட்கள் ஆகுமே? கண்ணீருடன் கேட்க, அவளது கண்ணீரை துடைத்த படியே,
எத்தனை வருடங்களானாலும் நான் உனக்காக காத்திருப்பேன். கண்கள் சிவந்த வண்ணம் அவள், அவனை கட்டிக் கொள்ள, அவளது உச்சி வகிட்டில் முத்தமிட்டான். நான் கிளம்புகிறேன் என அந்த பெண் கிளம்பி விட்டாள். அவள்….. மித்து கேட்க, அவளுக்கு ஏற்கனவே ஆள் உள்ளது ரகு சிரித்துக் கொண்டே கூறினான். இருவரும் காதல் என்கிற நேசத்தில் கரைந்தனர்.
“கடல் அலை ஓயாது” அது போல் இவர்களது காதல் அலை ஓயாமல் என்றும் பெருகும்.
“உன் சொல்
ஒன்றே
போதும்
உன்னை
என்னிடத்தில் நிறுத்தும்.
உன் அன்பு
ஒன்றே
போதும்
உன்னை விட்டு
நீங்காமல் காக்கும்.
உன் காதல்
ஒன்றே
போதும்
என் உயிருள்ளவரை
என்றும் மறவாது.”
அவனுள் எண்ணம் உதித்துக் கொண்டே இருந்தது.
ஒரு நாள் ரேணுவும், மித்துவும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் மோட்டார் வாகனம் ஒன்று வேகமாக வந்தது. அதன் பின்னே அமர்ந்திருந்தவன் கையில் கத்தியுடன், ரேணு மித்துவை நோக்கி வர, அவர்கள் அதை கவனிக்காமல் பேசிக் கொண்டே சென்றனர்.
வண்டியில் இருந்து இறங்கிய ரகு, இருவரையும் சத்தமாக கூப்பிட, அவர்கள் திரும்பி பார்த்து, அப்படியே நிற்க ரகு அவர்கள் அருகே ஓடி வந்து தள்ளி விட்டு, அவனும் கீழே விழுந்தான். அவனால் நகர முடியவில்லை. அவன் நகர்வதற்குள் கத்தியின் முனை ரகுவின் கையில் பட, கையை கிழித்துக் கொண்டு இரத்தம் வர ஆரம்பித்தது.
அய்யோ! என்ன ரகு இப்படி செய்து விட்டீர்களே?
டேய் நில்லுங்கடா, உங்களை சும்மா விட மாட்டேன் கத்தினாள் ரேணு.
ரகுவை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்…டாக்டர்…என கத்தினாள் மித்து அழுது கொண்டே,
ரகுவின் பரிசோதனை முடிந்து வெளியே வந்த மருத்துவர்,
பயப்படாதீர்கள், மேலான காயம் தான். நல்ல வேலை நரம்பிலோ, எலும்பிலோ அடிபட்டிருந்தால் உயிரே போயிருக்கும்.
மரகதமும், திலீப்பும் உள்ளே வந்து ரேணுவை பார்த்து ஏளனமாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு,
டேய் ரகு, எல்லாம் என் மருமகள் ராசிடா. அதனால் தான் உயிருக்கு பாதகமில்லை என்றார் மரகதம். அவருடன் சேர்ந்து திலீப்பும் மித்துவை புகழ, ரகுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் இன்று அவர்களது பார்வை மித்து மேல் வேறொரு தொனியாக அமைய, அதனை பார்த்த ரேணு அவர்கள் சென்றவுடன் ரகு, மித்துவிடம் எச்சரிக்க அவர்கள் பெரியதாக எண்ணவில்லை. ஆனால் ரேணுவிற்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. வாழ்க்கையில் நடக்க இருப்பதை முன் கூட்டியே அறிய முடியுமா? என்ன? இன்று, இப்பொழுது ஆனந்தமாக வாழ்வோம் என்பதனை இருவரும் பின்பற்ற ஆரம்பித்தனர்.