மாமா..என ரம்யா அவர் மீது விழுந்து அழ, அனைவரின் கதறல் அவ்வறையை அடைத்தது. மற்றவர்களும் உள்ளே வந்து பார்த்தனர். திலீப் தனியே வந்து அமர, அவன் அப்பா அவனிடம் வந்து, உன்னிடம் சொன்னால் ஏதாவது சொல்லீடுவன்னு நான் சொல்லப்பா என்றார் அவர்.
பரவாயில்லைப்பா என்று அவன் மோதிரத்தை பார்க்க, பிளான் வொர்க் அவிட் ஆகிடுச்சா? விகாஸ் கேட்க, அனைவரும் திலீப் கையிலிருக்கும் மோதிரத்தை பார்த்தனர். அவனோ விகாஸை முறைத்து தள்ளினான்.
திலீப்பும் மகிழனும் அத்தை மாமா சடலத்தை ஊருக்கு எடுத்து செல்லும் வேலையை கவனிக்க, பசங்களும் பெரியவர்களும் வெளியே இருந்தனர்.
ரம்யாவோ அழுது கொண்டிருக்க, அவள் முன் வந்த செவிலியர் அவள் கையில் ஒரு காகிதத்தை வைத்து தனியா பிரிச்சு பாருங்க என சொல்லி சென்று விட்டார். திலீப் அம்மாவோ அந்த செவிலியர் செய்கையை மட்டும் கவனித்து இருப்பார். அவர் ரம்யாவை பின் தொடர, தனியே வந்த அவள் காகிதத்தை பிரித்து பெருமூச்சு ஒன்றை விட்டு சுற்றி நோட்டமிட, திலீப் அம்மா மறைந்து கொண்டார். அவரை பின் தொடர்ந்து சுவாதி சென்றாள்.
“இவ எங்க மறைச்சு மறைச்சு போறா?” என சுவாதி பின்னே சென்று, அவள் தோளில் கை வைத்தான் விக்ரம்.
உஃப் என காற்றை ஊதிய சுவாதி, பயமுறுத்தீட்டீங்க விக்ரம். “ரம்யா எங்கேயோ போறா?” அங்க பாருங்க என காட்டினாள்.
வா..போய் என்னன்னு கேட்கலாம்? என முன் செல்ல இருந்தவனை பிடித்து, “பொறுமையா இருங்க விக்ரம்” என எட்டி பார்த்தாள்.
ரம்யா ஓர் அறை முன் நின்று சுற்றி பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள். திலீப் அம்மாவோ கையை பிசைந்து கொண்டு யோசனையுடனும் பதட்டமுடனும் நின்றார்.
செல்ல இருந்த சுவாதியிடம், பேபி…என விக்ரம் அழைக்க, சட்டென சுவாதி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவள் மனதினுள்…விக்ரம் என்னை நீங்கள் இப்படி அழைத்து, ஏன் பேசி கூட இரு வருடங்களாச்சு என ஏக்கம் பிறந்தது அவளுக்கு.
அவள் கண்ணீரை பார்த்த விக்ரமிற்குள் ஏதோ செய்ய, கேட்க எண்ணியதை கேட்டு விட்டான். யுக்தா பேசியது.
“உன்னோட அவசர நேரத்தில் நான் உன்னுடைய அழைப்பை ஏற்காமல் இருந்திருக்கேனா?” என விக்ரம் கேட்க, அவள் அதிர்வை மனதில் மறைத்து, “இந்த நேரத்துல்ல என்ன கேள்வி?” என வெகு சாதாரணமாக கேட்டாள்.
இல்லையா? அப்ப நான் சரியா தான் இருக்கேன் என மனதில் எண்ணியவாறு, ஓ.கே. சும்மா தான் கேட்டேன் என திலீப் அம்மா அருகே இருவரும் சென்றனர். செல்லும் போதே சுவாதி விக்ரமை அடிக்கடி ஏக்கப்பார்வை ஒன்றை வீசினாள்.
இதே முன்பாக இருந்தால் பிடித்த கையை விடவே மாட்டான். ஆனால் இப்பொழுது பிடிக்கவே மாட்டேங்கிறான் என மனதில் எண்ணிக் கொண்டே வேதனையுடன் நடந்தாள் சுவாதி.
இவர்கள் அங்கே செல்லும் முன் அவரும் அவ்வறைக்கு சென்றிருப்பார். அவர் சென்ற போது கண்ட காட்சியில் ருத்ர காளியானார் திலீப்பின் அம்மா.
“அம்மா” என ரம்யா கன்னத்தில் வைத்த கையுடன் கீழே விழுந்திருந்தாள். எதிரே திமிறாக சனா கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள். பக்கத்தில் இருந்த பொண்ணு தான் ரம்யாவை அடித்திருந்தாள்.
ஆன்ட்டி இவ நடிக்கிறா. நான் எதுவுமே செய்யலை என சொல்ல, எஸ் மேம், இவ சனா மேம்மை பார்த்து, திமிரு பிடிச்சவ. அடுத்தவங்க வாழ்க்கையை திருடுறவ. ஒழுங்கா திலீப்பை வேலையில் இருந்து நிறுத்தீடுன்னு சொன்னாள் என ரம்யா மீது புகார்களை அடுக்கினாள் மற்றவள்.
“யார பத்தி யார்கிட்ட புகார் பேசுறீங்கடி?” அவ என்னோட மருமக. என் மகன் திலீப்பை கட்டிக்கப் போறவ என்று சொல்ல, ஆன்ட்டி திலீப்பிற்கு இவளை பிடிக்கவே பிடிக்காது.
இவ கொஞ்சம் கூட மருத்துவம் படிக்க அருகதை இல்லாதவள் என்று சொல்லவும் வெளியேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் கோபமாக, அவனை தடுத்து “நீங்க உள்ள போகாதீங்க” என திலீப்பை அலைபேசியில் அழைத்து விசயத்தை சொல்லி, சனா நடந்து கொள்வதை வீடியோ எடுக்க தொடங்கினாள் சுவாதி.
“மருத்துவம் படிக்க தகுதியா? என்ன பேசுற?” திலீப் அம்மா கேட்க, இவ பன்னிரண்டாம் வகுப்பில் ஸ்டேட்ல்ல முதல்ல வந்ததா சொல்லி ஏமாத்திட்டு இருக்கா. இந்த நியுஸை பாருங்க என மற்றொருவன் முதலிடம் பிடித்ததாக வந்தது.
திலீப் அம்மா ரம்யாவை பார்க்க, ஏய்..இங்க வாடி என்ற சத்தத்தில் சுரேகா வந்தாள்.
சுரே..உனக்காக தான எல்லாத்தையும் செய்தேன். ஆனால் நீ..என ரம்யா கண்கள் கலங்கியது.
“என்னம்மா இது?” என திலீப் அம்மா ரம்யாவை பார்த்தார்.
அத்தை..என பேச முடியாமல் ரம்யா குற்றவாளியாக நிற்க, ஏய்..சொல்லுடி என சனா அதட்ட, சுரேகா வேகமாக அவரிடம் ஓடி வந்து அவர் காலில் விழுந்தாள்.
ஏய், “உனக்கென்னாச்சு?” என சுரேகாவிடம் அவர் கேட்க, ஆன்ட்டி..அவன் மினிஸ்டர் பையன். எப்பொழுதும் முதலில் இருப்பவன். இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டான். முதல் இடம் ரம்யா தான் என சனாவை பார்த்தாள் சுரேகா..
ஏய், உண்மையை சொல்லுடி..சொல்லு..சொல்லு..என சனா சீற்றமுடன் அவளிடம் கத்த, என்னோட குடும்பம் இப்ப பாதுகாப்பா இருக்காங்க என்ற சுரேகா..அன்று நடந்த பிரச்சனையின் பின் ஏதாவது பிரச்சனை வந்தால் சிம்மா சாரிடம் சொல்லி சொல்ல, அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து விட்டாள் ரம்யா.
நீங்க எங்க குடும்பத்தை கடத்தியதை நான் அவரிடம் சொல்லி அவர் அவர்களை காப்பாற்றி விட்டார்.
ஆன்ட்டி, நீங்க ரம்யாவை சந்தேகப்படாதீங்க. அவ என்னோட மானம் வெளியே போகக் கூடாதுன்னு தான் அவளது முதலிடத்தை விட்டு கொடுத்து இவள் இரண்டாம் இடத்திற்கு வந்தாள்.
ஆன்ட்டி, ரிசல்ட் ரிலீஸ் ஆகும் முதல் நாள் இரவே எப்படியோ அந்த மினிஸ்டர் மகன் இரண்டாம் இடம்ன்னு கண்டுபிடிச்சுட்டாங்க. அதனால முதல் இடத்தில் இருக்கும் ரம்யாவை மிரட்ட அவளை கடத்த ஏற்பாடு நடந்தது. ஆனால் அதில் நான் மாட்டிக் கொண்டேன். என் கற்பை இழந்தேன். அதை வீடியோவாக எடுத்து இருந்திருக்கிறார்கள் என சுரேகா அழுது கொண்டே ரம்யாவை பார்த்தாள்.
“சொல்லாதே!” என ரம்யா தலையசைக்க, விடியற்காலை என்னை விடுதியில் விட்டிருந்தனர். ஆனால் நான் ரம்யா இல்லை என்றதும் வாட்ச்மேன் அசந்த எங்களது விடுதிக்கு உள்ளே ஆட்கள் யாருமறியாது எங்கள் அறைக்கு வந்தனர். ரம்யாவை பார்த்து அந்த வீடியோவை காட்டி மிரட்டினார்கள்.
என்னால இதை தாங்க முடியாமல் மயங்கிட்டேன். பார்கவி தான் எனக்கு உதவினா. அந்த வீடியோவை ரிலீஸ் செய்யக் கூடாதுன்னா ரம்யாவை பின்னிருந்த எடுக்க ஏற்பாடு செய்யணும். ஆனால் இவருக்கும் கல்வி அமைச்சருக்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராரு போல. அதனால ரம்யாவே நேரடியாக அவரை மீட் செய்து தன் பெயரை மாற்ற சொல்லி ஆட்களுடன் அனுப்பி வச்சானுக.
அவர் சந்தேகமாக ரம்யாவை பார்க்க, ரம்யா அவர் காலில் விழுந்து மாற்றினாள். எல்லாம் வெளியே வந்த பின் தான் கல்வி அமைச்சருக்கு விசயம் தெரிய வந்தது. அவளை அவரே பெரிய மெடிக்கல் கல்லூரியில் சேர்த்து படிக்க ஸ்பான்ஸ்ரும் செய்தார்.
அதே போல் அவர் சிம்மாவிற்கு ரம்யா நெருக்கம் என்பது தெரிந்து அவரிடம் சொல்லி இருக்கார். அவர் தான் அந்த வீடியோவை நிரந்தரமாக அழிக்க வகை செய்தார்.
என்னோட மானத்தை காப்பாற்ற ரம்யா, யாரோ ஒருவர் காலில் விழுந்து அவளது படிப்பையே தாழ்த்திட்டா. இதுக்கு மேல இவள பத்தி யாரும் தப்பா பேசக் கூடாதுன்னு தான் இப்ப உங்ககிட்ட சொல்றேன் என சுரேகா ரம்யாவை அணைத்தாள்.
ரம்யா கண்ணீருடன், “தேங்க்ஸ்” என்று நிறுத்தி விட்டு, திலீப்பிற்கும் எனக்கும் நிச்சயம் முடிந்து விட்டது. திருமணமும் நடக்கும். அவருக்கு உங்களை பிடிக்குமா? இல்லையா? ன்னு அவரிடம் கேட்க தேவையில்லை. “இது சொல்லும்” என அவளது மோதிரத்தை காட்டி விட்டு, நீ தான் அடுத்தவ பொருளுக்கு ஆசைப்படுவ. நானில்லை.
நான் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படவும் மாட்டேன். என் பொருளை யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டேன் என சனா கன்னத்தை ரம்யா தட்ட, அவள் கையை பிடித்து ஓங்கி அடிக்கும் நேரம் பட்டென கதவு திறக்கப்பட்டது.
சீற்றமுடன் நின்றிருந்தான் திலீப்.
திலீப்..இவ..என சனா ஆரம்பிக்கும் முன் திலீப் அம்மா அவளை அறைந்திருந்தார்.
ச்சே..நீயெல்லாம் பொண்ணா? ரம்யா எங்க பிள்ளைய ஏத்துக்கலைன்னா உன்னை பொண்ணு கேட்கலாம்ன்னு இருந்தோம். ஆனால் இவ்வளவு கேவலமான அருவருப்பான செயல் செய்யும் பொண்ணு பக்கம் நின்றாலே..ச்சீ..என அவளை விட்டு நகர்ந்தார்.
சுவாதி..எல்லாரையும் கீழே அழைச்சிட்டு போ என்றான் திலீப்.
திலீப், வா..இந்த மாதிரி பொண்ணு பக்கம் கூட நீ நிற்ககூடாது அவன் அம்மா கத்த, அம்மா..சில கணக்கு இருக்கு அதை நான் முடிக்கணும் என்ற திலீப், போங்க. அவ அப்பா வருவார். நான் பேசணும் என்று மீண்டும் கத்தினான்.
திலீப்பின் கோபத்தை முதன் முறையாக பார்த்த ரம்யாவோ புன்னகையுடன், வாங்க அத்தை. அதான் உங்க பிள்ள சொல்றார்ல்ல. பேசிட்டு வரட்டும் என திலீப் அருகே சென்று அவன் கையை கோர்த்து, திலீப் முடிந்தால் நான் செய்யாததை எனக்காக நீயே செஞ்சிட்டு வந்திரு என ரம்யா கூறி அவன் கையை விடுத்து இருவரும் நகர்ந்தனர்.
சனாவை அடிக்க சொல்லி விட்டு ரம்யா செல்கிறால் என்றவுடன் சனா மீண்டும் கொதித்தாள்.
சனாவின் தந்தை அந்த மருத்துவமனையின் டீன் வரவும் சுரேகாவை அனுப்பி விட்டு திலீப் அவரிடம் சினமுடன் பேசினான்.
சார், உங்க பொண்ணு தேவையில்லாமல் என் வாழ்க்கையை கெடுக்க பாக்குறா? அவள் இவ்வளவு செய்தும் உங்களுக்காக தான் பொறுமையாக இருந்தேன்.
எப்பொழுது என்னோட ரம்யா மேலவே கையை வச்சுட்டாளோ இவளை விடுவது போல் இல்லை. இந்த ஆதாரத்தை வைத்து இவளை என்னால உள்ளே கூட தள்ள முடியும்.
திலீப்…அவர் சத்தமிட, சார்..என நிமிர்ந்து, உங்கள மதிப்பதால் தான் அமைதியாக இருந்தேன் என சுவாதி அவனுக்கு அனுப்பிய வீடியோவை பார்த்து விட்டு சனாவை முறைத்தார்.
இதுக்கு மேல நான் இங்கே வேலை செய்யணுமான்னு யோசனையா இருக்கு? உங்களுக்கு உங்க பொண்ணு முக்கியம்ன்னா எனக்கு என்னோட மனைவி முக்கியம் என அவன் விரல்களை காட்டினான்.
திலீப்..அவர் அதிர, நான் ஏற்கனவே உங்க பொண்ணை என்னால திருமணம் செய்து கொள்ள முடியாதுன்னு சொன்னேன். நீங்க தான சனாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக்கிறேன்னு சொன்னீங்க. முடிந்தால் அதை செய்யுங்க.
திலீப்..நீ இங்கேயே உன் வேலையை தொடர்ந்து பாரு. உன்னை போல திறமையுள்ள, அனைத்தையும் பொறுமையுடன் கையாளும் எவனும் எனக்கு கிடைக்க மாட்டான். எனக்கு நீ இங்கே மருத்துவனாக இருந்தால் போதும்.
அது என் கையில் இல்லை. உங்க பொண்ணு கையில தான் இருக்கு.
அவர் புரியாமல் பார்த்தார்.
இவளுக்கு மேரேஜ் பண்ணி வச்சிருங்க. இவளிருக்கும் இடத்தில் என்னால நிம்மதியாக வேலை செய்ய முடியாது.
நீ அவளையா கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்க? உங்க வயது எவ்வளவு வித்தியாசம் இருக்கும். அவ உன்னை ஏமாத்திட்டு போகப் போறா என சனா சொல்ல, சீற்றமுடன் திலீப் அவள் கழுத்தை பிடித்தான்.
அய்யோ..என் பொண்ணை விட்ருப்பா. அவ புரியாம பேசுறா.
இல்ல சார், அவ புரியாம பேசல. எங்களை பிரிக்க எண்ணி பேசுறா. இந்த கீழ்த்தரமான உன்னோட எண்ணமே உன் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் செய்யப் போகுது என அஜய் கத்தி விட்டு, நான் போயிட்டு வந்து பேசிக்கிறேன் என்று அவரை பார்த்து, இதுக்கு மேல இங்க வேலை செய்தால் உங்க பொண்ணோட கேவலமான செயலால் என் ரம்யாவும் நானும் தான் பாதிக்கப்படணும். அதுக்கு நான் விட மாட்டேன். குட் பை என அவன் நகர்ந்தான்.
டீன் சினமுடன் சனாவிடம் சென்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவள் முடியை பிடித்து தள்ளினார். பக்கமிருந்த பொண்ணோ பயப்பட, போ…வெளிய என அந்த பெண்ணிடம் கத்தியவர்..தன் மகளிடம்
நான் அவனை வைத்து எவ்வளவு சாதிக்க நினைத்தேன் தெரியுமா? அவனுக்கு இருக்கும் திறமைக்கு எங்கு போனாலும் தனியா தெரிவான். விரைவிலே ஸ்பெசலாகவும் ஆகிடுவான்.
மற்றொரு மருத்துவமனை தொடங்கி அதில் உன்னை அமர்த்தி, அவனையும் உன்னுடன் சேர்த்து அதனை சிறக்க வைத்திருப்பேன்.
உனக்கு அவன் மீதிருப்பது காதலில்லை. மோகம் தான். அதனை நானே கண்டுள்ளேன். ச்சே..
அந்த பொண்ணை அவன் திருமணம் செய்தாலும் உன்னை திருமணம் செய்பவனை வைத்தே திலீப்பை பயன்படுத்திக் கொள்ள எண்ணினேன் பட்..இடியட் என அவர் திட்டினார்.
தன் அலைபேசியை அவரிடம் கொடுத்து சென்றதனை வாங்க வந்த திலீப்பின் காதில் அவரின் கத்தல் தெளிவாக பதிந்தது. ஆயினும் உள்ளே சென்ற மறு நிமிடம் அவர் வைத்திருந்த மேசையிலிருந்து அலைபேசியை எடுத்து விட்டு அவர்களை முறைத்து விட்டு வெளியேறினான்.
கீழே வந்தால் ஆம்புலன்ஸில் ரம்யாவின் அத்தை, மாமாவை வைத்திருந்தனர். அதில் மருது, துளசி, ரம்யா ஏற, மற்றவர்கள் காரில் ஊருக்கு கிளம்பினார்கள்.
ஊரில் இறங்கி சடலத்தை சிறிது நேரம் வைத்திருந்தனர். அனைவரும் அழுது கொண்டிருந்தனர். ஊரில் ஆட்கள் வந்து பார்த்து சென்று கொண்டிருந்தனர்.
எல்லாம் இவ பிறந்த நேரம். பிறந்தவுடன் அவ அம்மாவ கொன்னுட்டா. இப்ப அம்மா, அப்பா போல வளர்த்தவங்களையும் காவு குடுத்து வந்து நிக்கிறா என கிழவி ஒன்று பேச, அங்கிருந்தவர்களும் ரம்யாவை தூற்றி பேச, அனைவரும் பல்லை கடித்துக் கொண்டிருந்தனர்.
எழுந்த திலீப் அம்மா கோபமாக, இரண்டு பொட்ட பிள்ளைக அவங்க சொந்தத்தை இழந்து தவிக்குதுக. அதுகளுக்கு ஆறுதலாக பேச வந்தீங்களா இல்ல தூற்ற வந்தீங்கலா? உங்கள மாதிரி ஆளுங்க பேசுறதால தான் பிள்ளைங்க மனசு நொந்து தான் போகும் என கூறி விட்டு ரம்யாவை பார்த்தார்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என ரம்யா சொல்ல, என அவரும் தலையசைத்தார்.
ஏய் கிழவி, வந்த வழியே போயிரு. இல்ல நடக்கிறதே வேற அன்னம் சத்தமிட்டார்.
ஆமா, அக்காவ ஏதாவது சொன்ன..நீ தூங்கும் போது தலையில கல்லப் போற்றுவேன் என ஓணா சொல்ல, செஞ்சு கிஞ்சு தொலச்சிறாத என அவர் ஓடினார்.
அன்னம்மா, எப்படி ஓட விட்டேன் பார்த்தீங்களா? என காலரை தூக்கி விட்டவன்..ஆமா ஆப்பிள் மரம் எதுக்கு வந்திருக்கு?
டேய், அவரு தான் நம்ம ரம்யாவை கட்டிக்கப் போறார். மரியாதையா மாமான்னு சொல்லணும் புரியுதா? அன்னம் கேட்க, என்னது? முடியவே முடியாது..என கத்தினான். உள்ளே அனைவரும் அமைதியாக, ரம்யாவின் குட்டி நண்பர்கள் வேகமாக உள்ளே சென்றனர்.
அக்கா, நீங்க அந்த ஃப்ரஸ் ஆப்பிளையா கட்டிக்கப் போற? ஒரு பொண்ணு கேட்க, ஏய்..என்ற பல்லி, ஆப்பிள் மரம்ன்னு சொல்லு என்றான் அதட்டலாக.
இங்க என்ன பண்றாங்க? நீங்க என்ன பேசுறீங்க? சுருதி அந்த பொண்ணு காதை திருக, அக்கா..என்னை விட்ருங்க. அந்த ஓணா பய தான் கேட்க சொன்னான்.
அவனுக்கு இவரை பிடிக்கலையாம். அதனால ரம்யாக்கா அவனை கட்டிக்கக்கூடாதாம் என அந்த பொண்ணு சொல்ல, ரம்யாவோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவள் தன் அத்தை மாமாவையே பார்க்க, “ஓடுங்கடா” என மருதுவுடன் வேலை செய்பவர்கள் அவர்களை விரட்டினார்கள்.
ஓணா…வெளியே நாற்காலியில் அமர்ந்து திலீப்பை முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருந்தான்.
“உனக்கு ஏன் என் பையனை பிடிக்கல?” திலீப் அப்பா அவனிடம் வந்து அமர்ந்தார்.
அந்த நெட்ட மரம்..
டேய்..ஆப்பிள் மரம் ஒருவன் தள்ளி நின்று தவறு என திருத்த, அவனோ கல்லை எடுத்தான்.
அவரு எங்க ரம்யாக்காவை அழ வச்சுட்டார்.
“அப்படியா? என்ன சொல்லி அழ வச்சார்?” கிருபாகரன் கேட்க, அது..வந்து..அந்த ஜெகா செய்த தப்புக்கு அக்காவை திட்டிட்டார்.
“ஓ..திட்டியதுக்காகவா இப்படி சொன்ன?” அன்னம் அவனருகே வந்து, ஓணா..உன்னோட அக்காவும் மாமாவும் நல்லா சண்டை போட்டதால தான் இந்த கல்யாணம் வரை வந்திருக்காங்க.
சண்டை போட்டால் கல்யாணம் பண்ணிக்கலாம் அன்னம் சொல்ல, “என்னது சண்டை போட்டால் கல்யாணம் பண்ணிக்கலாமா?” அப்ப அந்த தேனு என்னோட சண்டை போட்டுகிட்டே இருப்பா. அவளை நான் கல்யாணம் பண்ணிக்கலாமா? என அவன் கேட்க, அய்யோ என தலையில் அடித்தார் அன்னம்.
மற்றவர்கள் லேசாக புன்னகைக்க, டேய்..ரம்யா உனக்கு அக்கா எனக்கு தங்கச்சி. அவ திலீப்பை தான் கல்யாணம் பண்ணிப்பா. நீ கிளம்பு. உன் ஆத்தா உன்னை தேடப் போவுது சிம்மா சொல்ல, அப்படின்னா..நான் அக்கா கூட கா என்று அவன் சொல்ல, அவனை இடைமறித்த திலீப், அவனை தூக்கிக் கொண்டு தனியே நகர, காப்பாத்துங்க..காப்பாத்துங்க என அவன் கத்தினான்.
மாப்பிள்ள, அவனை வச்சி செய்யுங்க என சிம்மா சத்தமிட்டான்.
வச்சி..செய்ய..அவன் என்ன அழகியா? விகாஸ் கேட்க, என்ன நடந்தாலும் உங்க வாய் மட்டும் அடங்காதுடா என தாத்தா அவர்களருகே வந்து அமர்ந்தார்.
ஓணானை தூக்கி சென்ற திலீப், டேய் அவளே ஒத்துக்கிட்டா. உனக்கென்னடா?
என்னால உன்னை மாமான்னு சொல்ல முடியாது.
“ஏன் முடியாது?”
“நீ அக்காவை அழ வச்ச?”
சரி, நான் செஞ்சது தவறு தான். என்ன செய்யணும்?
தோப்புக்கரணம் போடு என அவன் திலீப்பை படுத்த, அதை பார்த்த ராஜாவும் ஹரிணியும் சிரித்துக் கொண்டனர்.
ரகசியன்- ரசிகா, ராஜா- ஹரிணி திருமணம் ஆறு மாதத்தின் முன் தான் முடிந்தது. ரசிகா கருவுற்று இருப்பதால் அவளை அவள் அம்மா வீட்டில் விட்டு வந்திருந்தான் ரகசியன்.
நேகன் பிரச்சனை முடியவும் பாரினுக்கே சென்று விட்டான்.
மறுநாள் காலை நேரம் சடலங்களை எடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் நடந்தது. எல்லாம் முடிந்து இரவில் அனைவரும் கூடியிருக்க, பொண்ணுங்க சேர்ந்து அமர்ந்திருந்தனர்.
வாழ்ந்தால் இவங்கள போல வாழணும். இறக்கும் போது கூட இருவரும் பிரியலை என சுவாதி சொல்ல, அதுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கணும் சுவாம்மா என்று ரகசியன் அம்மா சொன்னார்.
ம்ம்..கணவன் இறந்தாலும் பிள்ளைகள் பேரன், பேத்திகளை பார்க்கணும்ன்னு உயிரோட இருக்கணும்ன்னு தான் எண்ணம் வரும். சிலருக்கு மட்டும் தான் இந்த பாக்கியம் கிட்டும் என்றார் பாட்டி.
அதை விட சுமங்கலியாக சாகுறது கூட நல்லது தான் என சுவாதி அம்மா கூற, சுவாதி விக்ரமையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் விக்ரம் கண்ணில் இருக்கும் காதலை மீறிய வலி ஒன்று சுவாதிக்கு தெரியுது. ஆனால் அது என்னன்னு தெரியல. இருவருக்கும் ஏன் இடைவெளி வந்தது என எதுவும் புரியாமல் சுவாதி மனதளவில் துவண்டு தான் போனாள்.
அதை விக்ரமிடம் கூட கேட்டு தெளிவு படுத்தி இருக்கலாம். அவள் மனம் யாருக்கும் அறியாமல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது விக்ரம் மீதுள்ள காதலால். அவனின் விலகலில்.
இல்ல சுருதி, இவங்கள நினைச்சு தான் என்றாள். சுருதி நம்பாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
விக்ரம் எல்லாருடனும் இருந்தாலும் அவன் யோசனை எங்கோ சென்றது.
“நாளை மதியம் ஊருக்கு கிளம்பணும் தம்பி” என மருதுவிடம் திலீப் அப்பா சொல்ல, மாமா..ரம்யா எங்களுடன் இந்த வாரம் மட்டும் இருக்கட்டுமே! மருது கேட்டான்.
அவர் துளசியை பார்த்தார்.
எழுந்த துளசி ரம்யாவின் முன் அமர்ந்து அவள் கையை பிடித்து, என்னை மன்னிச்சிரு ரம்யா. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிக்கலைன்னாலும் பரவாயில்லை. மாமாவுடன் பேசு. நீயில்லாமல் அவர் அவராகவே இல்லை. சரியாக கூட சாப்பிடலை என துளசி கண்ணில் கண்ணீர் வடிந்தது.
துளசி கையை பிடித்து எழுந்த ரம்யா மருது முன் வந்து நின்றாள்.
நான் எதுக்கு விடுதிக்கு போனேன்? உங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு தான் போனேன். ஆனால் நீங்க வாழவே ஆரம்பிக்கலல்ல? இதுக்கா நான் தனியா கஷ்டப்பட்டேன்.
அண்ணிய கல்யாணம் பண்ணீட்டு நீ என் முன்னாடி வந்து நிற்கவும் அவ்வளவு சந்தோசப்பட்டேன். ஆனால் நீ உன்னை நம்பி வந்தவங்கல்ல கஷ்டப்படுத்தி அழ வச்சிட்டு இருந்திருக்க.
ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி உன்னை நம்பி வந்தான்னா அவள் கண்ணீர் தான் உன் குணத்தை தீர்மானிக்கும். அவளை அழ விடாம பார்த்துக்கிறவன் தான் ஆம்பள என அவள் பேசிக் கொண்டே செல்ல, மருது ரம்யாவை ரசித்து பார்த்தான்.
எனக்கான தண்டனை தான் இது. எனக்கு பிரச்சனையில்லை. நீ இங்கேயே இரேன். நீ வேணும்ன்னா மேரேஜ் பண்ணும் போது போ என துளசி கெஞ்சலாக கேட்க, “என்னது? இங்க இருக்கணுமா? எனக்கு பதிலா இவனா படிப்பான்?” என ரம்யா துளசியிடம் கேட்டாள்.
நானும் நாளை கிளம்புறேன். அண்ணா, அண்ணியை ஒழுங்கா பார்த்துக்கோ. நான் திடீர்ன்னு வருவேன். அப்பொழுதும் மூஞ்சிய தூக்கிட்டு நின்ன அவ்வளவு தான் என்றாள்.
மருது புன்னகையுடன் ரம்யாவிடம் வந்து, எனக்கு இது போதும்டா. நீ என்னை என்ன திட்டினாலும் பரவாயில்லை. பேசிக்கிட்டே சிரிச்ச மாதிரி இரு என்று சொல்ல, அவள் துளசியை பார்த்தாள்.
மருது துளசி கையை பிடித்துக் கொண்டு, உன்னோட அண்ணியும் உன்னை மாதிரி சிரிச்சுக்கிட்டே இருப்பா என்று துளசி தோளை அணைத்தவாறு மருது பிடிக்க, அவள் கண்களில் கண்ணீர். ரம்யா மருதுவை அணைக்க, எனக்கு இருவருமே வேணும்டா. நீங்க என்னோட கண்ணுங்கடா என்றான்.
எனக்கு ஒரு சந்தேகம் என்ற சுருதி ரம்யாவை பார்த்து,” நீ இப்பவும் விடுதியில தான் தங்கப் போறீயா?”
இல்ல, அவ எங்க வீட்ல தான் இருக்கப் போறா என்றான் திலீப்.
கல்யாணத்துக்கு முன்னாடி தங்கக் கூடாது என்றார் பாட்டி.
பாட்டி..சில பிரச்சனை இருக்கு என தாடையை தேய்த்து சிந்தித்த திலீப், இந்த மாதம் முடிந்து நல்ல நாள் பார்த்து எங்கேஜ்மென்ட் பண்ணுங்க. அப்புறம் அவ எங்க வீட்ல தங்கட்டும்.
எங்கேஜ்மென்ட் ஓ.கே? ஆனால் உன்னோட வீட்ல எப்படி தங்குவா? முடியாது தாத்தா சொல்ல, ஹரா மட்டும் திருமணத்துக்கு முன்னாடி ராஜா வீட்ல தங்கினா?
“இல்லையே!” விருப்பப்பட்டு தான் உன்னை கல்யாணம் செய்ய சம்மதித்தேன்.
“எனக்கு அப்படி தோணலையே!”
“ஏன் தோணலை?” அன்று நான் பேசியது தான் உன் கோபமாக.
“எவ்வளவு வேகமா கண்டுபிடிச்சுட்டீங்க?”
ஹேய், அது அவன் மேலுள்ள கோபத்தில் பேசிட்டேன். அதான் சாரி சொல்லீட்டேன்ல்லம்மா..
நோ, எனக்கு சாரி பத்தாது.
“அப்புறம் என்ன செய்யணும்?” திலீப் அனைவரையும் பார்த்துக் கொண்டே கேட்டான்.
அது வந்து..என யோசித்த ரம்யா, வீ..எனக்கு உன்னோட கெல்ப் வேணுமே!
சொல்லுடி என் செல்லக்குட்டி என அவளிடம் வந்தான்.
பக்கத்துல்ல சூப்பர் மார்க்கெட் ஒன்று இருக்கு. 150 ரூபாய்க்கு ஐந்து டைரிமில்க் வாங்கிட்டு வா.
எதுக்கு? திலீப் கேட்க, அவன் சென்று வாங்கி வந்தான்.
எங்க இந்த ஐந்து சாக்லெட்டையும் அரை மணி நேரத்துல்ல சாப்பிட்டு முடி. நான் உன் சாரியை ஏத்துக்கிறேன்.
“என்னது சாக்லெட் சாப்பிடணுமா? இதுவா தண்டனை?” என ரகசியன் சிரித்தான்.
டேய் தம்பி..ஆரம்பி என சொல்ல, அவன் அம்மாவை பார்த்து வேண்டாம்ன்னு சொல்லுங்க என கேட்டான். அவர் புன்னகையுடன் மறுத்தார்.
மருமகளே நல்ல தண்டனை. சாப்பிடுப்பா..சாப்பிடு என அவன் அப்பா சொல்ல, அவரை முறைத்த திலீப்பிடம் விகாஸ் சாக்லெட்டை கொடுத்தான்.
கண்டிப்பா சாப்பிடணுமா? ஒன்று மட்டும் சாப்பிடுறேன்னே என திலீப் கேட்க, நோ..என விரலை ஆட்டிக் கொண்டே அவனிடம் வந்து அவன் கையிலிருந்ததை பிரித்து சாப்பிட கொடுத்தாள்.
அவன் வாங்கி சாப்பிட, இந்தா மாமா..தண்ணீ குடிச்சுக்கோ என சுருதி தண்ணீரை கொடுக்க, அதை புன்னகையுடன் வாங்க சென்றவனிடமிருந்து பறித்து நான் கொடுக்கும் போது குடித்தால் போதும்.
“சாப்பிட வச்சே என் மாமாவை ஒரு வழி செஞ்சிருவ போல?” ஹரிணி சொல்ல, அவளை பார்த்து விட்டு..ம்ம்..சீக்கிரம் நேரம் போய்க் கொண்டே இருக்கு என ரம்யா சொல்ல, இரண்டு சாக்லெட்டை கஷ்டப்பட்டு முடித்து, என்னால இதுக்கு மேல முடியாது என அமர்ந்தான்.
அவன் கையில் நீரை கொடுத்து உங்க நாக்கை தண்ணீரில் நன்றாக நனைய விட்டு தித்திக்கும் சுவை நாக்கில் படாமல் உள்ளே நீரை தள்ளுங்க என ரம்யா சொல்ல, அவனோ..அடிப்பாவி..இதெல்லாம் முன்னாடியே தெரிந்தால் நான் பேசவே யோசித்திருப்பேனே!
ம்ம்..அடுத்த முறை இதை போன்ற வார்த்தை வரும்? ரம்யா கேட்க, இனி அப்படியெல்லாம் பேசவே மாட்டேன்ம்மா..இது வேண்டாமே!
சரி சரி..அதை கொடுங்க..இதே போல் அடுத்த முறை விட மாட்டேன். அடுத்த முறை மிட்டாய் கிடையாது. பச்ச மிளகாய் தான் என்றாள்.
வேண்டமே வேண்டாம். என்னை விட்ருமா திலீப் சொல்ல, இன்னும் முடியல என்ற ரம்யா, டாக்டர் சார் அடிக்கடி ஒரு விசயம் சொல்லுவீங்களே! என்னது..ஹா..சின்னப் பொண்ணு..
நான் என்ன சின்னப்பொண்ணா? சொல்லுங்க சின்னப்பொண்ணா?” என அவனை நெருங்க திலீப் பின்னே சென்று..இல்லவே இல்லை. நீ ரொம்ப மெட்ச்சூர் ஆன பொண்ணு. ரொம்ப நல்லப் பொண்ணு. அழகான பொண்ணு. எனக்கு ஏத்த பொண்ணு உன்னை விட யாருமில்லை என கொட்டினான் வார்த்தைகளை கவனித்து வேகமாகவும்.
ம்ம்..ஓ.கே, நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உங்களை நான் மன்னிச்சுட்டேன் என்று நகர்ந்து சென்றாள்.
ஹப்பாடா என திலீப் நெஞ்சை பிடித்து அமர்ந்தான்.
“சாப்பிடலாமா?” என அர்சுக்குட்டி நட்சத்திராவை அழைத்தான்.
ஆரனையும் அர்சலனையும் அழைத்துக் கொண்டு சிம்மாவும் நட்சத்திராவும் நகர்ந்தனர்.
திலீப் எழுந்து, நான் என்னோட வேலையை ரிசைன் பண்ணப் போறேன் என்றான்.
எல்லாரும் அவனை திட்ட, திலீப் அம்மா அவனிடம் வந்து, நல்ல முடிவு எடுத்துருக்க என சொல்ல, “ரம்யாவோ எதுக்காக உங்க வேலையை விடப் போறீங்க? அது உங்களுக்கு ரொம்ப முக்கியம் தான?”
ம்ம்..முக்கியம் தான். ஆனால் உன்னை விட அது முக்கியமில்லை என அவன் சொல்ல, அவளுக்கு புரிந்தது.
எனக்காக வேண்டாம். நான் உங்களை நம்புவேன்.
அது எனக்கு தெரியும். எங்க டீனோட எண்ணமே வேற. அவர் என்னை பயன்படுத்த எண்ணுகிறார். எனக்கு பிடிக்கலை. அப்புறம் பாட்டி தப்பா எடுத்துக்காதீங்க. ஊருக்கு சென்று இரு நாட்கள் எங்க வீட்ல ரம்யா இருக்கட்டும். அவங்க சும்மா இருப்பாங்கன்னு தோணலை.
“என்ன அண்ணா பேசுற?” ஒண்ணுமே புரியல என விகாஸ் சொல்ல, மருதுவிடம் வந்து திலீப் உங்களுக்கு பிரச்சனையில்லையே! எனக் கேட்டான்.
எனக்கு பாப்பா பாதுகாப்பா இருந்தா போதும். பிரச்சனை யாரால சொல்லுங்க? நாம கவனிச்சுக்கலாம் மருது கேட்க, அவங்க மேல கையை வைக்க வேண்டாம். அதுக்கு பதில் வேற ஒன்று இருக்கு. அதை வச்சு பார்த்துக்கிறேன்.
மச்சான், எந்த உதவி வேணும்ன்னாலும் தயங்கமாக என்னிடம் கேளுங்க. நான் பார்த்துக்கிறேன் என்றான் விக்ரம்.
ஆமா அண்ணா, நானும் உதவுகிறேன் விகாஸ் கூறினான். சனா தான் காரணமாக இருப்பான்னு மகிழனுக்கு புரிந்தது.
எனக்கு புரியுது. நீங்களே பார்த்துக்கோங்க. நானும் ரிசைன் பண்ணிடுறேன் என்றான் மகிழன். அனைவரும் திகைத்து அவனை பார்த்தனர்.
நீ வேண்டாம் என திலீப் கூற, சனா தான முழு பிரச்சனையும். நம்ம இருவர் பற்றியும் அவங்களுக்கு தெரியும். உங்களை மிரட்ட என்னை பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கு என்ற மகிழன், அங்க நான் தொடர்ந்து வேலை பார்க்கணும். என்னோட மத்த எல்லாத்தையும் இழக்கணும் என சுருதியை பார்த்து விட்டு, நமக்கு வேற ஹாஸ்பிட்டலா இல்லை என்றான்.
“என்ன பேசுறாங்க? பாப்ஸ் உனக்கு தெரியுமா?” என விகாஸ் கேட்க, அவள் திருதிருவென விழித்தாள்.
நான் சொல்றேன் என திலீப்பின் அம்மா ரம்யாவிற்கு நடந்ததை சொல்ல, விகாஸ் கொதித்து விட்டான். எல்லாரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர்.
ஆனால் தாத்தா அவளிடம், ஏம்மா நாம பேசிட்டு தான இருந்தோம். சொல்லி இருக்கலாம்ல்ல? எனக் கேட்டார்.
பாப்பா, அவன் யாருன்னு மட்டும் சொல்லு அவனை சும்மா விடக்கூடாது என ஆவேசமாக எழுந்தான் மருது.
ஷ்..அமைதியா இருங்க என்ற தமிழினியன், முடிந்ததை பேசி ஏதும் ஆகப் போறதில்லை.
ரம்யா நீ என்னடா நினைக்கிற? அந்த மினிஸ்டர் மகனை பற்றிய விசயத்தை வெளியே விடலாமா? என கேட்டுக் கொண்டே அவளருகே வந்தான் தமிழினியன்.
வேண்டாம் மாமா. இரு வருடமாகிடுச்சு. அதை விட சுரேகா தான் பாதிக்கப்படுவாள். அவங்களுக்கு தங்கை வேற இருக்கா. இது வெளிய வந்தால் அவங்களால தாங்க முடியாது.
சரிடா, “அந்த பொண்ணை பற்றி வெளியே விடாமல் அவன் வாயாலே சொல்ல வைக்கலாமா?” தமிழினியன் கேட்க, “முடியுமா மாமா?” என ரம்யா கேட்டாள்.
“ஏன் முடியாது?” கண்டிப்பாக முடியும். அதான் நாங்க இருக்கோம்ல்ல விகாஸ் சீற்றமுடன் பேச, “என்னாச்சுடா இப்படி கொதிக்கிற?” அவன் அம்மா கேட்க, அவன் அமைதியாக அமர்ந்தான்.
அப்பொழுது தான் கீர்த்தனாவை பற்றிய சிந்தனையுடன், “கீர்த்து எப்ப பாரின்ல்ல இருந்து வருவா?” என்னிடம் பேச கூட இல்லை என்று விகாஸை அழுத்தமாக பார்த்தாள் ரம்யா. அவனும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பேசுவாம்மா. ஆறு மாசத்துக்கு ஒரு முறை பேசுவா? அவளுக்கு அங்க நேரமே இல்லை. பிஸியா இருக்கா என விகாஸ் அம்மா புன்னகையுடன் கூற, விகாஸ் கண்கள் கலங்கியது.
“நீ பேச்சை மாத்துற ரம்யா?” என தமிழினியன் கூற, நீ ஒரு வார்த்தை சொல்லுடா அவனை ஒரு வழி செய்திடலாம் என ராஜாவும் கூற, ரம்யா அனைவரையும் பார்த்தாள்.
ம்ம்..அவனை சும்மா விடக் கூடாது. இன்னும் எத்தனை பேரை கஷ்டப்படுத்திட்டு இருக்காங்களோ? என ரம்யா சொல்ல, இது போதும் என்று ராஜா சொல்ல, யாரும் அவசரப்பட வேண்டாம். பார்த்துக்கலாம் என்றான் தமிழினியன்.