நம்ம கிரேட் சிம்மா சார், உங்க ஸ்டார் உங்க ஊருக்கு வயிற்றை பிடித்துக் கொண்டு வரும் போது, அங்கிருந்தவரை பார்த்துக்கிட்டீங்க.. அப்புறம்..”தனியா தான விட்டு போனீங்க? அதுக்கு என்ன பெயர்? பொறுப்பில்லாதனம் தான?”
“அது, நான் தான் மாமாகிட்ட பொய் சொன்னேன்” ஸ்டார் அவனை காப்பாற்ற பார்க்க, புன்னகைத்த யுக்தா, இப்ப கூட உங்க ஸ்டார் உங்களை காப்பாற்ற தான் பாக்குறாங்க.
பொண்ணுங்க சில சூழ்நிலையால் அவங்க பிரச்சனையை சொல்ல முடியாது. ஆனால் அவங்க நடந்து கொள்ளும் விதத்தை வைத்து கூட உங்களால கண்டறிய முடியவில்லை என்ற அவளது பார்வை, அவளையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் மீது பதிந்து மீண்டது.
எஸ் அஜய் சார், யூ ஆர் கிரேட். லவ்வபுல். உங்க மனைவி உங்களை நம்பலை. நான் ஒத்துக்கிறேன். அது அவங்க சூழ்நிலை. “நீங்க இப்ப செய்றது என்ன? பழி வாங்கும் படலமா?” என யுக்தா அவனை பார்த்து கேட்டாள்.
வார்த்தையால் காயப்படுத்திட்டு..என யுக்தா அவனை பார்க்க, “அக்கா நீ என்ன சொல்ல வர்ற?” ரோஹித் கேட்க, அதை முடிந்தால் யாராவது புரிஞ்சுக்கோங்க என்ற யுக்தா பார்வை ரோஹித்தை ஏறிட்டது.
அவனருகே வந்து அவன் சட்டையை பிடித்த யுக்தா, நேற்று திருமணம் முடியும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவங்க வீட்டுக்கு போன பின் அவங்க எல்லார் பார்வையும் என் மீது பரிதாபமாக படிந்தது. அப்பொழுது நான் உணரவில்லை.
முதலிரவில் அவன் எதுவும் இப்பொழுதைக்கு வேண்டாம். எனக்கு இருதய பிரச்சனை இருக்கு என சில பைல்களை காட்டிய பின் தான் அவங்க பார்த்த அர்த்தம் புரிந்தது. அவனுக்கு ஆப்ரேசன் செய்யப் போறாங்க. அதனால தான் விலகிட்டான்னு எண்ணினேன்.
இரவு தூங்க முடியாம எழுந்த போது அறைக்கதவில் இருந்த என்னுடைய புகைப்படத்தை பார்த்து, அவன் என்னை காதலிக்கிறான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க வீட்ல யாரும் என்னிடம் சரியாக நடந்துக்கலை. ஆனால் இவன் எனக்கு எல்லாமே பார்த்து பார்த்து தான் செய்தான் அந்த பாதி நாளிலே.
அப்புறம் தான் நிம்மதியாக தூங்கினேன். காலை அவன் என்னை அணைத்தவாறு படுத்திருந்தான். உடலெல்லாம் ஜில்லென இருந்தது. முதல்ல எனக்கு எதுவும் தோணலை. குளித்து வந்து பார்த்த போது அவனை நான் நகர்த்தி போட்டவாறு அப்படியே இருந்தான். பின் தான் அவனது சுவாசத்தை கவனித்தேன். சுத்தமாக இல்லை என்றதும் என்னால நம்ப முடியல. பயமா வேற இருந்தது.
அம்மா, அப்பாகிட்ட சொன்னா பயப்படுவாங்கன்னு தான் உனக்கு கால் பண்ணேன். எத்தனை முறை உன்னை அழைத்தேன் தெரியுமா? நீ எடுக்கவேயில்லை என ரோஹித்தை பிடித்திருந்த கையை விடுத்து அவனை தள்ளி விட்டு அழுதாள் யுக்தா.
“அக்கா” என ரோஹித் அவளை அணைக்க வர, அவனை முடிந்தவரை அவள் கைகளால் மார்பில் அடிக்க, அவனோ கண்ணீருடன் சாரிக்கா..இரவு நடந்த பிரச்சனை குடித்திருந்த களைப்பில் அசந்து தூங்கிட்டேன் என சொல்லிக் கொண்டே அவள் கையை தடுத்து இழுத்து அணைத்தான்.
என்னை ஒருவன் இந்த அளவு காதலித்தும் அவன் என்னாலே செத்துட்டான் என்றதை தான் தாங்க முடியலடா என கதறி அழுதாள்.
தியாவோ பாப்பாவை படுக்கப் போட்டு அறைக்கதவை சாத்தி விட்டு, யுக்தா தோளில் கை வைக்க, அவள் தொடுகையை உணர்ந்த யுக்தாவோ, தியா..எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால தான் அவன் செத்துட்டானா? அவன் இறந்த பின் மருத்துவ பைல்லை எடுக்க அறைக்கு சென்று அங்கிருந்த அனைத்தையும் கோபத்தில் தட்டி விட்டேன். அப்பொழுது அதில் நிறைய கிரீட்டிங்கும் என்னுடைய புகைப்படமும் இருந்தது.
அவன் சாகும் வரை கூட என்னிடம் காதலை கூறாமலே செத்து போயிட்டான். அவன் கூறி இருந்தால் அவன் உயிரையாவது காப்பாற்றி இருந்துருப்பேன். ஆனால் என்னால அவனுடன் வாழ்ந்திருக்க முடியாது என அழுதாள்.
சரிடி, நீ அழாத..ப்ளீஸ்..தியா அவளை இறுக்கி அணைக்க, அவள் தியாவிடமிருந்து பிரிந்து, அலைபேசியை கண்டுபிடித்தது ஒரு அவசர நேரம் நேரில் காண முடியாத நேரம் பேச மட்டும் தான். ஆனால் நாம யாரோ தெரியாதவங்ககிட்ட எல்லாம் பேசுறோம். ரீல்ஸ் போடுறோம். இதெல்லாம் தேவையா?
ஒரு பொண்ணு உங்களுக்கு அடிக்கடி அழைப்பு விடுத்தால் அவள் உங்களை மிஸ் பண்ணிட்டு இருக்கா இல்லைன்னா அவளுக்கு ஏதோ பிரச்சனைன்னு உங்க யாருக்கும் புரியல என மீண்டும் அவள் கார்த்திகேயனை பார்த்தாள். எல்லாரும் அவனை பார்த்தனர்.
கண்ணை துடைத்து விட்டு, நீ என்ன வேணும்ன்னாலும் பண்ணு. ஆனால் தியாவை தேவையில்லாமல் கஷ்டப்படுத்துன நான் இங்கிருந்து அவளையும் பாப்பாவையும் அழைச்சிட்டு போயிருவேன் என சொல்லி விட்டு அறைக்குள் சென்றாள் யுக்தா. ரோஹித்தும் அவள் அறைக்கு செல்ல, அஜய் தியாவை முறைத்து விட்டு அவன் அறைக்கு சென்றான்.
வாடா..என அவனை தரதரவென சந்தோஷ் இழுத்து செல்ல, அவர்கள் பின் கார்த்திகேயனும் சென்றான்.
சிம்மாவும் கிளம்ப, மாமா..கொஞ்ச நேரம். நான் வந்துடுறேன் என நட்சத்திரா தியாவை யுக்தா அறைக்கு இழுத்து சென்று ரோஹித்தை வெளியே தள்ளி கதவை அடைத்தாள். முக்தாவும் உள்ளே இருந்தாள்.
கார்த்திக், “உனக்கும் யுகிக்கும் என்ன பிரச்சனை?” சந்தோஷ் கேட்க, “இப்ப அதை பேசி என்ன ஆகப் போகுது?”
எங்களுக்கு தெரியணும் என்றான் விஜய்.
“எதுக்கு?”
“சொல்லுடா?” என கரண் சினமுடன் கேட்டான்.
நான் கேத்ரினா கூட பேசியது அவளுக்கு பிடிக்கலை. அவளோட சேர்த்து வச்சு பேசிட்டா. அப்படின்னா என்னை சந்தேகப்பட்டது போல தான..
சோ..அந்த கேத்ரினாவுக்காக நீ யுகியோட பேசலை.
ஏய் அவ என்னோட பிராஜெக்ட் பார்ட்னர். “அவளோட என்னை சேர்த்து பார்த்தால் நான் தப்பானவனாகிடுவேனா?”
“இப்ப கூட நீ யுகியை தான குற்றம் சாட்டுற?” ஏன் கேத்ரினா மேல தப்பு இருக்க கூடாது என கரண் கேட்க, அவ மேல என்ன தப்பு இருக்கப் போகுது. பள்ளியோட அவ கனெக்சன்ல்ல இல்லை என்றான்.
“அப்படியா?” நான் ஒரு வாரம் முன் அவளை பார்த்தேன். அவ கூட நாங்களும் தான படித்தோம். “எதுக்கு உன்னை பற்றி மட்டும் தோண்டி தோண்டி விசாரிக்கணும்?” கரண் கேட்டான்.
ஆமா இழுக்குறோம். விடுங்கடா..யுகி திருமணம் பற்றி தெரிந்து கூட இவன் அமைதியா இருந்திருக்கான்.
“அப்படின்னா இப்ப இவனுக்கு காதல் இல்ல தான? இவன் என்னமும் செய்யட்டும். நமக்கென்ன?” என்றான் சந்தோஷ்.
நான் நேரம் கழித்து வீட்டுக்கு போனா என் பொண்டாட்டி சாப்பாடு போட மாட்டா. இவனோட மல்லுக்கட்டுன்னா..எனக்கு நேரமாகும்
ஆமாடா மச்சான், அவன் என்னமும் செய்றான். என் பையன் என்னை தேடுவான்ப்பா என்று விஜய் சொல்ல, அவர்கள் கிளம்பினார்கள். கார்த்திகேயன் நின்று யுக்தா சென்ற அறையை வெளியிருந்து பார்த்து விட்டு அவன் பைக்கை விரட்டினான். அவளோ கண்கலங்க மறைவிலிருந்து சன்னலருகே நின்று செல்லும் அவனையே பார்த்தாள்.
“அக்கா” என முக்தா அழைக்க, கண்ணீரை உள்ளிழுத்து அவளை பார்க்க, அக்கா நீ இன்னும் என முக்தா கேட்க,
ஹேய், “என்ன பேசுற? அவன் என்று என்னை மொத்தமாக விட்டானோ?” அப்பவே எல்லாத்தையும் மறந்துட்டேன். இதுக்கு மேல இத பத்தி பேசாத. இனி என்னை காதலித்த என் இறந்த கணவனை எண்ணிக் கொண்டே நாட்களை ஓட்டிருவேன்.
“அக்கா” முக்தா அவளை அணைக்க, யுக்தாவும் அவளை அணைத்துக் கொண்டாள்.
அஜய் அறைக்கு தியா பாப்பாவை தூக்கி சென்று அறைக்கதவை தட்டினாள்.
அஜய் கதவை திறந்து தியாவை பார்த்து, “இப்ப எதுக்கு வந்த?”
அவள் அமைதியாக அவனை பார்த்தாள்.
“பதில் சொல்ல முடியாதா?”
“வழிய விடுறீங்களா இல்லை யுக்தா அறைக்கே போகவா?”
போ..எனக்கென்ன?
ஓ.கே. பாப்பா வேணும்ன்னு கத்தக் கூடாது என திரும்பி நடந்தவள் கையை பிடித்து அவளிடம் வந்து பல்லை கடித்தவாறு, “நீ எப்படி வர மாட்டேன்னு சொல்லுவ?” என அவளது தாடையை அழுந்த அஜய் பற்ற, பாப்பா இருக்கா..என்ற தியா வார்த்தையில் கதவை திறந்து விட்டு உள்ளே சென்றாள்.
தியா அஜய் அறைக்குள் சென்று ரதுவை படுக்கையில் போட்டு விட்டு அவளருகே படுத்துக் கொள்ள, அறைக்கதவு தட்டப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, அஜய் எழாமல் பாப்பா அருகே படுத்துக் கொண்டான்.
தியா எழுந்து கதவை திறக்க, கண்ணம்மா கையில் உணவை ட்ரேயில் எடுத்து வந்திருந்தார்.
வாங்கம்மா..என தியா அழைக்க, அம்மாடி சாப்பிடாமல் வந்துட்டீங்க என அவர் சொல்ல, அம்மா..நீங்க தியான்னே அழையுங்கள். “எல்லாரும் சாப்பிட்டாங்களா?”
அங்கிள், “இன்னும் சாப்பிடலையா?” என தியா எழுந்து வாங்க..நானும் வாரேன். இவளுக என்ன செய்றாளுக என யோசனையுடன் நகர, அம்மாடி..முதல்ல நீங்க சாப்பிடுங்க. பாப்பாவுக்கும் பசிக்குமே!
ஓ..”பாப்பாவுக்காகவா?” தியா கேட்க, அவளை பார்த்த கண்ணம்மா, நீங்களும் பசி தாங்க மாட்டீங்கல்லம்மா.
அம்மா..ப்ளீஸ் தியான்னு அழையுங்கள்.
முதல்ல அவருக்கு கொடுங்க. நான் மத்தவங்கல்ல பார்த்துட்டு வாரேன்.
தியா, “உனக்கும் பசிக்கும்ல்ல?” கண்ணம்மா கேட்க, புன்னகையுடன் சாப்பிடாமல் இருந்து பழகிடுச்சு. அதனால இப்ப பசி தெரியலம்மா என்று தியா சொல்ல, அஜய் அதிர்ந்து அவளை பார்த்தான்.
“என்னம்மா சொல்ற?” கண்ணம்மா கேட்க, அம்மா..ப்ளீஸ்..”முடிஞ்சத பத்தி பேச வேண்டாமே!” என தியா வெளியேறினாள்.
கண்ணம்மாம்மா, “அவ சொன்னது உங்களுக்கு கேட்டதா? நான் சரியா தான் கேட்டேனா?” அஜய் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கேட்டான்.
“ஆம்” என அவர் தலையசைக்க, “உங்களுக்கு என்னம்மா தோணுது?”
எனக்கு..என்னால உங்க வாழ்க்கையில் நுழைய முடியாது. நீங்க தியாகிட்டவே கேட்டுக்கோங்க. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெளிவா அந்த பொண்ணை பற்றி தெரியும்.
நிதானமில்லாமல் என்றும் எந்த முடிவையும் அந்த பொண்ணு எடுக்க மாட்டா.
ம்ம்..என்று அஜய் சிந்தனையில் மூழ்க, தம்பி..சாப்பிடுங்களேன் கண்ணம்மா கெஞ்சலாக கேட்க, வாங்கி சாப்பிட்டான்.
தியா மற்றவர்களை கவனித்து உணவை கொடுத்து விட்டு அவளறைக்கு வந்தாள்.
அஜய் சாப்பிட்டு இருந்தான்.
அம்மா, நீங்க ஓய்வெடுங்க. நான் சாப்பிட்டுக்கிறேன் என்றாள்.
என்னம்மா, “எல்லாரும் சாப்பிட்டாங்களா?” என கண்ணம்மா கேட்க, ம்ம்..என தலையசைத்தாள்.
“நீங்க கொடுத்தா சாப்பிடாதவங்க இவள் கொடுத்தா எப்படி சாப்பிடுவாங்க?” அஜய் தியாவை பார்த்துக் கொண்டே கேட்டான்.
தம்பி, நான் உங்க வீட்ல வேலை செய்றவ. நான் சாப்பிடுங்கன்னு தான் சொல்ல முடியும். அதட்டவோ அறிவுரை சொல்லவோ எனக்கு உரிமை இல்லை.
அம்மா, “நீங்களும் எங்க வீட்ல ஒருத்தர் தான? எதுக்கு பிரிச்சு பேசுறீங்க?” தியா கேட்க, இல்லம்மா. நான் இருக்கிற இடத்தில் தான் இருக்கணும். இல்லை விபரீதத்தில் தான் முடியும்.
“என்ன விபரீதம்?” அஜய் கேட்க, அவர் தியாவை பார்த்தார்.
எனக்கு புரியுதும்மா. என்னாலும் அதை உணர முடியும் என்று தியா அவரை அணைக்க, அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை.
அம்மாடி, “அங்க அவங்க உங்கள கஷ்டப்படுத்தினாங்களா?” கண்ணம்மா கேட்க, கண்டிப்பா இல்லைம்மா. அவங்க குடும்பம் பெரியது. பணக்காரவங்களும் கூட தான்.
முதல்ல எல்லாரும் முகம் சுளித்தாங்க தான். எனக்கு யுக்தா, முக்தா சப்போர்ட் தான் இருந்தது. ராணியம்மாவுக்கும் கூட என்னை பார்த்தாலே பிடிக்காது. முக்தா தான் கூடவே இருந்தா.
“அது எப்படிம்மா உங்களை பிடிக்காமல் போகும்?”
அம்மா..அது..அது வந்து, நான் அவங்க வீட்டுக்கு..என தயங்கி கை விரல்களை ஆராய்ந்தவாறு தரையை பார்த்தாள்.
“என்னம்மா?”
நான் அவங்க வீட்டுக்கு போன போது ஐந்து மாதம். கழுத்துல்ல தாலி இல்லை என்று கரகரத்த குரலோடு..ரோஹித் தான் அழைச்சிட்டு போனான். அது வேற தப்பாகிடுச்சு. ஆனால் அங்க யுகி, முகியை பார்ப்பேன்னு நான் நினைக்கவேயில்லை.
ஆனால் போகப் போக ராணியம்மாவும் சிலரும் என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க.
டெலிவரி நார்மலா?
இல்லம்மா, நார்மல்ன்னு தான் டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனால் என்னோட கெல்த் பிராபிளம்ன்னால குழந்தையோட பொசிசன் மாறிடுச்சு. எனக்கு வலியும் வந்திருச்சு. சிசேரியன் தான் பண்ணாங்க.
கண்ணம்மா கண்கலங்க, தியா அருகே நகர்ந்து அவள் வயிற்றில் கை வைத்து, “ரொம்ப பெயினா இருந்துருக்கும்ல்லம்மா?” அவர் கேட்கவும், அஜய் மனம் பதறியது.
அதற்கேற்றார் போல் தியா கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் சொட்டியது.
“ரொம்ப கஷ்டமா இருந்ததாம்மா?”
ம்ம்..இருந்தது. அதை விட என திரும்பி அஜய்யை ஒரு பார்வை பார்க்க, அவள் கண்ணீர் அவன் நெஞ்சை பிழிந்தது.
அவள் தொண்டை அடைக்க, என்னால பாப்பாவை ஒரு மாதமாக கவனிச்சுக்க முடியல. பால் குடிக்க மட்டும் தான் என்னிடம் வருவா. மத்த நேரம் முழுவதும் ரோஹித், யுகி, முகி, அவங்க அம்மா தான்.
“என்னையே ஒருவர் பார்த்துக் கொள்ளும் நிலையாகிடுச்சு” என கண்களை துடைத்த தியா இதழ்கள் புன்னகையில், உங்கள மாதிரி ராணியம்மா அவங்களே என்ன பார்த்துக்கிட்டாங்க. அதனால அவங்க வீட்டு பிள்ளைகளுக்கு என் மீது கோபம், பொறாமை கூட. அதில் தான் கஷ்டம்.
பொதுவாக ராணியம்மா வீட்டிலிருந்து அதிகமாக வெளியவே போக மாட்டாங்க. ஆனால் என்னை பாத்ரூம் கூட அழைச்சிட்டு போவாங்க. சொல்ல முடியாத அளவு, என் அப்பா என்னுடன் இருந்தால் கூட அவ்வாறு பார்த்திருக்க மாட்டார். அம்மா மாதிரி பார்த்துக்கிட்டாங்க.
“உங்களுக்கு தெரியுமா?” எனக்கு ஆப்ரேசன் நடக்கும் போது ரோஹித் என்னருகே இருந்தான். எனக்கு அப்ப வினு நினைவு தான் வந்தது. அவன் என்னுடன் இருந்தால் கொஞ்சம் தைரியமா இருந்திருப்பேன். ஆனால் அவனுக்கு பதில் அண்ணன். இல்ல இல்ல ரோஹித் என்னோட சின்னவன். தம்பி மாதிரி..பக்கமிருந்தான்.
நம்ம ரதுவை முக்தா தான் கையில் வாங்கினாள். அன்று முழுவதும் யாரிடமும் ராணியம்மா கிட்ட கூட கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் செய்து அவ தான் வச்சிருந்தா. எனக்கும் அவங்க பாசத்துல்ல வலியெல்லாம் மறஞ்சு போச்சு.
அம்மா, “எனக்கு ஊட்டி விடுறீங்களா?” தியா கேட்க, கண்கலங்கி அமர்ந்திருந்த அஜய்யை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அம்மா” தியா அவரது கையை பிடிக்க, ம்ம்..என அவளை பார்த்தாள்.
தியா வாயை திறக்க, அவர் ஊட்டி விட்டார். அஜய் படுத்துக் கொண்டான்.
“குழந்தை பெத்தெடுப்பது இவ்வளவு கஷ்டமாவா இருக்கும்?” என கண்கலங்க அவள் சொன்னதையே எண்ணி, “அவளுடன் தான் அந்நேரம் இருந்திருக்கணுமே!” என சிந்தித்தவனுக்கு, அவள் எங்க இருக்கான்னே சொல்லலை. இதில் அவளை நான் எதற்கு பார்க்கணும். என்னை விட்டு போனால்ல..அதான் இப்படி கஷ்டப்பட்டிருக்கா என அவன் எண்ணம் வேறாக, இவளுக்காக கலங்கக் கூடாது என கண்ணை மூடி படுத்துக் கொண்டான்.
தியா உணவுண்ட பின் கண்ணம்மா செல்ல, தியா அஜய்யை பார்த்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்து அலைபேசியில் எதையோ பார்த்தாள்.
நேரமாகியும் அவள் தூங்காமல் இருக்க, விழித்த அஜய் “இன்னும் என்ன பண்ற? தூங்கலையா?” எனக் கேட்டான்.
இல்ல..
“ஏன்? என்ன பாக்குற?” என அஜய் எட்டி பார்க்க, அலைபேசியை மறைத்து என்னோட விசயத்துல்ல நீங்க தலையிட வேண்டாம் என்றாள்.
அவன் படுக்க, சற்று நேரத்தில் படுத்து அவளும் உறங்கி விட்டாள்.
மருத்துவமனையில் ஒரு பொண்ணு அரக்கப்பரக்க கதறலுடன் வரவேற்பறையில் அழுது கொண்டே, மேம்..மேம்..என பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
மேம், அழாதீங்க. “என்னன்னு சொல்லுங்க? என அந்த பெண் கேட்க, மேம்..மேம்..என்னோட மாமா மாமா..என அந்த பொண்ணு மேலும் அழுதாள்.
மற்ற செவிலியர்களும் அந்த பெண்ணிடம் அழாதீங்க மேம். முதல்ல விசயத்தை சொல்லுங்க என வினவ, அவர்களை கவனித்துக் கொண்டே சென்ற மருத்துவன்..அந்த பெண்ணின் குரலில் நின்று விட்டான்.
மேம்..மேம்..என்னோட அத்தை, மாமாவுக்கு விபத்துன்னு. இங்க சேர்த்திருக்காங்கன்னு கால் வந்தது என அவள் அழுது கொண்டே சொல்ல, யாருக்கும் ஏதும் புரியவில்லை. அந்த மருத்துவன் நின்று திரும்பி பார்த்து அதிர்ந்தான்.
முழுவதும் பிளைனான லெமன் நிற புடவை சில்வர் பார்டரில் கூந்தலை விரித்து ஒப்பனையுடன் மல்லிகைபூவுடன் அழுது சிவந்த கண்களுடன் அழகான மங்கையாக அழுது கொண்டே பேச திணறிக் கொண்டிருந்தாள் அவள்.
“ரம்யா” மருத்துவன் சத்தமாகவும் பதட்டமாகவும் அழைக்க, திரும்பி அவரை பார்த்த ரம்யாவோ..”திலீப்” என மேலும் அழுகை கூடியவாறு அவனை நோக்கி ஓடி வந்து மருத்துவர் திலீப்பை அணைத்தாள்.
அவளது அணைப்பில் மேலும் திகைத்த திலீப், அவளது உடல் குலுங்கலில் சுயம் பெற்று,
“ஹே..எதுக்கு அழுற? என்னாச்சு? இங்க எதுக்கு வந்த?” எனக் கேட்டான்.
என திக்கி திக்கி நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் பேச,
“என்ன சொல்ற?” ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என அவளை தோளோடு திலீப் அணைத்து, தெளிவா சொல்லு.
இன்னிக்கி என்னோட பர்த்டே என நிறுத்தி அத்தை மாமா சர்பிரைஸா என்னை பார்க்க வந்திருக்காங்க. எனக்கு எதுவும் தெரியாது என அவள் மேலும் அழுதாள்.
“வந்துருக்காங்களா? எங்க? இங்கேயா?” என அமைதியாகி பின் அவளை கூர்ந்து பார்த்து அவன் மனம் பதறியது. அவன் காட்டாமல்..”என்ன?” என அவளை பார்க்க, அவங்களுக்கு விபத்தாகி இங்க தான் சேர்ந்திருக்காங்களாம் என சொல்லி முடித்தாள்.
“விபத்தா?” என அவனும் தன் மார்பை கையிட்டு பிடித்து, இல்ல இருக்காது. யாராவது உனக்கு பிராங்க் பண்ணி இருப்பாங்க என திலீப் கூற, அவள் கையிலிருந்த அலைபேசியை அழுத்தினாள்.
வரவேற்பறை பொண்ணு இவர்களை பார்த்துக் கொண்டு காலை எடுக்க, திலீப் அதிர்ந்து, அவர்களிடம் வேகமாக நடந்தான். அவன் பின்னே ஓடினாள் ரம்யா.
ரம்யாவின் அத்தை, மாமா பெயரை கூறி விசாரிக்க, டாக்டர் அந்த லேடி ஸ்பாட் அவுட். அவர் எமர்ஜன்சி வார்டில் இருக்கார். சிகிச்சை நடக்குது. அவர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு என அந்த பொண்ணு கூறிய நிமிடம் மயங்கினாள் ரம்யா.
திலீப் கண்ணீருடன் அவளை இழுத்து அவன் மீது சாய்த்து, அவள் கன்னத்தில் தட்டி..ரம்யா..ரம்யா..என பதற, அனைவரும் வியப்புடனும் கவலையுடனும் பார்த்தனர்.
ஒரு பொண்ணு வேகமாக தண்ணீர் எடுத்து வந்து அவள் மீது தெளிக்க ரம்யா விழித்தாள்.
மெதுவாக கண்களை விரித்த ரம்யாவிற்கு நிலவரம் புரிய..”திலீப் அத்தை இறந்துட்டாங்களா?
..சொல்லு? சொல்லு?” என அவனது சட்டையை பிடித்து உலுக்கினாள்.
மேம்…என ஒரு பொண்ணு பதறி ரம்யாவை தடுக்க வர, திலீப் கையை உயர்த்தி நிமிராமலே “வேண்டாம்” என தலையசைத்தான்.
அவனை அடித்து அவள் சோர்ந்து, திலீப்..எனக்கு மாமா வேணும்..ப்ளீஸ் எனக்கு அவரை காப்பாற்றி கொடுத்திருங்க என அவன் மார்பில் சாய்ந்து கதறி அழுதாள்.
அவன் கண்களை துடைத்து விட்டு, அவளை தூக்கினான். அவள் ஏதும் சொல்லவில்லை. சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியில் கண்களை விரித்து பார்த்தனர்.
எமர்ஜன்சி அறைக்கு வெளியே அவளை அமர வைத்து விட்டு, ரம்யா எங்கேயும் போகாத. மாமா இங்க தான் இருக்கார். நாம அவரை காப்பாத்திடலாம் என திலீப் உள்ளே செல்ல எத்தனிக்க, எனக்கு பயமா இருக்கு என சோர்வுடன் அவன் கைகளை பற்றினாள்.
அவளது கைகளை அவன் கைகளுக்குள் வைத்து, “நான் இருக்கிறேன்” என சொல்லி அவன் உள்ளே சென்றான்.
அந்நேரம் அவளை கடந்த மருத்துவன் ஒருவன் நின்று, ஹே..பூசணி, “பர்த்டே எப்படி?” என கேட்டுக் கொண்டே அவள் சோர்வை பார்த்து விட்டு, சுற்றி பார்க்க எல்லாரும் அவளை பார்த்துக் கொண்டு ஏதோ அவர்களுக்குள் பேசுவதை கண்டான் மகிழன்.
ஏய் ரம்யா, “என்னாச்சு? எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க?” மகிழன் அவளை உலுக்க, அவளோ மயக்கத்திலே மாமா வேணும்..மாமா வேணும் என அரற்றினாள்.
அவன் புரியாமல் பார்க்க, ரம்யாவின் அத்தை சடலத்தை அவ்விடம் ஒருவர் கொண்டு வந்தார்.
“என்ன?” அவன் கேட்க, பாடியை இந்த பொண்ணுகிட்ட காட்ட சொன்னாங்க என்றான் வார்டு பாய்.
“பாடியா?” என துணியை விலக்கி பார்த்த மகிழன் தடுமாறி அங்கிருந்த மேசையில் சாய்ந்து தடுமாறி கீழே விழுந்தான் அதிர்ச்சியுடன்.
டாக்டர் சார், “உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” அவன் கேட்க, ஹா..என எழ முயன்றவனுக்கு உதவி எழ வைத்தான் அந்த வார்டு பாய்.
அவர் கையை தட்டி விட்டு, ரம்யா, “இங்க என்ன நடக்குது? மாமான்னு சொன்னேல்ல? அப்பா மாமா உள்ளேயா?” என பதட்டமாக அவளை உலுக்கினான். அவளோ மிகவும் சோர்வுடன் இருந்தாள்.
ரம்யா..ரம்யா..என இவனும் கன்னத்தில் அடிக்க, அங்கே வந்த பொண்ணு நடந்ததை கூறினாள்.
திலீப் மாமா, “உள்ள இருக்காரா?” இருவரும் இப்படியா மீட் பண்ணனும் என தலையில் அடித்த மகிழன், “நாங்க என்ன பிளான் பண்ணோம்? இங்க என்ன நடந்திருக்கு” என மகிழன் அழ, அனைவரும் அவனையும் பார்த்தனர்.
சட்டென அலைபேசியை எடுத்து பேசி வைத்து விட்டு, ரம்யா..ரம்யா..எழுந்திரு. நீ சோர்ந்து போகாத. அண்ணா வாராங்க என ஹேய், தண்ணீர் எடுத்துட்டு வாங்க என அவன் பணிக்க, செவிலியர் ஒருவர் ஓடி வந்து கொடுத்தார்.
தண்ணீரை மொத்தமாக அவள் முகத்தில் ஊற்ற, பட்டென எழுந்து பெரிய பெரிய மூச்சுகளாய் விட்டாள் ரம்யா. “இந்தா தண்ணீரை குடி” என அவள் பருகியதும், ரம்யா..மருதண்ணா வாராங்க..என்றவுடன் அவள் மேலும் பதட்டமானாள்.
முன்னே இருந்த சடலத்தை பார்த்து, அத்தை..அத்தை..என மெதுவாக அதனருகே சென்று கதறி அழுதாள். மகிழன் அவளுக்கு ஆதரவாக அவனருகே இருந்தான்.
பிக் சீனியர், அத்தை இனி பேச மாட்டாங்கல்ல. என்னால அவங்கள பார்க்கவே முடியாதுல்ல என அவள் அழுது கொண்டிருக்க, மருது துளசி உள்ளே வந்தனர்.
மகிழன் அவர்களை நோக்கி செல்ல, “அம்மா” என துளசி ரம்யா அருகே சென்று.. “அம்மா…என்னை மன்னிக்காமலே போயிட்டியே!” நான் இனி எப்படி நிம்மதியாக இருப்பேன் என கதறி அழுதாள்.
ஒரு பக்கம் ரம்யாவும் மறுபக்கம் துளசியும் கதறி அழ, மருது அவன் அத்தையை பார்த்தவாறு உடைந்து அமர்ந்தான்.
சிறுவயதில் ரம்யாவை முதுகில் சுமந்தவாறு அவர்கள் வீட்டிற்கு சென்றதிலிருந்து அவர்கள் வீட்டிற்கு மருமகனான அனைத்திலும் எண்ணம் உலழ அமர்ந்திருந்தான்.
அங்கே வந்தனர் திலீப்பின் மொத்தக் குடும்பமும்.
ரம்யாவை பார்த்து அனைவரும் அவளிடம் ஓடி வந்தனர். அவளோ அழுது சோர்ந்து அவள் மாமாவை நோக்கி காத்துக் கொண்டிருந்தாள்.
ஹே, “மை ப்ரெண்டு” என விகாஸ் கையை நீட்ட, அவன் கையை பிடித்து வீ..மாமா..என அவள் அழ, தோழனாக அவளை தோளோடு அணைத்து நின்றான். எல்லாரும் அவளிடம் குவித்து ஆறுதலளிக்க,
வெளியே வந்த திலீப் அனைவரையும் பார்த்து அதிர்ந்தான். இதில் வீ, ரம்யாவை பார்த்து சினமானாலும் இது இதற்கான நேரமில்லை என அவர்களிடம் வந்தான்.
அப்பொழுது சிம்மாவின் குடும்பமும் வந்தனர். அப்பொழுது தான் வினித் வீட்டிலிருந்து இருவரும் கிளம்பி இருப்பார்கள்.
சிம்மா- நட்சத்திராவிற்கு அடுத்ததாக ஆரன் பிறந்து ஏழாவது மாதம். அவனையும் தூக்கி வந்திருந்தனர். நம்ம (அர்சலன்) அர்சு குட்டியும் வந்திருந்தான்.
வந்தவுடன் “ஸ்வீட்டா” என தமிழினியனிடம் ஓடினான்.
ஸ்வீட்டா, “குட்டி ஏஞ்சல் எங்க?” எனக் கேட்டான்.
ஆம்..தமிழினியன்- மிருளாலினிக்கு பையன் பிறந்து ஒரு வருடம் முடிந்து இருந்தது. அவன் சுபி கண்ணன். சுபிதன் அவர்களுக்காக செய்த அனைத்திற்காக அவன் பெயரையும் கண்ணன் என்ற பெயரையும் சேர்த்து வைக்கலாம் என தமிழினியன் தந்தை கிருபாகரன் கூறியதில் வைத்து விட்டனர்.
மிருளாலினிக்கும் தமிழினியனுக்கும் சுபிதனின் ஆன்மா கூறியது போல் அவர்களுக்கு அவன் மகனாக பிறந்து சுபிதன் சுபிகண்ணனாக வாழ ஆரம்பித்து விட்டான்.
அர்சலனுக்கும் சுபிதனின் ஆன்மாவிற்கும் இருக்கும் பிணைப்பு இப்பொழுது அர்சு சுபி கண்ணனிடம் வளர்ந்து நின்றது. சுபிக்கு அர்சலன் ஆரனை கொஞ்சினால் போச்சு..வீட்டையே ஒரு வழி செய்திடுவான். அவனது சித்தப்பாக்களை விட சிம்மாவிடம் தான் சுபி பலமாக ஒட்டிக் கொள்வான்.
தமிழுக்கு மிருளா மகனை “சுபி”ன்னு அழைத்தால் பிடிக்காது. அதனால் அவள் “கண்ணா” என்று தான் அழைப்பான். ஆனால் அவன் மட்டும் மகனை சுபி என்று தான் அழைப்பான். சுபிதனுக்கும் தமிழினியனுக்கும் இருந்த நட்புறவு அப்பா- மகனிடமும் நீடித்தது. இதை கண்டு மிருளாலினி பூரித்து போவாள்.
நம் சுபிதனின் ஆன்மா அவர்களின் வாழ்க்கையை விட்டு போனாலும் அங்குள்ள அனைவர் மனதிலும் ஏன்? தமிழின் அக்கா சுஜி மனதிலும் இருந்தான். தமிழ் மகனிடம் மட்டும் எப்போதும் அவள் எச்சரிக்கையுடன் இருப்பாள்.
திலீப்பை பார்த்த மருது, துளசி, ரம்யா அவனிடம் ஓடினார்கள். மூவரும் அவனை சூழ்ந்து, “என்ன சொல்லப் போகிறான்?” என அவனையே பார்க்க,
ரம்யா அவன் கையை பிடித்து, மாமா, “நல்லா இருக்காங்கல்ல?” எனக் கேட்க, சாரிடா..அவரு உங்க கிட்ட கடைசியாக பேசணும் சொன்னாங்க என்றவுடன் ரம்யா கண்ணீர் நிற்காமல் வர, துளசி துவண்டு அமர்ந்தாள்.
ப்ளீஸ்..அழாதீங்க. அவரு உங்களிடம் பேச தான் உயிர கையில பிடிச்சிட்டு இருக்கார். அவருக்காக..தயவு செய்து என்னன்னு பேசுங்க என்ற திலீப், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, பெரியப்பா..உங்களையும் என புகழேந்தியையும் அழைத்தான். உங்களையும் பார்த்து பேசணும்ன்னு சொன்னார் என்று திலீப்பும் அவர்களுடன் சென்றான்.
முகத்தை தவிர தலை முழுவதும் கட்டு போட்டு, கை கால்களிலும் கட்டிட்டி நொடிந்து நகர கூட திராணியில்லாது கண்களை மட்டும் அலை பாய்ந்து காத்துக் கொண்டிருந்தார் துளசியின் அப்பா, மருது ரம்யாவின் மாமா.
“அப்பா” என துளசியும், “மாமா” என ரம்யாவும் ஓடி வந்தனர்.
ஷ்..என திலீப் சத்தமிட, அனைவரும் அவனை பார்த்து விட்டு அவரை பார்த்தனர்.
மருது கையை பிடித்த அவர் மெதுவாக திணறி திணறி பேசினார்.
மாப்பிள்ள..என் பொண்ணுக்கான தண்டனை போதும். இதுக்கு மேல அவ தாங்க மாட்டா. இனி நம்ம ரம்யா விசயத்துல்ல தலையிட மாட்டா. அவ புரிஞ்சுக்கிட்டா என அவர் கண்ணை மூட, அனைவரும் பதறி ஆளாலுக்கு அழைத்தனர்.
ம்ம்..சொல்றதை மட்டும் கேளுங்க. யாரும் பேசாதீங்க. துளசியோட உங்க வாழ்க்கையை தொடங்குங்க என அவர் சொல்ல ரம்யா நிமிர்ந்து துளசியையும் மருதுவையும் பார்த்தாள்.
“இனி நாங்க என்ன செய்யப் போறோம்?” என கதறி துடித்தான் மருது.
புகழேந்தியை கண்ணாலே அழைத்து, அவர் கையை பிடித்து..அய்யா என் பிள்ளைங்கள அடிக்கடி பார்த்துக்கோங்க. அன்னமக்கா எங்க? என அவர் வாசலை பார்க்க, திலீப் வெளியே சென்று அவரை அழைக்க, அன்னத்திடமும் பார்த்துக்க சொல்லி விட்டு தன் மகளை பார்த்தார்.
உன்னை நாங்க மன்னிக்க முடியாம ரொம்ப திண்டாடிப் போனோம்மா. இனியாவது எதையும் உனக்காக மட்டுமல்லாமல் மத்தவங்களையும் கவனிச்சுக்கோம்மா..என சொல்ல,
“என்னை மன்னிச்சிருங்கப்பா” என துளசியும் கதறி அழுதாள்.
அவள் தலையை தொட்டவர்..”நல்லா இருக்கணும்மா” என கண்களை வலப்பக்கமாக திரும்பி ரம்யாவை பார்த்து, அவர் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.
“மாமா” என அழாமல் இருக்க முடியவில்லை ரம்யாவால். திலீப் அவளது தோளை அழுத்த, அவனை பார்த்த அவர் அங்கிருந்த கவரை பார்த்தார்.
திலீப் அதை எடுத்து வந்து ரம்யாவிடம் கொடுக்க, அவளோ புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்குமே புரியவில்லை.
“இல்லை” என இடவலமாக கண்களை அசைத்த அவர் கண்கள் திலீப்பிடமே நிலைத்தது. அவன் அவரை பார்த்து, “பிரிக்கணுமா?” எனக் கேட்டான்.
ம்ம்..என லேசான சத்தம் வந்தது.
திலீப் அதை பிரிக்க அதில் சிறிய பெட்டி ஒன்று இருந்தது. பாட்டி, தாத்தா, திலீப் அம்மா, அப்பா கண்ணீருடன் அவரை பார்க்க, இது..என திலீப் அவரை பார்த்தான்.
“திறங்க” என அவர் சொல்ல, அவன் அந்த பெட்டியை திறக்க அதில் அழகான இரு வைர மோதிரம் இருந்தது.
திலீப்பும் ரம்யாவும் மற்றவர்களும் அதை பார்த்து திகைத்து அவரை பார்க்க, பாட்டி, தாத்தா, திலீப் அம்மா, அப்பா அதை பார்த்து மேலும் கண்ணீர் விட்டனர்.
தம்பி, “என்னோட மருமகளுக்கு போட்டு விடுங்க” என அவர் சொல்ல, “என்ன?” என்று திலீப் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தான்.
ஆமாப்பா, உன்னை இன்று வர வைக்க எண்ணியது நம்ம ரம்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு என்று தாத்தாவை பார்த்தார்.
ஆமா திலீப், உன்னை ரம்யா அத்தை மாமாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நீங்க வேற பேசாம இருந்து கோவில் விழாவில் பேசுனீங்க. அதனால அவர் உன்னை ரம்யாவிற்கு திருமணம் செய்து வைக்க பேசி, அவர் கம்பெனியை விற்று இந்த மோதிரத்தை நிச்சயம் செய்யவென வாங்கினார்.
உங்களுக்கு ஒருவருக்கு ஒருவர் பிடிச்சிருக்கு. ஆனால் சொல்ல மாட்டிக்கிறீங்கன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால நாங்க உங்களை சேர்த்து வைக்க ரம்யா பிறந்த நாள் விழாவை தனியாக ஏற்பாடு செய்திருந்தோம்.
“ரம்யா அணிந்திருக்கும் புடவை உனக்கு நினைவிருக்கா திலீப்?” நாம தான் வாங்கினோம் என்ற அவன் அம்மா கேட்க, ஆமா..என அவளை பார்த்தான்.
மாமா..எனக்கு நீங்க வேணும். ப்ளீஸ் மாமா. இப்படியெல்லாம் செய்யாதீங்க என ரம்யா அழுதாள்.
ரம்யாம்மா..நீ முதல்ல மாதிரி இல்லை. எல்லாருக்காகவும் வாழுற. நீ நீயா இல்லம்மா. என்னோட பழைய பாப்பாவா மாறணும். திலீப் உன்னை நல்லா பார்த்துப்பார்.
மாமாவுக்காம்மா..என அவர் கண்களை மூட, மாமா..ப்ளீஸ் என அழுது கொண்டே எழுந்து திலீப்பிடம் கையை நீட்ட, அவன் அவரை பார்த்து விட்டு ரம்யாவை பார்த்தான்.
அவன் எண்ணம் புரிந்த ரம்யா மாமாவிடம் திரும்பி, நான் திலீப்பை திருமணம் செய்து கொள்கிறேன் மாமா. ஆனால் அவர் என்னை விருப்பப்பட்டு திருமணம் பண்ணிக்கணும் என்றாள்.
நான் உங்க மருமகளை திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறேன் என்ற திலீப், ரம்யாவிற்கு முழுதாக விருப்பமிருந்தால் நாங்க கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வோம்.
“எனக்கு சம்மதம்” என்றாள் ரம்யா பட்டென.
அவன் குடும்பத்தாரை பார்க்க, அவர்களோ அவர்கள் சம்மதத்தை தெரிவிக்க, அவள் கையை பிடித்து அவளது விரல்களில் மோதிரம் அணிவித்து, இனி ரம்யா என்னுள் கலந்தவள். அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.
ரம்யாவும் அவன் விரல்களில் மோதிரத்தை அணிவித்து, நான் திலீப்பை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி அவனை பார்த்து விட்டு, அவள் மாமாவை பார்க்க அவளை பார்த்தவாரே அவர் உயிர் காற்றோடு கலந்து விட்டது.