நீ நான் 33
அஜய், வினித், அவன் நண்பர்கள், சிம்மா, விக்ரம், மகிழன் வந்திருந்தனர். விகாஸ் கீர்த்தனாவை அழைத்து வந்தான்.
கீர்த்தனா விக்ரமை பார்க்கவும், அவனிடம் ஓடிச் சென்று அவன் கையை பிடித்தாள்.
“வீ, எதுக்கு பவரை அழைச்சிட்டு வந்த?” விக்ரம் கோபமாக கேட்டான். விக்ரம் கையை கீர்த்தனா அழுத்தி பிடித்தாள். அவளை பார்த்து விட்டு விகாஸை விக்ரம் பார்த்தான்.
அவன் வீடியோவை விக்ரம் முன் வைத்தான். இதோட காஃபி ரத்தன் ஷெட்டியிடமும் இருக்கும். நீங்க ஏதாவது செய்தால் இந்த வீடியோவை கண்டிப்பாக இணையதளத்தில் போட்ருவான். நாம ஏதும் செய்ய முடியாது என விகாஸ் கண்கள் அலைபாய்ந்தது.
சில அசைவுகளின் சத்தம் கேட்டு எல்லார் பார்வையும் அனைத்து பக்கமும் சென்றது.
விகாஸ் கண்களை மூடி திறந்தான்.
நான் இங்கே உங்களை வரச் சொல்லி நான் வந்த காரணம் இது தான். அவங்க டார்கெட் கீர்த்து.
விக்ரம் கீர்த்தனாவை பார்க்க, அவளும் தலையசைத்தாள்.
இன்றே முடிந்த அளவு முடிக்க பாருங்க. இதை விட சரியான நேரம் நமக்கு கிடைக்காது என்ற விகாஸ். “மிக நெருக்கடி என்றால் மட்டும் நாம் உயிர்பயத்தை காட்டலாம்”. “உயிர்பயம்” என மீண்டும் விகாஸ் அழுத்தி கூற, கார்த்திக் நண்பர்களை தவிர மற்ற யாருக்கும் புரியவில்லை. அவர்கள் கிங்கை பற்றி அறியவில்லையே!
விக்ரம் கீர்த்தனா கையை பிடிக்கும் முன் விகாஸ் அவள் கையை இறுக பற்றினான். எல்லாரும் அவனை பார்த்தனர்.
சாதாரணமாக தோளை குலுக்கி விட்டு விகாஸ் நின்றான். கீர்த்தனா பதட்டமாக விக்ரமை பார்த்தாள்.
விகாஸ் கையை தட்டி விட்ட விக்ரம் கீர்த்தனா கையை அவன் பிடித்தான். விகாஸ் அவனை பார்த்து விட்டு நகர்ந்து அவளது இடக்கையை பிடித்தான். விக்ரம் தீவிரமாக அவனை முறைத்தான்.
“ஓ காட்..எந்த நேரத்துல்ல சண்டை போடுறீங்கடா?” அஜய் கோபமாக கேட்டான். சிம்மாவோ விக்ரம் கையை பிடித்துக் கொள்ள, கார்த்திக் அவன் நண்பர்கள் அஜய் வினித் என அனைவரும் கையை கோர்த்து நின்றனர்.
சிலர் துப்பாக்கியுடன் வந்தனர். யாரும் ஏதும் செய்யவில்லை. இன்னும் சிலர் துப்பாக்கியுடன் ரத்தன் ஷெட்டிக்கு பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.
அங்கிருந்த சோபாவை ஒருவன் இழுத்து அதில் கெத்தாக கால் மீது கால் போட்டு அனைவரையும் பார்த்தார்.
“அஜய், நீ ரொம்ப விளையாடிட்ட. என் ஆட்டத்தை நீ பார்க்கலையே! பார்க்கலாமா?” டேய்..என்ற சத்தத்தில் எல்லார் குடும்பத்தையும் அழைத்து வந்தனர். அதில் ஒருவன் சிம்மா மகன் அர்சுவின் சட்டையை பிடித்து இழுத்தான்.
மேல கையை வக்காத “இடியட்” என அர்சலன் தைரியமாக அவன் கையை பிடித்தான். நட்சத்திரா தான் பயந்தாள். சிம்மா அவனை பார்த்து புன்னகைத்தான்.
“அர்சு” சும்மா இரு. நட்சத்திரா அவனை திட்ட, அம்மா, “நீ சும்மா இரு. இவன் எதுக்கு என் சட்டையை பிடிக்கிறான்? இடியட்” என அவனை முறைத்தான் அர்சலன்.
“ஏய், பொடிப்பயலே நாங்க யாருன்னு தெரியாம பேசுற?”
“நீயும் மனுசன் தானடா” அர்சலன் சொல்ல, “அர்சு” பரிதி சத்தமிட்டு அவனை தூக்கினார்.
தாத்தா..
ஷ்..அவர் தன் பேரன் வாயில் கையை வைத்தார்.
ஷெட்டி அவனை பார்த்து, “உன்னோட அப்பனுக்கு மகன்னு நல்லா நிரூபிக்கிற” என்றான்.
“எல்லாரையும் கட்டுங்கடா” அவன் கத்த, பசங்க எல்லாரும் வரிந்து கட்டிக் கொண்டு முன் வந்தனர்.
“ஆல்பர்ட்” ஷெட்டி கத்த, மேல் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
கர்னல் சேகர் தாத்தா முன்னால் வந்து, “அமைதியா இருங்க” தன் பேரன்களை நிறுத்தினார்.
“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?”
என்னோட ஆளுங்களையும் பொண்ணையும் இவனுக கொன்னுட்டாங்க. முதல்ல ஊரையே மொத்தமா போட்றலாம்ன்னு நினைச்சேன். அப்ப தான் இந்த பொண்ண பார்த்தேன். அப்படியே என் பொண்ணு திவ்யா போல என கீர்த்தனாவை காட்டினான்.
“அதுக்கு?” விகாஸ் கேட்க, அதுக்கு இந்த பொண்ணு போதும். இவள விட்டுட்டு எல்லாரும் போயிடுங்க என்றான் ஷெட்டி.
“மானுக்குட்டிக்கும் உனக்கும் சம்பந்தமில்லை. நான் தான கொன்னேன். பார்த்துக்கலாம்” அஜய் சொல்ல, ராணியம்மா வீட்டினர் திகைத்து அவனை பார்த்தனர்.
“கொலையா? அண்ணா..என்ன சொல்ற?” ரோஹித் கேட்டான்.
“ஆமா, ஷெட்டி ஆளுங்க பதினைந்து பேரை கொன்னேன் என் டீமுடன்” என்று சொல்ல, விக்ரம் சிம்மா விகாஸ் மகிழனும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
கீர்த்தனா அவர்களுக்கு இடையே வந்து, “ஆமா பிளான் நான் தான் போட்டுக் கொடுத்தேன்” என்றாள். சேகர் தாத்தா வீட்டினர் அனைவருக்கும் தலை கிறுகிறுத்தது.
சுவாதி அவன் அண்ணன்களுக்கு இடையிலிருந்து முன் வந்து, “கீர்த்து என்ன பேசுற?”
ஆமா அண்ணி, கீது எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்கு அண்ணாவிற்கு அடுத்தது அவள் தான். என்னால சும்மா இருக்க முடியல..அதான் அஜய் அண்ணாவுக்கு உதவினேன்.
“அஜய் உங்களுக்கு எப்படி இந்த பொண்ணை தெரியும்?” தியா கேட்டாள்.
பேப்…விதார்த் உன்னை காப்பாற்றி டெல்லி அனுப்பியது இந்த பொண்ணோட தான். ஆனால் இவள் அப்பா வாயிலாக தான் உனக்கு உதவினாள்.
“வாட்? அப்ப பள்ளிக்கு தான போய்கிட்டு இருந்த கீர்த்து?” விகாஸ் கேட்டான்.
கீது உங்களை அருகிலிருந்து கவனித்தாள். நான் தூரமிருந்து கவனித்தேன். சிம்மா அண்ணாவை கவனிக்கும் போது இவங்களையும் கவனித்தேன். இவங்க நிச்சயம் வரை எல்லாம் நன்றாக தான் இருந்தது. அதன் பின் தியா அண்ணியை ஆட்கள் பாலோ செய்தாங்க. நானும் பார்த்தேன்.
எதுக்கு? ஏன்? யார்? என்று தெரியாது. சில நாட்களில் அவங்க காணோம் என்று சிம்மா, விக்ரம் அண்ணா தேடியதை பார்த்து நானும் தேடினேன்.
தியாவை பார்த்து, திவ்யா..உங்களுக்கு ஊசி போடும் போது அங்கே தான் இருந்தேன். ஆனால் உள்ளே இல்லை வெளியே. சிறிய இடைவெளி வழியாக உங்களை பார்த்தேன். அவங்க போட்ட ஊசியை பற்றி முதல்ல எனக்கு தெரியலை. நீங்க பேசியதை வைத்து தான் தெரிந்தது. நான் அப்பாவிடம் சொல்ல, அவரும் உங்களுக்கு உதவ வந்தார். நீங்க வெளியே வர காத்திருந்தோம்.
அதே போல் வந்தீங்க. ஆனால் உங்க பின்னாடி ஆட்கள் வந்ததால் அன்று உதவ முடியலை. நீங்க எங்கன்னு எங்களுக்கு தெரியல. அப்பா தான் விசாரித்து மினிஸ்டர் வீட்டுக்கு என்னையும் அழைத்து வந்தார். அப்பொழுது தான் செய்வதறியாது மினிஸ்டர் வீட்டு ஆள் ஒருவரும் விதார்த் அண்ணாவும் அங்கே இருந்ததை பார்த்து, நாங்க டெல்லி போறோம் என்று சொல்லி தியா அண்ணியை அழைத்துக் கொண்டு மோனூவை வரவைத்து ரயிலில் சென்றோம். அங்கே வைத்து ட்ரீட்மென்ட் பார்த்தோம்.
அஜய் அண்ணா உடல் நிலை இன்னும் சரியாகவில்லை என்பதால் உங்களை ஹாஸ்ட்டல்ல சேர்த்துட்டு இங்க வந்துட்டோம் என விக்ரமை பார்த்தாள். அவன் தீயாய் அவளை எறித்தான்.
“சரி, கொலைக்கான பிளான் எதுக்கு போட்ட?” சுருதி கேட்டாள்.
நல்லவங்க யாரையும் இவங்கள மாதிரி ஆளுங்க சந்தோசமா இருக்கவே விட மாட்டேங்கிறங்க. அதான் செய்தேன் என்று கீர்த்தனா நிமிர்ந்து சொல்லி விட்டு, நான் லாயர் ஆகணும்ன்னு நினைச்சதே. இவனை மாதிரி ஆளுங்க சட்டத்தை எளிதாக உடைச்சிட்டு வர்றாங்க. அப்படி யாரும் வரக்கூடாது. சட்ட விதிமுறைகளை ஸ்ட்ராங் ஆக்கணும். அதுக்கு தான் நான் லாயருக்கு படிக்க ஆசைப்பட்டேன்.
கீது வாழ்க்கையை சீரழிச்ச பரதேசிங்க எல்லாரும் பணபலம் உள்ளவனுக. எளிதாக கேஸை திருப்பி விட்ருவானுக. என் கீது சொன்னது போல அந்த ராமை என் கையாலே கொன்னேன். அதற்கு அஜய் அண்ணாவும் அவங்க ப்ரெண்ட்ஸூம் உதவினாங்க. அதனால நானும் அவங்களுக்கு பிளான் போட்டுக் கொடுத்து உதவினேன்.
“ஓ! டீல் செய்து போட்ருக்கீங்களா?” ஷெட்டி புன்னகையுடன் கேட்க, அவனை கீர்த்தனா முறைத்து பார்த்தாள்.
“பவர்” என்று விக்ரம் அவள் கையை பிடித்து அவன் பின் அவளை நிற்க வைத்தான். ஷெட்டியோ பயங்கரமாக சிரித்தார்.
“இனி இந்த பொண்ணை மறைத்து என்ன செய்வது?” என்று விக்ரமை பார்த்தார்.
அலைபேசியை எடுத்த ஷெட்டி, “மாப்பிள்ள எங்க இருக்கீங்க? சீக்கிரம் வாங்க. பொண்ணு எவ்வளவு நேரம் காத்திருக்கும்?”
“மாப்பிள்ளையா?” யாருக்கு? வினித் கேட்க, என்னோட மகளுக்கு தான் என அவர் சொல்ல, அனைவரும் புரியாமல் அவரை பார்த்தனர்.
“திவ்யாவுக்கு எப்படி செய்ய முடியும் அஜய்? அதான் என் பொண்ணாக போறால்ல.. கீர்த்தனா. அவளுக்கு தான்”.
“வாட்?” விகாஸ் அதிர, அவள் என்னோட தங்கை. இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்கா..
“நான் எவனையும் கல்யாணமெல்லாம் பண்ண முடியாது” என கீர்த்தனா சினமுடன் சொல்ல, “நீயே வந்து செஞ்சுப்பம்மா பார்க்கிறாயா?”
“யாருடா அது?” ஷெட்டி சத்தம் கொடுத்தார்.
மனீஷா, சோட்டு கழுத்தில் கத்தியை வைத்திருந்தனர்.
“மன்னூ” ரோஹித் பதற, ராணியம்மாவோ “பொண்ணுங்க பாவம் உன்னை சும்மா விடாதுடா” சீறினார்.
பாவமெல்லாம் நமக்கு சாதாரணம்மா. என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். உங்க மருமகளும் பேரனும் வேணும்ன்னா கீர்த்தனா என்னோட மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணனும்.
“முடியாது. அவள் என்னை தான் காதலிக்கிறா” விகாஸ் சொல்ல, யாரும் இப்பொழுது காதலை பற்றி பேசவேயில்லை.
“டேய், எல்லாரையும் கீழிருக்கும் அந்த அறையில அடைச்சு போடுங்கடா” என்ற ரத்தன் பேச்சில் எல்லாரையும் இழுத்து சென்றனர்.
டேய்..டேய்..அவளோட அண்ணன்கள், அம்மா, அப்பா, காதலன் இருக்கட்டும். அவங்க இருந்தால் தான் மாப்பிள்ள தாலியை கட்டுவான்.
“என்னால முடியாது” என கீர்த்தனா மேலும் நகர, “மேம்” என்று ஒருவன் அழைக்க, அசந்த நேரம் விகாஸ் கழுத்தில் கத்தியை வைத்தனர். அனைவரும் பதற, “மத்தவங்கல இழுத்துட்டு போங்கடா” என கத்தினார்.
அஜய்யோ நகராமல் இருக்க, “என்ன திமிறா? அஜய் உன்னோட அம்மா சாகலை தெரியுமா? ஆனால் பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்க” என கெத்துடன் காலரை தூக்கி ரத்தன் ஷெட்டி அஜய்யை மிரட்ட, இரு கதவிலும் கையை வைத்து தடுத்து அறைக்குள் செல்லாமல் வினித் கதவில் தாளம் போட்டான்.
சினமுடன் ஷெட்டி அவனை பார்த்தார்.
அம்மாவை பாதுகாப்பாக நாங்க தூக்கிட்டோம். பாவம் டான் சாருக்கு அது கூட தெரியலை என படுநக்கலாக பேசினான். அவருக்கோ கோபம் வந்தது.
“அந்த பொண்ணையும் குட்டிப்பையனையும் போடுங்கடா” என்று மேலே பார்த்தார். மனீஷா கையை பிடித்தவாறு ரோஹித் சோட்டு தூக்கிக் கொண்டு மேலிருந்து அறைக்குள் நுழைந்தான்.
டேய், “அவனை பிடிங்கடா” கத்தினார்.
அய்யோ மாமு. உன்னால முடியாது..
“முடியாதா?” என கேட்டவர் துப்பாக்கியை எடுத்து யாரும் எதிர்பாராத நேரம் விகாஸ் காலில் சுட்டார்.
அனைவரும் கத்திக் கொண்டு முன்னே ஓடி வந்தனர். விகாஸ் கீழே விழுந்தான்.
ஓர் அடி யாராவது எடுத்து வச்சீங்க. அவனும் விக்ரமும் உயிரோட இருக்க மாட்டாங்க. சீக்கிரம் அடைச்சு வையுங்கடா.
கீர்த்தனா கையை பிடித்து ஷெட்டி, “எடுத்துட்டு வாங்க” என கத்தினார்.
தாம்பூலம் ஒன்றை கீர்த்தனா கையில் கொடுத்து “மாத்திட்டு வா” என அவன் சொல்ல, தாத்தா அதை தட்டி விட்டார். பெரியவர் என்றும் பாராமல் அவரை அடிக்க கையை ஓங்கினான் ஷெட்டி.
அவன் கையை தடுத்து, “வேண்டாம். நான் மாத்திட்டு வாரேன்” என “வேண்டாம் தாத்தா” என்று அவரை நகர்த்தி விட்டு அழுது கொண்டே கீழே விழுந்ததை எடுத்தாள்.
“கீர்த்து” விகாஸ் அழைக்க, அவனை பார்த்து கண்ணீருடன் “நோ” என தலையசைத்து விக்ரமை பார்த்தாள்.
“பவரை விட்ரு. வேற என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன் விக்ரம்” கண்ணீருடன் சொன்னான்.
“வேண்டாம் அண்ணா” என்ற கீர்த்தனா விகாஸை பார்த்துக் கொண்டே அறைப்பக்கம் செல்ல, எழ முடியாமல் எழுந்து அவளருகே சென்றான் விகாஸ். ஷெட்டி ஆள் விகாஸை அடிக்க, அவன் குடும்பமே பதறியது.
“மாமா” கீர்த்தனா விகாஸிடம் வந்து, “அவரை அடிக்காதீங்க” என்று அவர்களை தள்ளி விட்டாள்.
“கீர்த்து வேண்டாம்”. யாருக்கு என்ன ஆனாலும் அவன் சொல்பவனை நீ திருமணம் செய்யக் கூடாது.
மாமா..
“நான் உன்னை காதலிக்கிறேன் கீர்த்து. இதையெல்லாம் என்னால பார்க்க முடியாது” கண்கலங்கினான்.
கீர்த்தனா அவனை அணைத்து, “லவ் யூ மாமா” என சொல்ல, “கல்யாணத்தை வச்சுட்டு இவனை கட்டிப்பிடிக்கிற?” சீற்றமுடன் அவளிடம் வந்தான் ஷெட்டியின் அசிஸ்டென்ட்.
ஏய், “அவ என்னோட பொண்ணு. மரியாதையா பேசு” ஷெட்டி சொல்ல, “ஓ.கே பாஸ்” என்றான் அவன்.
“மாமா சாரி” கீர்த்தனா நகர, அவளை இழுத்து விகாஸ் இதழ்களில் முத்தமிட்டான். எல்லார் கவனமும் இவர்களிடம் இருக்க, துப்பாக்கியை எடுத்த சிம்மா மகிழனை பார்த்தான். மகிழன் லேசாக நழுவி மறைந்து கொண்டான்.
விகாஸ் குடும்பத்தினர் எல்லாவற்றையும் அறையின் சன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
சைலன்ஸ் துப்பாக்கியை எடுத்த சிம்மா சுட, வரிசையாக அனைவரும் விழுந்தனர். மகிழன் கும்பலாக அவர்கள் குடும்பத்தினர் அறையருகே காவலுக்கு இருந்தவர்களிடம் புகை ஒன்றை வெளிவிட்டான். அவர்கள் மயங்கி விழுந்தனர். மகிழன் குடும்பத்தினர்களுக்கு கதவை திறந்து விட்டு, “யாரும் இப்பொழுது வெளியே வர வேண்டாம்” என்றான்.
நொடிப்பொழுதில் அனைத்தும் நடந்து விட, ரத்தன் ஷெட்டி சீற்றமுடன் கத்தி விட்டு சிம்மாவை தாக்கினார். இருவருக்கும் சண்டை நடக்க, அஜய் விகாஸை அவன் குடும்பத்தினரிடம் விட்டு விக்ரமை அழைத்து துப்பாக்கியை அவனுக்கு கொடுத்திட்டு “டேய் மச்சான்” வினித்தை அழைத்தான்.
“வந்துட்டேன் டா” என அவன் நண்பர்களுடன் வெளியே வந்தான்.
வெளியேயிருந்து வந்த ஒருவன், “பாஸ் மாப்பிள்ள வந்துட்டார்” என சொல்ல, துப்பாக்கியை எடுத்து விக்ரம் சுடத் தொடங்க, அனைவரும் அங்கங்கு ஒளிந்து கொண்டனர். சிலர் மடிந்தனர்.
“விக்ரம் ஆட்கள் குறைவாக இருக்காங்க. இதான் நேரம்” என ஷெட்டியை அஜய் நேரடியாக இறங்கி தாக்க, தியா துடித்து போனாள்.
“அஜூ” அவள் வெளியே வர முனைய, நேகன் மேலிருந்து ஷெட்டி காலில் சுட, அவர் அசிஸ்டென்ட் அவனை தாக்க என அவர்கள் தாக்கிக் கொண்டிருக்க மாப்பிள்ளையானவன் வந்தான்.
“மச்சி, என்னடா நடக்குது?” பக்கம் இருந்தவனிடம் அவன் கேட்க, “புரியலடா..பொண்ணு பார்த்துருக்கேன்னு மாமா சொன்னாரு” என எல்லா பக்கமும் பார்த்தான் மஹேந்திர ஷெட்டி.
மஹா, “இந்த பொண்ணு பாரு” என கீர்த்தனாவை காட்டினான். அவளோ மேசையின் பின் மறைந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“துப்பாகியை லோட் பண்ணுடா” என அவளை பார்த்துக் கொண்டே கேட்டான்.
விகாஸிற்கு அங்கிருக்கும் பொருட்களை வைத்து தோட்டாவை வெளியே எடுத்து கட்டு போட்டுக் கொண்டிருந்தனர் திலீப், ரம்யா. அவர்களை சுற்றி மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
புதிதாக வந்தவர்கள் கையிலிருந்த தோட்டாவை பார்த்து சுவாதி பதட்டமாக. “கீர்த்து” என்று வெளியே அவளை நோக்கி ஓடினாள். வந்தவன் கார்த்திக்கை குறி வைக்க, குறி தப்பி..இடையே வந்த சுவாதி இடுப்பில் உரசி சென்றது.
இதை பார்த்த கீர்த்தனா, “அண்ணி” கத்திக் கொண்டே அவளிடம் ஓடி வந்தாள். அவள் சத்தம் கேட்டு அனைவரும் பார்த்து “சுவாதியிடம் வந்தனர்.
“அய்யோ, என்னோட பிள்ள” என விகாஸ் அம்மா கதறி அழுதார்.
“அண்ணா, இங்க வா” என மஹாவை வெறியுடன் பார்த்த கீர்த்தனா விக்ரமை பார்க்க, அவன் தோட்டா மஹேந்திரனிடம் செல்ல, அவன் விலகி தப்பினான்.
“பேபி” என்று சுவாதியிடம் வந்தவன். “ஒன்றுமில்லை” என அவளை தூக்க, அவள் அம்மா அவனை அடித்தார்.
“அம்மா” விகாஸ் கத்த, திலீப்பும் ரம்யாவும் நடுவீட்டில் கிடந்த சுவாதியிடம் ஓடி வந்தனர். விகாஸ் மெதுவாக எழுந்தான். விக்ரம் அவளை விடுங்க. யாரும் பக்கம் வராமல் பார்த்துக்கோங்க என கத்தினான் திலீப்.
விக்ரம் மஹேந்திரனை நோக்கி துப்பாக்கியை நீட்டி சுட, அவன் விலகி தப்பினான்.
கீழே கிடந்தவனின் துப்பாக்கியை எடுத்த கீர்த்தனா கொஞ்சமும் யோசிக்காது.. அவன் எதிர்பாராத நேரம் மஹேந்திரனையும் அவனுடன் வந்தவனையும் மாறி மாறி சுட்டாள். இருவரும் அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டே சரிந்தனர்.
அனைவரும் அதிர்ச்சியில் கீர்த்தனாவை பார்க்க, அவள் முடியை பிடித்து இழுத்த ரத்தன் ஷெட்டி அவளை சுவற்றில் முட்ட வைத்தார். கீர்த்தனாவிற்கு இரத்தம் கொட்ட தொடங்கியது.
“நான் உன்னை ஆப்சனாக மட்டும் தான் சிந்தித்தேன். இன்னும் என் ஆட்களை வர வைக்கிறேன் பாருடி” என அவளை மீண்டும் சுவற்றில் தள்ளினான். அவள் சுவற்றில் மோதி கீழே விழுந்தாள்.
“பவர்” என்று விக்ரம் கத்திக் கொண்டே அவளிடம் ஓடினான்.
அவ்வீட்டின் ஓரிடத்தில் மாட்டி இருந்த கூரான பெரிய கத்தியை விகாஸ் தூக்கி எறிய, நேராக அது ரத்தன் ஷெட்டியின் கையை வெட்டி வீழ்த்தியது. அவன் அலறிய அலறல் அவ்விடத்தை அடைத்தது.
அஜய்யோ, “எல்லாரும் அறைக்குள்ள போங்க” என அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தினான். தன் மாமனை பார்த்துக் கொண்டே மஹேந்திர ஷெட்டி உயிர் போனது.
ஷெட்டியின் அசிஸ்டென்ட் விகாஸை சுட, அவனை தள்ளி விட்டு ரோஹித்தும் கீழே விழுந்தான். கீர்த்தனா மயங்கி விட்டாள். சுவாதி வலியில் அழுது கொண்டிருந்தாள்.
ஷெட்டியின் அசிஸ்டென்ட் உடலில் பல தோட்டாக்கள் துளைத்து கீழே விழுந்தான்.
எல்லாரையும் உள்ளே அனுப்பி பாதுகாப்பிற்காக வெளியே நின்றனர் வினித் நண்பர்கள்.
“வீ உள்ள போ” அஜய் கத்தினான். அவன் செல்லவும், பெரியதான விசில் ஒன்றை சிம்மா அதிரடியாக எழுப்பினான்.
“கிங் வாடா உனக்கு நிறைய உணவு. வச்சி சாப்பிடு” என சொல்ல, தெரியாதவர்கள் விழித்தனர். நட்சத்திரா புரியாமல் தன் மகனை பார்த்தாள்.
“அர்சுவும் அப்பா இப்ப எதுக்கு என்னை கூப்பிடுறார்? வழிய விடுங்க” என சொல்ல, “உன்னை கூப்பிடலை மை டியர் மகனே!” என்ற மகிழன், “எங்க கிங் வருவான் பாரு” என சொல்ல, ஆர்வமாக அவனும் சோட்டுவும் பார்த்தனர்.
“ஏய், நான் யாருன்னு தெரியும்ல்ல?” நா வறண்டு உலறியது ரத்தன் ஷெட்டிக்கு..
“ஷெட்டி காரு” என அஜய் அவன் காலை தூக்கி கீழே வலியில் துடிக்கும் ஷெட்டியின் நெஞ்சில் வைத்து, உங்க ஆட்கள் எல்லாரும் போயிட்டானுக. அவங்க போன இடத்துக்கு போனீங்கன்னா உங்க அருமை மகள் திவ்யாவை பார்க்கலாம்..
பை..பை..அப்புறம்..இதே போல தான் நீ கொன்ன எல்லாருக்கும் வலிச்சிருக்கும். உங்க டான் பிரச்சனையில விஜயவாடால்ல எத்தனை சின்ன பிள்ளைகள், பொண்ணுங்க இறந்தாங்க..என்னோட, வினு, தியா குடும்பம்..இன்னும் எத்தனையோ குடும்பத்தை அழிச்சிருக்க..உன்னை அழிக்க வரான்டா..இப்ப தெரியும் உனக்கு எப்படி வலிக்கும்ன்னு..
பேப்..பேப்..என உரக்க கத்தினான் அஜய்..
“அஜூ” என தியா முன் வந்தாள். இவன் இப்ப சாகப் போறான். நீ கண்ணை திறந்து பாரு. உன் வாழ்க்கையை அழிக்க திவ்யா மட்டும் எண்ணவில்லை. எங்களை வைத்து அவனோட டான் என்ற கொடியை நம்ம சென்னையில நிலைநாட்ட நிரந்தரமாக விருப்பப்பட்டு தான் நம்ம வாழ்க்கைக்குள்ள வந்தான். காதம்பரி இவனோட துரும்பு சீட்டு மட்டும் தான். பாவம் அவளும் செத்துட்டா. இப்ப இவனும் போகப் போறான்
என்னோட அம்மா போல உன்னையும் கடத்தி கொடுமைப்படுத்த எண்ணினேன். இன்று அதை விட மோசமான கொடுமை நடக்கப் போகுது பாரு என சொல்லிக் கொண்டிருந்தான்.
உர் உர் உர்ரென்ற சத்தமுடன் கிங் வருவதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்தனர்.
ஹே..லையன்..லையன்..லையன்..அர்சலனும் சோட்டுவும் கத்துவதை பார்த்து, சுபிகண்ணனும் குதித்து கத்தினான்.
அங்கிருந்த சோபாவில் விக்ரம் கீர்த்தனாவை அமர வைத்தான்.
“அண்ணா, வேண்டாம் என்னால பார்க்க முடியாது” என அவள் முகத்தை விக்ரமின் முதுகின் பின் மறைத்தாள். நொண்டிக் கொண்டே வந்த விகாஸ் அவளருகே அமர்ந்தான்.
சிம்மா, விக்ரம், கீர்த்தனா, விகாஸ், அஜய், வினித், மகிழன் அமர்ந்திருக்க, சிம்மாவோ “போடா கிங்” என்று ரத்தன் ஷெட்டியிடம் கண்ணை காட்டினான்.
கிங்கை பராமரிப்பவர்களிடம் இறந்தவர்களை காட்டி அறைக்குள் அடைக்க சொல்லி கண்ணாலே சொல்ல, அவர்கள் அதை செய்தனர். “அஜய்யோ விடாதடா” எனக் கத்தினான்.
மயங்கியவர்களை விதார்த் சூட் செய்ய கிங் அவனை பார்க்க, அவனுக்கு சர்வமும் ஆடிப் போனது.
“கிங், உன்னோட வேலைய பாருடா” சிம்மா கர்ஜிக்க, “நானும் செய்வேன்” என்பது போல் சிங்கத்தின் கர்ஜனையில் அங்கிருந்த சிலர் பயந்து மயங்கினர்.
“டேய், இங்க பாருங்கடா” நேகன் அழைக்க, மனீஷாவிற்கு மூச்சே இல்லை.
ரம்யா அவளுக்கு சிகிச்சை அளிக்க, எழுந்தவள், “கனவா?” என உலறிவாறு எழுந்து சிங்கத்தை பார்த்து ஆவென கத்தினாள்.
“வாய மூடு மன்னூ. நீ கூப்பிடுவ போல?” ரோஹித் பயத்துடன் சொல்ல, அவனை பார்த்து..ரோஹித் இது கனவில்லை. “சிம்மா சார்..சிங்கத்தோட பேசுறாங்க”.
அன்னமோ, “இவன் உருப்புடாத அந்த பயலுகளோட தான் இன்னும் பேசிட்டு இருக்கான்னு பார்த்தா ஒரு படி மேல போய் சிங்கத்திடம் பேசுகிறான்”.
“அத்தை, பயமா இல்லையா? அது அவரை ஏதாவது செய்யும் முன் மாமாவை அழைச்சிட்டு வாங்க” நட்சத்திரா அன்னத்தை தள்ளினாள்.
“அடிப்பாவி, என்னை அநியாயமாக கொல்லப் பாக்குற?”
ரத்தன் ஷெட்டி சிங்கத்தை பார்த்து மிரண்டு போனார்.
அஜய், வேண்டாம்ன்னு சொல்லு. நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என அவர் கதறி ஓட, ஒரே பாய்ச்சலில் அவரை பிடித்து தாக்கியது.. அனைவரும் வெறும் கூடாகி போனார்கள்.
“தி கிரேட் டான் ரத்தன் ஷெட்டி” உயிர் மேலோகம் சென்று விட்டது.
“அண்ணா, டயர்டா இருக்கு” என விக்ரம் தோளில் சாய்ந்து கீர்த்தனா தூங்க..கொஞ்ச நேரம்டா வீட்டுக்கு போயிறலாம்.
ம்ம்..கண்ணை திறந்தாள். விகாஸ் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
விக்ரம் எழுந்து சுவாதியை பார்க்க சென்றான்.
“முதல்ல இங்கிருந்து கிளம்பணும்” விகாஸ் அம்மா விக்ரமை பார்த்தார். எல்லாரும் தங்களது குடும்பத்துடன் பேசினர். சற்று நேரத்தில் எல்லாரும் அவரவர் வேலையை கவனிக்க சென்றனர்.
விகாஸ் அம்மாவிடம் கீர்த்தனா சென்ற போது, “இன்றிரவு சாப்பிட இருவரும் நம்ம வீட்டுக்கு வாங்க” என்று சொல்ல, கீர்த்தனா கண்ணீருடன் அவரை பார்த்தாள்.
“எதுக்குடி அழுற? முதல்ல தலைக்கு சிகிச்சையை பாருங்க” என்று சொல்லி விகாஸை பார்த்தார்.
“தேங்க்ஸ் மாம்” என நொண்டிக் கொண்டே வந்து அவன் அம்மாவை அணைத்தான்.
“முடியாது. இப்பவே வீட்டுக்குள்ள வரக் கூடாது. என்னை அத்தை வீட்டுக்குள்ள யாருமே போக விடலை” ரம்யா விகாஸ் அம்மாவிடம் சண்டைக்கு வந்தாள்.
“அவ ஏற்கனவே வீட்டுக்கு வந்துட்டா. மறந்துட்டியா?” சுவாதி கேட்க, ரம்யா முகம் சுருங்கியது. அவள் தோளில் கையை போட்ட திலீப், “வா நம்ம வீட்டுக்கு போகலாம்” அழைத்தான்.
“உங்களுக்கு தான் வேலை இருக்குமே!”
“நாம ஹனிமூன் போகப் போறோம்” திலீப் சொல்ல, “அய்யோ நான் படிக்கணும்” என திலீப் அம்மா பின்னே சென்று நின்று கொண்டாள்.
“பச்சப்புள்ள மாதிரி நடிக்காத” விகாஸ் கேலி செய்ய அனைவரும் சிரித்தனர்.
அஜய் வீட்டிற்கு எல்லாரும் வரவும் அவர்களை வரவேற்றனர் தனராஜூன் இளவேணியும்.
ராணியம்மாவை பார்த்ததும் அஜய் அம்மா இளவேணி “சித்தி” என்று அணைத்துக் கொண்டார். அனைவரும் மகிழ்ந்தனர்.
“டாட்” என்று அஜய் தனராஜை அணைக்க, தியா இன்பஅதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்தாள்.
“மருமகளே வாங்க. என்னோட பேத்தியை கொடுங்க” என இளவேணி பேசவும். அத்தை உங்களுக்கு ஒன்றுமில்லையே!
இரு வாரம் முன்பே எங்கள் மகன் என்னை காப்பாற்றி சிகிச்சை கொடுத்ததால் என் உடல்நிலையும் தேறி இருக்கிறது என்று அவர் புன்னகைக்க, அவரை தியா கண்ணீருடன் அணைத்தாள்.
“பாப்பா எங்க?”
“முகி” கூட என சொல்ல, அவளோ அவளின் அம்மாவை கண்கலங்க பார்த்தாள்.
இப்படியே பார்த்தால் எப்படி என்ன அழகு குட்டிம்மா? போங்க..அம்மா கிட்ட போகலையா?” வினித் கேலியுடன் கேட்க, அவனை பார்த்து விட்டு, “மாமா..அம்மா” என அழுதாள்.
ம்ம். “போ” என ரதுவை அவன் தூக்கி வந்தான்.
அனைவரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
(இரு வருடங்களுக்கு பின்)
ஹாஸ்பிட்டலில் விக்ரமும் கார்த்திக்கும் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தனர்.
“உட்காருங்க மாப்பிள்ளை” என தனராஜூம், சேகர் தாத்தாவும் சொல்ல, அனைவரும் புன்னகைத்தனர்.
“டேய் பெரியவங்க சொல்றாங்கல்ல உட்காருடா” அன்னம் சொல்ல, அம்மா, “சும்மா இருங்க. நானே டென்சன்ல்ல இருக்கேன்”. ஆமா, நானும் எனக்கு பாப்பா வேணும் என ஆரனும் விக்ரமுடன் நடந்தான். எல்லாரும் சிரித்தனர்.
அப்சரா வயிற்றை பிடித்துக் கொண்டு, சின்சான் அறிமுக பாடலை பாட, அம்மாடி பாடாத..பையனும் அவனை போல வந்திருவான் ரகசியன் தந்தை சொல்ல, மாமா..பாட்டு பாடினால் உதைக்கிறான்.
“பாட்டு பாடும்மா. அந்த லூட்டி பையன் பாட்டு மட்டும் வேண்டாம்” என அவர் முகத்தை பாவமாக வைத்து சொல்ல, அனைவரும் புன்னகைத்தனர்.
“அண்ணா” என கீர்த்தனா விகாஸ், விக்ரம் கார்த்திக் நெற்றியில் விபூதி பூசி விட்டு, அண்ணிகளுக்கு ஏதும் ஆகாது.
“மாமா, ஸ்வீட் வாங்கிட்டேன்” என முக்தா உள்ளே வந்தான்.
“வினித் எங்கம்மா?” இளவேணி கேட்க, அண்ணாவும் மாமாவும் தேவியம்மாவை சமாளித்துக்கிட்டு இருக்காங்க..
தேவி. நம்ம முக்தாவின் பொண்ணு.
ரொம்ப நல்லது. நல்லா கவனிக்கட்டும்.
குழந்தை சத்தம் கேட்கவும் கார்த்திக் வேகமாக யுக்தாவிற்கு பிரசவம் நடக்கும் அறைக்கு வந்தான். அவன் கையில் செவிலியர் ஆண் குழந்தையை வைக்க, அவன் பெற்றோரும், சரியாக ராணியம்மா குடும்பத்துடன் வந்து விட்டார்.
விக்ரம் பதட்டமாக, “இருடா..
அம்மா..சுவாதி கஷ்டப்படுவா. நான் உள்ளே அவளுடன் இருக்கேன்னு சொன்னேன். என்னை வரக் கூடாதுன்னு சொல்லீட்டா..
ஆமா, அவ கத்துற கத்துல்ல நீ அழுதுட்டா. அதான் வர வேண்டாம்ன்னு சொல்லீட்டா..
அவன் கையிலும் பையனை கொடுத்து விட்டு செல்ல, அவன் குழந்தையை நட்சத்திராவிடம் கொடுத்து விட்டு சுவாதியை பார்க்க ஓடினான்.
“அவங்க மயக்கத்துல்ல இருக்காங்க சார்” செவிலியர் சொல்ல, சுவாதி கையை பிடித்து அவள் உள்ளங்கையில் முத்தமிட்டு மகிழ்ச்சியை காட்டினான்.
எல்லாரும் இருவருக்கும் வாழ்த்தை தெரிவித்தனர்.
கீர்த்துவை தனியே இழுத்து வந்த வீ, “இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்கணும்?” என அவளை சுவற்றில் சாய்க்கிறேன் என்று பக்கத்து அறைக்கதவில் சாய்த்து முத்தமிட வந்தான். கதவு திறந்து உள்ளே விழுந்தாள் கீர்த்தனா. அவன் முத்தமிடுவது போல வாயை வைத்திருக்க..
“யோவ், என்ன பண்றீங்க?” நோயாளி சத்தமிட, செவிலியர் அங்கு வந்து விகாஸ், கீர்த்தனாவை முறைக்க, “கீர்த்து..வா” என அவளை இழுத்து தனியே வந்தான். “யாரும் இருக்கிறார்களா?” அவன் சுற்றி பார்க்க, அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“லவ்லி டி” என அவள் கழுத்தில் அவன் முகம் புதைக்க, “மாமா..நாம வெளிய இருக்கோம்”.
“அதான் யாரும் இல்லைல்ல கீர்த்து” என மேலும் அவன் புதைய, “அடப்பாவிகளா? இது ஹாஸ்பிட்டல்” என்று தியா, ரசிகா, தமிழ், மிருளா.. மற்றவர்களும் வந்தனர்.
“ஹாஸ்பிட்டல்ல ரொமான்ஸ் பண்ணக் கூடாதுன்னு ரூல் இல்லைல்ல? ஏன்டா தொந்தரவு பண்றீங்க? விகாஸ் யாரோ?” என பேசி திரும்பியவன் அவன் அண்ணன்களை பார்த்து அசடு வழிந்தான்.
“துடச்சுக்கோ..வழியுது” ரம்யா சொல்லிக் கொண்டே கீர்த்தனா கையை பிடித்து, “வா கீர்த்து போகலாம்” என அழைத்து செல்ல, ஆவென அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படி பாக்குறத விட்டு அவளையும் விக்ரம் அண்ணாவையும் திருமணத்திற்கு சம்மதிக்க வை டா மச்சான் நேகன் குறும்பு சிரிப்புடன் சொல்லி விட்டு சென்றான்.
ரோஹித் மனீஷா டெல்லிக்கு சென்று ஒரு வருடமாகி விட்டது. எங்களுக்கு சோட்டு போதும் என குழந்தை வேண்டாம் என முடிவெடுத்து ஆப்ரேசன் செய்து கொண்டாள் மனீஷா. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சித்தி, முதல்ல வீக்கு கல்யாணம் பண்ணி வையுங்க.
ம்ம்..பண்ணிடலாமே மாப்பிள்ள என்ற அன்னம், “வீட்டுக்கு போயிட்டு கல்யாண தேதியை குறிக்கலாமா சம்மந்தி?” என்று விகாஸ் அம்மாவை கேட்டார். அவரும் ஒத்துக் கொள்ள அனைவரும் மகிழ்ந்தனர்
கீர்த்து, “நமக்கு திருமணம்” என வீ அவளை அணைக்க வந்தான்.
ரம்யா, சுருதி, மகிழன் இடையே வந்து நிற்க, அதான் முடிவு பண்ணீட்டாங்க.
எல்லாம் திருமணத்தின் பின் மகிழன் சொல்ல, “ஆமா..ஆமா.. எங்கள மாதிரி அப்புறம் ஜோடி போட்டு சுத்து மாமா” சுருதி சொல்ல, அவளை முறைத்தான்.
குழந்தையை கொஞ்சிய சுவாதி, விகாஸ் உள்ளே வரவும் வாழ்த்துக்கள் அண்ணா..
என்ன வாழ்த்து. அவளுடன் பேச கூடாதாம் என வருத்தமாக சொல்ல, உள்ளே வந்த கீர்த்தனா அவன் கன்னத்தில் மீண்டும் முத்தமிட, “என்னோட குழந்தையை கொஞ்சாம நீங்க கொஞ்சிட்டு இருக்கீங்க? போங்கடா” சுவாதி விரட்ட, “இனி இப்படி தான்” என விகாஸ் புன்னகையுடன் வெளியே வந்தான்.
“பாட்டி” ராணியம்மா கன்னத்தில் முத்தம் கொடுத்த அஜய் “நாங்க மறுபடியும் மாம், டாட் ஆகப் போறோம்” என ஆர்ப்பாட்டமாக கத்தினான்.
“அஜூ” தியா முறைக்க, அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி கூத்தாட, இனிதே நகர்க்கிறது அவர்களின் வாழ்க்கை பயணம்.
(முற்றும்)