காலை உதயன் சன்னலின் வழி புகுந்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த மனீஷாவை எழுப்பினார். அவள் கண்களை மூடியவாறு கைகளை விரித்து “மாஷா அல்லா” என சொல்லிக் கொண்டிருக்க அவள் உடல் பாரமாக இருந்தது.
கைகளை இறக்கி பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது. ரோஹித் அவளது இடுப்பில் கை போட்டு அவளை இழுத்து இறுக்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தான்.
அவனை விட்டு விலக எண்ணியவளுக்கு அவன் தலையில் இருந்த கட்டு நேற்று நடந்ததை நினைவுபடுத்தியது. “அவன் விழித்திருக்கிறானோ!” என எண்ணியவள் ஆள்காட்டி விரலால் அவனது கன்னத்தை மெதுவாக தொட்டாள். அவன் அசையவேயில்லை. ஆனால் சூடாக இருந்தது போல இருக்க அவன் நெற்றியை மெதுவாக தொட்டுப் பார்த்தாள்.
காய்ச்சல் அதிகமாக இருந்தது. பின் தான் அவன் கை இடுப்பில் இருப்பது நினைவில் வர, அவன் கையை மெதுவாக எடுக்க, அவன் அசைந்தான்.
இரு கைகளையும் வாயில் பொத்தியவாறு அவள் இருக்க, மெதுவாக அவன் விழித்து இருவரையும் பார்த்து பதறினான். “ஐ அம் சாரி” என அவன் எழுந்து காலை கீழே வைத்தான்.
“இருங்க” என அவள் அவன் கையை பிடிக்கும் முன் அவன் இறங்கினான். நேற்றைய மருந்தின் வீரியத்தில் தடுமாறியவன் கையை மனீஷா பிடிக்க, அவன் படுக்கையில் அவள் மீதே விழுந்தான். இருவர் இதழ்களும் உரசி செல்ல ரோஹித் மேலும் பதறினான்.
நான் தெரியாமல்.. என ஹிந்தியில் அவன் சொல்ல, அவள் புரியாமல் விழித்தாள்.
நம் நெருக்கத்தால் தான் விழிக்கிறாள் என எண்ணி அவன் மீண்டும் எழ முயற்சிக்க, அவனது முண்டாசு பனியனை இழுத்து “எழ வேண்டாம்” என அவனை திருப்பி படுக்கையில் தள்ளி அவள் எழும் போது ஆடை விலகி இருந்தது. ரோஹித் கண்கள் தானாக அவ்விடம் செல்ல, வேகமாக அவனை விட்டு விலகி ஆடையை சரி செய்தாள்.
எழாதீங்க என மனீஷா அவன் முன் சாதாரணமாக சொல்லி விட்டு, குளியலறை வந்து மூச்செடுத்து விட்டாள். பின் முகம் கழுவி துவாலையால் துடைத்து விட்டு வெளியே வந்து துணியை நீரில் அமிழ்த்தி பிழிந்து அதை ரோஹித் நெற்றியில் வைக்க வந்தாள்.
“என்னது?” அவன் கேட்க, உங்களுக்கு காய்ச்சலாக இருக்கு. இதை வைத்தால் ஜூரம் குறையும்.
அவன் அலைபேசியை பார்த்து, காய்ச்சல் நேரம் இதையெல்லாம் பயன்படுத்தக் கொள்ளாது. இதை கொடுங்க என்றாள்.
இல்ல..இல்ல..நான் தர மாட்டேன். இன்று எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. கம்பெனிக்கு போகணும் என அவன் சொல்ல, அவனருகே படுக்கையில் அமர்ந்து ஈரத்துணியை அவன் நெற்றியில் வைத்து விட்டு, அலைபேசியை பிடுங்க வந்தாள்.
“நான் தர மாட்டேன்” என அவன் முதுகின் பின் அலைபேசியை மறைத்தான்.
“தாங்க” என அவனை மனீஷா நெருங்க, “தள்ளியே இரு” என்றான் பட்டென.
அவளுக்கு கோபம் வந்து, “தர்றீங்களா? இல்லையா?” என புடவை முந்தானையை இடுப்பில் சொருகி கொஞ்சமும் யோசிக்காமல் படுக்கையில் ஏறி அவன் கையை பிடித்து இழுத்தாள். கையிலிருந்த லேசான அடியில் அவள் கை படவும் ரோஹித்திற்கு வலிக்க ஆவென கத்தினான்.
“என்னாச்சு? வலிக்குதா? சாரி..சாரி” என அவன் கையை இழுத்து கண்ணீருடன் ஊதி விட்டாள்.
“ஒன்றுமில்லை” என அவன் அவளிடமிருந்து கையை பிடுங்கினான். “கொஞ்சம் நேரம் அமைதியா தான் இருங்களேன்” என அவள் காயத்தை பார்க்க, மனீஷாவிற்கு குறுகுறுத்தது.
படுக்கையில் ஏறிய மனீஷா படுக்கையில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்திருந்த ரோஹித் மடியில் அமர்ந்திருந்தாள். இப்பொழுது தான் அவளே அவளை கவனித்தாள். ரோஹித் அவளையே ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பதட்டமாக அவள் எழ, ரோஹித் அவளை இழுத்து அணைத்தான். “ஐ அம் சாரி..என்னால உன்னோட செய்கையில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியல” என சொல்ல, அவனை தள்ளி விட்டு வேகமாக இறங்கி குளியலறைக்கு சென்று தாழிட்டு மனீஷா அழுதாள். அவள் அழும் சத்தம் கேட்கவும் ரோஹித்திற்கு மிகவும் கஷ்டமானது.
அவன் உடல்நிலையை உணர்ந்தவன் அலைபேசியில் யுக்தாவை அழைத்து வர வைத்திருந்தான். யுக்தா வரும் போது மனீஷாவும் வெளியே வந்தாள்.
“என்னடா கூப்பிட்ட?” யுக்தா ரோஹித்திடம் கேட்டுக் கொண்டே மனீஷாவை பார்த்தாள். யுக்தாவை அழைப்பான் என எண்ணாதவளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
இருவர் முகமும் சரியில்லாததை பார்த்த யுக்தா, ரோஹித்தை பார்க்க, “அக்கா, காய்ச்சலா இருக்கு. டாக்டரை வரச் சொல்லேன்” என சொல்லி விட்டு படுத்துக் கொண்டான்.
மனீஷா ரோஹித்தை பார்த்துக் கொண்டு நிற்க, அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி யுக்தா வெளியே சென்றாள். அவள் செல்லவும் மனீஷா ரோஹித் முன் வந்து, “அவங்கள எதுக்கு கூப்பிட்டீங்க? நான் தான் பார்த்துப்பேன்ல்ல”.
வேண்டாம். அவ டாக்டரை வரச் சொல்லீருவா. நானே பார்த்துக்கிறேன். நீ என் பக்கத்துல வராமல் இருப்பதே நல்லது.
இல்ல, “இனி நான் போகமாட்டேன்” மனீஷா பாவமாக சொல்ல, ரோஹித் எழுந்து அமர்ந்தான்.
இங்க பாரு மனூ. நான் பொம்மை இல்லை சாதாரண மனுசன் தான். என்னால என் உணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்கணும்ன்னா நீ என் பக்கம் வர வேண்டாம்.
அவன் சொல்லவும் அவள் கண்ணீருடன் நின்றாள்.
பெருமூச்சுடன் சாதாரணமாக பெண்களோட நான் பழகுவது வழக்கம் தான். ஆனால் நீ என் மனைவி என்பதை விட உன்னை நான் முதலாக பார்த்த நொடியிலே உன்னை எனக்கு பிடிச்சது. வாய்ப்பை பயன்படுத்தி உன் கழுத்துல்ல இந்த தாலியை நான் கட்டலை. நாம் எந்த நிலையில் திருமணம் செய்தோம்ன்னு உனக்கே தெரியும்.
எனக்கு பிடிச்ச பொண்ணு சாகக் கூடாதுன்னு தான் தாலி கட்டினேன். அதுவும் என் ராணியம்மா சம்மதத்துடன்.
உன்னோட நிலைமையும் புரியுது. பள்ளியிலிருந்து காதலித்த ஒருவன் திருமணம் செய்யும் நேரம்..என ரோஹித் நிறுத்தி அவளை பார்த்தான்.
மனீஷா அழத் தொடங்கினாள்.
நான் சொல்லி முடிக்கணும்..ப்ளீஸ் என்றான்.
நீ இப்பொழுதும் அவரை தான் காதலிக்கிறன்னு எனக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது நாம நெருக்கமாக பழக வேண்டாம். அது சரியாக இருக்காது. என்னை பிடிக்காத பொண்ணை நான் வற்புறுத்த எனக்கு பிடிக்கலை. அதே போல் நீ அருகே இருந்தால் என்னால் அமைதியாக உன்னை வேடிக்கை பார்க்க முடியாது. அதனால எனக்கான தேவைகளை நீ செய்ய வேண்டாம். உன் மனசுல எனக்கான இடம் இருந்தால் பார்க்கலாம்.
நீங்க வேணும்ன்னா..என மனீஷா சொல்ல வருவதை புரிந்த ரோஹித்திற்கு கோபம் வந்து விட்டது.
நான் உடம்புக்கு அலைபவன் இல்லை. நீ உன்னோட வேலையை மட்டும் பாரு என கோபமாக பேச, அவனுக்கு தலை “வின்னு வின்னு” என தெறித்தது. அவன் தலையை பிடித்து அமர, அனீச்சையாக மனீஷா கால்கள் அவனருகே ஓடியது.
அவன் கைகளை உயர்த்தி அவளை அருகே வர விடாமல் தடுத்து,” டாக்டரை மட்டும் சீக்கிரம் வரச் சொல்லு” என மீண்டும் தலையை பிடித்தவாறு கண்களை மூடி அமர்ந்தான்.
மனீஷா அழுது கொண்டே வெளியே வந்தாள்.
தியாவும் அஜய்யும் பாப்பாவுடன் அவர்கள் அறையிலிருந்து வந்தவர்கள் இவள் அழுவதை பார்த்து, என்னவென்று கேட்டனர். அவள் தலைவலி, காய்ச்சலை பற்றி மட்டும் சொல்லி அவன் மருத்துவரை வரச் சொல்வதாக சொன்னாள்.
அஜய்யும் தியாவும் ரோஹித் அறைக்குள் வந்தனர். அவன் வலியில் பல்லை கடித்துக் கொண்டு முகத்தில் வலியை காட்ட மறைத்து முடியாமல் காட்டி விட்டான். மனூ அழ, “ஹே செட் அப்” என கத்தினான் அவன்.
ரோஹித்..என அஜய் அழைக்கவும் தான் அவர்களை பார்த்தான்.
அண்ணா..என்று அஜய்யை பார்த்தான்.
ரொம்ப பெயினா இருக்காடா. இப்ப டாக்டர் வந்துருவார் என அஜய் அவனருகே அமர்ந்தான்.
அண்ணா, “எமிலி எப்படி இருக்காங்க?”
அவளுக்கு ரொம்ப அடி பலம் தான். வேலா அங்க இருக்கான்.
அவங்க உடன் வந்தாதல தான் நான் தப்பித்தேன். கிரிட்டிகல் இல்லைல்லண்ணா?
இல்லை..வலி அதிகமா தான் இருக்கு.
அண்ணா, “எல்லாரும் வெளிய இருங்களேன்” என ரோஹித் சொல்ல, ராணியம்மாவும் வீட்டிலிருந்த மற்றவர்களும் வந்தனர்.
எல்லாரும் அவனை விசாரித்தனர். சோட்டு அவனது படுக்கையில் ஏறி அமர்ந்தான்.
“நான் தனியே இருக்கணும்” என ரோஹித் சொல்ல, அனைவரும் வெளியேறினார்கள்.
“மாமா நான் போக மாட்டேன்” என சோட்டு சொல்ல, மனீஷாவும் போகாமல் நின்று கொண்டிருந்தாள். ராணியம்மா ரோஹித் அருகே அமர்ந்து, அவன் கையை பிடித்து, நான் சொல்லும் போதே எல்லாவற்றையும் கற்றிருந்தால் இப்பொழுது பயனாக இருந்திருக்கும் என்றார்.
ஆமா பாட்டி, பொறுப்பே இல்லாம இருந்துட்டேன்ல்ல. அண்ணாக்கள் சொல்ற மாதிரி நான் யாருக்கும் தேவைப்பட மாட்டேன்ல்ல. நான் பிறந்ததே வேஸ்ட்ல்ல என சொல்ல, ராணியம்மாவோ “என்ன பேசுற ரோஹித்?” என திட்டினார்.
சோட்டு ரோஹித்தை முறைக்க, மனீஷா திகைப்புடன் அவனை பார்த்தாள்.
“சோட்டு வெளிய இரு. பாட்டி வாரேன்” என ராணியம்மா சொல்ல, வெளியே நின்று கொண்டிருந்தவர்களும் ரோஹித்தின் வார்த்தையில் பேச்சிழந்து போயினர்.
சோட்டு வெளியே வர, அவனை அவள் அழைத்து செல்ல, அத்தை..இரு என தியா அருகே ஓடிச் சென்று நின்று கொண்டான்.
“உங்களுக்குள்ள பிரச்சனையா?” ராணியம்மா கேட்க, “இல்லை” என்றான் ரோஹித். ஆனால் மனீஷாவிடம் பதிலில்லை. அவளை பார்த்து விட்டு ராணியம்மா கேள்வியுடன் தன் பேரனை பார்த்தார்.
அவனோ..பாட்டி..ஏற்கனவே வலிக்குது. என்கொயரி பண்ற நேரமா இது? என கடுப்பாக கேட்டான்.
நான் எதுவும் கேட்கலை. நான் சொல்றதை நீங்க கேளுங்க. இருவருக்குமே திருமணம் பிடிக்காமல் நடத்திருக்கலாம். ஆனால் இனி நீங்க தான் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழணும்.
ரோஹித், நான் சொல்லி நீ மனீஷா கழுத்துல்ல தாலி கட்டியிருந்தாலும் அவள் தான் இனி உன்னோட பொண்டாட்டி.
அம்மாடி, உனக்கு அந்த பையனை தான் பிடிச்சிருக்குன்னு புரியுது. ஆனால் அவனுக்கு உன்னோட வாழ குடுத்து வைக்கலை. அதுக்கு என்னம்மா பண்றது? இனி இது தான் வாழ்க்கை. நீ புத்திசாலி பொண்ணுன்னு நினைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோம்மா..
காதல் தான் வாழ்க்கையாகாதும்மா. வாழ்க்கையில நமக்கு நமக்காக நம்முடன் யார் இருக்காங்களோ அவங்கள ஏத்துக்கப் பாரும்மா. ரோஹித் உனக்கு பிடிக்காதவாறு நடந்து கொண்டாளோ, மிரட்டினான்னா என்னிடம் சொல்லு. அவனை நான் பார்த்துக்கிறேன்.
ஆமா, எனக்கு வேலையில்லை பாரு. “இவளை மிரட்டி எனக்கு என்ன ஆகப் போகுது? பாட்டி உங்க உபதேசத்தை அப்புறம் வச்சுக்கோங்க” என கத்தினான்.
சரிப்பா..நீ படுத்துக்கோ என ராணியம்மா மனீஷாவிடம் பார்த்துக்கோம்மா.. டாக்டர் வந்துருவாங்க என நகர்ந்தார். அனைவரும் கீழே சென்று விட்டனர்.
மனீஷா மெதுவாக ரோஹித் அருகே செல்ல, அவன் அவளை முறைத்து பார்த்தான்.
முறைச்சீங்கன்னா பாட்டிட்ட சொல்லீடுவேன்.
சொல்லு..நானும் சொல்கிறேன் என இருவரும் சிறு பிள்ளையாக சண்டை போட, ஷ் ஆ..என தலையை பிடித்தான் அவன்.
நான் பிடிச்சா விட மாட்டேன். உன்னால வலி தாங்க முடியாது.
பரவாயில்லை.
“எதுக்கு இந்த அக்கறை? நீ என் பக்கம் வராத” என கோபமாக பல்லை கடித்தான். அவள் அழுது கொண்டே வலிக்குதுன்னு தான பிடிச்சிக்க சொன்னேன்.
தேவையில்லை. வலியில நான் செத்தாலும் நீ கவலைப்பட வேண்டாம் அவன் சொல்லவும் அவள் அழுகை அதிகமானது.
“ப்ளீஸ்..இப்படி மட்டும் பேசாதீங்க” என மனீஷா அழ, காதல் கொண்ட மன்னவனுக்கோ இருக்கும் வலியில் இதுவும் சேர்ந்து கொண்டது.
டாக்டர் வந்து விட இருவரும் அமைதியானார்கள். மனீஷா பதட்டமாக டாக்டரை பார்த்தாள்.
ஸ்கேன் எடுக்கணும்மா. முதல்ல ஜூரம் குறையட்டும். ஜூரம் சரியாகவும் ஹாஸ்பிட்டல் வாங்க பார்க்கலாம். தலைவலி இல்லாமல் இருக்க ஊசி போட்டு மருந்தை எழுதி மனீஷா கையில் கொடுத்தார்.
ரோஹித் தூங்கத் தொடங்கினான்.
“டாக்டர் தலையில காயம் ரொம்ப அதிகமில்லைன்னு தான சொன்னீங்க. வலியில துடிச்சு போயிட்டாரே! ஏதும் பிரச்சனையாக இருக்குமா?” பயத்துடன் மனீஷா கேட்க, அனைவரும் அவளை பார்த்தனர்.
இல்லம்மா, பெரிய பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன். மருந்தை சரியாக கொடுங்க. முதல்ல அவரு காய்ச்சலை குறைச்சிட்டு சீக்கிரம் ஹாஸ்பிட்டல் வாங்க. மீண்டும் தலையில் வலி வந்தால் யோசிக்க வேண்டாம் அஜய். உடனே ஹாஸ்பிட்டலில் சேர்க்கணும்.
“ஓ.கே சார்” என அஜய் அவரை அழைத்து சென்றான்.
ராணியம்மா ரோஹித் அருகே வந்து படுக்கையில் அமர்ந்து அவனது தலைமுடியை கோதினார்.
கீழே சத்தம் கேட்டு அனைவரும் மேலிருந்து எட்டிப் பார்த்தனர். கார்த்திக் அஜய்யை அடித்துக் கொண்டிருந்தான். பதறி அனைவரும் கீழே வந்தனர்.
அவன் செஞ்ச வேலைக்கு…என கார்த்திக் பல்லை கடித்தான்.
“என்ன செஞ்சான்?” வினித் அஜய்யை பார்க்க, அவன் ஏதும் பேசவில்லை.
சொல்லுடா? நேற்று இரவு எங்க போன? கார்த்திக் அஜய் சட்டையை பிடித்தான்.
நான் போனது இருக்கட்டும். “நீ எங்க போன?” அஜய் கேலி குரலில் கார்த்திக்கை கேட்க, அவன் கண்கள் யுக்தாவை பார்த்தது. அனைவரும் இருவரையும் பார்த்தனர்.
பேச்ச மாத்தாத அஜய். சொல்லு? இது உன்னோடது தான? என அஜய்- தியா கப்புல் செயினை காட்டி கேட்டான் கார்த்திக்.
அஜய் அமைதியாக நிற்க, தியா அதை பார்த்து..அஜய் சட்டையை விலக்கி பார்த்து..அஜூது தான். “அதுக்கென்ன இப்ப? உன்னிடம் எப்படி வந்தது?” என கேட்டாள்.
அம்மு, “டிவியை ஆன் பண்ணு” என கார்த்திக் கத்தினான்.
அவள் ஆன் செய்ய அதில் மினிஸ்டர் இறந்த செய்தியை அனைவரும் பார்க்க, தியா திகைப்புடன் இறந்த மினிஸ்டரை பார்த்து. வினு..இவன் தான் என அவனிடம் சென்று அவன் கையை பிடித்துக் கொண்டே டிவியை பார்த்தான். அஜய்யின் பார்வை முழுவதும் தியா மீதே இருந்தது.
மினிஸ்டரை கொடூரமாக யாரோ கொலை செய்திருக்கிறார்கள். சிறைக்கே வந்து கொலை செய்யும் துணிவு யாருக்கு உண்டு? முகமூடி அணிந்த மனிதன். வேறெதுவும் அவனை பற்றி தெரியவில்லை. அவன் வந்ததை காவலர் ஒருவர் மட்டும் பார்த்திருக்கிறார். முகமூடி அணிந்ததால் யாரென தெரியவில்லை என தெரிவித்து உள்ளார்.
“அஜய்” வினித் அழைக்க, அவன் அமைதியாக நடக்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.
நில்லு அஜய். இந்த கேஸ் எங்க ஆபிஸிக்கு தான் வந்திருக்கு. சந்தோஷூம் நானும் தான் விசாரிக்கிறோம். செயின் கொலை நடந்த இடத்தில் கிடந்தது. எனக்கு உன்னோட செயின் என்று நன்றாக தெரியும் என்று அஜய் முன் வந்து விதார்த் தான் சொன்னான்.
“எதுக்கு இப்படி பண்ண?” கார்த்திக் கோபமாக கேட்டான்.
அஜூ, “இவன் என்ன சொல்றான்? நீ..நீங்க” என தியா கண்கலங்க, கைகள் நடுங்கியது அவளுக்கு.
அஜய் அவளருகே வந்து அவளது கையை இறுக பற்றினான். வேகமாக அறைக்கு அவன் செல்ல, விதார்த்தும் அங்கே வந்தான்.
அஜய் சார்..”ஒரு நிமிடம்” என்ற விதார்த்தின் குரலில் தியா நிற்க, அஜய்யும் நின்றான்.
அந்த மினிஸ்டர் மோசமானவன் தான். அவன் உங்க மனைவியிடம் மட்டுமல்ல நிறைய தவறு செய்திருக்கான். இதுவரை அவனை யாராலும் அசைக்க முடியல. ஆனால் சிம்மா சார் அவனை எளிதாக உள்ளே போக செய்து விட்டார்.
அவனை பற்றி நீங்க விசாரிக்கவும் நான் ஏதோ பிரச்சனைன்னு தான் நினைச்சேன். ஆனால் கொலையா செய்வீங்க?
அஜய் தியா கையை விட்டு அறைக்கு சென்று பைல் ஒன்றை எடுத்து அனைவர் முன்னும் தூக்கி எறிந்தான்.
கார்த்திக், நீங்க தான் பெரிய டிடெக்டிவாச்சே..இந்தாளு மட்டுமல்ல அவர் மகனும் பல பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிச்சிருக்கான். குடும்பத்தோட கொலையே செஞ்சிருக்கான். இது படிப்பு சம்பந்தப்பட்ட விசயமல்ல..அவன் எதுக்கு தலையிடணும்? போதை மருந்து, கஞ்சா எல்லாமே ஏற்றுமதி பண்றான். நம்பர் ஒன் கிரிமினல் இவன் தான். அவன் கோர்ட்டுக்கு பயப்படுவது போல் நடிச்சிருக்கான்..
விதார்த்..இந்த கேஸ்ஸை விட முக்கியமான ஒன்று இருக்கு. சிம்மா பதிவிட்டது தான் வீடியோன்னு உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன். அவன் அந்த வீடியோவில் சொன்ன எல்லாமே உண்மை தான். அவனை திசை திருப்ப தான் நான் அவன் அப்பனை கொன்னேன்.
சிம்மா சொன்ன சுரேகா குடும்பத்தையும், ரம்யாவையும் முடிந்தால் காப்பாற்ற பாருங்க. ஏன்னா அவன் வச்ச குறி முதலில் சுரேகா தான். நான் சிம்மாவிடம் சொல்ல தான் நேற்று இரவு கால் பண்ணேன். அவன் எடுக்கலை. அதான் இதை வைத்து அவனை மாற்றினேன். இப்ப அந்த குடும்பம் நல்லா இருக்காங்க. இன்றே கூட அவன் கொல்ல வாய்ப்பிருக்கு.
ம்ம்..நானும் கேள்விப்பட்டேன் என விதார்த் சொல்ல, அஜய்..விக்ரம் ஒரு ஆசிரமக் குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருந்தார்ல்ல. அந்த ஆசிரமத்தை கூட எறிச்சுட்டானுக. யாரும் தப்பலை. ஒரு பொண்ணு மட்டும் தப்பியதாக சொன்னாங்களே! விக்ரம் கூட தங்கைன்னு ஒரு முறை என்னிடம் சொல்லி இருக்கார். அந்த பொண்ணை நேற்று யாரோ கொன்றுக்காங்க.
கர்னல் சேகர் சார் கடைசி பேரனும் அந்த பொண்ணும் காதலிச்சாங்க. அந்த பொண்ணு பாரின் போனான்னு சொன்னாங்களே! உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்..பேரு ஏதோ சொன்னாங்கடா கார்த்திக் சிந்திக்க, கீர்த்தனா என தியா கண்கலங்க கூறினாள்.
“என்னடா சொல்ற?” அஜய் பதட்டமாக கேட்டான்.
ஆமாடா, விக்ரம் உடைஞ்சு போயிட்டாரு. அந்த பொண்ணு கொலைக்கேஸை யாரும் பார்க்க வேண்டாம்ன்னு சொன்னாரு. ஆனால் விக்ரமின் வளர்ப்பு தந்தை டி.ஐ.ஜி சதாசிவம் தான் இதை எடுக்க சொல்லி சீனியர் ஆபிசர் பாஸ்கரிடம் ஒப்படைச்சுடாரு.
அஜய், “என்னை பற்றி உனக்கு தெரியும்ல்ல?” என்ற கார்த்திக், “மினிஸ்டர் கொலையை என்ன செய்வது? இப்பவே என்னால உன்னை அரெஸ்ட் பண்ண உத்திரவு பிறப்பிக்க முடியும். தெரியும்ல்ல?” கார்த்திக் கோபமாக கேட்டான்.
“உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோடா” என்ற வினித் “நானும் வாரேன்” என சொல்ல, தியா, யுக்தா, முக்தா கார்த்திக்கிடம் சென்றனர்.
கார்த்திக், அவர் இனி இது போல செய்ய மாட்டார் என தியா பயத்துடன் அவனிடம் கேட்க, அஜய் கோபமாக பேப்…நான் தப்பு செய்யலை. நான் சொல்ல வேண்டியதை சொல்லீட்டேன். அந்த பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உங்க முடிவு.
“அது எப்படி அஜய் தப்பில்லைன்னு சொல்ற?” ராகவீரன் சீற்றமுடன் கேட்டார்,
அங்கிள்..இவன் மட்டுமல்ல.. நிறைய பேர் இப்படி வெளிய நல்லவனுகளா தெரியுறானுக. எவ்வளவு திமிரு இருந்தால் என் பேப்பை தொட பார்த்திருப்பான். “விதார்த் மட்டும் அன்று வரலைன்னா என்ன ஆகி இருக்கும்? என்னோட பேப் என் முன் இப்ப வந்திருக்க மாட்டா” என அஜய் சொன்னான்.
அஜூ..என தியா பார்க்க, எஸ் பேப்..அன்று உன்னை அவனிடமிருந்து காப்பாற்றி ஒரு பொண்ணு மூலமாக தான் உன்னை ஹாஸ்ட்டலில் சேர்த்திருக்கான். அந்த பொண்ணு தான் டெல்லிக்கு உன்னை தனியே அக்கா..என கூறி அழைச்சிட்டு வந்து பக்கமிருந்து போதையிலிருந்து உன்னை விடுவித்து.. ஹாஸ்ட்டலில் சேர்த்து விட்ருக்கு.
“ரொம்ப தேங்க்ஸ் சார்” என தியா விதார்த்திடம் கூற, நான் அவனிடமிருந்து மட்டும் தான் உங்களை காப்பாற்றினேன். அஜய் சார் மனைவி நீங்கன்னு எனக்கு அப்போ தெரியல.
அந்த பொண்ணை பார்த்தால் தவறாக எனக்கு எதுவும் தெரியல. ஒப்படைச்சிட்டு போயிட்டேன். அடுத்து விக்ரம் சாருடன் வந்த அன்று தான் உங்களை பார்த்தேன். விசயத்தை எல்லார் முன்னும் சொல்ல வேண்டாம் என்று தான் அமைதியாக சென்று விட்டேன்.
“யார் அந்த பொண்ணு?” தியா கேட்க, “தெரியாது” என்றான் விதார்த்.
“நமக்கு தெரிந்த பொண்ணாக இருக்குமோ?” என அனைவரும் சிந்தித்தனர்.
“நானும் வாரேன்” என்று தியா அஜய்யிடம் சென்றாள்.
நோ பேப்..நம்ம பக்கம் மட்டுமல்ல..அவங்க குடும்பம்..விஜய், கரண், கார்த்திக் எல்லார் குடும்பத்தையும் போட தான் ஆள் நேற்று வந்திருக்காங்க. நீ அவங்கள இப்ப பார்க்க வேண்டாம். எல்லா பிரச்சனையும் முடியட்டும். அப்புறம் பார்க்கலாம் என்றான் அஜய்.
என்னோட கேஸ்? கார்த்திக் கேட்க, சீனியர் அந்த கேஸ்ஸை முடிக்கும் வழியை நான் சொல்கிறேன் என விதார்த் அஜய் தூக்கி எறிந்த அனைத்தையும் பைல்லில் வைத்து, இதை நான் எடுத்துக்கிறேன். அந்த குடும்பத்துக்கு நான் பொறுப்பு என சொன்னான்.
கிரேட் என அஜய் சொல்ல, கார்த்திக் அஜய்யை முறைத்தான்.
முறைச்சது போதும். நாம விக்ரம் சிம்மாவை பார்த்து வரலாம் என அவர்கள் கிளம்பினார்கள். தியாவோ அழ ஆரம்பித்தாள்.
எல்லாமே என்னால் தான். என்னால தான் அஜூ கொலைகாரனாகிட்டார். அவ சின்னப் பொண்ணு முகி. அவள பார்த்ததுமே எனக்கு உன்னை பார்த்த நினைவு வந்தது. இப்ப அவளை கொன்றுட்டாங்க. “அவ என்ன செஞ்சா? ஏன் எல்லாரும் மிருகமா இருக்காங்க?” என அழுதாள் தியா.
ரோஹித் அறைக்கு வெளியே இருந்து மனீஷா இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். ராணியம்மாவோ அமைதியாக அமர்ந்திருந்தார்.
“பாட்டி” என யுக்தா அவரிடம் வந்தாள்.
இந்த உலகம் இதை விட மோசமானது. அஜய் செய்தது தவறில்லை. இந்த சட்டத்தால் ஓரளவிற்கு மேல் தண்டனை அழிக்க முடியாது. நல்ல எண்ணமுடையவர்கள் செய்யலாம். ஆனால் உலகம் முழுவதும் சடலாகிடும்மா என அவளை பார்க்க, அவள் அவரை அணைத்துக் கொண்டாள்.
தியா முக்தாவின் மடியில் படுக்க, சோட்டு அவள் தோளில் சாய்ந்து கொண்டான். ரதுவை ராகவீரன் வைத்திருந்தார். மனீஷா ரோஹித்தை பார்த்தவாரே சோபாவில் சாய்ந்து படுத்திருந்தாள்.
கர்னல் சேகர் தாத்தாவின் வீட்டில் கீர்த்தனாவின் உடலை வைத்திருந்தனர்.
காலை விடியல் பிறக்க, கீர்த்தனாவிற்கான காரியச் சடங்குகள் தொடங்கி இருந்தனர். விகாஸ் அவளை விட்டு நகரவேயில்லை. மனமுடைந்து அமர்ந்திருந்தான் அவளை பார்த்துக் கொண்டே. விக்ரம் அண்ணனாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.
கீர்த்தனாவின் சடலத்தை எடுக்கும் சமயம் விகாஸ் வெளியே ஓடினான். மலர்களை பறித்து மலர்க்கீரிடம் செய்து, பப்ளிம்மா..நீ கேட்டதை கொடுத்தால் வந்திருவேல்ல என மலர்க்கிரீடத்தை அவள் தலையில் வைத்து, வா பப்ளிம்மா..மாமாகிட்ட வந்துரு என கதறி அழுதான். அனைவரும் கண்ணீருடன் அவனை பார்த்தனர்.
அவனை இழுத்துக் கொண்டு அனைவரும் கீர்த்துவை பிணமாக கொண்டு சென்று எறித்தனர். விகாஸ் அழுது கொண்டே இருக்க, விக்ரமோ அலறி துடித்தான். சிம்மா அவனை அணைத்து அழுதான்.
எல்லாம் முடிந்து ஆண்கள் வீட்டிற்கு வந்தனர்.
அந்நேரம் “விக்ரம்” என்று கத்தியவாறு பொண்ணொருத்தி வந்தாள்.
கண்ணீருடன் நிமிர்ந்த விக்ரம், “இவ இங்க எதுக்கு வந்தா?” என கோபமாக அவளை பார்த்தான். அவள் மானசா. அவள் பின்னே வந்தவர்கள் அவளை நெருங்கி அவளது முடியை பிடித்து இழுத்தனர்.
விக்ரம், “இந்த பொண்ணு” என சிம்மா விக்ரமை பார்த்தான்.
ஏய்..என விக்ரம் சத்தமிட, அவர்கள் அவளை பிடித்து வேகமாக தள்ளினார்கள். போஸ்ட் கம்பத்தில் அவள் முட்டி நின்று அதிர்ந்தவாறு பேசாமல் கையை நீட்டினாள் அடியாட்கள் பக்கம்.
எல்லாரும் அவளை பார்த்து விட்டு, அவள் காட்டியை திசையை பார்க்க, ஆட்டோவிலிருந்து அந்த பொண்ணை நோக்கி அவளை போல் இன்னொருத்தி வந்தாள்.
அடியாட்கள் அவளை பிடித்து அவள் கழுத்தில் கத்தியை வைத்தனர்.
“அவள எதும் செஞ்சுறாதீங்க” விக்ரம் கத்தினான். ஆனால் யாரும் கேட்கவில்லை. அவளது கழுத்தை கத்தியால் கோடிழுத்து விட்டு நிமிடத்தில் ஓடி விட்டனர்.
“அக்கா” என மானசா கத்திக் கொண்டே எழுந்தாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள் இதை பார்த்து திகைத்து நின்றனர். ரம்யாவோ விரல்களை நீட்டி இரு பொண்ணுங்களையும் பார்த்து..”மோனூ” என கழுத்தரு பட்டு கிடந்த பொண்ணிடம் ஓடினாள்.
“மோனூவா? யாரு”? ராஜா திலீப்பிடம் கேட்க, “தெரியவில்லை” என அவன் தலையசைத்து அவள் பின் சென்றான்.
சிம்மாவும் விக்ரமும் அந்த பெண்ணிடம் ஓடினார்கள்.
அக்கா..ஒன்றுமில்லை..வா..என மானசா சொல்ல, மோனிஷாவால் பேச முடியவில்லை.
ரம்யாவை பார்த்த மோனிசா..ர..என்று ரம்யா பெயரை சொல்ல முடியாமல் மானசா கையை பிடித்து விக்ரம், ரம்யா கையில் கொடுத்து விட்டு.. கையால் இதயத்தை கை காட்டி ஏதோ சொல்ல வந்து முடியாமல் இறந்து விட்டாள்.
“மோனூ” என ரம்யா அழ..மானசாவோ “அக்கா வா” என அவளது கையை பிடித்து இழுத்தாள்.
“நீ அவ தங்கையா?” என ரம்யா அழுது கொண்டே கேட்க, ம்ம்..என மோனூவை முறைத்தவள் விக்ரமிடம் கோபமாக திரும்பினாள்.
“உன்னால யாரையும் பார்த்துக்க முடியாதா?” இவள கடத்திட்டானுக. உன்னோட குடும்பத்தை மட்டும் யாரும் உள்ள வராம பார்த்துட்ட. ஆனால் என்னோட அப்பா, அக்கா என்னை விட்டு போயிட்டாங்க என கதறி அழுதாள்.
சிம்மா மானசாவை தடுத்து, “மானூ” என அழைக்க, “அண்ணா உங்களுக்கு கூட மறந்து போச்சுல்ல” என கத்தினாள்.
விக்ரம் அசையாமல் அப்படியே அமர்ந்து மோனிஷாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
போ..போ..என விக்ரமை தள்ளிய மானசா, “எனக்கு என்னோட அக்கா வேணும்” என சிம்மாவின் சட்டையை பிடித்து உலுக்கினாள். திலீப், ராஜா, ரகசியன் அவளை தடுத்தனர்.
“நீயெல்லாம் போலீஸ்ஸா இருக்க தகுதி இல்லாதவன்” என கத்தி அழுது கொண்டே விக்ரமிடம் பாய்ந்து அவனை அடித்தாள்.
விடும்மா அவரை..ஏற்கனவே நாங்க எங்க கீர்த்துவை இழந்துட்டு நிக்கிறோம். நீ வேற..என விகாஸ் அம்மா மானசாவை தள்ள அழுது கொண்டே அவரை முறைத்து பார்த்தாள் மானசா.
ஆம்புலன்ஸ் வந்து விட, அதில் மோனூவை ஏற்றி, ஏற இருந்த விக்ரமை பிடித்து தள்ளிய மானசா, என்னோட அக்காவை நீ தொடாதா..போ..என கத்த, விக்ரம் கண்ணீருடன் வெளியே நின்று பார்த்தான். ரம்யா திலீப்பை பார்க்க, “நானும் வாரேன்” என திலீப், ரம்யா, சிம்மா சென்றனர்.
விக்ரமிடம் வந்த விகாஸ் அம்மா கோபமாக, “யார் அந்த பொண்ணு? அவ்வளவு உரிமையா பேசுறா? அப்ப என்னோட பொண்ணு நிலைமை?” என அவர் கேட்க, “அம்மா” என வழக்கம் போல் சுவாதி அவள் அம்மாவை திட்டி உள்ளே அழைத்து சென்றாள்.
“யார் அந்த பொண்ணு?” நேகன் கோபமாக கேட்க, விக்ரம் அவனை பார்த்து, “சொல்ல முடியாது” என நகர, விக்ரமை அடிக்க வந்த நேகன் கையை பிடித்த தாத்தா, “கீர்த்தனா போல தான் அவருக்கு அந்த பொண்ணு” என்று சொல்ல, விக்ரம் அதிர்ந்து அவரை பார்த்தான்.
“தங்கச்சி போலன்னு சொன்னேன்? சரி தான?” தாத்தா கேட்க, அவன் கண்ணீருடன் அங்கேயே அமர்ந்தான். நேகனும் அமைதியாக சென்று விட்டான்.
மோனிஷா உடலை ஹாஸ்பிட்டலில் கொண்டு செல்ல, அதற்கான கேஸை சிம்மாவிடமே கொடுத்தனர். போலீஸார் பலர் இருக்க மானசாவோ அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்.
மானு..என ஒருவன் அழைக்க, அவனிடம் ஓடிய மானசா கோபமாக அவனை அடித்தாள். அவளிடம் அடியை வாங்கிக் கொண்டு மோனுவை பார்க்கணும்.
“எப்ப வந்துடா கேக்குற? அவ போயிட்டா. அவ இருக்கும் போது பேசவாது செஞ்சீயா?”
நீ முதல்ல பார்த்தது என்னை இல்லை அவளை தான்..அவள் தான் கார்டன்ல்ல சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து ஊஞ்சல் விளையாடியது. காலேஜ்ல்ல நீ சாக்லெட் குடுத்தது அவளுக்கு தான். அதை விட ரோட்டு விபத்தின் போது உன்னை தள்ளி விட்டு காப்பாற்றியதும் அவள் தான். ஆனால் அவளை நானென்று எண்ணி தான் என்னுடன் பேசின.
நீ காதலித்தது என்னை அல்ல அவளை தான். அதே போல் அவள் தான் உன்னை காதலித்தாள். நான் உன்னை காதலிக்கவில்லை. போடா.. மேலும் அவனை அடித்து அழுதாள்.
பரணி, “அப்பாவும் அவளும் என்னை தனியா விட்டு போயிட்டாங்க” என அவனை அடித்தாலும் நட்புடன் அவனை அணைத்து அழுதாள்.
மனமுடைந்த பரணி “மோனு..எங்க?” என கண்ணீருடன் கேட்டான்.
அவனை அழைத்து சென்று சிம்மா காட்ட, அவளையும் அவள் தந்தையையும் பார்த்து கதறி அழுதான் பரணி.
“இது அவங்க பொருட்கள்” என இருவரின் பொருட்களையும் வார்டு பாய் கொடுக்க, அதிலிருந்த கொலுசை பார்த்து, “மானு இது?”
“இது நீ அவளுக்கு கொடுத்தது” என கதறினாள்.
“நான் கொடுத்தேன் நான் கொடுத்தேன். மோனு என்னை பாரு. என்னிடம் நீ சொல்லி இருக்காலாமே!” என அவளை பிடித்து கதறி அழுதான் பரணி. ரம்யா, திலீப், சிம்மாவும் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்தவாறே இருவரையும் அடக்கம் செய்து விட்டு அமர்ந்தனர்.
மானு, “என்னோட வா” பரணி அழைத்தான்.
“உன்னோட நான் எதுக்கு வரணும்?” நான் என் வீட்டிற்கே போகிறேன்.
“அவ எங்கேயும் வர மாட்டா. மானு உயிருக்கும் ஆபத்து இருக்கு” என்ற சிம்மா, விக்ரமிடம் பேசிக்கோ என்றான் பரணியிடம்.
“அவரிடம் எதுக்கு பேசணும்?” கோபமாக அவன் கேட்க, ஆமா,..இப்பொழுதைக்கு எனக்கு விக்ரமை தவிர யாருமில்லை என சிம்மாவின் காரில் ஏறினாள்.
அப்சராவும் அவளது பெற்றோரும் கீர்த்தனா விசயம் தெரிந்து வந்திருந்தனர். அப்சரா துக்கம் விசாரித்து விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவள் கண்கள் ரம்யா, திலீப், நேகனை தேடியது. நேகன் அங்கு இல்லை. வெளியே சென்றிருந்தான்.
விக்ரம் அருகே வந்து ரம்யாவை பற்றி கேட்டாள்.
“ஏன் அவங்ககிட்ட தான் பேசுவீங்களா?” என சந்தோஷ் கேட்க, அவன் நண்பர்கள் அவனை பார்த்தனர்.
அப்படியெல்லாம் இல்லை. எனக்கு ரம்யாவை நன்றாக தெரியும். அதான் கேட்டேன் என சொல்லிக் கொண்டே அவனருகே வந்து அமர்ந்தாள்.
“நீங்க?” என்று அவளை உற்று பார்த்தாள்.
நான் சந்தோஷ். அன்று ஹாஸ்பிட்டல் கார்ல்ல..என அவன் சொல்ல, யா..சந்தோஷ்..நீங்க எல்லாரும் டிடெக்டிவ்ஸ் தான என அவனிடம் அவள் எண்ணை கொடுத்து, எனக்கு உதவி தேவைப்படால் கண்டிப்பாக கேட்பேன். உதவுவீங்களா?
“சின்னப் பொண்ணு உங்களுக்கு என்ன பிரச்சனை வரப் போகுது?” என கேட்டதான் தாம்சம், “மீ சின்னப் பொண்ணா? சுவாதிக்கும் எனக்கும் ஒரே வயது தான் தெரியுமா?” என அப்சரா இடுப்பில் கை வைத்து ஆக்ரோசமாக அவனை முறைத்தாள்.
எல்லாரும் சுவாதியை பார்க்க, அவள் யாரையும் கண்டுகொள்ளவில்லை. அவள் கவனம் முழுவதும் கீர்த்துவின் உடலை வைத்திருந்த இடத்தே படிந்திருந்தது. சோர்வுடன் இருந்தாள். எல்லாரும் அவளை வருத்தமுடன் பார்த்தனர்.
சரிம்மா, “நீ பெரிய பொண்ணு தான். பிரச்சனைன்னா சொல்லு ஒரு கை பார்த்திடலாம்” சந்தோஷ் சொல்ல, ம்ம்..அது என சொல்லிக் கொண்டே அமர்ந்தாள். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அவளது தந்தையோ இங்கேவாது அமைதியா இருக்கலாம் என மனதினுள் அவளை வசைபாடிக் கொண்டிருந்தார்.