நீ நான் 16

கார்த்திக்கிற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, துண்டித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் அழைப்பு வர, “உஷ்” என கடுப்புடன் அலைபேசியை எடுத்து பேசிக் கொண்டே காரின் வேகத்தை குறைத்தான்.

“சொல்லுங்கம்மா?” என அலைபேசியை பிடிக்க முடியாமல் தடுமாற, அதை பிடுங்கிய ரோஹித் ஸ்பீக்கரில் போட்டு, டிரைவ் பண்ணும் போது அலைபேசியை எடுக்காதீங்க.

கார்த்திக் அவனை பார்த்து விட்டு, “சொல்லுங்க” என்றான் எரிச்சலுடன்.

நான் அந்த பொண்ணுட்ட பேசிட்டேன்ப்பா. அவள நீ பார்க்க வேண்டாம். வீட்டுக்கு வா. நேற்றிலிருந்து நீ வரவேயில்லை. சாப்பிட்டியா இல்லையான்னு தெரியாமல் கஷ்டமா இருக்கு என அழுதார்.

காரை நிறுத்தி விட்டு, அழாதீங்க. வீட்டிற்கு வாரேன் என அலைபேசியை வைத்து விட்டு காரை ஓட்டினான்.

நான் உங்களிடம் தனியா பேசணும் என ரோஹித் கூற, “ரோஹித் எதுக்கு?” யுக்தா கேட்டாள்.

அக்கா, நீ உன்னோட வேலைய பாரு. நான் அவரிடம் தான பேசணும்ன்னு சொன்னேன்.

“இப்பவே பேசணுமா?”

அக்காவை வீட்ல விட்ட பின் உங்க வீட்டுக்கு சென்று தனியாக பேசலாம்.

வீட்டுக்கா? எதுக்குடா? யுக்தா கோபமாக கேட்க, உன்னோட வேலைய மட்டும் பாரு. நீ சம்பந்தப்பட்ட விசயமில்லை.

“அப்படி என்ன?” யுக்தா கேட்க, கார்த்திக் அவளை கார்க்கண்ணாடி வழியே பார்ப்பதை கவனித்த யுக்தா அமைதியானாள்.

யுக்தாவை வீட்டில் இறக்கி விட்டு இருவரும் செல்ல, கார்த்திக்கை பள்ளி வயதில் பார்த்ததற்கும் இப்பொழுது பார்த்ததற்கும் வித்தியாசம் நிறைய தெரிந்தது யுக்தாவிற்கு.

அவனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்த அவளுக்கு அவன் மீதான காதல் அதிகமாக தான் ஆனது. அதன் தாக்கத்தில் அழுது கொண்டே யுக்தா அவளறைக்கு ஓடினாள்.

முக்தாவும் ராகவீரனும் அவளை அழைக்க அழைக்க கவனிக்காமல் ஓடினாள் யுக்தா.

வினித் ரோஹித்திடம் டானை போடணும்ன்னு பேசியதை சொல்ல, அவன் சொன்னது சரிதான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அவன் இருக்கும் ஏரியாவிற்கு கூட போக முடியாது. அவனே இங்கே வரப் போறான் என்றான் கார்த்திக்.

“என்ன?” ரோஹித் அதிர, “உனக்கு என்னவெல்லாம் தெரியும்?” கார்த்திக் கேட்க, அவன் தியா விசயத்தை பேச, நான் இதை கேட்கலை என்ற கார்த்திக், “உனக்கு என்ன கலையெல்லாம் தெரியும்?”

வாட் புரியல..சண்டை..துப்பாக்கி சுடுதல்..என கார்த்திக் கேட்க, சண்டை வரும். மற்ற எதுவும் பழகலை. எங்களுக்கு முழுபாதுகாப்பிற்கு ஆள் எப்போதும் இருப்பாங்க. இங்க அஜய் அண்ணா ஆளுங்க இருக்காங்க.

“அண்ணாவா?”

ம்ம்..என்று ரோஹித் அவனை பார்க்க, இந்த டான் விசயத்தில் நீ தலையிடாத. நாங்க பார்த்துக்கிறோம். உன்னோட மாமாவுக்கு ஏதும் ஆகாது. அவன் எனக்கு நண்பன். போன முறை போல இம்முறை அவனை தனியே விட மாட்டோம் என்றான்.

நானும் கெல்ப் பண்ணுவேன்.

இது விளையாட்டில்லை. துப்பாக்கி, கத்தி, எல்லாத்தையும் அசால்ட்டாக யூஸ் பண்ணும் வினித்தையே பதம் பார்த்துட்டானுக. உன்னால முடியாது.

இல்ல..

சொல்றேன்ல்ல. ஏற்கனவே கஷ்டப்படுறவங்கல்ல கஷ்டப்படுத்த நினைக்காம அஜய்யிடம் வேலையை கத்துக்கிட்டு ஊரை பார்த்து போ என்றான்.

உங்க வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னேன். நீங்க ஆபிஸ்ல்ல வந்து நிக்குறீங்க?

உன்னோட வேலை இது தான். மற்றதை பார்க்க நாங்க இருக்கோம். இறங்கு என கார்த்திக் கதவை திறந்தான்.

“அந்த டானை கொல்லப் போறீங்களா?”

“சின்னப்பையன் மாதிரி கேக்குற?” அவனருகே சென்றாலே போட்டுட்டு போய்கிட்டே இருப்பானுக. அதுக்கு வேற வழி இருக்கு என கார்த்திக் காரை எடுக்க, ரோஹித் அவனிடம் நீங்களும் கவனமா இருங்க. நான் உங்களை நம்புகிறேன் என சொல்லி விட்டு நிற்காமல் நகர்ந்தான். கார்த்திக் புன்னகையுடன் காரை எடுத்தான்.

மதிய வேளை வீட்டிலிருந்த அஜய், தியாவிடம்..சிம்மா வரச் சொல்லி இருக்கார். பார்க்க போகணும். எப்ப வருவேன்னு தெரியல என்றான்.

யுக்தாவின் கைகள் நின்றது.

என்னையும் வரச் சொன்னார் என வினித்தும் சொன்னான். ரோஹித், யுக்தாவிற்கு கார்த்திக் பேசியது நினைவில் வந்தது.

“உங்களோட உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் வாராங்கல்ல மாமா?” ரோஹித் கேட்க, ம்ம்..வராணுக என வினித் ரோஹித்தை ஆழ்ந்து பார்த்தனர். முக்தாவும் ராகவீரனும் யுக்தாவை பார்த்தனர்.

“எனக்கு பசிக்கலை” என யுக்தா எழ, ராணியம்மா அவளை திட்டி அமர வைத்தார்.

“என்னாச்சு? யாரும் ஏதும் சொன்னாங்களா?” வினித் கேட்க, யுக்தா தியாவை பார்த்தாள்.

தியாவை டிஸ்சார்ஜ் நேற்றே செய்ததால் நடமாட மட்டும் செய்தாள்.

“என்ன யுகி?” தியா கேட்க, ராணியம்மாவை பார்த்து விட்டு கையை கூட கழுவாமல் அவள் செல்ல, நில்லு யுகி..நானும் வாரேன் என தியா செல்ல, அவளுக்கு துணையாக முக்தாவும் சென்றாள்.

யுகி..என தியா அழைக்க, தியா..என அவளை கட்டிக் கொண்டு யுக்தா அழுதாள்.

அக்கா?

என்னால முடியலடி. என்னால சந்தோஷூடன் டேட் கூட பண்ண முடியாது. என்னால கார்த்திக்கை மறக்க முடியலை. அவனிடம் நிறைய மாற்றங்கள் இருக்கு. ஆனால் எல்லாமே என்னை கவருதுடி.

எனக்கு பழையபடி அவனிடம் பேசணும் போல இருக்கு. ஆனால் அவனோட அம்மாவுக்கு என்னை பிடிக்கலை. “நான் என்ன செய்றது?” என அழுதாள்.

முதல்ல சந்தோஷ்கிட்ட நேரடியா சொல்லீடு. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம் தியா சொல்ல, தலையாட்டி விட்டு படுத்துக் கொண்டாள் யுக்தா. தியாவும் முக்தாவும் அவளை பாவமாக பார்த்தனர்.

யுக்தாவை எண்ணி ராணியம்மா வருத்தப்பட அனைத்தும் சரியாகும் என தேற்றினான் அஜய்.

“நான் உங்களிடம் பேசணும்?” ரோஹித் அஜய்யை பார்க்க, முகி உங்களுடன் பிறந்த தங்கையாக இருந்தாலும் அவள் என்னோட தங்கை தான். அதனால அவள் எங்களுடன் வந்திருவா என்று ரோஹித் சொல்ல, முடியாதே என்ற குரலை கேட்டு மூவரும் வினித்தை பார்த்தனர்.

முக்தாவுக்கு நீங்க இருவருமே அண்ணன் தான். அஜய் நீ ஒத்துக்கிறேல்ல? வினித் கேட்க, புரியாமல் அஜய் வினித்தை பார்த்தான்.

ரோஹித் முகி அண்ணான்னு ஒத்துக்கிறேல்ல?

ம்ம்..என்று அஜய் ரோஹித்தை பார்த்தான்.

மாமா, “முகி ஏன் வர மாட்டா?” ரோஹித் கேட்க, யுகி திருமணம் முடிந்து எங்களுக்கும் திருமணம். அப்புறம் எப்படி உங்களுடன் வருவா?

மாமா, “அதுக்குள்ளவா?” ரோஹித் கேட்க, பார்க்கலாம். முதல்ல பிரச்சனையையும் யுகி திருமணத்தையும் முடிக்கணும் என்று ராணியம்மாவை பார்த்தான்.

ஆமா ரோஹித்..எல்லா பிரச்சனையும் முடியணும். நீ உன் வேலையில கவனத்தை செலுத்து. அஜய் ரோஹித் எப்படி வேலை செய்கிறான்?

ம்ம்..நல்லா தான் பண்றான். மொழி பிரச்சனை தான். முதல்ல அவனுக்கு தமிழை முழுதா கத்துக்க சொல்லுங்க என்றான்.

அதான் இங்கிலீஸ்ல்ல பேசுறேன்ல்ல?

நாம இருக்கும் இடத்திற்கு சம்பந்தப்பட்ட மொழியை கத்துக்கணும் தான பாட்டி? அஜய் கேட்க, ஆமா, கத்துக்கணும் என புன்னகைத்தார்.

ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. நல்ல வேலை பாட்டி முன்பே எங்க வீட்ல எல்லாருக்கும் தமிழ்மொழியை கத்துக்க வைத்தார்.

ஓ..அதான் உங்க தமிழ் இவ்வளோ அழகா? வினித் ரோஹித்தை கிண்டல் செய்தான்.

வினித், நான் கேட்பதற்கு மனதில் இருக்கும் பதிலை சரியாக நீ சொல்லணும்? அஜய் வினித்திடம் கேட்க, மற்றவர்கள் ஆர்வமாக இருவரையும் கவனித்தனர்.

“யுகி விசயத்துல்ல என்ன பிளான் வச்சிருக்க?”

ஆமா..சொல்லுங்க? ஏதேதோ பேசுறீங்க? எனக்கும் புரியலை.

ராணியம்மா அருகே சென்று அமர்ந்த வினித், உங்களுக்கு கார்த்திக் பற்றி தெரியுமா?

தெரியாதுப்பா. ஆனால் யுகியால் அந்த பையனை மறக்க முடியலை. அது மட்டும் உறுதி.

ம்ம்..தெரியும்.

“தெரியுமா? அப்ப சந்தோஷ் மாமா?” ரோஹித் கேட்க, அவன் கார்த்திக்- யுக்தாவை சேர்க்கும் கருவி மட்டுமே!

வினு, அவனுக்கு தெரிந்தால் வருத்தப்பட மாட்டானா?

அவன் இன்று அதை கண்டிருப்பான். இனி அவன் அவனோட வேலையை ஆரம்பித்து விடுவான்.

“மறுபடியும் குழப்புறீங்க?”

இப்ப கார்த்திக் யுக்தாவின் முடிவிற்காக காத்திருக்கிறான். நம்ம யுக்தா கார்த்திக் மீது அவளுக்கு இன்னும் காதல் இருக்கு என்று உணர்ந்து விட்டாள். இவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பது யாரோ அவங்கள சரி செய்யும் வேலையை தான் பார்க்கணும். அதனால வீட்டுக்கு வர்ற யுக்தாவிடம் எதை பற்றியும் யாரும் பேச வேண்டாம். நடப்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள்.

சரி, “நாம கிளம்புவோமா?” அஜய் கேட்க, ஓ.கே என வினித்தும் அஜய்யும் கிளம்ப, ரோஹித் தனி கார் ஒன்றில் ஆபிஸீற்கு கிளம்பினான்.

சிம்மா, அஜய், வினித் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடினர். கார்த்திக் சிம்மாவிடம் பென்டிரைவ் ஒன்றை கொடுத்து லேப்பில் போட சொன்னான்.

வினித் கொடுத்த புகைப்படம் அனைத்தும் இருந்தது. கார்த்திக் கண்டறிந்த அலி, டான் ரத்தன் ஷெட்டி..அவனது ஆட்கள் அனைவரையும் வரிசைப்படுத்தி வைத்திருந்தான்.

“கார்த்திக் தனியாகவா இதை செய்த?” சிம்மா கேட்க, இல்ல விதார்த் உதவினான்.

டேய்..விஜய் சத்தமிட, வினித் உனக்கு விதார்த் புகைப்படத்தை கொடுத்த பின் உங்களுக்கு முன்பே இங்கு வந்து விட்டான். தற்செயலாக அவனை சந்தித்த போது  உன்னை பார்த்ததை அவன் சொன்னான். அஜய்யும் நடந்ததை சந்தோஷிடம் சொல்லி இருந்தான்.

நீங்க இங்கே வந்த பின் தான் விதார்த் மீண்டும் பாரின் போனான். இல்லை அனுப்பினேன். அவனுக்கு டெக்னாலஜிஸ் யூஸ் பண்ணத் தெரியும். அதை வைத்து தூரமிருந்தே அந்த டானின் ஆட்களை ஒருவர் விடாமல் கலெக்ட் செய்தான். ஒருவன் மட்டும் மீஸ் ஆகுறான். அவனை பற்றி அறிந்து விட்டு வருவதாக விதார்த் சொன்னதாக கார்த்திக் சொல்ல, “எங்களிடம் உனக்கு சொல்லவே தோணலையா?” கரண் கோபமாக கார்த்திக்கிடம் கேட்டான்.

சொல்லி..விசயம் வெளியே கசியவா? சுவற்றுக்கும் காதிருக்கு கரண். கவனமா இருக்க வேண்டாமா? வினு உன்னோட வீட்டுக்கு வந்த பின்னும் ஆட்கள் நம்மை பின் தொடரதான் செய்றாங்க. ஆனால் நம்மை கவனிக்கிறாங்களே தவிர நம்மை காயப்படுத்து எண்ணமில்லை யாருக்கும்.

அவங்க ராணியம்மா ஆளுங்க தான்.

இருக்கலாம் என கார்த்திக் சாதாரணமாக சொல்லி விட்டு, அந்த டான் ரோஹித் வீட்டிலிருப்பவர்களை கண்காணிப்பதன் காரணம் தியா என எனக்கு தோன்றுகிறது . நம்ம ஆளுங்க அவங்க பக்கம் இழுக்க ரொம்ப நேரம் ஆகாது. எல்லாரும் நம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள்ன்னு சொல்ல முடியாதே!

ஆமா அஜய், இது சிந்திக்க வேண்டிய விசயம் தான். தியாவால் தான் டான் கண்காணிப்பதாக ஏன் சொல்றீங்க? வினித்திடம் சிம்மா கேட்க, அவன் அலைபேசி சிணுங்கியது. வினித் அலைபேசியை துண்டித்து விட்டு சிம்மாவிடம் பேச, மீண்டும் சிணுங்கியது.

“என்னடா உனக்கு?” இப்ப தான பார்த்தோம்..

மாமா, அக்கா பாட்டிகிட்ட டெல்லி போகணும்ன்னு கேட்கிறாளாம்.

உனக்கும் வேற வேலை இல்லை அவளுக்கும் வேற வேலை இல்லை. நான் அவளிடம் பேசிக்கிறேன் என ரோஹித்தை பேச விடாமல் துண்டித்து அனைவரையும் பார்த்து, நீங்க பேசிட்டு இருங்க. வாரேன் என வினித் எழுந்தான்.

“என்னாச்சுடா?” சந்தோஷ் கேட்க, பேசிட்டு வந்திடுறேன். பத்து நிமிடம் என அவன் வெளியேறி, யுக்தாவை அழைத்தான்.

ஹலோ..அவள் குரல் சோர்வுடன் ஒலிக்க, “மேடம் அழுது முடிச்சுட்டீங்களா? நீ டெல்லி போகணும்ன்னு சொன்னீயா?”

ஆமா, என்னால இங்க இருக்க முடியாது.

உன்னை என்னோட கம்பெனிக்கு அழைச்சிட்டு போகலாம்ன்னு இருந்தேன். மத்தவங்க முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காட்டுவன்னு நினைச்சேன். இப்படி பயந்து தான் ஓடுவன்னா ஓடு..என வினித் கத்தினான்.

நான் பயப்படலை.

“அப்புறம் எதுக்கு போகணும்?” உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும். உன் முடிவு எதற்கென என்றும் தெரியும். “நீயே முடிவெடு டெல்லியா? உன்னுடைய புது வாழ்க்கையா?” என அலைபேசியை வைத்து விட்டு பெருமூச்சுடன் வினித் உள்ளே சென்றான்.

உள்ளே வந்த வினித் தலையை பிடித்து அமர்ந்தான்.

“வீட்ல எதுவும் பிரச்சனையா?” கரண் கேட்க, அனைவரும் அவனை பார்த்தனர். வினித் கார்த்திக், சந்தோஷ் இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு, “நாம நம்ம விசயத்தை பார்க்கலாமா?” எனக் கேட்டான்.

“எதுக்கு தியாவை டான் கண்காணிக்கணும்? ஒரு வேளை திவ்யா ஏதும் சொல்லி இருப்பாளோ!” அஜய் கேட்க, எனக்கு தெரியல அஜய். ஆனால் தியாவை கண்காணிக்க தான்னு தோணுது.

“இப்ப பிளான் என்ன?” சிம்மா கார்த்திக்கிடம் கேட்டான்.

வினித்திடம், நீ சொன்னது போல் டானையும் பிடிக்கணும். ஆனால் எடுத்தவுடன் அவனை பிடிக்க முடியாது. அவனோட முக்கியமானவங்கல்ல போடணும்.

போடணுமா? சிம்மா அதிர, ம்ம்..அவனோட ஆளுங்கன்னு தெரிஞ்சா யாருமோ அவனை பிடிக்க பயப்படுவாங்க. சிம்மா நீங்க பிடித்தாலும் உங்களால அவனுக்கு தண்டனை வாங்கித் தர முடியாது. விதார்த் கையில மாட்டாதவன் தான் டானோட பிசினஸ் டீல் அனைத்தையும் பார்ப்பவன். அவனை பிடித்தால் நிறைய விசயம் வெளிய வரும்.

தியாவிடம் தவறாக நடந்து கொள்ள இருந்த பெரியவர் யார்ன்னு விதார்த்திடம் கேட்டேன். அவன் என சிம்மாவை பார்த்து, நேற்று நீங்க அரெஸ்ட் பண்ணீங்களே அந்த மினிஸ்டர் தான். அவனுக்கென இருக்கும் தனி பங்களாவிற்கு நம்ம தியாவை அழைச்சிட்டு போயிருக்கான். விதார்த் வேற ஒரு பிரச்சனையில தான் அவரை அடித்து இழுத்து சென்றான். ஆனால் அந்த மினிஸ்டர் ஆட்களை சமாளித்து வெளியே வந்திருக்கான். ஆனால் நீங்க சரியா செஞ்சு விட்டீங்க என கார்த்திக் சிம்மாவை பாராட்டினான்.

ம்ம்..என்னால மட்டும் நடக்கலை. எனக்கு எங்க குடும்பம் எல்லாரும் உதவிக்கு இருந்தாங்க என்றான் சிம்மா.

சரி..முதல்ல விதார்த் அவனை பிடிக்கட்டும். அவனை நாம தூக்கணும். அவனை வைத்து முதல்ல அந்த டானை இறக்கி பிடிக்கணும். சிம்மா நீங்க உங்க பெரிய அஃபீசியல் கிட்ட இதை பற்றி பேசணும்.

“எப்படி ஒத்துப்பாங்க? அவன் சாதாரண ஆள் இல்லையே!”

ஒத்துக்க வைக்கணும். விதார்த் முதல்ல வரட்டும், அப்புறம் தான் இதை பார்க்கணும். அதற்கு முன் இந்த காதம்பரி கதையை முடிக்கணும். அஜய் தயார் தான?

ம்ம்..அந்த திவ்யாவையும் சேர்த்து முடிக்கணும் அஜய் சொல்ல, நோ..நோ..அவ பக்கம் இப்ப நுழைய வேண்டாம் என்ற வினித், அவளருகே சென்றாலும் நம்மை பற்றி டான் ஆளுங்களுக்கு தெரிந்து பிரச்சனையாகும். கொஞ்ச நாள் எல்லாரும் அமைதியா இருங்க. நான் உங்களுடன் சுற்றுவது அவனுக்கு இப்ப தெரிந்திருக்கும். அதனால் கவனமா இருக்கணும் என்று அஜய்யை பார்த்தான் வினித்.

ஆமா, வினித் சொல்றது சரி. அவன் கையசைத்தாலே நம்ம குடும்பம் மொத்தத்தையும் போட்றுவானுக. கவனமா இருக்கணும். இப்பொழுதைக்கு எதுவும் வேண்டாம். விதார்த் வந்தவுடன் பார்க்கலாம் என்ற கார்த்திக், ரோஹித் நீ பேசியதில் பயந்து இருக்கான். இப்பொழுதைக்கு யாரும் எதுவும் செய்யலைன்னு சொல்லீடு என வினித்திடம் கூறி விட்டு, இந்த பேக் சைடு போஸ் இருக்கும் புகைப்படத்தை நன்றாக பார்த்துக்கோங்க. அவனுக நம் பின் கூட சுத்த வாய்ப்பிருக்கு.

பார்த்தால் எதுவும் செய்ய வேண்டாம். எனக்கு மேசேஜ் மட்டும் பண்ணுங்க என சிம்மா சொன்னான்.

சிம்மாவிடம் தியாவிற்கு நடந்த அனைத்தையும் அஜய் கூறி இருப்பான்.

சரி கிளம்பலாம் என அனைவரும் கலைந்தனர்.

மறுநாள் காலை கார்த்திக் அம்மா சொன்ன இடத்திற்கு யுக்தா தனியாக செல்ல, அவ்விடத்தில் யாருமில்லை. அவள் வந்த சில மணி நேரத்தில் யாரோ அவளை கடத்தி சென்றனர்.

யுக்தா கண்ணை விழிக்க, கார்த்திக் அம்மா கட்டி வைக்கப்பட்டிருந்தார்.

ஆன்ட்டி…என யுக்தா பயத்துடன் அவரை பார்த்தாள். சுற்றி பார்த்தாள். யாருமே இல்லை. அவளையும் கட்டி வைத்திருந்தனர்.

சாரிம்மா, அந்த பொண்ணு பேச்சை கேட்டு உன்னை வரச் சொல்லீட்டேன். அந்த பொண்ணு என் பையனுக்காக இப்படி செய்வான்னு நான் நினைக்கல என அழுதார்.

அழாதீங்க ஆன்ட்டி..என யுக்தா அவரிடம் பேச, யுக்தாவின் பின்னிருந்து குரல் ஒன்று கேட்டது.

வாவ்..டியர்..உன்னை பார்த்து ரொம்ப வருசமாச்சே என்ற கேத்ரினாவின் குரலில் யுக்தா கார்த்திக் அம்மாவை பார்த்து, “இவளை தான் உங்க பையனுக்கு பார்த்து வச்சிருந்தீங்களா?” என கோபமாக கேட்டாள்.

கார்த்திக் அம்மா புரியாமல் “ஆம்” என தலையசைத்தார்.

அப்ப கார்த்திக்கும் ஒரு வேளை உண்மையிலே இவளை காதலிக்கிறாரா? ஆனால் என்னிடம்..அவர் இவளை பார்க்காதது போல தான பேசினார். அவர் காதலித்தால் இவள் கார்த்திக் அம்மாவை கட்டி போட்டிருக்க மாட்டாளே! ஒன்றுமே புரியலையே! என்று மனபாரத்துடன் மனதில் பல கேள்விகளுடன் அவளை பார்த்தாள்.

முன்பு விட ரொம்ப அழகாகிட்ட யுகி டியர் என கேத்ரினாவின் பேச்சில், “உனக்கு இந்த பொண்ணை எப்படி தெரியும்?” கார்த்திக் அம்மா அப்பாவியாக கேட்டார்.

நல்லா கேட்டீங்க போங்க. இவளையும் உங்க பையன் கார்த்திக்கையும் கஷ்டப்பட்டு பிரித்ததே நான் தான் என்று கேத்ரினா யுக்தா அருகே வந்து அவளது தாடையை இறுக பிடித்து அவளை முறைத்தவாறு, “எதுக்குடி இப்ப வந்த? அதான் உன் ஹஸ்பண்ட் செத்துட்டான்ல்ல. அங்கேயே இருந்து தொலைக்க வேண்டியது தான?”

இப்ப உன்னை பார்த்ததும் என்னோட டார்லிங் என்னை பார்த்தால் கூட கண்டுகொள்ளாதது போல போறான். பேச கூட மாட்டேங்கிறான் என சீற்றமுடன் அவள் தாடையை விட்டு கழுத்தை பிடித்து நெறித்தாள்.

அய்யோ, விடும்மா..அந்த பொண்ணை விட்ரு. அந்த பொண்ணுக்கு ஏதும் ஆகிடாமல் என கார்த்திக் அம்மா கதறினார்.

ஆன்ட்டி, “உங்களுக்கு என்னை பிடிக்கும் தான? எதுக்கு இவளுக்கு சாதகமா பேசுறீங்க? இது தப்புல்ல” என யுக்தாவை விட்டு கார்த்திக் அம்மாவிடம் சென்றாள்.

யுக்தா தொண்டையை தளர்த்தி சரி செய்து கொண்டே அவளை பார்த்தாள்.

ஆன்ட்டி, உங்க பையன் எனக்கு வேண்டும். அவன் திறமைக்கு என்னோட வந்தான்னா அவனை வேற லெவலுக்கு கூட்டிட்டு போவேன். ஆனால் இவளை பார்த்ததும் நீங்களும் அவ பக்கம் போயிட்டீங்கல்ல என கோபமாக கையை ஓங்க, “கேத்ரின்” என்று சத்தமாக கத்திய யுக்தா, அவங்கள ஏதும் செஞ்சிருறாத. உனக்கு என்னை பழி வாங்கணும். “அதுக்கு தான வர வச்ச?” என்னை என்ன வேண்டுமானாலும் செய். அவங்கள போக விட்ரு என கூறினாள்.

கார்த்திக் அம்மா அழுதார்.

“போக விடணுமா? முடியாது. உன்னை பழி வாங்க அழைத்து வந்தேனா?” என பயங்கரமாக சிரித்தாள்.

எப்படியும் கார்த்திக் என்னை அருகில் கூட விட மாட்டான். அவனை அடையும் வழி உங்கள் இருவரால் தான் கிடைக்கப் போகுது என சிரித்தாள்.

கார்த்திக் இவளை காதலிக்கலை. இவள் தான் பைத்தியம் போல நடந்துக்கிறா என நிம்மதி யுக்தாவினுள் வந்தாலும் அவளின் பேச்சு யுக்தாவிற்கு பயத்தை உண்டு பண்ணியது.

“அடையப் போறீயா? என் மகனை ஏதும் செஞ்சிறாத” என கார்த்திக் அம்மா கெஞ்சினார்.

ஆன்ட்டி..இவகிட்ட கெஞ்சுறீங்க? ஒழுங்கா எங்களை விட்ரு. கார்த்திக்கிற்கு விருப்பமில்லாமல் அவர் விரல் நுனியை கூட தொட முடியாது என யுக்தாவின் தைரிய பேச்சில் அசந்து அவளை பார்த்தார் கார்த்திக் அம்மா.

“என்னடி ஓவரா பேசுற?” பாரு..நீயே பாரு. கார்த்திக் அவனே வருவான் என அலைபேசியை எடுத்து, டேய்..வாங்கடா கேத்ரினா கத்தினாள்.

ஐந்தாறு பேர் யுக்தாவை சுற்றி நின்றனர்.

வேண்டாம்மா..எங்கள விட்ரும்மா. அந்த பொண்ணை எதுவும் செஞ்சிறாத என கார்த்திக் அம்மா மீண்டும் கெஞ்சினார்.

அலைபேசியில் யுக்தாவை கேத்ரினா வீடியோ எடுக்க, அவளை சுற்றி இருந்தவர்களில் ஒருவன் யுக்தாவை நெருங்கி கன்னத்தில் “பளார் பளார்” என அறைந்தான். அவள் அழுது கொண்டே கார்த்திக் இவ என்ன செஞ்சாலும் வந்திறாதீங்க என கத்தினாள். அவன் அவளது கழுத்தை பிடிக்க, மயங்கினாள் யுக்தா. கார்த்திக் அம்மாவோ அழுது கொண்டே, எங்களை விடுங்க. அந்த பொண்ணை ஏதும் செய்யாதீங்க என அழுதார்.

அனைவரும் கேத்ரினாவை பார்க்க, அவள் ஒருவனிடம் கண்ணை காட்டினாள்.

அவன் யுக்தாவை நெருங்கி அவளது மேற்கோர்ட்டை கழற்றி கேத்ரினா அலைபேசி முன் எறிந்தான். மேலும் அவள் அணிந்திருந்த டீசர்ட்டை கழற்ற வந்த போது “வெயிட் பண்ணுங்கடா” என அலைபேசியை கேத்ரினா அவள் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

கார்த்திக் இப்ப நீ வரணும். தனியா வரணும் என இடத்தை சொல்லி, யாரிடமும் ஏதும் சொல்லக் கூடாது. வா..எனக்கு நீ வேண்டும் இல்லை உன் அம்மா பரலோகம் போயிடுவாங்க. உன்னோட ஆசை காதலி இந்த யுக்தாவின் அந்தரங்க உறுப்புகள் அனைவர் கண்ணுக்கும் விருந்தாகும். அப்புறம் அவள் நிலைமை என்னாவது? என கேள்வியுடன் நிறுத்தி அலைபேசியை துண்டித்து அதை கார்த்திக் அலைபேசிக்கு அனுப்பினாள்.

அப்பொழுது தான் கார்த்திக் அப்பா, “அவன் அம்மாவை காணோம்” என அவனுக்கு அழைத்திருந்தார். அவரிடம் பேசி விட்டு அவன் அம்மாவை தேட எழுந்தான். அவனுக்கு வந்த வீடியோவை பார்த்து பதறி ஆபிஸில் அவனறையிலிருந்து வெளியே ஓடி வந்தான்.

சந்தோஷ் அவனை இடித்து விட அலைபேசி கீழே விழுந்தது. அதில் கார்த்திக் அம்மா சத்தம் கேட்கவும் அவன் கார்த்திக்கை பார்க்க, அவனோ அலைபேசியை எடுத்து விட்டு அரைமணி நேரத்தில் நான் வரலைன்னா. நான் அனுப்பும் லொக்கேஷனுக்கு போலீஸோட வந்திரு என சந்தோஷிடம் சொல்லி விட்டு எதிரே வந்த வினித், ரோஹித், விஜய், கரணை பார்க்காமல் வியர்த்து விறுவிறுக்க வழியில் பேசிக் கொண்டிருந்த இருவரையும் தள்ளி விட்டு ஓடினான்.

“என்னாச்சுடா இவனுக்கு?” வினித் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்து சந்தோஷை பார்த்தான். “அம்மா வாய்ஸ் தான?” என அவன் யோசனையுடன் இருந்தான்.

டேய், உன்னிடம் தான். “கார்த்திக் எதுக்கு இப்படி ஓடுறான்?”

சந்தோஷ் அவன் பார்த்ததை சொல்ல, “அம்மாவுக்கு ஏதும் பிரச்சனையோ?” கரண் கேட்க, இருடா அப்பாவுக்கு கால் பண்றேன் என சந்தோஷ் அவன் அப்பாவிடம் பேச, அவன் அம்மாவை காணோம் என தவித்து அவர் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார்.

“உதவிக்கு கூப்பிட்டிருக்கலாம்ல்ல? இப்படியா தனியா ஓடுவான்?” என வினித் சினமுடன் கேட்க, இல்ல வினு..எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு என சந்தோஷ் கூறிக் கொண்டிருக்கும் போது, முக்தாவிடமிருந்து வினித்திற்கு அழைப்பு வந்தது.

மாமா, வேலையா இருக்கேன். நாம் அப்புறம்..என நிறுத்திய வினித், “முகி எதுக்கு அழுற? என்னாச்சு?”

அக்காவை ரொம்ப நேரமா காணோம். எங்க போனான்னே தெரியல. வீட்லயும் இல்லை. வெளியேயும் இல்லை என முக்தா மேலும் அழ, “நல்லா பார்த்தீங்களா?” என பதட்டமாக வினித் கேட்க, ம்ம்..மாமா வெளிய தேட போயிருக்கார். பாட்டிம்மா அவளது அலைபேசிக்கு அழைத்தார். ரிங் போய்கிட்டே இருக்கு. எடுக்கவே மாட்டேங்கிறா. பயமா இருக்கு என அழுதாள்.

முகி அழாத, யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம். அப்பாவிடம் நான் பேசிக்கிறேன். யுகி பத்திரமா வீட்டுக்கு வருவா. உன்னோட பாட்டிகிட்ட சொல்லு என அலைபேசியை வைத்து விட்டு, முகியையும் காணோமாம்.

வினு, கார்த்திக் அம்மா, யுக்தா இருவரையும் யாரோ கடத்திட்டாங்களோ?

“என் அக்காவை எதுக்கு கடத்தணும்? அந்த டானாக இருக்குமோ?” ரோஹித் பதட்டமாக பேச, கண்டிப்பாக அவனில்லை. வேற யாரோ தான்..என வினித் சொல்ல, அவன் அலைபேசி மீண்டும் சிணுங்கியது. அஜய்க்கும் விசயம் தெரிந்து அவன் இவர்கள் இருக்கும் இடத்தை விசாரித்து இவர்கள் ஆபிஸிற்கு வந்து கொண்டிருந்தான்.

கரண், கார்த்திக் அறையில் இருக்கும் சிசிடிவையை பார்க்கலாம்ல்ல என அவனறைக்கு வந்து அவனை பார்க்க அவன் அலைபேசியில் அவன் அப்பாவிடம் பேசி அறையை விட்டு வெளியே வருவது தெரிந்தது.

பொதுவான கேமிரா இருக்குல்ல? வினித் கேட்டு அதை பார்த்தனர். அவன் அலைபேசியில் தான் எதையோ பார்த்து பதறுகிறான். பெரிய பிரச்சனை போலடா என விஜய் பதறிக் கொண்டு சொன்னான்.

அந்த அலைபேசியில் அவன் பார்க்கிறான்ல்ல அதை ஜூம் பண்ண முடியுமான்னு பாருங்க என ரோஹித் சொல்ல, தெளிவாக தெரியவில்லை.

யுக்தா, கார்த்திக் அம்மா குரல் கேட்டு, யுகியும் அங்க தான் இருக்கா போலடா.

அந்த இடத்தை கேத்ரின் வீடியோவில் சொல்லி இருக்க, அனைவரும் கிளம்ப, வினித் அஜய்யிடம் இடத்தை கூறி சிம்மா, விக்ரமையும் போலீஸூடன் வர சொல்லி வைத்தான்.

“அவ அக்காவை ஏதும் செஞ்சுறாம” என ரோஹித் பதறினான்.

கார்த்திக் அவ்விடத்தினுள் வியர்வையுடன் பதட்டமாக நுழைந்தான்.

ஹே, “டார்லிங் வந்துட்டியா?” என கேத்ரின் கார்த்திக்கை அணைக்க, “அவளை தள்ளி விட்டு அம்மாவையும் யுகியையும் எங்க?” எனக் கத்தினான்.

பார்க்கலாம் டார்லிங்.. பார்க்கலாம்..அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கிஸ் வேணுமே! கேத்ரின் கன்னத்தை காட்ட, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கார்த்திக்.

“எங்க அவங்கள?” என அவன் கண்கள் அலைபாய, என்னை அடிச்சிட்ட டார்லிங். “அவள என்ன செய்றேன்னு பாரு” என கத்திய கேத்ரினா..அவனை ஓர் கண்ணாடி அறைக்கு அழைத்து சென்றாள்.

அலைபேசியில் டேய்.. என சத்தம் கொடுத்தாள்.

வெளியே இருந்த கார்த்திக் உள்ளே யுக்தாவை அவர்கள் கட்டி வைத்திருப்பதையும் அவள் ஆடை விலகி இருப்பதையும் பார்த்து பதறினான். “இதுக்கே பதட்டமா டார்லிங்?” அங்க பாருங்க என மற்றொரு அறையை காட்ட, அவன் அம்மாவையும் தண்ணீர் தொட்டியில் வைத்து கட்டிப் போட்டிருந்தாள்.

“அந்த தண்ணீரை திறந்து விட்டால் எப்படி இருக்கும்?” என அவள் கார்த்திக்கை பார்க்க, யுக்தா முன் ஒருவன் வந்து அவளது டீ சர்ட்டின் மார்பின் கீழிலிருந்து இடைவரை ஆடையை வெட்டிக் கொண்டிருந்தான்.

ஏய், “என்ன பண்ற?” கார்த்திக் கத்தினான். யுக்தாவோ மயக்கத்தில் இருந்தாள்.

“இத்தனை வருசம் பிரிந்தும் எப்படி இருவரும் இப்படி காதலிக்கிறீங்க?” உன்னை அடைய எதுவும் செய்வேன்னு நான் சொன்னதும் அவ ஓவரா பேசிட்டா டார்லிங் என கார்த்திக்கை கேத்ரின் மேலிருந்து கீழாக பார்க்க, அவளை பார்வையாலே எறித்தான்.

உன்னோட விரல் நுனியை கூட என்னால தொட முடியாதாம்..சொல்றா. எவ்வளவு திமிரு அவளுக்கு..என ஆரம்பிங்கடா என அவளை பார்க்க, அவள் மீது தண்ணீரை தெளித்தனர்.

யுக்தா விழித்து அவள் ஆடையை பார்த்து எதிரே இருந்தவனை பயத்துடன் பார்த்துக் கொண்டே கட்டி வைத்திருந்த சங்கிலியை கழற்ற முயன்றாள்.

அவளுக்கு எதிரே இருந்தவன் பார்வை முழுவதும் யுக்தாவின் மேனியிலே இருந்தது.

ஹேய்..அவள ஏதும் பண்ணீடாத என கத்திய கார்த்திக், புஜ்ஜிம்மா..இங்க பாரு..பாரு என அவ்வறையை அடித்துக் கொண்டே கதறி அழுதான்.

யுக்தா எதிரே இருந்தவன் யுக்தாவை அணைக்க, இரு கைகளையும் விரித்து கட்டியதால் அவளால் தடுக்க கூட முடியலை.

அழுதாள்..ச்சீ..போடா..போடா..

என அவள் கத்த, அவன் அவளை இறுக அணைக்க, அவனது கழுத்தில் பற்கள் படுமாறு அழுத்தமாக கடித்து வைத்தாள்.

“என்னையே கடிக்கிறியா?” என அவளை அடித்தான். அவனது வெறித்தனமான அடியில் அவள் வாயிலிருந்து இரத்தம் வந்தது.

“உன்னை என்ன செய்றேன்னு பாருடி” என அவளது கட்டை அவனே அவிழ்த்து விட அவள் அவனுக்கு போக்கு காட்டி ஓடிக் கொண்டிருந்தாள். அவன் சட்டென அவளை பிடித்து இழுத்து மீண்டும் அறைந்தான். அவனின் ஐந்து விரல்களும் யுக்தாவின் கன்னத்தில் பதிந்து விட்டது. கீழே விழுந்தாள்.

“என்னோட அக்காவிடம் ஓவரா பேசுற?” என அவன் அவளை நெருங்க, அவள் எழ முடியாமல் பின்னே நகர்ந்து கொண்டே சென்றாள்.

அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டை அவன் காலால் மிதிக்க, அவள் அதை பிடித்துக் கொண்டு, நீ என்னை ஏதாவது செய்தால் நீ உயிரோட இருக்க முடியாது என மிரட்டினாள்.

கார்த்திக்கோ தன் புஜ்ஜிம்மா நிலை கண்டு உடைந்து போனான்.

“அவளை விட்ரு” என கார்த்திக் கேத்ரினாவிடம் கேட்க, அவளோ சிரித்தாள்.

அவளை விட முடியாது. அவளால் தான என்னை நீ வேண்டாம்ன்னு சொன்ன? அவளின் மானம் உன் முன்னே போகணும். உன் முன் அவள் வேறொருவனுடன் படுக்கணும். அப்ப தான் நீ என்னிடம் வருவ?

கார்த்திக் மனம் வெறியானது. கைகளை இறுக மூடி திறந்து பற்களை கடித்தான்.

யுக்தாவின் ஸ்கர்ட்டை விட்ட அவன் அவளது கைகளை மிதிக்க, யுக்தா அலறினாள். மண்டியிட்டு கார்த்திக் கதறியவாறு அவளை விட்ரு. நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் என்றான்.

எனக்கு நீ வேண்டும். நீ என்னுடன் பாரின் வரணும் என சொல்ல, சரி என்றான் கார்த்திக்.

யுக்தாவை துன்புறுத்தியவனுக்கு காம எண்ணம் வலுப்பெற, அவளது கையை விட்டு அவளை ஆள எண்ணி அவளை நெருங்கினான். கார்த்திக் துடித்துப் போனான்.

அவள விடுறேன்னு சொன்னேல்ல. அவள விடு கார்த்திக் கத்த, இவ்வளவு நேரம் கார்த்திக்கை பார்க்காத யுக்தா அவனை பார்த்தாள்.

அவள் மேல் இருந்தவனை மிகவும் கஷ்டப்பட்டு தள்ளி கார்த்திக் நிற்கும் இடத்திற்கு வந்து கையை அந்த அறையின் கண்ணாடி மீது வைத்தாள்.

யுகி, உனக்கு எதுவும் ஆகாது என அவன் சொல்ல, அவள் தலையசைத்து, ஆன்ட்டியை காப்பாற்றி கூட்டிட்டு போங்க என அழுதாள்.

என்னால உன்னை விட்டு போக முடியாது புஜ்ஜிம்மா என கார்த்திக் சொல்ல, யுக்தாவை இடையோடு அவ்விடத்திலிருந்து பிடித்து இழுத்து அவன் மீண்டும் கீழே தள்ளினான்.

டேய், அவள விட்ரு இல்லை உன்னை கொன்றுவேன் கார்த்திக் கத்த, கொலை செய்ய வேண்டாம். நீ என்னுடன் சேரணும். எனக்கு இப்பொழுதே இக்கணமே நீ வேணும். வர்றீயா? நீ வந்தால் அவளை விட்ருவேன் என கேத்ரின் சொல்ல, முகத்தை அழுந்த துடைத்த கார்த்திக்..ம்ம்..அவள விட்ரு என்றான்.

“உடனே சரின்னு சொல்லீட்ட?” அவ முன்னாடி நடக்கணும் என கேத்ரின் சொல்ல, கார்த்திக் அதிர்ந்து கேத்ரினை பார்த்தான்.

என்ன? அவள் உன் பக்கமே வரக் கூடாது. எனக்கு அவளை பார்த்தாலே கோபங்கோபமா வருது. சொல்லு..வர்றீயா? என கேட்க, யுக்தாவை பார்த்தான் கார்த்திக். அவள் அவனுடன் போராடிக் கொண்டிருந்தான்.

அவனை வெளியே வர வை. நான் ஒத்துக்கிறேன் என கார்த்திக் சொல்ல, கேத்ரினுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவன் அம்மாவை பார்த்தான். அவர் மயக்கத்தில் இருந்தார்.

கேத்ரின் கைதட்ட..சிலர் உள்ளே சென்று யுக்தாவுடன் இருப்பவனை தரதரவென இழுத்து சென்றனர். அவனோ..எனக்கு இவ வேணும்..வேணும்..என கத்திக் கொண்டே சென்றான்.

யுக்தா மெதுவாக எழுந்தாள்.

ம்ம்..கார்த்திக்..அவ பாதுகாப்பா இருக்கா என அனைவரையும் அகற்றி விட்டு கேத்ரின் கார்த்திக்கை நெருங்கினாள்.

அவள் அணிந்திருந்த டாப்பை கழற்றி எறிந்து விட்டு கார்த்திக்கை அவள் நெருங்குவதையும், அவன் கண்களை மூடி அசையாமல் நிற்பதையும் பார்த்து யுக்தா துடித்து போனாள்.

கார்த்திக்..கார்த்திக்..என அவள் அந்த கண்ணாடியை தட்ட, அவன் அவளை நிமிர்ந்து பார்க்க கூட இல்லை.

கேத்ரின் கார்த்திக்கை நெருங்கி..அவனது சட்டை பட்டனை கழற்ற, வேண்டாம் கார்த்திக்..கார்த்திக்..என யுக்தா கத்தினாள்.

அவனது சட்டையை கழற்றி தூக்கி எறிந்த கேத்ரின் அவனது சிக்ஸ் பேக் உடலை ஆசையுடன் வருடி முத்தமிட்டாள். கார்த்திக்கோ முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான்.

என்ன டார்லிங்? என்று அவனது கையை எடுத்து அவளது இடையில் வைத்து விட்டு அவனை அணைத்தாள். அவன் உடல் கூசி நின்றாள். யுக்தாவோ அரைகுறை ஆடையுடன் கத்திக் கொண்டிருந்தாள்.

கேத்ரின் கார்த்திக்கின் பேண்ட்டில் கை வைக்க யுக்தாவின் பொறுமை பறந்தது. கார்த்திக் அம்மாவும் விழித்து விட்டார். தன் மகனும் கேத்ரினும் நின்ற கோலத்தை பார்த்து, “கார்த்திக் என்ன பண்ணீட்டு இருக்க?” என ஆதங்கத்துடன் கத்தினார்.

கார்த்திக் கண்ணீர் கசிய,..கேத்ரின் அவன் அம்மாவை பார்த்து அவள் நின்ற கோலத்தை நினைத்து வெட்கமில்லாமல், “ஆன்ட்டி நீங்களே உங்க பையனை அழ வைக்கலாமா?” என கேட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

டார்லிங், இவங்க நம்மள தொந்தரவு செய்றாங்க. வாங்க உள்ள போகலாம் என அவள் கார்த்திக்கின் கையை பிடித்து அழைத்து செல்ல, அவனும் மந்திரித்து விட்டவன் போல பின்னே சென்றான்.