வினித் அவனறைக்கு சென்று கதவை தாழிடவும் உள்ளே செல்ல திரும்பிய முக்தாவின் காதுகளில் படாரென சத்தம் கேட்டு கதவின் பின் மறைந்து தலையை நீட்டி எட்டி பார்த்தாள்.
அஜய் கோபமாக சென்று கொண்டிருந்தான்.
“என்னாச்சு இவனுக்கு?” என அவர்களின் அறையை பார்க்க, அஜய் இறங்கி வேகமாக காரை எடுக்கும் சத்தம் கேட்டது.
“அண்ணியுடன் சண்டை போட்டிருப்பானோ!” என தியா அறையை பார்த்துக் கொண்டிருந்த முக்தாவின் யோசனையில் ரது குட்டியின் அழும் சத்தம் கேட்டது.
ஓ..பாப்பா அழுறாளா? டிஸ்பர்ப் பண்ணீட்டா போல. அதான் கோபமாக போகிறான் என அங்கேயே சில நிமிடம் நின்றாள்.
தியா அண்ணி, பாப்பாவை இவ்வளவு நேரம் அழ விட மாட்டாங்களே! என தியா அறையை நோக்கி முக்தாவின் கால்கள் தானாக நகர்ந்தது. பக்கம் செல்ல செல்ல அழும் சத்தம் அதிகமாக கேட்க, நேரமெடுக்காமல் விரைந்து உள்ளே சென்றாள்.
அறையில் சில பொருட்கள் மட்டும் உடைந்து கிடந்தது. உள்ளிருந்த மற்றொரு அறையிலிருந்து சத்தம் வந்தது.
தியூ..கதவை திறங்க முக்தா சத்தமிட, ம்மா..ம்மா..ம்மா..என ரது தொண்டை அடைக்க அழுதது. அறை சன்னல் திறந்திருக்க உள்ளே எட்டி பார்த்தாள்.
அறை முழுவதும் இருட்டாக இருக்க, பதறி வேகமாக வினித் அறைக்கதவை தட்டினாள். அவளது சத்தத்தில் கண்ணம்மா ஓர் அறையிலிருந்து ஓடி வந்தார்.
“என்னாச்சும்மா?” அவர் கேட்க, மா..தியூ..தியூ..என முக்தா கண்ணீர் நிற்காமல் வந்தது.
மீண்டும் கதவை தட்ட, உள்ளே சத்தமே இல்லை. யுக்தா அறைக்கதவை தட்டியும் பலனில்லாமல் போக, முக்தாவை அறையில் விட்டு செல்லும் முன் வினித் அவன் அலைபேசி எண்ணை கொடுத்திருப்பான். அலைபேசியின் மூலம் அவனை அழைத்து கதவை திறக்க சொல்ல, முக்தாவின் அழுகையில் பதறி வெளியே வந்தான்.
ஏய், “எதுக்கு அழுற?” வினித் கேட்க, அவள் விசயத்தை சொல்லவும் கண்ணம்மாவுடன் அவனும் தியா அறைக்கு ஓட, முக்தா ரோஹித், யுக்தா, ராகவீரனையும் அழைத்து விசயத்தை சொல்ல, அவர்களும் ஓடி வந்தனர்.
தியா அறைக்கதவு உள்ளிருந்து பூட்டி இருக்க, அனைவரும் கத்தி அழைத்து எந்த பயனில்லாமல் போனது.
கதவை உடைக்கலாம் என வினித்தும் ரோஹித்தும் ஓடி வந்து இடிக்க, கதவை திறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயன்று ஒரு வழியாக கதவை திறந்தனர்.
யுக்தாவும் முக்தாவும் தியாவை பார்க்க, அவள் மயங்கி கிடந்தாள். அவளது கன்னத்தை தொட்டு ரது அழுது கொண்டிருந்தது.
அண்ணிக்கு மூச்சு சீராக இல்லை. மயக்கம் வேற, “இந்த அஜய் அண்ணா ஏன் தான் இப்படி பண்றானோ?” அண்ணிக்கு ஏற்கனவே உடல் சரியில்லை முக்தா புலம்பியவாறு ரதுவை தூக்கினாள்.
தியா…”எழுந்திருடி” என இதயத்துடிப்பை யுக்தா பார்க்க, அதன் துடிப்பும் சீராக இல்லை என அவள் சொல்லவும் வினித் அவளை தூக்கிக் கொண்டே “ரோஹித் காரை எடு” என கத்தினான்.
ராகவீரன் கண்ணீருடன், கண்ணம்மா ராஜ்ஜை பார்த்துக்கோ என அவர்கள் பின் ஓட, ரதுவுடன் அனைவரும் காரில் ஏறினார்கள்.
ம்மா..ம்மா..ம்மா..என ரது அழுது கொண்டே இருக்க, குட்டிம்மா அம்மா தூங்குறாங்கடா. ஒன்றுமில்லை. நீங்களும் தூங்குங்க என பாப்பாவை தோளில் போட்டு கண்ணீருடன் இருந்தாள் முக்தா. ராகவீரனுடன் யுக்தா கிளம்பினாள்.
இரண்டு மணிக்கு மருத்துவர்கள் வெளியே வந்தனர். அனைவரும் அவரை சுற்றி நிற்க, சரியான நேரத்தில் சேர்த்துட்டீங்க இல்லை அவங்கள காப்பாற்றி இருக்க முடியாது.
மூச்சு சீராக இல்லாமல் இருந்தது. பயத்தில் ஹார்ட் பலவீனமா இருந்திருக்கு. அதனால தான் மயக்கம் வந்திருக்கு. உயிருக்கு பிரச்சனையில்லை. அவங்க எழுந்தவுடன் தான் தெரியும்.
“இத்தனை பேர் இருக்கீங்க? ஒருவர் கூடவா அவங்க பக்கத்துல்ல இல்லை. எங்க இருந்தாங்க?” என மருத்துவர் விசாரித்தார்.
செவிலியர் ஒருவரை தியாவிற்காக விட்டு செல்வதாக சொல்ல, “டாக்டர் நாங்க அவள பார்க்கலாமா?” வினித் கேட்க, இப்ப வேண்டாம். அவங்களுக்கு ஓய்வு வேண்டும். அவங்க விழித்த பின் செவிலியர் சொல்வாங்க. ஒவ்வொருவராக பார்த்துட்டு வாங்க என்றார்.
அதிகாலை அஜய் வீட்டிற்கு வந்தான். போதை தெளிந்து கார்த்திக் அவனது பைக்கை எடுக்க வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அஜய்யின் கார் சத்தத்தில் கண்ணம்மா வெளியே ஓடி வந்தார்.
கார்த்திக் அஜய்யிடம் பேச எண்ணிய போது, பதட்டமாக ஓடி வந்த கண்ணம்மாவை பார்த்து, “என்னாச்சு கண்ணம்மா?” அஜய் அவரை நோக்கி செல்ல, கார்த்திக்கும் அவனுடன் சென்றான்.
“என்னப்பா இப்படி பண்ணீட்டீங்க?” நம்ம தியா பிள்ளை உங்க அறைக்குள்ள இருக்கும் இன்னொரு அறைக்குள்ள பிள்ளைய தூக்கிட்டு போய் இருந்திருக்கு. அறையில விளக்கும் இல்லை வெளிச்சம் ஏதும் இல்லாததால் பிள்ளைக்கு மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தது. ஹாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க.
“பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?” அஜய் பதட்டமாக, பாப்பா நல்லா இருக்குப்பா. நம்ம தியா பிள்ளை தான் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி கிடந்தது. இதயம் வேற துடிக்கலைன்னு சொல்லி தான் ஹாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க.
போன் போகவே மாட்டேங்குது. பயமா இருக்குய்யா..என கண்ணம்மா அழ, அஜய் தலையை பிடித்துக் கொண்டு மண்டியிட்டு “பேப்” என கத்தினான். கண்ணம்மா முந்தானையால் கண்ணை துடைத்து அவனை வேதனையுடன் பார்த்தார்.
அஜய்..அஜய்..டேய் அஜய்..எழுந்திரு என அஜய் கன்னத்தில் அடித்தான் கார்த்திக்.
“தப்பு பண்ணீட்டேன்டா” என அஜய் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுது கொண்டே தட்டு தடுமாறி நடக்க, அவனை பைக்கில் ஏற்றி கார்த்திக்கும் ஏறி பைக்கை மருத்துவமனைக்கு விரட்டினான்.
அவளை பார்த்த வினித், நாங்க மேரேஜ் பண்ணிக்கப் போறோம். உங்க வீட்லயும் எங்க வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க. ஆனால் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நாங்களும் கல்யாணம் பண்ணிப்போம் என வினித் விசயத்தை சொல்லி விட்டோம் என நிறுத்தினான்.
அதே நேரம் உள்ளே வந்தனர் அஜய்யும் கார்த்திக்கும். வியர்த்து ஒழுக, கண்கள் சிவந்து பதட்டமாக இருந்தான் அஜய்.
அஜய்யை பார்த்த ரோஹித் அவனை அடிக்க செல்ல, அவனை தள்ளி விட்டு முக்தா அஜய் கன்னத்தில் மாறி மாறி அடித்தாள்.
ஏன்டா, “இப்படி பண்ண? அவங்க உன்னை எவ்ளோ காதலிச்சாங்க தெரியுமா? எனக்கு அவங்க ரது அப்பாவை காதலிக்கிறாங்கன்னு தான் தெரியும். அது நீ என்றவுடன் எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா? நீ முட்டாள்டா? நீ எப்படிடா எனக்கு அண்ணனா பிறந்து தொலச்ச?” என முக்தா அவன் சட்டையை பிடித்து அஜய்யை மேலும் அடித்தாள்.
அம்மு, “என்ன சொன்ன?” கார்த்திக் கேட்க, “முகி இவன் அண்ணனா? என்ன பேசுற?” ரோஹித் சினமுடன் கேட்டான். ராகவீரன் திகைத்து முக்தாவை பார்த்தார்.
“உனக்கு எப்படி தெரியும் குட்டிம்மா?” வினித் கேட்க, “உனக்கு எப்படி தெரியுமா? இங்க என்ன நடக்குது?” யுக்தாவும் கோபமாக கேட்டாள்.
அஜய்யின் சொந்த இரத்தம் தான் முக்தா. அஜய்யின் பெற்றோர் தான் முக்தாவின் பெற்றோரும்.
மாமா, அதை விடு..இவன் என் முன்னாடி நிற்கவே கூடாது. இவனை வெளிய அனுப்பு என முக்தா வினித்தை பார்த்து சொல்ல, கார்த்திக்கும் அஜய்யும் அதிர்ந்தனர்.
அவன் அழுகையில் முக்தா மனம் இளகினாலும் அவன் மீது கோபம் மிகுந்து தான் இருந்தது.
“என்னை விடுடா” என அஜய்யை தள்ளிய முக்தா காலை நடந்ததில் தியா மயங்கியதை சொல்லி விட்டு, “நீங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்கீங்க? உங்ககிட்ட தியா அண்ணி உங்கள நம்பலைன்னு சொன்னது பொய். அவங்க கெல்த் எவ்வளவு வீக்கா இருக்கு தெரியுமா?” அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்க கழுத்தை நெறிச்சு நானே கொன்றுவேன் என முக்தா ஆவேசமாக கத்தினாள்.
“என்னோட பேப் என்னை சந்தேகப்படலையா?” அஜய் கேட்க, “முகி என்ன பேசிட்டு இருக்க?” வினித் கோபமாக முக்தாவை இழுத்து யுக்தாவிடம் தள்ளினான்.
வினு, “அவ ஏதோ சொல்றா?”
“சொல்லி என்ன ஆகப் போகுது?” ரோஹித்தும் அவன் பங்கிற்கு அஜய்யை அடித்தான்.
“ரோஹித்” என்று அதட்டலான சத்தம் கேட்டு அனைவரும் பார்க்க, ராணியம்மா வந்திருந்தார்.
பாட்டி என முக்தாவும் யுக்தாவும் அவரிடம் சென்று அவரை அணைத்துக் கொண்டனர்.
பாட்டி..தியூ என முக்தா அவரை பார்க்க, “அவளுக்கு ஒன்றுமாகாதுடா” என்று அவர்களை விலக்கி விட்டு அஜய்யிடம் வந்தார். அஜய்யையும் அவனருகே இருந்த கார்த்திக்கையும் பார்த்தார்.
“தனியாவா வந்தீங்க?” வினித் கேட்க, “என்னப்பா நான் தனியா வரக் கூடாதா?” எனக்கு துணை எப்போதும் நான் தான் என உறுதியான பதிலில் கார்த்திக் அவரை வியந்து பார்த்தான்.
அஜய்யை பார்த்து, நீங்க பார்த்துப்பீங்கன்னு தான அவளை நம்பி அனுப்பினேன் என கேட்டார்.
நான்..தெரியாமல் என அஜய் தொடங்க, “ஆமா தெரியாம சண்டை போட இவர் என்ன இளவட்டமா?” ரோஹித் சீற்றமுடன் கேட்டான்.
ரோஹித், “இப்படி தான் இடையில பேசுவியா?” ராணியம்மா சத்தமிட்டார். அவன் அமைதியாக நகர்ந்து கொண்டான்.
அஜய்யை பார்த்து விட்டு தியா இருக்கும் அறை அருகே அவர் செல்ல, அஜய்யும் அவர் பின்னாலே சென்றான். கார்த்திக் அவன் பின் செல்ல, இடையே வந்த ரோஹித் உங்களுக்கு இங்க என்ன வேலை? நாங்க பார்த்துப்போம். கிளம்புங்க என கார்த்திக்கை தடுத்தான்.
யுக்தாவும் முக்தாவும் கார்த்திக்கை பார்க்க, அவன் யுக்தாவை தான் பார்த்தான்.
ரோஹித்தை தள்ளிய கார்த்திக் யுக்தா அருகே செல்ல, ரோஹித்தோ கோபமாக அவன் பக்கம் சென்றான். ரோஹித் கையை பிடித்த வினித், “அமைதியா இரு” என்று அவனை அமைதிப்படுத்தினான்.
மாமா..அவன்..
ஷ்..என வினித் அவனருகே ரோஹித்தை அமர வைத்தான்.
தியாவை பார்த்து விட்டு யுக்தா கார்த்திக்கை பார்த்தனர் அஜய்யும் ராணியம்மாவும்.
கார்த்திக் அருகே வருவதை கவனித்த யுக்தா எழுந்து நகர, அவள் கையை பிடித்த கார்த்திக், “நான் பேசணும்” என்றான்.
பேச எதுவும் இல்லை.
இருக்கு. உட்காரு என கார்த்திக் சொல்ல யுக்தா ராணியம்மாவை பார்த்தாள். அவர் கார்த்திக்கை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
யுக்தா அமர்ந்தாள். அவளருகே அமர்ந்த கார்த்திக், சாரி புஜ்ஜி. நான் கொஞ்சம் யோசித்து இருக்கணும். என் மீது தப்பு தான். நான் உன்னை புரிஞ்சுக்காமல் இருந்துட்டேன்.
அந்த கேத்ரின் என்னுடைய பிராஜெக்ட்டை கூட அவளுடையது என கடைசி நேரத்தில் திருடிட்டா. அது கூட சார் சொல்லி தான் எனக்கு தெரியும். அதன் பின் நானும் அவளை பார்க்கலை. எனக்கு உன் மேல கோபம் தான்.
நான் கோபத்துல்ல சொன்னா நீ உடனே போயிட்ட. எக்ஸாம் எழுதவாது வருவன்னு நினைச்சேன். நீ வரவேயில்லை.
யுக்தா அவனை நிமிர்ந்து பார்த்து, நீ மறுபடியும் என்னை ரிஜெக்ட் செய்வதை தாங்க முடியாதுன்னு தான் கிளம்பினேன். உன்னை நான் என் திருமணம் வரை மறக்கவேயில்லை. உனக்கு எத்தனை முறை கால் பண்ணேன். நீ எடுத்தப் போது கூட பேச பிடிக்கலைன்னு வச்சிட்ட. அப்பொழுதும் விடாமல் தான கால் பண்ணேன். ஆனால் என் திருமணத்தன்று கூட நீ எடுக்கலை என அழுதாள்.
“ஐ அம் சாரி புஜ்ஜிம்மா” என கார்த்திக் அவள் கையை பிடிக்க, எழுந்திருடா என வினித் கார்த்திக் சட்டையை பிடித்து இழுத்தான். யுக்தா பதறி அவர்களை பார்த்தாலும் வினித்தை தடுக்கவில்லை.
மச்சான், நான்..என்ற கார்த்திக்கை பேச விடாமல், இனி நீ யுக்தா பக்கம் வரவே கூடாது. வெளிய போ என கத்தி கார்த்திக்கை தள்ளினான் வினித்.
ப்ளீஸ்டா..என கார்த்திக் கெஞ்ச, முடியாதுடா. நான் உன் அம்மா வாயிலாக கேட்க கூடாத விசயத்தை கேட்டேன். அவங்க பேசியதில் ரோஹித் உடைஞ்சு போயிட்டான். போதும் கார்த்திக். இதுக்கு மேல என்னோட குடும்பம் கஷ்டப்படுறத பார்க்க முடியாது. உங்க அம்மா உனக்காக பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. இனி யுக்தா வழியில் நீ வராத.
யுகி, முகியும் நானும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சேன்னா நான் சொல்றதை நீ கேட்கணும் என்றான் வினித்.
“என்ன பண்ணனும்?” யுக்தா எழுந்து வினித் அருகே வந்தாள்.
நீ என்னோட நண்பன் சந்தோஷை கல்யாணம் பண்ணிக்கணும்.
“வாட்?” என அஜய் அதிர, யுக்தாவோ கார்த்திக்கை பார்த்தாள். அவன் கண்ணீருடன் “நோ..” என தலையசைத்தான். யுக்தா அமைதியாக இருந்தாள்.
வினித் அவளை நிமிர்த்தி, இங்க பாரு யுகி. உன்னோட நல்லதுக்கு தான். நாம கார்த்திக்கை மன்னிச்சு கூட ஏத்துக்கலாம். ஆனால் அவங்க அம்மாவோட நீ சந்தோசமா இருக்கணும். அது முடியாது.
அவன் உன்னை தனியே அழைத்து வந்து பார்த்துக் கொண்டாலும் ரோஹித் அதையே நினைத்துக் கொண்டிருப்பான். என்ன இருந்தாலும் அவன் உன்னோட தம்பி. கொஞ்சம் யோசித்து பாரு.
“அம்மாவா? அவங்க உன்னை பார்க்க வந்தாங்களா?” ரோஹித்திடம் கார்த்திக் கேட்டான்.
இல்லை, நாங்க தான் உங்களை பார்க்க உங்க வீட்டுக்கு வந்தோம் என்றான் ரோஹித் பல்லை கடித்துக் கொண்டு.
ரோஹித், “கார்த்திக் அம்மா என்ன சொன்னாங்க?” அஜய் கேட்க, அவனை முறைத்த ரோஹித்..”நீங்க பேசாதீங்க” என கத்தி விட்டு கோபமாக அங்கிருந்து வெளியே சென்றான்.
சீனியருக்கு விருப்பமிருந்தால் நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன் என ஒரே போடாக சரி என்று யுக்தா முடித்து விட்டாள். கார்த்திக் கண்ணீருடன் அங்கேயே அமர்ந்தான்.
முக்தா அவனை பாவமாக பார்த்து எழ, அவளை பிடித்து தடுத்த வினித், “நோ..” என கையசைத்தான்.
ராணியம்மாவிற்கு கார்த்திக் அம்மா என்ன பேசி இருப்பாங்கன்னு புரிந்தது.
மாப்பிள்ள, “உங்க தோழன் பெயர் என்ன சொன்னீங்க?” அந்த பையன் குடும்பத்தை பற்றி சொல்லுங்க. அவங்களை பார்க்க போகலாம் என கேட்டார் ராணியம்மா.
அவன் பெயர் சந்தோஷ். கிரைம் பிராஞ்ச் டிடெக்டிவ். அவனுக்கு பெற்றோர் கிடையாது. தம்பி மட்டும் தான். அவன் பெயர் ரஞ்சன். அவன் நம்ம முக்தாவை விட ஒரு வயது சிறியவன். என்ன முகி சொல்லு? உனக்கு அவனை தெரியும்ல்ல? வினித் முக்தாவை சொல்ல சொன்னான்.
ம்ம்..தெரியும் பாட்டி என கார்த்திக்கை பார்த்துக் கொண்டே முக்தா..சந்தோஷ் மாமா சரியா தான் இருப்பாங்க. சொந்த பந்த பிரச்சனை இல்லை. தனியா தான் இருக்காங்க. அக்காவை நல்லா பார்த்துப்பாங்க என்றாள்.
கார்த்திக் வேகமாக எழுந்து வெளியேறினான்.
மாமா, “கண்டிப்பா சந்தோஷ் மாமாவை அக்கா கல்யாணம் பண்ணிக்கணுமா?” வினித்திடம் முக்தா கேட்க, “இப்ப தான் அவர் நல்லவர். அக்காவை நல்லா பார்த்துப்பார்ன்னு சொன்ன?” ராணியம்மா கேட்டார்.
பாட்டி, “அக்கா சந்தோஷ் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அடிக்கடி கார்த்திக் மாமாவையும் பார்க்கணுமே!” என முக்தா தயங்கினாள்.
மாமாவா? ரோஹித் கோபமாக முக்தாவிடம் வந்தான்.
முகி, நம்ம யுகி விதவையாம். அவங்க பையனுக்கு இரண்டாம் தாராமாக மணமுடிக்க மாட்டாங்களாம் என பேச முடியாமல் அமைதியாக ரோஹித் தலையை பிடித்து அமர்ந்தான் கண்ணீருடன்.
யுக்தா அவனருகே வந்து அமர்ந்து, அவனை நிமிர்த்தி..என்னால உடனே கல்யாணம் ஏத்துக்க முடியாதுடா. “உனக்கு சந்தோஷ் சீனியரை பிடிச்சிருக்கா?” எனக் கேட்டாள்.
அக்கா, “உன்னால அவனை மறக்க முடியும்ல்ல?” என ரோஹித் கேட்க, அவளிடம் பதிலில்லை.
உனக்கும் பாட்டிக்கும் சந்தோஷ் சீனியரை பிடித்திருந்தால் சில மாதங்கள் டேட் பண்றேன் என யுக்தா ராணியம்மாவை பார்த்தாள். அவளால் கார்த்திக்கை மறக்க முடியாது என அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.
நான் முதல்ல பையனை பார்த்து பேசணும்டா. மாப்பிள்ள..பையனை இப்பொழுதே இங்க வரச் சொல்லுங்க என வினித்திடம் சொல்லி விட்டு ராகவீரனை பார்த்து, “ராஜ் மாப்பிள்ள எப்படி இருக்கார்?” என ராணியம்மா அவரிடம் அஜய் அப்பாவை பற்றி விசாரித்தார்.
அஜய்யோ அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தியா விழிக்க, செவிலியர் மருத்துவரை அழைத்து வந்து தியாவை பரிசோதித்த பின் ஒவ்வொருவராக செல்ல சொல்லி, அவங்க ஓய்வெடுக்கணும். அதிகமாக பேசாதீங்க என சென்று விட்டார்.
முக்தா உள்ளே செல்ல முற்பட, அவளை தடுத்த ராணியம்மா “அஜய் உள்ள போங்க” என்றார்.
பாட்டி..கோபமாக ரோஹித் அழைக்க, அவ கழுத்துல்ல எப்ப தாலி ஏறியதோ அதிலிருந்து அஜய்க்கு தான் தியா மீது முதல் உரிமை. “உள்ள போ” என்று ராணியம்மா கண்ணை காட்ட அவன் தியா இருக்கும் அறைக்குள் சென்றான்.
தியாவின் கண்கள் வாசலையே பார்க்க, உள்ளே வந்த அஜய்யை கண்டு வேகமாக எழ முயன்றாள் தியா. அவளருகே ஓடிச் சென்று அவளது கையை அவனது கண்களில் ஒற்றிக் கொண்டு அழுதான் அஜய்.
அஜய்யின் கண்ணீரில் செய்வதறியாது அவனை அமைதியாக பார்த்தாள் தியா.
சாரி பேப். நான் சுயநலமா இருந்துட்டேன் என அஜய் சொல்ல, அவனை தியா ஆழ்ந்து பார்த்தாள் சோர்வுடன்.
“ஏன் பேப்?” நேற்று காலையில் நடந்ததை சொல்லவில்லை. “உன்னோட உடல்நிலை சரியில்லைன்னு சொல்லி இருக்கலாமே!” அவன் கேட்க, அவன் கையை உதறிய தியா, “ரது..” என பேச முடியாமல் வாசலை பார்த்தவாறு மெதுவாக அழைத்தாள்.
பாப்பா தூங்கிட்டு இருக்கா. பேப்..அவன் அழைக்க, ப்ளீஸ் எதுவும் பேசாம போயிடுங்க என்றாள்.
“என்னிடம் பேச உனக்கு பிடிக்கலையா பேப்?” அஜய் பாவமாக கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.
அஜய் கண்கள் கலங்க “என்னை மன்னிச்சிரு பேப்” என எழுந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த தியா அவன் கைகளை பிடித்து நிறுத்தி கண்ணை காட்டி அமர சொன்னாள்.
பாப்பா பிறந்து ஒன்பது மாதம் தான் ஆகுது. எனக்கு உடல் இன்னும் முழுதாக சரியாகவில்லை. அதனால் உடலுறவு கொள்ளக் கூடாதுன்னு டாக்டர் சொல்லீட்டாங்க. என்னை ராணியம்மா வீட்ல நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. அதனால் இதுவரை பெரியதாக இது போல் பிரச்சனை இல்லை.
நீங்க கொஞ்ச நாள் மட்டும் காத்திருங்க. உங்களுக்கு தேவையானது கிடைக்கும் என்றாள் தியா முகத்தை திருப்பிக் கொண்டு.
பட்டென அஜய் எழுந்தான். இல்ல..இல்ல..பேப். நான் வருடங்களுக்கு பின் உன்னை துவாலையுடன் பார்த்ததில் தடுமாறி விட்டேன். நான் அருகே வந்தாலே நீ விலகி ஓடுன. இதை காரணமாக வைத்து உன்னருகே இருக்க நினைத்தேன்.
நான் தவறாக ஏதும் செய்யலை. நீங்க தான உங்ககிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாதுன்னு சொன்னீங்க. அதான் விலகியே இருந்தேன். அஜய் தியாவையே பார்த்தான்.
நீ போனதிலிருந்து பைத்தியம் போல தான் இருந்தேன் பேப். உன்னை பார்த்தவுடன் என் உயிரே வந்தது போல் இருந்தது. ஆனால் உன் வார்த்தைகள் என்னை காயப்படுத்தியது.
பேப், “உனக்கும் தெரியுமா?” முக்தா என்னோட சொந்த தங்கையாம் என அஜய் சொல்ல, தியா கண்கள் மின்ன “நிஜமாக தான் சொல்றீங்களா அஜூ?” என அவன் கையை ஆர்வமாக பிடித்து கேட்டாள்.
ஆமா பேப், நான் தான் எதுவும் தெரிஞ்சுக்காம முட்டாளா இருந்திருக்கேன் என்றவுடன் அவள் உள்ளம் பதறியது. இவருக்கு மட்டும் என்னுடைய அன்றைய நிலை தெரிந்தால் அவர் மேல பழியை போட்டு ரொம்ப கஷ்டப்படுவாறே! என மனதினுள் எண்ணியவுடன் தியாவிற்கு லேசாக மூச்சு வாங்கியது.
ஹே பேப், “என்னாச்சு?” என அஜய் அவள் கையை அழுத்தி பிடிக்க, அவனது பிடிமானம் அவளுக்கு மனஉறுதி அளித்தது போல இருக்க, மூச்சை இழுத்து விட்டாள். மூச்சு சீரானது.
அதிகமா பேசிட்ட பேப். அமைதியா இரு..என அவளது உள்ளங்கையில் அஜய் முத்தமிட்டான். சரேரென தியா கண்ணீர் வெளியே வந்தது.
அஜூ..நீங்க என்னோட பழைய அஜூவா பக்கத்துல்ல இருக்கணும் போல இருக்கு. எனக்கும் நீங்க வேணும் அஜூ. நீங்க இல்லாமல் நானும் ரொம்ப கஷ்டப்பட்டேன் அஜூ.
யுகி திருமணத்தன்று உங்களை பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் அந்த திவ்யா உங்களை ஏதும் செய்திடுவாளோன்னு பயமா இருந்தது. அதான் அவ்வாறு பேசி கோபப்படுத்தினேன். நீங்க என் கழுத்துல்ல தாலி கட்டுவீங்கன்னு நினைக்கவே இல்லை. நீங்க இப்படி செய்வீங்கன்னு தெரிந்தால் அவ்வாறு பேசி இருக்க மாட்டேன் என மனதில் எண்ணிய தியா கண்ணில் கண்ணீர் நிற்காமல் வர, அவள் அஜய்யையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேப், “எதுக்கு அழுற?” அஜய் கேட்க, “நீங்க என்னை மன்னிச்சுட்டீங்களா அஜூ? நான் உங்களை சந்தேகப்பட்டு பேசிட்டேன்ல்ல?” என தியா வருத்தமாக சொல்ல, அஜய்க்கு முக்தாவின் கூற்று நினைவிற்கு வந்தது.
“முதலில் விசயத்தை தெரிஞ்சுக்கணும்” என அஜய் ஏதும் சொல்லாமல் தியாவை பார்க்க, அவள் விரக்தி புன்னகையுடன் “பாப்பாவை பார்க்கணும்” என்றாள்.
ம்ம்..என அஜய் வெளியே செல்ல, ராணியம்மா தூங்கிக் கொண்டிருந்த ரதுவுடன் உள்ளே சென்றார். வெளியே அனைவரும் அமைதியாக இருந்தனர்.
ரதுவை தியா அருகே படுக்கப் போட்டு அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
“அஜய்க்கு தியாவின் மன்னிச்சுட்டீங்களா?” என்ற கேள்வி தலையை குடைந்தது.
அஜய் உள்ளே செல்லவும் ரோஹித்திற்கு ராணியம்மா அறிவுரை வழங்கி இருப்பார். என்ன இருந்தாலும் இனி தியா எப்போதும் அஜய்யுடன் தான் இருக்கணும் என சொல்லி இருப்பார்.
அஜய் கையை பிடித்து ஓர் அறைக்கு இழுத்து சென்று கதவை தாழிட்டான் ரோஹித்.
“டேய் நில்லு” என வினித்தும் மற்றவர்களும் கதவை தட்ட, “மாமா நான் பேசிட்டு வாரேன்” என வினித்திடம் கூற, “என்னமும் செய்” என அவன் கோபமாக சென்று விட்டான். வினித்தையும் அவர்கள் இருக்கும் அறையையும் யுகியும், முகியும் மாறி மாறி பார்த்து விட்டு வினித் பின்னே சென்றனர்.
அஜய்யை தள்ளி விட்டு, அவன் அலைபேசியில் தியா அஜய்யை பிரிந்த உண்மையான காரணத்தை தியா சொல்ல வீடியோ எடுத்ததை அவனிடம் நீட்டினான்.
“என்ன?” அஜய் கேட்க, இது தியா அவளே எங்களிடம் பேசியது. இது தான் நடந்தது. முதல்ல இதை பாருங்க. எனக்கு உங்க உதவி வேண்டும் என்றான் ரோஹித்.
அஜய் வீடியோவை பார்த்து கதறி அழுதான். “என்ன பேப்? என்னிடம் நீ வராத காரணம் அவளா? அவள் உன்னை பற்றி என்னிடமும், என்னை பற்றி உன்னிடமும் பேசி இருக்கா?” என தியா அருகே இருப்பது போல் சொல்லி அழுதான்.
எல்லாமே என்னால தான். நான் உன் வாழ்க்கையில் வரலைன்னா நீ சந்தோசமா இருந்திருப்ப என அஜய் சொல்லி மேலும் அழுதான்.
அவனையே பார்த்த ரோஹித், தியா உங்க பக்கம் இருந்தால தான் உயிரோட இருந்திருக்காங்க. இல்லைன்னா அவங்க அப்பாவோட சேர்த்து அவங்களையும் கொன்றுப்பாங்க.
“அவங்க அப்பா கொலை எப்படி உனக்கு தெரியும்?” அஜய் கேட்க, வினு மாமா பேசிய சில விசயத்தில் தெரிஞ்சுக்கிட்டேன். இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க இல்லை.
அந்த காதம்பரியின் கணவன், திவ்யாவின் தந்தை அந்த டான் ரத்தன் ஷெட்டி தான்.
தியா, திவ்யாவை ஏதாவது செய்ய சொல்லி பேசினாள். ஆனால் வினு மாமா, அந்த டானை போடணும்ன்னு சொல்றாங்க. அது ரொம்ப டேஞ்சர்ன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க.
திவ்யா பாதுகாப்பிற்கும், காதம்பரியின் பணபலத்திற்கும் அந்த டான் தான காரணம். அவனை போட்டால் இவங்க பிச்சை தான் எடுக்கணும்ன்னு சொன்னார்.
“பிச்சையா? இவளுகளா?” பணக்காரன் எவனாது மாட்டினால் உடனே வளைச்சு இல்லை மிரட்டி பணம், சொத்து என சுருட்டிடுவாளுக. தியா சொன்னது தான் சரி.
வினித்தை இங்கே அழைச்சிட்டு வா. பேசலாம் என்று அஜய் சாய்ந்து கண்ணை துடைத்து சாய்ந்து அமர்ந்தான். ஆனால் அவன் மனதினுள் சாரி பேப். நீயே சொன்னாலும் நான் சிந்தித்து இருக்கணும். என் கோபம் உன்னை அதிகமாக பாதித்து விட்டது. உன்னை தொட்ட ஒருவனையும் சும்மா விட மாட்டேன் என மனதினுள் அஜய் சூளுரைத்துக் கொண்டான்.
ரோஹித் வினித்தை அழைத்து அஜய் முன் நிறுத்தினான்.
வினித் சீற்றமுடன் அஜய்யை பார்க்க, “உனக்கு விசயம் தெரிந்தவுடன் சொல்லி இருக்கலாம்ல்லடா?” அஜய் பாவமாக வினித்திடம் கேட்க, “எதை சொல்லணும்?” என வினித் ரோஹித்தை பார்த்தான்.
“தியாவின் போராட்டத்தை” என கண்ணீர் மல்க அதோடு கோபமாகவும் அஜய் கேட்டான்.
ஏன்டா, “இவனிடம் சொன்ன?” வினித் ரோஹித்திடம் சினமுடன் கேட்க, “சொன்னால் என்னடா?” அஜய் சினமாக, பேச்சு இருவருக்கும் சண்டையாக தொடங்கும் முன், “நிறுத்துங்க. நாமே இப்படி சண்டை போட்டால் அவங்கள யார் வதம் செய்றது?” ரோஹித் கேட்க, இருவரும் ஒன்றாக “வதமா?” எனக் கேட்டனர்.
“அப்படி தான சொல்லணும்?” ரோஹித் கேட்க, அஜய்யும் வினித்தும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
வினு, அந்த டானை நாம சும்மா விடப் போறதில்லை. முதல்ல மீன்கள் ஒவ்வொன்றாக பிடித்து தான் திமிங்கலம் அருகே செல்லணும். இல்லை நம்மை திமிங்கலம் விழுங்கி விடும்.
ஒரு வாரம் போகட்டும். அமைதியா இரு. நம்ம வேலையை தொடங்கலாம். அதுவரை கம்பெனி விசயத்தை பாரு என்றான் அஜய்.
தியா உன்னுடன் இருப்பது அவர்களுக்கு இப்பொழுது தெரிந்திருக்கும் அஜய். சும்மா இருக்க மாட்டாங்க.
தெரியும் வினு. அதான் நம்ம வேலன் இருக்கான்ல்ல. அவன் நம் வீட்டில் பாதுகாப்பிற்காக இருக்கட்டும். நமக்கு வேற ஆட்களை நியமித்துக் கொள்ளலாம். எதற்கும் கவனமாகவே இருக்கணும்.
ம்ம்..பார்க்கலாம்.
சாரிடா, உன்னையும் அதிகமாகவே திட்டிட்டேன் என அஜய் வினித்தை அணைக்க வந்தான்.
இதை காரணமா வச்சு பேச நினைக்காத. முதல்ல தியா உன்னை மன்னிக்கணும். பின் தான் நான் பேசுவேன் என வினித் கதவருகே செல்ல,
“நிஜமாகவே சந்தோஷை யுக்தாவிற்கு கல்யாணம் பண்ண நினைக்கிறியா?” அஜய் கேட்க, வினித் அஜய்யையும் ரோஹித்தையும் பார்த்து விட்டு, யுகி கண்டிப்பா கார்த்திக்கை மறக்க மாட்டாள். ஜஸ்ட் ட்ரை தான். எப்பொழுது என்ன நடக்கும்ன்னு யாராலும் சொல்ல முடியாது என வினித் நகர்ந்தான்.
இப்ப மாமா, “என்ன சொல்றார்? சந்தோஷ் மாமாவை அக்காவுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பிளான் இல்லையோ? இல்லை கார்த்திக்கா?” நோ..நோ..என ரோஹித் பதறினான்.
அஜய் அவனை பார்த்து, “எங்க எல்லார் குடும்பத்தை விட அவங்க தான் குட் பேமிலி தெரியுமா?” கார்த்திக் அம்மா ரொம்ப நல்லவங்க. கொஞ்சம் அவங்க இடத்துல்ல இருந்து யோசி. உனக்கே திருமணம் முடிந்து பையன் பிறந்து வளர்ந்து திருமணத்தன்றே கணவனை இழந்த பொண்ணை கல்யாணம் செய்து வைப்பாயா? அஜய் கேட்க, அவனை முறைத்தான் ரோஹித்.
நான் இன்னும் என் திருமணத்தை பற்றியே எண்ணவில்லை. “அதற்குள் என்ன பேசுறீங்க?”
உனக்கு புரியல. நன்றாக யோசி. கார்த்திக்கும் கோபத்தில் தான் பேசாமல் இருந்திருப்பான் அஜய் சொல்ல, ஓ..அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்களா? ரோஹித் கேட்டான்.
அப்படி இல்லைடா..
போதும். இதை பற்றி இனி பேச வேண்டாம். மாமா சொன்னது போல் செய்ய வேண்டியதை நாம் செய்வோம் நடப்பது நடக்கட்டும் என அவன் வெளியேற, அஜய்யும் வெளியே வந்தான். அவன் மனது தெளிவடைந்தது.
விகாஸ் இரவு தூங்க முடியாமல் கீர்த்தனா நினைவில் அல்லாடினான். அன்று அவளை காப்பாற்றியதிலிருந்து அவன் கீர்த்துவை காதலிப்பதை உணர்ந்து அடிக்கடி தினசரி நாட்களிலும் தமிழினியன் வீட்டிற்கு வந்தான்.
விடுமுறை நாளென்று காலை தயாராகி அனைவரும் வந்திருக்க விகாஸூம் வந்தான். பரீட்சைக்காக குரூப் ஸ்டடில்ல கீர்த்தனாவும் அவளது நண்பர்களும் இருந்தனர். ஒரு பையனும் இரு பெண்களும் அவளுடன் படித்துக் கொண்டிருந்தனர். அவளறைக் கதவு லேசாக திறக்கப்பட்டு இருந்தது.
விகாஸ் கீர்த்துவை பார்க்க ஆர்வமாக எல்லாருடனும் பேசியவாறு காத்திருந்தான்.
உள்ளே பெண்கள் படித்துக் கொண்டிருக்க, ராம் மட்டும் அடிக்கடி கீர்த்தனாவை மேலிருந்து கீழாக ஒருவாறு பார்த்துக் கொண்டிருந்தான். பெண்களில் ஒருத்தி அதனை கவனித்து மற்றவளிடம் கூறினாள்.
தள்ளி அமர்ந்திருந்த அவன் ஏதோ கேட்பது போல் கீர்த்துவை உரசிக் கொண்டு அமர்ந்தான். அந்த பெண்கள் அவனை முறைக்க, அவன் நகர்ந்து அமர்ந்தான்.
மீண்டும் படிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவன் கவனம் படிப்பில் இல்லாமல் அவளது மேனியின் மீதே இருக்க, செய்வதறியாது இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
லெனின் டாப்பும் ஃபேண்ட்டும் அணிந்திருந்தாள் கீர்த்தனா. அவள் எடைக்கு அது கச்சிதமாக பொருந்தி இருந்தது. அவன் கண்கள் அவளது டாப் மேல் இருந்தது. அந்த பொண்ணுங்க தலையை கவிழ்ந்து தெரியாதது போல காட்டிக் கொண்டனர். கீர்த்தனாவோ படிப்பில் ஆழ்ந்து இருந்தாள்.
கண்களால் கீர்த்துவை கபலிகரம் செய்த அவன் அவளருகே கையை கொண்டு செல்ல, கீர்த்தனா எனக்கு தண்ணீர் வேணும். குடிச்சிட்டு வாரேன் என ஒரு பொண்ணு எழுந்தாள்.
ஆமா, எனக்கும் என மற்றவளும் எழுந்தாள்.
ஓ.கே மிருளா அக்காகிட்ட கேளுங்க. அவங்க எடுத்து கொடுத்திருவாங்க என்று அவள் மீண்டும் புத்தகத்தினுள் தலையை நுழைத்துக் கொண்டாள்.
வெளியே வந்த இருவரும் தயங்கி வெளியே வர, அவர்களுக்கு வியர்த்தது. கீர்த்தனாவை எதிர்பார்த்து காத்திருந்தவன் இவர்களின் தோற்றத்தை கண்டு, “என்ன இருவருக்குமே வியர்க்குது? கீர்த்து அறையில் ஏ. சி இல்லையா?” என யோசனையுடன் கிருபாகரனிடம் கேட்டு விட்டான்.
“இல்லையே!” என அவர் அந்த பெண்களை பார்க்க, விகாஸ் எழுந்து அவர்களிடம் சென்றான்.
“ஏ. சி ல்ல ஏதும் பிரச்சனையா? இப்படி வியர்த்திருக்கு?” என விகாஸ் கேட்க, ஒரு பொண்ணு பார்த்ததை அச்சு பிசகாமல் ஒப்பித்தாள் விகாஸிடம். அவன் கையை முறுக்கிக் கொண்டு அறையை நோக்கி செல்ல, கீர்த்தனாவின் அலறல் கேட்டு ஓடி வந்தான் விகாஸ். மற்றவர்களும் அந்த பொண்ணுங்களும் வந்து பார்க்க, கீர்த்தனா அழுது கொண்டே உடலை குறுக்கி ராம்மை பார்த்து பயந்தவாறு அமர்ந்திருந்தாள்.