“எதிர்காலம் நம் வசம்” கதை மாந்தர்களும் இவர்களுள் அடக்கம்.
முதலில் நம் முன் கதையின் மாந்தர்களை பார்ப்போம்.
சிம்மா- நட்சத்திரா- அர்சலன்.
நம் தம்பதிகளின் தற்போதைய குழந்தை ஆரன்.
சிம்மா- நட்சத்திராவின் சொந்தங்கள்:
சிம்மாவின் பெற்றோர் – பரிதி, அன்னம்.
தமையன்– விக்ரம்.
பெரியம்மா, பெரியப்பா பசங்க– ரித்திகா, மகிழன்.
சிம்மா, விக்ரமின் உடன் பிறவா தங்கைகள்– ரசிகா, ரம்யா, கீர்த்தனா.
நட்சத்திராவின் பெற்றோர்- தேனீ மாவட்டம் அல்லீ நகரத்தின் பிரசிடன்ட் புகழேந்தி- அம்சவள்ளி.
தமையன்– உதிரன், அவன் மனைவி ரித்திகா.
புகழேந்தியும் அன்னமும் உடன் பிறந்தவர்கள்.
அதே ஊரில் வளர்ந்த ரம்யா, அவள் அண்ணன் மருது- துளசி (துளசியின் பெற்றோர்)
விக்ரமின் வளர்ப்பு பெற்றோர்: கமிஷ்னர் சதாசிவம்- வனஜா, அவர்களின் புதல்வி ரசிகா.
அடுத்தது:
நம் கர்னல் சேகர் தாத்தா குடும்பத்தை பார்க்கலாமா ?
தாத்தா- பாட்டி( ஆறு ஆண் குழந்தைகளும் மூன்று பெண்களும்)
முதலாவது சுஜித்ராவின் பெற்றோர். அவர்களுக்கு ஒரே மகள் சுஜித்ரா- மருமகன் தேவா, பேத்தி தீப்தி.
இரண்டாவது கிருபாகரன்- வேல்விழி. அவர்களின் புதல்வன் தமிழினியன்- மிருளாலினி, பேரன் சுபிகண்ணன். தமிழ் மனநல மருத்துவன்.
மூன்றாவது ரகசியன் பெற்றோர். அவர்களின் மகன் ரகசியன்- மருமகள் ரசிகா. ரகசியன் குடும்பத் தொழில் நடத்துபவன்
நான்காவது திலீப்பின் பெற்றோர். அவர்களின் மகன் திலீப். திருமணமாகாதவன். மருத்துவன்
ஐந்தாவது ராஜாவின் பெற்றோர்- அவர்களின் மகன் ராஜா- மருமகள் ஹரிணி. தொழிலதிபன், ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட்..இன்னும் பல தொழில்களை தன் அப்பாவுடன் சேர்ந்து கவனிப்பவன்.
ஆறாவது விகாஸின் பெற்றோர்- அவர்களின் மகன் விகாஸ். வீட்டின் செல்லப்பிள்ளை. மகள் சுவாதி.
திலீப் அப்பாவின் பின் பிறந்த கர்னல் சேகரின் மூன்று மகள்கள்:
முதலாவது மகளும் மருமகனும் குழந்தை பிறந்த ஒரு வருடத்திலே விபத்தில் இறந்து விட்டிருந்தனர். அவர்களின் மகன் நேகன். சேகரும் அவர் மனைவியும் தான் அவனை வளர்த்தனர். பாட்டி தாத்தாவின் வளர்ப்பில் நன்றாக வளர்ந்து வக்கீலாக பாரினில் இருக்கிறான்.
இரண்டாவது மகளுக்கு பொண்ணு ஹரிணி. ராஜாவின் மனைவி.
மூன்றாவது மகளுக்கும் பொண்ணு சுருதி. பொட்டிக் வைத்து நடத்துகிறாள். தனியாக கம்பெனியிலும் ஆடை தயாரிப்பு பணியில் இருக்கிறாள்.
யாருமில்லாமல் வந்து சேர்ந்த விக்ரம் வளர்த்த தங்கை கீர்த்தனா தமிழ் வீட்டில் பள்ளியை முடித்து மேல்படிப்பிற்காக பாரின் சென்றுள்ளாள்.
புதிய கதாபாத்திரங்கள்: சுராஜ் கட் குடும்பம்:
இவர்கள் குடும்பத்தை பற்றி எபிக்குள் சென்று பார்க்கலாம்.